Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாநிதி தலையை துண்டித்தால் பரிசு-விஎச்பி

Featured Replies

கருணாநிதி தலையை துண்டித்தால் பரிசு-விஎச்பி

முதல்வர் கருணாநிதியின் தலைமை துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என பாஜக முன்னாள் எம்பியும் விஸ்வ இந்து பரிஷத் தலைவருமான ராம்விலாஸ் வேதாந்தி கூறியுள்ளார்.அயோத்தியில் அவர் பேசுகையில்,ராமர் பற்றி விமர்சனம் செய்த திமுக தலைவரின் தலையையும், நாக்கையும் துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் பரிசு வழங்கப்படும். அயோத்தியில் உள்ள துறவிகள் இந்த பரிசை வழங்குவார்கள் என்றார்.இவர் வேதாந்தி விஎச்பியின் மார்க்தர்ஷக் மண்டல் தலைவராக உள்ளார். 2 முறை பாஜக எம்.பி.யாகவும் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்ஸ் தமிழ்

தமிழகத்தில் பாஜக, விஎச்பியினர் நடமாட முடியாத நிலை ஏற்படும்-திமுக கடும் எச்சரிக்கை

முதல்வர் கருணாநிதியின் தலைமை துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என விஎச்பி தலைவர் அறிவித்துள்ளதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.பாஜக, விஎச்பியைச் சேர்ந்த தமிழகத்தில் தெருக்களில் நடமாட முடியாத அளவுக்கு மோசமான விளைவுகள் ஏற்படும் என திமுக எச்சரித்துள்ளது.முன்னாள் எம்பியும் விஸ்வ இந்து பரிஷத் தலைவருமான ராம்விலாஸ் வேதாந்தி, ராமர் பற்றி விமர்சனம் செய்த திமுக தலைவரின் தலையையும், நாக்கையும் துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் பரிசு வழங்கப்படும். அயோத்தியில் உள்ள துறவிகள் இந்த பரிசை வழங்குவார்கள் என்றார்.இதற்கு பதிலளித்து அமைச்சர் ஆற்காடு வீராசாமி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் விலாஸ் வேதாந்தி என்பவர் தலைவர் கலைஞரைத் தாக்கி "பத்வா'' ஒன்றினை அயோத்தியிலிருந்து விடுத்திருப்பதாகவும், அதில் தமிழக முதலவரின் தலையையும், நாக்கையும் யார் துண்டாடினாலும் அவர்களுக்கு அயோத்தியில் உள்ள சாமியார்களால் எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என்றும் பேசியிருப்பதாக செய்தி வந்துள்ளது.இதே அமைப்பைச் சேர்ந்த ஒரு சிலர் பெங்களூரில் முதல்வரின் மகளின் இல்லத்தில் இரவிலே வந்து தாக்கியிருக்கின்றனர். தமிழக பேருந்தை தீயிட்டுக் கொளுத்தி 2 உயிர்கள் கருகிட காரணமாகவும் இருந்திருக்கிறார்கள்.இத்தகை? செயல்களை செய்திடும் அமைப்புகள் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த வன்முறைகளுக்கு காரணமானவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் அறிக்கை விடுத்துள்ளார்கள்.முதல்வர் கருணாநிதியோ இது அவர் சம்பந் தப்பட்ட பிரச்சனை என்பதாலும், சட்டம்- ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பிலே தான் இருக்கிறோம் என்பதாலும், கழகத்தின் மாவட்டச் செயலாளர்களையும், முன்னணியினரையும் கைகளைக் கட்டிப் போட்டு எந்தவிதமான செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்று கடுமையாக எச்சரித்து வைத்திருக்கிறார்.தலைவரின் எச்சரிக்கை காரணமாக அமைதியாக இருக்கும் கழகத்தவர்களை கோழைகள் என்று எண்ணிக் கொண்டு பாஜகவினரும், விஸ்வ இந்து பரிஷசத்தை இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் வாய் நீளம் காட்டினால், அதே பாணியில் திமுகழகத் தோழர்களும் தன்னிச்சையாக செயலில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.கலைஞரின் தலையையும், நாக்கையும் துண்டாடுவோம் என்று சொல்கின்ற அளவிற்கு ஒருவனுக்கு தைரியம் வருகின்றது என்றால், தமிழ்நாட்டுத் தெருக்களில் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களை நடமாட முடியாத நிலைமையை உருவாக்குவோம்.இது பெரியார் பிறந்த மண். பேரறிஞர் அண்ணா வளர்த்த தம்பிகள் நாங்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோம்.பகுத்தறிவு என்றால் என்ன என்றே தெரியாமல், மதத்தைச் சொல்லி, கடவுளைச் சொல்லி, ராமர் பெயரால் கட்சியை நடத்தி மத உணர்வுகளை தூண்டி விட்டுக் கொண்டிருக்கும் காட்டு மிராண்டிக் கும்பலைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினன் ஒருவன் உதிர்த்த வார்த்தைகளை உடனடியாகத் திரும்பப் பெறவில்லை என்றால்,தலைமையின் அனுமதியினைப் பெற்று இன்னும் ஒரு வார காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள பாஜக அலுவலகங்கள் முன்பு கழகத் தோழர்களைத் திரட்டி கருப்புக் கொடி காட்டி, மறியல் செய்திட நானே தலைமை தாங்குவேன்.அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவது சரியல்ல என்று யாராவது சொன்னால், அமைச்சர் பதவி எங்களுக்கு பெரிதல்ல. சுயமரியாதை ரத்தம் எங்கள் உடலில் ஓடிக் கொண்டிருக்கிறது. எங்கள் தலைவரைப் பற்றி தவறாகக் கூறிய வேதாந்தி அல்ல. வேறு எவன் சொன்னாலும், அதை தமிழகம் கேட்டுக் கொண்டிருக்காது என்பதை இந்தியாவே புரிந்து கொள்ளச் செய்வோம்.இந்தியா மதச் சார்பற்ற நாடு. மதத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு இயக்கம் கட்சி நடத்துவதற்கும், கண்டபடி பேசுவதற்கும் தமிழகம் தக்கவாறு பதிலளிக்க தயாராக இருக்கிறது. இன்று பெரியார் இல்லை தான். ஆனால் அவரால் வளர்க்கப்பட்ட நாங்கள் இருக்கிறோம்.எங்களுக்கு உயிர் பெரிதல்ல. எங்கள் தலைவனைத் தாக்கிப் பேசிய பிறகும் அதைத் தாங்கிக் கொண்டு மனிதப் பிறவிகள் என்று எங்களைச் சொல்லிக் கொள்ள நாங்கள் தயாராக இல்லை.தமிழ்நாட்டு மக்களே, திமுகழகத்தினைச் சேர்ந்த நண்பர்களே, வேதாந்தி என்பவனுக்கும், அவனுடைய அமைப்பைச் சேர்ந்தவர் களுக்கும் சரியான வகையில் பதில் கூறத் தயாராவோம். நம் தலைவரின் உயிரைப் பற்றி விலை பேசும் வட நாட்டுத் தருக்கன் ஒருவனுக்கு சரியான புத்தி புகட்டிட வேண்டாமா, இன்றே புறப்படுங்கள்.இவ்வாறு ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.தற்ஸ் தமிழ்

Edited by மின்னல்

அடடா நம்மட இந்து மதத்தில கூட இப்படி ஒரு தீர்ப்பு இருக்கா?

அதுக்கு அழகாக சமஸ்கிரிதத்தில ஒண்டுமில்லையோ? பத்வா என்று ஏன் இஸ்லாமியர்களின் பாசையை இதுக்குள்ள இழுக்கிறியள் அபச்சாரம் அபச்சாரம்.

வெற்றிவேல் உங்கடை சமஸ்கிரிதத்தில எடுத்துவிடுங்கோவன் ஏதாவது சுவாகா புவகா எண்டு? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாம். விஎச்பி சவால் விடும். ஆனா தமிழகத்தில் விஜபி இல்லாத அளவிற்குப் போட்டுத் தள்ளுற அளவுக்கு கலைஞர் ஐயா செய்திடுவார் என்பதை மதுரையில் அழகிரியை வைத்துத் தாக்கிய தாக்குதல் மூலம் விஎச்பி புரிஞ்சு கொள்ள வேணும்

Edited by mathanarasa

அடடா நம்மட இந்து மதத்தில கூட இப்படி ஒரு தீர்ப்பு இருக்கா?

அதுக்கு அழகாக சமஸ்கிரிதத்தில ஒண்டுமில்லையோ? பத்வா என்று ஏன் இஸ்லாமியர்களின் பாசையை இதுக்குள்ள இழுக்கிறியள் அபச்சாரம் அபச்சாரம்.

வெற்றிவேல் உங்கடை சமஸ்கிரிதத்தில எடுத்துவிடுங்கோவன் ஏதாவது சுவாகா புவகா எண்டு? :lol:

இந்த இந்துத்வவாதிகளுக்கு இந்துதர்மத்தின் தத்துவங்கள் எதுவும் தெரியும் என்று நான் நினைக்கவில்லை. இவர்கள் செய்து கொண்டிருப்பது ஆட்சி கவிழ்க்கும் அரசியல்.

அது சரி நமக்கு வடமொழி "ஸ்வாஹா" வரை தான் தெரியும். நீங்கள் சொல்லியிருக்கும் புவாகா இனித்தான் கற்றுக்கொள்ள வேண்டும் :lol:

கருணாநிதிக்காக பிஜேபி பிரார்த்தனை

http://www.maalaisudar.com/newsindex.php?i...mp;%20section=1

Saturday, 22 September, 2007 02:34 PM

.

போபால், செப்.22: ராமரை இழிவுப்படுத்தி பேசிய தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டி ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்யப் போவதாக பிஜேபி தெரிவித்துள்ளது. ""ராமரை மறுக்கும் யாரும் இந்த தேசத்தையே மறுக்கிறார்கள். தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திப்போம்'' என்று உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் கூறியுள்ளார்.

.

போபாலில் நடைபெற்று வரும் பிஜேபியின் தேசிய செயற்குழு கூட்டத்தின் போது அவர் செய்தி யாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார். இந்த கூட்டத்தில் ராமர் சேது பாலத்தை பாதுகாப்பது குறித்து பிஜேபி ஆலோசனை நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ராமர் பாலத்தை பாதுகாக்க போராட்டத் திட்டம் ஒன்றை பிஜேபி அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இது தொடர்பான போராட்ட இயக்கத்தை மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஒருங்கிணைப்பார் என்று அக்கட்சியின் தலைவர்கள் தெரிவித்தனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ர கருத்து என்னவெண்டால் பாஜக அது சார்ந்த அமைப்புக்கள் ராமர் பால விவாகரத்தை ஒரு அரசியல் நிகழ்வாகத் தான் எடுக்கினம். தவிர கலைஞரும் பதிலுக்குச் சவால் விடுவதை விட மக்களுக்கு இது பற்றிய தெளிவை உருவாக்க முயற்சி செய்யலாம். இல்லாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து வர பாஜக இதை இறுக்கிப் பிடித்துக் கொள்ளும்

இல.கணேசன் மறுப்பு

Saturday, 22 September, 2007 03:06 PM

.

சென்னை, செப்.22: முதலமைச்சர் கருணாநிதிக்கு எதிராக அயோத்தியை சேர்ந்த ஒருவர் கூறிய கருத்துக்கும், பிஜேபிக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று அக்கட்சியின் மாநில தலைவர் இல.கணேசன் கூறியிருக்கிறார். அந்த கருத்துக்களை பிஜேபி வன்மையாக கண்டிக்கிறது என்றும் அவர் ஒரு அறிக்கையில் கூறியிருக்கிறார்.

.

மக்களை அணுகுவோம்; ஜனநாயக ரீதியாக பிரச்சாரம் செய்து அவர்கள் ஆதரவு திரட்டி வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்று இல.கணேசன் கூறியிருக்கிறார்.

ஸ்ரீராமர் குறித்து முதலமைச்சர் பேசிய கருத்துக்கள் ஆட்சேபனைக்குரியவை. இது குறித்து மக்கள் மன்றத்தில் விவாதிப்பதற்கு பிஜேபி தயாராக இருக்கிறது. சித்தாந்த ரீதியான ஒரு பிரச்சார யுத்தம் நடத்துவதற்கு இதுவொரு உகந்த நேரம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

ராமர் பாலத்திற்கு எந்த சேதமும் இருக்கக் கூடாது பிஜேபி விரும்புகிறது. ஆனால் இதிலிருந்து திசை திருப்பி மத்திய அரசு ராமர் ஒருவர் இருந்தாரா என்பதே கேள்விக்குறியது என்பது போல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த காரணத்தால் மக்களது கவனம் ராமர் பாலத்திலிருந்து ராமர் மீது திரும்பி அதன் காரணமாக பலர் மக்கள் மனதை புண்படுத்தக் கூடிய கருத்துக் களை சொல்லி இருக்கிறார்கள் என்றும் இல.கணேசன் குறிப்பிட்டிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி தலையை துண்டித்தால் பரிசு-விஎச்பி

முதல்வர் கருணாநிதியின் தலைமை துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என பாஜக முன்னாள் எம்பியும் விஸ்வ இந்து பரிஷத் தலைவருமான ராம்விலாஸ் வேதாந்தி கூறியுள்ளார்.அயோத்தியில் அவர் பேசுகையில்இராமர் பற்றி விமர்சனம் செய்த திமுக தலைவரின் தலையையும்இ நாக்கையும் துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் பரிசு வழங்கப்படும். அயோத்தியில் உள்ள துறவிகள் இந்த பரிசை வழங்குவார்கள் என்றார்.இவர் வேதாந்தி விஎச்பியின் மார்க்தர்ஷக் மண்டல் தலைவராக உள்ளார். 2 முறை பாஜக எம்.பி.யாகவும் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-----------------------------------------------------------------------------------------

இது கருட புராணத்தை அடிப்படையாக கொண்ட தண்டனை முறையாக இருக்கலாம். அந்நியன் படத்தில் விதவிதமான தண்டனைகளை கருட புராணத்தின் மூலம் சித்தரிக்கின்றார்கள். மகராட்சாவில் மாட்டை உணவுக்காக கொன்ற தலித்துக்களை மாட்டை உரித்தது போல்உயிருடன் உரித்தது கொன்றதும் கருடபுராண தண்டனைகளின் உந்துதல் என்றும் கொள்ள முடியும். எது எப்படி இருப்பினும் வேத புராணங்கள் சார்ந்த விடயம் ஏனெனில் தெய்வ நம்பிக்கை வேறு மதம் வேறல்ல என்பதும் இங்கு வைக்கப்படும் வாதம்.

சபேசன் :

என்னைப் பொறுத்தவரை கடவுள் நம்பிக்கை வேறு. மத நம்பிக்கை வேறு

தயா:

ஒண்று இல்லாமல் மற்றது இல்லை என்பது எனது நம்பிக்கை...!

பாரதி அல்ஹா வையும் பாடி இருந்தால்இ அல்லது கிறீஸ்துவை பாடி இருந்தால் அவன் கடவுளை மட்டும் நம்புபவன்இ ஆனால் கண்ணனையும்இ பராசக்தியையும்இ பாடிய அவன் நெற்றியில் குங்குமம்இ சகிதமாக அல்லவா வலம் வந்தான்... அவனை எப்படி மதம் சார்ந்தவன் இல்லை எண்று வரையறுக்கிறீர்கள்...??

இது பாரதி ஒரு மார்க்ஸிய வாதியா? என்ற தலைப்பில் இருந்து எடுக்கப்பட்டது.

------------------------------------------------------------------------------------------

அரசியல், மதம் எல்லாச்சாக்கடைகளும் தெருவுக்கு வந்து எல்லாம் இப்ப நாறிப்போய் கிடக்கிது. நல்ல காலம் நாம தப்பிச்சோம்

  • கருத்துக்கள உறவுகள்

தலை என்றது கூடிப்போச்சு.. நாக்கு என்றது போதும். இந்த நாக்காலதான் அந்த மனிசன் என்ன சுழலு சுழலுது.

உந்த நாக்கை எப்பவோ அறுத்திருந்தா தமிழகம் காப்பாற்றப்பட்டிருக்கும். பல கோடி ரூபாக்கள்.. குடும்ப சொத்தாவதில் இருந்து பாதுகாக்கப்பட்டிருக்கும். ஏழைகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். :D

Edited by nedukkalapoovan

பாஜக, இந்து முன்னணி அலுவலகங்கள் மீது திமுகவினர் ஆவேசத் தாக்குதல் அமைச்சர் பரிதி, சென்னை மேயர் கைது

ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 23, 2007

சென்னை:

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் திமுகவினர் இன்று ஆவேசத் தாக்குதலில் இறங்கினர். இதில் பாஜக நிர்வாகிகள் சிலர் காயமடைந்தனர். அதேபோல இந்து முன்னணி அலுவலகமும் தாக்கப்பட்டது. தாக்குதலின்போது உடன் இருந்த அமைச்சர் பரிதி இளம்வழுதி, சென்னை மேயர் மா.சுப்ரமணியம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ராமர் பால சர்ச்சை தொடர்பாக முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்துக்களுக்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பாஜக எம்.பியுமான ராம் விலாஸ் வேதாந்தி என்பவர், முதல்வர் கருணாநிதியின் தலையையும், நாக்கையும் வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு தங்கம் பரிசளிக்கப்படும் என அறிவித்தார்.

இது திமுகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வேதாந்தியை மிகக் கடுமையாக விமர்சித்து அமைச்சர் ஆற்காடு வீராசாமி நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், வேதாந்திக்கும், அவனுடைய அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் சரியான வகையில் பதில் கூறத் தயாராவோம், வட நாட்டுத் தருக்கனுக்கு சரியான பாடம் புகட்ட புறப்பட்டிடுவோம் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலலாயத்திற்கு அமைச்சர் பரிதி இளம்வழுதி, சென்னை மேயர் மா.சுப்ரமணியம், தென் சென்னை மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான அன்பழகன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான திமுகவினர் திரண்டு வந்தனர்.

பாஜக அலுவலகம் உள்ள தெருவில் நின்றபடி அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது வேதாந்தியின் கொடும்பாவியை அவர்கள் தீவைத்துக் கொளுத்தினர்.

பின்னர் அலுவலகத்தின் மீது சரமாரியாக கற்களை எரிந்து தாக்குதல் நடத்தினர். பெரிய பெரிய கற்களைக் கொண்டு திமுகவினர் தாக்குதல் நடத்தினர். மேலும் அலுவலகம் உள்ளே இருந்த கொடிக் கம்பத்தைப் பிடுங்கி அதைக் கொண்டு ஜன்னல் கண்ணாடிகளை திமுகவினர் அடித்து நொறுக்கினர்.

தாக்குதல் சம்பவம் நடந்தபோது, அலுவலகத்திற்குள் பாஜக பொதுச் செயலாளர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட பல பெண் நிர்வகாகிள் இருந்தனர். அவர்களில் சிலர் மீது கற்கள் வந்து விழுந்தன.

தகவல் அறிந்ததும் அங்கு போலீஸார் விரைந்து வந்தனர். ரகளையில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர். போராட்டத்தில் முன்னாள் திமுக எம்.எல்.ஏ அன்பழகன், சேப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு கல்யாண மண்டபத்தில் அமைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

பாஜக தலைமை அலுவலகம் தாக்கப்பட்டதால் சென்னையில் பதட்டம் நிலவுகிறது.

இந்து முன்னணி அலுவலகத்திலும் தாக்குதல்:

இதேபோல, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி தலைமை அலுலகத்திலும் திமுகவினர் தாக்குதல் நடத்தினர்.

50க்கும் மேற்பட்ட திமுகவினர் அங்கு வந்தனர். இந்து முன்னணி அலுவலகத்திற்குள் புக முயன்ற அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து தெருவில் நின்றபடி கற்களை சரமாரியாக வீசி அலுவலகத்தைத் தாக்கினர். இதில் அலுவலக ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின.

தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் அவர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.

இங்கு இப்படிப் பேசுவது போல கருணாநிதியால் அயோத்தியிலோ அல்லது காசியிலோ போய் பேச முடியுமா என்று கேட்டார்.

திமுகவினரின் போராட்டத்தால், நகர் முழுவதும் உள்ள இந்து அமைப்புகளின் அலுவலகங்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இன்று விநாயகர் சிலை ஊர்வலம் வேறு சென்னையில் நடப்பதால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்கும் வகையில் பாதுகாப்பு பன் மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் வழியில் உள்ள பிற மத வழிபாட்டுத் தலங்களில் ஆயுதப் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

எச்.ராஜா, மாமியார் வீடு சூறை:

இதேபோல காரைக்குடியில் உள்ள பாஜக துணைத் தலைவர் எச்.ராஜா வீட்டிற்குள் ஒரு கும்பல் நேற்று இரவு புகுந்து கல் வீசித் தாக்கியது.

இதில் வீட்டின் கதவு கண்ணாடிகள் உடைந்தன. கார் மற்றும் இரு சக்கர வாகனங்களையும் அக்கும்பல் அடித்துத் தாக்கியது. இதில் அவை சேதமடைந்தன.

இதேபோல ராஜாவின் மாமியார் உமா வீட்டையும் திமுகவினர் தாக்கினர். அதேபோல நகரில் உள்ள பாஜக கொடிக் கம்பங்களும் வெட்டித் தள்ளப்பட்டன.

நெல்லையில் போட்டி போட்டு உருவ பொம்மை எரிப்பு:

நெல்லையில், முதல்வர் கருணாநிதி மற்றும் வேதாந்தி ஆகிேயாரின் கொடும்பாவிகள் போட்டி போட்டு எரிக்கப்பட்டன.

நெல்லை சந்திப்பிள்ளையார் கோவில் முக்கு பகுதியில் திமுகவினர் சுமார் 50 பேர் கூடினர். பா.ஜ மற்றும் வேதாந்திக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பின்னர் ஆட்டோவில் எடுத்து வந்திருந்த வேதாந்தியின் உருவ பொம்மையை எடுத்து நடுரோட்டில் போட்டு தீ வைத்தனர்.

திமுகவினர் கொடும்பாவி எரித்த 1 மணி நேரத்திற்குள் பாஜகவினர் சிலர் டவுன் சொக்கப்பானை முக்கில் கூடி முதல்வர் கருணாநிதி உருவ பொம்மையை எரித்தனர்.

திமுக தொண்டர்கள் வேதாந்தி உருவ பொம்மையை மாலைராஜா எம்.எல்.ஏ தலைமையில் நடுரோட்டில் போட்டு தீ வைத்தனர். அவரது உருவ பொம்மையை செருப்பால் அடித்தனர்.

மேலும் வள்ளியூர், அம்பை, பாவூர்சத்திரம், செங்கோட்டை சங்கரன்கோவில் என மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் திமுகவினர் வேதாந்தியின் உருவ பொம்மையை எரித்தனர்.

இதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாஜக, இந்து முன்னணி அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளன. பாஜக கொடிக் கம்பங்கள் நூற்றுக்கணக்கில் வெட்டி எறியப்பட்டன. வேதாந்தி உள்ளிட்டோரின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன.

வி.எச்.பி. அலுவலகம் மீதும் தாக்குதல்:

இதேபோல, தி.நகர், ராமானுஜம் தெருவில் உள்ள விஸ்வ இந்து பரிஷத் அலுவலகத்தையும் திமுகவினர் அடித்து நொறுக்கினர்.

20க்கும் மேற்பட்ட திமுகவினர் திரண்டு வந்து கற்களை வீசி வி.எச்.பி. அலுவலகத்தைத் தாக்கினர். வேதாந்திக்கு எதிராகவும் கோஷமிட்டனர். அவரது கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.

http://thatstamil.oneindia.in/news/2007/09...in-chennai.html

பிஜேபியினர் மீது திமுக வன்முறை

.

Sunday, 23 September, 2007 12:37 PM

.

சென்னை, செப்.23: சென்னையில் பிஜேபி அலுவலகத்தின் மீது திமுகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தியதில் தமிழிசை சௌந்தர்ராஜன் உட்பட நிர்வாகிகள் படுகாயமடைந்தனர்.

திமுகவினரின் வன்முறையில் பிஜேபி அலுவலகத்தின் கண்ணாடி கள் உடைந்தன. கொடிக் கம்பம் வெட்டிச் சாய்க்கப்பட்டது. வாகனங்கள் அடித்து நொறுக்கப் பட்டன. வன்முறையில் ஈடுபட்ட சுமார் ஆயிரம் திமுகவினர் கைது செய்யப்பட்டனர். திமுகவினரின் இந்த வன்முறை சம்பவம் காரணமாக தி.நகர் முழுவதும் பெரும் பதட்டம் நிலவியது.

.

ராமர் பாலம் தொடர்பாக கருத்து தெரிவித்த முதலமைச்சர் கருணாநிதி, ராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார் என்று கூறியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கருணாநிதியின் இந்த பேச்சை அடுத்து விஸ்வ இந்து பரிஷத்தின் மூத்த தலைவரும், பிஜேபியின் முன்னாள் எம்.பி.யுமான ராம்விலாஸ் வேதாந்தி, ராமரை பற்றி இழிவாக பேசிய கருணாநிதியின் தலையையும், நாக்கையும் துண்டித்து கொண்டு வருபவருக்கு தங்கம் பரிசாக அளிக்கப்படும் என்று சொன்னதாக கூறி திமுக பொருளாளரும், மாநில மின்துறை அமைச்சருமான ஆற்காடு வீராசாமி திமுகவினரை தூண்டும் வகையில், பிஜேபிக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து சென்னையில் உள்ள பிஜேபி அலுவலகம் முன்பு திமுகவினர் இன்று காலையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக செய்திகள் பரவியது.

இதையடுத்து பிஜேபி அலுவலகம் அமைந்துள்ள வைத்தியராமன் தெரு முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு அந்த தெருவுக்குள் நுழையாதவாறு தடுப்புகளை அமைத்திருந்தனர்.

ஆனால் அமைச்சர் பரிதி இளம்வழுதி, திமுக வடசென்னை மாவட்ட செயலாளர் பலராமன், தென் சென்னை மாவட்ட செயலாளர் அன்பழகன், சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன், சைதை கிட்டு, செங்கை சிவம், வி.எஸ்.பாபு எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர்கள் ரகுமான்கான், இந்திரகுமாரி உட்பட சுமார் ஆயிரம் பேர் தெற்கு போக் சாலையில் வைத்திருந்த தடுப்புகளை தாண்டி போலீசாரையும் மீறி பிஜேபி அலுவலகத்திற்கு முன்பாக கூடினார்கள்.

அத்வானிக்கு எதிராகவும், ராமவிலாஸ் வேதாந்திக்கு எதிராகவும் கோஷம் எழுப்பிய அவர்கள் வேதாந்தியின் உருவ பொம்மை யையும் எரித்தனர். திமுகவினரின் இந்த ஆர்ப் பாட்டத்தை எதிர்த்த பிஜேபியின் முன்னாள் தலைவர் கே.என்.லட்சு மணன், மாநில பொதுச் செயலாளர் தமிழிசை சௌந்தர்ராஜன், நிர்வாகி கள் ராஜசிம்மன், லட்சுமி சுரேஷ், ரமேஷ் உள்ளிட்டோரை போலீசார் அலுவலகத்திற்கு உள்ளே செல்லு மாறு கேட்டுக் கொண்டனர். இதை யடுத்து அவர்கள் உள்ளே சென்றனர்.

அவர்கள் உள்ளே சென்றதும் திமுகவினர் பெரிய கற்களை எடுத்தும், உருட்டுக் கட்டைகளை கொண்டும் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் அலுவலகத்தில் இருந்த கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. அங்கு நிறுத்தப் பட்டிருந்த வாகனங்களும் அடித்து உடைக்கப்பட்டன. இதில் சில பத்திரிகையாளர்களின் வாகனங் களும் சேதமடைந்தன. அலுவலகத் தில் இருந்த கொடிக் கம்பம் வெட்டிச் சாய்க்கப்பட்டது.

திமுகவினரின் இந்த வன்முறை வெறியாட்டத்தை போலீசார் தடுத்து நிறுத்தாததுடன், வேடிக்கை பார்த்ததாக பிஜேபியினர் தெரிவித்தனர். திமுகவினரின் இந்த வன்முறையால் அந்த பகுதி முழுவதும் போர்க்களம் போல காணப்பட்டது. தி.நகரில் பெரும் பதட்டமும் நிலவியது.

http://www.maalaisudar.com/newsindex.php?i...mp;%20section=1

தொண்டர்கள் போராட வேண்டாம் : தி. மு. க., பின்வாங்குகிறது

சென்னை

: சட்ட ஒழுங்கை கெடுக்கும் விதமாக மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என தொண்டர்களை தி. மு. க., ‌கேட்டுக்கொண்டுள்ளது. கருணாநிதி குறித்து வேதாந்தி வெளியிட்ட கருத்துக்கு கடும் எச்சரிக்கை கொடுத்து அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி அறிக்கை வெளியிட்டார். மேலும் பா.ஜ., இந்து அமைப்புகளுக்கு எதிராக கடும் போராட்டம் நடத்துவோம் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் சென்னையில் பா.ஜ.,ஆபீஸ் முன்பு கூடிய தி.மு.க., தொண்டர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். கல் வீசி தாக்கினர், அவலக கேட்டை உடைத்தனர். இதனையடுத்த அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கருணாநிதி கேட்டு கொண்டதற்கிணங்க நாம் யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்,. ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்தி நமது எதிர்ப்பை காட்ட வேண்டும். பெரிய அளவிலான போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் இவ்வாறு கூறியுள்ளார்.

கவர்னரிடம் புகார் மனு அளிக்க பா.ஜ., முடிவு

சென்னை: சென்னை பா.ஜ., ஆபீஸ் தாக்கப்பட்டது தொடர்பாக கண்டனம் தெரிவித்து பா.ஜ., மாநில மூத்த தலைவர் எச்.ராஜா கூறியிருப்பதாவது: பா. ஜ., ஆபீஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது. அமைச்சர் பரிதி இளம் வழுதி முன்னிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. எனவே இவரையும் போராட்டத்தை தூண்டி விட்ட அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் தி.மு.க., ஆட்சியை கலைக்க வலியுறுத்தி கவர்னரை சந்தித்து மனுக்கொடுப்போம் என்றார்தினமலர்

Edited by devapriya

கருணாநிதி பற்றி அவதூறாக பேசவில்லை: வேதாந்தி மறுப்பு

அயோத்தியா: தமிழக முதல்வர் கருணாநிதி பற்றி அவதூறாக பேசவில்லை என விஸ்வஇந்து பரிஷத் மூத்த தலைவர் ராம்விலாஸ் வேதாந்தி மறுப்பு தெரிவித்துள்ளார். வேதாந்தியின் விமர்சனத்தை அடுத்து தமிழகத்தில் தி.மு.க.,வினர் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில் இது குறித்து வேதாந்தி கூறியிருப்பதாவது: கருணாநிதி குறித்து நான் நேரிடையாக எதுவும் பேசவில்லை. ராமர் குறித்து பழித்து பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மரணத்தண்டனைக்கு ஆளாவார்கள் என்று கீதை உள்பட இந்துமத நூல்கள் கூறுகின்றன என்றுதான் சொன்னேன் ஆனால் பத்திரிகைகள் தவறாக எடுத்து கூட்டி பிரசுரித்து விட்டன. அதே நேரத்தில் ராமர் இல்லை என்றும் ராம பகவான் பற்றி இழித்து பேச யாரையும் அனுமதிக்க முடியாது . மேலும் கருணாநிதி தலையை கொணர்ந்தால் தங்க காசுகள் வழங்கப்படும் என்று நான் சொல்லவே இல்லை இவ்வாறு அவர் கூறியுள்ளார்

தினமலர்.

  • கருத்துக்கள உறவுகள்
:icon_mrgreen::lol:
  • 2 weeks later...

இந்து மக்களின் கடவுளை மிகக்கேவலமாக பேசுவது கருநாநிதிக்கூ அல்வா சாப்பிடுகிற மாதிரி, இது தமிழக மக்களுக்கு பழகிப்போனதும் கூடா, ஆனால் இப்போதுதான் வட இந்திய இந்து மத பாதுகாப்பளர்களுக்கு தெரிந்துவிட்டது இனிமேல் கருணாநிதி தன் நாக்கை அளவோடு பேசவேண்டும்.

ம ............த............... ம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே இடப்படும் தகவல்களை நோக்கும் போது திராவிடர்கள் வன்முறையாளர்கள் என்கிறதான பதிவு மேலோங்கியுள்ளது.

இப்போது எழும் கேள்விகள்....

- இந்து மதவாதிகள் சாதுக்களா? அல்லது மூர்க்கமான வெறியர்களா? - இந்து மத அடிப்படைவாதிகள் யார்?

வரலாற்றில் எவ்வகையான பதிவை இந்துமதவாதிகள் கொண்டிருக்கிறார்கள்?

உணர்ச்சிகளைக் கொட்டாது நிதானமாக விவாதிக்கலாமே?

:unsure:

இன்றைய இணைய உலாவில் தமிழ்நாதம் இணையத்தில் பின்வரும் தலைப்பில் " வெளிவந்து விட்டது பெரியார் புரட்சி முழக்கம் ஏடு" என்ற இணைப்பு கண்டேன். இதனுள் நுழைந்த போது சுவையான தகவல்கள் இருந்தன.

http://www.dravidar.org/

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இடப்படும் தகவல்களை நோக்கும் போது திராவிடர்கள் வன்முறையாளர்கள் என்கிறதான பதிவு மேலோங்கியுள்ளது.

இப்போது எழும் கேள்விகள்....

- இந்து மதவாதிகள் சாதுக்களா? அல்லது மூர்க்கமான வெறியர்களா? - இந்து மத அடிப்படைவாதிகள் யார்?

வரலாற்றில் எவ்வகையான பதிவை இந்துமதவாதிகள் கொண்டிருக்கிறார்கள்?

உணர்ச்சிகளைக் கொட்டாது நிதானமாக விவாதிக்கலாமே?

இந்து மதத்தை உலகம் கலாநிதி ஆனந்த குமாரசுவாமியின் ஆய்வுகளுடாகவும், விவேகானந்தரின் சகோதரத்துவ ஆன்மிகத்துடாகவும், ஹரே கிரிஷ்ணா ஹரே ராமா இயக்கத்தின் இரம்மியமான ஆடல் பாடலுடன் கூடிய வழிபாட்டின் வழியாகவும் அறிந்திருந்தது.

கிறிஸ்தவ மதத்தை குற்ற உணர்வுடனான தாழ்வுமனப்பான்மையை வளர்க்கும் மதம் என விமரிப்பவர்கள் இருக்கிறார்கள். கிறிஸ்தவ மதம் மனிதன் பாவத்தால் பிறந்தான் என்கிறது. அதிலிருந்து மனிதனை மீடக வந்த கிறிஸ்துவையும் மனிதன் மோசமாக கொன்றுவிட்டான் என்கிறது. துன்பத்தையும் பாவத்தையும் அடிப்படையாக கொண்டே கிறிஸ்தவ மதம் உருவாக்கப்பட்டுள்ளது.

இசுலாம், கிறிஸ்தவம், யூதம் ஆகிறவை ஒரே வரலாற்றில் இருந்து தோன்றிய மதங்கள். இவை ஒவ்வொன்றும் தமது மதமே உண்மையானது என்றும் மற்றவை ஒதுக்கப்பட வேண்டியவை என்று பறைசாற்றி இருக்கின்றன. ஒன்றை ஒன்று அழிக்கவும் முயன்றிருக்கின்றன.

இந்து மதமோ வாழ்வின் இனிமைகளை போற்றி கொண்டாட செய்து வாழவைக்கும் அழகான மதம். எந்த மதத்தையும் இந்து மதம் வெறுக்க சொல்லவும் இல்லை. இந்து மதம் தான் உண்மையான மதம் என்று ஆதிக்கம் செலுத்த சொல்லவும் இல்லை.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

இந்து மக்களின் கடவுளை மிகக்கேவலமாக பேசுவது கருநாநிதிக்கூ அல்வா சாப்பிடுகிற மாதிரிஇ இது தமிழக மக்களுக்கு பழகிப்போனதும் கூடாஇ ஆனால் இப்போதுதான் வட இந்திய இந்து மத பாதுகாப்பளர்களுக்கு தெரிந்துவிட்டது இனிமேல் கருணாநிதி தன் நாக்கை அளவோடு பேசவேண்டும்
.

உண்மைதான். இவ்வளவு காலமும் தெரியாத இந்த ரகசியம் இப்போது வட இந்திய இந்து மத பாதுகாவலர்களுக்கு தெரிந்து விட்டது. எப்படி தெரிந்தது என்றுதான் புரியவில்லை. கலைஞர் அளவோடு பேசாவிட்டால் சங்கர மடத்தில் சங்கர்ராமனுக்கு நடந்த கதிதான் இல்லாட்டில் தலை கொய்வதோ நாக்கு அறுப்பதோ நடக்கலாம். கலைஞர் தனது உயிரை பாதுகாக்கும் பொருட்டு ஏதாவது யாகம் செய்தால் நல்லது. தெய்வங்கள் ஒரு எல்லை வரைக்கும் தான் பொறுமையா இருக்கும் பிறகு பாதுகாவலர் அவதாரமெடுத்து சன்னதமாட வெளிக்கிட்டால் குஞ்சு குருமன் என்று பார்க்காமல் நரபலி எடுத்துவிடும். பஸ் ரயில், வீடு எல்லம் எரித்துவிடும். ஏற்கனவே நடந்த பல கலவரங்களை கலைஞர் கவனத்தில் கொள்வது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சுகன்.

சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சங்கர மடத்தைச் சேர்ந்தவர்களைத் தண்டிக்காமல் விடச் சொல்லியோ, அல்லது அதற்காக ஆர்ப்பாட்டம், அடாவடி செய்கின்ற எந்த வேலைகளிலுமோ இந்து அமைப்பைச் சேர்ந்த எவருமே ஈடுபடவில்லை.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் இப்போதும் நீதிமன்றத்தின் கட்டுப்பாடடினுள் தான் இருக்கின்றார்கள்.

தன் பிள்ளைகளைக் குற்றாவாளி ஆகக் காட்டிய ஊடகங்கள் மேல் நரபலி எடுத்த வரலாற்றையும் நாம் அறிவோம். அல்லது ஏழைகள் வீட்டை எரித்து விட்டு, அடுத்த நாள் கண்ணீர் விட்டுக் கொண்டு போய் அனுதாபம் தேடிய அனைத்துத் திராவிடப் பிரமுகர்களின் கதையையும் நாம் அறிவோம்.

தொண்டர்களை வைத்துக் கல்லெறி கலாச்சாரம் கொண்டவர்களையும் தமிழனம் அறியாதது அல்ல.

எனவே இந்து மதப் பிரமுகர்கள் கல்லெறி கும்பலிடம் இருந்து தப்பிக்க அமைதியாக இருத்தல் மிக நன்று. இல்லாவிட்டால் அனுதாபம் தேட " ஐயோ... அடிக்கின்றாங்கள்" என்ற கண்ணீர் கதையை மீண்டும் கேட்க வேண்டி வரும்.

பாவம் செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

கடவுள் அவதாரம் எடுப்பார்.

அதாவது விஸ்ணு அவதாரம் எடுப்பார்.

கயவர்களை அழித்து நீதியை நிலைநாட்டுவார்.

ஆயுதங்கள் சகிதம் நிற்கும் கடவுள் வன்முறையற்றவர்.

அவரை சுற்றி கட்டப்பட்டுள்ள இந்துமதம் வன்முறையற் மதம்.

அன்பையும் பண்பையும் போதிக்கும் அருமையான மதம்.

அதனை நாம் யாழ் களத்தினூடாகவும் உணர்கிறோம். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

***

"அன்பே சிவம் என்றால், கடவுள் கையில் ஆயுதமெதற்கு என வெட்டிப் புலம்பல் புலம்பிய ஒருத்தரின் கதையை வேறு மாதிரிக் கேட்டீர்கள் போல.

விடுதலைப்புலிகள் ஆயுதத்தோடு நிற்கின்றார்கள். ஆகவே கொடூரமானவர்கள் என்றும் வாதிடுவீர்கள் போலுள்ளது.

எல்லா நாட்டு இராணுவங்களும் ஆயுதங்களோடு நிற்பதற்காக அந்த நாட்டு மக்கள் அவர்களைக் கொடூரமாக நினைப்பதில்லையே, அதை ஒரு பாதுகாப்பாகத் தான் உணருகின்றார்கள்.

அக்கால மக்கள், பக்கத்து சமூகத்திடம் இருந்து பயந்து வாழ்தல், பேய், பிசாசு போன்ற மூடநம்பிக்கைகளில் இருந்து நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்கின்றபோது, அவர்களுக்கு துணிவைக் கொடுக்கவும், நிம்மதியான வாழ்க்கையையும் கொடுக்கவும் கடவுள் உங்களுக்கு வருகின்ற எதிரிகளைத் தகர்க்க உதவி செய்வார் என்ற தோற்றத்துக்காக ஆயுதங்களோடு நிற்பதாக்க காட்டியிருக்கலாம்.

அதனால் தான், ஊர் எல்லைகளில் ஐயனார், வைரவர் போன்றவர்கள் ஆயுதங்களோடு நிற்பதாகக் கூட இருக்கலாம்.

***

*** நீக்கப்பட்டுள்ளது. தேவையற்ற இடத்தில் பெரியாரை இழுப்பது அவசியமற்றது. மற்றும் கள உறவுகளை விமர்சிப்பதைத் தவிர்க்கவும். - இணையவன்

Edited by இணையவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.