Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, ரஞ்சித் said:

தலைவர் மீண்டும் வருவார் என்கிற நம்பிக்கை எனக்கில்லை. ஏனென்றால் அவரது குணவியல்பு குறித்து நாம் அறிந்திருப்பதாலும், அவர் உயிருடன் தப்பிப் போக எத்தனிக்கமாட்டார் என்பதாலும் அவர் மீண்டும் வருவார் என்பதை நான் நம்பவில்லை. 

அவரது குடும்பமும் இறுதிப்போரில் வீரச்சவடைந்ததாகவே நான் சில இடங்களில் இருந்து கேள்விப்பட்டேன். முன்னாள் புலநாய்வுப் போராளிகள், சிங்கள இராணுவத்தின் மேஜர் ஒருவன், தமிழ் ஊடகவியலாளர்கள் என்று பலரின் கருத்துக்கள் மூலம் இந்த முடிவிற்கு வந்தேன். இது சரியா தவறா என்பது எவராலும் உறுதிப்படுத்த முடியாது. 

ஆனால், எமக்கு எமது தலைவர் போல இன்னொருவர் தேவையா என்றால், ஆம் நிச்சயமாக. அடிமைகளாக, சிங்களப் பேரினவாதத்தின் கால்களுக்குக் கீழே மிதிபட்டு, அதுவே வாழ்க்கை என்று வாழும் நடைபிணங்களான எமக்கு நிச்சயம் ஒரு தலைவர் தேவை. துவண்டுபோய் வீழ்ந்து, அரைமரணத்தில் இருக்கும் எமதினம் மீண்டும் விழித்துக்கொள்ள ஒரு தலைவர் தேவை. அது எமது தலைவரே வந்தால் நான் அன்றுடன் மகிழ்வோடு கண்களை மூடுவேன். ஆனால், அவர் வரப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். ஆகவேதான், எமக்கு இன்னொரு தலைவர் எமக்குள் இருந்து வரவேண்டும். வந்தால் அவரும் பிரபாகரனே.

பிரபாகரன் ஒரு தனிமனிதனின் பெயரல்ல. ஒரு இனம் வீறுகொண்டெழுது தனது இருப்பிற்காகப் போராடிய உந்துதலின் பெயர். எவரெல்லாம் தன் இனத்திற்காக தனது உயிரையும் தியாகம் செய்ய துணிந்து முன்வருகிறாரோ, அவரெல்லாம் பிரபாகரனே!

இறுதியாக நீங்கள் கூறியபடியே, இருந்தால் அவன் என் தலைவன், இல்லையென்றால் அவனே என்றைக்கும் என் இறைவன்!

உண்மை

இதையும் தாண்டி இயக்கத்தின் வலிமை மற்றும் தியாகம் பற்றி அறிந்தவன் என்கிற படியால் தலைவரோ புலிகளோ தமிழர்களை பூச்சியத்தில் நிறுத்தி சென்றிருக்கமாட்டார்கள் என்று என் மனம் சொல்கிறது. ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு வடிவில் அது வரும். வரும்படி செய்திருப்பார்கள் என்று எனது இறுதிக்கணம்வரை நம்புவேன். ஏதிர்பார்த்திருப்பேன். இதற்காக என்னை முட்டாள் என்று கூட சொல்லலாம். ஆனால் அவர்கள் காற்று புகமுடியாத இடங்களிலும் புகுந்து வந்த புலிகளை மறந்து விட்டார்கள் என்று தான் சொல்வேன் 

நன்றி ரகு. வாழ்க நலமுடன்.

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

இதையும் தாண்டி இயக்கத்தின் வலிமை மற்றும் தியாகம் பற்றி அறிந்தவன் என்கிற படியால் தலைவரோ புலிகளோ தமிழர்களை பூச்சியத்தில் நிறுத்தி சென்றிருக்கமாட்டார்கள் என்று என் மனம் சொல்கிறது. ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு வடிவில் அது வரும். வரும்படி செய்திருப்பார்கள் என்று எனது இறுதிக்கணம்வரை நம்புவேன். ஏதிர்பார்த்திருப்பேன். இதற்காக என்னை முட்டாள் என்று கூட சொல்லலாம். ஆனால் அவர்கள் காற்று புகமுடியாத இடங்களிலும் புகுந்து வந்த புலிகளை மறந்து விட்டார்கள் என்று தான் சொல்வேன் 

வணக்கம் விசுகர்!
நீங்கள் முன்னர் ஒரு தடவை தலைவரின் மனைவி குடும்பம் உங்கள் உறவினர்கள் என எழுதிய ஞாபகம் உள்ளது.அது சரியாயின்  இந்த காணொளி பற்றிய உண்மை நிலவரம் உங்களுக்கும் தெரிந்திருக்கும். அந்த காணொளியை வெளியிட்ட அருணா அக்காவின் தொடர்பும் உங்களுக்கு இருக்குமென நினைக்கின்றேன்.

நான் எழுதிய விபரம் பொய் எனில் மன்னிக்கவும்.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 16/8/2023 at 20:28, விசுகு said:

ஒரு கிழமைக்கு முன்னர் எனக்கு இவரிடம் இருந்து எனது டென்மார்க் அக்கா மூலம் இச்செய்தி கிடைத்தது. அதை தான் திண்ணையில் எழுதி இருந்தேன்.

உங்கள் போல் இங்கே எழுதும் மற்றவர்கள் போல் அத்தனை கேள்விகளும் சந்தேகங்களும் அச்சங்களும் எனக்கும் உண்டு. கொஞ்சம் அதிகமாக என்று கூட சொல்லலாம்.

அதனால் தான் அவரது அழைப்பு மீண்டும் வரும் என்று உள் மனது சொல்கிறது என்று திண்ணையில் எழுதி இருந்தேன்.

ஆனால் ஒரு கிழமையாகியும் எவரும் பதியாத படியால் விவாதத்திற்காகவே நானே பதிந்தேன். நன்றி 

15 minutes ago, குமாரசாமி said:

வணக்கம் விசுகர்!
நீங்கள் முன்னர் ஒரு தடவை தலைவரின் மனைவி குடும்பம் உங்கள் உறவினர்கள் என எழுதிய ஞாபகம் உள்ளது.அது சரியாயின்  இந்த காணொளி பற்றிய உண்மை நிலவரம் உங்களுக்கும் தெரிந்திருக்கும். அந்த காணொளியை வெளியிட்ட அருணா அக்காவின் தொடர்பும் உங்களுக்கு இருக்குமென நினைக்கின்றேன்.

நான் எழுதிய விபரம் பொய் எனில் மன்னிக்கவும்.

மேலே எழுதியுள்ளேன் அண்ணா

மீண்டும் விரிவாக எழுதுகிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

https://fb.watch/mw9ZW5B7R3/

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் 
அப்பொருள் மெய்ப் பொருள்காண்பதறிவு.
இருந்தால் மகிழ்ச்சி!

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முகநூல் நண்பரின் பதிவு..

ஆச்சியின் பேய்க்கதை ......

நாங்கள் சிறுவர்களாக இருந்த காலத்தில் .......

ஆத்மா, ஆவி என்பன குறித்து வயது வந்தவர்கள் மிகத்  தத்துரூபமாக சொல்வதை கேள்விப்பட்டிருப்போம் ........

எந்தக் காலத்திலோ அல்லது அண்மையில் இறந்தவர்களைப் பற்றிய விலாவாரிக் கதைகள் விலா எலும்பு விறைக்கும் வரை சொல்லித் தீர்ப்பார்கள் ஆச்சி மார் ...... அப்புமாரும் அதற்கு குறைச்சலில்லை .......

ஒரு மாலைச் சருக்கலில் ஒண்டாக கூடுவினம் .....

அடி ஆத்தை நேற்று அம்மாச்சி எல்லொ வந்தவ .......

என்னடி ஆத்தை அம்மாச்சி  சொன்னவ? மற்ற ஆச்சிமார் அப்படியே குட்டானை பின்னுறதை விட்டுட்டு கூர்மையா கதை கேட்பினம் ......
 
கதை கேக்கிறவையை கதைக்குள்ள முழுசா இழுக்க .... ஆச்சி  ஒரு அடி மார்பில அடிச்சு ஒப்பாரியும் வைச்சு ... ஓரத்தில ஒரு சின்னக் கண்ணீருடன் .... ஆச்சி தொடங்குவா அம்மாச்சி  கதையை ...... 

அடி நேற்று ராத்திரி அம்மாச்சி வந்தல்லோ வெளி விறாந்தேல தலைவிரி கோலமா இருந்திச்சு ...... ஏனணை வெளியில நிக்குறாய் வாவன் உள்ளாணை எண்டா ....... கோபத்தில பேசினா  அம்மாச்சி ...... 

கோபப்படாத வந்தனி ஒருவாய் சாப்பிட்டுப் போவன் எண்டன் .. அம்மாச்சியோ எனக்கு அவசரம் அவசரம் நான் போகவேணும் .... எனக்கு சுருட்டு இருந்தா தா.... 

ஆச்சியின் கதைக்கிடையில இன்னொண்டு புகுந்து ஏனணை உலை வைக்கிறன் சாப்பிட்டு போவணை எண்டு  அம்மாச்சியை கேட்டாயில்லை ....

 உண்டை விசர் கதைக்கு ... மனிசி இந்தா போறனெண்டு .... உரு எடுத்து நிக்குது .... அதுக்கை நான் எங்க உலையை வைக்க...... 

இப்படி ஆச்சி சொன்ன அம்மாச்சி கதையால பெரிசுகள்  அந்தக் காலத்தில பொழுதை போக்கிச்சினம் ..... 

நாமளோ ...அந்தக் கதையை கேட்டு கேட்டு ..... இரவில ஒண்டுக்கு போற தூரத்தை குறைச்சு விறாந்தையில ஒண்டுக்கு விட்டதும் உண்டு .....

ஆச்சிமார் சொன்ன அம்மாச்சியின் கதையில வளர்ந்த  அறிவு சார் பரம்பரையல்லோ நாம்! ..... 

அந்த பரம்பரையில வந்த நாம் சட்டம் படிச்சாலென்ன? பொறியியல் பட்டம் படிச்சாலென்ன? வைத்தியம் படிச்சு பைத்தியங்களுக்கு வருத்தம் பாத்தாலென்ன? சட்டம்பியா இருந்தாலென்ன? ........ ஆண்ட பரம்பரை தாம்  கண்ட கனவுகளை கதையாக்கி விக்கத் தான் செய்வார்கள் ..

இப்போ எங்க தட்டினாலும் தலை தட்டினதுகள் தலைவரின் குடும்பத்துடன் சாப்பிட்ட கதையை விதம் விதமாக விவாதிக்கிறார்கள் ......

சரி ஒரு கதைக்கு .... தலைவரும் தலைவரின் குடும்பம் இருக்கிறார்கள் அல்லது இல்லை என்கிற விவாதங்களில்,  ..... இருந்தால்? வரக்கூடிய அரசியல் விளைவுகள் என்ன? அவர்கள் இல்லை என்பதற்கு பின்னால் உள்ள அரசியல் விளைவுகள் என்ன? அவை குறித்த விவாதங்கள் இங்கு எழவே இல்லை .......

அப்படி எழுகிற விவாதங்கள் கூட குருட்டுத்தனமாகவே நகர்ந்து செல்கிறது ......

ஒரு சட்டத்தரணி மனித உரிமை ஆர்வலர் ..... கேட்கிறார் அவர்கள் இருக்கிறார் என்பதை இவை ஏன் எதிர்க்கினம் ? இதால யாருக்கு நோகுது எனக் கேட்கிறார்? கேள்வியை கேட்டுவிட்டே இந்தியாவிடமும் ஓடுகிறார் ......

ஆக இவரது ஓட்டத்திற்கு பின்னால் இந்திய வகிபாவமே இருக்கிறது என்பதை அறிவதற்கு அவ்வளவு பெரிய அறிவு தேவையில்லை ......

இது வரையில் ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்தியா புடுங்கியது எல்லாம் தேவையில்லாத ஆணிகள் தான் .......   இனி புடுங்கப் போகிற ஆணி? ...

அண்மையில் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்கிற கதை நெடுமாறனால் உலவ விட்ட போது ..... 

அதே நாளில் இந்திய இராணுவத்தில் இருந்த ஓய்வுபெற்ற உளவுத்துறை அதிகாரியான மேஜர் மதன் பிரபாகரன் மாத்திரமல்ல அவரின் மனைவி மதிவதனியும் , துவராகவும் உயிருடன் உள்ளனர் என தனது வலைத்தளத்தில் குறிப்பிட்டார்...

உப்புடியே போய் ஒரு கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட அனைவரும் இராச் சோற்றுக்கு வந்தார்கள் என கூறக் கூடும் ..... அவர்களுடன் விருந்துண்டோம் எனக் கூறக்கூடும் ...... 

இப்போது தலைவரும் அவரது குடும்பமும் நலமாக இருக்கிறார்கள் என்கிற கதையை ஒதுக்கிவிட்டு ......

இக்கதைகளின் பின்னால் நிகழக்கூடிய பித்துக்குளித்தனங்கள் எமக்கு எத்தகைய நன்மை பயக்கும் என்பதை பார்க்க வேண்டும்? 

இந்தக் கதைகளை அதிகம் காவித் திரிவதில் இந்திய புலனாய்வு வலைத்தளங்கள் அதிக பங்கைச் செலுத்துவதை நாம் காண முடிகிறது .....
இதனால் இந்தியா எத்தகைய நகர்வை முன்னெடுக்கப் போகிறது? அதனால் ஈழத்தமிழர்களுக்கு ஏத்தகைய  நன்மைகள் ஏற்படும்? 

இவ்வாறான கேள்விகளை கேட்டு பகுத்தறிந்து பார்க்கும் அறிவு ..... ஆச்சி சொன்ன அம்மாச்சியின் பேய்க்கதைகளை கேட்டு வளர்ந்தவர்களுக்கு இருக்கவா போகிறது?

"போராளிகளின் தலமை குறித்த பேசுபொருள் காலத்தின் தேவையா? "

போரின் பாதிப்புக்குள் சிக்குண்ட 
காணாமல் போனோர்கள் எனக் கருதப்பட்டோர்  சந்தரப்ப வசமாக உயிர் தப்பி மீளத்திரும்புதல்   நிகழ்வதற்கான வாய்புகள் இல்லாமல் இல்லை........

இறுதி யுத்தம் அல்லது முள்ளிவாய்க்கால் முற்றுகையில் இருந்து மனிதப்படு கொலையில் இருந்து   மக்களோ போராளிகளோ உயிர் தப்பி வந்திருக்கிறார்கள்.....

ஆனால் போராளிகளின் முக்கியஸ்தர்கள் உயிர் தப்பி இருப்பின் இரு வழிகளே உண்டு. ஒன்று தங்களது சொந்த முற்சியில் தப்பி எங்கேனும் மறைந்த இருக்க வேண்டும் ........

அல்லது இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு எங்கேனும் தடுப்பில் வைக்கப்பட்டிருக்கலாம் .....
இல்லையேல் .....போராளிகளின் முக்கிய தலைவர்களின் துணைவியர் குடும்பங்கள் கைது செய்யப்பட்ட பின்னர்  விடுவிக்கப்பட்டது போல் விடுவிக்கப்பட்டிருக்கலாம் 
........    

இது இங்கு பெரும் பேசு பொருள் அல்ல .....

மாறாக அவர்களின் இருப்பு எதற்கு தேவைப்படுகிறது என்பதே???? ......

https://m.facebook.com/story.php?story_fbid=10231760726901357&id=1239242150

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தலைவர் இருக்கிறார் அல்லது இல்லையா எனும் விவாதங்களுக்கப்பால், அவரோ அல்லது போராட்டமோ இப்போது தேவையா இல்லையா என்று ஒரு கேள்வி வருமாக இருந்தால், அதற்கு எம்மிடம் இருக்கும் பதில் என்ன? ஆயுதப் போராட்டமோ அல்லது வேறு வழியிலான போராட்டமோ இன்று தேவையில்லை என்று தமிழர்கள் உணர்கிறார்கள் என்றால் நாம் முற்றாக சரணாகதி நிலைக்கு வந்துவிட்டோம், எமது இருப்பினை முற்றாக இழக்கத் தயாராகிவிட்டோம், எமது இன, மத, கலாசார அடையாளங்கள் என்று அனைத்தையும் சிங்களத்தின் காலடியில் வைத்துவிட்டோம் என்பது பொருள்.

 ஏனென்றால், ஒரு தெளிவான , நேர்மையான தலைமை எம்மிடம் இல்லாத நிலையில் நாம் எமது விடுதலை குறித்து இலக்கற்று, செயற்பாடிழந்து இருக்கிறோம். எம்மால் எமது விடுதலை குறித்த எந்த முயற்சிகளையும் முன்னகர்த்த முடியாத நிலையில் இருக்கிறோம். 

எமது இருப்பும், அடையாளமும், இன, மத கலாசார விழுமியங்களும் பாதுக்காக்கப்படுவதற்கான எந்தவித செயற்பாடுகளிலும் நாம் இன்று இல்லை.

இவை எமக்கு காக்கப்படவேண்டும் என்றால், அதற்கான தெளிவான பாதையும், எம்மை முன்னின்று வழிநடத்த ஒரு தலைமையும் தேவை.

தலைவர் இன்று உயிருடன் இருப்பது அவமானம், அகெளரவம் என்று பேசப்படுவது தமிழரின் போராட்டம் முற்றாக முடிந்துவிட்டது, தமிழர்கள் இனிமேல் போராடுவதற்கென்று எதுவுமில்லை என்கிற நிலைப்பாட்டிலிருந்து முன்னெடுக்கப்படுவது. ஆனால், தமிழர்கள் இன்னமும் விடுதலை குறித்த காத்திரமான இலக்குகளை அடையாத நிலையில், தலைவர் இருப்பது அவமானம் என்றோ அகெளரவம் என்பதோ நியாயமானதுதானா? போராட்டம் தொடரப்படவேண்டும் என்கிற நோக்கில் தலைமை பாதுகாக்கப்படுவதில் தவறு என்ன இருக்கிறது? இதை ஒரு விவாதத்திற்காகத்தான் கேட்கிறேன், தலைமை தப்பியிருப்பதில் தவறென்ன?  
 
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, புலவர் said:

https://fb.watch/mw9ZW5B7R3/

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் 
அப்பொருள் மெய்ப் பொருள்காண்பதறிவு.
இருந்தால் மகிழ்ச்சி!

நன்றி புலவர்

இந்த கருத்துக்களோடு நான் இங்கே பலகாலமாக எழுதும் எனது கருத்துக்கள் சரியாக இருக்கின்றன.

Edited by விசுகு
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ரஞ்சித் said:

தலைவர் இருக்கிறார் அல்லது இல்லையா எனும் விவாதங்களுக்கப்பால், அவரோ அல்லது போராட்டமோ இப்போது தேவையா இல்லையா என்று ஒரு கேள்வி வருமாக இருந்தால், அதற்கு எம்மிடம் இருக்கும் பதில் என்ன? ஆயுதப் போராட்டமோ அல்லது வேறு வழியிலான போராட்டமோ இன்று தேவையில்லை என்று தமிழர்கள் உணர்கிறார்கள் என்றால் நாம் முற்றாக சரணாகதி நிலைக்கு வந்துவிட்டோம், எமது இருப்பினை முற்றாக இழக்கத் தயாராகிவிட்டோம், எமது இன, மத, கலாசார அடையாளங்கள் என்று அனைத்தையும் சிங்களத்தின் காலடியில் வைத்துவிட்டோம் என்பது பொருள்.

 ஏனென்றால், ஒரு தெளிவான , நேர்மையான தலைமை எம்மிடம் இல்லாத நிலையில் நாம் எமது விடுதலை குறித்து இலக்கற்று, செயற்பாடிழந்து இருக்கிறோம். எம்மால் எமது விடுதலை குறித்த எந்த முயற்சிகளையும் முன்னகர்த்த முடியாத நிலையில் இருக்கிறோம். 

எமது இருப்பும், அடையாளமும், இன, மத கலாசார விழுமியங்களும் பாதுக்காக்கப்படுவதற்கான எந்தவித செயற்பாடுகளிலும் நாம் இன்று இல்லை.

இவை எமக்கு காக்கப்படவேண்டும் என்றால், அதற்கான தெளிவான பாதையும், எம்மை முன்னின்று வழிநடத்த ஒரு தலைமையும் தேவை.

தலைவர் இன்று உயிருடன் இருப்பது அவமானம், அகெளரவம் என்று பேசப்படுவது தமிழரின் போராட்டம் முற்றாக முடிந்துவிட்டது, தமிழர்கள் இனிமேல் போராடுவதற்கென்று எதுவுமில்லை என்கிற நிலைப்பாட்டிலிருந்து முன்னெடுக்கப்படுவது. ஆனால், தமிழர்கள் இன்னமும் விடுதலை குறித்த காத்திரமான இலக்குகளை அடையாத நிலையில், தலைவர் இருப்பது அவமானம் என்றோ அகெளரவம் என்பதோ நியாயமானதுதானா? போராட்டம் தொடரப்படவேண்டும் என்கிற நோக்கில் தலைமை பாதுகாக்கப்படுவதில் தவறு என்ன இருக்கிறது? இதை ஒரு விவாதத்திற்காகத்தான் கேட்கிறேன், தலைமை தப்பியிருப்பதில் தவறென்ன?  

ஆயுதப் போர் என்பது சரிவராது என்று தன் வரலாற்றுப் பாடமாக முழுத் தியாகத்தின் பின் அறிவித்தவர் தலைவர். 

எனவே அவரே அதனை வேறு வழிகளில் முடித்து வைக்கவும் வேண்டும். ஏனெனில் தமிழருக்கு அவரை விட்டால் வேறு எவரும் பல நூற்றாண்டுகளுக்கு தெரியப்போவதில்லை. 

அவர் கட்டளை இட்டால் முழுவதும் அர்ப்பணித்து பயணிக்க பல லட்சம் தமிழர்கள் அதிலும் அடுத்த தலைமுறையினர் தயாராகி விட்டனர். அவர்களைத்தான் நம்பி அவர் மௌனமானார். இந்த 14 வருடங்களில் கல்வி பொருளாதாரம் மற்றும் உலக அரசியலில் எம்மவரின் வளர்ச்சி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இனி அறுவடைக்கான காலம். அதற்கு சரியான விவசாயி வேண்டும். நன்றி 

  • Thanks 1
  • Haha 1
Posted
16 minutes ago, விசுகு said:

அவர் கட்டளை இட்டால் முழுவதும் அர்ப்பணித்து பயணிக்க பல லட்சம் தமிழர்கள் அதிலும் அடுத்தபல லட்சம் தமிழர்கள் அதிலும் அடுத்த தலைமுறையினர் தயாராகி விட்டனர். தலைமுறையினர் தயாராகி விட்டனர். அவர்களைத்தான் நம்பி அவர் மௌனமானார். 

புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் என்னுடைய, உங்களுடைய பிள்ளைகளா?

  • Like 1
  • Thanks 1
  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, நிழலி said:

புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் என்னுடைய, உங்களுடைய பிள்ளைகளா?

உங்கள் கேள்விகளுக்கு பின்னர் மீண்டும் நான் எழுதிதை வாசித்து பார்த்தேன்

முழுமையாக என்பது எமது தலைமுறைக்கும்

அடுத்த தலைமுறையினர் இந்த 14 வருடங்களில் கல்வி பொருளாதாரம் மற்றும் உலக அரசியலில் எம்மவரின் வளர்ச்சி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இனி அறுவடைக்கான காலம். அதற்கு சரியான விவசாயி வேண்டும்.

 என்றும் வந்திருக்கணும். 

நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, ரஞ்சித் said:

தலைவர் இருக்கிறார் அல்லது இல்லையா எனும் விவாதங்களுக்கப்பால், அவரோ அல்லது போராட்டமோ இப்போது தேவையா இல்லையா என்று ஒரு கேள்வி வருமாக இருந்தால், அதற்கு எம்மிடம் இருக்கும் பதில் என்ன? ஆயுதப் போராட்டமோ அல்லது வேறு வழியிலான போராட்டமோ இன்று தேவையில்லை என்று தமிழர்கள் உணர்கிறார்கள் என்றால் நாம் முற்றாக சரணாகதி நிலைக்கு வந்துவிட்டோம், எமது இருப்பினை முற்றாக இழக்கத் தயாராகிவிட்டோம், எமது இன, மத, கலாசார அடையாளங்கள் என்று அனைத்தையும் சிங்களத்தின் காலடியில் வைத்துவிட்டோம் என்பது பொருள்.

 ஏனென்றால், ஒரு தெளிவான , நேர்மையான தலைமை எம்மிடம் இல்லாத நிலையில் நாம் எமது விடுதலை குறித்து இலக்கற்று, செயற்பாடிழந்து இருக்கிறோம். எம்மால் எமது விடுதலை குறித்த எந்த முயற்சிகளையும் முன்னகர்த்த முடியாத நிலையில் இருக்கிறோம். 

எமது இருப்பும், அடையாளமும், இன, மத கலாசார விழுமியங்களும் பாதுக்காக்கப்படுவதற்கான எந்தவித செயற்பாடுகளிலும் நாம் இன்று இல்லை.

இவை எமக்கு காக்கப்படவேண்டும் என்றால், அதற்கான தெளிவான பாதையும், எம்மை முன்னின்று வழிநடத்த ஒரு தலைமையும் தேவை.

தலைவர் இன்று உயிருடன் இருப்பது அவமானம், அகெளரவம் என்று பேசப்படுவது தமிழரின் போராட்டம் முற்றாக முடிந்துவிட்டது, தமிழர்கள் இனிமேல் போராடுவதற்கென்று எதுவுமில்லை என்கிற நிலைப்பாட்டிலிருந்து முன்னெடுக்கப்படுவது. ஆனால், தமிழர்கள் இன்னமும் விடுதலை குறித்த காத்திரமான இலக்குகளை அடையாத நிலையில், தலைவர் இருப்பது அவமானம் என்றோ அகெளரவம் என்பதோ நியாயமானதுதானா? போராட்டம் தொடரப்படவேண்டும் என்கிற நோக்கில் தலைமை பாதுகாக்கப்படுவதில் தவறு என்ன இருக்கிறது? இதை ஒரு விவாதத்திற்காகத்தான் கேட்கிறேன், தலைமை தப்பியிருப்பதில் தவறென்ன?  
 
இனி ஒரு ஆயுத போர் வ‌ருமாய் இருந்தால் யாழ்பாண‌த்தில் இருந்து கொழும்பு வ‌ர‌ ர‌த்த‌ ஆறு ஓடும் அண்ணா 

க‌த்தி இன்றி யுத்த‌ம் இன்றி த‌மிழீழ‌ம் அடைவ‌து தான் சிற‌ந்த‌ வ‌ழி ர‌கு அண்ணா 🙏

ஈழ‌த்தில் வாழும் எம் ம‌க்க‌ள் இன்னொரு போருக்கு முக‌ம் கொடுக்க‌ த‌யார் இல்லை

சில‌ர் விருமாப்புட‌னும் இருக்கின‌ம் த‌னி த‌மிழீழ‌ம் அடைய‌னும் என்று இப்ப‌வும்  ஆனால் அவ‌ர்க‌ளின் என்னிக்கை மிக‌ குறைவு
சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சுக்கு கீழ் வாழ்ந்த்து கொண்டு எம்ம‌வ‌ர் சில‌ர் இப்ப‌டி இருப்ப‌து ம‌கிழ்ச்சி ஆனால் கால‌ங்க‌ள் போக‌ போக‌ இது நீடிக்குமா தெரிய‌ல‌ அண்ணா 😧

ப‌க்கத்தில‌ இருக்கிற‌ இந்தியா இப்ப‌வே ம‌ன‌ம் வைச்சா த‌மிழீழ‌ம் தானாக‌ ம‌ல‌ரும் அண்ணா

எங்க‌ளுக்கு கிடைச்ச‌ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் ப‌க்கா பிராடுக‌ள்😡...............அவ‌ர்க‌ளுக்கு தெரிந்த‌து ஊழ‌ல் கொள்ளை த‌ங்க‌ட‌ குடும்ப‌ம் .........தேர்த‌ல் வ‌ரும் போது 2000ரூபாய் குடுத்தா சொன்ன‌ சின்ன‌த்துக்கு போய் ஓட்ட‌ போட்டுட்டு வ‌ருவின‌ம்.............ஆனால் இது நீண்ட‌ கால‌ம் நீடிக்காது...............இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து த‌மிழ‌க‌ அர‌சிய‌லில் இளைய‌ த‌லைமுறை பிள்ளைக‌ள் மாற்ற‌த்தை கொண்டு வ‌ருவின‌ம்🙏

இப்ப‌ இருக்கும் திருட‌ர்க‌ள் முன்னேற்ற‌ க‌ழ‌க‌த்தை ஒரு போதும் ந‌ம்ப‌க் கூடாது
எம் இன‌ அழிவுக்கு துனை போன‌ 
துரோகிய‌ல்😡

ஊழ‌ல் க‌ர‌ம் ப‌டியாத‌ ப‌ச்சை த‌மிழ‌ன் த‌மிழ‌க‌த்தை ஆளும் போது ம‌த்திய‌ அர‌சை விர‌ல் நீட்டி கேள்வி கேட்க்க‌லாம்..............இப்ப‌ இருப்ப‌வ‌ர்க‌ளால் எங்க‌ளுக்கு சிறு ந‌ல்ல‌து கூட‌ ந‌ட‌க்காது

என‌க்கு த‌லைவ‌ரின் ம‌னைவியின் ச‌கோத‌ரி வெளியிட்ட‌ அறிக்கையில் சிறிதளவும் ந‌ம்பிக்கை இல்லை
எல்லாம் உருட்டு பிர‌ட்டும் பொய் ஏமாற்று மோச‌டி இதை தான் அவாவின் பேச்சு வெளிச்ச‌ம் போட்டு காட்டுது அண்ணா😡

இவான்ட‌ இந்த‌ அறிக்கை சிறு கால‌த்தில் காணாம‌ போய் விடும் க‌ள‌ நில‌வ‌ர‌ம் வேறு என்று ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முத‌லே நாம் அறிந்த‌ விடைய‌ம் அண்ணா😢

அர‌ச‌னை ந‌ம்பி புருஷ‌ன‌ கைவிட்ட‌து போல்

த‌மிழீழ‌த்தில் ந‌ட‌ந்த‌து இன‌ ப‌டுகொலை சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சுக்கு எதிராக‌ ப‌ல‌ நாடுக‌ள் முர‌ன் ப‌டும் போது..............இவான்ட‌ இந்த‌ அறிக்கையால் ச‌ர்வ‌தேச‌ ம‌ட்ட‌த்தில் எல்லாம் ச‌ரியா போன‌த‌ இவான்ட‌ அறிக்கையால் ஏதும் பின்ன‌டைவு வ‌ந்தால் ம‌திவ‌த‌னியின் ச‌கோதரிக்கும் அவாவை பின் நின்று இய‌க்கும் துரோகிய‌லுக்கும் மாவீர‌ர்க‌ள் மேல் ச‌த்திய‌ம் இட்டு சொல்லுறேன் இவைக்கு ந‌ல்ல‌ சாவே வ‌ராது 😡😡😡😡😡😡

மாவீர‌ர்க‌ளின் தியாக‌த்தோடு மாவீர‌ர்க‌ளின் ஆன்மாவோடு யார் த‌ன்னும் சுத்து மாத்து விளைட்டு விளையாடினால் அந்த‌ ஆண்ட‌வேர‌ அவ‌ர்க‌ளை  ம‌ன்னிக்க‌ மாட்டார் 😏

நான் இற‌ந்து போனால் கூட‌ நின்ம‌தியாய் இற‌ந்து போவேன் என்ர‌ இன‌த்துக்கோ எம் போராட்ட‌த்துக்கோ நான் சிறு துரோக‌ம் கூட‌ செய்த‌து இல்லை🙏🥰

2006க‌ளில் இருந்து 2009வ‌ரை த‌லைவ‌ரின் புக‌ழை ப‌ட்டி  தொட்டி எங்கும் ப‌ர‌ப்பினேன் அது த‌மிழ் நாட்டையும் சென்று அடைந்து இருக்கு ஆன‌ ப‌டியால் அது என‌க்கு ம‌கிழ்ச்சி ர‌கு அண்ணா🙏...................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆடிய காலும் பாடிய வாயும் மட்டும் சும்மா இருக்காது

உண்டியல் குலுக்கிய கூட்டமும், வெளிநாடுகளில் புலிகளுக்காக காசு சேகரித்து செல்வம் திரட்டிய கூட்டமும் சும்மா இருக்காது.

தங்கள் தலைமுறைக்கு காசு சேர்த்தாச்சு இனி பிள்ளைகளின் பேரப்பிள்ளைகளின் வாழ்வுக்கும் காசு சேர்க்க தானே வேணும்

நடத்துங்கள் நடத்துங்கள் ஆனால் மக்கள் முட்டாள்கள் அல்ல.

விரைவில் விரட்டி அடிக்கப்படுவீர்கள்

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
10 hours ago, பையன்26 said:

க‌த்தி இன்றி யுத்த‌ம் இன்றி த‌மிழீழ‌ம் அடைவ‌து தான் சிற‌ந்த‌ வ‌ழி

அது எப்படி அப்பன்? அந்த வழி என்னவென்று ஓரளவிற்கு யோசித்து வைத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன், அதை இங்கே பகிரலாமே? ஏனென்றால், இன்னுமொரு தமிழ் உயிர் போகாமல் எம்மால் எமது தாயகத்தைத் தக்கவைத்துக்கொள்வது சாத்தியமென்றால், நிச்சயமாக அவ்வழியே சிறந்த வழி. 

10 hours ago, பையன்26 said:

சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சுக்கு கீழ் வாழ்ந்த்து கொண்டு எம்ம‌வ‌ர் சில‌ர் இப்ப‌டி இருப்ப‌து ம‌கிழ்ச்சி ஆனால் கால‌ங்க‌ள் போக‌ போக‌ இது நீடிக்குமா தெரிய‌ல‌

தமிழரின் தாயகத்தைச் சிறுகச் சிறுகக் கூறுபோட்டு கபளீகரம் செய்துவரும்வேளையில், அதை ஏனென்று கேட்கும் கடுகளவு துணிவும் இன்றி நடைபிணங்களாக அடிமைகளாக நமதினம் வந்துவிடும் என்று நினைக்கிறீர்கள். சரி, இந்த லட்சணத்தில், கத்தியின்றி, யுத்தமின்றி தனி ஈழம் எடுக்கலாம் என்று வேறு சொல்கிறீர்கள். தனி ஈழம் தேவையென்று இன்று கூறும் ஒரு சிலரும் நாளடைவில் வாய்மூடிப்போக, அதற்கான தேவையே இல்லாது போய்விடுமே? பிறகு ஏன் கத்தியின்றி, யுத்தமின்றி?  

10 hours ago, பையன்26 said:

இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து த‌மிழ‌க‌ அர‌சிய‌லில் இளைய‌ த‌லைமுறை பிள்ளைக‌ள் மாற்ற‌த்தை கொண்டு வ‌ருவின‌ம்

ஆக, இன்னும் ஒரு 10 வருடங்கள் நாம் காத்திருக்க வேண்டும் என்கிறீர்கள். சரி, எம் ஜி ஆர் இருந்த காலத்தில் எமக்கிருந்த ஆதரவைக் காட்டிலும் அதிகமான ஆதரவினை இன்னும் 10 வருடத்தில் தமிழ் நாட்டில் பெற்றுவிடலாம் என்கிறீர்கள். சரி, அப்போது மீண்டும் அதே காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் என்ன செய்யலாம்? இவை எல்லாவற்றையும் விட, சிங்களப் பயங்கரவாதிகள் இன்று நடத்திக்கொண்டிருக்கும் எமது தாயகத்தின் மீதான ஆக்கிரமிப்பை இன்னும் 10 வருடங்களுக்கு ஒத்திவைப்பார்களா? இன்னும் 10 வருடங்களில் மீதமிருக்கும் தாயகத்தின் எவ்வளவு பகுதிகளை சிங்களப் பயங்கரவாதம் ஏப்பம் விட்டிருக்கும்? ஒருவேளை சீமானை நம்பித்தான் 10 வருடம் என்கிறீர்களோ?அவருக்கு தமிழ்நாட்டில் இருக்கும் மக்கள் ஆதரவைப் பார்த்த பின்புமா இந்த நம்பிக்கை? 

10 hours ago, பையன்26 said:

அர‌ச‌னை ந‌ம்பி புருஷ‌ன‌ கைவிட்ட‌து போல்

அப்பன், இப்போது யாரை நம்பியிருக்கிறீர்கள்? யாரைக் கைவிட்டீர்கள்? இப்போது நீங்கள் நம்பிக்கை வைத்திருக்கும் அந்த "புருஷன்" யார்? 

10 hours ago, பையன்26 said:

த‌மிழீழ‌த்தில் ந‌ட‌ந்த‌து இன‌ ப‌டுகொலை சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சுக்கு எதிராக‌ ப‌ல‌ நாடுக‌ள் முர‌ன் ப‌டும் போது..............இவான்ட‌ இந்த‌ அறிக்கையால் ச‌ர்வ‌தேச‌ ம‌ட்ட‌த்தில் எல்லாம் ச‌ரியா போன‌த‌

அப்படி சரியாக நடக்கிற விடயங்களைக் கூறுங்களேன், கேட்கலாம். ரணிலை ஆட்சிக்குக் கொண்டுவந்து, ராஜபக்ஷேக்களை ஆட்சியிலிருந்து இறக்கியதைத் தவிர வேறு என்னத்தை சர்வதேசம் செய்திருக்கிறது? தாயகத்தில் சிங்களப் பயங்கரவாதம் இன்று செய்துவருவது சர்வதேசத்திற்குத் தெரியாது என்று நினைக்கிறீர்கள், குறைந்தது அதனைத் தடுக்கவாவது என்ன செய்திருக்கிறார்கள் அவர்கள்? காணாமற்போனோர், அரசியற்கைதிகள், ஆக்கிரமிக்கப்பட்டு வரும் நிலங்களும், மத வழிபாட்டிடங்களும், தொடர்ச்சியான இராணுவப் பிரசன்னம் என்பவற்றிற்குப் பிறகும் கூட இன்றுவரை இராணுவ உதவிகள், கூட்டுப்பயிற்சிகள், கடனுதவிகள், இராணுவ உளவு விமானங்கள் என்று தொடர்ந்து சிங்களப் பயங்கரவாதம் சர்வதேசத்தால் பலப்படுத்தப்பட்டு வருகையில் எவ்வாறு எமக்குச் சாதகமான சூழ்நிலை சர்வதேசத்தில் ஏற்பட்டு வருவதாக உங்களால் எண்ணத் தோன்றுகிறது?

10 hours ago, பையன்26 said:

2006க‌ளில் இருந்து 2009வ‌ரை த‌லைவ‌ரின் புக‌ழை ப‌ட்டி  தொட்டி எங்கும் ப‌ர‌ப்பினேன் அது த‌மிழ் நாட்டையும் சென்று அடைந்து இருக்கு ஆன‌ ப‌டியால் அது என‌க்கு ம‌கிழ்ச்சி

எமது இனத்தின் மீது அக்கறை கொண்ட அனைவருமே இதனைச் செய்தோம் அப்பன். உண்மையாகவே இனத்தின் நலன்களுக்காக இயங்கியவர்கள் தலைமைக்கோ மாவீரருக்கோ ஒருபோதும் துரோகம் செய்ய நினைக்கப்போவதில்லை. அப்படி நினைப்பவர்களை காலம் எம் முன்னால் கொண்டுவந்து நிறுத்தும். கருணாவைப்போல, பிள்ளையானைப் போல, கே பீ யைப்போல, டக்கிளசைப் போல அவர்கள் முன்னால் வருவார்கள். 

Edited by ரஞ்சித்
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
5 hours ago, ரஞ்சித் said:

அது எப்படி அப்பன்? அந்த வழி என்னவென்று ஓரளவிற்கு யோசித்து வைத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன், அதை இங்கே பகிரலாமே? ஏனென்றால், இன்னுமொரு தமிழ் உயிர் போகாமல் எம்மால் எமது தாயகத்தைத் தக்கவைத்துக்கொள்வது சாத்தியமென்றால், நிச்சயமாக அவ்வழியே சிறந்த வழி. 

தமிழரின் தாயகத்தைச் சிறுகச் சிறுகக் கூறுபோட்டு கபளீகரம் செய்துவரும்வேளையில், அதை ஏனென்று கேட்கும் கடுகளவு துணிவும் இன்றி நடைபிணங்களாக அடிமைகளாக நமதினம் வந்துவிடும் என்று நினைக்கிறீர்கள். சரி, இந்த லட்சணத்தில், கத்தியின்றி, யுத்தமின்றி தனி ஈழம் எடுக்கலாம் என்று வேறு சொல்கிறீர்கள். தனி ஈழம் தேவையென்று இன்று கூறும் ஒரு சிலரும் நாளடைவில் வாய்மூடிப்போக, அதற்கான தேவையே இல்லாது போய்விடுமே? பிறகு ஏன் கத்தியின்றி, யுத்தமின்றி?  

ஆக, இன்னும் ஒரு 10 வருடங்கள் நாம் காத்திருக்க வேண்டும் என்கிறீர்கள். சரி, எம் ஜி ஆர் இருந்த காலத்தில் எமக்கிருந்த ஆதரவைக் காட்டிலும் அதிகமான ஆதரவினை இன்னும் 10 வருடத்தில் தமிழ் நாட்டில் பெற்றுவிடலாம் என்கிறீர்கள். சரி, அப்போது மீண்டும் அதே காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் என்ன செய்யலாம்? இவை எல்லாவற்றையும் விட, சிங்களப் பயங்கரவாதிகள் இன்று நடத்திக்கொண்டிருக்கும் எமது தாயகத்தின் மீதான ஆக்கிரமிப்பை இன்னும் 10 வருடங்களுக்கு ஒத்திவைப்பார்களா? இன்னும் 10 வருடங்களில் மீதமிருக்கும் தாயகத்தின் எவ்வளவு பகுதிகளை சிங்களப் பயங்கரவாதம் ஏப்பம் விட்டிருக்கும்? ஒருவேளை சீமானை நம்பித்தான் 10 வருடம் என்கிறீர்களோ?அவருக்கு தமிழ்நாட்டில் இருக்கும் மக்கள் ஆதரவைப் பார்த்த பின்புமா இந்த நம்பிக்கை? 

அப்பன், இப்போது யாரை நம்பியிருக்கிறீர்கள்? யாரைக் கைவிட்டீர்கள்? இப்போது நீங்கள் நம்பிக்கை வைத்திருக்கும் அந்த "புருஷன்" யார்? 

அப்படி சரியாக நடக்கிற விடயங்களைக் கூறுங்களேன், கேட்கலாம். ரணிலை ஆட்சிக்குக் கொண்டுவந்து, ராஜபக்ஷேக்களை ஆட்சியிலிருந்து இறக்கியதைத் தவிர வேறு என்னத்தை சர்வதேசம் செய்திருக்கிறது? தாயகத்தில் சிங்களப் பயங்கரவாதம் இன்று செய்துவருவது சர்வதேசத்திற்குத் தெரியாது என்று நினைக்கிறீர்கள், குறைந்தது அதனைத் தடுக்கவாவது என்ன செய்திருக்கிறார்கள் அவர்கள்? காணாமற்போனோர், அரசியற்கைதிகள், ஆக்கிரமிக்கப்பட்டு வரும் நிலங்களும், மத வழிபாட்டிடங்களும், தொடர்ச்சியான இராணுவப் பிரசன்னம் என்பவற்றிற்குப் பிறகும் கூட இன்றுவரை இராணுவ உதவிகள், கூட்டுப்பயிற்சிகள், கடனுதவிகள், இராணுவ உளவு விமானங்கள் என்று தொடர்ந்து சிங்களப் பயங்கரவாதம் சர்வதேசத்தால் பலப்படுத்தப்பட்டு வருகையில் எவ்வாறு எமக்குச் சாதகமான சூழ்நிலை சர்வதேசத்தில் ஏற்பட்டு வருவதாக உங்களால் எண்ணத் தோன்றுகிறது?

எமது இனத்தின் மீது அக்கறை கொண்ட அனைவருமே இதனைச் செய்தோம் அப்பன். உண்மையாகவே இனத்தின் நலன்களுக்காக இயங்கியவர்கள் தலைமைக்கோ மாவீரருக்கோ ஒருபோதும் துரோகம் செய்ய நினைக்கப்போவதில்லை. அப்படி நினைப்பவர்களை காலம் எம் முன்னால் கொண்டுவந்து நிறுத்தும். கருணாவைப்போல, பிள்ளையானைப் போல, கே பீ யைப்போல, டக்கிளசைப் போல அவர்கள் முன்னால் வருவார்கள். 

உங்க‌ளின் ம‌ன‌ வேத‌னைய‌ என்னால் புரிந்து கொள்ள‌ முடியுது ர‌கு அண்ணா

உங்க‌ளுக்கு இருக்கும் கோவ‌மும் வேத‌னையும் சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சின் மீது என‌க்கும் இருக்கு

த‌லைவ‌ர் உயிருட‌ன் இருந்த‌ கால‌த்தில் ச‌மாதான‌த்துக்கு வாங்கோ என்று த‌லைவ‌ரின் காலில் சிங்க‌ள‌ ர‌னில் விழுந்த‌து ம‌ற‌ந்து விட‌ முடியாது............

அண்ணா காற்று எந்த‌ நேர‌மும் ஒரே மாதிரி வீசாது எம‌க்கு சாத‌க‌மான‌ கால‌மும் வ‌ரும்

க‌ன‌டா பிர‌த‌வ‌ர் ஜ‌ஸ்ரின் ரூட்டோ த‌மிழீழ‌த்தில் ந‌ட‌ந்த‌து இன‌ ப‌டு கொலை என்று அறிக்கை விட்ட‌வ‌ர்............2009க்கு முன் 2009க்கு பின் என்று பார்ப்போமானால் 2009க்கு பிற‌க்கு ச‌ர்வ‌தேச‌ ம‌ட்டில் எம‌க்கான‌ ஆத‌ர‌வு கூடி கொண்டு தான் போகுது

2009இன‌ அழிப்புக்கு பிற‌க்கு என‌து ம‌ன‌ நிலை இவ‌ள‌வ‌த்தையும் இழ‌ந்து விட்டோம் மீண்டும் எம‌து உயிரை கொடுத்தாவ‌து த‌மிழீழ‌த்தை மீட்க்க‌னும் 

ஆனால் கால‌ங்க‌ள் போக‌ போக‌ மீண்டும் ஒரு ஆயுத‌ போர் வ‌ந்தால் பேர் அழிவை நாம் மீண்டும் ச‌ந்திக்க‌ வேண்டி வ‌ரும் அந்த‌ என்ன‌ம் என்னை விட்டு போன‌து.......அதுக்கு கார‌ண‌ம் ப‌ல‌ அண்ணா 

இதை விடுத்து அறிவாயுத‌த்தை ஏந்துவ‌து சிற‌ப்பு என்று அத‌ற்கான‌ ந‌ட‌வ‌டிக்கையில் என‌து ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் இற‌ங்கின‌வை

உல‌க‌ அள‌வில் இப்ப‌ தெரியும் இன‌ வெறிய‌ன் ம‌கிந்த‌ செய்த‌து இன‌ அழிப்பு என்று ச‌ர்வ‌தேச‌ ம‌ட்டில் எம‌து இன‌ அழிப்பை பார்த்த‌ காணொளிக‌ள் எல்லாம் வெளி வ‌ந்து 10வ‌ருட‌ம் ஆகிட்டு

2009 எம்ம‌வ‌ர்க‌ள் இருந்த‌ இட‌ம் இல்லாம‌ எல்லாத்தையும் அழித்து விட்டார்க‌ள் சிங்க‌ள‌  இன‌வாத அர‌சு

க‌த்தி இன்றி யுத்த‌ம் இன்றி நாட‌டைவ‌து அகிம்சை முறையில் அண்ணா..........ஈழ‌ த‌மிழ‌ருக்கு அகிம்சை என்றாலும் என்ன‌ என்று தெரியும் போர் த‌ந்திர‌மும் ந‌ல்லா தெரியும் எம்ம‌வ‌ர்க‌ள் சாதிச்சு விட்டு தான் 2009ம் ஆண்டு விர‌ச்சாவு அடைந்த‌வ‌ர்க‌ள்  அவ‌ர்க‌ள் ப‌ல‌ சாத‌னைக்கு சொந்த‌க்கார‌ர்க‌ள்🙏............
 
எம‌க்காக‌ போராடின‌ ப‌ல‌ர் இப்போது சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சுட‌ன் அவ‌ர்க‌ளுக்கு ப‌னிந்து எம‌க்கான‌ ச‌தி வேலைக‌ளில் இற‌ங்கிட்டின‌ம்

ஒரு க‌தைக்கு த‌லைவ‌ரின் ம‌னைவியின் ச‌கோத‌ரி சொன்ன‌து போல் த‌லைவ‌ர் வ‌ருவாரா இருந்தால்............சிங்க‌ள‌வ‌னே சொந்த‌ ம‌க்க‌ளின் பேருந்துக்கு குண்டை வைத்து விட்டு ச‌ர்வ‌தேச‌த்துக்கு போட்டு காட்டுவாங்க‌ள் இவ‌ங்க‌ள் ம‌று ப‌டியும் தீவிர‌வாத‌த்தில் இற‌ங்கிட்டாங்க‌ள்.................2009க்கு முத‌ல் சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சால் கொல்ல‌ப் ப‌ட்ட‌ த‌மிழ‌ர்க‌ளை விடுத‌லைபுலிக‌ள் தான் கொன்றார்க‌ள் என்னு ச‌ர்வ‌தேச‌த்தில் சொன்ன‌வ‌ங்க‌ள் 
எப்ப‌டி எல்லாம் பொய் பித்த‌லாட்ட‌ம் செய்து எம்ம‌வ‌ர்க‌ளுக்கு உல‌க‌ல‌வில் கெட்ட‌ பெய‌ர் வேண்டி த‌ந்து இருக்கிறாங்க‌ள்..........

அண்ணா 2009க்கு பிற‌க்கு இல‌ங்கை அர‌சிய‌லை நான் க‌ண்டு கொள்வ‌து கிடையாது சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் பொய்யில‌ பிற‌ந்து பொய்யிலையே வ‌ளந்த‌வ‌ங்க‌ள்.............

2009க்கு பிற‌க்கு கோவ‌த்தில் இந்தியாவை அதிக‌ம் கேவ‌ல‌ப் ப‌டுத்திய‌வ‌ர்க‌ளில் நானும் ஒருவ‌ன்..............ஆனால் இப்போது இந்திய‌ அர‌சிய‌ல் வாதிக‌ள்  ம‌ன‌ங்க‌ளில் சிறு மாற்ற‌ம் வ‌ந்து இருக்கு

இன்னொரு போருக்கு எம் ம‌க்க‌ள் முக‌ம் கொடுக்க‌ த‌யார் இல்லை அண்ணா..............வ‌றுமையோடு வாழும் ம‌க்க‌ளின் என்னிக்க்கை அதிக‌ம் அண்ணா

வெளி நாட்டில் இருப்ப‌வ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளின் குடும்ப‌ங்க‌ளுக்கு காசுக‌ளை அனுப்பி அவ‌ர்க‌ளை ந‌ல்லா வைச்சு பார்க்கின‌ம்

போரால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போராளிக‌ள் பொது ம‌க்க‌ள் இன்னும‌மும் மீண்டு வ‌ர‌ வில்லை

வெளி நாடுக‌ளில் நாம் வ‌ச‌தியாய் இருந்து கொண்டு இப்ப‌டி தான் ந‌ட‌க்க‌னும் இப்ப‌டி தான் செய்ய‌னும் என்று நினைப்ப‌து அழ‌க‌ல்ல‌

சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சின் கீழ் வாழ‌ என‌க்கு ஒரு போதும் விருப்ப‌ம் இல்லை

சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சு ம‌று ப‌டியும் த‌மிழ‌ர்க‌ளை த‌மிழ‌ர்க‌ளின் நில‌ங்க‌ளில் வ‌ஞ்சிக்க‌ தொட‌ங்கிட்டின‌ம் ஆனால் இதை துணிவோடு த‌ட்டி கேட்க்க‌ யாருக்கும் துணிவில்லை.................பொரும் திர‌லான‌ ம‌க்க‌ளை கூட்டி தொட‌ர் ஆர்பாட்ட‌ம் செய்தால் தான் புத்தா பிகார் அமைப்ப‌தை த‌டுத்து நிறுத்த‌லாம் இல்லையேன் இது தொட‌ர் க‌தையா போய் கிட்டு இருக்கும் அண்ணா

அன்மையில் விடுவிக்க‌ப் ப‌ட்ட‌ போராளி எங்க‌ட‌ த‌லைவ‌ரை போராட்ட‌த்தை யாரும் கொச்சை ப‌டுத்தினால் அடிப்பேன் என்று சொன்னார்...........அந்த‌ காணொளிய‌ பார்த்த‌ துரோகிய‌ல் சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சுக்கு த‌க‌வ‌ல் தெரிவித்து அந்த‌ போராளிய‌ ம‌ன்னாரில் வைச்சு கைத்து செய்திட்டின‌ம்

இப்போதைக்கு அட‌க்க‌ முடியாத‌ கோவ‌த்தை எம‌க்குள் க‌ட்டி வைப்ப‌து ந‌ல்ல‌ம் கால‌மும் நேர‌மும் கூடி வ‌ரும் போது அதை வெளியில் கொட்டும் போது சிங்க‌ள‌வ‌னுக்கு மீண்டும் மூத்திர‌ம் போகும் 2001ம் ஆண்டு க‌ட்டுநாய‌க்கா விமான‌த்த‌ள‌ம் தாக்கி அழிக்க‌ப் ப‌ட்ட‌ போது எப்ப‌டி எல்லாம் துடை ந‌டுங்கினார்க‌ள் சிங்க‌ள‌வ‌ர்க‌ள்

இப்போதைக்கு பொது வாக்கு எடுப்பு தான் சிற‌ந்த‌ வ‌ழி அதை நோக்கி நாம் ப‌ய‌னிப்போம் 

இன்னொரு போர் வ‌ந்தால் ஈழ‌ தேசத்தில் இருப்ப‌வ‌ர்க‌ள் காசுக‌ளை கொட்டி புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ர‌ பாப்பின‌ம்

அதோடு ஈழ‌ ம‌ண்ணில் ம‌க்க‌ள் ந‌ட‌மாட்ட‌ம் குறைந்து விடும்.........ப‌ல‌தை யோசிக்க‌னும் அண்ணா 

த‌மிழ‌ர்க‌ள் க‌ல்வி க‌ற்ற‌ பாட‌சாலைக‌ள் எல்லாம் க‌ட‌ந்த‌ சில‌ ஆண்டுக‌ளா வீழ்ச்சி க‌ண்டு கொண்டு வ‌ருது
670 பிள்ளைக‌ள் ப‌டிச்ச‌ பாட‌சாலையில் 300க்கு குறைவான‌ பிள்ளைக‌ள் தான் ப‌டிக்கின‌ம்

வ‌றுமையின் கார‌ண‌மாய் இப்போது இர‌ண்டு பிள்ளையோட‌ பிள்ளை பெருவ‌த‌ நிப்பாட்டின‌ம்

2002 ஈழ‌ம் கைக்கு எட்டிய‌ தூர‌ம் இருந்த‌து அண்ணா ர‌னிலின் துரோக‌த்தால் ச‌மாதான‌ம் என்ற‌ போலி நாட‌க‌த்துக்குள் விழுந்து எல்லாத்தையும் இழ‌ந்த‌து தான் மிச்ச‌ம்.................

மீண்டு எழுவோம் க‌வ‌லை வேண்டாம் அண்ணா...............மாவீர‌ர்க‌ளின் தியாக‌ம் வீன் போகாது

வாழ்க‌ த‌லைவ‌ர் புக‌ழ்🙏

வாழ்க‌ மாவீர‌ர் புக‌ழ்🙏

Edited by பையன்26
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 17/8/2023 at 02:25, நிலாமதி said:

தலைவரின் மனைவி , மகளுடன் இருக்கிறார்  என்ற காணொளி யில் உரையாடிய சகோதரி ஏதும் நிர்பந்தத்தின் மத்தியில் உரையாடி இருக்கலாம்.
அவரது முகத்தில் ஒருவகை இறுக்கம் ,யாரோ பின்புலத்தில் சொல்ல சொன்னதை ஒப்புவிப்பதுபோல் இருக்கிறது . ஒரு வேளை அவர்கள் இருந்தால் ....நன்றி கெடட   துரோகமும் காட்டிக் கொடுப்பும் சுருட்ட்லும் நிறைந்த இந்த இனத்துக்காக அவர்கள் அரசியலுக்கு வரவேண்டியதில்லை. நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுப்போகட்டும். உரையாற்றியவருக்கு பிரச்சினை வரும் என தெரிந்தும் ஏன் இந்த சூழலுக்கு  தள்ளப்படடார்? இதனால் யாருக்கு லாபம் ? . ஈழமக்களை  ஏன் குழப்ப வேண்டும்? 

அக்கா 2009க்கு முத‌ல் ஒரு க‌ருணா ஒரு ட‌க்கிளஸ்

இப்போது ஈழ‌ ம‌ண்ணில் ப‌ல‌ க‌ருணாக்க‌ள்..............2009க்கு முத‌ல் ப‌ல‌தை ஈசியா செய்து விட்டு அந்த‌ இட‌த்தை விட்டு கில‌ம்பிட‌லாம்............இப்போது சிறு கோரிலா தாக்குத‌ல் கூட‌ செய்ய‌ ஏலாது செய்தால் அழிவு எம‌க்கு தான்............எம‌க்கு என்று சிறு நில‌ப்ப‌ர‌ப்பு இருந்து எம்ம‌வ‌ர் அங்கு ப‌ல‌த்தோடு  இருந்தால் நில‌மை வேறு..............

த‌மிழ‌ர்க‌ள் போர் த‌ந்திர‌ம் ந‌ங்கு தெரிந்த‌வை ஆனால் இப்போது ப‌ல‌ துரோகிய‌ல் 

எதிரிய‌ விட‌ துரோகிய‌லே ஆவாத்தான‌வ‌ர்க‌ள்...............

த‌லைவ‌ர் வ‌ர‌ போவ‌து கிடையாது த‌லைவ‌ரின் ம‌னைவியின் ச‌கோத‌ரியின்  பேச்சு ஜ‌யா ப‌ழ‌ நெடுமாறானின் அறிவிப்பு எப்ப‌டி கீழ் ம‌ட்ட‌த்துக்கு போன‌தோ அதே போல் இவாவும் த‌மிழ‌ர்க‌ளிட‌ம் அவ‌மான‌ ப‌ட்டு அட‌ங்கி போவா

நீங்க‌ள் மேல‌ சொன்ன‌து போல் த‌லைவ‌ர் உயிருட‌ன் இருந்தால் இந்த‌ இன‌த்துக்கு போராடாம‌ குடும்ப‌ வாழ்க்கைய‌ வாழுவ‌தே ந‌ல்ல‌ம்.............

ஆயுத‌ம் மெள‌வுனிக்க‌ப் ப‌ட்ட‌து 2009ம் ஆண்டு..........ச‌ரி ஒரு வ‌ருட‌ம் த‌ன்னும் க‌ழித்து த‌லைவ‌ர் ஒரு அறிக்கை காணொளி மூல‌ம் விட்டு இருந்தால் த‌மிழ‌ர்க‌ள் நில‌ங்க‌ளில் சிங்க‌ள‌வ‌ன் வாழ்வ‌த‌ற்கு ப‌ய‌ப்பிடுவான்................த‌லைவ‌ர் பொறுமை காக்கும் ம‌னித‌ர் கிடையாது

2015ம் ஆண்டு நான் த‌மிழ் நாட்டில் த‌ங்கி இருந்தேன் அப்போது மொட்டை மாடியில் ப‌டுத்து கொண்டு என்னை அறியாம‌ த‌லைவ‌ரை நினைத்து க‌ண்ணீர் வ‌ந்த‌து................த‌லைவ‌ர் த‌ப்புவில் 2009 ஆர‌ம்ப‌ கால‌ப் ப‌குதியில் த‌ப்ப‌ ப‌ல‌ வ‌ழிக‌ள் திற‌ந்து இருந்த‌து...........த‌லைவ‌ரின் நோக்க‌ம் த‌ப்புவ‌து கிடையாது............த‌ள‌ப‌திக‌ள் போராளிக‌ள் த‌லைவ‌ரை ப‌த்திர‌மாய் முள்ளிவாய்க்கால் வ‌ர‌ பாது காத்தார்க‌ள்..............முள்ளிவாய்க்காலால் த‌லைவ‌ர் த‌ப்பிக்க‌ ஒரு வ‌ழியும் இல்லை அதோடு நீர்மூழ்கி க‌ப்ப‌ல் மூலம் த‌ப்பிக்க‌ ச‌ர்ந்த‌ப்பம் இல்லை............சிறில‌ங்க‌ன் நேவி இந்திய‌ன் நேவி க‌ட‌ல் வெடி குண்டை முள்ளிவாய்க்கால் க‌ட‌ல் ப‌ர‌ப்பில் ப‌ல‌ இட‌ங்க‌ளில் க‌ட‌லுக்கு அடியில் வைத்து இருந்தார்க‌ள் இதை எல்லாம் தான்டி த‌லைவ‌ர் 150 போராளிக‌ளுட‌ன் குடும்ப‌த்தோடு த‌ப்பிச்சார் என்று த‌லைவ‌ரின் ம‌னைவியின் ச‌கோத‌ரி சொல்லுவ‌து ப‌ச்சை பொய்...............

தமிழ‌ர்க‌ள் செய்ய‌ வேண்டிய‌து ஒன்றே ஒன்று த‌மிழீழ‌ நாட்டை அடைந்து அதை தேசிய‌ த‌லைவ‌ருக்கு ச‌ம‌ர்பிப்ப‌து🙏🥰.............இதை நோக்கி ப‌ய‌ணிப்ப‌தை விடுத்து போலி வ‌த‌ந்திய‌ ப‌ர‌ப்பி அந்த‌ மாபெரும் தியாக‌த்தை த‌மிழ் இன‌த்துக்கு செய்த‌ த‌லைவ‌ரை கேவல‌ப் ப‌டுத்துவ‌தை இவ‌ர்க‌ள் நிறுத்தி கொள்ள‌னும்................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தேசிய தலைவர் வாழ்ந்து கொண்டே தான் இருப்பார். ஏனெனில்.. அவரும் அவரின் அமைப்பும் செய்த தியாகங்கள்.. தர்மத்தின் வழியில் நின்றது.. மக்களின் தேவையின் வழியில் நின்றதை.. இன்றும்.. அவசியம் என்பதை காலம் மீண்டும் மீண்டும் உணர்த்திக் கொண்டே இருக்கிறது. அந்த உணர்த்தல் உள்ள வரை தமிழர் உள்ளவரை தலைவர் வாழ்ந்து கொண்டே தான் இருப்பார். 

  • Thanks 2
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 20/8/2023 at 07:41, விளங்க நினைப்பவன் said:

Vasee நலமாக இருக்கிறீர்களா

நன்றி, உங்களது கரிசனைக்கு, நலமாக உள்ளேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொழும்பில் இருக்கும் தமிழ் ,சிங்கள  மத்தியதர ,உயர்தர வர்க்க பிள்ளைகள் தங்களுக்குள் ஆங்கிலம் தான் கதைக்கிறார்கள் ...இன்னும் கொஞ்ச காலத்தில்  இலங்கையை சேர்ந்த வருங்கால தலை முறையினரின் தாய் மொழி ஆங்கிலமாய் தான் இருக்கும் .
 
  • Like 1
  • Thanks 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்கள் இருவருக்கும் மனம் வெம்புகிறது… ஆனால் அதை பொது வெளியில் ஒத்து கொள்ள ஈகோ விடுகுதில்லை என்பது உங்கள் கருத்துக்களிலேயே தெரிகிறது… @புலவர் மனநிலையும் இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். @வீரப் பையன்26 என்ன புதிய, அரிய வகை முட்டுடன் வரப்போகிறார் என்பதை காண ஆவலுடன் இருக்கிறேன்🤣. ————-  கவுன்சிலிங் உதவி தேவை எனில் நான் தயார். முன்பு சம்-சும்-விக்கி யை ஆதாரித்து பின் நிலைமாறிய அனுபவத்தை பகிர்ந்துகொள்ளலாம்🤣. பிகு சீமானின் இந்த செயல் அவர் எப்படிபட்ட பச்சோந்தி என அறிந்தோருக்கு எந்த வியப்பையும் தராது.
    • உங்களுக்கு பொறாமை. வந்து வந்து விழுந்த ஆளை விட்டு விட்டோமே என்று?😋
    • ஊர் எல்லாம் எலிகாச்சல் வந்து சனம் சாகுது உங்கட ஆளுக்கு இன்னமும் தொற்ற வில்லையோ?😄
    • அப்படி பெரிய அழகனா @Nathamuni நாதம்ஸ்?🤣
    • என்னையா இது? அடிப்பொடி தன் தலைவனை பில்டப் பண்ணி ஒரு செய்தியை போட்டால் - அதற்கு அடுத்த பின்னூட்டத்தில் வந்து இப்படி ஒரு ஓவியத்தால் அத்தனையையும் கிழித்து தொங்க விடுவீர்கள்களா 🤣. இது முறையா? தர்மம்தானா?🤣 பார்ப்போம் இவரும் சும் சாணக்ஸ் போல போய் பாலிமெண்ட்டுக்கு வெளிய நிண்டு போட்டோ எடுத்து போடுறாரா என.   சந்திப்பு நடந்தால் இருதரப்பு அறிக்கை, படம் வரும்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.