Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
47 minutes ago, goshan_che said:

🤣 சரி அக்கா…இந்தா..குடு..குடு..எண்டு ஓடிப்போய் படுக்கிறன்…🤣

அதுக்கு முதல் உங்கள் உத்தரவோட ஒரு கருத்து கண்றாவியை சொல்லி விட்டு போறன் ஓகேயா?

————

இது @MEERA @satan @பெருமாள் சகோதரங்களுக்கு.

யாழ்பாணத்தின் அரசியல் போல் அல்ல மட்டு-அம்பாறையின் அரசியல்.

சுமந்திரன் மீது பாவிக்கும் அஸ்திரங்களை அப்படியே சாணக்கியன் மீது பாவித்தால் நட்டம் ஒட்டு மொத்த தமிழ் தேசிய கொள்கைக்கும், தமிழ் இனத்துக்கும்தான். 

தலைவரின் 2004 காலத்தில் தலைவர் எடுத்த அணுகுமுறையை மனதில் நிறுத்தி யோசியுங்கள்.

ஆங்கிலத்தில் weaponizing என்பார்கள். ஒரு விடயத்தை அரசியலுக்காக “ஆயுதமாக்கல்”.

போன தேர்தலில் மட்டு அம்பாறையில் தமிழ் தேசியத்துக்கு எதிராக தமிழ்-முஸ்லிம் பிணக்கு ஆயுதமாக்கப்பட்டது. இரெண்டு எம்பி சீட்டை பெற்று கொண்டார்கள்.

இந்தமுறை இந்து-கிறீஸ்தவ முரணை ஆயுதமாக்குகிறார்கள்.

இதில் சாணாக்கியன் கிறீஸ்தவர் என்பது இவர்களுக்கு மேலும் வசதியாக போய்விட்டது.

சுருங்க சொல்லின் - திரு முரளீதரன் எம்பி ஆவதும் ஆகாததும் நம் எல்லோர்கையிலும், பொறுப்புணர்விலும் தங்கி உள்ளது.

இதில் முரண்பட எதுவும் இல்லை.

நானும், நீங்களும், கருவும், பெருமாளும், ஜஸ்டீனும், மீராவும் ஒரே அணிதான். நல்லா கோல் அடிக்கிறோம்.

# சேம் சைட் கோல்

ஒரு செயற் திறன் அற்ற பொம்மையாய் இருந்தாலும் பரவாயில்லை உங்களுக்கு தேவை என்றால் பதவியில் ஏத்தோணும் ...மக்கள் எக்கேடு கேட்டு போனால் என்ன?...நாடு முஸ்லிம்களிடம் போனால் நமக்கு என்ன?...கிழக்கு தானே அதுவும் மட்டு எப்படியும் போகட்டும் .நீங்கள் பயப்பாதீங்கோ சாணக்கியன் கட்டாயம் வெல்லுவார்...அங்கிருக்கும் முஸ்லிம்கள் அவரை தோக்க விட மாட்டினம் 
பரிதாபம் என்ன வெண்டால் ஏலாக் கட்டத்தில் உங்களை போல் ஆட்களும் தேசியத்தை கையில் எடுக்கிறது தான் ...இனி மேல் தயவு செய்து உங்கள் உப்பு சப்பற்ற கருத்துக்களுக்கு என்னை மேன்ஷன் பண்ண வேண்டாம்...உங்களை போல எத்தனை பிரிவினைவாதிகளை யாழும்,நானும் பார்த்து இருக்கிறோம் ...இரவு ,பகலாய் முளைத்திருந்தது இதற்கென்றே யாழுக்கு வாறது  

  • Replies 148
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

இந்த சீத்துவத்தில உங்களுக்கு தீர்வு? அதுவும் வடக்கும் கிழக்கும் இணைத்து? பொலிஸ் அதிகாரத்தோட? இன்னும் ஒரு ஆயிரம் ஆண்டுக்குப்பின் காலம் நினைத்தால், அதுவரை இலங்கையில் இனம் நிலைத்தால், உங்க

island

மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரை ஏக வசனத்தில் குறிப்பிடுவது தமிழ் மரபும் இல்லை,  யாழ்கள விதிமுறையும் அதற்கு இடமளிக்கவில்லை.  இப்படியாக  தமிழ் இனத்தின் மாண்பைக்  கெடுக்கும் நீங்கள்

MEERA

சாணக்கிய சிறீலங்கா சுதந்திர கட்சியில் இருந்தது உங்களுக்கு தெரியவில்லை..  செக்கா சிவலிங்கமா என்று தெளிவுபடுத்த யாழ்ப்பாணத்தவன் தான் உங்களுக்கு தேவை…

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உண்மை சுடும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, satan said:

கோஷான் ஒன்றை விளங்கிக்கொள்ளுங்கள்! நாம் குறிப்பிட்ட அரசியல்வாதியை எந்த தனிப்பட்ட, வாத காரணங்களுக்காகவும் விமர்ச்சிக்கவில்லை, இவரை மட்டுமல்ல எந்த அரசியல்வாதியையும். நீங்கள் தேவையில்லாமல் புதிதாக ஒரு பிரச்சனையை கிளப்பி பிரிவினையை தூண்டாதீர்கள். எங்களது நிஞாயமான விமர்சனத்தை நீங்கள் சரியாக வாசிக்கவில்லை அல்லது திசை திருப்புகிறீர்களோ என சதேகமாக இருக்கிறது. சுமந்திரன் விமர்சனத்திலும் நீங்களும் உங்களது வசன நடையை அச்சடிப்பது போன்று எழுதும் இன்னொரு நாமமும் உடனே மதத்தை புகுத்துவது சரியல்ல. மதவாதமோ, பிரதேசவாதமோ, சாதீய வாதமோ எதுவானாலும் ரொம்ப ஆபத்தானது. அப்படி வந்தாலும் கூட அதை விலத்தி பயணிக்க வேண்டும். நாங்களே ஆயுதத்தை தூக்கி கொடுப்பதுபோல் இருக்கிறது உங்களது கருத்து. அப்படியானால் இவர்களுக்கு கட்சி எப்படி இடம் கொடுத்தது என்கிற கேள்வி எழுகிறது. செல்வநாயகத்தை மக்கள் எப்படி தங்கள் தலைவனாக கொண்டார்கள்?  கிழக்கு மாவட்டத்தைப்பற்றி எங்களுக்கு நிறையவே கவலை உண்டு, ஆக்கிரமிப்பு மட்டுமல்ல இயற்கை அழிவுகளும் மற்றைய மாவட்டங்களை விட கூடுதலாக உண்டு. அவர்களது தொண்டை நெருக்கம் புரியாமலில்லை. என் தாயார் நான் சிறு வயதாயிருந்த காலத்திலிருந்து  மட்டக்களப்பு மாவட்ட தமிழர் படும் இன்னல்களை அடிக்கடி கூறுவார் அப்படியான செயற்பாடுகளை நான் பத்திரிகைகளில் வாசித்தறிந்துஉள்ளேன்.  ஆனால் பாருங்கள்! எடுத்தவுடன் வரும் பிரதேசவாதம் அது சாதாரணமானதல்ல கடந்த கால அனுபவங்களுமுண்டு. எழுதி வைத்துக்கொள்ளுங்கள் சந்தர்ப்பம் இப்போ அவர்கள் சேர்ந்திருந்தாலும் ஒருநாள் எல்லோரும் சேர்ந்து வடக்கும் கிழக்கும் இணைய அனுமதியோம் என்று கோஷமெழுப்புவார்கள், அதில் நீங்கள் குறிப்பிடுபவர் முதன்மையாய் இருப்பார். உள்ளுக்குள் யாழ் மீது ஒரு வெறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. ஒரு ஆதரவாளனுக்கு இவ்வளவு வெறுப்பு எடுத்தவுடன் கொட்டுகிறார் என்றால்; தலைவனுக்கு எவ்வளவு இருக்கும்? அதையே சிலர் ஆதரித்துக்கொண்டு மதவாதத்தை வெறுக்கிறேன் என்றால் நகைக்காமல் நான்  என்ன செய்ய? அரசியல்வியாதிகள் விடும் தவறுகளை ஏதோ ஒரு வாதத்துக்குள் போட்டு மூடி நிஞாயப்படுத்துவதை நிறுத்துங்கள்! இப்போதைக்கு அமைதியாக தூங்கப்போங்கள், நீங்கள் சொன்ன மாதிரி இருக்கு.                           

இதற்கு மேல் உங்களுக்கு எப்படி சொல்வது என்று புரியவில்லை சாத்ஸ்.

பிரதேசவாதம் மோசமானது. அது முதல் எடுப்பிலேயே வந்தது என்பதை நானும் கண்டு கொண்டேன். கண்டித்திருக்கிறேன்.

அதே அளவு கண்டனத்தைதான் அவருக்கு எதிர் வினையாற்றுவதாக மத வாதத்தை கையில் எடுத்தோர் மீதும் வைக்கிறேன்.

ஆனால் இவை இரெண்டையும் கைக்கொள்வதால் நீங்கள் இருபகுதியிமே நம் எல்லார் தலையிலும் மண்ணை அள்ளி போடுகிறீர்கள்.

சுமந்திரனை நானும் விமர்சிக்கிறேன் சாத்ஸ். ஆனால் அது அவர் மதத்தை இட்டு வந்த விமர்சனமாக இருக்க கூடாது.

அதே போலத்தான் சாணக்கியன் மீதும். விமர்சனம் எவ்வளவு காரசாடமாயும் இருக்கலாம். ஆனால் இன்னொரு மதம், பிரதேசத்தை தவிர்த்து விட்டு.

ஆனால் கூடுதலாக, மட்டு அரசியலில் வேறு ஒரு கோணமும் இருக்கிறது.

இப்போ பாருங்கள், 

தமிழர்கள், தமிழ் தேசியம் பேசுவோர் ஒன்றாய் இருப்போம், மதம், பிரதேசம் என பிரிந்து எமக்குள் அடிபடாமல் என சொல்லிய எனக்கு கிடைத்த பட்டம் “பிரிவினைவாதி” 🙏🏾.

ஆனால்,

போராட்டத்தை கருவறுத்து, அதை பிரதேசவாதத்தினை கிளப்பி நியாயப்படுத்தியவருக்கு ஆதரவாக எழுதுபவர்கள் தியாக செம்மல்கள்🤣.

நல்லா வரும் இந்த இனம் 🙏🏾

நன்றி நீங்கள் சொன்னது போலவே தூங்க போகிறேன்.

 

 

Edited by goshan_che
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, goshan_che said:

ஆனால் அது அவர் மதத்தை இட்டு வந்த விமர்சனமாக இருக்க கூடாது.

இது உங்கள் கற்பனை. தகுதியில்லாத ஒருவரை அரியணை ஏற்றவும், தவறுகளை நிஞாயப்படுத்தவும், அனுதாபத்தை குறிப்பிட்ட  சமூகத்திடமிருந்து பெறவும் கையாளும் உத்தி. ஆதாரத்தோடு நிரூபியுங்கள். தயவு செய்து சும்மா ஏக வசனம் பேசவேண்டாம். 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, satan said:

இது உங்கள் கற்பனை. தகுதியில்லாத ஒருவரை அரியணை ஏற்றவும், தவறுகளை நிஞாயப்படுத்தவும், அனுதாபத்தை குறிப்பிட்ட  சமூகத்திடமிருந்து பெறவும் கையாளும் உத்தி. ஆதாரத்தோடு நிரூபியுங்கள். தயவு செய்து சும்மா ஏக வசனம் பேசவேண்டாம். 

1. நான் எங்கே ஏக வசனம் பேசினேன்?

2. சாணாக்கியனை விமர்சிக்க அவரின் மதம் இந்த திரியிலேயே இழுக்கப்பட்ட ஆதாரம் உள்ளது.

3. சுமந்திரன் அகற்றப்பட வேண்டியவர் என்பதே என் நிலைப்பாடும் ஆகவே அவரின் எதையும் நியாப்படுத்த, அனுதாபம் பெற எனக்கு ஒரு தேவையும் இல்லை.

பிகு

நீங்கள் ஏன் இதில் இவ்வளவு டென்சன் ஆகி என் மேல் வசவுகளை வீசுகிறீர்கள் எனவும் எனக்கு புரியவில்லை.  நான் உங்களை பிரதேசவாதி, மதவாதி என்று எங்கேயும் கூறவில்லை. ஏனைய உறவுகளை கூட அப்படி கூறவில்லை.

என் பார்வையில் சரி என படுவதை மட்டும் எடுத்து வைக்கிறேன் அவ்வளவுதான்.

ஒருவர் என் மேல் ஏன் ஏரிந்து விழுந்தா என்பது புரிகிறது. ஏனென்றால் அவர்களின் அரசியலை அம்பலபடுத்திவிட்டேன். 

ஆனால் நீங்கள்?

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கோசான் இங்கு நான் முன் வைப்பது சாணக்கியவின்மகிந்த கூட்டணி  திருவிளையாடல்களை.

ஒரு போதும் சும் உட்பட எவரையும் சமய ரீதியில் எதிர்க்கவில்லை.

நீங்கள் உட்பட பலருக்கு சும் அரசியலுக்கு வந்த பின்னரே அவரை தெரிந்திருக்கும். ஆனால் எனக்கும் எமது குடும்பத்தினருக்கும் சும் இன் தந்தையின் தந்தையுடன் இருந்து ஆரம்பிக்கிறது.

மேலும் இன்று வரை karu திருகோணமலையை கிழக்கு என ஏற்றுக்கொள்ளவில்லை.  பிரதேசவாதி என எனக்கு முத்திரை குத்த முயற்சி செய்தது தான் வேடிக்கை.

ரதி அக்காவினது கருத்தும் எனது கருத்தும் சாணக்கியவின் விடயத்தில் ஒத்து போவதால் நான் ரதி அக்காவின் அரசியலை ஏற்ககிறேன் என அர்த்தம் கிடையாது.

தமிழ் தேசிய அரசியலில் இடம் கிடைக்காமையால் மகிந்த கூட்டணியில் இருந்தார் ஆனால் இடம் கிடைத்தவுடன் தமிழ் தேசிய அரசியல்வாதி ஆகிவிட்டார் என்ற Karu இன் கருத்தை ஒருபோதும் ஏற்றுக்க கொள்ளப் போவதில்லை. நீங்களும் ஏற்க மாட்டீர்கள் என்றே நம்புகிறேன்.

Edited by MEERA
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, MEERA said:

கோசான் இங்கு நான் முன் வைப்பது சாணக்கியவின்மகிந்த கூட்டணி  திருவிளையாடல்களை.

ஒரு போதும் சும் உட்பட எவரையும் சமய ரீதியில் எதிர்க்கவில்லை.

நீங்கள் உட்பட பலருக்கு சும் அரசியலுக்கு வந்த பின்னரே அவரை தெரிந்திருக்கும். ஆனால் எனக்கும் எமது குடும்பத்தினருக்கும் சும் இன் தந்தையின் தந்தையுடன் இருந்து நட்பு.

 

நன்றி மீரா.

நிச்சயமாக சும்மை போல் சாணாக்கியனும் எமது 2009 பின்னான நகர்வுகளை நீத்துபோக செய்ய அனுப்பபட்ட ஆள் என்ற சந்தேகத்தை புறம் தள்ள முடியாது.

மகிந்தவோடு கேட்டபோது வென்றிருந்தால் இப்போ வியாழேந்திரன்/சந்திரகாந்தன் இருக்கும் இடத்தில் சாணாக்கியன் இருந்திருப்பார்.

இவற்றை கேள்வி கேட்பதில் ஒரு தவறும் இல்லை.

 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, goshan_che said:

நீங்கள் ஏன் இதில் இவ்வளவு டென்சன் ஆகி என் மேல் வசவுகளை வீசுகிறீர்கள் எனவும் எனக்கு புரியவில்லை.  நான் உங்களை பிரதேசவாதி, மதவாதி என்று எங்கேயும் கூறவில்லை. ஏனைய உறவுகளை கூட அப்படி கூறவில்லை.

இது @MEERA @satan @பெருமாள் சகோதரங்களுக்கு.

1 hour ago, goshan_che said:

சுமந்திரனை நானும் விமர்சிக்கிறேன் சாத்ஸ். ஆனால் அது அவர் மதத்தை இட்டு வந்த விமர்சனமாக இருக்க கூடாது.

 

55 minutes ago, satan said:

இது உங்கள் கற்பனை. தகுதியில்லாத ஒருவரை அரியணை ஏற்றவும், தவறுகளை நிஞாயப்படுத்தவும், அனுதாபத்தை குறிப்பிட்ட  சமூகத்திடமிருந்து பெறவும் கையாளும் உத்தி. ஆதாரத்தோடு நிரூபியுங்கள். 

ஒரு தவறின் விளைவு இன்னொரு தவறை பிறப்பிக்கும் என்பதற்கு நமது நாடு நல்ல உதாரணம் இருக்க, பிரதசவாதத்தை மிதமாகவும் அது பிறப்பித்த மதவாதத்தை வன்மையாக கண்டிப்பதிலிருந்தும், சுமந்திரன் விடயத்தில் இன்று நேற்றல்ல நீங்கள் தொடர்ந்து மதவாதத்தை கையிலெடுப்பதும் உங்களின் இரட்டை முகத்தையோ, நடிப்பையோ ஏதோ ஒன்றை காட்டுகிறது. நிற்க எனக்கு நீங்கள் கருத்திட்டதால் எழுதுகிறேன். கிறிஸ்தவர்கள் யாரும் இந்தகுற்றச்சாட்டை வைத்ததாக தெரியவில்லை, இரு நாமம் ஒரு கருத்து அடிக்கடி இங்கு அதை மீண்டும் மீண்டும் கூறி நிலைநிறுத்தப்பார்க்கிற மாதிரி தெரிகிறது. ஒரு குறிப்பிட்ட உறவின் கருத்தை கண்டிக்கவில்லை என குமுறும் மனம், தாங்கள் விடும் தவறை சுட்டிக்காட்டினால் கேள்வி கேக்கிறது. தவறு எதையும் முளையிலே கிள்ளி விடவேண்டும், வேரூன்றினால் அகற்றுவது கடினம். எந்த வாதமும் ஒன்று இன்னொன்றோடு பின்னிப்பிணைந்தது. ஒன்றை காணாமல் கடந்து போனால் அது மற்றயதை தோற்றுவிக்கும். சுட்டிக்காட்டாமல் கடந்து செல்வதும் தவறு, அதோடு இது நமது சமுதாயம் சம்பந்தப்பட்டது, இதை நீங்கள் ஏற்கெனவே சொல்லியிருக்கிறீர்கள்.  நான் உங்கள்மீது வசவு வீசுவதாக நினைத்தால் மன்னித்துக்கொள்ளுங்கள். இதோடு நிறுத்திக்கொள்கிறேன். 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, satan said:

இது @MEERA @satan @பெருமாள் சகோதரங்களுக்கு.

 

ஒரு தவறின் விளைவு இன்னொரு தவறை பிறப்பிக்கும் என்பதற்கு நமது நாடு நல்ல உதாரணம் இருக்க, பிரதசவாதத்தை மிதமாகவும் அது பிறப்பித்த மதவாதத்தை வன்மையாக கண்டிப்பதிலிருந்தும், சுமந்திரன் விடயத்தில் இன்று நேற்றல்ல நீங்கள் தொடர்ந்து மதவாதத்தை கையிலெடுப்பதும் உங்களின் இரட்டை முகத்தையோ, நடிப்பையோ ஏதோ ஒன்றை காட்டுகிறது. நிற்க எனக்கு நீங்கள் கருத்திட்டதால் எழுதுகிறேன். கிறிஸ்தவர்கள் யாரும் இந்தகுற்றச்சாட்டை வைத்ததாக தெரியவில்லை, இரு நாமம் ஒரு கருத்து அடிக்கடி இங்கு அதை மீண்டும் மீண்டும் கூறி நிலைநிறுத்தப்பார்க்கிற மாதிரி தெரிகிறது. ஒரு குறிப்பிட்ட உறவின் கருத்தை கண்டிக்கவில்லை என குமுறும் மனம், தாங்கள் விடும் தவறை சுட்டிக்காட்டினால் கேள்வி கேக்கிறது. தவறு எதையும் முளையிலே கிள்ளி விடவேண்டும், வேரூன்றினால் அகற்றுவது கடினம். எந்த வாதமும் ஒன்று இன்னொன்றோடு பின்னிப்பிணைந்தது. ஒன்றை காணாமல் கடந்து போனால் அது மற்றயதை தோற்றுவிக்கும். சுட்டிக்காட்டாமல் கடந்து செல்வதும் தவறு, அதோடு இது நமது சமுதாயம் சம்பந்தப்பட்டது, இதை நீங்கள் ஏற்கெனவே சொல்லியிருக்கிறீர்கள்.  நான் உங்கள்மீது வசவு வீசுவதாக நினைத்தால் மன்னித்துக்கொள்ளுங்கள். இதோடு நிறுத்திக்கொள்கிறேன். 

1. உங்கள் மூவரையும் @ போட்டது குற்றம் சாட்ட அல்ல. இதில் ஒரு நிலையை எடுத்தவர்கள் - உங்கள் கவனத்துக்கு என குறிக்க. 

இப்போ பார்க்க அதை பிழையாக விளங்கி கொண்டிருக்க வாய்பிருப்பதாக தெரிகிறது.

அறிந்தே செய்ததல்ல🙏🏾.

2. முன்னர் ஒரு திரியில் நீங்கள் மதவாத கருத்தை எதிர்த்து யாழில் நாமிருவரும் ஒரு நிலை எடுத்து வாதாடியதை நீங்கள் நினைவில் நிச்சயம் வைத்திருப்பீர்கள் (இது சும் பற்றிய திரி அல்ல).

அதன் பின் இன்னொரு சும் பற்றிய திரியில் விமர்சனம் மதத்தை இட்டு வருவதாக தெரிந்த போது கேள்வி கேட்டேன் - அதில் இன்னொருவர் ஒத்த கருத்துடன் இருந்தார்  .  நீங்கள் எதிர்கருத்தில் இருந்தீர்கள். (பின்னாளில் நடந்தவை இதில் எனுடன் கூட்டு நிலை எடுத்தவர் இதயசுத்தியாக இருக்கவில்லை என இப்போ உணர்துகிறது -பரவாயில்லை - நாம் இதயசுத்தியாகவே இருந்தோம் அது போதும்). 

இப்போ இந்த திரியில் வேறும் பலர் (ஒருவர் அல்ல) என்னுடன் ஒத்த கருத்தை பகிர்ந்தனர். 

இது கருத்துபரிமாற்றத்தில் சகஜம் சாத்ஸ். இதில் எந்த வேறு உள்நோக்கமும் இல்லை.

3. நேரத்துக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 hours ago, நன்னிச் சோழன் said:

முதலில் 'நாடாளுமன்ற உறுப்பினரை' என்று கூறிவிட்டு, இப்போது 'பொதுவெளியில்' என்று குட்டிக்கரணம் அடிப்பது வாதத்திலிருந்து மழுப்பும் செயலாகும். எனது மறுமொழியானது நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பற்றியதேயொழிய பொதுவெளியில் பேசுவது பற்றியதன்று.

சரி இப்போது உங்களது மழுப்பலுக்கே வருகிறேன். பொதுவெளியில் பொதுவாக விளிக்கக்கூடாது தான். ஆனால் எவரை மரியாதையாக விளிக்க வேண்டுமென்பது அவரவர் விருப்பம். படுகொலைக்காரன், கொள்ளைக்காரன், கூடயிருந்து குழிபறிப்போர்களையெல்லாம் மரியாதையாக விளிக்க வேண்டும் என்றில்லை. அதிலும் குறிப்பாக அரசியல்வியாதிகளை!  

இப்போது எடுத்துக்காட்டுக்கு உங்களையே எடுத்துக்கொள்ளுவோமென். நீங்கள் இதுவரை யாழ் களத்தில் குறிப்பிட்டெழுதிய 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட' எனப்படுத்திய அரசியல்வியாதிகளில் எத்தனை பேரை எப்படி (ஒருமையில்) விளித்துள்ளீர்கள் என்று நோண்டிப் பார்ப்போமா? தூய்மைப்படுத்தும் வேலையை வீட்டிலிருந்தே தொடங்குவோம்! ஆமென்.🫡😂🤣

டக்கி நக்கியைத் தவிர வேறு யாருக்கும் ஐயன் மரியாதை கொடுக்கவில்லைப் போலும். அதிலும் டக்கிக்கு 'மாண்பு மிகு தோழர்' ... என்ன கண்ட்ராவியோ! (எதற்காகவிருந்தாலும் எழுதியது எழுதியது தான்)

 

நரி மற்றும் சந்திரிக்கா மாமிக்கு எங்கே?

 

மணி, கஜே, விக்கி ஆகியோருக்கு எங்கே?

 

 

 

ஆக மொத்தத்தில் 'ஊருக்கு மட்டுமே உபதேசம், ஆனால் எனக்கல்ல'!

இன்னும் சொல்லப்போனால், தமிழ் இனத்தின் மாண்பைக்  கெடுக்கும் நீங்கள் உண்மையில் தமிழரா என்றே கேட்கத்தோன்றுகிறது!😉 (உங்கட வசனம் உங்களுக்கே பொருந்துது, பார்த்தியளோ?😆)

அந்தக் குடும்பத் தகவல் உண்மையா பொய்யா என்பது கூட இதுவரை அறியப்படவில்லை. இந்நிலையில், குடும்பத்தைப் பற்றிக் கேவலமாக மற்றும் பேசுவதுதான் தவறானதேயொழிய அறிந்துகொள்வதில் தவறில்லையே. என்னைப் பொறுத்தவரை, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவரின் பின்புலத்தை அறிந்துவைத்திருப்பது நல்லது தானே. அதில் என்ன பிழையுண்டு? விக்கியிலும் இதுதான் பதிவேற்றப்படும். அதற்காக விக்கியை நோவீர்களோ?

இது இணையவெளி. சட்ட நடவடிக்கையெல்லாம் ஒன்றும் எடுக்கேலாது. மீறி எடுத்தாலும் முதன்முதலில் வெளியிட்டவர்/பதிவேற்றியவர் மீதே பாச்ச வேண்டும். காவி மீதன்று. 

அந்தக் கடைசிப் பத்தி தேவையற்ற தனிமனித - தாக்குதல் மற்றும் சீண்டல் கருத்து ஆகும். கருத்து வறுமை ஏற்படும் போது உங்களைப் போன்றவர்கள் பயன்படுத்தும் நாகரீகமற்ற இழிவான கடைசி ஆயுதம். யாழில் கருத்தாடும் நாகரீகமான பண்பென்று ஒன்று உள்ளது. அதைக் கடைப்பிடிக்கவும். 

 

கஷ்ரப்பட்டு பல திரிகளில் தேடியும், நான் மரியாதைக் குறைவாக ஏக வசனத்தில் எவரையும் எழுதியதைக்  கண்டு பிடிக்க உங்களால் முடியாததற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

இருந்தாலும், வேலை மினக்கெட்டு தேடியதை இணைத்து சும்மா நாலு  வசனம் எழுதிவிடுவோம். வாசிப்பவர்கள் என்ன முழுவதும் வாசிக்கவா போகிறார்கள் என்ற துணிவில் அதை இணைத்து,   உப்பு சப்பும் இல்லாத பதிலை வழங்கியுள்ளீர்கள். 

நீங்கள் கஷ்ரப்பட்டு தேடி இணைத்த திரிகளில், கஜேந்தரகுமாரின் அரசியலை விமர்சித்துள்ளேன். ஆனால் அவரை பற்றி எந்த அவதூறுகளும் செய்யவில்லை. அவரை ஏக வசனத்தில் அழைக்கவில்லை. 

கஜேந்திரகுமார் அவரது  மூன்று தலைமுறை அரசியல் பாரம்பரியத்தை உபயோகித்து அவர் சிறந்த தலைமையை வழங்க முடிந்தும் அவர் அதை செய்யாமல் விட்டதை சுட்டிக்காட்டினேன்

தேவானந்தாவின் அரசியலை  நையாண்டியுடன் கண்டித்துள்ளேன். அவரின் பெயர்  முன்னால் போட்ட மாண்பு மிகு எனற வார்ததை அவரை நையாண்டி பண்ண எழுதப்பட்டது என்பதை கூட புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு இருக்கிறது உங்கள் தமிழறிவு.

மணிவண்ணன் யார் மேயராக சிறப்பாக கடமையாற்றியதையும் அவரது நிர்வாக திறமையையும் பாராட்டி உள்ளேன். 

யாழ்களம் என்பது பொது வெளி என்பது சொல்லாமலே தெரிய வேண்டிய விடயம். இதில் எங்கே வந்தது குத்துக்கரணம்?  

பொது வெளியான யாழ் கருத்துக்களத்தில் எவ்வாறு உரையாட வேண்டும் என்பதை யாழ் கள விதி வலியுறுத்துகிறது. நீங்கள் கூறுவது போல் இங்கு அரசியல்வாதிகளை மற்றும் மக்கள் பிரதிநிதிகளில் எவரை மரியாதையாக விளிக்கலாம் என்பது, அவரவர் விருப்பம் என்பது உண்மையானால் அதனை யாழ் கள நிர்வாகம் @இணையவன்அல்லது @நிழலி தான் கூறவேண்டும். நீங்கள்  அல்ல

உங்கள் விருப்பபடி இங்கு அரசியல்வாதிகளை அவன் இவன் என்று ஒருமையில் அழைக்கலாம் என்றால், அதனை உங்கள் வீட்டிற்குள் வைத்துக் கொள்ளலாம். யாழ் களத்தில் அல்ல. 

Edited by island
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உண்மை சுட்டுடிச்சா ஐயையோ 😧அதை  இப்பவாவது ஒத்துக் கொண்டீர்களே!..ஒரு பக்கத்தால் சும்,மல்லி அவர்களது அரசியல் தெரியும் .சுத்துமாத்து, ஏமாத்து எல்லாம் உங்களுக்கு விளங்குது என்று எழுதிக் கொண்டு இன்னொரு பக்கத்தால் வெட்கமே இல்லாமல் அவர்களுக்கு வக்காலத்து வாங்கி உங்கள் இரட்டை முகத்தை காட்டி விட்டிர்களா?... எப்படித் தான் மறைத்தாலும் மண்டையில் இருக்கின்ற கொண்டையை மறக்க முடியாதல்லவா 
இதில வேற உங்கட ஊத்த ,நாத்தங்களை மறைக்க என்னை கெட்டவாளக்கினால் நீங்கள் நல்லவராகி விடலாம் என்ட கனவு வேற ...அசல் பக்கா கேடு கெட்ட  தமிழன் என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்து உள்ளீர்கள்...இதெல்லாம் ஒரு பிழைப்பு 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்பவும் தலையில அடிச்சு சொன்னனான், கூப்பிடுறீங்கள் கடைசிவரை நின்று நிலைத்தாட முடியுமா உங்களால் என்று? இனி, முடிந்தால் தடுத்துப்பாருங்கோவன். நான் இந்தப்பக்கம் தலைவைச்சு படுக்க மாட்டேன்.

  • Haha 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, satan said:

அப்பவும் தலையில அடிச்சு சொன்னனான், கூப்பிடுறீங்கள் கடைசிவரை நின்று நிலைத்தாட முடியுமா உங்களால் என்று? இனி, முடிந்தால் தடுத்துப்பாருங்கோவன். நான் இந்தப்பக்கம் தலைவைச்சு படுக்க மாட்டேன்.

🤣 13 ம் திகதி சனி மாற்றம். அதுவும் Friday the 13th வேற 🤣

அநேகமா எல்லா வீட்டிலும் ஒரு பழைய கிழவி இருந்து சதா புறுபுறுத்துகொண்டிருக்கும்.  அதை போல யாழிலும் உண்டு 🤣

 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, ரதி said:

உண்மை சுட்டுடிச்சா ஐயையோ 😧அதை  இப்பவாவது ஒத்துக் கொண்டீர்களே!..ஒரு பக்கத்தால் சும்,மல்லி அவர்களது அரசியல் தெரியும் .சுத்துமாத்து, ஏமாத்து எல்லாம் உங்களுக்கு விளங்குது என்று எழுதிக் கொண்டு இன்னொரு பக்கத்தால் வெட்கமே இல்லாமல் அவர்களுக்கு வக்காலத்து வாங்கி உங்கள் இரட்டை முகத்தை காட்டி விட்டிர்களா?... எப்படித் தான் மறைத்தாலும் மண்டையில் இருக்கின்ற கொண்டையை மறக்க முடியாதல்லவா 
இதில வேற உங்கட ஊத்த ,நாத்தங்களை மறைக்க என்னை கெட்டவாளக்கினால் நீங்கள் நல்லவராகி விடலாம் என்ட கனவு வேற ...அசல் பக்கா கேடு கெட்ட  தமிழன் என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்து உள்ளீர்கள்...இதெல்லாம் ஒரு பிழைப்பு 

1. கிழக்கில் முஸ்லிம்களால் தமிழர் அடையும் தீமைகள் பற்றி எழுதிய அதே சமயம் - அதை சாக்காவைத்து திருவாளர்கள் முரளிதரன், சந்திரகாந்தன், வியாழேந்திரன் கேடுகெட்ட அரசியல் செய்வதையும், எழுதினேன்.

அதே போல்

2. மல்லியின் வண்டவாளங்களை எதிர்க்கும் அதே சமயம் - அதை சாக்கா வைத்து மேற்படி நபர்கள் தமிழ் தேசிய அரசியலை குறிவைப்பதையும், தமது சுயலாபத்துக்காக மதத்தை புகுத்தி மேலும் தமிழர்களை பிளவுபடுத்துவதையும் எழுதினேன்.

3. இந்த (2 இல் சொன்ன) அரசியலை நீங்கள் ஆதரிப்பது உங்கள் முடிவு. நான் எங்கேயும் உங்களை கெட்டவள் என ஆக்க முயற்சிக்கவில்லை. ஆனால்…

நீங்கள் ஆதரிக்கும் அரசியலின் கேட்டை விளக்கி எழுதி உள்ளேன்.

அது சுட்டால் நான் என்ன செய்ய முடியும். 

அவ்வளவுதான்.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 14/1/2023 at 01:01, MEERA said:

கோசான் இங்கு நான் முன் வைப்பது சாணக்கியவின்மகிந்த கூட்டணி  திருவிளையாடல்களை.

ஒரு போதும் சும் உட்பட எவரையும் சமய ரீதியில் எதிர்க்கவில்லை.

நீங்கள் உட்பட பலருக்கு சும் அரசியலுக்கு வந்த பின்னரே அவரை தெரிந்திருக்கும். ஆனால் எனக்கும் எமது குடும்பத்தினருக்கும் சும் இன் தந்தையின் தந்தையுடன் இருந்து ஆரம்பிக்கிறது.

மேலும் இன்று வரை karu திருகோணமலையை கிழக்கு என ஏற்றுக்கொள்ளவில்லை.  பிரதேசவாதி என எனக்கு முத்திரை குத்த முயற்சி செய்தது தான் வேடிக்கை.

ரதி அக்காவினது கருத்தும் எனது கருத்தும் சாணக்கியவின் விடயத்தில் ஒத்து போவதால் நான் ரதி அக்காவின் அரசியலை ஏற்ககிறேன் என அர்த்தம் கிடையாது.

தமிழ் தேசிய அரசியலில் இடம் கிடைக்காமையால் மகிந்த கூட்டணியில் இருந்தார் ஆனால் இடம் கிடைத்தவுடன் தமிழ் தேசிய அரசியல்வாதி ஆகிவிட்டார் என்ற Karu இன் கருத்தை ஒருபோதும் ஏற்றுக்க கொள்ளப் போவதில்லை. நீங்களும் ஏற்க மாட்டீர்கள் என்றே நம்புகிறேன்.

👆 அதே!! சாணக்கியாவிற்கான விமர்சனம் அவரது அரசியல் நடவடிக்கைகளுக்கானதே. அவை அவரின் பிரதேசம், மதம்,  தனிப்பட்ட விடயங்களுக்கானதல்ல. இதை எத்தனை தரமையா சொல்லுவது!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 14/1/2023 at 12:24, island said:

உங்கள் விருப்பபடி இங்கு அரசியல்வாதிகளை அவன் இவன் என்று ஒருமையில் அழைக்கலாம் என்றால், அதனை உங்கள் வீட்டிற்குள் வைத்துக் கொள்ளலாம். யாழ் களத்தில் அல்ல. 

நீங்கள் குறிப்பிடும் இந்தச் சொற்கள் தமிழில் ஏலவே  உள்ள சொற்கள். ஒருவர் தன்னுடைய கோவத்தை, வெறுப்பை, ஆதங்கத்தை வெளிப்படுத்த பயன்படும் சொற்கள். இவர்களை எமது வீட்க்குள் வைத்து திட்டுவதென்றால் ஒன்று எங்கள் வீட்டு அங்கத்தவராக இருக்க வேண்டும் அல்லேன் தனிப்பட்ட கோவமாக இருக்கவேண்டும். பொது மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து, வாக்கு வேண்டி, பின் மக்களை அவர்களது தேவைகளை சந்திக்க மறுத்து சிங்களத்துக்கு வக்காலத்து வாங்கினால் அவர்களை பொதுவெளியிற் திட்டினாற்தானே சம்பந்தப்பட்டவர்களுக்கு கேக்கும். தமிழில் தூஷணமும் இருக்கு என்பதை தாங்கள் இன்னும் அறியவில்லையாயின் அதையும் தங்களுக்கு  நினைவூட்டி வைக்க விரும்புகிறேன்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, satan said:

நீங்கள் குறிப்பிடும் இந்தச் சொற்கள் தமிழில் ஏலவே  உள்ள சொற்கள். ஒருவர் தன்னுடைய கோவத்தை, வெறுப்பை, ஆதங்கத்தை வெளிப்படுத்த பயன்படும் சொற்கள். இவர்களை எமது வீட்க்குள் வைத்து திட்டுவதென்றால் ஒன்று எங்கள் வீட்டு அங்கத்தவராக இருக்க வேண்டும் அல்லேன் தனிப்பட்ட கோவமாக இருக்கவேண்டும். பொது மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து, வாக்கு வேண்டி, பின் மக்களை அவர்களது தேவைகளை சந்திக்க மறுத்து சிங்களத்துக்கு வக்காலத்து வாங்கினால் அவர்களை பொதுவெளியிற் திட்டினாற்தானே சம்பந்தப்பட்டவர்களுக்கு கேக்கும். தமிழில் தூஷணமும் இருக்கு என்பதை தாங்கள் இன்னும் அறியவில்லையாயின் அதையும் தங்களுக்கு  நினைவூட்டி வைக்க விரும்புகிறேன்.

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் தமிழ்படிக்கும் போது கெட்டவார்த்தைகளையும் கேட்டு படித்து அதை பாவித்து யாழ் களத்தில் அரசியல்வாதிகளையும் எதிர் கருத்து வைப்பவர்களையும் திட்ட வேண்டும்,பொதுவெளியிலும் அப்படி திட்ட வேண்டும். ஒரு தமிழர் மற்ற தமிழர்களுக்கு தெரிவிக்கின்ற ஆலோசனையா இது

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அட இன்னுமா  இந்த திரி இன்னும் சூடு குறையாமல் ஓடுகின்றது ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, பெருமாள் said:

அட இன்னுமா  இந்த திரி இன்னும் சூடு குறையாமல் ஓடுகின்றது ?

இந்த திரியில் நிர்வாகத்தால் நீக்கப்படாத சில கருத்துகள். 

இந்த திரி ஒரு முடிவுக்கான பரிசோதனை எலி என நினைக்க வைக்கிறது.

அது கொஞ்சம் பிந்திய முடிவா இருந்தாலும் சரியான முடிவாக இருக்கும் என்ற மன நிலைக்கு நான் வந்துவிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் தமிழ்படிக்கும் போது கெட்டவார்த்தைகளையும் கேட்டு படித்து அதை பாவித்து யாழ் களத்தில் அரசியல்வாதிகளையும் எதிர் கருத்து வைப்பவர்களையும் திட்ட வேண்டும்,பொதுவெளியிலும் அப்படி திட்ட வேண்டும். ஒரு தமிழர் மற்ற தமிழர்களுக்கு தெரிவிக்கின்ற ஆலோசனையா இது

இல்லை! வலியை அறியாதவன் புத்தனாகவோ, காந்தியாகவோ, ஞானியாகவோ போதித்துக்கொண்டே இருப்பார்கள். எங்களைப்போன்ற சாதாரண எதிர்பார்ப்புள்ள ஏழை எளிய மக்கள் பொறுமையை இழந்தவர்கள் அயோக்கியத்தனத்தை பொறுக்க மாட்டாதவர்கள், தங்களின் வெறுப்பை வெளிப்படுத்த பாவிக்கும் சொற்கள் என்கிறேன்! விரும்பாவிட்டாலும் வெறுப்புணர்வின் வடிகால்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 13/1/2023 at 04:25, island said:

அவரது கடவு சீட்டை அவரது அனுமதி இன்றி பொது வெளியில் பிரசுரிப்பது, அவரது குடும்பம், காதலி போன்ற தனிப்பட தகவல்களை பகிர்வது தவறானது. இதற்காக சாணக்கியன் நினைத்தால் தனது கடவுச்சீட்டை பொது வெளியில் பிரசுரித்ததற்காக சட்ட நடவடிக்கை கூட எடுக்கலாம்.  

இந்த வெருட்டல் உருட்டல் எல்லாம் உங்களோட இருக்கட்டும் சாமி மேலும் ராகுலை பற்றிய விபரம் நேரடி சாட்சியே  இருக்கு அதை இங்கு  வெளியிட்டால் பல நாடுகள் விசா கொடுக்கவே யோசிக்கும் ஆட்கடத்தல் இந்த நாடுகளில் கொலையை விட மோசமானது என்பதை புரிந்து கொள்ளுங்க .

மேலும் ராகுல் பற்றி தமிழ் மக்கள் அறியவே அத்துடன் பெயர் மறந்து விட்டது அவர் கவி ஆம் அவர் தேவையில்லாமல் ராகுலை பற்றி ஆகா ஓகோ அவரை எதிர்பவர்களுக்கு மலம் எறிவேன் அப்படி இப்படி எழுத நானும் கருத்து வைக்க வேண்டி வந்தது .

ராகுலுக்கு மேலும் மேலும் பந்தம் பிடிகிறம்என்று இங்கு விசர் கூத்து அடித்து அவரின் பெயரை நீங்களே கெடுத்து கொள்ள வேண்டாம் . சிலவேளை இனி அவர் தமிழ் மக்களுக்கு நல்லது செய்யலாம் எனும் நப்பாசை என் மனதின் ஓரத்தில் இன்னும் உள்ளது .

இப்படித்தான் 2௦௦9 ல் தமிழர்கள் தோத்து எல்லாம் இழந்து நின்றபோது பாராளுமன்றத்தில் சம்பந்தன் மகிந்தவுக்கு பயங்கரவாதத்தை  ஒழித்த வீரர் சூரர் என்று பட்டம் கொடுத்தபோது சிங்கள எம்பிக்கள் கைதட்டி பெரும் ஆரவாரத்துடன் காணப்பட்டனர் அப்போது அதை இங்கு யாழில் எழுத முடியாது அதை பற்றி கருத்துக்கள் வைக்க முடியாது . அவ்வளவுக்கு சம்பந்தன் தமிழ் மக்களுக்கு விடிவு தருவார் என்று நம்பப்பட்டது நம்ப வைக்க பட்டது . ஆனால் சில நாட்க்களில் சுமத்திரன் எனும் கோமாளியை பின் கதவால் கொண்டுவந்தார் அப்போதும் அமைதியாக ஏதோ தமிழர்களுக்கு சுமத்தினை வைத்து பெற்று தருவார் என்று நம்பினோம் நம்ப வைக்க பட்டோம். கடைசியில்திருமதி ரவிராஜின் மனிசியின் வோட்டுகளை களவெடுத்து வெல்லும் அளவுக்கு அதன் நிலை .

மேல் உள்ளது போல் நம்பி கெடுவது வடகிழக்கு தமிழ்மக்களின் நிலை  எனவேதான் சில விபரங்கள் வெளியில் விட வேண்டி வந்தது .

ஆனால் இங்கு எதிர்  கருத்து வைப்பவர்கள் யாராவது ஒருத்தர் பெருமாள் நீ சொன்ன விதம் பிழை அதை அழித்து விடு என்று   தனி மெயிலில் சொல்லி இருந்தால் அழித்து  விட்டு இருப்பேன் . ஆனால் பெருமாள் என்ற ஒருத்தர் யாழில் இருக்க கூடாது எண்ணியே பல கருத்துக்கள் வைக்க பட்டன .ரிவேர்ஸ்சில் இந்த திரியை படித்து பாருங்கள் புரியும் .கடைசியாக @Sasi_varnam சொல்லுமட்டும் புத்தியில் ஏறவில்லை .மீண்டும் மீண்டும் சொல்கிறேன் இங்கு அவதார் எதுவோ அதற்கு தான் கருத்து வருகிறது மற்றபடி  எழுதப்படும் கருத்துக்கு அல்ல .

Edited by பெருமாள்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பெருமாள் said:

ஆனால் இங்கு எதிர்  கருத்து வைப்பவர்கள் யாராவது ஒருத்தர் பெருமாள் நீ சொன்ன விதம் பிழை அதை அழித்து விடு என்று   தனி மெயிலில் சொல்லி இருந்தால் அழித்து  விட்டு இருப்பேன் .

நான் இப்படி யோசித்தேன். உங்களுக்கும் கருவுக்கும் ஒரே மடலாக எழுதி, இருவரின் சர்ச்சைகுரிய கருத்துக்களையும் வாபஸ் வாங்கும்படி கேட்கலாம் என்று.

ஆனால் இன்று இல்லாவிடிலும் இன்னொரு நாள் கோசான் சாணக்கியனின் பொட்டு கேட்டை நீக்கும் படி தனி மடலில் கோரினார் என்ற குற்றசாட்டு வந்து விடும் என பயந்து விட்டு விட்டேன்.

 

2 hours ago, பெருமாள் said:

ஆனால் பெருமாள் என்ற ஒருத்தர் யாழில் இருக்க கூடாது எண்ணியே பல கருத்துக்கள் வைக்க பட்டன

என் கருத்துகள் இந்த நோக்கில் நிச்சயம் வரவில்லை. நீங்கள் சொல்லியதில் மதத்தை இழுத்ததை தவிர வேறு எதை பற்றியும் நான் எழுதவும் இல்லை.

2 hours ago, பெருமாள் said:

இந்த திரியை படித்து பாருங்கள் புரியும்

இந்த திரியில் சில புரிதல் பிழைகளும் நடந்துள்ளன. கீழே இரு உதாரணங்கள் தருகிறேன்.

2 hours ago, பெருமாள் said:

கடைசியாக @Sasi_varnam சொல்லுமட்டும் புத்தியில் ஏறவில்லை

நீங்கள் சசி சொன்னதை சரி என்று ஏற்று “உங்கள் கருத்துக்கு நன்றி” என்று எழுதி உள்ளீர்கள்.

ஆனால் நான் அதை தலைகீழாக, சசிக்கு “உங்கள் கருத்தை உங்களோடு வைத்து கொள்ளுங்கள்” என்ற தொனியில் நீங்கள் சொல்லியதாகத்தன் இப்போ வரை விளங்கி கொண்டிருந்தேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பெருமாள் said:

அவரை எதிர்பவர்களுக்கு மலம் எறிவேன்

இது நீங்கள் பிழையாக விளங்கியது.

கரு தான் எறிவேன் என சொல்லவில்லை. ஏனையோர் கை இருக்கு என்பதால், சாணக்கியன் மீது எறிகிறார்கள் என்றே சொன்னார்.

எது எப்படியோ, நடந்தவற்றை மாற்ற முடியாது.

அமுதோ, விஷமோ விதைக்கப்பட்டது, விதைக்கப்பட்டதுதான். 

கருவாடு மீனாகாது 🙏🏾

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆறு பக்கம் வந்திருக்கு நமக்குள்ள எவ்வளவு பிரச்சினை இருக்கு.

புலிகள் இருந்திருந்தால் சுமந்தும் வந்திருக்க மாட்டார், சாணக்கிய ராகுல புத்திராவும் வந்திருக்க மாட்டார்கள். 

அரசன் இல்லா நாடு அந்தரத்தில் அது போலவே இப்ப நம்ம இனமும்

  • Like 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.