Jump to content

எங்களின் மனோஹரா

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

@suvy

@தமிழ் சிறி

@ஈழப்பிரியன்

(Only Kantharmadam Gang 😎)

யாழ் நகர் மனோகரா தியேட்டரில்(1974).                            யாழ் நகரத்துத் திரையரங்குகள் அன்று - மறக்க முடியாத மனோஹரா!        :                                                               மனோகரா படமாளிகை 1951 செப்டம்பர் 12 அன்று திறந்து வைக்கப்பட்டது.

இதில் திரையிடப்பட்ட முதலாவது திரைப்படம் "பிச்சைக்காரி"  படமாளிகையைத் திறந்து வைத்தவர்: தமிழறிஞரும், அன்றைய அரசியல்வாதியுமான சு. நடேசபிள்ளை.     யாழ் திரையரங்குகளில் என் பிரியத்துக்குகந்த நண்பனைப்போல் விளங்கிய திரையரங்கு மனோஹரா. இங்குதான் அதிகமாக நான் திரைப்படங்கள் தமிழ், ஆங்கிலம் என்று பார்த்தது. இதற்கு முக்கிய காரணம் இதற்கண்மையில்தான் யாழ் இந்துவில் படிக்கையில் தங்கிப்படித்த ஆச்சி வீடிருந்தது. யாழ் இந்துக்கல்லூரியில் எட்டாம் வகுப்பில் சேர்ந்தது முதலே மனோஹராவில் திரைப்படம் பார்ப்பது தொடங்கிவிட்டது.

அப்பொழுதெல்லாம் மனோஹராவில் பழைய படங்கள் திரையிடுவார்கள். கலரி என்றால் முழு டிக்கற் 65 சதம். அரை டிக்கற் 35 சதம். அவ்விதம் பார்த்த திரைப்படங்களில் சில: பாகவதரின் 'புது வாழ்வு', சிவாஜி , பானுமதி நடித்த 'அறிவாளி', வாத்தியாரின் 'மாடப்புறா', 'பாசம்', 'கொடுத்து வைத்தவள்'. இவ்விதம் பார்த்த பழைய திரைப்படங்கள் பல.

இன்னுமொரு சமயம் யாழ் மனோஹராவில் அதிகமாக ஆங்கிலத் திரைப்படங்களைத் திரையிட்டார்கள். அப்பொழுது பார்த்த திரைப்படங்களும் பல. அந்தனி குயீனின் தி ஹன்ச் பாக் ஒஃப் எ நோட்ர டாம் (The Hunchback of Notre Dame) .
இன்னொரு சமயம் மனோஹராவில் புதுத்திரைப்படங்கள் வெளியாக ஆரம்பித்தன.

வாத்தியாரின் 'இதயக்கனி', 'உலகம் சுற்றும் வாலிபன்', ஜெய்சங்கரின் 'உயிர் மேல் ஆசை' , 'வெள்ளிக்கிழமை விரதம்', 'மேனாட்டு மருமகள்'.. இவை மனோஹராவில் நான் பார்த்த , இன்னும் நினைவில் நிற்கும் புதுத்திரைப்படங்கள். இவற்றில் 'இதயக்கனி' நூறு நாள்களைக் கடந்து ஓடியது. இது தவிர ராஜேந்திரகுமார், மாலாசின்ஹா நடிப்பிலுருவான 'கீத்' (Gheet) மறக்க முடியாத ஹிந்தித்திரைப்படம்.

மனோஹராவில் நீண்ட காலம் ஓடிய திரைப்படமாக நினைவில் பதிந்துள்ளது. அதில் வரும் 'மேரே மித்துவா' பாடலை மறக்க முடியாது. இங்கு பார்த்த இன்னுமொரு ஹிந்தித்திரைப்படம் ஷம்மி கபூர் நடிப்பில் வெளியான 'பிரம்மசாரி'. இதுவே பின்னர் தமிழில் சிவாஜி நடிப்பில் வெளியான  'எங்க மாமா'.
'உலகம் சுற்றும் வாலிபன்' திரையிட்டபோது ஆரம்பத்தில் மனோஹராவிலும், ஶ்ரீதரிலும் மாறி மாறித் திரையிட்டதாக நினைவு. முதல் நாள் நள்ளிரவே மனோஹராவில் முதற் காட்சி ஆரம்பமாகிவிட்டது இன்னும் நினைவிலுள்ளது. திருவிழா மாதிரி சனக்கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. வாத்தியாரின் திரைப்படங்களில் புகழ்பெற்றவை இவ்விதமே முதல் நாள் நள்ளிரவே முதற் காட்சி ஆரம்பமாகிவிடுவது அக்காலகட்டத்தில் வழக்கமாகவிருந்தது.  

மனோஹரா தியேட்டருக்கு உரிமையாளர்களாகப் பலரிருந்தனர் என்று கேள்வி. அவர்களில் ஒருவர் குழந்தை என்று அழைக்கப்படும் ஒருவரிருந்தார். அங்கு பணிபுரிந்த அண்ணாமலை என்பவரை மறக்கவே முடியாது. அவர் உரிமையாளர்களி லொருவரின் சகோதரர் அல்லது உறவினராகவிருக்க வேண்டும். ( மனோஹராவின் உரிமையாளர்கள் பற்றி அறிந்தவர்கள் அவ்விபரங்களை இங்கு பகிர்ந்துகொள்ளாலாம். ) அவரின் பெயர் அண்ணாமலை. நல்ல குரல் வளமுள்ளவர்.

அக்காலகட்டத்தில் திரைப்படங்கள் வெளியாகும் சமயத்தில் லவுட் ஸ்பீக்கர் பூட்டிய காரில் நகரில் வெளியாகும் திரைப்படம் பற்றி ஒலிபரப்பிக்கொண்டு வருவார்கள். அவ்விதம் வருகையில் அத்திரைப்படம் பற்றிய 'நோட்டீ'சுகளை எறிந்துகொண்டு வருவார்கள்.

அவ்விதம் விளம்பரக் காரில் ஒலிபரப்பிக்கொண்டுவருவார் அண்ணாமலை. அவர் ஒருமுறை ஒலிபரப்பிக்கொண்டுவந்த சிங்களப்படமொன்றின் விளம்பரம் மறக்க முடியாத ஒன்று. படத்தின் பெயர் 'பாரா வலலு'. நடித்திருப்பவர்கள்: காமினி பொன்செகா & மாலினி பொன்செகா. அண்ணாமலை அப்படத்தை விளம்பரத்திக்கொண்டுவருகையில் ' ஸ்டைலா'க விளம்பரத்துவதாக எண்ணிக்கொண்டு "காமினி கொன்செகரா , மாலினி கொன்செகரா நடித்த பாரா வலலு" என்று விளம்பரத்திக்கொண்டு வந்தது அழியாத கோலங்களிலொன்றாக அடிமனத்தில் பதிந்து விட்டது.
என் பதின்ம வயதுகளில் என் வாழ்வுடன் பின்னிப்பிணைந்திருந்த சூழலாக மனோஹரா திரையரங்கு, நாவலர் வீதி, சாந்தையர் மடப்பிள்ளையார், சந்திரா கபே, அருகிலிருந்த கந்தசாமி மாஸ்டரின் டீயூசன் கிளாஸ், கந்தசாமி மாஸ்டரின் டியூசன் கிளாஸ் நடக்குமிடத்தில் சிறிது காலம் நடந்த சிவஞானசுந்தரம் மாஸ்ட்டரின் பல்கலைக்கழகப்புகுமுக வகுப்புக்கான கணிதப்பாடத்துக்கான இரை மீட்டல் வகுப்பு, ஐந்து சந்தியிலிருந்த பிளவுஸ் உணவகம், மொக்கங் உணவகம், ஆசாத் உணவகம் , அண்ணா அறிவகம் ஆகியவை அமைந்திருந்த சூழல் விளங்கியது.

மனோஹரா திரையரங்கைப்பொறுத்தவரையில் இன்னுமொரு விசேடமென்னவென்றால்... அங்கு ஒரு காலத்தில் நாடகங்களும் மேடையேறின என்று கூறினார்கள். அதனை நிரூபிப்பது போல் திரை அமைந்துள்ள மேடையின் கீழ் நடிகர்கள் மேக் அப் போடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த சிறு சிறு அறைகள் விளங்கின.
பதின்ம வயதுகளில் எம் கனவுலகத் திரையரங்காக விளங்கிய மனோஹராவின் அண்மைக்காலத் தோற்றத்தினையே இங்குள்ள புகைப்படத்தில் காண்கின்றீர்கள்.       போனவருடம் போய்ப் பார்த்தபின்புதான்.. "வந்திருக்கக்கூடாது, உன்னைப்பார்த்திருக்கக் கூடாது, .பார்க்காமலே உன் நினைவுகளுடன் வாழ்ந்திருக்கலாம்" எனச்சொன்னது மனசாட்சி. அந்தக்காற்றுவெளி. அரசமரம். அந்த ரசிகர்.

அனைத்தையும் இழந்து கதைசொல்ல முடியாமல் தவிக்கும் பாலைவனம் எங்களின் மனோஹரா.
நன்றி வ.ந.கிரிதரன்  அவர்களுக்கு

large.IMG_4063.jpeg.a7b6618fcea490234c458948dd441738.jpeg

Edited by Nathamuni
  • Like 2
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நாதம்.

யாழ் இந்துக்கு அருகில் மனோகரா படமாளிகை இருந்ததால் நிறைய படங்கள் அங்கு பார்த்திருக்கிறேன்.

சிறு வயதிலேயே மறக்க முடியாத கிளுகிளுப்பான இரண்டு படங்கள் பார்த்தது இன்னமும் கண்ணுக்குள் ஓடுகிறது.

அதுசரி இந்த கந்தர்மட கூட்டத்தில்   @தமிழ் சிறி இல்லையோ?

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இலங்கையில் இருக்கும் போது... விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் 
மிகக் குறைவான படங்களே பார்த்திருந்தாலும்,
மனோகரா தியேட்டரில் உலகம் சுற்றும் வாலிபன் படம் பார்த்ததை மறக்க முடியாது.

மேலும் இந்தத் திரையரங்கில் இருவர் மட்டுமே... (புது தம்பதிகள், காதலர்கள்)
அமர்ந்து பார்க்கக் கூடியதாக பெட்டி ( Box) வடிவில் மறைப்பு செய்து 
சில இருக்கைகள் இருக்கும். அதே நேரம் இலங்கையில் இப்படி 
மறைப்பான ஆசனங்கள் வேறு திரை அரங்கில் இருந்ததா என்று தெரியவில்லை.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

நான் இலங்கையில் இருக்கும் போது... விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் 
மிகக் குறைவான படங்களே பார்த்திருந்தாலும்,
மனோகரா தியேட்டரில் உலகம் சுற்றும் வாலிபன் படம் பார்த்ததை மார்க்க முடியாது.
மேலும் இந்தத் திரையரங்கில் இருவர் மட்டுமே... (புது தம்பதிகள், காதலர்கள்)
அமர்ந்து பார்க்கக் கூடியதாக பெட்டி வடிவில் மறைப்பு செய்து 
சில இருக்கைகள் இருக்கும். அதே நேரம் இலங்கையில் இப்படி 
மறைப்பான ஆசனங்கள் வேறு திரை அரங்கில் இருந்ததா என்று தெரியவில்லை.

பம்பலப்பிட்டி மஜஸ்டிக் தியேட்டரில் இருந்தது. 

நாலு சீற் இருக்கும். இதில அநுபவம் மிக்கவர்கள், நாலு சீற்றையும் வாங்கி, பெட்டையோட தனிய போவீனம்!!

😎😂😜

Link to comment
Share on other sites

28 minutes ago, தமிழ் சிறி said:

மேலும் இந்தத் திரையரங்கில் இருவர் மட்டுமே... (புது தம்பதிகள், காதலர்கள்)
அமர்ந்து பார்க்கக் கூடியதாக பெட்டி ( Box) வடிவில் மறைப்பு செய்து 
சில இருக்கைகள் இருக்கும். அதே நேரம் இலங்கையில் இப்படி 
மறைப்பான ஆசனங்கள் வேறு திரை அரங்கில் இருந்ததா என்று தெரியவில்லை.

கொழும்பில் ரீகல் திரையரங்கிலும் இவ்வாறான Box சீட்டுகள் இருந்தன என எனக்கு 1000 வீதம் தெரியும். அது  எப்படி இப்படி உறுதியாக சொல்ல முடிகிறது  எனக் கேட்க கூடாது 

@Nathamuni இந்த ஆக்கத்தை எழுதியவர் யார்? நீங்களா? இல்லை எனில் மூலத்தை குறிப்பிடுங்கள் 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

கொழும்பில் ரீகல் திரையரங்கிலும் இவ்வாறான Box சீட்டுகள் இருந்தன என எனக்கு 1000 வீதம் தெரியும். எப்படி இப்படி உறுதியாக சொல்ல முடிகிறது எனக் எனக் கேட்க கூடாது 

நீங்கள், யாரையோ  உள்ளே  கூட்டிக் கொண்டு  போய்... 
கசமுசா பண்ணியிருக்கிறியள் எண்டு எங்களுக்கு தெரியும். 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, நிழலி said:

@Nathamuni இந்த ஆக்கத்தை எழுதியவர் யார்? நீங்களா? இல்லை எனில் மூலத்தை குறிப்பிடுங்கள் 

இதுதான் மூலம் என்று நினைக்கிறன் https://iravie.com/யாழ்-நகரத்துத்-திரையரங்-2/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, நிழலி said:

@Nathamuni இந்த ஆக்கத்தை எழுதியவர் யார்? நீங்களா? இல்லை எனில் மூலத்தை குறிப்பிடுங்கள் 

51ம் ஆண்டு திறக்கேக்க நிண்டனீயளே எண்டு அடுத்த கேள்வி வருமே?

இது யாழ் இந்து குறூப்புகிலாள வந்தது. முகநூலா இருக்கலாம்.

அட இந்தா பெருமாள் தந்துவிட்டார்.

நன்றி @பெருமாள்

அது, சரி.... ரீகல்... சிங்களத்து சின்னக்குயில் தானே... சிங்களம் நல்லா கதைப்பன் எண்ட போதே... ஒரு டவுட் இருந்தது. டியூசன் எடுத்திருப்பியள்... 😜

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு

கெல்கா Helha என்று ஒரு ஆங்கில படம். தொடங்கியது முதல் முடியும்வரை (90%படம்) உடுப்பே இல்லாமல் நடித்திருந்தனர்..

நண்பர்களுடன் கலரிக்கு போக கலைத்துவிட்டார்கள்.

முதலாம்வகுப்பு ரிக்கட் எடுத்து வாணீர் வடியவடிய பார்த்த படம்.

இதே மாதிரி த ஐடியல் மரீட்ஸ் The Idial Marriage என்றொரு படம். எப்படி உடலுறவு கொண்டு பிள்ளை பெறுவது என்பதை அப்பிடியே காட்டுகிறார்கள்.(இது எந்த படமாளிகை என்பது நினைவில்லை)

இந்த இரு படங்களையும் பார்த்தவர்கள் கை தூக்குங்கோ.

பார்க்காதவர்கள் முயற்சி பண்ணுங்கள்.

பின் விளைவுகளுக்கு ஈழப்பிரியன் பொறுப்பல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

@Nathamuni இந்த ஆக்கத்தை எழுதியவர் யார்? நீங்களா? 

என்ன கதை இது?
 
உங்களுக்கு @Nathamuni பார்த்தால் 65 சதத்துக்கு டிக்கெட் வாங்கும் காலத்து ஆள் மாதிரியா படுகிறது🤣.

ஆனால்  பம்பலபிட்டி மஜெஸ்டிக் சினிமாவில் படம் பார்த்தேன் என்பதன் மூலம் தன் வயதை கோடி காட்டி விட்டார்.

இனி மரியாதையா நாதம் அண்ணை எண்டுதான் கூப்பிடப்போறன்🤣.

47 minutes ago, ஈழப்பிரியன் said:

கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு

கெல்கா Helha என்று ஒரு ஆங்கில படம். தொடங்கியது முதல் முடியும்வரை (90%படம்) உடுப்பே இல்லாமல் நடித்திருந்தனர்..

நண்பர்களுடன் கலரிக்கு போக கலைத்துவிட்டார்கள்.

முதலாம்வகுப்பு ரிக்கட் எடுத்து வாணீர் வடியவடிய பார்த்த படம்.

இதே மாதிரி த ஐடியல் மரீட்ஸ் The Idial Marriage என்றொரு படம். எப்படி உடலுறவு கொண்டு பிள்ளை பெறுவது என்பதை அப்பிடியே காட்டுகிறார்கள்.(இது எந்த படமாளிகை என்பது நினைவில்லை)

இந்த இரு படங்களையும் பார்த்தவர்கள் கை தூக்குங்கோ.

பார்க்காதவர்கள் முயற்சி பண்ணுங்கள்.

பின் விளைவுகளுக்கு ஈழப்பிரியன் பொறுப்பல்ல.

இப்ப எத்தினை hub இதுக்கெண்டே இருக்கு. HD, 4K, 8K, VR, AR வரைக்கும் வந்துட்டு.

இப்ப போய் உந்த புள்ளி புள்ளி ஈஸ்மண்ட் கலர் கண்றாவிய ரெக்கெமண்ட் பண்ணுறியளே ஐயா, நியாயமா, தர்மமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அது, சரி.... ரீகல்... சிங்களத்து சின்னக்குயில் தானே... சிங்களம் நல்லா கதைப்பன் எண்ட போதே... ஒரு டவுட் இருந்தது. டியூசன் எடுத்திருப்பியள்

போறது படம் பார்க்க இல்லைத்தானே. படம் சிங்களமோ, வங்காலியோ, அமெசன் பழங்குடி மொழியோ…

பிகு

பிற்காலத்தில் ரீகலில் ஹிந்தி படமும் ஓடியது?

@Nathamuni நாதம் அண்ணை, ஒரு வினயமான வேண்டுகோள். மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். இதை எங்கள் மண் பகுதியில் இருந்து வேறு பொருத்தமான பகுதிக்கு மாற்றிவிடலாம் என்பது என் யோசனை.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, goshan_che said:

இப்ப எத்தினை hub இதுக்கெண்டே இருக்கு. HD, 4K, 8K, VR, AR வரைக்கும் வந்துட்டு.

இப்ப போய் உந்த புள்ளி புள்ளி ஈஸ்மண்ட் கலர் கண்றாவிய ரெக்கெமண்ட் பண்ணுறியளே ஐயா, நியாயமா, தர்மமா? 

இது 1969-70 கதை.

இப்பவெல்லாம் நீங்க சொல்வது போல விரல் நுனியில் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இதுதான் மூலம் என்று நினைக்கிறன் https://iravie.com/யாழ்-நகரத்துத்-திரையரங்-2/

நன்றி வ.ந.கிரிதரன்  அவர்களுக்கு

இதை இங்கு ஒட்டிய நாதம்ஸ் , கந்தர்மட காங்ஸ் நன்றி.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, நிலாமதி said:

கந்தர்மட காங்ஸ்

தூக்கிபோட பிடிச்ச மாதிரி சரியா நாலு பேர், இதில இது ஒரு கேங்காம்🤣

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, நிலாமதி said:

கந்தர்மட காங்ஸ்

எதுக்கும் ஒரு அளவிருக்கு கண்டியளோ......உது ஓவர் பில்டப் 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

தூக்கிபோட பிடிச்ச மாதிரி சரியா நாலு பேர், இதில இது ஒரு கேங்காம்🤣

5 minutes ago, குமாரசாமி said:

எதுக்கும் ஒரு அளவிருக்கு கண்டியளோ......உது ஓவர் பில்டப் 🤣

5 minutes ago, குமாரசாமி said:

எதுக்கும் ஒரு அளவிருக்கு கண்டியளோ......உது ஓவர் பில்டப் 🤣

50 minutes ago, நிலாமதி said:

நன்றி வ.ந.கிரிதரன்  அவர்களுக்கு

இதை இங்கு ஒட்டிய நாதம்ஸ் , கந்தர்மட காங்ஸ் நன்றி.

இத்தனைக்கும் ஒறிஜினல் கந்தர்மடம் பேசாமலிருக்குது.

  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ  இவர்கள் ஒரிஜினல்  காங்ஸ்  இல்லையா ? புகுந்த வீடா ?   ஒரிஜினல்ஸ்  மன்னிக்கவும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che @நிழலி

முதலுக்கு மோசம் எண்டு நிழலி எஸ்.

மஜெஸ்டிக் தியேட்டரை வைச்சு வயசா?  தாரு உங்கட மற்ஸ் வாத்தியார், சாமீயார்: பரமார்த்த குருவாய் இராது!!

நிழலியண்ணரிலும் குறைவு தான் 😜🤣

51 minutes ago, goshan_che said:

தூக்கிபோட பிடிச்ச மாதிரி சரியா நாலு பேர், இதில இது ஒரு கேங்காம்🤣

அட, இவரிண்ட எரிச்சலப் பாரூங்கோ!

ப்பானை பனீரெண்டீல வையுங்கோ!!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

இதை இங்கு ஒட்டிய நாதம்ஸ் , கந்தர்மட காங்ஸ் நன்றி.

1 hour ago, goshan_che said:

தூக்கிபோட பிடிச்ச மாதிரி சரியா நாலு பேர், இதில இது ஒரு கேங்காம்🤣

42 minutes ago, குமாரசாமி said:

எதுக்கும் ஒரு அளவிருக்கு கண்டியளோ......உது ஓவர் பில்டப் 🤣

35 minutes ago, ஈழப்பிரியன் said:

இத்தனைக்கும் ஒறிஜினல் கந்தர்மடம் பேசாமலிருக்குது.

19 minutes ago, நிலாமதி said:

அப்போ  இவர்கள் ஒரிஜினல்  காங்ஸ்  இல்லையா ? புகுந்த வீடா ?   ஒரிஜினல்ஸ்  மன்னிக்கவும்.

என்னம்மா அங்க சத்தம் | Facebook

என்ன... அங்க, சத்தம். 😂

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

மஜெஸ்டிக் தியேட்டரை வைச்சு வயசா?  தாரு உங்கட மற்ஸ் வாத்தியார், சாமீயார்: பரமார்த்த குருவாய் இராது!!

அது காண்டம் பாக்கிற மாரி ஒரு கணக்கு. சொல்லி தர ஏலாது🤣.

ஆனால் வயசை 3 வருட margin of error either side உடன் கணித்து விட்டேன் அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

அது காண்டம் பாக்கிற மாரி ஒரு கணக்கு. சொல்லி தர ஏலாது🤣.

ஆனால் வயசை 3 வருட margin of error either side உடன் கணித்து விட்டேன் அண்ணா.

அப்ப நான் இன்னும் நாதத்திற்கு "அய்யா" தானா அல்லது "அங்கிளா"😎?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Justin said:

அப்ப நான் இன்னும் நாதத்திற்கு "அய்யா" தானா அல்லது "அங்கிளா"😎?

அண்ணா😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

அண்ணா😎

ம்..பதவியிறக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, goshan_che said:

அண்ணா😎

உடான்ஸ் சுவாமியார் என்றாலே வயசெல்லாம் கடந்த மகோன்னத நிலை!

அது போக, ரதியக்காவோடையும் போய், ஆண்ட்டி எண்டு கொண்டு அடம் பிடிக்கிறியள்.

அநுராதபுரம் கதையைப் பிடிச்சு தொங்கிறியள்.

உதென்ன விசயம், நடக்குது🤔.

எங்கண்ட சாமீயார், கைலாசா போகப் போறாரோ அல்லது, சரவணபவா ஆச்சிரமத்தை மடக்கப் போறாரா?

இளமை ததும்பும் எண்ணங்களும், கனவுகளும்!!!

நித்தியானந்தர், வயசு போவதை பீல் பண்ணக் கூடாது எண்டுதான், சின்னப்பெட்டைகளா பக்கதில வைச்சிருக்கிறாராம். இப்பெல்லாம், ரஞ்சிதா தூரத்தில!!

வாழ்த்துக்கள். உங்கட ஆசைய ஏன் கெடுப்பான், தாத்தா!! 😂🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

உடான்ஸ் சுவாமியார் என்றாலே வயசெல்லாம் கடந்த மகோன்னத நிலை!

அது போக, ரதியக்காவோடையும் போய், ஆண்ட்டி எண்டு கொண்டு அடம் பிடிக்கிறியள்.

அநுராதபுரம் கதையைப் பிடிச்சு தொங்கிறியள்.

உதென்ன விசயம், நடக்குது🤔.

எங்கண்ட சாமீயார், கைலாசா போகப் போறாரோ அல்லது, சரவணபவா ஆச்சிரமத்தை மடக்கப் போறாரா?

இளமை ததும்பும் எண்ணங்களும், கனவுகளும்!!!

நித்தியானந்தர், வயசு போவதை பீல் பண்ணக் கூடாது எண்டுதான், சின்னப்பெட்டைகளா பக்கதில வைச்சிருக்கிறாராம். இப்பெல்லாம், ரஞ்சிதா தூரத்தில!!

வாழ்த்துக்கள். உங்கட ஆசைய ஏன் கெடுப்பான், தாத்தா!! 😂🤣

இமயமலை போறம்…மூலிகை வலிக்கிறம்…பரட்டை மாரி சும்மா பறந்து பறந்து பைட் சீன் பண்றம்🤣

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.