Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

எனது வேலைக்கான பயணத்தில் நாள்தோறும் பேருந்தில் போய்வருவது வழமை தினம் தினம் பஸ்கட்டணம் அதிகரிப்பதால் போக்குவரத்து செலவு அதிகமாக வரவே கையில் தலைக்கவசத்தை வைத்து பயணம் செய்வது வாடிக்கையானது. சில நேரம் சிலர் ஏற்றிச்செல்வார்கள் சில நேரம் கையசைத்தும் ஏற்றிசசெல்ல மாட்டார்கள் ஆரம்பத்தில் நானும் மோட்டார் சைக்கிளில் பயணித்தேன்  காலப்போக்கில் பொருளாதார சுமை காரணமாக பஸ்ஸில் பயணிக்க ஆரம்பமானேன் . பஸ் சீசன் ரிக்கட் எடுத்தாலும் சீசனைக்கண்டால் பஸ்ஸை தூர நிறுத்தும் நம்மூர் சாரதிகளும் நான் தற்போது தலைக்கவசத்துடன் பாதையில் நிற்கும் இந்த நிலைக்கு காரணம் . 

வேலையிடத்தில் எனது உயரதிகாரியை சந்தித்து எனக்கு பயணம், சாப்பாட்டு செலவு அதிகமாகிறது என்னால் வேலைக்கு ஒழுங்காகவும்,குடும்ப சூழ்நிலை காரணமாகவும் நேரத்துக்கும் வரமுடியாமல் உள்ளது என்னை நீங்கள் வேறு பாடசாலைக்கு விடுவித்தால் எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என சொல்ல அவர் விடுதலை தர மறுத்துவிட்டார். காரணம் அதிக வேலைகளை இழுத்துப்போட்டு செய்த காரணத்தால் மாறுதல் எடுக்கவும் முடியவில்லை தினம் தினம் தலைக்கவசத்துடன் நிற்பேன் யாராவது என்னை ஏற்றிக்கொண்டு போவார்கள் என‌. அன்றைய நாள் நானும் கையை காட்ட‌ ஒருவர் ஏற்றினார் ஏற்றிய அவர் என்னை நியாபகம் இருக்கா என அவர் கேட்க? இல்லையென நான் சொல்ல அவரோ நீங்கள் என்னை ஒரு நாள் ஏற்றி சென்று இருக்குறீங்க என அவர் சொல்ல ம் இருக்கலாம் (நாம் செய்யும் நல்லது எங்கோ ஓர் இடத்தில் நாம் அவதியுறும் போது அது வந்து சேரும்) 

நான் தனியே போகும் யாரும் தலைக்கவத்துடன் நின்றால் ஏற்றிப் போவ‌து ஏற்றிச்செல்வது வழமை என்றேன். ம் தற்போது பலர் செல்வார்கள் ஆனால் ஏற்றுவதில்லை அதற்கு காரணமும் உண்டு சிலர் தனியே நின்று ஏறி யாரும் அற்ற இடத்தில் இறங்குவதாக சொல்லி கத்தியை காட்டி கொள்ளை அடிச்ச சம்பவங்கள், மற்றது போதைப்பொருள் கடத்திய சம்பவங்களும் நடந்ததால் யாரும் ஏற்றிச்செல்வதில்லை என்றேன்.

நீங்க எங்க போகணும் தம்பி? அண்ண கல்முனைக்கு போகணும் சரி ஏறுங்க எங்க வேலை செய்யறீங்க பாடசாலையில் வேலை செய்கிறன் அப்படியா சொந்த இடம் எது? என் ஊரை நான் சொல்ல‌ அப்படியானால் நீங்கள் எடுக்கும் சம்பளம் பஸ்ஸுக்கும் சாப்பாட்டுக்கும் செலவாக‌ போயிடுமே தம்பி என கேட்டார் ஓம் அண்ணன் இப்படித்தான் போகிறது என நானும் சொல்ல காத்தான்குடி வருகிறது அங்கே  அண்ணை மிக கவனமாக வாகனத்தை ஓட்டுங்கள் இங்கே மனித எருமை மாடுகள மிக அதிகமாக குறுக்காக பாய்ந்து பாதையை கடந்து செல்லும் என நான் சொல்ல அவர் சிரிக்கிறார். என்ன உங்க குரல் சத்தமே வருகுதில்ல போங்க காரணத்தை சொல்கிறேன் என நானும் சொல்ல‌ 

நீங்கள் எங்க வேலை செய்கிறீர்கள் என்று கேட்க அவரோ நான் மிதிவெடிகளை அகற்றும் நிறுவனத்தில் வேலை செய்கிறேன் என சொன்னார் அப்போது மிதிவெடி மிகவும் பயங்கரமானதாக இருக்குமே நான் கேட்க லேசான மழைதூறல் வேற வாகனம் புதுக்குடியிருப்பை அடைகிறது .................. புது குடியிருப்பு  பகுதி சன நடமாட்டம் குறைவான பகுதி  ஆங்காங்கே சிலசில ஓலை குடிசைகள் இருக்கும் அங்கே  இருக்கும் மக்கள் சீசனுக்கு ஏற்றால் போல் முந்திரிகை , நாவல் பழம் , சோளன் அவித்து பாதையோரம் விற்பது வழமை  மழையும் அதிகரிக்க‌

நாங்களும் ஒரு ஓலை குடிசை நோக்கி ஒதுங்க அங்கே அம்மா மழையில் நனைந்து கொடுகி நின்றா சோள‌ன் இருக்கிறதா? ஓம் மகன் இருக்கு  எங்கள் இருவருக்கும் தாருங்கள் எனச் சொல்ல அவர் சோளனை அடுப்பில் இருந்து  எடுத்து இருவருக்கும் தருகிறார் இருவரும் மெதுவாக கதைத்துக் கொண்டிருக்கும் போது மின்னல் வெட்ட‌ இடியும் காதை பிளந்து கொண்டிருந்தது. அப்போது அந்த சிறுவனை நான் காண டேய் தம்பி இங்க வாடா என நான் கூப்பிட அவன் ஓடுகிறான் பின்னங்கால் *** அடிபட ஏன் தம்பி அவன் உங்கள காண ஓடுகிறான் என அந்த அம்மாவும் என்னை ஏற்றி வந்த அண்ணரும் கேட்க நான் வெட்ட எடுத்த கோழி போல‌கத்துர குரல் இவனாலதான் வந்தது என நான் சொல்ல என்ன நடந்தது என இருவரும் கேட்க ஒரு கிழமைக்கு முன்னன் நான் நல்லா கேட்டுத்தான் இவனிட்ட நாவல் பழம் வாங்கினன் பாவி பழம் பழுக்க சுண்ணாம்பு தண்ணி தெளிச்சிருக்கான் போல அத சாப்பிட்ட நாளில் இருந்து தொண்டை இப்படி இருக்கு இப்ப கொஞ்சம் பரவாயில்லை மூணு நாளைக்கு முன்னம் எல்லாம் கைப்பாசைதான் என சொல்ல இருவரும் சிரிக்கின்றனர்.


அந்த அம்மாவோ தம்பி இவங்க வாகரையிலிருந்து பழம் எடுத்து விற்கிறவங்கள் நீங்கள் யோசிக்கலையா முழுப்பழமும் மொத்தமாக பழுத்த்திருக்குமா என ? ஓம் அம்மா அது தெரிஞ்சுதான் கேட்டன் பல வருசமா இந்த ரோட்டால போய்வாரதால எனக்கு நல்ல அனுபவம் இவங்க கிட்ட என நானும் சொல்ல சோளம் கதையோடு கதையாக முடிந்து விட்டது இன்னுமொரு சோளனை தாங்கள் இருவரும் எடுக்கிறோம். 

ஏன் அண்ண‌ நீங்கள் இன்றைக்கு வேலைக்கு லீவா என நான் கேட்க இல்ல தம்பி நான் வேலையை விட்டு எழுதிக்கொடுத்து விட்டு வருகிறேன் வேலையை முற்றாக விட்டு வருகிறேன் என்று அவர் சொன்னார். ஏன் என்ன காரணம்? தற்போதைய சூழ்நிலையில் இலங்கையில் மிக கஷ்டமே வேலையில்லாதது நானும் கேட்க ம்ம்ம் தம்பி நேற்றைய நாள் வேலை செய்திருக்கும்போது நண்பர் ஒருவர் மிதிவெடியில் தனது காலை வைத்து இழந்து விட்டார் அதனால் நானும் பல வருடமாக வேலை செய்கிறேன் நேற்றைய சம்பவம் என்னை மிகவும் பாதித்தது அதனால் வேலையை விட்டு விலகுகிறேன் என்றார் அவர் ...........ம்ம்ம் 
திருமணம் ஆகிவிட்டதா? இல்லை ஏன் கட்டவில்லை நாளைக்கும் எனக்கும் இந்த நிலை வந்தால் என்ன செய்வது?? பதில் சொல்ல முடியாமல் நானும் 

ஏன் அவர் பயிற்ச்சிகள் எடுக்கவில்லையாயென நானும் கேட்க  புதுசாக புதுசாக வேலையில்லா திண்டாட்டத்தில் நிறைய பேர் வந்து இணைகிறார்கள் எங்களுக்கு சுமார் ஒரு வருட காலம்  பயிற்ச்சி தந்தார்கள்  தற்பொழுது நிறைய பேர் பூரணமாக பயிற்சி பெறுவதில்லை வேலையென‌ வந்து இணைகிறார்கள் தற்போது மழைக்காலம் தொடங்கவுள்ளதால் அகற்றுவது சிரமம் என்றார்  நாங்கள் வேலை செய்து துப்பரவாக்கிய பகுதியில் தான் அந்த வெடி வெடித்தது  நாங்கள் அகற்றிய பகுதியில் மழை நீர் ஒடியதால் அதிலிருந்த வெடி ஒன்றே நீரோட்டத்தில் வந்து மண் மூடி இருந்து அது ஒருவருக்குமே தெரியவில்லை வெளியாக்கிய பகுதியென நினைத்து மீண்டும் அகற்ற செல்லும் போதே வெடித்தது என அவர் சொல்ல மனம் கனத்தது.

பாவம் அவரும் குடும்பஸ்த்தர் இரு குழந்தைகள் உள்ளது ஒரு நாளைக்கு 20 மீற்றர் நிலம் கூட அகற்ற முடியாமல் விதைத்து வைத்திருக்கிறார்கள் நான் கூட ஒருதரம் சிக்கினேன் அது மிகப்பழையது வெடிக்கவில்லை தப்பித்துவிட்டேன் என அவர் காலைப்பார்க்கிறார் முழங்கால் தொடக்கம் தேய்ந்து இருந்தது சரி அண்ண மழை ஓய்கிறது வாருங்கள் போவோம் என நான் சொல்ல அந்த கடைகார அம்மாவோ கவனம் மனே பார்த்து போங்கள் ரோட்டு முழுக்க தண்ணியாக் கிடக்கு என சொல்ல நீங்களும் நனையாமல் போங்க இருட்டுகிறது என காசைக்கொடுக்கிறேன் அவவோ முழுக்க நனைந்திருந்தார்

மழை நின்றாலும் தூவானம் எம்மவர்க்கு  அடித்துக்கொண்டே இருக்கும் ..................................

  • Like 12
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மனதை நெருட வைத்த உங்கள் கதை/அனுபவப்பகிர்வு சிறப்பு

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் ராசன்! உங்கள் கதையை   வாசிக்கும் போது நான் உங்கள் நிலையில் இருந்திருந்தால் எப்படியிருந்திருப்பேன் என ஒரு கணம் யோசித்து பார்த்தேன்.

வாழ்க்கை என்பது எங்குமே போராட்டம் தான். ஆனால் போராட்டமே வாழ்க்கை என்றால்......யாரை நொந்து கொள்வது?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அனுபவங்கள் சிலிர்க்க வைக்கின்றன தனி.........ஒவ்வொன்றாய் எடுத்து விடுங்கள்........!  👍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தூவானமா? துயரமா? பகிர்விற்கு நன்றி.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 23/9/2023 at 04:04, தனிக்காட்டு ராஜா said:

மழை நின்றாலும் தூவானம் எம்மவர்க்கு  அடித்துக்கொண்டே இருக்கும்

உண்மைதான்.. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ராஜா உங்கள் ஒவ்வொரு அனுபவமும் மனதை பிழிந்தே செல்கிறது.

அனுபவங்கள் அழவைக்கிறது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 26/9/2023 at 20:47, Sabesh said:

மனதை நெருட வைத்த உங்கள் கதை/அனுபவப்பகிர்வு சிறப்பு

நன்றி சபேஸ் அண்ணை

 

On 27/9/2023 at 02:52, குமாரசாமி said:

வணக்கம் ராசன்! உங்கள் கதையை   வாசிக்கும் போது நான் உங்கள் நிலையில் இருந்திருந்தால் எப்படியிருந்திருப்பேன் என ஒரு கணம் யோசித்து பார்த்தேன்.

வாழ்க்கை என்பது எங்குமே போராட்டம் தான். ஆனால் போராட்டமே வாழ்க்கை என்றால்......யாரை நொந்து கொள்வது?

சிரித்து விட்டு கடந்து போவதுதான் சாமியார் பழகிடுச்சி 

 

On 27/9/2023 at 13:20, suvy said:

அனுபவங்கள் சிலிர்க்க வைக்கின்றன தனி.........ஒவ்வொன்றாய் எடுத்து விடுங்கள்........!  👍

மிக்க நன்றி அண்ணை

 

On 27/9/2023 at 14:40, ஏராளன் said:

தூவானமா? துயரமா? பகிர்விற்கு நன்றி.

நன்றி ஏராளன் 

 

On 27/9/2023 at 20:10, ஈழப்பிரியன் said:

ராஜா உங்கள் ஒவ்வொரு அனுபவமும் மனதை பிழிந்தே செல்கிறது.

அனுபவங்கள் அழவைக்கிறது.

அனுபவங்கள் என்னை ஏதோ ஒரு வகையில் முழுமையாக்கிறது என்று சொல்லலாம் எது வந்தாலும் வாழ்க்கையில் பழகப்பட்டுவிடுகிறது

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 27/9/2023 at 11:10, ஏராளன் said:

தூவானமா? துயரமா? பகிர்விற்கு நன்றி.

சந்தேகமில்லை, துயரம்தான் சரி.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kavi arunasalam said:

சந்தேகமில்லை, துயரம்தான் சரி.

கருத்துக்கு மிக்க நன்றி அண்ணை 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அனுபவ பகிர்விற்கு மிக்க நன்றி ...என்று நிற்குமோ இந்த தூறல் 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொடர்ந்து எழுதுங்கோ தனி ..நானும் வாசித்து கொண்டு தான் இருக்கிறேன் 

  • Thanks 1
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 7/10/2023 at 01:04, putthan said:

அனுபவ பகிர்விற்கு மிக்க நன்றி ...என்று நிற்குமோ இந்த தூறல் 

நன்றி அண்ணை உங்களை காண்பது குறைவாக உள்ளது களத்தில்  

 

On 8/10/2023 at 23:11, ரதி said:

தொடர்ந்து எழுதுங்கோ தனி ..நானும் வாசித்து கொண்டு தான் இருக்கிறேன் 

நன்றி ரதி அனுபவங்கள் சம்பவங்கள் கதைகளாக வரும் 

  • Thanks 1
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தூவானத்தில் நானும் நன்கு நனைந்துவிட்டேன். எழுதுங்கள் உங்கள் அனுபவங்களை. 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தூவானத்தில் நானும் நன்கு நனைந்துவிட்டேன். எழுதுங்கள் உங்கள் அனுபவங்களை. 

வணக்கம் அக்கா,

உங்களிடம் இன்னோரு திரியில் ஒரு கேள்வி கேட்டு, எங்கே உங்களை காணமே என்று யோசித்துக் கொண்டிருந்தேன். பதில் தர முடியுமா? நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, Nathamuni said:

வணக்கம் அக்கா,

உங்களிடம் இன்னோரு திரியில் ஒரு கேள்வி கேட்டு, எங்கே உங்களை காணமே என்று யோசித்துக் கொண்டிருந்தேன். பதில் தர முடியுமா? நன்றி

என்ன கேள்வி ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்ன கேள்வி ?

 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஓம்…அது பாருங்கோ…உங்களுக்கும் எனக்கும் கதியால் சண்டை…. அதுதான்…உங்களோடு பொருதுகிறேன்….🤣 என்னை பொறுத்தமட்டில் அனுரவை யாழில் தூக்கி பிடிப்பதில் முதன்மையானவர் நீங்கள். அந்த அரசியலினை விமர்சிக்கும் போது நீங்கள் collateral damage. அதுக்காககதானா யாழில் கிடந்து முக்குகிறீர்கள்.
    • சைக்கிள் கட்சியில் இப்படியான பொது சபை கூட்டங்கள் நடை பெறுகின்றனவா? தலைவர் தெரிவு நடை பெறுமா?  ஏன் கேட்கிறேன்  என்றால் தமிழரசு கட்சியின் உட்கட்சி விவகாரங்கள் குறித்து  இங்கு அதிக அக்கறையுடன் பேசுபவர்கள் பேசுபவர்கள் சைக்கிள் கட்சியின் வாரிசு அரசியலை வரிந்து  கட்டிக்கொண்டு ஆதரிக்கும் அக்கட்சியின் ஆதரவாளர்கள்.    இது தனது வீட்டுக்குள் நடக்கும் கூத்துகளை விடுத்து  அடுத்தவன் வீட்டுக்குள்  என்ன நடக்கிறது என்று வேலிக்குள்ளால் விடுப்பு பார்ககும் கலாச்சாரம் தானே. 😂   இலங்கையில் மூன்று தலைமுறை குடும்ப கட்சியின்  தீவிர ஆதரவாளராக இருந்து கொண்டு தமிழ் நாட்டில் வாரிசு அரசியல் என்று பேசும் போலிகள் தான் இந்த தீவிர வரட்டு  தமிழ் தேசியம் பேசும் ஆசாமிகள்.   
    • தமிழரசுக் கட்சியிலிருந்து சிலர் நீக்கப்படுவர்- எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு. இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படவுள்ளதோடு,  சிலர் இடைநிறுத்தப்படவுள்ளனர் எனவும்  முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று (14) இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது கட்சிக்கு எதிராக போட்டியிட்டவர்களை  உடனடியாக கட்சியிலிருந்து நீக்குவதற்கு பொதுச் செயலாளருக்கு அதிகாரம் இருக்கிறது என மத்திய குழு ஏற்றுக் கொண்டுள்ளதாகவும்,  அதனை பொதுச்செயலாளர் எதிர் வரும் நாட்களில் செய்வார் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் கட்சிக்கும், கட்சியினுடைய வேட்பாளருக்கு எதிராகவும் செயல்பட்டமை தொடர்பில் சிலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் வரை அவர்கள் கட்சியின் செயற்பாடுகளில் இருந்து இடை நிறுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த காலத்தில் அரசியல் உருவாக்கம் சம்பந்தமான விடயங்களில் தமிழரசு கட்சி தீர்க்கமான நிலைப்பாடுகளை எடுது்துள்ளது எனவும், தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழரசு கட்சி தமிழர்களுடைய பிரதான கட்சி எனவும்,   மக்கள் கொடுத்த அந்த ஆணையை மீறி தாம்  செயற்படப்போவதில்லை எனவும், தமது நிலைப்பாட்டோடு இணைந்து செயல்படுவதற்கு வருவார்களாக இருந்தால் தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். https://athavannews.com/2024/1412326
    • யாழில் இராணுவத்தினரின் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும்- கடற்றொழில் அமைச்சர். யாழ்  மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் 2624.29 ஏக்கர் நிலப்பரப்பு எதிர்வரும் காலங்களில் படிப்படியாக விடுவிக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இது தொடர்பில்  அவர்  அறிக்கையொன்றினையும் வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் ‘தற்போது படையினரிடம் உள்ள காணிகள் 2025ஆம் ஆண்டு முதல் படிப்படியாக விடுவிக்கப்படும் எனவும்,  அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்” குறிப்பிட்டுள்ளார். மேலும் யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்காக இந்த வருடம் 1303.42 மில்லியன் ரூபா நிதி செலவழிக்கப்பட்டுள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1412323
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.