Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

சீமானை ஈழத் தமிழர்கள் ஆதரிப்பது அவசியமா?

இன்று தமிழ்நாட்டில் ஈழத்தமிழரின் அவலங்களை, அவர்கள் மீது நடத்தப்பட்ட இனக்கொலையினை அப்பட்டமாக பொதுவெளியில் மிகவும் வெளிப்படையாகப் பேசிவருபவர் சீமான் மட்டும் தான் என்பதில் எவருக்கும் ஐய்யமிருக்க வாய்ப்பில்லை. இன்றுவரை தமிழ்நாட்டில் இருந்த அரசியல்வாதிகளில் மிகவும் வெளிப்படையாக இலங்கையினையும், இந்தியக் காங்கிரஸையும் நேரடியாகவே ஈழத்தமிழர் படுகொலையின் சூத்திரதாரிகள் என்று சீமான் குற்றஞ்சாட்டுவதுபோல வேறு எவருமே செய்ததில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்நாட்டில் உள்ள தமிழ் இன உணர்வுள்ளவர்களிடையே எமது போராட்டம் பற்றியும், தலைமை பற்றியும், எம்மீது நடத்தப்பட்ட படுகொலைகள் பற்றியும் சீமான் பல விடயங்களை எடுத்துச் சென்றிருக்கிறார். எமது போராட்டம் பற்றிய தெளிவான விளக்கத்தினைக் கொண்டிருக்காத பலர் இன்று சீமானினால் அறிவூட்டப்பட்டிருக்கிறார்கள். இவை அனைத்தும் நல்ல விடயங்களே.

கேள்வி என்னவென்றால், தனது அரசியல் மூலம் சீமான் அடைய நினைப்பது என்ன? அல்லது, தமிழ்நாட்டில் சீமானினால் அடையக் கூடிய அதியுச்ச‌ பதவி/அதிகாரம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்பதற்கப்பால் வேறு இருக்கிறதா?  ஒரு பேச்சிற்கு சீமான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகிவிடுகிறார் என்றே வைத்துக்கொள்வோம். அந்த அதிகாரத்தைக் கொண்டு சீமான் எமக்குச் செய்யக் கூடியது என்ன? அது, எம்.ஜி.ஆரோ அல்லது கருநாநிதியோ (1980 களின் ஆரம்பத்தில் அவர் இருந்த நிலைப்பாட்டின் அடிப்படையில்)முதலமைச்சர்களாக இருந்த காலத்தில் செய்ய முடிந்தவற்றைக் காட்டிலும் எந்தளவிற்கு வேறுபட்டதாக இருக்கும்? புலிகளுக்கு வெளிப்படையாகவே ஆதரவளித்த எம்.ஜி.ஆர் தனது பங்காளியாக மத்தியில் ஆட்சிசெய்த இந்திராவையோ அல்லது ரஜீவையோ அழுத்தம்கொடுத்து தமிழருக்கு நீதியான தீர்வொன்றினை ஏற்படுத்திக் கொடுக்க முடிந்ததா? புலிகள் இந்தியாவில் தடைசெய்யப்படாத, ராஜீவின் மரணத்திற்கு முற்பட்ட காலத்திலேயே எமக்கு வெளிப்படையாக ஆதரவு தந்த (சீமானைப் போல் இல்லாதுவிட்டாலும், ஓரளவிற்கு) எம்.ஜி.ஆர் இனால் செய்யமுடியவில்லையென்றால், தற்போது புலிகள் மீதான தடையும் ராஜீவைக் கொன்றவர்கள் என்கிற அவப்பெயரும், தமிழினப் படுகொலையில் இந்தியாவின் நேரடிப் பங்கும் தெளிவாகிவிட்ட சூழ்நிலையில் சீமானினால் எமக்கு தரக்கூடிய தீர்வென்ன? மத்திய அரசு மீது சீமான் செலுத்தப்போகும் (முதலமைச்சர் ஆகியபின்னர்) அழுத்தம் எவ்வாறிருக்கும்? என்னைப்பொறுத்தவரை, தமிழ்நாட்டில் சீமான் செலுத்தக்கூடிய அரசியல் செல்வாக்கு குறுகியது. தமிழ்நாட்டின் பாராளுமன்றத்தைக் கைப்பற்றுவதற்கு அவர் இன்னமும் நீண்டகாலம் காத்திருக்கவேண்டியிருக்கும். முதலமைச்சர் ஆகியபின்னரும் அவர் மத்திக்குக் கொடுக்கப்போகும் அழுத்தம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. அந்த மட்டுப்படுத்தப்பட்ட அழுத்ததினைப் பாவித்து தமிழருக்கான நியாயமான, கெளரவமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியாது. 

Edited by ரஞ்சித்
spelling
  • Like 6
  • Thanks 2
  • Replies 196
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

சீமானை ஈழத் தமிழர்கள் ஆதரிப்பது அவசியமா? இன்று தமிழ்நாட்டில் ஈழத்தமிழரின் அவலங்களை, அவர்கள் மீது நடத்தப்பட்ட இனக்கொலையினை அப்பட்டமாக பொதுவெளியில் மிகவும் வெளிப்படையாகப் பேசிவருபவர் சீமான் மட்டும்

பாலபத்ர ஓணாண்டி

உங்கட கதை ஒரு உப்பு சப்பில்லாத கதை ரஞ்சித்.. இதே திமுகா புலிகளை ஆதரித்தபோது அதிமுக ஆதரவாளர்கள் புலிகளை இப்படித்தான் கேவலமாக பேசினார்கள்.. ஜெயலலிதாவே கேவலமாக பேசிய பதிவுகள் உண்டு..தமிழ்நாட்டில் ஒரு கட்

ரஞ்சித்

ஈழத்தமிழரின் போராட்டத்திற்கான தனது வெளிப்படையான ஆதரவினை தனது அரசியலின் பிரதான மூலதனமாக இட்டு சீமான் செய்துவரும் செயற்பாடுகள் ஈழத்தமிழரைப் பொறுத்தவரை எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்திவருவதை சீமானை ஆ

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈழத்தமிழரின் போராட்டத்திற்கான தனது வெளிப்படையான ஆதரவினை தனது அரசியலின் பிரதான மூலதனமாக இட்டு சீமான் செய்துவரும் செயற்பாடுகள் ஈழத்தமிழரைப் பொறுத்தவரை எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்திவருவதை சீமானை ஆதரிப்பவர்கள் உணர்ந்துகொள்கிறார்களோ என்று எனக்குத் தெரியவில்லை. 

தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக்கழகத்தையும் அதனோடு இணைந்த திராவிடக் கட்சிகளையும், மத்தியில் ஆட்செய்த காங்கிரஸ் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸையும்  சீமான் மிகவும் காரசாரமாக விமர்சித்து வருகிறார் . ஈழத்தமிழினத்திற்கு கருநாநிதியும் அவரது கட்சியும் செய்த துரோகமும், தமிழினக்கொலையில் காங்கிரஸ் கட்சிக்கு கருநாநிதி கொடுத்த ஆதரவும் சிமானினால் ஒவ்வொரு மேடையிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன. இந்த விமர்சனங்கள் தற்போது சீமானினால் மட்டுமன்றி அவரது ஆதரவாளர்கள், கட்சி அங்கத்தவர்கள், சமூக வலையொளி ஆதரவாளர்கள் என்று பலராலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 2009 வரை மதில்மேற் பூனையாக இருந்த தி.மு.க மற்றும் அதனை ஆதரித்து வரும் வி.சி.க, திராவிடர் கழகம் உள்ளிட்ட பல பெரியாரிஸ்ட் கட்சிகள் தற்போது சீமானை எதிர்க்கிறோம் என்கிற போர்வையில் ஈழப்போராட்டத்தினையும், போராட்டத்தினை முன்னெடுத்த தலைமையினையும், புலிகளையும், மொத்தத்தில் ஈழத் தமிழ் இனத்தையுமே தமது எதிரிகளாகப் பாவித்து விமர்சிக்கத் தொடங்கியிருக்கின்றன. சமூக வலைத்தளங்களில் பெரியாரிஸ்ட்டுக்களினால் பரப்பட்டப்படு வரும் மிகவும் கீழ்த்தரமான விமர்சனங்கள் எமது போராட்டம் அழிக்கப்பட்டதும், தலைமை கொல்லப்பட்டதும் சரியானதுதான் என்று நியாயப்படுத்தி வருகின்றன. இக்கட்சிகளின் தலைவர்கள் சிலரே தலைவர் பிரபாகரனை "முட்டை போண்டா" என்று வெளிப்படையாகக் கிண்டலடிப்பதும், "நாயைப்போல சுட்டுக் கொன்று நந்திக்கடலில் வீசினோமே, போய்ப் பொறுக்கீட்டு வாங்கடா" (சுந்தரவள்ளி) என்று பேசுவதும், "பிழைக்கப் போன இடத்தில் நாடு கேட்டால் சிங்களவன் சும்மா இருப்பானா?" என்று இனக்கொலையினை நியாயப்படுத்துவதும், தலைவரையும் போராளிகளையும் தூஷண வார்த்தைகளால் வைது ஆதரவாளர்களிடையே கரகோஷம் பெறுவதும் ( தி.மு.க வின் பிரசண்ணா) நடக்கிறது. நேற்று நடைபெற்ற திலீபனின் நினைவு நாள் கீச்சகப் பதிவுகளில் கருத்துப் பகிர்ந்த பல திரவிட இயக்க ஆதரவாளர்கள் திலீபனின் தியாகத்தை எள்ளி நகையாடியதும், தலைவரை ஏக வசனத்தில் வைது, "திலீபனைக் கொன்றுவிட்டு நட்சத்திர ஹோட்டலில் விருந்துண்டவண்டா உன் தலைவன்" என்று எழுதுவதும் நடக்கிறது. ஒரு தி.மு.க ஆதரவாளர் தலைவரின் நிர்வாணமான உடலின் மீது அவரது பிறப்புறுப்பில் புலிக்கொடியேற்றி, "இப்போது போதுமாடா?" என்று தனது வெறியைத் தீர்த்துக்கொண்டதும் நேற்று நடந்தது.

கொளத்தூர் மணி, வீரமணி, சுபவீரபாண்டியன், சுந்தரவள்ளி, திருமாவளவன் ஆகிய பெரியாரிஸ்ட்டுக்கள் இன்று சீமானைத் தாக்குவதற்காக எமது விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி வருகிறார்கள். சீமானினால் தமிழ்த் தேசியம் குத்தகைக்கு எடுக்கப்பட்டதனால், அவர்கள் இன்று தமிழ்த்தேசியத்திற்கு எதிரான நிலைப்பாட்டினை எடுத்திருப்பதோடு, சீமானைத் தாக்குவதற்காக அவர் முன்னிலைப்படுத்தி அரசியல் செய்யும் எமது விடுதலைப் போராட்டத்தையும், தலைமையினையும் தரக்குறைவாகப் பேசுகிறார்கள். சிமானை எதிர்க்கும் திராவிட அரசியல் இன்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தலைமையினையும் இகழும் அரசியலாக தமிழ்நாட்டில் மாறிவிட்டிருக்கிறது. 2009 இற்குப் பின்னர் தமிழ்நாட்டில் பல எதிரிகளை சீமானின் அரசியல் ஏற்படுத்தி விட்டிருக்கிறது. இன்று தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் குறித்த பிரக்ஞையற்று பல தமிழர்கள் அல்லது தெலுங்கு வம்சாவளியினர் இருப்பதற்குக் காரணமும் சீமானின் அரசியலும், அவரது அரசியலுக்கெதிரான திராவிட அரசியலும்தான் என்றால் அது மிகையில்லை.   

தமிழ்நாட்டு சாதாரண மக்களின் அரசியல் அறிவும், அரசியலில் அவர்களுக்கு இருக்கும் தெளிவும் என்னைப்பொறுதவரை மிகவும் மேலோட்டமானது. வெள்ளித்திரைகளில் வலம்வரும் கதாநாயகர்களில் தமது தலைவனைத் தேடும் அரசியல் சூனியங்களாகவே பெரும்பாலான தமிழ்நாட்டு மக்கள் இன்னமும் வாழ்கிறார்கள். சினிமாக் கதாநாயகனுக்கும், நாயகிக்கும் கோயில் கட்டி வணங்கும் தலைமுறையினர் தமிழ்நாட்டில் இன்றிருக்கிறார்கள். இவ்வாறான ஒரு தலைமுறையினர் உயிர்வாழ்தலுக்காக நாம் புரிந்த போராட்டத்தினைக் கொச்சைப்படுத்துவதும், போராட்டத்தினை வழிநடத்திய தலைவரையும் போராளிகளையும் கொச்சைப்படுத்துவதும், எமது அவலங்களை நியாயப்படுத்துவதும் சகித்துக்கொள்ள முடியாதவை. எமது போராட்டத்தைக் கொச்சைப்படுத்த எந்த அருகதையுமற்றவர்கள் தமிழ்நாட்டு வாக்காளர்கள். ஒரு போத்தல் சாராயத்திற்கும், பிரியாணிப் பொட்டலத்திற்கும் விலைபோகும் கூட்டம் எமது போராட்டத்தைக் கொச்சைப்படுத்திப் பேசும் நிலையினை ஏற்படுத்தியதே சீமானின் அரசியல்தான். தனது அரசியல் நலனுக்காக ஈழத்தமிழனின் போராட்டத்தை, அவனது அவலத்தை தெருவில் இழுத்துவிட்டு, தமிழ்நாட்டு அரசியல் ஞானசூனியங்களினால் கீழ்த்தரமாக விமர்சிக்கப்பட வழிவகுத்துக் கொடுத்தவர் சீமான்.

ஆகவே, இவரது அரசியலை ஆதரிக்கும் எந்த ஈழத் தமிழனும் இதுகுறித்துச் சிந்திப்பது நல்லது.

  • Like 6
  • Thanks 1
  • ரஞ்சித் changed the title to சீமானை ஈழத் தமிழர்கள் ஆதரிப்பது அவசியமா?
  • கருத்துக்கள உறவுகள்
Posted
45 minutes ago, ரஞ்சித் said:

எமது போராட்டத்தைக் கொச்சைப்படுத்திப் பேசும் நிலையினை ஏற்படுத்தியதே சீமானின் அரசியல்தான்.

45 minutes ago, ரஞ்சித் said:

ஆகவே, இவரது அரசியலை ஆதரிக்கும் எந்த ஈழத் தமிழனும் இதுகுறித்துச் சிந்திப்பது நல்லது.

நல்ல பதிவுகள்  ஆனால் சிலருக்கு இது விளங்கப்போவதில்லை சீமானை ஆதரிப்பதை விட இலங்கையில் டக்ளஸ் தேவனாந்தவை  ஆதரிக்கலாம்  

  • Like 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

உங்கட கதை ஒரு உப்பு சப்பில்லாத கதை ரஞ்சித்.. இதே திமுகா புலிகளை ஆதரித்தபோது அதிமுக ஆதரவாளர்கள் புலிகளை இப்படித்தான் கேவலமாக பேசினார்கள்.. ஜெயலலிதாவே கேவலமாக பேசிய பதிவுகள் உண்டு..தமிழ்நாட்டில் ஒரு கட்சி என்ன நிலைப்பாட்டை எடுக்குதோ அதன் எதிர்க்கட்சி அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும்.. அது அவர்கள் அரசியல்.. சீமான் புலிளைப்பற்றி பேசாவிட்டால் இன்னொரு அமைப்பு பேசித்தான் இருக்கும்.. அதன் எதிர் அமைப்பு அதற்கு எதிராக புலிகளை வசைபாடி இருக்கும்.. நிலவுக்கு அஞ்சிபரதேசம் போ எண்டு சொல்வதுதான் உங்கட கதை.. ஒரு கோட்பாட்டை அல்லது தத்துவத்தை அதன் தலைவரை பின்பற்றாதே என்ற யாருக்கும் யாரும் கட்டளை போடமுடியாது.. மார்க்சியம் லெனினியம் எல்லாம் ஏதேதோ மொழிகள் பேசும் நாடுகளில் எல்லாம் கடைப்பிடிக்கிறார்கள்.. சிலநாடுகள் பிழையாகவும் சில சரியாகவும்.. அதற்காக இந்த கருத்தியலின் தாய்நாடு போய் அவர்களுடன் சண்டைபோட்டுக்கொண்டிருப்பதில்லை..

ஈழத்தமிழர்கள் நாம் செய்யக்கூடியது ஒண்டே ஒண்டுதான்.. தமிழ்நாட்டு அரசியலுக்குள் சிக்கிக்கொள்ளாமல் எந்த தமிழ்நாட்டு கட்சியையும் எதிர்க்காமல் சிங்களவன் சீனாவையும் இந்தியாவையும் பாகிஸ்தானையும் கையாள்வதுபோல் மீனுக்கு தலையும் பாம்புக்கு வாலையும் காட்டி வாழ்ந்திட்டு போயிடனும்..

ஆக சீமான் புலிகளை பற்றி பேசுரார் எங்களை பற்றி பேசுரார் அதனால் அவரை எதிர்க்கணும் என்றோ அல்லது அதனால் அவரை ஆதரிக்கணும் என்றோ வரும் கருத்துக்கள் ரெண்டுமே முட்டாள்தனமானவை.. இந்த உலகுக்கு ஏற்றமாரி வாழத்தெரியாதவன் பேசுறவை..

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Like 8
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஈழத்தமிழர்கள் நாம் செய்யக்கூடியது ஒண்டே ஒண்டுதான்.. தமிழ்நாட்டு அரசியலுக்குள் சிக்கிக்கொள்ளாமல் எந்த தமிழ்நாட்டு கட்சியையும் எதிர்க்காமல்

இதனையே யாழ் நிர்வாகமும் வலியுறுத்துவதாக நினைக்கிறேன். இருக்கும் நேச சக்திகளையும் பகையாளிகளாக்காமல் இருப்போம் என்று.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, ஏராளன் said:

இதனையே யாழ் நிர்வாகமும் வலியுறுத்துவதாக நினைக்கிறேன். இருக்கும் நேச சக்திகளையும் பகையாளிகளாக்காமல் இருப்போம் என்று.

16 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஈழத்தமிழர்கள் நாம் செய்யக்கூடியது ஒண்டே ஒண்டுதான்.. தமிழ்நாட்டு அரசியலுக்குள் சிக்கிக்கொள்ளாமல் எந்த தமிழ்நாட்டு கட்சியையும் எதிர்க்காமல்

இதுவே எனது கருத்தும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஈழத்தமிழர்கள் நாம் செய்யக்கூடியது ஒண்டே ஒண்டுதான்.. தமிழ்நாட்டு அரசியலுக்குள் சிக்கிக்கொள்ளாமல் எந்த தமிழ்நாட்டு கட்சியையும் எதிர்க்காமல் சிங்களவன் சீனாவையும் இந்தியாவையும் பாகிஸ்தானையும் கையாள்வதுபோல் மீனுக்கு தலையும் பாம்புக்கு வாலையும் காட்டி வாழ்ந்திட்டு போயிடனும்..

இது மிக மிக சரியான கருத்துகள்   ...ஆனால் இந்த கருத்துகள்  நிலைநட்டபபட. சீமான் மற்ற அமைப்புக்களுடன்  இலங்கை தமிழர்களை பகைக்க செய்யும் செயலகளை நிறுந்த வேண்டும்    சீமானுக்கு இலங்கை தமிழர்கள் சொல்ல வேண்டியது  எங்களுக்கு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அமைப்புக்களின். ஆதரவு தேவை என்று    சீமான்  பட்டி தொட்டி. எல்லாம்  எங்கள் பிரச்சனைகளைப் பேசினாலும்.  தெரியப்படுத்தினாலும். எந்தப் பிரயோஜனம் ஏற்படாது   தமிழ் ஈழம் பெற்று தரப்போவதுமில்லை    மத்திய அரசு விரும்பினால் மட்டுமே  ஏதாகினும் தீர்வு இலங்கையில் தமிழருக்கு கிடைக்கும்  .இப்படி பேசி சீமான் தான் வளர்ச்சி அடைவார்.     மாறாக ஈழத்தமிழர்களில்லை    சீமானை இலங்கை தமிழர்கள் ஆதரிக்க கூடாது   தமிழ்நாட்டில் சுயமாக வளர்ச்சி அடையும் அற்றல் இல்லாதவர்    தமிழ்நாட்டு தமிழர்கள் 100%  இலங்கையில் தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்று போராட்டங்களை நடத்தினாலும் இலங்கையில் தமிழ் ஈழம் அமைக்க முடியாது   நன்றிகள் வணக்கம் 🙏

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி ரகு பதிவுக்கு

தமிழக மக்களை தமிழர்களாக வெல்லாமல் எமக்கு மீட்சி இல்லை என்று நம்புபவன் நான்.

அந்த வகையில் ஒரு அளவுக்கும் அதிகமாக சீமான் இது சார்ந்து உழைப்பது தெரிகிறது. அத்துடன் தமிழக அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக சீமான் வந்தாச்சா. எனவே அவரை ஆதரிக்கத் தான் வேண்டும்

இதில் மற்றவர்களை இழக்க நேரிடும் என்று நான் கருதவில்லை. ஏனெனில் அவர்கள் எப்போதும் எம்மை இப்படி அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தினார்கள். இனியும் அப்படியே. 

நன்றி 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இல்லை.

சீமானின் பேச்சுக்களாலும், சீமான் தம்பிகளின் இணையவெளிச் செயல்பாடுகளாலும் ஈழத்தமிழருக்கு ஒரு நன்மையும் இல்லை. மாறாக, எங்களுக்குத் தேவையில்லாத ஆணியான தமிழர் திராவிடர் பிளவை ஈழத்தமிழரிடையேயும் அறிமுகம் செய்த தீமை தான் விளைந்திருக்கிறது. ஈழத்தமிழர் கூட மலையாளக் கலப்பில் வந்திருக்கக் கூடிய வாய்ப்புகள் வலுவாக இருக்கும் நிலையில், இந்த "திராவிடர் எதிர்ப்பு" என்பது எங்களை பெரிய ஜோக்கர்களாக மாற்றி விட்டிருக்கிறது😂.

மறுபக்கம், சீமான்/நா.த.கவின் பிரபாகரனை, புலிகளை முன்னிலைப்படுத்தும் செயல்கள் முற்று முழுதாக தன் கட்சியின் தேர்தல் வெற்றியையும், வெளிநாட்டில் நிதி சேகரிக்கும் நோக்கிலும் அமைந்தவை. இதனால் ஒரு பக்க நன்மை - சீமானுக்கு.

  • Like 5
  • Confused 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

உங்கட கதை ஒரு உப்பு சப்பில்லாத கதை ரஞ்சித்.. இதே திமுகா புலிகளை ஆதரித்தபோது அதிமுக ஆதரவாளர்கள் புலிகளை இப்படித்தான் கேவலமாக பேசினார்கள்.. ஜெயலலிதாவே கேவலமாக பேசிய பதிவுகள் உண்டு..தமிழ்நாட்டில் ஒரு கட்சி என்ன நிலைப்பாட்டை எடுக்குதோ அதன் எதிர்க்கட்சி அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும்.. அது அவர்கள் அரசியல்.. சீமான் புலிளைப்பற்றி பேசாவிட்டால் இன்னொரு அமைப்பு பேசித்தான் இருக்கும்.. அதன் எதிர் அமைப்பு அதற்கு எதிராக புலிகளை வசைபாடி இருக்கும்.. நிலவுக்கு அஞ்சிபரதேசம் போ எண்டு சொல்வதுதான் உங்கட கதை.. ஒரு கோட்பாட்டை அல்லது தத்துவத்தை அதன் தலைவரை பின்பற்றாதே என்ற யாருக்கும் யாரும் கட்டளை போடமுடியாது.. மார்க்சியம் லெனினியம் எல்லாம் ஏதேதோ மொழிகள் பேசும் நாடுகளில் எல்லாம் கடைப்பிடிக்கிறார்கள்.. சிலநாடுகள் பிழையாகவும் சில சரியாகவும்.. அதற்காக இந்த கருத்தியலின் தாய்நாடு போய் அவர்களுடன் சண்டைபோட்டுக்கொண்டிருப்பதில்லை..

ஈழத்தமிழர்கள் நாம் செய்யக்கூடியது ஒண்டே ஒண்டுதான்.. தமிழ்நாட்டு அரசியலுக்குள் சிக்கிக்கொள்ளாமல் எந்த தமிழ்நாட்டு கட்சியையும் எதிர்க்காமல் சிங்களவன் சீனாவையும் இந்தியாவையும் பாகிஸ்தானையும் கையாள்வதுபோல் மீனுக்கு தலையும் பாம்புக்கு வாலையும் காட்டி வாழ்ந்திட்டு போயிடனும்..

ஆக சீமான் புலிகளை பற்றி பேசுரார் எங்களை பற்றி பேசுரார் அதனால் அவரை எதிர்க்கணும் என்றோ அல்லது அதனால் அவரை ஆதரிக்கணும் என்றோ வரும் கருத்துக்கள் ரெண்டுமே முட்டாள்தனமானவை.. இந்த உலகுக்கு ஏற்றமாரி வாழத்தெரியாதவன் பேசுறவை..

பொதுவாக இதே கருத்துதான் என்னுடையதும்.......நன்றி ஓணாண்டி.......!

அங்கு எங்களுக்கு நண்பர்கள் போன்று இருக்கிறார்களே தவிர நண்பர்களும் இல்லை.......இருந்தாலும் எங்களுடைய விடயத்தில் அவர்களால் ஆகப்போவது ஒன்றுமில்லை......அதனால் இருப்பவர்களை எதிரிகள் ஆக்காமல் இருந்தாலே போதும்......!  

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ரஞ்சித் ரொம்பவே குழம்பி இருக்கிறீர்கள்.

முதலாவது, சீமானை எமக்கு அடையாளம் காட்டியவர் பிரபாகரன் என்பதனையும், சூசை அதனை உறுதிப்படுத்தினார் என்பதனையும் ஏற்றுக் கொள்கிறீர்களா, இல்லையா?

தமிழர்கள் அல்லாத, திராவிடர்களினால் கடைசி நேரத்தில், மருந்து, பெற்றோல், அத்தியாவசிய பொருட்களை திராவிடம், முக்கியமாக கலைஞர், காங்கிரசுடன் சேர்ந்து தடை செய்தது மட்டுமில்லாமல், எம்மை முட்டாள்களாக நினைத்து, உண்ணாவிரத போராட்டத்தினை நடாத்தி முடித்தாரா இல்லையா? எம்மையும், எமது போராட்டத்தினையும் அழித்து முடித்தாரா இல்லையா?

இன்று வரை, பிரபாகரனின் பெயரை தமிழகம் எங்கும் கொண்டு சென்று, அவர் படத்தினையும் மக்களிடம் சேர்த்து, மாவீரர் தினத்தினை பெரியதாக நடாத்தி வரும் நிலையில், அப்படி, இலங்கையிலோ, புலம் பெயர் தேசத்திலோ செய்ய முடியுமா?

திமுகவையும், காங்கிரசையும் எதிர்த்துக்கொண்டு இருக்கிறாரா இல்லையா?

ஈழத்தமிழர்கள் ஆரம்பத்தில் நிதி உதவி அளித்தார்கள் என்பது உண்மைதான். இன்று கட்சி தமிழகத்தில் வளர்ந்து உள்ளதால், அங்கேயே கட்சிக்கு தேவையான நிதி கிடைக்குமா இல்லையா?

மேலும், இன்றய அரசியல் சூழலில், சீமானை, தமது கூட்டணிக்குள் கொண்டு வர, 500 கோடி, 1000 கோடி கொட்டிக்கொடுக்க வேறு பெரிய கட்சிகள் ரெடியா இல்லையா? ஈழத்தமிழர்கள் கட்சிக்கு முழுமையாக நிதி அளிக்கிறார்கள் என்பது இன்றய நிலையில் தவறான தகவல். நான் ஆதரவு கொடுத்தாலும், ஒரு சதம் கூட கொடுத்ததும் இல்லை, கொடுக்கப் போவதும் இல்லை. எனது டாக்டர் நண்பர் நிலையும் அதுவே. 

முக்கியமாக ஒரு சரித்திர விபரம். 1498 ல் கேரளா வந்த போர்த்துகேயர்கள் தென் இந்தியாவினை பிடிக்க முடியாமைக்கு காரணம், 1520 களில் கீழ் நோக்கி படை எடுத்து வந்த தெலுங்கு விஜய நகர பேரரசு. அந்த நிலை வரை யாழ்ப்பாண ராஜ்ஜியத்துக்கு உதவிக்கொண்டிருந்த தென் இந்திய தமிழர் அரசுகள், விஜய நகர பேரரசின் காலத்தின் பின்னர், போர்த்துகேயர்கள் யாழ்ப்பாண ராஜ்ஜியத்தினை பிடித்த போது, கண்டுகொள்ளவில்லை.

ஆக, விஜய நகர பேரரசின் வழி தோன்றல்கள், திராவிடம் என்னும் பெயரில் ஆளும் போது, தமிழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தாலன்றி, எமக்கு விடிவு இல்லை என்பது வரலாறு சொல்லும் பாடம். அது சீமானாக இருக்க வேண்டியதில்லை. தமிழனாக இருக்கலாமே.  போர் நடக்கும் காலத்தில், இன்று தமிழகத்தில் வாழும், திருநாவுக்கரசு என்னும், பத்திரிக்கையாளர் எமது விடுதலையின் சாவி, தமிழகத்தில் உள்ளது என்று நிதர்சனம் தொலைக்காட்ச்சியில் சொன்னார். அப்போது தலைவரும் இருந்தார், பார்த்தும் இருப்பார்.

பங்களாதேஸ் விடுதலையில், மேற்கு வங்க முதல்வர் சித்தார்த்த சங்கரேயின் பங்கு மிக முக்கியமானது. ஆகவே தமிழகத்தின் பங்கினைக் குறைத்து மதிப்படலாகாது. 

பிரபாகரன், சீமானை அழைத்து, இந்த வரலாறை தெளிவு படுத்திய  காரணமாகவே, அவரது உழைப்பாய், தமிழ் தேசியம் எழுந்து உள்ளது. 

ஈழத்தமிழர்களில் மலையாள கலப்பு என்று, மேலே சொல்லப்பட்ட விடயத்தினை யாரும், கேரளாவில் ஏற்றுக் கொள்ளவும் இல்லை. மேலாக, ஈழவர் என்பது அங்கே தாழ்த்தப்பட மக்கள், அவர்கள் தான் ஈழத்தில் சென்று குடியேறியவர்கள் அல்லது, அங்கிருந்து வந்தர்வர்கள் என்றே முடிப்பார்கள் என்பதால், அதுவும் நமக்கு தேவையில்லாத ஆணி.

ஆகவே, நான் சொல்லவருவது, தலைவர் பிரபாகரன் என்ன நோக்கத்துக்காக சீமானை சந்தித்து, பேசி அனுப்பி வைத்தாரோ, அந்த வரையறைக்குள் இயங்கும் வரை, அவரை ஆதரிப்பதா, இல்லையா என்று எமது முடிவும் இருக்க வேண்டும் என்பது எனது பார்வை.

***

இருந்தாலும், முக்கியமாக, நான் ஒரு நிலைப்பாட்டில் இப்போது உறுதியாக உள்ளேன். எமது பிரச்சனை, இந்தியாவை தாண்டி, சீனா, அமெரிக்கா என்று போய் விட்டது. இந்தியா பெரிதாக செய்யும் நிலையில் இப்போது இல்லை. அவர்கள் ஆணி பிடுங்கியது போதும். இனி பிடுங்க எதுவும் இல்லை.

இன்னுமொரு முக்கிய விடயம். தமிழகத்தில் சாதிய பிரிவினை வாதத்தினால், தமிழர்கள் அல்லாத, பிறமொழியாளர்கள் ஆண்டார்கள், ஆள முனைகிறார்கள். சீமான் இல்லாவிடில், ரஜனி அரசியலுக்கு வந்திருப்பார்.

நாடார் என்று தன்னை சாதிய ரீதியில் புறக்கணிப்பு செய்வார்கள் என்றே, வெளிநாட்டவராயினும் தமிழரான பிரபாகரனை தலைவர் என்று சொல்லி, சாதியத்துக்கு வெளியே நின்று இன்றுவரை அரசியல் செய்கிறார். 

அதனால் தான் சொல்கிறேன், எமது அரசியல் ஊடாக தமிழக அரசியலை பார்க்காமல், அதனை அதன் போக்கிலேயே பார்ப்போம். 

Edited by Nathamuni
மேலதிக இணைப்பு
  • Like 3
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கூலி வாங்கிக் கொண்டு எம் தலையில் குண்டு போடவும் ஆயுதங்களும் பயிற்சியும் வழங்கிய உக்ரைனையே ஆதரிக்கிற ஆக்கள் இருக்கையில்...

எமது தேசிய தலைவரையும்.. தமிழ் தேசியத்தையும்.. ஏற்று..  தமிழீழத்தையும்.. தமிழகத்தையும் தமிழர்கள் ஆள வேண்டும் என்பதையும் கோட்பாட்டடிப்படையில் ஏற்றுக் கொண்டு அதில் இருந்து இன்று வரை எந்த விலை பேசலுக்கும் இடம் கொடாமல்.. பல இடர்களை சந்தித்தும் காவிக் கொண்டிருக்கும் சீமானையும்.. அவரின் தலைமையின் கீழ் நாம் தமிழர் கட்சியையும் ஆதரிப்பது.. அல்லது தார்மீக ஆதரவு வழங்குவது ஒன்றும் பயங்கரவாதச் செயல் கிடையாது.

உக்ரைன் டான்பாஸ் பிராந்தியத்தில் செய்த.. செய்கிற இன அழிப்பை மூடிமறைத்து உக்ரைனின் அமெரிக்க ஏகாதபத்திய சார்ப்பு.. ரஷ்சியா எதிர்ப்பு நிலைபாட்டுக்கு சனநாயக சாயம் பூசி ஆதரிக்கும் போலித் தனத்தைக் காட்டிலும்..

தமிழீழ தேசிய தலைவருக்கும்.. தமிழீழ மக்களுக்கும்... தமிழக தமிழ் மக்களுக்கும்.. தமிழக மக்களுக்கும் உண்மையாகவும்.. அவர்களின் உண்மையான மேம்பாட்டில் அக்கறை கொண்டும் இருக்கும் சீமானையும்.. அவரின் எத்தகைய விலை பேசல்களுக்கும் அடிபணியாத கோட்பாடுகளுக்கும்.. அதன் கீழ் இளைய சமூகத்தையும்.. தமிழக.. உலகத் தமிழ் மக்களை ஒன்றிணைத்துச் செல்ல முயல்வதையும்.. ஆதரிப்பது அவசியம். அதுவும் ஒரு விலைபோதல் அற்ற உறுதியான தலைமைத்துவம் இன்றி இருக்கும் தமிழினத்தின் தற்போதைய நிலையில்.. சீமானின் நாம் தமிழ் கட்சியின் அரசியல்.. சமூக இருப்பென்பது மிகவும் அவசியம். 

Edited by nedukkalapoovan
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, Nathamuni said:

ரஞ்சித் ரொம்பவே குழம்பி இருக்கிறீர்கள்.

முதலாவது, சீமானை எமக்கு அடையாளம் காட்டியவர் பிரபாகரன் என்பதனையும், சூசை அதனை உறுதிப்படுத்தினார் என்பதனையும் ஏற்றுக் கொள்கிறீர்களா, இல்லையா?

தமிழர்கள் அல்லாத, திராவிடர்களினால் கடைசி நேரத்தில், மருந்து, பெற்றோல், அத்தியாவசிய பொருட்களை திராவிடம், முக்கியமாக கலைஞர், காங்கிரசுடன் சேர்ந்து தடை செய்தது மட்டுமில்லாமல், எம்மை முட்டாள்களாக நினைத்து, உண்ணாவிரத போராட்டத்தினை நடாத்தி முடித்தாரா இல்லையா? எம்மையும், எமது போராட்டத்தினையும் அழித்து முடித்தாரா இல்லையா?

இன்று வரை, பிரபாகரனின் பெயரை தமிழகம் எங்கும் கொண்டு சென்று, அவர் படத்தினையும் மக்களிடம் சேர்த்து, மாவீரர் தினத்தினை பெரியதாக நடாத்தி வரும் நிலையில், அப்படி, இலங்கையிலோ, புலம் பெயர் தேசத்திலோ செய்ய முடியுமா?

திமுகவையும், காங்கிரசையும் எதிர்த்துக்கொண்டு இருக்கிறாரா இல்லையா?

ஈழத்தமிழர்கள் ஆரம்பத்தில் நிதி உதவி அளித்தார்கள் என்பது உண்மைதான். இன்று கட்சி தமிழகத்தில் வளர்ந்து உள்ளதால், அங்கேயே கட்சிக்கு தேவையான நிதி கிடைக்குமா இல்லையா?

மேலும், இன்றய அரசியல் சூழலில், சீமானை, தமது கூட்டணிக்குள் கொண்டு வர, 500 கோடி, 1000 கோடி கொட்டிக்கொடுக்க வேறு பெரிய கட்சிகள் ரெடியா இல்லையா? ஈழத்தமிழர்கள் கட்சிக்கு முழுமையாக நிதி அளிக்கிறார்கள் என்பது இன்றய நிலையில் தவறான தகவல். நான் ஆதரவு கொடுத்தாலும், ஒரு சதம் கூட கொடுத்ததும் இல்லை, கொடுக்கப் போவதும் இல்லை. எனது டாக்டர் நண்பர் நிலையும் அதுவே. 

முக்கியமாக ஒரு சரித்திர விபரம். 1498 ல் கேரளா வந்த போர்த்துகேயர்கள் தென் இந்தியாவினை பிடிக்க முடியாமைக்கு காரணம், 1520 களில் கீழ் நோக்கி படை எடுத்து வந்த தெலுங்கும் விஜய நகர பேரரசு. அந்த நிலை வரை யாழ்ப்பாண ராஜ்ஜியத்துக்கு உதவிக்கொண்டிருந்த தென் இந்திய தமிழர் அரசுகள், விஜய நகர பேரரசின் காலத்தின் பின்னர், போர்த்துகேயர்கள் யாழ்ப்பாண ராஜ்ஜியத்தினை பிடித்த போது, கண்டுகொள்ளவில்லை.

ஆக, விஜய நகர பேரரசின் வழி தோன்றல்கள், திராவிடம் என்னும் பெயரில் ஆளும் போது, தமிழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தாலன்றி, எமக்கு விடிவு இல்லை என்பது வரலாறு சொல்லும் பாடம். அது சீமானாக இருக்க வேண்டியதில்லை. தமிழனாக இருக்கலாமே.  போர் நடக்கும் காலத்தில், இன்று தமிழகத்தில் வாழும், திருநாவுக்கரசு என்னும், பத்திரிக்கையாளர் எமது விடுதலையின் சாவி, தமிழகத்தில் உள்ளது என்று நிதர்சனம் தொலைக்காட்ச்சியில் சொன்னார். அப்போது தலைவரும் இருந்தார், பார்த்தும் இருப்பார்.

பங்களாதேஸ் விடுதலையில், மேற்கு வங்க முதல்வர் சித்தார்த்த சங்கரேயின் பங்கு மிக முக்கியமானது. ஆகவே தமிழகத்தின் பங்கினைக் குறைத்து மதிப்படலாகாது. 

பிரபாகரன், சீமானை அழைத்து, இந்த வரலாறை தெளிவு படுத்திய  காரணமாகவே, அவரது உழைப்பாய், தமிழ் தேசியம் எழுந்து உள்ளது. 

ஈழத்தமிழர்களில் மலையாள கலப்பு என்று, மேலே சொல்லப்பட்ட விடயத்தினை யாரும், கேரளாவில் ஏற்றுக் கொள்ளவும் இல்லை. மேலாக, ஈழவர் என்பது அங்கே தாழ்த்தப்பட மக்கள், அவர்கள் தான் ஈழத்தில் சென்று குடியேறியவர்கள் அல்லது, அங்கிருந்து வந்தர்வர்கள் என்றே முடிப்பார்கள் என்பதால், அதுவும் நமக்கு தேவையில்லாத ஆணி.

ஆகவே, நான் சொல்லவருவது, தலைவர் பிரபாகரன் என்ன நோக்கத்துக்காக சீமானை சந்தித்து, பேசி அனுப்பி வைத்தாரோ, அந்த வரையறைக்குள் இயங்கும் வரை, அவரை ஆதரிப்பதா, இல்லையா என்று எமது முடிவும் இருக்க வேண்டும் என்பது எனது பார்வை.
 
😂கேள்வியின் நாயகனே! ரஞ்சித் தெளிவாகக் கேட்டதை இப்படிக் குழப்பி விளங்கிக் கொண்டிருக்கிறீர்களென நினைக்கிறேன்.

பிரபாகரன், சீமானை எங்களுக்கு எங்கே, எப்படி அடையாளம் காட்டினார் என்கிறீர்கள், ஏதும் உரை, அறிக்கை? சீமான் சொல்வதை வைத்து பிரபாகரன் சீமானை அடையாளம் காட்டினார் என்பது பாட்டி இறந்த பிறகு கள்ள உயிலைத் தூக்கித் திரியும் சந்தேகத்துக்குரிய பேரனின் வேலை போல் அல்லவா தெரிகிறது? இறுதிக் கட்டத்தில் சூசையோடான உரையாடலின் பொதுப்படையான தன்மை (அதாவது, அந்த வேளையில் யார் எடுத்திருந்தாலும் இனி நீங்க தான் ஏதாவது செய்ய வேணுமெண்ட வெளிப்பாடு) எத்தனை தடவைகள் இங்கே அலசப் பட்டிருக்கிறது?

பிரபாகரனை சீமான் தன் கட்சி நோட்டிசில் படம் போட்டுத் தான் தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெங்கும் அவர் பெயர் பரவியது என்றால், சீமான் என்ன பிரபாகரனுக்கு மேலே இருப்பவரா? திமுக, காங்கிரஸ் எதிர்ப்பை வைத்து வாக்கும், வெளிநாட்டில் நிதியும் இவை தானே பிரபாகரனை வாணிபச் சின்னமாக சீமான் பாவிக்கக் காராணங்கள்?

"ஈழத்தமிழர் மலையாள அடியாக இருக்கலாமென்றால்" நாம் சீமானை இறக்கி விட்டு போய் மலையாளத்தாரைத் தூக்கி வைத்திருக்க வேணுமெண்டா விளங்கிக் கொண்டீர்கள்? யோசித்துப்  பேச வேண்டுமென்பது தான் அந்த அவதானிப்பின் அர்த்தம்! 7000 ஆண்டுகள் முன்பு வரை இந்தியாவோடு ஒன்றாய் இருந்த நிலப்பரப்பிலிருந்து வந்திருக்கிறோம், அதன் பிறகும் தென்னிந்திய படையெடுப்புகளால் பாதிக்கப் பட்டிருக்கிறோம். இதையெல்லாம் அறிந்து கொண்ட ஒருவர், "நான் சுத்த தமிழன், பச்சைத் தமிழன், என்னது தமிழ் ஜீன்" என்பது காமெடியல்லவா? - சீமான் இதே காமெடியை வைத்து வாக்குக் கேட்கட்டும், ஏதோ செய்யட்டும். அறிவுப்பாரம்பரியம் கொண்ட ஈழத்தமிழருக்கு தூய தமிழ் வாதம் தேவையில்லா ஆணி - அது தான் பொயின்ற்!

  • Like 5
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, Kandiah57 said:

நல்ல பதிவுகள்  ஆனால் சிலருக்கு இது விளங்கப்போவதில்லை சீமானை ஆதரிப்பதை விட இலங்கையில் டக்ளஸ் தேவனாந்தவை  ஆதரிக்கலாம்  

என்ர‌ போர‌ உயிர் சீமானோட‌ போக‌ட்டும் 

சிங்க‌ள‌வ‌னின் எலும்பு துண்டை ந‌க்கி பிழைத்து சொந்த‌ இன‌த்துக்கு துரோக‌ம் செய்த‌ இவ‌னோட‌ ஒட்டும் வேண்டாம் உற‌வும் வேண்டாம்.............மாவீர‌ர்க‌ளின் ஆன்மா கூட‌ என்னை ம‌ன்னிக்காது இவ‌ன் பின்னால் போனால்😏....................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
51 minutes ago, Nathamuni said:

ரஞ்சித் ரொம்பவே குழம்பி இருக்கிறீர்கள்.

முதலாவது, சீமானை எமக்கு அடையாளம் காட்டியவர் பிரபாகரன் என்பதனையும், சூசை அதனை உறுதிப்படுத்தினார் என்பதனையும் ஏற்றுக் கொள்கிறீர்களா, இல்லையா?

தமிழர்கள் அல்லாத, திராவிடர்களினால் கடைசி நேரத்தில், மருந்து, பெற்றோல், அத்தியாவசிய பொருட்களை திராவிடம், முக்கியமாக கலைஞர், காங்கிரசுடன் சேர்ந்து தடை செய்தது மட்டுமில்லாமல், எம்மை முட்டாள்களாக நினைத்து, உண்ணாவிரத போராட்டத்தினை நடாத்தி முடித்தாரா இல்லையா? எம்மையும், எமது போராட்டத்தினையும் அழித்து முடித்தாரா இல்லையா?

இன்று வரை, பிரபாகரனின் பெயரை தமிழகம் எங்கும் கொண்டு சென்று, அவர் படத்தினையும் மக்களிடம் சேர்த்து, மாவீரர் தினத்தினை பெரியதாக நடாத்தி வரும் நிலையில், அப்படி, இலங்கையிலோ, புலம் பெயர் தேசத்திலோ செய்ய முடியுமா?

திமுகவையும், காங்கிரசையும் எதிர்த்துக்கொண்டு இருக்கிறாரா இல்லையா?

ஈழத்தமிழர்கள் ஆரம்பத்தில் நிதி உதவி அளித்தார்கள் என்பது உண்மைதான். இன்று கட்சி தமிழகத்தில் வளர்ந்து உள்ளதால், அங்கேயே கட்சிக்கு தேவையான நிதி கிடைக்குமா இல்லையா?

மேலும், இன்றய அரசியல் சூழலில், சீமானை, தமது கூட்டணிக்குள் கொண்டு வர, 500 கோடி, 1000 கோடி கொட்டிக்கொடுக்க வேறு பெரிய கட்சிகள் ரெடியா இல்லையா? ஈழத்தமிழர்கள் கட்சிக்கு முழுமையாக நிதி அளிக்கிறார்கள் என்பது இன்றய நிலையில் தவறான தகவல். நான் ஆதரவு கொடுத்தாலும், ஒரு சதம் கூட கொடுத்ததும் இல்லை, கொடுக்கப் போவதும் இல்லை. எனது டாக்டர் நண்பர் நிலையும் அதுவே. 

முக்கியமாக ஒரு சரித்திர விபரம். 1498 ல் கேரளா வந்த போர்த்துகேயர்கள் தென் இந்தியாவினை பிடிக்க முடியாமைக்கு காரணம், 1520 களில் கீழ் நோக்கி படை எடுத்து வந்த தெலுங்கும் விஜய நகர பேரரசு. அந்த நிலை வரை யாழ்ப்பாண ராஜ்ஜியத்துக்கு உதவிக்கொண்டிருந்த தென் இந்திய தமிழர் அரசுகள், விஜய நகர பேரரசின் காலத்தின் பின்னர், போர்த்துகேயர்கள் யாழ்ப்பாண ராஜ்ஜியத்தினை பிடித்த போது, கண்டுகொள்ளவில்லை.

ஆக, விஜய நகர பேரரசின் வழி தோன்றல்கள், திராவிடம் என்னும் பெயரில் ஆளும் போது, தமிழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தாலன்றி, எமக்கு விடிவு இல்லை என்பது வரலாறு சொல்லும் பாடம். அது சீமானாக இருக்க வேண்டியதில்லை. தமிழனாக இருக்கலாமே.  போர் நடக்கும் காலத்தில், இன்று தமிழகத்தில் வாழும், திருநாவுக்கரசு என்னும், பத்திரிக்கையாளர் எமது விடுதலையின் சாவி, தமிழகத்தில் உள்ளது என்று நிதர்சனம் தொலைக்காட்ச்சியில் சொன்னார். அப்போது தலைவரும் இருந்தார், பார்த்தும் இருப்பார்.

பங்களாதேஸ் விடுதலையில், மேற்கு வங்க முதல்வர் சித்தார்த்த சங்கரேயின் பங்கு மிக முக்கியமானது. ஆகவே தமிழகத்தின் பங்கினைக் குறைத்து மதிப்படலாகாது. 

பிரபாகரன், சீமானை அழைத்து, இந்த வரலாறை தெளிவு படுத்திய  காரணமாகவே, அவரது உழைப்பாய், தமிழ் தேசியம் எழுந்து உள்ளது. 

ஈழத்தமிழர்களில் மலையாள கலப்பு என்று, மேலே சொல்லப்பட்ட விடயத்தினை யாரும், கேரளாவில் ஏற்றுக் கொள்ளவும் இல்லை. மேலாக, ஈழவர் என்பது அங்கே தாழ்த்தப்பட மக்கள், அவர்கள் தான் ஈழத்தில் சென்று குடியேறியவர்கள் அல்லது, அங்கிருந்து வந்தர்வர்கள் என்றே முடிப்பார்கள் என்பதால், அதுவும் நமக்கு தேவையில்லாத ஆணி.

ஆகவே, நான் சொல்லவருவது, தலைவர் பிரபாகரன் என்ன நோக்கத்துக்காக சீமானை சந்தித்து, பேசி அனுப்பி வைத்தாரோ, அந்த வரையறைக்குள் இயங்கும் வரை, அவரை ஆதரிப்பதா, இல்லையா என்று எமது முடிவும் இருக்க வேண்டும் என்பது எனது பார்வை.

***

இருந்தாலும், முக்கியமாக, நான் ஒரு நிலைப்பாட்டில் இப்போது உறுதியாக உள்ளேன். எமது பிரச்சனை, இந்தியாவை தாண்டி, சீனா, அமெரிக்கா என்று போய் விட்டது. இந்தியா பெரிதாக செய்யும் நிலையில் இப்போது இல்லை. அவர்கள் ஆணி பிடுங்கியது போதும். இனி பிடுங்க எதுவும் இல்லை.

இன்னுமொரு முக்கிய விடயம். தமிழகத்தில் சாதிய பிரிவினை வாதத்தினால், தமிழர்கள் அல்லாத, பிறமொழியாளர்கள் ஆண்டார்கள், ஆள முனைகிறார்கள். சீமான் இல்லாவிடில், ரஜனி அரசியலுக்கு வந்திருப்பார்.

நாடார் என்று தன்னை சாதிய ரீதியில் புறக்கணிப்பு செய்வார்கள் என்றே, வெளிநாட்டவராயினும் தமிழரான பிரபாகரனை தலைவர் என்று சொல்லி, சாதியத்துக்கு வெளியே நின்று இன்றுவரை அரசியல் செய்கிறார். 

அதனால் தான் சொல்கிறேன், எமது அரசியல் ஊடாக தமிழக அரசியலை பார்க்காமல், அதனை அதன் போக்கிலேயே பார்ப்போம். 

ந‌ன்றி நாதா
நானும் உங்க‌ளை போல் தான் க‌ட்சிக்கு ஒரு பைசா கூட‌ குடுக்க‌ வில்லை..........கொரோனா கால‌ க‌ட்ட‌த்தில் என்னோடு ப‌ய‌ணித்த‌ இர‌ண்டு க‌ட்சி பெடிய‌ங்க‌ளுக்கு உத‌வி இருக்கிறேன் ம‌ற்ற‌ம் ப‌டி இல்லை

இப்போது நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு க‌ட்சி உற‌வுக‌ள் தொட்டு பொது ம‌க்க‌ள் வ‌ரை உத‌வின‌ம்...............புல‌ம்பெய‌ர் நாட்டில் இருந்து சீமானுக்கு காசு போவுது அது போவுது என்று எழுதுப‌வ‌ர்க‌ள் உண்மைய‌ தெரிந்து விட்டு எழுத‌னும்................நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு இப்போது புல‌ம்பெயர் நாட்டில் இருந்து காசு அனுப்ப‌ முடியாது............அன்மையில் ந‌ட‌ந்த‌ தேர்த‌ல் மூல‌ம் தான் தெரிய‌ வ‌ந்த‌து.................மேல‌ ஜ‌ஸ்ரின் எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை............இப்போது உள்ள‌ க‌ல‌ நில‌வ‌ர‌ம் தெரியாம‌ ஏனோ தானோ என்று கிறுக்கி இருக்கிறார்............

இப்போது நாம் செய்ய‌ வேண்டிய‌து த‌மிழ‌க‌த்தில் எம‌க்கான‌ ஒரு அமைப்பை ப‌ல‌ப் ப‌டுத்த‌னும்.............

நீங்க‌ள் மேல‌ 2009ப‌தில் ந‌ட‌ந்த‌தை அப்ப‌டியே எழுதி இருக்கிறீங்க‌ள்.............

சீமான் உள்ளால் ப‌ல‌ காய் ந‌க‌ர்த்த‌ல்க‌ள் செய்கிறார் அது வெளியில் தெரிவ‌தில்லை..............வெளியில் தெரிய‌ வ‌ரும் போது அண்ண‌ன் சீமானின் காய் ந‌க‌ர்த்த‌ல‌ ப‌ல‌ர் பாராட்டுவின‌ம்.............எங்க‌ட‌ இன‌ அழிப்பு ப‌ஞ்சாப் வ‌ரைக்கும் போய் விட்ட‌து..................ந‌ல்ல‌ நேர‌ம் கூடி வ‌ரும் போது ந‌ல்ல‌தே ந‌ட‌க்கும் என்று நினைப்போம்🙏..............

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Nathamuni said:

ஈழத்தமிழர்களில் மலையாள கலப்பு என்று, மேலே சொல்லப்பட்ட விடயத்தினை யாரும், கேரளாவில் ஏற்றுக் கொள்ளவும் இல்லை.

இல்லையே. வெளிநாட்டில் கேராளாவை சேர்ந்தவர்களை இலங்கை தமிழர்கள் சந்தித்தாலும் சரி மருத்துவத்திற்காக இலங்கை தமிழர்கள் கேரளா சென்று சந்திக்கும்போதும் அவர்கள் நீங்கள் எங்கடை ஆட்கள் தான். இங்கே இருந்து தான் இலங்கைக்கு சென்றீர்கள் என்கின்றனராமே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
Quote

நல்ல பதிவுகள்  ஆனால் சிலருக்கு இது விளங்கப்போவதில்லை சீமானை ஆதரிப்பதை விட இலங்கையில் டக்ளஸ் தேவனாந்தவை  ஆதரிக்கலாம்.  

ஈபி ஆர் எல் எவ் காலத்திலும் சரி.. அதற்கு பின்னான ஈபிடிபி கூலிக்கும்பல் தலைவனாகவும் சரி... பச்சைப்புலி கொலைக்கும்பல் தலைவனாகவும் சரி.. டக்கிளசை ஆதரிச்சு கண்ட மிச்சம் என்ன..????!

திறமையானவர்கள் கூட சரியான பதவிகளை அனுபவிக்க முடியாத நிலையும்.. தமிழர் தேசம் எங்கும் சிங்கள நிர்வாகிகள் வருகையும்.. திரும்பப்பெறப்பட முடியாத சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பு இருப்பும்.. பெளத்த சிங்கள மயமாக்கமும்.. காணி ஆக்கிரமிப்பும்.. வளக் களவும்..  கப்பமும் கொள்ளையும்.. வீடுடைப்புகளும்.. வன்முறையும்.. மக்கள் கொன்றொழிக்கப்பட்டதும்.. காணாமல் ஆக்கப்பட்டதும்.. போதைப்பொருள் பெருக்கமும்.. போதை அடிமையும்.. கலாசாரப் பண்பாட்டுச் சீரழிவும் தான். 

சீமானை ஆதரிக்க வேண்டாம் என்பவர்கள்.. மேலே சொன்னவற்றையாக ஆதரிக்கச் சொல்கிறார்கள். இவர்கள்.. காடைகளா.. அல்லது மக்களா..?

Edited by nedukkalapoovan
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
55 minutes ago, பையன்26 said:

ந‌ன்றி நாதா
நானும் உங்க‌ளை போல் தான் க‌ட்சிக்கு ஒரு பைசா கூட‌ குடுக்க‌ வில்லை..........கொரோனா கால‌ க‌ட்ட‌த்தில் என்னோடு ப‌ய‌ணித்த‌ இர‌ண்டு க‌ட்சி பெடிய‌ங்க‌ளுக்கு உத‌வி இருக்கிறேன் ம‌ற்ற‌ம் ப‌டி இல்லை

இப்போது நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு க‌ட்சி உற‌வுக‌ள் தொட்டு பொது ம‌க்க‌ள் வ‌ரை உத‌வின‌ம்...............புல‌ம்பெய‌ர் நாட்டில் இருந்து சீமானுக்கு காசு போவுது அது போவுது என்று எழுதுப‌வ‌ர்க‌ள் உண்மைய‌ தெரிந்து விட்டு எழுத‌னும்................நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு இப்போது புல‌ம்பெயர் நாட்டில் இருந்து காசு அனுப்ப‌ முடியாது............அன்மையில் ந‌ட‌ந்த‌ தேர்த‌ல் மூல‌ம் தான் தெரிய‌ வ‌ந்த‌து.................மேல‌ ஜ‌ஸ்ரின் எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை............இப்போது உள்ள‌ க‌ல‌ நில‌வ‌ர‌ம் தெரியாம‌ ஏனோ தானோ என்று கிறுக்கி இருக்கிறார்............

இப்போது நாம் செய்ய‌ வேண்டிய‌து த‌மிழ‌க‌த்தில் எம‌க்கான‌ ஒரு அமைப்பை ப‌ல‌ப் ப‌டுத்த‌னும்.............

நீங்க‌ள் மேல‌ 2009ப‌தில் ந‌ட‌ந்த‌தை அப்ப‌டியே எழுதி இருக்கிறீங்க‌ள்.............

சீமான் உள்ளால் ப‌ல‌ காய் ந‌க‌ர்த்த‌ல்க‌ள் செய்கிறார் அது வெளியில் தெரிவ‌தில்லை..............வெளியில் தெரிய‌ வ‌ரும் போது அண்ண‌ன் சீமானின் காய் ந‌க‌ர்த்த‌ல‌ ப‌ல‌ர் பாராட்டுவின‌ம்.............எங்க‌ட‌ இன‌ அழிப்பு ப‌ஞ்சாப் வ‌ரைக்கும் போய் விட்ட‌து..................ந‌ல்ல‌ நேர‌ம் கூடி வ‌ரும் போது ந‌ல்ல‌தே ந‌ட‌க்கும் என்று நினைப்போம்🙏..............

ஈழத்தமிழர் போராட்டமே, தூய சிங்களவாதத்துக்கு எதிராக எழுந்த தூய ஈழத்தமிழ் வாதம்.

இத புரியாமல் அய்யா ஒருத்தர் வழக்கம் போல குழப்புறார்

Edited by Nathamuni
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கந்தையா அண்ணா யதார்த்தமான கருத்துக்கள்.

7 hours ago, Kandiah57 said:

 சீமான்  பட்டி தொட்டி. எல்லாம்  எங்கள் பிரச்சனைகளைப் பேசினாலும்.  தெரியப்படுத்தினாலும். எந்தப் பிரயோஜனம் ஏற்படாது   தமிழ் ஈழம் பெற்று தரப்போவதுமில்லை    மத்திய அரசு விரும்பினால் மட்டுமே  ஏதாகினும் தீர்வு இலங்கையில் தமிழருக்கு கிடைக்கும்  .இப்படி பேசி சீமான் தான் வளர்ச்சி அடைவார்.     மாறாக ஈழத்தமிழர்களில்லை    சீமானை இலங்கை தமிழர்கள் ஆதரிக்க கூடாது   தமிழ்நாட்டில் சுயமாக வளர்ச்சி அடையும் அற்றல் இல்லாதவர்  

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

2009சூசை அண்ணா சொன்ன‌து இப்ப‌வும் நினைவு இருக்கு நாதா

சீமான் புலப்பெய‌ர் நாட்டு ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளின் காசில் சொகுசா வாழுகிறார் என்ற‌து இப்ப‌வும் அவ‌ர்க‌ளின் அவ‌தூறுக‌ளில் ஒன்று...............

வைக்கோவை ந‌ம்பி ஏமாந்தோம்

திருமாள‌வ‌னையும் ந‌ம்பி ஏமாந்தோம்

வைக்கோவுக்கு த‌மிழீழ‌த்தை விட‌ திராவிட‌ வெறி அதிக‌ம்.............இவ‌ர்க‌ள் எல்லாம் எங்க‌ட‌ த‌லைவ‌ர் அருகில் நின்ற‌தை நினைக்க‌ அருவ‌ருப்பாய் இருக்கு.................

திராவிட‌ அமைப்புக்க‌ள் போன‌ நூற்றாண்டில் செய்த‌ சில‌ ந‌ல்ல‌துக‌ளை சில‌ர் இப்ப‌வும் சொல்லிக் காட்டின‌ம்..............அதே திராவிட‌த்தால் எம் இன‌ம் வீழ்ந்த‌தை ஏன் சொல்ல‌ ம‌றுக்கின‌ம் என்ற‌து என‌க்கு இன்றும் புரிய‌ வில்லை................

நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முத‌ல் கார‌ண‌ம்

1 எங்க‌ட‌ த‌லைவ‌ரின் புக‌ழை தியாக‌ங்க‌ளை த‌மிழ‌க‌ம் எங்கும் கொண்டு சேர்த்த‌வ‌ர்...........

2 கொண்ட‌ கொள்கையில் ஆர‌ம்ப‌த்தில் இருந்து இப்ப‌ வ‌ரை ச‌ம‌ர‌ச‌ம் செய்யாம‌ ப‌ய‌ணிக்கிறார்

3 த‌லைவ‌ரின் பெய‌ரை சொல்லி ம‌ற்றும் த‌ன‌து பேச்சாற்ற‌ல் மூல‌ம்  இப்ப‌ இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளை த‌ன் ப‌க்க‌ம் வ‌ர‌ வைச்ச‌வ‌ர்..................

4 அர‌சிய‌ல் என்றால் ஆளும் க‌ட்சிய‌ பார்த்து கேள்வி எழ‌ தான் செய்யும்...........துணிவோடு ஆளும் க‌ட்சியை பார்த்து அண்ண‌ன் சீமான் கேட்க்கும் கேள்விக‌ளுக்கு அவ‌ர்க‌ளிட‌த்தில் ப‌தில்  இல்லை

5 க‌ட்சி பிள்ளைக‌ள் அவ‌ர் கூட‌ ப‌ட‌ம் எடுக்குவில் அன்பாய் க‌ட்டி அனைத்து ப‌ட‌ம் எடுப்ப‌து எடுத்த‌ ப‌ட‌ம் ச‌ரி இல்லை அண்ணா மீண்டும் எடுக்க‌னும் என்று சொன்னால் கூட‌ ச‌லிக்காம‌ ஓம் என்று சொல்லுவார்

6 ஊட‌க‌ம் என்ன‌ கேள்வி கேட்டாலும் த‌ய‌க்க‌ம் இல்லாம‌ ப‌தில் சொல்ல‌க் கூடிய‌வ‌ர்...........இதே இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ஊட‌க‌த்தை எதிர் கொள்ள‌ மாட்டார் கார‌ண‌ம் அவ‌ரால் துண்ட‌றிக்கை பார்த்து கூட‌ ஒழுங்காய் பேச‌ மாட்டார்...........அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் ஸ்ரேலின‌ விட‌ நூறு ம‌ட‌ங்கு வெற்ற‌ர்

7 அண்ண‌ன் சீமான் இல்லை என்றால் 2009 இழ‌த்தில் ந‌ட‌ந்த‌ இன‌ அழிப்பு பெரிதாக‌ த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு தெரிந்து இருக்காது..........காங்கிர‌ஸ் க‌ட்சியில் இருப்ப‌வ‌ரே சொல்லுகிறார் இப்ப‌ இருக்கும் பிள்ளைக‌ளுக்கு ராஜிவ் காந்தி என்றால் யார் என்று தெரியாது அதுக‌ளுக்கு ஆனால் 2009க‌ளில் ந‌ட‌ந்த‌ இன‌ ப‌டுகொலை தெரியுமாம்................அண்ண‌ன் சீமான்ட‌ க‌ட‌ந்த‌ கால‌ ப‌ர‌ப்புரை த‌மிழ் நாட்டில் எவ‌ள‌வு மாற்ற‌த்தை கொண்டு வ‌ந்து இருக்கு

8 க‌ட்சி தொட‌ங்கின‌தில் இருந்து ப‌ல‌ மன‌ உளைசல‌ வேத‌னைய‌ ச‌ந்திச்சும் இப்ப‌வும் க‌ட்சி ப‌ணிக‌ளை ஒவ்வொரு தொகுதியிலும் செய்துட்டு வாரார்............அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமானை பாராட்டித் தான் ஆக‌னும்............வாழ்க‌ வ‌ள‌முட‌ன் அண்ணா🙏....................

Edited by பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
29 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இல்லையே. வெளிநாட்டில் கேராளாவை சேர்ந்தவர்களை இலங்கை தமிழர்கள் சந்தித்தாலும் சரி மருத்துவத்திற்காக இலங்கை தமிழர்கள் கேரளா சென்று சந்திக்கும்போதும் அவர்கள் நீங்கள் எங்கடை ஆட்கள் தான். இங்கே இருந்து தான் இலங்கைக்கு சென்றீர்கள் என்கின்றனராமே.

உத்தியோக பூர்வமாக யாராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதை விளங்க நிணைக்கமாட்டீர்களா?

பிரபாகரன் மலையாளி என்றார்களே, அதுவும் சரியா?

15 hours ago, Kandiah57 said:

நல்ல பதிவுகள்  ஆனால் சிலருக்கு இது விளங்கப்போவதில்லை சீமானை ஆதரிப்பதை விட இலங்கையில் டக்ளஸ் தேவனாந்தவை  ஆதரிக்கலாம்  

புரிஞ்சு போச்சு!!

இதுக்கா, இந்தக் குத்து முறிவு?

🥹😏

Edited by Nathamuni
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
52 minutes ago, Nathamuni said:

ஈழத்தமிழர் போராட்டமே, தூய சிங்களவாதத்துக்கு எதிராக எழுந்த தூய ஈழத்தமிழ் வாதம்.

இத புரியாமல் அய்யா ஒருத்தர் வழக்கம் போல குழப்புறார்

ஓம் - ஆனால் திராவிடர் தமிழர் வேறுபாடு என்பது சீமானின், சீமானின் தம்பிகளின் தலைக்குள் மட்டும் தான் இருக்கிறது- குமரிக்கண்ட நம்பிக்கை போல, இந்த வேறுபாட்டை வைத்து ஈழத்தமிழர் சிங்களவரிடம் ஒன்றும் வெல்ல முடியாது!

கேள்விகளுக்கு பதில் தெரியாவிட்டால் "அய்யா" என்று ஒதுங்கி விடுவியள், அல்லது கிறீஸ் போத்தல் கையில் எடுப்பியள்😎 !

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
25 minutes ago, Justin said:

ஓம் - ஆனால் திராவிடர் தமிழர் வேறுபாடு என்பது சீமானின், சீமானின் தம்பிகளின் தலைக்குள் மட்டும் தான் இருக்கிறது- குமரிக்கண்ட நம்பிக்கை போல, இந்த வேறுபாட்டை வைத்து ஈழத்தமிழர் சிங்களவரிடம் ஒன்றும் வெல்ல முடியாது!

கேள்விகளுக்கு பதில் தெரியாவிட்டால் "அய்யா" என்று ஒதுங்கி விடுவியள், அல்லது கிறீஸ் போத்தல் கையில் எடுப்பியள்😎 !

பிரபாகரன் அறிக்கையில் சொன்னாரா என்று குழந்தை பிள்ளை போல கேட்க்கும் உங்களிடம் என்னத்தை பேசுவது?

உங்கள் புரிதலுக்கும், எனது புரிதலுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு. தமிழக அரசியலுக்குள், ஈழத்தமிழர் அரசியலை கலந்து, கோக்கு மாக்கு பண்ணாமல், அதை அதன் போக்கிலேயே பாருங்கள். இல்லாவிடில் இப்படி குழப்பங்கள் வருவதை தவிர்க்க முடியாது.

இலங்கையில், கர்நாடகத்தில், கேரளத்தில் தமிழர்கள் என்றால் சாதிய மனோநிலையில் மேலிருந்து கீழ் தாழ்வு பார்க்கும் போது, ஓர்மம் வருவது எங்கே, அடிக்கும் போது திருப்பி எதிர்த்து நிற்பது எங்கே?

பிரபாகரன் சாதிய மறுப்பினை உருவாக்கி, இனமாக ஓர்மமாக சிங்களத்தினை எதிர்த்தார். அதனையே அவர் பெயரில் சீமான் செய்கிறார். நீங்கள் ஈழத்தில் சாதிய அவலத்தில் பாதிக்கப்படாத வரை, இது புரிய சந்தர்ப்பம் இல்லை.

Edited by Nathamuni
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, Nathamuni said:

புரிஞ்சு போச்சு!!

என்ன புரிந்தது??   இங்கே நடக்கும் விவாதம்   சீமானின். நடவடிக்கைகள் குறிப்பாக  தமிழ்நாட்டிலுள்ள மற்ற அமைப்புக்களை  மதிக்காது  அனல் பறக்க மேடைகளில்  பேசி வருவதால்  ..அதில் ஈழத்தமிழரையும் சம்பந்தப்படுத்துவதால். அந்த அமைப்புக்கள்  ஈழத்தமிழருக்கு எதிராக  பேசியும் வலைத்தளங்களில் கருத்துகள் பதிந்தும். வருகிறார்கள்    இது தமிழ்நாட்டில் ஈழத்தமிழருக்கு  எதிரான ஒரு அலையை உருவாக்கிறது  ஆகவே சீமானுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமா?? இல்லையா??  எனது பதில் சீமானை ஆதரிப்பதை விட டக்ளஸ் ஆதரிக்கலாம் என்பது   டக்ளஸ் ஆதரியுங்கள். என்று நான் சொல்லவில்லை   ..மீண்டும் சொல்லுகிறேன். டக்ளஸ் ஆதரியுங்கள் என்று சொல்லவில்லை    சீமானை ஆதரிப்பதை விட   சிறந்தது  என்பது   தமிழ் விளங்குவதில்லையா???  

மற்றும்  இங்கே டக்ளஸ் பற்றி கள உறுப்பினர்கள் சொன்னது உண்மை எற்றுக்கொள்கிறேன்.  ஆனால்   வடமாகாணத்தில் மக்கள் ஆதரவுடன் இரண்டு இடங்களை கைப்பற்றி உள்ளார்   மேலும் யாழ்ப்பாணம் மாநகரசபையை  ஆட்சியை  தீர்மானிப்பது டக்ளஸ் தான்   இது தான் உண்மை நிலை   யாழ்ப்பாணத்தில். சீமானை பைத்தியம் என்று தான் 2017  நான்  அங்கு நின்ற போது மக்கள் கூறுகிறார்கள்   

1..புலம்பெயர் தமிழர்களை ஒற்றுமையாக வேண்டும் என்கிறார்கள் 

2..இலங்கையில் தமிழர்கள் ஒற்றுமையாக வேண்டும் என்கிறார்கள் 

3...தமிழ்நாட்டில் சீமான்   ஒற்றுமையை சீர்குலைக்கிறார்.  அது சரி என்கிறார்கள் 

4. ..இந்த சீமான்  ஒருபோதும் முதலமைச்சர் ஆகப்போவதில்லை  தட்டித்தவறி  வந்தாலும்  இந்தியா மத்திய அரசை மீறி  தமிழ் ஈழம் அமைத்து விட முடியாது   

5..பாகிஸ்தான் உடைத்து பங்களாதேஷ் உருவானது இந்தியா மத்திய அரசின் விருப்பம்   இப்போதும்கூட. பாகிஸ்தானை உடைத்து  இரண்டு நாடுகள் ஆக்க இந்தியாவுக்கு விருப்பம் தான்  ஆனால் இலங்கையை ஒருபோதும் இந்தியா மத்திய அரசு உடைக்காது   ஏன்   உடைக்க வேண்டும்  ?? உடைக்க போராடுவோர் அழிக்க படுவார்கள். தமிழராகவிருக்கலாம். அல்லது சிங்களவராகவிருக்கலாம். எவராகிலும்  அழிக்க படுவர்கள். ஆகவே தமிழ்நாடு...தமிழ் ஈழம் பெற்றுத் தரமுடியாது 

  • Like 3

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் நிறைய சிரியர்களுடன் வேலை செய்துள்ளேன், இதில் பலர் சிரிய கிறிஸ்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் அசாதுக்கே அதரவு தெரிவிப்பர்கள். அவர் செய்வது சரி என விவாதிப்பர்கள். மற்ற இயக்கங்கள் ஆட்சிக்கு வந்தால் தாங்களும் ் முஸ்லீமாக மாற வேண்டும் என கூறுவார்கள்.
    • 14 DEC, 2024 | 09:18 AM (எம்.நியூட்டன்) “வடக்கு கிழக்கு மாகாணம் போரினால் பாதிக்கப் பட்ட மாகாணம். எனவே அதற்கு என்று விசேட  திட்டத்தை வகுத்து நிதிகளை ஒதுகிடு செய்தோ வெளிநாட்டு உதவிகள் பெற்றோ வடக்கு கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யுங்கள்” என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி  தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.  யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (13)  நடைபெற்றது. அங்கு கலந்து கொண்டு துறைசார்ந்த திட்டங்கள் தொடர்பில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில், “போரால் பாதிக்கப்பட்ட மாகாணமாக வடக்கு கிழக்கு இருப்பதால் அதனை அபிவிருத்தி செய்வதற்கு விசேட நிதி ஓதுக்கிடு தேவை.  எனவே அரசாங்க நிதிநிலோ அல்லது வெளிநாடுகளின் நிதி உதவிகளைப்பெற்று விசேட திட்டங்களை அமைத்து அபிவிருத்திகளை செய்ய வேண்டும்.  எனைய மாகாணங்களைப் போன்று இங்கும் அவ்வாறு செய்வதால் முன்னேற முடியாது. மேலும் கடந்த காலத்தில் யாழ் நகரத்தில் பல திட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட போதும் யாழ்  மாவட்ட செயலகம் ,யாழ்ப்பாண பிரதேச செயலகம் யாழ் மாநகர சபைகளின் எந்தவிதமான அபிப்பிராயங்களையம் கேட்காது திட்டங்கள் முன்னேடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த கால அரசாங்கத்திற்கும் அதிலிருந்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக உருவாக்கப்படது. அதற்கான சகல திட்டங்களும் கொழும்பில் தான் மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டத்தால் மனிதனால் செய்யப்பட்ட. அனர்த்தம். இதனால்தான் இந்த வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது.  இவ்வாறான திட்டங்கள் மேற்கொள்ளாது மக்களின் தேவைகளுக்கு ஏற்ப விசேட திட்டங்களை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு  உருவாக்கி முன்னோக்கி செல்ல வேண்டும். கடற்றொழில் அமைச்சராக உள்ளமையால் அமைச்சரவையிலும் இந்த விடயத்தை பேசி அதற்கான திட்டத்தை உருவாக்கவேண்டும்”  என்றார். https://www.virakesari.lk/article/201229
    • 14 DEC, 2024 | 09:55 AM (எம்.நியூட்டன்) “என்னையோ உத்தியோகத்தர்களையோ அச்சறுத்தி அடாவடித்தனம் செய்வதற்கு கடவுளாக இருந்தாலும் அனுமதி இல்லை” எனத் தெரிவித்த யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியா் தங்கமுத்து சத்தியமூர்த்தி. “ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்  கோபம் ஊட்டும் வகையில் கேள்வி கேட்பவர்களை குழப்புபவர்களை அடுத்த கூட்டங்களுக்கு அனுமதிக்க வேண்டாம்” என்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர், மற்றும் வடக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்தார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அவர் இக் கோரிக்கையை முன்வைத்தார் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “யாழ் போதனா வைத்தியசாலை எத்தகைய நோய் என்றாலும் சிகிச்சை வழங்கக்கூடிய சகல வசதிகளும் இருக்கின்றன. தற்போதைய நோய் நிலைமை தொடர்பில் பொது மக்கள் பதற்றம் அடையத் தேவையில்லை.  அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உயர் பிரதிநிதிகள் யாராவது வந்தால் அது யாராக இருந்தாலும் மாலை போட்டு வரவேற்பதற்கு தயங்குவதில்லை. இருப்பினும் இந்த வைத்தியசாலை என்ற ரீதியில் நானும் எனக்குக் கீழ் உள்ளவர்களை ஊக்கப்படுத்தி இவ்வாறான சபையிலும் பயம் பதற்றம் இல்லாமல் நடத்துகின்ற இயல்பு என்னிடம் உள்ளது. போதனா வைத்தியசாலைக்கு 15 நுழைவாயில்கள் இருக்கின்றது. நோயாளிகளுக்கு மாத்திரமல்ல பல உயர் அதிகாரிகள் அன்போடும் பண்போடும் உத்தியோகத்தரிடம் அனுகினால் சேவைகளை பெறுவதும் நோயாளர்களை பார்வையிட வருவதற்கு அவர்களுக்கு ஏற்ற வகையில் தொடர்பாடல் ஏற்படுத்தப்படுகின்றது .  ஆனாலும் எம்மைப் பயப்படுத்தி உத்தியோகத்தர்களை பயப்படுத்தி உள்ளே வந்து விதண்டாவாதம் செய்வதற்கு கடவுளாக இருந்தாலும் அனுமதி இல்லை.  இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கின்ற போது ஒரு சிலர் பல அரச உத்தியோகத்தர்களுக்கு கோபம் ஊட்டும் வகையில் நடந்து கொண்டால் அவர்களை எதிர்வரும் கூட்டங்களுக்கு அனுமதிக்கக்கூடாது.  இங்கு பல உயர் நிலை உத்தியோகத்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டால் அரசு இயந்திரத்தை எடுத்து நடத்துவது கடினம். மேலும் தற்காலிக பணியாளர்கள் தொடர்பில் கேள்வி எழுப்ப பட்டிருந்தது.  பிரதிப் பணிப்பாளர் ஐம்பது பேர் உள்வாங்கப்பட்டு மூன்று மாத பயிற்சி வழங்கப்பட்டது. அதற்குப் பின்னர் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசில் 200 உள்வாங்க பட்டார்கள்.  தொடர்ச்சியாக அவர்கள் வேதனம் இன்றி கடமையாற்றிமையினால் வேலை வாய்ப்பு வருகின்றபோது தங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தமக்கு நியமனம் தருமாறும் கேட்டிருந்தார்கள். இவர்களுக்கு வைத்தியர்கள் மூலம் சிறு தொகைப் பணத்தை வழங்கியிருந்தோம். அவர்கள் வேலைவாய்புக்கு செல்லும் போது அவர்கள் தொடர்து வேலை செய்தமைக்கான சிபாரிசுக் கடிதம் வழங்கமுடியும். வேலைவாப்பு வழங்குவது பணிப்பாளரின் கடமையல்ல. இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கும் பல தடவைகள் கடிதம் அனுப்பியுள்ளேன். தொண்டர்களுக்கான வேலை வாய்ப்பு ஆளணி நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார். https://www.virakesari.lk/article/201230
    • Published By: VISHNU 14 DEC, 2024 | 01:20 AM   அரச அதிகாரிகளின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் செயற்பட்டமையால் , அரச அதிகாரிகள் தமது கண்டனங்களை யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பதிவு செய்தனர்.  யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போது , அரச அதிகாரிகளால் திட்டங்கள் முன் மொழியப்பட்டு , அது தொடர்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.  அதன் போது இடையில் குறுக்கிட்டு , கேள்விகளை கேட்டதுடன், அவர்களின் கல்வி தகமைகளையும் கேள்விக்கு உட்படுத்தினார். அதானல் சில அதிகாரிகள் அவரின் கேள்விகளை செவிமடுக்காது தமது விளக்கங்களை கூறி சென்றனர்.  அதேவேளை யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போது ,  அரச அதிகாரிகளை கேலி செய்வது போன்றும் , அவர்களின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்துவதும் அவர்களை அவமதிக்கும் செயலாகும் அவர்கள் தொடர்ந்து மக்கள் சேவையில் இருக்கும் அதிகாரிகள். இவ்வாறு செய்யும் சிலரினால் அவர்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகுவதால் மக்கள் சேவைகள் பாதிக்கப்படும்.  அது மட்டுமின்றி கூட்டங்களில் அரச அதிகாரிகள் அவமதிக்கப்பட்டால் கூட்டங்களை விட்டு அதிகாரிகள் வெளியேறுவார்கள்  யாழ் . போதனா வைத்தியசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை தரும் போது , அவர்களை நாங்கள் வரவேற்க தயாராகவே இருக்கிறோம். ஆனால் நடைமுறைகளை குழப்பி , அத்துமீறி நுழைய முற்பட்டால்  கடவுளாக இருந்தாலும் போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தார்.  https://www.virakesari.lk/article/201226
    • Published By: VISHNU 13 DEC, 2024 | 09:54 PM   இலங்கை தனது சர்வதேச பத்திரங்களின் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முடித்துள்ளதாக நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிசெம்பர் 12 ஆம் திகதி முடிவடையவிருந்த இலங்கையின் சர்வதேச இறையாண்மை பத்திர பரிவர்த்தனையின் ஆரம்ப தரவுகளின்படி, சந்தை பங்கேற்பாளர்களின் மிக அதிக பெரும்பான்மையான பங்கேற்பு இருந்தது. இது மிகவும் சிக்கலான மற்றும் சவாலான இறையாண்மைக் கடன் மறுசீரமைப்பு என்று அவர்கள் கருதுகின்றனர். இது தொடர்பான நடவடிக்கைகள் 16ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன், அதற்கான உடன்படிக்கைகள் 20ஆம் திகதிக்குள் நிறைவடையும். https://www.virakesari.lk/article/201223
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.