Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கே அல்லிக்கு விழும் பந்தி பந்தியான வசவுகளைப் பார்க்கையில் ஒன்று தெளிவாகிறது: புலம்பெயர் தேசங்களில் ஈழத்தமிழனாக இருப்பது ரொம்பக் கஷ்டமான விடயம், தாண்ட வேண்டிய bar மிக உயரம்😂

இந்த ஆக்ரோஷத்தைப் பார்க்கும் புலம்பெயர் தொழில் முனைவோர் இரு வழிகளில் இதைத் தவிர்க்க முனைவர்: ஒன்று இலங்கையில் - தமிழர் பகுதியுட்பட- முதலீடு செய்வதைத் தவிர்ப்பர், அல்லது தென்பகுதியில் இரகசியமாக முதலீடு செய்து விட்டு தமிழர் தரப்போடு ஒரு தொடர்பும் இல்லாமல் இருப்பர்.

எங்கள் முயற்சி வெற்றி!😎  

  • Like 6
  • Replies 104
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

சுவைப்பிரியன்

இதைத்தான் நானும் பல தடவை எழுதியிருக்கிறேன்.பொருளாதரப் பலமே எம்மை மீட்க்க வளி.ஆனால் நாமும் செய்ய மாட்டோம் செய்யிறவனுக்கும் ஏதோ ஒரு பட்டம் கொடுத்து எதிரி ஆக்கி அவனுக்கு பலம் சேர்ப்போம்.

ரஞ்சித்

பொருளாதார பலமே எம்மை மீட்க வழி என்று எழுதப்படும் மொக்கைத்தனமான கருத்துக்களைச் சகிக்க முடியவில்லை. தனக்கு இலாபம் தரக்கூடிய ஒரு சில தமிழ் பண முதலைகளைச் சிங்களம் வளைத்துப்போடும். இவர்கள் பெருந்தொகைப் பணத

Justin

இங்கே அல்லிக்கு விழும் பந்தி பந்தியான வசவுகளைப் பார்க்கையில் ஒன்று தெளிவாகிறது: புலம்பெயர் தேசங்களில் ஈழத்தமிழனாக இருப்பது ரொம்பக் கஷ்டமான விடயம், தாண்ட வேண்டிய bar மிக உயரம்😂!  இந்த ஆக்ரோஷத்தைப்

Posted
17 minutes ago, Justin said:

ம்😂 இலங்கையில் - தமிழர் பகுதியுட்பட- முதலீடு செய்வதைத் தவிர்ப்பர், அல்லது தென்பகுதியில் இரகசியமாக முதலீடு செய்து விட்டு தமிழர் தரப்போடு ஒரு தொடர்பும் இல்லாமல் இருப்பர்.

எங்கள் முயற்சி வெற்றி!😎  

பொருளாதாரத்தில் முன்னேறுவது வீண் வேலை, அதை வலியுறுத்துகின்றவர்கள் வீணர்கள் என்று கருத்தாடுகின்றவர்களின் எதிர்பார்ப்பு வேறு எதுவாக இருந்து விடப் போகின்றது.

அப்படியே இதன் நீட்சியாக, கல்வியில் முன்னேறுவது வீண் வேலை, பண்பாட்டு தளத்தில் முன்னேறுவதும் வீண் வேலை, சமூக முன்னேற்றமும் வீண் வேலை, ஏனெனில் சிங்களம் 83 இல் இவ்வாறு முன்னேறி இருந்தவர்களைத்தான் நசுக்கியது. அரசியல் தீர்வு அல்லது தமிழ் ஈழம் கிடைத்த பின் இவற்றை பார்த்துக் கொள்ளலாம் என்றும் கருத்துகள் வரும், காத்திருப்போம்.

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, நிழலி said:

 நான் நினைக்கிறேன் இந்த ஆக்ரோஷமான "அல்லிராஜா சம்ஹாரம்" எங்கள் அணுகுமுறை காலத்திற்கேற்ப மாறவில்லை என்பதைத் தான் காட்டுகிறது. ஒரே கூடையில் எல்லா முட்டைகளையும் சேர்த்து வைத்து, அந்தக் கூடை உடைந்த போது எல்லா முட்டைகளையும் இழந்தவர்கள் நாம். இதிலிருந்தாவது ஒரு பாடம் கற்கலாம்.

என் அபிப்பிராயம், நம்மிடையே சமாந்தரமாக செயல்படக் கூடிய பல அமைப்புகளும் தனி நபர்களும் தேவை. இலக்கு ஒன்றாக இருக்க வேண்டும், வழிகள் சமாந்தரமாக இருக்கட்டும். பொருளாதாரத்தை ஒரு தரப்புப் பார்த்துக் கொள்ளட்டும், கல்வியை இன்னொரு தரப்பு முன்னேற்றட்டும், அரசியலை அரசியல் தலைமையில் இருப்போர் முன்னெடுக்கட்டும்.

இந்த மாதிரியான சிறு சம்பவங்கள் ஊதிப் பெருப்பிக்கப் படுவது, மேற்சொன்ன சமாந்தர முயற்சிகள் உருவாவதைத் தடுக்கவே செய்யும்.

  • Like 6
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இது புலம் பெயர் தமிழர்களின் பொருளாதார பலம் என்ன என்பதை சிங்களத்துக்கு, குறிப்பாக இலங்கைக்கு புரிய வைக்கும்.

இலங்கைத்தீவு முழுவதும் கட்டுமான துறையில் (வீடமைப்பு) புலம்பெயர் தமிழர்கள் முதலிட்டு, நாட்டில் பலருக்கு வேலை கொடுத்துள்ளார்கள்.

லைக்கா, இந்திய சந்தையில் பெரும் முதலீடுகளை செய்துள்ளது. குறிப்பாக, பொன்னியின் செல்வன் படம், லைக்காவின் பொருளாதார நோக்குக்கும், வெற்றிக்கும் ஒரு எடுத்துக்காட்டு.

பணத்தினை போடும்போது, டைரக்டர், தனது குழுவுடன் இலங்கையில் படம் பிடிக்க வேண்டும் என்று சொல்ல முடியும், அதன் பிரகாரம் பலருக்கு தொழில் கொடுக்க முடியும்.

ஆகவே, இது இருபக்கமும் பொருளாதார பயன் மிக்கது. லைக்கா முட்டாள் அல்ல. சிங்களம் குறித்த எச்சரிக்கையுடன் தான் காலை வைப்பார்.

இன்று, தமிழக ஊழல் அரசியல்வாதி, ஜெகதரட்ஷகன் இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிலில் முதலிட முயல்கிறார். ஆனாலும் கறுப்பு பணம் என்பதால் சிக்கலை எதிர்நோக்கிறார்.

அது அவரின் தொழிலும் அல்ல. சாராயம் பாக்டரி நடத்துவது தான் அவரது தொழில். அதேவேளை, இலங்கையினை சேர்ந்த, கணவன், மனைவி பிரிட்டனில் நடாத்தும், எண்ணெய் சுத்திகரிப்பு தொழில் £10 பில்லியன் மதிப்புள்ளது. ஆக, லைக்கா போன்ற முதலாளிகளை நன்றாக நடத்தினால் தான், வேறு புலம் பெயர் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை வரும்.

இல்லாவிடில், கடனில் நாடு மூழ்கி நாசமாவதை தவிர வேறு வழியில்லை.

Edited by Nathamuni
  • Like 3
Posted

ஜஸ்ரின் சொன்னதுபோல் சமாந்தர முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம். நாளை நான் இலங்கையில் குடியேற முயன்றால் என்னை அங்கு தக்கவைக்கவும் பாதுகாக்கவும் எனது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும் போவது எனது தனிப்பட்ட பொருளாதாரப் பலம் மட்டுமே. ஒவ்வொரு கல்லாக நகர்த்துவோம்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, இணையவன் said:

ஜஸ்ரின் சொன்னதுபோல் சமாந்தர முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம். நாளை நான் இலங்கையில் குடியேற முயன்றால் என்னை அங்கு தக்கவைக்கவும் பாதுகாக்கவும் எனது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும் போவது எனது தனிப்பட்ட பொருளாதாரப் பலம் மட்டுமே. ஒவ்வொரு கல்லாக நகர்த்துவோம்.

இதெல்லாம் நல்ல விடயங்களே.  ஆதரிக்கவேண்டிய விடயங்களே. ஆனால் சிங்களத்தை மிகவும் மட்டமாக கணக்கிடுகிறோம்.  அதைத் தான் இங்கே பலரும் எழுகின்றனர். 

வரலாற்றை மறந்து மீண்டும் மீண்டும்???

KG மற்றும் மகாராஜா நிறுவனங்களுக்கு என்ன நடந்தது அவற்றை சிங்களம் எவ்வாறு கையாண்டது. . ????

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Justin said:

என் அபிப்பிராயம், நம்மிடையே சமாந்தரமாக செயல்படக் கூடிய பல அமைப்புகளும் தனி நபர்களும் தேவை. இலக்கு ஒன்றாக இருக்க வேண்டும், வழிகள் சமாந்தரமாக இருக்கட்டும். பொருளாதாரத்தை ஒரு தரப்புப் பார்த்துக் கொள்ளட்டும், கல்வியை இன்னொரு தரப்பு முன்னேற்றட்டும், அரசியலை அரசியல் தலைமையில் இருப்போர் முன்னெடுக்கட்டும்.

தாயகத்தில் பணத்தை வங்கிகளில் சேமிப்பது ஆபத்தாகலாம்.

அதே வேளை புலம்பெயர் தேசங்களில் பாதுகாப்பான தமிழர்களுக்கான நிதியங்கள்/வங்கி தேவை(யூதர்கள் போல்). அவற்றில் குறிப்பிட்டளவு நிதியைச் சேர்த்து வைத்து தாயகத்தில் கல்வி, மருத்துவம், வீடமைப்பு(ஏழைகளுக்கு) போன்றவற்றை தேவை ஏற்படும்போது பயன்படுத்தலாம், தேவையில்லை எனில் பாதுகாப்பாக வெளிநாடுகளில் வைத்திருக்கலாம். அதனை வெளிநாடுகளில் கல்வி பயில தமிழ் இளையோருக்கு கடன் வழங்கலாம்.
 
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 24/8/2023 at 16:06, பிரபா சிதம்பரநாதன் said:

ஊரி்ல்(வன்னியில்) vanni cashews என்ற ஒன்றை தயாரிக்கிறார்கள்.. மிகவும் சுவையான ஒன்று.. ஆனால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியவில்லை. புலம்பெயர் தமிழ் செல்வந்தர்கள், அதுவும் அரசியல் செல்வாக்கானவர்கள் ஏன் இப்படியான உள்ளூர் உற்பத்திகளை ஏற்றுமதி செய்ய வழிவகுத்து அவர்களுக்கு உதவினால் நன்றாக இருக்கும். 

ஊரில இளையோர் சீரழிந்து போகிறார்கள், இப்பதான் மறுவாழ்வு சிகிச்சை நிலையம் பற்றி யோசிக்கிறார்கள். எங்கட பொருளாதார பலம் இவர்களை மீட்க வழி செய்யுமா? எப்படி?

கொஞ்ச காலத்திற்கு முன் நீராஜ் டேவிட் அவர்களின் இஸ்ரேல் பயண அனுபவங்களை தொகுத்து வழங்கிய காணெளியைப் பார்த்தேன், அதில் அவர் புலம்பெயர் தமிழர்களின் பொருளாதார பலம் பற்றி அடிக்கடிக் கூறுவார். இதனைப் பார்த்து உங்களைப் போலவே நானும் கொஞ்ச காலத்திற்கு முன் நம்பியிருந்தேன். 

ஆனால் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கையில் நாங்கள் எங்களுடைய பொருளாதார பலத்தை ஒற்றுமையாகப் பயன்படுத்தவில்லை உணரவில்லை, உணர்ந்தவர்களும் தவறாகத்தான் பயன்படுத்துகிறார்கள். 

நீங்கள் சொல்வது புரிந்தாலும், வணிகம் என்பது வேறு வகையாகவே பார்க்கும்.

இன்று பராத்தா என்ற பெயரில் வரும் எமது ரொட்டி, 5 ரொட்டிகள் பொதியாக ஒரு பெட்டியில். அப்படியே எடுத்து டோஸ்ட்டரில் போட்டு pancake syrup விட்டு சிறுவர்களும், கறியுடன் பெரியவர்களும் சாப்பிடுகிறார்கள். மாதம் பல கொண்டனர்ஸ் கேரளாவில் இருந்து இலங்கை ரொட்டியினை இறக்குமதி செய்யும் வர்த்தகர் ஒருவரிடம் இதே கேள்வியினை கேட்டேன். ஏன் இதனை நமது பகுதியில் இருந்து இறக்குமதி செய்ய முடியாதா என்று?

சிரித்துக் கொண்டே, ஆனால் சீரியஸ் ஆக பதில் சொன்னார். இது வியாபாரம். இடையறாத தொடர் சப்ளை (uninterrupted continuous supply) என்பதே, போட்டிகள் நிறைந்த வியாபார உலகில் எந்த வியாபாரியும் பார்ப்பார்.

இலங்கையில், அரசு இதனை அக்கறையாக கவனிப்பதில்லை. அதிகாரிகள் ஊழல், அதிகாரிகள் தேவையில்லாத எடுப்புகள் அனைத்துக்கும் மேலாக, குருந்தூர் போன்ற, அரசியல் இஸ்திரத்தினை குறைக்கும் அல்லது, முதலீட்டாளர்களை பயமுறுத்தும், முட்டாள்தனமான செயல்பாடுகள் காரணமாக, யாருமே இலங்கை தொழில் முயல்வாளர்களை நம்ப தயாரில்லை.

மேலாக எமது அரசியல்வாதிகள் இதனை குறைந்தது பாராளுமன்றத்தில் சொல்வதும் இல்லை. விக்கியர் முதல் அமைச்சராக லண்டன் வந்திருந்த போது, நண்பர்களுடன் சேர்ந்து, அய்யா, free trade zone போன்ற சில சலுகைகளை கிளிநொச்சி பகுதிகளுக்கு, நல்லாட்சி அரசிடம் இருந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்றோம். அவர், முதலில் தீர்வு வர வேண்டும் என்றார்.

அரசியல் உறுதிப்பாடு இல்லாமை, இலங்கை இன்றைய பொருளாதார தேக்க நிலைமைக்கு காரணம். 

Quote

பொருளாதார பலம் எங்களை எப்படி மீட்கும் எனக் கூறமுடியுமா?

ஆக, உங்கள் கேள்விக்கு பதில்:

எமது பொருளாதார பலம் காரணமாக, கொள்பிட்டி முதல், கல்கிசை தாண்டி பாணந்துறை வரை கடற்க்கரை பகுதி வீடுகள், காணிகள் தமிழர் வசம்.

இதோ லைக்கா போய் இறங்கி விட்டார். யாழ்ப்பாணத்தில், ஐபிசி பாஸ்கரன், கனடா இந்திரன் முதலே புகுந்து விட்டார்கள். 

அட, நம்ம லண்டன் Tilco ரியல் எஸ்டேட் போஸ் அங்கே எப்போவோ போய் விட்டார்.

அது மட்டுமல்ல, தென் பகுதியில், பல ஹாலிடே இடங்களிலும், ஹோட்டல் களிலும் நம்மவர்கள் புகுந்து விட்டார்கள்.

அதுமட்டுமல்ல, எமக்கு தெரியாத பல முத(லை)லாளிகள் அங்கே போய் இருக்கிறார்கள்.

இந்தியாவில் இருந்து மிளகாய்த்தூள் பெருமளவில் வந்தாலும் கூட, சந்தையில் முதலிடம், அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ரஞ்சன் என்பவரின், கொழும்பில் இருந்து இயங்கும், Kings தான்.

நமது கள உறவுகள், கோசன், சுவைப்பிரியன் எல்லோரும் அங்கே ஏதோ செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். நானும் கூட ஒரு முயல்வில் இருக்கிறேன். அவர்களை போலவே, இப்போது சொல்ல முடியாது. 

இப்படி தான், புகுந்து கொண்ட யூதர்களினால் இஸ்ரேல் நாடு உருவாகியது. 

Edited by Nathamuni
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொருளாதார முயற்சியை வீணானது என யாரும் எழுதியதாக தெரியவில்லை.

அதே போல் சமாந்தர வழிகளில் முயல்வதையோ, மக்களின் அன்றாட பிரச்சனையை தீர்க்க முயல்வதையோ கூட யாரும் தவறு என கூறவில்லை.

ஆனால் பெளத்த-சிங்கள மகாவம்ச இயந்திரத்தை - இப்படி பட்ட நகர்வுகள் மூலம் தோற்கடிக்கலாம் என மட்டும் பொய்யான நம்பிக்கையை ஊட்டாதீர்கள்.

அவர்கள் எல்லா நகர்வுகளையும் அளந்தே அனுமதிப்பார்கள். ஒரு அளவுக்கு மேல் சவுதி பணம் பள்ளிவாசலுக்கு வந்த போது - பள்ளிகளை ரிஜிஸ்தர் ஆக நிர்பந்திக்கபட்டன. புதிதாய் கட்ட அரச அனுமதி தேவைபட்டது.

கல்லோயா, மகாவலி திட்டங்கள் எமது மண்ணுக்கு வந்த போது, அவை வர முன்னம் கிராந்துரு கோட்டே(டை) போல பல பகுதிகள் சிங்கள மயமான பின்பே திட்டங்கள் வந்தன.

இதுதான் சிங்களம். நீங்கள் ஆனானப்பட்ட ஆளாய் இருந்தாலும், அபிவிருத்தி என்பது அரசாலோ, தனியாராலோ செய்யபடுகிறது எனில் அது சிங்களமயத்தினூடாகவே அனுமதிக்கப்படும்.

இது இலங்கையின் அடிப்படை நியதி.

இதை புரிந்து கொண்டால் ஏன் பொருளாதார நகர்வு மூலம் இனவாதத்தை தோற்கடிக்க முடியாது என்பது புரியும்.

அல்லிராஜா மீது எனக்கு ஒரு கோவமும் இல்லை. ஆனால் அவர் பிக்குகள், மோட வன்சாக்களின் நிகழ்சி நிரலை தாண்டி ஒரு அங்குலம்தானும் அசைய முடியாது.

அசைய மாட்டார் என்பதையே அண்மைய நிகழ்வுகள் காட்டுகிறன.

எமக்கு பொருளாதாரத்தின் மூலம் எப்படி விடியல் வரும் என்று கேட்டால் - யராவது பதில் சொன்னீர்களா?

ஒரு முதலமைச்சர் அபிவிருத்தி நிதியம் - திறைசேரியின் கட்டுப்பாட்டில் - அதை கூட விடவில்லை.

முடிந்தால் லைக்காவை ஒரு தீவை எடுத்து அதை பேருவளை, ஹிக்கடுவ, மிரிச போல் -resort towns ஆக்க சொல்லுங்கள்? ஆனால் அமையும் resorts 90% தமிழர் உடமையாக இருக்க வேண்டும், வேலை வாய்ப்பும் அப்படியே( யாழ் மாவட்ட விகிதாசாரம் அதுதான்).

முடியுமா? இல்லையே - பிறகு எப்படி பொருளாதாரம் மூலம் நாம் விடியலை அடைவது?

பாசிக்குடா எப்போ அபிவிருத்தியானது? மாலு-மாலுவும், ஊகா பேயும், இன்னும் பல சிங்கள நிறுவனங்கள் முதலிட்ட பின்பே, அங்கு அபிவிருத்தி வந்தது.

நாளைக்கு அருகம் குடா (அருகம்பே) யிலும் இதுவே நடக்கும். முஸ்லிம்கள் 3* விடுதியாவது போட்டு விடுவார்கள்.

தமிழன் சங்கு விற்கலாம் அல்லது வீதியோரம் கஜு, சோளம் விற்கலாம். அவ்வளவுதான்.

யாழ்-கொழும்பு பஸ் - முழுக்க முழுக்க தமிழர்தான் பிரயாணிகள் - அதில் கூட அறுதிபெரும்பான்மை பஸ்கள் சிங்கள முதலாளிகளுடையதா பார்த்து கொள்கிறார்கள்.

  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
41 minutes ago, goshan_che said:

அதே

நன்றி சகோ. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

அருமை கோஷான். இது தொடர்பாக தொடர்ந்து விவாதிக்கலாம். 

6 hours ago, நிழலி said:

பொருளாதாரத்தில் முன்னேறுவது வீண் வேலை, அதை வலியுறுத்துகின்றவர்கள் வீணர்கள் என்று கருத்தாடுகின்றவர்களின் எதிர்பார்ப்பு வேறு எதுவாக இருந்து விடப் போகின்றது.

அப்படியே இதன் நீட்சியாக, கல்வியில் முன்னேறுவது வீண் வேலை, பண்பாட்டு தளத்தில் முன்னேறுவதும் வீண் வேலை, சமூக முன்னேற்றமும் வீண் வேலை, ஏனெனில் சிங்களம் 83 இல் இவ்வாறு முன்னேறி இருந்தவர்களைத்தான் நசுக்கியது. அரசியல் தீர்வு அல்லது தமிழ் ஈழம் கிடைத்த பின் இவற்றை பார்த்துக் கொள்ளலாம் என்றும் கருத்துகள் வரும், காத்திருப்போம்.

நிழலி, மன்னிக்கவேண்டும். தனிமையில் உங்களைக் காயப்படுத்திவிட்டதாக உணர்கிறேன். 

தொடர்ந்து பேசலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, நிழலி said:

சிங்களம் 83 இல் இவ்வாறு முன்னேறி இருந்தவர்களைத்தான் நசுக்கியது.

எண்பத்திமூன்று மட்டுமல்ல, அது  ஓர் எடுத்துக்காட்டு. இன்று அதைவிட மேலே சென்று எங்கள் கோவில்கள் இடிக்கப்பட்டு, வழிபாடுகள் தடுக்கப்பட்டு  விகாரைகளாக்கப்பட்டுள்ளன. தடுக்க முடிந்ததா புலம்பெயர்ந்தவர்களால் அல்லது விரும்பவில்லையா? நேற்று சரத் வீரசேகர சொன்னார், தமிழரை இந்தியாவுக்கு விரட்டுவோம் என்று, இந்தியாவிடம் கைநீட்டிகொன்டு, புலம்பெயரை அழைத்துக்கொண்டு. இதற்கு அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  நாளைக்கு எங்கிருந்து வந்தீர்களோ அங்கு துரத்த மாட்டார்கள் என்பது  என்ன நிட்சயம்? சரி ... அல்லிராஜாவின் முதலீட்டால் பாதிக்கப்பட்ட தமிழருக்கு என்ன விமோசனம்? அவர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்க முடியுமா? அப்படி அவர் செய்ய இவர் ஆசீர் வாங்கும் பிக்குகள் அனுமதிப்பார்களா? நடந்தவற்றை, நடப்பவற்றை சொல்கிறோம். ஐ. நா. சபையால் பதின்நான்கு வருடங்களாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை, இந்தியாவால் முப்பத்தாறு வருடங்களாக பதின்மூன்றை நடைமுறைப்படுத்தவில்லை, தமிழ் அரசியல்வாதிகளால் நிஞாயம் கேட்க முடியவில்லை, வெளிநாடுகள் தங்கள் கருத்துக்களை வெளியிட முடியவில்லை. நாங்கள் சொன்னாப்போல முதலிடுவோர் கேட்கப்போவதில்லை. ஆனால் இழப்பு என வரும்போது மனம் கேளாது, அதனால் எடுத்துச் சொல்கிறோம் நமக்கு தெரிந்ததை, பட்டஅனுபவத்தை, படுகிற வேதனையை. அரசியல் அதிகாரமில்லாமல் நாம் எடுக்கும் எந்தமுயற்சியையும், எந்த நேரத்திலும் ஏதாவது ஒரு திட்டத்தை கொண்டுவந்து, நீங்கள் அந்தத் திட்டத்தின் கீழ் பதியவில்லை, அப்படி பதியாத சொத்ததுக்களெல்லாம் அரசுக்குரியது  என்று உங்கள் முதலீடுகளை பறித்தெடுக்கும் அல்லது தடை செய்யும், சிங்கள மக்களை உங்கள் சேவையை பெற விடாமல் தடைசெய்யும், தொழில் நிலையங்களை முற்றுகையிட்டு கூச்சல் போடும். அதற்காகத்தான் வருமுன் சிந்தியுங்கள் என்று சொன்னோம். நீங்கள் உயர்ந்தால், எங்களுக்கும் பெருமை. விழுந்தால், ஓர் எதிர்பார்ப்பில்லை, பிடிமானம் இல்லை. கேட்க விரும்புவோர் கேட்கட்டும் நான் தடுக்கவில்லை.

11 hours ago, Justin said:

ஒன்று இலங்கையில் - தமிழர் பகுதியுட்பட- முதலீடு செய்வதைத் தவிர்ப்பர், அல்லது தென்பகுதியில் இரகசியமாக முதலீடு செய்து விட்டு தமிழர் தரப்போடு ஒரு தொடர்பும் இல்லாமல் இருப்பர்

தாராளமாக. அதனால் யாருக்கும் எந்த பாதிப்புமில்லை, சம்பந்தப்பட்டோர் தங்களை அந்நியப்படுத்திக்கொள்வதைத்தவிர. எல்லாம் பறிமுதல் செய்யும்போது, விடும் ஓலம் நமக்கு எட்டாது விடினும், பறித்தவர்களது வெற்றி ஆர்ப்பரிப்பு நமது காதுகளில் நிட்சயம் விழும். எண்பத்துமூன்றுகளில் விரட்டியடித்தபோது எல்லோரையும் வரவேற்றது வடக்கு. இப்போ வடக்கே உதவிக்காக ஏங்குது. தப்பியோடுவதற்கு வழியேதும் இருக்காது. கடலோரம் சிங்களவரால் சூழப்பட்டிருக்கும், யாரும் உள்ளே வரவோ வெளியேறவோ முடியாது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, Nathamuni said:

எமது பொருளாதார பலம் காரணமாக, கொள்பிட்டி முதல், கல்கிசை தாண்டி பாணந்துறை வரை கடற்க்கரை பகுதி வீடுகள், காணிகள் தமிழர் வசம்.

இதோ லைக்கா போய் இறங்கி விட்டார். யாழ்ப்பாணத்தில், ஐபிசி பாஸ்கரன், கனடா இந்திரன் முதலே புகுந்து விட்டார்கள். 

அட, நம்ம லண்டன் Tilco ரியல் எஸ்டேட் போஸ் அங்கே எப்போவோ போய் விட்டார்.

அது மட்டுமல்ல, தென் பகுதியில், பல ஹாலிடே இடங்களிலும், ஹோட்டல் களிலும் நம்மவர்கள் புகுந்து விட்டார்கள்.

அதுமட்டுமல்ல, எமக்கு தெரியாத பல முத(லை)லாளிகள் அங்கே போய் இருக்கிறார்கள்.

இந்தளவு முதலீட்டார்களின் முதலீடுகளால் யார் அதிகம் நன்மையடைந்தார்கள் என்பதை ஊர்  நிலவரம் தெரிந்தவர்கள் ஓரளவிற்கு புரிந்துகொள்வார்கள் மற்றப்படி நாங்கள் எங்களது பொருளாதார பலம் என சொல்லப்படும் விடயத்தில் அதீத பெருமை கொள்கிறோம் என்று மட்டும்தான் தெரிகிறது.

Justin அண்ணா கூறியது போல கூடை ஒன்றில் எல்லா முட்டைகளை சேர்த்து வைத்து கூடை உடைந்த பொழுது எல்லாவற்றையும் இழந்தவர்கள் நாங்கள் என்றால்  என்னைப் பொறுத்தவரை இதனை இன்னொரு விதமாகப் பார்த்தால் அந்த கூடையில் ஏன் எல்லா முட்டைகளையும் சேர்த்து வைக்கவேண்டிய நிலை வந்தது என்பதை நாங்கள் இன்னும் உணரவில்லையோ என்றுதான் நினைக்க தோன்றுகிறது. 

இதற்குமேல் சொல்ல ஒன்றும் இல்லை. 

உங்களது முயற்சியும் வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நன்றி: கூடை, முட்டை..... அப்படியே கருத்தை எடுக்கிறீர்கள் போலுள்ளது.

அது முதலீடு செய்பவர்களுக்கு சொல்லப்படும் அறிவுரை உவமானம். அதாவது உங்களிடம் இருக்கும் பணத்தை ஒரே இடத்தில் முதலிடாமல், பல இடங்களில் முதலிட்டால் ஒன்று பிழைத்தாலும் ஏணையவை கைகொடுக்கும்.

லைக்கா உள்பட சகலரும் இலங்கைக்கு வெளியே பல உறுதியான கூடைகளையும் இலங்கையில் சின்ன கூடையையும் வைத்திருப்பார்கள்.

இலங்கையில் வங்கிகளில் பணத்தை கடன் வாங்கியே தொழில் செய்வர். காப்புறுதியால், வன்செயல் வந்தால் நட்டம் இலங்கைக்கே.

மேலும் இலங்கை BOI எனும் அரசஅமைப்பு வெளிநாட்டவர் முதலீடுகளுக்கு உத்தரவாதம் தருகிறது.

ஆக, புலம் பெயர் முதலீட்டாளர்கள், அளந்தே காலை வைப்பார்கள். பணத்தை அங்கே கொட்டி இழக்கும் முட்டாள்களாக நான் கருதவில்லை.

Edited by Nathamuni
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Nathamuni said:

நன்றி: கூடை, முட்டை..... அப்படியே கருத்தை எடுக்கிறீர்கள் போலுள்ளது.

அது முதலீடு செய்பவர்களுக்கு சொல்லப்படும் அறிவுரை உபமானம். அதாவது உங்களிடம் இருக்கும் பணத்தை ஒரே இடத்தில் முதலிடாமல், பல இடங்களில் முதலிட்டால் ஒன்று பிழைத்தாலும் ஏணையவை கைகொடுக்கும்.

லைக்கா உள்பட சகலரும் இலங்கைக்கு வெளியே பல உறுதியான கூடைகளையும் இலங்கையில் சின்ன கூடையையும் வைத்திருப்பார்கள்.

இலங்கையில் வங்கிகளில் பணத்தை கடன் வாங்கியே தொழில் செய்வர். காப்புறுதியால், வன்செயல் வந்தால் நட்டம் இலங்கைக்கே.

மேலும் இலங்கை BOI எனும் அரசஅமைப்பு வெளிநாட்டவர் முதலீடுகளுக்கு உத்தரவாதம் தருகிறது.

நாதம்,

குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்.

மேலே ஜஸ்டின் அண்ணா சொன்ன கூடை-எல்லா முட்டை உதாரணத்தை நீங்கள்தான் தப்பாக புரிந்துள்ளீர்கள் என நினைக்கிறேன்.

ஜஸ்டின் அண்ணா சொன்னது - ஒரு இனமாக எமது சகல முட்டைகளையும் - தனிநாடு/புலிகள்/தலைவர் என்ற ஒரே கூடையில் போட்டதால் நாம் பின்னடைவை சந்தித்தோம் என்பதை.

அதற்குத்தான் பிரபா கேட்கிறார்…

நாம் இராமநாதனின் இலங்கை மகாசபா, பின் தமிழ் காங்கிரஸ், பின் டட்லி-செல்வா, பண்டா-செல்வா என பல ஓட்டை கூடைகளை தாண்டி…

தமிழினத்தை இனி கடவுளால்தான் காப்பாற்ற முடியும்”…. என்ற கட்டத்தை அடைந்த பிறகே….

தனிநாடு/புலிகள்/தலைவர் என்ற ஒற்றை கூடையில் நாம் எமது சகல முட்டைகளையும் போட்டோம்.

இன்றும் - செல்வா சொன்ன அதே இடத்தில்தான் நாமும் நிற்கிறோம்…பேரினவாதமும் நிற்கிறது….

83-2009 நாம் நம்பிய கூடையும் ஓட்டையாக்கப்பட்டு விட்டது….புரிகிறது…

ஆனால் மீண்டும் முந்திய ஓட்டை கூடைகளில் முட்டையை போடுமாறு சொல்வது எந்தளவு உபயோகமானது?

இதுவே பிரபாவின் கேள்வி.

2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

என்னைப் பொறுத்தவரை இதனை இன்னொரு விதமாகப் பார்த்தால் அந்த கூடையில் ஏன் எல்லா முட்டைகளையும் சேர்த்து வைக்கவேண்டிய நிலை வந்தது என்பதை நாங்கள் இன்னும் உணரவில்லையோ என்றுதான் நினைக்க தோன்றுகிறது.

தேவை ஓட்டை இல்லாத கூடையை பின்னும் தூரநோக்குடைய தலைமை.

  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, goshan_che said:

நாதம்,

குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்.

மேலே ஜஸ்டின் அண்ணா சொன்ன கூடை-எல்லா முட்டை உதாரணத்தை நீங்கள்தான் தப்பாக புரிந்துள்ளீர்கள் என நினைக்கிறேன்.

ஜஸ்டின் அண்ணா சொன்னது - ஒரு இனமாக எமது சகல முட்டைகளையும் - தனிநாடு/புலிகள்/தலைவர் என்ற ஒரே கூடையில் போட்டதால் நாம் பின்னடைவை சந்தித்தோம் என்பதை.

அதற்குத்தான் பிரபா கேட்கிறார்…

நாம் இராமநாதனின் இலங்கை மகாசபா, பின் தமிழ் காங்கிரஸ், பின் டட்லி-செல்வா, பண்டா-செல்வா என பல ஓட்டை கூடைகளை தாண்டி…

தமிழினத்தை இனி கடவுளால்தான் காப்பாற்ற முடியும்”…. என்ற கட்டத்தை அடைந்த பிறகே….

தனிநாடு/புலிகள்/தலைவர் என்ற ஒற்றை கூடையில் நாம் எமது சகல முட்டைகளையும் போட்டோம்.

இன்றும் - செல்வா சொன்ன அதே இடத்தில்தான் நாமும் நிற்கிறோம்…பேரினவாதமும் நிற்கிறது….

83-2009 நாம் நம்பிய கூடையும் ஓட்டையாக்கப்பட்டு விட்டது….புரிகிறது…

ஆனால் மீண்டும் முந்திய ஓட்டை கூடைகளில் முட்டையை போடுமாறு சொல்வது எந்தளவு உபயோகமானது?

இதுவே பிரபாவின் கேள்வி.

தேவை ஓட்டை இல்லாத கூடையை பின்னும் தூரநோக்குடைய தலைமை.

ஆ...

நான் அவரின் கருத்தை வாசிக்காததால்,  இவர் என்னைக் க்கோட்ப ண்ணியதை வைத்தே பதில் தந்தேன்.

இது அரசியல் கூடை என்று இப்பதான் தெரிகிறது. 🥱

இருந்தாலும் சகோதரியுடன் எனது கருத்தாடலை தனி டிராக்கில் விடுவோம். 😁

இல்லாவிடில் குழப்பமாகும்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, Nathamuni said:

ஆ...

நான் அவரின் கருத்தை வாசிக்காததால்,  இவர் என்னைக் க்கோட்ப ண்ணியதை வைத்தே பதில் தந்தேன்.

இது அரசியல் கூடை என்று இப்பதான் தெரிகிறது. 🥱

இருந்தாலும் சகோதரியுடன் எனது கருத்தாடலை தனி டிராக்கில் விடுவோம். 😁

இல்லாவிடில் குழப்பமாகும்.

அப்படியே ஆகட்டும்…ஆனால் எனது பதில் தனியே உங்களுக்கானது மட்டும் அல்ல…

50 வருட சுழற்சியில் மீண்டும் அதே ஓட்டை கூடைக்குள் முட்டைகளை வைத்து பார்க்கலாம் என சிந்திக்கும், எழுதும் அனைவருக்குமானது.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, goshan_che said:

அப்படியே ஆகட்டும்…ஆனால் எனது பதில் தனியே உங்களுக்கானது மட்டும் அல்ல…

50 வருட சுழற்சியில் மீண்டும் அதே ஓட்டை கூடைக்குள் முட்டைகளை வைத்து பார்க்கலாம் என சிந்திக்கும், எழுதும் அனைவருக்குமானது.

ஆனால் நான் அந்த பழைய அல்லது recondition செய்யப்பட்ட எந்த கூடையையும் நம்புவதில்லை. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, goshan_che said:

அப்படியே ஆகட்டும்…ஆனால் எனது பதில் தனியே உங்களுக்கானது மட்டும் அல்ல…

50 வருட சுழற்சியில் மீண்டும் அதே ஓட்டை கூடைக்குள் முட்டைகளை வைத்து பார்க்கலாம் என சிந்திக்கும், எழுதும் அனைவருக்குமானது.

சிலர் இன்னும் இலங்கை என்னும் ஓடடை கூடையை நம்புவது ஆச்சரியமாக இருக்கிறது. இலங்கை அரசியலை காவிகளும் , இந வாதமும் , மத வாதமும்தான் தீர்மானிக்கிறது. இப்போது இருக்கும் ரணில் அரசு அவர்களால் தீர்மானிக்கபட்டதொன்றல்ல.

முன்னைய ரணில் அரசு காலத்தில் யப்பான் நிறுவனத்துக்கு வழங்கப்படட இலக்கு ரயில் திடடம் கோத்தாவின் இனவாத அரசு வந்தவுடன் நிறுத்தப்பட்ட்து. அந்த நிறுவனம் எத்தனையோ கோடி செலவும் செய்திருந்தது. இங்கு சர்வதேச சடடம் மதிக்கப்படுவதில்லை. யப்பான் அரசையே தூக்கி எறியும் இவர்களுக்கு லைகா எல்லாம் ஒன்றுமேயில்லை.

எனவே இப்போதைக்கு இலங்கையில் முதலீடு செய்வது ஆபத்தான விடயம். நிச்சயமாக அடுத்து வருவது இனவாத அரசுதான். இலங்கை இன பிரச்சினையை தீர்க்கும் வரைக்கும் தமிழர்களின் முதலீடு என்பது ஆபத்தானது. பிழையான வழிகளில் உழைத்து முதலீடு செய்வதென்றால் பிரச்சினை இல்லை. 

  • Like 2
  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 27/8/2023 at 10:41, satan said:

அரசியல் அதிகாரமில்லாமல் நாம் எடுக்கும் எந்தமுயற்சியையும், எந்த நேரத்திலும் ஏதாவது ஒரு திட்டத்தை கொண்டுவந்து, நீங்கள் அந்தத் திட்டத்தின் கீழ் பதியவில்லை, அப்படி பதியாத சொத்ததுக்களெல்லாம் அரசுக்குரியது  என்று உங்கள் முதலீடுகளை பறித்தெடுக்கும் அல்லது தடை செய்யும்,

40 minutes ago, Cruso said:

இலங்கை இன பிரச்சினையை தீர்க்கும் வரைக்கும் தமிழர்களின் முதலீடு என்பது ஆபத்தானது.

10 hours ago, Nathamuni said:

இலங்கையில் வங்கிகளில் பணத்தை கடன் வாங்கியே தொழில் செய்வர். 

வங்கிகளில் போட்ட பணத்தை மீளப்பெற முடியவில்லை என்கிறார்கள், அதற்கு  இதுதான் காரணமோ?

11 hours ago, Nathamuni said:

வன்செயல் வந்தால் நட்டம் இலங்கைக்கே.

வங்கியில் பணத்தை வைப்புச்செய்த பொதுமக்களுக்கே நட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கை வங்கிகளில் பணம் போட்டால் எடுக்க முடியாதது என்பது உண்மையா எப்படி தமிழர்கள் அங்கே வங்கிகளில் பணம் போட்டு கொழும்பில் கோடிக்கணக்கான ரூபாவில் கட்டபட்ட வீடுகள் ( Apartment) வாங்குகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, விசுகு said:

ஆனால் நான் அந்த பழைய அல்லது recondition செய்யப்பட்ட எந்த கூடையையும் நம்புவதில்லை. 

சூடு கண்ட பூனை…..

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, Cruso said:

சிலர் இன்னும் இலங்கை என்னும் ஓடடை கூடையை நம்புவது ஆச்சரியமாக இருக்கிறது. இலங்கை அரசியலை காவிகளும் , இந வாதமும் , மத வாதமும்தான் தீர்மானிக்கிறது. இப்போது இருக்கும் ரணில் அரசு அவர்களால் தீர்மானிக்கபட்டதொன்றல்ல.

முன்னைய ரணில் அரசு காலத்தில் யப்பான் நிறுவனத்துக்கு வழங்கப்படட இலக்கு ரயில் திடடம் கோத்தாவின் இனவாத அரசு வந்தவுடன் நிறுத்தப்பட்ட்து. அந்த நிறுவனம் எத்தனையோ கோடி செலவும் செய்திருந்தது. இங்கு சர்வதேச சடடம் மதிக்கப்படுவதில்லை. யப்பான் அரசையே தூக்கி எறியும் இவர்களுக்கு லைகா எல்லாம் ஒன்றுமேயில்லை.

எனவே இப்போதைக்கு இலங்கையில் முதலீடு செய்வது ஆபத்தான விடயம். நிச்சயமாக அடுத்து வருவது இனவாத அரசுதான். இலங்கை இன பிரச்சினையை தீர்க்கும் வரைக்கும் தமிழர்களின் முதலீடு என்பது ஆபத்தானது. பிழையான வழிகளில் உழைத்து முதலீடு செய்வதென்றால் பிரச்சினை இல்லை. 

நன்றி.

நான் நினைக்கிறேன் வெளிநாடுகளில் பலகாலம் வாழ்ந்த அனுபவம் - வெள்ளையின இனவாதத்தை போலதான் இலங்கையின் பெளத்த சிங்கள இனவாதமும் என இவர்களை subconscious ஆக நினைக்கவைக்கிறது என.

கனடாவில், அமெரிக்காவில், யூகேயில், ஈயூவில் பொருளாதாரத்தின் மூலம் வெள்ளையினவாதத்தை மிக லாவகமாக தாக்கு பிடிக்கும் நாம் அதையே ஏன் இலங்கையிலும் செய்ய முடியாது ? 

பதில் - ஏனென்றால் பெளத்த-சிங்கள இனவாதம் முற்றிலும் வேறான ஒரு மிருகம்.

பன்றியை வேட்டையாடும் வழிமுறையை பாவித்து சிங்கத்தை வேட்டையாட முடியாது

The definition of insanity is doing the same thing over and over and expecting different results. என ஐன்ஸ்டைன் சொன்னதாக சொல்வார்கள்.

ஒரேமாதியான செயலை மாற்றமேதுமின்றி மீள, மீள செய்துகொண்டு, வேறுபட்ட விளைவுகளை எதிர்பார்பதே,   பைத்தியகாரத்தனத்தின் வரைவிலக்கணம்.

ஒரு இனமாக நாம் கூட்டு பைத்தியகாரத்தனத்தால் பீடிக்கபட்டிருக்கிறோம்.

பிகு

அத்தனை வழிமுறைகளும் பலனளிக்காத இன்றைய நிலையில், எனக்கும் சிங்கவேட்டை எப்படி செய்வது என்று தெரியவில்லை.

ஆனால் எப்படி செய்யமுடியாது என்ற புரிதலாவது இருக்கிறது என நினைக்கிறேன்.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கை வங்கிகளில் பணம் போட்டால் எடுக்க முடியாதது என்பது உண்மையா எப்படி தமிழர்கள் அங்கே வங்கிகளில் பணம் போட்டு கொழும்பில் கோடிக்கணக்கான ரூபாவில் கட்டபட்ட வீடுகள் ( Apartment) வாங்குகின்றனர்.

இல்லை…வங்கி நடைமுறை எல்லா நாடுகளில் இருப்பது போலத்தான் இலங்கையிலும். ஆனால் வட்டி விகிதம் அதிகம்.

இலங்கையில் மட்டும் அல்ல, உலகில் எந்த நாடுமே பெரும்பான்மை விரும்பின், இருக்கும் அரசியல் சாசனத்தை தூக்கி வீசி விட்டு புதிய சாசனத்தை உருவாக்கலாம்.

ஆனால் நாம் மேற்கு என அழைக்கும் நாடுகள் அப்படி நடவாது (ஹங்கேரியில் ஒபான், இத்தாலியில் வலது கூட்டமைப்பு, டிரம் என வந்த போதிலும்) என்ற நியாயமான நம்பிக்கை இருக்கிறது.

ஆனால் இலங்கையில் அப்படி இல்லை.

காலத்துக்கு காலம் அரசியல் சாசனத்தை மாற்றி, புதிய சட்டங்களை உருவாக்கி, உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் - தமிழரின் உரிமையை பறிப்பது என்பது இலங்கையில் சர்வ சாதாரணம்.

அதே போல் நில உச்சவரம்பு, தொழில்களை தேசிய மயமாக்கல், தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் என சொல்லி, நாளைக்கே வெளிநாட்டு முதலீடுகளை இலங்கை சுவீகரிக்கலாம்.

இதில் மேற்கு நாட்டின் பிரஜைகள் முறையாக முதலிட்டதை - அந்த நாட்டு இராஜதந்திர தூதுவராலயங்கள் - தலையிட்டு அல்லது இலங்கை அரசு மீது வர்த்தக வழக்கு போட்டு நட்ட ஈட்டை பெற்று கொடுக்கலாம். அதற்கே நாய் பேய் அலைச்சல் பட வேண்டும். ஆனாலும் நட்ட ஈடுதான் கிடைக்கும். தொழில்/சாலைகள்/நிலங்கள் அல்ல.

60, 70 களில் இது நடந்த விடயம்தான்.

ஆனால் இப்படி சட்டபடி கூட தேவையில்லை.

83-85 காலப்பகுதியில் தென்னிலங்கையில் பல வியாபாரங்களை - இனி வாழ முடியாது என்ற பாதுகாப்பின்மையை உருவாக்கி தமிழரிடம் இருந்து கைமாற்றினார்கள்.

கம்மன்பிலவோ, வீரவன்சவோ ஜனாதிபதியானால் நாளைகே இப்படி ஒரு நிலையை உருவாக்கலாம்.

83 போல் கலவரம் பண்ண கூட தேவையில்லை. ஒரு தமிழரின் ஆடைதொழில்சாலை பாணதுறவில் இருக்கிறதென வைப்போம். அங்கே சிங்கள யுவதிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகிறார்கள் என ஒரு பிக்கு விகாரையில் மணி அடித்து சொல்ல, ஏலவே தயார் செய்யபட்ட மக்கள் கூட்டம் தொழில்சாலையை முற்றுக்கையிட்டு கலகம் செய்ய, பொலீஸ் கண்டும் காணாமல் இருந்தால் போதும் - முதளாலி அறாவிலைக்கு ஒரு சிங்களவரிடம் கொடுத்து விட்டு போய் விடுவார்.

இப்படி கெக்கிராவை வயல்கள், மலை நாட்டில் ஹோட்டல்கள், தேயிலை ரப்பர் தோட்டங்கள் என பலதை முன்னமே வலுகட்டாயமாக கைமாற்றி உள்ளார்கள்.

இப்போதைக்கு இது தேவையில்லை என்பதால் கையில் எடுக்கவில்லை.

ஆனால் தேவைப்படும் போது கையில் எடுப்பார்கள்.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, goshan_che said:

பன்றியை வேட்டையாடும் வழிமுறையை பாவித்து சிங்கத்தை வேட்டையாட முடியாது

IMG-4391.jpg

  • Like 1
  • Thanks 2

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.