Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஸ்ஸிய அரசுக்கெதிராகத் திரும்புகிறதா வாக்னர் கூலிப்படைப்பிரிவு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாக்னர் கூலிப்படை ரஷ்யாவை கைப்பற்றி சதிப்புரட்சி செய்தால் ஒட்டுமொத்த உலகிற்கே அழிவு நிச்சயம்.. எந்த ஒரு கட்டுப்பாடும் கடப்பாடும் இல்லாத கிரிமினல்களை கொண்ட கூலிப்படை அது.. தலிபான்கள் கூட ஒரு ஒழுங்குமுறை உள்ளவர்கள் அட்லிஸ்ட் குர் ஆனுக்காவது பயப்படுகிறபர்கள் இவர்களுக்கு எதுவுமே இல்லை.. இவ்வளவு பயங்கர ஆயுதங்கள் உள்ள ஒரு நாடு ஒரு கூலிப்படையிடம் போனால் உலக ஒழுங்கே மாறிவிடும்.. இதை ஒருபோதும் அமெரிக்காகூட விரும்பாது.. அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் வாக்னர் படையை ரஷ்யாவுடன் சேர்ந்து துவம்சம் செய்யக்கூட பின் நிற்கமாட்டாது அமெரிக்கா.. புலிகளும் இலங்கை அரசும் சேர்ந்து இந்தியப்படைகளை விரட்டியதுபோல்.. சாதாரண ரெண்டு விமானம் அரசு அல்லாத ஒரு அமைப்பான புலிகள் கைக்கு வந்ததற்கு உலகமே ஒன்று சேர்ந்து புலிகளை அளித்தது.. ரஷ்யா அணு ஆயுதங்கள் ஒரு கூலிப்படை கையில் போவதை ஒட்டுமொத்த உலகமுமே விரும்பாது.. இது உண்மையில் எந்த புற சக்திகளின் தலையீடு இல்லாத உள்வீட்டு சண்டைதான்..

  • Replies 231
  • Views 15.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

9/11 தாக்குதல் பென்டகன் மீது நடாத்தப்பட்ட போது விமான எதிர்ப்பு நடாத்தப்பட்டதா? இல்லை அங்கே விமான எதிர்ப்பு இல்லையா??

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

நிறைய குப்பை லொறிகள் இருந்தனவே!🦾🦾🦾 சுண்டைக்காய் பிரிகோஸினை நிப்பாட்ட குப்பை லொறிகளே போதும் எனறு ஜீனியஸ் புட்டின் யோசித்திருப்பார்!🤪

இன்னும் இரும்புக்கடைக்குப் போகவேண்டிய அய்ட்டங்களையும் கூட நிறுத்தியிருக்கலாம். இன்னும் பிரமாண்டமாக இருந்திருக்கும்!😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

வாங்க தலைவரே.. எவ்வளவு நாளாச்சு பாத்து.. எப்படி சுகம்..? 

இருக்குறன் புலவரே. உங்கள் சுகம்கள் எப்படி?

1 hour ago, இணையவன் said:

ஷோய்கூவும் தனியாக ஒரு கூலிப்படையை வைத்துள்ளாராம்.

நம்ம அப்பிரசெண்டு புட்டினை தவிர மிச்சம் எல்லாரும் ஆளாளுக்கு ஒரு படையை செட் பண்ணி வச்சிருக்காங்கள்.

Russia is a mafia state என நான் முன்னர் எழுதிய போது பலர் அதை ஏற்கவில்லை.

1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

வாக்னர் கூலிப்படை ரஷ்யாவை கைப்பற்றி சதிப்புரட்சி செய்தால் ஒட்டுமொத்த உலகிற்கே அழிவு நிச்சயம்.. எந்த ஒரு கட்டுப்பாடும் கடப்பாடும் இல்லாத கிரிமினல்களை கொண்ட கூலிப்படை அது.. தலிபான்கள் கூட ஒரு ஒழுங்குமுறை உள்ளவர்கள் அட்லிஸ்ட் குர் ஆனுக்காவது பயப்படுகிறபர்கள் இவர்களுக்கு எதுவுமே இல்லை.. இவ்வளவு பயங்கர ஆயுதங்கள் உள்ள ஒரு நாடு ஒரு கூலிப்படையிடம் போனால் உலக ஒழுங்கே மாறிவிடும்.. இதை ஒருபோதும் அமெரிக்காகூட விரும்பாது.. அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் வாக்னர் படையை ரஷ்யாவுடன் சேர்ந்து துவம்சம் செய்யக்கூட பின் நிற்கமாட்டாது அமெரிக்கா.. புலிகளும் இலங்கை அரசும் சேர்ந்து இந்தியப்படைகளை விரட்டியதுபோல்.. சாதாரண ரெண்டு விமானம் அரசு அல்லாத ஒரு அமைப்பான புலிகள் கைக்கு வந்ததற்கு உலகமே ஒன்று சேர்ந்து புலிகளை அளித்தது.. ரஷ்யா அணு ஆயுதங்கள் ஒரு கூலிப்படை கையில் போவதை ஒட்டுமொத்த உலகமுமே விரும்பாது.. இது உண்மையில் எந்த புற சக்திகளின் தலையீடு இல்லாத உள்வீட்டு சண்டைதான்..

மிக தெளிவான பார்வை.

வாக்னர் கையில் வீழ்ந்த அணு முகாம் உடனடியாக மீள ரஸ்யாவிடம் வர வேண்டும் என்பதில் அமெரிக்காவும், சீனாவும், ரஸ்யாவும் ஒரே புள்ளியில் சந்தித்திருப்பார்கள் என்றே நானும் நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வாலி said:

இன்னும் இரும்புக்கடைக்குப் போகவேண்டிய அய்ட்டங்களையும் கூட நிறுத்தியிருக்கலாம். இன்னும் பிரமாண்டமாக இருந்திருக்கும்!😂

அந்த ஒரே ஒரு டாங்கியையாவது நிறுத்தி இருக்கலாம்🤣.

#ஒத்த ரோசா

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலக வித்துவான்கள்.. உக்ரைனின் தோல்வியை இயலாமையை மறைக்க இதை தூக்கிப் பிடிக்கினம்.

வாக்னர் குழு ரஷ்சிய படைகளுடன் சேர்ந்து போரிடும் பல குழுக்களில் ஒன்று. அதில் ரஷ்சியாவுக்கு எதிராக மேற்குலகின் தூண்டலில் ரஷ்சியாவுக்கு உள்ளேயே பிரிவினை வேண்டிப் போராடிய செச்சின் அமைப்புக்களும் சாரும். 

வாக்னர் குழு கூடிய தன்னிச்சையாக செயற்பட அனுமதிக்கப்பட்டது. அது கூலிக்கு அமர்த்தப்பட்ட குழு ஆகினும்.. ரஷ்சிய குற்றவாளிகளை தெரிந்தெடுத்து பயிற்சி கொடுத்து உருவாக்கப்பட்ட அமைப்பு. ரஷ்சியாவே ஆயுதங்களும் வாகனங்களும் வழங்கியுள்ளது. 

பார்முட் நகரை வெற்றி கொள்ள இந்தப் படை அதிகம் பயன்படுத்தப்பட்டாலும்.. ரஷ்சிய இராணுவ அதிகாரிகள்... ரஷ்சிய இராணுவத்தின் தங்களின் புகழை அதிகரிக்கும் வகைக்கு இறுதி நேரத்தில் செயற்பட்டதால்.. வாக்னர் குழு இழப்புக்கள் மத்தியில் தான் பார்முட் நகரைக் கைப்பற்றி.. நீண்ட யுத்தத்தில் ரஷ்சியாவின் வெற்றியை உறுதி செய்ய உதவினர்.

ஆனாலும்.. ரஷ்சிய உளவு பிரிவுகள்.. இந்த கூலிக்குழுக்களால் ஆபத்து வரும் என்பதற்கு அண்மையில்.. ரஷ்சிய எல்லைக்குள் திட்டமிட்டு ஊடுருவித் தாக்குதல் நடத்திய உக்ரைனின் கூலிப்படைகளுக்கும்.. இவர்களுக்கும் தொடர்புகள் இருக்க சந்தேகிக்கப்பட்ட நிலையில்..

இந்த இராணுவக் குழுக்களை நேரடியாக ரஷ்சிய பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வர முயற்சிக்கப்பட்டது. ஏனைய குழுக்கள்.. அதற்கு இசைய... வாக்னர் குழு அதற்கு இணங்க மறுத்த நிலையில் தான்..

வாக்னர் குழு தன்னிச்சையாக.. ரஷ்சிய இராணுவ தளபதிகளுக்கு எதிராகக் குற்றம் சுமத்திக் கொண்டு அவர்களை பதவி கவிழ்க்கப் போவதாகச் சொல்லிக் கொண்டு மாஸ்கோவை நோக்கி போக முற்பட்டனர்.

அவர்கள் ஒன்றும் போரிட்டோ.. உக்ரைனின்... அமெரிக்காவின் ஆயுதங்களோடோ போகவில்லை. ரஷ்சிய படைகள் அளித்த ஆயுதங்கள் கனரக வாகனங்களோடு போயினர். ஆனாலும்.. எங்கும் சண்டையிடும் நோக்கில்.. ஆயுதங்களைப் பாவிக்கவில்லை. அதேபோல்.. ரஷ்சிய படைகளும் சரி.. பொலிஸும் சரி.. மக்களும் சரி.. இவர்களை எதிரிகளாகவும் பார்க்கவில்லை. அவர்கள் நாட்டுக்காகச் செய்த தியாகத்தி தான் மெச்சினர்.

வாக்னர் குழு தலைவன் என்ற தனிமனிதனின் செல்வாகினை நிலை நிறுத்த மேற்கொள்ளப்பட்ட ஒரு நகர்வாகத்தான் இதனைப் பார்க்க முடியுமே தவிர ரஷ்சிய அரசுக்கு எதிரான நடவடிக்கையாக இது வாக்னர் குழு தலைவர் உட்பட யாராலும் சொல்லப்படவில்லை.

இதில் புட்டினின் சாதுரியம்.. மக்களுக்கோ.. ரஷ்சிய படைகளுக்கோ.. வாக்னர் குழுவினருக்கோ.. இதர ரஷ்சிய ஆதரவுக் குழுக்களுக்கோ.. எந்த இழப்பும் இல்லாமல்.. பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தது தான்.

இதன் மூலம்.. மேற்குலகம் எதிர்பார்த்த ரஷ்சிய படைகளுக்கு எதிராக வாக்னர் குழு சண்டையிட்டால்.. மாஸ்கோவை பிடிக்கப் போனால்.. ரஷ்சிய படைகளை உக்ரைனில் இருந்து பின்வாங்க வேண்டி வரும்.. அல்லது ரஷ்சிய படைகளின் பல.. கவனம் சிதையும்.. இந்த நேரத்தில்.. தாங்கள் உக்ரைனின் சொலக்கியின் படைகளிடம் எதிர்பார்க்கும் வெற்றியை சுவைக்கலாம்.. மேற்குலக மக்களை ஏய்க்கலாம் என்று கனவு கண்டனர்.

ஆனால்.. புட்டின் சாமர்த்தியமாக காய் நகர்த்தி மோதல்கள் இன்றி எல்லாத்தையும் 24 மணி நேரத்துக்குள் முடிவுக்கு கொண்டு வந்துவிட்டார்.

வாக்னர் குழு அல்லாமல்.. வேறு உக்ரைன் சார்ப்புக் குழுக்கள் நுழைந்திருந்தால்.. அண்மையில் அப்படி நுழைந்து அழிந்து போன உக்ரைனின் ஊடுருவல் அணிக்கு நடந்த கதிதான் நிகழ்ந்திருக்கும். மாஸ்கோ செல்லும் வழியில் செல்லக் கூட காலம் இருந்திருக்காது. ஆனால்.. வாக்னர் குழுவை ரஷ்சியா எதிரியாகப் பார்க்கவில்லை. புட்டினும் பார்க்க விரும்பவில்லை. அதற்கு காரணம்.. வாக்னர் குழு ரஷ்சிய மக்களால் கட்டி அமைப்பட்ட ஒரு தனியார் இராணுவக் குழு. வாக்னர் தலைவர் புட்டினை ஒருபோதும் குற்றம் சாட்டியதில்லை. இராணுவ தலைமைகள் சிலவற்றோடு தான் அவருக்கு முரண்பாடிருந்தது. அவர்கள் மாஸ்கோவை தளமாகக் கொண்டியங்கிய படியால் தான்.. வாக்னர் மாஸ்கோ நோக்கி தன் படையோடு போனார்.

அப்படி போயிருந்தாலும்.. இராணுவத் தலைமைகளை அகற்ற கோரி இருப்பாரே தவிர.. ஒருபோதும்.. புட்டினையோ.. புட்டின் ஆட்சியையோ கவிழ்க்க நினைத்திருக்கமாட்டார். மேற்குலகம் ஊதிப் பெருப்பிப்பது போல ஒன்றும் நடந்திருக்காது. நடக்கவும் விட்டிருக்க மாட்டார்கள்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

வாக்னர் என்ற தனிமனிதனின் செல்வாகினை நிலை நிறுத்த மேற்கொள்ளப்பட்ட ஒரு நகர்வாகத்தான் இதனைப் பார்க்க முடியுமே

யார் இசை மேதை வாக்னரையா சொல்கிறீர்கள்?

அல்லது பிரிகோசின் என்பதை வாக்னர் என தவறுதலாக எழுதி விட்டீர்களா?

3 minutes ago, nedukkalapoovan said:

ஆனாலும்.. எங்கும் சண்டையிடும் நோக்கில்.. ஆயுதங்களைப் பாவிக்கவில்லை.

6 உலங்கு வானூர்திகள், ஒரு பறக்கும் கட்டளை விமானத்தையும், 15 வரையான வானோடிகளையும் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

யார் இசை மேதை வாக்னரையா சொல்கிறீர்கள்?

அல்லது பிரிகோசின் என்பதை வாக்னர் என தவறுதலாக எழுதி விட்டீர்களா?

6 உலங்கு வானூர்திகள், ஒரு பறக்கும் கட்டளை விமானத்தையும், 15 வரையான வானோடிகளையும் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

வாக்னர் குழு தலைவரை தான் அப்படிச் சொல்லி இருக்குது.

இந்த உலங்கு வானூர்தி விழுத்திய தகவல்களை உக்ரைன் சார்ப்பு பிபிசி கூட உறுதிப்படுத்தப்படாத செய்தின்னு சொல்லி.. கைவிட்டு விட்டது. 

வாக்னர் குழு தலைவரின் குற்றச்சாட்டே ரஷ்சிய விமானப்படை ஏவுகணைகள் மூலம் தாக்கி தனது வீரர்களை கொன்று விட்டதாக.

ஆனால்.. ரஷ்சிய பாதுகாப்பு அமைச்சு அப்படி எதுவும் நடக்கவில்லை என்று கூறிவிட்டது.

இந்த நிலையில் தான் வாக்னர் குழு அதன் தலைவர் தலைமையில்.. மாஸ்கோ நோக்கி நீதிக்கான பயணம்.. இது சதிப் புரட்சியோ.. ஆட்சிக்கவிழ்ப்போ அல்ல.. என்று பகிரங்கமாக அறிவித்துக் கொண்டு தான் போனார். மேலும் தனது படைகளை எங்கும் சண்டையிட வேண்டாம் என்று கூறினார். இதன் மூலம்.. ரஷ்சிய அரச படைகளும் சரி.. பொலீஸ் மற்றும்.. இதர ரஷ்சிய ஆதரவுக் குழுக்களும் சரி வாக்னர் குழுவை தாக்கவில்லை. தடுக்கவும் இல்லை.

வாக்னர் குழு ஆயுதங்களோடு.. மாஸ்கோ நோக்கிய பயணத்தை யாரும் விருப்பவில்லை. அது எதிரிகளுக்கு சாதகமாக மாறக் கூடியது என்பதால்.. மாஸ்கோ நோக்கிய பயணத்தை தடுக்கவே முயற்சிக்கள் மேற்கொள்ளப்பட்டன.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nedukkalapoovan said:

வாக்னர் குழு தலைவரை தான் அப்படிச் சொல்லி இருக்குது.

அப்ப சரி. நானும் புதிதாக வாக்னர் என யாரோ வந்து விட்டார் என எண்ணிவிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

அப்ப சரி. நானும் புதிதாக வாக்னர் என யாரோ வந்து விட்டார் என எண்ணிவிட்டேன்.

கூடிய விளக்கத்துக்கான திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

கூடிய விளக்கத்துக்கான திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nedukkalapoovan said:

மேற்குலக வித்துவான்கள்.. உக்ரைனின் தோல்வியை இயலாமையை மறைக்க இதை தூக்கிப் பிடிக்கினம்.

வாக்னர் குழு ரஷ்சிய படைகளுடன் சேர்ந்து போரிடும் பல குழுக்களில் ஒன்று. அதில் ரஷ்சியாவுக்கு எதிராக மேற்குலகின் தூண்டலில் ரஷ்சியாவுக்கு உள்ளேயே பிரிவினை வேண்டிப் போராடிய செச்சின் அமைப்புக்களும் சாரும். 

வாக்னர் குழு கூடிய தன்னிச்சையாக செயற்பட அனுமதிக்கப்பட்டது. அது கூலிக்கு அமர்த்தப்பட்ட குழு ஆகினும்.. ரஷ்சிய குற்றவாளிகளை தெரிந்தெடுத்து பயிற்சி கொடுத்து உருவாக்கப்பட்ட அமைப்பு. ரஷ்சியாவே ஆயுதங்களும் வாகனங்களும் வழங்கியுள்ளது. 

பார்முட் நகரை வெற்றி கொள்ள இந்தப் படை அதிகம் பயன்படுத்தப்பட்டாலும்.. ரஷ்சிய இராணுவ அதிகாரிகள்... ரஷ்சிய இராணுவத்தின் தங்களின் புகழை அதிகரிக்கும் வகைக்கு இறுதி நேரத்தில் செயற்பட்டதால்.. வாக்னர் குழு இழப்புக்கள் மத்தியில் தான் பார்முட் நகரைக் கைப்பற்றி.. நீண்ட யுத்தத்தில் ரஷ்சியாவின் வெற்றியை உறுதி செய்ய உதவினர்.

ஆனாலும்.. ரஷ்சிய உளவு பிரிவுகள்.. இந்த கூலிக்குழுக்களால் ஆபத்து வரும் என்பதற்கு அண்மையில்.. ரஷ்சிய எல்லைக்குள் திட்டமிட்டு ஊடுருவித் தாக்குதல் நடத்திய உக்ரைனின் கூலிப்படைகளுக்கும்.. இவர்களுக்கும் தொடர்புகள் இருக்க சந்தேகிக்கப்பட்ட நிலையில்..

இந்த இராணுவக் குழுக்களை நேரடியாக ரஷ்சிய பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வர முயற்சிக்கப்பட்டது. ஏனைய குழுக்கள்.. அதற்கு இசைய... வாக்னர் குழு அதற்கு இணங்க மறுத்த நிலையில் தான்..

வாக்னர் குழு தன்னிச்சையாக.. ரஷ்சிய இராணுவ தளபதிகளுக்கு எதிராகக் குற்றம் சுமத்திக் கொண்டு அவர்களை பதவி கவிழ்க்கப் போவதாகச் சொல்லிக் கொண்டு மாஸ்கோவை நோக்கி போக முற்பட்டனர்.

அவர்கள் ஒன்றும் போரிட்டோ.. உக்ரைனின்... அமெரிக்காவின் ஆயுதங்களோடோ போகவில்லை. ரஷ்சிய படைகள் அளித்த ஆயுதங்கள் கனரக வாகனங்களோடு போயினர். ஆனாலும்.. எங்கும் சண்டையிடும் நோக்கில்.. ஆயுதங்களைப் பாவிக்கவில்லை. அதேபோல்.. ரஷ்சிய படைகளும் சரி.. பொலிஸும் சரி.. மக்களும் சரி.. இவர்களை எதிரிகளாகவும் பார்க்கவில்லை. அவர்கள் நாட்டுக்காகச் செய்த தியாகத்தி தான் மெச்சினர்.

வாக்னர் குழு தலைவன் என்ற தனிமனிதனின் செல்வாகினை நிலை நிறுத்த மேற்கொள்ளப்பட்ட ஒரு நகர்வாகத்தான் இதனைப் பார்க்க முடியுமே தவிர ரஷ்சிய அரசுக்கு எதிரான நடவடிக்கையாக இது வாக்னர் குழு தலைவர் உட்பட யாராலும் சொல்லப்படவில்லை.

இதில் புட்டினின் சாதுரியம்.. மக்களுக்கோ.. ரஷ்சிய படைகளுக்கோ.. வாக்னர் குழுவினருக்கோ.. இதர ரஷ்சிய ஆதரவுக் குழுக்களுக்கோ.. எந்த இழப்பும் இல்லாமல்.. பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தது தான்.

இதன் மூலம்.. மேற்குலகம் எதிர்பார்த்த ரஷ்சிய படைகளுக்கு எதிராக வாக்னர் குழு சண்டையிட்டால்.. மாஸ்கோவை பிடிக்கப் போனால்.. ரஷ்சிய படைகளை உக்ரைனில் இருந்து பின்வாங்க வேண்டி வரும்.. அல்லது ரஷ்சிய படைகளின் பல.. கவனம் சிதையும்.. இந்த நேரத்தில்.. தாங்கள் உக்ரைனின் சொலக்கியின் படைகளிடம் எதிர்பார்க்கும் வெற்றியை சுவைக்கலாம்.. மேற்குலக மக்களை ஏய்க்கலாம் என்று கனவு கண்டனர்.

ஆனால்.. புட்டின் சாமர்த்தியமாக காய் நகர்த்தி மோதல்கள் இன்றி எல்லாத்தையும் 24 மணி நேரத்துக்குள் முடிவுக்கு கொண்டு வந்துவிட்டார்.

வாக்னர் குழு அல்லாமல்.. வேறு உக்ரைன் சார்ப்புக் குழுக்கள் நுழைந்திருந்தால்.. அண்மையில் அப்படி நுழைந்து அழிந்து போன உக்ரைனின் ஊடுருவல் அணிக்கு நடந்த கதிதான் நிகழ்ந்திருக்கும். மாஸ்கோ செல்லும் வழியில் செல்லக் கூட காலம் இருந்திருக்காது. ஆனால்.. வாக்னர் குழுவை ரஷ்சியா எதிரியாகப் பார்க்கவில்லை. புட்டினும் பார்க்க விரும்பவில்லை. அதற்கு காரணம்.. வாக்னர் குழு ரஷ்சிய மக்களால் கட்டி அமைப்பட்ட ஒரு தனியார் இராணுவக் குழு. வாக்னர் தலைவர் புட்டினை ஒருபோதும் குற்றம் சாட்டியதில்லை. இராணுவ தலைமைகள் சிலவற்றோடு தான் அவருக்கு முரண்பாடிருந்தது. அவர்கள் மாஸ்கோவை தளமாகக் கொண்டியங்கிய படியால் தான்.. வாக்னர் மாஸ்கோ நோக்கி தன் படையோடு போனார்.

அப்படி போயிருந்தாலும்.. இராணுவத் தலைமைகளை அகற்ற கோரி இருப்பாரே தவிர.. ஒருபோதும்.. புட்டினையோ.. புட்டின் ஆட்சியையோ கவிழ்க்க நினைத்திருக்கமாட்டார். மேற்குலகம் ஊதிப் பெருப்பிப்பது போல ஒன்றும் நடந்திருக்காது. நடக்கவும் விட்டிருக்க மாட்டார்கள்.

கூள் டவுண், கூள் டவுண் நெடுக்ஸ், 

உங்க பலர் வக்னர் படையினரின் staged coup ஐ மலைபோல நம்பியிருந்து ஏமாற்றமடைந்த கடுப்பில இருக்கினம். பரபரப்பு சுசியம் ஸ்ரைலில ஆளாளுக்கு போஸ்ட் மோட்டம் ரிப்போட் வேற செய்யினம். 

உதுக்குள்ள வாய விட்டு வேண்டிக்கட்டாம வெளியில இருந்து postmortem றிப்போட்டுகள வாசிப்போம். 

***

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

வாக்னர் கூலிப்படை ரஷ்யாவை கைப்பற்றி சதிப்புரட்சி செய்தால் ஒட்டுமொத்த உலகிற்கே அழிவு நிச்சயம்.. எந்த ஒரு கட்டுப்பாடும் கடப்பாடும் இல்லாத கிரிமினல்களை கொண்ட கூலிப்படை அது..

அப்படிபட்ட ஒரு மோசமான கூலிபடையை புரின் சீராட்டி பாராட்டி ஆதரித்து வளர்த்து பயன்படுத்தி இருக்கிறார் என்றால் அவர் எவ்வளவு மோசமான சர்வாதிகாரியாக இருப்பார். வாலி சொன்ன மாதிரி பிரிகோஜினும் புரினும் மனித குலத்துக்கு எதிரான பயங்கரவாதிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காகம் இருக்க பனம் பழம் விழுந்த கதை நன்றாகவே நடக்கின்றது. இது அமெரிக்க வாழ்வில் கிடைத்த அதிஷ்டலாப லொத்தர் பரிசு.

ரஷ்ய அதிகாரங்கள் மாறணும்.
மேற்குலக சார்பாளர்கள் ஆட்சியமைக்கணும்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் ரஷ்யா இணையணும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

இன்னும் இரும்புக்கடைக்குப் போகவேண்டிய அய்ட்டங்களையும் கூட நிறுத்தியிருக்கலாம்.

😂

புடினின் அதிகார அமைப்பு எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதையும் அதன் பிளவுகளையும் உலகத்திற்கு இந்த சம்பவங்கள் வெளிகாட்டியுள்ளது.அது தான் எங்களது ரஷ்ய ஆதரவாளர்கள் அந்த நாட்டுபக்கம் தலைவைத்தே படுப்பதில்லை. உண்மையிலேயே தீர்க்கதரிசிகள்.  நாளைக்கு திங்கள் 26  ரஷ்யாவில்  பொது விடுமுறை தானே.😂

3 minutes ago, விளங்க நினைப்பவன் said:

 நாளைக்கு திங்கள் 26  ரஷ்யாவில்  பொது விடுமுறை தானே.😂

😂 
விடுமுறை காரணமாக நாளைக்கு ரஸ்ய செய்தி ஒன்றும் வராது. மேற்கின் ஊதுகுழல்களைத்தான் வாசிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, இணையவன் said:

😂 
விடுமுறை காரணமாக நாளைக்கு ரஸ்ய செய்தி ஒன்றும் வராது. மேற்கின் ஊதுகுழல்களைத்தான் வாசிக்க வேண்டும்.

உங்கள் அபிமான மேற்குலக ஊதுகுழல்கள் இலங்கை தமிழரின் உண்மையான பிரச்சனைகளை வெளி உலகிற்கு சொல்கின்றவா? இல்லையே?  😎

5 minutes ago, குமாரசாமி said:

உங்கள் அபிமான மேற்குலக ஊதுகுழல்கள் இலங்கை தமிழரின் உண்மையான பிரச்சனைகளை வெளி உலகிற்கு சொல்கின்றவா? இல்லையே?  😎

சொல்வதில்லை. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, விளங்க நினைப்பவன் said:

😂

புடினின் அதிகார அமைப்பு எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதையும் அதன் பிளவுகளையும் உலகத்திற்கு இந்த சம்பவங்கள் வெளிகாட்டியுள்ளது.அது தான் எங்களது ரஷ்ய ஆதரவாளர்கள் அந்த நாட்டுபக்கம் தலைவைத்தே படுப்பதில்லை. உண்மையிலேயே தீர்க்கதரிசிகள்.  நாளைக்கு திங்கள் 26  ரஷ்யாவில்  பொது விடுமுறை தானே.😂

ரூபிளின் பணப் பெறுமதி அதிகரித்து டொலரின், யூறோ வின் பெறுமதி வீழ்ச்சியடையும்போது சன்நயகக் காவல் புலம்பெயர்ஸ் ரஸ்யாவுக்கு ஓடிச் சென்று ரஸ்ய முறைமைதான் மனித குலத்திற்கு உகந்தது என்று ரஸ்ய புகழ்பாடும்போது அவர்களுடன்  சேர்த்து  ரஸ்ய ஆதரவாளர்களும் அங்கே போவார்கள் அதுவரை இங்கேதான் ரென்ற் அடித்துக் காத்திருப்பார்கள். 

😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாக்னர் வெளிக்கிட்டு போய் சேர்ந்த இடம் வேற எண்ட மாதிரி கதை போகுது

Bild

28 minutes ago, இணையவன் said:

சொல்வதில்லை. 🙂

ஏன் சொல்வதில்லை? 😎
தமிழர்கள் பயங்கரவாதிகள் என்பதால் தானே? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, குமாரசாமி said:

வாக்னர் வெளிக்கிட்டு போய் சேர்ந்த இடம் வேற எண்ட மாதிரி கதை போகுது

Bild

1. பெலரூஸ் அதிபர் லூக்கசென்கோ பார்க்க வீங்கிய உருளை கிழங்கு போல தெரிந்தாலும் - கத்தியில் நடப்பதில் கைதேர்ந்த அரசியல்வாதி.

புட்டிண் வீழ்ந்தால் - மேற்கு அடுத்து கவிழ்க்கப்போவது இவரைத்தான்.

அதே சமயம் பெலரூசில் இருந்து ஒரு போர்முனையை திறந்தால் - புட்டின் வீழ முன்னமே இவர் வீழ வாய்ப்புகள் அதிகம்.

ஆகவே மேற்கை எதிர்த்தபடி, ஆனால் புட்டின் பல தடவை கேட்டும், பெலரூசை யுத்தத்தில் சேர்க்காமல் விலக்கி நடக்கிறார். 

அத்தோடு வாக்னர் உள்ளே போய், புட்டினுக்கு செய்த அதே வேலையை பெலரூசில் செய்தால், பெலரூசின் அடுத்த ஜனாதிபதி பிரிகோசிந்தான்.

ஆகவே வாக்னர் கூலிப்படையை முழுவதுமாக லூக்கா பெலரூசின் உள்ளே எடுக்க, இன்னொரு போர் முனையை திறக்க சந்தர்ப்பம் குறைவு.

அப்படியே திறந்தாலும் பக்மூட்டை பிடிக்க வாக்னர் ஒரு வருடமாக முக்கியது, 2002 இல் கியவ் நோக்கி வந்த ரஸ்ய படையணியை உக்ரேன் துவம்சம் செய்ததை வைத்து பார்க்கும் போது - யுத்தம் தீவிரம் அடையும் ஆனால் வாக்னர் பெரிய அளவில் முன்னேறும் என்பது சந்தேகமே.

2. ரஸ்ய ஆதரவு தளங்களில் கூட, பிரிகோசின், மேலும் சிலர் மட்டுமே பெலரூஸ் போவதாயும், ஏனையோர் ரஸ்ய இராணுவத்தில் உள் வாங்கபடுவர் என்றே பேசி கொள்கிறார்கள்.

பிரி கோசினை நம்பி போன பல கூலிகள் நட்டாற்றில் விட பட்டுள்ளார்கள். கடும் கோபத்தில் உள்ளார்கள். அவர்கள் மட்டும் அல்ல, பக்கம் தாவிய ரஸ்ய இராணுவ அணிகள் கூட கடும் களை எடுப்புக்கு முகம் கொடுக்கும்.

அதே போல் கிரம்ளின் உள்ளேயும் களை எடுப்பு கட்டாயம் நடக்கும்.

கடந்த இரு நாட்களாக புட்டின், மெட்வெடேவ், சையிகோ, இன்னும் பலரை பொது வெளியில் காணவில்லை. இவர்கள் யாரும் சாமத்திய படுகிற வயசு கூட இல்லை.

பார்ப்போம்…யார் தப்புகிறாத்கள்…யார் களை எடுக்கப்படுகிறார்கள் என்பது விரைவில் தெரிய வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்யா ஸ்டிரோம் இசட் என்ற இன்னொரு கூலிப்படை, நேற்று பிரிகோசினை ஆதரித்து வெளியிட்ட வீடியோவும், இன்று அதே படை பிரிகோசினை வாண்டை, வாண்டையாக திட்டும் வீடியோவும் 👇.

இப்படி பல அரசியல்வாதிகள், இராணுவ கட்டளைதளபதிகளை பிரிகோசின் கோத்து விட்டு விட்டு, பெலரூசுக்கு எஸ் ஆகி விட்டார்🤣.

  • கருத்துக்கள உறவுகள்

பிரிகோசினை நம்பி பக்கம் மாறி - இப்போ சிக்கலில் உள்ள ரஸ்யாவின் இராணுவ அணிகள் இவையாம் 👇.

1. Military Unit 11659: - Command of the 22nd Separate Guards Special Purpose Brigade (RosGvardia) - Commandant Company - 2nd Special Communications Detachment

2. 411th Detachment of the 22nd Separate Guards Special Purpose Brigade - Location: Stepnoy Village, Rostov-on-Don

3. 108th Bataysk GRU Spetsnaz Detachment - Comprising of the entire detachment and all of their Typhoon military vehicles

4. Unit 14254: 387th Object "C" of the 12th Main Defense Ministry Directorate (nuclear) - Location: Military Town of Voronezh-45 - Surrendered without any resistance

5. Bugaevka Checkpoint - Operated by Border Guards in Voronezh

6. Entire FSB Federal Border Service - Part of the Regional Command Center for Voronezh region of the Central Military District

7. FSB Border Service at Chertkovo Customs & Border Checkpoint

8. Unit 7437 - RosGvardia Spetsnaz Motorized Regiment

9. Unit 3677 - RosGvardia Separate Battalion in Voronezh

10. Unit 63453 - Separate Tank Brigade in Boguchar, Voronezh (MoD)

1 hour ago, குமாரசாமி said:

ஏன் சொல்வதில்லை? 😎
தமிழர்கள் பயங்கரவாதிகள் என்பதால் தானே? :cool:

இதற்குப் பதில் எழுதினாலும் நீங்கள் வாசிக்கப் போவதில்லை. இன்னொரு திரியில் இதே கேள்வியைக் கேட்பீர்கள். இருந்தாலும் - 

செய்தி எடுப்பதற்கு நிருபர் வேண்டும். மேற்கு ஊடக நிருபர்கள் யாழ்ப்பாணத்தில் நின்று செய்தி சேகரிப்பதற்கு யார் பணம் கொடுப்பது ? இலங்கைத் தமிழரின் செய்தியை அக்கறையோடு வாசிக்கும் நாலைந்து பேருக்காகப் பணம் செலவிடுவார்களா ?

2009 ற்கு முன்னர் பிரான்சில் இருந்த புலிகளின் அமைப்பினர் அடிக்கடி போர் நிலவரத்தை பிரெஞ்சு ஊடகங்களுக்கு அனுப்புவார்கள். அவர்கள் அதை அப்படியே இலங்கைத் தூதரகத்துக்கு அனுப்பி ஒப்புதல் கேட்பார்கள், செய்தி வெளியே வராது. ஏனென்றால் புலிகள் அங்கீகரிக்கப் படாத அமைப்பு. அதையும் மீறி சில செய்திகள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

இது தவிர பிரெஞ்சு தொலைக்காட்சியில் 2009 ற்குப் பின்னர் இலங்கை சென்ற நிருபர்கள் தாம் நேரில் கண்டவற்றையும் ஒளிப்படக் கருவியை மறைத்தும் எடுத்து அங்கு தமிழருக்கு நடக்கும் கொடுமைகளைக் காட்டியுள்ளன. குறிப்பாக இராணுவம் ஆக்கிரமித்த பொரதுமக்கள் இருப்பிடங்கள் தொடர்பானவை.

இதைவிட முக்கியமானது, இலங்கையிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட தமிழ் அரசியல் கட்சி வெளிநாட்டு ஊடகங்களோடு தொடர்பு வைத்து அடிக்கடி அங்கு நடைபெறும் சீர்கேடுகளை அனுப்ப வேண்டும். ஆனால் இப்படி நடப்பதாகத் தெரியவில்லை.

(பிற்குறிப்பு : ரஸ்யா ஆபிரிக்காவிலிருந்து தங்கம் கடடத்துவது பற்றித் தேடிப்பாருங்கள். குறிப்பாக அங்கு வக்னர் என்ன செய்தவர்கள் என்பதை. இதைப் பற்றி விவாதிப்பதற்கான திரி இது இல்லை)

39 minutes ago, goshan_che said:

ரஸ்யா ஸ்டிரோம் இசட் என்ற இன்னொரு கூலிப்படை, நேற்று பிரிகோசினை ஆதரித்து வெளியிட்ட வீடியோவும், இன்று அதே படை பிரிகோசினை வாண்டை, வாண்டையாக திட்டும் வீடியோவும் 👇.

😮

இந்த ஸ்டிரோம் இசட் கூலிக்குழு இந்த வருடம் உருவாக்கப்பட்டதாம். இதில் உள்ளவர்கள் ரஸ்ய சிறைகளில் தண்டனை அனுபவித்து வந்த கிரிமினல்களாம். 😂 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.