Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“13” முழுமையாக அமுலாக இடமளியோம்! – பிக்குகள் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“13” முழுமையாக அமுலாக இடமளியோம்! – பிக்குகள் எச்சரிக்கை

IMG-20230219-072820.jpg

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் கூட அதனை அமுல்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று பௌத்த பிக்குகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், இதனைச் செய்வதற்கு முற்படும் ஜனாதிபதி மற்றும் அரசியல்வாதிகளின் அரசியல் முகவரியும் இல்லாது செய்யப்படும் எனவும் அவர்கள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

ஊடகவியலாளர்களை சந்தித்தவுடன் நடைபெற்ற நேர்காணலின்போதே உலப்பனே சுமங்கல தேரர் மற்றும் அக்மீமன தயாரத்ன தேரர் ஆகியோர் இவ்வாறு அறிவித்துள்ளனர்.

அக்மீமன தயாரத்ன தேரர் ஹெல உறுமயவின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டவர். தற்போது சிங்கள ராவய அமைப்பை வழிநடத்துகின்றார். உலப்பனே சுமங்கல தேரர், அதிபர் – ஆசிரியர்களின் சம்பள போராட்டத்தின்போது முன்னின்று செயற்பட்டவர்.

இருவரும் 13 இற்கு எதிராக மகா சங்கத்தினர் கொழும்பில் நடத்திய போராட்டத்தை ஏற்பாடு செய்வத்கு முன்னின்று செயற்பட்டவர்கள்.

“விக்னேஸ்வரன் ஒரு கள்ளத்தோணி. அவருக்கு என ஒரு இனம் இல்லை. வடக்கு மக்களுக்காகக் கதைக்கின்றார். ஆனால், கொழும்பு 7 இல் வாழ்கின்றார். அவரின் பிள்ளைகள் சிங்களவர்களையே மணம் முடித்துள்ளனர். படித்தது றோயல் கல்லூரி. கதைப்பது ஆங்கிலம். இப்படியானவர்கள்தான் கள்ளத்தோணி.

விக்னேஸ்வரன் சில்றைத்தனமான மனிதன். ஒற்றையாட்சி அரசமைப்பில் சத்தியப்பிரமாணம் செய்துவிட்டு, சமஷ்டி பற்றி கதைக்கின்றார். அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” – என்றும் குறித்த தேரர்கள் குறிப்பிட்டனர்.

“13 ஆவது திருத்தச் சட்டத்தை நாம் எதிர்க்கின்றோம். பொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்கப்பட்டால் நாட்டில் இரத்த ஆறு ஓடக்கூடும். அதனால்தான் 13 ஐக் கொண்டு வந்த ஜே.ஆர். கூட இந்த அதிகாரங்களைப் பகிரவில்லை. 13 ஐ அமுல்படுத்த வேண்டும் என நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றினால்கூட அது அமுலாவதற்கு மகாசங்கத்தினர் இடமளிக்கமாட்டார்கள். 13 ஐ வழங்க முற்படும் அரசியல்வாதிகளும் முகவரியற்றுப்போவார்கள்” – என்றும் தேரர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

https://vanakkamlondon.com/world/srilanka/2023/02/185446/

  • Replies 82
  • Views 4.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

விக்னேஸ்வரன் ஒரு கள்ளத்தோணி. அவருக்கு என ஒரு இனம் இல்லை. வடக்கு மக்களுக்காகக் கதைக்கின்றார். ஆனால், கொழும்பு 7 இல் வாழ்கின்றார். அவரின் பிள்ளைகள் சிங்களவர்களையே மணம் முடித்துள்ளனர். படித்தது றோயல் கல்லூரி. கதைப்பது ஆங்கிலம். இப்படியானவர்கள்தான் கள்ளத்தோணி.

விக்கினேஸ்வரனைப்போல் வாழ முடியவில்லை என்கிற ஆதங்கமோ? 

39 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

விக்னேஸ்வரன் சில்றைத்தனமான மனிதன். ஒற்றையாட்சி அரசமைப்பில் சத்தியப்பிரமாணம் செய்துவிட்டு, சமஷ்டி பற்றி கதைக்கின்றார்.

பதின்மூன்றும் இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்ட  அரசியலமைப்புச்சட்டம், சமஷ்டியும் ஒற்றையாட்சிக்குள்தான் என்பது புரியாமல் துள்ளும் சிங்கங்கள். 

இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு ஏதாவது தீர்வு உள்ளதா இவர்களிடத்தில்? அதை வைத்து விட்டு துள்ளலாமே? துறவிகளுக்கு இவ்வளவு கடுப்பு என்றால் இதுகள் எல்லாம் இல்லற வாழ்வில் இருந்தால் அதன் சுமை தெரியும். இதுகள் சும்மா இருந்து வயிறு வளத்துக்கொண்டு போதனைக்கு பதிலாக குரோதத்தை வளக்குதுகள். இதுகளை ஊக்குவித்து வேடிக்கை பாத்துக்கொண்டு கடன் பெற காத்திருக்கு அரசாங்கம்.  அந்த சட்டங்களின் தாற்பரியம் தெரியாது, தமிழருக்கு எதுவும் கொடுக்கக்கூடாது என்பதே இவர்களின் கொள்கை. இதைவிட மிகவும் குறைந்த அதிகாரமில்லாத ஒன்றை கொடுப்பதாக அறிவித்தாலும் இதே துள்ளல், தீவைத்தல் தொடரும். இந்த ஆணவம் பாருங்கள்! ஒன்று பவுத்தம் இலங்கையிலிருந்து அழியும் அல்லது எல்லாவற்றையுமிழந்து நடுத்தெருவில் வாய் பொத்தி இந்த பிக்குகளை கஞ்சிக்கு அலையவிடும். ஏன் மக்கள் இவர்களை இன்னும் விட்டு வைத்திருக்கிறார்கள்? பொருளாதார சுமையை, நெருக்கடியை வழிமாற்றுவதற்கு வழமைபோல் தமிழர் பக்கம் திருப்பி தாங்கள் தப்பித்துக்கொள்ளப்பாக்கிறார்கள்.

ஒரே நாடு என்று அடாவடி பண்ணுவதும் இவர்கள். கொழும்பு, வடக்கு என்று பிரிப்பதும் இவர்கள். இதனை புரிந்து கொள்ள முடியாத  இதுகளின் கூத்தை புறந்தள்ளி ஒன்றும் செய்ய முடியாது என அறிக்கை விடும் அவர்களை விட அறிவு குறைந்த ஜானாதிபதிகள், அமைச்சர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் இலங்கைக்கான கொள்கை என்பது இலங்கையில் தமிழரும் சிங்களவரும் தொடர்ந்து அடிபட்டு குத்துப் பட வேண்டும் என்பதே. பிரிட்டிஷ் அமெரிக்க நிலைபாடும் இதுவே.

இந்தியாவுக்கு இலங்கைத் தமிழர் மேலும் சிங்களவர் மேலும் எந்தப் பாசமோ நேசமோ கிடையாது. அப்படி இருந்து இருப்பின் எப்போதோ எங்கள் பிரச்சனையை தீர்த்து வைத்து இருக்கும்.

சிங்களவரை கட்டுக்குள் வைக்க தமிழ் இயக்கங்களை உருவாக்கி விட்டது இந்தியா, ஆனால் பிரபாகரன் அவர்களையும் தாண்டி வளர்ந்து விட்டார் என்பது வேறு கதை. பின்னர் 13ம் திருத்த சட்டத்தை உருவாக்கி வரதராஜப் பெருமாளை தன் கைப்பொம்மையாக வைத்து இருந்ததும் இந்தியா தான்

Jvp இந்திய ஏகாதிபத்தியத்தை எதிர்க்க முனைந்த பொழுது அதையும் அழிக்கத் துணை போனதும் இந்தியா தான்

சிங்களவரை பிக்குகளை தமிழ் மக்களுக்கு எதிராக கூர் தீட்டி வைத்து அரசியல் செய்வதும் இந்தியா தான், அதே போல் தமிழருக்கும் சிங்கள மக்கள் மேல் விரோதத்தை ஏற்படுத்தும் எல்லா வழிகளையும் அனுமதிக்கிறது இந்தியா.

ஈஸ்டர் தாக்குதலை மூளைச்சலவை செய்யப்பட்ட முஸ்லீம்கள் மூலம் தமிழ்க் கிறிஸ்தவர்கள் மேல் நடத்தி சிங்களவரை தமிழரை முஸ்லீம்கள் மேல் பாய விட்டு நாட்டின் உல்லாசப் பிராயணத் துறையை சீரழித்தது இந்தியா. இந்த உண்மை ஓரளவுக்கு சிந்திக்கத் தெரிந்த அனைவருக்கும் தெரியும்.

ரணில் அதிபராக வரக்கூடாது என்று முயற்சி செய்தது இந்தியா. இன்று ரணில் தமிழர் பிரச்சனையை தீர்க்கப் போவதாக கொஞ்சம் உறுதித் தன்மையோடு கூறுவதை ரசிக்க முடியாத இந்தியா, பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற கதையைக் கட்டி விட்டு தமிழ் சிங்கள மக்களின் நாடித் துடிப்பை அறிய விரும்புகின்றது

இந்தியா இலங்கையை தன்னோடு இணைக்கவும் விரும்பவில்லை காரணம் ஈழத்திமிழரும் தமிழ் நாட்டுத் தமிழரும் இணைவதை விரும்பவில்லை, அது தனக்கு பெரும் பாதிப்பைக் கொண்டு வரும் என்று எண்ணுகின்றது போலும், அதனால் எம் இரு இனத்தவரையும் அடிப்பட விட்டு இலங்கை ஒரு நிலைபெறான நாடாக வளர விடாமல் வைத்துக்கொள்கிறது.

சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் கதையைப் படிப்பவர்களுக்கு இந்தியாவின் இந்த சகுனி வேலை நன்கு விளங்கும்

சிங்களருக்கு இலங்கைத் தமிழர் மேல் ஹிந்திக் காரனுக்கு தமிழன் மேல் உள்ள வன்மம் அளவுக்கு இல்லை என்பது எனது கணிப்பு. ஆனாலும் தமிழருக்கு கொஞ்சமேனும் அதிகாரத்தை கொடுக்க சிங்களவர்கள் தயங்கக் காரணம் இந்தியா அதைப் பயன்படுத்தி தமிழரை கூர்மைப் படுத்தி நாட்டில் மீண்டும் ஒரு போரை தூண்டலாம் என்ற பயம் தான்

ஆகவே நாம் முதலில் இந்தியாவை வெறுப்பதை சிங்களவர் உணரும் அளவுக்கு எம் நடத்தை இருக்க வேண்டும்.அப்பொழுது தான் சிங்களவர் எம்மை நம்பி ஒரு தீர்வைத் தர முடியும்.

சீன சார்பு நிலையை தமிழத் தலைவர்கள் எடுப்பது சாலவும் சிறந்தது. சண்முகதாசன் போன்றவர்கள் அன்றே அந்த அறிவைக் கொண்டிருந்தனர்.

ஹிந்து அனுமார் ராமன் பாலம் போன்ற கதைகள் மூலம் எம்மிடம் இந்தியா நெருங்குவதை தடுத்தலும் முக்கியம்

வெறும் வாய்ச் சவடால் விடும் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களை எம்மவர் ஓரம் காட்டுவதும் முக்கியம்

பிரச்சனைகள் ஒருபோதும் தீரப் போவதே இல்லை என்பதால் இப்போதைக்கு சிங்களவர் தர விரும்பும் தீர்வை வாங்கிக் கொள்வது புத்திசாலித்தனம். நம்பிக்கை அடிப்படையில் அந்தத் தீர்வு சில பத்தாண்டுகளுக்குப் பின்னர் இன்னும் ஒரு படி நகர்ந்து ஓரளவுக்கு சுயாட்சி ஆக மாற்றி அமைக்க முடியும்.

அதுவே இன்றைய நிலையில் எங்களை இந்திய அரக்கனிடம் இருந்து காப்பாற்ற ஒரே வழி.

கடைசியாக ஒன்று சொல்வேன்.

பிரபாகரன், மற்றும் இறந்த மாவீர்கள் அனைவரின் தியாகமும் மதிப்பு மிக்கது. ஆனாலும் அதை விட முக்கியம் ஈழத்தமிழர் இந்தப் பூமிப் பந்தில் நிம்மதியாக வாழ வேண்டும் என்பது. புலிகள் தம்மை ஆகுதி ஆக்கிக் கொண்டதும் அதற்க்குத் தான். ஆகவே சிங்கள மக்களோடு அவர்கள் தரும் தீர்வை ஏற்று வாழ்வது தான் எமக்கு உள்ள ஒரே வாய்ப்பு. 

Edited by பகிடி

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, பகிடி said:

ஆகவே சிங்கள மக்களோடு அவர்கள் தரும் தீர்வை ஏற்று வாழ்வது தான் எமக்கு உள்ள ஒரே வாய்ப்பு. 

சாராம்சம்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரஞ்சித் said:

7 hours ago, ரஞ்சித் said:
8 hours ago, பகிடி said:

ஆகவே சிங்கள மக்களோடு அவர்கள் தரும் தீர்வை ஏற்று வாழ்வது தான் எமக்கு உள்ள ஒரே வாய்ப்பு. 

சாராம்சம்

வேறு என்ன வாய்ப்பு என்று சொல்லுங்கள்? இந்தியா இந்தப் பிரச்சனையை தீர்க்க விடாமல் இரண்டு பக்கமும் சீவி கூர் தீட்டி விட்டுக்கொண்டு இருப்பதே அதன் இலங்கைக்கான கொள்கை என்னும் பொழுது நாங்கள் என்ன தான் செய்ய முடியும்? 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, பகிடி said:

வேறு என்ன வாய்ப்பு என்று சொல்லுங்கள்? இந்தியா இந்தப் பிரச்சனையை தீர்க்க விடாமல் இரண்டு பக்கமும் சீவி கூர் தீட்டி விட்டுக்கொண்டு இருப்பதே அதன் இலங்கைக்கான கொள்கை என்னும் பொழுது நாங்கள் என்ன தான் செய்ய முடியும்? 

ஆனால் அவர்கள் தீர்வு தரவே வாய்ப்பில்லை எனும்போது?!

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஏராளன் said:

ஆனால் அவர்கள் தீர்வு தரவே வாய்ப்பில்லை எனும்போது?!

அதற்க்கு முதலே கொடுப்பதைப் பெறுவோம் என்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் எதிரி சிங்களவன் என்னும் மனநிலையில் இருந்து வெளியே வரவேண்டும் என்கிறேன். எங்கள் எதிரி இந்தியா. இதை சிங்களவர் விளங்கிக் கொண்ட அளவுக்கு நாங்கள் உள்வாகிக் கொள்ளவில்லை என்பது தான் உண்மை.

இப்போதைக்கு வாசுதேவ நாணயக்கார, jvp தலைவர்கள் போன்ற சிங்களத் தலைவர்களோடு சேர்ந்து பயணித்து ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு தீர்வைப் பெறுவது தான் சரியான உபாயம். 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பகிடி said:

எனக்கும் இப்படி ஒரு சிந்தனை வாறது. நாங்கள் ஏன் எல்லோரையும் எதிரியாகப் பார்க்கவேணும். எங்கள் உரிமை/நலன்களை எவ்வாறு பெற்றுக்கொள்வது என கூர்ந்து ஆய்ந்து அறியவேண்டும். எல்லோரையும் எதிரியாகப் பார்ப்பதால் இழப்பது அதிகம் என்றும் தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பகிடி said:

இந்தியாவின் இலங்கைக்கான கொள்கை என்பது இலங்கையில் தமிழரும் சிங்களவரும் தொடர்ந்து அடிபட்டு குத்துப் பட வேண்டும் என்பதே. பிரிட்டிஷ் அமெரிக்க நிலைபாடும் இதுவே.

இந்தியாவுக்கு இலங்கைத் தமிழர் மேலும் சிங்களவர் மேலும் எந்தப் பாசமோ நேசமோ கிடையாது. அப்படி இருந்து இருப்பின் எப்போதோ எங்கள் பிரச்சனையை தீர்த்து வைத்து இருக்கும்.

சிங்களவரை கட்டுக்குள் வைக்க தமிழ் இயக்கங்களை உருவாக்கி விட்டது இந்தியா, ஆனால் பிரபாகரன் அவர்களையும் தாண்டி வளர்ந்து விட்டார் என்பது வேறு கதை. பின்னர் 13ம் திருத்த சட்டத்தை உருவாக்கி வரதராஜப் பெருமாளை தன் கைப்பொம்மையாக வைத்து இருந்ததும் இந்தியா தான்

Jvp இந்திய ஏகாதிபத்தியத்தை எதிர்க்க முனைந்த பொழுது அதையும் அழிக்கத் துணை போனதும் இந்தியா தான்

சிங்களவரை பிக்குகளை தமிழ் மக்களுக்கு எதிராக கூர் தீட்டி வைத்து அரசியல் செய்வதும் இந்தியா தான், அதே போல் தமிழருக்கும் சிங்கள மக்கள் மேல் விரோதத்தை ஏற்படுத்தும் எல்லா வழிகளையும் அனுமதிக்கிறது இந்தியா.

ஈஸ்டர் தாக்குதலை மூளைச்சலவை செய்யப்பட்ட முஸ்லீம்கள் மூலம் தமிழ்க் கிறிஸ்தவர்கள் மேல் நடத்தி சிங்களவரை தமிழரை முஸ்லீம்கள் மேல் பாய விட்டு நாட்டின் உல்லாசப் பிராயணத் துறையை சீரழித்தது இந்தியா. இந்த உண்மை ஓரளவுக்கு சிந்திக்கத் தெரிந்த அனைவருக்கும் தெரியும்.

ரணில் அதிபராக வரக்கூடாது என்று முயற்சி செய்தது இந்தியா. இன்று ரணில் தமிழர் பிரச்சனையை தீர்க்கப் போவதாக கொஞ்சம் உறுதித் தன்மையோடு கூறுவதை ரசிக்க முடியாத இந்தியா, பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற கதையைக் கட்டி விட்டு தமிழ் சிங்கள மக்களின் நாடித் துடிப்பை அறிய விரும்புகின்றது

இந்தியா இலங்கையை தன்னோடு இணைக்கவும் விரும்பவில்லை காரணம் ஈழத்திமிழரும் தமிழ் நாட்டுத் தமிழரும் இணைவதை விரும்பவில்லை, அது தனக்கு பெரும் பாதிப்பைக் கொண்டு வரும் என்று எண்ணுகின்றது போலும், அதனால் எம் இரு இனத்தவரையும் அடிப்பட விட்டு இலங்கை ஒரு நிலைபெறான நாடாக வளர விடாமல் வைத்துக்கொள்கிறது.

சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் கதையைப் படிப்பவர்களுக்கு இந்தியாவின் இந்த சகுனி வேலை நன்கு விளங்கும்

சிங்களருக்கு இலங்கைத் தமிழர் மேல் ஹிந்திக் காரனுக்கு தமிழன் மேல் உள்ள வன்மம் அளவுக்கு இல்லை என்பது எனது கணிப்பு. ஆனாலும் தமிழருக்கு கொஞ்சமேனும் அதிகாரத்தை கொடுக்க சிங்களவர்கள் தயங்கக் காரணம் இந்தியா அதைப் பயன்படுத்தி தமிழரை கூர்மைப் படுத்தி நாட்டில் மீண்டும் ஒரு போரை தூண்டலாம் என்ற பயம் தான்

ஆகவே நாம் முதலில் இந்தியாவை வெறுப்பதை சிங்களவர் உணரும் அளவுக்கு எம் நடத்தை இருக்க வேண்டும்.அப்பொழுது தான் சிங்களவர் எம்மை நம்பி ஒரு தீர்வைத் தர முடியும்.

சீன சார்பு நிலையை தமிழத் தலைவர்கள் எடுப்பது சாலவும் சிறந்தது. சண்முகதாசன் போன்றவர்கள் அன்றே அந்த அறிவைக் கொண்டிருந்தனர்.

ஹிந்து அனுமார் ராமன் பாலம் போன்ற கதைகள் மூலம் எம்மிடம் இந்தியா நெருங்குவதை தடுத்தலும் முக்கியம்

வெறும் வாய்ச் சவடால் விடும் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களை எம்மவர் ஓரம் காட்டுவதும் முக்கியம்

பிரச்சனைகள் ஒருபோதும் தீரப் போவதே இல்லை என்பதால் இப்போதைக்கு சிங்களவர் தர விரும்பும் தீர்வை வாங்கிக் கொள்வது புத்திசாலித்தனம். நம்பிக்கை அடிப்படையில் அந்தத் தீர்வு சில பத்தாண்டுகளுக்குப் பின்னர் இன்னும் ஒரு படி நகர்ந்து ஓரளவுக்கு சுயாட்சி ஆக மாற்றி அமைக்க முடியும்.

அதுவே இன்றைய நிலையில் எங்களை இந்திய அரக்கனிடம் இருந்து காப்பாற்ற ஒரே வழி.

கடைசியாக ஒன்று சொல்வேன்.

பிரபாகரன், மற்றும் இறந்த மாவீர்கள் அனைவரின் தியாகமும் மதிப்பு மிக்கது. ஆனாலும் அதை விட முக்கியம் ஈழத்தமிழர் இந்தப் பூமிப் பந்தில் நிம்மதியாக வாழ வேண்டும் என்பது. புலிகள் தம்மை ஆகுதி ஆக்கிக் கொண்டதும் அதற்க்குத் தான். ஆகவே சிங்கள மக்களோடு அவர்கள் தரும் தீர்வை ஏற்று வாழ்வது தான் எமக்கு உள்ள ஒரே வாய்ப்பு. 

இந்தியாவை பற்றிய சரியான கணிப்பு. 👍🏽

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பகிடி said:

எங்கள் எதிரி சிங்களவன் என்னும் மனநிலையில் இருந்து வெளியே வரவேண்டும் என்கிறேன். எங்கள் எதிரி இந்தியா. இதை சிங்களவர் விளங்கிக் கொண்ட அளவுக்கு நாங்கள் உள்வாகிக் கொள்ளவில்லை என்பது தான் உண்மை.

இப்போதைக்கு வாசுதேவ நாணயக்கார, jvp தலைவர்கள் போன்ற சிங்களத் தலைவர்களோடு சேர்ந்து பயணித்து ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு தீர்வைப் பெறுவது தான் சரியான உபாயம். 

அண்ணா நீங்க‌ள் மேல‌ எழுதின‌த‌ வாசித்தேன்

ந‌ல்லா எழுதி இருக்கிறீங்க‌ள் வாழ்த்துக்க‌ள்

ப‌ழ‌நெடுமாற‌ன் ஜ‌யா ப‌ற்றிய‌ உங்க‌ள் நிலைப்பாடு என்ன‌ இதை ஏன் கேட்கிறேன் என்றால் நீங்க‌ள் எழுதின‌தில் பிர‌பாக‌ர‌ன் மீண்டும் வ‌ருவார் என்று இந்தியா புர‌ளிய‌ கில‌ப்பி விடுவ‌து போல் இருக்கு..............

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, பையன்26 said:

ப‌ழ‌நெடுமாற‌ன் ஜ‌யா ப‌ற்றிய‌ உங்க‌ள் நிலைப்பாடு என்ன‌ இதை ஏன் கேட்கிறேன் என்றால் நீங்க‌ள் எழுதின‌தில் பிர‌பாக‌ர‌ன் மீண்டும் வ‌ருவார் என்று இந்தியா புர‌ளிய‌ கில‌ப்பி விடுவ‌து போல் இருக்கு..

நன்றாய் வாழ்ந்து கெட்டுப்போன ஒரு குடும்பத்தின் நிலை போன்றது தான் பழ நெடுமாறனின் நிலை. இந்தியாவுக்கு இலங்கையில் மீண்டும் ஒரு கிளர்ச்சி தமிழர் பகுதியில் இருந்து தேவைப்படுகின்றது. நான் நம்புவது சரியாக இருப்பின் தமிழ் உணர்வுள்ள சில இளைஞர்களைக்கு ஆயுதப் பயிற்சி அளித்து அவர்களை வைத்து இலங்கையில் தமிழர் பகுதியில் உள்ள இலங்கை ராணுவத்தினர் மீது  பெரிய தாக்குதல் நடத்தப்படலாம். அதன் பின்னணியில் பிரபாகரன் இருப்பதாக கதை பரப்பப்படலாம். மீண்டும் விக்ரமாதித்தன் கதை திரும்பலாம். 

56 minutes ago, தமிழ் சிறி said:

இந்தியாவை பற்றிய சரியான கணிப்பு. 👍🏽

நன்றி. நான் மேலே எழுதியதை கன காலத்துக்கு முதலே எழுத விரும்பினேன் ஆனால் துரோகி என்றும் விரோதி என்றும் முத்திரை குத்தப்படுவோமா என்று சற்று ஒதுங்கி நின்றேன்.

இலங்கைத் தமிழ் சமூகம் இந்தியன் நினைப்பதை விட விசாலமான சிந்தனை வளர்ச்சி கொண்டது என்பது பின்னூடங்கள் மூலம் தெரிகிறது 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பகிடி said:

எங்கள் எதிரி சிங்களவன் என்னும் மனநிலையில் இருந்து வெளியே வரவேண்டும் என்கிறேன். எங்கள் எதிரி இந்தியா. இதை சிங்களவர் விளங்கிக் கொண்ட அளவுக்கு நாங்கள் உள்வாகிக் கொள்ளவில்லை என்பது தான் உண்மை.

இப்போதைக்கு வாசுதேவ நாணயக்கார, jvp தலைவர்கள் போன்ற சிங்களத் தலைவர்களோடு சேர்ந்து பயணித்து ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு தீர்வைப் பெறுவது தான் சரியான உபாயம். 

இன்றைய நிலையில் நீங்கள் சொல்வது சரியானதாகும்...ஆனால் அதற்கு முதல் நாங்கள் ஒன்றை நினைத்து பார்க்க வேண்டும்...

1...தந்தை செல்வா.  தமிழ்ஈழம்.    விரும்பி கேட்கவில்லை   ..இலங்கையை அவர் வெறுக்கவில்லை  இலங்கை அரசாங்கம்களின். பாரபட்சமான நடவடிக்கைகள் தான் அவரை தமிழ்ஈழம். என்ற தீர்மானம் எடுக்க வைத்தது  உதாரணமாக சொன்னால் 1983 யூலை இனக்கலவரத்தில். சும்மா இருந்த சிங்கள கடையார்களெல்லாம். பல வழிகளிலும். தமிழர்களை மரணமடையச்செய்தார்கள்.  இந்த குற்றவாளிகள் இனம்  காணப்பட்டு தண்டனை” வழங்கப்பட்டதா?.  இல்லையே    ஏன்? சிறிமா   டல்லி   சந்திரிக்கா.  ரணில்   மகிந்தா. .ஜே.ஆர்......போன்ற தலைவர்கள் இது விடயத்தில் என்ன செய்தார்கள் ? சட்டம் அனைத்து இலங்கை மக்களுக்கும் பொதுவாக அமுல்படுத்தப்பட்டிருக்குமானல்.   செல்வா. ஒருபோதும் தமிஈழம். என்ற முடிவுக்கு வந்திருக்க வாய்ப்புகள் இல்லை   ஆகவே செல்வாவின். முடிவுக்கு காரணம் இலங்கை அரசு...

2....டக்ளஸ் தேவனந்தாவுக்கு ஒவ்வொரு இலங்கை அரசும் வா...வா.  என்று கூப்பிட்டு அமைச்சு பதவி கொடுக்கிறார்கள்.   இதே அணுகுமுறையை தலைவர் பிரபாகரன் உடன் மேற்கொண்டு  காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்கியிருந்தால் அவரும் ஆயதம் எந்தியிருக்க வாய்ப்புகள் இல்லை  எனவே… பிரபாகரன் ஆயதம் எந்தியதுக்கு இலங்கை அரசு தான்  

3 ...வெளிநாடுகளில் நாங்கள் எல்லோரும் குடியேறவும்  காரணம் இலங்கை அரசு தான்  ...இது இலங்கை எதிரபார்க்கமால். நடந்த நிகழ்வுகள் 

4...என்ன தீர்வு தருவார்கள் என்பதையும் எடுத்து சொல்லுங்களேன்     இதுவரை அவர்கள் தந்து தமிழர்கள் வேண்டாம் என்று தட்டி கழித்து விடவில்லை   தீர்வு தரமுடியாது என்பதால் தான்  30 ஆண்டுகளுக்கு போராட்டம் நடந்தது   

5...அவர்கள் ஒன்றையும் தரதாபோது நாங்கள் எப்படி பெற முடியும்?.  

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பகிடி said:

நன்றாய் வாழ்ந்து கெட்டுப்போன ஒரு குடும்பத்தின் நிலை போன்றது தான் பழ நெடுமாறனின் நிலை. இந்தியாவுக்கு இலங்கையில் மீண்டும் ஒரு கிளர்ச்சி தமிழர் பகுதியில் இருந்து தேவைப்படுகின்றது. நான் நம்புவது சரியாக இருப்பின் தமிழ் உணர்வுள்ள சில இளைஞர்களைக்கு ஆயுதப் பயிற்சி அளித்து அவர்களை வைத்து இலங்கையில் தமிழர் பகுதியில் உள்ள இலங்கை ராணுவத்தினர் மீது  பெரிய தாக்குதல் நடத்தப்படலாம். அதன் பின்னணியில் பிரபாகரன் இருப்பதாக கதை பரப்பப்படலாம். மீண்டும் விக்ரமாதித்தன் கதை திரும்பலாம். 

நன்றி. நான் மேலே எழுதியதை கன காலத்துக்கு முதலே எழுத விரும்பினேன் ஆனால் துரோகி என்றும் விரோதி என்றும் முத்திரை குத்தப்படுவோமா என்று சற்று ஒதுங்கி நின்றேன்.

த‌லைவ‌ரை ப‌ற்றி நெடுமாற‌ன் ஜ‌யா விட்ட‌ அறிக்கைக்கு அவ‌ர் ம‌ன்னிப்பு கேட்க்க‌னும் த‌மிழ‌ர்க‌ளிட‌ம்..............

இன்னொரு ஆயுத‌ போராட்ட‌ம் வ‌ருமாய் இருந்தா நாடு தாங்காது...............எம் உற‌வுக‌ள் ஒரு நேர‌ சாப்பாட்டுக்கு ப‌டும் அவ‌ல‌ம் பார்த்த‌வ‌ர்க‌ளுக்கு தான் தெரியும்...............எம்ம‌வ‌ர்க‌ள் இந்தியாவின் ச‌திக்குள் மீண்டும் போய் விழ‌க் கூடாது.................... கோரிலா தாக்குத‌ல் செய்தாலோ அல்ல‌து இல‌ங்கை ராணுவ‌த்துக்கு எதிரா சின்ன‌ குண்டு வைச்சால் கூட‌ விடிவிக்க‌ப் ப‌ட்ட‌ முன்னாள் போராளிக‌ள் மீண்டும் கைது செய்ய‌ ப‌டுவின‌ம்..............ப‌ழைய‌ ப‌டி சோத‌னை என்ர‌ பெய‌ரில் ப‌ல‌ கெடு பிடிக‌ள் ந‌ட‌க்கும்

இல‌ங்கை சீனாவுட‌ன் நிப்ப‌துக்காக‌வா இந்தியா இந்த‌ நாட‌க‌த்தை அர‌ங் ஏற்றுது...................

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு தரும் பாடம்.

அத்திலாந்திக் சமுத்திரத்தின் மேலிருந்து கீழாக ஒரு கோட்டினை போட்டு, அதன் மேற்கு ஸ்பெயினும், கிழக்கே போர்த்துக்கலும் முடிந்தளவுக்கு நாடுகளை பிடிப்பதாக ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள். கிழக்கே வந்த போர்த்துக்கேயர்கள் தம்மை அசைக்க யாருமே வரமுடியாது என்று கோட்டை கொத்தளங்களை கட்டி, மக்களை வன்முறையாக மத மாற வைத்து ஆண்டார்கள்.

ஆனால் டச்சுக்காரர்கள் 17ம் நூறாண்டு தொடக்கத்தில் வந்து, முதலில் கொச்சினில் போர்த்துக்கேயரை தாக்கி அதை பிடித்து, வேகமாக இலங்கை தீவின் இரு பகுதியினையும் எடுத்துக் கொண்டார்கள். யாழ்ப்பாணத்தில், மிகப் பெரிய ஐந்து நட்ச்சத்திர கோட்டை ஒன்றையும் கட்டி தமது பாதுகாப்பினை உறுதி செய்து,  தம்மை யாருமே அசைக்க முடியாது என்று நம்பி இருந்தார்கள். 

பிரெஞ்சு - டச்சு யுத்தத்தின் மூலம், ஒல்லாந்து பிரான்சிடம் வீழ, டச்சு மன்னர் இங்கிலாந்து தப்பி ஓட, சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி, அவரிடம் எழுதி வாங்கி, பிரான்ஸ் எடுத்துவிடுவத்துக்கு முன்னால், ஒல்லாந்தின் முக்கிய காலணிகளை தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டது பிரிட்டன்.

அவ்வகையில், ஒரு வெடி கூட போடாது, கைமாறியது, இலங்கை தீவின் இரு பகுதிகளும்.

பிரான்ஸின் அதே வழியில், குறுக்கு வழியில் பிரிட்டனின் காலணிகளை மடக்க முயன்ற ஹிட்லரின் காரணமாக, பல நாடுகளுக்கு சுதந்திரம் கிடைத்தது.

அந்த சுதந்திரத்தினை, முழுவதுமாக எடுத்துக்கொண்ட சிங்களம், 1948 முதல் தன்னை யாருமே அசைக்க முடியாது என்று நினைத்துக் கொண்டு ஆட்டம் போடுகின்றது.

வரலாற்றின் பாடத்தினை பார்த்தால், 75 ஆண்டுகள்..... விரைவில் சிங்களத்தின் கையினை விட்டு போகப்போகிறது.

இலங்கையில் வரலாறில், வெளிநாட்டு சக்திகளை கடைசி வரை போராடியவர்கள், தமிழ் மன்னர்கள்: யாழ்ப்பாண சங்கிலியன், வன்னி பண்டாரவன்னியன், கண்டி கண்ணப்பன். இறுதியாக இந்திய ராணுவத்துடன் பிரபாகரன். சிங்களம் சுதந்திரத்தினை வாரிக் கொடுத்து விட்டு நின்றது. இன்றும் சீனாவும், இந்தியாவும், அமெரிக்காவும் உள்ளே வர காரணமும் சிங்களம் தான்.

ஆகவே, சிங்களத்தின் பிச்சையினை எதிர்பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியதில்லை. நமக்கு இழக்க எதுவும் இல்லை. ஆகவே அலட்டிக்கொள்ளாமல் நடப்பதை பார்ப்போம். நல்லதை எதிர்பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

இன்றைய நிலையில் நீங்கள் சொல்வது சரியானதாகும்...ஆனால் அதற்கு முதல் நாங்கள் ஒன்றை நினைத்து பார்க்க வேண்டும்...

1...தந்தை செல்வா.  தமிழ்ஈழம்.    விரும்பி கேட்கவில்லை   ..இலங்கையை அவர் வெறுக்கவில்லை  இலங்கை அரசாங்கம்களின். பாரபட்சமான நடவடிக்கைகள் தான் அவரை தமிழ்ஈழம். என்ற தீர்மானம் எடுக்க வைத்தது  உதாரணமாக சொன்னால் 1983 யூலை இனக்கலவரத்தில். சும்மா இருந்த சிங்கள கடையார்களெல்லாம். பல வழிகளிலும். தமிழர்களை மரணமடையச்செய்தார்கள்.  இந்த குற்றவாளிகள் இனம்  காணப்பட்டு தண்டனை” வழங்கப்பட்டதா?.  இல்லையே    ஏன்? சிறிமா   டல்லி   சந்திரிக்கா.  ரணில்   மகிந்தா. .ஜே.ஆர்......போன்ற தலைவர்கள் இது விடயத்தில் என்ன செய்தார்கள் ? சட்டம் அனைத்து இலங்கை மக்களுக்கும் பொதுவாக அமுல்படுத்தப்பட்டிருக்குமானல்.   செல்வா. ஒருபோதும் தமிஈழம். என்ற முடிவுக்கு வந்திருக்க வாய்ப்புகள் இல்லை   ஆகவே செல்வாவின். முடிவுக்கு காரணம் இலங்கை அரசு...

2....டக்ளஸ் தேவனந்தாவுக்கு ஒவ்வொரு இலங்கை அரசும் வா...வா.  என்று கூப்பிட்டு அமைச்சு பதவி கொடுக்கிறார்கள்.   இதே அணுகுமுறையை தலைவர் பிரபாகரன் உடன் மேற்கொண்டு  காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்கியிருந்தால் அவரும் ஆயதம் எந்தியிருக்க வாய்ப்புகள் இல்லை  எனவே… பிரபாகரன் ஆயதம் எந்தியதுக்கு இலங்கை அரசு தான்  

3 ...வெளிநாடுகளில் நாங்கள் எல்லோரும் குடியேறவும்  காரணம் இலங்கை அரசு தான்  ...இது இலங்கை எதிரபார்க்கமால். நடந்த நிகழ்வுகள் 

4...என்ன தீர்வு தருவார்கள் என்பதையும் எடுத்து சொல்லுங்களேன்     இதுவரை அவர்கள் தந்து தமிழர்கள் வேண்டாம் என்று தட்டி கழித்து விடவில்லை   தீர்வு தரமுடியாது என்பதால் தான்  30 ஆண்டுகளுக்கு போராட்டம் நடந்தது   

5...அவர்கள் ஒன்றையும் தரதாபோது நாங்கள் எப்படி பெற முடியும்?.  

இப்போதைக்கு போலீஸ் அதிகாரம் கூட வேண்டாம் ( போலீஸ் அதிகாரம் தந்தால் நல்லது தராவிட்டால் விட்டுப் பிடிப்போம் )ஆனால் காணி அதிகாரம் வேண்டும். காணி அதிகாரம் கிடைக்கும் பொழுது நிலம் பறி போவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் அதுவே அடுத்த இருபது வருடங்களுக்குப் போதும். ஏற்கனவே சுகாதாரத் துறை போன்ற சில அதிகாரங்கள் இருக்கின்றன. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

இன்றைய நிலையில் நீங்கள் சொல்வது சரியானதாகும்...ஆனால் அதற்கு முதல் நாங்கள் ஒன்றை நினைத்து பார்க்க வேண்டும்...

1...தந்தை செல்வா.  தமிழ்ஈழம்.    விரும்பி கேட்கவில்லை   ..இலங்கையை அவர் வெறுக்கவில்லை  இலங்கை அரசாங்கம்களின். பாரபட்சமான நடவடிக்கைகள் தான் அவரை தமிழ்ஈழம். என்ற தீர்மானம் எடுக்க வைத்தது  உதாரணமாக சொன்னால் 1983 யூலை இனக்கலவரத்தில். சும்மா இருந்த சிங்கள கடையார்களெல்லாம். பல வழிகளிலும். தமிழர்களை மரணமடையச்செய்தார்கள்.  இந்த குற்றவாளிகள் இனம்  காணப்பட்டு தண்டனை” வழங்கப்பட்டதா?.  இல்லையே    ஏன்? சிறிமா   டல்லி   சந்திரிக்கா.  ரணில்   மகிந்தா. .ஜே.ஆர்......போன்ற தலைவர்கள் இது விடயத்தில் என்ன செய்தார்கள் ? சட்டம் அனைத்து இலங்கை மக்களுக்கும் பொதுவாக அமுல்படுத்தப்பட்டிருக்குமானல்.   செல்வா. ஒருபோதும் தமிஈழம். என்ற முடிவுக்கு வந்திருக்க வாய்ப்புகள் இல்லை   ஆகவே செல்வாவின். முடிவுக்கு காரணம் இலங்கை அரசு...

2....டக்ளஸ் தேவனந்தாவுக்கு ஒவ்வொரு இலங்கை அரசும் வா...வா.  என்று கூப்பிட்டு அமைச்சு பதவி கொடுக்கிறார்கள்.   இதே அணுகுமுறையை தலைவர் பிரபாகரன் உடன் மேற்கொண்டு  காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்கியிருந்தால் அவரும் ஆயதம் எந்தியிருக்க வாய்ப்புகள் இல்லை  எனவே… பிரபாகரன் ஆயதம் எந்தியதுக்கு இலங்கை அரசு தான்  

3 ...வெளிநாடுகளில் நாங்கள் எல்லோரும் குடியேறவும்  காரணம் இலங்கை அரசு தான்  ...இது இலங்கை எதிரபார்க்கமால். நடந்த நிகழ்வுகள் 

4...என்ன தீர்வு தருவார்கள் என்பதையும் எடுத்து சொல்லுங்களேன்     இதுவரை அவர்கள் தந்து தமிழர்கள் வேண்டாம் என்று தட்டி கழித்து விடவில்லை   தீர்வு தரமுடியாது என்பதால் தான்  30 ஆண்டுகளுக்கு போராட்டம் நடந்தது   

5...அவர்கள் ஒன்றையும் தரதாபோது நாங்கள் எப்படி பெற முடியும்?.  

எங்கள் மீது பிழைகள் இருப்பது போல சிங்களத் தலைவர்கள் மேலும் அதிக பிழைகள் இருக்கின்றன.

சிங்களவர்கள் இன்னும் எம்மை இந்தியாவின் ஆட்டதுக்கு எல்லாம் அசைந்தாடும் ஏவல் ஆட்களாகத் தான் பார்க்கிறார்கள், அதனால்தான் நல்லதொரு தீர்வை தரத் தயங்குகின்றார்கள். அந்தப் பயத்தைத் நீரக்க வேண்டும் என்கிறேன். நம்பிக்கையை ஏற்படுத்துவதன் மூலமே அதை செய்ய முடியும்.

அந்த நம்பிக்கையை இலக்குவாக ஏற்ப்படுத்த முடியும் என்பதற்கு எங்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் உள்ள சில பழக்க வழக்கம் சார் ஒற்றுமைகளே போதும் என்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

வரலாறு தரும் பாடம்.

அத்திலாந்திக் சமுத்திரத்தின் மேலிருந்து கீழாக ஒரு கோட்டினை போட்டு, அதன் மேற்கு ஸ்பெயினும், கிழக்கே போர்த்துக்கலும் முடிந்தளவுக்கு நாடுகளை பிடிப்பதாக ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள். கிழக்கே வந்த போர்த்துக்கேயர்கள் தம்மை அசைக்க யாருமே வரமுடியாது என்று கோட்டை கொத்தளங்களை கட்டி, மக்களை வன்முறையாக மத மாற வைத்து ஆண்டார்கள்.

ஆனால் டச்சுக்காரர்கள் 17ம் நூறாண்டு தொடக்கத்தில் வந்து, முதலில் கொச்சினில் போர்த்துக்கேயரை தாக்கி அதை பிடித்து, வேகமாக இலங்கை தீவின் இரு பகுதியினையும் எடுத்துக் கொண்டார்கள். யாழ்ப்பாணத்தில், மிகப் பெரிய ஐந்து நட்ச்சத்திர கோட்டை ஒன்றையும் கட்டி தமது பாதுகாப்பினை உறுதி செய்து,  தம்மை யாருமே அசைக்க முடியாது என்று நம்பி இருந்தார்கள். 

பிரெஞ்சு - டச்சு யுத்தத்தின் மூலம், ஒல்லாந்து பிரான்சிடம் வீழ, டச்சு மன்னர் இங்கிலாந்து தப்பி ஓட, சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி, அவரிடம் எழுதி வாங்கி, பிரான்ஸ் எடுத்துவிடுவத்துக்கு முன்னால், ஒல்லாந்தின் முக்கிய காலணிகளை தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டது பிரிட்டன்.

அவ்வகையில், ஒரு வெடி கூட போடாது, கைமாறியது, இலங்கை தீவின் இரு பகுதிகளும்.

பிரான்ஸின் அதே வழியில், குறுக்கு வழியில் பிரிட்டனின் காலணிகளை மடக்க முயன்ற ஹிட்லரின் காரணமாக, பல நாடுகளுக்கு சுதந்திரம் கிடைத்தது.

அந்த சுதந்திரத்தினை, முழுவதுமாக எடுத்துக்கொண்ட சிங்களம், 1948 முதல் தன்னை யாருமே அசைக்க முடியாது என்று நினைத்துக் கொண்டு ஆட்டம் போடுகின்றது.

வரலாற்றின் பாடத்தினை பார்த்தால், 75 ஆண்டுகள்..... விரைவில் சிங்களத்தின் கையினை விட்டு போகப்போகிறது.

இலங்கையில் வரலாறில், வெளிநாட்டு சக்திகளை கடைசி வரை போராடியவர்கள், தமிழ் மன்னர்கள்: யாழ்ப்பாண சங்கிலியன், வன்னி பண்டாரவன்னியன், கண்டி கண்ணப்பன். இறுதியாக இந்திய ராணுவத்துடன் பிரபாகரன். சிங்களம் சுதந்திரத்தினை வாரிக் கொடுத்து விட்டு நின்றது. இன்றும் சீனாவும், இந்தியாவும், அமெரிக்காவும் உள்ளே வர காரணமும் சிங்களம் தான்.

ஆகவே, சிங்களத்தின் பிச்சையினை எதிர்பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியதில்லை. நமக்கு இழக்க எதுவும் இல்லை. ஆகவே அலட்டிக்கொள்ளாமல் நடப்பதை பார்ப்போம். நல்லதை எதிர்பார்ப்போம்.

உங்களின் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டேனினும் இன்னும் சிங்கள இனத்தை வெறுக்கும் மனப்பாக்கு அதில் தென்படுகிறது. அது எனக்கும் உண்டு. ஆயினும்  இந்தியா எம் இரு இனத்தவரும் நிம்மதியோடு வாழும் வாழ்வை விரும்பவில்லை என்ற உண்மை உங்களுக்கு விளங்கி இருக்கும் என்று நினைக்கின்றேன்.

ஆகவே பொது எதிரி இந்தியா. இந்தியா எம் இருவரையும் ஒருவருக்கொருவர் மோத விட்டு வேடிக்கை பார்க்கிறது. இப்படியே சிங்கள மக்களோடு பழையன மறந்து சினேகிக்க பின் நின்றால் அடுத்த இருப்பது வருடங்களில் எம் நிலைமை இன்னும் பலவீனம் அடையும்.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, பகிடி said:

இப்படியே சிங்கள மக்களோடு பழையன மறந்து சினேகிக்க பின் நின்றால் அடுத்த இருப்பது வருடங்களில் எம் நிலைமை இன்னும் பலவீனம் அடையும்.

அந்த உணர்வு சிங்களவர்க்கும் வரவேண்டும்.

இந்தியா தன்னை சுற்றி உள்ள எந்த நாடுகளுடனும் நல்லுறவில் இல்லை. எனவே அது குறித்து பேசுவது வீண் வேலை.

13 குறித்து கவலைப்பட எதுவும் இல்லை. 35 வருசத்துக்கு முன்னர் தமிழர் நிராகரித்தது. இந்திய அழுத்தத்தினால், இலங்கை அரசு நிறைவேற்றுவதாக போக்கு காட்டினாலும், பிக்குகள் வெளியே வந்து எதிர்க்கிறார்கள்.

ஆக மொத்தம், நாட்டுமக்கள் சகலரும் விரும்பாத ஒன்று தானே.

உங்களுக்கு வேண்டுமானால் நியாயமான தீர்வு குறித்து பேசுவோம். தர விரும்பாவிடில், விடுங்கள், உலக ஒழுங்கு தரும். என்பதே எமது நிலைப்பாடாக இருக்க வேண்டும்.

எனது எதிர்பார்ப்பு, மார்ச் மாதத்தின் பின்னர், ரணிலுக்கு பாராளுமன்றத்தினை கலைக்கும் அதிகாரம் வந்துவிடும். அதன் பின்னர் ஒரு தீர்வுக்கு முயலக்கூடும். எதிர்க்கும் அரசியல் வாதிகள், இராணுவத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் யுத்த குற்ற விசாரணையில் மாட்டலாம். காரணமாக நாட்டின் நிதிநிலை சரியாக வேண்டுமாயின், இதனை சர்வதேசம் வலியுறுத்துகிறது என்று சொல்வார்.

எம்மை போலவே ரணிலுக்கு இழக்க எதுவும் இல்லை என்பதால், சர்வதேசம் இதனை நோக்கியே நகரும்.

எதுவுமே வேலைக்கு ஆகாவிடில் அமெரிக்கா சொல்வதை கேட்க்கும், ராணுவ ஆட்சி இலங்கையில் வரும். அதன் பின்னர், பிக்குகளும் முடங்குவர். வாலாட்டும் இனவாதிகளும் அடங்குவர்.  

முன்பே இத்தளத்தில் சொல்லி இருக்கிறேன். பந்து, இந்தியா அவ்வாறு நினைத்தாலும் கூட, டெல்லியில் இல்லை. அது பீகிங், வாஷிங்டன் பக்கம் போய் வெகுகாலம்.

Edited by Nathamuni
மேலதிக இணைப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

@Nathamuni  மற்றும் @பகிடி  இருவரின் ஆரோக்கிய கருத்தாடல்களுக்கு நன்றி.

இந்தியா  சார்பாக ஈழத்தமிழருக்கு எவ்வித பலனும் கிட்டப்போவதில்லை என்பது வரலாறுகளும் சம்பவங்களும் கற்றுத்தந்த பாடங்கள். எனவே சிங்களத்துடன் இணைந்தால் இந்தியா எமக்கு அருகதையற்றதாகி விடும். ஏனெனில் எமது பலம் வேறு பட்டது. அந்த பலம் இலங்கைக்குள் வரட்டும். அந்த பலத்தை வைத்து  சிங்கள மக்களைப்போல் சுய உரிமையுடன் வாழலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

இஸ்ரேவேலில் இருந்து துரத்தி அடிக்கப்பட்ட யூதர்களின் பலமானது, அவர்களது பொருளாதாரத்தில் தங்கி இருந்தது.

இன்று தமிழர்கள் பலம் அவ்வாறே உருவாகின்றது.

இதுவரை 1 பில்லியன் என்று இருந்த லைக்காவில் இருந்து, 10 பில்லியன் என்று ஆயில் கம்பெனி சஞ்சய்குமார் வரை பலம் வளர்கிறது. இது இன்னும் பெருகும் போது, யூதர் பெற்ற பலம் வரும். 

***

பத்தாததுக்கு நம்ம உடான்சு சுவாமியார், சும்மா நினைக்காதீர்கள். பெரும் பண முதலை. வெளியே சொல்வதில்லை. ஆனால் அவரது சகலமும் அறிந்து ஆச்சரியம் அடைந்தேன். 😎

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, Nathamuni said:

இஸ்ரேவேலில் இருந்து துரத்தி அடிக்கப்பட்ட யூதர்களின் பலமானது, அவர்களது பொருளாதாரத்தில் தங்கி இருந்தது.

இன்று தமிழர்கள் பலம் அவ்வாறே உருவாகின்றது.

இஸ்ரேல் வளர்ச்சி அடைந்த பின் இன்று பலஸ்தீனத்திற்கு செய்யும் அட்டூழியத்தை சிங்களவர்களும் கற்பனை செய்து பார்ப்பார்கள் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் உள்ள அரச அலுவலர்கள், தனியார் ஊழியர்களுக்கும் அவற்றின் கொழும்பு தலைமையகம், வடக்கில் உள்ள அலுவலகங்கள் நன்றாக இயங்குவதாக(?), இலாபம் ஈட்டுவதாக etc etc கூறி இலவச சுற்றுலா வசதிகளை செய்து தெற்கிலும் இலங்கையின் மற்றைய இடங்களுக்கும் கூட்டிப் போகிறார்கள்.. நன்றாக அவர்களைக் கவனிக்கிறார்கள்.. நல்ல விடயம்தான்,  எங்களவர்களும் சேர்ந்து வாழலாம் என நினைக்கிறார்கள்..

அதுமட்டுமல்ல போர் முடிந்து இத்தனை வருடங்கள் ஆகியும் ஒன்றுமே நல்லது நடவாதமையாலும் இன்றைய சமூக நிலையிலும் ஏதோ தருவதைத் தந்து நிம்மதியாக இருக்கவிட்டால் காணும் என்ற நிலையிலும் இருக்கிறார்கள். அதனால்தான். ஒன்றுமே இல்லாத 13த் தாருங்கள்.. சிங்களவர்கள் நல்லவர்கள், பழக இனிமையானவர்கள், சேர்ந்து வாழலாம் .. இப்படிப் பல .. 

அவர்கள் அப்படிக் கேட்பதை/நினைப்பதைக் கூட நான் தவறாக கூறவில்லை.. ஏனெனில் அங்கே உள்ளவர்களுக்குத்தான் அங்கே உள்ள நடைமுறைச் சிக்கல்கள், வாழ்க்கையின் பிரச்சனைகள் தெரியும்..அனுபவிப்பதும் அவர்கள்தான்.. 

ஆனால் இன்று வரையும் போராடும் காணாமல் போனவர்களின் பெற்றோர் உறவுகளின் நிலை? மாவீரர்களின் தியாகங்கள்? இன்றுவரை வறுமையிலும் பல்வேறு இடர்களுக்கும் முகம் கொடுக்கும் போராளிகள் மக்கள்? இன்று எங்களது வன்முறைக் கலாச்சாரத்திற்கான தீர்வு?

இவ்வளவும் ஏன் இன்று இந்த பிக்குகளின் எதிர்ப்பிற்கு மறுப்பு தெரிவித்தோ இல்லை இனப்பிரச்சனையை தீர்க்கவேண்டும் என சாதாரண சிங்களவர்கள்கூட  முன்வரவில்லை.. 

இந்த நிலையில் யார் முதலில் நம்பிக்கையை உருவாக்க வேண்டும்? 

நான் இப்படி எழுதுவதால் இன்னொரு போர் வேண்டும் என்ற அர்த்தமில்லை.. ஆனால் எனக்குள் ஏற்படும் கேள்விகள் இவை!.. 

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, குமாரசாமி said:

இஸ்ரேல் வளர்ச்சி அடைந்த பின் இன்று பலஸ்தீனத்திற்கு செய்யும் அட்டூழியத்தை சிங்களவர்களும் கற்பனை செய்து பார்ப்பார்கள் இல்லையா?

இலங்கை மலையகத்தில், குடியமர்த்தப்பட்டவர்களை குறிக்கும் போது, Plantation Tamils என்பார்கள். பலர் இதனை பெரும் தோட்ட தமிழர்கள் என்று தவறான மொழிபெயர்ப்பு செய்வார்கள்.

Plantation என்பது, நடுவது அல்லது நட்டு விடுவது என்பதே சரியான கருத்து ஆகும். இந்த ஆங்கில சொல்லாடல் முதல் முறையாக அயர்லாந்து தேசத்தில், கத்தோலிக்கர்களிடையே, குடி அமர்த்தப்பட்ட அல்லது நட்டு விடப்பட்ட புராடெஸ்தாந்து மததினை சேர்ந்தவர்களை குறிக்க உபயோகிக்கப்பட்டது, இவர்களை பாதுகாக்கவெனவே, அந்த பகுதியினை அயர்லாந்திடம் இருந்து பிரித்து வைத்துக்கொண்டு, வட அயர்லாந்து என்று இன்றும் தன்னுடன் வைத்துக் கொண்டுள்ளது பிரித்தானியா.

அதுபோலவே, விரட்டி அடிக்கப்பட்ட இஸ்ரேலியர்களின் தேசத்தில், குடி அமர்ந்தவர்களே இஸ்லாமிய பாலத்தீனியர்கள். பல நூறாண்டுகளாக வாழ்ந்தவர்கள்.

இவர்களில் யாரு உண்மையான உரிமையாளர்கள் என்பதே பாலஸ்தீனிய, இஸ்ரேலிய பிரச்சனை. 
 
53 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இவ்வளவும் ஏன் இன்று இந்த பிக்குகளின் எதிர்ப்பிற்கு மறுப்பு தெரிவித்தோ இல்லை இனப்பிரச்சனையை தீர்க்கவேண்டும் என சாதாரண சிங்களவர்கள்கூட  முன்வரவில்லை.. 

இந்த பிக்குகள் இனவாதத்தின் பின்னால் இருப்பது மகிந்தாவும் அவர் கைத்தடிகள் சரத் வீரசேகர, விமல், உதயா போன்றவர்கள். இதனை அமெரிக்காம் கனடா அறிந்துதான் முதல் எச்சரிக்கை வேட்டு கனடாவால் தீர்க்கப்பட்டது.

அதுவும் சரி வராவிடில், அவர்கள் The Hague போகும் வகையில் சர்வதேசம் நடந்து கொள்ளும்.

சான்று, சேர்பியாவின் மிலோசொவிச். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

இவ்வளவும் ஏன் இன்று இந்த பிக்குகளின் எதிர்ப்பிற்கு மறுப்பு தெரிவித்தோ இல்லை இனப்பிரச்சனையை தீர்க்கவேண்டும் என சாதாரண சிங்களவர்கள்கூட  முன்வரவில்லை.. 

இந்த நிலையில் யார் முதலில் நம்பிக்கையை உருவாக்க வேண்டும்?

சிங்கள தரப்பிலிருந்து எந்தவொரு நல்ல சமிக்கைகளும் வராது என்பது 70 வருட அனுபவங்கள். இனியும் வரும் என எதிர்பார்த்தால் அது கோழைத்தனம் அல்லது அது வியாபாரத்தனம் இல்லையேல் சுய நலம்.

சுடாது என நினைத்து தொட்டதெல்லாம் சுட்டு விட்டது. சுடும் என நினைத்ததை இன்னும் தொடவில்லை.இழப்பதற்கு இனி எதுவுமில்லை தொட்டுத்தான் பார்க்கலாமே.

சுத்த சூனியமாக எழுதுகின்றேனா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.