Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

People gather with placards to take part in a 'March For Palestine', part of a pro-Palestinian national demonstration, in London

Protesters fill Trafalgar Square during a 'March For Palestine', protest

A police officer inadvertently wears an anti-Israeli sticker on his helmet#

People holding placards stop outside Downing Street during a 'March For Palestine', part of a pro-Palestinian national demonstration, in London

பிரித்தானியாவில் பிரதான நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்துப் போராட்டம். இஸ்ரேலின் பலஸ்தீன மக்கள் மீதான.. மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு எதிராக கோசம். 

https://www.aljazeera.com/news/liveblog/2023/10/13/israel-hamas-live-dozens-killed-while-fleeing-to-southern-gaza

  • Replies 1.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

P.S.பிரபா

நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

Justin

பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

valavan

அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, கிருபன் said:

நாம் இதனைப் “பொப்கோர்னை” கொறித்துக்கொண்டு வேடிக்கை பார்க்கக்கூடாத். குறைந்த பட்ச மனித நேயமுள்ள அனைவரும் ஒட்டுமொத்த பலஸ்தீன மக்களைப் பழிவாங்கும் இஸ்ரேலின் பேரழிவு தரும் தாக்குதலை எதிர்க்கவேண்டும்.

யுத்தம் சம்பந்தமான தகவல்களை பகிர்வதும். Fog of war ற்கு மத்தியில் உண்மையை தேடுவதும், அதை விவாதிப்பதும், பொப்கோன் கொறித்தல் அல்ல என்பதை நீங்கள் ஏற்பீர்கள் என நம்புகிறேன். 

முள்ளிவாய்க்கால் சமயம், இப்படி ஒரு யூத தளமோ, அரபு தளமோ எம்மை பற்றி கதைக்கவில்லை.

வெஸ்மினிஸ்டர் சதுக்கத்தில் நாம் மட்டுமே தனியே நின்றோம் இல்லையா? 10 நிமிட தூரத்தில் Edgeware Road இல் அரபிகளும், 20 நிமிட தூரத்தில் Golders Green இல் யூதர்களும் - எதுவுமே நடவாதது போல் தம் வாழ்வை தொடர்ந்தார்கள் இல்லையா?

ஆகவே இதையிட்டு சஞ்சலப்படும், அக்கறைப்படும் நாம் இப்போதும் moral high ground இல் தான்  நிற்கிறோம்.

அடிவாங்கிய இனம் என்பாதால் - அதிக ஒப்புவமைகள் இருப்பது காரணமாகலாம்.

12 minutes ago, ஈழப்பிரியன் said:

எனவே 1967 இல் அவரவர் இருந்த இடங்களுக்கு திரும்ப வேண்டும்.

👆🏼👍

————

ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹமாஸ் தலைவரை கட்டாரில் வைத்து சந்தித்தார்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

——-

வெள்ளை பொஸ்பரஸ் என ஆம்னெஸ்டி இண்டர்நேசனல் வெளியிட்ட ஆதாரம் - உண்மையில் புகை குண்டுகள் என இஸ்ரேலிய படைத்துறை மறுத்து -இதை பற்றி X தளத்தில் ஒரு சர்ச்சை ஓடுகிறது.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
1 hour ago, goshan_che said:

இடுக்கண் வருங்கால் நகுக என்றார் வள்ளுவர்.

இந்த மனித பேரவலதிலும் நக இயலுமா?

பார்த்து விட்டு சொல்லுங்கள்

 

 

 

 

ஐயனே, உது பல்லாண்டுகளுக்கு முன்னர் வெளிவந்தது... நான் பலமுறை யூரியூப்பில் கண்டிரூக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, நன்னிச் சோழன் said:

ஐயனே, உது பல்லாண்டுகளுக்கு முன்னர் வெளிவந்தது... நான் பலமுறை யூரியூப்பில் கண்டிரூக்கிறேன்

தரவு-சரி பார்தலுக்கு (fact checking) நன்றி தம்பி.

நான் பகிர்ந்த பின்னர் X உம் context சேர்த்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, விசுகு said:

எனக்கு இஸ்ரேலை ரொம்ப பிடிக்கும்.

 

அவர்களது இனப்பற்று மற்றும் ஒற்றுமை 

உலகையே ஆளும் பொருளாதார மற்றும் அறிவியல் வளர்ச்சி

இருந்தால் இப்படி இருக்கணும் என் இனம். என் தேசம். நன்றி 

இப்படி நல்ல பல உங்களுக்கு பிடித்திருப்பதால் எனக்கு உங்களை பிடிக்கும்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

ஈரானிய அரச ஊடகம் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈடுபட முன்வருமாறு ஆட்சேர்ப்பு.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, கிருபன் said:

ஹமாஸ் இஸ்ரேலுக்குள் நுழைந்து புரிந்த தாக்குதலும், சாதாரண மக்களை மிலேச்சத்தனமாகப் படுகொலை செய்ததும், குழந்தைகள் உட்பட பலரைக் கடத்தி பணயக் கைதிகளாக வைத்திருப்பதும் பலஸ்தீனர்களின் வரலாற்றில் மிகமோசமான கட்டம். ஹமாஸின் இந்த மோசமான படுகொலைகளை எவராலும் நியாயப்படுத்தமுடியாது. முக்கியமாக உரிமைகளுக்குப் போராடும் அடக்கப்பட்ட இனமான தமிழர் நாம் அடிப்படையான மனிதப் பண்புகளை எந்தக் காலகட்டத்திலும் கைவிடக்கூடாது.

இந்த வகையில் ஹமாஸ் இஸ்ரேலிய யூத மக்களை கொடூரமாகப் படுகொலை செய்ததையும், பணயக் கைதிகளாகச் சிறைபிடித்து கொடுமை செய்வதையும் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன். 

அதேவேளை, ஹமாஸின் தாக்குதலைக் காரணமாக வைத்து இஸ்ரேலிய அரசும், படைகளும் காஸாவில் நடத்தும் மிகமோசமான விமானத் தாக்குதல்கள் மூலம் பொதுமக்களை கொத்துகொத்தாகக் கொல்வதையும், குடியிருப்புக்களை தரைமட்டமாக்குவதையும், உணவு, குடிநீர், மருத்துவ உதவிகளை முற்றாக முடக்குவதையும், அதற்கும் மேலாக வடகாஸாவின் 10 லட்சத்திற்கு மேலான மக்களை 24 மணிநேரத்தில் வெளியேற உத்தரவு இட்டு மிக மோசமான அவலத்தை உருவாக்குவதையும் ஒருபோதும் ஆதரிக்கமுடியாது. இஸ்ரேலின் காஸா மீதான முற்றுகைக்கும் உள்ளே நிகழப்போகும் பேரழிவுக்கும் அமெரிக்கா, பிரித்தானியா உட்பட மேற்குநாடுகளும், கையாலாகாத ஐ.நா. சபையுமே காரணம்.

இஸ்ரேலின் “தாக்குதல் தவிர்ப்பு வலயம்” ஆன தெற்கு காஸாவும் மிகமோசமான தாக்குதலுக்கு ஆளாகும். ஹமாஸை அழித்துத் துடைக்க என்று தாக்குதலை நடாத்தும் இஸ்ரேல், காஸாவில் வாழும் ஒட்டுமொத்த பலஸ்தீனர்களை அழிக்கவும், முழுமையாக வெளியேற்றவும் இந்தத்தாக்குதலை உச்சமாகப் பாவிக்கும். நாம் இதனைப் “பொப்கோர்னை” கொறித்துக்கொண்டு வேடிக்கை பார்க்கக்கூடாத். குறைந்த பட்ச மனித நேயமுள்ள அனைவரும் ஒட்டுமொத்த பலஸ்தீன மக்களைப் பழிவாங்கும் இஸ்ரேலின் பேரழிவு தரும் தாக்குதலை எதிர்க்கவேண்டும்.

உண்மை தான்   

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, goshan_che said:

ஆனால் இதை கொப்பி அல்லாமல் inspiration எண்டு தான் சொல்லோணும் என இளையராஜா, ரெஹ்மான், தேவா எல்லாரும் சொல்லி இருக்கினம்.

விளங்கிவிட்டது இவர்கள் மூன்று பேரும் நல்லாக கொப்பி அடிப்பினம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-20231015-114039.jpg

ஆராவது இந்த தெய்வங்களை கூப்பிட்டு போங்கப்பா..😊

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹமாஸ் அமைப்பினர் குழந்தைகளின் தலையை துண்டித்த செய்தி- மன்னிப்பு கோரினார் சிஎன்என் செய்தியாளர்

Published By: RAJEEBAN

15 OCT, 2023 | 11:14 AM
image
 

ஹமாஸ் அமைப்பினர் குழந்தைகளின் தலையை துண்டித்தது குறித்த தனது செய்திக்காக சிஎன்னின் பிரபல செய்தியாளர் சரா சிட்னெர் மன்னிப்பு கோரியுள்ளார்.

ஹமாஸ் குழந்தைகளின் தலைகளை துண்டித்தது என இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தமைக்காகவே சிட்னெர் மன்னிப்பு கோரியுள்ளார்.

F8dIQGgWgAAf3zm.jpg

அவ்வாறான உணர்வுபூர்வமான மனதை வருத்தக்கூடிய செய்திகளை வெளியிடும்போது நிதானமும் எச்சரிக்கையும் துல்லியமும் அவசியம் என தெரிவித்துள்ள அவர் தன்னுடைய முன்னைய செய்தியில் தான் பொருத்தமான  வார்த்தைகளை பயன்படுத்தவில்லை என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்.

நாங்கள் நேரலையில் இருந்தவேளை ஹமாஸ் குழந்தைகளின் தலைகளை துண்டித்துள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் தெரிவித்தது என தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ள அவர் இஸ்ரேலிய அரசாங்கம் தற்போது அதனை உறுதிப்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

நான் எனது வார்த்தைகளில் மேலும் அவதானமாகஇருக்கவேண்டும் மன்னியுங்கள்  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/166887

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேலிய தரை நகர்வு இந்த வார இறுதியில் அல்லாமல், வரும் வார நடு அல்லது கடைசி பகுதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாம்.

வானிலை காரணமாக காட்டப்பட்டுள்ளது. டெல் அவிவில் நேற்று வெள்ளமாம்.

ஆனால் இல்லை - இஸ்ரேல் பயப்படுகிறது அல்லது முஸ்லிம் உலக எதிர்ப்பை கண்டு அமெரிக்கா தடுக்கிறது என வேறு வகையிலும் பலர் வியாக்கியானம் கொடுக்கிறார்கள்.

46 minutes ago, ஏராளன் said:

ஹமாஸ் அமைப்பினர் குழந்தைகளின் தலையை துண்டித்த செய்தி- மன்னிப்பு கோரினார் சிஎன்என் செய்தியாளர்

ஹமாஸ் குழந்தைகளின் தலையை கொய்யவில்லை, சுட்டுத்தான் கொன்றது என பக்கம் பக்கமாக எழுதி விவாதிக்கிறீர்கள் என்றால் - உங்கள் தார்மீக திசை காட்டி திருத்த முடியாதளவுக்கு பழுதாகி விட்டது என்றே அர்த்தம்.

(உங்கள் - பொது பன்மையாக பாவிக்கப்பட்டுள்ளது).

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த காணொலியில் நிராஜ் டேவிட கூறுவது போல் பல நூற்று கணக்கான கிலோ மீற்றர் தூரத்துக்கு அதி நவீன நில கீழ் சுரங்க பாதைகளை ஹமாஸ் அமைத்துள்ளதாக கூறப்படுவது நம்பகமானதா?  இவற்றை அமைப்பதற்கு பெருந்தொகை பணம் மாத்திரமல்ல பாரிய தொழில் நுட்பமும் அவசியம். 

 இவைகளில் சில எகிப்துவரை செல்வதகவும் கூறப்படுகிறது. இது ஊதிப  பெருப்பிக்கப்பட்ட உருட்டு செய்தியா? என்னால் இதை நம்ப முடியவில்லை.  @goshan_che நீங்கள் அதிகளவான செய்திகளை வாசிப்பவர் என்ற ரீதியில் இது சாத்தியம் என்று உணர்கின்றீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, island said:

இவைகளில் சில எகிப்துவரை செல்வதகவும் கூறப்படுகிறது. இது ஊதிப  பெருப்பிக்கப்பட்ட உருட்டு செய்தியா? என்னால் இதை நம்ப முடியவில்லை.  @goshan_che நீங்கள் அதிகளவான செய்திகளை வாசிப்பவர் என்ற ரீதியில் இது சாத்தியம் என்று உணர்கின்றீர்களா? 

இதை நான் பார்க்கவில்லை. ஆனால் காஸாவினுள் ஒரு நெடிய சுரங்க கட்டமைப்பு உள்ளதும் அது இஸ்ரேலுக்குள்குள்ளும், எகிப்துள்ளும் முன்னர் ஊடுருவியுள்ளதும் உண்மைதான். இப்படியான சுரங்கங்களை தவிர்க்க எல்லையில் இஸ்ரேல் பத்தடி ஆழத்தில் காங்ரீட் சுவர்களை அமைப்பதும் உண்டு.

அதேபோல் காசா-எகிப்து இடையான எல்லையில் பிலடெல்பியா கோடு என ஒரு சிறு பகுதியை இஸ்ரேல் கண்காணிக்கும் (எகிப்து-இஸ்ரேல் அமைதி ஒப்பந்த படி). இந்த எல்லை வழியாக ஆட்கள் மட்டும் போகவே அனுமதி (பொருட்கள் இஸ்ரேல் பக்கம் உள்ள சாவடி வழியாகவே போகலாம்). இதற்கு கீழாலும் சுரங்கம் அமைத்து எகிப்தில் இருந்து பொருட்கள் கடத்தப்பட்டதாக கூறி இஸ்ரேல் நடவடிக்கை எடுப்பதுண்டு.

இந்த சுரங்கங்களில் சிலது இஸ்ரேல் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருந்த போது அமைத்தவை.

————-

 

லெபனான்-இஸ்ரேல் எல்லையில் இஸ்ரேல் காவல் அரணில் ஹிஸ்புல்லா கொடி பறக்கிறாதாம்.

 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

https://www.facebook.com/kumaravelu.ganesan

பாலஸ்தீனத்திற்கான கரிசனையின் அதே அளவு யூதர்களுக்கான ஒரு நாட்டிற்கும் இருக்கவேணும் என்ற நோக்கில் நான் எழுத ஆரம்பித்த தொடர் இது. கடந்த 2000 வருடங்கள் எவ்வளவு முயற்சி செய்து இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்டது என்ற வரலாற்றை தொடர்ந்து எழுதி வருகின்றேன். பிரித்தானியாவும் அமெரிக்காவும் பாலஸ்தீனியர்களிடம் இருந்து பிடுங்கி யூதர்களுக்கு இஸ்ரேல் என்னும் ஒரு நாட்டை கொடுத்து விட்டன என்றது ஒரு பொய் பிரசாரம் என்பதை இத்தொடரை வாசிப்பவர்கள் விளங்கிக்கொள்ளலாம்.
யூதர்கள் வரலாறு 1-20
-----------------------------
  • Like 3
  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, goshan_che said:

@island

 

 

 

இணைப்புக்கு நன்றி கோஷான். இதிலிருந்து தெரிவது காஸாவில் இருந்து இஸ்ரேலிய இராணுவம் வெளியேறி முதற்கட்டமாக  சுயாட்சி கொண்ட பாலஸ்தீனம் உருவாக்கப்பட்டு ஏற்படுத்தப்பட்ட சமாதான இடைவெளியை  ஹமாஸ் துஷபியோகம் செய்து  யுத்த தயாரிப்புகளில் மாத்திரம் கவனம்  செலுத்தி இருக்கிறது என்று விளங்கிக்கொள்ளலாம்.  தனது சொந்த மக்களையே பலியாடுகளாக்கி தனது இராணுவ மேலாதிக்கத்தை நிலைநாட்ட ஹமாஸ் இயக்கம் முற்பட்டுள்ளது. 

சமாதான இடைவெளியை  பயன் படுத்தி தனது பிரதேசங்களை அபிவிருத்திக்கும் மேலும் சமாதான பேச்சுக்களை நடத்தி பாலஸதீனத்தில் அரசியல் ஸதிரத்தன்மையை ஏற்படுத்த  பயன் படுத்தாமல் தொடர்ந்து  யுத்த தயாரிப்புகளிலும்  இஸ்ரேலை சீண்டி யுத்தத்தை தொடர்வதுமே ஹமாஸின் நோக்கமாக இருந்துள்ளது.  மக்கள் அழிவுகளை காரணம் காட்டி உலக அனுதாபத்தை திரட்டி தமது நோக்கத்தை அடையலாம் என்பதே ஹமாசின் திட்டமாக இருந்துள்ளது. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
48 minutes ago, island said:

மக்கள் அழிவுகளை காரணம் காட்டி உலக அனுதாபத்தை திரட்டி தமது நோக்கத்தை அடையலாம் என்பதே ஹமாசின் திட்டமாக இருந்துள்ளது. 

இது கூட சரி என்று படவில்லை.

நமக்கு இரண்டு கண்களும் போனாலும் பரவாயில்லை இஸ்ரேலியர்களுக்கு ஒரு கண் போனால் போதும் என்ற மதவெறி சிந்தனை மட்டுமே. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, island said:

இணைப்புக்கு நன்றி கோஷான். இதிலிருந்து தெரிவது காஸாவில் இருந்து இஸ்ரேலிய இராணுவம் வெளியேறி முதற்கட்டமாக  சுயாட்சி கொண்ட பாலஸ்தீனம் உருவாக்கப்பட்டு ஏற்படுத்தப்பட்ட சமாதான இடைவெளியை  ஹமாஸ் துஷபியோகம் செய்து  யுத்த தயாரிப்புகளில் மாத்திரம் கவனம்  செலுத்தி இருக்கிறது என்று விளங்கிக்கொள்ளலாம்.  தனது சொந்த மக்களையே பலியாடுகளாக்கி தனது இராணுவ மேலாதிக்கத்தை நிலைநாட்ட ஹமாஸ் இயக்கம் முற்பட்டுள்ளது. 

சமாதான இடைவெளியை  பயன் படுத்தி தனது பிரதேசங்களை அபிவிருத்திக்கும் மேலும் சமாதான பேச்சுக்களை நடத்தி பாலஸதீனத்தில் அரசியல் ஸதிரத்தன்மையை ஏற்படுத்த  பயன் படுத்தாமல் தொடர்ந்து  யுத்த தயாரிப்புகளிலும்  இஸ்ரேலை சீண்டி யுத்தத்தை தொடர்வதுமே ஹமாஸின் நோக்கமாக இருந்துள்ளது.  மக்கள் அழிவுகளை காரணம் காட்டி உலக அனுதாபத்தை திரட்டி தமது நோக்கத்தை அடையலாம் என்பதே ஹமாசின் திட்டமாக இருந்துள்ளது. 

உங்கள் வியாக்கியானம் எந்தளவு தூரம் பொருத்தமானது என தெரியவில்லை.

ஹமாஸ் எப்போதும் இஸ்ரேலுடன் சமாதான உடன்படிக்கை செய்யவில்லை. எப்போதும் இஸ்ரேலை வரைபடத்தில் இருந்தே தூக்குவதே அதன் கொள்கையாக இருந்தது.

இஸ்ரேல் கூட மதச்சார்பற்ற ஃப்ட்டாவை நியாயமாக நடத்தி ஒரு அதிகாரம், போதிய நிலம் உள்ள பலஸ்தீன அதிகாரசபையை கொடுக்கவில்லை. மாறாக காலத்தை இழுத்தடித்து, முடிந்தளவு மதச்சார்பற்ற, ஆயுத வழியை கைவிட்ட தரப்புகள் மீது பலஸ்தீன மக்கள் நம்பிக்கை இழக்கும் விதமாகவே இஸ்ரேல் நடந்து கொண்டது.

காஸாவில் படை பிரசன்னம், குடியேற்றம், பொருளாதார முற்றுக்கை என காஸா மக்களை அமைதி பேச்சில் முற்றாக நம்பிக்கை இழக்க செய்தபின், தன்னிச்சையாக இஸ்ரேல் காஸாவில் இருந்து விலகியது. கமாஸ் தேர்தலில் வென்று, காஸாவில் இருந்து ஃபெட்டவை திரத்தியடித்தது.

பலஸ்தீன தரப்பில் சமாதானத்துக்கு தயாராக இருந்தோரை இஸ்ரேல் முடிந்தளவு பலவீனப்படுத்தி, அந்த வெற்றிடத்தை ஹமாஸும் பலஸ்தீனிய ஜிகாதும் நிரப்புவதை மறைமுகமாக ஊக்குவித்தது.

இந்த பிண்ணனியில்தான் காஸா நிலப்பரப்பு கமாஸின் கைக்கு போனதும் அங்கே யுத்த தயாரிப்புகள் மேற்கொள்ள பட்டதும் நிகழ்ந்தது.

பிகு

1. கமாஸ் காஸாவை கைப்பற்றியதும் எகிப்து எல்லையை அடித்து மூடியது. இடையில் அங்கே முஸ்லீம் பிரதர்ஹுட் ஆட்சி அமைத்த போது (இவர்களின் பலஸ்தீன பிரிவே ஹமாஸ் என்றாகியது) உறவுகள் மேம்பட்டன.

2. எப்படி இஸ்ரேலை மேப்பில் இருந்து அழிக்க வேண்டும் என்பது ஹமாஸ் நிலைப்பாடோ அதே போல், தமக்கு சமனான ஒரு பலஸ்தீன நாடு அமையவே கூடாது என்பது நெத்தன்யாகு போன்ற கடும்போக்கு இஸ்ரேலியரின் நிலைப்பாடும் ஆகும்.

#ஜாடிக்கேத்த மூடி

 

இன்னும் ஒரு விடயம் இஸ்ரேலின் நரித்தனத்தை விளக்க:

2007 இல் விலகிய பின் ஹமாசின் பிடியில் இருந்த காஸாவில் ஒரு துண்டு நிலத்தைதானும் இஸ்ரேல் எடுக்கவில்லை. ஆனால் மிதவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த மேற்கு கரையை மிக வேகமாக கபளீகரம் செய்தது.

இதுவும் கூட ஹமாஸ் அல்லது அழித்தொழிப்பு என்ற இரு மோசமான தெரிவுகளை மட்டும் பலஸ்தீனருக்கு கொடுக்கும் இஸ்ரேலின் நகர்வின் ஒரங்கமே.

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு முகநூல் பதிவு: 

'பாலஸ்தீனம்' என்பது, பலர் எண்ணுவது  போல, ஒரு நாடோ அல்லது தனிநாடாக விரும்பும் ஒரு பிரதேசமோ அல்லது அரேபியர்கள்  மட்டும் வாழும் ஒரு பிரதேசமோ அல்ல. 

அது புவியியல் ரீதியாக வழங்கப்பட்ட ஒரு பெயர்.  தற்போதைய இஸ்ரேல், பலஸ்தீன சுயாட்சிச்  சபைக்கு உட்பட்ட பிரதேசம், ஜோர்டான், லெபனானின் ஒரு பகுதி இவையெல்லாம் பாலஸ்தீனம் என்பதற்குள் அடங்கும். பலஸ்தீனம்  என்பது என்றும் ஒரு தனி நாடாக இருக்கவில்லை. ஆகவே அதன் எல்லைகள் என்றுமே தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால், யேசுநாதர் பிறந்த பிரதேசத்தை  அடையாளப்படுத்துவதற்கு 'பாலஸ்தீனம்' என்ற பெயர் பல நூற்றாண்டுகளாக வழங்கப்பட்டு வந்தது. கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், யூதர்கள் ஆகிய மூன்று மதத்தினரும் இதனைப் புனித பூமியாகக் கருதி வந்தனர். அதற்கும் முற்பட்ட காலத்தில் இதே பிரதேசம் இஸ்ரேல் என்றும் அழைக்கப்பட்டது. அதில் வாழ்ந்த யூதர்கள் ரோமானிய ஆக்கிரமிப்புக்குப் பின் உலகின் பல பாகங்களுக்குச் சிதறி ஓடினர். ரோமர்களின் ஆட்சிக் காலத்திலேயே இயேசு பெத்லேஹேம் நகரில் பிறந்தார். 

பிற்காலத்தில் துருக்கிய ஓட்டோமான் பேரரசு  புனித பூமியை  ஆட்சி செய்தது. ஓட்டோமான் பேரரசின் ஒரு மாகாணம் ஜெருசலேம் மாகாணமாகும். இது சிலவேளை பலஸ்தீன மாகாணம் எனவும் அழைக்கப்பட்டது.

முதலாம் உலக  யுத்தத்தின் பின், ஒட்டோமான் பேரரசு வீழ்ச்சி அடையவே, ஐரோப்பிய வல்லரசுகள்  மத்திய கிழக்கைத் தமக்குள் பங்குபோட்டுக் கொண்டன. சிரியா பிரென்ச் ஆட்சிக்கு உட்பட்டது. பலஸ்தீனமும் ஈராக்கும் பிரிட்டிஷ்  ஆட்சிக்கு உட்பட்டன. இதன்போதுதான் "பலஸ்தீன" மாகாணத்தின் எல்லைகள் முதன்  முறையாக வரையறை செய்யப்பட்டன.  இதன் எல்லைகளை படத்தில் காணலாம். ஜோர்டான், லெபனான் ஆகிய நாடுகள் அப்போது இருக்கவில்லை.

ஜெருசலேம் நகரைத்  தலைநகராகக் கொண்டு, ஜோர்டான் நதியின் இரு கரைகளிலும் பரந்து,  அது சென்று வீழும் சாக்கடலை நடுவில்  வைத்து,  அதன் இரு கரைகளிலும்  பாலைவனத்தைக்  கொண்ட பரந்த பிரதேசம் பலஸ்தீனமாக வரையறை செய்யப்பட்டது. 

இந்தப்  பிரதேசத்தில் யூதர்களின் தாயகத்தை  உருவாக்குவதற்கு அல்லது மீளமைப்பதற்கு பிரிட்டிஷார் கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்திருந்தனர்.  ஆனால் அக்காலத்தில் பாலஸ்தீன மாகாணமெங்கும் அரபுக்களே பெரும்பான்மையாக வாழ்ந்து வந்தனர்.

இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து யூதர்கள்  பெருவாரியாகப் பலஸ்தீனத்திற்குத் திரும்பினர். ஜோர்டான் நதியின் இருகரைகளையும்  உள்ளடக்கிய பரந்த பிரதேசம் பாலஸ்தீனத்தில் இருந்து  பிரிக்கப்பட்டு சவூதி அரச குடும்பத்தைச் சேர்ந்த அப்துல்லாவுக்கு  பிரிட்டிஷ் அரசினால் வழங்கப்பட்டது.  இவ்வாறு  ஜோர்டான் நாடு உருவானது. பாலஸ்தீனத்தின்  எஞ்சிய பிரதேசத்தில் யூதர்கள் தமது தனிநாட்டை  -  இஸ்ரேலை  - அமைத்துக்கொண்டனர்.  இக்காலத்தில் பாலஸ்தீனம்  என்று ஒரு நாடோ மாகாணமோ  இருக்கவில்லை.

தொடர்ந்து வந்த இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்குமான போர்களில்  இஸ்ரேல் ஜோர்டான் நதியின்  மேற்குக்கரையை ஜோர்டான் நாட்டிடம் இருந்து கைப்பற்றிக்கொண்டது. அதேபோல காஸா  பிரதேசத்தை  எகிப்திடம் இருந்து கைப்பற்றிக் கொண்டது. ஆனால் இந்தப்  பிரதேசங்களில்  அரேபிய முஸ்லிம்  மக்களே பெரும்பான்மையாக வசித்து வந்தனர். அவர்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்தனர். அவர்கள் வாழ்ந்த பிரதேசங்கள் சர்வதேசச்  சட்டப்படி இஸ்ரேலுக்குள் அடங்கமாட்டா என்பதால் அவை பாலஸ்தீனம் என்று அழைக்கப்படலாயின.  பின்பு அந்தப் பிரதேசங்களில் பாலஸ்தீனம் என்ற தனிநாட்டை அமைக்கவேண்டும் என்று வல்லரசுகள் கொள்கையளவில் இணங்கின. இந்தப் பிரதேசமே (அதாவது ஜோர்டான் நதியின் மேற்குக்கரை,  காஸா) இன்று பாலஸ்தீனம் எனப்படுகிறது. இது பிரிட்டிஷ் பலஸ்தீன  மாகாணத்தின் ஒரு சிறு பகுதி மாத்திரமே.

(மத்திய கிழக்கின் வரலாறும், புவியியலும்  அறிவோம் -  II )

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, goshan_che said:

உங்கள் வியாக்கியானம் எந்தளவு தூரம் பொருத்தமானது என தெரியவில்லை.

ஹமாஸ் எப்போதும் இஸ்ரேலுடன் சமாதான உடன்படிக்கை செய்யவில்லை. எப்போதும் இஸ்ரேலை வரைபடத்தில் இருந்தே தூக்குவதே அதன் கொள்கையாக இருந்தது.

இஸ்ரேல் கூட மதச்சார்பற்ற ஃப்ட்டாவை நியாயமாக நடத்தி ஒரு அதிகாரம், போதிய நிலம் உள்ள பலஸ்தீன அதிகாரசபையை கொடுக்கவில்லை. மாறாக காலத்தை இழுத்தடித்து, முடிந்தளவு மதச்சார்பற்ற, ஆயுத வழியை கைவிட்ட தரப்புகள் மீது பலஸ்தீன மக்கள் நம்பிக்கை இழக்கும் விதமாகவே இஸ்ரேல் நடந்து கொண்டது.

காஸாவில் படை பிரசன்னம், குடியேற்றம், பொருளாதார முற்றுக்கை என காஸா மக்களை அமைதி பேச்சில் முற்றாக நம்பிக்கை இழக்க செய்தபின், தன்னிச்சையாக இஸ்ரேல் காஸாவில் இருந்து விலகியது. கமாஸ் தேர்தலில் வென்று, காஸாவில் இருந்து ஃபெட்டவை திரத்தியடித்தது.

பலஸ்தீன தரப்பில் சமாதானத்துக்கு தயாராக இருந்தோரை இஸ்ரேல் முடிந்தளவு பலவீனப்படுத்தி, அந்த வெற்றிடத்தை ஹமாஸும் பலஸ்தீனிய ஜிகாதும் நிரப்புவதை மறைமுகமாக ஊக்குவித்தது.

இந்த பிண்ணனியில்தான் காஸா நிலப்பரப்பு கமாஸின் கைக்கு போனதும் அங்கே யுத்த தயாரிப்புகள் மேற்கொள்ள பட்டதும் நிகழ்ந்தது.

பிகு

1. கமாஸ் காஸாவை கைப்பற்றியதும் எகிப்து எல்லையை அடித்து மூடியது. இடையில் அங்கே முஸ்லீம் பிரதர்ஹுட் ஆட்சி அமைத்த போது (இவர்களின் பலஸ்தீன பிரிவே ஹமாஸ் என்றாகியது) உறவுகள் மேம்பட்டன.

2. எப்படி இஸ்ரேலை மேப்பில் இருந்து அழிக்க வேண்டும் என்பது ஹமாஸ் நிலைப்பாடோ அதே போல், தமக்கு சமனான ஒரு பலஸ்தீன நாடு அமையவே கூடாது என்பது நெத்தன்யாகு போன்ற கடும்போக்கு இஸ்ரேலியரின் நிலைப்பாடும் ஆகும்.

#ஜாடிக்கேத்த மூடி

 

இன்னும் ஒரு விடயம் இஸ்ரேலின் நரித்தனத்தை விளக்க:

2007 இல் விலகிய பின் ஹமாசின் பிடியில் இருந்த காஸாவில் ஒரு துண்டு நிலத்தைதானும் இஸ்ரேல் எடுக்கவில்லை. ஆனால் மிதவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த மேற்கு கரையை மிக வேகமாக கபளீகரம் செய்தது.

இதுவும் கூட ஹமாஸ் அல்லது அழித்தொழிப்பு என்ற இரு மோசமான தெரிவுகளை மட்டும் பலஸ்தீனருக்கு கொடுக்கும் இஸ்ரேலின் நகர்வின் ஒரங்கமே.

விரிவான தகவல்களுக்கு நன்றி. எனது கருத்து தற்போதைய வரும் செய்திகளை வைத்த ஒரு பார்வை மட்டுமே. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹமாஸூக்கு ரஷ்ய ஆயுதங்கள் கிடைத்தது எப்படி? இஸ்ரேல் போரால் புதினுக்கு என்ன லாபம்?

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இஸ்ரேல் - ஹமாஸ் தாக்குதலைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளும் முயற்சியில் ரஷ்யா இறங்கியுள்ளது.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஸ்டீவ் ரோசன்பெர்க்
  • பதவி, பிபிசி ரஷ்யா
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஒரு மறைவான மலைப்பிரதேசத்தில் மாபெரும் அதிகார பீடத்தில் அமர்ந்து உலகைக் குழப்ப முயலும் ஜேம்ஸ் பாண்ட் பாணி வில்லனாக விளாடிமிர் புதினைப் பார்க்க ஆசையாக இருக்கிறது.

அவர் ஒரு பொத்தானை அழுத்தினால் பால்கன் பகுதியில் பதற்றமும் அமைதியின்மையும் ஏற்படுகிறது.

மற்றொரு பொத்தானை அவர் அழுத்துகிறார், மத்திய கிழக்குப் பகுதியில் போர் வெடிக்கிறது.

இது கவர்ச்சியானது. ஆனால் தவறானதும் கூட. இது கிரெம்ளின் மாளிகையில் இருக்கும் தலைவரின் உலகளாவிய செல்வாக்கை மிகைப்படுத்துகிறது.

ஆம். ஹமாஸ் அமைப்புடன் ரஷ்யா தனிப்பட்ட உறவுகளைக் கொண்டுள்ளது என்பதுடன் இரானின் நெருங்கிய நட்பு நாடாகவும் மாறியுள்ளது. அமெரிக்காவின் கூற்றுப்படி, மாஸ்கோவும் டெஹ்ரானும் இப்போது முழு அளவிலான பாதுகாப்பு கூட்டாண்மையைக் கொண்டுள்ளன.

ஆனால், மாஸ்கோவிற்கு இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் நேரடித் தொடர்பு இருந்ததாகவோ அல்லது அதுபற்றி முன்கூட்டியே அறிந்திருந்ததாகவோ பொருள் கொள்ளக்கூடாது.

"ரஷ்யா எந்த வகையிலும் இந்தப் போரில் ஈடுபட்டதாக நாங்கள் நம்பவில்லை," என்று மாஸ்கோவிற்கான இஸ்ரேல் தூதர் அலெக்சாண்டர் பென் ஸ்வி, இந்த வாரம் கொம்மர்சன்ட் செய்தித்தாளிடம் கூறினார். இஸ்ரேலில் ஹமாஸ் மேற்கொண்ட கொடூரத் தாக்குதலில் ரஷ்யாவுக்கு தொடர்பு இருக்கிறது என்ற வாதம் "முழுமையான முட்டாள்த்தனம்" என்று கூறினார்.

பெர்லினில் உள்ள ஜேம்ஸ் மார்ட்டின் அணு ஆயுத பரவல் தடுப்பு கல்வி மையத்தைச் சேர்ந்த சக நாட்டவரும், ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு பகுதி குறித்த அரசியல் நிபுணருமான ஹன்னா நோட் கூறுகையில், "ஹமாஸுக்கு ரஷ்ய ஆயுதங்கள் நேரடியாக வழங்கப்பட்டதற்கான எந்த ஆதாரத்தையும் நான் காணவில்லை,” என்றார்.

“ரஷ்யாவுக்கு ஹமாஸுடன் நீண்ட கால உறவு இருப்பது உண்மைதான். ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக ரஷ்யா ஒருபோதும் அறிவிக்கவில்லை. ஹமாஸ் பிரதிநிதிகள் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் மாஸ்கோவுக்குச் சென்றிருந்தனர்.

"ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் இரான் உதவியுடன் எகிப்தின் சினாய் வழியாக காசா பகுதிக்குள் நுழைந்தன என்பதை நாங்கள் அறிந்திருந்தாலும், ஹமாஸ் அமைப்புக்கு ரஷ்யாவின் விரிவான ராணுவ ஆதரவு உள்ளது என்று நான் யூகிக்கமுடியாது," என்றார் அவர்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஜனாதிபதி புதின் "மத்திய கிழக்கு போர்" என்று குறிக்கப்பட்ட பொத்தானை அழுத்தவில்லை.

ஆனால் அவர் இந்த சண்டையைப் பயன்படுத்திக் கொள்ள தயாரா?

நிச்சயமாக. எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.

 
பிபிசி ரஷ்யா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

அடுத்த வாரம் கத்தார் செல்லும் ரஷ்ய வெளியுறவுத் துறை துணை அமைச்சர் மிகைல் போக்டனோல், ஹமாஸ் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தும் வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இஸ்ரேல் போரால் ரஷ்யாவுக்கு என்ன லாபம்?

மத்திய கிழக்கில் தற்போது ஏற்பட்டுள்ள போரின் எழுச்சி சர்வதேச அளவில் மாபெரும் செய்தியாக உருவெடுத்துள்ள நிலையில், யுக்ரேன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல் குறித்த செய்திகளில் இருந்து உலகின் கவனத்தைத் திசை திருப்ப இஸ்ரேல் தொடர்பான நிகழ்வுகளை ரஷ்யா நம்பியுள்ளது.

ஆனால் ரஷ்யா தொடர்பான செய்திகளை இருட்டடிப்பு செய்வது என்பதை விட கொஞ்சம் அதிகமாகவே ரஷ்யா இதைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது. மத்திய கிழக்கில் நடக்கும் போரின் விளைவாக, யுக்ரேனுக்கு மேற்கத்திய நாடுகள் அளிக்கும் ஆயுதங்களில் கணிசமான அளவு இஸ்ரேலை நோக்கித் திரும்பும் என்பதே ரஷ்யாவின் பெரும் நம்பிக்கையாக உள்ளது.

"இந்த நெருக்கடி யுக்ரேனுக்கு மேற்கத்திய நாடுகள் உதவும் வேகத்தை நேரடியாக பாதிக்கும் என்று நம்புகிறேன்" என்று ரஷ்ய தூதர் கான்ஸ்டான்டின் கவ்ரிலோவ் கிரெம்ளின் சார்பு இஸ்வெஸ்டியா செய்தித்தாளிடம் கூறினார்.

"யுக்ரேனுக்கு ஆயுதம் வழங்குபவர்கள் இஸ்ரேலில் நடக்கும் போர் காரணமாக திசை திரும்பும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கு மேற்குலக நாடுகள் யுக்ரேனியர்களை கைவிட்டுவிடும் என்று அர்த்தம் இல்லை. ஆனால் ராணுவ உதவியின் அளவு குறையும். இது ரஷ்யாவுக்குச் சாதகமாக மாறக்கூடும்."

ரஷ்யா விரும்பும் நிலை ஏற்படுமா? நிச்சயமாக ஏற்படும்.

நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் பேசுகையில், "நாங்கள் யுக்ரேனுக்கு ஆதரவாக நிற்பது போல், இஸ்ரேலுக்கும் ஆதரவாக நிற்க முடியும்,” என்றார்.

ஆனால் மத்திய கிழக்கில் ஒரு நீடித்த மோதல் இரண்டு தனித்தனியான போர்களில் ஒரே நேரத்தில் இரண்டு நட்பு நாடுகளை ஆதரிக்கும் அமெரிக்காவின் திறனை சோதிக்கும் விதத்திலேயே இருக்கும்.

ரஷ்யா தன்னை ஒரு சமாதான நாடாக தன்னை வடிவமைத்துக் கொள்வதன் மூலம் மத்திய கிழக்கில் தனது பங்கை அதிகரிக்க முயற்சிக்கிறது.

இந்த பிராந்தியத்தில் நடக்கும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கடந்தகால சர்வதேச முயற்சிகளில் இணைவதற்கு முன்னர் அது அதே மாதிரியான ஒரு நிலையை எடுத்திருந்தது.

"போரை முடிவுக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகளில் ரஷ்யா ஒரு பங்கை வகிக்க முடியும்" என்று அதிபர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார். "நாங்கள் போரில் ஈடுபட்டுள்ளவர்களை தொடர்புகொண்டு வருகிறோம்."

இந்த வாரம் மாஸ்கோவிற்கு வந்திருந்த இராக் பிரதமர், மத்திய கிழக்கில் "உண்மையான போர் நிறுத்தத்திற்கான முன்முயற்சியை" அறிவிக்குமாறு அதிபர் புதினுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

சமாதானம் செய்யும் நாடாக ரஷ்யா மாறுமா? அது கடினமான ஒரு விஷயம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, அண்டை நாடு மீது முழு அளவில் தாக்குதலை நடத்திவரும் நாடு இது. ஏறக்குறைய 20 மாதங்களுக்குப் பிறகு, யுக்ரேனில் ரஷ்யாவின் போர் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அளவில் மரணத்தையும் அழிவையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு உங்களால் முடியும் என்று கூறுவதால் மட்டுமே, மோதலில் ஈடுபடுபவர்கள் உங்களை ஒரு மத்தியஸ்தராக ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்கு உத்தரவாதமும் கிடைத்துவிடாது.

மாஸ்கோ நீண்ட காலமாக மத்திய கிழக்கு பிராந்தியம் குறித்த ஒரு ஆர்வத்தை வைத்துக்கொண்டே இருக்கிறது. இஸ்ரேல் அமெரிக்காவுடன் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்தியதால் சோவியத் யூனியன் அரபு சார்பு நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டது.

சோவியத் யூனியனின் முடிவுக்குப் பிறகு, முன்னாள் சோவியத் குடியரசுகளில் இருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான யூதர்கள் இஸ்ரேலுக்கு வந்ததன் காரணமாக, இஸ்ரேலுடனான ரஷ்யாவின் உறவுகள் மேம்பட்டன.

ஆனால் அண்மைக்காலமாக விளாடிமிர் புதினின் ரஷ்யா, இஸ்ரேலின் எதிரிகளுடன், குறிப்பாக இரானுடன் நெருக்கமாகி விட்டது. இது ரஷ்ய-இஸ்ரேல் உறவுகளில் ஒரு விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

 
பிபிசி ரஷ்யா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் தான் மத்தியஸ்தம் செய்யமுடியும் என ரஷ்யா கூறுகிறது.

அமெரிக்காவைக் கண்டிக்கும் ரஷ்யா

அமெரிக்காவைக் குற்றம் சாட்டி ஏற்கனவே ரஷ்யா நிறைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதைப் போலவே இங்கேயும் ஏதாவது செய்ய முடியுமா என்ற வாய்ப்பை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பின்னர், விளாடிமிர் புதினின் மையச் செய்தி என்னவென்றால், "மத்திய கிழக்கில் அமெரிக்காவின் கொள்கையின் தோல்விக்கு இது ஒரு எடுத்துக்காட்டு," என்பதே ஆகும்.

"அமெரிக்காவின் மேலாதிக்கம்" என்று எப்போதும் குறைகூறும் ரஷ்யாவின் பொதுவான வாதத்துக்கு இது நன்றாகப் பொருந்துகிறது.

மத்திய கிழக்கில் அமெரிக்காவை மையக் குற்றவாளியாகக் கட்டமைப்பது, அமெரிக்காவின் செலவில் அப்பகுதியில் ரஷ்யாவின் நிலைப்பாட்டை உயர்த்துவதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போருக்கும் அமெரிக்கா தான் காரணம் என அந்நாட்டை ஒரு மையக் குற்றவாளியாகக் கட்டமைப்பதில் ரஷ்யாவிற்கு கிடைக்கக் கூடிய நன்மைகளைப் பற்றி இதுவரை நான் பேசினேன். ஆனால் அங்கே ஆபத்துகளும் உள்ளன.

"கவனமாக அளவிடப்பட்ட உறுதியற்ற தன்மைதான் ரஷ்யாவிற்குச் சிறப்பாகச் சேவை செய்கிறது" என்று ஹன்னா நோட் நம்புகிறார்.

"இந்த நெருக்கடி யுக்ரேனில் இருந்து உலகின் கவனத்தைத் திசை திருப்பினால் - அமெரிக்க உள்நாட்டு அரசியல் சூழலில் இஸ்ரேலின் முக்கியத்துவத்தைப் பொருத்தவரை, அதற்கு உண்மையான ஆபத்து உள்ளது - ஆம், ரஷ்யா ஒரு குறுகிய கால பயனாளியாக இருக்கலாம்."

ஆனால் ஹமாஸுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதி வழங்கும் இரான் உட்பட பரந்த பிராந்தியத்தை ஈர்க்கும் போரினால் ரஷ்யா பயனடையாது என்று நோட் கூறுகிறார்.

"இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையே ஒரு முழுமையான போரை ரஷ்யா விரும்பவில்லை. விஷயங்கள் அதை நோக்கி நகர்ந்து, அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டால், ரஷ்யா இரானின் பக்கம் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால், அதை ரஷ்யா விரும்புகிறதா என்று எனக்குத் தெரியவில்லை.”

"இஸ்ரேலுடனான தனது உறவுகளை புதின் இன்னும் மதிக்கிறார் என்று நான் நினைக்கிறேன். ரஷ்ய ராஜதந்திரம், இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் இடத்துக்குச் செல்ல விரும்புகிறது என்று நான் நினைக்கவில்லை. ஆனால் இந்த மோதல் எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ, அந்த அளவுக்கு அழுத்தத்தை அவர்கள் உணரக்கூடும்."

https://www.bbc.com/tamil/articles/c2l3p11jkd0o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

400 மில்லியன் டாலர் பெறுமதியான ஆயுதங்களை 

உக்கிரேன் கமாசுக்கு விற்றுவிட்டார்களாம்.

வசந்தியா?வதந்தியா?




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.