Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் வரும் வெள்ளி அன்று இலங்கை வருகிறார். பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல் தடவையாகும்.

B0B05D88-48D8-4790-A591-F850F1B2B56F.webp

இருநாடுகளுக்கிடையிலான உறவுகளைப் பலப்படுத்தவும் இலங்கை எதிர்கொள்ளும் பிராந்திய, சர்வதேச பிரச்சனைகள் பற்றி இலங்கை அதிபருடன் கலந்துரையாடப்படும் எனறும் தெரிவிக்கப்படுகிறது.

https://www.francetvinfo.fr/politique/emmanuel-macron/info-franceinfo-emmanuel-macron-se-rendra-au-sri-lanka-pour-une-visite-historique_5973293.html

  • Replies 52
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையின் காய் நகர்த்தல் சரியாகத்தான் நடக்கிறது போல

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கை வருகிறார் : ஜனாதிபதி ரணிலையும் சந்திக்கிறார் !

Published By: DIGITAL DESK 3

27 JUL, 2023 | 11:12 AM
image
 
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நாளை வெள்ளிக்கிழமை (28) பிற்பகல் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். 

பிரான்ஸ் ஜனாதிபதி தனது விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்கள் தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயம் இதுவாகும்.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இந்தோ-பசிபிக் மூலோபாயத்தை வலுப்படுத்தவும், பிராந்தியத்தில் பிரான்சின் பங்கை மீண்டும் உறுதிப்படுத்தவும்  ஒரு "வரலாற்று" பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

குறித்த ஐந்து நாள் பயணம் ஜூலை 24 அன்று பிரான்ஸ்  தீவுக்கூட்டமான நியூ கலிடோனியாவில் ஆரம்பமாகியது. அதைத் தொடர்ந்து வனுவாட்டு மற்றும் பப்புவா நியூ கினியாவில் நிறைவடையும்.

அதன் பின்னர் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

ஜூன் மாதம் பாரிஸில் நடைபெற்ற புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான மாநாட்டின் அரச தலைவர் அமர்வின் போது ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கடைசியாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சுமுகமான உரையாடலில் ஈடுபட்டார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பில் இருதரப்பு கடன் வழங்குநர்களிடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பொதுவான தளத்தை அறிவித்த நாடுகளின் குழுவில் பிரான்ஸும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/161022

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதலாவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயம் : இலங்கை வருகின்றார் பிரான்ஸ் ஜனாதிபதி

முதலாவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயம் : இலங்கை வருகின்றார் பிரான்ஸ் ஜனாதிபதி

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நாளை (வெள்ளிக்கிழமை) பிற்பகல் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி தனது விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்கள் தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1341842

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எங்கள் தலைவர் சம்பந்தனை. சந்திப்பரா.??

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, Kandiah57 said:

எங்கள் தலைவர் சம்பந்தனை. சந்திப்பரா.??

கட்டாயம் சந்திக்க வேணும்.
இல்லாட்டி…. “லா சப்பலில்” கறுப்புக் கொடி ஏத்துவோம். 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கை வருமுன், விசுகர் ஒருக்கால் அவரை சந்தித்து வாழ்த்துச்சொல்லி அனுப்பினால் என்ன?

24 minutes ago, Kandiah57 said:

எங்கள் தலைவர் சம்பந்தனை. சந்திப்பரா.??

விசுகர் சொல்லி அனுப்பினால் சந்திப்பார்! அவர் நம் பிரச்சினை கதைக்க வருபவர் போல் தெரியவில்லை. ஏற்கெனவே கனடா பல்லுக்கை மாட்டுப்பட்டிருக்கு, பிரான்ஸ் வாயே திறக்காது. 

Posted

சிறிலங்காவை சுற்றி ஏதோ நடப்பது போலுள்ளது. தமிழ் தலைவர்களையும் சந்த்தித்தால் மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தேரர்களின் பொறிக்குள் சிக்குண்ட சிங்கமா ..... இருந்து பார்ப்போம்......!   😴

  • கருத்துக்கள உறவுகள்
Posted
59 minutes ago, தமிழ் சிறி said:

கட்டாயம் சந்திக்க வேணும்.
இல்லாட்டி…. “லா சப்பலில்” கறுப்புக் கொடி ஏத்துவோம். 

"லா சப்பலில். " அனேகமாக தமிழர்கள் தான் இருக்கிறார்கள்....கறுப்புக்கொடி எத்துவதும்.  தமிழர்களா??🤣

இதற்கு விசுகர்.  எதிர்ப்பார்.   ..இல்லையா?? அவரது ஆதரவையும் பெற முயற்ச்சிக்கவும்.   ஆனால் பிரான்ஸ் ஐனதிபதி  சம்பந்தனை   சந்திக்கமைக்கு   பிரான்ஸ் இல் அவரது மாளிகையின். முன்பே போராட்டம் நடத்துவது தான் சரி.  பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள்  ஒரு மனுவை தயாரித்து   இலங்கை போக முதல் மக்ரோன்  இடம் கையளிப்பது   நல்லது 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
50 minutes ago, Kandiah57 said:

-------- பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள்  ஒரு மனுவை தயாரித்து   இலங்கை போக முதல் மக்ரோன்  இடம் கையளிப்பது   நல்லது 

அவர் நாளை, வெள்ளிக்கிழமை 28´ம் திகதி இலங்கை செல்கிறார்.
மனு தயாரித்து, அவரிடம் கொடுக்க  நேரம் காணாது... கந்தையா அண்ணை. 

Edited by தமிழ் சிறி
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இலங்கையின் காய் நகர்த்தல் சரியாகத்தான் நடக்கிறது போல

நம்ம ஆட்கள் பிரெஞ்சு ஜனாதிபதிக்கு தமிழன் தானே பாண் போடுகிறான் என்று விழா எடுப்பதில் இருந்து இன்னும் விடுபடலை.😭

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, விசுகு said:

நம்ம ஆட்கள் பிரெஞ்சு ஜனாதிபதிக்கு தமிழன் தானே பாண் போடுகிறான் என்று விழா எடுப்பதில் இருந்து இன்னும் விடுபடலை.😭

அங்கேயும் பாண் தானா ஆட்சி? பருப்புக்கறியும் சேர்த்துக்கொடுத்தால், இலங்கையில் அஜீரணப் பிரச்சனை இல்லாமல் வழமைபோன்று இயங்கமுடியும் அவரால்.      

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
34 minutes ago, satan said:

அங்கேயும் பாண் தானா ஆட்சி? பருப்புக்கறியும் சேர்த்துக்கொடுத்தால், இலங்கையில் அஜீரணப் பிரச்சனை இல்லாமல் வழமைபோன்று இயங்கமுடியும் அவரால்.      

இரண்டு பாணும்.  வேறுபடுகிறது....பிரான்ஸில் தமிழ் பாண்.   இலங்கையில் சிங்களப்பாண் 🤣

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
12 hours ago, nunavilan said:

சிறிலங்காவை சுற்றி ஏதோ நடப்பது போலுள்ளது. தமிழ் தலைவர்களையும் சந்த்தித்தால் மகிழ்ச்சி.

சந்திச்சால் மட்டுமென்ன, வெட்டியே விழுத்தப்போறாங்கள்?!

ஒன்டையும் கிழிக்க மாட்டாங்கள். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, satan said:

அங்கேயும் பாண் தானா ஆட்சி? பருப்புக்கறியும் சேர்த்துக்கொடுத்தால், இலங்கையில் அஜீரணப் பிரச்சனை இல்லாமல் வழமைபோன்று இயங்கமுடியும் அவரால்.      

நீங்கள் செய்திகளை வாசிக்கவில்லை போலும். 

பிரான்ஸ் பாண் தயாரிப்பில் முதல் பரிசை இந்த முறை ஈழத் தமிழர் ஒருவர் வென்றபடியால் ஒரு வருடத்திற்கு பிரெஞ்சு ஜனாதிபதிக்கு அவர் தான் காலையில் பாண் கொடுக்க வேண்டும் என்பது இங்கே வழமையான நடைமுறை. 

அதை எம்மினம் எழுச்சியுடன் கொண்டாடி வருகிறது 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, விசுகு said:

பிரான்ஸ் பாண் தயாரிப்பில் முதல் பரிசை இந்த முறை ஈழத் தமிழர் ஒருவர் வென்றபடியால் ஒரு வருடத்திற்கு பிரெஞ்சு ஜனாதிபதிக்கு அவர் தான் காலையில் பாண் கொடுக்க வேண்டும் என்பது இங்கே வழமையான நடைமுறை. 

இல்லை, இது நான் அறியவில்லை. துட்டு இல்லாமல் இனாமாயா? இதென்ன விசித்திரமான நடைமுறை? ஏழைகளுக்கு கொடுத்தாலும் பரவாயில்லை, இதை வேற கொண்டாடுகினமாம். ஏழைகளுக்கு கொடுக்கும்போது மட்டும் கணக்கு பாப்பது, கேள்விகேட்பது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, satan said:

இல்லை, இது நான் அறியவில்லை. துட்டு இல்லாமல் இனாமாயா? இதென்ன விசித்திரமான நடைமுறை? ஏழைகளுக்கு கொடுத்தாலும் பரவாயில்லை, இதை வேற கொண்டாடுகினமாம். ஏழைகளுக்கு கொடுக்கும்போது மட்டும் கணக்கு பாப்பது, கேள்விகேட்பது.

சாத்தானின் பார்வையில் படாமல், இந்த திரி போனது கவலைக்குரியது. 🙂
👇 கீழே... முழு விபரம் உள்ளது சாத்தான்.

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன கதைக்க வேண்டும் , கதைக்க கூடாது என்றெல்லாம் ஏற்கனவே கதைத்து முடித்திருப்பார்கள் ......பின்பு ஒரு சம்பிரதாயமான பயணம்நடக்கும்.......நல்லபடியா முடியட்டும்......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
49 minutes ago, satan said:

இல்லை, இது நான் அறியவில்லை. துட்டு இல்லாமல் இனாமாயா? இதென்ன விசித்திரமான நடைமுறை? ஏழைகளுக்கு கொடுத்தாலும் பரவாயில்லை, இதை வேற கொண்டாடுகினமாம். ஏழைகளுக்கு கொடுக்கும்போது மட்டும் கணக்கு பாப்பது, கேள்விகேட்பது.

தவறான விளக்கம் என்டு நினைக்கிறேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, satan said:

இல்லை, இது நான் அறியவில்லை. துட்டு இல்லாமல் இனாமாயா? இதென்ன விசித்திரமான நடைமுறை? ஏழைகளுக்கு கொடுத்தாலும் பரவாயில்லை, இதை வேற கொண்டாடுகினமாம். ஏழைகளுக்கு கொடுக்கும்போது மட்டும் கணக்கு பாப்பது, கேள்விகேட்பது.

சாத்தன்  நீங்கள் இப்படி கருத்து  எழுதுவீர்கள் என்று நான்  எதிர்பார்க்கவில்லை    

பிரான்ஸில் பலருடன் போட்டியிட்டு முதலாவது வந்தது..அதுவும் ஒரு தமிழன்.  பெரிய விடயம்...மகிழ்வானது   பாராட்டுக்குரியவர்   

மற்றும் பிரான்ஸ் ஐனதிபதிக்கு   பாண் விற்பனை செய்வது  இலகுவில்  கிடைத்து விடாது..நீங்கள் சும்மா கொடுத்தால் கூட  🤣.  இதனை தமிழர்கள் கொண்டாடுவோம் அது மிகவும் சரியானது 

இது விசித்திரமது இல்லை....சிறந்த பாண் உற்பத்தியாளர்களை   வருடாந்தம் உருவாக்கிறது   

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, விசுகு said:

பிரான்ஸ் பாண் தயாரிப்பில் முதல் பரிசை இந்த முறை ஈழத் தமிழர் ஒருவர்

இது மகிழ்ச்சியான விடையம்,  மாற்றுக்கருத்தில்லை!

4 hours ago, விசுகு said:

ஒரு வருடத்திற்கு பிரெஞ்சு ஜனாதிபதிக்கு அவர் தான் காலையில் பாண் கொடுக்க வேண்டும் என்பது இங்கே வழமையான நடைமுறை. 

இங்குதான் நான் தவறாக புரிந்து கொண்டேன், ஒருவரது உழைப்பு ஒருவருடத்திற்கு அவருக்கு அன்பளிப்பாக கொடுக்க வேண்டியேற்பட்டுவிட்டதேயென...

ஆனால் சிறியர் இணைத்த செய்தியை வாசித்த பின்தான் அதன் பெருமை தெரிந்தது. இது கொண்டாடப்பட வேண்டிய ஒன்றுதான். தவறான புதிதலுக்கு வருந்துகிறேன். நன்றி சிறியர் அறியத்தந்ததற்கு!

24 minutes ago, சுவைப்பிரியன் said:

தவறான விளக்கம் என்டு நினைக்கிறேன்.

உண்மை !  

26 minutes ago, Kandiah57 said:

மற்றும் பிரான்ஸ் ஐனதிபதிக்கு   பாண் விற்பனை செய்வது  இலகுவில்  கிடைத்து விடாது..

புரிகிறது. நன்றி விளக்கத்திற்கு!

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, satan said:

இல்லை, இது நான் அறியவில்லை. துட்டு இல்லாமல் இனாமாயா? இதென்ன விசித்திரமான நடைமுறை? ஏழைகளுக்கு கொடுத்தாலும் பரவாயில்லை, இதை வேற கொண்டாடுகினமாம். ஏழைகளுக்கு கொடுக்கும்போது மட்டும் கணக்கு பாப்பது, கேள்விகேட்பது.

புரிந்து விட்டீர்கள்

அவசரத்தில் எழுதியது எனது தவறு தான். மன்னிக்கவும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மன்னிப்பதற்கு ஒன்றுமில்லை, நாங்கள் எல்லோரும் சாதாரண மனிதர்கள்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, விசுகு said:

புரிந்து விட்டீர்கள்

அவசரத்தில் எழுதியது எனது தவறு தான். மன்னிக்கவும். 

இப்படி நீங்கள் சமாதானமாக போனால் - யாழில் சண்டையை ஏற்படுத்தவென்றே வரும் எனது பிழைப்பு என்னாவது?

5 minutes ago, satan said:

மன்னிப்பதற்கு ஒன்றுமில்லை, நாங்கள் எல்லோரும் சாதாரண மனிதர்கள்தான். 

  • Haha 2

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.