Jump to content

ஊசலாடும் உயிர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என்னமாதிரி ராஜா படகு ஒன்று வெளிக்கிடப்போகுது போவமா? என்று கேட்டார் குமார் அண்ண‌ ?

எங்க அண்ண அவுஸ்ரேலியாதான் ம்கும் உங்களுக்கு செய்தி தெரியாதோ?

இப்ப கடற்படை எங்க கப்பல் கிளம்பினாலும் அங்க வந்து அள்ளிக்கொண்டு போய் கோட்ஸ்ல ஒப்படைச்சு ஜெயிலில போட்டு கேச போடுறான் நாள் மாதம், வருசக்கணக்கா இழுபட என்னால முடியாது.

இந்த முறை அப்படி நடக்காது என்ன நம்பு ம் உங்கள நம்பலாம் நீங்கதான் கடலையே கரைச்சு குடிச்சவர் ஆச்சே.

ம் சொல்லுறன்  குமார் அண்ண!

என்று சொல்ல சரி ஆனால் இதைப்பற்றி மூச்சும் விடக்கூடாது சரி அண்ண யாரிட்டயும் சொல்ல மாட்டன் .

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்க நாட்டில் உள்ள மக்கள் நாட்டை விட்டு கடலாலும் , வானாலும் நாட்டை விட்டு ஓடிக்கொண்டே இருந்தார்கள் பொருட்கள் இல்லை , பொருட்கள் அதிக விலை தட்டுப்பாடு நாள் முழுக்க வரிசை என மக்கள் மனதையும் வாழ்க்கையையும் தினம் தினம் வாட்டி வதைத்தது. எவரிடம் கேட்டாலும் இந்த நாட்டில் இருப்பதை விட எங்கேயாவது ஓடி விடலாம் போய் விடலாம் என சொல்வார்கள் ( இந்த கால கட்டத்தில் இலங்கையில் நின்றவர்களுக்கு அதன் வலி புரியும்)

நானும் நாட்டில் நடக்கும் விசயங்களை பார்த்து பேசாமல் படகு ஏறலாம் என நினைத்து அம்மாவிடம் சொன்னேன் அம்மா நானும் படகு ஏறி வேற நாட்டுக்கு போகப்போகிறன். அம்மாவோ உனக்கு என்ன விசரோ நாட்டில நடக்கிறது தெரியாதா செய்தி வாசிக்கலயா புடிச்சு புடிச்சு உள்ள போடுறத்த பார்க்கலயா? அங்க போனாலும் அவனுகள் எடுக்க மாட்டன் என்றூ சொல்லி விளம்பரமா போடுறாங்க............ ம் அப்ப என்னதான் செய்யுற இந்த நாட்டில?? என்று கோபத்தில் கேள்வி கேட்டு நானும் சைக்கிளை எடுத்து கிளம்பி விட்டன் 

போகும் வழியில் நண்பனை காண்கிறேன் என்ன நண்பா கேஸ் எப்படி போகிறது?

நம்மள நடுத்தெருவில தான் நிப்பாட்ட போறாங்கள் என்றான். ஏன்டா?

இன்னும் தீர்ப்பு கிடைக்கலையா?

இல்லடா மாதம் மாதம் பிற்போட்டுக் கொண்டே இருக்கானுகள். வேற வேலையும் எடுக்க இயலாது வேற நாட்டுக்கும் போக இயலாது என சலிப்பாக சொன்னான் அவன் . அவன்ற விசாரணையோ போலியான நியமனக்கடிதத்தை வைத்து வேலை எடுத்த என்ற குற்றச்சாட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதுவரை நான்கு ஆண்டுகள் முடிந்த நிலையில் அந்த வழக்கு நிலுவை வழக்கு போல இழுத்துக்கொண்டே போய்கொண்டிருந்தது அவனது போலிக்கடிதத்தை அச்சடித்தது யார் என ( தெரியும்) கண்டுபிடிக்க முடியாத அரசாங்கம் , பொலிஸ் அதை வைத்து வேலை எடுத்தவர்கள் மீது வழக்கு தொடர்ந்து வருடக்கணக்காக வக்கீலுக்கு காசு வாங்கிக்கொடுக்கும் வேலையை செய்தது. நம்ம நாட்டு டிசைன் அப்படி விசித்திரமான‌ நாடும்தானே. சரிடா நீ என்ன செய்யப்போறா? அவன் என்னிடம் கேட்க நான் நாட்டை விட்டுப்போகப்போறன் மச்சி....................................... என்ன?

படகு ஏறப்போறன் என்று சொல்ல............................................................. உனக்கு ஒரே பகிடிதான்டா என சொல்லி அந்த இடத்தை விட்டு நகர்தோம்.     

தொடரும் உயிர்...............................................................

Edited by தனிக்காட்டு ராஜா
  • Like 9
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

படகு ஏறப்போறன் என்று சொல்ல............................................................. உனக்கு ஒரே பகிடிதான்டா என சொல்லி அந்த இடத்தை விட்டு நகர்தோம். 

அவுசுக்கு போற படகெல்லாம் கிழக்கில இருந்து தான் போகுதாமே?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

அவுசுக்கு போற படகெல்லாம் கிழக்கில இருந்து தான் போகுதாமே?

கிழக்கு இலகு வழி என சொல்கிறார்கள் அண்ண 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த நாள் குமார் அண்ணையை காண்கிறேன் என்ன அண்ண என்னமாதிரி ஏதும் விளக்கம் தெரிந்ததா? காசு ஏதும் கொடுக்கணுமா? 
அப்படி ஒன்றூம் இல்ல

நான் மூணூ பேரை சிபாரிசு செய்திருக்கிறன் போய் இறங்கி கொடுத்தா போதும். சரி அண்ண மொத்தம் எத்தன பேரு? 
எனக்கும் கடலுக்க போய் பழக்க இல்ல. 
கடல் கொந்தளிச்சா என்ன நடக்கும் ? 
கடல் கொந்தளிச்சா என்ன! ...............................கடலில் விழுந்து சாகிறதான் என்றார் அவர்!
காசு கொடுத்தா வாங்கி வாங்கி வந்திருக்க இந்த உசிர??...............

இந்த வசனம் ஒரு தடவை என்னை யோசிக்க வைத்து விட்டது அப்படியெல்லாம் நடக்காதுடா 30 பேர் வரும் போல ஒரு நாலைஞ்சு சிம் காட் வாங்கு ...........................வீட்டில சொல்லிட்டயா? 
எங்க சொன்னா விடமாட்டாங்களே துணீஞ்சு ஒரு முடிவ எடு என சொல்லிவிட்டு அவசரமாக அவர் சென்று விட்டார். எனக்கு யோசனையோ உலகத்தை விட பெரிசாக தோன்றியது . 
துணிந்து முடிவெடுத்து விட்டேன் போவதென ஆனால் வீட்டில சொல்வதில்லை என  முடிவெடுத்தேன் சில உடுப்புக்களை மாத்திரம் பையில் வைத்திருந்தேன் தேவையான மருந்துகள் பனடோல் சித்தாலபே என்பனவற்றை வைத்திருந்தேன் .
எப்ப சொல்வார் என்ற யோசனையில் ஒழுங்காக சாப்பிட முடியவில்லை தூக்கம் இல்லை யோசனை மட்டும் இருந்தது அம்மாவோ என்ன தம்பி சுகம் இல்லையா? இல்ல அம்மா அப்படி ஒன்றும் இல்ல என சொல்லி  நகர்ந்துவிடுவேன் நான் ஏன் எதற்க்காக செல்ல வேண்டும் என்ற கேள்வி என் ஆழ் மனதில் தோன்றினாலும் விடையோ குடும்பம் நன்றாக இருக்க நல்ல வாழ்க்கை சகோதரங்களுக்கு அமைத்துக்கொடுக்க‌ வேண்டும் என்ற பதில் மட்டுமே மனது சொல்லிக்கொண்டிருந்தது.

சிலநேரம் நாம் துணிந்து எடுக்கும் முடிவுகள் தலைகீழாக மாறூம் போதே நாம் பிழயான முடிவைத்தான் சரியாக எடுத்து இருக்கிறமோ என எண்ணத்தோன்றுகிறது 

குமார் அண்ணையிடம் இருந்து எந்த அழைப்பும் இல்லை...............

தொடரும்................................   உயிர்

@suvy

 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய சூழ்நிலை கதை......எழுதுங்கோ ராசன் வாசிப்பம்.....

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வலி நிறைந்த கதை........தொடருங்கள் தனி........! 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்து நிலைமையை... அந்த மண்ணில் இருந்தே எழுதுவதால்,
இந்தக் கதைக்கு கனம் அதிகம்.
சரியான தருணத்தில் ஆரம்பிக்கப் பட்ட கதை. 
தொடருங்கள் தனிக்காட்டு ராஜா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்து நடையில் நல்ல மாற்றம் தெரிகிறது. தொடர்ந்து எழுதுங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, குமாரசாமி said:

தற்போதைய சூழ்நிலை கதை......எழுதுங்கோ ராசன் வாசிப்பம்.....

நன்றி அண்ண 

 

22 hours ago, suvy said:

வலி நிறைந்த கதை........தொடருங்கள் தனி........! 

ஓம் அண்ண நன்றி

 

18 hours ago, தமிழ் சிறி said:

தாயகத்து நிலைமையை... அந்த மண்ணில் இருந்தே எழுதுவதால்,
இந்தக் கதைக்கு கனம் அதிகம்.
சரியான தருணத்தில் ஆரம்பிக்கப் பட்ட கதை. 
தொடருங்கள் தனிக்காட்டு ராஜா. 

யாழின் வாசகன் யாழ்  இயங்காமல் போய்விடக்கூடாது என வேலை இடத்தில் இருந்து எழுதுகிறேன் அண்ண நன்றி

 

13 hours ago, நிலாமதி said:

எழுத்து நடையில் நல்ல மாற்றம் தெரிகிறது. தொடர்ந்து எழுதுங்கோ 

அப்படியா அக்கா மிக்க நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/7/2023 at 07:01, தனிக்காட்டு ராஜா said:

தொடரும்................................   உயிர்

தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/7/2023 at 06:17, தனிக்காட்டு ராஜா said:

என்னமாதிரி ராஜா படகு ஒன்று வெளிக்கிடப்போகுது போவமா?

அந்த மண்ணிலே இருந்து,அந்து மக்களின் மனநிலையை பதிவு செய்தல் நன்று. மனித வாழ்வே தேடல்தானே. ஆனால், தமிழினமோ எங்கே அகதியவது என்ற தேடல் முற்றுப்புள்ளியற்று அரைநூற்றாண்டைக் கடந்தும் தொடர்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kavi arunasalam said:

தொடருங்கள்

 

20 hours ago, ஏராளன் said:

தொடருங்கள் தனி.

 

20 hours ago, nochchi said:

அந்த மண்ணிலே இருந்து,அந்து மக்களின் மனநிலையை பதிவு செய்தல் நன்று. மனித வாழ்வே தேடல்தானே. ஆனால், தமிழினமோ எங்கே அகதியவது என்ற தேடல் முற்றுப்புள்ளியற்று அரைநூற்றாண்டைக் கடந்தும் தொடர்கிறது. 

மூவருக்கும் நன்றிகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த நாள் குமார் அண்ணனிடம் இருந்து அழைப்பு வருகிறது.................
ராஜா மாலை 6 மணிக்கு ரெடியாக இரு என‌  எனக்கோ கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை உடலில் ஒரு வித நடுக்கமும் பயமும் தொற்றிக்கொள்ள வீடுசென்று பையை எடுத்து அம்மா நான் யாழ்ப்பாணத்துக்கு வேலைக்கு போகிறேன் ஒரு மாதம் கழித்துதான் வீடு வருவேன். அம்மாவோ குறுக்கிட்டு நீதானே யாழ்ப்பாண பக்கமும் இனி தல வச்சி கூட‌படுக்கமாட்டன் என்ற சொன்ன நீ பிறகேன்? அங்க வேலைக்கு போற?
இல்ல அம்மா இந்த கொன்றக் எடுத்தது எனக்கு தெரிந்த எஞ்சினியர் அவர்ர கட்டிடம் தான் கட்டப்போறம் அங்க வேலைக்கு ஆட்கள் இல்ல தெரியும் தானே சம்பளம் வேற கூட கிடைக்கும் .
அம்மாவோ அவங்க உங்கள அடிச்சு துரத்தாதவரைக்கும் சரி சீமேந்து அதிகம் அளையாத உனக்கு அலர்ஜிக் குணம் இருக்கிறது அல்லவா ஓம் அம்மா எல்லோரும் கவனமாக இருங்க அப்பா தங்கச்சியை பார்த்துக்கொள்ளுங்க என அழ முடியாமல் வீட்டை விட்டு வெளியேறுகிறேன்.
 
( நான் யாழ்ப்பாணம் ஏன் செல்ல மாட்டேன் என்பதற்க்கான காரணம் அங்கே வேலை அதிகம் என சொல்லி எங்களை ஒருவர் கட்டிட வேலைக்கு அனுப்பி இருந்தார் அங்கு சென்றோம். அங்கே சென்றவுடன் எங்களை வேலைக்கு எடுத்தவர் மிகவும் அருவருக்கத்தக்கதாகவும் கீழ்த்தரமாகவும் நடத்தினார் . ஒரு நாள் வேலை செய்து அந்த நாளுக்கான கூலியை வாங்கி அடுத்த நாளே பஸ் பிடித்து ஊருக்கு வந்தோம் ) இன்று அவரோ எங்களது ஊரில் அவரது மகன் வைத்தியர் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கிறார் காலம் பொல்லாதது.

கதைக்கு வருவோம்................ 

மெயின் வீதி வந்ததும் அங்கே வான் வருகிறது மெதுவாக‌ கதவை திறந்த குமார் அண்ண. உள்ள வா யாரும் பாரக்கலயே என கேட்டார் இல்ல அண்ண சந்தேகமும் இல்ல  உள்ளே ஏறியதும் அந்த வான் நிறையவே ஆட்கள் மிக நெருக்கமாக இருந்தனர். வான் ஒரு இடத்தில் போய் நின்றது சிம் அட்டைகளை மாற்றி விட சொன்னார்கள் பழைய சிம்மை வீசிய உடனே வான் மீண்டும் புறப்பட்டது போகும் வழியில் தகவல்கள் இன்னுமொருவருக்கும்  தகவல் பரிமாறப்பட்டே வந்த‌து. அவர்களும் எங்களைப்போலவே வருகிறவர்கள் என‌ ஊகித்துக்கொண்டேன். இரவு  வரை ஓடிய வான் அதிகாலை 4 மணிக்கு நின்றது சிலர் ஆட்டோக்களில் ஏற்றிச்செல்லப்பட்டனர் மறைவான இடங்களுக்கு சிலர் வானுக்குள் இருந்தனர். 
 
 நானும் ஒரு பத்துப்பேர் வானுக்குள் இருந்து ஆட்டோக்களில் மாற்றப்பட்டு ஒரு நாள் முளுக்க வாகனத்திலே சுற்றினோம் எங்கேயும் தங்காமல் தங்கினால் சந்தேகம் வந்துவிடும் என்பதால் அடுத்த நாள்  அதிகாலை ஆட்டோ ஓர் காட்டுப்பகுதிக்கு சென்றது. அங்கே போனபோதுதான் பார்த்தேன் அங்கே 45 பேர் வரை இருந்தார்கள் விடிவதற்குள் படகில் ஏறி ஆகவேண்டும் என சொன்னார் .ஒருவர் சிறிய படகில் ஏற்றி ஏற்றி ஆட்களை படகிற்கு அனுப்பினார்கள் படகும் பார்க்க மிக பெரிதாக இருந்தது மொத்தமாக ஆட்கள் ஏறிய பின்னர் ஆட்கள் கணக்கெடுக்கப்பட்டது 30 பேர்தான் போக கூடிய படகில் 45 பேர். ஏற்றப்பட்டனர் ஆட்கள் அதிகமாகவே இருந்தார்கள் . அதில் 6 பெண்களும் 4 குழந்தைகளும் அடக்கம்.  எல்லோரும் ஒரு தொகைப்பணத்தை கொடுத்தே வந்திருக்கிறார்கள் அந்த பணத்தை வைத்தே படகு வாங்கி அதை சரி பார்த்து பொருட்கள் அத்தனையும் வாங்கி உள்ளே வைத்திருக்கிறார்கள் என்பதும் படகில் ஏறிய போதே தெரிந்தது.

படகில் ஏறிய எங்களை உள்ளே விறகு அடுக்குவது போல அடுக்கிவிட்டார்கள் ஐஸ் வைக்கும் அறையென நினைக்கிறேன் யாரும் அதிகம் சத்தம் போடக்கூடாது வெளியிலும் வரக்கூடாது பாத்றூம் கிடையாது அப்படி அவசரம் என்றால் ஒருவர் மட்டும் வெளியில் வந்து படகின் பின் ப‌குதியில் கழித்துவிட்டு உள்ளே செல்ல வேண்டும் நான் குமார் அண்ணனை பார்க்க அவர் கண்ணைக்காட்டி சத்தம் போடாமல் இரு சர்வதேச கடல் வந்த பிறகு விளக்கமாக சொல்கிறேன் என்றார். அவரும் அந்த படகை இயக்கக்போகும் ஒருவர் என எனக்கு அப்போதுதான் தெரிந்தது . படகு எல்லோரின் பெருமூச்சின் ஆசுவாசத்தில் சில தூரம் செல்ல தூரத்தில் பெரும் இரைச்சல் சத்தம்  கேட்க கடற்படைப்படை படகோ  நினைக்க‌ கடற்படைப்படகு எங்கள் படகை  நோக்கி நீரைக்கிளித்து சத்தத்துடன் இரைந்து வருகிறது.

தொடரும் ..........

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வந்த கப்பல் எங்களை நோக்கித்தான் வருகிறது என பார்த்தால்! அது எங்கள் அருகாமையால் செல்கிறது காரணம் அந்த நேரத்தில் வெளிக்கிடும் சிறிய படகுகளை துறைமுகத்தில் இருந்து  கடற்படை கப்பல்களுக்கு மீன்பிடிக்காக செல்கிறது என‌ தெரிவிக்கப்படும்  அவர்களுக்கும் சந்தேகம் வரவில்லை. இருந்தாலும் எங்களுக்கெல்லாம் நடுக்கமும் பயமுமாக இருந்தது மாலை ஆகியதும் படகு மெதுவாகியது. அப்போது மேலே வந்த அனைவரும் பெருமூச்சு விட்டார்கள் ஆனால் சர்வதேச கடலுக்குள் செல்ல அதிகாலை வரை படகு ஓட்டி ஆகவேண்டும் . மேலே வந்தவர்களுக்கு அறிவித்தல் கொடுக்கிறார் ஒருவர் நீரை அதிகம் வீணாக்கக் கூடாது உப்பு நீரில் குளிக்கலாம் இரண்டு கப் தண்ணீர் உடம்பில் ஊற்றலாம் அதும் 3 நாளுக்கு ஒரு தடவை மட்டுமே குளிக்க முடியும். குடிக்க ஒரு டம்ளர் தண்ணி . கடலில் அதிக காற்று படகு ஆடினால் சமைக்க முடியாது விஸ்கட் ஏதாவதை சாப்பிட வேண்டுமென.

மாலை நேரமானதால் அன்றைய நாள் சமைக்க முடியவில்லை தேநீரும் விஸ்கட்டும் தந்தார்கள் உணவுகளை விட அதிக எரிபொருளே ஏற்றி இருந்தார்கள் தேநீரை குடித்த பிறகே அரைவாசிப்பேருக்கு வாந்தி வரத்தொட்டங்கியது எனக்கும் சேர்த்து உடனே புளியம்பழத்தை கொண்டு தந்தார்கள் வாயில் போட்டுக்கொள்ள ஆனால் வாந்தி நின்றபாடில்லை சில தூங்க சிலருக்கும் குமட்டலாகவே இருந்தது அதையெல்லாம் அவர்கள் கணக்கிலும் எடுக்க வில்லை சிறிது நேரம் கழித்து படகில் உள்ள லைட்டுக்களை அணைத்து சிறிய பல்பு ஒன்றை வைத்து பயணத்தை தொடந்தார்கள் எல்லோரும் வாந்தி மயக்கத்தில் இருந்தனர் 

நான் குமார் அண்ணனை தேடுகிறேன் அவரும் அந்த படகை செலுத்தும் மூவரும் கதைத்து கதைத்து படகை ஓட்டுகிறார்கள் .
அடுத்தநாள் காலை விடிகிறது அதிகாலையை சூரியன் மெதுவாக வானத்தினுள்ளும் கடலலில் இருந்து எழும் தோற்றம் பார்க்க அழகாக இருந்தது. அப்போதுதான் சமுத்திரத்தின் அகண்ட உடலைப்பார்க்கிறேன் சுற்றியும் கடல்நீர் எங்கே இருக்கிறோம் என தெரியாது முன்பு பெரிதாக தெரிந்த படகு அந்த சமுத்திரத்தின் பெருவெளியில் கடுகு போல் காட்சியளிக்கிறது . இன்னும் ஒரு மணிநேரத்தில் சர்வதேச கடல் ஆகிடும் என சொல்ல நிம்மதி என்றாலும் என்னென்ன துன்ப துயரங்களை சந்திக்க போகிறோமோ என அந்த சமுத்திரத்தை விட பெரிய கேள்வியே எங்கள் எல்லோர் மனதிலும். அதன் பிறகே ஆளையாள் ஊரை பற்றி விசாரித்து கொண்டிருந்தோம். அப்போது அதில் வந்த சில‌ருக்கு காலைக் கடன் கழிக்க மிக அவதியுற்றார்கள் காரணம்  ஆட்கள் பார்த்தாலோ அல்லது அருகில் நின்றாலோ அவர்களுக்கு கழிக்க முடியாத மனநிலையும் (வாராது) வெட்கமும்தான் அதுவும் ஒரு பிரச்சினையாக படகில் எழுகிறது .

தொடரும்...................

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஏராளன் said:

தொடருங்கள் தனி.

இரண்டாவது மகள்  பிறந்திருக்கிறாள் அதனால நேரம் இல்லாத நிலை எழுதுவேன் நேரம் வரும் போது

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இரண்டாவது மகள்  பிறந்திருக்கிறாள் அதனால நேரம் இல்லாத நிலை எழுதுவேன் நேரம் வரும் போது

வாழ்த்துகள் தனி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் உங்கள் பிள்ளைக்கும் குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள்........!  💐

கதையும் எழுத்து நடையும் நன்றாகவே இருக்கின்றது......தொடருங்கள்.......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/7/2023 at 10:58, ஏராளன் said:

வாழ்த்துகள் தனி.

 

On 29/7/2023 at 22:46, suvy said:

முதலில் உங்கள் பிள்ளைக்கும் குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள்........!  💐

கதையும் எழுத்து நடையும் நன்றாகவே இருக்கின்றது......தொடருங்கள்.......!  👍

மிக்க நன்றி இருவருக்கும் 

 

அன்றைய நாள் படகு ஓரத்தில் பொலித்தீனினால் ஒரு மறைப்பு கட்டப்பட்டது காலைக்கடன் கழிக்க‌ படகும் நகர்கிறது சர்வதேச கடலுக்குள் நுழைந்து விட்டோம்........ கவலை இல்லை இனிமே என்கிறார்கள் படகை செலுத்துபவர்கள். ஆனால் வாந்தியும் தலைசுற்றும் நின்றபாடிலில்லை மதியம் வரை ஓடிய படகை நிறுத்திவிட்டு சமைக்க ஆயத்தமானார்கள் நங்கூரத்திற்கு சீ அங்கர்( Sea Anchor) என்றூ சொல்லப்படுகின்ற பரசூட்  வடிவிலான ஓர் பொருளை (படங்கினால் ஆன ஒன்றை) கடலிலில் மிதக்க விட படகு ஆடாமல் அசையாமல் இருந்தது.   படகு எஞ்சினும் தனது சூட்டை மெதுவாக குறைத்துக்கொள்கிறது.

சோறும் கறியும் சமைத்தார்கள் ஆனால் சாப்பிட யாருக்கும் மனதில்லை காரணம் வாந்தி. இருந்தாலும் சாப்பிட்டே ஆகவேண்டும் மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக சாப்பாட்டை சாப்பிட தொண்டை நோவு அனைவரையும் தடுத்தது நீரே அதிகம் தேவைப்பட்டது ஆனால் நீரை அதிகம் பாவிக்க வேண்டாம் என சொன்னார்கள் குளிப்பு இல்லை பல் துலக்கல் இல்லை  வறண்ட உதடு உப்புக்காற்றில் பிசுபிசுத்துப்போன உடல்கள் மரத்துப்போன தலைமுடி இறந்து கொண்டிருக்கும் நம்பிக்கையற்ற மனது இப்படி கடல் பயணம் தொடர்கிறது எல்லோர் மனதிலும் ஏன் வந்தோம்? இலங்கையில் இருந்து செத்து இருக்கலாம் என்ற மனநிலை தோன்றியது.

இப்படி பகல் இரவு படகு ஓட்டமாகவே எங்களுக்கு நகர்ந்தது நாட்களும் நகர்கிறது. என்னை தவிர மற்றவர்களை கூட்டி வந்த ஏஜன்சிக்கும் வந்தவர்களுக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது அதாவது 15 நாட்களில் செல்லலாம் என சொல்லியே கூட்டி வந்திருக்கிறார். ஆனால் கடல் பயணத்தை சொல்ல முடியாதல்லவா முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இதுதான் கடல் வாழ்க்கையும். நானும் அப்போதுதான் கடலில் இறங்கி தங்கி நின்று மீன் பிடிக்கும் மீனவர்களின் வாழ்க்கையையும் எண்ணிப்பார்க்கிறேன் எத்தனை கப்பல்கள் குறுக்கே செல்கிறது அதிலிருந்து பாதுகாப்பாக வலை, வள்ளங்களை காப்பாற்ற வேண்டும் காற்று , மழை புயல் என எத்தனை சாவால்களை கடந்து அவர்கள் மீன்பிடிக்க செல்கிறார்கள் சிலவேளை புயலில் சிக்கி , படகு பழுதாகி காணாமலும் போகிறார்கள். குறுக்கே எத்தனை கப்பலகள் போனாலும் சைகை காட்டியும் அவர்களும் காணாதவர்கள் போல கடந்து விடுகிறார்கள் .

நாட்கள் செல்ல செல்ல உணவு பற்றாக்குறை ஏற்படுகிறது .எஞ்சினும் அடிக்கடி பழுதாகி விடுகிறது எந்த நேரமும் இயங்கிக்கொண்டிருப்பதால். அப்போது படகில் இருக்கும் அனைவருக்கும் அறிவுறுத்தல் கொடுக்கப்படுகிறது இனிமேல்  ஒரு நேரக்கஞ்சிதான் கிடைக்கும் தண்ணீரும் அதிகம் இல்லை அதனால் தண்ணீரை இன்னும் சிக்கமாக பாவியுங்கள் என. படகும் அடிக்கடி பழுதாகி விட எங்களுக்குள் ஏதாவது நாட்டுக்கு செல்லலாம் என நினைத்திருந்த கனவு மெதுவாக கலைகிறது எங்கோ காடோ அல்லது மணல் மேடோ தெரிந்தால் அங்கே இறங்கி இறந்தாலே போதும் என்ற மனநிலைக்கு வந்து விட்டோம்.

(கோபம் மட்டும் கொந்தளிக்கிறது கடல் போல)

தொடரும் ................................

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு உயிரும் தப்பித் பிழைக்க எவ்வளவு இன்னல்களைக் கடந்து வரவேண்டிக் கிடக்கு........!  😢

தொடருங்கள் தனி......!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

On 31/7/2023 at 13:23, suvy said:

ஒவ்வொரு உயிரும் தப்பித் பிழைக்க எவ்வளவு இன்னல்களைக் கடந்து வரவேண்டிக் கிடக்கு........!  😢

தொடருங்கள் தனி......!  

உங்களுக்காகவே எழுதணூம் போல தோன்றுகிறது நன்றி அண்ண ஊக்குவிப்புக்கு 😍

 

இப்படி பயணம்  தொடர அடிக்கடி அடிக்கடி எழுந்து பார்ப்பதும் ஏதாவது ஊரோ, மலையோ , காடோ தெரிகிறதா என  அழுவதுமாக  பார்த்துக்கொண்டே இருக்க‌  படகு எஞ்சின் மொத்தமாக பழுதாகி விடுகிறது. என்ன செய்வதென  ஒன்றும் புரியவில்லை .குமார் அண்ணை சந்திக்க ஒன்றூ மெசின மொத்தமா பிரிக்கணூம் , வெல்ட்ட மாத்தணூம் ஒயில மாத்தணூம்  என்கிறார் அது செய்யவே ரெண்டு நாளுக்கு மேல் ஆகிடும் போல என்கிறார் யாரிட்டையும் சொல்லாத எனவும் சொல்லி விட்டார் நானோ உங்கள நம்பி வந்தன் இப்படி மொத்தமா கொண்டு நடுக்கடலில் விட்டு விட்டுத்தீங்களே என நான் அழ அழாதே சரி பண்ணிருவன் உனக்கு என்மேல நம்பிக்கை இல்லையா என அவர் கேட்க பதில் சொல்ல முடியாமல் விம்மி விம்மி அழுகிறேன் நான்.

படகு நங்கூரமிடப்படுகிறது உதவிக்கு யாரும் இல்லை எந்த கப்பலும் கண்ணில் படவில்லை படகில் உள்ளவர்கள் படகு நிற்பதைக்கண்டு ஏன் படகு நிற்கிறது என்ன பிரச்சினை என கேட்க சிறிய பழுதாம் சரி செய்ய நிறுத்தி உள்ளார்கள் என சொல்கிறார்கள் என சொன்னேன் அன்றைய‌ நாள் படகு திருத்தி முடியவில்லை எல்லோர் மனதிலும் கலவரம் எழ இறந்து விடுவோமோ! என்ற அச்சம் உடல் முழுவதும் மொத்தபேரையும் தொற்றிக்கொள்கிறது  அடுத்தநாள் படகு கொஞ்சம் தயாரானது போல இருந்தாலும் எஞ்சின் ஆரம்பித்து ஆரம்பித்து நிற்கிறது அதுவரை அந்த படகு பிணம் இல்லாத வீடு போல சத்தம் இல்லாமல் அழுது கொண்டிருந்தது .

பகல் ஒரு மணி அளவில் படகு தயாரானது எங்கே இருக்குறோம் எந்தக்கடலில் இருக்குறோம் எதுவும் தெரியவில்லை படகு பயணிக்கிறது ஒரு சந்தோசம் அந்த சந்தோசத்திற்கு சந்தோசத்தை எப்படி சொல்வதென எனக்கு புரியவில்லை  சமைக்க உணவுகள் இல்லை இருந்த உணவும் கஞ்சியுமாக 20 வது நாளை எட்டுகிறது படகு. பயணம் பருப்பை காச்சி குடிக்க ஆரம்பிக்கிறோம் அரிசி இல்லை மிஞ்சியது பருப்பு மட்டுமே மரக்கறி இல்லை படகு நிற்கும் நேரத்தில் பிடித்த சிறிய மீன்கள் அதையும் உப்பு தண்ணீரில் அவித்து சாப்பிட ஆரம்பித்தோம். 

கடல் பயணம் எவ்வளவு கொடுரமானது என அனுபவம் பாடமாக அமைகிறது இனி யார் யார் மெதுவாக இறக்கப்போகிறார்கள் என்ற கேள்வி அடுத்து எழுகிறது சாவைத்தழுவும் பயணங்களே இனி அமையும் என எண்ணி என் மனது பதபதைக்கிறது 

அப்போது  தொலைவில்  வானம் இருள்கிறது அடுத்த சோதனை எங்களை மெதுவாக தொட இருக்கிறது அப்போதுதான் பக்கத்தில் இருந்து பார்க்கிறேன் மழைக்கு நீரை எடுக்கும் காட்சி மழை வர போகிறது என்ற சந்தோசம் வந்தாலும் காற்றினால் எழும் அலைகளுக்கு படகு என்ன ஆகப்போகிறதோ என்ற கேள்வியும் எழுகிறது. மழை மெதுவாக கடலினுள் பெய்து வருவது தெரிகிறது மழை படகை அடைந்ததும் அந்த நீர் உட‌ல் மீது படும் போது ஆனந்தமாக இருந்தது எங்கள் கண்ணீருடன்.
பொலித்தீன் பைகளை வைத்து நீரை சேகரிக்க மின்னல் உண்டாகி சத்தம் காதை கிழிக்க சில வேளைகளில் வெட்ட வெளியில் மின்னல் அடிக்கலாம் உள்ள வாங்க என சொல்கிறார்கள்  படகை செலுத்துபவர்கள் ஆனால் இவர்களோ போற உயிர் எங்கு போனால் என்ன? அவர்களுக்கு பதிலை சொல்லி விட்டு மழையில் நனைகிறார்கள்
அந்த நேரத்தில் கரை எது கடல் என எது என தெரியவில்லை எங்களை சுற்றி மொத்தமாக தண்ணீர் நிறைந்த இருள் காடுகளாகவே தெரிந்தது  

அப்போது அந்த மழைக்குள் பல மைல் தூரத்தில் வெளிச்சம் ஒன்று என் கண்ணுக்கு தெரிந்து அணைகிறது 

தொடரும்............... 
 

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிறையபேர் இந்தப் பதிவை பார்க்கிறார்கள் தனி, ஓரிருவர் கருத்து எழுதினாலும் கூட.........ஒரு பயத்தைத் தந்து கொண்டு கதை நகருகின்றது.......தொடர்ந்து எழுதுங்கள்.......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் அப்பாவான தனிக்கு வாழ்த்துக்கள். நானும் வாசிக்கிறேன், தொடருங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் முறை அப்பாவான தனிக்கு வாழ்த்துக்கள். கதை அடுத்து என்ன என்ற உணர்வில் விறு விறுப்பாக  போகிறது. ஒருவருடைய பட்ட்றிவு போல இருக்கிறது . தொடருங்கள் வேகமாக .... . 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.