Jump to content

ஐ.நா.வில் காஸா போர் நிறுத்தம் கோரி தீர்மானம் - வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது ஏன்?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ஐ.நா. வாக்கெடுப்பு

பட மூலாதாரம்,UNITED NATION@TWITTER

24 நிமிடங்களுக்கு முன்னர்

காஸாவில் போர் நிறுத்தம் கோரி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்கவில்லை. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 120 நாடுகளும் எதிராக 14 நாடுகளும் வாக்களித்தன. இந்தியாவுடன் சேர்த்து 45 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஏஐஎம்.ஐ.எம் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான மோதல் 3 வாரங்களை கடந்தும் நீடிக்கும் நிலையில், காஸாவில் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர் நிறுத்தத்தைக் கொண்டு வரக் கோரி ஐ.நா. பொதுச் சபையில் ஜோர்டான் அmரசு தீர்மானம் ஒன்றை வெள்ளிக்கிழமை கொண்டுவந்தது.

பாலத்தீன மற்றும் இஸ்ரேலிய குடிமக்களுக்கு எதிரான அனைத்து வன்முறைச் செயல்களையும் இந்த தீர்மானம் கண்டித்ததோடு பொதுமக்களின் பாதுகாப்பு, சட்டம் மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்வதற்கு ஆதரவாக அமைந்திருந்தது.

ஐ.நா. வாக்கெடுப்பு

பட மூலாதாரம்,UNITED NATION@TWITTER

இதில் போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், கத்தார், எகிப்து, இந்தோனீசியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வங்கதேசம், செளதி அரேபியா, குவைத், மலேசியா, மாலத்தீவு உள்ளிட்ட 120 நாடுகள் வாக்களித்தன. இஸ்ரேல், அமெரிக்கா, ஆஸ்திரியா, ஹங்கேரி உள்ளிட்ட 14 நாடுகள் எதிராக வாக்களித்தன.

இந்தியா, இத்தாலி, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, இராக், யுக்ரேன் உள்ளிட்ட 45 நாடுகள் இந்த வாக்களிப்பில் பங்கெடுக்கவில்லை.

கனடா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா

ஆனால் மறுபுறம், 'ஹமாஸின் தீவிரவாத தாக்குதலைக்' கண்டிப்பதாக கூறி கனடாகொண்டு வந்த திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.

எனினும், இந்த வரைவுத் தீர்மானம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாததால் ஐ.நா பொதுச் சபையில் தோல்வியடைந்தது.

இந்தியா புறக்கணித்தது ஏன்?

காஸாவுக்கு ஆதரவான வாக்கெடுப்பைப் புறக்கணித்தது குறித்து ஐ.நா பொதுச் சபைக்கான இந்தியாவின் துணை நிரந்தரப் பிரதிநிதி யோஜனா படேல் விளக்கம் அளித்தார். அதில், "கடந்த அக்டோபர் 7 ஆம் தேதியன்று இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிர்ச்சி அளித்தன. அவை கண்டனத்துக்குரியவை. பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளோம். அவர்களை உடனடியாக நிபந்தனைகள் ஏதுமின்றி விடுவிக்க வலியுறுத்துகிறோம்.

பயங்கரவாதம் வேகமாகப் பரவக் கூடியது. அதற்கு எல்லைகள் இல்லை. தேச பேதங்கள் இல்லை. இன வேறுபாடுகளும் இல்லை. ஆகையால் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உலகம் எந்தவித நியாயங்களையும் கற்பிக்கக் கூடாது. வேற்றுமைகளை விலக்கி வைப்போம். ஒன்றுபட்டு பயங்கரவாதத்துக்கு எதிரான முறைகளைக் கையாள்வோம்” என யோஜனா படேல் தெரிவித்துள்ளார். அவரது விளக்கத்தில் எந்த இடத்திலும் ஹமாஸின் பெயர் இடம்பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஐ.நா. வாக்கெடுப்பு

பட மூலாதாரம்,PRIYANKA GANDHI VADRA@FACEBOOK

படக்குறிப்பு,

பிரியங்கா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர்

எதிர்க்கட்சிகள் கண்டனம்

இதனிடையே காஸாவில் மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தத்திற்கு வாக்களிப்பதில் இருந்து நமது நாடு ஒதுங்யிருப்பது அதிர்ச்சியும் அவமானத்தையும் அளிப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “நமது நிலைப்பாடு என்றும் அகிம்சை மற்றும் உண்மையின் கொள்கைகளின் அடிப்படையில் நிறுவப்பட்டது. மனித குலத்தின் ஒவ்வொரு சட்டமும் தூள் தூளாக்கப்படுவதையும், பல இலட்சக்கணக்கான மக்களுக்கு உணவு, தண்ணீர், மருந்து பொருட்கள், தகவல் தொடர்பு, மின்சாரம் போன்றவை துண்டிக்கப்படுவதையும், பாலத்தீனத்தில் ஆயிரக்கணக்கான பெண்களும், குழந்தைகளும் கொல்லப்படுவதையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருப்பது, ஒரு தேசமாக நம் நாடு தனது வாழ்நாள் முழுவதும் நின்ற கொள்கைகளுக்கு எதிரானது” என பிரியங்கா காந்தி எழுதியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக ஐ.நா.வில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களித்தக் தவறியது அதிர்ச்சியளிக்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் துணை நட்பு நாடாக இருந்து இந்திய வெளியுறவுக் கொள்கை எந்த அளவிற்கு வடிவமைக்கப்படுகிறது என்பதையும், அமெரிக்கா-இஸ்ரேல்-இந்தியா உறவை ஒருங்கிணைப்பதற்கான மோதி அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும் காட்டுகிறது. பாலத்தீன பிரச்னைக்கான இந்தியாவின் நீண்டகால ஆதரவை இந்த முடிவு நிராகரிக்கிறது” என கூறியுள்ளது.

ஐ.நாவில் நரேந்திர மோதி அரசு போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்காதது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, இது மனிதாபிமான பிரச்னை, அரசியல் பிரச்னை அல்ல என கூறியுள்ளார்.

“காஸாவுக்கு உதவிகளை அனுப்பிவிட்ட பிறகு, தீர்மானத்தின் மீது வாக்களிக்காதது ஏன்? ஒரு உலகம் ஒரு குடும்பம் என்கிற தத்துவம் என்ன ஆனது” எனக் எக்ஸ் தளத்தில் ஓவைசி பதிவிட்டுள்ளார். “கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஜோர்டா மன்னருடன் பிரதமர் நரேந்திர மோதி பேசினார். இப்போது ஜோர்டான் கொண்டு வந்த தீர்மானத்தில் இந்தியா பங்கெடுக்கவில்லை. இது முரண்பாடான வெளியுறவுக் கொளையை காட்டுகிறது” என ஓவைசி கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cd1d0jwjvwjo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

ஹமாஸின் தீவிரவாத தாக்குதலைக்' கண்டிப்பதாக கூறி கனடாகொண்டு வந்த திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.

நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களால் கொண்டுவரப்படட யுத்த நிறுத்த தீர்மானம் செல்லுபடியற்றது. ஏன் என்றால் இந்த தீர்மானம் ஹமாசை கட்டுப்படுத்தாது. அவர்கள் சடட திட்ட்ங்களுக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் யுத்த நிறுத்தத்தை மீறினாலும் சடடபடி ஒன்றும் செய்ய முடியாது. எனவே இதனால் ஒரு பிரயோசனமும் இல்லை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் காந்தித் தாத்தா.. 🤣

14 minutes ago, Cruso said:

இவர்களால் கொண்டுவரப்படட யுத்த நிறுத்த தீர்மானம் செல்லுபடியற்றது. ஏன் என்றால் இந்த தீர்மானம் ஹமாசை கட்டுப்படுத்தாது. அவர்கள் சடட திட்ட்ங்களுக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் யுத்த நிறுத்தத்தை மீறினாலும் சடடபடி ஒன்றும் செய்ய முடியாது. எனவே இதனால் ஒரு பிரயோசனமும் இல்லை. 

அவங்களுக்கும் பொழுதுபோக்கு வேண்டாமா? 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Cruso said:

ஆமாம் உண்மை   மற்றும் ஹமாஸ். இஸ்ரேல் என்ற நாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. அதாவது அங்கீகரிக்கவில்லை   இது இரு நாடுகள் என்ற கொள்கையை  ஹமாஸ். எற்க்கவில்லை என்பதவதுடன். தீர்வுக்கும். முட்டுக்கட்டையாகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Cruso said:

2 hours ago, Kandiah57 said:

ஆமாம் உண்மை   மற்றும் ஹமாஸ். இஸ்ரேல் என்ற நாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. அதாவது அங்கீகரிக்கவில்லை   இது இரு நாடுகள் என்ற கொள்கையை  ஹமாஸ். எற்க்கவில்லை என்பதவதுடன். தீர்வுக்கும். முட்டுக்கட்டையாகும். 

சரியான ஒரு சிக்கல் ..........
உங்கள் இருவருக்கும் புரிந்தது 
ஐ நா வில் இருக்கும் யாருக்கும் புரியாமல் வாக்கெடுப்பு நடாத்தி இருக்கிறார்கள் 

இஸ்திரேல் காசா மீது கடடவிழ்த்தது விட்டிருக்கும் கொலை களத்தை 
இந்த வாக்கெடுப்பின் அழுத்தத்தால் கைவிட்டால் ... பின்பு என்ன செய்வது என்றே புரியவில்லை. 

உங்கள் இருவரின் கருத்தையும் அவசரமாக இஸ்திரேலுக்கு தெரியப்படுத்த வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

கொலையை நான் ஆதரிக்கவில்லை  இஸ்ரேல் கொல்லாவிடில்  ஹமாஸ். கொல்லும்    போர் நிறுத்தம் மட்டுமே போதாது  இஸ்ரேலிலை ஹமாஸ் உள்பட பாலஸ்தீனரும்   பாலஸ்தீனத்தை   இஸ்ரேலும். ஏற்றுக்கொள்ள வேண்டும் ஹமாஸ் ஏன் இஸ்ரேலினை அங்கீகரிக்கவில்லை ??  முழுமையாக இஸ்ரேல் பாலஸ்தீனருக்குரியதா. ??  இந்த போர்  நிறுத்தம் கோரும் நாடுகளால். ஹமாஸ்சை. இஸ்ரேலில் அங்கீகாரிக்கும்படியாக. ஏன் செய்ய முடியவில்லை?? 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போரை நிறுத்த வேண்டும் என்பவர்களும் போரத் தொடரவேண்டும் என்பவர்கள் தங்கள் நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறார்கள்.ஆனால் 2 பக்கதிலும் இல்லாமல் மதில்மேல் பூனையாக இருப்பவர்கள். சந்தர்பவாதிகள். இந்தியா இப்போதும் இப்படியான தீர்மானங்களை எடுப்பது புதிய விடயமல்ல.

இதற்கான தீர்வுகளை முனமொழிந்தால் யுத்தம் தானாகவே நிற்கும். இஸ்ரேலை ஏற்றுக்கொள்ளாத ஹமாசை முஸ்லிம் நாடுகள் தங்கள் உதவிகளை நிறுத்தி கட்டுப்படுத்த வேண்டும். இஜ்ரேல் பாலஜ்தீனம் என்ற இறைமையுள்ள இருநாடுகள் உருவாக்கப்பட வேண்டும். அத்துடன் யுதுக்குடியேற்றங்கள் நிறுத்தப்பட்டு ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை விட்டுக்கொடுக்க வேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, புலவர் said:

இஜ்ரேல் பாலஜ்தீனம் என்ற இறைமையுள்ள இருநாடுகள் உருவாக்கப்பட வேண்டும்.

இதனை யார் செய்ய வேண்டும்? ஏனிந்த நீண்ட கால இழுத்தடிப்பு? ஒருவேளை இருதரப்புக்கும் வேறு திட்டங்கள் உள்ளனவா?
1.இதனை உலகமும் ஏதோ சகட்டுமேனிக்குச் சொல்கிறதேயன்றி நடைமுறையில் அப்படியவர்கள் நேர்மையோடு சிந்திக்கிறார்களா? ஏன் அதனை செய்ய இவளவுகாலம்? அல்லது பலஸ்தீனத்தை அழித்து ஒரு அகண்ட இஸ்ரவேலை உருவாக்கும் பெரும்பான்மைக் கிறிஸ்த்தவ நாடுகளின் மறைமுகத் திட்டத்தின் தொடர்ச்சியா இந்த அழிப்பு நடவடிக்கை? 
2. அல்லது சுற்றியிருக்கும் இசுலாமிய நாடுகளின் அகண்ட பலஸ்தீனத்துக்கான ஆதரவுடனான மறைமுகத்திட்டத்தறிகான பலியாக இந்த அழிவு நடவடிக்கை அனுமதித்துக் காத்திருக்கிறதா? 

26 minutes ago, புலவர் said:

யுதுக்குடியேற்றங்கள் நிறுத்தப்பட்டு ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை விட்டுக்கொடுக்க வேண்டும்.

யூதர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவார்களா? விடுவதாயின் புதிதாக இடங்களை ஆக்கிரமிக்கமாட்டார்கள் அல்லவா?
 
26 minutes ago, புலவர் said:

இந்தியா இப்போதும் இப்படியான தீர்மானங்களை எடுப்பது புதிய விடயமல்ல.

இந்தியா ஒரு 'பச்சோந்தி' நாடென்பது உலகறிந்தது. தனது மக்களையே சமமாக நடாத்தத்தெரியாத நாடு எப்படி உலக விடயங்களில் நேர்மையோடு இருக்கும் என்று எதிர்பார்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ நா பாதுகப்புச் சபை தீர்மானத்துக்கும், ஐ நா பொதுச் சபை தீர்மானத்துக்கும் உள்ள வலு வேறு பாட்டை தெரிந்து கொள்ளுங்கள் மக்காள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

ஐ நா பாதுகப்புச் சபை தீர்மானத்துக்கும், ஐ நா பொதுச் சபை தீர்மானத்துக்கும் உள்ள வலு வேறு பாட்டை தெரிந்து கொள்ளுங்கள் மக்காள்.

வல்வை ஊராட்சிக்கும், மாகாண சபைக்கும் உள்ள வித்தியாசம் தானே😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

வல்வை ஊராட்சிக்கும், மாகாண சபைக்கும் உள்ள வித்தியாசம் தானே😎

🤣 ஆனால் நிரந்த உறுப்பினர் எல்லாரும் ஓம் என்று ஒரு விடயத்தை ஆதரித்தால் பாதுகாப்பு கவுன்சிலுக்கு உலகில் எந்த அமைப்புக்கும், நாட்டுக்கும் இல்லாத அதிகாரம் உள்ளது.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

🤣 ஆனால் நிரந்த உறுப்பினர் எல்லாரும் ஓம் என்று ஒரு விடயத்தை ஆதரித்தால் பாதுகாப்பு கவுன்சிலுக்கு உலகில் எந்த அமைப்புக்கும், நாட்டுக்கும் இல்லாத அதிகாரம் உள்ளது.

மாமாக்கு மீசை கொட்டினா, சித்தி எண்டு கூப்பிடலாம் 😎

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

கொலையை நான் ஆதரிக்கவில்லை  இஸ்ரேல் கொல்லாவிடில்  ஹமாஸ். கொல்லும்    போர் நிறுத்தம் மட்டுமே போதாது  இஸ்ரேலிலை ஹமாஸ் உள்பட பாலஸ்தீனரும்   பாலஸ்தீனத்தை   இஸ்ரேலும். ஏற்றுக்கொள்ள வேண்டும் ஹமாஸ் ஏன் இஸ்ரேலினை அங்கீகரிக்கவில்லை ??  முழுமையாக இஸ்ரேல் பாலஸ்தீனருக்குரியதா. ??  இந்த போர்  நிறுத்தம் கோரும் நாடுகளால். ஹமாஸ்சை. இஸ்ரேலில் அங்கீகாரிக்கும்படியாக. ஏன் செய்ய முடியவில்லை?? 

அவனை நிறுத்த சொல்லு 
நானும் நிறுத்துகிறேன் 

இஸ்திரேலிடம் சொல்லுங்கள் பலஸ்தீனை ஏற்றுக்கொண்டு அவர்களை சுதந்திரமாக விட சொல்லி 

குறைந்த பட்ஷம் முதலில் சுந்தந்திர நாடுகளாக இருக்கும் லெபனான் சிரியா எகிப்து நாடுகளில் நடத்தும் அக்கிரமத்தை என்றாலும் நிறுத்த சொல்லுங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Nathamuni said:

மாமாக்கு மீசை கொட்டினா, சித்தப்பா எண்டு கூப்பிடலாம் 😎

மாமாக்கு மீசை கொட்டிய சந்தர்பங்களும் உள்ளன. மிக அரிது ஆனால் உண்டு.

பிகு

அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

மாமாக்கு மீசை கொட்டிய சந்தர்பங்களும் உள்ளன. மிக அரிது ஆனால் உண்டு.

பிகு

அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தி

🤣😁

கடைசீல பிங்கர் ஸ்லிப் ஆயிருச்சு

ஐ.நா. வாக்கெடுப்பு

இதென்னப்பா இது, இந்திராகாந்தி மாதிரி இருப்பா எண்டு பார்த்தா, விக்கு வைச்ச ஆம்பிளை மாதிரி இருக்குது.

ஒருவரின் தரம், அவரின் தெரிவுகளில் இருக்கும்.

வீட்டுக்கு அலுமாரி டெலிவரி கொடுக்க வந்தவர், வீட்டுக்காரர் ஆனால், இவர் எப்படி நாட்டினை ஆள முடியும் என்று கேள்வி வருகிறது.

இது தனிநபர் விமர்சனம் இல்லை. ஆனால், தாய் மனிசி, இந்த முறையும் மகனை இறக்கிப் பார்த்து, சரி வராவிடில், இவரை, இந்திராகாந்தி என்று இறக்க போறாவாம். 🙄

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ் பொதுச்செயலாளர் விக்கு வைச்ச ஆம்பிளை மாதிரி இருக்கிறாவா அல்லது   பெண் மாதிரி இருக்கிறாவா என்பது எங்களுக்கு பிரச்சனை இல்லை. இலங்கை தமிழர்கள் படுகொலைகள் செய்யபட்டபோது,  ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் சென்று கொலைகள் செய்தபோது  இவர்கள் என்ன செய்தார்கள் என்பதே கண்டணத்திற்கு உரியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, விளங்க நினைப்பவன் said:

காங்கிரஸ் பொதுச்செயலாளர் விக்கு வைச்ச ஆம்பிளை மாதிரி இருக்கிறாவா அல்லது   பெண் மாதிரி இருக்கிறாவா என்பது எங்களுக்கு பிரச்சனை இல்லை. இலங்கை தமிழர்கள் படுகொலைகள் செய்யபட்டபோது,  ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் சென்று கொலைகள் செய்தபோது  இவர்கள் என்ன செய்தார்கள் என்பதே கண்டணத்திற்கு உரியது.

அந்தக் கண்டணத்தில தான் விக்கு கதை வந்தது எண்டதை விளங்க நிணையுங்க!! 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

அவனை நிறுத்த சொல்லு 
நானும் நிறுத்துகிறேன் 

இஸ்திரேலிடம் சொல்லுங்கள் பலஸ்தீனை ஏற்றுக்கொண்டு அவர்களை சுதந்திரமாக விட சொல்லி 

குறைந்த பட்ஷம் முதலில் சுந்தந்திர நாடுகளாக இருக்கும் லெபனான் சிரியா எகிப்து நாடுகளில் நடத்தும் அக்கிரமத்தை என்றாலும் நிறுத்த சொல்லுங்கள் 

எனக்கு இப்போது நேரமில்லை ...2024  இல்  கண்டிப்பாக  சொல்லுகிறேன். ....😂. வேறு என்ன  சொல்ல வேண்டும் ?? 😂😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Kandiah57 said:

எனக்கு இப்போது நேரமில்லை ...2024  இல்  கண்டிப்பாக  சொல்லுகிறேன். ....😂. வேறு என்ன  சொல்ல வேண்டும் ?? 😂😂😂😂

ஆசிய  ஆபிரிக்க நாடுகளில் அத்துமீறி உள் நுழைந்து அப்பாவி மக்களை அழித்தது யார்?
வட அமெரிக்க நாடுகளில் அத்துமீறி உள் நுழைந்து அந்த நாட்டு மக்களையே அழித்தது யர்?
முதல் உலகப்போரை தொடங்கியது யார்?
இரண்டாம் உலகப்போரை தொடங்கியது யார்?
யார் 60 லட்சம் யூதர்களை கொன்றது?
ஹிரோசிமா நாஷசாக்கியில் அணுகுண்டு போட்டது யார்?

இதை செய்தவர்களை எல்லாம் பயங்கரவாதிகளோ அல்லது தீவிரவாதிகளோ என்று சொல்லவில்லை ஏன்?
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Maruthankerny said:

சரியான ஒரு சிக்கல் ..........
உங்கள் இருவருக்கும் புரிந்தது 
ஐ நா வில் இருக்கும் யாருக்கும் புரியாமல் வாக்கெடுப்பு நடாத்தி இருக்கிறார்கள் 

இஸ்திரேல் காசா மீது கடடவிழ்த்தது விட்டிருக்கும் கொலை களத்தை 
இந்த வாக்கெடுப்பின் அழுத்தத்தால் கைவிட்டால் ... பின்பு என்ன செய்வது என்றே புரியவில்லை. 

உங்கள் இருவரின் கருத்தையும் அவசரமாக இஸ்திரேலுக்கு தெரியப்படுத்த வேண்டும் 

நீங்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கு அருகில் இருப்பதால் அங்குள்ளவர்களுடன் கலந்துரையாடி இன்னும் மேலதிக தகவல்களை வழங்கினால் நல்லது. அதாவது உங்கள் கருத்து என்ன  என்பதை, நீங்கள் என்ன புரிந்து கொண்டு இருக்கிறீர்கள் என்பதை  எதிர்பார்க்கிறேன். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Maruthankerny said:

குறைந்த பட்ஷம் முதலில் சுந்தந்திர நாடுகளாக இருக்கும் லெபனான் சிரியா எகிப்து நாடுகளில் நடத்தும் அக்கிரமத்தை என்றாலும் நிறுத்த சொல்லுங்கள் 

யாரு சொன்னது? இரண்டுமே ஈரானின் கட்டுபாட்டில்தான் இருக்கின்றது. ஈரானின் proxy அமைப்புக்கள் அங்கிருந்து அகலும் வரைக்கும் அந்த நாடுகளுக்கு சுந்தரம் இல்லை. 

23 hours ago, Kapithan said:

🤣

அவங்களுக்கும் பொழுதுபோக்கு வேண்டாமா? 

ஆமாம் இப்படியான தீர்மானங்களை கொண்டு வரும்போது பொழுது போக்குடன் அரபு நாடுகளின் சன்மானமும் கிடைக்கும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

ஆசிய  ஆபிரிக்க நாடுகளில் அத்துமீறி உள் நுழைந்து அப்பாவி மக்களை அழித்தது யார்?
வட அமெரிக்க நாடுகளில் அத்துமீறி உள் நுழைந்து அந்த நாட்டு மக்களையே அழித்தது யர்?
முதல் உலகப்போரை தொடங்கியது யார்?
இரண்டாம் உலகப்போரை தொடங்கியது யார்?
யார் 60 லட்சம் யூதர்களை கொன்றது?
ஹிரோசிமா நாஷசாக்கியில் அணுகுண்டு போட்டது யார்?

இதை செய்தவர்களை எல்லாம் பயங்கரவாதிகளோ அல்லது தீவிரவாதிகளோ என்று சொல்லவில்லை ஏன்?
 
இந்த கேள்விகளுக்கு பதில்கள் அனைவருக்கும் தெரியும்  தெரிந்தும் எவருமே எந்தவொரு  மாற்றங்களையும். நிறுவியது இல்லை   ஏன??? 

இங்கே உதாரணமாக யாழ் களத்தை எடுத்து பார்த்தால்  1...களவிதிகளுண்டு  

2..நிர்வாகம் இருக்கிறது 

3...நிர்வாகிகள் இருக்கிறார்கள் 

 4..கள உறுப்பினர்கள் இருக்கிறார்கள் 

பார்வையாளர்கள் தவிர்த்து  மேலே சொல்லப்படுபவர்கள்  100 பேருக்கு உள்ளே வரலாம்” ....இங்கே அடிக்கடி தெரிந்து கொண்டு களவிதிகளை மீறுகிறோம் ...என்ன செய்வார்கள் ??...வெட்டுவார்கள்...எச்சரிக்கை செய்வார்கள்...இடைநிறுத்தம் செய்வார்கள்... நாங்கள்  கள விதிமுறைகளை மீறி கொண்டு  நிர்வாகத்தை  குறை கூறுவோம்....இது அடிக்கடி நடப்பது உண்டு”  தெரியாமலா?? நடக்கிறது...இல்லை   இல்லாவேயில்ல....தெரிந்து கொண்டு தான் நடக்கிறது....யாழ் களம் இருப்பதால் பல அனுபவங்களையும். பல அனுகூலங்களையும்  பல விடயங்களையும் தெரிந்து கொள்கிறோம்.... 

இந்த உலக கட்டமைப்பை உருவாக்குவதில்  அமெரிக்கா பங்களிப்புகள் வழங்கி உள்ளது   உலகுக்கு ஒரு தலைமை தேவை   உலகில் உள்ள எந்த நாடு தலைமை எற்றலும். நீங்கள் மேலே கேட்ட கேள்விகளில் உள்ள அனைத்தும் செய்வார்கள்   தவிர்க்க முடியாது   ஏனெனில் யாழ் கள உறுப்பினர்கள் எப்படி கள விதிமுறைகளை மீறுவர்களே  அப்படியே உலக நாடுகளும்  சண்டித்தனம்  விடுவார்கள் விதிமுறைகளை மீறுவார்கள். நான் தலைவர் என்ற நாடு  எச்சரிக்கும் பொருளாதார தடைகளை விதிக்கும்   அமைப்புக்களிலிருந்து  நீக்கும்     

குறிப்பு....இந்த கேள்விகள் இந்த திரிக்கு தேவையற்றது  நீங்கள் கேட்டாதால் பதில்கள் வழங்கப்பட்டுள்ளன   வணக்கம் 🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

குறிப்பு....இந்த கேள்விகள் இந்த திரிக்கு தேவையற்றது  நீங்கள் கேட்டாதால் பதில்கள் வழங்கப்பட்டுள்ளன   வணக்கம் 🙏

நல்லதுக்கும் நேர்மைக்கும் காலமில்லை எண்டு சொல்ல வாறியள் போல கிடக்கு. கலிகாலம்

  • Haha 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • @suvy 2007 உல‌க‌ கோப்பையில் அய‌ர்லாந்திட‌ம் தோத்து தான் பாக்கிஸ்தான் உல‌க‌ கோப்பையில் இருந்து வெளி ஏறின‌வை.................அய‌ர்லாந் பாக்கிஸ்தானை சில‌து வெல்ல‌க் கூடும் இன்றும் த‌லைவ‌ரே............................
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • என்னது...... ஒரு ஆட்டுப்பட்டியையே, எப்படி கடத்தியிருப்பார்கள்? அவர்களை ஒரு போலீஸ் அதிகாரி மடக்கிப்பிடித்திருக்கிறார்?  அதுக்குத்தான் எங்கள் வரிப்பணத்தில் சம்பளம் அளிக்கப்படுகிறதே. அது சரி, இந்த வாள்வெட்டுக்குழு, போதைப்பொருளை கடத்துவோரை மட்டும் கைது செய்யமாட்டார்கள், கண்ணை மூடிக்கொண்டு போக விட்டுவிடுவார்கள். வர வர சிவசேனைக்கு பொன்னாடை போத்துற வேலை அதிகரிக்கிறது. அதற்காக ஆட்களை தேடுகிறார்களாம் போர்த்துவதற்கு.
    • இந்தியா தமிழீழம் என்பதற்கு மிகவும் எதிரானது. இன்னும் சொல்லப்போனால் சமஷ்ட்டி, ஒன்றுபட்ட நாட்டிற்குள் அதிகாரம் மிக்க பிராந்தியங்கள் ஆகியவற்றிற்கும் கூட இந்தியா எதிரானது. ஆகவே, மதுரை ஆதீனம் தன் பங்கிற்கு இதனைச் சொல்லிவிட்டுப் போகலாம், மோடிக்குத் தெரியும் என்ன செய்ய வேண்டும் என்பது. அண்மையில்க் கூட இலங்கை அரசாங்கத்தை மகிழ்ச்சிப்படுத்த இல்லாத புலிகள் மீதான தடையினை மேலும் 5 வருடங்களுக்கு நீட்டித்துக் காட்டியிருக்கிறார் அவர்.  தமிழர்களுக்கு ஈழத்தை எடுத்துக் கொடுப்பதில் உண்மையான அக்கறையுடன் செயற்ப்பட்டவர்கள் புலிகள் மட்டும்தான். வேறு எவரிடமும் நாம் வைக்கும் கோரிக்கைகள் செவிடன் காதில் பேசுவதற்கு ஒப்பானது. 
    • தமிழருக்கெதிரான அடக்குமுறையினை அரசமயப்படுத்தியவர்களில் முதன்மையானவர் ஜெயவர்த்தன. 1983 ஆம் ஆண்டு இனக்கொலையே இதற்குச் சாட்சி. அவரால் உருவாக்கப்பட்ட சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதி எனும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பதவியும் ஒற்றையாட்சி முறைமையுமே தமிழர்களின் அபிலாஷைகளுக்கு பிரதான முட்டுக்கட்டையாக இருந்து இனக்கொலையினை நடத்திவருபவை. இப்பதவியில் அமர்ந்த அனைத்துச் சிங்கள ஜனாதிபதிகளுமே தமிழரின் இனவழிப்பில் தமது பங்கினைத் தவறாமல்ச் செய்து வந்தவர்கள் தான்.  ஆகவே, இவ்வாறான இன்னுமொருவரை பதவியில் அமர்த்துவதற்குத் தமிழ் மக்கள் ஆர்வம் காட்டவேண்டிய தேவை இல்லையென்பதை சாதாரணமாகச் சிந்திக்கும் எவரும் இலகுவாக உண‌ர்ந்துகொள்வார்கள். ஆகவே, இதற்கான தமது எதிர்ப்பினைக் காட்டவே தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் தேவை என்பதையும் அவர்களால் உணர்ந்துகொள்ள முடியும். ஆனால், அப்படியா எல்லோரும் இருக்கிறோம், இல்லையே?! சிலருக்கு வெளிப்படையாகத் தெரிவதையே புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாமலிருக்கிறதே, என்ன செய்வது ?! 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.