Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்

13 Feb, 2023 | 12:02 PM

image

விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், விரைவில் தக்க சூழலில் பொதுமக்கள் முன் தோன்றுவார் என்றும் தமிழின உணர்வாளரும், உலக தமிழர் பேரமைப்பு  தலைவருமான பழ. நெடுமாறன் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

''விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். விரைவில் அவர் மக்கள் முன் தோன்றுவார்.

அதற்கான சூழல் விரைவில் கனியும் என எதிர்பார்க்கிறோம். விடுதலைப்புலி புலிகள் தலைவர் பிரபாகர் பற்றி தவறான தகவல் பரப்பப்பட்டு விட்டது.

மேலும் பிரபாகரன் எங்கு இருக்கிறார் என்பதை தற்போது அறிவிக்க இயலாது. பிரபாகரனின் மனைவி மற்றும் மகளும் நலமாக உள்ளனர். இலங்கையில் ராஜபக்சேக்களின் ஆட்சி முடிவுக்கு வந்திருப்பதால் இதனை தற்போது அறிவிக்கிறோம்.

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பது ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். இதுவரை அவரைப் பற்றி மக்களிடமிருந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறோம்.'' என பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பது குறித்த தகவல்கள் வெளியாகி இருப்பதால் இலங்கை அரசியலிலும், சர்வதேச அரசியலிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

https://www.virakesari.lk/article/148080

  • Replies 185
  • Views 17.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா தமிழ்நாட்டில எல்லோரும் செல்போனோட சுத்தினம்.. கிச்சகத்தில் முதலிடத்திற்கு வரவேணாமா 😢

IMG-20230213-144606.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கேடு கெட்ட பிழைப்பு ...அவர் மேல் இருந்த கொஞ்ச,நஞ்ச மரியாதையும் இல்லாமல் செய்கிறார் 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ரதி said:

கேடு கெட்ட பிழைப்பு ...அவர் மேல் இருந்த கொஞ்ச,நஞ்ச மரியாதையும் இல்லாமல் செய்கிறார் 

அதே போல் தான் அக்கா
இவ‌ர் இந்த‌ புர‌ளிய‌ கில‌ப்ப‌ என்ன‌ கார‌ண‌ம்
இவ‌ரும் விலை போய் விட்டாரா 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் சுயமுகம் மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

வைக்கோ

குள‌த்தூர் ம‌ணி.............இவ‌ர்க‌ள் இட‌த்தில் இப்போது ப‌ழ‌ நெடுமாற‌ன்

ப‌ச்சை ஜ‌ரோக்கிய‌ர்க‌ள் இவ‌ர்க‌ள்..............இவ‌ர்க‌ளுட‌ன் தொட‌ர்வு வைத்து இருப்ப‌து ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆவ‌த்து.........................

2 minutes ago, nunavilan said:

இந்தியாவின் சுயமுகம் மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகிறது.

இவ‌ர் மேல் இருந்த‌ ந‌ம்பிக்கையும் போய் விட்ட‌து
எம்ம‌வ‌ர்க‌ள் ந‌ம்பின‌ ஆட்க‌ள் எல்லாம் த‌லைவ‌ருக்கு துரோக‌ம் செய்த‌து தான் உண்மை வ‌ர‌லாறு

வைக்கோ திருமாள‌வ‌ன் குள‌த்தூர் ம‌னி இப்போது ப‌ழ‌ நெடுமாற‌ன்

இப்ப‌ தான் ஈழ‌ ம‌ண்ணில் இராணுவ‌த்தை வெளி ஏற்றி காணிக‌ல‌ ம‌க்க‌ளிட‌ம் ஒப்ப‌டைச்சு ம‌க்க‌ள் சுத‌ந்திர‌மாய் ந‌ட‌மாடின‌ம்.............இவ‌ரின் இந்த‌ அறிக்கையால் பாதிக்க‌ப் ப‌ட‌ போவ‌து எங்க‌ட‌ ம‌க்க‌ள் தான்...............

இனி ஒரு ஆயுத‌ போராட்ட‌ம் ஈழ‌ ம‌ண்ணில் வேண்டாம்
அறிவாயுத‌ம் மூல‌ம் நாடு அடைவ‌து தான் சிற‌ப்பு
அத‌ற்க்கு எல்லாரும் ஒற்றுமையா செய‌ல் ப‌ட‌னும்................. ❤️🙏

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், உயிருடன் நலமாக இருப்பதாக வெளியான கருத்தினை இலங்கை இராணுவம் முற்றாக மறுப்பதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், உயிருடன் நலமாக இருப்பதாக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன், தஞ்சாவூரில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

அதன்போது, பிரபாகரன், அவருடைய மனைவி, மகள் ஆகியோர் நலமுடன் இருப்பதாகவும் அவர்கள் உரிய நேரத்தில் வெளிப்படுவார்கள் எனவும் பழ. நெடுமாறன் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பில், கருத்து வெளியிட்ட இலங்கை இராணுவம், இந்த கூற்றை முற்றாக மறுப்பதாக தெரிவித்துள்ளது.

அதில் "தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிக்கட்ட யுத்தத்தில் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் தம் வசம் உள்ளதாக" இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும், "2009ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதி இறுதிக்கட்ட யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டார். அவரது மரபணு ஆதாரங்களும் எம்வசம் உள்ளது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.madawalaenews.com/2023/02/i_32.html

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

இனி ஒரு ஆயுத‌ போராட்ட‌ம் ஈழ‌ ம‌ண்ணில் வேண்டாம்
அறிவாயுத‌ம் மூல‌ம் நாடு அடைவ‌து தான் சிற‌ப்பு
அத‌ற்க்கு எல்லாரும் ஒற்றுமையா செய‌ல் ப‌ட‌னும்................. ❤️🙏

இதன் அர்த்தம் பிரபாகரன் இனி வேண்டாம் என்பது தானே தம்பி??

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

இதன் அர்த்தம் பிரபாகரன் இனி வேண்டாம் என்பது தானே தம்பி??

இனி ஆயுத‌ போராட்ட‌ம் தொட‌ங்க‌ப் ப‌ட்டால் யாழ்பாண‌த்தில் இருந்து கொழும்புவ‌ர‌ ர‌த்த‌ ஆறு ஓடும்

 த‌ர‌ ப‌டை , க‌ட‌ல் ப‌டை , வான் ப‌டை , ஆட்ல‌றி , சால்ஸ் அன்ர‌னி சிற‌ப்பு ப‌டை இப்ப‌டி இருந்தும் , எல்லாம் எம் க‌ண் முன்னே அழிக்க‌ப் ப‌ட்ட‌து

த‌லைவ‌ர் இருக்கிறார் என்று மீண்டும் புர‌ளிய‌ கில‌ப்பி காசை கொள்ளை அடிக்க‌ ந‌ல்ல‌ திட்ட‌ம் ந‌ட‌க்குது

த‌லைவ‌ரின் ஆன்மா கூட‌ இவ‌ர்க‌ளை ம‌ன்னிக்காது

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

தலைவர் இருக்கிறார் இல்லை என்பதை விட்டு விடுவோம்

தலைவர் மீண்டும் வந்தால் ஆயுதத்தை தான் கையில் எடுப்பார் என்று எதை வைத்து சொல்கிறீர்கள்??  

நமக்கே அறிவாயுதம் பற்றிய தெளிவிருக்கும்போது????

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

பொது வாக்கெடுப்பு தான் த‌மிழீழ‌த்துக்கு இனி தீர்வு
அத‌ நோக்கி ப‌ய‌ணிப்ப‌து சிற‌ப்பு

த‌லைவ‌ர் வேண்டாம் என்று யாரும் சொல்ல‌ வில்லை
என் அள‌வுக்கு த‌லைவ‌ரை நினைத்து க‌ண் க‌ல‌ங்கின‌வை யாரும் இருக்க‌ மாட்டின‌ம்
நானும் த‌லைவ‌ர் பிற‌ந்த‌ கார்த்திகை மாத‌ம் 26இல் தான் பிற‌ந்தேன்

த‌லைவ‌ர் உயிருட‌ன் இருக்கிறார் என்றால் காணொளிய‌ வெளியிட‌ வேண்டிய‌து தானே , ஏன் ப‌ல‌ க‌ட்டுக் க‌தைக‌ள்.............இந்தியாவில் த‌லைவ‌ர் ம‌ற்றும் பொட்டு அம்மான் தேட‌ப் ப‌டும் லிஸ்ரில் இருக்கின‌ம்.............அப்ப‌டி வ‌சிக்கும் நாட்டில் இருந்து கொண்டு ப‌ழ‌ நெடுமாற‌ன் அறிக்கை விடுவ‌து த‌மிழ‌ர்க‌ளை முட்டாள் ஆக்க‌வா அண்ணா 

ப‌ழ‌நெடுமாற‌ன் வ‌சிக்கும் நாட்டில் முத‌ல் புலிக‌ள் மீதான‌ த‌டைய‌ நீக்க‌ என்ன‌ ந‌ட‌வ‌டிக்கை எடுத்தார்....................இந்த‌ அறிக்கையை சாட்டி புலிக‌ள் மீதான‌ த‌டையை ம‌த்திய‌ அர‌சு நீடிக்கும்

மாவீர‌ர்க‌ளின் ஆன்மா ப‌ழ‌ நெடுமாற‌ன‌ சும்மா விடாது
உத‌வி செய்யாட்டியும்  உவ‌த்திர‌ம் செய்ய‌ வேண்டாம்...........

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ஊடகங்கள் அனைத்தும் இப்போது நடுவண் அரசில் இருக்கும் அமித் சா அவர்களது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது தவிர இலங்கையில் வீரகேசரியும் அப்படியே காரணம் அதன் உரிமையாளர் ஒரு இந்தியராவார். உளவுத்துறையோ அல்லது உள்துறயோ நடப்பு அரசுக்குச் சார்பான எந்தச்செய்திகளையும் வெளியிடவேண்டுமெனில் உருட்டி மிரட்டிச் சாதிக்கலாம் ஆனால் மிச்சம் இருந்தது என் டி ரி டீவி தான் அதனையில் அவர்கள் அம்பானியிடம் வாங்கிய கடனை அதானி அடைத்துவிட்டு மிரட்டி அதனை அதானி தனதாக்கிக்கொண்டார் அதாவது இந்திய பா ஜ க அரசை விமர்சிக்கும் ஒரே ஒரு செய்தி நிறுவனத்தையும் அடிமாட்டு விலைக்கு வாங்கிவிட்டார் அமித் சா.

சரி விடையத்துக்கு வருகிறேன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு கூட்டம் காசி ஆனந்தரால் ஒழுங்குசெய்யப்பட்டதாகக் கூறினாலும் அதை ஒழுங்கு செய்தது மேற்குமாடம் அதாவது வெளியுறவுத்துறையும் ராவுமாகும். 

இதில் கலந்துகொண்டவர்களில் காசியுடன் நெடுமாறனும் ஆகும் இன்னும் பலர் கலந்துகொண்டாலும் இவர்கள் அதில் முக்கியமானவர்கள் அதில் ஆட்டுக்குட்டி அண்ணாமலை பேசும்போது தனக்குமட்டும் காலத்தினூடே பயணம் செய்யும் வசதியிருந்தால் 2009 ல் பாஜகாவை பதவியில் இருக்கப்பண்ணியிருப்பேன் படுகொளையைத் தவிர்த்திருப்பேன் என ஆத்து ஆத்து என ஆத்தினவர். இக்கூட்டத்தின் பின் காசி ஆனந்தனைக் காவி ஆனந்தன் என விமர்சித்தவர்களும் உண்டு

இப்போ பதின்மூன்றை நிறைவேற்றுகிறன் பேர்வளி என இந்தியா அடம்பிடிக்குது விவலும் வீரதுங்கவும் எதிர்ப்புத் தெரிவிக்கினம் இவர்களுக்குப் பின்னால் மகிந்த நிற்கிறார் 

தலைவரை அவிட்டு விடப்போறம் எனச்சொன்னால் கொஞ்சம் பின்வாங்குவினம் என நினைத்து இப்படி கதை விடுகினம் தவிர தமிழ் நாட்டில் பாஜக கால் ஊன்ற வேண்டும் ஈரோட்டில் மாற்றம் ஏற்படவேண்டும்  இவைகள் அனைத்தையும் நிறைவேற்ற தினமும் ஏதாவது செய்யவேண்டியிருக்கு 

தலைவரது டீ என் ஏ அறிக்கை இருக்கு எனக்கூறுகிறார்கள் பாலச்சந்திரனது டீ என் ஏயை வைத்துக்கொண்டும் இவர்கள் சொல்லலாம் சரி டி என் ஏயை எவரது டீ என் ஏ மாதிரியுடன் ஒப்பிட்டுப்பார்ப்பது? வேலுப்பிள்ளையரதுடனா சிலவேளை வேலுப்பிள்ளையரது டீ என் ஏயையே தலைவரது எனக்கூறினால் யார் கண்டது 

ஆனால் எங்கேயோ உதைக்குது யார் யாருக்காக இதைக் கொழுத்திப்போட்டது எனத் தெரியவில்லை ஆனால் இந்திய உளவுத்துறை மீண்டும் தமிழர் தலையில் மிளகாய் அரைக்கப்பாக்குது.

அண்மையில் சுவிசில் தலவரது மனைவிக்குச் சுகமில்லை வேற இடத்துக்கு மாத்தவேண்டும் சிகிச்சை செய்ய காசு தேவை என மில்லியன் கணக்கில சேர்த்ததாக அறிந்தேன் யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம்பொன் .

பல்லாயிரக்கணக்கான பெடி பெட்டையளை போராட்டத்தில சாக விட்டுட்டு பதவிசா வெளிநாட்டுக்கு   உல்லாசம் அனுபவிக்க ஓடி வந்துவிட்டார் எனும் கதையை விட்டு பிரபாகர பிம்பத்தை உடைக்க செய்யப்படும் சதி எனவும் கூறுகிறார்கள்

அண்மையில் மாவீரர்கள் பெயருக்கு முன்னால் வரும் வீரவேங்கையை அப்புறப்படுத்துங்கோ எனவும் கனக்கபேர் வெளிக்கிட்டவையள் 

விடுதலைப்புலிகளதும் அவர்களது தலைமை மீதும் சேறு பூசவேண்டும் அதுவும் குறிப்பிட்ட காலத்துக்குள் என இந்தியா கங்கணம் கட்டிக்கொண்டு நிற்குது. பதுன்மூன்று கூழ்முட்டையுடன். 

22 minutes ago, விசுகு said:

தலைவர் இருக்கிறார் இல்லை என்பதை விட்டு விடுவோம்

தலைவர் மீண்டும் வந்தால் ஆயுதத்தை தான் கையில் எடுப்பார் என்று எதை வைத்து சொல்கிறீர்கள்??  

நமக்கே அறிவாயுதம் பற்றிய தெளிவிருக்கும்போது????

ஓம் ஓம் எங்களுக்கு அறிவாயுதம்பற்றிய தெளிவு இருந்திடபோகுது

அதுதானே கடியே காறித்துப்பிப்போட்டுது 

தமிழ் தாலைமைகளிடம் ஒற்றுமை இல்லை என அதாவது வாசுதேவ நாணயக்காரா.

போதைப்பொருளை விழுங்கிவிட்டு பள்ளிக்கூட விளையாட்டு மைதானத்தில மயங்கி விழுந்துகிடக்கிற நாளைய சந்ததிகளை உருவாக்கும் ........ போலீஸ் அதிகாரம் கேட்டுக்கொண்டே வடமராட்சியில் பதிண்ம வயதுச் சிறுமியை இரண்டு வருடமாகப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தும் தமிழ் போலீஸ்காரன் வாழும் சூழலில் அறிவாயுதமும் உயிராயுதமும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பையன்26 said:

பொது வாக்கெடுப்பு தான் த‌மிழீழ‌த்துக்கு இனி தீர்வு
அத‌ நோக்கி ப‌ய‌ணிப்ப‌து சிற‌ப்பு

த‌லைவ‌ர் வேண்டாம் என்று யாரும் சொல்ல‌ வில்லை
என் அள‌வுக்கு த‌லைவ‌ரை நினைத்து க‌ண் க‌ல‌ங்கின‌வை யாரும் இருக்க‌ மாட்டின‌ம்
நானும் த‌லைவ‌ர் பிற‌ந்த‌ கார்த்திகை மாத‌ம் 26இல் தான் பிற‌ந்தேன்

த‌லைவ‌ர் உயிருட‌ன் இருக்கிறார் என்றால் காணொளிய‌ வெளியிட‌ வேண்டிய‌து தானே , ஏன் ப‌ல‌ க‌ட்டுக் க‌தைக‌ள்.............இந்தியாவில் த‌லைவ‌ர் ம‌ற்றும் பொட்டு அம்மான் தேட‌ப் ப‌டும் லிஸ்ரில் இருக்கின‌ம்.............அப்ப‌டி வ‌சிக்கும் நாட்டில் இருந்து கொண்டு ப‌ழ‌ நெடுமாற‌ன் அறிக்கை விடுவ‌து த‌மிழ‌ர்க‌ளை முட்டாள் ஆக்க‌வா அண்ணா 

ப‌ழ‌நெடுமாற‌ன் வ‌சிக்கும் நாட்டில் முத‌ல் புலிக‌ள் மீதான‌ த‌டைய‌ நீக்க‌ என்ன‌ ந‌ட‌வ‌டிக்கை எடுத்தார்....................இந்த‌ அறிக்கையை சாட்டி புலிக‌ள் மீதான‌ த‌டையை ம‌த்திய‌ அர‌சு நீடிக்கும்

மாவீர‌ர்க‌ளின் ஆன்மா ப‌ழ‌ நெடுமாற‌ன‌ சும்மா விடாது
உத‌வி செய்யாட்டியும்  உவ‌த்திர‌ம் செய்ய‌ வேண்டாம்...........

எனது கேள்விக்கான பதில் இது அல்ல. நன்றி 🙏

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Elugnajiru said:

இந்திய ஊடகங்கள் அனைத்தும் இப்போது நடுவண் அரசில் இருக்கும் அமித் சா அவர்களது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது தவிர இலங்கையில் வீரகேசரியும் அப்படியே காரணம் அதன் உரிமையாளர் ஒரு இந்தியராவார். உளவுத்துறையோ அல்லது உள்துறயோ நடப்பு அரசுக்குச் சார்பான எந்தச்செய்திகளையும் வெளியிடவேண்டுமெனில் உருட்டி மிரட்டிச் சாதிக்கலாம் ஆனால் மிச்சம் இருந்தது என் டி ரி டீவி தான் அதனையில் அவர்கள் அம்பானியிடம் வாங்கிய கடனை அதானி அடைத்துவிட்டு மிரட்டி அதனை அதானி தனதாக்கிக்கொண்டார் அதாவது இந்திய பா ஜ க அரசை விமர்சிக்கும் ஒரே ஒரு செய்தி நிறுவனத்தையும் அடிமாட்டு விலைக்கு வாங்கிவிட்டார் அமித் சா.

சரி விடையத்துக்கு வருகிறேன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு கூட்டம் காசி ஆனந்தரால் ஒழுங்குசெய்யப்பட்டதாகக் கூறினாலும் அதை ஒழுங்கு செய்தது மேற்குமாடம் அதாவது வெளியுறவுத்துறையும் ராவுமாகும். 

இதில் கலந்துகொண்டவர்களில் காசியுடன் நெடுமாறனும் ஆகும் இன்னும் பலர் கலந்துகொண்டாலும் இவர்கள் அதில் முக்கியமானவர்கள் அதில் ஆட்டுக்குட்டி அண்ணாமலை பேசும்போது தனக்குமட்டும் காலத்தினூடே பயணம் செய்யும் வசதியிருந்தால் 2009 ல் பாஜகாவை பதவியில் இருக்கப்பண்ணியிருப்பேன் படுகொளையைத் தவிர்த்திருப்பேன் என ஆத்து ஆத்து என ஆத்தினவர். இக்கூட்டத்தின் பின் காசி ஆனந்தனைக் காவி ஆனந்தன் என விமர்சித்தவர்களும் உண்டு

இப்போ பதின்மூன்றை நிறைவேற்றுகிறன் பேர்வளி என இந்தியா அடம்பிடிக்குது விவலும் வீரதுங்கவும் எதிர்ப்புத் தெரிவிக்கினம் இவர்களுக்குப் பின்னால் மகிந்த நிற்கிறார் 

தலைவரை அவிட்டு விடப்போறம் எனச்சொன்னால் கொஞ்சம் பின்வாங்குவினம் என நினைத்து இப்படி கதை விடுகினம் தவிர தமிழ் நாட்டில் பாஜக கால் ஊன்ற வேண்டும் ஈரோட்டில் மாற்றம் ஏற்படவேண்டும்  இவைகள் அனைத்தையும் நிறைவேற்ற தினமும் ஏதாவது செய்யவேண்டியிருக்கு 

தலைவரது டீ என் ஏ அறிக்கை இருக்கு எனக்கூறுகிறார்கள் பாலச்சந்திரனது டீ என் ஏயை வைத்துக்கொண்டும் இவர்கள் சொல்லலாம் சரி டி என் ஏயை எவரது டீ என் ஏ மாதிரியுடன் ஒப்பிட்டுப்பார்ப்பது? வேலுப்பிள்ளையரதுடனா சிலவேளை வேலுப்பிள்ளையரது டீ என் ஏயையே தலைவரது எனக்கூறினால் யார் கண்டது 

ஆனால் எங்கேயோ உதைக்குது யார் யாருக்காக இதைக் கொழுத்திப்போட்டது எனத் தெரியவில்லை ஆனால் இந்திய உளவுத்துறை மீண்டும் தமிழர் தலையில் மிளகாய் அரைக்கப்பாக்குது.

அண்மையில் சுவிசில் தலவரது மனைவிக்குச் சுகமில்லை வேற இடத்துக்கு மாத்தவேண்டும் சிகிச்சை செய்ய காசு தேவை என மில்லியன் கணக்கில சேர்த்ததாக அறிந்தேன் யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம்பொன் .

பல்லாயிரக்கணக்கான பெடி பெட்டையளை போராட்டத்தில சாக விட்டுட்டு பதவிசா வெளிநாட்டுக்கு   உல்லாசம் அனுபவிக்க ஓடி வந்துவிட்டார் எனும் கதையை விட்டு பிரபாகர பிம்பத்தை உடைக்க செய்யப்படும் சதி எனவும் கூறுகிறார்கள்

அண்மையில் மாவீரர்கள் பெயருக்கு முன்னால் வரும் வீரவேங்கையை அப்புறப்படுத்துங்கோ எனவும் கனக்கபேர் வெளிக்கிட்டவையள் 

விடுதலைப்புலிகளதும் அவர்களது தலைமை மீதும் சேறு பூசவேண்டும் அதுவும் குறிப்பிட்ட காலத்துக்குள் என இந்தியா கங்கணம் கட்டிக்கொண்டு நிற்குது. பதுன்மூன்று கூழ்முட்டையுடன். 

இதில் ப‌ல‌ உண்மைக‌ள் அட‌ங்கி இருக்கு

2009தில் அடிச்ச‌து ப‌த்தாது என்று புது க‌தை திரை வ‌ச‌ன‌த்துட‌ன் ஆர‌ம்பிச்சு இருக்கின‌ம்..............த‌லைவ‌ரும் த‌லைவ‌ரின் ம‌னைவி ம‌க‌ள் மூன்று பேரும் ஜ‌ரோப்பாவில் இருக்கின‌மாம்..............ம‌ருத்து சில‌வுக்கு காசு தேவையாம்..............இந்த‌ துரோக‌ செய‌ல் செய்ப‌வ‌ர்க‌ள் தூர‌ நோக்கு பார்வையுட‌ன் பார்த்தா யார் என்று புரியும்

க‌ட‌சி மக‌னை த‌ள‌ப‌திக‌ளை விட்டு விட்டு த‌லைவ‌ர் ம‌னைவியோடும் ம‌க‌ளோடும் த‌ம்பிச்சாராம்

யார் யாருக்கோ எல்லாம் த‌லேல‌ இடி விழுது மாவீர‌ர்க‌ளின் ஆன்மாவை கேவ‌ல‌ப் ப‌டுத்தி குளிர் காயும் த‌றுத‌லைக‌ளின் த‌லையில் இடி விழுதில்லை

விப‌ர‌ம் தெரிந்த‌வ‌ர்க‌ளிட‌ம் இவ‌ர்க‌ளின் ப‌ருப்பு வேகாது

ப‌ழ‌ நெடுமாறனும் இன்றில் இருந்து துரோகி என்று அழைக்க‌ப் ப‌டுவார்.................😡

  • கருத்துக்கள உறவுகள்

இது குறித்து சீமானிடம் கேட்ட போது, கடந்த மாவீரர் நாளுக்கு முன்னர், லண்டனில் இருந்து ஒருவர், தலைவர் உயிருடன் இருக்கிறார் என்று அறிவிக்குமாறு கோரியதாகவும், தான், 'அப்படியா, அண்ணாவே என்னிடம் சொல்லட்டும், சொல்கிறேன்' என்று சொன்னதாக கூறினார்.

இரண்டு குரூப் இந்த விடயத்தில் நன்மை அடைய முயல்கின்றன. ஜேசு வருகிறார் என்பது போல தலைவர் வருகிறார். போராட்ட நிதி தாருங்கோ என்று கேட்க கூடிய ஒரு கூட்டம்.

அடுத்தது, இந்திய ரோ....

எது?

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, விசுகு said:

தலைவர் இருக்கிறார் இல்லை என்பதை விட்டு விடுவோம்

தலைவர் மீண்டும் வந்தால் ஆயுதத்தை தான் கையில் எடுப்பார் என்று எதை வைத்து சொல்கிறீர்கள்??  

நமக்கே அறிவாயுதம் பற்றிய தெளிவிருக்கும்போது????

உங்க‌ளுக்கான‌ கேள்விக்கு விள‌க்க‌ம் வ‌டிவாய் த‌ந்து விட்டேன்

ச‌ரி அதே கேள்விய‌ உங்க‌ளிட‌ம்  கேட்க்கிறேன் த‌லைவ‌ர் வ‌ந்து க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் சாதிக்க‌ முடியாத‌தை இனி எதை சாதிப்பார்

குழ‌ந்தை பிள்ளை த‌ன‌மாய் கேள்வி கேட்க்காதைங்கோ....................உங்க‌ளுக்கே தெரியும் 2009 மே 18 அந்த‌ கால‌ப் ப‌குதியில் த‌லைவ‌ர் இற‌ந்து விட்டார் என்று................

த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்ன‌ முடிவு எடுக்க‌ கூடிய‌வ‌ர் என்று த‌லைவ‌ரின் போராட்ட‌ கால‌ செய‌ல்க‌ள் வெளிச்ச‌ம் போட்டு காட்டும்

இந்திய‌ன் ஆமிக்கு எதிரா கொரிலா தாக்குத‌ல் செய்த‌ மாதிரி ஏதாவ‌து ஒன்றில் இற‌ங்கி இருப்பார்

நாம் செய்ய‌ வேண்டிய‌து ஒன்றே ஒன்று தான் அந்த‌ மாபெரும் த‌லைவ‌ருக்கு வீர‌ வ‌ண‌க்க‌ம் செலுத்தி அவ‌ரின் தியாக‌த்தை அடுத்த‌ ச‌ந்த‌தி பிள்ளைக‌ளுக்கு எடுத்து சொல்ப‌து...............அது தான் அந்த‌ மாபெரும் த‌லைவ‌ருக்கு நாம் செய்யும் ந‌ன்றிக் க‌ட‌ன் 

14 minutes ago, Nathamuni said:

இது குறித்து சீமானிடம் கேட்ட போது, கடந்த மாவீரர் நாளுக்கு முன்னர், லண்டனில் இருந்து ஒருவர், தலைவர் உயிருடன் இருக்கிறார் என்று அறிவிக்குமாறு கோரியதாகவும், தான், 'அப்படியா, அண்ணாவே என்னிடம் சொல்லட்டும், சொல்கிறேன்' என்று சொன்னதாக கூறினார்.

இரண்டு குரூப் இந்த விடயத்தில் நன்மை அடைய முயல்கின்றன. ஜேசு வருகிறார் என்பது போல தலைவர் வருகிறார். போராட்ட நிதி தாருங்கோ என்று கேட்க கூடிய ஒரு கூட்டம்.

அடுத்தது, இந்திய ரோ....

எது?

அண்ண‌ன் சீமான் இந்த‌ வ‌லைக்குள் விழாம‌ தெளிவாய் இருக்கிறார்........................

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Nathamuni said:

இது குறித்து சீமானிடம் கேட்ட போது, கடந்த மாவீரர் நாளுக்கு முன்னர், லண்டனில் இருந்து ஒருவர், தலைவர் உயிருடன் இருக்கிறார் என்று அறிவிக்குமாறு கோரியதாகவும், தான், 'அப்படியா, அண்ணாவே என்னிடம் சொல்லட்டும், சொல்கிறேன்' என்று சொன்னதாக கூறினார்.

இரண்டு குரூப் இந்த விடயத்தில் நன்மை அடைய முயல்கின்றன. ஜேசு வருகிறார் என்பது போல தலைவர் வருகிறார். போராட்ட நிதி தாருங்கோ என்று கேட்க கூடிய ஒரு கூட்டம்.

அடுத்தது, இந்திய ரோ....

எது?

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பையன்26 said:

1) ச‌ரி அதே கேள்விய‌ உங்க‌ளிட‌ம்  கேட்க்கிறேன் த‌லைவ‌ர் வ‌ந்து க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் சாதிக்க‌ முடியாத‌தை இனி எதை சாதிப்பார்

2)குழ‌ந்தை பிள்ளை த‌ன‌மாய் கேள்வி கேட்க்காதைங்கோ...................

1) அதைத்தான் கேட்டேன் 

(இதன் அர்த்தம் பிரபாகரன் இனி வேண்டாம் என்பது தானே தம்பி??)

நேரடியாக பதில் சொல்லுங்கள்

2) எனக்கு மரியாதை என்பது உயிர். நன்றி. வணக்கம் 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

1) அதைத்தான் கேட்டேன் 

(இதன் அர்த்தம் பிரபாகரன் இனி வேண்டாம் என்பது தானே தம்பி??)

நேரடியாக பதில் சொல்லுங்கள்

2) எனக்கு மரியாதை என்பது உயிர். நன்றி. வணக்கம் 

யதார்தத்தினை பார்த்தால், அவர் இருந்து மீண்டும் வந்தாலும், முன்னர் போல இயங்க சந்தர்ப்பம் இல்லை என்பது எனது கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

1) அதைத்தான் கேட்டேன் 

(இதன் அர்த்தம் பிரபாகரன் இனி வேண்டாம் என்பது தானே தம்பி??)

நேரடியாக பதில் சொல்லுங்கள்

2) எனக்கு மரியாதை என்பது உயிர். நன்றி. வணக்கம் 

க‌ள‌ நில‌வ‌ர‌த்தை ப‌ற்றி க‌தையுங்கோ நான் எங்கு சொன்னேன் த‌லைவ‌ர் வேண்டாம் என்று

இல்லாத‌ த‌லைவ‌ரை இருக்கு என்று ஏன் அந்த‌ ம‌னுஷ‌னை கேவ‌ல‌ப் ப‌டுத்துர‌ கூட்ட‌த்தோடு நீங்க‌ளும் சேர்ந்து நின்று த‌லைவ‌ர் வேனுமா வேண்டாமா என்று கேட்ட‌தையே தொட‌ர்ந்து கேட்க்க‌ பையித்திய‌ம் பிடிக்குது

இப்ப‌டியான‌ கேலி கூத்துக்கு நேர‌ம் ஒதுக்குவ‌தை விட‌ அந்த‌ மாபெரும் த‌லைவ‌ருக்கு த‌மிழீழ‌த்தை அடைந்து அதை த‌லைவ‌ருக்கு ச‌மர்பியுங்கோ............இனி த‌ய‌வு செய்து என்ன‌ட்டை த‌லைவ‌ர் வேனுமா வேண்டாம‌ என்று கேட்க்க‌ வேண்டாம்

த‌லைவ‌ரின் புக‌ழை திய‌காத்தை அடுத்த‌ ச‌ந்த‌தி பிள்ளைக‌ளுக்கு எடுத்து சொல்ல‌ முய‌லுங்கோ

ந‌ன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பையன்26 said:

என்னைப்பற்றிய மிகத் தவறான புரிதலும் இங்கே என்னால் எழுதப்பட்ட விடயங்களை மிகத் தவறான வாசித்தலும் வகுப்பெடுப்பும். 

நன்றி வணக்கம் 

Edited by விசுகு
எழுத்துப்பிழை

அண்ணாமலையார் ஊரில் நிற்கும் போது இந்தச் செய்தி வெளியாகியுள்ளது. அடிக்கடி இந்திய அமைச்சர்கள், பா.ஜ.க வின் பிரமுகர்கள் ஊருக்கு வந்து போவதே ஒரு பெரும் சதித் திட்டத்தின் அங்கங்கள் தான். 

நெடுமாறன் எடுப்பார் கைப்பிள்ளை. அறளை வரும் வயதில் தானறியாமலேயே இந்த சதித்திட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி இருப்பார்.

RAW & RW இணைந்து நடாத்தும் சதி 

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Nathamuni said:

யதார்தத்தினை பார்த்தால், அவர் இருந்து மீண்டும் வந்தாலும், முன்னர் போல இயங்க சந்தர்ப்பம் இல்லை என்பது எனது கருத்து.

2009க்கு முத‌ல் ஒரு க‌ருணா ஒரு ட‌க்ள‌ஸ் தான் இருந்தாங்க‌ள்
இப்போது ப‌ல‌ க‌ருணாக்க‌ள் ப‌ல‌ ட‌க்ள‌ஸ்சுக‌ள்

என்ன‌ தான் பிலான்  போட்டு க‌ள‌த்தில் குதிச்சாலும் அழிவு எம‌க்கு தான்..............

அப்ப‌டி த‌மிழீழ‌ம் வேண்டி க‌ள‌த்தில் குதிச்சாலும் ஏதும் வல்ல‌ர‌சு நாட்டின் உத‌வியுட‌ன் தான் குதிக்க‌ முடியும்.............க‌ள‌த்தில் குதிக்க‌ முத‌ல் துரோகிய‌லை போட்டுத் த‌ள்ள‌னும்..................

ஆனால் என் ப‌தில் இனி த‌மிழீழ‌த்துக்கு அறிவாயுத‌ம் தான் சரி.................பொது வாக்கெடுப்பு ஏதும் வ‌ல்ல‌ர‌சு நாட்டின் துனையுட‌ன் ந‌ட‌ந்து த‌மிழீழ‌ம் அடைவ‌து தான் சிற‌ந்த‌ வ‌ழி.................

15 minutes ago, நிழலி said:

அண்ணாமலையார் ஊரில் நிற்கும் போது இந்தச் செய்தி வெளியாகியுள்ளது. அடிக்கடி இந்திய அமைச்சர்கள், பா.ஜ.க வின் பிரமுகர்கள் ஊருக்கு வந்து போவதே ஒரு பெரும் சதித் திட்டத்தின் அங்கங்கள் தான். 

நெடுமாறன் எடுப்பார் கைப்பிள்ளை. அறளை வரும் வயதில் தானறியாமலேயே இந்த சதித்திட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி இருப்பார்.

RAW & RW இணைந்து நடாத்தும் சதி 

உங்க‌ளுக்கு இருக்கும் புரித‌ல் ப‌ல‌ கூ முட்டைக‌ளுக்கு இல்லை

யூடுப்பை எட்டியும் பார்க்க‌ முடிய‌ல‌................அவ‌ர்க‌ளின் எழுத்து மூல‌ம் அவ‌ர்க‌ளின் அறியாமையை தெரிந்து கொள்ள‌க் கூடிய‌தாய் இருக்கு.............. 

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

அண்ணாமலையார் ஊரில் நிற்கும் போது இந்தச் செய்தி வெளியாகியுள்ளது. அடிக்கடி இந்திய அமைச்சர்கள், பா.ஜ.க வின் பிரமுகர்கள் ஊருக்கு வந்து போவதே ஒரு பெரும் சதித் திட்டத்தின் அங்கங்கள் தான். 

நெடுமாறன் எடுப்பார் கைப்பிள்ளை. அறளை வரும் வயதில் தானறியாமலேயே இந்த சதித்திட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி இருப்பார்.

RAW & RW இணைந்து நடாத்தும் சதி 

வணக்கம் நிழலி 
இந்த அறிக்கை; அதன் பின்னணி, நோக்கம் என்ன? RAW அல்லது இதர கட்டமைப்புகள் இப்படியான செய்திகளை பரப்பி எதை சாதிக்க நினைக்கிறார்கள்? இதை இன்னும் தெளிவாக எழுதுவீர்கள் என்றால் சிறப்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.