Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சோழர்காலத்தில் கட்டப்பட்ட உருத்திரபுரீஸ்வரர் சிவாலயக் காணியிலும் தொல்பொருட்களாம் !!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சோழர்காலத்தில் கட்டப்பட்ட உருத்திரபுரீஸ்வரர் சிவாலயக் காணியிலும் தொல்பொருட்களாம் !!

சோழர்காலத்தில் கட்டப்பட்ட உருத்திரபுரீஸ்வரர் சிவாலயக் காணியிலும் தொல்பொருட்களாம் !!

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயம் அமைந்துள்ள காணியில் தொல்பொருட்கள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் அடையாளப்படுத்தியுள்ளது.

இந்துக்களின் பொற்காலமாகக் கருதப்படும் சோழர்காலத்தில் முற்றுமுழுதாக திராவிடக் கட்டடக் கலைமரபை பின்பற்றி உருத்திரபுரீஸ்வரர் சிவாலயம் கட்டப்பட்டது.

வரலாற்றுத் தொன்மையும், பழமையும் வாய்ந்த சிவாலயத்தை அபகரிப்பதற்கான முயற்சிகள் தொல்பொருளியல் திணைக்களத்தினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் உருத்திரபுரஸ்வரபுரம் ஆலயம் அமைந்துள்ள காணியில் புராதன தொல்லியல் சின்னங்கள் அமைந்துள்ளதாக தொல்லியல் திணைக்களம் கூறியுள்ளது.

ஆகவே குறித்த நிலப்பரப்பினை எல்லைப்படுத்தும் நடவடிக்கையை எதிர்வரும் 18 ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானித்து கரைச்சி பிரதேச சபையினால் அறிக்கையும் கையளிக்கப்பட்டுள்ளது.

Fv5wWcaaMAEbCvA-1-510x600.jpg

https://athavannews.com/2023/1331714

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'Nwm Sata STOP!! Ineed my Tamil Votes!'

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் வீட்டிலும் கிண்டிப்பார்க்கலாம் ஏதாவது அகப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

திருக்கேதீஸ்வரம் ஆலயத்திட்கு அருகில் மிகப்பெரிய தாதுகோபுர விகாரை கடடபட்டுள்ளது. சில வருடங்களுக்கு முன்னர்தான் கட்டினார்கள். இந்த விகாரையை சுற்றிலுமிருந்து விரைவில் சோழர் காலத்துக்கு முந்திய கால பவுத்த சின்னங்களை விரைவில் எடுப்பார்கள். இதுதான் இங்குள்ள நிலைமை. இதுபற்றி சில காலத்துக்கு முன்னரும் இதனை பதிவிட்டிருந்தேன்.
சச்சி ஐயாவுக்கு நடப்பதெல்லாம் தெரியுமோ தெரியவில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Cruso said:

ஏன் சச்சியரை தவிர வேறொரு ஆம்பிளையும் இல்லையா? 

எதற்கெடுத்தாலும் சச்சியரை தேடுவதே  வழமையாகி விட்டது.

சச்சியர் கிறீஸ்தவ மத மாற்றத்திற்கு எதிராக போராடுறார் என்ற பொறாமையா?

இதுதான் தமிழனின் சாபக்கேடு,,,, மற்றவனை சுலபமாக சந்தியில் இழுத்து அவனது தலையில் போட்டுவிட்டு தான் தப்பிக் கொள்வது..

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, MEERA said:

அதே...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

ஏன் சச்சியரை தவிர வேறொரு ஆம்பிளையும் இல்லையா? 

எதற்கெடுத்தாலும் சச்சியரை தேடுவதே  வழமையாகி விட்டது.

சச்சியர் கிறீஸ்தவ மத மாற்றத்திற்கு எதிராக போராடுறார் என்ற பொறாமையா?

இதுதான் தமிழனின் சாபக்கேடு,,,, மற்றவனை சுலபமாக சந்தியில் இழுத்து அவனது தலையில் போட்டுவிட்டு தான் தப்பிக் கொள்வது..

தமிழர்களின் பழக்க வழக்கங்களில் ஒன்று ஒதுங்கி நின்று கோர்த்து விட்டு வேடிக்கை பார்க்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

1) ஏன் சச்சியரை தவிர வேறொரு ஆம்பிளையும் இல்லையா? 

2) எதற்கெடுத்தாலும் சச்சியரை தேடுவதே  வழமையாகி விட்டது.

3) சச்சியர் கிறீஸ்தவ மத மாற்றத்திற்கு எதிராக போராடுறார் என்ற பொறாமையா?

4) இதுதான் தமிழனின் சாபக்கேடு,,,, மற்றவனை சுலபமாக சந்தியில் இழுத்து அவனது தலையில் போட்டுவிட்டு தான் தப்பிக் கொள்வது..

1) எனக்கும் அந்தச் சந்தேகம் இருக்கிறது  👆

🤣

2) அவர்தான் முந்திரிக்கொட்டை மாதிரி எதற்கெடுத்தாலும் முன்னுக்கு வந்து அறிக்கை விடுகிறவர். 

3) கிறீத்துவ மதத்திற்கெதிராக மட்டுமே  போராடுகிறார,  தன்னுடைய மக்கள் மதம் மாறுவதற்குரிய அடிப்படையை மறைத்து. 

4) தக்காளிச்  சட்னி ... அப்படியா? 

😏

7 hours ago, Cruso said:

திருக்கேதீஸ்வரம் ஆலயத்திட்கு அருகில் மிகப்பெரிய தாதுகோபுர விகாரை கடடபட்டுள்ளது. சில வருடங்களுக்கு முன்னர்தான் கட்டினார்கள். இந்த விகாரையை சுற்றிலுமிருந்து விரைவில் சோழர் காலத்துக்கு முந்திய கால பவுத்த சின்னங்களை விரைவில் எடுப்பார்கள். இதுதான் இங்குள்ள நிலைமை. இதுபற்றி சில காலத்துக்கு முன்னரும் இதனை பதிவிட்டிருந்தேன்.
சச்சி ஐயாவுக்கு நடப்பதெல்லாம் தெரியுமோ தெரியவில்லை.  

திருக்கேதீஸ்வரத்திற்கு அருகே சிலுவை ஒன்றை நட்டிருந்தால் மட்டுமே  சச்சியருக்கு தெரியும். 

😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, MEERA said:

ஏன் சச்சியரை தவிர வேறொரு ஆம்பிளையும் இல்லையா? 

எதற்கெடுத்தாலும் சச்சியரை தேடுவதே  வழமையாகி விட்டது.

சச்சியர் கிறீஸ்தவ மத மாற்றத்திற்கு எதிராக போராடுறார் என்ற பொறாமையா?

இதுதான் தமிழனின் சாபக்கேடு,,,, மற்றவனை சுலபமாக சந்தியில் இழுத்து அவனது தலையில் போட்டுவிட்டு தான் தப்பிக் கொள்வது..

ஈழ வரலாற்றில் அன்று தொடக்கம் நடக்கும் விடயங்களை சொல்லியுள்ளீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

1) எனக்கும் அந்தச் சந்தேகம் இருக்கிறது  👆

🤣

2) அவர்தான் முந்திரிக்கொட்டை மாதிரி எதற்கெடுத்தாலும் முன்னுக்கு வந்து அறிக்கை விடுகிறவர். 

3) கிறீத்துவ மதத்திற்கெதிராக மட்டுமே  போராடுகிறார,  தன்னுடைய மக்கள் மதம் மாறுவதற்குரிய அடிப்படையை மறைத்து. 

4) தக்காளிச்  சட்னி ... அப்படியா? 

😏

திருக்கேதீஸ்வரத்திற்கு அருகே சிலுவை ஒன்றை நட்டிருந்தால் மட்டுமே  சச்சியருக்கு தெரியும். 

😀

சச்சியாரை பற்றி எழுதினவுடன் எத்தனை பேர் துள்ளி குதிக்கிறார்கள் பார்த்தீர்களா? தான் ஆடாவிடடாலும் தன தசை ஆடும் என்று சொல்லுவது எவ்வளவு உண்மை. உண்மை சுடத்தான் செய்யும்.

Blood is thicker than water

  • கருத்துக்கள உறவுகள்

சச்சியரை தவிர வேறு ஒரு ஆம்பிளையுமில்லை என்பதில்லை, அவர் தான் சைவத்தின் தலைவர்போல் நேரம் ஒரு, சந்தர்ப்பம் ஒரு அறிக்கை விடுகிறவர். அவர்தான் பிக்குவுக்கு வெள்ளை துகில் போர்த்தினவர் என்பதால் கேக்கிறோம். 

அவர் கிறிஸ்தவத்துக்கு எதிராக போராடி ஒன்றும் சாதிக்க முடியாது. அன்று கிறிஸ்தவர்கள் வந்தபடியாற்தான் பல சட்ட வல்லுநர்கள், வைத்திய நிபுணர்கள் உருவானார்கள்.  கிறிஸ்தவத்துக்கு எதிராக போராடி அவர் ஒன்றும் சாதிக்கப்போவதில்லை. காரணம், கிறிஸ்தவம் யாரையும் அச்சுறுத்தி மதம் மாற்றவுமில்லை, நிலம் பறிக்கவுமில்லை, அடாவடி பண்ணவுமில்லை அதனால், தான் வீரன் என்று அலம்பாறை பண்ணுறார் விரட்டி விட்டேன் என்று. புகுந்தவனுக்கு சொல்லுகிறார்; உங்களுக்குத்தான் கட்டிடங்கள் தேவை கட்டிக்கொள்ளுங்கள் எங்களுக்கு அவை எல்லாம் தேவையில்லை என பம்முகிறார்.                 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, MEERA said:

ஏன் சச்சியரை தவிர வேறொரு ஆம்பிளையும் இல்லையா? 

எதற்கெடுத்தாலும் சச்சியரை தேடுவதே  வழமையாகி விட்டது.

சச்சியர் கிறீஸ்தவ மத மாற்றத்திற்கு எதிராக போராடுறார் என்ற பொறாமையா?

இதுதான் தமிழனின் சாபக்கேடு,,,, மற்றவனை சுலபமாக சந்தியில் இழுத்து அவனது தலையில் போட்டுவிட்டு தான் தப்பிக் கொள்வது..

எனக்கு தெரிந்த வரைக்கும் அவர் ஒருவர்தான் தனி மரமாக கிறிஸ்தவர்களுக்கு எதிராக போராடுகிறார். எனவேதான் அவரை ஆம்பிளயாக பார்க்கிறேன். மற்றவர்கள் எல்லாம் பொம்பிளையைகளோ தெரியவில்லை.

அவர் கிறிஸ்தவர்களுக்கு எதிராக போராடுவதில் எமக்கு சந்தோசமே. தமிழர்களுக்கிடையில் ஒற்றுமை உண்டாகுமோ இல்லையோ, அப்போதுதான் கிறிஸ்தவர்களுக்கிடையில் ஒரு ஒற்றுமை உண்டாகும்.

குறைந்தது தமிழர்களுக்கிடையில் சாபக்கேடு இருந்தாலும், கிறிஸ்தவர்களுக்கிடையில் உள்ள சாபக்கேடாவது இல்லாமல் போகும்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Cruso said:

யாழ் களவாசிகள் இவர் சொல்ல  வருவதைப் புரிந்துகொண்டால் நன்று. 

  • கருத்துக்கள உறவுகள்

பேதங்களை உருவாக்காமல், பிரித்து பேசாமல் தமிழர் எல்லோரும் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம். எல்லோரும் இம்மண்ணின் புதல்வரே. சைவம், கிறிஸ்தவம் என்று பிரிப்பது எதிரி, அதற்கு நாம் இடம் கொடுக்கலாகாது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

சச்சியரை தவிர வேறு ஒரு ஆம்பிளையுமில்லை என்பதில்லை, அவர் தான் சைவத்தின் தலைவர்போல் நேரம் ஒரு, சந்தர்ப்பம் ஒரு அறிக்கை விடுகிறவர். அவர்தான் பிக்குவுக்கு வெள்ளை துகில் போர்த்தினவர் என்பதால் கேக்கிறோம். 

அவர் கிறிஸ்தவத்துக்கு எதிராக போராடி ஒன்றும் சாதிக்க முடியாது. அன்று கிறிஸ்தவர்கள் வந்தபடியாற்தான் பல சட்ட வல்லுநர்கள், வைத்திய நிபுணர்கள் உருவானார்கள்.  கிறிஸ்தவத்துக்கு எதிராக போராடி அவர் ஒன்றும் சாதிக்கப்போவதில்லை. காரணம், கிறிஸ்தவம் யாரையும் அச்சுறுத்தி மதம் மாற்றவுமில்லை, நிலம் பறிக்கவுமில்லை, அடாவடி பண்ணவுமில்லை அதனால், தான் வீரன் என்று அலம்பாறை பண்ணுறார் விரட்டி விட்டேன் என்று. புகுந்தவனுக்கு சொல்லுகிறார்; உங்களுக்குத்தான் கட்டிடங்கள் தேவை கட்டிக்கொள்ளுங்கள் எங்களுக்கு அவை எல்லாம் தேவையில்லை என பம்முகிறார்.                 

இங்கு சச்சியரை ஆதரித்து எவருமே கருத்து வைத்ததில்லை…. அதேபோல் சச்சியரின் பலம் என்ன என்னபதும் உங்களுக்கு புரிந்தருக்கும். அவரை தாண்டி செல்லதே புத்திசாலித்தனம்.

மேலும் அச்சுறுத்தி மதம் மாற்றவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது இதற்காக உங்களுடன் வாதாடவும் போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, MEERA said:

அச்சுறுத்தி மதம் மாற்றவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது

அச்சுறுத்தி மதம் மாற்றியிருந்தால்; இலங்கையில் பவுத்தமும் சைவமும் தப்பிப்பிழைத்திருக்க முடியாது, இவ்வளவு சன்னதம் ஆடவும் முடியாது. அப்படியிருந்திருந்தாலும் அச்சுறுத்தியவர்கள் போனவுடன் மாறியவர்கள் தங்கள் பாரம்பரிய மதத்துக்கு திரும்பியிருப்பர். அவர்கள் இருக்கும் காலத்திலேயே, அவர்களிடம் கல்வி, அறிவு பெற்றவர்கள், அந்த அறிவைக்கொண்டு தமிழுக்கும், சைவத்துக்கும் தொண்டாற்றியுள்ளனர்.

19 hours ago, MEERA said:

இதற்காக உங்களுடன் வாதாடவும் போவதில்லை.

வாதாடுவதும், அதில் நீங்கள் வெல்வதும் நான் தோற்பதும் பிரச்சனையில்லை, ஒரு விடயத்தை நன்கு அறிந்தபின் வெறுப்பது வேறு, காரணம்  தெரியாமலேயே வெறுப்பதும் கடத்துவதும் தவறு. கிறிஸ்தவர்கள் எதற்காக மதம் மாறினார்கள், மாற்றப்பட்டார்கள் என்று வாதாடுவோரிடம் ஒருமித்த கருத்து இல்லை. இது உங்களுக்கான கருத்தாக கருதாதீர்கள், ஒரு இலட்சியத்தில் பயணிக்கும் நாம், இந்த ஒரு விடயத்தில் எத்தனை வெறுப்பு, பகை உள்ளுக்குள் இருக்கிறது என்பது அப்பப்போது வெளிப்படுவதால் தொட்டுக்காட்டியுள்ளேன். ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் போதும், முழுப்பாலும் கெட்டு கொட்டப்பட்டு விடும். நான் எழுதியது  தவறென்றால் கடந்து செல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மதப்பதற்றம் ஏற்படுவதை தடுத்து நிறுத்துங்கள்! ஜனாதிபதியிடம் கோரிக்கை

Published By: VISHNU

15 MAY, 2023 | 03:37 PM
image

கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் மதப்பதற்றம் மிகு சூழலொன்று ஏற்படுவதை நாம் விரும்பவில்லை. எனவே அதனை உடனடியாக தடுத்துநிறுத்துமாறு ஆலயத்தின் அறங்காவலர் சபையினர் தெரிவித்தனர்.

IMG_20230515_12300609.jpg

குறித்த விடயம் தொடர்பாக வவுனியாவில் அமைந்துள்ள ஜனாதிபதியின் உப அலுவலகத்திற்கு திங்கட்கிழமை (15) விஜயம் செய்த அவர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பும் வண்ணம் மகஜர் ஒன்றை கையளித்தனர். 

IMG_20230515_12300906.jpg

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், எமது ஆலய வளாகத்தில் தொல்பொருட் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நில அளவை செய்யப்படவுள்ளதாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

அந்தவகையில் எமது ஆலயம் அமைந்துள்ள காணியில் புராதன தொல்பொருள் சின்னம் அமைந்துள்ள நிலப்பரப்பினை எல்லைப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை எதிர்வரும் 2023.05.18 ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்செயற்பாட்டுக்கு நாம் எமது முழுமையான எதிர்ப்பினை பதிவு செய்கிறோம். 

ஏற்கனவே கடந்த 2021.03.22ஆம் திகதி அளவீட்டுப்பணிகளை மேற்கொள்வதற்காக வருகைதந்த தொல்பொருளியல் திணைக்களத்தினர், மக்கள் எதிர்ப்பின் காரணமாக ஆலய வளாகத்தினுள் உள்நுழைய முடியாதவாறு வெளியேற்றப்பட்டிருந்ததையும் தங்களின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறோம். 

இன, மத வேறுபாடுகளற்று தொல்பொருள் சின்னங்களையும் அவற்றின் தொன்மையையும் பாதுகாக்க வேண்டிய தொல்பொருளியல் திணைக்களம் தமிழர்களின் பூர்வீக நிலங்களில் பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்தும் வகையில் இனத்துவ ஆதிக்கத்தை வெளிப்படுத்தி வருவதாலும், அத்திணைக்களத்தின் அண்மைக்காலச் செயற்பாடுகளாலும், அதனை எதிர்க்கவேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது. 

இலங்கையில் சதுர ஆவுடையார் கொண்ட சிவலிங்கத்தை உடைய ஒரேயொரு சிவாலயம் என்னும் பெருமையையும், 2400 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையையும் கொண்டது எமது ஆலயம். அதன் பூசை மரபுகளும், வழிபாடுகளும் மிக இயல்பாக நடைபெற்று வரும் சூழலில், தொல்பொருளியல் திணைக்களத்தின் தலையீட்டினால் எமது மண்ணிலோ, இயல்பான இயங்கு நிலையிலுள்ள எமது ஆலயச்சூழலிலோ மதப்பதற்றம் மிகு சூழலொன்று ஏற்படுவதை நாமோ எமது மாவட்ட மக்களோ விரும்பவில்லை.

எனவே இவ்விடயத்தில் உயரிய கரிசனைகொண்டு, தொல்பொருளியல் திணைக்களத்தின் இத்தகையை நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதாக வடக்கு கிழக்கின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 2023.05.11ஆம் திகதி தாங்கள் வழங்கிய உறுதிமொழியை ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டோம். 

அதற்கமைய எமது ஆலயத்தில் தொல்பொருளியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள அளவீட்டுப் பணிகளையும் அதனோடு தொடர்புடைய அகழ்வுப் பணிகளையும் தங்களின் நேரடித் தலையீட்டினால் நிரந்தரமாகத் தடுத்து நிறுத்தி, எமது இருப்பையும் இயங்கு நிலையையும், ஆலயத்தின் புனிதத்தன்மையினையும் உறுதிப்படுத்துவதற்கு ஆவன செய்யுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம் என்றனர்.

https://www.virakesari.lk/article/155324

  • கருத்துக்கள உறவுகள்

சச்சியர் கிறிஸ்தவத்துக்கு எதிராக போராடுகிறார்  என்று பெருமை வேறு. சிங்கள் பெளத்த பேரினவாதத்துக்கு எதிராக தமிழராய் மதங்களை கடந்து போராடினோம். தேசமாக ஒன்றிணைந்து போராட சிங்கள கிறிஸ்தவ பீடங்களுடன் கூட முரண்பட்டு கொண்டது தமிழ் கிறிஸ்தவ சமுதாயம் என்பது எமது நினைவில் இருக்க வேண்டும்   

 பௌத்த பேரனவாத அச்சுறுத்தல் இருக்கும் நிலையிலே கூட எமது   சைவ/ இந்து பேரினவாத்ததிற்கு வக்காலத்து வாங்க,  அதற்கு துணை சேர்கக மத மாற்றம் என்ற போலிக் கூச்சலை தொடங்கி விட்டோம்.  சாதி அடக்குகுறைகளை பிறப்பால் பேதம் பார்ககும் மன நிலையை கைவிட்டால் மதமாற்றம் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை.  அதை கைவிட முடியாது என்பதால் அச்சமடைகின்றோம்.

மதம் அவரவர் தனிப்பட நம்பிக்கை. எவர் எந்த மதத்தில் இருந்தாலும் எவருக்கும் பிரச்சனை இல்லை. அது அவரவர் உரிமை.  தேசமாக ஒன்றிணைந்து  பலமாகுவதே இன்றைய தேவை

தமிழருக்குள் பன்முக தன்மையை அங்கீகரித்து ஒற்றுமையடையவில்லை என்றால் விடுதலை அடைய, தேசத்தை உருவாக்க தகுதி  அற்றவர்களாகி விடுவோம்.  

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு விடுதலையா…? 

2009 இல் செட்டிக்குளம் முகாமுக்குள் போய் மதமாற்றம் செய்த கள்ளக் கூட்டம்.

மதம் மாறியவர்களுக்கிடையில் சாதிப் பாகுபாடு இல்லையா? அல்லது அவர்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வு இல்லையா? மதம் மாறி அவர்கள் கண்டது என்ன?

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக சாதிப் பாகுபாடு தமிழர்களிடையே மீண்டும் கொளுந்து விட்டு எரிய தொடங்கி உள்ளது. ஆனால் அது சைவர்களால் என்று புறந்தள்ளிச் செல்ல முடியாது. 

இங்கு யாழில் கூட எழுதியுள்ளேன் ஓர் குழுவினர் அல்லது ஓர் ஊரை சேர்ந்தவர்கள் தமது கிராமத்தை மட்டும் அடையாளப்படுத்தி பருத்தித்துறை நகரை விலத்தி செயற்படுவதை.

2 hours ago, island said:

அதற்கு துணை சேர்கக மத மாற்றம் என்ற போலிக் கூச்சலை தொடங்கி விட்டோம்.  சாதி அ

மத மாற்றம் என்பது வெறும் போலிக் கூச்சல் அல்ல ஐலண்ட்.

நர்சரியில் Rhymes சொல்லிக் கொடுக்கப்படும் நேரத்தில் உள் நுழைந்து தம் மதத்துக்குரிய பாடல்களை உட்புகுத்தி பாடும் நிகழ்வுகள் கூட வவுனியாவிலும் கிளி நொச்சி மற்றும் மன்னாரில் நிகழ்ந்து கொண்டு வருகின்றன. கிழக்கில் இஸ்லாமிய மதமாற்றம் போல், வடக்கில் அடிப்படைவாத கிறிஸ்தவ மதமாற்றம் நிகழ்ந்து கொண்டு வருகின்றன. 

மதச்சார்பின்மை என்பது இத்தகைய 'மூளைச் சலவை' மத மாற்றங்களை பன்முகத்தன்மை என்ற பெயரில் அங்கீகரிப்பது அல்ல. இப்படியான அங்கீகாரங்கள் கூட மதங்களுக்கிடையிலான பிளவுகளை மேலும் அதிகரிக்கவே செய்யும். 

  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்சனை தொடர்பாக குரலெழுப்பும் தமிழர்களை மிக சாதுரியமாக மத பிரச்சனைகள் பக்கம் இழுத்து விட்டார்கள் என்று தோன்றுகிறது.

வெள்ளைக்காரன் நாடுகளிலேயே பெரிய பெரிய கோவில்களை கட்டும் நம்மவர்கள் எமது தாயகத்தில் மத ஆக்கிரமிப்பு என்று சர்வதேசத்துக்கு இந்த பிரச்சனையை கொண்டுபோய் நீதியும் கேட்க முடியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

இனப்பிரச்சனை தொடர்பாக குரலெழுப்பும் தமிழர்களை மிக சாதுரியமாக மத பிரச்சனைகள் பக்கம் இழுத்து விட்டார்கள் என்று தோன்றுகிறது.

வெள்ளைக்காரன் நாடுகளிலேயே பெரிய பெரிய கோவில்களை கட்டும் நம்மவர்கள் எமது தாயகத்தில் மத ஆக்கிரமிப்பு என்று சர்வதேசத்துக்கு இந்த பிரச்சனையை கொண்டுபோய் நீதியும் கேட்க முடியாது.

இன்னும்... சிலருக்கு, பிரச்சினையின் வீரியம் புரியவில்லை என நினைக்கின்றேன்.
வெள்ளைக்கார நாடுகளில்... தனியார் காணிகளை பிடுங்கி, 
இராணுவ பலத்துடனா நம்மவர்கள் கோவில் கட்டுகிறார்கள்.

வெள்ளைக்கார நாடுகளில்... முதலில் காணியை வாங்கி, அது கோவில் கட்டக் 
கூடிய இடமா என்ற நடை முறைகளை பின்பற்றியே.. கோவிலை கட்டுகிறார்கள்.
என்பதை கவனிக்கவும். அடாத்தாக எதனையும் செய்யவில்லையே...

தமிழர் பகுதியில்... ஒரு விகாரை கட்டுவது என்பது,
தமிழ் மக்களின் நிலம் பறிபோய்  சிங்கள மயமாகின்றது என்பதற்கு அறிகுறி.
அதனால் தான்... எதிர்க்கிறார்கள். 

இப்படியானவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால்...
தமிழ்ப் பகுதிகளில் சிங்களவனும், சோனகனும்தான்... இருப்பான்.
நீங்கள் அங்கிருந்து விரட்டி அடிக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.
அப்படி விரட்டும் போது,  உங்களுக்கு இலங்கையில் ஒதுங்க எந்த இடமும் இல்லை.  

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

மத மாற்றம் என்பது வெறும் போலிக் கூச்சல் அல்ல ஐலண்ட்.

நர்சரியில் Rhymes சொல்லிக் கொடுக்கப்படும் நேரத்தில் உள் நுழைந்து தம் மதத்துக்குரிய பாடல்களை உட்புகுத்தி பாடும் நிகழ்வுகள் கூட வவுனியாவிலும் கிளி நொச்சி மற்றும் மன்னாரில் நிகழ்ந்து கொண்டு வருகின்றன. கிழக்கில் இஸ்லாமிய மதமாற்றம் போல், வடக்கில் அடிப்படைவாத கிறிஸ்தவ மதமாற்றம் நிகழ்ந்து கொண்டு வருகின்றன. 

மதச்சார்பின்மை என்பது இத்தகைய 'மூளைச் சலவை' மத மாற்றங்களை பன்முகத்தன்மை என்ற பெயரில் அங்கீகரிப்பது அல்ல. இப்படியான அங்கீகாரங்கள் கூட மதங்களுக்கிடையிலான பிளவுகளை மேலும் அதிகரிக்கவே செய்யும். 

எமது மதத்தை சீர் திருத்துவதே இதை தடுக்க ஒரே வழி நிழலி. அதை செய்ய கொஞ்சம் கூட விருப்பம் இல்லாமல் மத மாற்றம் எனலறு ஒப்பாரி வைப்பதில் அர்ததம் இல்லை என்பது எனது கருத்து.  தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலில் படம் எடுப்பதையே தீட்டு என்று இன்றும் கூறும் அதை பேண முற்நிபடும் நிலையில் அதை விட மத மாற்றம் ஒன்றும் தப்பானதாக எனக்கு படவில்லை. வினைக்கு எதிர்வினை உண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

மத மாற்றம் என்பது வெறும் போலிக் கூச்சல் அல்ல ஐலண்ட்.

நர்சரியில் Rhymes சொல்லிக் கொடுக்கப்படும் நேரத்தில் உள் நுழைந்து தம் மதத்துக்குரிய பாடல்களை உட்புகுத்தி பாடும் நிகழ்வுகள் கூட வவுனியாவிலும் கிளி நொச்சி மற்றும் மன்னாரில் நிகழ்ந்து கொண்டு வருகின்றன. கிழக்கில் இஸ்லாமிய மதமாற்றம் போல், வடக்கில் அடிப்படைவாத கிறிஸ்தவ மதமாற்றம் நிகழ்ந்து கொண்டு வருகின்றன. 

மதமாற்றம் என்று எதை சொல்லுகிறீர்கள்..? ஆக கிறீஸ்தவ மதத்திற்கு மாறுவதுதான் மதமாற்றமா உங்களுக்கு..? 

ஈழத்தமிழர்கள் வர்ணாச்சிரமம் வகுத்துள்ள சாதி இந்துக்கள் ஆகிய பிறகு மெல்ல மெல்ல நமக்கான சிறுதெய்வ வழிபாடுகள் மறைக்கப்பட்டு, அழிக்கப்பட்டு வந்தது.

இப்போது எஞ்சியிருந்த வைரவர் கோவில்களும் ஆகம முறைப்படியான கோவில்களாக மாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன. நீண்டகாலமாக இந்த மாற்றம் நடக்கிறது.  வசந்தமண்டபங்கள், தேர் என சிறுதெய்வ வழிபாட்டுக்குரிய அடையாளத்தை இழந்து வருகின்றன…

ஊர்ப்பக்கங்களில் இன்னமும் பழைய மரபிலான வைரவர் வழிபாடுகள் இருக்கும் கோவில்கள் எங்காவது ஒன்று இரண்டு இருக்கின்றன.. இருக்கும் ஒன்று இரண்டு கோவில்களிலும் தேர்முட்ட வசந்தமண்டபம் கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன.

துயரம் என்னவென்றால் இந்த கட்டுமாண வேலைகளை அந்தந்த ஊரில் இருந்து புலம்பெயர்ந்து சென்றவர்களே செய்கிறார்கள்..

அடையாளச்சிதைப்பு / அடையாள அழிப்பு என்பது இனவழிப்பில் முக்கியமான பங்கை வகிக்கிறது. தொன்மங்கள் மரபுகளை அழித்துவிட்டால் ஒரு இனத்தின் தொடர்ச்சியை இலகுவாக அறுத்துவிடலாம் இல்லையா..?

எங்கள் ஆதி அடையாளங்களை ஆரம்பத்திலையே சிதைத்தது தமிழர்களிடையே சாதிப்பிளவுகளை வகுத்து சமூக ஒற்றுமையை சிதைத்தது இந்து சமயம்தானே..? 

ஆக மதமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் என்றால் நாம் இந்து சமய எதிர்ப்பில் இருந்து ஆரம்பிக்கவேண்டும்.. நர்சரியில் rhymes சொல்லும் இடத்தில் இருந்து அல்ல.. இதன் மூலவேரை தேடி ரொம்ப தூரம் போகவேண்டும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.