Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொரிஸ் பிஸ்டோரிஸ் ஜேர்மனியின் புதிய பாதுகாப்பு அமைச்சர் ஆகிறார்.

அண்ணையள், ஆள் எப்படி? @குமாரசாமி @தமிழ் சிறி@Kandiah57 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, goshan_che said:

பொரிஸ் பிஸ்டோரிஸ் ஜேர்மனியின் புதிய பாதுகாப்பு அமைச்சர் ஆகிறார்.

அண்ணையள், ஆள் எப்படி? @குமாரசாமி @தமிழ் சிறி@Kandiah57 

புதிசாய் வந்தவருக்கு அரசியல் அனுபவம் இருக்கு. அமைச்சு அனுபவம் இருக்கு. ஆனால் பாதுகாப்பு அதாவது ஆயுத அனுபவம் இல்லையாம். இதிலை முக்கியம் என்னவெண்டால் இப்ப  உக்ரேன் பிரச்சனையிலை நல்ல ஆயுதம் அவையளுக்கு  குடுக்க வேணும்.அதோடை ஜேர்மன் இராணுவத்தில் ஏற்கனவே ஆயிரம் பிரச்சனைகள். சமாளிப்பாரா? பொறுத்திருந்துதான் பார்க்கோணும்.

டிஸ்கி: என்ன கோதாரியெண்டாலும் செய். என்ரை சோசல் காசிலை கை வைக்காதை :rolling_on_the_floor_laughing:

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
31 minutes ago, குமாரசாமி said:

உக்கிரேன் ர‌ஸ்சியா பிர‌ச்ச‌னையில் ஜேர்ம‌னி ட‌வுள் கேம்

அதை த‌ருகிறோம் இதை த‌ருகிறோம் என்று சொல்லி சொல்லியே உக்கிரேனுக்கு போர் த‌ள‌பாட‌ங்க‌ள் குடுத்த‌ மாதிரி இல்லை தாத்தா...........

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, பையன்26 said:

உக்கிரேன் ர‌ஸ்சியா பிர‌ச்ச‌னையில் ஜேர்ம‌னி ட‌வுள் கேம்

அதை த‌ருகிறோம் இதை த‌ருகிறோம் என்று சொல்லி சொல்லியே உக்கிரேனுக்கு போர் த‌ள‌பாட‌ங்க‌ள் குடுத்த‌ மாதிரி இல்லை தாத்தா...........

எங்கட ஆயுதமெல்லாம் பழைய ஆயுதம்......ரெக்னிக் பிழையள்,புதிசாய் போர் விமானம் வாங்கிறம்,அந்த அமைச்சர் சரியில்லை  இவர் சரியில்லை.....பெரிய போராட்டம் எங்களுக்கை நடக்குது எண்டு இவங்கள் ரீல் விடேக்கையே யோசிக்க வேணும்.:hurra:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

புதிசாய் வந்தவருக்கு அரசியல் அனுபவம் இருக்கு. அமைச்சு அனுபவம் இருக்கு. ஆனால் பாதுகாப்பு அதாவது ஆயுத அனுபவம் இல்லையாம். இதிலை முக்கியம் என்னவெண்டால் இப்ப  உக்ரேன் பிரச்சனையிலை நல்ல ஆயுதம் அவையளுக்கு  குடுக்க வேணும்.அதோடை ஜேர்மன் இராணுவத்தில் ஏற்கனவே ஆயிரம் பிரச்சனைகள். சமாளிப்பாரா? பொறுத்திருந்துதான் பார்க்கோணும்.

டிஸ்கி: என்ன கோதாரியெண்டாலும் செய். என்ரை சோசல் காசிலை கை வைக்காதை :rolling_on_the_floor_laughing:

1 hour ago, பையன்26 said:

உக்கிரேன் ர‌ஸ்சியா பிர‌ச்ச‌னையில் ஜேர்ம‌னி ட‌வுள் கேம்

அதை த‌ருகிறோம் இதை த‌ருகிறோம் என்று சொல்லி சொல்லியே உக்கிரேனுக்கு போர் த‌ள‌பாட‌ங்க‌ள் குடுத்த‌ மாதிரி இல்லை தாத்தா...........

51 minutes ago, குமாரசாமி said:

எங்கட ஆயுதமெல்லாம் பழைய ஆயுதம்......ரெக்னிக் பிழையள்,புதிசாய் போர் விமானம் வாங்கிறம்,அந்த அமைச்சர் சரியில்லை  இவர் சரியில்லை.....பெரிய போராட்டம் எங்களுக்கை நடக்குது எண்டு இவங்கள் ரீல் விடேக்கையே யோசிக்க வேணும்.:hurra:

நடப்பதை கச்சிதமாக எழுதியுள்ளீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, குமாரசாமி said:

டிஸ்கி: என்ன கோதாரியெண்டாலும் செய். என்ரை சோசல் காசிலை கை வைக்காதை :rolling_on_the_floor_laughing:

உங்கள் கோரிக்கை கவனத்தில் எடுக்கப்படும்.....🤣 தொடர்த்தும். புட்டினை....ரஷ்யாவை. ஆதரித்தால்.   ......சோசல் காசு நிறுத்தப்படும்.   😂🤪 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, Kandiah57 said:

உங்கள் கோரிக்கை கவனத்தில் எடுக்கப்படும்.....🤣 தொடர்த்தும். புட்டினை....ரஷ்யாவை. ஆதரித்தால்.   ......சோசல் காசு நிறுத்தப்படும்.   😂🤪 

சோசல் சட்டம் என்னை காப்பாற்றி சோறு போடும். :hurra:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, குமாரசாமி said:

எங்கட ஆயுதமெல்லாம் பழைய ஆயுதம்...

ரஷ்யாவுக்கு அவையெல்லாம் மிக நவீன ஆயுதங்கள்....😊

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, மலையான் said:

ரஷ்யாவுக்கு அவையெல்லாம் மிக நவீன ஆயுதங்கள்....😊

அதுதான் ஒரு வருசமாய் நேட்டோ  உக்ரேன்ல முக்கி முனகிக்கொண்டு திரியுதாக்கும் :face_with_hand_over_mouth:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

(எனது) தனிப்பட்ட முறையில் மேற்கின் கேந்தி இழப்பு அல்லது ர தோல்வி - - பரம வைராக்கியமாக  எதிர்க்கும் தரப்புகள் கூட வேண்ட வெறுப்பாக மேற்கின் இராணுவ, படை நடவடிக்கைக்குக்கு ஏற்றதாக
பொருளாதார (முக்கியம்),  தடைகளை, மற்றும் அவற்றோடு ஒத்த, மற்றும் மேலதிக தடைகளை     மேற்கு / நேட்டோ எதிர்க்கும் தரப்புக்கு எதிராக அவர்களாகவும் , மேற்கு / நேட்டோ க்கு ஒத்துழைப்பாகவும் நடைமுறை படுத்துவார்கள்.

இதில் மேற்கு / நேட்டோ, இழந்ததே, அதாவது ஒன்றில் மற்ற தரப்புகள் மேற்கின் தடைகளை அல்லது நிலைப்பாட்டை  எதிர்த்து, அல்லது ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தது,   என்னைப்பொறுத்தவரையில் மிகப் பெரியது - ரஷ்யாவை விட.

மிகுதி எல்லாமே இரண்டாம் / மூன்றாம் பட்சம்.    

முதலில் இந்த நாடுகள் அநேகமானவை,ருசியா நிலைப்பாட்டையும் ஏற்கவில்லை, அனால் உருண்டு ஓடிய வருடத்தில் - Biden நேரடியாக சொல்லி இருந்தார் எமது தடைகள் ரஷ்யா பொருளாதாரத்தை படுக்க வைத்து முறித்துவிடும் என்று ஸாரப்ப்பட, உக்கிரைன் தான் நேட்டோ இன் சண்டையை பிடிக்கிறது, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், உக்கிரைனில் நடப்பது எமது யுத்தம், புட்டினை அகற்ற (கொலை செய்தும்)  என்று விளக்கம் கொடுக்க, அந்த நாடுகளின் பார்வையில் மேற்கின் / நேட்டோ இன் ரு ருசியா பற்றிய உட்கிடக்கும் வேட்கை அறிந்து, அவை நிலைப்பாட்டை மாற்றி உள்ளன. ஏறத்தாழ, ரஷ்யா நிலைப்பாடு இல்லாவிட்டாலும், அந்த நிலைக்குக்கு அண்மையாக வந்துள்ளன அநேகமான நாடுகள்.

ருசியா பொருளாதாரத்தை (சோவியத் போல ) உருக / உலிர வைக்கும் திட்டம் பலிக்காமல், மாறாக ரஷ்யா பொருளாதாரம் எல்லாரும் எதிர்பார்த்தத்திலும் உறுதியாக இருப்பது, இயங்குவதும் எதனால்? ருஷ்யா பொருளாதார வல்லுனர்களின் திறமையான வழிநடத்தல் இருக்கிறது தான் ; அனால் அது மட்டும் போதாது.

படை வலிமையை பொறுத்தவரை - ருஸ்சியா அதன் தேவைகளை அடைந்து  கொள்ளும்; அதற்கன வளம், திறன், அறிவு, அனுபவம், கட்டுமானம்  போன்ற எல்லாமே இருக்கிறது.     

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜெர்மனி ஒரு விடயத்தை மறைகிறது - ரஷ்யா 2022 ஆரம்பத்திலேயே உடனடியாக நிறுத்தி இருந்தால், ஜேர்மன் பகுதியாக முடங்கித், தத்தளித்துத் தான் மீண்டு இருக்க வேண்டும்.

ரஷ்யாவுக்கும் அதே நேரத்தில் வருமானம் இல்லாது போய்  இருக்கும்; பெரிய பகுதி ஆயினும், முழு வருமானமும் அல்ல.

பிரச்சனையை தீர்க்கலாம் என்ற சாக்கு போக்கு காட்டி ஜெர்மனி 8 (August 2022) மாதங்களை ரஷ்யாவை ஏய்த்து வாங்கி உள்ளதா?

இல்லை, பிரச்னை இதில் தான் (ருசியா வாயு வளங்கள் நிறுத்தம்) முடியும் என்று தெரிந்தும், ருசியா வருமணத்திற்காக விட்டு பிடித்ததா?

எந்த வகையிலும், ஜெர்மனி மிக வேண்டிய, அருமருந்தான 8 மாதங்கள் -வேறு வழங்கல்கள் தேடிப்  பெறுவதற்கு, ஜெர்மனிக்குள் நிலக்கரி மின் உடற்பத்தியை தொடங்குவதற்கு, வாயு கொல்களளனை கட்டுவததற்கு பெற்றுள்ளது என்பதே உண்மை.    
 
இதில் அடிப்படை பிரச்சனை -  எரிபொருள் வணிகத்தை, பொருளாதாரத்தை  அரசியல் மயப்படுத்தியது, மறைமுக இராணுவ ஆயுதமாகியது  - பொதுவாகவும், சிறப்பாகவும் மேற்கும், ஜெர்மனியும்.  
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மற்றது, ஜெர்மனி / eu எப்போதோ ரஷ்யா எண்ணெய் / வாயுவை கைவிட்டு இருக்கலாம். ஒருவராலும் தடுத்து இருக்க முடியாது.

கைவிடாதற்கான காரணம், சர்வதேச, மற்றும் வேறு எண்ணை / எரிபொருள் சந்தை விலையில் பார்க்க குறைவான விலையிலேயே ரஷ்யா விற்றது - அதற்கும் பொருளியல் காரணம் eu எரிபொருள் கொள்வனவின் அளவும், அதன் போக்குவரத்து செலவும்.  

ஆகவே, இனிமேல் eu சர்வதேச எண்ணெய் / வாயு எரிபொருள் விலையே செலுத்தப்போகிறது. இது எவ்வாறு ஜெர்மனி / eu பொருளாதாரத்தை மத்திம, நீண்ட கால போக்கில் தாக்கும் என்பதை இப்பொது சொல்ல முடியாது. 

Posted
21 hours ago, மலையான் said:

ரஷ்யாவுக்கு அவையெல்லாம் மிக நவீன ஆயுதங்கள்....😊

நேற்று விழுந்த கெலியும் பிரான்சின் பழங்கிடையனாம். நல்லதை  கொடுக்க மனம் வராதே. கதைக்கு மட்டும் குறைச்சல் இல்லை.

44 minutes ago, Kadancha said:

மற்றது, ஜெர்மனி / eu எப்போதோ ரஷ்யா எண்ணெய் / வாயுவை கைவிட்டு இருக்கலாம். ஒருவராலும் தடுத்து இருக்க முடியாது.

கைவிடாதற்கான காரணம், சர்வதேச, மற்றும் வேறு எண்ணை / எரிபொருள் சந்தை விலையில் பார்க்க குறைவான விலையிலேயே ரஷ்யா விற்றது - அதற்கும் பொருளியல் காரணம் eu எரிபொருள் கொள்வனவின் அளவும், அதன் போக்குவரத்து செலவும்.  

ஆகவே, இனிமேல் eu சர்வதேச எண்ணெய் / வாயு எரிபொருள் விலையே செலுத்தப்போகிறது. இது எவ்வாறு ஜெர்மனி / eu பொருளாதாரத்தை மத்திம, நீண்ட கால போக்கில் தாக்கும் என்பதை இப்பொது சொல்ல முடியாது. 

இப்போ  ஜேர்மனி நனைத்து சுமக்கிறது. எப்படி ரஸ்யாவின் விலைக்கு ஈடாக  எண்ணை/ வாயுவை பெற முடியும்.?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜேர்மனி தனது எரிசக்தி விநியோகத்திற்காக ரஷ்ய இறக்குமதியை இனி நம்பியிருக்காது!

1-118.jpg

ஜேர்மனி தனது எரிசக்தி விநியோகத்திற்காக ரஷ்ய இறக்குமதியை இனி நம்பியிருக்காது என நிதி அமைச்சர் கிறிஸ்டியன் லிண்ட்னர் தெரிவித்துள்ளார்.

சுவிஸ்லாந்தின் டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததில் இருந்து ஜேர்மனி தனது ஆற்றல் உள்கட்டமைப்பை முழுமையாக பன்முகப்படுத்தியுள்ளதாக கிறிஸ்டியன் லிண்ட்னர் கூறினார்.

ஜேர்மனி புதிய ஆற்றல் மூலங்களைக் கண்டறிந்துள்ளது எனவும் உள்கட்டமைப்பு முதலீடுகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், ஜேர்மனி கொள்கைகளில் ஏற்பட்டுள்ள மகத்தான மாற்றத்திற்கு இது ஒரு உதாரணம் என்று அவர் கூறினார்.

மாற்று எரிசக்தி ஆதாரங்களைக் கண்டறிவதற்கான போட்டியில், நாடு நிலக்கரி எரியும் மின் உற்பத்தி நிலையங்களை மீண்டும் திறந்துள்ளது. மீதமுள்ள மூன்று அணு மின் நிலையங்களை மூடுவதற்கான திட்டங்களை தாமதப்படுத்தியது மற்றும் நோர்வே மற்றும் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இயற்கை எரிவாயுவை சேமிப்பதற்கான திறனை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

ஜேர்மனி முன்பு ரஷ்யாவில் இருந்து பாதி எரிவாயுவையும், மூன்றில் ஒரு பங்கு எண்ணெயையும் இறக்குமதி செய்தமை குறிப்பிடத்தக்கது.
 
https://akkinikkunchu.com/?p=235761

Posted

போருக்கு முன்னர் ஐரோப்பாவின் மொத்த தேவையில் ரஸ்யாவிடமிருந்து கிடைத்த எரிவாயு 45 வீதம். ஜேர்மனிதான் ரஸ்யாவிடம் அதிகம் இறக்குமதி செய்தது.

இந்த ஆண்டு ஐரோப்பாவின் எரிவாயுத் தேவையை நிவர்த்தி செய்யும் நாடுகள்.

gaz-eu.png

பிரெஞ்சில் இருப்பதால் சில மொழிபெயர்ப்பு :

Norvège - நோர்வே
Afrique du Nord - வட ஆபிரிக்க நாடுகள்
Royaume-Uni - UK

இதில் Azerbaijan என்ற புள்ளியாக இருக்கும் நாடு ஒருவேளை இடைத்தரகர் மூலம் அமோகமாக ரஸ்ய எரிவாயுவை வழங்கும் நாடாக இருக்குமோ ? 😂

இன்னொரு செய்தி, சென்ற வருடம் வழமைக்கு மாறாக ஐபோப்பா முழுவதும் 10 வீதம் குறைவாக எரிவாயு பாவிக்கப்பட்டுள்ளது. 2027 இல்  இதை 30 வீதமாகக் குறைக்கப் போகின்றது. 

மேலும் விபரங்களுக்கு

gaz-ru.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, கிருபன் said:

ஜேர்மனி தனது எரிசக்தி விநியோகத்திற்காக ரஷ்ய இறக்குமதியை இனி நம்பியிருக்காது!

1-118.jpg

ஜேர்மனி தனது எரிசக்தி விநியோகத்திற்காக ரஷ்ய இறக்குமதியை இனி நம்பியிருக்காது என நிதி அமைச்சர் கிறிஸ்டியன் லிண்ட்னர் தெரிவித்துள்ளார்.

சுவிஸ்லாந்தின் டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததில் இருந்து ஜேர்மனி தனது ஆற்றல் உள்கட்டமைப்பை முழுமையாக பன்முகப்படுத்தியுள்ளதாக கிறிஸ்டியன் லிண்ட்னர் கூறினார்.

ஜேர்மனி புதிய ஆற்றல் மூலங்களைக் கண்டறிந்துள்ளது எனவும் உள்கட்டமைப்பு முதலீடுகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், ஜேர்மனி கொள்கைகளில் ஏற்பட்டுள்ள மகத்தான மாற்றத்திற்கு இது ஒரு உதாரணம் என்று அவர் கூறினார்.

மாற்று எரிசக்தி ஆதாரங்களைக் கண்டறிவதற்கான போட்டியில், நாடு நிலக்கரி எரியும் மின் உற்பத்தி நிலையங்களை மீண்டும் திறந்துள்ளது. மீதமுள்ள மூன்று அணு மின் நிலையங்களை மூடுவதற்கான திட்டங்களை தாமதப்படுத்தியது மற்றும் நோர்வே மற்றும் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இயற்கை எரிவாயுவை சேமிப்பதற்கான திறனை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

ஜேர்மனி முன்பு ரஷ்யாவில் இருந்து பாதி எரிவாயுவையும், மூன்றில் ஒரு பங்கு எண்ணெயையும் இறக்குமதி செய்தமை குறிப்பிடத்தக்கது.

https://akkinikkunchu.com/?p=235761

அப்படி போடு அரிவாளை 👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
5 hours ago, கிருபன் said:

ரஸ்ய எரிவாயு எண்ணை வழங்கலை மேற்கு நாடுகள் நிறுத்தியதற்காகக் கூறப்பட்ட காரணம், ரஸ்யாவின் எண்ணை வருமானத்தை குறைப்பது என்பதாககூறப்பட்டது. ஆனால் தற்போது நாங்கள் தப்பிவிட்டோம் (ஜேர்மனி ) என்கிற போக்கில் கதை போகிறது. ஆனால் ரஸ்யாவின் எண்ணை வருமானம்  கடந்த பத்து மாதங்களில் அதிகரித்திருப்பதாக புளூம்பேர்க் கூறியுள்ளது. 

ஆக, குப்பற விழுந்தாலும் மீசையில் மண்ணொட்டாத கதைதான் மேற்கிற்கு.😉

.🤣

Edited by Kapithan
Posted

ஜேர்மனி எந்த ஆயுதத்தையும்  யூக்ரேனுக்கு கொடுக்காது இழுத்தடிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1-118.jpg

Quote

ஜேர்மனி தனது எரிசக்தி விநியோகத்திற்காக ரஷ்ய இறக்குமதியை இனி நம்பியிருக்காது!

12 hours ago, விசுகு said:

அப்படி போடு அரிவாளை 👍

அரிவாளை எப்பிடி போட்டாலும் ரஷ்யன் காஸ்லைதான் ஜேர்மன் அடுப்பு எரியுது. இனியும் அப்பிடித்தான்......யுஎஸ் ஏ காஸ் ஐரோப்பாவுக்கு சரியான விலையாம்...அதோட இஞ்சத்தையான் சிஷ்டத்துக்கு சரியும் வராதாம்.:grinning_face_with_sweat:

மேற்குலகுக்கு இப்ப இருக்கிற ஒரே ஒரு வழி புட்டின போட்டுத்தள்ளீட்டு குப்பைமலிவு ரஷ்யன் காஸ் குதங்களை ஒரே அமுக்காய் அமுக்குறதுதான்.:face_with_tears_of_joy:

 அதுதான் உங்கட வியாபார மேற்குலகுக்கு ஆக்களை போட்டுத்தள்ளீட்டு களவெடுக்கிறது கை வந்த கலையெல்லோ :hurra:

அதோட ஜேர்மன் நிதியமைச்சரும் தனிப்பட்ட காசுப்பிரச்சனையில மாட்டுப்பட்டிருக்கிறார்....அவர்ர கட்சிக்குள்ளையே அவரபதவி விலகச்சொல்லி நிக்கினம்:face_with_hand_over_mouth:

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது மேற்கு பொருளாதார அரசியல் அதிகாரிகள், ராஜதந்திரிகள் கருத்து davos இல்.

https://www.politico.com/news/2023/01/18/davos-russia-ukraine-markets-world-economic-forum-00078224

"

Now, though, the Western sanctions enacted after Russia’s invasion of Ukraine — some of the harshest ever to be levied against Moscow — are shutting out the country’s main power brokers. And Russia’s absence at Davos has officials and business chiefs here raising questions behind the scenes about how long the global business community can ignore Moscow and simultaneously find new markets for energy, metals and food.

“Right now, there are still questions about whether there are any good long-term replacements for Russian oil and gas,” said one Western official in Davos who was granted anonymity to discuss private conversations."

.....

இது மேற்கு பொருளாதார அரசியல் அதிகாரிகள், ராஜதந்திரிகள் கருத்து davos இல். மத்திம , நீண்ட காலா யதார்த்ததுடன் ஒத்து போகிறது.

இவர்கள் global என்பது முக்கியமாக, அவர்களை (மேற்கு), பெரும்பான்மையான உலகை அல்ல. 

ருசியா பொருளாதாரத்தை இரவோடு இரவாக உருக / உலிர வைப்போம் என்று கங்கணம் கட்டி நின்று ஆடியவர்களுக்கு, ஏன் ரஷ்யா எண்ணெய் / வாயு?

(கால நிலை மாற்றத்தால், இந்த முறை (22 - 23) ஒப்பீட்டளவில் கூடிய வெப்பநிலை காணப்பட்டது போல, ஒப்பீட்டளவில் நீண்ட காலத்துக்கு வெப்பநிலை மிக குறைந்தால் உறைய போவது (என்னையும் சேர்த்து தான்) யார் என்பது ....)

ருஸ்யா , மத்திம, நீண்ட கால போக்கில், சனத்தொகையும், தேவையும், பொருளாதார வளர்ச்சிக்கு வாஞ்சையும், வேட்கையும், பெருமளவில் சாத்திய கூறுகள் கொண்ட சந்தைகளை அடைந்துள்ளது.  

இது யதார்த்தம்.

நான் ருசியா ஆதரவு என்று சொன்னால் ....

  • Like 1
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

விரிவான பதிவுக்கு நேரம் இல்லை என்றாலும், இதை இணைக்கிறேன்.

இதன் தாக்கம், மேற்கின் நிதி, கப்பல், [காப்புறுதி சேவைகள், ஆக குறைந்தது ருஷ்யாவின் எண்ணெய் / வாயு வணிகத்துக்கு அநேகமாக  தேவை இல்லை.

அனால், இதன் மிகப்பெரிய தக்கம், மேற்கில் உற்பத்தி செய்யப்படாத எல்லாப் பொருரட்களுக்கும் பொருந்தும்.

இதை தன்னுடைய, நிதி, காப்புறுதி, வங்கி சேவைகள் பாவிக்காததால், மற்றும் மேற்றுகின் (un அல்ல) தடைகளை புறக்கணித்து விட்டு சந்தைகள் உருவாகுவதால், அதை மேற்கு, நிழல் சந்தை என்கிறது, சந்தை பொருளாதரத்தை தூக்கி பிடிக்கும் மேற்கு. 

மற்ற திரி யில் சொல்லியிருந்தேன், எல்லாம் ஒரேயடியாக நடக்காது.

மற்ற மேற்றுகின் ஊடகங்கள், எந்த அஜெண்டா ஆயினும் , அவை செய்திகளாக, அது ஓர் கணத்தில், ஓர் புள்ளியில் (snap shot) உள்ள நிலையையே அறிவிக்கிறது; அதில் கூடலாம், குறையலாம்  

இந்த ஆய்வு economist இல் வந்தது.  எகானாமிஸ்ட் சந்தா வேண்டும். அனால் இது மீள்பிரசுரம் பண்ணி இருக்கிறது.

உலகம் எப்படி மாறுகிறது; தளரும் மேற்கின் பிடிகள் - இதில் எதிர்பார்த்ததிலும்  மிகவும் வேகமாக, வியப்பை ஏற்படுத்தும் வகையில். இதன் முக்கிய காரணம், வாடிக்கையாளர் வேண்டுவதை கொடுப்பது சந்தை பொருளாதாரம். அதுவே இதில் நடக்கிறது.

 சாத்திய கூறு இருக்கிறது, மேற்கு மேற்கு (உளவு) அமைப்புகள்  இதை குழப்புவதற்கு அனாமதேயக் குழுக்களை கொண்டு.  கடினம், ஏனெனில் சீன கடற்படை ரோந்து கிழக்கு ஆபிரிக்க பாகம் இருக்கும் இந்து சமுத்திரத்தில் இருக்கிறது. 

https://www.pehalnews.in/why-the-wests-oil-sanctions-on-russia-are-proving-to-be-underwhelming/2798615/
      
Why the West’s oil sanctions on Russia are proving to be underwhelming

By
 Pehal News Team
 -
February 2, 2023
0
8
An oil tanker is moored at the Sheskharis complex, part of Chernomortransneft JSC, a subsidiary of Transneft PJSC, in Novorossiysk, Russia. The December ban-and-cap policy has not curbed sales of Russian crude. (File Photo: AP)

In December the West took goal at Russian oil revenues, unleashing the most important bundle of power sanctions ever imposed on a single nation. Europe, which had been an enormous purchaser of Russian seaborne crude, banned imports of the stuff. It additionally barred its long-dominant shippers, lenders and insurers from facilitating the sale of Russian crude to different consumers—until the oil was bought under a “worth cap” of $60 a barrel, set by Western powers.

Two months in, loads of folks appear to suppose that the cap is an enormous success. A second spherical of European sanctions, on diesel and different refined merchandise, is because of come into power on February fifth. Sadly, our reporting means that the scheme just isn’t biting.

The December ban-and-cap coverage has not curbed gross sales of Russian crude. After a lull whereas European companies labored out easy methods to adjust to the brand new worth cap, shipments have resumed at tempo—directed to not Europe, however to China and India as an alternative. Russia’s exports of unrefined oil, excluding cpc, a Kazakh mix shipped from Russia, averaged 3.7m barrels a day within the 4 weeks to January twenty ninth. That’s the highest degree since June, and greater than in any four-week interval in 2021.

View Full Picture

(The Economist)

An advocate of the value cap would say that that is proof of the scheme’s success. The purpose, in spite of everything, was to make sure that Russian oil continued to movement, protecting the worldwide market steady, however to restrict the value of it in order that the earnings for Russia’s president, Vladimir Putin, have been stored in verify. The cap, they argue, offers consumers negotiating energy; the longer export routes additionally elevate freight prices, for which Russia should compensate clients.

As proof that the cap is working, many additionally level to the hole in worth that Western businesses report between Brent, the worldwide benchmark, and Russia’s Urals crude. This emerged quickly after the invasion of Ukraine, however widened a bit of after the embargo, to $32 a barrel. Thus Russian oil now trades at a reduction of 38%. On January tenth Janet Yellen, the American Treasury Secretary and an architect of the value cap, stated that the scheme was making progress in direction of its targets.

The issue, nevertheless, is that price-reporting businesses haven’t tailored their strategies to a world during which Russian oil not sells by channels they will observe. Whereas European refiners and merchants used to share information with price-trackers, Indian ones don’t. Companies additionally used to depend on publicly accessible indicators to estimate delivery prices between Russia’s western ports and European oil terminals. Charges for ferrying oil from Russia to Asia, against this, are set in personal.

The result’s that the reductions cited by Western officers are inaccurate—and sometimes exaggerated. Customs information from India and China present that they paid extra for his or her Urals oil this winter than is broadly thought. Another excuse true pricing is difficult to evaluate is that everybody has an curiosity in pretending that costs are low. Russia’s oil companies are eager to minimise their tax payments and Indian refiners need to squeeze different suppliers.

Much more placing is the extent to which Russia’s export machine has grow to be much less reliant on the West’s delivery and financing infrastructure, and has subsequently escaped the scope of sanctions. As we report this week, a shadow commerce that makes use of a parallel system is booming. Earlier than December, greater than half of western Russian crude was dealt with by a European delivery or financing agency. That share has since fallen to 36%.

Might the subsequent batch of sanctions, on refined oil, do extra injury? At first look it appears that evidently they may curb Russian exports of diesel and different merchandise within the close to time period. From February fifth Europe will not purchase such fuels, and it’ll make the usage of its delivery and insurance coverage companies topic to compliance with a worth cap. Russia is not going to simply discover consumers to make up for the lack of demand from the eu: each China and India have refineries of their very own. And substituting for Europe’s refined-oil tankers will probably be onerous. A bit of Russian refined merchandise, which account for a 3rd of the nation’s oil-export revenues, might thus go unsold, elevating world costs.

But over time these results are prone to fade. Unable to promote refined oil, Russia would most likely enhance its capability to export extra crude as an alternative, additional energising the shadow commerce. Europeans might discover themselves turning to China and India for diesel, however it could more and more be produced from Russian crude. As extra Russian oil flows exterior the West’s management, blockades will grow to be even much less efficient. For the West, the lesson is that sanctions aren’t any substitute for sending Ukraine extra money and arms. Shunning Russia’s oil is not going to win the conflict.

© 2023, The Economist Newspaper Restricted. All rights reserved.

From The Economist, printed below licence. The unique content material will be discovered on www.economist.com

Catch all of the Business News, Market News, Breaking News Occasions and Latest News Updates on Stay Mint.
Obtain The Mint News App to get Each day Market Updates.

More
Less

Source link

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாம் யாரையும் தங்கியிருக்க மாட்டோம் என்று சொல்பவர்கள் ஒரு மாதம் மழை பெய்யாது விட்டாலே சிக்கி திணறுகின்றார்கள். நிலமை இப்படியிருக்க ரஷ்யாவை ஒதுக்குவதன் மூலம் தமக்குத்தாமே தலையில் மண்ணை அள்ளிப்போடுகின்றது இந்த மேற்குலகு. 

ரஷ்யாவின் பொருளாதாரம் இல்லாத உலகும் மக்களும் எவ்வளவு சிரமங்களை எதிர் நோக்குகின்றார்கள் என்பது பால்குடிகளுக்கும் விளங்கும் ஒரு விடயம். 

உக்ரேன் சார்பாளர்கள் போர் வேண்டாம் பேச்சுவார்த்தை மூலம் எதாவது செய்யலாம் என எங்கேயாவது எழுதி உள்ளார்களா? எனவே அவர்களும் உக்ரேனுக்கான ஆயுத விநியோக மூலமாக  போர் விரும்பிகள் என இங்கே உறுதிப்படுத்துகின்றார்கள்.

யாழ்கள நிர்வாகி இணையவன் உட்பட...

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

https://www.reuters.com/business/energy/goldman-says-russian-oil-sold-significantly-more-than-quoted-prices-2023-02-13/

 இது ஒரு கணப் பொழுது செய்தி; அனால் எண்ணெய்  / வாயு வர்த்தகத்தில் உள்ளே நடப்பது, வெளியில் தெரிவதில் இருக்கும் வேறுபாட்டை  காட்கிறது.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.