Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
49 minutes ago, கிருபன் said:

எனக்குத் தெரிந்து யாழில் நிர்வாகம் அடிக்கடி பாவிப்பது:

ஆக்கபூர்வமான கருத்தாடல்

பண்பான கருத்தாடல்

சமூகப் பொறுப்பு

ஆனால் இப்போதும் வரும் கருத்துக்கள் சில மேலுள்ளவற்றை கிஞ்சித்தும் கருத்தில்கொள்வதில்லை. அரட்டையையும், அலம்பல்களையும்தான் அதிகம் காணமுடிகின்றது. சீரியஸான விடயங்களிலும் பக்குவம் இல்லாமல் அசட்டுத்தனமான கருத்துக்கள் வருகின்றன. அவை எந்த வகையிலும் ஆக்கபூர்வமான விவாதங்களுக்கும் வழிகோலாது. 

எனக்குத்தெரிய என்னைப்போன்ற ஒரு சிலர் மட்டும் தான் அரட்டை,அலம்பல்களை செய்கின்றனர். மிகுதி உறவுகள் ஆக்க பூர்வமாக கருத்தாடலாம் அல்லவா? ஆக்கபூர்வமான திரிக்குள் அல்லது உரையாடல்களுக்குள் என்னைப்போன்ற அலம்பல்கள் நுழைவதில்லை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ் நாட்டிலிருந்து பலரும் உறுப்பினராகி கலந்துரையாடிவர்கள், இப்பொழுது யாரும் கருத்துக்களை பதிவதில்லை அல்லது ‘ஆண்டு 2009தோடு  எல்லாம் முடிந்துவிட்டது, இங்கே வருவதற்கு இனியென்ன தேவை?’ என அசிரத்தையாக இருக்கலாம். ஈழ உறவுகளும் அப்படியே ஒதுங்கிவிட்டார்கள் போலும்.

கிட்டதட்ட 2005லிருந்து ஒரே முனைப்புடன் வாசித்து வருகிறேன். நான் இங்கே உறுப்பினராகி 14 வருடமாகிவிட்டது.

களத்தில் இணைந்த புதிதில் ஒரு யாழ் கள பெரியவர் ‘இன்னாப்பா நீ.. அப்பா டக்கரா?’ என்ற மாதிரி கேட்டுவிட்டார்.  ‘அப்படியெல்லாம் விடலாமா?’ என இங்கே தொடர்ந்தேன். அப்பெரியவர் எங்கிருந்தாலும் நலமுடன் வாழ்க!

ஈழம் பற்றிய நுணுக்கங்களை யாழ் களமே எனக்கு கற்றுவித்தது. அவ்வகையில் யாழ் களத்திற்கு மனமார்ந்த நன்றிகள்.

யாழ் களம் தொடர்ந்து சிறக்க வாழ்த்துகள்! 

  • Like 5
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 யாழ் தங்கச்சிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 
 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

எழுத்தறிவித்தவன் இறைவன்.. நான் கதை கவிதை கட்டுரை எழுதிப்பழகியது ஊக்கம்தந்தது இந்த யாழ்தான்.. அது ஒரு பொற்காலம் எனக்கு.. அந்த இனிய நினைவுகளைத்தந்த யாழ் இன்னும் பல்லாண்டுகாலம் நீண்டு நிலைக்கவேண்டும்.. நான் பென்சன் எடுக்கும் காலத்தில் வாழ்வின் அஸ்த்தமகாலத்தில் வரப்போகும் தனிமையையும் மரணம் குறித்த பயத்தையும் போக்க இங்கு எழுதி உறவாடி கிடக்க இந்த யாழ் நீண்டு நிலைக்கவேண்டும் என்று சுயநலத்துடன் வாழ்த்துகிறேன்.. கவிஞர் பொயட் சொன்னதுபோல் சாகிறவரைக்கும் வாழுற வயசாகட்டும் நம் யாழுக்கு..

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெள்ளி விழா காணும் யாழ் இணையத்திற்கும் அதன் கருத்துக்களத்திற்கும் சவால்கள் தாண்டி நீண்டு நீடித்து நிலைக்க வாழ்த்துக்கள். யாழில் ஏ ஐயில் உரையாடும் காலமும் வர வேண்டும். 

இந்த இடத்தில் யாழின் ஸ்தாபகர் மோகன் அண்ணா.. யாழில் இயக்கத்தின் ஆரம்பத்தில் அவருக்கு துணை நின்ற சுரதா யாழ்வாணன் அண்ணா.. மற்றும் மறைந்த உறவுகளான சோழியன் அண்ணா.. சோம்பு அண்ணா உள்ளிட்ட யாழின் வளர்ச்சியோடு காலத்துக்கு காலம் கூடிப் பயணித்த பயணித்துக் கொண்டிருக்கும் சக யாழ் சொந்தங்களுக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகுக.!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்துக்கள் ❤️

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, கிருபன் said:

சீரியஸான விடயங்களிலும் பக்குவம் இல்லாமல் அசட்டுத்தனமான கருத்துக்கள் வருகின்றன. அவை எந்த வகையிலும் ஆக்கபூர்வமான விவாதங்களுக்கும் வழிகோலாது. 

இந்த கருத்தை வழிமொழிகிறேன். எமது தமிழ் சமுதாயத்துக்குள் சீரியஸாக எடுத்து விவாதித்து,  எம்மை நாமே புடம் போட வேண்டிய பல விடயங்களை தாங்கிய விவாத தலைப்புகள் அதில்  வந்த காமடி விமர்சனங்களால் நீர்த்துப் போகச் செய்யப்பபடிருக்கின்றன. ஒன்று மில்லாத பல விடயங்கள் பக்கம் பக்கமாக நீண்டிருக்கின்றன. இவை யாழ் இணையத்தின் நோக்கங்களைப்  பாதிக்கும்.   உலகின்  மாற்றங்களை உள்வாங்கி எம்மை அதற்கேற்ப தகவமைத்து கொள்வது தமிழரின் பலத்தை அதிகரிக்கும். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, island said:

இந்த கருத்தை வழிமொழிகிறேன். எமது தமிழ் சமுதாயத்துக்குள் சீரியஸாக எடுத்து விவாதித்து,  எம்மை நாமே புடம் போட வேண்டிய பல விடயங்களை தாங்கிய விவாத தலைப்புகள் அதில்  வந்த காமடி விமர்சனங்களால் நீர்த்துப் போகச் செய்யப்பபடிருக்கின்றன. ஒன்று மில்லாத பல விடயங்கள் பக்கம் பக்கமாக நீண்டிருக்கின்றன. இவை யாழ் இணையத்தின் நோக்கங்களைப்  பாதிக்கும்.   உலகின்  மாற்றங்களை உள்வாங்கி எம்மை அதற்கேற்ப தகவமைத்து கொள்வது தமிழரின் பலத்தை அதிகரிக்கும். 

 தயவு செய்து கோபிக்க வேண்டாம்.காமெடி விமர்சனங்களால் நீர்த்து போன முக்கியமான ஒரு திரியை உதாரணத்திற்கு எடுத்து காட்டுங்கள். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, குமாரசாமி said:

 தயவு செய்து கோபிக்க வேண்டாம்.காமெடி விமர்சனங்களால் நீர்த்து போன முக்கியமான ஒரு திரியை உதாரணத்திற்கு எடுத்து காட்டுங்கள். 

குமாரசாமி, நீங்கள் வெகுண்டெழ அது உங்களைக் குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்து அல்ல. ஒட்டு மொத்தமான கருத்துக்களத்தை பற்றிய பார்வை.   அதையொட்டிய கிருபனின் கருத்து நியாயமென எனக்கு பட்டதால் எனது பார்வையை  தெரிவித்தேன் அந்த தவறை  நானும்  செய்திருக்கலாம்.

எந்த திரி என்று  தேடி எடுத்து அதை இணைக்க அதிலும் குதர்ககமும் சண்டையும் தான் மிஞ்சும்.  அதை விட ஒவ்வொருவரும் சமூக பொறுப்பை உணர்ந்து தம்மை தாமே சுய பரிசோதனை செய்து கருத்திடுவது யாழ் இணையத்தின் மாண்பையும் சுதந்திரமான கருத்துக்களத்தின் நோக்கத்தையும் நிறைவேற்றும் என்பது எனது கருத்து. அதை ஏற்கவேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை. 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, குமாரசாமி said:

எனக்குத்தெரிய என்னைப்போன்ற ஒரு சிலர் மட்டும் தான் அரட்டை,அலம்பல்களை செய்கின்றனர். மிகுதி உறவுகள் ஆக்க பூர்வமாக கருத்தாடலாம் அல்லவா? ஆக்கபூர்வமான திரிக்குள் அல்லது உரையாடல்களுக்குள் என்னைப்போன்ற அலம்பல்கள் நுழைவதில்லை.

நீங்கள் கூறும் கருத்துக்கள் அலம்பல்களாக இல்லை. அவை உங்கள் உள்ளக்கிடக்கை, அபிப்பிராயம். உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துகின்றீர்கள். கருத்து முரண்பாடுகள் வரும்போதுதான் உங்கள் கருத்துக்களில் குறைகள் தென்படுகின்றனவோ என்னவோ. 

கிருபன் கூறும் விடயங்கள் பற்றிய நுணுக்கமான அவதானிப்புக்கள் எனக்கு இல்லை.  அதற்கு நேரமும் இடம்கொடாது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்..........🙏

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

என் வாழ்த்துக்களும் இன்னும் பல ஆண்டுகள்  பலரை இணைத்து பொலிவுடன் திகழ வாழ்த்துகிறேன் 

  • Like 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • குரங்குகளை பிடித்து சைனாவுக்கு அனுப்புற கையோட என்கடைவெத்து வேட்டு தமிழ் அரசியல்வாதி கள் எனும் குரங்கு கூட்டத்தையும் முக்கியமாய் சுமத்திரன் என்ற குரங்கையும் அனுப்பினால் புண்ணியமாய் போகும் .😄
    • மர்ம காய்ச்சல் காரணமாக 44 பேர் வைத்தியசாலைகளில் அனுமதி Digital News Team     யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது பரவிவரும் ஒருவிதமான காய்ச்சல் காரணமாக இதுவரை 44 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இக்காய்ச்சல் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் யாழ். போதனா வைத்தியசாலயிலும் 32 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர் என யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் வைத்தியகலாநிதி. ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மேலும் இக்காய்ச்சல் காரணமாக இதுவரை 7 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. நோயாளர்களிடமிருந்து கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் இருவருக்கு எலிக்காய்ச்சல் (Leptospirosis) இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே தற்போது மேற்படி காய்ச்சலை எலிக்காய்ச்சலாக கருதி சிகிச்சைகளும் தடுப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இக்காய்ச்சல் தற்போது பரவிவரும் பருத்தித்துறை, கரவெட்டி, சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஒருநாள் காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலையை நாடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைகளில் இந்நோய்க்கு சிகிச்சை வழங்குவதற்கான மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்விடயம் சம்பந்தமாக சுகாதார வைத்திய அதிகாரிகளால் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகின்றது. மேலும் பிரதேச செயலாளர்களின் உதவியுடன் கிராமமட்ட உத்தியோகத்தர்கள் மூலமாக பொதுமக்களுக்கு இவ்விடயம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது. எலிக்காய்ச்சல் நோய் ஏற்படக்கூடிய ஆபத்து இலக்கினர்களான விவசாயிகள், மீன்பிடித் தொழிலாளர்கள், துப்பரவுப் பணியாளர்கள் போன்றவர்களுக்கு இந்நோய்க்கான தடுப்பு மருந்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயத் திணைக்களத்தின் பிரதேசமட்ட உத்தியோகத்தர்களின் உதவியுடன் கிராமமட்டத்தில் விவசாயிகளுக்கு தடுப்பு மருந்துகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நோய்ப்பரம்பலை ஆய்வுசெய்து ஆலோசனை வழங்குவதற்காக மத்திய சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த் தடுப்பு பிரிவிலிருந்து வைத்திய நிபுணர்கள் குழுவொன்று யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகைதந்துள்ளது. அவர்கள் வைத்தியசாலைகளிலும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளிலும் களத்திலும் ஆய்வுகளை மேற்கொண்டு உரிய ஆலோசனைகளை வழங்கவுள்ளனர். மேலும் இந்நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான ஒருதொகுதி மருந்துகள் சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவினால் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். https://thinakkural.lk/article/313646  
    • Chesswithlokesh  ·  Suivre 16 h  ·  Anand passing it to Gukesh ! 2 world champions
    • இதுவரை கூறப்பட்ட காரணங்கள் 1. குரங்கு 2. வெப்பநிலை  ஆனால் உண்மை இன்னமும் வெளிவரவில்லையே??? $$$ உள்ளூர்ச் சந்தையை புறக்கணித்து ஏற்றுமதியை ஊக்குவித்ததன் பலன்.  பாரிய தென்னந்தோட்டங்கள் ஏற்றுமதி நிறுவனங்களுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்திற்கு இணங்க தமது உற்பத்திகளை ஏற்றுமதி நோக்கி திருப்பியதால் டாலர் இருக்கு தின்ன தேங்காய் இல்லையே…..! யாழ் உறவுகளுக்கு ஞாபகம் இருக்கும் “தேங்காய் தண்ணீர் ஏற்றுமதி”
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.