Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவாழ் இலங்கையர்களைச் சந்தித்தார் தூதுவர் ஜலி சங்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவாழ் இலங்கையர்களைச் சந்தித்தார் தூதுவர் ஜலி சங்

10 Jun, 2023 | 02:07 PM
image

(நா.தனுஜா)

அமெரிக்கவாழ் இலங்கையர்களுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜூலி சங்குக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் வொஷிங்டனில் நடைபெற்றது. 

வொஷிங்டனில் உள்ள இலங்கைத்தூதரகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பு அமெரிக்காவுக்கான இலங்கைத்தூதுவர் மஹிந்த சமரசிங்கவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இச்சந்திப்புக் குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள தூதுவர் ஜூலி சங், "இவ்வாரம் நான் மீண்டும் வொஷிங்கடனுக்கு வருகைதந்திருக்கின்றேன். இதன்போது முதலாவதாக அமெரிக்காவில் வாழும் இலங்கைப்பிரஜைகளைச் சந்தித்தேன். இருநாடுகளுக்கு இடையிலான 75 வருடகால நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து அவர்களுடன் கலந்துரையாடினேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

இலங்கை - அமெரிக்காவுக்கு இடையிலான 75 வருடகால இராஜதந்திர உறவுகளின் பின்னணியில் இச்சந்திப்பு மிகவும் அர்த்தமுள்ளதாக அமைந்திருப்பதாக அமெரிக்காவிலுள்ள இலங்கைத்தூதரகம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/157403

  • கருத்துக்கள உறவுகள்

@ஈழப்பிரியன்@nunaviIan, @nilmini, @Maruthankerny
ஆகியோரை,  ஜூலி சங்... சந்திக்கவில்லையா. 😂
அல்லது எங்களுக்கு தெரியாமல், இரகசிய  சந்திப்பு நடந்ததா? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

@ஈழப்பிரியன்@nunaviIan, @nilmini, @Maruthankerny
ஆகியோரை,  ஜூலி சங்... சந்திக்கவில்லையா. 😂
அல்லது எங்களுக்கு தெரியாமல், இரகசிய  சந்திப்பு நடந்ததா? 🤣

சிங்கள மக்களையே சந்தித்திருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 10/6/2023 at 07:30, ஈழப்பிரியன் said:

சிங்கள மக்களையே சந்தித்திருக்கிறார்.

குழை அடிக்கிறார் போல ..😁

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

குழை அடிக்கிறார் போல ..😁

ரணிலை அடுத்த ஜனாதிபதியாக்க இப்பவே பிரச்சாரம் தொடங்கிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
On 10/6/2023 at 13:30, ஈழப்பிரியன் said:

சிங்கள மக்களையே சந்தித்திருக்கிறார்.

இலங்கையர்   என்றால் சிங்களவர்.  தானே........தமிழ் ஈழ மக்களை சந்தித்தார் என்றால்......அங்கே    தமிழ் சிறி.  குறிப்பிட்ட அனைவரும் இருப்பார்கள்    😁

On 10/6/2023 at 11:27, தமிழ் சிறி said:

@ஈழப்பிரியன்@nunaviIan, @nilmini, @Maruthankerny
ஆகியோரை,  ஜூலி சங்... சந்திக்கவில்லையா. 😂
அல்லது எங்களுக்கு தெரியாமல், இரகசிய  சந்திப்பு நடந்ததா? 🤣

யஸ்ரினும்.  அமெரிக்காவில் தான்    இருக்கிறார்   ...

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Kandiah57 said:

யஸ்ரினும்.  அமெரிக்காவில் தான்    இருக்கிறார்   ...

இந்த லொள்ளு தானே வேணாம் மனிசன் தானும் பச்சை தமிழன்தான் என்று சன்னதமாட போகுது .😁

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:
On 10/6/2023 at 05:27, தமிழ் சிறி said:

ஆகியோரை,  ஜூலி சங்... சந்திக்கவில்லையா. 😂
அல்லது எங்களுக்கு தெரியாமல், இரகசிய  சந்திப்பு நடந்ததா? 🤣

யஸ்ரினும்.  அமெரிக்காவில் தான்    இருக்கிறார்

@Crusoவும் அமெரிக்கா தான்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

ரணிலை அடுத்த ஜனாதிபதியாக்க இப்பவே பிரச்சாரம் தொடங்கிவிட்டது.

ஆமாஞ் சாமி. 

100%

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

@Crusoவும் அமெரிக்கா தான்.

@Cruso வும் அமெரிக்காவா.
அவர் தாயக நிகழ்வு செய்திகளை துல்லியமாக கணித்து எழுதுவதால்,
இலங்கையில் இருந்து எழுதுகின்றார் என நினைத்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

@Cruso வும் அமெரிக்காவா.
அவர் தாயக நிகழ்வு செய்திகளை துல்லியமாக கணித்து எழுதுவதால்,
இலங்கையில் இருந்து எழுதுகின்றார் என நினைத்தேன்.

நீர்வேலியான்.  அமெரிக்காவில் இருக்கிறார்          ...வயது கூட கூட  மறதியும்  கூடிச்சொல்லுகிறது.       🤣

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kandiah57 said:

நீர்வேலியான்.  அமெரிக்காவில் இருக்கிறார்          ...வயது கூட கூட  மறதியும்  கூடிச்சொல்லுகிறது.       🤣

ஓ.... @நீர்வேலியான் ஐயும், @Justin  ஐயும்  மறந்து விட்டேன். 
ஆனால்.. வயது போனதால், வந்த மறதி அல்ல என்பதை உறுதியாக சொல்ல முடியும். 😂

@theeya, @nige ஆகியோரும் அமெரிக்கா என நினைக்கின்றேன். (உறுதியாக தெரியவில்லை.) 🙂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களம் சாதுர்யமாகவும் நிதானமாகவும் தனது வெற்றியை நோக்கி பயணிக்கின்றது.

Bild

Bild

Bild

Bild

என் கேடு கெட்ட  தமிழ் அரசியல்வாதிகளே! உயிரோடு இருந்து என்ன பலன்????? :pouting_face:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சிங்களம் சாதுர்யமாகவும் நிதானமாகவும் தனது வெற்றியை நோக்கி பயணிக்கின்றது.

Bild

Bild

Bild

Bild

என் கேடு கெட்ட  தமிழ் அரசியல்வாதிகளே! உயிரோடு இருந்து என்ன பலன்????? :pouting_face:

நாங்கள் பறிக்குள் போடப்பட்ட நண்டுகள். 

யார் மேலே போனாலும் இழுத்து விழுத்துவோமே தவிர, மேலே போபவனுடன் சேர்த்து தானும் ஏறமாட்டோம். 

யாழ் களத்தைப் பார்த்தால் புரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

சிங்களம் சாதுர்யமாகவும் நிதானமாகவும் தனது வெற்றியை நோக்கி பயணிக்கின்றது.

Bild

Bild

Bild

Bild

என் கேடு கெட்ட  தமிழ் அரசியல்வாதிகளே! உயிரோடு இருந்து என்ன பலன்????? :pouting_face:

படங்கள் இணைப்புக்கு நன்றி குமாரசாமி.

தமிழர்கள் சந்தித்திருந்தால் எனக்கு படத்தைப் பார்த்தாலே தெரியும்.

முக்கியமான புள்ளிகள் பலருடனும் சேர்ந்து பயணித்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, Kandiah57 said:

யஸ்ரினும்.  அமெரிக்காவில் தான்    இருக்கிறார்   ...

A.R.Rahman thanks the audience for making Mersal a big hit

no comment     கருத்து இல்லை :face_with_medical_mask:

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kandiah57 said:

யஸ்ரினும்.  அமெரிக்காவில் தான்    இருக்கிறார்   ...

4 hours ago, குமாரசாமி said:

no comment     கருத்து இல்லை :face_with_medical_mask:

மைக்கை… ஆஃப் பண்ணுங்க சார். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
On 10/6/2023 at 04:27, தமிழ் சிறி said:

@ஈழப்பிரியன்@nunaviIan, @nilmini, @Maruthankerny
ஆகியோரை,  ஜூலி சங்... சந்திக்கவில்லையா. 😂
அல்லது எங்களுக்கு தெரியாமல், இரகசிய  சந்திப்பு நடந்ததா? 🤣

எங்களுக்கு வந்ததும் தெரியாது போனதும் தெரியாது சிறி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Kapithan said:

நாங்கள் பறிக்குள் போடப்பட்ட நண்டுகள். 

யார் மேலே போனாலும் இழுத்து விழுத்துவோமே தவிர, மேலே போபவனுடன் சேர்த்து தானும் ஏறமாட்டோம். 

யாழ் களத்தைப் பார்த்தால் புரியும். 

இனி வரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகளும் புலம்பெயர்தமிழர்களும் எப்படியான முயற்சிகளில் இறங்கலாம்?

தற்போதைய இலங்கை அரசியல் நிலவரத்தின் படி எந்த தமிழ் அரசியல்வாதியினால் தமிழர் பிரச்சனைகளை தீர்த்து வைக்க முடியும் என எதிர்பார்க்கின்றீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழ் சிறி said:

@Cruso வும் அமெரிக்காவா.
அவர் தாயக நிகழ்வு செய்திகளை துல்லியமாக கணித்து எழுதுவதால்,
இலங்கையில் இருந்து எழுதுகின்றார் என நினைத்தேன்.

உங்கள் கணிப்பு சரி சிறி. நான் சிறி லங்காவில்தான் இருக்கிறேன். ஈழப்பிரியன்  எதுக்காக அப்படி கணித்தார் என்று தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

1) இனி வரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகளும் புலம்பெயர்தமிழர்களும் எப்படியான முயற்சிகளில் இறங்கலாம்?

2) தற்போதைய இலங்கை அரசியல் நிலவரத்தின் படி எந்த தமிழ் அரசியல்வாதியினால் தமிழர் பிரச்சனைகளை தீர்த்து வைக்க முடியும் என எதிர்பார்க்கின்றீர்கள்?

தற்போதைய இலங்கை அரசியல் என்பது முற்றுமுழுதாக ....மெரிக்காவின் பிடிக்குள் சென்றுவிட்டது. நாம் விரும்பினாலென்ன விரும்பாவிட்டாலென்ன, இதுதான் உண்மை. 

அமெரிக்காவிற்கு பொருளாதார ரீதியிலான மொழிதான் புரியும். எனவே, புலம்பெயர்ஸ் எல்லோரும் ஒன்றுசேர்ந்து ஒரு பொருளாதார ரீதியிலான பலமாக பரிணமிர்த்த, ...மெரிக்காவின் உதவியுடன் இலக்கு நோக்கிப் பயணிக்கலாம். 

தற்போதைய சூழலில், தனிநாடு இப்போதைக்குச் சாத்தியமில்லை. செய்யவேண்டியதெல்லாம், அங்கேயுள்ள எம்மவர்களைத் தூக்கி நிறுத்துவதும், இலங்கையில் வெளிநாட்டவராக முதலீடுகளை மேற்கொண்டு பொருளாதாரத்தை எங்கள் ஆதிக்கத்தைக் கொண்டுவருவதும்தான்.

உ+ம்; Sri Lankan Airlines ஐ கொள்வனவு செய்வது. 

இலங்கை என்பது, இந்தியாவுக்கான இன்னொரு தாய்வான் ஆகும்.

அங்கே..மெரிக்க நலன்களுடன் எமது நலன்களும் ஒருங்கே பயணிக்கும்போது, இன்றோ அல்லது  நாளையோ எமது கனவுக்கள் நனவாகலாம். நாம் ஆயத்தமாக இருக்க வேண்டியது முக்கியம். மிகப்பெரும்பாலும் இந்தியா உடைந்து தமிழ்நாடு தனிநாடாக ஆகும்போது எமது கனவு நனவாகும் சந்தர்பம் அதிகம். 

அல்லது, எம்மக்கள்எதைத் தெரிவு செய்கிறார்களோ அதை வரவேற்கலாம். ஒன்றுபட்ட, பிரிக்கப்படாத நாட்டுக்குள் வாழ எம்மக்கள் விரும்பினால் அதையும் வரவேற்றே ஆகவேண்டும். 

2) ஒருவருமே இல்லை. புது இரத்தம் பாச்சப்பட வேண்டும். புலம்பெயர்ஸ் களின் பிள்ளைகளும், வெளிநாடுகளில் கல்விகற்ற(உ+ம்; சாணக்கியன்) எம் இளையவர்களின் பங்களிப்பையும் ஊக்குவிக்கலாம்.

புது இரத்தமும், புதிய சிந்தனைகளும் பாச்சப்பட வேண்டும்.  

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kapithan said:

வெளிநாடுகளில் கல்விகற்ற(உ+ம்; சாணக்கியன்)

என்ன எழுதுற விடயம் நல்லாயிருக்கே என்று கொஞ்சம் உன்னிப்பாக வாசித்தால் 
இந்த பெயருடன் கேஸ் குளோஸ், பழைய பாரத் மத்தாக்கி ஜே  தான் 

17 hours ago, குமாரசாமி said:

என் கேடு கெட்ட  தமிழ் அரசியல்வாதிகளே! உயிரோடு இருந்து என்ன பலன்????? 

என்ன சார்வாள் செய்றது 
உங்களுக்கு இந்தியாவை விட எதுவுமே கண்ணுக்கு தெரியாவிட்டால் இப்படித்தான் எவனோ  பிலாக்காயை பார்த்தபடி என்று இருக்கவேண்டியதுதான். சீனாவை அப்பவே நீங்களும் இழுத்துவிட்டிருந்தால் அமெரிக்கன் உங்களையும் வந்து சந்தித்திருந்திருப்பான் 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, அக்னியஷ்த்ரா said:

என்ன எழுதுற விடயம் நல்லாயிருக்கே என்று கொஞ்சம் உன்னிப்பாக வாசித்தால் 
இந்த பெயருடன் கேஸ் குளோஸ், பழைய பாரத் மத்தாக்கி ஜே  தான் 

😀 சாணக்கியனின் வெளிநாட்டுக் கல்வியை உதாரணமாகக் குறிப்பிட்டேன். 

மேலே  அரசியவாதிகள் எவரும் இல்லை என்று குறிப்பிட்டு இருக்கிறேன். 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, அக்னியஷ்த்ரா said:

என்ன எழுதுற விடயம் நல்லாயிருக்கே என்று கொஞ்சம் உன்னிப்பாக வாசித்தால் 
இந்த பெயருடன் கேஸ் குளோஸ், பழைய பாரத் மத்தாக்கி ஜே  தான் 

என்ன சார்வாள் செய்றது 
உங்களுக்கு இந்தியாவை விட எதுவுமே கண்ணுக்கு தெரியாவிட்டால் இப்படித்தான் எவனோ  பிலாக்காயை பார்த்தபடி என்று இருக்கவேண்டியதுதான். சீனாவை அப்பவே நீங்களும் இழுத்துவிட்டிருந்தால் அமெரிக்கன் உங்களையும் வந்து சந்தித்திருந்திருப்பான் 

இலங்கை அரசு இந்தியாவின் ஆதரவுடன்  புலம்பெயர்ஸ் ஸின் ஆதரவு இன்றியே இலங்கை இனப்பிரச்சனையை ஏதாவதொரு வகையில் தற்காலிகமாகவேனும் முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்கும். 

அப்படி நடைபெற்றால், புலம்பெயர்ஸ் எல்லோரும் அணில் ஏறவிட்ட நாய்போல ஆவென்று வாய் பிளந்தபடி நிற்க வேண்டியதுதான். 

அப்படி ஒரு நிலை வரக்கூடாது என்றால் புலம்பெயர்ஸ் ஸின் பிடி அங்கே இருக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
On 12/6/2023 at 03:10, ஈழப்பிரியன் said:

@Crusoவும் அமெரிக்கா தான்.

On 12/6/2023 at 06:13, தமிழ் சிறி said:

@Cruso வும் அமெரிக்காவா.
அவர் தாயக நிகழ்வு செய்திகளை துல்லியமாக கணித்து எழுதுவதால்,
இலங்கையில் இருந்து எழுதுகின்றார் என நினைத்தேன்.

14 hours ago, Cruso said:

உங்கள் கணிப்பு சரி சிறி. நான் சிறி லங்காவில்தான் இருக்கிறேன். ஈழப்பிரியன்  எதுக்காக அப்படி கணித்தார் என்று தெரியவில்லை. 

ஈழப்பிரியன்… @Cruso அமெரிக்காவில் அல்ல இலங்கையில் வசிப்பவராம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.