Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீனாவில் அசுர வேகத்தில் அதிகரிக்கும் கோவிட் உயிரிழப்புகள்! மயானங்களில் குவியும் சடலங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவில் கோவிட் பரவல் காரணமாக மருத்துவமனைகளும் தகன இல்லங்களும் ஸ்தம்பித்துப் போயுள்ள நிலையில், தகன இல்லங்களில் சடலங்கள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக சீன சுகாதாரத்துறை கோவிட் இறப்பு எண்ணிக்கை தொடர்பான தகவல்களை வெளியிடுவதை நிறுத்தியுள்ளது.

மக்களின் எதிர்ப்பு காரணமாக கடுமையான கோவிட் கட்டுப்பாடுகளை சீனா தளர்த்தியுள்ள நிலையில், கோவிட் பரவல் தீவிரமடைந்துள்ளதுடன் 90 நாட்களில் 800 மில்லியன் பேருக்கு பதிப்பு உறுதி செய்யப்படலாம் என்று ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

சீனாவில் அசுர வேகத்தில் அதிகரிக்கும் கோவிட் உயிரிழப்புகள்! மயானங்களில் குவியும் சடலங்கள் | New Covid Model In China Covid Deaths

இந்த நிலையில், சீனாவில் மருத்துவமனைகள் நோயாளிகளின் எண்ணிக்கையால் ஸ்தம்பித்துப் போயுள்ளதாகவும்,தகன இல்லங்களில் சடலங்கள் குவிந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை,பாதிப்பு எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதாகவும், இது கண்டிப்பாக கவலைக்குரிய விடயம் எனவும் நிபுணர்கள் பதிவு செய்துள்ளனர்.

சீனாவில் அசுர வேகத்தில் அதிகரிக்கும் கோவிட் உயிரிழப்புகள்! மயானங்களில் குவியும் சடலங்கள் | New Covid Model In China Covid Deaths

2.1 மில்லியன் மக்கள் மரணமடைவார்கள்

மேலும், எதிர்வரும் மாதங்களில் 2.1 மில்லியன் சீன மக்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைவார்கள் எனவும், நாளுக்கு 7,000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுவதாக அதிகாரிகள் தரப்பு கூறியுள்ள தகவலை ஒப்பிட்டு, நிபுணர்கள் இறப்பு எண்ணிக்கையை கணித்துள்ளனர்.

சீனாவில் அசுர வேகத்தில் அதிகரிக்கும் கோவிட் உயிரிழப்புகள்! மயானங்களில் குவியும் சடலங்கள் | New Covid Model In China Covid Deaths

இதனிடையே, சீனாவில் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் 16 பேருக்கு நோயை பரப்புவதாக ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

இதேவேளை, இந்தியா உள்பட ஆறு நாடுகள் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. 

சீனாவில் கோவிட் பரவல் காரணமாக ஒட்டுமொத்த இயல்பு வாழ்க்கையும் நிலைகுலைந்து போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

https://tamilwin.com/article/new-covid-model-in-china-covid-deaths-1672856414

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில யாருடா கொரனோ  வைரஸை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியது ?

கொரோனா  இல்லாமலே ஒருகிழமை  காய்ச்சல் நான்கு கிழமை இருமல் என்று வாழ வேண்டி கிடக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

Canada விலும் காச்சலும் தொற்றும் அதிகரித்துச் செல்கிறது. ஆனால் அந்தக் காச்சலுக்கு கொரொனா என்று பெயரைச்வ்சொல்ல மாட்டார்கள். 

சீனாவில் வருவது மட்டுமே கொரொனா 😀

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் கோவிட் கட்டுப்பாட்டுக்கு எதிராக ஊர்வலம் செய்தவர்களுக்கு சமர்பணம்.  இந்த உலகும் அரசியல் காழ்புணர்ச்சிக்காக  உலக ஊடகங்கள் மேற்படி ஊர்வலங்களுக்கு ஆதரவளித்தன.
இப்போ மீண்டும் பெட்டி ஒன்றுக்கு வந்துள்ளோமா?
சீனாவும் உலகில் ஒரு பாகம் என்பது குறிப்பிடத்தக்கது.🙂

  • கருத்துக்கள உறவுகள்

மேலே கொஞ்சம் சந்தேக விதைகள், சதிக் கோட்பாட்டு விதைகள் தூவுகிறார்கள் என நினைக்கிறேன் (so predictable😂):

ஓம், வட அமெரிக்காவிலும் சுவாசத் தொற்றுக்கள் அதிகரித்திருக்கின்றன. கோவிட் 19 அதில் பெரிய பங்கை வகிக்கிறது. ஆனால், இன்புழுவன்சா, ஆர்.எஸ்.வி. அடினோவைரஸ், பராஇன்புழுவன்சா வைரஸ் என ஒரு குழு வைரசுகளும் கணிசமான தொற்றுக்களுக்குக் காரணம். எனவே, எல்லா சுவாசத் தொற்றுக்களும் கோவிட் அல்ல!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, nunavilan said:

சீனாவின் கோவிட் கட்டுப்பாட்டுக்கு எதிராக ஊர்வலம் செய்தவர்களுக்கு சமர்பணம்.  இந்த உலகும் அரசியல் காழ்புணர்ச்சிக்காக  உலக ஊடகங்கள் மேற்படி ஊர்வலங்களுக்கு ஆதரவளித்தன.
இப்போ மீண்டும் பெட்டி ஒன்றுக்கு வந்துள்ளோமா?
சீனாவும் உலகில் ஒரு பாகம் என்பது குறிப்பிடத்தக்கது.🙂

ஒரு சில ஜாம்பவான்கள் அது சீன சர்வாதிகாரத்துக்கான மக்களின் எழுச்சி என வீராவேசத்துடன் ஆரவாரம் செய்தார்கள். 😎

என்னத்த சொல்ல....☹️

  • கருத்துக்கள உறவுகள்

விதைத்தவனே அறுப்பானடா....???😭

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:

சீனாவின் கோவிட் கட்டுப்பாட்டுக்கு எதிராக ஊர்வலம் செய்தவர்களுக்கு சமர்பணம்.  இந்த உலகும் அரசியல் காழ்புணர்ச்சிக்காக  உலக ஊடகங்கள் மேற்படி ஊர்வலங்களுக்கு ஆதரவளித்தன.
இப்போ மீண்டும் பெட்டி ஒன்றுக்கு வந்துள்ளோமா?
சீனாவும் உலகில் ஒரு பாகம் என்பது குறிப்பிடத்தக்கது.🙂

1. சீனா வீண் வீம்புக்காக தனது இத்து போன வெக்டர் வக்சீனை மட்டும் நம்பி, ஆர் என் ஏ வகை வக்சீன்களையும் தனது வக்சீன் நிரலில் உள் வாங்கவில்லை. வெளிப்படையாக செயல்படவில்லை.

2. திறனற்ற வக்சீன் கொவிட்டை கட்டுப்படுத்த தவறியதால், மக்களை நகரம் நகரமாக அடைத்து வைக்க வேண்டி ஏற்பட்டது.

3. ஒரளவுக்கு  மேல் தொடர்ந்தும் அடைப்பில் இருக்க விரும்பாதா மக்கள் போராட  வேண்டி வந்தது.

4. மக்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை எனும் போது - கொவிட் கட்டுப்பாடுகள் திடீரென தளர்த்தப்பட - நோய் தொற்று எகிறுகிறது.

5. இங்கே முழு பிழையும் சீனா மேல்தான். கேவலம் இலங்கை, இந்தியா கூட ஓரளவு தெளிவாக கையாண்ட வக்சீன் முகாமையை பெரும் வல்லரசு கனவில் இருக்கும் சீனா போட்டடித்தது.

2 hours ago, குமாரசாமி said:

ஒரு சில ஜாம்பவான்கள் அது சீன சர்வாதிகாரத்துக்கான மக்களின் எழுச்சி என வீராவேசத்துடன் ஆரவாரம் செய்தார்கள். 😎

என்னத்த சொல்ல....☹️

18 hours ago, பெருமாள் said:

கொரோனா  இல்லாமலே ஒருகிழமை  காய்ச்சல் நான்கு கிழமை இருமல் என்று வாழ வேண்டி கிடக்கு .

வழமையாக விண்டரில் இந்த தொற்றுக்கள் ஒரு சுற்று வருவது சகஜம்தானே.

இந்த முறை கொஞ்சம் கூட - காரணம் தொடர்ந்து இரெண்டு விண்டர் அதிகம் சனபுழக்கம் இல்லாதபடியால் சில தொற்றுக்களுக்கான நோயெதிர்ப்பு சனத்தொகையில் குறைந்து விட்டது.

நான் பார்த்த வகையில் நீங்கள் சொல்லும் இந்த காய்ச்சல் கொரோனா அறிகுறிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.

காய்ச்சலை விட தொடர்ந்து வரும் இருமல்தான் அலுப்பு. ஒரளவுக்கு மேல் சரிவராவிட்டால் - ஜிபிக்கள் அண்டிபயோடிக் கொடுக்கிறார்கள்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

மேலே கொஞ்சம் சந்தேக விதைகள், சதிக் கோட்பாட்டு விதைகள் தூவுகிறார்கள் என நினைக்கிறேன் (so predictable😂😞

ஓம், வட அமெரிக்காவிலும் சுவாசத் தொற்றுக்கள் அதிகரித்திருக்கின்றன. கோவிட் 19 அதில் பெரிய பங்கை வகிக்கிறது. ஆனால், இன்புழுவன்சா, ஆர்.எஸ்.வி. அடினோவைரஸ், பராஇன்புழுவன்சா வைரஸ் என ஒரு குழு வைரசுகளும் கணிசமான தொற்றுக்களுக்குக் காரணம். எனவே, எல்லா சுவாசத் தொற்றுக்களும் கோவிட் அல்ல!

இவை வைரஸ் காய்ச்சலாக தொடங்கினாலும், பிறகு வரும் சளித்தொல்லை பக்டீரியா தாக்கமா?

இல்லாது விடின் எப்படி அண்டிபயோடிக்குக்கு கிளியராகிறது? (வைரசுக்கு அண்டி பயோடிக் வேலை செய்யாது? - சரிதானே என் புரிதல்)

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

கனடாவிற்கு வந்தால்  அது இன்புழுவெனசா, சீனாவுக்கு வந்தால் அது கோவிற் 🤣

**

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, goshan_che said:

இவை வைரஸ் காய்ச்சலாக தொடங்கினாலும், பிறகு வரும் சளித்தொல்லை பக்டீரியா தாக்கமா?

இல்லாது விடின் எப்படி அண்டிபயோடிக்குக்கு கிளியராகிறது? (வைரசுக்கு அண்டி பயோடிக் வேலை செய்யாது? - சரிதானே என் புரிதல்)

உங்கள் புரிதல் சரி. ஒரு வைரஸ் தொற்று ஏற்படும் போது அதனாலும் நோய் வரும் (primary infection), அதற்கு மேலதிகமாக பக்ரீரியாத் தொற்றினாலும் (secondary infection) நோய் வரலாம். எனவே, வைரஸ் தொற்று 7 நாட்கள் கடந்தும் சளி (அதுவும் மஞ்சள் நிறச் சளி) இருந்தால் அது பக்ரீரியாத் தொற்றாக இருக்கலாம். அன்ரிபையோரிக் வேலை செய்யும்.

ஆனால், சில சமயங்களில் பற்றீரியாத் தொற்றும் , அதிக சளியும் இல்லாமலே இருமல் அடுத்த 2 , 3 வாரங்கள் தொடரவும் செய்யும். இது தொற்றின் பின் விளைவு உடலில் தங்கி விடுவதால் நிகழ்கிறது. இதற்கு anti-histamines அல்லது ஏனைய சில இருமல் மருந்துகளும், சுடு நீர் போன்ற கை வைத்தியங்களும் உதவலாம்

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Justin said:

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா- நியூயோர்க் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம்

பீஜிங் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு?

சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், பீஜிங் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் கொரோனா மரணங்கள் குறித்த சரியான தகவல்களை சீனா சுகாதாரத் துறை வெளியிடாதது குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

ஆனால் சீன வெளியுறவு சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் உடனுக்குடன் அனைத்து தகவல்களும் உலக சுகாதார அமைப்பிற்கு அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இதுவரை 5 ஆயிரத்து 259 பேர் கொரோனாவினால் நான்காவது அலையினால் உயிரிழந்துள்ளதாக சீன அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனினும், தினசரி ஆயிரக்கணக்கில் பாதிக்கப்பட்டவர்கள் இறப்பதாக ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2023/1319000

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Justin said:

உங்கள் புரிதல் சரி. ஒரு வைரஸ் தொற்று ஏற்படும் போது அதனாலும் நோய் வரும் (primary infection), அதற்கு மேலதிகமாக பக்ரீரியாத் தொற்றினாலும் (secondary infection) நோய் வரலாம். எனவே, வைரஸ் தொற்று 7 நாட்கள் கடந்தும் சளி (அதுவும் மஞ்சள் நிறச் சளி) இருந்தால் அது பக்ரீரியாத் தொற்றாக இருக்கலாம். அன்ரிபையோரிக் வேலை செய்யும்.

ஆனால், சில சமயங்களில் பற்றீரியாத் தொற்றும் , அதிக சளியும் இல்லாமலே இருமல் அடுத்த 2 , 3 வாரங்கள் தொடரவும் செய்யும். இது தொற்றின் பின் விளைவு உடலில் தங்கி விடுவதால் நிகழ்கிறது. இதற்கு anti-histamines அல்லது ஏனைய சில இருமல் மருந்துகளும், சுடு நீர் போன்ற கை வைத்தியங்களும் உதவலாம்

நன்றி ஐயா 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

காய்ச்சலை விட தொடர்ந்து வரும் இருமல்தான் அலுப்பு. ஒரளவுக்கு மேல் சரிவராவிட்டால் - ஜிபிக்கள் அண்டிபயோடிக் கொடுக்கிறார்கள்.

காய்ச்சல் நாலு நாள் இருமல் நான்கு கிழமை சிலருக்கு ஆறு கிழமை தாண்டியும் ஆட்டம் காட்டுது கடவுளை கூட கண்டு பொருள் வாங்கலாம்  .இந்த  ஜிபி மாரிடம்  அண்டிபயோடிக் வாங்குவதை விட பேசாமல் இருக்கலாம் அவர்களுக்கு சோசல் காசில் இருப்பவர்கள்தான் பணம் கொட்டும் மரம். சொறிலங்கா சென்று வருபவர்களிடம் amoxicillin அங்குள்ள வர்களுக்கு கொஞ்சம் காசை அடிக்க 1௦௦ குலுசைய்சையாவ்து வாங்கி வருவார்கள் அதே வியாதிக்கு ஜிபி எனும் மிருகம் என்ன மருந்து கொடுக்கிறது என்று கேட்டு அறிந்து விட்டு பொதுவாகamoxicillin 21 குளுசைக்கு மேல் கொடுக்க மாட்டார்கள் அவர்கள் மற்றவர்களுக்கு என்ன கொடுத்தார்களோ அதையே வேறு வழியில்எடுத்து வந்த வருத்தத்தை மாற்றி கொள்ள வேண்டியதுதான் ..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

ஓம் இந்த மாரி இலங்கையில் இருந்து அண்டிபயோடிக் எடுப்பது நடப்பதுதான்.

ஆனால்,

1. இலங்கையில் இப்போ மருந்து தட்டுப்பாடு - கவனம் - அண்டிபயோடிக் எண்டு எதை தாறங்களோ தெரியாது

2. ஜிபி க்கள் - அண்டிபயோடிக் கொடுக்காமல் விட முக்கிய காரணம் - தொடர்சியான அண்டிபயடிக் பாவனை அண்டி பயோடிக்கை எதிர்க்கும் திரிபுகளை உருவாக்கி விடும். பிறகு அண்டிபயோடிக் வேலை செய்யாது. இதனால் நீங்களும், ஒட்டு மொத்த சமூகமும் பாதிப்படையும்.

இலங்கையில் இந்த அக்கறை இல்லை. வருத்தம் மாறினால் ஓகே - டாக்டர்கள் சாகிலேட் கொடுப்பது போல் அண்டிபயோடிக் கொடுப்பார்கள்.

பிகு

ஜிபி மேல் உங்கள் கடுப்பை நானும் உணர்ந்துள்ளேன் - ஆனால் அண்டிபயோடிக் கண்டபடி கொடுக்காமைக்கு காரணம் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

நுண்ணுயிர் எதிரிகளை (antibiotic)  நீங்கள் வசிக்கும் நாட்டில் இருக்கும் மருத்துவர் பரிந்துரைக்காமல் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

முதலில்: அன்ரிபையோரிக் தேவையா என்பதை மருத்துவர் தான் தீர்மானிக்க வேண்டும்.
இரண்டாவது: தேவையெனின் எந்த அன்ரிபையோரிக் உங்கள் நாட்டில் பரவலாகக் காணப்படும் பக்ரீரியா வகையைக் கட்டுப் படுத்துகிறது என்பதையும் உங்கள் மருத்துவர் தான் தீர்மானிக்க வேண்டும். இதைத் தீர்மானிக்க உதவும் Antibiograms போன்ற தகவல்கள் மருத்துவரிடம் தான் இருக்கும்.

இது இரண்டும் இல்லாமல் பயன்படுத்தும் அன்ரிபையோரிக் வேலை செய்யாமல் போகலாம். அத்தோடு கோசான் சொன்னது போல நீண்ட காலப் போக்கில் நுண்ணுயிர் எதிரிகளுக்கான எதிர்ப்பைப் (antibiotic resistance) பரப்பலாம்.

மருத்துவர் சொல்வதற்கு மேலதிகமாக சில எளிய  முறைகள் மூலம் உங்கள் சுவாசத் தொற்றுக்களை உடல் இலகுவாகக் கையாள வைக்கலாம்:

1. உப்புக் கொப்பழித்தல்: ஒரு தேக்கரண்டி (4-5 g) கறியுப்பை இளஞ்சூடான முக்கால்வாசி கோப்பை நீரில் கரைத்து காலை, மாலை gargle செய்து கொப்பழியுங்கள். சாப்பாட்டிற்கு முன்னர் செய்வது சிறப்பு. எங்கள் தொண்டையின் ஆரம்பப் பகுதியில் இயற்கையாகவே இருக்கும் பக்ரீரியாக்கள் தான் வைரஸ் தொற்றின் போது மேலதிக தொற்றைச் சில சமயங்களில் ஏற்படுத்துகின்றன. இவற்றை தற்காலிகமாக வைரஸ் தொற்றின் போது அகற்றும் வேலையை உப்புக் கொப்பழித்தல் செய்யும்.

2. சூடான பானங்களையே அருந்துங்கள், தண்ணீராக இருந்தாலும்.

3. மெந்தோல் (menthol) எனப்படும் யூகலிப்ரஸ் வாசனையை இரவில் படுக்கும் நேரங்களில் நுகரலாம். இதை விக்ஸ் மணப்பதாலோ அல்லது மெந்தோல் வாசனை ஆவியாக வெளிவிடும் ஈரப்பதன் கூட்டிகளைப் (humidifier) பாவிப்பதாலோ  செய்யலாம்.

4. உங்கள் வீட்டின் காற்று குளிர்காலத்தில் சுவாச ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. அனேக நவீன வீடுகளில் காற்றைச் சூடாக்கி அனுப்புவதன் (forced air) மூலம் தான் வீடு சூடாக்கப் படுகிறது. இந்த காற்றில் இருக்கும் மாசுக்களை அகற்றும் வடிகட்டியை (filter) சாதாரணமாக 3 மாதங்களுக்கொரு முறை மாற்ற வேண்டும். ஆனால், அதிக சுவாச ஆரோக்கியம் பாதிக்கப் பட்டால் ஒரு மாதத்திற்கு ஒரு வடிகட்டி எனக் குளிர் காலத்தில் மாற்றலாம். இந்த வடிகட்டிகளிலும் 1000 முதல் 1500 mpr (micro particle rating) வரை உடையவை அனேக சுவாசத் தொந்தரவு தரும் மாசுக்களை அகற்றக் கூடியவை. விலை கூட என்றாலும், இவை மூலம் வரும் சுவாச ஆரோக்கியம் விலை மதிப்பற்றது.  

எல்லோருக்கும் அல்ல - உடற்பயிற்சி செய்து பழகியோருக்கு மட்டும்:

5. காய்ச்சல், உடல் உழைவு இல்லாத தொண்டைக் கரகரப்பு, இரவில் மட்டும் இருமல் என்று இருப்போர் பகலில் மிதமான உடற்பயிற்சி செய்வது சுவாச ஆரோக்கியத்திற்கு நல்லது. எங்கள் உடல் இயங்கும் போது தசைகளில் இருந்து வெளிவிடப் படும் சில சுரப்புகள் எங்கள் நோயெதிர்ப்பு சக்திக்கு பலம் சேர்ப்பதால் இது நிகழ்கிறது.

கொசுறுத் தகவல் இந்த இடத்தில்: மனிதன் உட்பட ஏனைய விலங்குகளுக்கு ஆபத்தான பல வைரஸ்களுக்கு வௌவால் காவியாக இருக்கிறது. ஆனால், வௌவாலுக்கு இந்த வைரசுகளால் தீவிர நோயோ, மரணமோ வருவது மிக அரிது. இதன் ஒரு காரணம், வௌவால் பறக்கும் போது அது தீவிரமான உடற்பயிற்சி செய்வதால், அதன் உடலில் நோய்த் தடுப்பிற்கு அவசியமான சுரப்புகள் பெருமளவில் சுரக்கப் படுவது தான். எனவே, வௌவால் போல இருங்கள்!😎

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Justin said:

இலவச ஆலோசனைக்கு ஆயிரம் கோடி  நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

நன்றி உங்கள் விளக்கத்துக்கு .

இது கொசுறு மாதிரி இருந்தாலும் பெறுமதியான தகவல். எனது நகரத்தில் இருந்தபடியே உடற்பயிற்சியை இலகுவாக செய்யலாம் தான்.  ஆனாலும் ஆன்மீக தேடலுக்காக இந்திய செல்ல இருப்பதால் இது எல்லாம் சரிவராது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

ஜிபி மேல் உங்கள் கடுப்பை நானும் உணர்ந்துள்ளேன் - ஆனால் அண்டிபயோடிக் கண்டபடி கொடுக்காமைக்கு காரணம் இருக்கு.

ஜிபி மேல் எனக்கு கடுப்பல்ல ஜிபி தான் என் மேல் கடுப்பாய் உள்ளார்  யுவர் ஆனர் .

1 minute ago, விளங்க நினைப்பவன் said:

ஆனாலும் ஆன்மீக தேடலுக்காக இந்திய செல்ல இருப்பதால் இது எல்லாம் சரிவராது.

உங்களின் தேடல் இந்தியாவில் நிறைவு பெற்றால் எங்களுக்கும் அறிய தாருங்கள் பாஸ் .

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பெருமாள் said:

உங்களின் தேடல் இந்தியாவில் நிறைவு பெற்றால் எங்களுக்கும் அறிய தாருங்கள் பாஸ் .

ஓம் கட்டாயமா அது தொண்டு தானே 🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

நுண்ணுயிர் எதிரிகளை (antibiotic)  நீங்கள் வசிக்கும் நாட்டில் இருக்கும் மருத்துவர் பரிந்துரைக்காமல் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

முதலில்: அன்ரிபையோரிக் தேவையா என்பதை மருத்துவர் தான் தீர்மானிக்க வேண்டும்.
இரண்டாவது: தேவையெனின் எந்த அன்ரிபையோரிக் உங்கள் நாட்டில் பரவலாகக் காணப்படும் பக்ரீரியா வகையைக் கட்டுப் படுத்துகிறது என்பதையும் உங்கள் மருத்துவர் தான் தீர்மானிக்க வேண்டும். இதைத் தீர்மானிக்க உதவும் Antibiograms போன்ற தகவல்கள் மருத்துவரிடம் தான் இருக்கும்.

இது இரண்டும் இல்லாமல் பயன்படுத்தும் அன்ரிபையோரிக் வேலை செய்யாமல் போகலாம். அத்தோடு கோசான் சொன்னது போல நீண்ட காலப் போக்கில் நுண்ணுயிர் எதிரிகளுக்கான எதிர்ப்பைப் (antibiotic resistance) பரப்பலாம்.

மருத்துவர் சொல்வதற்கு மேலதிகமாக சில எளிய  முறைகள் மூலம் உங்கள் சுவாசத் தொற்றுக்களை உடல் இலகுவாகக் கையாள வைக்கலாம்:

1. உப்புக் கொப்பழித்தல்: ஒரு தேக்கரண்டி (4-5 g) கறியுப்பை இளஞ்சூடான முக்கால்வாசி கோப்பை நீரில் கரைத்து காலை, மாலை gargle செய்து கொப்பழியுங்கள். சாப்பாட்டிற்கு முன்னர் செய்வது சிறப்பு. எங்கள் தொண்டையின் ஆரம்பப் பகுதியில் இயற்கையாகவே இருக்கும் பக்ரீரியாக்கள் தான் வைரஸ் தொற்றின் போது மேலதிக தொற்றைச் சில சமயங்களில் ஏற்படுத்துகின்றன. இவற்றை தற்காலிகமாக வைரஸ் தொற்றின் போது அகற்றும் வேலையை உப்புக் கொப்பழித்தல் செய்யும்.

2. சூடான பானங்களையே அருந்துங்கள், தண்ணீராக இருந்தாலும்.

3. மெந்தோல் (menthol) எனப்படும் யூகலிப்ரஸ் வாசனையை இரவில் படுக்கும் நேரங்களில் நுகரலாம். இதை விக்ஸ் மணப்பதாலோ அல்லது மெந்தோல் வாசனை ஆவியாக வெளிவிடும் ஈரப்பதன் கூட்டிகளைப் (humidifier) பாவிப்பதாலோ  செய்யலாம்.

4. உங்கள் வீட்டின் காற்று குளிர்காலத்தில் சுவாச ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. அனேக நவீன வீடுகளில் காற்றைச் சூடாக்கி அனுப்புவதன் (forced air) மூலம் தான் வீடு சூடாக்கப் படுகிறது. இந்த காற்றில் இருக்கும் மாசுக்களை அகற்றும் வடிகட்டியை (filter) சாதாரணமாக 3 மாதங்களுக்கொரு முறை மாற்ற வேண்டும். ஆனால், அதிக சுவாச ஆரோக்கியம் பாதிக்கப் பட்டால் ஒரு மாதத்திற்கு ஒரு வடிகட்டி எனக் குளிர் காலத்தில் மாற்றலாம். இந்த வடிகட்டிகளிலும் 1000 முதல் 1500 mpr (micro particle rating) வரை உடையவை அனேக சுவாசத் தொந்தரவு தரும் மாசுக்களை அகற்றக் கூடியவை. விலை கூட என்றாலும், இவை மூலம் வரும் சுவாச ஆரோக்கியம் விலை மதிப்பற்றது.  

எல்லோருக்கும் அல்ல - உடற்பயிற்சி செய்து பழகியோருக்கு மட்டும்:

5. காய்ச்சல், உடல் உழைவு இல்லாத தொண்டைக் கரகரப்பு, இரவில் மட்டும் இருமல் என்று இருப்போர் பகலில் மிதமான உடற்பயிற்சி செய்வது சுவாச ஆரோக்கியத்திற்கு நல்லது. எங்கள் உடல் இயங்கும் போது தசைகளில் இருந்து வெளிவிடப் படும் சில சுரப்புகள் எங்கள் நோயெதிர்ப்பு சக்திக்கு பலம் சேர்ப்பதால் இது நிகழ்கிறது.

கொசுறுத் தகவல் இந்த இடத்தில்: மனிதன் உட்பட ஏனைய விலங்குகளுக்கு ஆபத்தான பல வைரஸ்களுக்கு வௌவால் காவியாக இருக்கிறது. ஆனால், வௌவாலுக்கு இந்த வைரசுகளால் தீவிர நோயோ, மரணமோ வருவது மிக அரிது. இதன் ஒரு காரணம், வௌவால் பறக்கும் போது அது தீவிரமான உடற்பயிற்சி செய்வதால், அதன் உடலில் நோய்த் தடுப்பிற்கு அவசியமான சுரப்புகள் பெருமளவில் சுரக்கப் படுவது தான். எனவே, வௌவால் போல இருங்கள்!😎

பயனுள்ள தகவல்களுக்கும் நேரத்துக்கும் நன்றி. எனக்கும் மருந்து தராட்டிக் கோபமாத்தானிருக்கிறது. எனது மகள் உங்கள் நன்மைக்கே என்று சொல்லுவார். முந்திச் சின்னத் தலையிடி என்றாலே எங்க குளிசையென்று தேடுவன். மகள் சுட்டியபின்னர் தேவையென்றால் மட்டுமே எடுப்பது. எனது மருத்துவரும் உடனே மருந்து தரமாட்டார்.  

 2ஆம் திகதி எனது பேத்தியாருக்குத் திடீரென எந்தவிதச் சத்தமும் இல்லாமல் வலிப்பு வந்து அவசரஉதவியை அழைத்தால் விளக்கி வாறதுக்கே 20நிமிடங்கள். அவை வந்து சில நிமிடங்களின் பிள்ளையும் கண்விழித்து அழுதபின்னரே நிம்மதி வந்தது. ஆனால், முதலுதவி மருத்துவரோ அம்மா ஓமென்றால்தான் மருந்தென்று  கூறிப் பின் மருந்துகொடுத்துக் கொண்டுபோய் பரிசோதித்துவிட்டு 8மணித்தியாலம் சும்மாதான் வைத்திருந்து, பிறகு காய்ச்சல் வரும்போதே மருந்து கொடுத்தார்கள். பின்னர் ஒரு நுஊபு எடுத்துவிட்டு வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். மருந்தெதுவும் கொடுக்கவில்லை. காய்ச்சல் இருந்தால் மட்டும் வேண்டிப்பாவிப்பதற்கான சீட்டைக் கொடுத்துவிட்டுள்ளார்கள். இன்றைய உலகில் ஒருபுறம் பொறுமையின்மை மறுபுறம் தேடலின்மை அல்லது தெரிந்ததையே செய்யப் பொறுமையில்லை. ஆனால் எமது அஞ்சறைப்பெட்டகத்தினுள்ளேயே சில நோய்களைக் கட்டுப்படுத்தக்கூடிய பல அருமருந்துகள் உள்ளன. யேர்மனியர்கள் இன்று அவற்றைநோக்கி நகர்ந்துள்ளதை அங்காடிகளில் உள்ள பல்வேறு பொருட்களினூடாக(பச்சை மஞ்சள் முதல்... ) அவதானிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 6/1/2023 at 19:03, nochchi said:

பேத்தி நலமாக இருப்பது கேட்டு மகிழ்ச்சி.

சிறு குழந்தைகளில் காய்ச்சல் அதிகரித்தால் வலிப்பு வரும். குழந்தைகளில் காதுப் பகுதியில் வெப்பமானியை வைத்து அளக்கும் வெப்பநிலை உடலின் உண்மையான வெப்பநிலையை விட ஒரு டிகிரி குறைவாகத் தான் காட்டும். இதனால், நாம் 98 F என்று காது வெப்பமானியில் கண்டு பிடித்தால் உண்மையான வெப்பநிலை 99 F ஆக இருக்கும். 100 F இற்கு மேல் சிறு குழந்தைகளின் காய்ச்சல் அதிகரிக்க அனுமதிக்கக் கூடாதென்பர். இப்படி ஏதோ நடந்திருக்கிறது உங்கள் பேத்தி விடயத்தில் என ஊகிக்கிறேன்.

மேலும், சிறு குழந்தைகளில் ஈரல் இன்னும் முழுமையாக வளர்ச்சி அடையாததால் தேவையில்லாமல் மருந்துகள் கொடுக்க மாட்டார்கள். அனேக மருந்துகளை உடலில் இருந்து அகற்ற முழுமையாகத் தொழிற்படும் ஈரல் அவசியம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.