Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

“நாங்கள் அருகில் இருந்திருந்தாலும் எங்கள் தந்தையின் மறைவை இத்தனை மரியாதையுடன் அணுகியிருக்க மாட்டோம். தமிழ் இலக்கிய உலகம் எங்கள் தந்தையின் இறுதி மரியாதையை கண்ணியத்துடன் நடத்தியது” என்று நினைவுகளைக் கூறி நெகிழ்கிறார், ஈழத்து எழுத்தாளர் கே.டானியலின் மகனான டானியல் வசந்தன்.

 
 
 
கே.டானியல்
 
கே.டானியல்

இலக்கியம் என்பது ஒரு காலம் வரை குறிப்பிட்ட சமூகத்தின் வாழ்வியலை மட்டுமே பதிவு செய்தது. சொல்லப்போனால் இலக்கியம், ஒரு பொழுதுபோக்குக் களமாக மட்டுமே இருந்த காலம். அப்போது அதனை ஒருவர் தலைகீழாக மாற்றி அரசியல் படுத்தியவர் எழுத்தாளர் கே.டானியல். ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் வாழ்வியலை, வாழ்க்கை அனுபவங்களை காத்திரமிக்க, வாய்மொழி மரபாக, மக்கள் பேசும் எளிய மொழிநடையில் பதிவு செய்தார். அது ஒடுக்குமுறை மனோபாவத்தை சிதறடித்தது, சாதிய மனோபாவத்தை நிலை குலைய வைத்தது. ”மக்களிடம் படிப்பது, அதை மக்களுக்கே திருப்பிக் கொடுப்பது” என்ற கொள்கையை முன்னிறுத்தி எழுதினார். முதன் முதலாகத் தொடங்கப்பட்ட இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர். தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தின் முக்கிய பங்களிப்பாளர். தலித் என்ற வார்த்தை புழக்கம் இல்லாத காலக்கட்டத்திலே, தலித் இலக்கியத்தினை தந்த முன்னோடி.

கே.டானியல் படைப்புகள்
 
கே.டானியல் படைப்புகள்

`கோவிந்தன்', `அடிமைகள்', `கானல்', `தண்ணீர்', `பஞ்சகோணங்கள்' ஆகிய பஞ்சமர் வரிசை நாவல்கள், நெடுந்தூரம், மையக்குறி, முருங்கையிலைக் கஞ்சி, பூமரங்கள், சாநிழல் ஆகிய குறுநாவல்கள், `என் கதை' எனும் கட்டுரை ஆகியவை இதுவரை வெளிவந்த டானியலின் படைப்புகளாகும். இத்தகைய பெருமையுடைய எழுத்தாளரின் மகனான டானியல் வசந்தன் சென்னைக்கு வர, அவரை நேரில் சந்தித்துப் பேசினேன்.

 

இலங்கை தமிழ் தலித் இலக்கியத்தின் முன்னோடி உங்கள் தந்தை என்ற நிலையில் இருந்து, இன்றைய தலித் இலக்கிய சூழலை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

கே.டானியல் இளம் வயதில்
 
கே.டானியல் இளம் வயதில்
Sri Sritharan

கே.டானியலுக்கு முன்னரும் தலித் இலக்கியம் அங்கிருந்தது. ஆனால் அவர்கள் மக்கள் மொழியில் எழுதவில்லை. டானியல் மக்களின் வார்த்தைகளில் அவர்களின் வாழ்வியலோடு சேர்த்து எழுதினார். அவரது முதல் கதைக்கு தலைப்பை "நெடுந்தூரம்" என்று வைத்திருந்தார். அதைப் படித்த இலக்கிய மேட்டிமைத்தனம் கொண்டவர்கள் டானியலுக்கும் இலக்கியத்துக்கும் நெடுந்தூரம் என்று விமர்சனம் தந்தனர். இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத டானியல் ஒடுக்கப்பட்ட மக்களின் இலக்கியங்களை அவர்கள் வாழ்விடங்களுக்குச் சென்று அவர்கள் பேசும் மொழியில் தொடர்ந்து எழுதினார். உதாரணத்திற்கு `போராளிகள் காத்திருக்கின்றனர்' என்ற நூலினை எழுத யாழ்ப்பாணத்தில் பாசையூர் என்றொரு மீன்பிடி கிராமத்திற்குச் சென்று தங்கி எழுதினார். பாமர மக்களின் குரலாக அது இருக்க மக்கள் கொண்டாடித் தீர்த்தனர். பின்னர் அநேக எழுத்தாளர்கள் டானியலின் பாணியை கையில் எடுத்தனர். குறிப்பாக டொமினிக் ஜீவா, தென்னியன் போன்றவர்கள் இதே நடையைப் பின்பற்றினர். யாரெல்லாம் இலக்கியத்துக்கும் டானியலுக்கும் “நெடுந்தூரம்” என்றனரோ அவர்களே டானியல் எங்களுக்கு நெருக்கமானவர் என்று காட்டிக்கொள்ள ஆரம்பித்தனர்.

 

இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தனது இலக்கியத்தைக் கொண்டு வந்த அனுபவம் குறித்து …

கே.டானியலின் நூல்
 
கே.டானியலின் நூல்

அப்பா எழுதிய அக்காலக்கட்டத்தில் என்னைப் பொறுத்தமட்டில் தலித் இலக்கியம் இந்தியாவில் பெரிதாக வளரவில்லை என்றே நினைக்கிறேன். அப்போது அவர் இங்கே வீரகேசரி போன்ற இதழ்களில் எழுதிக்கொண்டிருந்தார். அப்போது தனியான புத்தகமாக வெளியிடும் எண்ணங்கள் அவருக்கு இல்லை. அந்நிலையில் அவருக்குள் இலங்கை சாகித்ய இலக்கிய விருது கிடைக்கிறது. அதன்மூலம் தமிழகத்தில் அவர் அறியப்படுகிறார். மேலும் தமிழ்நாட்டிலும் சாதிய பிரச்னைகள் இருக்கிறது என்பதால் தமது புத்தகத்தை அங்கே கொண்டு செல்ல முயற்சிக்கிறார். தனது படைப்புகளை கையெழுத்துப் பிரதியாக எழுதி மூன்று அச்செடுத்து குமார் தனபாலன் என்பவரிடம் எழுத்துப்பிழை சரிபார்க்கச்செய்து மூன்று முறை பிழைத்திருத்தம் செய்த பின்னரே புத்தகமாகக் கொண்டு வருவார். இத்தனை உழைப்புக்குப் பின்னர் கப்பல் வழியாக தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்து பிரசுரிப்பார். அப்படி முதன்முதலாக பஞ்சமர் நாவலை வெளியிட்டார். அதற்கு பெரிதும் வரவேற்பு கிடைத்தது. தமிழ்நாட்டின் தலித் இலக்கியங்களுக்கு முன்னோடி டானியல் என்றே சொல்லலாம்.

 

கே.டானியல்  அவர்களின் பொதுவுடைமை செயல்பாடுகள் குறித்து...

கே.டானியல்
 
கே.டானியல்

பொதுவுடமை இயக்கத்தில் அப்பா தீவிர ஈடுபாடு கொண்டவர். தனது மரணத்திலும் செங்கொடி போர்த்தி இறுதி மரியாதை செலுத்தப்பட வேண்டும் என்று விருப்பப்பட்டவர். இலங்கை கம்யூனிஸ்ட் அமைப்பின் அங்கமான தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தைக் கட்டமைத்து சிறப்பாகச் செயலாற்றினார். ஒடுக்கப்பட்ட மக்களை சைவ ஆலயப் பிரவேசம் செய்ய வைத்தது அதில் குறிப்பிட தகுந்த விஷயமாகும். முதலில் அகிம்சை வழியில் போராடிய அமைப்பினர். அது சரி வரவில்லை என்று ஆயுதப் போராட்டம் செய்தனர். கோயில் நிர்வாகம், போலீஸ் ஆகியோருக்கு முன்னரே அறிவிப்பு விடுத்து, ஒடுக்கப்பட்ட மக்களைத் திரளாக கோயிலுக்கு முன்னர் அழைத்துச் சென்றனர். அதைத் தடுக்க யாராவது வந்தால், இவர்களே தயாரித்த வெடி குண்டை அவர்கள் மீது படாதபடி சற்று தொலைவில் எறிவார்கள். அதன் தாக்கம் வெறும் எச்சரிக்கை செய்யும் அளவிற்கே இருக்கும். எதிர்தரப்பு ஆட்களுக்கும் சிறிய காயங்கள் தவிர பெரிதான பாதிப்புகள் ஏற்படாத வண்ணமே பார்த்துக் கொண்டனர். இதன் மூலம் கோயில் பிரவேசங்கள் வெற்றிகரமாக நடந்தது. ஒரு நாள் இதற்காக கொள்கை பிரச்சாரம் செய்து கொண்டிருந்த அப்பா மற்றும் இயக்க அமைப்பினரை விடுதலை புலிகள் மடக்கி, துப்பாக்கியை நெற்றியில் வைத்து இனி இவ்வாறான சாகச நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கை செய்தனர். அதற்குப் பிறகு இயக்க வேலைகள் மெல்ல மெல்ல குறைத்து ஒரு புள்ளியில் நின்று போனது.

 

இன்றைய ஈழ எழுத்தாளர்கள் தலித் பிரச்னைகளை எவ்வாறு அணுகுகிறார்கள்?

கே.டானியல்
 
கே.டானியல்

அப்பா எழுதிக் கொண்டிருக்கும் போதே விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் சாதிப் பிரச்னையை எழுதுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அவ்வாறு எழுதினால் தமிழ் ஈழம் என்ற பொது நோக்கத்திற்கு அது களங்கம் விளைவிக்கும் என்றனர். அப்பா போர் குணம் கொண்டவர். `நீங்கள் சுட வேண்டும் என்றால் சுட்டுக்கொல்லுங்கள்; நான் இதற்கு அஞ்சமாட்டேன்' என்று பதில் எழுத முற்பட்டார். ஆனால் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத் தோழர்கள் அப்பாவை தடுத்து நிறுத்தினர். பின்னர் அமைப்பு வேலைகளையும் குறைத்துக் கொண்டனர். இலங்கை தலித் இலக்கியம் பின்னடைவைச் சந்திக்க விடுதலை புலிகள் போன்ற போராளி அமைப்புகளின் செயல்பாடே முக்கிய காரணம். அது அடுத்த தலைமுறை எழுத்தாளர்களுக்கு தீண்டாமை விஷயங்கள் குறித்து எழுத பெரிய சிக்கலை உண்டாக்கியது. அதுமட்டுமில்லாமல் எழுத்தாளர்கள் தலித் பிரச்னைகளை எழுதினால் தாங்களும் தலித் என்கிற முத்திரை குத்தப்படுவோமோ என்ற எண்ணம் கொண்டிருக்கின்றனர். இதனால் பெரும்பாலானவர்கள் தலித் பிரச்னைகளில் இருந்து அந்நியப்பட்டே இருக்கிறார்கள்.

 

தற்போது சாதிய பிரச்னைகள் தமிழர் வாழும் பகுதியில் குறைந்துள்ளதா?

தற்போது இலங்கையில் சாதி பிரச்னைகள் அதே நிலையில் தான் உள்ளது. இங்கே தமிழர்கள் தங்களுக்குள்ளே இருவேறு நிலங்களாகப் பிரிந்து தான் வாழ்கின்றனர். என்னிடம் பணம் இருந்தும் தமிழர்கள் இருக்கும் மாற்று சாதி பகுதியில் நிலம் வாங்கிவிட முடியாது. சமீபத்தில் நான் நிலம் வாங்க விலை எல்லாம் பேசி முடித்த பின்னர்,  “இன்னாருடைய மகனுக்கு நீ நிலம் வழங்கக்கூடாது” என்று நிலம் விற்க முன்வந்தவருக்கு மிரட்டல் வர அவர் எனக்கு நிலம் தர மறுத்துவிட்டார். அதே போல இப்போது எங்கே சாதி இருக்கிறது என்று கேள்வி கேட்டுக்கொண்டே அதை சூசகமாக செய்யும் நபர்கள் அதிகமாக உள்ளனர்.

 

பொதுவுடைமை இயக்கங்களின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து ?

யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை பொதுவுடைமை இயக்கங்கள் இப்போது ஒன்றுமே இல்லை என்றே சொல்லி விடலாம். சொற்பமான அளவிலே இருக்கிறார்கள், அவர்களிடமும் பெரிய அரசியல் செயல்பாடுகள் கிடையாது. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள்ளே பல பிரிவுகள் ஏற்பட்டு காலப்போக்கில் காணாமல் போய் விட்டார்கள். ஆரம்ப காலக்கட்டத்தில் அவர்கள் செய்த வீரமிகு போராட்டங்களை எடுத்து சொல்லும் ஆட்கள் கூட இப்போது அருகிவிட்டனர்.

 

போருக்குப் பிறகான அரசியல் சூழல்?

விடுதலைப் புலிகள் இருந்த வரை போதை மற்றும் விபச்சாரம் ஆகியவை தடைசெய்யப்பட்டு இருந்தது. போர் முடிவுற்ற அடுத்த நிகழ்வான `பூத்திடும் பனந்தோப்பு!' என்ற நிகழ்விலே அந்தத் தடைகள் எல்லாம் நீக்கபட்டது. சிறு சிறு போட்டிகளின் பரிசுப் பொருட்களாகவும் மது பொருட்கள் விற்கப்பட்டது. இதனால் மக்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ளனர். இன்று யாழ்ப்பாணத்தில் ஒரு செய்தித்தாளினை எடுத்துப் பார்த்தால், போதை பழக்கத்தினால் ஏற்பட்ட ஒரு தற்கொலை செய்தியினை நிச்சயம் பார்க்கலாம்.

 

இலங்கையில் பொருளாதாரப் போராட்ட சிக்கல்களில் தமிழர்களின் தற்போதைய நிலை என்ன?

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை கருவில் இருக்கும் குழந்தையும் வேலைக்கு சென்றால் தான் பொருளாதாரச் சிக்கல்களை சமாளிக்க முடியும் என்ற நிலை இருக்கிறது. இதில் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் இருந்து உதவி பெறுபவர்கள் சற்றே தப்பித்து கொள்ளலாம் மற்றவர்களுக்கு சிக்கல் இருக்கிறது.

 

தமிழ் மக்களிடம் `தனித்தமிழ் ஈழம்' பற்றிய எண்ணம் எவ்வாறு இருக்கிறது?

90 சதவிகித மக்களிடம் அந்த எண்ணமே இல்லை என்று சொல்லலாம். அவர்கள் போர் மூலம் தனிநாடு சாத்தியமில்லை என்பதை உணர்ந்து கொண்டிருக்கின்றனர். இப்போது நீங்கள் பார்க்கும் புத்தக் கோயில் முன்னர் நடக்கும் போராட்டம், மற்ற சிறு போராட்டங்களில் கூட ஒரு சில முகங்களை தான் திரும்ப திரும்ப பார்க்கலாம். மக்கள் அங்கு இருக்கும் அரசியலுக்குப் பழக்கப்பட்டு வருகிறார்கள்.

 

இங்கே தமிழ்நாட்டில் `தனி ஈழம் அமைத்தே தீருவேன்' என்று பேசுகிறார்களே அது குறித்து 

என்னைப் பொறுத்தவரை இவர்கள் எல்லோரிடமும் இருப்பது போலி நடிப்பு. எங்களைப் பயன்படுத்திக் கொண்டு காசு சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை இவர்களை யாரும் கண்டுகொள்வதில்லை. புலம்பெயர் தமிழர்கள் தான் காசு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றெல்லாம் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அதெல்லாம் சுத்தப் பொய். போர் நடந்த காலங்களில் ஆயுதம் வாங்க நிறைய பணம் வசூல் செய்யப்பட்டது. ஆனால் பிரபாகரன் மறைந்து விட்டதால் அந்தப் பணத்தை கேட்டுவிடுவார்கள் என்று பயப்பட்டுக் கொண்டு உயிரோடு இருக்கிறார் என்று சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்தாக இங்கே ஒருவர் உணர்ச்சிவசப்பட்டுக் கத்திக் கொண்டிருக்கிறார். எங்களுக்காக பேசுபவராகக் கட்டிக்கொள்ளும் அவரைப் பார்த்தால் சிரிப்பாக இருக்கும். யாழ்ப்பாணத்தில் இருக்கும் எங்களுடைய பிரச்னை பற்றி அவருக்கு என்ன தெரியும். ஒருவேளை யாழ்ப்பாணத்து நபரோ என்று எங்களுக்குள் நகையாடிக் கொள்வோம்.

 

சாநிழல் எழுத்து பிரதி காணவில்லை என்று குற்றம்சாட்டி இருந்தீர்களே! இப்போது புத்தகமாக வெளியிட்டிருக்கிறீர்கள்...

தனித்தமிழ் ஈழம் அமையாது; எங்கள் பெயரை வைத்துப் பிழைப்பு நடத்துகிறார்கள்! - டானியல் வசந்தன் பேட்டி
 

30 வருட போராட்டத்திற்குப் பிறகு சாநிழலின் எழுத்துப் பிரதியைக் கண்டுபிடித்து விட்டோம். அது புலம்பெயர் தமிழர் ஒருவரிடம் இருந்துள்ளது. உடனடியாக அதனை வாட்சப்பில் பெற்று, அதை புத்தகமாக மாற்றிவிட்டேன். அது புத்தகமாக வெளியிடப்பட தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இப்புத்தகத்தின் வழியே டானியல் யாழ்பாணப் பகுதியில் அன்றைய சூழலில் மருத்துவர்களிடையே நிலவிய சாதியம் குறித்துப் பேசியிருக்கிறார்.

 

எதிர்காலத் திட்டம் குறித்து?

தனித்தமிழ் ஈழம் அமையாது; எங்கள் பெயரை வைத்துப் பிழைப்பு நடத்துகிறார்கள்! - டானியல் வசந்தன் பேட்டி
 

தற்போது என் அப்பா கே.டானியல் அவர்களின் படைப்புக்கள் மொத்தத் தொகுதியாகவே விற்கப்படுகிறது. அதை அதிக விலை கொடுத்து வாங்குவதில் பலருக்கும் சிரமம் இருப்பதினால் அதனை தனித்தனியாக வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். மேலும் அவரது நாவல்களை ஆவணப்படமாக மாற்றும் எண்ணமும் உள்ளது. அதனைத் தொடர்ந்து செய்து வருகிறேன்.

தனித்தமிழ் ஈழம் அமையாது; எங்கள் பெயரை வைத்துப் பிழைப்பு நடத்துகிறார்கள்! - டானியல் வசந்தன் பேட்டி |Eelam writer K.Daniel's son Daniel Vasanthan Interview - Vikatan

  • Like 5
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பகிர்வுக்கு நன்றி நிழலி ......!  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இணைப்புக்கு நன்றி நிழலி...பஞ்சமர். வாசித்து உள்ளேன்   கனகாலம்.   கொக்குவில்.   கோண்டாவில் பகுதியை வைத்து எழுதி இருக்க வேண்டும்    நல்ல கதை   உண்மை சம்பவங்கள் அடக்கியது   

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாகிஸ்தான் உருவாகும் வரை பாகிஸ்தான் உருவாகாது என்று தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். வங்கதேசம் உருவாகும் வரை வங்கதேசம் என்ற சொல்லே உருவாகாது என்று தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். கொசாவோ உருவாகும் வரை அப்படி ஒரு நாட்டுக்கான தேவை இருக்கான்னு கூட தெரியாமல் தான் இருந்தார்கள்.. இந்த வெட்டிகள்.

ஆக தனித்தமிழீழம் உருவாவதும் விடுவதும்.. ஈழத்தமிழரின்.. பிராந்திய பூகோள காலத் தேவையின் நிமிர்த்தம் அமையும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
20 minutes ago, nedukkalapoovan said:

பாகிஸ்தான் உருவாகும் வரை பாகிஸ்தான் உருவாகாது என்று தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். வங்கதேசம் உருவாகும் வரை வங்கதேசம் என்ற சொல்லே உருவாகாது என்று தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். கொசாவோ உருவாகும் வரை அப்படி ஒரு நாட்டுக்கான தேவை இருக்கான்னு கூட தெரியாமல் தான் இருந்தார்கள்.. இந்த வெட்டிகள்.

ஆக தனித்தமிழீழம் உருவாவதும் விடுவதும்.. ஈழத்தமிழரின்.. பிராந்திய பூகோள காலத் தேவையின் நிமிர்த்தம் அமையும். 

தனிஈழம் அமையாது.

ஆனால் சீனலங்கை அமையும்!

அதில இந்தியாவுக்கு எந்த அலுவலும் இராது!!

***

அடுத்தாக இங்கே ஒருவர் உணர்ச்சிவசப்பட்டுக் கத்திக் கொண்டிருக்கிறார். எங்களுக்காக பேசுபவராகக் கட்டிக்கொள்ளும் அவரைப் பார்த்தால் சிரிப்பாக இருக்கும். யாழ்ப்பாணத்தில் இருக்கும் எங்களுடைய பிரச்னை பற்றி அவருக்கு என்ன தெரியும். ஒருவேளை யாழ்ப்பாணத்து நபரோ ன்று எங்களுக்குள் நகையாடிக் கொள்வோம்.

***

சரிதான்.... புரிஞ்சு போச்சு!!

யாழ்ப்பாணத்தில் இருக்கும் எங்களுடைய பிரச்னை பற்றி அவருக்கேனப்பா தெரியனும்?

 

 

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, Nathamuni said:

தனிஈழம் அமையாது.

ஆனால் சீனலங்கை அமையும்!

அதில இந்தியாவுக்கு எந்த அலுவலும் இராது!!

சீனலங்கா ஏலவே அமைந்து விட்டது. காலிமுகத் திடலுக்கு போனாலே தெரியும். இந்த வெட்டிகளுக்கு அதெல்லாம் பெரிய விடயமே அல்ல. அதுக்கெதிராக.. ஒரு துரும்பும் அசைக்காது தமிழீழம் அமைவது பற்றி கவலைப்படும்.. இந்த வெட்டிகளுக்கு... தனித்தமிழீழம் தான் இப்பவும் கண்ணைக்குத்துது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, nedukkalapoovan said:

சீனலங்கா ஏலவே அமைந்து விட்டது. காலிமுகத் திடலுக்கு போனாலே தெரியும். இந்த வெட்டிகளுக்கு அதெல்லாம் பெரிய விடயமே அல்ல. அதுக்கெதிராக.. ஒரு துரும்பும் அசைக்காது தமிழீழம் அமைவது பற்றி கவலைப்படும்.. இந்த வெட்டிகளுக்கு... தனித்தமிழீழம் தான் இப்பவும் கண்ணைக்குத்துது. 

இவரது அவதானிப்பு தவறு.

90% மக்களிடம் அந்த எண்ணமே இல்லை என்று சொல்லலாம். அவர்கள் போர் மூலம் தனிநாடு சாத்தியமில்லை என்பதை உணர்ந்து கொண்டிருக்கின்றனர். என்கிறார்.

இது தவறு. ஒற்றர் கூட்டம் பெருமளவில் இருப்பதால் யாருமே தமது கருத்துகளை வெளியிட மாட்டார்கள்.

தனிப்பட்ட ரீதியில் மனதில் உள்ளதை தெரிவிப்பார்கள்.

போர் மூலம் சாத்தியம் இல்லை, எல்லாருக்கும் தெரியும். பிறகேன், பிரபாகரன் பற்றி அப்பப்ப ரோ அரற்றுகிறது?

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, Nathamuni said:

இவரது அவதானிப்பு தவறு.

90% மக்களிடம் அந்த எண்ணமே இல்லை என்று சொல்லலாம். அவர்கள் போர் மூலம் தனிநாடு சாத்தியமில்லை என்பதை உணர்ந்து கொண்டிருக்கின்றனர். என்கிறார்.

இது தவறு. ஒற்றர் கூட்டம் பெருமளவில் இருப்பதால் யாருமே தமது கருத்துகளை வெளியிட மாட்டார்கள்.

தனிப்பட்ட ரீதியில் மனதில் உள்ளதை தெரிவிப்பார்கள்.

போர் மூலம் சாத்தியம் இல்லை, எல்லாருக்கும் தெரியும். பிறகேன், பிரபாகரன் பற்றி அப்பப்ப ரோ அரற்றுகிறது?

 

போர் மூலம் சாத்தியமில்லை என்பதிலும் பலமான நம்பிக்கைக்குரிய சக்திகளின் உதவியுடன் கூடிய குறுகிய கால போர் மூலம் எல்லாமே சாத்தியம். அப்படித்தானே வங்கதேசம் உருவானது. கொசாவோ உருவானது. அதேவேளை போர் தீர்மானிக்காது.. போரின் பின்னரான.. போருக்கான காரணிகள் அடிப்படையில் நிகழ்ந்த தேர்தல்கள் மூலம் உருவான தேசங்களும் உண்டு. ஈழத்தில்.. தனிநாடு அமைவதில்.. ஹிந்தியாவின் பங்களிப்பு தலையீடு அறவே இருக்கக் கூடாது. அப்படி ஒரு சூழல் எழுந்தால்.. நிச்சயம் ஈழம் மலரும். அதற்கு முன் ஹிந்தியா உடைந்து சிதறனும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தக்  கூத்தாடிகளின் கதை இப்படித்தான் இருக்கும் ..இவரு அப்பனே அந்தக்காலத்தில்... அப்படித்தான்...இதுகளை இப்ப ஒரு பொருட்டாக எடுப்பவர்கள் புலியின் வாசம் பிடியாதவர்களே...புத்தக வெளீயீடு என்றுவிட்ட்டு கக்குவது  முழுக்க புலிவாந்திதான்... அதை வான்கப் போறவையும் அவரின் ரசிகர்களே...அப்பரின் புத்தகம் விற்று பணம் பண்ணவேண்டின் ..இப்படித்தான் உளறவேண்டும்..பாவம் புழச்சுப் போகட்டும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 hours ago, nedukkalapoovan said:

போர் மூலம் சாத்தியமில்லை என்பதிலும் பலமான நம்பிக்கைக்குரிய சக்திகளின் உதவியுடன் கூடிய குறுகிய கால போர் மூலம் எல்லாமே சாத்தியம். அப்படித்தானே வங்கதேசம் உருவானது. கொசாவோ உருவானது. அதேவேளை போர் தீர்மானிக்காது.. போரின் பின்னரான.. போருக்கான காரணிகள் அடிப்படையில் நிகழ்ந்த தேர்தல்கள் மூலம் உருவான தேசங்களும் உண்டு. ஈழத்தில்.. தனிநாடு அமைவதில்.. ஹிந்தியாவின் பங்களிப்பு தலையீடு அறவே இருக்கக் கூடாது. அப்படி ஒரு சூழல் எழுந்தால்.. நிச்சயம் ஈழம் மலரும். அதற்கு முன் ஹிந்தியா உடைந்து சிதறனும். 

நமது அரசியல்வாதிகள், ஒருங்கிணைந்து வரும் ஜனாதிபதி தேர்தலை, தமிழர்கள் குடியொப்ப தேரதலாக மாற்றுவோம் என அறிவிக்க வேண்டும்.

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, Kandiah57 said:

பஞ்சமர். வாசித்து உள்ளேன்   கனகாலம்.   கொக்குவில்.   கோண்டாவில் பகுதியை வைத்து எழுதி இருக்க வேண்டும்    நல்ல கதை   உண்மை சம்பவங்கள் அடக்கியது   

நான் படித்தது  இல்லை. தகவல்களுக்கு நன்றி கந்தையா அண்ணா, நிழலி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, நிழலி said:

தற்போது சாதிய பிரச்னைகள் தமிழர் வாழும் பகுதியில் குறைந்துள்ளதா?

தற்போது இலங்கையில் சாதி பிரச்னைகள் அதே நிலையில் தான் உள்ளது. இங்கே தமிழர்கள் தங்களுக்குள்ளே இருவேறு நிலங்களாகப் பிரிந்து தான் வாழ்கின்றனர். என்னிடம் பணம் இருந்தும் தமிழர்கள் இருக்கும் மாற்று சாதி பகுதியில் நிலம் வாங்கிவிட முடியாது. சமீபத்தில் நான் நிலம் வாங்க விலை எல்லாம் பேசி முடித்த பின்னர்,  “இன்னாருடைய மகனுக்கு நீ நிலம் வழங்கக்கூடாது” என்று நிலம் விற்க முன்வந்தவருக்கு மிரட்டல் வர அவர் எனக்கு நிலம் தர மறுத்துவிட்டார். அதே போல இப்போது எங்கே சாதி இருக்கிறது என்று கேள்வி கேட்டுக்கொண்டே அதை சூசகமாக செய்யும் நபர்கள் அதிகமாக உள்ளனர்.

இந்தப் பந்தி நூற்றுக்கு நூறு உண்மை.
பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடாது, சாதி இல்லை என்று சொல்வதனால் சாதி அழிந்துவிடாது.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Nathamuni said:

நமது அரசியல்வாதிகள், ஒருங்கிணைந்து வரும் ஜனாதிபதி தேர்தலை, தமிழர்கள் குடியொப்ப தேரதலாக மாற்றுவோம் என அறிவிக்க வேண்டும்.

அப்படிச் சூடு சொரணையுள்ள அரசியல்வாதிகளென்று யாராவது இருக்கிறார்களா? சிவாஜிலிங்கமவர்கள் நின்றபோதுகூட எங்கட தமிழ் வியாதிகள் யாருக்குப்போடுமாறு கைகாட்டியவர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, விளங்க நினைப்பவன் said:

நான் படித்தது  இல்லை. தகவல்களுக்கு நன்றி கந்தையா அண்ணா, நிழலி.

நூலகம் (noolaham.org) இணையத்தளத்தில் பஞ்சமர் புத்தகம் இருக்கிறது, வாசியுங்கள்!

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, alvayan said:

இந்தக்  கூத்தாடிகளின் கதை இப்படித்தான் இருக்கும் ..இவரு அப்பனே அந்தக்காலத்தில்... அப்படித்தான்...இதுகளை இப்ப ஒரு பொருட்டாக எடுப்பவர்கள் புலியின் வாசம் பிடியாதவர்களே...புத்தக வெளீயீடு என்றுவிட்ட்டு கக்குவது  முழுக்க புலிவாந்திதான்... அதை வான்கப் போறவையும் அவரின் ரசிகர்களே...அப்பரின் புத்தகம் விற்று பணம் பண்ணவேண்டின் ..இப்படித்தான் உளறவேண்டும்..பாவம் புழச்சுப் போகட்டும்

ஏன் கூத்தாடிகள் என்கிறீர்கள்? அவர் சாதிப்பிரிவினை இருப்பதைச் சுட்டிக் காட்டியதாலா அல்லது ஈழம் அமையாது எனச் சொன்னதாலா?

அமரர் டானியல் மட்டுமல்ல, இங்கே யாழ் களத்தில் உறுப்பினராக இருந்த சிவா சின்னப்பொடி (பிரான்ஸ்) கூட தன் தகப்பனாருக்கு சாதி ஓதுக்கல் ரீதியில் நிகழ்ந்த அவமானங்களை நேரடி சாட்சியாகப் பதிவு செய்து ஒரு புத்தகம் வெளியிட்டார், யாழிலும் எழுதியிருக்கிறார். இவர்களது வாழ்ந்த அனுபவத்தை மறுப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. அப்படி மறுத்து மண்ணுக்குள் தலையைப் புதைத்துக் கொள்வதால் தீமைகளே அதிகம். உதாரணமாக, இன்று அருண் சித்தார்த் என்ற "மாயமானை" வடக்கில் உலவ விட்டிருக்கிறார்கள் சிங்களத் தரப்பினர். அமரர் டானியல் போன்றோரை நிராகரிக்காமல் செவி மடுத்திருந்தால் இந்த மாயமான்களோடு தமிழர்கள் மல்லுக் கட்டும் தேவையே வந்திருக்காது.  

 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, Justin said:

ஏன் கூத்தாடிகள் என்கிறீர்கள்? அவர் சாதிப்பிரிவினை இருப்பதைச் சுட்டிக் காட்டியதாலா அல்லது ஈழம் அமையாது எனச் சொன்னதாலா?

அமரர் டானியல் மட்டுமல்ல, இங்கே யாழ் களத்தில் உறுப்பினராக இருந்த சிவா சின்னப்பொடி (பிரான்ஸ்) கூட தன் தகப்பனாருக்கு சாதி ஓதுக்கல் ரீதியில் நிகழ்ந்த அவமானங்களை நேரடி சாட்சியாகப் பதிவு செய்து ஒரு புத்தகம் வெளியிட்டார், யாழிலும் எழுதியிருக்கிறார். இவர்களது வாழ்ந்த அனுபவத்தை மறுப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. அப்படி மறுத்து மண்ணுக்குள் தலையைப் புதைத்துக் கொள்வதால் தீமைகளே அதிகம். உதாரணமாக, இன்று அருண் சித்தார்த் என்ற "மாயமானை" வடக்கில் உலவ விட்டிருக்கிறார்கள் சிங்களத் தரப்பினர். அமரர் டானியல் போன்றோரை நிராகரிக்காமல் செவி மடுத்திருந்தால் இந்த மாயமான்களோடு தமிழர்கள் மல்லுக் கட்டும் தேவையே வந்திருக்காது.  

 

மிக சரியாக சொன்னீர்கள். உரிய நேரத்தில் எமது உள் முரண்பாடுகளை கண்டறிந்து அதற்கு தீர்வு காணாது ஆறப்போட்டதன் பலனை இன்று அனுபவிக்கிறோம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தானியேலின் புத்தகம் என்றே நினைவு. போராளிகள் காத்திருக்கின்றனர் என்கிற நாவலைப் படித்திருக்கிறேன். அருமையான படைப்பு. தமிழ் மீனவர்களுக்கும் அத்துமீறி குடியேற முயலும் சிங்கள மீனவர்களுக்கும் இடையிலான கதை. எனக்குப் பிடித்திருந்தது. தமிழ்த் தேசியச் சிந்தனை அந்த நாவலில் தெரிந்தது. மற்றும்படி அவர் தலித்தா இல்லையா என்றும் தெரியாது, அப்படியிருந்தாலும் எனக்குப் பிரச்சினையில்லை, அவரது எழுத்து என்னைக் கவர்ந்திருந்தது, அதுதான் எனக்கு முக்கியம்.

மற்றும்படி தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள், தனி ஈழம் வேண்டுமா இல்லையா என்பதை தானியேலின் மகன் தனது கருத்தாகச் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஈழம் வேண்டுமா இல்லையா என்று மக்களிடம் சுதந்திரமான கருத்துக்கணிப்பு வைத்தாரா இவர்? பிறகு எப்பிடி 90 வீதமானோர் வேண்டாம் என்று இவரிடம் கூறினார்கள்? 

தந்தை செல்வாவுக்கு சந்திரகாசன் எனும் மகன் இருந்தார். தந்தை செல்வா ஈழத்தமிழருக்காக இறுதிவரை உழைத்தவர். சந்திரகாசனோ இந்தியாவுக்காக உழைத்தவர். தானியேலையும் அவரது மகனையும் எண்ணும்போது ஏனோ தந்தை செல்வாவும் சந்திரகாசனும் மனதில் வந்துபோகிறார்கள். 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Steve Harvey ஒரு கறுப்பு அமெரிக்கர். டிவியில் நிகழ்ச்சி நடத்துபவர்.

டிவி நேரடி நிகழ்வில் ஒரு பிராங் செய்கிறார். 

அவருக்கு தேவையான விபரத்தை கொடுத்தவர், பிராங் செய்யப்படப் போகிறவரின் ஜந்து மாத கர்ப்பணி மணைவி.

கணவருக்கு போன் பண்ணுகிறார் Steve.

நீங்கள்... தானே பேசுகிறீர்கள்.... 

ஆம்.... நீங்கள்...

Fertility Treatment தரும், அந்த டாக்டரிடம் நானும் எனது மணைவியும் போய் வருகிறோம். நீங்களும், உங்கள் மணைவியும் அங்கே போவதும், உங்கள் மணைவி ஐந்து மாத கர்பணி என்பதும் சரிதானே?

கணவர், குழப்பத்துடன், ஆனால் இவை பிரத்தியேக தகவல்கள், எப்படி உமக்கு கிடைத்தது.

Steave: அது தான் விடயம், அவசரமாக, இன்று ஞாயிறு என்றும் பாராமல்... டாக்டர் அலுவலகத்தில் இருந்து, red flag ரெயிஸ் பண்ணி விடயத்தை சொன்னார்கள். அதிர்ந்து போய் விட்டேன். அவர்கள் தந்த உமது விபரத்துடன் தான் பேசுகிறேன். விசயம் என்னவென்றேல், அங்கே நடந்த மெகா தவறினால், உமது மணைவியின் வயிற்றில் எனது குழந்தை....

கணவர் முதலில் சிரிக்கிறார். பிறகு மெதுவாக கோபமடைகிறார்.

குரலை வைத்து, நீ ஒரு கறுப்பர் என்று நிணைக்கிறேன் சரியா?

அ.... ஆ...ஆமாம்.

அவ்வளவு தான். எனது மணைவியின் வயிற்றில் f******* g கறுப்புப்பிள்ளையா? என்ன வேடிக்கை இது.... நான் child support கொடுக்கப்போவதில்லை அந்த f….g கறுப்புப்பிள்ளைக்கு.... 

பிராங் செய்வதால், Steve தீறமையாக கையாள்கிறார். child support எல்லாம் எனக்கு பிரச்சணை இல்லை ஐயா, நீங்கள் எனது பிள்ளைக்கு God Father ஆக இருப்பீர்கள் தானே.

கோபத்தின் உச்சிக்கு போகிறார் கணவர். மிக மோசமாக திட்டுகிறார்... இனவெறியுடன்.

Steve உங்களுக்கு Anger Management help தேவையா? 

தேவையில்லை.... திட்டுகிறார்.

இதோ பாருங்கள், நீங்கள் மூன்றாம் பார்ட்டி. எனது பிள்ளை, உமது மணைவி. நாம் பேசிக் கொள்கிறோம்.

கணவருக்கு கிறுக்கு ஏறி.... டாக்டர் ஆபீஸ் போய் அடித்து துவைக்கப் போகிறேன் என்றவாறு கறுப்பு பிள்ளையா எனது வீட்டீலா என கத்துகிறார்.

அந்த நிலையில் Steave இது மணைவி ஏற்பாட்டில் நடந்த பிராங் என்கிறார்.

கணவர் மன்னிப்பு கேட்கிறார்.

ஆனால், சாதீயத்துக்கு எவ்வகையிலும் குறையாத இனதுவேசம் அமேரிக்காவில் டிவி ஊடாக அப்பட்டமாக தெரிந்தது.

 

 

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, ரஞ்சித் said:

தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள், தனி ஈழம் வேண்டுமா இல்லையா என்பதை தானியேலின் மகன் தனது கருத்தாகச் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஈழம் வேண்டுமா இல்லையா என்று மக்களிடம் சுதந்திரமான கருத்துக்கணிப்பு வைத்தாரா இவர்? பிறகு எப்பிடி 90 வீதமானோர் வேண்டாம் என்று இவரிடம் கூறினார்கள்? 

'உடையவன் இல்லையென்றால் ஒரு முழம் கட்டை' என்பதை அப்பப்போ அரசியல்வாதிகளில் இருந்து பொதுத்தளத்திலே பயணிப்போர்வரை வெளிப்படுத்தி வருகின்றனர். தமிழினத்திடம் ஏதோ தாமே வாக்கெடுப்பை நடாத்திவிட்டு வந்துரைப்பதுபோல். தத்தம் தேவைகளுக்கான தளங்களைத் தமிழரது குருதிச்சுவடுகளில் தேடுவதுதான் வெட்கத்திற்குரியது.

  • Like 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.