Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

400 மில்லியன் டாலர் பெறுமதியான ஆயுதங்களை 

உக்கிரேன் கமாசுக்கு விற்றுவிட்டார்களாம்.

வசந்தியா?வதந்தியா?

வழமையாக "தர்மத்தின் தலைவன்😎" புரினின் ஆதரவாளர்கள் பரப்பும் போலிச் செய்திகளில் ஒன்று. இதைப் போன வாரமே "தகவல் சோதிக்கும்" அமைப்புகள் பொய்யென்று அறிவித்து விட்டன.

https://apnews.com/article/fact-check-misinformation-weapons-israel-hamas-draft-5a12af9e78e5cbd42d74b026cb4e566c

https://www.verifythis.com/article/news/verify/israel-hamas-war/bbc-ukraine-hamas-video-fake-fact-check/536-ab186ea2-4907-4ad0-8db8-7969dded6d85

  • Replies 1.5k
  • Views 157.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

  • பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

  • அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசா மோதல் தொடர்ந்தால் தலையிடவேண்டியிருக்கும் ஈரான் இஸ்ரேலிற்கு கடும் எச்சரிக்கை

Published By: RAJEEBAN

15 OCT, 2023 | 04:06 PM
image
 

இஸ்ரேல் காசாவில் தரைநடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஈரான் ஐநா ஊடாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹமாஸ் இஸ்ரேல் மோதல் மேலும் விரிவடைவதை விரும்பவில்லை என தெரிவித்துள்ள ஈரான் காசாவில் மோதல்கள் தொடர்ந்தால் தலையிடவேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளது.

இராஜதந்திர வட்டாரங்கள் இதனை தெரிவித்துள்ளன.

ஈரான் ஹமாஸ் இஸ்ரேல் மோதலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டால் அது பிராந்திய மோதலாக வெடிக்கும் ஆபத்துள்ளது.

ஈரான் நேரடியாக இதில் தலையிடலாம் அல்லது சிரியாவில் ஆயுதகுழு ஊடாகவோ அல்லது ஹெஸ்புல்லா அமைப்பை ஆதரிப்பதன் மூலமோ தலையிடலாம்.

ஈரானும் ஹெஸ்புல்லா அமைப்பும் ஹமாஸ் இஸ்ரேல் மோதலில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வதை தவிர்ப்பதற்கான முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது -இந்த நோக்கத்துடன் வளைகுடாவிற்கு கப்பல்களையும் விமானங்களையும் அமெரிக்கா அனுப்பிவருகின்றது.

https://www.virakesari.lk/article/166916

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போரில் அடுத்த டுவிஸ்ட்! இனி தான் அதிர்ச்சி காத்திருக்கிறது _Fr ஜெகத் கஸ்பார் பேட்டி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசா: பூமிக்கடியில் 500 கி.மீ. நீள சுரங்கப்பாதை நெட்வொர்க் - இஸ்ரேலால் முற்றிலும் அழிக்க முடியுமா?

இஸ்ரேல், பாலத்தீனம், காசா, ஹமாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், டேவிட் கிரிட்டன்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 13 அக்டோபர் 2023
    புதுப்பிக்கப்பட்டது 55 நிமிடங்களுக்கு முன்னர்

கடந்த சனிக்கிழமையன்று (அக்டோபர் 7) ஹமாஸ் குழுவின் எல்லை தாண்டிய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸ் இயக்கத்தினரால் காசா பகுதிக்குக் கீழே ரகசியமாக பூமிக்கு அடியில் அமைக்கப்பட்ட சுரங்க அறைகளில் சில பகுதிகளைத் தாக்குவதாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது.

இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ஜோனதன் கான்ரிகஸ், இந்த ரகசிய நிலத்தடி சுரங்கப்பாதைகளின் நெட்வொர்க் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கட்டப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்று கூறினார்.

“இருபது ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி ஹமாஸின் கட்டுப்பாட்டிற்குள் வந்தபோது, அவர்கள் காசா நகரத்திலிருந்து தெற்கில் இருக்கும் கான் யூனிஸ் மற்றும் ராஃபா வரை இந்த சுரங்க கட்டமைப்புகளை அமைத்தனர்,” என்றார் அவர்.

மேலும், காசா, இரண்டு அடுக்குகளால் ஆன பகுதி. ஒன்று தரைக்கு மேல் பொது மக்களுக்கானது, மற்றொன்று நிலத்தடியில் ஹமாஸ் குழுவினருக்கானது என்றார்.

 

500 கி.மீ. நீள சுரங்கப்பாதை நெட்வொர்க்

ஹமாஸ் குழுவின் நிலத்தடிச் சுரங்கப்பாதைகளைக் குறிவைத்து தகர்க்கும் இஸ்ரேல்

அவர் மேலும் கூறுகையில், "இந்த சுரங்கப்பாதைகள் இவை காசா குடிமக்களுக்கான பதுங்கு குழிகள் அல்ல என்றும், ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக்குழுவினர் தொடர்ந்து இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசவும், தாக்குதல்களைத் திட்டமிடவும் பயன்படுத்தும் கட்டுமானங்கள்," என்று கூறினார்.

இஸ்ரேலால் ‘காசா மெட்ரோ’ என்றழைக்கப்படும் இந்த சுரங்க கட்டமைப்பின் பரப்பை மதிப்பிடுவது மிகவும் கடினம். ஏனெனில் இது 41 கி.மீ. நீளமும் 10 கி.மீ. அகலமும் மட்டுமே கொண்ட ஒரு பகுதியின் அடியில் பரந்திருப்பதாக நம்பப்படுகிறது.

கடந்த 2021ஆம் ஆண்டில் நடந்த ஒரு மோதலைத் தொடர்ந்து, வான்வழித் தாக்குதல்களில் 100 கிலோமீட்டருக்கும் அதிகமான சுரங்க அறைகள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் கூறின. ஆனால், ஹமாஸ் தனது சுரங்கப்பாதை நெட்வொர்க் 500 கி.மீ. நீளம் கொண்டதாகவும், அவற்றில் 5% மட்டுமே தாக்கப்பட்டதாகவும் கூறியது.

 
இஸ்ரேல், பாலத்தீனம், காசா, ஹமாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

காசா பகுதியில் இருக்கும் இந்த சுரங்க கட்டமைப்புகள் பூமிக்குக் கீழே 100 அடி ஆழத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது.

இந்த சுரங்க அறைகள் எப்போது கட்டப்பட்டன? எதற்குப் பயன்பட்டன?

கடந்த 2005ஆம் ஆண்டு இஸ்ரேல் காசாவிலிருந்து தனது படைகள் மற்றும் குடியேறியவர்களை திரும்பப் பெறுவதற்கு முன்பு காசாவில் சுரங்கப்பாதை கட்டுமானத்தைத் தொடங்கியது.

ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஹமாஸ் அப்பகுதியைக் கைப்பற்றியதும் இந்த சுரங்க அறைகள் மேம்படுத்தப்பட்டன. இதனால் இஸ்ரேலும் எகிப்தும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மக்கள் அதன் வழியாகச் சென்று வருவதையும் பொருட்களைக் கொண்டு செல்வதையும் கட்டுப்படுத்தின.

இந்த சுரங்கங்களின் செயல்பாடு உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், கிட்டத்தட்ட 2,500 சுரங்க கட்டமைப்புகள் ஹமாஸ் மற்றும் பிற குழுக்களால், வணிகப் பொருட்கள், எரிபொருள், மற்றும் ஆயுதங்களைக் கடத்தப் பயன்படுத்தப்பட்டன.

கடந்த 2010ஆம் ஆண்டில் இஸ்ரேல் எல்லைகளைக் கடந்து பொருட்கள் காசாவிற்குள் கொண்டு செல்லப்பட அனுமதித்த பிறகு, கடத்தலுக்கான தேவையும் குறைந்துவிட்டது. சுரங்கப்பாதைகளில் தண்ணீரைச் செலுத்தியும் அவற்றைத் தகர்த்தும் எகிப்து கடத்தலைக் கட்டுப்படுத்தியது.

தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்படும் சுரங்க கட்டமைப்புகள்

இதைத்தொடர்ந்து, ஹமாஸும் பிற குழுக்களும் இஸ்ரேலிய படைகளைத் தாக்குவதற்காக இந்த சுரங்கங்களைத் தோண்டத் தொடங்கின.

ஆயுதமேந்தியப் போராளிகள் 2006ஆம் ஆண்டில், இஸ்ரேலுடனான எல்லைக்கு அடியில் இருந்த ஒரு சுரங்கத்தைப் பயன்படுத்தி இரண்டு இஸ்ரேலிய வீரர்களைக் கொன்றனர். மேலும் மற்றொரு வீரரைக் கைப்பற்றி, அவரை ஐந்து ஆண்டுள் சிறைபிடித்து வைத்திருந்தனர்.

மேலும், 2013ஆம் ஆண்டில், இஸ்ரேலிய குடியிருப்புப் பகுதி ஒன்றில் விசித்திரமான ஒலிகள் கேட்டதையடுத்து, அதைச் சோதித்த இஸ்ரேலிய பாதுகாப்புக் குழுவினர், அங்கு 1.6 கி.மீ. நீளமும், 18 மீட்டர் ஆழமும் கொண்ட சுரங்கப்பாதையைக் கண்டுபிடித்தனர். அது கான்கிரீட் கூரை மற்றும் கான்கிரீட் சுவர்களைக் கொண்டிருந்தது.

அதற்கு அடுத்த ஆண்டு, காசாவின்மீது ஒரு பெரிய வான் மற்றும் தரைவழித் தாக்குதலை நடத்த, இத்தகைய ‘பயங்கர சுரங்கங்களின்’ மூலம் நடத்தப்படும் தாக்குதல்களைக் கட்டுப்படுத்துவதைக் காரணமாகச் சொன்னது இஸ்ரேல்.

போரின்போது 30க்கும் மேற்பட்ட சுரங்கங்களை அழித்ததாக இஸ்ரேல் கூறியது. ஆனால் ஒரு போராளிக் குழுவும் ஒரு சுரங்கப்பாதையைப் பயன்படுத்தி நான்கு இஸ்ரேலிய வீரர்களைக் கொன்றனர்.

 

அனைத்து வசதிகளையும் கொண்ட சுரங்க கட்டமைப்புகள்

ஹமாஸ் குழுவின் நிலத்தடிச் சுரங்கப்பாதைகளைக் குறிவைத்து தகர்க்கும் இஸ்ரேல்

எல்லைகளைக் கடந்து இஸ்ரேலுக்குள் செல்லும் சுரங்கப் பாதைகள் தற்காலிகமானவை. அவை அவ்வப்போது இஸ்ரேலின் பகுதிகளைக் கைப்பற்றவே கட்டமைக்கப்படுகின்றன. ஆனால், "காசா பகுதியில் இருக்கும் சுரங்கங்கள் அதிக நாட்களுக்குத் தங்கும் வகையிலான வசதிகளோடு கட்டப்பட்டிருக்கின்றன," என்கிறார் இஸ்ரேலின் ரெய்க்மன் பல்கலைக்கழகத்தில் நிலத்தடிப் போர்முறைகள் குறித்த வல்லுநராக இருக்கும் டாஃப்னே ரீஷ்மண்ட்-பராக்.

“ஹமாஸின் தலைவர்கள் இந்த சுரங்கங்களில் பதுங்கியுள்ளனர். அங்கு அவர்கள் கட்டுப்பாட்டு மையங்களை நிறுவியுள்ளனர். அங்கு மின்சாரம், மின்விளக்குகள், மற்றும் தண்டவாளங்கள் உள்ளன. அதற்குள் வசதியாக நிற்கவும் நகரவும் முடியும்,” என்கிறார் ரீஷ்மண்ட்-பராக்.

ஹமாஸ் குழுவினர், சிரியாவின் போராளிக் குழுக்கள், மற்றும் ஐ.எஸ் குழுவினர் ஆகியோரின் முறைகளைப் பார்த்து தங்கள் சுரங்கக் கட்டுமான உத்திகளை மேம்படுத்திக்கொண்டதாக அவர் கூறுகிறார்.

இந்த சுரங்கங்கள் எப்படி கட்டப்பட்டன?

காசா பகுதியில் இருக்கும் சுரங்கங்கள் பூமிக்குக் கீழே 100 அடி ஆழத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது.

அவை கண்டறியப்படுவதைத் தவிர்க்கும் வகையில் அவற்றின் நுழைவாயில்கள் வீடுகள், மசூதிகள், பள்ளிகள் மற்றும் பிற பொதுக் கட்டடங்களுக்கு அடியில் அமைந்திருக்கின்றன.

காசாவிற்கு உதவியாக வழங்கப்பட்ட மில்லியன் கணக்கான டாலர்களை இந்தச் சுரங்கங்களை அமைக்க ஹமாஸ் அமைப்பு மக்களிடமிருந்து பெற்றதாக இஸ்ரேலிய ராணுவம் குற்றம் சாட்டுகிறது. முந்தைய போர்களில் சேதமடைந்த வீடுகளை மீண்டும் கட்டுவதற்காகக் கொடுக்கப்பட்டப் பல்லாயிரக்கணக்கான டன் சிமெண்டை பயன்படுத்தி இந்தச் சுரங்கங்கள் கட்டப்பட்டதாகவும் குற்றம் சாட்டுகிறது.

 
ஹமாஸ் குழுவின் நிலத்தடிச் சுரங்கப்பாதைகளைக் குறிவைத்து தகர்க்கும் இஸ்ரேல்

கடந்த சனிக்கிழமை நடந்த தாக்குதல்களின்போது ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் எல்லை தாண்டிய சுரங்கப்பாதை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பல பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட இஸ்ரேலின் கஃபார் ஆசா பகுதிக்கு அருகே ஒரு சுரங்கப்பாதையின் வெளியேறும் வழி கண்டுபிடிக்கப்பட்டதாக சில செய்தியறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அது உறுதி செய்யப்பட்டால், 2021ஆம் ஆண்டின் இறுதியில் இஸ்ரேல் நிறுவி முடித்த, சுரங்கப்பாதைகளைக் கண்டறியும் அதிநவீன சென்சார்கள் பதிக்கப்பட்ட நிலத்தடி கான்கிரீட் தடுப்புக்கு அடியில் இந்த சுரங்கப்பாதை கட்டப்பட்டிருக்க வேண்டும்.

இது உறுதிசெய்யப்பட்டால், பேரதிர்ச்சியாக இருக்கும் என்று ரீஷ்மண்ட்-பராக் கூறுகிறார். எந்த சுரங்கப்பாதை கண்டறியும் அமைப்பும் முழுமையானது அல்ல என்று அவர் கூறிகிறார்.

"அதனால்தான் சுரங்கப்பாதைகள் பண்டைய காலங்களில் இருந்தே போர்களில் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை முற்றிலுமாகத் தடுக்க வழி இல்லை," என்கிறார் அவர்.

இந்த சுரங்கங்களை முற்றிலுமாக அழிக்க முடியுமா?

மேலும் பேசிய ரீஷ்மண்ட்-பராக், இந்த சுரங்கங்களை முற்றிலும் அழிப்பது சாத்தியப்படாது என்கிறார்.

“சில பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற மாட்டார்கள். சில சுரங்கங்கள் எங்கிருக்கின்றன என்பதே தெரியாது. மேலும் சில பகுதிகளை அழிப்பது மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார் அவர்.

இவற்றை அழிப்பது, இஸ்ரேல் ராணுவம், பணயக் கைதிகள், பாலத்தீன மக்கள் ஆகிய முத்தரப்பிலும் பல மரணங்களை ஏற்படுத்தும் என்கிறார் அவர்.

இஸ்ரேல், பாலத்தீனம், காசா, ஹமாஸ்

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு,

2021ஆம் ஆண்டு இஸ்ரேல் காசாவிலிருக்கும் சுரங்கப் பாதைகளைக் குறிவைத்து நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் தங்கும் மூன்று கட்டடங்களின் அஸ்திவாரம் இடிந்து 42 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் தாக்குதல் நடத்தினால், ஹமாஸ் குழு, பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தும், பணயக் கைதிகளை சுரங்கப் பாதைகளுக்குள் அனுப்பி வைக்கும் என்கிறார் அவர்.

கடந்த 2021ஆம் ஆண்டு இஸ்ரேல் காசாவில் இருக்கும் சுரங்கப் பாதைகளைக் குறிவைத்து நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் தங்கும் மூன்று கட்டடங்களின் அஸ்திவாரம் இடிந்து 42 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சுரங்கங்கள் எவ்வளவு ஆபத்தானவை?

மேலும், இந்தச் சுரங்கங்களுக்குள் செல்வது மிகவும் ஆபத்தானதாகவும் அமையக்கூடும் என்கிறார் ரீஷ்மண்ட்-பராக்.

ஹமாஸ் குழுவினர், மொத்த சுரங்கப்பாதை நெட்வொர்க்கிலும் வெடிகளை வைக்கலாம், என்கிறார் அவர். “அவற்றில் இஸ்ரேலிய ராணுவத்தினரை நுழையவிட்ட பிறகு அதை வெடிக்க வைக்கலாம்.”

இல்லையேல், ஹமாஸ் குழுவினர் பதுங்கியிருந்து இஸ்ரேலியப் படையினரைச் சிறைபிடிக்கலாம் அல்லது இஸ்ரேலிய வீரர்களுக்கு ஆக்சிஜன் இல்லாமல் போகலாம், என்கிறார்.

சுரங்கத்துக்குள் செல்லாமல், கண்ணுக்குத் தெரியாத அவற்றை தரைக்கு மேலிருந்துச் சுற்றி வளைப்பதும் சிக்கலானது என்கிறார் அவர்.

ஆனால், இஸ்ரேல் ராணுவம் வேறு வகையான உத்திகளைப் பின்பற்றலாம், என்கிறார் சூஃபான் பாதுகாப்பு ஆலோசனை மையத்தின் இயக்குநரான காலின் க்ளார்க். உதாரணத்திற்கு டிரோன்கள் அல்லது ஆளில்லா வாகனங்களை அனுப்பி இந்தச் சுரங்கங்கள் அமைந்துள்ள இடங்களையும், அங்கிருக்கும் வெடிகுண்டுகளையும் கண்டறியலாம், என்கிறார் அவர்.

பூமியைத் துளைத்துச் சென்று பங்கர் சுரங்கங்களைத் தாக்கும் குண்டுகளையும் இஸ்ரேல் பயன்படுத்தாலாம். ஆனால் அவை கட்டுமானங்கள் நிறைந்த காசா பகுதியில் பெருமளவில் சேதத்தை விளைவிக்கும்.

https://www.bbc.com/tamil/articles/cn3927d12lmo

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

வழமையாக "தர்மத்தின் தலைவன்😎" புரினின் ஆதரவாளர்கள் பரப்பும் போலிச் செய்திகளில் ஒன்று. இதைப் போன வாரமே "தகவல் சோதிக்கும்" அமைப்புகள் பொய்யென்று அறிவித்து விட்டன.

https://apnews.com/article/fact-check-misinformation-weapons-israel-hamas-draft-5a12af9e78e5cbd42d74b026cb4e566c

https://www.verifythis.com/article/news/verify/israel-hamas-war/bbc-ukraine-hamas-video-fake-fact-check/536-ab186ea2-4907-4ad0-8db8-7969dded6d85

தகவலுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

 

ஹமாசை கைவிட்டதா ஈரான்?

ஈரானை,  ஈரானின் நலன்களை, குடிகளை, இஸ்ரேல் தாக்காது விடின், இஸ்ரேலுடன் நாம் மோதலுக்கு போக போவதில்லை என ஐநாவில் இயங்கும் ஈரான் தூதரகம் அறிவித்துள்ளதாம்.

இது ஈரான் ஹமாஸை கைவிட்டு விலகுவதை காட்டுகிறதா அல்லது பதுங்கி பாயும் உத்தியா எனத் தெரியவில்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

 

ஹமாசை கைவிட்டதா ஈரான்?

ஈரானை,  ஈரானின் நலன்களை, குடிகளை, இஸ்ரேல் தாக்காது விடின், இஸ்ரேலுடன் நாம் மோதலுக்கு போக போவதில்லை என ஐநாவில் இயங்கும் ஈரான் தூதரகம் அறிவித்துள்ளதாம்.

இது ஈரான் ஹமாஸை கைவிட்டு விலகுவதை காட்டுகிறதா அல்லது பதுங்கி பாயும் உத்தியா எனத் தெரியவில்லை.

இரான் நம்பத்தகுந்த நாடல்ல. அது பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு பயங்கரவாத நாடு. இப்போதும் ரஷ்ய பயங்கரவாதத்தை ஆதரித்துக்கொண்டுள்ள நாடு. ஹாமாஸ் பயங்கரவாதிகளுக்கு உதவுவதை அது ஒரு போதும் நிறுத்தாது!

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய நிலவரம் போர் ஏற்பாடுகளை நேரடி ஒளிபரப்பு செய்கிறார்கள் 

 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, புலவர் said:

பிரித்தானியாவும் அமெரிக்காவும் பாலஸ்தீனியர்களிடம் இருந்து பிடுங்கி யூதர்களுக்கு இஸ்ரேல் என்னும் ஒரு நாட்டை கொடுத்து விட்டன என்றது ஒரு பொய் பிரசாரம் என்பதை இத்தொடரை வாசிப்பவர்கள் விளங்கிக்கொள்ளலாம்.

இந்த  தவறை தானே  இலங்கை தமிழர்களில் சிலரும் திருப்பி திருப்பி சொல்லி கொண்டிருக்கிறர்கள் 
பாரி சாலன் என்பவர் மேலே வீடியோவில் அடிச்சுவிடுகிறார்😂 பாலஸ்தீனர்களுடன் வேலை பார்த்த எல்லா தமிழர்களுக்கும்  தெரியும் மோசமான அவர்களை பற்றி .

9 hours ago, வாலி said:

இரான் நம்பத்தகுந்த நாடல்ல. அது பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு பயங்கரவாத நாடு. இப்போதும் ரஷ்ய பயங்கரவாதத்தை ஆதரித்துக்கொண்டுள்ள நாடு. ஹாமாஸ் பயங்கரவாதிகளுக்கு உதவுவதை அது ஒரு போதும் நிறுத்தாது!

நூறுவீதம் உண்மை.
ஈரான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு பயங்கரவாத நாடு.பயங்கரவாதிகளுக்கு உதவுவதை அது ஒரு போதும் நிறுத்தாது

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

இரான் நம்பத்தகுந்த நாடல்ல. அது பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு பயங்கரவாத நாடு. இப்போதும் ரஷ்ய பயங்கரவாதத்தை ஆதரித்துக்கொண்டுள்ள நாடு. ஹாமாஸ் பயங்கரவாதிகளுக்கு உதவுவதை அது ஒரு போதும் நிறுத்தாது!

நானும் அப்படியே நினைக்கிறேன்.

அண்மை வரை கூட ஈரானிய வெளிவிவகார அமைச்சர் கடும் தொனியில் கதைத்தார்.

அத்தோடு இஸ்ரேல் டமாஸ்கஸ், அலெப்போ விமான தளங்களை குண்டு வீசி தாக்கியதால், இப்போ ஈரான் வழியாகவே சிரிய-இஸ்ரேல் எல்லை க்கு விநியோகம் நடக்கிறதாக சொல்கிறார்கள்.

———

காஸாவின் வைத்தியசாலைகளில் எரி பொருட்கையிருப்பு இன்னும் 24 மணி நேரத்துக்கு மட்டுமே.

-ஐ நா-

  • கருத்துக்கள உறவுகள்

2008 - 2009 காலப்பகுதியில் வன்னிக்குச் செல்லவேண்டிய  உணவு உட்பட அத்தியாவசியப் பொருட்கள், எரிபொருள், மருந்துகள் என்பவற்றை தடுத்து தமிழர்களைப் பட்டினி நிலைமைக்குக் கொண்டுவந்து அவர்களின் போரிடும் மனத்திடத்தை உடைத்து இலகுவாக ஆக்கிரமிக்கலாம் என்று மகிந்த நினைத்துச் செயற்பட்டான். மேலும் சுமார் 420,000 தமிழர்களின் எண்ணிக்கையினை வேண்டுமென்றே 70,000 என்று காண்பித்து தனது படுகொலைகளை மறைக்கவும், அனுப்பவேண்டிய உணவைக் குறைக்கவும் அவன் முடிவெடுத்துச் செயற்பட்டான்.

இன்று காஸாவில் நடப்பது கிட்டத்தட்ட அதுதான். ஒரே வித்தியாசம் 2.3 மில்லியன் மக்களுக்கான மருந்து, உணவு, எரிபொருள் என்று அனைத்தையுமே இஸ்ரேல் தடைசெய்திருக்கிறது. மக்கள் பாதுகாப்பாக வெளியேற பாதைகளையும் அது விட்டுவைக்கவில்லை. தப்பியோடும் மக்கள் மீதும் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. 

இந்த உலகு மனிதநேயத்தின்பாற் செயற்படுவதில்லை என்பதை மீண்டும் ஒருமுறை பலஸ்த்தீனர்களின் அவலம் உறுதிப்படுத்தியிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாலி said:

அது பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு பயங்கரவாத நாடு.

பயங்கரவாதத்தை ஊக்குவிக்காத பெரிய நாடுகளோ வல்லரசு நாடுகளோ இருக்கின்றதா?

2 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஈரான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு பயங்கரவாத நாடு.பயங்கரவாதிகளுக்கு உதவுவதை அது ஒரு போதும் நிறுத்தாது

பயங்கரவாதத்தை ஊக்குவிக்காத நாடு ஏதாவது இருந்தா தெரியப்படுத்துங்க பிளீஸ்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஈழப்பிரியன் said:

பயங்கரவாதத்தை ஊக்குவிக்காத பெரிய நாடுகளோ வல்லரசு நாடுகளோ இருக்கின்றதா?

தெரிஞ்சு என்னசெய்யப் போகிறீர்கள்? சகல சௌபாக்கியங்களுடன் செல்வச்செழிப்புடன் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட சகல சுதந்திரங்களுடனும் நீங்கள் வாழும் பயங்கரவாத நாடுகளிலிருந்து உடனே இவ்வாறான நாடுகளுக்குப்போய் வாழப்போகிறீர்களா?

 

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

 

May be pop art of text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென்காசாவில் யுத்தநிறுத்தம்- அமெரிக்கா இஸ்ரேல் எகிப்து இணக்கம்

16 OCT, 2023 | 11:50 AM
image

அமெரிக்கா இஸ்ரேல் எகிப்து  ஆகிய நாடுகள் தென்காசாவில் யுத்தநிறுத்தமொன்றிற்கு இணங்கியுள்ளன.

எகிப்திய வட்டாரங்கள் இதனை ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளன.

எகிப்திய இஸ்ரேல் எல்லையில் உள்ள ரபா எல்லை பாதையை திறக்கவுள்ளதாகவும்  செய்திகள் வெளியாகியுள்ளன.

https://www.virakesari.lk/article/166960

  • கருத்துக்கள உறவுகள்

காசாவிலிருந்து  வெளியேறும் பாலஸ்தீனர்களை  அல்ஜசீரா நடத்தும் காட்டார்  உட்பட முஸ்லிம் நாடுகள்  உள்ளே அனுமதிக்க தயாராக இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

தென்காசாவில் யுத்தநிறுத்தம்- அமெரிக்கா இஸ்ரேல் எகிப்து இணக்கம்

16 OCT, 2023 | 11:50 AM
image

அமெரிக்கா இஸ்ரேல் எகிப்து  ஆகிய நாடுகள் தென்காசாவில் யுத்தநிறுத்தமொன்றிற்கு இணங்கியுள்ளன.

எகிப்திய வட்டாரங்கள் இதனை ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளன.

எகிப்திய இஸ்ரேல் எல்லையில் உள்ள ரபா எல்லை பாதையை திறக்கவுள்ளதாகவும்  செய்திகள் வெளியாகியுள்ளன.

https://www.virakesari.lk/article/166960

இப்படி இல்லை என இஸ்ரேல்

மறுப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, விளங்க நினைப்பவன் said:

காசாவிலிருந்து  வெளியேறும் பாலஸ்தீனர்களை  அல்ஜசீரா நடத்தும் காட்டார்  உட்பட முஸ்லிம் நாடுகள்  உள்ளே அனுமதிக்க தயாராக இல்லை.

எங்கே.ம் வெளியேற விடுகிறார்கள்?

ஒரே எல்லையை சக அரபு/முஸ்லிம் நாடான எகிப்து இறுக்க மூடி வைத்துள்ளது. மக்கள் காத்து கிடக்கிறார்கள்?

காரணம்? எப்படி சும்மா இருந்த லெபனானை பலஸ்தீன அகதிகளின் வருகை உள்நாட்டு போரை உருவாக்கி சீரழிச்சதோ அப்படி தமக்கும் நடக்கும் என்ற பயம்.

இந்த மக்களை, ஹமாசை போசித்த ஈரான் பொறுப்பெடுப்பதே முறை.

அவர்கள் ஹமாசை பொறுப்பெடுப்பார்களா என்பதே சந்தேகம்.

இஸ்ரேல் என்ற தேன் கூட்டுக்கு ஹமாசும், ஈரானும் கல் எறிந்துள்ளார்கள். கொத்து வாங்குவது அப்பாவி பலஸ்தீனர்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வாலி said:

தெரிஞ்சு என்னசெய்யப் போகிறீர்கள்? சகல சௌபாக்கியங்களுடன் செல்வச்செழிப்புடன் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட சகல சுதந்திரங்களுடனும் நீங்கள் வாழும் பயங்கரவாத நாடுகளிலிருந்து உடனே இவ்வாறான நாடுகளுக்குப்போய் வாழப்போகிறீர்களா?

 

பயங்கவாதத்தை தூண்டி, பயங்கரவாதிகளையும் உருவாக்கி அவர்களுக்கு ஆயுத உதவிகளையும் செய்து பின் அதையே சாட்டாக வைத்து அந்த நாடுகளின் வளங்களையும் சுரண்டுவதால்தானே உங்களால் உந்த நாடுகளில் ஒய்யாரமான வாழ்க்கையை வாழ முடிகிறது!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

இப்படி இல்லை என இஸ்ரேல்

மறுப்பு.

தென்காசாவில் யுத்த நிறுத்தம் இல்லை - இஸ்ரேல்

16 OCT, 2023 | 12:34 PM
image
 

தென்காசாவில் யுத்த நிறுத்தம் என வெளியாகியுள்ள செய்திகளை இஸ்ரேலிய  பிரதமர் அலுவலகம்  நிராகரித்துள்ளது.

ரபா எல்லை திறப்புடன் தென்காசாவில் யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்கப்படலாம் என எகிப்திய வட்டாரங்கள் ரொய்ட்டருக்கு தெரிவித்திருந்தன.

எனினும் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் அலுவலகம் இதனை நிராகரித்துள்ளது.

வெளிநாட்டவர்களை வெளியே கொண்டுவருவதற்காக யுத்தநிறுத்தமோ மனிதாபிமான உதவியோ இல்லை என  இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/166972

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகள், பெண்கள் உட்பட 199 பேரை ஹமாஸ் பிடித்து வைத்துள்ளதாக இஸ்ரேல் அறிவிப்பு.

இவர்களை பார்வையிட அனுமதிக்குமாறு செஞ்சிலுவைச்சங்கம் ஹமாசிடம் கோரிக்கை. 

  • கருத்துக்கள உறவுகள்

ஹமாஸ் அன்றி வேறு எவரும் செய்து இருக்க முடியாது என்பததற்கான ஆய்வு ஆதாரம். 

 

https://www.bangkokpost.com/world/2664086/the-secrets-hamas-knew-about-israels-military

  • கருத்துக்கள உறவுகள்

https://www.iranintl.com/en/202310164050

https://www.iranintl.com/en/202310164050


ஹமாஸ் இராணுவம் அல்லாத கைதிகளை விடுவிக்க விரும்புவதாக தம்மிடம் அறிவித்து 
 உள்ளதாக ஈரான் அறிவிப்பு.

அறிவிப்பு உண்மையாக நடந்ததா என்பது  சரிபார்க்கப்பட்டது அல்ல.

இது ஈரானின் அறிவிப்பு. ஹமாசின் அறிவுப்பு அல்ல.

 

"As Israel confirmed that 199 hostages are held in Gaza, Iran's Foreign Ministry claims that its proxy Hamas has expressed readiness to release civilian detainees."

...

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, வாலி said:

தெரிஞ்சு என்னசெய்யப் போகிறீர்கள்? சகல சௌபாக்கியங்களுடன் செல்வச்செழிப்புடன் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட சகல சுதந்திரங்களுடனும் நீங்கள் வாழும் பயங்கரவாத நாடுகளிலிருந்து உடனே இவ்வாறான நாடுகளுக்குப்போய் வாழப்போகிறீர்களா?

 

ஆ இதைத் தான் எதிர்பார்த்தேன்.

பத்தோடு பதினொன்றாவதா ஈரானையும் போடுங்க.

அதை விடுத்து தனியே ஈரானை மட்டும் சுட்டிகாட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை.

நன்றி வாலி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பற்றி எரியும் காசா! உக்கிரமடையும் இஸ்ரேலின் இராணுவ வியூகங்கள்

 

 

முதலாவதாகவே ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்கு அதிர்ச்சிகரமான தாக்குதலை கொடுத்துவிட்டார்கள். அந்த தாக்குதலில் இரண்டு நிலைமைகள் தீவிரமானது என பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்தார். இதனால் இஸ்ரேலின் பாதுகாப்பு வலயம் உடைந்தது என்றும் அவர் கூறினார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.