Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனா – ரஸ்யா உறவு அமெரிக்காவின் வியூகங்களின் தோல்வி – பொம்பியோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே ப்லரது கருத்துக்களும் உக்ரேன் யுத்தத்தில் மேற்கின் அரசியல், பொருளாதார, வெளியுறவுக் கொள்கைகளின் தோல்வியை ஒப்புக்கொள்வதாகத் தெரிகிறது. (இந்த மாற்றங்களை யுத்தத்தின் ஆரம்பத்திலேயே என்னாலும் மேலும் பலராலும்  எதிவு கூறப்பட்டது. அப்பொழுது பலர் அதனை மறுத்திருந்தனர்)

அப்படியானால் மேற்கு இந்த உக்ரேன்  ரஸ்ய யுத்தத்தை ஆரம்பத்திலேயே தடுத்திருக்கலாமல்லவா ? 

👇

EU warns of response to Belarus nuclear move

The bloc will apply sanctions unless Minsk refuses to host Russian tactical arms, Josep Borrell announced
 
EU warns of response to Belarus nuclear move

Josep Borrell rings a bell to signify the start of a meeting of EU foreign and defense ministers in Brussels, Belgium, March 20, 2023 ©  AP / Geert Vanden Wijngaert

The EU will respond with further sanctions if Belarus presses ahead with hosting Russian nuclear weapons on its soil, the bloc’s top diplomat, Josep Borrell, has stated. Borrell called the decision to transfer tactical weapons to Belarus “an irresponsible escalation” by Moscow.

“Belarus hosting Russian nuclear weapons would mean an irresponsible escalation and threat to European security,” Borrell tweeted on Sunday. “Belarus can still stop it, it is their choice,” he continued, adding that “the EU stands ready to respond with further sanctions.”

Russian President Vladimir Putin revealed on Saturday that his country’s tactical nuclear weapons will arrive in Belarus as early as this summer. Putin said that he made the decision after the UK announced it would transfer toxic depleted uranium munitions to Ukraine, a move he described as a sign of London’s “absolute recklessness.”

https://www.rt.com/russia/573635-borrell-sanctions-belarus-nuclear/

Edited by Kapithan

  • Replies 64
  • Views 4.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, விசுகு said:

இதுதான் மரத்தில் இருந்தபடியே மரத்தை தறிப்பதை பார்த்து மகிழ்வதாகும்?

ஒரு காலத்தில் பவுண்ஸ் ராச்சியம் செய்தது. அதன் பின் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது போல் புத்திசாலித்தனமாக அமெரிக்க டொலர் ராச்சியம் வந்தது. 
இப்போது சீனா,ரஷ்யா உட்பட மூன்றாம் உலக  நாடுகள் விழிப்படைய ஆரம்பித்து விட்டதை நீங்கள் கவனிக்கவில்லை போலும்.
இந்த டொலரால் மூன்றாம் உலக நாடுகள் பஞ்சத்தால் சீரழிந்து சாவதை தவிர வேறு எதை கண்டீர்கள்?
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Justin said:

நிற்க: அமெரிக்காவோடு ஒப்பிடுகையில் கனடாவும் , பல ஐரோப்பிய நாடுகளும் வசூலிக்கும் வருமான/சேவை வரிகள் உயர்வானவை. இதன் காரணம், இலவச மருத்துவ சேவைகள், வேலையிழந்தால் உதவி கொடுப்பனவு, வருமானம் குறைந்தவர்களுக்கு கவுன்சில் வீடு போன்ற சலுகை எனப் பல சமூகப் பாதுகாப்பு வலை முயற்சிகளை கனடாவும், ஐரோப்பிய நாடுகளும் வரிவருமானம் மூலமே செய்கின்றன.

வணக்கம்.
வரியையும் காப்புறுதியையும் கலக்கி சாம்பாராக்கி வைச்சிருக்கிறியள் எண்டு நினைக்கிறன்.:rolling_on_the_floor_laughing:

நான் எனது மொத்த வருமானத்தில்....பகுதி பகுதியாக....
வருமான வரி கட்டுகின்றேன்
மருத்துவ காப்புறுதி கட்டுகின்றேன்.
ஓய்வூதிய காப்புறுதி கட்டுகின்றேன்.
வேலை இழந்தால் என அதற்குரிய காப்புறுதி கட்டுகின்றேன்.

எல்லாம் வெட்டிக்கொத்தி மிச்சம் தான் கைக்கு வரும்.

மற்றும் படி....

தேத்தண்ணிக்கு தேயிலை சீனி வாங்குறது தொடக்கம் கோமணம் வாங்கிற வரைக்கும் வரி கட்டித்தான் வாங்கிறன்.:cool:

எனவே....

பணத்தை எப்படி, எங்கெல்லாம் கறந்து என்னமாதிரி ரோலிங் பண்ணுகிறார்கள் ????

ஐயகோ! நான் நுனிப்புல் மேய்ந்துவிட்டு கருத்தெழுதி விட்டேனா? :face_with_open_mouth:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

இருக்கலாம்! வரி, காப்புறுதி எதுவும் இல்லாத சோசலிஸ்ட் நாட்டில் நான் இருப்பதால் குழம்பியிருக்கிறேன் போல!😂

ஆனால், நீங்கள் கட்டும் "எதில் இருந்தும்" உங்களுக்குத் தேவையான போது ஆதரவு வருகிறது அல்லவா? அது புரியாத நிலை தான் "சம்பளத்தையும் மொத்தமாகத் தா, நான் படுக்கையில் விழுந்தால் இலவசமாக மருத்துவமும் தா!" என்று எதிர்பார்க்க வைக்கிறதென நினைக்கிறேன்.

எனவே, நுனிப்புல் தான்!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

எனது கருத்து 

பிரித்தானியாவின் இறங்கு முகத்துக்கு காரணம், பிரெக்சிற், யுத்தம், கோவிட்…ஆனால் இவை எல்லாவற்றையும் விட முக்கியம்….

இப்போ நாம் அரசாங்கம் என வைத்துள்ள முட்டாபீசுகள்.

92 இல் ஜோன்மேஜர் அரசின் கடைசி நாட்கள் போல இருக்கிறது இன்றைய அரசின் செயல்பாடுகள்.

ரிசி, வலஸ், ஹண்டை தவிர மருந்துக்கும் கெட்டிகாரார்/ரி என்று எவரும் இல்லை.

புதிய சிந்தனைகளும் இல்லை. 

ஐரோப்பியரை அல்லது குடியேறிகளை சாட்டுவது, ரஸ்ய போரில் சீன் போடுவது இவைதான் இவர்களின் அரசியல்.

இந்த குப்பை கூழத்தை அடுத்த தேர்தலில் அடியோடு தூக்கி எறிய நாடு வழமைக்குத் திரும்பும்.

1997 இலும், 2010 இலும் நடந்தது இதுதான்.

கன்சவேடிவ் கட்சியும் தன்னை புதிய தலைமையில் புதுப்பிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

Led by donkeys என்ற அமைப்பு சில முன்னாள் அமைச்சர்கள், இன்நாள் எம்பிக்களை முட்டாளாக்கி விலை பேசியுள்ளது 👇.

ஒருவர் முன்னாள் நிதி, மற்றவர் சுகாதார மந்திரிகள்.

இவர்கள் இருக்கும் வரை அந்த இடத்துக்கு வரமுடியாத அளவில் இருப்பவர்கள்தான் இப்போ அமைச்சர்களா இருப்போர் 🤣.

இவர்களே இப்படி என்றால் இப்போ இருப்போரின் தரம்?

அதெல்லாம் சரி அண்ணை 
ஊரில ஜீ எஸ், இன்சூரண்ஸ் கம்பெனியில் வேலை செய்தவன் இப்படி கண்டது கடியதெல்லாம் 
புஸ்ஸு புஸ்ஸு என்று குடும்பத்தோட  கிளம்பி வந்து ஹீத்ரோவில் நிண்டு பேஸ்புக்கில்  படம்போடுதுகள். இலங்கைக்கு மட்டும் ஸ்பெஷல் ரூட் ஏதும் யு.கே வில் திறந்து விட்டிருக்கினமா. சொன்னால் நாங்களும் உங்கட புண்ணியத்தில் யு கேவிற்கு விசிட் அடிப்போமில்ல   

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அக்னியஷ்த்ரா said:

🤣எனக்கும் உதே டவுட்டுத்தான்.

என்னமோ நடக்குது…மர்மமாய் இருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

இருக்கலாம்! வரி, காப்புறுதி எதுவும் இல்லாத சோசலிஸ்ட் நாட்டில் நான் இருப்பதால் குழம்பியிருக்கிறேன் போல!😂

ஆனால், நீங்கள் கட்டும் "எதில் இருந்தும்" உங்களுக்குத் தேவையான போது ஆதரவு வருகிறது அல்லவா? அது புரியாத நிலை தான் "சம்பளத்தையும் மொத்தமாகத் தா, நான் படுக்கையில் விழுந்தால் இலவசமாக மருத்துவமும் தா!" என்று எதிர்பார்க்க வைக்கிறதென நினைக்கிறேன்.

எனவே, நுனிப்புல் தான்!

ஜேர்மனி பற்றி எனக்கு தெரியாது.  ஆனால் யூ கேயை பொறுத்தவரை உங்கள் welfare state பற்றிய புரிதல் சரியே.

யூ கேயில் வாகன 3rd party insurance தவிர மிகுதி எந்த காப்புறுதியும் கட்டாயம் இல்லை, வேணும் எண்டால் எடுக்கலாம் (optional).

எனது சம்பளத்தில் பிடிக்கப்படுவது

1. Income tax (வருமான வரி) - இதை எடுத்து அரசு செலவுக்கு பாவிக்கும்.

2. National Insurance -NI (தேசிய காப்புறுதி) - இதன் பெயர்தான் காப்புறுதி, ஆனால் இதுவும் இன்னொரு வருமான வரிதான். இதை கட்டுவதால் எந்த சலுகையும் இல்லை. இப்போ பென்சன் வயதானவர்களின் பாதுகாப்பை இந்த பணத்தை வைத்து அரசு உறுதி செய்யும். நாளைக்கு நாம் பென்சன் வயதை அடையும் போது - எமது பிள்ளைகளின் NI ஐ எடுத்து எம்மை பராமரிப்பார்கள்.

இதை தவிர, வாகனம் வைத்திருந்தால் வீதி வரி, டிவிக்கு லைசன்ஸ் பீஸ், பிறகு வாங்கும் பொருட்களுக்கு VAT இப்படி மேலதிக வரிகளும் உண்டு.

ஆனால் வேறு எந்த காப்புறுதியிம் கட்டாயம் இல்லை.

இந்த வரிகளை கட்டிவிட்டு, அல்லது வேலைக்கு போகாமல், அல்லது போயும் வரி வரம்புக்கு கீழ் சம்பளம் எடுக்கும் பிரித்தானியாவில் habitual resident ஆக இருக்கும் யாரும்,

1. வேலையில்லா கொடுபனவுகள், 

2. பிள்ளைகளின் கொடுப்பனவுகள்,

3. வீட்டுக் கொடுபனவுகள்,

4. மாற்றுதிறாளிகள் கொடுப்பனவுகள்,

6. NHS இல் எந்தளவு சிக்கலான வைத்திய பராமரிப்பம்

7. யூனிவர்சிட்டி வரை கல்வி (ஸ்காட்லாந்தில் யூனியும்)

போன்ற welfare state இன் அனுகூலங்களை பெறுவர்.

ஆகவே கட்ட வேண்டிய ஒரே கட்டணம் income tax + NI + miscellaneous taxes மட்டும் தான்.

நாம் விரும்பினால், தனியாராக மருத்துவ காப்பீடு, வேலை இழந்தால் வருமான காப்பீடு என போட்டு வைக்கலாம்.

இப்படி போட்டு வைத்தால் - primary healthcare setup இல் மினகெடாமல் GPஐ பார்க்கலாம், ஆப்பரேசன்கள விரைவாக செய்வார்கள் ((NHS க்கு வெளியே). 

நான் காப்புறுதி என்றால், வாகனம், வாழ்க்கை. மருதுவம் மூண்டும் மட்டும்தான்.

ஆனால் இதுவே அரிது.

பெரும்பான்மை பிரித்தானியர்கள் போடும் ஒரே காப்புறுதி வாகன காப்புறுதி மட்டும்தான். 

பிகு

ஜேர்மனி பிரிதானியாவை விட பெரிய பொருளாதாரமாக இருந்தும், எமகு ஆட்கள் அள்ளுபட்டு வந்தமைக்கு இதுவும் ஒரு காரணம் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

ஒரு காலத்தில் பவுண்ஸ் ராச்சியம் செய்தது. அதன் பின் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது போல் புத்திசாலித்தனமாக அமெரிக்க டொலர் ராச்சியம் வந்தது. 
இப்போது சீனா,ரஷ்யா உட்பட மூன்றாம் உலக  நாடுகள் விழிப்படைய ஆரம்பித்து விட்டதை நீங்கள் கவனிக்கவில்லை போலும்.
இந்த டொலரால் மூன்றாம் உலக நாடுகள் பஞ்சத்தால் சீரழிந்து சாவதை தவிர வேறு எதை கண்டீர்கள்?

எல்லாமே இக்கரைக்கு அக்கரை பச்சை விளையாட்டு தான். டொலர் போனால் அல்லது ரசியா சீனாவிடம் பண அதிகாரம் போனால் உலகமக்கள் வாழ்வு செழிக்கும் என்ற உங்கள் கனவில் நான் தலையிட விரும்பவில்லை. 

எனக்கு அவர்கள் இதைவிட மோசமான வியாபாரிகள் மக்கள் ஐனநாயக விரோதிகள். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

ஜேர்மனி பற்றி எனக்கு தெரியாது.  ஆனால் யூ கேயை பொறுத்தவரை உங்கள் welfare state பற்றிய புரிதல் சரியே.

யூ கேயில் வாகன 3rd party insurance தவிர மிகுதி எந்த காப்புறுதியும் கட்டாயம் இல்லை, வேணும் எண்டால் எடுக்கலாம் (optional).

எனது சம்பளத்தில் பிடிக்கப்படுவது

1. Income tax (வருமான வரி) - இதை எடுத்து அரசு செலவுக்கு பாவிக்கும்.

2. National Insurance -NI (தேசிய காப்புறுதி) - இதன் பெயர்தான் காப்புறுதி, ஆனால் இதுவும் இன்னொரு வருமான வரிதான். இதை கட்டுவதால் எந்த சலுகையும் இல்லை. இப்போ பென்சன் வயதானவர்களின் பாதுகாப்பை இந்த பணத்தை வைத்து அரசு உறுதி செய்யும். நாளைக்கு நாம் பென்சன் வயதை அடையும் போது - எமது பிள்ளைகளின் NI ஐ எடுத்து எம்மை பராமரிப்பார்கள்.

இதை தவிர, வாகனம் வைத்திருந்தால் வீதி வரி, டிவிக்கு லைசன்ஸ் பீஸ், பிறகு வாங்கும் பொருட்களுக்கு VAT இப்படி மேலதிக வரிகளும் உண்டு.

ஆனால் வேறு எந்த காப்புறுதியிம் கட்டாயம் இல்லை.

இந்த வரிகளை கட்டிவிட்டு, அல்லது வேலைக்கு போகாமல், அல்லது போயும் வரி வரம்புக்கு கீழ் சம்பளம் எடுக்கும் பிரித்தானியாவில் habitual resident ஆக இருக்கும் யாரும்,

1. வேலையில்லா கொடுபனவுகள், 

2. பிள்ளைகளின் கொடுப்பனவுகள்,

3. வீட்டுக் கொடுபனவுகள்,

4. மாற்றுதிறாளிகள் கொடுப்பனவுகள்,

6. NHS இல் எந்தளவு சிக்கலான வைத்திய பராமரிப்பம்

7. யூனிவர்சிட்டி வரை கல்வி (ஸ்காட்லாந்தில் யூனியும்)

போன்ற welfare state இன் அனுகூலங்களை பெறுவர்.

ஆகவே கட்ட வேண்டிய ஒரே கட்டணம் income tax + NI + miscellaneous taxes மட்டும் தான்.

நாம் விரும்பினால், தனியாராக மருத்துவ காப்பீடு, வேலை இழந்தால் வருமான காப்பீடு என போட்டு வைக்கலாம்.

இப்படி போட்டு வைத்தால் - primary healthcare setup இல் மினகெடாமல் GPஐ பார்க்கலாம், ஆப்பரேசன்கள விரைவாக செய்வார்கள் ((NHS க்கு வெளியே). 

நான் காப்புறுதி என்றால், வாகனம், வாழ்க்கை. மருதுவம் மூண்டும் மட்டும்தான்.

ஆனால் இதுவே அரிது.

பெரும்பான்மை பிரித்தானியர்கள் போடும் ஒரே காப்புறுதி வாகன காப்புறுதி மட்டும்தான். 

பிகு

ஜேர்மனி பிரிதானியாவை விட பெரிய பொருளாதாரமாக இருந்தும், எமகு ஆட்கள் அள்ளுபட்டு வந்தமைக்கு இதுவும் ஒரு காரணம் என நினைக்கிறேன்.

ஓம்.

Big picture: ஐரோப்பா/கனடாவோடு ஒப்பிடுகையில், அமெரிக்காவில்

1. தேசிய வருமான வரி (Income tax) குறைவு.
2. நுகர்வுப் பொருட்களுக்கான விற்பனை வரி (sales tax) 0 முதல் 7% வரை (ஐந்து மாநிலங்களில் விற்பனை வரி கிடையாது பெரும்பாலான பொருட்களுக்கு)

3. இதை விட சோலை வரி/ஆதனவரி (property tax) நகர மட்டத்தில் ,எனவே அதைத் தனி வரியாக மக்கள் பார்ப்பது குறைவு.

ஆனால், மருத்துவக் காப்புறுதி மிக அதிகம் (ஜேர்மனியின் ஆகக் குறைந்த காப்புறுதியை விட 4 மடங்கு அதிகம் இங்கே).

 Welfare states உள்ளடங்கினாலும், முதலாளிய நாடுகளின் அடிப்படையே "இலவசச் சோறு கிடையாது - no free lunch" என்பது தான்! இதைத் தெரிந்து கொண்டு தான் இந்த நாடுகளுக்கு வருகிறோம், வர முன்னர் தெரியாதோரும் தெரிந்த பின்னர் தகவமைத்துக் கொள்கிறோம்!

"எங்களைக் கண்ணைக் கட்டிக் கொண்டு வந்து இறக்கி விட்டார்கள், தெரிந்திருந்தால் கியூபா போய் பாலும் தேனும் ஓட வாழ்ந்திருப்போம்"😎 என்ற வகையிலான வாதம் நகைப்பிற்குரியதாகவே தெரிகிறது!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

ஜேர்மனி பிரிதானியாவை விட பெரிய பொருளாதாரமாக இருந்தும், எமகு ஆட்கள் அள்ளுபட்டு வந்தமைக்கு இதுவும் ஒரு காரணம் என நினைக்கிறேன்.

கருத்துக்கு நன்றி  கோசான். எனது உறவினர், நண்பர்கள் நோர்வே, ஜேர்மனியில் இருந்து வீட்டை விற்று வேலையையும் விட்டு லண்டனுக்கு இடம் பெயர்ந்துள்ளார்கள். காரணம் பிள்ளைகளை ஆங்கிலத்தில் படிப்பிக்கவாம். நம்புகிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

எங்களைக் கண்ணைக் கட்டிக் கொண்டு வந்து இறக்கி விட்டார்கள், தெரிந்திருந்தால் கியூபா போய் பாலும் தேனும் ஓட வாழ்ந்திருப்போம்"😎 என்ற வகையிலான வாதம் நகைப்பிற்குரியதாகவே தெரிகிறது!

😂

அவர்கள் எல்லாம் மிகவும் புத்திசாலிகள். அவர்கள் கனவு கண்ட  மேற்குலக நாடுகளுக்கே ரிக்கெற் வாங்கி திட்டமிட்டபடி வந்து சேர்ந்தனர். அவர்கள் கனவு நிறைவேறிவிட்டது. அங்கே இருந்து என்ஜோய் பண்ணிகொண்டு ரஷ்யா சீனாவால்  உலக நாடுகள் முன்னேறபோகின்றன என்பதெல்லாம் நகைச்சுவைக்காக.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

கருத்துக்கு நன்றி  கோசான். எனது உறவினர், நண்பர்கள் நோர்வே, ஜேர்மனியில் இருந்து வீட்டை விற்று வேலையையும் விட்டு லண்டனுக்கு இடம் பெயர்ந்துள்ளார்கள். காரணம் பிள்ளைகளை ஆங்கிலத்தில் படிப்பிக்கவாம். நம்புகிறீர்களா?

ஆங்கில மோகமும் நிச்சயமாக ஒரு காரணம் என்றே எண்ணுகிறேன்.

ஆனால் நோர்வேயில், ஜேர்மனியில் இரெண்டாம் மொழியாக ஆங்கிலத்தை படிக்கும் பிள்ளைகளும் ஆங்கிலம் நன்றாகவே கதைப்பார்கள்.

தவிரவும் அங்கேயும் கல்வியில், தொழிலில் முன்னேற சகல வாய்புகளும் உண்டு.

சில வேளை மேலே சொன்னது போல் - ஜேர்மனியில் வரியோடு சேர்த்து காப்புறுதிகள் என்ற பெயரில் கைக்கு வர முன்னம் புடிங்கி விடுவார்கள் என்பதால் - இங்கே வந்தால் கையில் காசு மிஞ்சும் என வருகிறார்களோ தெரியாது.

ஆனால் ஒரு விடயம் மட்டும் நான் கண்ட உண்மை.

பிரயாசை உள்ள வெள்ளையினத்தோர் அல்லாதோர் வேறு எந்த ஐரோப்பிய நாட்டிலும் விட யூகேயில் அதிகம் பிரகாசிக்கின்றனர்.

அது கடை, பெற்றோல் செட் முதல், போஸ்ட் ஆபீஸ், உணவு விடுதிகள், பல அறை கொண்ட ஹோட்டல், பல ஆயிரம் பேரை வைத்து பராமரிக்கும் முதியோர் இல்ல சங்கிலிகள், உயர் கல்வி கூடங்கள், நூற்றுக்கணக்கில் வீடுகள் கொண்ட வாடகை வீடு வியாபாரம், எண்ணை குதங்கள் என பல் பரிமாணம் கொண்டது.

இந்த அசுர வளர்ச்சியை ஏனைய ஐரோப்பிய நாட்டு தமிழ் சமூகங்களுடன் ஒப்பிடவே முடியாது. பிரான்ஸ் அதுவும் பரிசுக்குள் கொஞ்சம் அருகில் வரும் என எண்ணுகிறேன்.

பல இத்தாலியரையும், ஐரிஸ் ஆட்களையும் கடல் கடந்து வந்து அமெரிக்காவில் பிரகாசிக்க செய்த American Dream ஐ போன்றதொரு விசயம்.

அதே போலவே அரசியல், மருத்துவம், சட்டம் எல்லா துறைகளிலும்.

இங்கே இப்போ ஒரு வெள்ளையினத்தவர் அல்லாத டாக்டர்/நர்ஸ் பார்ப்பதுதான் வழமை, வெள்ளைகள் பார்ப்பதுதான் அபூர்வம் என்றாகி விட்டது.

ஏனைய நாடுகளில் இவை இன்னும் கொஞ்சம் அபூர்வமான விடயங்களே.

இப்போ பிரித்தானியாவின் பிரதமர், உள்துறை அமைச்சர், வெளி விவகார அமைச்சர் வெள்ளை அல்லாதோர். அண்மையில் கவிழ்ந்த அரசில் இவர்களுடன் நிதி அமைச்சரும் வெள்ளை அல்லாதோர்.

இதோ இன்று ஒரு முஸ்லிம் ஸ்கொட்லாந்தின் முதன் மந்திரி. லண்டன் மேயரும் அப்படியே.

ஆகவே இங்கே வெள்ளை இனமல்லாதோருக்கான உயர்வை தடுக்கும் கண்ணுக்கு தெரியாத கண்ணாடி கூரைகள் (glass ceilings) ஒப்பீட்டளவில் குறைவு என்பது ஒரு பெரும் காரணம் என நான் எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

எமகு ஆட்கள் அள்ளுபட்டு வந்தமைக்கு இதுவும்

எமது ஆட்கள் பிரித்தானியாவுக்கு அள்ளுபட்டு செல்ல செல்ல அந்த நாட்டின் புகழும் ஓங்கியது. ரஷ்யா சீனா ரிக்கட் கொடுத்து விசா பெமிட் கொடுத்து வாங்கோ என்றாலும் இலங்கை தமிழன் அங்கே போகமாட்டான் 🚫

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

எமது ஆட்கள் பிரித்தானியாவுக்கு அள்ளுபட்டு செல்ல செல்ல அந்த நாட்டின் புகழும் ஓங்கியது. ரஷ்யா சீனா ரிக்கட் கொடுத்து விசா பெமிட் கொடுத்து வாங்கோ என்றாலும் இலங்கை தமிழன் அங்கே போகமாட்டான் 🚫

1970 களின் கடைசியில் யாரைப் பார்த்தாலும் வெளிநாடு போவதென்றால் ஏறோபிளட் என்னும் ரசிய விமானத்தையே விரும்பினார்கள்.

77 இல் நானும் இதில்த் தான் பயணமானேன்.

ஏன் எதற்கென்று இன்றுவரை தெரியாது.

வெளிநாடு போவதானால் ஏறொபிளட் ரிக்கட்

தோமஸ்குக் ரவலேர்ஸ் செக்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Justin said:

ஓம்.

Big picture: ஐரோப்பா/கனடாவோடு ஒப்பிடுகையில், அமெரிக்காவில்

1. தேசிய வருமான வரி (Income tax) குறைவு.
2. நுகர்வுப் பொருட்களுக்கான விற்பனை வரி (sales tax) 0 முதல் 7% வரை (ஐந்து மாநிலங்களில் விற்பனை வரி கிடையாது பெரும்பாலான பொருட்களுக்கு)

3. இதை விட சோலை வரி/ஆதனவரி (property tax) நகர மட்டத்தில் ,எனவே அதைத் தனி வரியாக மக்கள் பார்ப்பது குறைவு.

ஆனால், மருத்துவக் காப்புறுதி மிக அதிகம் (ஜேர்மனியின் ஆகக் குறைந்த காப்புறுதியை விட 4 மடங்கு அதிகம் இங்கே).

 Welfare states உள்ளடங்கினாலும், முதலாளிய நாடுகளின் அடிப்படையே "இலவசச் சோறு கிடையாது - no free lunch" என்பது தான்! இதைத் தெரிந்து கொண்டு தான் இந்த நாடுகளுக்கு வருகிறோம், வர முன்னர் தெரியாதோரும் தெரிந்த பின்னர் தகவமைத்துக் கொள்கிறோம்!

"எங்களைக் கண்ணைக் கட்டிக் கொண்டு வந்து இறக்கி விட்டார்கள், தெரிந்திருந்தால் கியூபா போய் பாலும் தேனும் ஓட வாழ்ந்திருப்போம்"😎 என்ற வகையிலான வாதம் நகைப்பிற்குரியதாகவே தெரிகிறது!

எல்லாவற்றையும் கூறிவிட்டு

முக்கியமான பல்கலைக்கு எவ்வளவு கட்ட வேண்டும் என்பதை கூறவில்லையே.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ஈழப்பிரியன் said:

1970 களின் கடைசியில் யாரைப் பார்த்தாலும் வெளிநாடு போவதென்றால் ஏறோபிளட் என்னும் ரசிய விமானத்தையே விரும்பினார்கள்.

77 இல் நானும் இதில்த் தான் பயணமானேன்.

ஏன் எதற்கென்று இன்றுவரை தெரியாது.

வெளிநாடு போவதானால் ஏறொபிளட் ரிக்கட்

தோமஸ்குக் ரவலேர்ஸ் செக்.

நானும் கேள்விபட்டேன் . உக்ரேன் ஆக்கிரமிக்கபட்ட பின்பு தமிழ் சீனியர்களிடம் இருந்து ஆவலுடன் தகவல்கள் பெற்றேன்😂
ரஷ்ய விமான ரிக்கெற் மலிவு இலங்கையும் நட்பு நாடு. இலங்கையில் இருந்து புறப்படும் ரஷ்ய விமானம் ரஷ்ய விமானநிலையத்திற்கு சென்று பின்பு அங்கே இருந்து அவர்கள் பிரித்து வைத்திருந்த கம்யுனிஸ் யேர்மனியில் கொண்டு சென்று இறக்கிவிடுவார்களாம்.அங்கே இருந்து எம்மவர்கள் தப்பினோம் பிழைத்தோம் என்று மேற்குலநாடுகளுக்கு சென்றுவிடுவார்களாம். மேற்குல அகதி முகாமில் இருந்த போது ரஷ்யாவும் வேண்டாம் கம்யுனிஸ் கிழக்கு  யேர்மனியும் வேண்டாம் மேற்குலநாடுகளே எனக்கும் வேண்டும் என்று இவர்களுடன் வந்த சித்தாந்த தமிழர் சொன்னாராம் இந்த சிறப்பான மேற்குலநாடுகளுக்குள் நீஙகள் வந்து சேர உதவி செய்தது ரஷ்யா என்பதை நீங்கள் மறக்க கூடாது என்றாராம்🙆‍♂️

  • கருத்துக்கள உறவுகள்

இது UK இருப்பவர்களுக்கு மாத்திரம் தான் இந்த  பதிவு. 
நிதி அறிவுரை அல்ல.

இது முதலீடு திரியில் வர வேண்டும்.

அனால், இந்த திரியில் ஓய்வொத்தியம், மானியம், காப்புறுதி அலசப்படுவதால்,

UK இல் இருபவர்கள் உங்கள் அரச தேசிய காப்புறுதி (NI) மேலதிகமாக கட்டி, அரச ஓய்வூதிய வருடங்களை வாங்கலாம். அல்லது முன்பு அரச NI  காட்டாமல்  விடப்பட்ட வருடங்களுக்கு NI  கட்டி (ஒரு கால எல்லை வரைக்கும்) வருடங்களை கூட்டலாம் 

இது 06 April 2023 உடன் செய்பட வேண்டியது. அனால் இப்பொது அரசு ஆடி 2023 வரை காலா எல்லையை நீட்டி இருக்கிறது. இது நான் இப்பொது கேள்விப்படுகிறேன், அனால் சரி பார்க்கவும்.

UK  தேசிய காப்புறுதி (NI) - அரச ஓய்வூதியதுக்கு கட்டுவது, ஓர் காப்புறுதியாகவே நோக்கப்பட வேண்டும் - அதுவே அரசின் பார்வையும். (சில வேளைகளில், ஓய்வூதியம், முதலீடு  பற்றி அறிவுரை எடுத்து இருந்தால்,  உங்களுக்கு தெரியாமலே நீங்கள் அரச ஓய்வூதியத்தில் இருந்து வெளிவந்து (opt out ) இருப்பீர்கள். அதையும் சரி பார்க்கவும்).

நிதி அறிவுரை அல்ல.

உங்களின் தேசிய காப்புறுதி பங்களிப்பை - நீங்கள் கட்டிய வருடங்களை - உங்களின் அரச ஓய்வூதிய தரவுகளை - இப்பொது இணைய வழி ஊடாகவே பார்க்கலாம். 

https://www.tax.service.gov.uk/check-your-state-pension/account/nirecord

அனால், அரச இணையத்தில் புகுமுக கணக்கு (login) தேவை. ஏற்கனவே இல்லாவிட்டால் இணையவும், ஏனெனில் 1-2 வாரங்கள் அல்லது அதை விட அதிக நேரமும்  எடுக்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

UK  தேசிய காப்புறுதி (NI) - அரச ஓய்வூதியதுக்கு கட்டுவது, ஓர் காப்புறுதியாகவே நோக்கப்பட வேண்டும் - அதுவே அரசின் பார்வையும்

அரசின் பார்வையிம் அது ஏனென்றால் NI ஐ அறிமுகபடுத்தும் போது அதை ஒரு வரி என அரசு அறிவிக்க விரும்பவில்லை. அரசியல் காரணங்களுக்காக.

ஆனால் இது காப்பீடு அல்ல. காப்பீடு என்றால் நான் premium கட்டினால் எனக்கு அதன் benefit வரவேண்டும்.

ஆனால் இங்கே இப்போ நான் கட்டும் NI ஐ எடுத்து தற்போதைய பென்சனை வழங்கி விட்டு, நாளை அடுத்த சந்ததி கொடுக்கும் NI ஐ எடுத்து எனக்கு பென்சன் தருவார்கள்.

அது மட்டும் அல்ல NI கட்டாதவருக்கும் basic state pension இதே காசில் எடுத்து கொடுப்பார்கள்.

ஆகவே இது காப்புறுதி அல்ல. 

பெயரே National Insurance அதாவது தேசத்தின் காப்புறுதியாம்🤣.

வேறு ஒரு காரணமும் இல்லை, பிளேர் வரியை கூட்டி விட்டார் என்ற பெயரை தவிர்க பாவித்த political spin தான் இந்த காப்புறுதி என்ற பதம்.

பிகு

NI top up பண்ணுவது பற்றிய உங்கள் கூற்று சரியே.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nunavilan said:

கருத்துக்கு நன்றி  கோசான். எனது உறவினர், நண்பர்கள் நோர்வே, ஜேர்மனியில் இருந்து வீட்டை விற்று வேலையையும் விட்டு லண்டனுக்கு இடம் பெயர்ந்துள்ளார்கள். காரணம் பிள்ளைகளை ஆங்கிலத்தில் படிப்பிக்கவாம். நம்புகிறீர்களா?

நானும் பிரான்ஸ் வந்து போது எனது நண்பர்கள் உறவினர்கள் இவ்வாறு லண்டன் அமெரிக்கா கனடா அவுஸ்திரேலியா என்று பறந்தார்கள். நான் மட்டும் உழுகிற மாடு எங்கும் உழும் என்று இங்கேயே தங்கி விட்டேன். 

இப்போது என் பிள்ளைகளின் கல்வி வேலை மற்றும் வாழ்வுநிலையை வந்து பார்க்கும் அங்கு சென்ற அனைவரும் சொல்லும் ஒரே வார்த்தை என் முடிவு சரி என்பது தான்.  

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

ஆங்கில மோகமும் நிச்சயமாக ஒரு காரணம் என்றே எண்ணுகிறேன்.

ஆனால் நோர்வேயில், ஜேர்மனியில் இரெண்டாம் மொழியாக ஆங்கிலத்தை படிக்கும் பிள்ளைகளும் ஆங்கிலம் நன்றாகவே கதைப்பார்கள்.

தவிரவும் அங்கேயும் கல்வியில், தொழிலில் முன்னேற சகல வாய்புகளும் உண்டு.

சில வேளை மேலே சொன்னது போல் - ஜேர்மனியில் வரியோடு சேர்த்து காப்புறுதிகள் என்ற பெயரில் கைக்கு வர முன்னம் புடிங்கி விடுவார்கள் என்பதால் - இங்கே வந்தால் கையில் காசு மிஞ்சும் என வருகிறார்களோ தெரியாது.

ஆனால் ஒரு விடயம் மட்டும் நான் கண்ட உண்மை.

பிரயாசை உள்ள வெள்ளையினத்தோர் அல்லாதோர் வேறு எந்த ஐரோப்பிய நாட்டிலும் விட யூகேயில் அதிகம் பிரகாசிக்கின்றனர்.

அது கடை, பெற்றோல் செட் முதல், போஸ்ட் ஆபீஸ், உணவு விடுதிகள், பல அறை கொண்ட ஹோட்டல், பல ஆயிரம் பேரை வைத்து பராமரிக்கும் முதியோர் இல்ல சங்கிலிகள், உயர் கல்வி கூடங்கள், நூற்றுக்கணக்கில் வீடுகள் கொண்ட வாடகை வீடு வியாபாரம், எண்ணை குதங்கள் என பல் பரிமாணம் கொண்டது.

இந்த அசுர வளர்ச்சியை ஏனைய ஐரோப்பிய நாட்டு தமிழ் சமூகங்களுடன் ஒப்பிடவே முடியாது. பிரான்ஸ் அதுவும் பரிசுக்குள் கொஞ்சம் அருகில் வரும் என எண்ணுகிறேன்.

பல இத்தாலியரையும், ஐரிஸ் ஆட்களையும் கடல் கடந்து வந்து அமெரிக்காவில் பிரகாசிக்க செய்த American Dream ஐ போன்றதொரு விசயம்.

அதே போலவே அரசியல், மருத்துவம், சட்டம் எல்லா துறைகளிலும்.

இங்கே இப்போ ஒரு வெள்ளையினத்தவர் அல்லாத டாக்டர்/நர்ஸ் பார்ப்பதுதான் வழமை, வெள்ளைகள் பார்ப்பதுதான் அபூர்வம் என்றாகி விட்டது.

ஏனைய நாடுகளில் இவை இன்னும் கொஞ்சம் அபூர்வமான விடயங்களே.

இப்போ பிரித்தானியாவின் பிரதமர், உள்துறை அமைச்சர், வெளி விவகார அமைச்சர் வெள்ளை அல்லாதோர். அண்மையில் கவிழ்ந்த அரசில் இவர்களுடன் நிதி அமைச்சரும் வெள்ளை அல்லாதோர்.

இதோ இன்று ஒரு முஸ்லிம் ஸ்கொட்லாந்தின் முதன் மந்திரி. லண்டன் மேயரும் அப்படியே.

ஆகவே இங்கே வெள்ளை இனமல்லாதோருக்கான உயர்வை தடுக்கும் கண்ணுக்கு தெரியாத கண்ணாடி கூரைகள் (glass ceilings) ஒப்பீட்டளவில் குறைவு என்பது ஒரு பெரும் காரணம் என நான் எண்ணுகிறேன்.

இது சரியான காரணமாகத் தான் படுகிறது.

பிரிட்டன், கனடா, அவுஸ்திரேலியா ஆகியவை பல்கலாச்சாரச் சூழலை வெற்றிகரமாக வளர்க்கின்றன என நினைக்கிறேன். சில நூறு ஆண்டுகளாக homogeneous population ஆக இருந்த ஸ்கண்டினேவிய நாடுகள் வாழ்க்கைத் தரத்தில் சிறந்து விளங்கினாலும், பல்கலாச்சாரக் கொள்கையை இன்னும் வளர்த்துக் கொள்ளவில்லை. ஆனாலும் மாற்றங்கள் அந்த திசை நோக்கியே இருக்கின்றன. ஸ்கண்டினேவியத் திரைத் தொடர்களின் நடிகர்கள், விளையாட்டு அணியில் இருப்போர் ஆகியோரிடையே கறுப்பு, பிறவுண் தோலினர் இப்போது சற்றுத் தென்பட ஆரம்பித்திருக்கின்றனர்.

அமெரிக்கா வேறு திசை: இங்கே "பல்கலாச்சாரம்" என்பதை விட வேறேதோ மக்களை இணைக்கிறது அல்லது பிரிக்கிறது. இதனால், தென்னமெரிக்க அடி கொண்டோரே தென்னமெரிக்கக் குடியேறிகளை உள்ளே விடாமல் கட்டுப் படுத்த வாக்களிப்பர்! இப்படி பல முரண்பாடுகள்!😂

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, goshan_che said:

அது மட்டும் அல்ல NI கட்டாதவருக்கும் basic state pension இதே காசில் எடுத்து கொடுப்பார்கள்.

ஆகவே இது காப்புறுதி அல்ல. 

அடிப்படை அரச ஓய்வூதியம் எடுக்க கூடியவர்கள் எல்லோரும் , அரச ஓய்வூதிய வயதுக்கு வந்துவிட்டார்கள் . எடுக்காமலும் இருக்கலாம்;

இனி அடிப்படை அரச ஓய்வூதியம் இல்லை.

அனால் காப்புறுதி - இதை விட நிச்சயமான காப்புறுதி ஒன்று இல்லை - ஏனெனில் உங்களின் கட்டுப்பாட்டை மீறி நீங்கள் உங்கள் அடிப்படை தேவைகளுக்கு ஆனா வருமானத்தையோ, முதலீடு அல்லது இவை போன்ற வருங்கால வருமான ஏற்பாடுளை  இழந்தால் - இதை விட உறுதியான காப்புறுதி இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kadancha said:

அடிப்படை அரச ஓய்வூதியம் எடுக்க கூடியவர்கள் எல்லோரும் , அரச ஓய்வூதிய வயதுக்கு வந்துவிட்டார்கள் . எடுக்காமலும் இருக்கலாம்;

இனி அடிப்படை அரச ஓய்வூதியம் இல்லை.

ஓம் ஆனால் இவ்வளவு காலமும் இருந்தது. இப்போதும் ஏலவே பென்சன் வயதுக்கு வந்தவர்கள் எடுக்கிறார்கள்.

ஆகவே NI கட்டாதவர், போதியளவு கட்டாதவருக்கும் - basic state pension கிடைத்தது. கிடைக்கிறது.

அதே போல் - வேலை இல்லா கொடுப்பனவு 16 வயதில் எடுக்க தொடங்குபவர் ஒரு பங்களிப்பும் (பிறிமியம்) இல்லாமல் காசு எடுப்பார்.

அதைப்போலவே வாழ்நாள் மாற்றுத்திறனாளியும் அவர்களுக்கு உரிய பங்கை எப்போதும் செலுத்தாமலே பலனை வாழ் நாள் பூராகவும் எடுப்பார்.

இவர்கள்+ பென்சன் காரர் கொடுப்பனவுகளை fund பண்ணுவது (முழுவதுமாக அல்ல) ஏனையோரின் NI contributions.

ஆகவே இதை காப்புறுதி என எப்படி சொல்லமுடியும்?

இயலுமானர்கள்/இருப்பவர்களிடம் எடுத்து, எல்லோருக்கும் சேவையை வழங்குவது - வரி, taxation. காப்புறுதி அல்ல.

23 minutes ago, Kadancha said:

அனால் காப்புறுதி - இதை விட நிச்சயமான காப்புறுதி ஒன்று இல்லை - ஏனெனில் உங்களின் கட்டுப்பாட்டை மீறி நீங்கள் உங்கள் அடிப்படை தேவைகளுக்கு ஆனா வருமானத்தையோ, முதலீடு அல்லது இவை போன்ற வருங்கால வருமான ஏற்பாடுளை  இழந்தால் - இதை விட உறுதியான காப்புறுதி இல்லை. 

இல்லை. இது ஒரு காப்புறுதி என பெயரிடப்பட்ட வரி.

NI வரமுதலும் இந்த பாதுகாப்புகள் இருந்தன. ஆனால் தொடர்ந்தும் அதை செய்ய வழி தெரியாத போது, 

தந்திரமாக உள்ளே வந்த வரிதான் NI.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 27/3/2023 at 14:18, விசுகு said:

எல்லாமே இக்கரைக்கு அக்கரை பச்சை விளையாட்டு தான். டொலர் போனால் அல்லது ரசியா சீனாவிடம் பண அதிகாரம் போனால் உலகமக்கள் வாழ்வு செழிக்கும் என்ற உங்கள் கனவில் நான் தலையிட விரும்பவில்லை. 

எனக்கு அவர்கள் இதைவிட மோசமான வியாபாரிகள் மக்கள் ஐனநாயக விரோதிகள். 

பத்து வருடங்களுக்கு முன்னரே ஐரோப்பிய பொருளாதர நிபுணர்கள் மாணவர்களே இனி சீன மொழியையும் சேர்த்து படியுங்கள் என எதிர்வு கூறியுள்ளனர்.

வியாபாரிகள் என்ற அடைமொழிக்குள் நீங்கள் வந்தால் ஐரோப்பிய அமெரிக்க வியாபாரிகளும் தேனுடன் விசத்தை கலந்து ஊட்டுபவர்கள் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, விசுகு said:

நானும் பிரான்ஸ் வந்து போது எனது நண்பர்கள் உறவினர்கள் இவ்வாறு லண்டன் அமெரிக்கா கனடா அவுஸ்திரேலியா என்று பறந்தார்கள். நான் மட்டும் உழுகிற மாடு எங்கும் உழும் என்று இங்கேயே தங்கி விட்டேன். 

அப்படி பார்த்தால் ஜேர்மனி இன்று தமிழர்களால் நிரம்பி வழிந்திருக்கும். :cool:
ரஷ்யா, மொஸ்கோ.ஏரோபிளொட் எண்டு வீம்புக்கு தூரம் போயிருக்க தேவையில்லை :beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்
On 27/3/2023 at 04:34, அக்னியஷ்த்ரா said:

அதெல்லாம் சரி அண்ணை 
ஊரில ஜீ எஸ், இன்சூரண்ஸ் கம்பெனியில் வேலை செய்தவன் இப்படி கண்டது கடியதெல்லாம் 
புஸ்ஸு புஸ்ஸு என்று குடும்பத்தோட  கிளம்பி வந்து ஹீத்ரோவில் நிண்டு பேஸ்புக்கில்  படம்போடுதுகள். இலங்கைக்கு மட்டும் ஸ்பெஷல் ரூட் ஏதும் யு.கே வில் திறந்து விட்டிருக்கினமா. சொன்னால் நாங்களும் உங்கட புண்ணியத்தில் யு கேவிற்கு விசிட் அடிப்போமில்ல   

On 27/3/2023 at 09:32, goshan_che said:

🤣எனக்கும் உதே டவுட்டுத்தான்.

என்னமோ நடக்குது…மர்மமாய் இருக்குது.

ஊரில இப்ப இது தான் ரென்ட். லன்டன் போக ஒன்டரைக் கோடியாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.