Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் உடைத்து எறியப்பட்டன!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் உடைத்து எறியப்பட்டன! 

Published By: NANTHINI

26 MAR, 2023 | 04:05 PM
image

வுனியா, நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் உடைத்து வீசப்பட்டுள்ளதுடன், ஏனைய விக்கிரகங்களும் மாயமாகியுள்ளமை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

வெடுக்குநாறி மலையில் இந்து மத வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருள் திணைக்களமும், நெடுங்கேணி பொலிஸாரும் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வந்ததோடு, தொல்பொருள்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம், கடந்த 2021ஆம் ஆண்டு வவுனியா நீதவான் நீதிமன்றில் வழக்கினையும் தாக்கல் செய்திருந்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணைகள் வவுனியா நீதிமன்றில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த நிலையில், தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஆலய நிர்வாகத்தினர் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டனர். 

எனினும், கடந்த வருடம் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆலயத்தின் பூசகர் மற்றும் நிர்வாகத்தினர் வழக்கிலிருந்து தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டனர். 

அத்தோடு, தொல்பொருள் சின்னங்களை அகற்றியது தொடர்பில் உண்மையான குற்றவாளிகளை ஆதாரங்களுடன் கண்டறிந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்கு நீதவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (26) காலை குறித்த ஆலயத்துக்கு சென்ற கிராம மக்கள் மற்றும் பூசகர் ஆலய விக்கிரகங்கள் திருடப்பட்டு, உடைத்தழித்து, எறியப்பட்டமையை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

குறிப்பாக, ஆலயத்தின் பிரதான விக்கிரகமான ஆதிலிங்கம் அகழ்ந்து எடுக்கப்பட்டு, அருகில் இருந்த புதருக்குள் வீசப்பட்டிருந்தது. 

அதேவேளை பிள்ளையார், அம்மன், வைரவர் விக்கிரகங்களும் பெயர்த்தெடுக்கப்பட்டு திருடிச் செல்லப்பட்டுள்ளன. இதனால் ஆலயத்துக்கு சென்று வழிபடும் பக்தர்கள், கிராமவாசிகள் மற்றும் தமிழ் மக்கள் அதிர்ச்சியும் கவலையும் கொள்கின்றனர். 

 

01__11_.jpg

01__10_.jpg

01__8_.jpg

01__9_.jpg

01__6_.jpg

01__7_.jpg

01__5_.jpg

01__4_.jpg

01__2_.jpg

01__3_.jpg

01__1_.jpg

download__2_.jpg

download__1_.jpg

download__3_.jpg

https://www.virakesari.lk/article/151432

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் பிள்ளைகளின் ஆதிக்க வெறி மேற்குலக அனுசரனையுடன்👍

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் ஆகாயத்தில் இருந்து செய்ததை இப்போ தரையில் நின்று கொண்டு செய்கிறது பெளத்த பேரினவாதம்.

உபயம்: அமெரிக்கா.. இஸ்ரேல்.. ஹிந்தியா.. சீனா.. ஐரோப்பா.

இதில் மோடி என்பவர் புத்த சாசன விரிவாக்கத்திற்கு காசு வேற கொடுத்திருக்கிறார். அதன் பலன் கச்சதீவும் புத்தர் வந்த இடமாச்சுது. 

  • கருத்துக்கள உறவுகள்

எங்க எங்க, சச்சியர் ? 

பலமுள்ளவனுக்கு பம்முவது ப்லரது இயல்பு.

இலங்கையில் இருந்தால் இலங்கை அரசிற்கும, இந்தியாவில் இருந்தால் இந்திய அரசிற்கும, மேற்கில் இருந்தால் மேற்குலக அதிகாரங்களுக்கும் பம்முவது இயல்பான விடயமாகிவிட்டது. 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

  இந்திய கொள்கை வகுப்பாளர்களை பொறுத்தவரை இதே கதை மலேசியாவிலோ அல்லது பாகிஸ்தானிலோ நடந்தால் வேறு உலக நாடுகளிலோ நடந்தால் கதையே வேறு மாதிரி கொண்டு போவார்கள் . இலங்கையின் வடகிழக்கு மோடியின் கட்டுப்பாட்டில் என்று சொன்ன அண்ணாமலையார் இந்த சம்பவத்துக்கு பின் உடுப்பு போட்டுகொண்டா இருக்கிறார் ?

48 minutes ago, Kapithan said:

எங்க எங்க, சச்சியர் ? 

May be an image of 4 people and text that says "புத்த பிக்குவுக்காய் கட்டியிருந்த வேட்டியை மட்டிக்கொடுத்தமைக்காய் இன்றுமுதல் "வேட்டியை ஈந்த வீரப்புலவான்" என்று அழைக்கப்படுவாய்!"

அவருக்கு கொடுக்கப்பட்ட வேலை தமிழர்களுக்குள் சகோதர்களாய் உள்ள தமிழ் கிறிஸ்தவர்களுக்கும் தமிழ் இந்துக்களுக்கும் பிரிவினையை உருவாக்கி எதிர்காலத்தில் தமிழர்களை பலமற்றதாக்குவதே .

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says "அத்துமீறும் மதமாற்றிகள் விரட்டியடிக்கப்படுவார்கள் மறவன்புலவு சச்சிதானந்தம் எச்சரிக்கை- போர்த்துக்கேயர், ஒல்லாத் அவரை வைத்து மதமாற்றம் அவர்களும் சைவர்களின் மதமாற்றம் செய்யும் நோக்கு மற்றும் ஆங்கிலேயர் செய்யலாம் என இங்குள்ளச கொள்கையான அகம் முகம் ஆகியோரின் வருகைக்கு மதம் என்பதுடன் நம்பிக்கை தியர்களோ அல்லது வேறு பின்னர் தற்பொழுது. சமயத்தவர்களோ தட்ட 400 மதமாற்று சபைகள் சைவர்கள் மில் உலா இந்த மரபான சமயத்தினை அழிக்க போதும் மறவன்புலவு னந்தம் எச்சரித்துள்ளார், இல்லத்தில் நேற்று அவை சுற்றுலா, மாற்றும் தொழில் தல் போன்ற கைக்கு இலங் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார். அங்கு மேலும் பிடுகையில் கல்முனை மற்றும் யாழ்ப் ூட்டங்களில் வருகை ஒருவரும் வாறு வருகை மதமாற்ற செயற்பாடுகளில் ஈடுபட என்பது இலங்கையின் எழுதப்பட்ட செயற்பட்டால் மதமாற்ற செயற்பாடுக ளில் வருகிறோம். ஏறத்தாழ நிறுத்தியுள் ளோம். நோக்கு யாரும் இங்கு வருகை வேண்டாம். கிறிஸ்தவர்கள் மற்றும் முகமதியர்கள் உங்களது சார்ந்து தனிப்பட்ட"

இதோ சச்சி வந்திட்டார். சிங்களவர்கள் செய்யும் எதனையும் கண்டுக்க மாட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

சச்சிக்கு சொல்லுங்கோ...கப்பல் ஒன்றை ...வாடகைக்கு எடுத்து ...அடியவர்களையும் சேர்த்துக்கொண்டு (சேர்ந்து போட்டொ எடுத்த கோட்டாவின் அடிவருடி) கச்சதீவு போய் புதுப்புத்தரை அடித்து நொறுக்கச் சொல்லுங்கள்....புத்தனா ..சிவனா என்பதை ஒரு கை பார்த்துவிடுவம்....😄

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது இந்த இடத்திற்கு சென்ற அனுபவம் உண்டா? காட்டு பகுதி போலும்?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:

இன்று (26) காலை குறித்த ஆலயத்துக்கு சென்ற கிராம மக்கள் மற்றும் பூசகர் ஆலய விக்கிரகங்கள் திருடப்பட்டு, உடைத்தழித்து, எறியப்பட்டமையை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

2 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

யாராவது இந்த இடத்திற்கு சென்ற அனுபவம் உண்டா? காட்டு பகுதி போலும்?

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

 

 

நான் செய்தியில் எழுதப்பட்டுள்ளதை கேட்கவில்லை. தனிப்பட்ட அனுபவங்கள், அந்த இடம் பற்றிய பரீட்சயம் பற்றி கேட்டேன். 

நான் நினைக்கின்றேன் இந்த பிரதேசம் அதிகம் சன நடமாட்டம் அற்ற காடு அருகில் உள்ள பகுதி போல. இல்லாவிட்டால் இப்படியான சிலை உடைப்பு/திருட்டு நடைபெறும்போது அயலவர்கள் உசார் அடைந்துவிடுவார்களே. 

  • கருத்துக்கள உறவுகள்

கிராமம் என்று சொல்லப்பட்டிருக்கு. பெரும்பாலும் எங்கள் வன்னிப்பிரதேசம் போலிருக்கும் போலுள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள் இருந்திருக்கும், காலையில் வழிபாட்டுக்கு வந்தவர்கள் கண்டுள்ளார்கள். பூசைநேரம் கூடி கலைகிறவர்கள். சச்சியர் எடுக்கிற எடுப்பைப்பாத்தால் கிறிஸ்தவர்கள்மேல் பழி போடுற வேலையாயுமிருக்கலாம். இங்கு ஏற்கெனவே குடியிருந்தவர்கள் போராலும் சிங்களவரின் கெடுபிடிகளாலும் இடம்பெயர்ந்திருக்கலாம் மிச்சம் மீதியிருந்தவர்களே வழிபட வருவார்கள். ஒவ்வொரு இடமாக புத்தர் இடம் பிடிக்கிறார். அடுத்த குருந்தூர் மலை இது! இது தொடரும். புத்தர் வழிபடுவதற்கு உரியவரல்ல தடுத்து நிறுத்த வேண்டியவராக்கி விட்டார்கள் காணித்திருடர்.

  • கருத்துக்கள உறவுகள்

பேரினவாத நடவடிக்கைகளை உடன் நிறுத்துங்கள் – மனோ வலியுறுத்து

பேரினவாத நடவடிக்கைகளை உடன் நிறுத்துங்கள் – மனோ வலியுறுத்து

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேரினவாத நடவடிக்கைகளை உடன் நிறுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய சிலைகள் உடைக்கப்பட்டு, வீசப்பட்டுள்ள நிலையில் அதற்கு கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

தொல்பொருள் திணைக்களம், தொல்பொருளை பாதுகாப்பது என கூறிக்கொண்டு இந்துக்கள் இக்கோவிலுக்கு போவதை தடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இராணுவ பாதுகாப்பு வலயத்தில் இடம்பெறும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1328625

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழில் சைவ அமைப்பினர் போராட்டம்

Published By: T. SARANYA

27 MAR, 2023 | 10:30 AM

spacer.png

வவுனியா வெடுக்குநாறி மலையில் பிரதிஸ்டை செய்யப்பட்ட ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணத்தில் சைவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டன.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்துக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒன்று கூடிய சைவ அமைப்பின் பிரதிநிதிகள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டன.

இதன்போது, வெடுக்குநாறி எங்கள் சொத்து, வெடுக்குநாறியில் உடைத்த ஆதிலிங்கத்தை மீள பிரதிஸ்டை செய், வெடுக்குநாறியில் ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டிக்கிறோம் போன்ற கோஷங்கள் இதன்போது எழுப்பப்பட்டது.

 

https://www.virakesari.lk/article/151463

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சைவ மக்களின் தொன்மைகளை அழிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம்  நிறுத்த வேண்டும் - அகில இலங்கை இந்து மாமன்றம்

Published By: NANTHINI

27 MAR, 2023 | 06:57 PM
image

 

(எம்.நியூட்டன்)

வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்திலுள்ள விக்கிரகங்களை உடைத்துள்ளமை கண்டனத்துக்குரியது.

இந்த தகாத செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மீண்டும் ஆலயம் உரிய இடத்தில் பராமரிக்கப்பட வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

சைவ மக்களின் தொன்மைகளை அழிக்கும் செயற்பாடு தொடர்கிறது. இது திட்டமிட்டு நடைபெறுகிறது. அரசாங்கம் இத்தகைய செயல்களை நிறுத்த வேண்டும்.

ஆதி சைவ கோவில்களை சைவ மக்கள் பராமரிப்பதற்கு தொல்லியல் திணைக்களம் தொடர்ந்து இடையூறு செய்வதும் வேதனைக்குரியது.

விக்கிரகங்களை உடைத்தமை தொடர்பில்  ஜனாதிபதி உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலய திருப்பணியை நடாத்த இந்து கலாசார திணைக்களம் உரிய அனுமதியினை வழங்க வேண்டும்.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து சைவ சமயத்துக்கு வரும் இன்னல்களை போக்குவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/151543

  • கருத்துக்கள உறவுகள்

மணிவண்ணனை சந்திக்க சட்டத்தரணிகளுக்கு அனுமதி மறுப்பு!

ஆதிலிங்கேஸ்வரர் மாயமான பின்னணியில் அரசாங்கம் – வி.மணிவண்ணன் குற்றச்சாட்டு !

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் சேதமாக்கப்பட்ட சம்பவத்தில் அரசாங்கத்தின் பின்னணி இருப்பதாக யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்த செயற்பாட்டின் மூலம், முற்று முழுதாக மத பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி, அதனூடாக சிலர் அரசியல் லாபத்தை அடைய எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சகலரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் வலியுத்தியுள்ளார்.

https://athavannews.com/2023/1328723

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெடுக்குநாறி மலை விவகாரம் : வவுனியாவில் மாபெரும் போராட்டத்திற்கு மாவை அழைப்பு

Published By: DIGITAL DESK 5

28 MAR, 2023 | 04:11 PM
image

வவுனியாவில் நாளை மறுதினம் (30) இடம்பெறும் மாபெரும் போராட்டத்திற்கு இன மதம் பாராது கட்சி பேதம் பாராது அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அழைப்பு விடுத்தார்.

யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியிலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்  போதே  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதேபோல் வெடுக்குநாறிமலையில் ஆதி லிங்கேஸ்வரர் உட்பட விக்கிரகங்கள் அழிக்கப்பட்டமை தொடர்பில் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசியில் உரையாடியிருந்தேன். 

அவர் குறித்த விடயம் தொடர்பில் விவரமாக தனக்கு அனுப்பி வைக்குமாறு கோரி இருந்தார். அதன் அடிப்படையில் அவசரமாக அவருக்கு கடிதம் மூலம் பிரச்சினைகளை தெளிவாக எழுதி இருக்கின்றேன்.

அதேபோல நாளை மறுதினம் வவுனியாவில் மாபெரும் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தப் போராட்டத்தில் நாங்கள் அனைவரும் கலந்து கொண்டு எமது எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும். 

குறிப்பாக வெடுக்குநாறி மலை விடயம் மாத்திரமல்லாது வடபகுதியில் உள்ள ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் நாம்  எமது குரல்களை எழுப்ப வேண்டும் எனவும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/151602

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று தந்தை செல்வா கூறிவிட்டு சென்றார். ஆனால் கடவுளுக்கு பிரச்சனை வரும்போதும் ஈழத்தமிழர்தான் போராடவேண்டிய நிலமை இன்று. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெடுக்குநாறி மலை விவகாரம் – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

 

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%

வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டமைக்கு எதிராக ஆலய நிர்வாகத்தினரால் வவுனியா பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆலயத்திற்குள் செல்வதற்கு தொல்லியல் திணைக்களத்தினரால் தடை விதிக்கப்பட்டிருந்ததாக வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் செயலாளர் து.தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

அங்கு செல்வதற்கு தொல்லியல் திணைக்களத்தினருக்கு மாத்திரமே அனுமதி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

https://thinakkural.lk/article/246679

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, island said:

ஈழத்தமிழர்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று தந்தை செல்வா கூறிவிட்டு சென்றார். ஆனால் கடவுளுக்கு பிரச்சனை வரும்போதும் ஈழத்தமிழர்தான் போராடவேண்டிய நிலமை இன்று. 

உண்மையை சிறப்பாக  இடித்துரைத்துள்ளீர்கள்.
ஈழத்தமிழர்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்றாராம் தமிழர்களின் அரசியல் தலைவர் ஆனால் உண்மை நிலை கடவுளையே தமிழர்கள் தான்  போராடி காப்பாற்ற வேண்டியுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, island said:

ஈழத்தமிழர்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று தந்தை செல்வா கூறிவிட்டு சென்றார். ஆனால் கடவுளுக்கு பிரச்சனை வரும்போதும் ஈழத்தமிழர்தான் போராடவேண்டிய நிலமை இன்று. 

நீங்களும் நீங்கள் சார்ந்தோரும் இந்த சம்பவத்தை மத சம்பவமாக மட்டுமல்லாமல் மிக ஏளனமாகவும் பார்க்கின்றீர்கள். காரணம் இங்கே தொக்கி நிற்கும் பல விடயங்கள்  அடுத்து வரும் 100 வருடங்களிற்கு பின்னர் ஈழத்தமிழரின் வரலாறுகள் எப்படி மாற்றியமைக்கப்படும் என்பதை விளங்கிக்கொள்ள தயாரில்லாதவர்கள். 

சைவம் இனத்தோடு சம்பந்தப்பட்டது.அந்த இனத்தோடு சம்பந்தப்பட்டது தமிழ்.
எதை அழித்தால் எது அழியும் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும்.

அது யாருக்கு தெரியாது என்றால்.....?

  • கருத்துக்கள உறவுகள்

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நல்லூரில் போராட்டம்

Published By: Digital Desk 5

29 Mar, 2023 | 10:24 AM
image

வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அழிக்கப்பட்டமைக்கு சைவ மகா சபையின் ஏற்பாட்டில் நல்லூரில் போராட்டம் இடம்பெற்றது.

செவ்வாய்க்கிழமை (28) மாலை 5 மணியளவில் நல்லை ஆதீனம் முன்பாக சைவ அமைப்புகளின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் நடைபெற்றது.

தொல்லியல் திணைக்களமே தமிழர்களை தொலைக்காதே, ஆதிசிவன் கோவில் தொடர்ந்து இலக்கு வைக்கப்படுவது ஏன்? , சிவனை அசைத்தவனே அவனின் திருக்கூத்தை விரைவில் உணருவாய், சிவன் சொத்தை தீண்டினால் குலமே நாசமாகும் போன்ற வாசகங்களை போராட்டகாரர்கள் தாங்கியிருந்தனர்.

20230328_164750.jpg

20230328_164814.jpg

20230328_165045.jpg

20230328_164518.jpg

20230328_164558.jpg

20230328_164605.jpg

20230328_164646.jpg

20230328_164954.jpg

20230328_164916.jpg

படங்கள்: ஐ.சிவசாந்தன்

 

https://www.virakesari.lk/article/151642

 

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை காலமும் இல்லாத அளவுக்கு தொல் பொருள் திணைக்கம் என்ற பெயரால் தமிழ்களின்  பூர்வீக வாழ்விடங்கள் சிங்கள பெளத்தர்கர்களுக்கு சொந்தமானது என்'று காட்ட தமிழ் ப்பிரதேசங்களில் பெளத்த சின்னங்களை வேகமாக நிறுவி படிப்படியாக அதற்குப்  பூசை செய்ய என்று பிக்குகள் வருவார்கள். அதற்கு உதவியாளர்கள் என்று சிங்களவர்கள்கள் வருவார்கள். அதற்குப் பாதுகாப்பு என்று சிங்களப்படையினர் நிரந்தரமாக  தங்குவார்கள். காலப் போக்கில் சிங்;களப்பிரதேசம் ஆகிவிடும். தடுத்து நிறுத்த கடுமையான போராட்டங்கள் நடத்த வேண்டும். இல்லையேல் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டும்.. முதலில் எல்லையோரக்கிராமங்களை ஆக்கிரமித்தவர்கள் தற்போது நெடுந்தீவு>கச்சதீவு.நாவற்குழி>நிலாவரை என்று வடக்கு நோக்கியும் வந்து விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

நீங்களும் நீங்கள் சார்ந்தோரும் இந்த சம்பவத்தை மத சம்பவமாக மட்டுமல்லாமல் மிக ஏளனமாகவும் பார்க்கின்றீர்கள். காரணம் இங்கே தொக்கி நிற்கும் பல விடயங்கள்  அடுத்து வரும் 100 வருடங்களிற்கு பின்னர் ஈழத்தமிழரின் வரலாறுகள் எப்படி மாற்றியமைக்கப்படும் என்பதை விளங்கிக்கொள்ள தயாரில்லாதவர்கள். 

சைவம் இனத்தோடு சம்பந்தப்பட்டது.அந்த இனத்தோடு சம்பந்தப்பட்டது தமிழ்.
எதை அழித்தால் எது அழியும் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும்.

அது யாருக்கு தெரியாது என்றால்.....?

இதில் ஏளனம் எதுவும் இல்லை. நாட்டில் நடப்பதையே அப்படியே தெரிவித்தேன். இதனை உங்களாலோ என்னாலோ மாற்ற முடியாது. மனதில் பட்ட உண்மையை சொன்னேன். அவ்வளவுதான். 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் தொல்லியல் சிறப்புமிக்க ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் உடைப்பு - அரசாங்கம் என்ன சொல்கிறது?

இலங்கையின் தொல்லியல் பெறுமதியான ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் உடைப்பு - அரசாங்கம் கூறுவது என்ன?
கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இலங்கையின் பிரசித்தி பெற்ற கீரிமலை பகுதியிலுள்ள சிவன் ஆலயமொன்று உடைக்கப்பட்டு, அந்த பகுதியில் ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்ட சம்பவம் அண்மை காலத்தில் பதிவான பின்னணியில், தற்போது வவுனியா பகுதியிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க சிவன் ஆலயம் முழுமையாக இடித்தழிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சுமத்தப்படுகின்றது.

வவுனியா - நெடுங்கேணி பகுதியை அண்மித்துள்ள வெடுக்குநாறி மலை பகுதியிலுள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயமே இவ்வாறு இடித்தழிக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

வெடுக்குநாறி மலையிலுள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு செல்ல கடந்த மூன்று வருட காலமாக தடை விதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறுகின்றார்.

அத்துடன், ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் திருவிழாக்களை நடத்தவும் தடை விதிக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிடுகின்றார்.

 

''மூன்று தினங்களுக்கு முன்பு வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இருக்கின்ற அனைத்து விக்கிரகங்களும் உடைத்தெறியப்பட்டுள்ளது. என்னை பொருத்தவரை படைத் தரப்பு இந்த செயலை செய்திருக்க வேண்டும். ஏனென்றால், தொல்பொருள் திணைக்களத்தின் உதவியுடன், வெடுக்குநாறி மலையை பௌத்த மயமாக்கி, அதனை விகாரையாக்குவதற்காக தான் தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் முயற்சி செய்து வருகின்றார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்க விடயம்" என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவிக்கின்றார்.

வெடுக்குநாறி மலையின் வரலாறு

இலங்கை, கோயில், தமிழர்கள்

பட மூலாதாரம்,KOGULAN

வவுனியா வடக்கு பகுதியின் நெடுங்கேணி பிரதேசத்தில் இந்த வெடுக்குநாறி மலை அமைந்துள்ளது.

இந்த வெடுக்குநாறி மலையில் சுமார் 15 அடியை விடவும் உயரமான சிவலிங்கமொன்று காணப்படுவதாக ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் போசகர் வைரமுத்து பூபாலசிங்கம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இந்த சிவலிங்கம் சுயம்பு லிங்கமாகவே கருதப்படுவதாகவும் அவர் கூறுகின்றார். மலை உச்சியில் பல நூற்றாண்டு காலத்திற்கு முன்பிலிருந்து இந்த லிங்கம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

''2018ம் ஆண்டு தான் தொல்லியல் திணைக்களத்திற்கு தெரியும், தொல்லியலுடன் சம்பந்தப்பட்ட மலை என்று அதற்கு முன்னர் அவர்களுக்கு தெரியாது. அது தொல்லியலுக்கு வர்த்தமானி மூலம் அறிவிக்காத இடம். 2018ம் ஆண்டு அந்த மலையில் பூஜை செய்வதற்கு, வழிபாடு செய்வதற்கு எங்களுக்கு அனுமதி தந்தார்கள். 2019ம் ஆண்டு அந்த இடத்திற்கு செல்லக்கூடாது, பூஜை செய்யக்கூடாது என உத்தரவிட்டார்கள்.

தொல்லியலுடன் சம்பந்தப்பட்ட மலை, நீங்கள் போகக்கூடாது என சொல்லி எங்களை தடுத்தார்கள். பல நூற்றாண்டு காலத்திற்கு முன்னர் காணப்பட்ட சுயம்பு லிங்கம். அந்த காலத்தில் இருந்த அரசர்களாலயோ, யாரோலோ வணங்கப்பட்டது. அதில் கல்வெட்டுக்கள் எல்லாம் இருக்கின்றது. 30 வருட காலத்தில் அது அழிவடைந்திருந்தது. பின்னர் 2016ம் ஆண்டு நாங்கள் திரும்ப இந்த விக்கிரகங்களை கொண்டு வந்து வழிபட்டோம்.

சுயம்பு லிங்கத்தை யாராலும் எதுவும் செய்ய முடியாது. கற்களினால் செதுக்கப்பட்ட நாகதம்பிரான் சிலையொன்றும் இருக்கின்றது. அதையும் யாராலும் எதுவும் செய்ய முடியாது. நாக வடிவில் அந்த கல் செதுக்கி காணப்படுகின்றது. அந்த கல்லுக்கு கீழ், இன்றும் நாகங்கள் இருக்கின்றன." என ஆலயத்தின் போசகர் வைரமுத்து பூபாலசிங்கம் குறிப்பிடுகின்றார்.

"ஆலயம் சிதைவடைந்திருந்ததை 26ம் தேதியே கண்டோம்"

இலங்கை, கோயில், தமிழர்கள்

பட மூலாதாரம்,KOGULAN

இந்த ஆலயத்திற்கு கடந்த காலங்களில் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கடந்த 26ம் தேதியே ஆலயம் உடைக்கப்பட்டுள்ளதை அவதானித்ததாக ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் போசகர் வைரமுத்து பூபாலசிங்கம் தெரிவிக்கின்றார்.

''நாங்கள் அமைத்த பீடங்கள் மாத்திரமே இருக்கின்றன. விக்கிரகங்கள் ஒன்றும் இல்லை. சுயம்பு லிங்கம் இருக்கின்றது. சுயம்பு லிங்கத்தை யாராலும் அழிக்க முடியாது. நாகதம்பிரான் விக்கிரமும் இருக்கின்றது. மற்ற அனைத்து விக்கிரகங்களும் அழிக்கப்பட்டுள்ளன." என அவர் கூறுகின்றார்.

யார் மீது சந்தேகம்? - ஆலய நிர்வாகத்தின் பதில்

இலங்கை, கோயில், தமிழர்கள்

பட மூலாதாரம்,KOGULAN

இந்த சம்பவம் தொடர்பில் யார் மீது சந்தேகம் எழுந்துள்ளது என பிபிசி தமிழ், ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் போசகர் வைரமுத்து பூபாலசிங்கத்திடம் வினவியது.

ஆலயம் அழிக்கப்பட்டதை தாம் நேரில் காணாமையினால், எவர் மீதும் தம்மால் சந்தேகம் கொள்ள முடியாது என அவர் பதிலளித்தார்.

எனினும், தமது ஆலயம் அழிக்கப்பட்டமைக்கான பொறுப்பை, தொல்பொருள் திணைக்களம் மற்றும் போலீஸார் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் கூறுகின்றார்.

ஏனெனில், அலயத்திற்கு தம்மை செல்ல வேண்டாம் என குறித்த இரண்டு தரப்பினருமே தடுத்து நிறுத்தியதாகவும், அதனால் அவர்களே இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அரசாங்கத்தின் பதில்

இலங்கை, கோயில், தமிழர்கள்

பட மூலாதாரம்,VIDURA WIKRAMAYAKE/FB

வவுனியா - வெடுக்குநாறி ஆலயம் உடைக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கும், தமக்கும் இடையில் எந்தவித தொடர்பும் கிடையாது என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகளை ஆரம்பிக்குமாறு, தான் தொல்பொருள் திணைக்களத்திற்கும், நெடுங்கேணி போலீஸாருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அவர் கூறுகின்றார்.

ஆலயம் அரசாங்கத்தினால் உடைக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் குற்றச்சாட்டு தொடர்பில் வினவிய போது, அமைச்சர் விதுர விக்ரமநாயக்க அதற்கும் பதிலளித்தார்.

“ஆலயத்துடன் தொடர்புடையவர்கள் இதனை செய்திருக்க மாட்டார்கள். எனினும், ஆலயத்துடன் தொடர்புப்படாது வெளிநபர்களே இதனை செய்திருக்க வேண்டும் என நினைக்கின்றேன். சில பிரச்னைகளை உருவாக்க வெளிநபர்கள் இதனை செய்திருக்கக்கூடும். தொல்பொருள் திணைக்களத்திற்கு அதனை செய்ய வேண்டும் என்றால், பல இடங்களை அவ்வாறு செய்ய முடியும்.

எனினும், நாம் அவ்வாறு செய்ய மாட்டோம். ஆய்வுகளை செய்து, அதில் ஏதேனும் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், அதன் பிரகாரம் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என கலந்துரையாடியுள்ளோம். உண்மைகளை உறுதிப்படுத்த வேண்டும். ஆய்வுகளை நடத்தாது, எதையும் கூற முடியாது. " என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விதுர விக்ரமநாயக்க கூறினார்.

ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி

இலங்கை, கோயில், தமிழர்கள்

வெடுக்குநாறி ஆலயம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனக்கு உறுதி வழங்கியதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவிக்கின்றார்.

எவ்வாறாயினும், இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வவுனியாவில் நாளைய தினம் (30) திட்டமிட்டதன் பிரகாரம், பாரிய போராட்டமொன்றை நடத்தவுள்ளதாகவும் மாவை சேனாதிராஜா, பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இதேவேளை, வவுனியா - வெடுக்குநாறி ஆலயம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகளை ஆரம்பிக்குமாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, போலீஸ் மாஅதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிக்கின்றார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி, சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி, போலீஸ் மாஅதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக அவர் கூறுகின்றார்.

தானும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்து இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக கூறிய ஜீவன் தொண்டமான், தானும் போலீஸ் மாஅதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெடுக்குநாளி மலை பகுதியில் சேதமாக்கப்பட்டுள்ள விக்கிரகங்களை மீள் பிரதிஷ்டை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் ஜீவன் தொண்டமான், எதிர்வரும் ஞாயிற்றுகிழமை மீள் பிரதிஷ்டை பூஜைகள் இடம்பெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cj577qqrm24o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் சனிக்கிழமை யாழில் போராட்டத்திற்கு அழைப்பு !

 

news-02-10.jpg

வெடுக்குநாறிமலை ஆலய விவகாரம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளிட்ட விடயங்களுக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் சனிக்கிழமை போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமி அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் ஊடக சந்திப்பொன்றை இன்று (29) நடத்தி அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

https://thinakkural.lk/article/247143

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.