Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

KRS | கரச on Twitter: "பிட்டு வகைகள்: -- குழல் புட்டு நீத்துப் பெட்டிப்  புட்டு பிடிப் புட்டு கலவைப் புட்டு குழாப் புட்டு! Plz. Add:)  https://t.co/wlUeTLqjuU" / Twitter

புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣

ob-dfba83-barre-violette.gif

குழல் புட்டின் மகிமை தெரியுமா சின்னத்தங்கமே...
நீற்று பெட்டி புட்டின் பக்குவம் தெரியுமா குஞ்சுத்தங்கமே...
கோதுமை மா புட்டின் சுவை தெரியுமா ஞானத்தங்கமே...
வழுக்கல் தேங்காய் கலந்த புட்டின் சுவை தெரியுமா சின்னத்தங்கமே...
வறுத்த அரிசி மா புட்டின் வாசனை தெரியுமா குஞ்சுத்தங்கமே..
ஒடியல் புட்டின் பலன் தெரியுமா ஞானத்தங்கமே...
மரக்கறி புட்டின் சுவை தெரியுமா சின்னத்தங்கமே..
பால் புட்டின் சொர்க்கம் தெரியுமா குஞ்சுத்தங்கமே...
அரிசி மா புட்டின் பதம் தெரியுமா ஞானத்தங்கமே...
கூப்பன் மா புட்டின் பதம் தெரியுமா சின்னத்தங்கமே...
ஒடியல் மா புட்டின் பதம் தெரியுமா குஞ்சுத்தங்கமே...
கருவாட்டு குழம்புடன் சேர்ந்த புட்டின் சுவை தெரியுமா ஞானத்தங்கமே ...

சிவன் மண் சுமந்த புட்டின் கதை தெரியுமா சின்னத்தங்கமே...

ob-dfba83-barre-violette.gif

  • Replies 54
  • Views 3.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிலாமதி
    நிலாமதி

    குரக்கன் பு ட்டையும் மீன் புட்டையும் கீரைப்பிட்டும்  காணவில்லை .  குரக்கன் பிட்டு சுடச் சுட சீனி (சக்கரை) தேங்காய் சேர்த்து குழைத்து   .சாப்பிட சொர்க்கம் தெரியும் ச்சா சொல்லிவேலையில்லை.  மீன்பிடடுக்கு

  • Kandiah57
    Kandiah57

    சுவையான புட்டினை   அவிப்பதற்க்க.....சமைப்பதற்க்கு. நிறைய முன்வேலைகள். செய்ய வேண்டும்    1...மா. நன்றாக வட்ட வேண்டும்  2...வட்டிய. மா. அரிக்க   வேண்டும்  3. ...நன்கு கொதித்த நீரில்   குழ

  • goshan_che
    goshan_che

    ஐ லைக் திஸ் கு.சா டச் யா …🤣 காதலில் இதுதான் ஏழு நிலை…. காணும் இடம் எல்லாம் அவன்,  தூணிலும் அவன், துரும்பிலும் அவன், போனிலும் அவன், பிசைந்த புட்டிலும் அவன். மணந்தால

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, குமாரசாமி said:

KRS | கரச on Twitter: "பிட்டு வகைகள்: -- குழல் புட்டு நீத்துப் பெட்டிப்  புட்டு பிடிப் புட்டு கலவைப் புட்டு குழாப் புட்டு! Plz. Add:)  https://t.co/wlUeTLqjuU" / Twitter

புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣

ob-dfba83-barre-violette.gif

குழல் புட்டின் மகிமை தெரியுமா சின்னத்தங்கமே...
நீற்று பெட்டி புட்டின் பக்குவம் தெரியுமா குஞ்சுத்தங்கமே...
கோதுமை மா புட்டின் சுவை தெரியுமா ஞானத்தங்கமே...
வழுக்கல் தேங்காய் கலந்த புட்டின் சுவை தெரியுமா சின்னத்தங்கமே...
வறுத்த அரிசி மா புட்டின் வாசனை தெரியுமா குஞ்சுத்தங்கமே..
ஒடியல் புட்டின் பலன் தெரியுமா ஞானத்தங்கமே...
மரக்கறி புட்டின் சுவை தெரியுமா சின்னத்தங்கமே..
பால் புட்டின் சொர்க்கம் தெரியுமா குஞ்சுத்தங்கமே...
அரிசி மா புட்டின் பதம் தெரியுமா ஞானத்தங்கமே...
கூப்பன் மா புட்டின் பதம் தெரியுமா சின்னத்தங்கமே...
ஒடியல் மா புட்டின் பதம் தெரியுமா குஞ்சுத்தங்கமே...
கருவாட்டு குழம்புடன் சேர்ந்த புட்டின் சுவை தெரியுமா ஞானத்தங்கமே ...

சிவன் மண் சுமந்த புட்டின் கதை தெரியுமா சின்னத்தங்கமே...
 
இடியப்பத்தைக்கூட ஒவ்வொரு நாளும் சாப்பிட முடியாது. ஆனால் புட்டு ஒருநாளும் அலுக்காது. நான் இன்று கூப்பன் மா புட்டு சாப்பிட்டேன். பாரை மீன் குழம்புடன். கனடாவில் இருந்து ஆட்டக்காரி அரிசி மா பார்சலில் வர பிந்தி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

நான்…. ரஷ்ய அதிபரின், அருமை பெருமைகளைப் பற்றி சொல்லப் போகிறீர்களாக்கும் என நினைத்து விட்டேன். 😂
புட்டின் சிறப்பு என்றால்… அதனை இன்ன கறியுடன் தான் சாப்பிட வேண்டும் என்று இல்லை.👍🏽
வாழைப்பழம், சீனி, சர்க்கரை என்று எதனுடனும் சாப்பிடலாம்.😋
புட்டினுக்கு…. தமிழர்கள் கண்டு பிடித்த உணவுகளின் அரசன் என்றே கிரீடம் சூட்டி மகிழலாம். 🥰 🤣

*** இதனை, யாழ் கள சுய ஆக்கம் பகுதியில் பதிந்திருக்கலாமே.***

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன கோதாரி கண்ணும் தெரியுதில்லை.

புட்டின் பெருமையா பூட்டினின் பெருமையா?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

புட்டின் என்பதற்கு பதில் பிட்டு என்று பதிந்திருந்தால் இந்த பக்கம் வந்திருக்க மாட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, vasee said:

புட்டின் என்பதற்கு பதில் பிட்டு என்று பதிந்திருந்தால் இந்த பக்கம் வந்திருக்க மாட்டேன்.

சரி சரி… வந்தனீங்கள், புட்டின் அருமை, பெருமை பற்றி 
இரண்டு வரி சொல்லிப் போட்டு போங்கோ. 😂🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, nilmini said:

இடியப்பத்தைக்கூட ஒவ்வொரு நாளும் சாப்பிட முடியாது. ஆனால் புட்டு ஒருநாளும் அலுக்காது. நான் இன்று கூப்பன் மா புட்டு சாப்பிட்டேன். பாரை மீன் குழம்புடன். கனடாவில் இருந்து ஆட்டக்காரி அரிசி மா பார்சலில் வர பிந்தி விட்டது.

சரியாச்சொன்னியள் தங்கச்சி! புட்டு விதம் விதமாய் தயாரிச்சு அலுக்காமல் சாப்பிடலாம்? :467:
அதுசரி ஆட்டக்காரி மா எப்பிடி?:rolling_on_the_floor_laughing:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, தமிழ் சிறி said:

நான்…. ரஷ்ய அதிபரின், அருமை பெருமைகளைப் பற்றி சொல்லப் போகிறீர்களாக்கும் என நினைத்து விட்டேன். 😂
புட்டின் சிறப்பு என்றால்… அதனை இன்ன கறியுடன் தான் சாப்பிட வேண்டும் என்று இல்லை.👍🏽
வாழைப்பழம், சீனி, சர்க்கரை என்று எதனுடனும் சாப்பிடலாம்.😋
புட்டினுக்கு…. தமிழர்கள் கண்டு பிடித்த உணவுகளின் அரசன் என்றே கிரீடம் சூட்டி மகிழலாம். 🥰 🤣

*** இதனை, யாழ் கள சுய ஆக்கம் பகுதியில் பதிந்திருக்கலாமே.***

அட நீங்கள் வேற சிறித்தம்பி!  
ஏற்கனவே எனக்கு துரோகி,வெங்காயம் பட்டங்கள்:kreuz:  இந்த சித்திரத்திலை  இதை சுய ஆக்கம் பகுதியில பதிஞ்சால் அவ்வளவுதான். சனம் புட்டே சாப்பிடாது.  புட்டு மருவி புட்டினாக மாறியது என்பது இங்கு எத்தனை பேருக்குத்தெரியும்? :379:

  • கருத்துக்கள உறவுகள்

ரசியன் அதிபர் புட்டினின் பிடித்த உணவு புட்டு என்று, எமது ரசிய உளவாளி உடான்சு சுவாமியார் ரகசிய தகவல் தந்துள்ளார்...

  • கருத்துக்கள உறவுகள்

சுவையான புட்டினை   அவிப்பதற்க்க.....சமைப்பதற்க்கு. நிறைய முன்வேலைகள். செய்ய வேண்டும்   

1...மா. நன்றாக வட்ட வேண்டும் 

2...வட்டிய. மா. அரிக்க   வேண்டும் 

3. ...நன்கு கொதித்த நீரில்   குழைக்க வேண்டும்   

4..தண்ணீர் கூடினால்.   அமெரிக்கா கோதுமை. மாவைச். சேர்த்து பதம். வரும் வரை   அமர்த்தி  பிசைத்து குழைக்க வேண்டும் 

5...குழைத்த மாவை  சிறு சிறு. துண்டுகளாகும் வரை சுண்டினால்.  நன்றாக குத்தவேண்டும்

6....இதனுடன்  இலங்கையிலிருந்து இறக்குமதி செய்த தேங்காய் பூ சேர்த்து கலக்கவேண்டும். 

7....இந்த கலவையை நன்றாக அவித்து எடுக்க வேண்டும்   

பச்சை மா கூடாது....பச்சை தண்ணீர் கூடாது....சுடுநீர் அதிகரிப்பு கூடாது   புட்டினை குழைக்கும்போது கவனம் தேவை   🤣😂

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

KRS | கரச on Twitter: "பிட்டு வகைகள்: -- குழல் புட்டு நீத்துப் பெட்டிப்  புட்டு பிடிப் புட்டு கலவைப் புட்டு குழாப் புட்டு! Plz. Add:)  https://t.co/wlUeTLqjuU" / Twitter

புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣

ob-dfba83-barre-violette.gif

குழல் புட்டின் மகிமை தெரியுமா சின்னத்தங்கமே...
நீற்று பெட்டி புட்டின் பக்குவம் தெரியுமா குஞ்சுத்தங்கமே...
கோதுமை மா புட்டின் சுவை தெரியுமா ஞானத்தங்கமே...
வழுக்கல் தேங்காய் கலந்த புட்டின் சுவை தெரியுமா சின்னத்தங்கமே...
வறுத்த அரிசி மா புட்டின் வாசனை தெரியுமா குஞ்சுத்தங்கமே..
ஒடியல் புட்டின் பலன் தெரியுமா ஞானத்தங்கமே...
மரக்கறி புட்டின் சுவை தெரியுமா சின்னத்தங்கமே..
பால் புட்டின் சொர்க்கம் தெரியுமா குஞ்சுத்தங்கமே...
அரிசி மா புட்டின் பதம் தெரியுமா ஞானத்தங்கமே...
கூப்பன் மா புட்டின் பதம் தெரியுமா சின்னத்தங்கமே...
ஒடியல் மா புட்டின் பதம் தெரியுமா குஞ்சுத்தங்கமே...
கருவாட்டு குழம்புடன் சேர்ந்த புட்டின் சுவை தெரியுமா ஞானத்தங்கமே ...

சிவன் மண் சுமந்த புட்டின் கதை தெரியுமா சின்னத்தங்கமே...

ob-dfba83-barre-violette.gif

ஐ லைக் திஸ் கு.சா டச் யா …🤣

8 hours ago, ஈழப்பிரியன் said:

இதென்ன கோதாரி கண்ணும் தெரியுதில்லை.

புட்டின் பெருமையா பூட்டினின் பெருமையா?

காதலில் இதுதான் ஏழு நிலை….

காணும் இடம் எல்லாம் அவன், 

தூணிலும் அவன்,

துரும்பிலும் அவன்,

போனிலும் அவன்,

பிசைந்த புட்டிலும் அவன்.

மணந்தால் மாஸ்கோ தேவன்,

இல்லையேல் மரண தேவன் 🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஐ லைக் திஸ் கு.சா டச் யா …🤣

காதலில் இதுதான் ஏழு நிலை….

காணும் இடம் எல்லாம் அவன், 

தூணிலும் அவன்,

துரும்பிலும் அவன்,

போனிலும் அவன்,

பிசைந்த புட்டிலும் அவன்.

மணந்தால் மாஸ்கோ தேவன்,

இல்லையேல் மரண தேவன் 🤣

புட்டின் கவிதை ஆவி பறக்குது.

5 hours ago, vasee said:

புட்டின் என்பதற்கு பதில் பிட்டு என்று பதிந்திருந்தால் இந்த பக்கம் வந்திருக்க மாட்டேன்.

நானும் இதில தான் தடக்குபட்டு விழுந்துட்டேன்.

3 hours ago, Kandiah57 said:

சுவையான புட்டினை   அவிப்பதற்க்க.....சமைப்பதற்க்கு. நிறைய முன்வேலைகள். செய்ய வேண்டும்   

1...மா. நன்றாக வட்ட வேண்டும் 

2...வட்டிய. மா. அரிக்க   வேண்டும் 

3. ...நன்கு கொதித்த நீரில்   குழைக்க வேண்டும்   

4..தண்ணீர் கூடினால்.   அமெரிக்கா கோதுமை. மாவைச். சேர்த்து பதம். வரும் வரை   அமர்த்தி  பிசைத்து குழைக்க வேண்டும் 

5...குழைத்த மாவை  சிறு சிறு. துண்டுகளாகும் வரை சுண்டினால்.  நன்றாக குத்தவேண்டும்

6....இதனுடன்  இலங்கையிலிருந்து இறக்குமதி செய்த தேங்காய் பூ சேர்த்து கலக்கவேண்டும். 

7....இந்த கலவையை நன்றாக அவித்து எடுக்க வேண்டும்   

பச்சை மா கூடாது....பச்சை தண்ணீர் கூடாது....சுடுநீர் அதிகரிப்பு கூடாது   புட்டினை குழைக்கும்போது கவனம் தேவை   🤣😂

கந்தையர் நீங்க யுரியூப் சனலே தொடங்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

குரக்கன் பு ட்டையும் மீன் புட்டையும் கீரைப்பிட்டும்  காணவில்லை .  குரக்கன் பிட்டு சுடச் சுட சீனி (சக்கரை) தேங்காய் சேர்த்து குழைத்து   .சாப்பிட சொர்க்கம் தெரியும் ச்சா சொல்லிவேலையில்லை.  மீன்பிடடுக்கு குழைத்த   மாவுடன்  சதைப்பிடிப்பான மீனை அவித்து மிளகாய்த்தூள் மஞ்சள்  உப்பு சேர்த்து பின்  வெங்கயம்பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி   அதையும் மீனுடன் சேர்த்து அவித்தால்   ருசியோ ருசி .

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நிலாமதி said:

recipe கள் இப்பதான் வெளிய வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் கவனிச்சீங்களா, உலகில் யாழ்ப்பாண குடாநாட்டில் மட்டுமே, அவித்த கோதுமை மா செய்கிறார்கள். (கிழக்கில் செய்வார்களா தெரியாது). ஆனால் கோதுமை மாவை அவித்து, அரித்து பிட்டு செய்வதும், அதுக்கு இடித்த சம்பல், டின் மீன் குழம்பு வைத்து அசத்துவதும், யாழ்ப்பாணத்தில். முக்கியமாக, தமிழகத்திலோ, அல்லது கேரளாவிலோ இல்லை. 

Buy cheap SHANKAR STEAMED WHEAT 1KG Online

சிங்களவர்கள் நிச்சயமாக செய்வது இல்லை. பால் சோறுடன் உக்காந்து விடுவார்கள்.

பிட்டுக்கு,  கட்டா பாரை கருவாடு சம்பல் அப்படி இருக்கும்.... 🤭

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண பெண்கள் கடின முயற்சி உடையவர். மாவை அவித்ததும் கட்டிபட்டு( கல்லுப்போல) விடும். உடனேயே கைபொறுக்கும் சூட்டில் அரித்து விட வேண்டும். பின் ஆறவிட்டு சேமிப்பது உண்டு .

  • கருத்துக்கள உறவுகள்

"பீட்ஸா இனிது சப்பாத்தி இனிது என்பார் எம்மாந்தர் 

புட்டின் சுவை அறியாதார்"  

நல்ல பதிவு........!  😁

  • கருத்துக்கள உறவுகள்

"கோதுமை மா", "கூப்பன் மா" என்ன வித்தியாசம்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா said:

"கோதுமை மா", "கூப்பன் மா" என்ன வித்தியாசம்?

இரண்டுமே கோதுமை மா தான். 

கூப்பன் மா, புழு, வண்டுகள் இருக்கும். அரித்து எடுத்து, அவித்து சாப்பிட்டால், குத்தமில்லை.

அமெரிக்காவில், use by date முடிந்தால், அந்த காலத்தில், கப்பலில் போட்டு, இலவசமாக அனுப்பி வைப்பார்கள். (இப்போது, அமெரிக்காவில் அழுத்தம் பிரயோகிக்கும் லாபி குரூப்புகள் வந்து விட்டன).

அப்படி வந்த மாவில், ஆளுக்கு 3 விசுக்கோத்து, பணிஸ் பாடசாலைகளுக்கு கொடுத்தார்கள். கூப்பன் மாவாக, ஏழை பாழைகளுக்கு இலவசமாக கொடுத்தார்கள்.🙄

இந்த பணிஸ் காரன் தனது துவி சக்கர வண்டியில் வருவதை வழிமேல் விழி வைத்து மாணவர்கள் காத்து இருப்பார்களாம்.

மாணவர்கள், கவிகளாக பாட்டு இயற்றி பாடியும் இருக்கிறார்கள். பணிஸ் வருகுது, பட்டாளம் ஓடுது போன்ற பாடல்கள் பிரபலமாம்.  

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

கிழக்கில் செய்வார்களா தெரியாது

இல்லை வன்னி, திருமலை, மட்டகளப்பில் நாங்கள் கோதுமை மாவுக்குள் தண்ணியை ஊத்தி பசை கிண்டிப்போட்டு, அப்படியே சாப்பிடுவோம்🤣.

3 hours ago, Nathamuni said:

உலகில் யாழ்ப்பாண குடாநாட்டில் மட்டுமே

என்ன மூத்தவரே, உங்களுகே கிழக்கில் இப்படி செய்வதுண்டா என தெரியவில்லை, பிறகு எப்படி உலகிலேயே யாழ்பாணத்தில் மட்டும்?

45 minutes ago, Nathamuni said:

இரண்டுமே கோதுமை மா தான். 

கூப்பன் மா, புழு, வண்டுகள் இருக்கும். அரித்து எடுத்து, அவித்து சாப்பிட்டால், குத்தமில்லை.

அமெரிக்காவில், use by date முடிந்தால், அந்த காலத்தில், கப்பலில் போட்டு, இலவசமாக அனுப்பி வைப்பார்கள். (இப்போது, அமெரிக்காவில் அழுத்தம் பிரயோகிக்கும் லாபி குரூப்புகள் வந்து விட்டன).

அப்படி வந்த மாவில், ஆளுக்கு 3 விசுக்கோத்து, பணிஸ் பாடசாலைகளுக்கு கொடுத்தார்கள். கூப்பன் மாவாக, ஏழை பாழைகளுக்கு இலவசமாக கொடுத்தார்கள்.🙄

இந்த பணிஸ் காரன் தனது துவி சக்கர வண்டியில் வருவதை வழிமேல் விழி வைத்து மாணவர்கள் காத்து இருப்பார்களாம்.

மாணவர்கள், கவிகளாக பாட்டு இயற்றி பாடியும் இருக்கிறார்கள். பணிஸ் வருகுது, பட்டாளம் ஓடுது போன்ற பாடல்கள் பிரபலமாம்.  

அவைக்கு சொல்லி போடாதேங்கோ….

ஊரில…உத….

அமெரிக்கன் மா எண்டும் சொல்லுறவை🤣

—————

இந்த திரியை பார்த்து @ராசவன்னியன் சார் டென்சன் ஆக போறார் 🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, goshan_che said:

இல்லை வன்னி, திருமலை, மட்டகளப்பில் நாங்கள் கோதுமை மாவுக்குள் தண்ணியை ஊத்தி பசை கிண்டிப்போட்டு, அப்படியே சாப்பிடுவோம்🤣.

என்ன மூத்தவரே, உங்களுகே கிழக்கில் இப்படி செய்வதுண்டா என தெரியவில்லை, பிறகு எப்படி உலகிலேயே யாழ்பாணத்தில் மட்டும்?

அவைக்கு சொல்லி போடாதேங்கோ….

ஊரில…உத….

அமெரிக்கன் மா எண்டும் சொல்லுறவை🤣

பெரிசு, நீங்கள் உண்மைல எந்த ஊர்..... மர்மதேசி...

நான் கேட்டது, ரதியக்காவ.... 

மட்டக்கிளப்பில், யாழ்பாணத்தான் வாழ்ந்தால், அவித்தமா பிட்டு சாப்பிடுவான் தானே பெரிசு.

இன்னும் விபரம் வேணமா? யாழ்ப்பாணம் போர்த்துக்கேயர் ஆளுமையில் இருக்கும் போதே, கோதுமைமா, பாண் பாவணை வந்தது. கிழக்கில் போர்த்துக்கேய ஆளுமை இருந்தது என்று, கல்வி வெளியீட்டு திணைக்கள புத்தகம் சொன்னால் அறியத்தரவும்.

அண்மையில் வாசித்தேன். பங்களாதேஸ், போர்த்துக்கேயர் சிட்டாகொங் நகரத்தில் பாண் அறிமுகம் செய்துள்ளனர்.

மூக்கை எலலா இடத்துக்கிளையும் டபக்கெண்டு நுழைக்கிற கெட்டிதனத்தால, நிர்வாகத்தில் சேர சிபார்சு.... 

Edited by Nathamuni
Added

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

பெரிசு, நீங்கள் உண்மைல எந்த ஊர்..... மர்மதேசி...

நான் கேட்டது, ரதியக்காவ.... 

மட்டக்கிளப்பில், யாழ்பாணத்தான் வாழ்ந்தால், அவித்தமா பிட்டு சாப்பிடுவான் தானே பெரிசு.

மூக்கை எலலா இடத்துக்கிளையும் டபக்கெண்டு நுழைக்கிற கெட்டிதனத்தால, நிர்வாகத்தில் சேர சிபார்சு.... 

ரதி அக்கா சிறு வயதில் யாழில் இருந்து மட்டு போனவ என்று சொன்ன நியாபகம்.

மட்டு, திருமலையில், வன்னியில் கூட பெரும்பாலும் அரிசி மாத்தான். நெல்மிகை மாவட்டங்கள் எல்லோ?

கோதுமையில் செய்வதென்றால் எல்லா இடமும் அவித்துத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

கூப்பன் மாவாக, ஏழை பாழைகளுக்கு இலவசமாக கொடுத்தார்கள்.🙄

மா மட்டுமல்ல பருப்பு.  அரிசி......இப்படி பல பொருள்கள்   கூப்பன் அட்டையுள்ளவர்களுக்கு  [ ஏழைகளுக்கு ]. வழங்கப்பட்டது    இதனால் கூப்பன். மா. என்று பெயர் வந்தது 

பலநோக்கு சங்கத்தின் கடை மூலம் இப்பொருள்கள். வழங்கப்பட்டது...இந்த .கடையில் வேலை செய்பவர்கள் ..அநேகமாக கல் வீடுகள் கட்டியிருக்கிறார்கள்.    ஒரு எழுதுவிளைஞர். வேலை செய்பவரால்    கூட அந்த காலத்தில் வீடு கட்ட முடியவில்லை........இவர்கள் சாமன்கள்.  நிறுக்கும்போது. ..சாமன் உள்ள  பக்கத்தில் கீழே  மெல்ல ஒரு தட்டு தட்டுவார்கள்.  .....அப்படி வேண்டும் சாமன்கள்.  ஒரு கிலோகிராம் என்றால் கண்டிப்பாக  50.......100. கிராம்.    குறைவாக தான் இருக்கும்   🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, ஈழப்பிரியன் said:

இதென்ன கோதாரி கண்ணும் தெரியுதில்லை.

புட்டின் பெருமையா பூட்டினின் பெருமையா?

பெரிசு! இது புட்டின் பெருமை...

Best Samuthirakani GIFs | Gfycat

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

சரியாச்சொன்னியள் தங்கச்சி! புட்டு விதம் விதமாய் தயாரிச்சு அலுக்காமல் சாப்பிடலாம்? :467:
அதுசரி ஆட்டக்காரி மா எப்பிடி?:rolling_on_the_floor_laughing:

உண்மையிலேயே நல்ல மா. பொய்க்கு கலர் எல்லாம் போடாம நல்ல வாசமும் கூட.

Edited by nilmini

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.