Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து சட்டமாஅதிபரை சந்தித்தார்-கொழும்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளையும் சந்தித்தார்- நீதியமைச்சர்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா தானாக முன்வந்து சட்டமாஅதிபரை சந்தித்தார் என தெரிவித்துள்ள நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச கொழும்பில் அவர் இரண்டு வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்தார் எனவும் தெரிவித்துள்ளார்

பிபிசி சிங்கள சேவைக்கு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நீதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஐந்து வெவ்வேறு வழக்குகளில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டார்.

இதன் காரணமாக அவர் தானாக முன்வந்து சட்டமா அதிபரை ஆலோசனைக்காக சந்தித்தார்.

அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் என்றால் நீதிபதி என்றவகையில் அவசியமான பிடியாணைகளை பிறப்பிக்கும அதிகாரம் அவருக்கு உள்ளது.

அவரது இராஜினாமா குறித்து விசாரணைகளை மேற்கொண்டவேளை நீதிபதி ரீ சரவணராஜா ஒருகிழமைக்கு முன்னர் கொழும்பிற்கு வந்து தனது காரை விற்றார் இரண்டு வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்தார் என்பது தெரியவந்துள்ளது என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து சட்டமாஅதிபரை சந்தித்தார்-கொழும்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளையும் சந்தித்தார்- நீதியமைச்சர் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, பிழம்பு said:

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா தானாக முன்வந்து சட்டமாஅதிபரை சந்தித்தார் என தெரிவித்துள்ள நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச கொழும்பில் அவர் இரண்டு வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்தார் எனவும் தெரிவித்துள்ளார்

புலனாய்வுப்பிரிவு பின் தொடர்ந்திருக்கிறது.

ஒரு நீதிபதியைப் பற்றி பாராளுமன்ற உறுப்பினர் கள்ளுக்கடையில் கதைக்கிற மாதிரி கதைக்கும் போது

தட்டிக் கேட்க துணிவில்லாத துப்பில்லாத சட்டமா அதிபரும் நீதியமைச்சரும் இதை எல்லாம் பார்த்து ரசித்து கொடுப்புக்குள் சிரிக்கும் ஜனாதிபதியும்.

  • Haha 1
Posted
11 minutes ago, ஈழப்பிரியன் said:

 

தட்டிக் கேட்க துணிவில்லாத துப்பில்லாத சட்டமா அதிபரும் 

இவர் பிறப்பால் ஒரு தமிழர். பெயர் சஞ்சை ராஜரட்ணம். கோத்தாவால் நியமிக்கப்பட்டவர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் : சி.ஐ.டியிடம் உடனடி விசாரணையை கோர இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம்

29 SEP, 2023 | 06:12 PM
image

ஆர்.ராம்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு ஏற்பட்டுள்ள உயிரச்சுறுத்தல் தொடர்பில் உடனடியான விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவை கோருவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா தான் வகித்த பதவிகள் அனைத்தையும் துறந்து உயிரச்சுறுத்தல் மற்றும் அழுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிரச்சுறுத்தல் காணப்பட்டதால் அவர் நாட்டை விட்டு வெளியேறுவதாக பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்.  

உண்மையில், அவருக்கு உயிரச்சுறுத்தல் காணப்பட்டதா, அவ்வாறு காணப்பட்டால் அது யாரால் விடுக்கப்பட்டது, அதனுடன் தொடர்புடைய தரப்புக்கள் யாவை என்பன தொடர்பில் விரிவான விசாரணையை உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.

நீதித்துறையின் சுயாதீனத்தையும், நன்மதிப்பையும் உறுதிப்படுத்துவதற்காக இந்தச் செயற்பாடு மிகவும் அவசியமாக உள்ளது.

ஆகவே குற்றப்புலனாய்வுப் பிரிவு இந்த விடயத்தில் தாமதமின்றி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எழுத்து மூலமான கோரிக்கையையும் அனுப்பி வைக்கவுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/165721

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, நிழலி said:

@goshan_che யும் @Kavi arunasalam மும் இணைந்து சில மீம்ஸ் மற்றும் ஆங்கிலத்தில் short Message ஆக சிலவற்றை உருவாக்கினால் எம்மால் அதை பயன்படுத்தி பகிர முடியும் என நினைக்கிறேன

பார்க்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, நிழலி said:

இவர் பிறப்பால் ஒரு தமிழர். பெயர் சஞ்சை ராஜரட்ணம். கோத்தாவால் நியமிக்கப்பட்டவர்.

அப்புறம் என்ன அவர்கள் எறியும் எலும்பு துண்டை கடித்துப் போட்டு படுக்க வேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஏராளன் said:

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு ஏற்பட்டுள்ள உயிரச்சுறுத்தல் தொடர்பில் உடனடியான விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவை கோருவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன தெரிவித்துள்ளார்.

ஒரு நீதிபதிக்கெதிராக பாராளுமன்றிலேயே முழுத் துவேசமாக பேசுகிறார்கள்.

பத்திரிகைகளில் பந்தி பந்தியாக துவேசமாக எழுதுகிறார்கள்.

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு இப்ப விசாரணையாம்.

ஜனாதிபதியிடம் முறையிட்டால்

மூன்று நீதிபதிகள் கொண்ட ஆணைக்குழுவை நியமிப்பார்.

ஆனால் என்ன தீர்ப்பு மாத்திரம் வரவே வராது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, goshan_che said:

large.IMG_4032.jpeg.9bd8a312f2afeaffb5ee8cca4c055eeb.jpeg

படம் சொல்லும் செய்தி அருமை. நன்றி @goshan_che

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை நடத்த திட்டம்

முடங்கப்போகும் யாழ்ப்பாணம்…..

முல்லைத்தீவு நீதிபதி T.சரவணராஜா பதவி விலகி நாட்டைவிட்டு வெளியேறிய விவகாரத்தை கண்டித்து போராட்டங்களை நடத்துவதற்கு தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ளன.

 

யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து நேற்று முன்னெடுத்த கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது,

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நாடுகளின் கவனத்துக்கு இந்த விடயத்தை கொண்டு செல்லும் விதமாக எதிர்வரும் 4ஆம் திகதி மருதனார்மடத்திலிருந்து யாழ்ப்பாணம்; வரை பாரிய மனிதச்சங்கிலி போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்திலும் நீதிபதியின் பதவி விலகலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1351728

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீதிபதியின் பதவி விலகலுக்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும்

நீதிபதியின் பதவி விலகலுக்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும்

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பான வழக்கினை முன்னெடுத்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி, தனது பதவியை இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியதற்கான முழுப் பொறுப்பும் அரசாங்கத்தையே சார்ந்தது என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

 

குறித்த விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்துற்குள்ளே எழுப்பப்பட்ட இனவெறிக் கூச்சல்களுக்கு அப்பால், அதிகாரத் தரப்பினால், நேரடியாகவும் மறைமுகமாகவும் நீதிபதி மீது பிரயோகிக்கப்பட்ட உளவியல் ரீதியான அழுத்தங்களே, அவரை இந்த முடிவுக்கு இட்டு சென்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தமது கடமையை நேர்மையுடன் செய்ய விரும்பும் சகல நீதிபதிகளுக்கும் இது ஓர் சிவப்பு எச்சரிக்கை என்பதை, அனைத்து மக்களும் புரிந்து கொள்ள வேண்டிய நிலைமைக்குள் முழு நாடும் தள்ளப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

குருந்தூர் மலை விவகாரம் என்பது நீதித் துறையின் சுதந்திரத்துக்கு விடுக்கப்பட்டிருக்கும் பாரிய சவாலாகும், எமது ஒன்றுபட்ட எதிர்ப்பை நாம் வெளிப்படுத்த வேண்டும் என்றும் தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2023/1351725

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சொறீலங்கா நீதித்துறை இப்படியான சிங்கள பெளத்த அரசியல்மயமாக்கப்பட்ட ஒன்று என்பது இவ்வளவு காலமும் தெரியாதாக்கும்..??! என்னமா நடிக்கிறாங்க.

இதனால் தான் சர்வதேச நீதி விசாரணைகளை கோருகிறார்கள்.. இதில.....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

“நாடும் அரசும் வெட்கித் தலைகுனிய வேண்டும்”

அழுத்தங்களால் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா பதவி விலகியமை தொடர்பிலும், உயிர் அச்சுறுத்தல் காரணமாக அவர் நாட்டை விட்டு வெளியேறியமை குறித்தும் இந்த நாடும் அரசும் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் கடுமையாக சாடியுள்ளார்.

spacer.png

நீதிபதி ரி.சரவணராஜா பதவி விலகியமை தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சம்பந்தன் மேலும் கூறியுள்ளதாவது,

“குருந்தூர்மலை சம்பந்தமான முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தல், அந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தல் மற்றும் அழுத்தங்களைப் பிரயோகித்தல் ஆகிய விடயங்கள் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவையாகும்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தன் மீது பயன்படுத்தப்பட்ட அழுத்தங்கள் காரணமாகப் பதவியில் இருந்தும் விலகியுள்ளார்.

அதேவேளை, உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டும் அவர் வெளியேறியுள்ளார். இதனூடாக அவர் சந்தித்த நெருக்கடிகள் எவ்வாறு இருந்தன என்பதை விளங்கக்கூடியதாக இருக்கின்றது. இந்த விவகாரம் தொடர்பில் நாடும் அரசும் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

 

நீதிமன்றமும் நீதிபதிகளும் சுதந்திரமாகச் செயற்பட இடமளிக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் மக்கள் நீதிமன்றம் சென்று நீதியைப் பெற முடியும். நீதிமன்றத்தினதும் நீதிபதிகளினதும் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தினால் அது பாரதூரமான குற்றமாகும். இந்த விடயம் சம்பந்தமாக உள்நாட்டு விசாரணை மாத்திரமல்ல வெளிநாட்டு விசாரணையும் நடக்க வேண்டியது அவசியம்.

இலங்கையின் நீதித்துறை சுதந்திரத்தைப் பறிக்கும் இந்தப் பாரதூரமான செயல்களை வெளிநாடுகளும்இ சர்வதேச அமைப்புக்களும் மிகவும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். அத்துடன் நீதிபதி ரி.சரவணராஜா மீளவும் பதவியை ஏற்பதற்கும், அவர் சுதந்திரமாகக் கடமையாற்றுவதற்கும் ஏதுவான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் விரைந்து எடுக்க வேண்டும்” என்றார்.

-(3)

http://www.samakalam.com/நாடும்-அரசும்-வெட்கித்-த/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

“நீதிபதி சரவணராஜா தானாக முன்வந்து சட்டமாஅதிபரை சந்தித்தார்”: நீதியமைச்சர்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா தானாக முன்வந்து சட்டமாஅதிபரை சந்தித்தார் என தெரிவித்துள்ள நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச கொழும்பில் அவர் இரண்டு வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்தார் எனவும் தெரிவித்துள்ளார்

பிபிசி சிங்கள சேவைக்கு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நீதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஐந்து வெவ்வேறு வழக்குகளில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டார்.

இதன் காரணமாக அவர் தானாக முன்வந்து சட்டமா அதிபரை ஆலோசனைக்காக சந்தித்தார்.

அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் என்றால் நீதிபதி என்றவகையில் அவசியமான பிடியாணைகளை பிறப்பிக்கும அதிகாரம் அவருக்கு உள்ளது.

அவரது இராஜினாமா குறித்து விசாரணைகளை மேற்கொண்டவேளை நீதிபதி ரீ சரவணராஜா ஒருகிழமைக்கு முன்னர் கொழும்பிற்கு வந்து தனது காரை விற்றார் இரண்டு வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்தார் என்பது தெரியவந்துள்ளது என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

http://www.samakalam.com/நீதிபதி-சரவணராஜா-தானாக-ம/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு தமிழ்நீதிபதிக்கே பாதுகாப்பில்லை.சாமானிய தமிழ்மக்களுக்கு எப்படிப் பாதுகாப்பு இருக்கும் என்பது இப்போது உலகநாடுகளுக்குத் தெரியும். ஆனால் தெரியாது போல் நடிக்கின்றன. கனடா இப்போது இலங்கை இந்தியாவுடன் முரண்பட்ட நிலையில் அந்த நீதிபதிக்கு தஞ்சம் கொடுத்திருப்பது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடேய், டேய் நடிக்காத!!

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீதித்துறைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது!

நீதித்துறைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது!

இலங்கையின் சரித்திரத்தில் நீதித்துறைக்கு அதி உச்சமான ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவின் மொழிகள் மற்றும் சமூக அபிவிருத்தி பயிற்சி மத்திய நிலையத்தில் சிங்கள மொழி கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு மானிப்பாய் சுதுமலை பகுதியில் உள்ள தனியார் விடுதியொன்றில் இன்று காலை சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” முதல் முறையாக எங்களுடைய நாட்டின் சரித்திரத்தில் நீதிபதி ஒருவர் தன்னுடைய உயிர் பாதுகாப்புக்காக அதுவும் தான் செய்த ஒரு தீர்ப்பின் அடிப்படையிலே வந்திருக்கின்ற அச்சுறுத்தலின் காரணமாக நாட்டை விட்டு ஓடியதாக இன்றைய பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன.

இது நீதித்துறைக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற அதி உச்சமான ஒரு அச்சுறுத்தல். நாட்டிலே இருக்கின்ற சுயாதீனமான நிறுவனங்களைப்  பாதுகாக்க வேண்டிய பாரிய கடைப்பாடு எங்கள் அனைவருக்கும் உள்ளது. அத்தகைய சுயாதீனமான நிறுவனங்களிலே பிரதானமானது நீதி துறை. நீதித்துறையை பாதுகாக்கின்ற போது நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல் செய்வதை நாங்கள் கண்டிக்க வேண்டும். அதனைத் தடுக்க வேண்டும். அதே வேளையிலே நீதித்துறைக்கு உள்ளேயே தவறுகள் இருந்தால் அதனை திருத்துகின்ற வகையிலே நாங்கள் செயல்பட வேண்டும்.

நீதித்துறையை பாதுகாப்பது என்றால் நீதிபதிகள் என்ன செய்தாலும் அவர்களை பாதுகாப்பதல்ல. நீதிபதிகள் சுயாதீனமாக செயற்படுவதை பாதுகாப்பது ஆகும். அரசியல் என்பது அரசியல்வாதிகளின் கைகளில் விட்டு விடுவதற்கான இலகுவான விடையம் அல்ல, அரசியல் என்பது மக்களுடைய ஆணையை, மக்களுடைய விருப்பத்தை தங்களுடைய பிரதிநிதிகள் மூலமாக செயற்படுத்துகின்ற ஒன்று. அது மக்களுக்காக இயங்குகின்ற ஒன்றாக இருக்க வேண்டும். மக்கள் அதில் தொடர்ந்து ஈடுபடுகின்றவர்களாக இருந்தே ஆக வேண்டும்.

தமிழ் மாணவர்கள் சிங்களம் கற்பதிலும் , சிங்கள மாணவர்கள் தமிழ் கற்பதிலுமே அவர்கள் எவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்துவிட்டார்கள் என்பது தெரிகின்றது. இதுவும் அரசியலிலே ஒரு முற்போக்கான தாக்கத்தை ஏற்படுத்துகின்ற விடயமாக உள்ளது” இவ்வாறு சுமந்திரன்  தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1351658

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தெருப்போராட்டத்தை மொழிப்போராட்டமாக நடத்தும் நிலைமைக்கு தள்ளிவிட வேண்டாம் – சீன, இலங்கை அரசுகளிடம் மனோ!

நீதிபதி பதவி விலகிய விவகாரம் நாட்டில் எஞ்சி இருந்த சட்ட ஆட்சிக்கு விடுக்கப்பட்ட நேரடி சவால்

நீதிபதி பதவி விலகிய விவகாரம் நாட்டில் எஞ்சி இருந்த சட்ட ஆட்சிக்கு விடுக்கப்பட்ட நேரடி சவால் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதற்கு உடனானடியாக நாடு திரும்பி பதிலளிக்க வேண்டும் என்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினமும் இந்த விடயம் தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1351597

 

#################    #################    #####################

மக்களின் கோரிக்கையினை ஏற்று அரசியலுக்கு வந்ததாக கூறும் ஜனாதிபதி, மக்களின் கோரிக்கையினை ஏற்று பதவி விலக வேண்டும் – சாணக்கியன்!

நீதிபதிக்கே கொலைமிரட்டல் என்றால் சாதாரண மக்களின் நிலை ? – சாணக்கியன் கேள்வி

கொலைமிரட்டல் காரணமாக ஒரு நீதிபதி தப்பிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டால் நாட்டு  மக்களின் நிலை என்ன என்பதை கற்பனை செய்து பார்க்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

 

மேலும் சனல் 4 இல் வெளியான தகவல்கள் குறித்து விசாரணை கோரி எஸ்.எம்.மில் பதிவிட்ட பல இளைஞர்களுக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியுள்ள போதும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக விசாரணை இடம்பெறவில்லை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1351599

 

##################    ###################   ################

 

அரசாங்கத்தின் புதிய விதிகளால் கைதிகளின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன – அம்பிகா சற்குணநாதன்

நீதிபதியை அழைப்பதற்கு சட்டமா அதிபருக்கு அதிகாரமில்லை – அம்பிகா சற்குணநாதன்

நீதிபதியை அழைப்பதற்கு சட்டமா அதிபருக்கு அதிகாரமில்லை என மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

 

அவ்வாறு அழைத்திருந்தால் அது நீதித்துறையின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2023/1351601

 

#################   ###################   #################

 

பலவருட பிரச்சினையை வெறும் இரண்டு மாதத்திற்குள் முடிப்பது சாத்தியமற்றது – அங்கஜன்

நீதிபதியின் இராஜினாமா நீதித்துறை சந்தித்துள்ள சவால்களை காட்டுகின்றது – அங்கஜன்

உயிர் அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம் காரணமாக தனது பதவிவை துறப்பதாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா அறிவித்துள்ளமையானது, நாட்டின் நீதித்துறை எத்தகைய சவால்களை சந்தித்துள்ளது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் தெரிவித்துள்ளார்.

 

சுயாதீனமாக செயற்பட வேண்டிய நீதிக் கட்டமைப்பை நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி நீதித்துறையை கேலிக்குள்ளாக்கிய ஒருவரது நிலைப்பாட்டுக்கு அமைவாக நாட்டின் சட்டமா அதிபர் திணைக்களமும் செயற்பட்டுள்ளமை அதிர்ச்சியை தருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதவி துறத்தலானது, பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே இலங்கையின் அனைத்து அரச நிறுவனங்களும் செயற்பட வேண்டும் என்ற கடும்போக்குவாதத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது என்றும் அங்கஜன் ராமநாதன் தெரிவித்துள்ளார்.

நீதித்துறையையும் வளைத்துப்போடும் வகையில் சிலர் செயற்படும்போது அதை தடுக்காமல் நீதித்துறைக்கு காவலாக இருக்க வேண்டியவர்களே நீதித்துறையின் சுயாதீனத்தை கேள்விக்குட்படுத்தும் போது, நாட்டின் எதிர்காலம் குறித்த அச்சம் மக்களிடம் உருவாக்குகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல்கள் தொடர்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் பணிப்புரைகளையே மீறிச் செயற்படக்கூடிய தரப்புகள் இந்நாட்டை ஆபத்தான பாதைக்கு இட்டுச் செல்கிறார்கள் என்றும் அங்கஜன் ராமநாதன் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1351569

 

#################   #################  ##################

 

நீதியமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்

நீதியமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்

நாட்டில் நீதித்துறை நேர்மையான முறையி;ல் செயற்படுகின்றதா என்ற கேள்வியெழுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

 

மன்னாரில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைத்த அவர், முறையான தீர்ப்பை வழங்கிய நீதிபதி அச்சுறுத்தப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதித்துறை என்பது நியாயமான வகையில் செயல்பட வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பாக உள்ளது எனவும் ஆனால் தற்போது தமிழ் நீதிபதிகளுக்கு நியாயமாக செயற்பட முடியாத நிலையேற்பட்டுள்ளதுடன்; அவர்களை அச்சுறுத்துகின்ற செயற்பாடுகளும் நாட்டில் இடம்பெறுவதாக விசனம் தெரிவித்துள்ளார்.

எனவே,நீதியமைச்சர் இந்த விடயத்தை ஆராய வேண்டும் எனவும், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் இராஜீனாமாவில் அழுத்தம் உயிர் அச்சுறுத்தல் இருக்குமாக இருந்தால் நீதி அமைச்சர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2023/1351680

 

#####################    #################   #####################

 

 

நீதிபதியின் பதவி விலகல் தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்

நீதிபதியின் பதவி விலகல் தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.

 

குறித்த விவகாரம் தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘குருந்தூர்’ மலை விவகாரம் தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பை அடிப்படையாகக்கொண்டு அவருக்கு எதிராக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள விவகாரம் நீதித்துறையின் நிலை குறித்து கேள்வியை உருவாக்கியுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் நீதிபதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களுக்கு எதிரான அச்சுறுத்தலானது நீதி மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரான அச்சுறுத்தலாகும். எனவே, நேர்மையுடன் நீதி வழங்குபவர்களைப் பாதுகாப்பதும், அவர்களுக்கு ஆதரவளிப்பதும் நமது கூட்டுப் பொறுப்பு எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.

https://athavannews.com/2023/1351749

 

#################   ################   ###############

 

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு நிவாரணம் வழங்க வேண்டும்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு நிவாரணம் வழங்க வேண்டும்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கையொன்றின் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

இந்த விடயம் நீதித்துறையின் நம்பகத்தன்மை குறித்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், நீதிபதியொருவர் நாட்டை விட்டு வெளியேறிய சம்பவம் நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மீது ஏற்பட்ட கரும்புள்ளி எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ்மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கான நீதி உள்ளக விசாரணையின் மூலம் கிடைக்காது என்பதை இது உறுதி செய்துள்ளது எனவும் இனப்படுகொலைக்கான சர்வதேச நீதிக்கு இது மேலும் வலுச்சேர்க்கின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனிப்பட்ட ரீதியில் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்ட நீதிபதி  சரவணராஜாவிற்கான நீதியையும் நிவாரணத்தையும் வழங்குவதற்கும் நீதித்துறையில் சுயாதீனத்தன்மையினையும் நம்பகத்தைன்மையையும் உறுதி செய்வதற்குமான செயற்பாடுகள் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

https://athavannews.com/2023/1351740

 

#######################    ####################    ##################

 

தேசிய பாதுகாப்பு மீளாய்வு ஒன்று ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி உறுதி

நீதிபதியின் பதவி விலகல் தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி T சரவணராஜா பதவி விலகியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

 

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு ஜனாதிபதி இது தொடர்பில் உத்தரவு விடுத்துள்ளார்.

தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பொலிஸாருக்கு அல்லது நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு நீதவான் ஒருபோதும் அறிவிக்காத காரணத்தினால் ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கினார்.

https://athavannews.com/2023/1351734

 

####################    ##################   ################

 

நீதிபதி பதவி விலகல் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் விடுத்த கோரிக்கை

நீதிபதி பதவி விலகல் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் விடுத்த கோரிக்கை

சுதந்திரம் மற்றும் பக்கச்சார்பின்மையை உறுதி செய்வதற்காக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தனது பதவியை இராஜினாமா செய்தமை குறித்து முழுமையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் சட்டத்தரணிகள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

முல்லைத்தீவு நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் என வெளியான தகவல்கள் குறித்து கவலையடைவதாகவும் குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.

சுதந்திரம் மற்றும் பக்கச்சார்பின்மையை உறுதி செய்வதற்காகவும் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்வது அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1351760

 

####################    ####################   #################

 

பதவி விலகிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியை தொடர்பு கொள்ள முடியவில்லை

பதவி விலகிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியை தொடர்பு கொள்ள முடியவில்லை

பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவை தொடர்பு கொள்ள முடியவில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

 

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் மற்றும் இவ்விடயம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிரச்சுறுத்தல்கள் மற்றும் மிகையான அழுத்தங்கள் காரணமாகத் தனது அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகுவதாக குறிப்பிட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவியை துறந்து நாட்டைவிட்டும் வெளியேறியுள்ள நிலையில், அவரைத் தொடர்புகொள்ள முற்பட்டும், அது சாத்தியமாகவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆத்துடன், நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் கடிதம் மற்றும் அவர் கூறியதாக சமூகவலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகியுள்ள விடயங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2023/1351743

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

நீதிபதியின் இராஜினாமா நீதித்துறை சந்தித்துள்ள சவால்களை காட்டுகின்றது – அங்கஜன்

தம்பி அங்கஜன் உங்கள் அரசு தான் இதைச் செய்கிறது.

3 hours ago, தமிழ் சிறி said:

நீதிபதியின் பதவி விலகல் தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு

இவ்வளவு அச்சுறுத்தல்கள் பயமுறுத்தல்கள் நடந்தது ஐயா நாட்டில் இருக்கும் போது தான்.

இப்போ தனக்கு எதுவுமே தெரியாத மாதிரி நடித்து விசாரணை செய்யட்டாம்.

அரசால் நியமிக்கப்பட்ட எந்த விசாரணை ஒரு முடிவைக் கண்டிருக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு என்ன நடந்ததோ

அதேநிலை தான் கிழக்கு மாகாண ஆளுணருக்கும் வரும்.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.