Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போருக்குப் பின் – பெண் புலிகள் நிலை என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போருக்குப் பின் – பெண் புலிகள் நிலை என்ன?

spacer.png

ஈழப் போர் முடிந்து 13 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்தப் போரில் பங்கெடுத்த முன்னாள் போராளிகள் இப்போது எப்படியிருக்கிறார்கள்? குறிப்பாக, தங்கள் இளமையையும் வாழ்க்கையையும் சமூகத்துக்காக, இனத்துக்காக, மண்ணுக்காக தியாகம் செய்த பெண் புலிகளின் வாழ்க்கை எப்படியிருக்கிறது? ‘விடுதலைப் புலிகள்’ நடத்திய ‘வெளிச்சம்’ பத்திரிகையின் ஆசிரியரும் ஈழக் கவிஞருமான கருணாகரன் எழுதுகிறார்.

கடந்த வாரம் ஏழு பெண்களைச் சந்தித்தேன். எல்லோருக்கும் வயது நாற்பதுக்கு மேல். சிலர் ஐம்பதைத் தொடும் நிலையிலிருக்கிறார்கள். அருவி (வயது 46), வெற்றிமலர் (வயது 48), நிலா (வயது 46), அறிவுமங்கை (வயது 45), நிலவழகி (வயது 48), மலரினி (வயது 49), செந்நிலா (வயது 50). எல்லாமே எதிர்பாராத சந்திப்புகள். ஏழு பேருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

இருபது, இருபத்தைந்து ஆண்டுகளாக இவர்களோடு பழகி வந்திருக்கிறேன். சிலரோடு சில சந்தர்ப்பங்களில் சேர்ந்து வேலையும் செய்திருக்கிறேன். என்ன துணிச்சல்! எவ்வளவு ஆற்றல்! எப்படியான திறமை! நாம் எதிர்பார்த்தேயிராத வகையில் எந்த வேலையையும் வலு சிம்பிளாகச் செய்து முடித்துவிடுவார்கள். எதிர்பாராத கோணங்களில் அசாத்தியமான முடிவுகளை எடுப்பார்கள். அத்தனை சிந்தனைத் திறன், அவ்வளவு விவேகம்.

அந்த நாட்களில் இரவு பகலாகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்து வேலை செய்தவர்கள். காடு மேடு, கடல், மலை என்று தங்களுடைய பணிகளுக்காக ஓய்வின்றிக் களைப்பின்றி அலைந்து கொண்டிருந்தவர்கள். எந்த அபாயச் சூழலையும் துணிச்சலாக எதிர்கொண்டவர்கள். அநேகமாக எல்லோரும் தங்களுடைய பள்ளிக் காலத்திலேயே வீட்டை விட்டு வெளியே வந்து, ஆயுதந்தாங்கிய விடுலைப் போராட்டத்தில். போராளிகளாக. பதினைந்து இருபது ஆண்டுகளாக செயற்பட்டிருக்கிறார்கள். சிலர் அதற்கும் கூட.

ஆனால், போராட்டம் தோற்கடிக்கப்பட்டு, போர் பேரழி்வுகளோடு முடிந்தபோது எல்லோரும் நிர்க்கதியாகி விட்டனர். அதற்குப் பிறகு, இவர்கள் பழகிய, பயின்ற எதையும் வீட்டிலோ சமூகத்திலோ பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. தங்களை முழுமையாக வெளிப்படுத்தவும் முடியாமல் போனது. திறமையான கடலோடிகளாக இருந்த பெண்கள் பின்னர் கடலில் ஒரு நாள் கூட படகோட்டுவதற்கு வாய்ப்பின்றிப் போனது. என்னதான் திறமையும் கடற் பரிச்சியமும் இருந்தாலும் யார்தான் பெண்களைக் கடலில் மீன் பிடிப்பதற்கு அனுமதிப்பார்கள்? மிகத் துணிச்சலான சமராடிகள், (போர்க்களத்தில் படையினரை விரட்டியவர்கள்) வீட்டிலே யாருடன் சமராடுவது? கனரக வண்டிகளைச் செலுத்திய பெண்களுக்கு யார்தான் அந்த வேலையைக் கொடுக்க முன்வருவார்? காடுகளில் பாதுகாப்பு அரண்களை அமைத்தவர்களுக்கு ஊருக்குள்ளே என்ன வேலை கொடுப்பதென்று தெரியவில்லை யாருக்கும். மனதுக்குள் இவர்களுடைய திறனையும் ஆற்றலையும் புரிந்துகொண்டாலும் வெளியே அதை ஏற்று அங்கீகரித்து இடமளிக்க முடியாமலிருக்கிறது.

தங்கள் இளமையை இந்தச் சமூகத்துக்காக, இந்த இனத்துக்காக, இந்த மண்ணுக்காக அர்ப்பணித்திருக்கிறார்களே, அதற்குக் கைமாறாக என்ன கொடுக்க முடியும்? இந்தப் போராட்டம் தோற்கடிக்கப்படவில்லை என்றால் இன்று இவர்கள் இருக்கின்ற உயரம் எப்படியாக இருந்திருக்கும்? இவர்கள் வேறு யாருமல்லவே, எங்கள் மகள், எங்கள் சோதரிகள், எங்கள் தோழிகள் அல்லவா!

ஆனால், இப்படி யாரும் புரிந்துகொள்வதாக இல்லை. இதனால் இவர்களுடைய வாழ்க்கை இன்று கேள்வியாகிவிட்டது. கொல்லாமல் கொல்லும் உறவுகளின் – சமூகத்தின் பாராமுகமும் இரண்டக நிலையும் இவர்களை கொன்று கொண்டேயிருக்கிறது.

அருவி, பின்தங்கிய ஒரு கடலோரக் கிராமத்தில் பத்துப் பன்னிரண்டு வயதுப் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறாள். அவளுக்கு ஒரு கை இல்லை. அந்தப் பிள்ளைகள் கொடுக்கும் சிறிய தொகைப் பணமே அவளுடைய தேவைகளுக்கானது.

வெற்றிமலர், இவளும் ஒரு கடலோரக் கிராமத்தில்தானிருக்கிறாள். வீட்டுக்குத் திரும்பிய பிறகு தையல் பழகி, அதன் மூலம் சீவியத்தை ஓட்டுகிறாள்.

நிலா, சில காலம் பழகிய தொழிலான வீடியோ எடிற்றிங்கைப் பல கடைகளில் செய்தாள். எல்லோரும் மிகக் குறைந்த ஊதியத்தையே கொடுத்தார்கள். ஒரு காலம் நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் குறும்படங்களையும் உருவாக்கியவள். அவளுடைய திறமைகளைப் புரிந்துகொள்ளவோ கொண்டாடவோ யாருமே இல்லை. பேசாமல் தோட்டத்தில் புல்லுப்பிடுங்கவும் வெங்காயம் நடவும் போகிறாள். வயிறொன்று இருக்கிறதல்லவா. அதை விட ஒவ்வொரு நாளையும் எப்படியோ போக்கிக்கொள்ள வேண்டுமே!

அறிவுமங்கை, இதழியல், அச்சு, வடிவமைப்பு போன்றவற்றில் அனுபவம் கொண்டவள். இந்தத் துறையில் எங்காவது வேலை செய்யலாம் என்று செய்து பார்த்தாள். அடிமாட்டுச் சம்பளம் கொடுக்கிறார்கள். கடையொன்றில் வேலை செய்தாள். அங்கும் கெடுபிடிகள் அதிகம். ஒன்றுமே சரிப்பட்டு வரவில்லை. எல்லோரும் அவளைப் பயன்படுத்தும் அளவுக்கு அவளுடைய திறன்களுக்கான மதிப்பையும் ஊதியத்தையும் கொடுக்கத் தயாரில்லை. தனியாக ஒரு இடத்தில் அச்சு வடிவமைப்பைச் செய்யலாம் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறாள்.

நிலவழகி, எதையும் கூருணர்வோடு அணுகும் திறனுள்ளவள். இடுப்புக்குக் கீழே இயங்க முடியாதிருக்கிறார். அதனால் எங்குமே செல்வதில்லை. ஒரு சிறிய வீட்டின் ஒதுக்குப் புறத்தில் உள்ள அறையே அவளுடைய பேருலகம். அமைதியான சுபாவம். சிரிப்பினால் எல்லாவற்றையும் சமன் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். நெருங்கிய உறவுகள் என்று எதுவுமில்லை. தெரிந்தவர்களின் அனுசரணையில் வாழ்க்கை ஓடுகிறது. ஆனால், இதுவும் எவ்வளவு காலத்துக்கு இப்படியிருக்கும் என்று தெரியவில்லை என்கிறார். அதனால், இடுப்புக்குக் கீழே இயங்க முடியாத போராளிகளுக்காக இயங்கும் விடுதி ஒன்றில் (இது புலம்பெயர்ந்தோரினால் நடத்தப்படுவது) இடம் கேட்டு விண்ணப்பித்திருக்கிறாள். கிடைத்தால் போய் விடுவேன் என்றாள். அவளுக்கென்றொரு காணி வன்னியில் உண்டு. ஆனால், அதில் ஒரு வீட்டைப் போட்டுக் கொண்டு இருப்பதற்கு இன்னும் முடியவில்லை. அவளும் எத்தனையோ வழிகளால் முயற்சித்து விட்டாள். ஆனாலும் எதுவுமே கை கூடவில்லை.

மலரினி, காலில் பெரிய காயம். சீராக நடக்க மாட்டாள். அதைவிட வயற்றிலும் பெருங்காயங்களின் தளும்பும் உள் வலியும் இன்னும் உண்டு. ஒரு திருமணம் ஏற்பாடாகி வந்திருக்கிறது. ஆனால், அந்த மணவாளன் தன்னைப் பற்றிய விவரங்களை முழுதாகவே மறைத்து அவளைத் திருமணம் செய்ய முற்பட்டிருக்கிறான். இறுதியில்தான் தெரிந்தது அவனுக்கு ஏற்கனவே மூன்று பிள்ளைகளும் மனைவியும் ஏற்கனவே உண்டென்று. “அரும்பொட்டில் தப்பினேன்” என்று சொன்னாள். “இனி திருமணத்தைப் பற்றிய பேச்சே வேண்டாம்” என்கிறாள்.

செந்நிலா, ஒரு கண்ணும் ஒரு கையும் இல்லை. ஆனாலும் ‘நம்பிக்கை’ என்றொரு சிறிய அமைப்பை உருவாக்கி அதை நிர்வகித்துக் கொண்டிருக்கிறாள்.

வீட்டிலிருந்து பொது வெளிக்குச் செல்லும்போது ஏற்படும் நெருக்கடியை விட, எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்களை விட, பொதுவெளியில் செயற்பட்டு விட்டு வீட்டுக்குத் திரும்பும் போது ஏற்படும் நெருக்கடியும் சிக்கல்களுமே பெண்களுக்கு அதிகம். அவர்கள் அவற்றை எதிர்கொள்வதுதான் மிகச் சிரமம். அதிலும் சற்று வயது அதிகமாகி விட்டால் யாரோடும் ஒட்டிக்கொள்ள முடியாமல் முகச்சுழிப்பு வரையில் கொண்டு போய் விடும். 

திருமண வயதை இழந்துவிட்டால் எப்படி இந்தப் பெண்ணை வீட்டில் வைத்துக்கொள்வது என்ற கேள்வி அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வந்துவிடும். சிலவேளை அம்மாவோ அப்பாவோ இல்லாமல் சகோதர்கள், சகோதரிகள் மட்டும் இருக்கிற வீடுகள் என்றால் சொல்லவே வேண்டியதில்லை. “வந்து விட்டாயா? இனி என்ன செய்யப்போகிறாய்?” என்று பச்சையாகவே கேட்டுவிடுவார்கள். என்னதான் பிள்ளைப் பாசம், சகோதர பாசம் என்றிருந்தாலும் மணமாகாத, மண வயதைக் கடந்த பெண் என்றால் அது ஒரு முள்தான்.

அதுவும் போராட்டத்தில் – இயக்கத்தில் – ஆயுதப் பயிற்சியைப் பெற்றவர்கள் என்பதால் கடுமையாக நடந்துகொள்வார்கள்; அதிக சுயாதீனத்தைக் கோருவார்கள் என்ற கற்பிதங்கள்… எனப் பல காரணங்கள் இந்த மதிப்பிறக்கத்தை உண்டாக்குகின்றன.

இதனால், இந்த முன்னாள் போராளிகளுக்கு இன்று வந்திருக்கும் சோதனை சாதாரணமானதல்ல. சிலர் இவர்களை மதித்து சிறிய அளவிலான உதவிகளைச் செய்தாலும் அது வாழ்க்கையைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்கில்லை. வேலை வாய்ப்புகளைப் பெறக்கூடிய வயதெல்லையையும் கடந்துவிட்டார்கள்; அதோடு கல்வி மூலமாகப் பெறக்கூடிய தொழில்களைப் பெற்றுக்கொள்ள முடியாமலிருக்கிறார்கள்.

ஆனால், ஒவ்வொருவரோடும் கதைத்தபோது பொதுவாகவே சில விசயங்களை உணர்ந்துகொள்ள முடிந்தது. தங்களை ஏதோ ஒரு வகையில் இவர்கள் தேற்றிக்கொள்கிறார்கள். இதுதான் இனி நிலை என்ற பிறகு வேறு என்ன செய்ய முடியும் என்ற கட்டத்தில் அத்தனை நெருக்கடிகளையும் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். எதற்கும் உணர்ச்சிகளைக் காட்டிக்கொள்ளாமல் எதையும் ஜீரணித்துக்கொள்கிறார்கள். இதில் அவமானங்கள், துயரங்கள் அனைத்தும் சேர்த்தி.

இந்த நிலை ஏதோ இந்த ஏழு பெண்களுக்கும் மட்டும்தான் என்றில்லை. இவர்களைப்போலப் போராட்டத்தில் (இயக்கத்தில்) பங்கேற்ற பல நூறு பெண்களுக்கு, ஆயிரக்கணக்கானோருக்கு ஏற்பட்டிருக்கும் நிலையாகும்.

இது பேரவலம். பெருந் துயரம். பெரும் அநீதி.

முதலாவதாக இவர்கள் எதிர்த்தரப்பினால் தோற்கடிக்கப்பட்டார்கள். யுத்தத்தத்தின் மூலம். அதைத் தொடர்ந்து சிறையிலடைக்கப்பட்டனர். மீள வேண்டியிருந்தது. இரண்டு, மூன்று ஆண்டுகள் சிறையிருந்தே மீள வேண்டியிருந்தது. மீண்ட பெண்களைத் தமிழ்ச் சமூகம் தோற்கடிக்கிறது. அது நோக்கும் நிலை குறித்து, நடத்தும் விதம் குறித்து இங்கே நாம் எழுதித் தீராது.

அத்தனை வலி நிறைந்த ஏராளம் ஏராளம் கதைகள் அவை.

1970களில் பொதுவாழ்வில் ஈடுபட்டு, (அரசியற் செயற்பாடுகளில் ஈடுபட்டதற்காக) சிறை சென்ற புஸ்பராணியின் அனுபவங்களே போதும் இந்தப் பெண்களுடைய நிலையை அறிந்துகொள்வதற்கு. அதற்கும் அப்பால் இவர்கள் இப்போது சமூகச் சிறையில் சிக்கியிருக்கிறார்கள். இது இரண்டாவது சிறை. இதனுடைய தண்டனைகள் மிக நுட்பமானவை. வீட்டிலிருந்தும் சமூக வெளியிலிருந்தும் நுட்பமாக ஓரம் கட்டுவது.

ஆனால், அதை இவர்கள் வெளியே காட்டிக் கொள்வதில்லை. “என்ன இருந்தாலும் எங்களை வீட்டுக்காரர் (பெற்றோரும் சகோதர சகோதரிகளும்) ஏற்றுக்கொண்டிருப்பதே பெரிய விசயம். அவர்களும் என்னதான் செய்ய முடியும்? நாங்கள் தோற்றுப் போனதற்கும் தோற்கடிக்கப்பட்டதற்கும் அவர்கள் பொறுப்பாளிகளில்லையே!… நாங்களும் வீட்டிலிருந்திருந்தால் எங்களுடைய வாழ்க்கையும் வேறாகியிருக்கும்… ஆனால், நாங்கள் இன்னொரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து விட்டோமே. அந்தக் கடந்த கால வாழ்க்கையின் மூலம் எங்களுக்கு ஒரு திருப்தி இருக்கு. ஒரு நிறைவிருக்கு. எங்களால் முடிந்த ஏதோ ஒன்றை இந்தச் சமூகத்துக்காகச் செய்திருக்கிறோம். அதில் முழுமையான வெற்றி கிடைக்காது விட்டாலும் ஏதோ நடந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அது போதும். ஒரு காலத்தில் எல்லோரும் சேர்ந்து செய்ய வேண்டிய பணி என்ற நிலையில் நாங்கள் இணைந்துகொண்டு எங்களுடைய பங்களிப்பைச் செய்திருக்கிறம். அந்தக் காலப் பணியை களப்பணியாகச் செய்த நிறைவுக்கு முன்னால் எதுவும் ஈடாகாது. அந்த நிறைவு போதும் எங்களுக்கு. இதை எங்களைச் சமாதானப் படுத்துவதற்காகச் சொல்லவில்லை. எங்களைப் பற்றிய சுயமதிப்பீட்டிலிருந்தே சொல்கிறோம். இதுதான் எங்களுடைய பலம். மகிழ்ச்சி. அடையாளம் எல்லாம். ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு திருப்தி இருக்கும் அல்லவா. ஒரு மகிழ்ச்சி. ஒரு நிறைவு. ஒரு அடையாளம். அப்படி எங்களுக்கு எங்களுடைய கடந்த காலம் இருக்கு….” என்று சிரித்தபடி சொல்லிக் கொண்டே போகிறார்கள்.

நான் எதுவும் பேசாமல் இவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன். ஒவ்வொரும் தனித்தனியாகச் சொன்னாலும் எல்லோருடைய கூட்டு எண்ணமும் நம்பிக்கையும் கருத்தும் ஒன்றுதான். ஒரே சாரத்தைக் கொண்டவை.

செந்நிலா, பேசும் போது தன்னுடைய அனுபவங்களை எழுதிக் கொண்டிருப்பதாகச் சொன்னாள். அதைப் படிக்கத் தந்தாள். அதிலே சில வரிகளின் கீழே அடிக்கோடிட்டிருந்தாள். அந்த வரிகள் இப்படி இருந்தன: ‘நாம் தேவதைகளாக ஒரு போதுமே இருந்ததில்லை. நிலமாக, நீராக, காற்றாக, வானாக, தீயாக இருந்தோம். அப்படித்தான் இன்னும் இருக்கிறோம்.’

இதைப் புரிந்துகொண்டு இவர்களுக்குரிய வாழ்க்கையை அளிப்பதற்கு, இவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்குவதற்கு, இவர்களும் மகிழ்ந்திருப்பதற்கு, மிஞ்சிய காலத்தை இவர்கள் இயல்பாக மற்றவர்களோடு கலந்து கொண்டாடுவதற்கு நம்மிடத்திலே ஏதாவது வழி உண்டா?
 
http://wowtam.com/ta_in/4-after-the-war-what-is-the-condition-of-the-ltte/11519/?fbclid=IwAR3x3Zmv5GBFTVPctsQZRu0oWHkOaVb3EFOkKfduhgIR-TLDBzYA9Z5xgfs#

வாசித்து ஒரு பெரிய பெருமூச்சொன்றை விட்டுட்டு போக வேண்டிய நிலைதான் இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இவர்களின் இடத்தில் இருந்திருந்தால் நாட்டுக்கு திரும்பி வந்து பந்தா காட்டும் தமிழர்களின் குரல்வளையை கடித்து குதறியிருப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் இளமையை இந்தச் சமூகத்துக்காக, இந்த இனத்துக்காக, இந்த மண்ணுக்காக அர்ப்பணித்திருக்கிறார்களே, அதற்குக் கைமாறாக என்ன கொடுக்க முடியும்? இந்தப் போராட்டம் தோற்கடிக்கப்படவில்லை என்றால் இன்று இவர்கள் இருக்கின்ற உயரம் எப்படியாக இருந்திருக்கும்? இவர்கள் வேறு யாருமல்லவே, எங்கள் மகள், எங்கள் சோதரிகள், எங்கள் தோழிகள் அல்லவா!

எண்ணத்தை சொல்வது......பெருமூச்சுதான் வருகின்றது.......!

14 hours ago, குமாரசாமி said:

நான் இவர்களின் இடத்தில் இருந்திருந்தால் நாட்டுக்கு திரும்பி வந்து பந்தா காட்டும் தமிழர்களின் குரல்வளையை கடித்து குதறியிருப்பேன்.

புலம்பெயர் தமிழ் மக்களை மட்டும் குற்றம் சொல்லி எந்த பலனும் இல்லை. புலம்பெயர்ந்தவர்களில் எத்தனையோ பேர் இப்படியானவர்களுக்கு தம்மால் இயன்ற அளவுக்கு உதவிக் கொண்டு தான் உள்ளனர். ஆனால் இப்படியான உதவிகள் இவர்களுக்கு நீண்டகால அடிப்படையில் தொடர்ந்து கிடைக்க கூடியவாறு செய்வதற்கு தான் இவர்கள் வாழும் சமூகத்தில் எந்த அமைப்பும் இல்லை. அதை தோற்றுவிக்க கூடியவர்களும் இல்லை.

இந்த கட்டுரையை எழுதிய கருணாகரன் தொடர்பாக  இக்கட்டுரைக்கு  "கருணாகரன் டக்குளசுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமாருக்கான இற்கும் ஆலோசகராக உள்ளார்" என பின்னூட்டம் ஒன்று வந்துள்ளது. இது சரி என்று தான் நான் கேள்விப்பட்டதும். இவ்வாறு இவர்களின் நிலையை அறிந்தவர்களால், நுண்ணுணரக் கூடியவர்களால் கூட நீண்டகால அடிப்படையில் இவர்களுக்கான உதவியை வழங்கக் கூடிய ஒரு அமைப்பையும் தமிழ் எம் பி  மார்களைக் கொண்டோ அல்லது சமூகத்தில் உள்ள செயலாற்றக்கூடியவர்களைக் கொண்டோ ஏற்படுத்த முடியவில்லை.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 27/1/2023 at 00:46, குமாரசாமி said:

நான் இவர்களின் இடத்தில் இருந்திருந்தால் நாட்டுக்கு திரும்பி வந்து பந்தா காட்டும் தமிழர்களின் குரல்வளையை கடித்து குதறியிருப்பேன்.

ஏன் வீண் கொலைப்பழி. ஆவா குழுவின் தொடர்பு எடுத்து சொல்லிவிடுங்கோவன்😀🤭

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, shanthy said:

ஏன் வீண் கொலைப்பழி. ஆவா குழுவின் தொடர்பு எடுத்து சொல்லிவிடுங்கோவன்😀🤭

விலாசம் இருக்கா? :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

விலாசம் இருக்கா? :rolling_on_the_floor_laughing:

நானும் தான் தேடுறன் கிடைச்சா எனக்கும்😀

  • கருத்துக்கள உறவுகள்

சரி 

ஏன் பெருமூச்சுடன் போவான்

யாழ் மூலம் அதில் ஒரு பிள்ளைக்கு சுயதொழிலுக்கு உதவி செய்யலாமே?

உதாரணமாக 

அறிவுமங்கை, இதழியல், அச்சு, வடிவமைப்பு போன்றவற்றில் அனுபவம் கொண்டவள். இந்தத் துறையில் எங்காவது வேலை செய்யலாம் என்று செய்து பார்த்தாள். அடிமாட்டுச் சம்பளம் கொடுக்கிறார்கள். கடையொன்றில் வேலை செய்தாள். அங்கும் கெடுபிடிகள் அதிகம். ஒன்றுமே சரிப்பட்டு வரவில்லை. எல்லோரும் அவளைப் பயன்படுத்தும் அளவுக்கு அவளுடைய திறன்களுக்கான மதிப்பையும் ஊதியத்தையும் கொடுக்கத் தயாரில்லை. தனியாக ஒரு இடத்தில் அச்சு வடிவமைப்பைச் செய்யலாம் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறாள்.

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளில் இருந்த போது இருந்த பெண்களாக பலர் இல்லை.

ஒரு முன்னாள்.. பெரியோர் பராமரிப்பு பயிற்சி எடுத்ததாகச் சொல்லி.. பராமரிப்புக்கு வந்தார். உச்ச அளவாக தினம் 2000 ரூபா.. சாப்பாடு.. தங்குமிடம். வந்து இரண்டு வாரங்களுக்குள் ஆள் எஸ் கேப். இதுவரைக்கும்.. அந்தப் பெரியவர்கள் தாமாகவே தங்கள் வேலைகளைச் செய்யக் கூடியவர்கள். சமையலும் ஒரு சில வீட்டு வேலைகளும் தான். அதையும் போன் பேசியே காலம் கடத்திவிடுகிறார்கள்.

ஆக.. இப்ப அவர்கள் ஊர் பெண்களாகவே மாறிவிட்டார்கள். அது தவறல்ல. அது எனி அனுதாபங்களைத் தேடாது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nedukkalapoovan said:

புலிகளில் இருந்த போது இருந்த பெண்களாக பலர் இல்லை.

ஒரு முன்னாள்.. பெரியோர் பராமரிப்பு பயிற்சி எடுத்ததாகச் சொல்லி.. பராமரிப்புக்கு வந்தார். உச்ச அளவாக தினம் 2000 ரூபா.. சப்பாடு.. தங்குமிடம். வந்து இரண்டு வாரங்களுக்குள் ஆள் எஸ் கேப். இதுவரைக்கும்.. அந்தப் பெரியவர்கள் தாமாகவே தங்கள் வேலைகளைச் செய்யக் கூடியவர்கள். சமையலும் ஒரு சில வீட்டு வேலைகளும் தான். அதையும் போன் பேசியே காலம் கடத்திவிடுகிறார்கள்.

ஆக.. இப்ப அவர்கள் ஊர் பெண்களாகவே மாறிவிட்டார்கள். அது தவறல்ல. அது எனி அனுதாபங்களைத் தேடாது. 

உங்கள் கருத்து எனக்கும் உண்டு. இது போல போராளிகள் சிலரை வேலை ஒழுங்கு செய்து குடுத்த அனுபவம் எனக்கு இருக்கிறது. இப்ப எல்லாரின் மனநிலை இதுதான். போராளிகள் என்ற கவசத்தை பலரும் இலகுவாக அணிகிறார்கள். 

இல்லையென்றால் நாங்கள் கப்பலோட்டினோம் கடலைக் கடைந்தோம் காசை தாங்கோ தனித்தொழில் தொடங்கி வாழ்வோம் என்பார் பலர். ஆனால் அதையும் தனியே இலாபம் எடுக்கவே விரும்புவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, shanthy said:

இதுவாவது பறுவாயில்லை.. சில முன்னாள்கள்.. இவை தனிநாட்டுக்காரர்.. இவை தேசியக்காரர் என்று அடுத்தவையை தரம் பிரிச்சுப் பேசுறதை கேட்க முடியுது.

ஊரில இப்ப பல புதிய சொற்தொடர்கள் உலாவுது. அதில.. தனிநாட்டுக்காரர்... தேசியக்காரர் தீண்டத்தகாத வகைக்குள் வந்து கொண்டிருக்கினம். 

  • கருத்துக்கள உறவுகள்

போர் முடிந்து இவ்வளவு காலத்திற்கு பின்னும் உழைக்க விரும்பாமல் , முயற்சி செய்யாமல் இருந்து கொண்டு இன்னும் வெளி நாட்டு உதவியை எதிர் பார்த்து கொண்டு இருப்பவர்களை பார்த்து  ஆச்சரியமாய் இருந்தது  ...உண்மையாகவே விசேட தேவையுடையோர் ,மாற்று திறனாளிகள் ஏதோ ஒரு வழியில் உழைத்து  தான் வாழ்கின்றனர்...உழைக்க விரும்பாத சோம்பேறிகள் தான் மற்றவரின் உதவியை தினமும் எதிர் பார்த்து கொண்டு இருப்பார்கள் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ரதி said:

பல இடங்களில் இயக்கத்தில் இருந்தவர்களுக்கு தொழில் கொடுக்கிறார்கள் இல்லையாமே..

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, குமாரசாமி said:

பல இடங்களில் இயக்கத்தில் இருந்தவர்களுக்கு தொழில் கொடுக்கிறார்கள் இல்லையாமே..

அப்படி இல்லத் தாத்தா அவர்களுக்கு சுய முயற்சி மிகவும் குறைவு..நான் வந்து எழுதக் கூடாது என்று மனதைக் கட்டுபடுத்திக் கொண்டு திரிவிது இப்படியான ஆக்கங்களை கண்டால் எழுத வேண்டி வருகிறது...

 ஊரிலிருக்கும் அனேகமானர்களை பழுதாக்கியவர்களில் எங்களுக்கும் பங்குண்டு..யாரும் வேலை கொடுக்காது விட்டால் ஏதாவது ஒரு சுய முயற்சியும் இருக்கத் தானே வேண்டும் ..கடந்த காலங்களில் சாதனாக்கா என்று ஒருவரது முன்றேற்றம் பற்றி யாரும் அறியவில்லையா..அப்படி ஏன் இவர்களும் முயற்சிக்க கூடாது நாங்கள் முன்ளாள் இன்னாள் என்று எப்போதும் புலம்பிக் கொண்டு இருப்பதில் பலன் இல்லலையே..அதை விட்டால் ஊரில் இருக்கும் சில எழுதாளர்கள் என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்களுக்கு புலம் பெயர்ந்தவர்களை குற்றம் சொல்லி எழுதுவதே ஓரு பொழுது போக்கு..

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

பல இடங்களில் இயக்கத்தில் இருந்தவர்களுக்கு தொழில் கொடுக்கிறார்கள் இல்லையாமே..

பலரும் சொல்லும் சாட்டு. வேலையை ஒழுங்குபடுத்தி கொடுத்தாலும் பலரும் செய்ய தயாரில்லை. நாங்கள் அங்க எப்படி இருந்தோம் தெரியுமோ? என்று விதண்டாவாதம் செய்த பலரை பாரத்திருக்கிறேன்.

இப்ப வேலை செய்ய ஆளில்லா நிலை இருக்கிறது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, shanthy said:

பலரும் சொல்லும் சாட்டு. வேலையை ஒழுங்குபடுத்தி கொடுத்தாலும் பலரும் செய்ய தயாரில்லை. நாங்கள் அங்க எப்படி இருந்தோம் தெரியுமோ? என்று விதண்டாவாதம் செய்த பலரை பாரத்திருக்கிறேன்.

இப்ப வேலை செய்ய ஆளில்லா நிலை இருக்கிறது. 

தட்டிச்சொல்ல ஆளில்லா நிலைமையாக இருக்கலாமோ?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, shanthy said:

பலரும் சொல்லும் சாட்டு. வேலையை ஒழுங்குபடுத்தி கொடுத்தாலும் பலரும் செய்ய தயாரில்லை. நாங்கள் அங்க எப்படி இருந்தோம் தெரியுமோ? என்று விதண்டாவாதம் செய்த பலரை பாரத்திருக்கிறேன்.

இப்ப வேலை செய்ய ஆளில்லா நிலை இருக்கிறது. 

அங்கே நாம் எப்போதும் மற்றவரகள் முன் பரிதாபத்துக்கு உரியவர்களாக வாழக் குடாது என்றும் சொல்ல்லிக் குடுக்க பட்டும் இருக்கும்.அவர்களின் தாரக மந்திரங்களில் இதுவும் ஒன்று..
👋

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ உண்மையில் உதவி தேவைப்படுவோரை( அது முன்னாள் போராளிகளோ, சாதாரண மக்களோ) உதவிகள் சரியான படி போய் சேர்வதில்லை என்ற எண்ணம் அங்கே நின்ற சமயங்களில் ஏற்ப்பட்டது.. பல்வேறு காரணங்களால் அவர்களும் முன் வந்து கேட்பதில்லை. ஏதோ தங்களால் இயன்றவகையில் வேலைகளை செய்து வாழ்க்கையை கொண்டுதான் செல்கிறார்கள்..

நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் குறை கூறினாலும் கூட உண்மையில் சரியான வழிகாட்டலோ தலைமையோ அங்கே இல்லை..மக்களும் சரியான தலைமைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற அக்கறையும் இல்லை. இதனால் இவர்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அல்லது முன்னாள் போராளிகளுக்கான உதவிகளோ நீண்டகால திட்டங்களோ எதுவுமே எதிர்பார்க்கும் அளவிற்கு வெற்றி பெறாது என்றே தோன்றுகிறது..  

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, யாயினி said:

அப்படி இல்லத் தாத்தா அவர்களுக்கு சுய முயற்சி மிகவும் குறைவு..நான் வந்து எழுதக் கூடாது என்று மனதைக் கட்டுபடுத்திக் கொண்டு திரிவிது இப்படியான ஆக்கங்களை கண்டால் எழுத வேண்டி வருகிறது...

 ஊரிலிருக்கும் அனேகமானர்களை பழுதாக்கியவர்களில் எங்களுக்கும் பங்குண்டு..யாரும் வேலை கொடுக்காது விட்டால் ஏதாவது ஒரு சுய முயற்சியும் இருக்கத் தானே வேண்டும் ..கடந்த காலங்களில் சாதனாக்கா என்று ஒருவரது முன்றேற்றம் பற்றி யாரும் அறியவில்லையா..அப்படி ஏன் இவர்களும் முயற்சிக்க கூடாது நாங்கள் முன்ளாள் இன்னாள் என்று எப்போதும் புலம்பிக் கொண்டு இருப்பதில் பலன் இல்லலையே..அதை விட்டால் ஊரில் இருக்கும் சில எழுதாளர்கள் என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்களுக்கு புலம் பெயர்ந்தவர்களை குற்றம் சொல்லி எழுதுவதே ஓரு பொழுது போக்கு..

அக்கா இந்த‌ காணொளிய‌ முழுதாக‌ பாருங்கோ

இவ‌ரும் முன்னாள் போராளி முகமால‌ ச‌ண்டையின் போது இர‌ண்டு கால்க‌ல‌ இழ‌ந்து விட்டார்.........கையில் காய‌ம் அப்ப‌டி இருந்து சைக்கில் வேலை செய்து குடும்ப‌த்தை பார்க்கிறார்...........இருக்க‌ நிர‌ந்த‌ வீடு இல்லை வீட்டுக் கார‌ன் வீட்டை விட்டு எழும்ப‌ சொல்லிட்டின‌ம்

இவ‌ர் முன்னாள் போராளி என்று நூற்றுக்கு  நூறு உறுதி
இன்னொரு முன்னாள் போராளி சொல்லித் தான் த‌வ‌க‌ர‌ன் இவ‌ரை தேடி பிடித்து காணொளி வெளியிட்டார் நேற்று...........

க‌டை போட்டு த‌ர‌ சொல்லி கேட்க்கிறார் காணொளி பிடிச்ச‌ த‌ம்பி கேட்டார் க‌டை போடுவில் 1ல‌ச்ச‌த்தி 50ஆயிர‌ம் ரூபாய் இருந்தா அதில் இருந்து தான் முன்னுக்கு வ‌ந்திடுவேன் என்று

நீங்க‌ள் மேல‌ எழுதின‌ சாத‌னா அக்கா உண்மையில் பாராட்ட‌ ப‌ட‌ வேண்டிய‌வா.............அடுத்த‌வேட்ட‌ கை நீட்டாம‌ சொந்த‌ முய‌ற்சியில் முன்னுக்கு வ‌ந்த‌ முன்னாள் பெண் போராளி

இந்த‌ சூழ் நிலையிலும் த‌லைவ‌ரை ப‌ற்றி ந‌ல்லா தான் சொல்லுகிறார்..............ஊரில் இருப்ப‌வ‌ர்க‌ள் தாங்க‌ள் செய்த‌ தியாக‌ங்க‌ளை ம‌ற‌ந்திட்டின‌ம் அதோடு த‌ங்க‌ளை பெரிசா ம‌திக்கிறேலையாம்..................

இவ‌ர் போன்ர‌வ‌ர்க‌ளுக்கு சுய‌ தொழில் செய்ய‌ உத‌வினா இவ‌ர்க‌ளின் வாழ்க்கை சீக்கிர‌மே முன்னுக்கு வ‌ந்திடும்..............
இவ‌ட்ட‌ ம‌னைவியும் முன்னாள் போராளியாம்............காணொளிய‌ முழுதாக‌ பார்த்தா எல்லாம் புரியும் அக்கா.............இவ‌ர் போன்ற‌வ‌ர்க‌ளுக்கு க‌ருனை காட்ட‌ வேண்டிய‌து புல‌ம்பெய‌ர் வாழ் உற‌வுக‌ளின் சிறு க‌ட‌மை........................

முன்னாள் போராளி பிச்சை எடுத்தும் த‌ன்னால் முடிந்த‌ சுய‌ தொழிலும் செய்கிறார்

இல‌ங்கை அர‌சிய‌ல் வாதிக‌ள் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர்க‌ள் என்ற‌தையும் வ‌டிவாய் சொல்லுகிறார் 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

எனக்கென்னவோ உண்மையில் உதவி தேவைப்படுவோரை( அது முன்னாள் போராளிகளோ, சாதாரண மக்களோ) உதவிகள் சரியான படி போய் சேர்வதில்லை என்ற எண்ணம் அங்கே நின்ற சமயங்களில் ஏற்ப்பட்டது.. பல்வேறு காரணங்களால் அவர்களும் முன் வந்து கேட்பதில்லை. ஏதோ தங்களால் இயன்றவகையில் வேலைகளை செய்து வாழ்க்கையை கொண்டுதான் செல்கிறார்கள்..

நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் குறை கூறினாலும் கூட உண்மையில் சரியான வழிகாட்டலோ தலைமையோ அங்கே இல்லை..மக்களும் சரியான தலைமைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற அக்கறையும் இல்லை. இதனால் இவர்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அல்லது முன்னாள் போராளிகளுக்கான உதவிகளோ நீண்டகால திட்டங்களோ எதுவுமே எதிர்பார்க்கும் அளவிற்கு வெற்றி பெறாது என்றே தோன்றுகிறது..  

ச‌ரியா சொன்னீங்க‌ள்

ஆனால் சின்ன‌ சின்ன‌ யூடுப்ப‌ர் மூல‌ம் செய்யும் உத‌வி அந்த‌ ம‌க்க‌ளுக்கு போய் சேருது

ஆனால் எல்லாரும் நூற்றுக்கு நூறு நேர்மையா இருப்பார்க‌ள் என்றால் இல்லை என்பேன்................

க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ குடுப‌ங்க‌ளை விடியோ எடுத்து விட்டு வீடியோ எடுத்த‌வ‌ர்க‌ளே அந்த‌ குடும்ப‌ங்க‌ளை கை விட்ட‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் ப‌ல‌ அண்ணா

என‌க்கு பெரும் கோவ‌ம் இல‌ங்கை அர‌சிய‌ல் வாதிக‌ள் மேல்.............சாப்பாடு இல்லாம‌ வ‌றுமையில் எவ‌ள‌வோ குடும்ப‌ங்க‌ள் வாழுது

ஒரு முன்னாள் போராளியின் ம‌னைவி ம‌ட்ட‌க்க‌ள‌ப்பில் கால‌ 5ம‌ணிக்கு வேலைக்கு போய் பின்னேர‌ம் 4ம‌ணி ம‌ட்டும் வேலை செய்தா மாத‌ ச‌ம்ப‌ள‌ம் 18ஆயிர‌ம் ரூபாய் அது அவான்ட‌ பிள்ளைக‌ளின் ப‌டிப்புக்கு சாப்பாட்டுக்கு கானாது................அந்த‌ அம்மாவுக்கு புல‌ம் பெய‌ர் நாட்டு உற‌வுக‌ள் சுய‌ தொழில் செய்து கொடுத்து இருக்கின‌ம் இப்ப‌ வீட்டோட‌ சிறு க‌டை அதோடு கோழிக‌ள் வ‌ள‌த்து விப்ப‌து...........அந்த‌ அம்மான்ட‌ சுய‌ தொழில‌ இன்னும் பெரிசாக்கினா உழைக்கிற‌ காசில் பிள்ளைக‌ளின் ப‌டிப்பு காசு க‌ட்டி மூன்று நேர‌மும் வ‌டிவாய் சாப்பிடுவின‌ம்

வீட்டில் ப‌ல‌ மூட்டை அரிசி வேண்டி கொடுத்து இருக்கின‌ம் அதோடு கோழியும் கேட்டு இருந்தா.............தொழில் செய்ய‌ முத‌ல் கையில் கொஞ்ச‌ காசும் புல‌ம் பெய‌ர் நாட்டு உற‌வுக‌ள் குடுத்த‌வை

இப்ப‌டியான‌வையை நாம் ஊக்கி விக்கனும்

நோக‌மா நொங்கு சாப்பிட‌ நினைப்ப‌வ‌ர்க‌ளுக்கு குண்டில‌ உதைஞ்சு திர‌த்த‌னும் எழுங்காய் வேலைக்கு போங்கோ என்று........................

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, shanthy said:

பலரும் சொல்லும் சாட்டு. வேலையை ஒழுங்குபடுத்தி கொடுத்தாலும் பலரும் செய்ய தயாரில்லை. நாங்கள் அங்க எப்படி இருந்தோம் தெரியுமோ? என்று விதண்டாவாதம் செய்த பலரை பாரத்திருக்கிறேன்.

இப்ப வேலை செய்ய ஆளில்லா நிலை இருக்கிறது. 

நீங்க‌ள் அந்த‌ கால‌ம் தொட்டு ப‌ல‌ருக்கு ந‌ல் வ‌ழி காட்டி நீங்க‌ள் அக்கா

ஊக்க‌ம் கொடுத்து வ‌ச‌தி செய்து கொடுத்தும் முன்னேற‌ தெரியாத‌வைக்கு எப்ப‌டி சொன்னாலும் புரியாது

ஆனால் ப‌ல‌ர் சுய‌ தொழில் செய்ய‌ உத‌வுங்கோ அத‌ன் மூல‌ம் வாழ்க்கையில் முன்னுக்கு வ‌ந்துடுவோம் என்று சொன்ன‌ ப‌ல‌ரும் இருக்கின‌ம்

அப்ப‌டி செய்து கொடுத்தும் ப‌ல‌ர் இப்ப‌ ந‌ல்ல‌ நிலையிலும் இருக்கின‌ம் அக்கா

எங்க‌ட‌ ம‌ன‌சுக்கு யார் சுய‌ தொழில் செய்து முன்னுக்கு வ‌ர‌ விரும்பின‌மோ அவைக்கு அள்ளி கொடுப்போம்...............புல‌ம்பெய‌ர் நாட்டு உற‌வுக‌ள் தான் பிள்ளைக‌ளின்ட‌ ப‌டிப்புக்கு அதுக்கு இதுக்கு உத‌வ‌னும் என்றால் அதுக்கு யாரும் முன் வ‌ர‌ மாட்டின‌ம்.............

  • கருத்துக்கள உறவுகள்
On 9/2/2023 at 23:40, குமாரசாமி said:

பல இடங்களில் இயக்கத்தில் இருந்தவர்களுக்கு தொழில் கொடுக்கிறார்கள் இல்லையாமே..

அந்த நேரத்தில் 2009/10 காலப்பகுதியில் இந்த நிலை காணப்பட்டது ...மக்களுக்கு அந்த நேரத்தில் ஏற்படட பயம் காரணமாய் வேலை வாய்ப்பு கொடுக்க தயங்கினார்கள் .
இவர்களுக்கு எவ்வளவோ வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் கிடைக்கின்றன ஆனால் அவற்றை அவர்கள் சரியான முறையில் படன்படுத்தவிருப்பமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பையன்26 said:

புல‌ம் பெய‌ர் நாட்டு உற‌வுக‌ள் சுய‌ தொழில் செய்து கொடுத்து இருக்கின‌ம் இப்ப‌ வீட்டோட‌ சிறு க‌டை அதோடு கோழிக‌ள் வ‌ள‌த்து விப்ப‌து...........அந்த‌ அம்மான்ட‌ சுய‌ தொழில‌ இன்னும் பெரிசாக்கினா உழைக்கிற‌ காசில் பிள்ளைக‌ளின் ப‌டிப்பு காசு க‌ட்டி மூன்று நேர‌மும் வ‌டிவாய் சாப்பிடுவின‌ம்

நான் அவதானித்த அளவில் சுயதொழில் என்றால் கடை வைத்திருப்பதை தவிர வேறு அவர்களுக்குத் தெரியவில்லை ஆனால் ஒரு ஊருக்கு எத்தனை கடைகள் வேண்டும்? வேறு விதமாக யோசிக்க அவர்களால் முடியாது உள்ளது என்பது கவலை. அந்தந்த இடங்களுக்கு ஏற்றவாறு தொழில்களை உருவாக்க ஏனோ முடியவில்லை. 

மேலும் படிப்பிற்கு உதவ கேட்கும் பொழுது அவர்களுக்கும் பொறுப்பு வருவது போல உதவுவதில்லை.. தனியே பணத்தை மட்டும் அனுப்பிக்கொண்டே இருந்தால் அவர்களுக்கும் அதனை திருப்பித் தரவேண்டும் என்றோ தங்களைப் போல உள்ளவர்களுக்கு உதவ வேண்டும் என்றோ சிந்தனை ஏற்படாது.. 

இந்த YouTubeக்காரர் செய்வது நல்ல விடயம் என்றாலும் கூட கஷ்டப்படுபவர்களை முக்கியமாக சிறுவர்களை அப்படி கதையுங்கோ இப்படி சொல்லுங்கோ என கேட்பது மறைமுகமாக இந்த மாதிரி மற்றவர்களிடம் இரந்து வாழ்வதையே ஊக்குவிக்கிறது.. இந்த மாதிரி செய்வதை ஊக்குவிப்பது சரியாகப்படவில்லை.. 

புலம் பெயர்ந்தவர்களில் முதலாவது generationற்கு வயது போயிருக்கும் அவர்கள் தங்களது உறவுகள் என ஒன்றையும் யோசிக்காமல் உதவினார்கள். இரண்டாவது generation அப்படி செய்யுமா? இல்லை. 

தன்னிறைவாக தன் முயற்சியில் வாழ உதவாமல் இன்னொருவரில் தங்கி இருக்கவெல்லா பழகிவிட்டிருக்கிறோம்.. 

இப்படி புலம்பெயர்ந்தோர் உதவும் பொழுது சிலவற்றை யோசிக்காமல் உதவி செய்துவிட்டு பிறகு அவர்களை குறை சொல்வதில் ஒரு பயனும் இல்லை.. 

உதவ வேண்டும் உண்மையிலேயே தேவைப்படுவோரை இனங்கண்டு உதவ வேண்டும்.. அவ்வளவுதான் கூறலாம். 

யாரையும் குறை கூற இப்படி எழுதவில்லை. என் மனதில் தோன்றியதையும் பார்த்தவற்றையும் வைத்தே என் கருத்துகள் உள்ளன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

தைய‌ல் வேலைகள் சுய‌ தொழிலா விரும்பி கேட்டு செய்யின‌ம் அண்ணா................ம‌ட்ட‌க்க‌ள‌ப்பில் யானை ம‌க்க‌ளுக்கு சிர‌ம‌ம் கொடுக்குது அதால‌ தோட்ட‌ங்க‌ள் செய்ய‌ த‌ய‌ங்கின‌ம்

மாடுக‌ள் கோழிக‌ள் சுய‌ தொழிலுக்கு ந‌ல்ல‌ம் 
அதையும் விரும்பி செய்யின‌ம் ப‌ல‌ர்..............ஒரு ஊரில‌ ப‌ல‌ க‌டைக‌ள் இருந்தா நீங்க‌ள் சொல்வ‌து போல் முன்னேற முடியாது.............அந்த‌ ஊரில் ம‌க்க‌ளுக்கு எது கூட‌ அவ‌சிய‌மாய் தேவை ப‌டுதோ அத‌ அவ‌ர்க‌ள் சுய‌ தொழிலா செய்து முன்னுக்கு வ‌ர‌லாம்...............

ஊரில் உத‌வி என்ற‌ பெய‌ரில் ப‌ல‌ மோச‌டிக‌ளும் ந‌ட‌க்குது அண்ணா உதார‌ன‌த்துக்கு ந‌ல்லா இருப்ப‌வ‌ர்க‌ளும் காசு ஆசையில் த‌ங்க‌ளுக்கு க‌ஸ்ர‌ம் என்று  நாட‌க‌த்தை போட்டு பிடி ப‌ட்ட‌வை

யூடுப்பிலோ அல்ல‌து உங்க‌ட‌ ஊரிலோ யாரும் க‌ஸ்ர‌ப் ப‌ட்டால் உங்க‌ட‌ ம‌ன‌துக்கும் ச‌ரி என்று ப‌ட்டால் உத‌வுங்கோ அண்ணா...........எப்ப‌வும் விழிப்புன‌ர்வுட‌ன் இருப்ப‌து ந‌ல்ல‌ம்.............இப்ப‌ மோச‌டி அதிக‌ம் ந‌ட‌க்குது ப‌ல‌ வித‌த்தில்

என‌து ம‌ன‌தில் எப்ப‌வும் இருக்கும் என்ன‌ம் எம‌க்காக‌ போராடி க‌ஸ்ர‌ப் ப‌ட்டு போய் இருக்கும் போராளி குடும்ப‌த்துக்கு உத‌வ‌னும் அடுத்த‌து இனி இல்லை என்ர‌ க‌ஸ்ர‌ப்ப‌ட்ட‌ எம் ம‌க்க‌ளுக்கு உத‌வ‌னும்...............இவை இர‌ண்டும் தான் ந‌ம்பிக்கையான‌வை மூல‌ம் என‌து உத‌விய‌ சில‌ருக்கு செய்வேன்.....................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.