Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இலங்கை பயணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இலங்கை பயணம்

2.jpg

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று இலங்கைக்கு செல்கிறார். இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் நூலகம், கலாச்சார மையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்கிறார்.

மேலும் யாழ்ப்பாணம் மற்றும் திரிகோணமலையில் எஸ்.பி.ஐ. வங்கி கிளைகளை நிர்மலா சீதாராமன் திறந்து வைக்க உள்ளார். அவரது இந்த பயணத்தின்போது இலங்கையில் உள்ள மத ஸ்தலங்களில் சூரிய மின்சக்தி உற்பத்திக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதில் பவுத்த உறவுகளை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு சார்பில் 82.40 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

https://akkinikkunchu.com/?p=259795

நாட்டை வந்தடைந்தார் இந்திய நிதி அமைச்சர்

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று புதன்கிழமை (01) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.  

கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை வருகைத் தந்த இந்திய நிதி அமைச்சரை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள் வரவேற்றுள்ளனர்.

image_7eb178e8b4.jpg

இதற்கமைய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், இ.தொ.காவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், இ.தொ.காவின் தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். 

image_a0d81f9e04.jpg

மலையக மக்களுக்கு அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'நாம் 200' நிகழ்வு நாளை (02) வியாழக்கிழமை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.

அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அழைப்பையேற்று இந்நிகழ்வில் இந்திய அரசின் பிரதிநிதியாகவே இந்திய நிதி அமைச்சர் பங்கேற்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

image_eeaec33215.jpg

image_3251b2b5dc.jpg
 

https://www.tamilmirror.lk/செய்திகள்/நாட்டை-வந்தடைந்தார்-இந்திய-நிதி-அமைச்சர்/175-327141

  • கருத்துக்கள உறவுகள்

கண்டியில் மல்வத்தை மகாநாயக்கரை சந்தித்தார் இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

image

இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டியில் மல்வத்தை மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரை இன்று புதன்கிழமை (01) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இவர் மகாநாயக்கருடனான தனது சந்திப்பின் போது இலங்கை மக்களுடனான இந்திய நட்புறவை  மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவின் நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் நாளை வியாழக்கிழமை (2) இலங்கையில் உள்ள மத ஸ்தலங்களின் சூரிய மின்மயமாக்கலுக்கான  ஒப்பந்தத்தின் பரிமாற்றத்தில் கலந்து கொள்ள உள்ளதாகவும் அதில் பௌத்த உறவுகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட 107.47 கோடி ரூபாயில் 82.40 கோடி ரூபாயை இந்தியா ஒதுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் பரிமாற்றப்படும் என இந்தியாவின் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவுடனான கலாசார உறவுகளையும் இரு நாடுகளுக்கிடையிலான பாரம்பரியத்தையும் மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் அங்கீகரித்தார்.

மேலும் இந்தியா வழங்கிய பொருளாதார உதவிகளுக்கு  நன்றி தெரிவித்த அவர் இலங்கையின்  பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு உதவுவதற்கு முதலில்  கைகோர்த்த நாடு இந்தியாவே ஆகும் எனவும் தெரிவித்தார். 

இதனையடுத்து இந்திய நிதியமைச்சர் கண்டியில் சியாம் பிரிவின் அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரதனையையும் சந்தித்து கலந்துரையாடினார்.

பின்னர் இந்திய நிதியமைச்சர் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளின் தொடர்ச்சியான பாரம்பரியம் குறித்து விவாதித்தார்.

இந்தியாவின் நிதியமைச்சர் இலங்கையில் உள்ள மத வழிபாட்டுத் தலங்களின் சூரிய மின்மயமாக்கல் திட்டம் தொடர்பாகவும் கூறினார்.

மேலும் மகாநாயக்க தேரர்கள் இந்தியாவுக்கு உதவிய விடயங்களுக்காக நன்றி தெரிவித்ததுடன் அவர்களின் ஆற்றல் தேவைகளுக்கு இது ஒரு முக்கிய நடவடிக்கை என்றும் சுட்டிக்காட்டினார்.

கண்டியில் மல்வத்தை மகாநாயக்கரை சந்தித்தார் இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் | Virakesari.lk

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, பிழம்பு said:

இந்தியாவின் நிதியமைச்சர் இலங்கையில் உள்ள மத வழிபாட்டுத் தலங்களின் சூரிய மின்மயமாக்கல் திட்டம் தொடர்பாகவும் கூறினார்.

நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க இது தேவையா?

 

  • கருத்துக்கள உறவுகள்

விகாரைக்கான கரன்ட் பில்லு எக்கசக்கம் கண்டியலோ.. நாலு கோயில இடிச்உ புத்தர் சிலை வைக்கத்தான் இருக்கு..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

விகாரைக்கான கரன்ட் பில்லு எக்கசக்கம் கண்டியலோ.. நாலு கோயில இடிச்உ புத்தர் சிலை வைக்கத்தான் இருக்கு..

அப்பிடியே தமிழர் அதிகமாக வசிக்கும் பகுதிகளிலும் புத்த விகாரைகள் அமைக்க நிதி மாமி உதவி செய்யணும்.

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பு மாமா அபிஷ்டு.

சதா ஷிரீ லங்கா போறார்….

சிங்களா கிட்ட வாங்கிண்டு….

அஷடு வழிஞ்சுண்டு வாறார்….

அதான் இந்த வாட்டி தெல்-பிராம் மாமிய அனுபிச்சுண்டுடிருக்கார் ஜி.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிழம்பு said:

இந்தியாவின் நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் நாளை வியாழக்கிழமை (2) இலங்கையில் உள்ள மத ஸ்தலங்களின் சூரிய மின்மயமாக்கலுக்கான  ஒப்பந்தத்தின் பரிமாற்றத்தில் கலந்து கொள்ள உள்ளதாகவும் அதில் பௌத்த உறவுகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட 107.47 கோடி ரூபாயில் 82.40 கோடி ரூபாயை இந்தியா ஒதுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

82 கோடி புத்தவிகாரைகளுக்கு என்றால் வடக்குக் கிழக்கில் அத்து மீறிக்கட்டப் பட்ட விகாரைகளுக்குமாகத்தான இருக்கும் மிச்ச 25 கோடியில் கிறிஸ்தவதேவாலயங்கள் பள்ளிவாசல்கள் போக ஏதாவது மிஞ்சியிருந்தால் ஏதாவது ஆங்சநேயர் கோவிலுக்கோ அல்லது சீத எலியாவுக்கு கொங்சம் கைகாட்டிவிட்டுப் போவார் அவ்வளவுதான். நாம சுpனாக்காரனோடு பேசத்தான் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, புலவர் said:

82 கோடி புத்தவிகாரைகளுக்கு என்றால் வடக்குக் கிழக்கில் அத்து மீறிக்கட்டப் பட்ட விகாரைகளுக்குமாகத்தான இருக்கும் மிச்ச 25 கோடியில் போக ஏதாவது மிஞ்சியிருந்தால் ஏதாவது ஆங்சநேயர் கோவிலுக்கோ அல்லது சீத எலியாவுக்கு கொங்சம் கைகாட்டிவிட்டுப் போவார் அவ்வளவுதான். நாம சுpனாக்காரனோடு பேசத்தான் வேண்டும்.

"கிறிஸ்தவதேவாலயங்கள் பள்ளிவாசல்கள்" RSS காறருக்கு வேப்பங்காய், நிலவரம்  அப்படியிருக்க, நீங்களோ அவர் கிறீஸ்தவர்களுக்கு கொடுப்பதாகக் கூறுவது ஓவர் பில்ட்அப்தானே...😀

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

கிறிஸ்தவதேவாலயங்கள் பள்ளிவாசல்கள்" RSS காறருக்கு வேப்பங்காய், நிலவரம்  அப்படியிருக்க, நீங்களோ அவர் கிறீஸ்தவர்களுக்கு கொடுப்பதாகக் கூறுவது ஓவர் பில்ட்அப்தானே...😀

மிச்ச 25 கோடியில் என்னதான் செய்து விட முடியும் மதநல்லிணக்கம் என்ற போர்வையில் தெளித்து விட்டுப் போவார்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, புலவர் said:

மிச்ச 25 கோடியில் என்னதான் செய்து விட முடியும் மதநல்லிணக்கம் என்ற போர்வையில் தெளித்து விட்டுப் போவார்.

25 கோடியும் புள்ளீங்கோக்களுக்குத்தான்..

😀

 

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

திருக்கோணேஸ்வரத்திற்கு விஜயம் மேற்கொண்டார் நிர்மலா சீதா ராமன்!

திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை  திருக்கோணேஸ்வரம் கோயிலில் இடம்பெற்ற  விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டிருந்தார்.

குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் முக்கியஸ்தர்கள் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன் குறித்த நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவும்  பங்கேற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

spacer.png

spacer.png

spacer.png

IMG_2921-scaled.jpg?resize=600,338&ssl=1

IMG_2958-scaled.jpg?resize=600,338&ssl=1

https://athavannews.com/2023/1356780

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

நிர்மலா சீதாராமன்  கலந்துகொள்ளும் நிகழ்வுக்கு என்னை அழைக்காதது வேதனையளிக்கிறது!

இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொள்ளும் ”நாம்-200″ என்ற விழாவுக்கு என்னை அழைக்காதது வேதனையளிக்கின்றது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்  மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”  எனது மாவட்டம் தலைநகர் கொழும்பில் நடைபெறும், “நாம்-200” என்ற விழா சிறப்புற வாழ்த்துகிறேன். எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதால் விழாவில் கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன். இன்று நண்பகல், இதுபற்றி அறிந்துக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, “நான் என் கையெழுத்தில், உடனடியாக அழைப்பு கடிதம் அனுப்புகிறேன். கலந்துக்கொள்ளுங்கள்”. என்று கூறினார்.

“உங்கள் அரசாங்க கட்சிகள் விழாவாக இது நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை நன்கு விளங்குகின்றது. ஆகவே, அங்கே வந்து அதில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட நான் காரணமாக இருக்க விரும்பவில்லை. ஆகவே நான் கலந்துக்கொள்ள வில்லை” என ஜனாதிபதியின் கருத்தை நாகரீகமாக நான் மறுத்து விட்டேன்.

பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் ஒரு விசேட குழுவை, இந்திய வம்சாவளி மலையக மக்கள் தொடர்பில் அமைத்தமை தொடர்பில் அதிகாரபூர்வமாக அறிவிப்பதாகவும், “அக்குழுவில் பங்கு பெற்று உங்கள் யோசனைகளை முன் வையுங்கள்” என ஜனாதிபதி விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார். உங்கள் அரசாங்கம் மக்கள் தொடர்பில் செய்யும் நல்ல காரியங்களை நாம் எப்போதும் வரவேற்போம் என பதிலளித்தேன்.

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், கொழும்பு மாவட்ட எம்பி என்ற முறைகளில் எனக்கு அழைப்புகள் தரப்படாவிட்டாலும்கூட, இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்ட இந்திய, தமிழக அரசியல் தலைவர்களை “வருக, வருக”  என இலங்கை நாட்டுக்கும், தலைநகர் கொழும்புக்கும் வரவேற்கிறேன்”  இவ்வாறு  மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2023/1356756

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, goshan_che said:

சுப்பு மாமா அபிஷ்டு.

சதா ஷிரீ லங்கா போறார்….

சிங்களா கிட்ட வாங்கிண்டு….

அஷடு வழிஞ்சுண்டு வாறார்….

அதான் இந்த வாட்டி தெல்-பிராம் மாமிய அனுபிச்சுண்டுடிருக்கார் ஜி.

சார்! கொழும்பிலையிருந்து இந்தியாவுக்கு கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறவையும் மாமி சந்திப்பாவா? 🤣 

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, குமாரசாமி said:

சார்! கொழும்பிலையிருந்து இந்தியாவுக்கு கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறவையும் மாமி சந்திப்பாவா? 🤣 

அபாஷ்ஷாரம்….அபஷ்ஷாரம்…வாயிலடியுங்கோ….வாயிலடியுங்கோ…

மாமி வெங்காயம், பூண்டு ஷாப்பிடாதா ஷுத்த மாமியாக்கும்…இவா ஆத்துக்கெல்லாம் போமாட்டான்னா.

மேல பாக்கலியா…இந்த மனோ இருக்காரோ இல்லோ…அவரகூட மாமி கண்டுகலைய். 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

November 1, 2023
FB_IMG_1698989740596.jpg?fit=1080%2C608&

இந்தியாவின் நிதி மற்றும் பல்தேசிய நிறுவனங்களின் விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்தார்.

யாழ்ப்பாணம் பலாலியில் உள்ள விமான படையினரின் விமான தளத்தின் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு சென்ற  அமைச்சரை வடக்கு மாகாண ஆளுநர் பிஎஸ்எம் சாள்ஸ், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்றனர்.

அதன்போது, இந்திய அமைச்சருடன் இந்திய தூதுவர் கோபால் பாக்லே, இலங்கை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உள்ளிட்ட இந்திய உயர்மட்ட குழுவும் சென்றிருந்தது.

குறித்த குழுவினர் யாழ்ப்பாணம் கலாச்சார மையத்தை பார்வையிட்டதுடன், நல்லூர் கந்தசுவாமி கோயில் மற்றும் யாழ் பொது நூலகம் ஆகியவற்றிக்கும் சென்றனர்.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளையையும் (SBI) திறந்து வைத்தார்.

IMG-20231103-WA0036.jpg?resize=720%2C333

 

https://globaltamilnews.net/2023/196874/

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் “ஸ்டேட் பாங் ஒப் இந்தியா” வின் கிளையை திறந்து வைத்தார் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

03 NOV, 2023 | 12:12 PM
image

இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (3) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.

யாழ்ப்பாணம் பலாலியில் உள்ள விமான படையினரின் விமான தளத்தின் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு வந்த அமைச்சரை வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்றனர்.

yal-2.gif

இதன்போது, இந்திய அமைச்சருடன் இந்திய தூதுவர் கோபால் பாக்லே, இலங்கை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உள்ளிட்ட இந்திய உயர்மட்ட குழுவும்  வருகை தந்தது.

குறித்த குழுவினர் யாழ்ப்பாணம் கலாச்சார மையத்தை பார்வையிட்டதுடன், நல்லூர் கந்தசுவாமி கோயில் மற்றும் யாழ் பொது நூலகம் ஆகியவற்றிக்கும் சென்றனர்.

yal-1.gif

அதேவேளை இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் யாழ்ப்பாணத்தில் “ஸ்டேட் பாங் ஒப் இந்தியா” வின் கிளையையும் (SBI) திறந்து வைத்தார்.

yal-3.gif

https://www.virakesari.lk/article/168407

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண கலாச்சார மண்டபம் மற்றும் யாழ் நூலகத்திற்கு இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விஜயம்

03 NOV, 2023 | 11:41 AM
image

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்திற்கும் யாழ். நூலகத்திற்கும் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

jaff-4.gif

jaff-7.gif

jaff-6.gif

jaff-3.gif

jaff-5.gif

 

jaff-8.gif

படப்பிடிப்பு : எம். நியூட்டன்

https://www.virakesari.lk/article/168400

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இசைக்கருவியை வடிவமைப்பதற்கு ஆட்கள் இருக்கின்றார்களா? என வினவிய இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Published By: DIGITAL DESK 3     03 NOV, 2023 | 04:32 PM

image

(எம்.நியூட்டன்)

யாழ்.இசைக்கருவியை  வடிவமைப்பதற்கு ஆட்கள் இருக்கின்றார்களா? என வினவிய இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார். மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியாவின் நிதியமைச்சர் இன்று வெள்ளிக்கிழமை யுhழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். 

இந்த விஜயத்தின்போது யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு வருகைதந்து நூலகத்தினைப் பார்வையிட்டார். இதன்போது, நூலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த யாழ் இசைக்கருவியை பார்வையிட்டதுடன், இக் கருவியை இசைக்க முடியுமா எனவும் இதனை வடிவமைப்பதற்கு ஆட்கள் இருக்கிறார்களா? எனவும் யாழை இசைப்பதற்கு ஆட்கள் இருக்கின்றார்களா? இசைக்கக்கூடியதாக உள்ளதா? ஆர்வமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு யாழ்.மாநகர சபை ஆணையாளர் ஆம் என பதிலளித்ததுடன் அண்மைக்காலத்தில் தான் இத்தகைய யாழை ஒருவர் வடிவமைத்து காண்பித்திருந்தார் என்று கூறினார்.

இந்திய நிதியமைச்சர் யாழை இசைக்கருவியைப் பற்றி கேட்டறிந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/168445

  • கருத்துக்கள உறவுகள்

உலகளவில் தற்போது ஹீரோவான நல்லூர் கந்தசுவாமி கோயில் பூசகர் பிரசன்னா குருக்கள் (Video)

நல்லூர் கந்தசுவாமி கோயில் பூசகர்களில் ஒருவரான விஸ்வ பிரசன்னா குருக்களை இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய தினம் (03.11.2023) நல்லூர் கந்தசுவாமி கோயிலில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதன்போது அங்கு கூடியிருந்தவர்களிடம் நல்லூர் கந்தசுவாமி கோயில் பூசகரின் பெயர் என்ன என்று கேள்வி எழுப்பி அறிந்து கொண்ட அவர் பிரசன்னா குருக்கள் உலகளவில் தற்போது ஹீரோ என்றார்.

ஆலய மஹோற்சவத்தின் போது கட்டியம் கூறுவதையும் புகழ்ந்து பராட்டினார்.

நல்லூர் கந்தசுவாமி கோயில் 25 நாள் மஹோற்சவத்தின் போது நடைபெறும் ஒருமுகத் திருவிழாவில் விஸ்வ பிரசன்னா குருக்களின் கணீர் குரலில் கட்டியம் சொல்லப்படும்.

அது சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் அதிக பார்வையாளர்களை ஈர்ப்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்ட SBI வங்கியினை இந்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று திறந்து வைத்துள்ளார்.

உலகளவில் தற்போது ஹீரோவான நல்லூர் கந்தசுவாமி கோயில் பூசகர் பிரசன்னா குருக்கள் (Video) | Nirmala Sitharaman Arrived In Jaffna

இரண்டாம் இணைப்பு

இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது அங்கு கூடியிருந்த சிறுவர் சிறுமியர்களுடன் கலந்துரையாடி அமைச்சர் புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளார். 

உலகளவில் தற்போது ஹீரோவான நல்லூர் கந்தசுவாமி கோயில் பூசகர் பிரசன்னா குருக்கள் (Video) | Nirmala Sitharaman Arrived In Jaffna

உலகளவில் தற்போது ஹீரோவான நல்லூர் கந்தசுவாமி கோயில் பூசகர் பிரசன்னா குருக்கள் (Video) | Nirmala Sitharaman Arrived In Jaffna

உலகளவில் தற்போது ஹீரோவான நல்லூர் கந்தசுவாமி கோயில் பூசகர் பிரசன்னா குருக்கள் (Video) | Nirmala Sitharaman Arrived In Jaffna

முதலாம் இணைப்பு

இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார்.

பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு வந்த அமைச்சரை வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்றுள்ளனர்.

இந்திய அமைச்சருடன், இந்திய தூதுவர் கோபால் பாக்லே, இலங்கை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உட்பட இந்திய உயர்மட்ட குழு வருகை தந்துள்ளது.

உலகளவில் தற்போது ஹீரோவான நல்லூர் கந்தசுவாமி கோயில் பூசகர் பிரசன்னா குருக்கள் (Video) | Nirmala Sitharaman Arrived In Jaffna

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம்

நவம்பர் முதலாம் திகதி முதல் மூன்று நாட்களுக்கு இந்திய அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் யாழ்ப்பாணம் கலாச்சார மையத்தை பார்வையிட்டதுடன், நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு செல்லவுள்ளதுடன் யாழ். பொது நூலகத்தையும் பார்வையிடவுள்ளதாக தெரியவருகிறது.

உலகளவில் தற்போது ஹீரோவான நல்லூர் கந்தசுவாமி கோயில் பூசகர் பிரசன்னா குருக்கள் (Video) | Nirmala Sitharaman Arrived In Jaffna

மேலும் யாழ்ப்பாணத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளையையும் (SBI) அவர் திறந்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://tamilwin.com/article/nirmala-sitharaman-arrived-in-jaffna-1698998468

 
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். விமான நிலையத்தினூடாக நாடு திரும்பினார் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்த இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை (03) யாழ் விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவிற்குப் பயணமானார்.

ni-1.gif

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் புதிய தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு வர்த்தக கண்காட்சியை இந்திய நிதியமைச்சர் பார்வையிட்டார்.

வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸும் இந் நிகழ்வில் கலந்துகொண்டு நிதியமைச்சரை சந்தித்தார்.

ni-9.gif

அதன் பின்னர் யாழ். நூலகம் மற்றும் நல்லூர் ஆலயத்திற்கு விஜயம் செய்த இந்திய நிதியமைச்சர் பின்னர் இந்திய ஸ்டேட் வங்கியின் (SBI) யாழ்ப்பாண கிளையின் திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

ni-5.gif

பின்னர் யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ்,

'அன்றிலிருந்து இன்றுவரை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நெருங்கிய உறவு இருந்ததையும், நாட்டின் தேவைக்காக அவர்கள் ஒருவரையொருவர் பல்வேறு வழிகளில் ஆதரித்ததையும் மரியாதையுடன் நினைவுகூர வேண்டும்' என்று கூறினார். 

ni-8.gif

மேலும் 'வடக்கிலும் இந்த நாட்டிலும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக வீடமைப்புத் திட்டங்கள் உள்ளிட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் வழங்கிய பங்களிப்புக்காகவும் குறிப்பாக இந்த மாகாணத்தின் அபிவிருத்திக்காகவும் நன்றி தெரிவிக்க வேண்டும்' என்றார்.

ni-3.gif

அத்துடன், எமது நாட்டுக்கு சர்வதேச நிதி உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கு இந்திய அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கியதை நினைவுகூர்ந்த ஆளுநர், இந்திய நிதியமைச்சரின் வருகை இந்த நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நெருக்கத்தை மேலும் வளர்க்க உதவும் எனவும் தெரிவித்தார்.

ni-2.gif

இந்த நிகழ்வுகளில் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உள்ளிட்ட குழுவினரும் கலந்துகொண்டனர்.

யாழ். விமான நிலையத்தினூடாக நாடு திரும்பினார் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
On 1/11/2023 at 06:42, கிருபன் said:

இலங்கையில் உள்ள மத ஸ்தலங்களில் சூரிய மின்சக்தி உற்பத்திக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

சூரிய பகவானுக்கு  பல் இல்லை என்வே அவருக்கு மெது வடை படைத்தேன் என்று லூசுத்தனமாக  முன்பு பத்திரிகைக்கு கூறிய நிர்மலா சீதாராமன் இப்போது சூரிய சக்தியில்  மின்சாரம் உற்பத்தி செய்யும் அறிவியல் ரீதியில் சிந்திப்பது வரவேற்க தக்கது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

சூரிய பகவானுக்கு  பல் இல்லை என்வே அவருக்கு மெது வடை படைத்தேன் என்று லூசுத்தனமாக  முன்பு பத்திரிகைக்கு கூறிய நிர்மலா சீதாராமன் இப்போது சூரிய சக்தியில்  மின்சாரம் உற்பத்தி செய்யும் அறிவியல் ரீதியில் சிந்திப்பது வரவேற்க தக்கது. 

😂இதெப்ப நடந்தது?

சுட்ட வடையா சுடாத வடையாமா படைத்தார்? சுடாத வடையாத் தான் இருக்கும், சூரியனிடம் ஹீலியம் குக்கர் இருக்குதல்லோ?

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Justin said:

😂இதெப்ப நடந்தது?

சுட்ட வடையா சுடாத வடையாமா படைத்தார்? சுடாத வடையாத் தான் இருக்கும், சூரியனிடம் ஹீலியம் குக்கர் இருக்குதல்லோ?

large.IMG_2827.jpeg.084996f299ebdc638eb4c42336e62ab2.jpeg

  • கருத்துக்கள உறவுகள்

கிணற்றை மூடிவைக்கக்கூடாது ஆலோசனை வழங்கிய இந்திய நிதியமைச்சர்

(எம்.நியூட்டன்)   

கிணற்றை மூடிவைக்கக்கூடாது  ஆலோசனை வழங்கிய இந்திய நிதியமைச்சர் மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியாவின் நிதியமைச்சர் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். 

இந்த விஜயத்தின்போது வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டிருந்தார் அதனைத் தொடர்ந்து வெளியில் வந்தபோது அங்கு கூடியிருந்த மக்களுடன் கலந்துரையாடி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். 

அதனைத் தொடர்ந்து வாகனத்தை நோக்கி சென்றபோது ஆலய வளாகத்தில் இருக்கின்ற கிணறு மூடப்பட்டிருந்தது இதனைக் கண்ணுற்ற இந்திய நிதியமைச்சர் ஏன் இந்தக் கிணறு மூடப்பட்டுள்ளது இதனை திறந்திருப்பதே சிறந்தது என ஆலோசனை வழங்கினார்.

இந்த சந்திப்பின்போது யாழ் மாநரக சபை ஆணையாளர் ஜெயசீலன், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்தியத் துணைத்தூதுவர் ராஜேஸ்நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரம் மற்றும் இலங்கை வெளிவிவகார இராஜங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிணற்றை மூடிவைக்கக்கூடாது ஆலோசனை வழங்கிய இந்திய நிதியமைச்சர் | Virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.