Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் தன் தபால்கார நண்பரைச் சந்தித்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்ததால், நண்பர் தபால்காரரைப் பார்த்து, "உங்களைப் போல் வேலை பார்க்க வேண்டும்" என்றார்.

தபால்காரர், "ஏன்? என் வேலையில் அப்படி எதைக் கண்டு விட்டாய்?" என்றார்.

அதற்கு நண்பர், "சாலையில் பார்க்கும் எல்லோரும் உன்னைப் பார்த்து, எனக்கு ஏதாவது இருக்கா? என்று கேட்கிறார்கள். நீயும் அவர்களைப் பார்த்து "உங்களுக்கு ஒன்றும் இல்லை" என்கிறாய். அதைக் கேட்டு அவர்களும் கோபப்படுவதில்லை. மேலும் நல்லாப் பார்த்துச் சொல்லுங்க, எனக்கு ஏதாவது இருக்கா? என்று கேட்கிறாங்க. நீயும் "நல்லாத்தான் பார்த்துச் சொல்கிறேன். உங்களுக்கு ஒண்ணுமே இல்லை" என்கிறாய். அவர்களும் பேசாமல் சென்று விடுகிறார்கள். நான் யாரையாவது பார்த்து உங்களுக்கு ஒண்ணுமே இல்லை என்று சொல்ல முடியுமா? அதனால்தான் அப்படிச் சொன்னேன்" என்றார்.

-----------------------

ஒருவர் பல ஆண்டுகள் தபால்காரராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்று அமர்ந்திருந்தார். அவரைப் பார்க்க வந்திருந்த நண்பர், "உன்னைப் போல அரசாங்க வேலை பார்த்து ஓய்வு பெற கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்றார்.

அதற்கு அந்த தபால்காரர், " ஆமாம் நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும். தபால்காரன் வேலை ஒரு வேலையா? காலையில் தபால் ஆபிஸ்க்கு வருகிறவர்கள் "தபால்காரர் போயிட்டாரா?" என்று விசாரிக்கிறார்கள். அதாவது பரவாயில்லை... மாலையில் தபால் ஆபிஸ் வருபவர்கள் "என்ன எடுத்தாச்சா?" என்று விசாரிக்கிறார்கள்." என்று எரிச்சலோடு சொன்னார்.

:lol::lol:

  • Replies 1k
  • Views 155.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • *திருமணமாகிப் புதிதாக வீட்டுக்கு வந்த மருமகளிடம் மாமியார் சொன்னார்* "இந்த வீட்டுக்குன்னு சில வரைமுறை இருக்கும்மா. இது ஒர

  • குடித்துவிட்டு மனிசிக்கு அடிப்பவர் -- மது ஹிட்டர். குடித்துவிட்டு பிள்ளைகளுக்கு உதைப்பவர் - மது ஹிக்கர். குடித்து விட்டு சைட் அடிப்பவர் - மது நோக்கர். குடித்துவிட்டு நடனமாடுபவர் - மது ட

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

நித்தி போல நான் பணக்காரன் இல்லாமல் இருக்கலாம், பெரிய கார், பங்களா என்னிடம் இல்லைத்தான் ஆனால் உன்னை உயிருக்குயிராய் காதலிக்கிறேன்,உனக்காக உயிரையும் தருவேன்!

அதைப் பிறகு எடுக்கிறேன், இப்ப அந்த நித்தியை மட்டும் ஒரு முறை அறிமுகம் செய்து வையுங்கள் தயவு செய்து .... .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்: என்னை கல்யாணம் பண்ணிகிட்டா உங்களோட எல்லா துக்கத்துலயும் நான் பங்கெடுத்துகுவேன்!

ஆண்: சந்தோசம், ஆனா எனக்கு ஒரு பிரச்சனையும் இப்ப இல்லையே!

பெண்: என்னை நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கவே இல்லையே!

----------------------------------------------------------------------------------------------------------

மனைவி : என்ன பார்த்துகிட்டு இருக்கிங்க

கணவன்: ஒண்ணுமில்ல!

மனைவி : ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட(marrage certificate) பார்த்துகிட்டு இருக்கிங்க!

கணவன் : எங்கேயாவது எக்ஸ்பிரி டேட்(expire date) போட்டுருக்கானு பார்க்கிறேன்.!!

  • கருத்துக்கள உறவுகள்

தன் காதலி இறந்தபின்பும் அவருக்காக தாஜ் மகாலை கட்டினாரே..

அதைப்பற்றி என்ன நினைக்கின்றாய் என்று ஒரு ஆசிரியர் மாணவர்களிடம் கேட்டார்

உடன் பதில்வந்தது

ஒரு மாணவனிடமிருந்து

பழகிப்போச்சு சேர்

இறந்தபின்பும் அவர் அவளுக்காக செலவு செய்வதை நிறுத்த முடியவில்லை என்று.

Edited by விசுகு

தயவு செய்து வேலைநேரத்திலை மனிசிமார் ரெலிபோன் எடுக்கேக்கை எப்பிடி காய்வெட்டி விடுறதெண்டதையும் சொன்னியளெண்டால் நீங்கள் போற வழிக்கு புண்ணியமாய்ப்போகும் :(

ராங் நம்பர் எண்டுசொல்லி உடன லைன கட் பண்ணிவிடுங்கோ கு ச அண்ணே

  • கருத்துக்கள உறவுகள்

ராங் நம்பர் எண்டுசொல்லி உடன லைன கட் பண்ணிவிடுங்கோ கு ச அண்ணே

தன் குரலில் இதைச்சொல்லும் தைரியத்தை இறைவன் கொடுக்கட்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது ரஷ்யாவும், சீனாவும் அரசியல் ரீதியாக பகை பாராட்டியிருந்த நேரம். இரண்டு நாடுகளும் ஒன்றை ஒன்று ராணுவ பலத்தால் அழித்து விடுவதாக சவாலிட்ட சமயம். க்ரெம்லின் மாளிகைக்கு ஒரு பெரிய பார்சல் வருகிறது. ரஷ்ய அதிபர் பிரெஸ்னேவ் அதைத் திறக்கிறார். ஒரு பை முழுவதம் பீன்ஸ் விதைகள்.

அதோடு சீனாவின் மாவோவிடமிருந்து ஒரு கடிதம். "இப்படித்தான் படை படையாக உங்களை வந்து தாக்குவோம்" என்று கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது.

பிரெஸ்னேவ் உடனே பதிலுக்கு ஒரு பெரிய பையில் கோதுமை மாவை பார்சலில் சீனாவிற்கு அனுப்புகிறார். அதனுடன் இணைப்பாக ஒரு கடிதம். "இப்படித்தான் உங்கள் படையைப் பொடிப் பொடியாக்கி விடுவோம்”

*****

ஒரு அமெரிக்க ராணுவப் பயிற்சி முகாம். விமானப்படை வீரர்கள் விமானத்திலிருந்து பாரசூட் மூலம் கீழே குதிக்க வேண்டும்.

ஒரு வீரன் பதற்றத்துடன் சொன்னான். "தலைவரே, எனது பாரசூட் திறக்க மாட்டேன் என்கிறது"

தலைவர் சொன்னார். " கவலைப்படாதே! இது வெறும் பயிற்சிதானே!"

*****

கிழக்கு ஜெர்மனி வீரர்கள் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். பல ஆண்டுகள் பல நாடுகளுடன் போரிட்டு அவர்களுக்கு யார் நண்பர்கள், யார் விரோதிகள் என்பதிலேயே குழப்பம் இருந்தது. கமாண்டர் ஒரு வீரனைக் கூப்பிட்டு, "ஒரு அமெரிக்கன் ஒரு ரஷ்யன் இருவரைப் பார்த்தால் முதலில் யாரைச் சுடுவாய்?" என்று கேட்டார்.

இப்போது அமெரிக்கா விரோதியா, இல்லை.. ரஷ்யா விரோதியா எனத் தெரியாமல் குழப்பத்தில் இருந்த அந்த வீரன் "ரஷ்யனை" என்றான்.

கமாண்டர், " நீ ஒன்றுமே தெரியாத முட்டாளாயிருக்கிறாயே! நான் உனது இடத்தில் இருந்தால் அமெரிக்கனைத்தான் கொல்வேன்" என்றார்.

அந்த வீரன், "அப்படியே இருந்தாலும் நான் கொல்வதற்கு அந்த ரஷ்ய வீரன் இருப்பான்.. இல்லையா?" என்று அப்பாவித்தனமாகச் சொன்னான்.

*****

ஒரு முறை ஹங்கேரிய ஜனாதிபதி ஜனோஸ் கத்தாரும் ரஷ்ய அதிபர் பிரெஸ்னேவும் தத்தமது நாட்டு வீரர்கள்தான் சிறந்தவர்கள் என்று ஒருவருக்கொருவர் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

ரஷ்ய அதிபர், "சோவியத் வீரர்கள்தான் சிறந்தவர்கள். சோவியத் வீரன் முதலில் சிந்திக்கிறான், பிறகு செயல்படுகிறான்" என்று கூறினார்.

ஹங்கேரி அதிபர், "இல்லை.. இல்லை. எங்கள் நாட்டு வீரர்கள்தான் சிறந்தவர்கள். எங்கள் வீரர்கள் முதலில் செயல்படுவார்கள், பிறகுதான் சிந்திப்பார்கள்" எனக் கூறினார்.

அவர்கள் இருவரும் இப்படியே விவாதித்துக் கொண்டிருக்க, இரண்டு நாட்டு வீரர்களையும் அழைத்து சோதித்துப் பார்த்துவிடுவது எனப் பந்தயம் கட்டினார்கள்.

பிரஸ்னேவ் தனது வீரனை அழைத்து, "வீரனே, இதோ இங்கிருப்பது ஹங்கேரிய ஜனாதிபதி ஜனோஸ் கத்தார். அவரை சென்று தாக்கு" என்றார். சோவியத் வீரன் சற்றே யோசித்து, "இல்லை, என்னால் நம் நாட்டு நண்பரைத் தாக்க முடியாது" என்றான். ஹங்கேரிய ஜனாதிபதி தனது வீரனிடம் "இதோ, இங்கிருப்பது சோவியத் அதிபர் ப்ரெஸ்னேவ். அவரை உடனே சென்று பலமாகத் தாக்கு" என்றார். அந்த வீரனும் சற்றும் யோசிக்காமல் உடனே பிரஸ்னேவை பலமாகத் தாக்கியதில் அவர் சற்று தள்ளிக் கீழே விழுந்தார்.

அந்த வீரன் கதவு வரை சென்று ஏதோ சிந்திக்கத் தொடங்கினான். தான் பந்தயத்தில் வெற்றி பெற்றோம் என்ற களிப்பில் இருந்த கத்தார், அந்த வீரன் போகாமல் இருப்பதைப் பார்த்து, "ஏன் நிற்கிறாய் போகாமல்? என்ன சிந்தனை உனக்கு? என்னைப் பந்தயத்தில் ஜெயிக்க விடமாட்டாய் போலிருக்கிறதே" என்றார் எரிச்சலுடன்.

அந்த வீரன் சொன்னான், "இல்லை.. தாக்கியது போதுமா அல்லது உதைக்கவும் வேண்டுமா" என்றுதான் யோசிக்கிறேன் என்றான்.

*****

ஒரு ரஷ்ய உளவு விமானம் அலாஸ்கா அருகில் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதிலுள்ள விமான ஓட்டியை அமெரிக்க ராணுவத்தினர் பிடித்து விசாரித்தனர். விசாரணை செய்த அமெரிக்க அதிகாரி ரஷ்ய விமான ஓட்டியிடம், ரஷ்யப் போர் விமானம் மிக் 29ஐப் பற்றி விளக்கிக் கூறுமாறு கேட்டார். எத்தனை முறை திரும்பத் திரும்பக் கேட்டாலும் அந்த விமான ஓட்டி தனக்குத் தெரியாது என்றே பதிலளித்தான். அடித்து உதைத்துக் கேட்டும் பிரயோசனமில்லை. அமெரிக்கர்களே களைத்துப்போய் அந்த விமான ஓட்டியை ரஷ்யாவிற்கே திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

ரஷ்யா சென்ற அவன் தனது சக விமான ஓட்டிகளிடம் சொன்னான். "மிக் 29ஐப் பற்றி நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். அது தெரியாமல் அமெரிக்கப் படைகளிடம் பிடிபட்டால் நன்றாக உதை வாங்க வேண்டி வரும். எனக்கு அது பற்றி தெரியாததால் என்னை நொறுக்கியே விட்டார்கள்"

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னன் : அமைச்சரே நெல்லாடிய நிலமெங்கே சொல்லாடிய சபை எங்கே ?

அமைச்சர் : நிலமெல்லாம் பிளாட் போட்டாச்சு . சபையெல்லாம் கல்யாண மண்டபமா மாத்தியாச்சு மன்னா !

நோயாளி : ரொம்ப காலமா இங்கே நன் சிகிச்சைக்கு வந்துகிட்டிருக்கேன் டாக்ட்டர்

ஒன்னும் சரியானபாடா இல்லை !

மருத்துவர் எவ்வளவு காலமா ?

நோயாளி : நீங்க கம்பவுண்டரா இருந்த காலத்துலேர்ந்து .

தொண்டன் 1 :

என்னையா இது நம்ம தலைவரை இப்படி அடிச்சு கொண்டு வந்து போட்டுருக்காங்க ! ??

தொண்டன் 2 :

பின்ன என்னையா யோரோ கூப்பிட்டாங்கனு சொல்லி . காதலர்கள் ஊரைவிட்ட ஓடுவதற்காக கொடி அசைத்து தொடக்கி வைத்தாராம் நம்ம தலைவர் .

இந்த போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கிற எல்லா போலீஸும் கோபமா இருக்காங்களே ஏன் ! ?

சுவத்தில் யாரோ . ஒவ்வொரு திருடனோட வெற்றிக்குப் பின்னாடியும் ஒரு போலீஸ்காரர் உள்ளார்னு எழுதி வெச்சுட்டாங்களாம் ! :wub:

மன்னனிடம் அமைச்சர் மன்னா நமது அரசியை எதிரிக்கு பிடித்திருக்கிறதாம் .

மன்னன் சொன்னார் ஆஹா நம்ம அரசி லக லக லக.கூட்டதிற்கே அரசியினு அவனுக்கு தெரியாது போல பாவம் !

ஓலை கொண்டுவரும்போதே புறாக்களின் மொத்த எடையையும் நிகர எடையையும் கணினி மூலமாகக் கணித்துச் சொல்கிறாரே . யாரவர் ?

அவர்தான் அரசவை புறாகிராம் மேனேஜராம் !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஆளுக்கு வைர வியாபாரத்துல ஏகப்பட்ட நஷ்டம் வந்து இப்ப அவரோட வியாபாரமே தலைகீழா மாறிப்போச்சு.

எப்படி ?

இப்ப அவரு ரவை வியாபாரம் பண்றாரு.

---------------------------------------------------------------------

என்ன உங்க பையன் உங்களையே கோவிந்தான்னு கூப்பிடுறான் ?

நான்தான் சொன்னேனே பேர் சொல்ல ஒரு பிள்ளை இருக்கான்னு. ..

******

மனுசனுக்கு வர்ற வியாதி யானைக்கு வராதுன்னு சொல்றீங்களே, எப்படி ?

மனுஷக்கால் வியாதி யானைக்கு எப்படி வரும் ?

******

என்னடா இது, வெற்றியின் முதல் படியில ஏறிட்டதா சொல்றே! எல்லா சப்ஜெக்டலயும் பெயில் ஆகியிருக்கியே!

நீங்க தானேப்பா சொன்னீங்க, தோல்விதான் வெற்றிக்கு முதல் படின்னு!

******

தம்பி, உங்க பக்கத்து வீட்டுப் பெண் பாமாவை எங்க பையனுக்குக் கேட்கலாம்னு இருக்கோம், பொண்ணு எப்படி?

நான் காதலிச்ச வரைக்கும், அந்தப் பொண்ணு நல்ல பொண்ணுதான் சார்.

******

”என் பொண்டாட்டி நில்லுனா நிப்பா; உட்காருன்னா உட்காருவா.. தெரியுமா!”

”என் பொண்டாட்டியும்தான் மச்சி. நேத்து நைட்டு கூட எனக்கு முன்னாடி கையைக் கீழே ஊன்றி

முழங்காலை மண்டி போட்டு உட்கார்ந்தா.. தெரியுமா!”

”ஓவ்... வெரி குட்! அப்புறம் என்ன சொன்னாங்க..?”

”டேபிளுக்கு அடியில ஒளியாம.. ஆம்பள மாதிரி வெளியே வந்து திருடன் கூட சண்டை போடுய்யா..

அப்படினு சொன்னா!!” :rolleyes:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பில் கேற்ஸ் கார் விபத்து ஒன்றில் இறந்து விட்டார்.அப்போ கடவுளுக்கு ஒரு பிரச்சனையாகி விட்டது இவரை நரகத்துக்கு அனுப்புவதா அல்லது சொர்க்கத்துக்கு அனுப்புவதா என.

கடவுள் பில் கேற்சுடன் (ஆவி) பேசினார்.நீங்கள் உலகிற்கு எவ்வளவு உதவி செய்துள்ளீர்கள்.ஒவ்வொரு வீட்டிலும் கொம்பியூட்டர் இயங்க உங்களின் தொண்டு அளப்பரியது.எனவே சொர்க்கத்துக்கு செல்வதோ, நரகத்துக்கு செல்வதோ என நீங்களே முடிவு செய்யுங்கள் என்று கடவுள் கூறினார்.

பில் கடவுளிடம் எனக்கு இரு இடங்களையும் காட்ட முடியுமா என கேட்டார்? கடவுள் நிச்சயமாக என கூறி முதலில் நரகத்துக்கு கூட்டி சென்றார். நரகம் மிக அழகாக இருந்தது.நீலக்கடலும் அழகான வெள்ளை மணல் கடற்கரையும் காணப்பட்டது. பல அழகான பெண்கள் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்தார்கள். பில்லுக்கு மிகவும் பிடித்து விட்டது.என்றாலும் சொர்க்கத்தையும் தனக்கு காட்டும் படி கேட்க கடவுள் அங்கும் கூட்டிச்சென்றார்.அங்கு உயரமான இடமாகவும் அமைதியான இடமாகவும் சில பறவைகளின் சத்தத்தையும் கேட்டார்.ஆனால் அவருக்கு நரகம் பிடித்து கொண்டது.கடவுளிடம் நான் நரகத்துக்கு தான் போக போகிறேன் என கூற அப்படியே ஆகட்டும் என கடவுள் கூறி மறைந்தார்.

இரண்டு கிழமையின் பின் கடவுள் பில் என்ன செய்கிறார் என பார்க்க நரகத்துக்கு செல்கிறார். அங்கு பில் வீதியோரத்தில் யாராலோ நன்றாக சாத்தப்பட்டு வீதியோரத்தில் இரத்தம் ஒழுக முனகிய படி கிடந்தார். கடவுளும் என்னப்பா நரகத்தில் என்ன நடந்தது என கேட்க பில் தன்னிடம் உள்ளதை யாரோ பறித்து விட்டு தாக்கி விட்டு சென்று விட்டதாக அழாக்குறையாக சொன்னார்.பின்னர் கடவுளிடம் அப்போ நீங்கள் காட்டிய அழகான கடற்கரை,வெள்ளை கடற்கரை மண் , அழகான பெண்கள் எல்லாம் எங்கே என்று கேட்க கடவுள் அது ஸ்கிறீன் சேவர்(screen saver) என்றார். :rolleyes::D

  • கருத்துக்கள உறவுகள்

உங்க பையன் என்னை எருமை மாடுன்னு சொல்றான்

ஏன்டா பெரியவங்களை பேர் சொல்லி கூப்பிடக் கூடாது என்று எத்தனை தடவை சொல்லி இருக்கேன்.

என் பொண்டாட்டி பூரிக்கட்டையால் அடிக்கிறாள் என என் மாமனாரிடம் சொல்லனும்னு போனேன்

அப்புறம்?

அங்கே என் மாமனார் உலக்கையால் அடி வாங்குவதை பார்த்து விட்டு ஓடி வந்து விட்டேன்.

ஆசிரியர்;ஒரு மணி நேரம் பாடம் நடத்தினேனே உங்களுக்கு என்ன புரிந்ததது?

மாணவர்;பொறுமையாய் இருப்பது எப்படின்னு சார்.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு கிழமையின் பின் கடவுள் பில் என்ன செய்கிறார் என பார்க்க நரகத்துக்கு செல்கிறார். அங்கு பில் வீதியோரத்தில் யாராலோ நன்றாக சாத்தப்பட்டு வீதியோரத்தில் இரத்தம் ஒழுக முனகிய படி கிடந்தார். கடவுளும் என்னப்பா நரகத்தில் என்ன நடந்தது என கேட்க பில் தன்னிடம் உள்ளதை யாரோ பறித்து விட்டு தாக்கி விட்டு சென்று விட்டதாக அழாக்குறையாக சொன்னார்.பின்னர் கடவுளிடம் அப்போ நீங்கள் காட்டிய அழகான கடற்கரை,வெள்ளை கடற்கரை மண் , அழகான பெண்கள் எல்லாம் எங்கே என்று கேட்க கடவுள் அது ஸ்கிறீன் சேவர்(screen saver) என்றார். :rolleyes::D

பில்லுக்கே அல்வாவா? அதுவும் நல்லாத்தான் இருக்கு நுணாவிலான் :lol:

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

அது ஸ்கிரீன் சேவர் ................ :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஆளுக்கு வைர வியாபாரத்துல ஏகப்பட்ட நஷ்டம் வந்து இப்ப அவரோட வியாபாரமே தலைகீழா மாறிப்போச்சு.

எப்படி ?

இப்ப அவரு ரவை வியாபாரம் பண்றாரு.

அந்த ஆளுக்கு ரவை வியாபாரத்தில் ஏகப்பட்ட லாபம் வந்து இப்ப அவரோட வியாபாரமே தலைகீழா மாறிப்போச்சு.

எப்படி?

இப்ப அவர் வைர வியாபாரம் பண்றாரு! :o

டீச்சர் தன் மாணவர்களை பார்த்து, “உங்க நினைவில் இருக்கிற மறக்க முடியாத சம்பவத்தை பற்றி ஒரு கட்டுரை எழுது என கேட்க, வெங்கிட்டு எழுந்து ‘டீச்சர் எங்க அப்பா போன வாரம் கிணத்துல விழுந்திட்டாரு..” என்றான்

டீச்சர் பதறியபடி “ அப்புறம் என்ன ஆச்சு? இப்ப நல்லாத்தானே இருக்காரு.?” என்று கேட்க

வெங்கிட்டு : ‘அப்படித்தான் நினைக்கிறேன். ர...ெண்டு நாளா ஹெல்ப், ஹெல்ப்புன்னு கிணத்துலேர்ந்து சத்தம் வரலியே..” என்றான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நோயாளி: டாக்டர் என் கால் நல்லா போயிடுமா டாக்டர்

டாக்டர்: இன்னும் மூனு நாளைக்குள்ளே உங்க கால் சரியாயிடும்

நோயாளி: நான் நடக்கலாமா

டாக்டர்:நல்லா நடக்கலாம். நான் கொடுத்திருக்கும் மருந்த மறக்காம தடவுங்க

நோயாளி: இந்த மருந்த தடவுனா கால் வலி போயிடுமா டாக்டர் நான் அப்புறமா ஓடலாமா.

டாக்டர்: தாராளமா

நோயாளி: இந்த மருந்துக்கு அத்தனை பவரா..நான் சைக்கிள் ஓட்டலாமா.டாக்டர்:

ம்..ஓட்டலாமே...

நோயாளி: ஏன்னா எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது..அதான் கேட்டேன்.

டாக்டர்: ......???????? :wub::unsure:

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சார், நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க?

கல்யாணத்துக்கு முன்னாடியா, பின்னாடியா?

கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லுங்களேன்.

கல்யாணத்துக்கு முன்னாடி, முருகர் தான் ரொம்ப புடிக்கும்.

அப்போ பின்னாடி.

அது ஏன் கேக்குறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேண்டாத தெய்வம் இல்லை.

:):unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சார், நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க?

கல்யாணத்துக்கு முன்னாடியா, பின்னாடியா?

கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லுங்களேன்.

கல்யாணத்துக்கு முன்னாடி, முருகர் தான் ரொம்ப புடிக்கும்.

அப்போ பின்னாடி.

அது ஏன் கேக்குறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேண்டாத தெய்வம் இல்லை.

:):unsure:

:unsure::lol: :lol: :lol:

செல்லம் இண்டைக்கு பஸ்ஸில உன்னைமாதிரியே ஒலு பொண்ணை பார்த்தேன்

ஹை.. நிஐமாவா.. ம்ம்.. அப்புறம்..?

அப்புறமென்ன.. ஐயோண்ணு பயந்து இறங்கி வேற பஸ்ஸில ஏறிட்டன்

  • கருத்துக்கள உறவுகள்

சார், நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க?

கல்யாணத்துக்கு முன்னாடியா, பின்னாடியா?

கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லுங்களேன்.

கல்யாணத்துக்கு முன்னாடி, முருகர் தான் ரொம்ப புடிக்கும்.

அப்போ பின்னாடி.

அது ஏன் கேக்குறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேண்டாத தெய்வம் இல்லை.

:o:lol:

:):D:D:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிஸ்டர். ர‌மேஷ் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராய் காதலித்து வந்தார்.

அவளும் ர‌மேஷ் மீது அன்பாகவே இருந்தாள். இருவரும் சேர்ந்து சுற்றாத இடம் இல்லை. போகாத தியேட்டர் இல்லை. சுமார் 5 ஆண்டுகள் இந்தத் தொடர்பு நீடித்தது. ஆனால் ர‌மேஷ் -ஐ காதலிக்கிறாளா என்பது கொஞ்சம் சந்தேகமாகவே இருந்தது.

ர‌மேஷ் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர அவளை நேரடியாகவே கேட்டுவிடுவது என்று முடிவு செய்தார். ஆனாலும் முகத்துக்கு முகம் கேட்க தயங்கிய ர‌மேஷ், தொலைபேசியில் கேட்டுவிடுவது என்று திட்டமிட்டார். அதன்படி அவள் வீட்டுக்கு போன் செய்ய, அவளே எடுத்தாள்..

ர‌மேஷ் : ஹலோ.. அபித குஜாம்பிகைதானே..?

அபி : ஆமாம்.. அபிதான் பேசறேன்.. என்ன உன் குரல் நடுங்கறாப்பல தெரியுது..?

ர‌மேஷ் : ஹி..ஹி.. நான் உன்னை காதலிக்கிறேன்..

அபி : தெரியும்..

ர‌மேஷ் : நீ என்னைக் காதலிக்கிறாயா..?

அபி : அதில் என்ன சந்தேகம்..?

ர‌மேஷ் : கடவுளுக்கு நன்றி..! அப்போ நாம திருமணம் செய்துக்கலாமா..?

அபி : நிச்சயமா..!

ர‌மேஷ் : எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு சொல்லேன் ப்ளீஸ்..

அபி : முதல்ல உன் பேர் என்னன்னு சொல்லு.. நானும் அப்போலேருந்து கெஸ் பண்ணறேன்.. எவன்னே புரியல..!

:unsure::)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திடீரென பூகம்பம் ஏற்படுகிறது. இதில் ஒரு பெண் கீழே விழுந்துவிடுகிறாள். பிறகு வீட்டிற்கு வரும் கணவனிடம் நடந்ததை விளக்குகிறார்.

மனைவி: - என்னங்க.. திடீர்னு பூகம்பம் ஏற்பட்டுச்சுங்க.. நான் அப்படியே கீழ விழுந்துட்டேன்.

கணவன் :- நல்லா யோசிச்சுப் பாரு... பூகம்பம் வந்த பிறகு நீ கீழ விழுந்தியா இல்ல நீ விழுந்த பிறகு பூகம்பம் வந்துச்சா? :rolleyes:

****************************************************

கணவன் : நம்ம வீட்டுக்கு வந்த திருடன புடுச்சு அடிச்சு, உதச்சு அவன் கை காலெல்லாம் முறிச்சியே, எங்கேந்து வந்தது உனக்கு இ‌வ்ளோ தைரியம்

மனைவி : நான் திருடன்னு நினைச்சு அடிக்கலீங்க, நீங்க தான் குடிச்சுட்டு வந்திருக்கீங்கன்னு நினைச்சுதான்..

கணவன் : ?!?!?!

*************************************************

மனை‌வி : எ‌ன்ன‌ங்க இ‌ப்படியே நா‌ன் உ‌ங்களு‌க்கு ‌தினமு‌ம் சம‌ச்‌சி‌ப் போ‌ட்டு‌க்‌கி‌ட்டு இரு‌ந்தா என‌க்கு எ‌ன்னதா‌ன் ‌கிடை‌க்க‌ப் போகுது சொ‌ல்லு‌ங்க...

கணவ‌ன் : இ‌ப்படியே சம‌ச்‌சி‌க்‌கி‌ட்டு இரு‌ந்தா ‌கூடிய ‌சீ‌க்‌கிர‌ம் எ‌ன்னோட எ‌ல்ஐ‌சி பண‌ம் உன‌க்கு ‌கிடை‌ச்‌சிடு‌ம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விமலா: "ஏய் கலா, நான் உன் திருமணத்திற்கு

வரமுடியலடி. அந்த ஆண்கள் பக்கத்தில்

உட்கர்ந்திருக்கிறாங்கள்ல அவங்கள்ல

உன் கணவர் யாருன்னு காட்டேன்"

கலா: "அந்த மூனாவது வரிசையில, புளு பேண்ட் போட்டு

வெள்ளை சட்டையை இன் பண்ணிக்கிட்டு..."

விமலா: "ஆமாம்"

கலா: "கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு..."

விமலா: "ஆமாம்"

கலா: "நல்லா முரட்டு மீசை வெச்சிக்கிட்டு..."

விமலா: "ஆமாம்"

கலா: "தலையில் சுருள் முடியோட..."

விமலா: "ஆமாம்"

கலா: "கழுத்தில கோல்ட் செயின் போட்டுக்கிட்டு..."

விமலா: "ஆமாம்"

கலா: " ஷூ போட்டுக்கிட்டு, உட்கார்ந்திருக்காரே..."

விமலா: "ஆமாம்"

கலா: "நல்லா நடிகர் அஜீத் கலர்ல..."

விமலா: "ஆமாம்"

கலா: "அவருக்கு வலப்பக்கம் உட்கார்ந்திருக்கிறவருதான்

என் கணவர்!!!"

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
77562393.jpg

Edited by nunavilan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.