Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேதகு - முதற்பார்வை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மேதகு படம் பார்த்தேன். அக்கினி குஞ்சொன்று பிறந்தது, படத்தின் ஆரம்பம் பிரமாதம். வீர தமிழ் மகள் போலீஸ்காரன் தலையில் குடத்தால் அடித்து பின் வந்தவர்களுக்கு வழி காட்டி நிக்கிறாள். புத்த பிக்குகள் வழி மாறி பயணிக்கிறார்கள், இலங்கை புத்த பிக்குமாரில் சாந்தமான பார்வை  இல்லை, இதை அழகாக காட்டி இருக்கிறார். பாடல்கள் பிரமாதம், மேள சத்தமும் பறையோசையும் பாடல்களுக்கு மெருகூறுகின்றன. கூத்து கலைஞர்களை நன்றாக வடிவமைத்துள்ளார், மாவீரன் கதை சம காலத்தில் வாழ்ந்த எமக்கு பெரும் பாக்கியமாக உள்ள அதே வேளை கண்ணீரையும் வரவழைக்காமல் இல்லை. மிகச் சிறந்த படைப்பு, பட குழுவினருக்கு வாழ்த்துக்கள். ஒவ்வொரு தமிழரும் பார்க்க வேண்டிய படம் 

  • Replies 147
  • Views 14.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மேதகு - திரைக்கதைக்கு பின்னால் உள்ள நிஜக்கதை
 

மேதகு பார்க்கக் கூடிய ஒரு நல்ல படம். ஜகமே தந்திரம் போன்ற குப்பைப் படங்களை விட இது பல மடங்கு மேலானது. குறிப்பாக நாட்டுக்கூத்துடன் கதை சொல்லும் பாணி அருமை. சிறந்த படப்பிடிப்பு. எந்த இடத்திலும் தொய்வில்லாத அளவுக்கு தரமான எடிட்டிங்.

பிரபாகரன் வாழ்க்கை வரலாறு பற்றிய கதையில் சில மிகைப் படுத்தல்கள் இருந்தாலும், அவை படம் பார்ப்பதற்கு உறுத்தலாக இருக்கவில்லை. பெருமளவு சம்பவங்கள், களம் சார்ந்து கதை நகர்கிறது. பாடல்கள் கேட்டு இரசிக்கும் படி உள்ளன. தமிழாராய்ச்சி மகாநாட்டு நடனமும் அருமை. குறைந்த பட்ஜெட்டில் எடுத்த ஒரு படத்திற்கு இவையெல்லாம் அதன் மதிப்பைக் கூட்டுகின்றன.

இருப்பினும் படத்தில் சில குறைகளும் இருக்கவே செய்கின்றன. பொதுவாக இந்தப்படம் தமிழ்தேசிய கொள்கை சார்ந்த பார்வையாளர்களுக்கு ஏற்புடையதாக இருந்தாலும், ஆங்காங்கே கிளம்பும் பிரச்சார வாடையை குறைத்திருக்கலாம். முடிந்த அளவு தவிர்த்திருக்கலாம். இது ஓர் ஆவணப்படம் இல்லைத் தான். ஆனால், வரலாற்றைப் பதிவு செய்யும் படம்.

படம் தொடங்கும் போதே சொல்லப்படும் குமரிகண்டம் பற்றிய புனைகதை ஒரு தேவையற்ற காட்சி. தமிழினவாத கண்ணோட்டத்தில் சொல்லப்படும் இது போன்ற பிரச்சாரங்கள், படத்தின் நம்பகத்தன்மையை பாதித்து விடும். இந்தப் படத்தை எடுத்தவர்கள் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் என்று சொல்கிறார்கள். அப்படியானால் அந்தக் கட்சியினருக்கு மட்டுமே உவப்பானதாக இருக்கும்.

இலங்கை என்ற தமிழ்ச் சொல் எப்போதும் பாவனையில் இருந்து வந்த போதிலும், படத்தில் எதற்காக சிலோன் என்று வலிந்து திணிக்கிறார்கள் என்று தெரியவில்லை. போலீஸ்காரரின் பட்டியில் கூட சிலோன் போலிஸ் என்று இருக்கிறது. அப்படி எந்தக் காலத்திலும் வந்த சீருடையிலும் இருக்கவில்லை.

இந்தப் படத்தில் சிறிலங்கா போலிஸ் என்றால் அது சிங்களவர்கள் என்பது போன்று காட்சிப் படுத்தி உள்ளனர். அது தவறு. எழுபதுகளில் வட மாகாணத்தில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில், தமிழ்ப் போலீஸ்காரர்கள் மட்டுமே அதிகமாக இருந்தனர். சிங்களவர்கள் அனேகமாக அதிகாரிகளாக இருந்தனர். (தமிழ் அதிகாரிகளும் இருந்தார்கள்.) ஆரம்ப காலங்களில் தமிழ் இளைஞர்களை கைது செய்து சித்திரவதை செய்ததும் தமிழ்ப் போலீசார் தான். அதனால், அந்தக் காலங்களில் நடந்த கெரில்லாத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களும் (பெரும்பாலும்) தமிழ்ப் போலீஸ்காரர்கள் தான்.

படத்தில் பிரபாகரனின் முதலாவது வன்முறைத் தாக்குதலாக ஒரு பஸ்ஸை எரிப்பது காட்டப் படுகின்றது. அந்தக் காலங்களில் பஸ் கொளுத்தும் போராட்டம் சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருந்தாலும் ஒருபோதும் பிரபாகரன் அதில் ஈடுபட்டிருக்கவில்லை. வேறு சில இளைஞர் குழுக்கள் அதைச் செய்தன. ஆனால், புலிகள் இயக்கத்தில் இது போன்ற போராட்டத்தை நிராகரிக்கும் போக்கு காணப்பட்டது. (காரணம்: பஸ் எரிப்பதும் வழமையான "அஹிம்சைப் போராட்டம்" என்ற கருத்து நிலவியது.)

 

பொன் சிவகுமாரன் போலிஸ் ஜீப் மீது தாக்குதல் நடத்த முனைந்த சம்பவம் சிறப்பாக படமாக்கப் பட்டுள்ளது. அந்த வரலாறு சரியானது தான். இருப்பினும் அந்த சம்பவத்தில் அவர் போலிஸ் ஜீப் மீது கையெறி குண்டை வீசியெறிந்தார் என நினைக்கிறேன். அது வெடிக்கவில்லை. உண்மையில் பிரபாகரனுக்கு முன்னர், சிவகுமாரன் தான் பல தாக்குதல்களை நடத்தி இருந்தார். அவற்றில் பல வெற்றி அளிக்கவில்லை என்பது வேறு விடயம். இறுதியில் போலிஸ் தேடுதலில் சிக்காமல் ஓடிய பொழுது புகையிலைத் தோட்டத்தில் தான் சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். படத்தில் அந்த சம்பவம் ஒரு தெருவில் நடப்பது போன்று காட்டுவது தவறு.

இலங்கையில் இனப்பிரச்சினைக்கு மூலகாரணம் புத்த பிக்குகள் என்பது போலவும், அவர்கள் தான் தேசத்தை ஆள்கிறார்கள் என்பது போலவும் சித்தரிக்கப் படுகின்றனர். அவர்களை கொடூரமான வில்லன்களாக காட்டுகிறார்கள். உண்மையில் புத்த பிக்குகளில் இனவாதிகள் (எல்லோரும் அல்ல) இருந்த போதிலும், அவர்கள் எப்போதும் அரசின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டவர்களாக இருந்தனர். தமிழ்நாட்டில் சங்கராச்சாரியார், நித்தியானந்தா மாதிரி அரசியலில் தலையிட்டுக் கொண்டிருக்கும் பௌத்த மதகுருக்கள் இன்னும் உள்ளனர். ஆனால், படத்தில் காட்டப் படுவது போன்று அவர்கள் ஒரு தீர்மானகரமான சக்தியாக இல்லை.

இலங்கையில் புத்த பிக்குகளை, பேரினவாத அரசு தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள பயன்படுத்தியது. அப்படியானால் ஒரு பிரதமரான பண்டாரநாயக்கவை சுட்டதும் புத்த பிக்கு தானே என்று கேட்கலாம். அது ஒரு தனிநபர் சம்பந்தப்பட்ட சதி. அதன் பின்னணியில் சிஐஏ இருந்திருக்கலாம் என நம்பப் படுகின்றது. இன்று வரையில் பண்டாரநாயக்க கொலை தொடர்பான மர்மங்கள் துலங்கவில்லை. அது தொடர்பான விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டன.

 

மேதகு படத்தில் வரும் புத்த பிக்குகள் என்ன மொழி பேசுகிறார்கள் என்பது புரியவில்லை. நிச்சயமாக அது சிங்களம் அல்ல! படத் தயாரிப்பாளர்கள் சிங்களம் மாதிரி ஒரு புதிய மொழியை உருவாக்கி விட்டிருக்கிறார்கள்!! அது என்ன? பாளியா? தெலுங்கா? சமஸ்கிருதமா? ஆண்டவனுக்கே வெளிச்சம்! பண்டாரநாயக்கவுக்கு ஆங்கிலம் முதல் மொழி தான். ஆனால், அவரது மனைவி சிறிமாவோவும் ஆங்கிலத்தில் உரையாடுவது மாதிரிக் காட்டி இருப்பது படத்துடன் ஒட்டவில்லை.

பண்டா - செல்வா ஒப்பந்தம் ஸ்ரீ எதிர்ப்பு கலவரத்திற்கு பிறகு வந்தது. இங்கே அவை இரண்டும் கால வரிசை மாற்றிக் காண்பிக்கப் படுகின்றன. 1958 ம் ஆண்டு பிரதமராக தெரிவான பண்டாரநாயக்க சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வந்தார். தமிழரசுக் கட்சியினர் அதை எதிர்த்து போராட்டம் நடத்தினர். சிங்கள சிறியை தார் பூசி அழித்தனர். அதற்கு எதிராக சிங்கள இனவாதிகள் ஸ்ரீ பாதுகாப்பு கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது தான் படத்தில் காட்டப்பட்டது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. கலவரக் காலத்தில் தமிழரின் முதுகில் கத்தியால் ஸ்ரீ எழுதியமை, தமிழ்க் கடைகளை உடைத்தமை போன்ற கொடுமைகள் தென்னிலங்கையில் மட்டுமே நடந்துள்ளன. அப்போது வடக்கு அமைதியாக இருந்தது.

வடக்கு- கிழக்கில் தமிழை நிர்வாக மொழியாக்கும் பண்டா - செல்வா ஒப்பந்தத்தை பண்டாரநாயக்க தானாக கிழித்தெறியவில்லை. அதற்கான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. குறிப்பாக புத்த பிக்குகள் மட்டுமல்லாது, எதிர்கட்சியான யு.என்.பி. யும் கடுமையான அழுத்தங்களை பிரயோகித்தன. படத்தில் எதிர்க்கட்சி பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. இந்தியா மாதிரி, இலங்கையும் ஆளும் கட்சிகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டியால் பாதிக்கப்பட்ட நாடு தான்.

பெரும்பான்மை சிங்களவர்களின் அரசியல் பற்றி இந்தப் படத்தில் எதுவுமே பேசப் படவில்லை. ஆளும் வர்க்கம் தவறாக கையாண்ட பிரச்சினைகள் பற்றியும் எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. அனைவரும் தமிழர்களை ஒடுக்குவதில் மட்டும் குறியாக இருந்ததாக ஒரே முனைப்பான அரசியல் பேசுகின்றது. இலங்கை அரசியல் நிலவரம் அந்தளவு கருப்பு - வெள்ளை அல்ல. இது குறித்த புரிதல்கள், இந்தப் படத்தை எடுத்தவர்களுக்கு இருந்திருக்குமா என்பதே சந்தேகம் தான்.

சிங்களம் மட்டும் சட்டம் முதல், தரப்படுத்தல் வரை பெரும்பான்மை சிங்கள மக்களை திருப்திப் படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்டன. அதிலும் தரப்படுத்தல் மாவட்ட வாரியாக செயற்படுத்தப் பட்டது. இந்தியாவில் இட ஒதுக்கீடு போன்று பின்தங்கிய மாவட்ட இளைஞர்களுக்கு வாய்ப்பளித்தது. இதனால் தமிழர்களில் ஒரு பகுதியினரும் நன்மை அடைந்தனர். இருப்பினும் பெரும்பான்மை சிங்களவர்கள் அதிக இலாபம் அடைந்தனர் என்பதை மறுக்க முடியாது.

துரையப்பா பற்றிய காட்சிகளிலும் அதீத மிகைப்படுத்தல்கள் உள்ளன. அவர் மேயர் வேலையை விட்டு விட்டு தமிழரசுக் கட்சியை ஒழிப்பது தான் தனது இலட்சியம் போன்று நடந்து கொண்டதாக காட்டுகிறார்கள். தமிழாராய்ச்சி மகாநாட்டில் போலிஸ் கரண்ட் கம்பிகளை அறுத்து விட்டு சிலரை சுட்டுக் கொன்று விட்டு, அந்தக் கொலைகளை விபத்து மாதிரி நடத்தி இருந்தது. அது திட்டமிடப்பட்ட கொலைகள் தான். ஆனால் படத்தில் காட்சிப் படுத்தப் பட்டது மாதிரி போலிஸ் சுற்றிவளைத்து பிடித்து அடித்துக் கொல்லவில்லை.

 

துரையப்பா சிறிமாவோவின் SLFP கட்சிக்காரர் தான். ஆனால், தமிழரசுக் கட்சியை இல்லாதொழிக்கும் நோக்கம் எதுவும் அன்றைய அரசுக்கு இருக்கவில்லை. அதற்கு மாறாக தமிழரசுக் கட்சியினர் துரையப்பாவை துரோகி என்று சாடி வந்தனர். அதற்குக் காரணம் தமிழாராய்ச்சி மகாநாட்டுக் கொலைகள் மட்டுமல்ல. தனிப்பட்ட அரசியல் பழிவாங்கலும் காரணம். 

அன்றைய காலங்களில் ஆயுதப் போராட்டத்தில் நாட்டம் கொண்ட பிரபாகரன் போன்ற இளைஞர்கள், தமிழரசுக் கட்சியினரின் கையாட்கள் போன்றே செயற்பட்டனர். துரையப்பா கொலையில் அந்தக் கட்சிக்கும் பங்கிருந்தது. ஆரம்ப காலத்தில் குறிப்பிட்ட சில வருடங்கள், தமிழரசுக் கட்சிக்கும் ஆயுதபாணி இளைஞர்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்து வந்தன. அவர்கள் அரசியல் தலைமைத்துவம் கொடுப்பதென்றும், இவர்கள் இராணுவத் தாக்குதல்கள் நடத்துவதென்றும், எழுதப்படாத ஒப்பந்தம் இருந்து வந்தது.

http://kalaiy.blogspot.com/2021/06/blog-post_26.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, nunavilan said:

இலங்கை என்ற தமிழ்ச் சொல் எப்போதும் பாவனையில் இருந்து வந்த போதிலும், படத்தில் எதற்காக சிலோன் என்று வலிந்து திணிக்கிறார்கள் என்று தெரியவில்லை. போலீஸ்காரரின் பட்டியில் கூட சிலோன் போலிஸ் என்று இருக்கிறது. அப்படி எந்தக் காலத்திலும் வந்த சீருடையிலும் இருக்கவில்லை.

சிறிலங்கா என பெயர் மாற முன்னம் அப்படிதானே இருந்திருக்கும் ?

42 minutes ago, nunavilan said:

இலங்கையில் இனப்பிரச்சினைக்கு மூலகாரணம் புத்த பிக்குகள் என்பது போலவும், அவர்கள் தான் தேசத்தை ஆள்கிறார்கள் என்பது போலவும் சித்தரிக்கப் படுகின்றனர். அவர்களை கொடூரமான வில்லன்களாக காட்டுகிறார்கள். உண்மையில் புத்த பிக்குகளில் இனவாதிகள் (எல்லோரும் அல்ல) இருந்த போதிலும், அவர்கள் எப்போதும் அரசின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டவர்களாக இருந்தனர். தமிழ்நாட்டில் சங்கராச்சாரியார், நித்தியானந்தா மாதிரி அரசியலில் தலையிட்டுக் கொண்டிருக்கும் பௌத்த மதகுருக்கள் இன்னும் உள்ளனர். ஆனால், படத்தில் காட்டப் படுவது போன்று அவர்கள் ஒரு தீர்மானகரமான சக்தியாக இல்லை.

மிக தவறான பார்வை. ஒவ்வொரு முறை மஹாவம்ச மனோநிலையில் இருந்து கொஞ்சமேனும் அரசியல்வாதிகள் விலக எத்தனித்தபோதும் அதை மீளவும் கட்டுக்கு இழுத்து வருபவர்கள் பிக்குகள்.

இது தூட்டு காமினிக்கு முன்பிருந்து வரும் வரலாறு. கலையரசன் அரசியல்வாதிகள் மேல் பழியை போட்டு பெளத்த-சிங்கள பேரினவாததுக்கு வெள்ளை அடிக்கிறார். அவர் அரசியல் அது. ஆனால் படம் காட்டியதுதான் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

உலக அளவில் டிவிட்டரில் டிரெண்ட்டாகி இருக்க வேண்டிய #மேதகு இந்திய அளவில் 38 ஆவது இடம் வரைதான் வர முடிந்தது 😞.

review கேட்டபின்னர் தான் இந்தியாவில் பலரும் பார்க்கிறார்கள். ஆகவே 38ல் இருந்து மேலே ஏறும்.

ஆனால்... bs ஆப்ஸ், புலம் பெயர் நாடெங்கும் தரவிறக்கம் செய்யப்படுகின்றது என்பதால், மகிழ்ந்து போன அந்த தளம், சில வசதிகளை செய்கிறதாம். 
 

  • கருத்துக்கள உறவுகள்
On 25/6/2021 at 23:01, goshan_che said:

நான் பார்த்த முறை

1. லேப்டாப்பில் கூகிள் குரோம் வெப் பிரவுசரை  தரவிறக்கவும்.

large.5D7FAB71-900F-4E28-BD1E-BD6253A2FB33.jpeg.bc0df36d37fbcdd08a0578a6c70ee605.jpeg

2. பின்னர் www.bsvalue.com என்ற முகவரிக்கு போகவும்.

3. அங்கே இப்படி ஒரு ஸ்கிரீன் வரும்.

large.74CA1C1E-14FD-4BA2-96A0-DBB923F09ED5.jpeg.f5146a20c0c1490362229e41b473b427.jpeg

4. இதில் உங்கள் நாட்டை தெரிவு செய்து, மொபைல் இலக்கத்தை கொடுக்கவும். 

5. உங்கள் மொபைலுக்கு ஒரு நாலு இலக்க கோட் டெக்ஸ்ட் மெசேஜாக வரும்.

6. ஸ்கிரீனில் அடுத்துவரும் பெட்டியில் அந்த கோடை இட்டு, உங்கள் பெயர் கொடுத்து ரிஜெஸ்டிரேசனை பூர்த்தியாக்கவும். 

7. ரெஜிஸ்ரேசன் பூர்த்தியானதும் இந்த ஹோம் ஸ்கிரீன் வரும்.

large.32D81B7F-E27D-4B2E-902F-401061A7DA90.jpeg.243102a27a81e35824d60daed36e6787.jpeg

8. இதில் படத்தின் மேல் கிளிக் பண்ணினால் - உங்கள் மொமபைல், இமெயில் இவற்றுடன் கிரெடிட் கார்ட் தகவலையும் கேட்கும். அவற்றை கொடுத்து அழுத்தினால் - மீண்டும் 7 இல் உள்ள ஹோம் ஸ்கிரீன் வரும்.

9. அதில் போய் படத்தை அழுத்தினால் படம் ஓடத்தொடங்கும். படம் லோட் ஆக கொஞ்சம் நேரம் எடுக்கலாம்.

தங்கள் விமர்சனம் படம் பார்க்கும் ஆவலைத்தூண்டுகிறது.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, புலவர் said:

தங்கள் விமர்சனம் படம் பார்க்கும் ஆவலைத்தூண்டுகிறது.

 

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் துப்பாக்கியை எடுத்த தருணம் | கிட்டு, இயக்குனர் 

 

நாயகன் குட்டிமணியுடன் நேர்காணல் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Nathamuni said:

review கேட்டபின்னர் தான் இந்தியாவில் பலரும் பார்க்கிறார்கள். ஆகவே 38ல் இருந்து மேலே ஏறும்.

ஆனால்... bs ஆப்ஸ், புலம் பெயர் நாடெங்கும் தரவிறக்கம் செய்யப்படுகின்றது என்பதால், மகிழ்ந்து போன அந்த தளம், சில வசதிகளை செய்கிறதாம். 
 

ஒற்றன் கொஞ்சம் ஓவரா புழுகிறார் போல கிடக்கு. மில்லியன் கணக்கில் பார்வையாளர் என்பது அதுவும் பணம் கட்டி சாத்தியாமாக தெரியவில்லை. அமேசன், நெட்பிளிக்ஸ் கலக்கத்தில் இருப்பதும் கூட இந்த வகைதான்.

ஆனால் தமிழர்களின் ஓடிடி தளம். இந்திய சென்சாரை மீறி நாம் படம் எடுக்கலாம் என்ற வழியை பி எஸ் வால்யு, கிட்டு காட்டியுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

போர்வாளின் அழகு அதன் கூர்மையே – தமிழன் வன்னிமகன்

June 27, 2021
 
Share
FB_IMG_1603291359087.jpg?resize=696%2C97
 42 Views

தமிழரின் ஒரு ஒப்பற்ற வரலாற்றின் தொடக்கத்தைக் கண்முன்னே நிறுத்தி, அதனை  எம்முள் ஆழமாய் பதித்துச் செல்கிறது  மேன்மைமிகு ‘மேதகு’

இனத்தின்  வரலாற்றை வருங்கால சந்ததிக்கு இலகுவாக எடுத்துச் செல்லக்கூடிய ஒரு எளிமையான படைப்பாய் இதனைப் பார்க்க முடிகிறது.

தமிழினத்தின் மேன்மைமிகு  வரலாற்றை, அதன் ஒப்பற்ற மொழியை, பண்பாட்டுக் கலாச்சார விழுமியங்களைச் சிதைத்தழிக்கும் முயற்சியில் இன்று பல்வேறு தரப்புகள் தீவிரம் காட்டி நிற்கும் இந்த வேளையில், இனத்தின் இருப்புக்கான இதுபோன்ற படைப்புகள் தொடர்ந்தும் வெளிவர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இந்த திரைப்படம் வழமையான தமிழ் திரைப்பட ‘பாணியில்’ அல்லது ‘தரத்தில்’ இல்லை என சிலர்  விமர்சிக்கலாம்/ விசமிக்கலாம். இவர்களுக்கு நாம் சொல்வதெல்லாம்,

”போர்வாளின் அழகு அதன் கூர்மையே” ‘மேதகு’ ஒரு போர் வாள்.

 

https://www.ilakku.org/?p=53538

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

யாரவது சாம்சுங் டிவி யில் இதை தரவிறக்கம் செய்து பார்த்து வெற்றி கண்டு இருக்கிறீர்களா?
இருந்தால் எவ்வாறு என்று அறிய தாருங்கள் 
நான் முயன்றேன் முடியவில்லை 
டி வி யில் பி ஸ் வலுயு ஆப் வருக்குதில்லை 
(எனது டி வி யில் மட்டும்தான் இந்த கோளாறா என்று அறிய விரும்புகிறேன்) 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Maruthankerny said:

யாரவது சாம்சுங் டிவி யில் இதை தரவிறக்கம் செய்து பார்த்து வெற்றி கண்டு இருக்கிறீர்களா?
இருந்தால் எவ்வாறு என்று அறிய தாருங்கள் 
நான் முயன்றேன் முடியவில்லை 
டி வி யில் பி ஸ் வலுயு ஆப் வருக்குதில்லை 
(எனது டி வி யில் மட்டும்தான் இந்த கோளாறா என்று அறிய விரும்புகிறேன்) 

டிவியில் நேரடியாக bsvalue தரவிறக்கம் செய்ய முடியுமா? 

பெரும்பாலும் laptopல் தரவிறக்கம் செய்து HDMI cables உதவியுடன்தான் பார்க்கமுடியும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.. 

  • கருத்துக்கள உறவுகள்
இதுவரை வெளிவந்த ஈழம் சினிமாக்களில் "மேதகு" மிகச் சிறந்த "ஈழம் சினிமா" என்பேன்!
நான் "மேதகு" ஐ "ஈழம் சினிமா" எனச் சொல்வது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.
அவர்களுக்காக...
"ஈழம் சினிமா" இல் வரும் "ஈழம்" என்பது குறித்த ஒரு நிலப்பரப்பையோ அல்லது தேசத்தையோ குறிப்பதல்ல.
அது ஒரு குறியீடு மட்டுமே. அது ஒரு உணர்வு. அது ஒரு பிக்ஞை.
அந்த உணர்வு என்ன என்பதை நான் வார்த்தையால் சொல்ல வேண்டியதில்லை. அதற்கான வரவிலக்கணங்களும் தேவையில்லை.
அந்த உணர்வு நம் எல்லோரிடையும் பரவிக் கிடக்கிறது. அதற்கு வார்த்தை விளக்கம் தேவையில்லை. அந்த பிரஞையின் அடிப்படையில் நமது மக்கள் தாமாகவே ஈழம் சினிமாவை அடையாளம் கண்டு கொள்வார்கள்.
அடையாளம் காணத் தொடங்கி விட்டார்கள்.
அதனாற்தான் உலகெங்கும் வாழும் தமிழர்கள் "மேதகு" படத்தைக் கொண்டாடுகிறார்கள்.
திருட்டு வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்படுமளவுக்கு அது அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இது "மேதகு" இன் வெற்றி மட்டுமல்ல ஈழம் சினிமாவுக்கான பெரும் நம்பிக்கையையும் தருகிறது.
படத்தில் சில தவறான வரலாற்றுத் தகவல்கள் இருப்பதாக சிலரால் சொல்லப்பட்ட பொழுதிலும், அதையெல்லாம் தாண்டி மக்கள் "மேதகு" ஐ கொண்டாடுகிறார்கள். ஏனெனில் அதில் எந்தக் கள்ளத்தனமும் இல்லை. அது எம்மை வலுப்படுத்திகிறது. எமக்கு ஆறுதல் அளிக்கிறது.
"மேதகு" ஒரு ஈழம் சினிமா என்று சொல்வதற்குரிய மேலதிக காரணங்கள்:
இதன் நுட்பமான "திரைக்கதை".
ஆம் ஈழம் சினிமாக்களின் பலம் திரைகதையாக இருக்க வேண்டும். மதிநுட்பம் மிக்க திரைக்கதைகளின் ஊடாகவே நாம் வெற்றி பெற முடியும். அதை எங்களுக்கு இடித்துரைக்கிறது "மேதகு" .
குறைந்த வளம், சிறிய பட்ஜெட்.
ஆம் ஈழம் சினிமா எனபது ஒரு "கெரில்லாப் போர்முறை". குறைந்த அல்லது கிடைக்கக்கூடிய வளங்களைக் கொண்டு பெரும் தாக்குதலை மேற்கொள்வது. (குறுந்திரைப்பட உருவாக்கம் எமது சூழலில் அதற்கான ஒரு பயிற்சியாக இருக்க வேண்டும். அந்த வழியில் வந்தவர்தான். "மேதகு" இயக்குனர் கிட்டு அவர்கள்}
OTT Platform
ஆம் ஈழம் சினிமாக்கள், மாபியாக்களினதும், பெரும் முதலாளிகளினதும், அரசுகளினதும் (இலங்கை) பிடியில் இருக்கும் திரையரங்க வலையமப்பை உடைத்தெறியும் வல்லமை கொண்டவையாக இருக்க வேண்டும்.
சமரசமின்மை
ஆம், முதலீட்டுக்காகவோ, விருதுகளுக்காகவோ, நட்சத்திர நாயகர்களின் இமேஜ் ஐப் பேணுவதற்காகவோ, "சென்சார்" சான்றிதழுக்காகவோ சமரசம் செய்ய வேண்டிய அவசியம் அற்றவையாகவும் இருக்க வேண்டும் ஈழம் சினிமா. அதைச் செய்து காட்டியிருக்கிறது "மேதகு".
மக்கள் சினிமா
ஆம் "ஈழம் சினிமா" ஊர் கூடியிழுக்கும் தேர் என்பதை அடிக்கடி சொல்லி வருகிறேன். அதை நிரூபித்துள்ளது "மேதகு"
-ஒட்டு மொத்தத்தில் ஈழம் சினிமாவுக்கான வழியை எமக்கு தெளிவு படுத்தியுள்ள்து இந்த "மேதகு".
ஆதலால் அவன் "மேதகு" மட்டுமல்ல,
எம் "இறைவனே!"
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, விசுகு said:
"மேதகு".
ஆதலால் அவன் "மேதகு" மட்டுமல்ல,
எம் "இறைவனே!"

பிரபாகரனை பிடிக்காத  கோஷ்டிகள் மேதகு படம் எடுத்த விதம் சரியில்லையாம். நாய் கடி பூனை கடி நடக்குது.அதுதான் அங்கை பேஸ்புக்கு டிவிட்டர் பக்கங்களிலை.....😡

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

பிரபாகரனை பிடிக்காத  கோஷ்டிகள் மேதகு படம் எடுத்த விதம் சரியில்லையாம். நாய் கடி பூனை கடி நடக்குது.அதுதான் அங்கை பேஸ்புக்கு டிவிட்டர் பக்கங்களிலை.....😡

இதை எழுதியவர்

தாயகத்தில்  அதுவும் கொழும்பு  மற்றும்  மட்டக்களப்பிலிருந்து  எழுதுகிறார் அண்ணை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

யாரவது சாம்சுங் டிவி யில் இதை தரவிறக்கம் செய்து பார்த்து வெற்றி கண்டு இருக்கிறீர்களா?
இருந்தால் எவ்வாறு என்று அறிய தாருங்கள் 
நான் முயன்றேன் முடியவில்லை 
டி வி யில் பி ஸ் வலுயு ஆப் வருக்குதில்லை 
(எனது டி வி யில் மட்டும்தான் இந்த கோளாறா என்று அறிய விரும்புகிறேன்) 

👇 இந்த முறையில் அதே தரத்தில் பார்க்கலாம்.

Popular apps மட்டுமே ஸ்மாற்ட் டிவியில் அப்ஸ் வெளியிடுவார்கள் என நினைக்கிறேன். இது ஒரு ஸ்டார்டப்.

2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

டிவியில் நேரடியாக bsvalue தரவிறக்கம் செய்ய முடியுமா? 

பெரும்பாலும் laptopல் தரவிறக்கம் செய்து HDMI cables உதவியுடன்தான் பார்க்கமுடியும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.. 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, விசுகு said:

இதை எழுதியவர்

தாயகத்தில்  அதுவும் கொழும்பு  மற்றும்  மட்டக்களப்பிலிருந்து  எழுதுகிறார் அண்ணை

பதிவை வாசித்துகொண்டிருக்கும் போதே அடா என்ன தெளிவான பார்வை என்று நினைத்து லிங்கை தட்டினால் - தெரிஞ்ச ஆள்தான்😎.

இவரும் ஒரு அற்புதமான திரைப்பட இயக்குனர்தான். இன்னொரு மேதகுவை எடுக்கும் அளவுக்கு திறைமையுண்டு. தமிழர் பாரம்பரிய கலைகளிலும் பேரார்வம் உள்ளவர்.

முடிந்தால் யாழுக்கு கூட்டி வாருங்கள்.

38 minutes ago, விசுகு said:
 "ஈழம்" என்பது குறித்த ஒரு நிலப்பரப்பையோ அல்லது தேசத்தையோ குறிப்பதல்ல.
அது ஒரு குறியீடு மட்டுமே. அது ஒரு உணர்வு. அது ஒரு பிக்ஞை.

ஈழம் இஸ் எ பீலிங். ஐ லைக் இட்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

👇 இந்த முறையில் அதே தரத்தில் பார்க்கலாம்.

Popular apps மட்டுமே ஸ்மாற்ட் டிவியில் அப்ஸ் வெளியிடுவார்கள் என நினைக்கிறேன். இது ஒரு ஸ்டார்டப்.

 

எந்த முறையில்?

லேப்டாப்பில் தரையிறங்கி 
டிவியில் கோனெக்ஷனா?

இனி அதுதான் செய்ய போகிறேன் 
நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்

தரவிறக்கம் செய்வதை தடுத்துள்ளார்கள் மருதர்.
கணனியில் ஓடவிட்டு HDMI / ChromeCast மூலம் டிவியில் பார்க்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Sasi_varnam said:

தரவிறக்கம் செய்வதை தடுத்துள்ளார்கள் மருதர்.
கணனியில் ஓடவிட்டு HDMI / ChromeCast மூலம் டிவியில் பார்க்கலாம். 

ஓகே நன்றிகள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Maruthankerny said:

எந்த முறையில்?

லேப்டாப்பில் தரையிறங்கி 
டிவியில் கோனெக்ஷனா?

இனி அதுதான் செய்ய போகிறேன் 
நன்றி. 

மேலே சசி சொன்னது போல். லேப்டாப்பில் ஸ்டிரீம் பண்ணி அதை hdmi/chrome casting மூலம்  டிவியில் மிரர் பண்ணுவது

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
On 27/6/2021 at 00:20, goshan_che said:

 

தயவு செய்து BS Value OTT தளத்தில் மட்டும் பார்க்கவும்.

வேறு எங்கும் திருட்டு கொப்பி வந்தால் ரிப்போர்ட் அடிக்கவும்🙏🏾

நேற்று எனது நட்புவட்டதின் WhatsAppலும் ஒரு link அனுப்பியிருந்தார்கள்..இன்னமும் இப்படி எத்தனை வருகிறதோ தெரியவில்லை..

9 hours ago, Maruthankerny said:

யாரவது சாம்சுங் டிவி யில் இதை தரவிறக்கம் செய்து பார்த்து வெற்றி கண்டு இருக்கிறீர்களா?
இருந்தால் எவ்வாறு என்று அறிய தாருங்கள் 
நான் முயன்றேன் முடியவில்லை 
டி வி யில் பி ஸ் வலுயு ஆப் வருக்குதில்லை 
(எனது டி வி யில் மட்டும்தான் இந்த கோளாறா என்று அறிய விரும்புகிறேன்) 

8 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

டிவியில் நேரடியாக bsvalue தரவிறக்கம் செய்ய முடியுமா? 

பெரும்பாலும் laptopல் தரவிறக்கம் செய்து HDMI cables உதவியுடன்தான் பார்க்கமுடியும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.. 

 

மன்னிக்கவும .. laptopல் தரவிறக்கம் செய்யலாம் என பிழையாக எழுதிவிட்டேன்.. ஆனால் சசிவர்ணம் கூறியபடிதான் பார்க்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
On 26/6/2021 at 22:52, goshan_che said:

இந்த பாடலில் வரும் மீதி வரிகள் காசி ஆனந்தன் உடையது என நினைக்கிறேன்.

இந்தப்பாடலின் மீதிவரிகள் காசி ஆனந்தன் அவர்களுடயதா தெரியவில்லை.. படத்திலும் அப்படி பார்த்த நினைவு இல்லை..அதே போல இந்த வீடியோவில் பாடலாசிரியர்களை குறிப்பிட்டுள்ளார்கள்..

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.