Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

நாம் அன்றாடம் வீசி  எறியும் தேங்காய் தண்ணீர் மற்றும் இளநீருக்கு வெளிநாட்டு சந்தையில் மிக அதிக தேவை உருவாகி வருவதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்போதும், இந்த நாட்டில் இளநீரை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை வெற்றிகரமாக நடந்து வருகிறது, ஆனால் தேங்காய் தண்ணீரை பொதி செய்து விற்பதில் கவனம் செலுத்துவதில்லை.

நாட்டின் மொத்த தேங்காய் உற்பத்தியில், உள்நாட்டு நுகர்வு தவிர, பெரும்பாலான தேங்காய்கள் கொப்பரை உற்பத்தித் தொழிலுக்கு பயன்படுத்தப்படுகின்றன. அதிக அளவு தேங்காய் தண்ணீர் வீணாகிறது என்று தென்னை ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்துள்ளது.

வெளிநாட்டு சந்தையில், தேங்காய் நீர் ஒரு ஆற்றல் பானமாக விற்கப்படுகிறது, மேலும் ஒரு லிற்ற ர் தேங்காய் தண்ணீர் கொண்ட ஒரு பொதி வெளிநாட்டு சந்தையில் 4-5 அமெரிக்க டொலர்களுக்கு விற்கப்படுகிறது.
எனவே, பயன்படுத்தாமல் தூக்கி எறியப்படும் தேங்காய் நீரை பொதி செய்து அந்நியச் செலாவணியை ஈட்ட வாய்ப்பு உள்ளதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிடுகிறது. மேலும், தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம், பேக்கேஜிங்கில் இருந்து ஏற்றுமதி சந்தைக்கு செல்வதற்கு தேவையான அறிவை ஏற்கனவே தனது நிறுவனம் வழங்கி வருவதாக தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/251840

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஏராளன் said:

நாம் அன்றாடம் வீசி  எறியும் தேங்காய் தண்ணீர் மற்றும் இளநீருக்கு வெளிநாட்டு சந்தையில் மிக அதிக தேவை உருவாகி வருவதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேங்காய் தண்ணீருக்கும் இளநீருக்கும் என்ன வித்தியாசம்?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, குமாரசாமி said:

தேங்காய் தண்ணீருக்கும் இளநீருக்கும் என்ன வித்தியாசம்?

இளநி முற்றாத தேங்காய்த் தண்ணி, தேங்காய்த் தண்ணி முற்றின இளநி!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ஏராளன் said:

இளநி முற்றாத தேங்காய்த் தண்ணி, தேங்காய்த் தண்ணி முற்றின இளநி!

எங்களுக்கு எல்லாம் இளநீர் தான்....:beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ஏராளன் said:

இளநி முற்றாத தேங்காய்த் தண்ணி, தேங்காய்த் தண்ணி முற்றின இளநி!

பூ என்றும் சொல்லலாம்......புஷ்பம் என்றும் சொல்லலாம்.....என்கிறமாதிரி ஏதேதோ சொல்லுறீங்கள் நாங்கள் கேட்பம்.......!  😂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, suvy said:

பூ என்றும் சொல்லலாம்......புஷ்பம் என்றும் சொல்லலாம்.....என்கிறமாதிரி ஏதேதோ சொல்லுறீங்கள் நாங்கள் கேட்பம்.......!  😂

செவ்விளநியை சொல்லவில்லை. உங்கள் அனுபவங்களுக்கு முன்னால் நான் தவழும் குழந்தை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, suvy said:

பூ என்றும் சொல்லலாம்......புஷ்பம் என்றும் சொல்லலாம்.....என்கிறமாதிரி ஏதேதோ சொல்லுறீங்கள் நாங்கள் கேட்பம்.......!  😂

நான் ஊரில் இருக்கும் வரைக்கும் யாரும் தேங்காய் தண்ணீர் என்று சொன்னதாக அறியவில்லை. அதே போல் கண்ணீர் வருவதை கண்ணிலிருந்து தண்ணீர் வருகின்றது  என்று சொன்னதும் இல்லை.:face_with_tears_of_joy:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் அங்கு போயிருந்தபோது கைலாசபிள்ளையார் கோயிலடியில் ஒரு வியாபாரியிடம் செவ்விளநீர் குலையை கண்டு சரியான கெடுவோடு (ஆசைக்கும் மேல்) அவர் 150 ரூபா என்பதையும் காதில் வாங்காமல் ஒன்று வாங்கிக் குடித்தேன்.எனக்கு இளநி ஆசையே போய் விட்டது.ஒரு ருசியே இல்லை. அதை விட என்ர  வீட்டுக்  கிணத்துத் தண்ணி திறம்......!  😁

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்ப செவ்விளநி 180ரூபாய்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழனுக்கு மிளகாயை, உருளைக்கிழங்கு, தக்காளியை தென் அமெரிக்காவில் இருந்து கொண்டு வந்து சேர்த்த போர்த்துகேயன், இங்கிருந்து மிளகு, மாங்காய், வாழைப்பழத்தினை கொண்டு போய் சேர்த்து விட்டான்.

இப்போது பெரிய அங்காடிகளில், மாம்பழம் இரண்டு உள்ள பொதி, இரண்டு பவுனுக்கு விக்கிறார்கள். பொதுவாக, பெரு, ஜவேரி கோஸ்ட் போன்ற நாடுகளில் இருந்து வருகிறது. 

வாழைப்பழம், ஐரோப்பா, அமெரிக்கா முழுவதுக்கும், இந்த தென் அமெரிக்கா நாடுகளே அனுப்புகிறது. மிளகு பயிர்செய்கையில், பிரேசில் மிக வேகமாக முன்னேறி வருகிறது.

நம்ம நாடு.... புத்த கோவிலை கட்டு.... 
விடாதே... கட்டு சிவன் கோவிலை..... என்று இருக்க வேண்டியது தான்.     

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஏராளன் said:

இளநி முற்றாத தேங்காய்த் தண்ணி, தேங்காய்த் தண்ணி முற்றின இளநி!

இளநீர்   சுவையானது    வழுக்கலும்.  கையால் சுரண்டி  சாப்பிட முடியும்  சுவையும்கூட  அதன் கீழ் பகுதியையும். சாப்பிடாலம்.     ...இந்த பகுதி முற்றும் போது தேங்காய் ஓடாக மாறும்         தேங்காய் நீர் இளநீரை விட காசாப்பனாது.   வழுக்கல்  போல். தேங்காய் சொட்டு அதிகம் சாப்பிட முடியாது  .....இன்னும் முற்றும் போது   கோப்புறா.  ஆக மாறிவிடும்.  அங்கே நீர் எதுவும் இருக்காது   

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Nathamuni said:

தமிழனுக்கு மிளகாயை, உருளைக்கிழங்கு, தக்காளியை தென் அமெரிக்காவில் இருந்து கொண்டு வந்து சேர்த்த போர்த்துகேயன், இங்கிருந்து மிளகு, மாங்காய், வாழைப்பழத்தினை கொண்டு போய் சேர்த்து விட்டான்.


 

ஆன்டவா😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
34 minutes ago, சுவைப்பிரியன் said:

ஆன்டவா😂

இருக்கிற சோலி காணாதெண்டு   அந்தாளை ஏன் கூப்புடுறியள்? :rolling_on_the_floor_laughing:

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, சுவைப்பிரியன் said:

ஆன்டவா😂

 

51 minutes ago, குமாரசாமி said:

இருக்கிற சோலி காணாதெண்டு   அந்தாளை ஏன் கூப்புடுறியள்? :rolling_on_the_floor_laughing:

இவர் எங்களுக்கு சொல்லாம, ஊரிலை, கிளிநொச்சியில ஏதோ விவசாயம் செய்கிறார்.

ஆண்டவா, நல்ல விளைச்சலை தா.... சுவிஸுக்கு ஏத்தோணும் எண்டு கும்புடுறார்.😁🙏

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இளம் தேங்காயின் நீர் இளநீர் 

முற்றிய தேங்காயின் நீர் தேங்காய்த் தண்ணீர் (இது சுவையற்றது. சத்துக்கள்தேங்கயாலுறிஞ்ச பட்டிருக்கும்     )

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, சுவைப்பிரியன் said:

ஆன்டவா😂

இளநீருக்கு வந்த சோதனையை பார்த்தீர்களா கடவுளே

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Nathamuni said:

 

இவர் எங்களுக்கு சொல்லாம, ஊரிலை, கிளிநொச்சியில ஏதோ விவசாயம் செய்கிறார்.

ஆண்டவா, நல்ல விளைச்சலை தா.... சுவிஸுக்கு ஏத்தோணும் எண்டு கும்புடுறார்.😁🙏

நாதம். ...நீங்கள் சொன்ன ஆண்டவா.  இறைவனை குறிக்கும்......சுவைப்பிரியன்    சொன்ன.....ஆன்டவா......ரணில்    குறிக்கும்    🤣🤣 அதாவது  ஆட்சி செய்பஙர்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கைத் தொலைபேசியில் திரி மாறி பதிந்தாச்சு..வாறேன்..

Edited by யாயினி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, suvy said:

நான் அங்கு போயிருந்தபோது கைலாசபிள்ளையார் கோயிலடியில் ஒரு வியாபாரியிடம் செவ்விளநீர் குலையை கண்டு சரியான கெடுவோடு (ஆசைக்கும் மேல்) அவர் 150 ரூபா என்பதையும் காதில் வாங்காமல் ஒன்று வாங்கிக் குடித்தேன்.எனக்கு இளநி ஆசையே போய் விட்டது.ஒரு ருசியே இல்லை. அதை விட என்ர  வீட்டுக்  கிணத்துத் தண்ணி திறம்......!  😁

செவ்விளனியை நம்பேலாது, சுவியர்..! சிங்களப்பக்கமிருந்து வாற இளனி இன்னும் மோசம்..!

தீவுப் பக்க இளனிகள் அந்த மாதிரி இருக்கும்..!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, புங்கையூரன் said:

செவ்விளனியை நம்பேலாது, சுவியர்..! சிங்களப்பக்கமிருந்து வாற இளனி இன்னும் மோசம்..!

தீவுப் பக்க இளனிகள் அந்த மாதிரி இருக்கும்..!

என்ன இப்படி சொல்லிப்புட்டியள்...

சிங்களத்துப்பக்கமும் அந்த மாதிரி இளனிகள் இருக்கே.... 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
55 minutes ago, Nathamuni said:

என்ன இப்படி சொல்லிப்புட்டியள்...

சிங்களத்துப்பக்கமும் அந்த மாதிரி இளனிகள் இருக்கே.... 😁

SRI LANKA STREET FOOD King Of Coconuts!! HUNGRY SRI LANKAN Food Trip To  Anuradhapura! | primewatersolution.in

நாதத்துக்கு ஒரு இளநி ..........!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Nathamuni said:

என்ன இப்படி சொல்லிப்புட்டியள்...

சிங்களத்துப்பக்கமும் அந்த மாதிரி இளனிகள் இருக்கே.... 😁

 

4 minutes ago, suvy said:

SRI LANKA STREET FOOD King Of Coconuts!! HUNGRY SRI LANKAN Food Trip To  Anuradhapura! | primewatersolution.in

நாதத்துக்கு ஒரு இளநி ..........!  😂

ஐயோ விடியக்காலைமையே வைச்சு கொல்லுறானுகளே...:rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, புங்கையூரன் said:

செவ்விளனியை நம்பேலாது, சுவியர்..! சிங்களப்பக்கமிருந்து வாற இளனி இன்னும் மோசம்..!

தீவுப் பக்க இளனிகள் அந்த மாதிரி இருக்கும்..!

 

1 hour ago, Nathamuni said:

என்ன இப்படி சொல்லிப்புட்டியள்...

சிங்களத்துப்பக்கமும் அந்த மாதிரி இளனிகள் இருக்கே.... 😁

 

11 minutes ago, suvy said:

SRI LANKA STREET FOOD King Of Coconuts!! HUNGRY SRI LANKAN Food Trip To  Anuradhapura! | primewatersolution.in

நாதத்துக்கு ஒரு இளநி ..........!  😂

 

6 minutes ago, குமாரசாமி said:

ஐயோ விடியக்காலைமையே வைச்சு கொல்லுறானுகளே...:rolling_on_the_floor_laughing:

 

அழகி ஒருத்தி இளநி விக்கிற  கொழும்பு வீதியிலே
அக்கா மவன்  கண்ண அடிச்சான்..
மாமன் காரன் கைய புடிச்சான்.. 
🤣



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலிக்கு.  
    • தமிழின் சிறப்பு எது . .......!  😁
    • ஆர்.ஜே. பாலாஜி நடித்த  சொர்க்கவாசல் திரைப்படம் பார்த்தேன். சிறைச்சாலைக்குள்ளேயே கதை சுற்றிக் கொண்டிருந்தாலும் அலுப்பு ஏற்படவில்லை.  ஒவ்வொருவராக கதை சொல்ல, படம் ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்தாலும்  இறுதிவரை அடுத்து என்ன என்று எதிர்பார்க்க வைக்கிறது. செல்வராகவன்,கருணாஸ், நட்டி ஆகியோருடன் ஷோபா சக்தியும் நடித்திருக்கிறார். ஈழத்து சீலன் பாத்திரம் ஷோபா சக்திக்கு. ஈழத் தமிழ் பேச்சில் அவரது நடிப்பு நன்றாகவே இருந்தது. திரைப்படம் ஆஹா ஓஹோ  என்றில்லாவிட்டாலும் பார்க்கக் கூடிய படம்.
    • இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி🍰
    • சிரியாவில் இருந்து தனது இராணுவத்தை மீளப் பெறும் ரஷ்யா December 15, 2024 12:45 pm ரஷ்யா வடக்கு சிரியாவின் முன்னணிப் பகுதிகளிலிருந்தும், அலவைட் மலைகளில் உள்ள நிலைகளிலிருந்தும் தனது இராணுவத்தை மீளப் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு சிரியாவில் உள்ள அதன் இரண்டு முக்கிய தளங்களை விட்டு வெளியேறவில்லை என்று நான்கு சிரிய அதிகாரிகள் ரொயிட்டர்ஸிடம் உறுதிப்படுத்தியுள்ளனர். ரஷ்யாவுடன் நெருங்கிய கூட்டணியை உருவாக்கிய அசாத்தின் ஆட்சிக்கவிழ்ப்பு, ரஷ்யாவின் தளங்களான லடாகியாவில் உள்ள ஹ்மெய்மிம் விமானத் தளம் மற்றும் டார்டஸ் கடற்படை தளத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. வெள்ளிக்கிழமை செயற்கைக்கோள் காட்சிகள், ஹ்மெய்மிம் தளத்தில், திறந்த நிலையில், ஏற்றத் தயாராகி வரும் நிலையில், குறைந்தது இரண்டு அன்டோனோவ் AN-124 விமானங்கள் இருப்பதைக் காட்டுகிறது. சனிக்கிழமை லிபியாவிற்கு குறைந்தது ஒரு சரக்கு விமானம் பறந்ததாக, சிரிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரஷ்யர்களுடன் தொடர்பு கொண்ட சிரிய இராணுவ மற்றும் பாதுகாப்பு வட்டாரங்கள், மொஸ்கோ தனது படைகளை முன் வரிசைகளில் இருந்து பின்வாங்கி, சில கனரக உபகரணங்களையும் மூத்த சிரிய அதிகாரிகளையும் திரும்பப் பெறுவதாக ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தன. ஆனால், நிலைமையின் தீவிரம் காரணமாக பெயர் குறிப்பிட விரும்பாத அந்த வட்டாரங்கள், ரஷ்யா தனது இரண்டு முக்கிய தளங்களிலிருந்து வெளியேறவில்லை என்றும், தற்போது அவ்வாறு செய்யும் எண்ணம் இல்லை என்றும் கூறின. சில உபகரணங்கள் மொஸ்கோவிற்குத் திருப்பி அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய இடைக்கால நிர்வாகத்திற்கு நெருக்கமான மூத்த கிளர்ச்சி அதிகாரி ஒருவர், சிரியாவில் ரஷ்ய இராணுவ இருப்பு மற்றும் அசாத் அரசாங்கத்திற்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான கடந்தகால ஒப்பந்தங்கள் பற்றிய பிரச்சினை விவாதிக்கப்படவில்லை என்று ரொய்ட்டர்ஸிடம் கூறினார். “இது எதிர்கால பேச்சுவார்த்தைகளுக்கான விஷயம், சிரிய மக்களே இறுதி முடிவை எடுப்பார்கள்” என்று அந்த அதிகாரி கூறினார். “எங்கள் படைகள் இப்போது லடாகியாவில் உள்ள ரஷ்ய தளங்களுக்கு அருகில் உள்ளன,” என்று அவர் மேலும் கூறினார். தளங்கள் குறித்து சிரியாவின் புதிய ஆட்சியாளர்களுடன் ரஷ்யா விவாதித்து வருவதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது. சிரியாவின் புதிய ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், ரஷ்யா அதன் தளங்களிலிருந்து விலகவில்லை என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு ரஷ்ய வட்டாரம் தெரிவித்துள்ளது.     https://oruvan.com/russia-to-withdraw-its-troops-from-syria/
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.