Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கீரிமலை கடற்கரையில் நாவலரின் உருவச்சிலை திறந்து வைப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கீரிமலை கடற்கரையில் நாவலரின் உருவச்சிலை திறந்து வைப்பு!

breaking

நேற்று மாலை 5மணிக்கு கீரிமலை கடற்கரையில் நாவலர் பெருமான் உருவச்சிலை திறந்து
வைக்கப்பட்டது

கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களின் முயற்சியால்,

கீரிமலை கடற்கரையில் நாவலர் பெருமான் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது.

நாவலர் பெருமான் சைவநெறி தழைத்தோங்கவும், தமிழ் மொழி செழித்து வளரவும் பெரும் பணியாற்றியவராவார்.

அவர் யாழ்ப்பாணம், நல்லூர் கந்தப்பிள்ளை, சிவகாமி அம்மையார் ஆகிய இருவருக்கும் புதல்வனாக 1822ம் ஆண்டு அவதரித்தார்.

இலங்கையும், இந்தியாவும் அந்நியர் ஆட்சியின் கீழ் இருந்த போது சைவமும்,

தமிழும் பெரும் ஆபத்துக்களை எதிர்நோக்கிய காலப் பகுதியிலே தோன்றியவர் தான் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்.

வரலாற்றுக்கு முற்பட்ட சமயமாகவும், ஈழம் வாழ் மக்களின் பெரும்பாலானோரது உள்ளத்துள் ஒளி விளக்காய் சுடர்விட்டிலங்குவதுமான

சைவ சமயம் அந்நியரது செல்வாக்கு வலிவுற்றிருந்த காலத்தில் சிறிது நலிவுற்றிருந்தது.

இலங்கைக்கு வர்த்தக நோக்கோடு வந்த அந்நிய ஆட்சியாளர் அரசியலாதிக்கத்தைக் கைப்பற்றவும் தற்சமயம் கொள்கையை பரப்பவும் எண்ணங்கொண்டு கல்வி வழிப்பிரசாரம் செய்யத் தலைப்பட்டனர்.

அந்நியவெற்று நாகரீகப் போக்கில் ஈடுபாடு கொண்ட மக்கள் சுயமசய கலாசார வழிகளை மறந்து வாழ்வாராயினர்.

இவ்வாறு சைவ சமயம் நலிவுற்றிருந்த வேளையில் நாவலர் பெருமான் தனது சொல்லாலும் எழுத்தாலும் மக்கள் அகக் கண்களைத் திறந்து அவல நிலையை அவர்களுக்கு உணர்த்தியதோடு சைவமும்,

தமிழும் மீண்டும் புத்துயிர் பெறுவதற்காக தம்மாலியன்ற அத்தனை பணிகளையும் செய்தார். அவரின் கல்விப் புலமையையும், நாவன்மையை யும், சைவத் தமிழ் பணிகளையும் பாராட்டி திருவாடுதுறை ஆதீனம் அவருக்கு ‘நாவலர்’ என்ற பட்டத்தை வழங்கியது.

சைவம் காத்த நாவலர் பெருமானை சைவமக்கள் ஐந்தாம் சமயக்குரவர் எனப் போற்றுகின்றனர்.

சிவ சமயத்தை அழிய விடாது பாதுகாக்க நாவலர் பல முயற்சிகளை மேற்கொண்டார். சைவ சமயத்தவர் ஒரு சிலரிடம் காணப்பட்ட தவறான பழக்க வழக்கங்கள், செயல்கள் என்பவற்றை நீக்க முயன்றார். சைவப் பாடசாலைகளை நிறுவினார்.

திருக்கேதீஸ்வரம், கீரிமலைச் சிவன் கோயில் என்பனவற்றின் தொன்மைச் சிறப்புக்களை மக்களுக்கு எடுத்துக் கூறி அவற்றைப் புனரமைத்து நித்திய, நைமித்திய பூஜைகளுக்கு வழிவகுக்குமாறு சைவ மக்களுக்கு விஞ்ஞாபனம் விடுத்தார்.

தம் வாழ்நாள் பூராவும் தமிழுக்கும் சைவத்துக்கும் சேவையாற்றி வந்த நாவலர் பெருமான் 1879ம் ஆண்டு கார்த்திகை மாதம் மக நட்சத்திரத்தில் இறை பதம் அடைந்தார்.


https://www.thaarakam.com/news/67597a91-afea-4026-b7c9-b926b7545725

 

  • கருத்துக்கள உறவுகள்

பொருத்தமான இடத்தில் பொருத்தமான சிலை.
சிலை திறந்தவர்களுக்கு பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எமது இனம் சார்பாகவும் வாழ்த்துகின்றேன். ஏனெனில் ஆறுமுகம் தமிழுக்கும் சைவத்துக்கும் மட்டுமல்ல எமது இனத்துக்கும் பெரும்தொண்டாற்றியுள்ளார். இதனை ஆறு திருமுருகன் வெளிப்படையாகச் சொல்லமாட்டார். 🤪

  • கருத்துக்கள உறவுகள்

இனி ஒரு குறூப் வரும் நாவலரை கிழித்து தொங்க விட….

50 minutes ago, வாலி said:

எமது இனம் சார்பாகவும் வாழ்த்துகின்றேன். ஏனெனில் ஆறுமுகம் தமிழுக்கும் சைவத்துக்கும் மட்டுமல்ல எமது இனத்துக்கும் பெரும்தொண்டாற்றியுள்ளார். இதனை ஆறு திருமுருகன் வெளிப்படையாகச் சொல்லமாட்டார். 🤪

உங்கள் இனம் யாது?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பண்பாட்டு.. மொழி.. சைவ அடையாளங்கள் தமிழர் தேசமெங்கும் அமைக்கப்படுவது வரவேற்கப்பட வேண்டும். ஏனெனில் திட்டமிட்ட ஆக்கிரமிப்பின் கீழ் பிற இன மத அடையாளத் திணிப்பு தீவிரமாகி உள்ளதால். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

இனி ஒரு குறூப் வரும் நாவலரை கிழித்து தொங்க விட….

உங்கள் இனம் யாது?

ஆறுமுகம் எந்த இனம் சார்ந்தவரோ அதே இனம்தான் நானும் அதுபோக, இங்கு யாழ் இணையத்திலும் எல்லோரும் அதே இனமாக இருப்பதினால் எந்த குறூப்பும் கிழித்துத் தொங்க விட வராது என நம்புகின்றேன்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுகநாவலரை அவருக்கு அமைவான இடத்தில் அமரவைத்த ஆறுதிருமுருகன் ஐயாவிற்கு பாராட்டுக்கள்.......!   🙏

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

 

breaking

நேற்று மாலை 5மணிக்கு கீரிமலை கடற்கரையில் நாவலர் பெருமான் உருவச்சிலை திறந்து
வைக்கப்பட்டது
.

 

நல்லவிடயம். 

Edited by நியாயத்தை கதைப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த திரியை வாசிக்கவில்லை 😷

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

நான் இந்த திரியை வாசிக்கவில்லை 😷

பார்த்தனீங்கள்தானே. அது போதும்  🤣

சமயம் என்று வந்தவுடன் எல்லோரும் குதிக்கால் பின்புறத்தில் அடிபட ஓடவேண்டிக்கிடக்கு.

 🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

பார்த்தனீங்கள்தானே. அது போதும்  🤣

சமயம் என்று வந்தவுடன் எல்லோரும் குதிக்கால் பின்புறத்தில் அடிபட ஓடவேண்டிக்கிடக்கு.

 🤣

அவர் செய்தது சைவத்திற்கு,  முழுமையான மேல் தட்டு RSS😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சிலதை தவிர ஆறுமுகநாவலரின் தமிழ் சேவை அளப்பெரியது,

 

  • கருத்துக்கள உறவுகள்

கீரி  மலையில் முதல் செய்யப்பட வேண்டியது, அங்கிருக்கும் புராதன சமயம் கலாசாரம் போன்ற குறியீடுகளை பாதுகாப்பதும், அதன் அயல்களை புனருத்தாரணம் செய்யப்படவேண்டியதும்.  
  
சிலை வைத்து, சிங்கள தொல்லை பொருள் திணைக்களத்தாய் கிளறி விட்டதாகவும்  அமையக் கூடும்.

(இப்பதிவில் வரும் சாதி பெயர்கள் வரலாற்று குறிப்புக்காக, சாதிக்காக அல்ல.)

நாவலருக்கு, (அரசியல், நிர்வாக, சமூக) வெளியை திறந்தது, வைத்தவர்  நாவலர் எதிர்த்த  நல்லூரை கட்டியவர்கள், மாப்பாண  முதலியார் அதில் வெளி முகம். 

நல்லூர் கோயிலாக மீண்டும் எழும்பிய பின்பே, மறுமலர்ச்சி ஏற்பட முதல் வெளி திறக்கப்பட்டது , அதாவது வேறு எவரும் துணிந்து தமிழ் மொழி , கலாசார, சமய (தேசிய, இந்தக்கருத்தை பற்றி தமிழருக்கு அப்போது அவ்வளவு அறிவு இல்லை ஆயினும், அனால் அவர்கள் செய்தது தேசிய மறுமலர்ச்சி) மறுமலர்ச்சி முயதர்சிகளை எடுக்கலாம் என்று.       

நல்லூரைரை கட்டிய பின்பு தான், பல கோயிகள் முன்பு பிரசித்தமாக இருந்த  (ஒன்றில் பகுதியாக சிதைக்கப்பட்ட நிலையில், அல்லது பூட்டி கிடந்த)  மீண்டும் திறக்கப்பட்டன. இதுக்கெல்லாம் தில்லும், தெம்பும், துணிவும்  கொடுத்தது நல்லூரை கட்டியவர்கள்.

நான் இங்கு சொல்லி இருக்கிறேன் - இப்போதுள்ள நல்லூர் கோயில் அதன் உரிய  இடத்தில இல்லை, இப்போதைய இடத்தின் (பழைய ) பெயர் குருக்கள் வளவு.  முத்திரை சந்தியில் இருக்கும் தேவாலயம் இருக்கும் இடமே (பழைய நெல்லூர்) நல்லூரின் (கோயிலும், இராசதானியும்  கோட்டை அமைப்பில்)  ஒன்றாக அமைந்ததே பழைய நல்லூர் (நெல்லூர்) கோயில்.    
    

மாப்பாண முதலியார், Don Juan ஆக இருந்தாலும், அவரின் முழு வாழ்க்கையையும் பணயம் வைத்தே நல்லூரை  கட்டுவதில் இறங்கினார். இங்கே நான் சொல்லிக் இருக்கிறேன், குருக்கள் வளவில் அனறைய யாழ் இராச்சியம் முஸ்லும்களுக்கு அடைக்கலம் கொடுத்து இருந்தது. கோயில் கட்ட இடத்தை கெட போது , முஸ்லிம்கள் மறுத்து விட்டார்கள். அவர்களை, வர்கள் பாவித்த கிணற்றில் பன்றி தலைகளை போட்டே கலைக்கப்பட்டார்கள் (இது சரியா பிழையா என்பது வேறு விடயம்). இந்த காதோடு காதாக, இரவோடு இரவாக செய்த பல  வேலைகளில் ஈடுபட்டவர்கள் எனது மூதாதையர்கள்.

நாவலர் (1832 பிறந்தது என்றே நினைவு), அவரின் பார்வையில் (ஈழத்தமிழ் தேசியத்தை) சாதி வழியாகவும், மற்றும் சைவம், தமிழ் மறுமலர்ச்சி வழியாகவும்  முன்னிலைப்படுத்தி மறுமலர்ச்சி செய்த பொது,, ஆங்கிலேயரின்( நிர்வாக கட்டமைப்பின் )  ஒரு பகுதியில் இருந்து நாவலருக்கு ஆதரவு இருந்தது. முக்கியமாக, நாவலர்  செய்ததை அச்சுறுறுத்தலாக பார்க்கவில்லை, ஆதரித்தார்கள், ஊக்கமும், உற்சாகமும் கொடுத்தார்கள் ஆங்கிலேயரின் ஒரு பகுதி.  

மருவளமாக, நல்லூரை  கட்டிய போது (1734).   பெரிய சிக்கல் எடுத்து, வேண்ட வெறுப்பாக  ஒல்லாந்தர் அனுமதித்தார்கள் ஆயினும், அவர்கள் அதை அச்சுறுத்தலாக பார்த்தார்கள் (ஏனெனில் அது யாழ் இராச்சிய சின்னத்தை மீள கட்டி எழுப்புவதான குறியீடு) , உள்ளுக்குள் ஏதிர்த்தார்கள், அவர்களுக்கு விருப்பமும் இல்லை. இதனால்  தான், பல வேலைகள் இரகசியமாக செய்யப்பட வேண்டி இருந்தது (வெளிப்படையயாக  கோபுரம்  இல்லை, கிடுகினால் கூரை வரையப்பட்டது).   

ஏன், நல்லூர்  கட்டுவதை பல வெள்ளார்கள் எதிர்த்தார்கள் - இதில் நாவலரின் பரம்பரையும் உள்ளடக்கம் என்றே நான் அறிவது - (பின்னோக்கிய பார்வையில் விளங்கி அறியும்) காரணம் போத்திகேய, ஒல்லாந்த ஆட்சியில் அடையப்பட்ட அவர்களின்  வாழ்வாதாரம், அந்தஸ்து, சமூக நிலை போன்றவற்றுக்கு நல்லூர் கோயில் அச்சுறுத்தலாக பார்க்கப்பட்டது. சாதியும் காரணமாக இருக்கலாம். உண்மையில் விருப்பம் இருந்து இருக்கலாம், அனால் அவர்களின்  வாழ்வாதாரம், அந்தஸ்து, சமூக நிலை ப்பாதுகாப்பு நோக்கினால் எதிர்த்தார்கள். இப்படியாக பறங்கியரை குழையடித்த   வேறு சாதியினரும் எதிர்த்து இருக்கலாம்; ஆனால் அப்படியான செல்வாக்கானவர்கள்  இல்லை என்றே சொல்லலாம். கிறிஸ்தவர்ககளுக்கும் விருப்பம் இல்லை; அனால் அவர்களும் சாதி அடிப்படையில் வெள்ளாளர்களே (இவர்களை சோற்று கிண்ண வெள்ளார்கள்  அல்லது வேதக்காரர் என்ற பட்டம் வழங்கியது. (rice bowl வெள்ளார்கள் அல்லது  Christians)  இப்பொது இல்லாமல் போய்  விட்டது).     

கட்டும் வேலைக்கு ஆட்களை எடுப்பதே பெரும் பிரச்சனையாக இருந்தது. பலர் பயத்தால் வேலைக்கு வரவில்லை,  பலர் தடுக்கப்பட்டார்கள், முக்கியமாக இந்த சமூக அந்தஸ்து உடைய வெள்ளரால் (காரணம், யாழ் இராச்சியம் வீழ்ந்தவுடன், போத்துகேய, ஒல்லாந்த ஆட்சிக்கு குழையடித்து வசதிகளை பெற்றது இவர்களே).       

இப்படி பல போராட்டங்களுக்கு ஊடக  தான் நல்லூர் கட்டப்பட்டது 1734 இல். 

அனால் வேடிக்கை என்னவென்றால், , ஏறத்தாழ 100 வருடங்களுக்கு பின்பும் நாவலர் நல்லூரை  எதிர்த்தார் - ஆகம  விதிப்படி இல்லை காரணம் சொல்லப்பட்டாலும் - சாதியே காரணம் என்று நினைக்கிறன்.  

அனால் நாவலர் மண்டப பொறுப்பாளர்களுக்கு,  தமிழரின் முழுமுதற்  கடவுள் என்று கருதப்படும் முருகன் ஓர் மனிதனை (நாவலர் சிலையை)  வலம்  வருவது  முறையற்றதாக ஏன் தெரியவில்லை, வேறு எந்த பிரச்சனைகளை விட்டு விட்டு பார்த்தாலும்?.

அதை வலோற்காரம்  இன்றி மரியாதையாக  அகற்றுமாறு கோரிய போது, ஏன் அவர்கள் சாதி கதையை எடுத்தார்கள்? இவ்வளவுக்கும், அதை கேட்டது நல்லூர் நிர்வாகம். இது எண்பதுகளில் நடந்தது. 

இது தான்  இதுவரையில் அறிந்த  வரலாறு.  எந்தவொரு சாதியையும் கூட்டி குறைத்து எடை போடுவது அல்ல இந்த பதிவின் நோக்கம். மற்றது, இதில் வேறு எவராவது, வேறு கதைகளை, அல்லது ஒரே சம்பவத்தின் வேறு கதைகளை அறிந்து இருந்தால் அறியாத தரவும்.

 நாவலர் சிலை வைப்பது இந்த சாதியை தூக்கி பிடிப்பது என்னும் குறியீட்டை ஏற்படுத்துகிறது . கீரிமலையில் உண்மையில் நாவலர் சிலை வைப்பதற்கு ஏற்ற இடமும் அல்ல. கீரிமலை சித்தர்கள், பாவத்தை கழுவுவது, பிதிர் கடன் செய்வது, பிறவிப் பிணி கழுவுவது    போன்றன்ற முத்தி காரியங்களுடன் தொடர்புபட்டது.

மாவிட்டபுரம் அப்படியானதே. அதன் பெயரே குதிரை  முகம் அகன்ற இடம் எனும் அர்த்தம். வரலாற்றின் படி சோழ இளவரசிக்கு  குதிரை முகம் அகன்ற இடம் மாவிட்டபுரம்.

அண்மைய  வரலாற்றில், மாவிட்டபுரத்தில் சாதி பிரச்சனைகள் மிகவும் கூர்மையாக நடந்தது. 

இப்படியான இடங்களில் நாவலர் சிலை வைப்பது போன்ற விடயங்கள் நடந்தால், அதன் அர்த்தம் ஒன்றே ஒன்று தான்  , வைத்தவர்கள் சாதி என்ற குறியீட்டுக்காவே வைத்துளார்கள், நாவலரின் தமிழ், சைவசமய சேவையை போர்வையாக கொண்டு . .   

கீறி மலையில் இருக்கும் சித்த சமாதிகள், மடங்கள் போன்றவற்றை பாதுகாப்பதே செய்யப்பட வேண்டிய வேலை.

நாவலர் சிலை கீரிமலையில் வைத்தது - ஒரு பகுதியாக,  இங்கு மேற்கில்  Camino de Santiago புனித யாத்திரை பாதைகள், Santiago de Compostela , Lourdes போன்ற  புனித பிரதேசத்தில் அடிமைகளை கொண்டிருந்த வெள்ளையர்களின் சிலை வைப்பதை ஒத்தது.   

தவிர, நாவலருக்கு   தனியாக மண்டபம் இருக்கிறது.    

குறிப்பு: நன் நாவலுக்கு முழுமையான  எதிர் அல்ல.

எனவே,நாவலர் சிலை வைப்போரில் தான் பிரச்சனை இருக்கிறது, அன்று தொட்டு.

(குறிப்பு: மேலும் சொல்லி இருக்கிறேன், யாழ்  இராச்சியத்தில், சரசுவதி மகால்  எனும் அருங்காட்சியகமும், நூலகமும் ஒன்றிணைந்த தமிழரின் வரலாறு,  தொல்லியல்   நுண்பொருட்களை பாதுகாக்காத நிலையம் ஒன்று இருந்ததாக. அதன் இடம் இப்போது தெளிவாக தெரியவந்துள்ளது, இப்போது இளம் கலைஞர் மன்றம் மற்றும் மரக்காலை இருக்கும் வளவுகள், சட்டநாதர் வீதியில்).

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.