Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

புளியமர நிழலில் ஏழு மாணவருடன் துவங்கி 200வது ஆண்டில் நுழையும் யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி 

IMG-20230313-071919.jpg

இலண்டனில் இருந்து ஜோசப் நைட் அடிகளும் அவரது குழாமும் 1818 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நல்லூரில் தங்கள் கல்விபபணிகளைத் தொடங்கினர். ஆங்கில மிஷனரிமார்களுள் ஈழத்து யாழ்ப்பாணத்தில் முதல் பாதம் பதித்தவர் வண.ஜோசப் நைட் அடிகளார் ஆவார்.

அன்று விதைத்த விதையே இன்றைய சென் ஜோன்ஸ் கல்லூரியின் 200 வது வருடம் என்ற நீண்ட நெடிய உயர்ந்த வளர்ச்சிக்கு காரணமாய் அமைந்தது. பாரெங்கும் புகழ் பரப்பி, பல கிளைவிட்டு விருட்சமாய் வியாபித்திருக்கும் யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி 200ஆவது ஆண்டினை தற்போது பூர்த்தி செய்கிறது.

இலங்கையின் கல்வி மறுமலர்ச்சியில் ஆங்கில மிஷனரிமார்களின் வருகை அக்காலத்தில் முக்கிய பங்கு வகித்தது. குறிப்பாக ஒழுக்க விழுமியங்கள், தொழில் நுட்ப அறிவு, ஆங்கிலக் கல்வி என்பன மேலோங்கிக் காணப்பட்டன.

இன்று யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி
உலகெங்கும் பிரகாசித்துக் கொண்டிருக்கும் வண்ணமாய், அக்கல்லூரி மாணவர்களின் திறமை போற்றப்படுகிறது. இக்கல்லூரியின் ஆரம்ப வரலாற்றை சற்று பின்நோக்கிப் பார்த்தால், இப்பாடசாலையின் பரிணாம வளர்ச்சியை அறியலாம்.

ஏழு மாணவருடன் முதல் பள்ளி:

1823 இல் தன் வீட்டிலேயே ஏழு மாணவர்களுடன் சிறந்ததொரு பள்ளியை அமைத்து அம் மாணவர்களுக்கான வாழ்வாங்கு வாழ கல்வியை ஆரம்பித்தார். 1824இல் பதின்மூன்று மாணவர்களையும் 1825இல் முப்பது மாணவர்களையும் கொண்டு இப்பள்ளி வளர்ச்சி பெற்றது.

இதன்பின் 1824 இல் ஜோசப் நைற் அவர்களிடமிருந்து வண வில்லியம் அட்லி (Rev.William Adley) பொறுப்பேற்றார். இவர் ஒரு திறமையுள்ள ஆங்கில அறிவும் தமிழ் அறிவும் நிறைந்தவராகவும் காணப்பட்டார். 1839 முதல் 1841 வரை D.W.Tailor என்பவர் வில்லியம் அட்லி அவர்களைத் தொடர்ந்து பொறுப்பேற்றார்.

1841 காலப்பகுதியில் பெண்கள் தங்கியிருந்து கற்பதற்காக தனியார் விடுதியாக நல்லூர் ஆங்கில செமினரி மாற்றம் நடந்தது. அவ்வாண்டிலேயே நல்லூர் ஆங்கில செமினரி சுண்டிக்குளிக்கு இடமாற்றம் பெற்று சுண்டிக்குளி செமினரி எனவும் பெயர் மாற்றம் பெற்றது.

புளியமர நிழலில் வகுப்புகள்:

ஆரம்ப நிலையில் வகுப்பறை வசதியின்மையால் ஓங்கி வளர்ந்த புளியமர நிழலிலேயே வகுப்புகள் நடத்தப்பட்டன. அக்காலத்தில் Rev.J.T.Johnstone அதிபராகப் பணியேற்றார். அவருடன் இணைந்து John Hensman அவர்கள் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார்.
அவரைத் தொடர்ந்து Rev.Robert William அவர்கள் தலைமை ஆசிரியராகப் பொறுட்பேற்றார். ஆயினும் 1866 இல் கொடிய நோய் காரணமாக அவர் இயற்கை எய்தினார்.
அதன் பின் J.Evarts 1867 – 1878 வரை தலைமை ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார்.

ராபர்ட் வில்லியம்ஸ் நினைவு மண்டபம்:

1866 ஆம் ஆண்டில் நாட்டைப் பேரழிவிற்குள்ளான காலரா தொற்றுநோய் காரணமாக, ராபர்ட் வில்லியம்ஸ் தனது 8 வயது மகனை இழந்தார். அவரும் காலரா நோயால் பாதிக்கப்பட்டு தீவிர நோய்வாய்ப்பட்டு அக்டோபர் 10, 1866 இல் காலமானார். திரு. ராபர்ட் வில்லியம்ஸ் நோயுற்ற படுக்கையில் மானிப்பாய் கிரீன் மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டார்.

இலங்கைத் தீவின் இரண்டாவது பழமையான செய்தித்தாளான மார்னிங் ஸ்டார் மற்றும் முதல் தமிழ் மொழி செய்தித்தாள் உதயதாரகை அவரது மரணச் செய்தியை அப்போது வெளியிட்டன. அவரது அகால மறைவைக் குறிப்பிடுகையில், “ராபர்ட் வில்லியம்ஸ் தனது பூமிக்குரிய கடமைகளை பொறுப்புடன் நிறைவேற்றி கடவுளின் அருளால் யாழ் மக்கள் மனதில் நுழைந்தார். அவரது மரணம் சுண்டிக்குளி செமினரிக்கு ஒரு பெரிய இழப்பாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இவர் நினைவாகவே தற்போது புதிய மண்டபம் 200வது ஆண்டில் திறக்கப்பட உள்ளது.

சிறு விதை பெரு விருட்சமாக :

இத்தகைய கல்விப் பணியாளர்களின் தன்நலமற்ற சேவையாலும் அயராத உழைப்பாலும் விதைக்கப்பட்ட சிறு விதை இன்று பெரு விருட்சமாக ஓங்கி வளர்ந்து பல்லாயிரம் பேருக்கு நிழல் கொடுக்கின்ற ஒரு ஸ்தாபனமாக மிளிர்கின்றது.

இங்கிலாந்து திருச்சபையின் இறுதி மிசனரியாளரும், கல்லூரியின் பதினாறாவது அதிபருமான அருட்திரு ஹென்றி பிற்றோ அடிகளார் கல்லூரியின் அதிபராக இருந்தபோது கல்லூரி மேலும் ஓங்கி வளர்ந்தது.

அருட்திரு ஹென்றி பிற்றோவின் (1920-1940) பின்னர், முதலாவது தேசிய அதிபர் என்னும் அந்தஸ்தினைப் பெற்ற அருட்திரு J.T.அருளானந்தம் (1940-1957), திரு.P.T.Mathai (1957-1959), திரு.A.W. ராஜசேகரம் (1959-1966) திரு.க.பூரணம்பிள்ளை (1967-1976),திரு.சி.இ.ஆனந்தராஜன்(1976-1985) திரு.குணசீலன் (1985-1987), திரு. தனபாலன் (1990-2006), திரு. ஞானப்பொன் ராஜா(2006-2017), தற்போது திரு. துஷிதரன் ஆகியோர் அதிபர்களாக பணியாற்றி உள்ளனர்.

மகாத்மா காந்தி வருகை :

இக்கல்லூரியிலேயே 1927 நவம்பர் 29இல் இந்திய தேசபிதா மகாத்மா காந்தி கல்லூரிக்கு வருகை தந்து, வில்லியம் மண்டபத்தில் உரையாற்றிய வரலாறும் உண்டு.

ஆயினும் 1945ல் நடைமுறைக்கு வந்த அன்றைய இலவசக் கல்வித் திட்டத்துடன் இணைந்து செயற்படாது தனித்துவமாக வெளியே இருக்க தீர்மானித்தது. மீண்டும் பல்வேறு நோக்கங்களுக்காக 1951ல் இலவச கல்வித் திட்டத்தில் இக் கல்லூரி இணைந்து கொண்டது.

கல்லூரி எதிர்கொண்ட சவால்கள் :

1960ல் அரசு பாடசாலைகளைக் கையகப்படுத்தி பொதுமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது. அதன் பிரகாரம் இக்கல்லூரியையும் அரசாங்கப் பாடசாலையாக்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டது. கல்லூரி தன் தனித்துவத்தை இழக்க விரும்புவதைத் தவிர்த்து, தனித்து இயங்க முற்பட்டது.

பல்வேறுபட்ட தியாகங்கள், சோதனைகள், வேதனைகள் போராட்டங்கள்,மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள். நலன் விரும்பிகள் என பல்வேறு பட்டவர்களின் மேலான ஒத்துழைப்பினாலும், பக்கபலத்தினாலும் சென்.ஜோன்ஸ் கல்லூரியைத் தனியார் பாடசாலையாக இயங்குவதற்கு தீரமானிக்கப்பட்டது.

கல்லூரி நிர்வாகத்தை ஆளுகை செய்வதற்கு ஆளுகைக்குழுவும் ஆலோசனை வழங்குவதற்கு ஆலோசனை சபையும் உருவாக்கப்பட்டது.

அரச உதவிகள் தடைப்பட்டமையினால் கல்லூரி நிர்வாகம் பாரிய நிதிப்பற்றாக் குறையை எதிர்கொண்டது. ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கமுடியாது திண்டாடியது. கல்லூரியிலிருந்து வெளியேறினர் சிலர் பாதிவேதனத்தில் பணிபுரிந்தனர் பலர் இலவசமாகவும் பணியாற்றினர்.

பல்வேறு அளப்பெரும் ஆளுமைகளால் வளர்க்கப்பட்ட ‘பரியோவான் கழுகு’ (Johnian Eagle) தன் கூரிய பார்வையுடன் நேரிய இலக்கை நோக்கி உயரப் பறந்து வருகிறது.

– ஐங்கரன் விக்கினேஸ்வர

https://vanakkamlondon.com/stories/2023/03/187748/

  • Like 2
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன திரி காற்று வாங்குது.. வாழ்த்து சொல்ல.. மலரும் நினைவுகளை பகிர பழைய மாணவர்கள் யாரும் யாழ் களத்தில் இல்லையோ..

ஒரு வேளை மேல்தட்டு/பீஸ் அதிகம் வாங்குற கல்லூரியோ..😢

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

என்ன திரி காற்று வாங்குது.. வாழ்த்து சொல்ல.. மலரும் நினைவுகளை பகிர பழைய மாணவர்கள் யாரும் யாழ் களத்தில் இல்லையோ..

ஒரு வேளை மேல்தட்டு/பீஸ் அதிகம் வாங்குற கல்லூரியோ..😢

 புரட்சியர்! அங்கை படிச்ச ஆக்கள் இஞ்சை இல்லையெண்டு நினைக்கிறன் :beaming_face_with_smiling_eyes:

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

19 ம் நூற்றாண்டிலேயே  தமிழரின் கல்வி முயற்சிகள் பெருமை தருவதாக உள்ளது. இதனை உருவாக்கி தமிழரின் கல்வி வளச்சசிக்கு உறுதுணையாக இருந்த ஜோசெப் நைற், வில்லியம் அட்லி, ரொபேட் வில்லியம்ஸ் போன்றவர்களை நன்றியுடன் நினைவு கொள்வோம்.  எமது கலவி தரத்தை  தொடர்ந்து உயர்ததுவதன் மூலமே பேரினவாதிகளின் அடக்குமுறைகளை முறியடித்து மேலெள முடியும். 

1850 காலப்பகுதியில் யாழில் ஏற்பட்ட பாரிய கொலரா நோய்ததொற்று பல ஆயிரக்கணக்கான மக்களை பலி கொண்டதாக வாசித்த ஞாபகம். இணைப்புக்கு நன்றி @புரட்சிகர தமிழ்தேசியன்
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த வருடம் ஒன்று கூடலுக்காக வெளிநாடுகளில் இருந்து 3000 பேர் போயிரக்கிறார்கள் என நண்பர் ஒருவர் சொன்னார்.

டாலர் வீழ்ச்சிக்கு காரணம் இப்படியான நிகழ்வுகளாகவும் இருக்கலாம்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்த வருடம் ஒன்று கூடலுக்காக வெளிநாடுகளில் இருந்து 3000 பேர் போயிரக்கிறார்கள் என நண்பர் ஒருவர் சொன்னார்.

டாலர் வீழ்ச்சிக்கு காரணம் இப்படியான நிகழ்வுகளாகவும் இருக்கலாம்.

புளிய மர நிழலில் ஆரம்பித்த பள்ளி இன்று டொலரின் வீழ்சசிக்கு காரணமாக அமைந்துள்ளது. கேட்கவே புல்லரிக்குது ஈழப்பிரியன். 😂

  • Haha 1
Posted

Win or lose, we always play the game! என்பது எங்களின் தாரக மந்திரம். எடுத்துக் கொள்ளும் எந்த விடயத்தையும் அடித்து ஆட முற்படும் மனநிலையை எனக்குள் / எமக்குள் ஏற்படுத்தியதில் பரியோவான் கல்லூரிக்கும் மிகப்பெரிய பங்குண்டு.

இங்கு ஒரு ஒவ்வொரு வகுப்பிலும் படித்தவர்களில் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலர் மட்டுமே வாழ்வில் முன்னேறாமல் (அதுவும் தம் பழக்கவழக்கங்களால்) பின் தங்க, மிச்சமுள்ளவர்கள் (க.பொ.த உயர்தரத்தில் மிகக் குறைவான புள்ளிகள் எடுத்தவர்கள் உட்பட) எப்படியாவது முன்னேறி நல்ல நிலையில் இருப்பர்.

இங்கு கற்று பின் புலிகளில் இணைந்து கரும்புலிகளாகவும் பொறுப்பாளர்களாகவும் களமாடி மாவீரர்களான பலர் உள்ளனர். தமிழ் மக்களுக்காக வடக்கு கிழக்குக்கு அப்பால் வாழ்ந்து உயிர் விட்ட மாமனிதர் ரவிராஜ் உட்பட பலர் இங்கு கல்வி கற்று உள்ளனர்.

2009 இன் பின் வன்னியில் போரால் பாதிக்கப்பட்ட ஏராளமான மாணவர்களை தனக்குள் அரவணைத்து, வாய்ப்புக் கொடுத்து அவர்களை முன்னேற்றியதிலும் என் கல்லூரி முன்னிற்கின்றது.

மேட்டுக்குடித் தன்மையான கல்லூரி என்பதால் பல 'ஒதுக்கல்களும்' அங்கு உள்ளது என்பதும் குறிப்பிடப்பட வேண்டும். 

@goshan_che, @முதல்வன் உட்பட யாழ் பல உறுப்பினர்கள் இங்குதான் கல்வி கற்றவர்கள் என நினைக்கின்றேன்.

14 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்த வருடம் ஒன்று கூடலுக்காக வெளிநாடுகளில் இருந்து 3000 பேர் போயிரக்கிறார்கள் என நண்பர் ஒருவர் சொன்னார்.

என்னுடைய batch இல் இருந்து மட்டும் கிட்டத்தட்ட 50 பேர் போனார்கள் (வேலைபளுவால் நான் போகவில்லை)

  • Like 3
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாங்கள் அவ்வழியால் அடிக்கடி போய் வருவது வழக்கம். ஆனால் மழை பெய்தாலும் ஒதுங்கியதில்லை தோழர்........!  😁

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, island said:

புளிய மர நிழலில் ஆரம்பித்த பள்ளி இன்று டொலரின் வீழ்சசிக்கு காரணமாக அமைந்துள்ளது. கேட்கவே புல்லரிக்குது ஈழப்பிரியன். 😂

3000 பேர் ஒரே நேரத்தில் ஆளாளுக்கு 1000 டாலர் மாற்றினாலே 3000000 டாலர்கள் அதனால் சொன்னேன்.

குறைந்தது 1000 இன்னும் கூட செலவு செய்திருப்பார்கள்.

20 minutes ago, நிழலி said:

என்னுடைய batch இல் இருந்து மட்டும் கிட்டத்தட்ட 50 பேர் போனார்கள் (வேலைபளுவால் நான்

எனது நண்பர் சொன்னது தவறாக இரக்குமோன்று எண்ணினேன்.

இப்போ உங்கள் தகவல்களைப் பார்த்தால் உண்மையாகவே இருக்கும்.

7 minutes ago, suvy said:

நாங்கள் அவ்வழியால் அடிக்கடி போய் வருவது வழக்கம். ஆனால் மழை பெய்தாலும் ஒதுங்கியதில்லை தோழர்........!  😁

சுவி நாங்க யாழ் இந்துவுக்கு போனநேரம் பரியோவானுக்கு போயிருக்கலாம் போல இருக்கு.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

புளியமர நிழலில் ஏழு மாணவருடன் துவங்கி 200வது ஆண்டில் நுழையும் யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி 

IMG-20230313-071919.jpg

இலண்டனில் இருந்து ஜோசப் நைட் அடிகளும் அவரது குழாமும் 1818 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நல்லூரில் தங்கள் கல்விபபணிகளைத் தொடங்கினர். ஆங்கில மிஷனரிமார்களுள் ஈழத்து யாழ்ப்பாணத்தில் முதல் பாதம் பதித்தவர் வண.ஜோசப் நைட் அடிகளார் ஆவார்.

அன்று விதைத்த விதையே இன்றைய சென் ஜோன்ஸ் கல்லூரியின் 200 வது வருடம் என்ற நீண்ட நெடிய உயர்ந்த வளர்ச்சிக்கு காரணமாய் அமைந்தது. பாரெங்கும் புகழ் பரப்பி, பல கிளைவிட்டு விருட்சமாய் வியாபித்திருக்கும் யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி 200ஆவது ஆண்டினை தற்போது பூர்த்தி செய்கிறது.

இலங்கையின் கல்வி மறுமலர்ச்சியில் ஆங்கில மிஷனரிமார்களின் வருகை அக்காலத்தில் முக்கிய பங்கு வகித்தது. குறிப்பாக ஒழுக்க விழுமியங்கள், தொழில் நுட்ப அறிவு, ஆங்கிலக் கல்வி என்பன மேலோங்கிக் காணப்பட்டன.

இன்று யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி
உலகெங்கும் பிரகாசித்துக் கொண்டிருக்கும் வண்ணமாய், அக்கல்லூரி மாணவர்களின் திறமை போற்றப்படுகிறது. இக்கல்லூரியின் ஆரம்ப வரலாற்றை சற்று பின்நோக்கிப் பார்த்தால், இப்பாடசாலையின் பரிணாம வளர்ச்சியை அறியலாம்.

ஏழு மாணவருடன் முதல் பள்ளி:

1823 இல் தன் வீட்டிலேயே ஏழு மாணவர்களுடன் சிறந்ததொரு பள்ளியை அமைத்து அம் மாணவர்களுக்கான வாழ்வாங்கு வாழ கல்வியை ஆரம்பித்தார். 1824இல் பதின்மூன்று மாணவர்களையும் 1825இல் முப்பது மாணவர்களையும் கொண்டு இப்பள்ளி வளர்ச்சி பெற்றது.

இதன்பின் 1824 இல் ஜோசப் நைற் அவர்களிடமிருந்து வண வில்லியம் அட்லி (Rev.William Adley) பொறுப்பேற்றார். இவர் ஒரு திறமையுள்ள ஆங்கில அறிவும் தமிழ் அறிவும் நிறைந்தவராகவும் காணப்பட்டார். 1839 முதல் 1841 வரை D.W.Tailor என்பவர் வில்லியம் அட்லி அவர்களைத் தொடர்ந்து பொறுப்பேற்றார்.

1841 காலப்பகுதியில் பெண்கள் தங்கியிருந்து கற்பதற்காக தனியார் விடுதியாக நல்லூர் ஆங்கில செமினரி மாற்றம் நடந்தது. அவ்வாண்டிலேயே நல்லூர் ஆங்கில செமினரி சுண்டிக்குளிக்கு இடமாற்றம் பெற்று சுண்டிக்குளி செமினரி எனவும் பெயர் மாற்றம் பெற்றது.

புளியமர நிழலில் வகுப்புகள்:

ஆரம்ப நிலையில் வகுப்பறை வசதியின்மையால் ஓங்கி வளர்ந்த புளியமர நிழலிலேயே வகுப்புகள் நடத்தப்பட்டன. அக்காலத்தில் Rev.J.T.Johnstone அதிபராகப் பணியேற்றார். அவருடன் இணைந்து John Hensman அவர்கள் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார்.
அவரைத் தொடர்ந்து Rev.Robert William அவர்கள் தலைமை ஆசிரியராகப் பொறுட்பேற்றார். ஆயினும் 1866 இல் கொடிய நோய் காரணமாக அவர் இயற்கை எய்தினார்.
அதன் பின் J.Evarts 1867 – 1878 வரை தலைமை ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார்.

ராபர்ட் வில்லியம்ஸ் நினைவு மண்டபம்:

1866 ஆம் ஆண்டில் நாட்டைப் பேரழிவிற்குள்ளான காலரா தொற்றுநோய் காரணமாக, ராபர்ட் வில்லியம்ஸ் தனது 8 வயது மகனை இழந்தார். அவரும் காலரா நோயால் பாதிக்கப்பட்டு தீவிர நோய்வாய்ப்பட்டு அக்டோபர் 10, 1866 இல் காலமானார். திரு. ராபர்ட் வில்லியம்ஸ் நோயுற்ற படுக்கையில் மானிப்பாய் கிரீன் மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டார்.

இலங்கைத் தீவின் இரண்டாவது பழமையான செய்தித்தாளான மார்னிங் ஸ்டார் மற்றும் முதல் தமிழ் மொழி செய்தித்தாள் உதயதாரகை அவரது மரணச் செய்தியை அப்போது வெளியிட்டன. அவரது அகால மறைவைக் குறிப்பிடுகையில், “ராபர்ட் வில்லியம்ஸ் தனது பூமிக்குரிய கடமைகளை பொறுப்புடன் நிறைவேற்றி கடவுளின் அருளால் யாழ் மக்கள் மனதில் நுழைந்தார். அவரது மரணம் சுண்டிக்குளி செமினரிக்கு ஒரு பெரிய இழப்பாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இவர் நினைவாகவே தற்போது புதிய மண்டபம் 200வது ஆண்டில் திறக்கப்பட உள்ளது.

சிறு விதை பெரு விருட்சமாக :

இத்தகைய கல்விப் பணியாளர்களின் தன்நலமற்ற சேவையாலும் அயராத உழைப்பாலும் விதைக்கப்பட்ட சிறு விதை இன்று பெரு விருட்சமாக ஓங்கி வளர்ந்து பல்லாயிரம் பேருக்கு நிழல் கொடுக்கின்ற ஒரு ஸ்தாபனமாக மிளிர்கின்றது.

இங்கிலாந்து திருச்சபையின் இறுதி மிசனரியாளரும், கல்லூரியின் பதினாறாவது அதிபருமான அருட்திரு ஹென்றி பிற்றோ அடிகளார் கல்லூரியின் அதிபராக இருந்தபோது கல்லூரி மேலும் ஓங்கி வளர்ந்தது.

அருட்திரு ஹென்றி பிற்றோவின் (1920-1940) பின்னர், முதலாவது தேசிய அதிபர் என்னும் அந்தஸ்தினைப் பெற்ற அருட்திரு J.T.அருளானந்தம் (1940-1957), திரு.P.T.Mathai (1957-1959), திரு.A.W. ராஜசேகரம் (1959-1966) திரு.க.பூரணம்பிள்ளை (1967-1976),திரு.சி.இ.ஆனந்தராஜன்(1976-1985) திரு.குணசீலன் (1985-1987), திரு. தனபாலன் (1990-2006), திரு. ஞானப்பொன் ராஜா(2006-2017), தற்போது திரு. துஷிதரன் ஆகியோர் அதிபர்களாக பணியாற்றி உள்ளனர்.

மகாத்மா காந்தி வருகை :

இக்கல்லூரியிலேயே 1927 நவம்பர் 29இல் இந்திய தேசபிதா மகாத்மா காந்தி கல்லூரிக்கு வருகை தந்து, வில்லியம் மண்டபத்தில் உரையாற்றிய வரலாறும் உண்டு.

ஆயினும் 1945ல் நடைமுறைக்கு வந்த அன்றைய இலவசக் கல்வித் திட்டத்துடன் இணைந்து செயற்படாது தனித்துவமாக வெளியே இருக்க தீர்மானித்தது. மீண்டும் பல்வேறு நோக்கங்களுக்காக 1951ல் இலவச கல்வித் திட்டத்தில் இக் கல்லூரி இணைந்து கொண்டது.

கல்லூரி எதிர்கொண்ட சவால்கள் :

1960ல் அரசு பாடசாலைகளைக் கையகப்படுத்தி பொதுமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது. அதன் பிரகாரம் இக்கல்லூரியையும் அரசாங்கப் பாடசாலையாக்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டது. கல்லூரி தன் தனித்துவத்தை இழக்க விரும்புவதைத் தவிர்த்து, தனித்து இயங்க முற்பட்டது.

பல்வேறுபட்ட தியாகங்கள், சோதனைகள், வேதனைகள் போராட்டங்கள்,மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள். நலன் விரும்பிகள் என பல்வேறு பட்டவர்களின் மேலான ஒத்துழைப்பினாலும், பக்கபலத்தினாலும் சென்.ஜோன்ஸ் கல்லூரியைத் தனியார் பாடசாலையாக இயங்குவதற்கு தீரமானிக்கப்பட்டது.

கல்லூரி நிர்வாகத்தை ஆளுகை செய்வதற்கு ஆளுகைக்குழுவும் ஆலோசனை வழங்குவதற்கு ஆலோசனை சபையும் உருவாக்கப்பட்டது.

அரச உதவிகள் தடைப்பட்டமையினால் கல்லூரி நிர்வாகம் பாரிய நிதிப்பற்றாக் குறையை எதிர்கொண்டது. ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கமுடியாது திண்டாடியது. கல்லூரியிலிருந்து வெளியேறினர் சிலர் பாதிவேதனத்தில் பணிபுரிந்தனர் பலர் இலவசமாகவும் பணியாற்றினர்.

பல்வேறு அளப்பெரும் ஆளுமைகளால் வளர்க்கப்பட்ட ‘பரியோவான் கழுகு’ (Johnian Eagle) தன் கூரிய பார்வையுடன் நேரிய இலக்கை நோக்கி உயரப் பறந்து வருகிறது.

– ஐங்கரன் விக்கினேஸ்வர

https://vanakkamlondon.com/stories/2023/03/187748/

இணைப்புக்கும் நினைவுகளுக்கும் நன்றி தோழர், @நிழலி.

கற்றலில் என்னை ஆளாக்கிய இடம் என சொல்லும் அளவுக்கு நான் இங்கே காலம் செலவழிக்கவில்லை. ஆனால் கழித்தகாலம் அத்தனையும் இனிமையே, நட்புகள் இன்றும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, ஈழப்பிரியன் said:

3000 பேர் ஒரே நேரத்தில் ஆளாளுக்கு 1000 டாலர் மாற்றினாலே 3000000 டாலர்கள் அதனால் சொன்னேன்.

குறைந்தது 1000 இன்னும் கூட செலவு செய்திருப்பார்கள்.

நான் சும்மா ஜோக்காக தான் சொன்னேன் ஈழப்பிரியன். நீங்கள் கணக்கிட்டபடி  கணக்கு எல்லாம் பார்ககவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
49 minutes ago, island said:

நான் சும்மா ஜோக்காக தான் சொன்னேன் ஈழப்பிரியன். நீங்கள் கணக்கிட்டபடி  கணக்கு எல்லாம் பார்ககவில்லை. 

இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றே எழுதினேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, suvy said:

நாங்கள் அவ்வழியால் அடிக்கடி போய் வருவது வழக்கம். ஆனால் மழை பெய்தாலும் ஒதுங்கியதில்லை தோழர்........!  😁

எண்டாலும் வேம்படிக்கு பக்கத்தாலை போகேக்கை வாற பீலிங்/  ஒரு கிக்  சென் ஜோன்ஸ்க்கு பக்கத்தாலை போகேக்கை வராது. :cool:

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இணைப்புக்கும் நினைவுகளுக்கும் நன்றி. @நிழலி அங்கு படித்தவர் என்று உங்கள் பதிவுகளில் கூறி இருந்தீர்கள் @goshan_che அங்கு படித்தவர் என்று இன்று தான் தெரியும்.

அதிபர்கள் வரிசையில் தேவசகாயம் அவர்களின் பெயர் விடுபட்டுபோய் இருக்கிறது.

என்னை செதுக்கிய பங்கில் பரியோவான் கல்லூரிக்கும் ஆசான்களுக்கும் முக்கியபங்குண்டு. 

ஜீவானந்தம் மாஸ்ரர், ரோனி கணேசன் மாஸ்ரர், அருமைநாயகம் மாஸ்ரர், மயில்வாகனம் மாஸ்ரர், காசிப்பிள்ளை மாஸ்ரர், கதிர்காமத்தம்பி மாஸ்ரர், சந்திர மௌலீசன் மாஸ்ரர், சிறீகரன் மாஸ்ரர், மணியம் மாஸ்ரர், அன்ரனிப்பிள்ளை மாஸ்ரர், அகஸ்டின் மாஸ்ரர், தேவராஜா மாஸ்ரர்,ரிச்சாட் மாஸ்ரர், மகாலிங்கம்  மாஸ்ரர் இப்படி பலராலும் செதுக்கப்பட்டதை இப்போதும் என்னால் உணர முடியும். மணி அடிக்கும் கணேஸ் அண்ணை கூட மனசில் வந்து போகிறார்.

விடுதலைப்புலிகளின் சினைப்பர் பிரிவு சிறப்புத்தளபதி இரும்பொறை (பத்மசீலன் - அச்சுவேலி), இந்திய இராணுவத்தால் படுகொலைசெய்யப்பட்ட அகிலன் இப்படி பலரும் படித்த பாடசாலை. 

அரியாலையில் விடுதலைப்புலிகளின் அரசியல்துறை இயங்கிய காலத்தில் சந்திரிக்காவின் பேச்சுவார்த்தைகுழு பரியோவான் மைதானத்தில் தான் தரையிறங்கியது.

தொம்சன் கழகம் ஒருபோதும் நான் இருக்கும்வரை சம்பியனாகாவிட்டாலும் உதவி அணித்தலைவனாக இருந்திருக்கிறேன்.

லியோ கழகம், கடற்சாரணர் இப்படி பலதையும் கற்றுத்தந்தது.

இப்போது வேலைப்பளு காரணமாக போகமுடியாவிட்டாலும் என் நண்பர்கள் பழைய மாணவர் வாட்ஸ் அப் குழுமத்தில் போடும் படங்களினூடு நானும் பயணிக்கிறேன்.

பரியோவான் என்ற கர்வமும் திமிரும் எப்பவும் என்னை விட்டு போகாது.

“Johnians always play the game “

Edited by முதல்வன்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜொனியன்களுக்கு வாழ்த்துக்கள்!

யாழ் மத்திய கல்லூரியினருக்கு, யாழ் இந்துவோடும் (+சுண்டுக் குழி மகளிரோடும்☺️) இருக்கும் அந்நியோன்னியம் ஏனோ பரி யோவான் பெடியளோடு இருப்பதில்லை! மத்திய கல்லூரியில் படித்த 12 ஆண்டுகளில், ஒரேயொரு தடவை தான் பரி யோவான் கல்லூரியினுள் நான் சென்றிருக்கிறேன்.

ஒரு சந்தர்ப்பத்தில் பரி யோவான் முதல்வராக (Rector) இருந்த வண. நேசகுமார் செல்லையா யாழ்.மத்திய கல்லூரியின் பழையமாணவன் என்பது குறிப்பிடத் தக்கது!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, suvy said:

நாங்கள் அவ்வழியால் அடிக்கடி போய் வருவது வழக்கம். ஆனால் மழை பெய்தாலும் ஒதுங்கியதில்லை தோழர்........!  😁

அட நம்ம ஆள் 😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, குமாரசாமி said:

எண்டாலும் வேம்படிக்கு பக்கத்தாலை போகேக்கை வாற பீலிங்/  ஒரு கிக்  சென் ஜோன்ஸ்க்கு பக்கத்தாலை போகேக்கை வராது. :cool:

சுண்டுக்குளி பெண்கள் கல்லூரியை மறந்திட்டீங்களோ?

3 minutes ago, பெருமாள் said:

அட நம்ம ஆள் 😀

அப்புறம் என்ன ஒரு சங்கமே அமைத்திடலாம்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
45 minutes ago, ஈழப்பிரியன் said:

சுண்டுக்குளி பெண்கள் கல்லூரியை மறந்திட்டீங்களோ?

என்ரை சொந்தங்கள் முழுக்க அதுக்குள்ள தான்.....:anguished_face:
ஆகையால்........:face_with_tears_of_joy:

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, முதல்வன் said:

இணைப்புக்கும் நினைவுகளுக்கும் நன்றி. @நிழலி அங்கு படித்தவர் என்று உங்கள் பதிவுகளில் கூறி இருந்தீர்கள் @goshan_che அங்கு படித்தவர் என்று இன்று தான் தெரியும்.

அதிபர்கள் வரிசையில் தேவசகாயம் அவர்களின் பெயர் விடுபட்டுபோய் இருக்கிறது.

என்னை செதுக்கிய பங்கில் பரியோவான் கல்லூரிக்கும் ஆசான்களுக்கும் முக்கியபங்குண்டு. 

ஜீவானந்தம் மாஸ்ரர், ரோனி கணேசன் மாஸ்ரர், அருமைநாயகம் மாஸ்ரர், மயில்வாகனம் மாஸ்ரர், காசிப்பிள்ளை மாஸ்ரர், கதிர்காமத்தம்பி மாஸ்ரர், சந்திர மௌலீசன் மாஸ்ரர், சிறீகரன் மாஸ்ரர், மணியம் மாஸ்ரர், அன்ரனிப்பிள்ளை மாஸ்ரர், அகஸ்டின் மாஸ்ரர், தேவராஜா மாஸ்ரர்,ரிச்சாட் மாஸ்ரர், மகாலிங்கம்  மாஸ்ரர் இப்படி பலராலும் செதுக்கப்பட்டதை இப்போதும் என்னால் உணர முடியும். மணி அடிக்கும் கணேஸ் அண்ணை கூட மனசில் வந்து போகிறார்.

விடுதலைப்புலிகளின் சினைப்பர் பிரிவு சிறப்புத்தளபதி இரும்பொறை (பத்மசீலன் - அச்சுவேலி), இந்திய இராணுவத்தால் படுகொலைசெய்யப்பட்ட அகிலன் இப்படி பலரும் படித்த பாடசாலை. 

அரியாலையில் விடுதலைப்புலிகளின் அரசியல்துறை இயங்கிய காலத்தில் சந்திரிக்காவின் பேச்சுவார்த்தைகுழு பரியோவான் மைதானத்தில் தான் தரையிறங்கியது.

தொம்சன் கழகம் ஒருபோதும் நான் இருக்கும்வரை சம்பியனாகாவிட்டாலும் உதவி அணித்தலைவனாக இருந்திருக்கிறேன்.

லியோ கழகம், கடற்சாரணர் இப்படி பலதையும் கற்றுத்தந்தது.

இப்போது வேலைப்பளு காரணமாக போகமுடியாவிட்டாலும் என் நண்பர்கள் பழைய மாணவர் வாட்ஸ் அப் குழுமத்தில் போடும் படங்களினூடு நானும் பயணிக்கிறேன்.

பரியோவான் என்ற கர்வமும் திமிரும் எப்பவும் என்னை விட்டு போகாது.

“Johnians always play the game “

@zuma வும் ஜொனியன் என முன்னர் எழுதியவர். 

நான் இலங்கையில் மொத்தம் 5 பாடசாலைகளில் படித்துள்ளேன். ஒவ்வொரு பாடசாலையும் ஒவ்வொரு வகை அனுபவத்தை கற்றுத்தந்தது.

ஜுபிளி ஹாலில் சுவரில் வரிசை வரிசையாக சாதனையாளர் பட்டியல் தொங்கும்.

அதில் ஒரு பட்டியலில் நாலு அல்லது ஐந்து பெயர்தான். அதை ஜொனியன் ஈகிள் என்பார்கள். ஏன் இந்த விருது வழங்கப்படுகிறது என யாருக்கும் தெரியுமா?

வீட்டில் என்னை நீ அதில் ஆறாவதாய் வருவாய் என கிண்டல் அடித்து - ஜொனியன் ஈகிள் என பட்டம் தெளித்தார்கள்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, குமாரசாமி said:

 புரட்சியர்! அங்கை படிச்ச ஆக்கள் இஞ்சை இல்லையெண்டு நினைக்கிறன் :beaming_face_with_smiling_eyes:

🙋‍♂️

ஐந்து வருடங்கள். 

@புரட்சிகர தமிழ்தேசியன் இணைப்புக்கு நன்றி. இப்போது சில நாட்களாக மோபைல் பாடசாலை படங்கள், வீடியோக்களினால் நிரம்பி வழிகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

🙋‍♂️

ஐந்து வருடங்கள். 

@புரட்சிகர தமிழ்தேசியன் இணைப்புக்கு நன்றி. இப்போது சில நாட்களாக மோபைல் பாடசாலை படங்கள், வீடியோக்களினால் நிரம்பி வழிகின்றது. 

இரண்டொரு படங்கள் வீடியோக்களை எங்களுக்கும் காட்டிஅசத்துறது....:beaming_face_with_smiling_eyes:

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, goshan_che said:

நான் இலங்கையில் மொத்தம் 5 பாடசாலைகளில் படித்துள்ளேன்.

இந்த ஐந்திற்குள் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையும் அடங்குமா சார்? 😎

Rajavin Parvaiyeli - Principal Praises Vadivelu - Vidéo Dailymotion

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, குமாரசாமி said:

இந்த ஐந்திற்குள் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையும் அடங்குமா சார்? 😎

Rajavin Parvaiyeli - Principal Praises Vadivelu - Vidéo Dailymotion

சைவ பிரகாசா தமிழ் கலவன், ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் இரெண்டும் அடங்கும் சார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

@குமாரசாமி@goshan_che  கலவன் பாடசாலையில் படிப்பது அவ்வளவு இனிமையான அனுபவமா? 😂 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, island said:

@குமாரசாமி@goshan_che  கலவன் பாடசாலையில் படிப்பது அவ்வளவு இனிமையான அனுபவமா? 😂 

ஒரு சுய ஆக்கம் எழுதும் அளவுக்கு இனிமை🤣

  • Haha 2

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இனப்பிரச்சினை என்பதே இல்லை, பொருளாதார பிரச்சினைதான் இருக்கு என சொல்வதனை கேட்டு  எல்லோரும் நம்புகிறார்கள், ஆனால் ஒரு சிலர் (நீங்கள் உட்பட) மட்டும் நம்ப மறுக்கிறீர்கள், ஆகையால் நீங்கள்தான் மாறவேண்டும்😁.
    • அது வேற ஒன்றுமில்லை இந்த இரண்டு தரப்பும் குளிர்காய நாங்கள் சாக வேண்டியிருந்தது, அதனால இந்த இரண்டு தரப்பினையும் கோர்த்டுவிடுவம் என்று ஒரு முயற்சிதான்.😁
    • இந்திய மீனவர்கள் செய்வது திருட்டு , திருட்டுக்கு எப்படி நட்டஈடு கோருவது?  திருட்டுக்கு தண்டனை அடி உதை , சிறை,பறிமுதல்தான். மஹிந்த ஆட்சிக்காலத்தில் சுப்பிரமணி சுவாமி கொடுத்த ஐடியாவில் படகுகளை பறிமுதல் செய்து இலங்கை மீனவர்களுக்கு ஏலம் விடுவது,கடற்படை பாவனைக்கு வழங்குவது, கரைகளில் நிறுத்தி வைத்து ஒன்றுக்கும் உதவாமல் பண்ணுவது என்று அது ஒரு சிறந்த திட்டம்தான். இந்திய இழுவைப்படகுகள் வலைகள்  இலங்கை பெறுமதியில் கோடிகளில் பெறுமதியானவை, ஓரிரு லட்சம் பெறுமதியான மீனை திருட வந்து குத்தகைக்கு எடுத்துவரும் கோடி பெறுமதியான படகை இழப்பது மீனவர்களுக்கும், ஆபத்து படகின் உரிமையாளர்களுக்கும் ஆபத்து & பெரு நஷ்டம். பின்னாளில் இந்திய அரசின் அழுத்தத்தால் அது கைவிடப்பட்டது. அது ஒருகாலமும் சாத்தியம் இல்லை, யுத்தம் நடக்கும் ஒருநாட்டுக்குள் நுழைந்து திருட்டில் ஈடுபடும்போது அந்நாட்டு படைகளால் கொல்லப்பட்டால் அதற்கு இருநாட்டு அரசுகளும் எந்த பொறுப்பும் ஏற்காது. எந்த நட்ட ஈடும் தராது. யுத்த பூமிக்குள் அத்துமீறி நுழைந்து உயிரைவிட்டுவிட்டு, செத்துபோனோம் காசு தாருங்கள் என்றால் எந்த தெய்வம்கூட அவர்களுக்கு உதவாது. இலங்கை மீனவர்களை  சிங்களவன் கொத்தி குதறி மீன்பிடியை முற்றாக தடை செய்த காலத்தில் அந்த இடைவெளியை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் இலங்கை பரப்பில் வந்து மீனள்ளி போவது ஒருவகையில் தண்டிக்கப்படவேண்டிய இரக்கமற்ற நியாயம்தான். சில தமிழக செய்தி தளங்களில், இலங்கை அகதிகளுக்கு எப்படியெல்லாம் நாங்கள் உதவி செய்தோம், அவர்கள் நன்றிகெட்ட தனமாக இப்போது இலங்கை கடற்படைக்கு ஆதரவாக நின்று எம்மை கொல்கிறார்கள், கைது செய்கிறார்கள் என்று பின்னூட்டம் இடுகிறார்கள். அதாவது பசிக்கு சோறுபோட்டால், அவனை பட்டினிபோட்டு கொல்லவும் நமக்கு உரிமை இருக்கு என்கிறார்கள். பட்டினி போட்டு கொல்வதை நீங்கள் நியாயப்படுத்தினால் அப்புறம் ஏன் அவன் பசிக்கு சோறு போட்டதை பெருமையாக சொல்கிறீர்கள் என்பதை அவர்களிடம் கேட்டுத்தான் தெளிவு பெறவேண்டும்.
    • தமிழர்களுக்குள் இருக்கும் மொழி சார்பான புரிதல் சிங்களவர்களுக்குள் இல்லை.  எந்த விடயமாகினும் தமிழர்கள் முக்கித்தக்கி சிங்களத்தில் கதைக்க முயற்சிப்பார்கள். அவர்கள் அப்படியல்ல.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.