Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஷ்யத் தாக்குதலால் முற்றிலும் அழிக்கப்பட்ட நகரம்… புகைப்படத்தை வெளியிட்ட உக்ரைன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யத் தாக்குதலால் முற்றிலும் அழிக்கப்பட்ட நகரம்… புகைப்படத்தை வெளியிட்ட உக்ரைன்!

03-3.jpg

உக்ரைனைச் சேர்ந்த டொனெட்ஸ்க் பகுதியிலுள்ள ஒரு நகரத்தை ட்ரோன் காட்சியாக உக்ரைன் அரசு வெளியிட்டிருக்கிறது.

உக்ரைன் மீது ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து ஒரு வருடத்துக்கும் மேலாகிறது. நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கிறது. மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களையும், வீடுகளையும் விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். உக்ரைனின் உள்கட்டமைப்புகள் படுபயங்கரமாகச் சேதப்படுத்தப்பட்டன. ஆனாலும், இன்னும் உக்ரைன் – ரஷ்யா இடையே எந்தச் சமாதான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், உக்ரைன் வெளியிட்டிருக்கிற அதிர்ச்சியூட்டும் படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டுவருகிறது.

உக்ரைனைச் சேர்ந்த டொனெட்ஸ்க் பகுதியிலுள்ள ஒரு நகரத்தை ட்ரோன் காட்சியாக உக்ரைன் அரசு வெளியிட்டிருக்கிறது. அந்தப் புகைப்படம் ரஷ்ய இராணுவம் உக்ரைனை எந்த அளவு சேதப்படுத்தியிருக்கிறது என்பதை உணர்த்துவதாக கூறப்படுகிறது. இது குறித்து உக்ரைன் வெளியுறவு அமைச்சு டுவிட்டரில், “10,000 பேர் தங்கியிருந்த டொனெட்ஸ்கிலுள்ள மரிங்கா நகரம் இப்போது எவ்வாறு மாறியிருக்கிறது என்பதை ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட காட்சிகள் காட்டுகின்றன.

02-2.jpg

மீண்டும் மீண்டும் ரஷ்யா தாக்குதல் நடத்தியதன் விளைவாக தற்போது வீடுகளின் இடிபாடுகள் குப்பைகளால் சூழப்பட்டிருக்கின்றன. ரஷ்யாவின் போர்க்குற்றவாளிகள் அதைத் தரைமட்டமாக்குவதற்கு முன்பு வரை அது அமைதி நகரமாகவே இருந்தது” எனக் குறிப்பிட்டிருக்கிறது. மரிங்காவின் பொலிஸ் அதிகாரி ஆர்டெம் ஷூஸ், “மரிங்கா நகரம் முற்றிலும் அழிந்துவிட்டது. பொதுமக்கள் அங்கு வாழ வழியில்லாத சூழலை இராணுவத்தினர் உருவாக்கிவிட்டனர்.

சேதமின்றி ஒரு கட்டிடம் கூட அங்கு இல்லை. அந்த நகரத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் ராணுவ நிர்வாகம், பொலிஸ் அதிகாரிகளால் முழுவதுமாக வெளியேற்றப்பட்டனர். இன்றைய சூழலில் அங்கு வாழ்வது சாத்தியமற்றது” எனத் தெரிவித்திருக்கிறார்.

https://thinakkural.lk/article/243935

  • Replies 132
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ஏராளன் said:

03-3.jpg

உக்ரைனைச் சேர்ந்த டொனெட்ஸ்க் பகுதியிலுள்ள ஒரு நகரத்தை ட்ரோன் காட்சியாக உக்ரைன் அரசு வெளியிட்டிருக்கிறது.

மேற்குலகே இதற்குத்தானே ஆசைப்பட்டாய்?

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா தனது நகரத்தை தரைமட்டமாக்குவதைப் பற்றி உக்கிரேன் ஏன் கவலைப்படவேண்டும்?

புட்டின் விசுவாசிகள் அல்லவா மீளக்கட்டுவதற்கான பெரும் செலவைப் பற்றிக் கவலைப்படவேண்டும்.

51 minutes ago, குமாரசாமி said:

மேற்குலகே இதற்குத்தானே ஆசைப்பட்டாய்?

இந்த அளவு குதர்க்கமாக எழுத முடியும் என்று எதிர்பார்க்கவில்லை.

படத்தில் இருப்பது உக்ரெய்னின் நகரம்.

இவ்வாறு காட்டுமிராண்டித் தனமாக அழித்தது, தன்னைச் சுற்றி நட்பு நாடுகளையோ வால் பிடிக்கும் நாடுகளையோ உருவாக்கத் தெரியாத ஒரு முட்டாள் அரசு.

போர் ஆரம்பித்ததிலிருந்து ஐரோப்பா தனது எதிர்கால வளர்ச்சித் திட்டங்களில் மாற்றமும் தீவிரமும் காட்ட ஆரம்பித்துவிட்டது. போர் முடியாமல் இழுபடுவதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம். பலமான ஐரோப்பாவுக்குள் உக்ரெயின் விரைவில் ஒன்றுசேரும். ரஸ்யாவுக்கு முன்னால் ஒருநாள் தலைநிமிர்ந்து நிற்கும். ரஸ்யா என்ற வல்லரசைத் தரம்தாழ்த்திய பெருமை புதினைச் சேரும்.

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, இணையவன் said:

அதே. 

அழிவை செய்தவனை போற்றிக்கொண்டு அழிவை சந்தித்தவனை குனியாவிட்டால் இது தான் தண்டனை என்று சொல்வது????

நன்றி இணையவன் தங்கள் நேரத்திற்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

கொடூரமான சர்வாதிகாரி புதினிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்

  • கருத்துக்கள உறவுகள்

ஏறத்தாழ இதே போல தூரப் பார்வையில் எடுக்கப் பட்ட ஒரு முள்ளிவாய்க்கால் படம் இருக்கிறது. அதை இங்கே இணைத்தால் யாரைத் திட்டுவார்கள் புட்டின் காதலர்கள் என்று யோசிக்கிறேன்!🤐

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, இணையவன் said:

இந்த அளவு குதர்க்கமாக எழுத முடியும் என்று எதிர்பார்க்கவில்லை.

படத்தில் இருப்பது உக்ரெய்னின் நகரம்.

இவ்வாறு காட்டுமிராண்டித் தனமாக அழித்தது, தன்னைச் சுற்றி நட்பு நாடுகளையோ வால் பிடிக்கும் நாடுகளையோ உருவாக்கத் தெரியாத ஒரு முட்டாள் அரசு.

போர் ஆரம்பித்ததிலிருந்து ஐரோப்பா தனது எதிர்கால வளர்ச்சித் திட்டங்களில் மாற்றமும் தீவிரமும் காட்ட ஆரம்பித்துவிட்டது. போர் முடியாமல் இழுபடுவதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம். பலமான ஐரோப்பாவுக்குள் உக்ரெயின் விரைவில் ஒன்றுசேரும். ரஸ்யாவுக்கு முன்னால் ஒருநாள் தலைநிமிர்ந்து நிற்கும். ரஸ்யா என்ற வல்லரசைத் தரம்தாழ்த்திய பெருமை புதினைச் சேரும்.

சோவியத் ஒன்றிய கலைப்பிற்கு பின்  புட்டின் உட்பட ரஷ்ய தலைவர்கள் அனைவரும் மேற்குலகின் பின் தானே சுற்றினார்கள். கம்யூனிசம் பேசாது தாராள முதலாளித்துவ கொள்கைகளை ஆதரித்தார்களே? சீனாவைப்போல் அல்லாது ஈரானைப்போல் அல்லாது ரஷ்ய நாட்டுக்குள் சகல மேற்குலக வியாபாரிகளையும் ஊடகங்களையும் உள்ளே அனுமதித்தார்களே? அப்போதெல்லாம் ரஷ்யா எல்லோருக்கும் இனித்தது.ஆனாலும் வியாபார ரீதியில் அமெரிக்காவிற்கு கசப்போ கசப்பு.

அமெரிக்கா தன் வியாபார நலனுக்காக ரஷ்யாவை வேறொரு கோணத்தில் எதிர்க்க ஆரம்பித்து அதில் வெற்றியும் கண்டுவிட்டது.அதாவது ஐரோப்பா எதை ரஷ்யாவிடமிருந்து வாங்கியதோ அதை அமெரிக்கா  இரட்டிப்பு விலையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விற்பனை செய்கின்றது.அது எம்மவர்க்கு  விளங்க மாட்டேன் என்கிறது. அத்துமீறல் ஜனநாயகம் என மேற்குலக ஊடகங்கள் சொல்வதையே இவர்களும் சொல்கிறார்கள்.

இதுவும் அழிவுதான்.ஆனால் இதைப்பற்றி மேற்குலக விசுவாசிகளும் ஊடக தர்மகர்த்தாக்களும் பேசவே மாட்டார்கள்.எனெனில் இது பேக் நியூஸ் கொம்பனி தயாரித்தது.

Bild

11 minutes ago, குமாரசாமி said:

அதாவது ஐரோப்பா எதை ரஷ்யாவிடமிருந்து வாங்கியதோ அதை அமெரிக்கா  இரட்டிப்பு விலையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விற்பனை செய்கின்றது.அது எம்மவர்க்கு  விளங்க மாட்டேன் என்கிறது.

அமெரிக்க ரஸ்ய பிரச்சனைக்குள் இவ்வளவு ஈடுபாடாக உள்ளீர்கள். இதை வைத்துத்தான் எல்லாத் திரிகளிலும் அமெரிக்காவைத் திட்டித் திரிகின்றீர்கள் என்று நினைக்கிறேன். இது இந்தத் திரிக்குச் சம்பந்தமில்லாவிட்டாலும் ஒருவருக்கும் விளங்காத (உங்களுக்கு விருப்புப் புள்ளி இட்டவர் உட்பட), உங்களுக்கு மட்டும் விளங்கிய விடயத்தை விபரமாகக் கூறுங்கள் விவாதிப்போம் 🙂.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
45 minutes ago, விசுகு said:

அழிவை செய்தவனை போற்றிக்கொண்டு அழிவை சந்தித்தவனை குனியாவிட்டால் இது தான் தண்டனை என்று சொல்வது????

நாங்கள் அழிவை போற்றவில்லை.போற்றும் மண்ணிலிருந்தும் வரவில்லை.
ஏனைய இடங்களில் அழித்து/அழித்துக்கொண்டு இதை அழிவு என நாடகம் போடுகின்றானே அதைத்தான்,அதற்காகத்தான் எதிர்க்கின்றோம்.

தங்களுக்குள் ஏதாவது என்றால் இரத்தம்.மற்றவனுக்குள் என்றால் தக்காளி ஜூஸ்.

விசுகர்! இங்களுக்கு இந்த இடத்தில் இன்னுமொன்றை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். மானம் மனிதாபிமானங்களுக்கு அப்பால் இலங்கை விடயத்தில் இந்தியாவை மீறி எந்த நாடும் தலை வைத்து படுக்காது.
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, இணையவன் said:

உங்களுக்கு விருப்புப் புள்ளி இட்டவர் உட்பட),

இதைத்தான் நான் விருப்ப புள்ளிமுறை வந்தகாலம் தொடக்கம் சொல்வது. புள்ளி இட்டவரை  சாடாதீர்கள். கருத்து விவாதங்கள் கருத்திட்டவருடன் மட்டுமே இருக்க வேண்டும். விருப்ப புள்ளி இட்டவர் நான் எழுதியதை வேறு விதமாகவும் விளங்கியிருக்க சந்தர்ப்பம் உண்டு.

எனவே நீங்கள் புள்ளி விடயங்களில் நடுநிலையாக இருக்கலாம் என நான் நினைக்கின்றேன். குழுவாதம் வேண்டாம் என்று விட்டு குழுவாதத்தை உருவாக்காதீர்கள்.
நான் தனி மனிதன் என்னுடன் எனது கருத்தை மட்டும்  வைத்து விவாதியுங்கள்:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

இந்த அளவு குதர்க்கமாக எழுத முடியும் என்று எதிர்பார்க்கவில்லை.

படத்தில் இருப்பது உக்ரெய்னின் நகரம்.

இவ்வாறு காட்டுமிராண்டித் தனமாக அழித்தது, தன்னைச் சுற்றி நட்பு நாடுகளையோ வால் பிடிக்கும் நாடுகளையோ உருவாக்கத் தெரியாத ஒரு முட்டாள் அரசு.

போர் ஆரம்பித்ததிலிருந்து ஐரோப்பா தனது எதிர்கால வளர்ச்சித் திட்டங்களில் மாற்றமும் தீவிரமும் காட்ட ஆரம்பித்துவிட்டது. போர் முடியாமல் இழுபடுவதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம். பலமான ஐரோப்பாவுக்குள் உக்ரெயின் விரைவில் ஒன்றுசேரும். ரஸ்யாவுக்கு முன்னால் ஒருநாள் தலைநிமிர்ந்து நிற்கும். ரஸ்யா என்ற வல்லரசைத் தரம்தாழ்த்திய பெருமை புதினைச் சேரும்.

உங்ககளுக்கு விளங்குது நன்றி .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
33 minutes ago, Justin said:

ஏறத்தாழ இதே போல தூரப் பார்வையில் எடுக்கப் பட்ட ஒரு முள்ளிவாய்க்கால் படம் இருக்கிறது. அதை இங்கே இணைத்தால் யாரைத் திட்டுவார்கள் புட்டின் காதலர்கள் என்று யோசிக்கிறேன்!🤐

யாழ்களத்தில் அந்த முள்ளிவாய்க்கால் சம்பவம் வரைக்கும் யார்ப்பக்கம் யாருக்கு ஆதரவாக இருந்தீர்கள்?

அதாவது முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் அழிக்கப்பட்ட மக்களும் விடுதலைப்போராளிகளும் அழிக்கப்பட வேண்டியவர்கள் என அர்த்தம் கொள்ளலாம்.

3 minutes ago, குமாரசாமி said:

இதைத்தான் நான் விருப்ப புள்ளிமுறை வந்தகாலம் தொடக்கம் சொல்வது. புள்ளி இட்டவரை  சாடாதீர்கள். கருத்து விவாதங்கள் கருத்திட்டவருடன் மட்டுமே இருக்க வேண்டும். விருப்ப புள்ளி இட்டவர் நான் எழுதியதை வேறு விதமாகவும் விளங்கியிருக்க சந்தர்ப்பம் உண்டு.

எனவே நீங்கள் புள்ளி விடயங்களில் நடுநிலையாக இருக்கலாம் என நான் நினைக்கின்றேன். குழுவாதம் வேண்டாம் என்று விட்டு குழுவாதத்தை உருவாக்காதீர்கள்.
நான் தனி மனிதன் என்னுடன் எனது கருத்தை மட்டும்  வைத்து விவாதியுங்கள்:

மீண்டும் குழு வாதத்தைச் சுட்டிக் காட்டத்தான் அப்படி எழுதினேன். விரும்பினால் சம்பந்தப்பட்டவர் விருப்புப் புள்ளி போடும் அளவுக்கு என்ன விதமாக விளங்கிக் கொண்டார் என்று கூறலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, இணையவன் said:

மீண்டும் குழு வாதத்தைச் சுட்டிக் காட்டத்தான் அப்படி எழுதினேன். விரும்பினால் சம்பந்தப்பட்டவர் விருப்புப் புள்ளி போடும் அளவுக்கு என்ன விதமாக விளங்கிக் கொண்டார் என்று கூறலாம்.

அப்படியா? 
அப்போ உங்களுக்கு வந்த விருப்பு புள்ளிகள் குழுவாதமாக தெரியவில்லையா?

2 minutes ago, குமாரசாமி said:

அப்படியா? 
அப்போ உங்களுக்கு வந்த விருப்பு புள்ளிகள் குழுவாதமாக தெரியவில்லையா?

இல்லை. உங்களைப்போல் இரண்டு வரி வசனத்துக்கும் விருப்புப் புள்ளி போடும் அளவிற்கு எனக்குக் குழு இல்லை என்பதை இந்தத் திரியிலேயே அவதானிக்கலாம். 😂

இதே விருப்புப் புள்ளிகள் பயனுள்ள எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்குப் பயன்பட்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
49 minutes ago, Justin said:

ஏறத்தாழ இதே போல தூரப் பார்வையில் எடுக்கப் பட்ட ஒரு முள்ளிவாய்க்கால் படம் இருக்கிறது.

final war satellite images of mullivaikkal | ஈழவிம்பகம்\ Eelam Images

இரண்டுமே அழிவுகள் தான்.

ஒன்று அமெரிக்க ஆசியுடன் நிர்கதியாக்கி விட்டு அழித்தது.

மற்றது அமெரிக்க ஏகாதிபத்திய போட்டியால் அழிவை வாங்கியது.

03-3.jpg

3 minutes ago, இணையவன் said:

இல்லை. உங்களைப்போல் இரண்டு வரி வசனத்துக்கும் விருப்புப் புள்ளி போடும் அளவிற்கு எனக்குக் குழு இல்லை என்பதை இந்தத் திரியிலேயே அவதானிக்கலாம். 😂

இதே விருப்புப் புள்ளிகள் பயனுள்ள எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்குப் பயன்பட்டிருக்கலாம்.

மணி...👍😂

இதையே தான் மேற்குலக ஊடகங்களும் செய்கின்றன. அதையே நீங்களும் செய்கின்றீர்கள்.

நான் யாழில் இணைந்த காலம் தொடக்கம் சொல்ல வந்த செய்தியை ஒரு வரியில் சொல்லி விடுவது வழக்கம். ஒரு சிறிய கருத்தை சொல்வதற்கு பந்தி பந்தியாக எழுதி நேரத்தை வீணாக்க விரும்புவதில்லை.
அதாவது தலையை சுற்றி மூக்கை தொடுபவனல்ல நான்.:cool:

4 minutes ago, குமாரசாமி said:

இரண்டுமே அழிவுகள் தான்.

ஒன்று அமெரிக்க ஆசியுடன் நிர்கதியாக்கி விட்டு அழித்தது.

அழித்தது யார் ?
எப்படித் தவிர்த்திருக்கலாம் ?
 
5 minutes ago, குமாரசாமி said:

மற்றது அமெரிக்க ஏகாதிபத்திய போட்டியால் அழிவை வாங்கியது.

அழித்தது யார் ?
எப்படித் தவிர்த்திருக்கலாம் ?
இந்தக் கடைசி கேள்விக்கு, ஹிட்லர் பிரான்சைத் தாக்க வரும்போது எதிர்க்காமல் சரனடைந்து பின்னர் வேறு நாடுகளின் உதவியுடன் வெற்றிகொண்டதுபோல் ரஸ்யா தாக்க வரும்போது சரனடைந்திருக்க வேண்டும் என்று நீங்கள் ஒரு திரியில் எழுதியுருந்தீர்கள். இதையே மேலுள்ள கேள்விக்கும் விடையாக எடுக்கலாமா ? 🙂

14 minutes ago, குமாரசாமி said:

நான் யாழில் இணைந்த காலம் தொடக்கம் சொல்ல வந்த செய்தியை ஒரு வரியில் சொல்லி விடுவது வழக்கம். ஒரு சிறிய கருத்தை சொல்வதற்கு பந்தி பந்தியாக எழுதி நேரத்தை வீணாக்க விரும்புவதில்லை.
அதாவது தலையை சுற்றி மூக்கை தொடுபவனல்ல நான்.:cool:

சரி அண்ணை, நான் மேலே கேட்டதுக்கு விளக்கத்தை முத்தாக 4 வரியிலாவது சொல்லிவிடுங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, இணையவன் said:

அழித்தது யார் ?
எப்படித் தவிர்த்திருக்கலாம் ?
 
அழித்தது யார் ?
எப்படித் தவிர்த்திருக்கலாம் ?
இந்தக் கடைசி கேள்விக்கு, ஹிட்லர் பிரான்சைத் தாக்க வரும்போது எதிர்க்காமல் சரனடைந்து பின்னர் வேறு நாடுகளின் உதவியுடன் வெற்றிகொண்டதுபோல் ரஸ்யா தாக்க வரும்போது சரனடைந்திருக்க வேண்டும் என்று நீங்கள் ஒரு திரியில் எழுதியுருந்தீர்கள். இதையே மேலுள்ள கேள்விக்கும் விடையாக எடுக்கலாமா ? 🙂

இலங்கை தமிழர் விடயத்தில் சரணடைந்த பின்னர் அழித்தார்கள்.
உக்ரேன் விடயத்தில் பேச்சுவார்தையே நடக்கக்கூடாது என்ற பதத்தின் கீழ் அழிவை வாங்குகின்றார்கள்.
டொனால்ட் ரம்ப் செலென்ஸ்கிக்கு புத்திமதி சொல்ல பைடன் வந்து புட்டினை கொலையாளி என்றார். அரசியல் புரிகின்றதா?

  • கருத்துக்கள உறவுகள்

அழிப்பவன் விளாடிமிர் புதின் தெய்வம். அழிவை தவிர்பது என்றால் அந்த தெய்வத்திற்கு காவடி எடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சோவியத் ஒன்றிய கலைப்பிற்கு பின்  புட்டின் உட்பட ரஷ்ய தலைவர்கள் அனைவரும் மேற்குலகின் பின் தானே சுற்றினார்கள். கம்யூனிசம் பேசாது தாராள முதலாளித்துவ கொள்கைகளை ஆதரித்தார்களே? சீனாவைப்போல் அல்லாது ஈரானைப்போல் அல்லாது ரஷ்ய நாட்டுக்குள் சகல மேற்குலக வியாபாரிகளையும் ஊடகங்களையும் உள்ளே அனுமதித்தார்களே? அப்போதெல்லாம் ரஷ்யா எல்லோருக்கும் இனித்தது.ஆனாலும் வியாபார ரீதியில் அமெரிக்காவிற்கு கசப்போ கசப்பு.

அமெரிக்கா தன் வியாபார நலனுக்காக ரஷ்யாவை வேறொரு கோணத்தில் எதிர்க்க ஆரம்பித்து அதில் வெற்றியும் கண்டுவிட்டது.அதாவது ஐரோப்பா எதை ரஷ்யாவிடமிருந்து வாங்கியதோ அதை அமெரிக்கா  இரட்டிப்பு விலையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விற்பனை செய்கின்றது.அது எம்மவர்க்கு  விளங்க மாட்டேன் என்கிறது. அத்துமீறல் ஜனநாயகம் என மேற்குலக ஊடகங்கள் சொல்வதையே இவர்களும் சொல்கிறார்கள்.

இதுவும் அழிவுதான்.ஆனால் இதைப்பற்றி மேற்குலக விசுவாசிகளும் ஊடக தர்மகர்த்தாக்களும் பேசவே மாட்டார்கள்.எனெனில் இது பேக் நியூஸ் கொம்பனி தயாரித்தது.

Bild

ஒரே ஒரு படம் ஆயிரம் அர்த்தங்கள். 👏

இந்தப் படத்துடன் முள்ளிவாய்க்கால் படங்கலையும் இணைக்கலாம். ஏனென்றால் இவர்களது கண்முன்தான் முள்ளிவாய்க்கால் அழிக்கப்பட்டது. அதற்கு சாட்சி இருக்கக் கூடாது என்பதற்காக சகல NGO க்களையும் வெளியேற்றிவிட்டுத்தான் அழித்தார்கள். அண்மையில் இலங்கை நீதிஅமைச்சர் அலி சப்றி அமெரிக்கப் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில்தான் விபு க்களின் ஒன்பது கப்பல்களையும் அழித்ததாகக் கூறியிருந்தார். 

எனவே இவர்களது சம்மதத்துடன்தான் நாங்கள் அழிக்கப்பட்டோம் என்பதில் 100% உண்மை இருக்கிறது.  அதனால் முள்ளிவாய்க்கால் படத்தையும் இங்கே இணண்ப்பதில் தவறில்லை  என்பேன். 

(இங்கே கட்டடங்கள் மட்டும்தான்  அழிக்கப்பட்டுள்ளன. ஆனால் முள்ளிவாய்க்காலில் 150,000 மக்கள் கொல்லப்பட்டதை இங்கே முள்ளிவாய்க்கால் படத்தை இணைக்க விரும்பும் புத்திசாலிகளுக்குப் புரியாது)

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேன் அழிக்கப்பட்டது உக்ரேனின் குற்றம், ஏனென்றால் உக்ரேன் தான் தன்னை ரஸ்ஸியா அழிக்கும்படி ஆசைப்பட்டது.

அதேபோல், ஈழத்தமிழினம் அழிக்கப்பட்டதும் ஈழத்தமிழனின் குற்றம். இலங்கையும் இந்தியாவும் தம்மை அழிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டது அவர்கள் தான்.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பிரபாகரா?? என்று எழுதுமளவிற்கு இறங்கியிருக்கிறோம்.

இந்தியாவின் பாதுகாப்பிற்கு புலிகள் அழிக்கப்படவேண்டும் என்றும் எழுதிய அதே போலித்தேசியவாதிகள் தான் இன்றும் முள்ளிவாய்க்காலில் முடியவேண்டும் என்று ஆசைப்பட்டது ஈழத்தமிழர்கள் என்று எழுதுகிறார்கள்.  

ஆக, இன்று உலகில் அழிக்கப்படும் இனங்கள் எல்லாம் அவர்களின் ஆசையினால்த்தான் அழிக்கப்படுகிறார்கள். அழிப்பவன் மேல் எந்தக் குற்றமும் இல்லை. 

4 hours ago, Justin said:

ஏறத்தாழ இதே போல தூரப் பார்வையில் எடுக்கப் பட்ட ஒரு முள்ளிவாய்க்கால் படம் இருக்கிறது. அதை இங்கே இணைத்தால் யாரைத் திட்டுவார்கள் புட்டின் காதலர்கள் என்று யோசிக்கிறேன்!🤐

அதை நீங்கள் இணைத்துவிடக்கூடாதென்பதற்காக ஒருவர் அவசரப்பட்டு, தானே இணைத்து, அதனையும் சரியென்று வாதாட, இன்னொருவர் படத்தை இணைக்க விரும்புவோருக்கு என்று விழித்து, "மக்களும் தான் கொல்லப்பட்டார்கள்" என்று ஜால்றா அடிக்கிறார். தாம் கக்கியதையே அள்ளி மீள வாயில் போடுமளவிற்குச் சில விசுவாசிகள் வந்திருக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை விசுவாசம், உண்மைகளைப் பார்க்க விடாது பலரின் கண்களை மறைக்கிறது. அவர்கள்  சிற்னியில் இருந்தால் என்ன, அமெரிக்காவில்  இருந்தாலென்ன, உண்மைகளை மறுத்துரைக்கும் துணிவற்று தரம் இறங்கி வன்மத்தை கக்குகிறது. 

இந்தக் கூட்டம் எப்போதும் அம்பை மட்டுமே நோக்கும். எய்தவனை விட்டுவிடுவார்கள். ஏனென்றால் அவர்கள் சேவகம் செய்யும் அடிமை மனநிலை அப்படி. 

முள்ளிவாய்க்காலை இங்கே இழுத்துவிட்டு வேடிக்கை பார்ப்பவரை கேள்வி கேட்டும் நேர்மை இங்கே மிகச் சிலருக்கு மட்டுமே இருக்கிறது.  

  • கருத்துக்கள உறவுகள்

24ஆம் புலிகேசிக்கு டாங்கிகளை கொண்டுவந்து வரிசை கட்டி விடுகிறோம் என்று ஜெர்மனி பிரிட்டன் அமெரிக்காவும் ஒரு மாதம் முன்பு முண்டி அடித்தார்கள் 

இப்போ நொண்டி அடிக்கிறார்கள்.

இவர்களின் ஆயுதவியாபாரம் இத்துடன் முடிவுக்கு வருகிறதா? 
அரசியல் களம் மாறுகிறதா? ஐரோப்பிய செய்திகளில் என்ன சொல்கிறார்கள்? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.