Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“சதாம் உசேனின் ஆட்சிக் காலத்தை காட்டிலும் தற்போது நிலைமை மோசம்” - பெரும்பான்மை இராக்கியர்கள் கருத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சதாம் உசேன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ஜூலியன் ஹஜ்,
  • பதவி,பிபிசி அரேபிய சேவை
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்கா இராக் மீது படையெடுத்து இருபது ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்நிலையில் இராக்கியர்கள் பலர் சதாம் உசேனின் காலத்தில் இருந்ததைவிட தற்போது நிலைமை மோசமாகவுள்ளதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

இராக் அதிபர் சதாம் உசேன் 2003ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார்.

லாப நோக்கம் அற்ற கணக்கெடுப்பு நிறுவனமான கேல்லப் இன்டர்நேஷனல், நாட்டின் 18 பிரதேசங்களில் (மாகாணங்களில்)சுமார் 2,024 பேரிடம் பிப்ரவரி மாதம் கணக்கெடுப்பு ஒன்றை எடுத்தது.

அமெரிக்க படையெடுப்புக்கு முன்னதாக ஒப்பிட்டால் தற்போதைய நிலைமை எவ்வாறு உள்ளது என்று கேட்டதற்கு 60 சதவீதம் பேர் நிலைமை மேலும் மோசமாகியுள்ளது என்று தெரிவித்தனர். 40 சதவீதம் பேர் நிலைமை மேம்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

2003ஆம் ஆண்டுக்கு பிறகு இராக்கில் பெரும்பான்மையாக இருக்கும் ஷியா அரபு மக்களின் கை ஓங்கியது. இது இராக்கின் சன்னி அரபு, குர்து, மற்றும் பிற சிறுபான்மை மக்கள் வாழும் பகுதிகளில் கோபத்தை உண்டாக்கியது.

இந்த பாகுபாடு கணக்கெடுப்பில் நன்கு தெரிகிறது. பெரும்பான்மையான சன்னி முஸ்லிம்கள் அதாவது 54 சதவீதம் பேர் சதாம் உசேன் ஆட்சிக் காலத்தில் வாழ்க்கை நன்றாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

“சதாம் உசேனின் ஆட்சிக் காலத்தை காட்டிலும் தற்போது நிலைமை மோசம்” என கூறும் பெரும்பான்மை இராக்கியர்கள்

மோசமான சில முடிவுகளுக்கு மத்தியில் ஒரு சிறிய முன்னேற்றத்திற்கான அறிகுறியும் இந்த கணக்கெடுப்பின் மூலம் தெரிகிறது. அதாவது இராக்கில் நிலைமை மோசமாக உள்ளது என மூவரில் ஒருவர் பதில் அளித்துள்ளனர்..

கெல்லப் இண்டர்நேஷனல் தனது பழைய ஆவணங்களை புரட்டிப் பார்த்தால் , 2003ஆம் ஆண்டு இதே கேள்விக்கு மூன்றில் இருவர் நிலைமை மோசமாக உள்ளது என்று பதிலளித்திருந்தனர்

அன்பர் மாகாணத்தில் வாழும் 45 வயது நபர் ஒருவர் கணக்கெடுப்பு குழுவிடம், “சதாம் உசேன் காலத்திலிருந்து நிலைமை மோசமாகியுள்ளதா அல்லது மேம்பட்டுள்ளதா என்பதை கணிப்பது மிக கடினம். மாற்றம் நம்பிக்கையை கொடுக்கிறது. நாமும் கடந்த காலத்தை மறக்கிறோம். பொருளாதாரம் மேம்பட்டிருக்கலாம் ஆனால் உற்பத்தியும் பாதுகாப்பும் குறைந்ததுள்ளது.” என்றார்.

பேரழிவை உண்டாக்கும் ஆயுதங்களை இராக் வைத்திருப்பதாக கூறி 2003ஆம் ஆண்டு அமெரிக்கா இராக்கை படையெடுத்தது. சதாம் உசேனின் ஆட்சி சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் கூறப்பட்டது.

ஆனால் ஆயுதங்கள் இருந்ததாக இதுவரை எந்த ஆதாரமும் கண்டறியப்படவில்லை. அந்த போர் ஆயிரக்கணக்கான இராக்கியர்களின் உயிரை காவு வாங்கியதுடன் நாட்டில் ஒரு ஸ்திரத்திமற்ற நிலையையும் உருவாக்கியது.

படையெடுப்புக்கான உண்மையான காரணம்

அமெரிக்க அரசு தனது படையெடுப்பை நியாயப்படுத்தினாலும், பல இராக்கியர்கள் இன்றும் இந்த போருக்கான உண்மையான நோக்கம் குறித்து பல சந்தேகங்களை எழுப்புகின்றனர்.

51சதவீத இராக்கியர்கள் அமெரிக்கா, தங்கள் நாட்டின் வளங்களை திருடுவதற்காகதான் படையெடுப்பை மேற்கொண்டது என நம்புகின்றனர்.

இந்த எண்ணம் எண்ணெய் வளம் மிகுந்த தென் கிழக்கு மற்றும் அன்பர் மாகாணங்களில் வலுவாகவே உள்ளது.

இருப்பினும் கண்கெடுப்பில் 29 சதவீதம் பேர் சதாம் உசேனின் ஆட்சியை தூக்கி எறியவே இந்த படையெடுப்பு மேற்கொள்ளப்பட்டதாக நம்புகின்றனர். அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்ததாரர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக, பயங்கரவாதத்திற்கு எதிரான போர், இராக்கில் ஜனநாயகத்தை கொண்டுவர போன்ற பிற காரணங்களை மக்கள் குறைவாகவே தேர்வு செய்தனர்.

படையெடுப்புக்கான உண்மையான காரணம்

ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஷியா மக்கள்

வடக்கில் தங்களின் உரிமை பறிபோனதாக உணர்ந்த சன்னி மக்களின் ஆதரவுடன் ஐஎஸ் அமைப்பு வளர்ந்து, 2014ஆம் ஆண்டில் இராக்கின் உயிர்நாடியான பாக்தாத்திற்கான சண்டையை தொடங்கியது. ஆனால் அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகளின் ராணுவ ஆதரவால் 2018ஆம் ஆண்டு ஐஎஸ் விரட்டப்பட்டது. அப்போதிலிருந்து அங்கு அமைதி திரும்பியது.

எதிர்காலத்தில் அமெரிக்காவின் இருப்பு குறித்து இராக்கியர்கள் பல்வேறு கருத்துக்களை கொண்டுள்ளனர். 2007ஆம் ஆண்டு கிளர்ச்சி உச்சத்தில் இருந்தபோது இராக்கில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் அமெரிக்க சிப்பாய்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். தற்போது அது 2500 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா வெளியேற நினைக்கும் மக்கள்

இராக்கின் தெற்கு பகுதியில் உள்ளவர்கள் அமெரிக்கா உடனடியாக தனதுபடைகளை திரும்பப் பெற வேண்டும் என விரும்புகின்றனர் ஆனால் வடக்கில், குர்திஸ்தான் பகுதியில் உள்ளவர்கள் சிலர் அமெரிக்க வீரர்களின் இருப்பு தேவை என்று கூறுகின்றனர்.

75 சதவீத ஷியா மக்கள் அமெரிக்க கூட்டணிப் படைகளின் வருகையை மோசம் என்று கருதுகின்றனர். அவர்கள் ரஷ்யா, அரசியல் மற்றும் பாதுகாப்பு கூட்டாளியாக இருக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இரான் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே இருக்கும் உறவை கருத்தில் கொண்டால் வன்முறை நிறைந்த பகுதியில் இது ஆச்சரியமளிக்கக்கூடிய பதில் அல்ல.

அரசியல் மற்றும் பாதுகாப்பு கூட்டாளி

மத்திய கிழக்கு பிராந்தியம் அமெரிக்காவின் பாதுகாப்பு குடையின்கீழ் இருந்தாலும் சமீப வருடங்களாக, சீனா அங்கு பொருளாதார ரீதியாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இரான் மற்றும் சவுதி அரேபியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சமீபத்தில் சீனாவில் சந்தித்து கொண்டு இருநாட்டு உறவுகளை புதுப்பிக்க ஒப்புக் கொண்டுள்ளனர்.

பொருளாதார கூட்டாளி

வெளிச்சத்தை தேடும் இளைஞர்கள்

ஆனால் இளைஞர்களுக்கான எதிர்காலம் இருண்டதாகவுள்ளது.

கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் 47 சதவீதம் பேர் இராக்கிலேயே தங்கி நாட்டை சீரமைக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் 25 சதவீத அளவில் அல்லது நான்கில் ஒருவர் இராக்கை விட்டு வெளியேற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

கணக்கெடுப்பின்போது பெயர் வெளியிட விரும்பாத நபர் ஒருவர், “இராக்கின் இளைஞர்கள் பலரும், குறிப்பாக பாக்தாத்தில் வாழும் இளைஞர்கள் வெளிநாடுகளில் தங்களுக்கான வாய்ப்புகள் சிறப்பாக அமைந்துள்ளதாக கருதுகின்றனர்” என்றார்.

இதில் வயது வாரியாக வெவ்வேறு பதில் கிடைத்துள்ளது. 18-24 வயதுக்குட்ப்பட்டவர்களில் மூன்றில் ஒருவர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என விரும்புகின்றனர்.

நாட்டில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் நீண்ட காலமாக நிலவும் ஊழல் பிரச்னையின் வெளிப்பாடுதான் இது.

இளைஞர்கள்

ஆனால் இராக்கின் கடினமான சூழல்களை புள்ளியல் விவரங்களால் விளக்கிட முடியாது. பல லட்சக்கணக்கான இராக்கியர்களுக்கு தங்களின் கடந்த காலம் வலிகள் நிறைந்ததாக உள்ளது. புதிய தலைமுறையினர் இந்த கடந்த கால வலிகளை சுமந்து கொண்டே ஒரு சிறப்பான எதிர்காலத்தை நோக்கி பயணிக்க வேண்டும்.

இராக்கில் 40 சதவீதம் பேர் 15 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். இவர்கள் விரும்புவது பொருளாதார பாதுகாப்பு மற்றும் வேலை வாய்ப்புகள்தான். ஆனால் அதே நேரத்தில் அமைதியும் ஸ்த்திரத்தன்மையும் இவர்களின் மிக முக்கிய தேவை.

தரவுகள்: லியோனி ராபர்ட்சன்

வடிவமைப்பு மற்றும் படங்கள்: ரேஸ் ஹுசைன் மற்றும் இஸ்மாயில் மொனீர்

தொகுப்பாளர்கள்: மாயா மொசாவி மற்றும் ஜோஹன்னஸ் டெல்

https://www.bbc.com/tamil/articles/cg62g67r0e1o

  • கருத்துக்கள உறவுகள்

ஆமை புகுந்த வீடும் அமெரிக்க தலையிட்ட நாடும் உருப்பட்டதாக சரித்திரமேயில்லை👍, இதே நிலைதான் உக்ரைனுக்கும்😪😪😪

  • கருத்துக்கள உறவுகள்

இராக்கின் விஞ்ஞான, பொறியியல், கணித துறை 350 பேராசியர்கள், விரிவுரையாக்கள், இதை தவிர 150 விஞ்ஞான ஆராய்ச்சி துறை பேராசிரியர்கள், விரிவுரையாளர்களை - CIA,  குறிவைத்து கொடூரமாக (சித்திரவதையம்  பாவிக்கப்பட்டு ) தாக்கி அழித்தது மொஸாட்டின் உதவியுடன் .

இது மேற்கின், மற்ற எல்லா உளவு  துறைகளும் , அரசுகளும் நன்கு தெரிந்து இருந்தும், ஒன்றில் வாய் மூடி இருந்தார்கள் அல்லது ஒத்துழைத்தார்கள்.

காரணம் - இராக் கணித, விஞ்ஞான, பொறியியல் துறைகளில்  இராக்கில் நிபுணத்துவம் வளரக் கூடாது என்று.  

மேற்கின் எந்த துறை பேராசியர்களும், விரிவுரையாளர்களும், நிபுணர்களும்  இப்போது கொடுரமாக கொல்லப்படுவதற்கு இலக்கு.    
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

இராக்கின் விஞ்ஞான, பொறியியல், கணித துறை 350 பேராசியர்கள், விரிவுரையாக்கள், இதை தவிர 150 விஞ்ஞான ஆராய்ச்சி துறை பேராசிரியர்கள், விரிவுரையாளர்களை - CIA,  குறிவைத்து கொடூரமாக (சித்திரவதையம்  பாவிக்கப்பட்டு ) தாக்கி அழித்தது மொஸாட்டின் உதவியுடன் .

இதற்கு ஆதாரம் கேட்டு நேரத்தை வீணாக்கப் போவதில்லை, எனவே எங்காவது குட்டிச் சுவர் (fringe) ஊடகத்திலிருந்து எடுத்திருக்கிறீர்கள் என்று ஊகித்து நகர்வோம்!😂

அமெரிக்காவும் பிரிட்டனும் பொய் சொல்லி ஈராக்கை ஆக்கிரமித்தது தவறு. ஆக்கிரமித்த பின்னர் Black Water போன்ற காசுக்கு வேலை செய்யும் ஒப்பந்தக் காரர்கள் மூலமும், அமெரிக்க இராணுவம் மூலமும் பல்லாயிரம் ஈராக்கியர்களைக் கொன்றது இன்னும் தவறு. இதற்காக புஷ், பிளையர் ஆகியோர் யுத்தக் குற்ற விசாரணை செய்யப் பட வேண்டியோர் - இதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால், ஈராக்கின் சுனி, ஷியா, குர்து இனங்களிடையே சதாம் பற்றிய அபிப்பிராயத்திலிருக்கும் வேறுபாடுகளை மேல் கருத்துக் கணிப்புக் காட்டுகிறது. இதனை வைத்து சதாம் ஒரு நல்ல தலைவர் என்பதாக எடுத்துக் கொள்ள முடியாது.  ராஜபக்ஷக்கள் பற்றி இலங்கையில் ஒரு கருத்துக் கணிப்பு எடுத்தால் 54% இற்கு மேற்பட்டோர் இன்றும் அவர்களை நல்ல தலைவர்களாக அடையாளம் காண்பர், ஆனால் அவர்கள் தமிழர்களை இனப் படுகொலை செய்தமையை தமிழர்கள் மட்டும் தான் நினைவிற் கொள்வர்!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

1) இதுபோன்ற செயல்கள் காலம்காலமாக படையெடுப்பாளர்களால் மேற்கொள்ளப்படுபவை. இதில் நகைச்சுவை என்னவென்றால், இவை எல்லாவற்றையும் செய்தவர்களே எங்களுக்கு மனித உரிமை வகுப்பெடுப்பார்கள். 

இப்போது மனித உரிமை வகுப்பெடுத்ததற்கு ஆதாரம் கேட்பார்கள் பாருங்கள்  😀 

2) சுனி vs சியா முஸ்லிம்களுக்கிடையிலான பிரச்சனையில் கருத்து வேறுபாடு இருப்பதனால் சதாம் ஒரு நல்ல தலைவர் அல்ல  என்பது உறுதியாகிறது. எனவே ஈராக்கின் மீது படையெடுத்து ஈராக்கை அழித்தது சரியான செயலே எனக் கதை போகிறது. ஆனாலும் புஸ் பிளைர் மீது போர்க்குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும். சரியா? 

🤨

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Justin said:

இதற்கு ஆதாரம் கேட்டு நேரத்தை வீணாக்கப் போவதில்லை

இது நடந்தது debathification என்ற சமூக கட்டமைப்பை அழிக்கும் நடவடிக்கையில். இது நடந்தது debathification என்ற சமூக கட்டமைப்பை அழிக்கும் நடவடிக்கையில். அதை செய்தது CIA, ஈராக் அரசாங்கம் என்ற போர்வையில். 

இது குறிவைத்து  நடந்தது debathification என்ற போர்வையில். 

நான் எந்த ஊடகத்தில் இருந்தும் எடுக்கவில்லை - உங்களின் கருத்தை பார்க்கும் வரையும். 

நான் இதுவரை நினைத்து இருந்தது இது  எந்த ஒரு ஊடகத்திலும் இருக்காது என்று. அனால் கூகுளை இழுகுவன தேடுதலில் இது வருகிறது 

https://snn.ir/files/fa/news/1399/9/9/1218392_665.pdf

இதை கூட நீங்கள் புறக்கணிக்கலாம். 

இதை கூட நீங்கள் புறக்கணிக்கலாம். அல்லது புனையப்பட்ட அல்ஜசீரா பதிவு என்றும் நீங்கள் சொல்லக்கூடிய சாத்தியக்கூறு இருக்கிறது.    

படித்த (அந்த வழியை தவிர்த்து உங்களால் சாத்தியக்கூறுகளை சிந்தித்து கூட பார்க்க முடியாததாக இருக்கிறது, அதுவும் cia, அமெரிக்கா, மற்றும்  மேற்கு அரசுக்கள்  என்ற அமைப்பை பொறுத்தவரை)  நீங்கள் முட்டாளாகுவது, இப்படியானதுக்கு ஆதாரம் தேடி.    

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

அந்த தேடியழிப்பு நடவடிக்கை தற்போதும் (2006) தொடர்வதாக அந்தக் கட்டுரையின் இறுதிப் பந்தியில் கூறப்பட்டுள்ளது. 

இப்படியான நடவடிக்கை தற்போது ஈரானிலும் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

இப்படியான நடவடிக்கை தற்போது ஈரானிலும் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, ஏராளன் said:

அமெரிக்கா இராக் மீது படையெடுத்து இருபது ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்நிலையில் இராக்கியர்கள் பலர் சதாம் உசேனின் காலத்தில் இருந்ததைவிட தற்போது நிலைமை மோசமாகவுள்ளதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

சதாம் ஹுசையின் பிழையானவராக இருக்கலாம். ஆனால்  ஒருசில இனங்கள் வாழும் நாடுகளில் நாட்டை கட்டுக்கோப்பாக வைத்திருக்க கடுமையான கண்டிப்பான தலைவர்கள் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kadancha said:

இது நடந்தது debathification என்ற சமூக கட்டமைப்பை அழிக்கும் நடவடிக்கையில். இது நடந்தது debathification என்ற சமூக கட்டமைப்பை அழிக்கும் நடவடிக்கையில். அதை செய்தது CIA, ஈராக் அரசாங்கம் என்ற போர்வையில். 

இது குறிவைத்து  நடந்தது debathification என்ற போர்வையில். 

நான் எந்த ஊடகத்தில் இருந்தும் எடுக்கவில்லை - உங்களின் கருத்தை பார்க்கும் வரையும். 

நான் இதுவரை நினைத்து இருந்தது இது  எந்த ஒரு ஊடகத்திலும் இருக்காது என்று. அனால் கூகுளை இழுகுவன தேடுதலில் இது வருகிறது 

https://snn.ir/files/fa/news/1399/9/9/1218392_665.pdf

இதை கூட நீங்கள் புறக்கணிக்கலாம். 

இதை கூட நீங்கள் புறக்கணிக்கலாம். அல்லது புனையப்பட்ட அல்ஜசீரா பதிவு என்றும் நீங்கள் சொல்லக்கூடிய சாத்தியக்கூறு இருக்கிறது.    

படித்த (அந்த வழியை தவிர்த்து உங்களால் சாத்தியக்கூறுகளை சிந்தித்து கூட பார்க்க முடியாததாக இருக்கிறது, அதுவும் cia, அமெரிக்கா, மற்றும்  மேற்கு அரசுக்கள்  என்ற அமைப்பை பொறுத்தவரை)  நீங்கள் முட்டாளாகுவது, இப்படியானதுக்கு ஆதாரம் தேடி.    

சின்ன விசயமோ பெரிய விசயமோ, "ஒரேயொரு மூலம்" (அல்லது அதுவும் இல்லாமல்!) வருவது கடஞ்சா "ரச்" 😎!

இதை விடக் கொஞ்சம் நம்பிக்கையான மூலமாக BRussels Tribunal எனப்படும் நோம் சோம்ஸ்கி போன்றோரால் இயக்கப் பட்ட மனித உரிமை அமைப்பு இருக்கிறது: அவர்களும் ஈராக்கின் கல்வியாளர்களை அமெரிக்கா கொன்றது எனச் சதித்திட்டக் கதை யொன்றைச் சொல்லியிருக்கின்றனர், ஆதாரமெல்லாம் வழமை போல அழித்து விட்டதாம்!

ஆனால், நீங்கள் சொல்வது போல நடந்திருக்கிறது: சுனி முஸ்லிம் கல்விமான்களை சியாவின் கட்டுப் பாட்டிலிருந்த ஈராக் ஆயுதப் படையினர் கொல்வதும், பின்னர் சியா சுனியைக்  கொல்வதும் நடந்து தான் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Justin said:

இதற்கு ஆதாரம் கேட்டு நேரத்தை வீணாக்கப் போவதில்லை, எனவே எங்காவது குட்டிச் சுவர் (fringe) ஊடகத்திலிருந்து எடுத்திருக்கிறீர்கள் என்று ஊகித்து நகர்வோம்!😂

அமெரிக்காவும் பிரிட்டனும் பொய் சொல்லி ஈராக்கை ஆக்கிரமித்தது தவறு. ஆக்கிரமித்த பின்னர் Black Water போன்ற காசுக்கு வேலை செய்யும் ஒப்பந்தக் காரர்கள் மூலமும், அமெரிக்க இராணுவம் மூலமும் பல்லாயிரம் ஈராக்கியர்களைக் கொன்றது இன்னும் தவறு. இதற்காக புஷ், பிளையர் ஆகியோர் யுத்தக் குற்ற விசாரணை செய்யப் பட வேண்டியோர் - இதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால், ஈராக்கின் சுனி, ஷியா, குர்து இனங்களிடையே சதாம் பற்றிய அபிப்பிராயத்திலிருக்கும் வேறுபாடுகளை மேல் கருத்துக் கணிப்புக் காட்டுகிறது. இதனை வைத்து சதாம் ஒரு நல்ல தலைவர் என்பதாக எடுத்துக் கொள்ள முடியாது.  ராஜபக்ஷக்கள் பற்றி இலங்கையில் ஒரு கருத்துக் கணிப்பு எடுத்தால் 54% இற்கு மேற்பட்டோர் இன்றும் அவர்களை நல்ல தலைவர்களாக அடையாளம் காண்பர், ஆனால் அவர்கள் தமிழர்களை இனப் படுகொலை செய்தமையை தமிழர்கள் மட்டும் தான் நினைவிற் கொள்வர்!

Quote

அமெரிக்காவும் பிரிட்டனும் பொய் சொல்லி ஈராக்கை ஆக்கிரமித்தது தவறு. ஆக்கிரமித்த பின்னர் Black Water போன்ற காசுக்கு வேலை செய்யும் ஒப்பந்தக் காரர்கள் மூலமும், அமெரிக்க இராணுவம் மூலமும் பல்லாயிரம் ஈராக்கியர்களைக் கொன்றது இன்னும் தவறு. இதற்காக புஷ், பிளையர் ஆகியோர் யுத்தக் குற்ற விசாரணை செய்யப் பட வேண்டியோர் - இதில் மாற்றுக் கருத்தில்லை.

இவர்கள் ரஸ்யாவுக்கு பாடம் எடுக்கலாமோ? 

1 hour ago, Justin said:

ஆனால், நீங்கள் சொல்வது போல நடந்திருக்கிறது: சுனி முஸ்லிம் கல்விமான்களை சியாவின் கட்டுப் பாட்டிலிருந்த ஈராக் ஆயுதப் படையினர் கொல்வதும், பின்னர் சியா சுனியைக்  கொல்வதும் நடந்து தான் இருக்கிறது.

இது சதாமுக்கு எதிரான மதக்குழுவை வைத்து கொல்லுவித்ததும் சதாமை கொல்லுவித்ததும் நடந்தேறியது.  எண்ணையை திருடுவதை பற்றி எழுத விருப்பம் இல்லையோ??

இன்னுமொரு நாட்டில் தலைவர் எப்படியானவராக இருந்தாலும் அவரை கொல்ல அமெரிக்காவுக்கு அதிகாரம் இருக்குமெனில் ஏனைய நாடுகளுக்கும் அந்த அதிகாரம் இருக்க வேண்டும். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

அடேங்கப்பா ... மேற்குலக செய்தி ஸ்தாபனமான  BBC என்றையில் இருந்து இவ்வளவு தெளிவா அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆசீர்வாதத்துடன் நடந்த ஈராக் யுத்த நடவடிக்கை, அதன் பாதகங்கயை புள்ளிவிபரமா வெளியிட தொடங்கி இருக்கு!!! 🤔

யாழில் பல திரிகளை வாசித்து வாசித்து நானும் ஏதோ  West மீடியாவை வெஸ்ட்டு மீடியா என்று நினைத்து கொண்டு இருக்கிறேன்.
அப்ப BBC ரஷிய / உக்கிரேன் யுத்தம் பற்றி எழுதுவதும் ஓரளவு சரியாக தான் இருக்கும் என்ன!!!

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Sasi_varnam said:

அண்ணை நீங்க சந்தியில் சிந்து பாடுவது நல்லா விளங்குது. இதை நீங்கள் இப்படி எடுத்துக்கனும்..

பிபிசியே இப்படிச் சொல்ல வேண்டி இருக்கென்றால்.. அமெரிக்க மற்றும் மேற்குலகம் பற்றிய ஈராக் மக்களின் எண்ண ஓட்டம் இதை விட மோசம் என்று எடுத்துக் கொள்வது கூடிய அளவு யதார்த்தமாக இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலக நாட்டு ஊடகம் தொடர்பாக  இங்கே சிலரால் எழுதப்படும் கருத்துகளில் பல சந்துகள் இருக்கிறன.. அதிலும் சிந்துகள் பாடக்கூடிய சந்துகளும்  (ஓட்டைகள்) இருக்கின்றன என்று வெளிப்படையாக ஒத்துக்கொண்டமைக்கு நன்றிகள் நெடுக்ஸ் /    உடையார் மற்றும் கோஷ்டியினர்... 

  • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2023 at 11:57, Kadancha said:

இது நடந்தது debathification என்ற சமூக கட்டமைப்பை அழிக்கும் நடவடிக்கையில். இது நடந்தது debathification என்ற சமூக கட்டமைப்பை அழிக்கும் நடவடிக்கையில். அதை செய்தது CIA, ஈராக் அரசாங்கம் என்ற போர்வையில். 

இது குறிவைத்து  நடந்தது debathification என்ற போர்வையில். 

நான் எந்த ஊடகத்தில் இருந்தும் எடுக்கவில்லை - உங்களின் கருத்தை பார்க்கும் வரையும். 

நான் இதுவரை நினைத்து இருந்தது இது  எந்த ஒரு ஊடகத்திலும் இருக்காது என்று. அனால் கூகுளை இழுகுவன தேடுதலில் இது வருகிறது 

https://snn.ir/files/fa/news/1399/9/9/1218392_665.pdf

இதை கூட நீங்கள் புறக்கணிக்கலாம். 

இதை கூட நீங்கள் புறக்கணிக்கலாம். அல்லது புனையப்பட்ட அல்ஜசீரா பதிவு என்றும் நீங்கள் சொல்லக்கூடிய சாத்தியக்கூறு இருக்கிறது.    

படித்த (அந்த வழியை தவிர்த்து உங்களால் சாத்தியக்கூறுகளை சிந்தித்து கூட பார்க்க முடியாததாக இருக்கிறது, அதுவும் cia, அமெரிக்கா, மற்றும்  மேற்கு அரசுக்கள்  என்ற அமைப்பை பொறுத்தவரை)  நீங்கள் முட்டாளாகுவது, இப்படியானதுக்கு ஆதாரம் தேடி.    

நீங்கள் சொல்வது ....

ஆடாதகால் பாக்ட்  (Half Fact) 

ஆட்டுக்கால் பாக்ட்  ( Half Fact) என்று ஒன்று உண்டெல்லோ?
அதுதான்  உண்மையான பாக்ட் 

ஜெர்மனியில் களவெடுத்துகொண்டுவந்த தொழில் நுற்பத்தை வைத்தே இங்கு 
அமெரிக்காவில் பல தொழில்முறைமைகள் தொழிற்சாலைகள் தொடங்கின 

இன்றும் கூட பல இன்ஜினியரிங் தியரி களுக்கு சொந்த காரர்கள் ஜெர்மனியர்கள்தான் 

இரண்டு (மேல் ஒன்று கீழ் ஒன்று) இறக்கைகளை வைத்தே அமெரிக்க பிரிட்டன் விமானங்களை செய்தார்கள் அதை வேகமாக பறக்க முடியாது காரணம் இரண்டுக்குமான இடையில் வரும் காற்று அழுத்தம்

3: Lift and drag forces acting on an airfoil cross-section. From: Aerodynamics of Wind Turbines by Martin O. L. Hansen, second edition, 2008.

முதன் முதலில் ஒரு இறக்கையில் விமானம் வடிவமைத்து பறந்தவர்கள் ஜெர்மானியர்கள் 
சாதரண மரம் வெட்டும் வாளைக்கூட இந்த டிகிரியில் பற்கள் இருந்தால்தான் இலகுவாக வெட்ட முடியும் என்று வடிவமைத்தவர்கள் ஜெர்மானியர்கள். நீங்கள் ஓடும் கார்களில் இருக்கும் பல தொழில்நுட்பங்களை வடிவமைத்தவர்கள்  ஜெர்மனியர்கள்தான் டிபிபிரென்டஸியல் முதற்கொண்டு.

அவற்றை எல்லாம் முற்றாக அழித்துவிட்டுத்தான் இங்குகொண்டுவந்தார்கள் 
இறுதியில் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார் என்று ஆட்டுக்கால் பாக்ட் சொல்லி 
உலக வரலாறை திரித்தார்கள்.   

  • கருத்துக்கள உறவுகள்

வத்திக்கான் 
(தலாய்லாமா)  
அவர்களுடனான அமெரிக்க சி ஐ எ கில்மால் விளையாட்டுக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் 
Operation Gladio by Paul L. Williams  என்ற புத்தகம் வாசியுங்கள் 

என்னத்த வாசிச்சு என்ன ஆகப்போகுது 
அவைதான் ஆடாதகால் பாக்டுக்களா இருக்கும்
(நல்ல வேளையாக அதை சீனன் யாரும் எழுதவில்லை. இல்லையென்றால் அதை சீன அரசு ஊதுகுழல் என்று முடித்திருப்பார்கள்)  

கடஞ்சா உங்களுக்கு அந்த புத்தகம் பிடிக்கும் என்றே நம்புகிறேன் 

51RO67VP1oL._SX331_BO1,204,203,200_.jpg

Image

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Maruthankerny said:

என்ன மருது புத்தகம் கிளுகிளுப்பாக இருக்கும் போல இருக்கே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன மருது புத்தகம் கிளுகிளுப்பாக இருக்கும் போல இருக்கே.

ஓம்.....வாங்கி இருட்டுக்கை வைச்சு வாசியுங்கோ பெரிசு.....கிளுகிளுப்பாய் இருக்கும்....:rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன மருது புத்தகம் கிளுகிளுப்பாக இருக்கும் போல இருக்கே.

மேற்குலகு பற்றிய உண்மைகளை வாசித்தால் தெய்வக்குற்றம் ஆயிடும் 
பார்த்து வாசியுங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Maruthankerny said:

கடஞ்சா உங்களுக்கு அந்த புத்தகம் பிடிக்கும் என்றே நம்புகிறேன் 

கடஞ்சா சர்ச்சைகளின் பிரியர் என மருதருக்கும் தெரிந்திருப்பதில் ஆச்சரியமில்லை😉

Sure to be controversial, Operation Gladio connects the dots in ways the mainstream media often overlooks.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, கிருபன் said:

கடஞ்சா சர்ச்சைகளின் பிரியர் என மருதருக்கும் தெரிந்திருப்பதில் ஆச்சரியமில்லை😉

Sure to be controversial, Operation Gladio connects the dots in ways the mainstream media often overlooks.

அவ்வாறான உண்மைகளை வாசித்தால் இங்கிருக்கும் பலருக்கு ஜனநாயகதோஷம் வந்திடும் 
கடஞ்சா அவர்களுக்கு ஜனநாயகதோஷம் ஏற்கனவே முடிந்து இருக்கும் என்று நம்பியதால் 
அவரை வாசிக்க சொன்னேன் 

சி ஐ ஏ உலக மக்களை அன்போடும் காதலோடும் கனிவோடும் வாழ வைக்க இரவுபகலாக 
எவ்வளவு கடினமாக உழைக்கிறது ... அவற்றைப்பற்றி இப்படி அவதூறு கதைகளை யாரையும் வாசிக்க சொல்வது எவ்வளவு பெரிய தெய்வக்குற்றம் என்பது எனக்கு தெரியாதா என்ன ? 

  • கருத்துக்கள உறவுகள்
On 10/4/2023 at 06:04, Maruthankerny said:

தலாய்லாமா)  
அவர்களுடனான அமெரிக்க சி ஐ எ கில்மால் விளையாட்டுக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் 

இந்த புத்தகத்தை பற்றி தெரியாது. 

அனால் தலாய்லாமா நிர்வாகத்திலேயே, cia 1957 - 1960 காலப்பகுதியில் , திபெத்திய சீன எதிர்பாளர்களை - முதலில் கிந்தியாவில் சிலரை தெரிவு செய்து, இராணுவ, பாசூட்  பயிற்சி   கொடுத்து, திபெத்துக்குள் பாராசூட் வழியாக இறக்கி நிலையை ஆராய்ந்தது.

cia . அமெரிக்கா தலையீயீடு இல்லாவிட்டாலும் எதிர்ப்பு இருக்கும் என்று உறுதிபடுத்திய பின் - பெரிய அளவு பயிற்சி, இந்த பயிற்சி (பாராசூட்) அமெரிக்காவிலும், இராணுவ பயிற்சி    கிந்தியாவிலும் நடத்தப்பட்டது    
  
பயிற்சி அடுத்தவர்களை  cia  பாராசூட் வழியாக இறக்கியது திபெத்துக்குள். 

சீனாவிட அப்போது அதை கண்காணிக்க கொடிய தொழில்நுட்பம் இல்லை, மற்றும் திபெத்திய பரந்த வெளிகளை மறைக்கும்  மலைத் தரையமைப்பும் இதில் CIA க்கு வசதியாக இருந்தது. இதுக்கு அவசியம், திபெத்துக்கள் இறக்கியவர்களை இரகசியமாக நகர்த்துவது,  அதில் தான்  cia தலாய்லாமா  உறவு தொடங்குகிறது.

தலாய்லாமாவுக்கு அது தெரியாது என்றும், அவரின் அடுத்த படியில் இருந்தவரே (அவரும் ஓர் லாமா) செய்ததாக ஓர் கதை இருக்கிறது, அனால், நம்ப கூடியதாக இல்லை. 

அனல், இதுக்கு முதல், சிங் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், சிறிய எதிர்ப்பு போன்றவைகளுக்கு உதவி செய்தது, அது தலைலமாவுக்கு  தெரியாமல் இருந்து இருக்கலாம்.    

இது வெளிப்படையான வரலாறு, சிலர் இங்கே சதி  சொல்கிறேன் என்று முண்டியடித்து வராமல் இருக்க.

  • கருத்துக்கள உறவுகள்

மறந்துவிட்டேன், அனால், பெரிய அளவில் என்றாலும், சீன இராணுவ தொகையை எதிர்பதற்கு போதாது.  
 cia பல தடவை வழங்கல்களையும் திபெத் எதிர்ப்பாளர்களுக்கு செய்தது பரசூட் வழியாக, திபெத்துக்குளேயே இராணுவ பயிற்சி தொடங்குவதற்கு. 

திபெத்தின் தனிமைப்படுத்தப்பட்ட புவியில் அமைப்பு, சீனாவுக்கு வசதியாக அமைய, CIA இந்த திட்டம் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை.    

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.