Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

3 மணி நேரங்களுக்கு முன்னர்

காஸா மீது இஸ்ரேல் நடத்திய கண்மூடித்தனமான குண்டுவெடிப்பால் சர்வதேச ஆதரவை இழக்கத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

செவ்வாயன்று நிதி திரட்டும் நிகழ்வில் அவரது பேச்சு, இஸ்ரேல் தலைமை மீதான அவரது வலுவான விமர்சனத்தை வெளிப்படுத்தியது.

அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் தாக்குதல்களை ஆரம்பித்ததில் இருந்து இஸ்ரேலுக்கு அசைக்க முடியாத ஆதரவை ஜோ பைடன் வழங்கியுள்ளார்.

அமெரிக்க ஆதரவை இஸ்ரேல் நம்பலாம் என்று அவர் மீண்டும் வலியுறுத்திய அதே வேளையில், அவர் அதன் அரசாங்கத்திற்கு நேரடி எச்சரிக்கையை விடுத்தார்.

"இஸ்ரேலின் பாதுகாப்பு அமெரிக்காவிடம் இருந்திருக்கலாம். ஆனால் தற்போது அது அமெரிக்காவை விடவும் தாண்டிவிட்டது. ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பா மற்றும் உலகின் பெரும்பாலான பகுதிகளை சார்ந்துள்ளது," என்று வாஷிங்டனில் தனது 2024 அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் நன்கொடையாளர்களிடம் அவர் கூறினார்.

"ஆனால் காஸா மீதான கண்மூடித்தனமான குண்டுவீச்சுகளால் இஸ்ரேல் அந்த ஆதரவை இழக்கத் தொடங்கியுள்ளது," என்று அவர் எச்சரித்தார்.

எவ்வாறாயினும், ஹமாஸை எதிர்கொள்வதன் அவசியம் குறித்து எந்த கேள்வியும் இல்லை என்றும், அவ்வாறு செய்வதற்கு இஸ்ரேலுக்கு "எல்லா உரிமைகளும்" இருப்பதாகவும் பைடன் கூறினார்.

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம்,REUTERS

போர் நிறுத்தத்துக்கு ஆஸி, நியூசிலாந்து, கனடா அழைப்பு

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளின் பிரதமர்கள் காஸாவில் "நிலையான போர் நிறுத்தத்திற்கு" ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

"இந்த போர் இடைநிறுத்தம் மீண்டும் தொடங்கப்படுவதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம் மற்றும் நிலையான போர் நிறுத்தத்தை நோக்கிய அவசர சர்வதேச முயற்சிகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறோம்" என்று மூவரும் ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்தனர்.

"இது ஒருதலைப்பட்சமாக இருக்க முடியாது. அனைத்து பணயக் கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்க வேண்டும், பாலத்தீன குடிமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும், ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும். காசாவின் எதிர்கால ஆட்சியில் ஹமாஸுக்கு எந்தப் பங்கும் இல்லை." என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

போர் நிறுத்தம் - ஐ.நா. பொதுச் சபை தீர்மானம்

காசாவில் தீவிரடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடி குறித்து உதவிப் பணியாளர்களின் கடுமையான எச்சரிக்கைகளுக்குப் பிறகு, ஐ.நா பொதுச் சபை செவ்வாய்க்கிழமை தாமதமாக தற்போதைய சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து உள்பட 153 உறுப்பு நாடுகள் அதற்கு ஆதரவாக வாக்களித்தன.

போர் நிறுத்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த பத்து நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. இங்கிலாந்து உட்பட 23 நாடுகள் வாக்களிக்கவில்லை.

https://www.bbc.com/tamil/articles/c51zd2lp2d7o

  • கருத்துக்கள உறவுகள்

$32 பில்லியனுக்கு  அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவியுள்ளதாக கூறப்படுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்மூடித்தனமான குண்டுவீச்சினால் இஸ்ரேல் உலகின் ஆதரவை இழக்க தொடங்கியுள்ளது - ஜோ பைடன்

Published By: RAJEEBAN    13 DEC, 2023 | 11:50 AM

image

காசாமீதான கண்மூடித்தனமானகுண்டுவீச்சு காரணமாக இஸ்ரேல் அமெரிக்காவின் ஆதரவை இழக்க தொடங்கியுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர்  இஸ்ரேலிற்கு எதிராக  ஜோபைடன் முன்வைத்துள்ள கடும் குற்றச்சாட்டு இது என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் பாதுகாப்பு விடயத்தில் அமெரிக்காவை நம்பியிருக்கலாம், ஆனால் தற்போது அது  அமெரிக்காவையும் தாண்டிய விடயம் ஐரோப்பிய ஒன்றியமும் முழு உலகமும் இஸ்ரேலிற்கு ஆதரவளிக்கின்றது என தெரிவித்துள்ள பைடன் எனினும் கண்மூடித்தனமான குண்டுவீச்சு காரணமாக இஸ்ரேல்  உலகின் ஆதரவை இழக்க தொடங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இஸ்ரேல் ஹமாசிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது குறித்து எந்த கேள்வியும் இல்லை எனவும் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி அதற்கான முழு உரிமையும்  இஸ்ரேலிற்குள்ளது  எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/171601

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் பொதுமக்களின் உயிர்களை காப்பாற்றுவது குறித்து இஸ்ரேல் கவனம் செலுத்தவேண்டும் - பைடன்

Published By: RAJEEBAN  15 DEC, 2023 | 11:28 AM

image
 
காசாவில் பொதுமக்களின்உயிர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து இஸ்ரேல் கவனம் செலுத்தவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அமெரிக்க ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இந்த வருட இறுதியுடன் இஸ்ரேல் ஹமாசிற்கு எதிரான தனது நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ளவேண்டும் என கருதுகின்றீர்களா என்ற கேள்விக்குபொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து இஸ்ரேல் கவனம் செலுத்தவேண்டும் என நான் விரும்புகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்

ஹமாசிற்கு  எதிரான நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என தெரிவிக்கவில்லை கவனமாகயிருக்கவேண்டும் என பைடன்தெரிவித்துள்ளார்.

இதேவேளை காசாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்களின் தீவிரதன்மையை குறைக்கவேண்டும் என வலியுறுத்தும் நோக்கத்துடன் வெள்ளை மாளிகை தனது முக்கிய அதிகாரியொருவரை இஸ்ரேலிற்கு அனுப்பிவைத்துள்ளது.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜக்சுலிவனே இஸ்ரேல் சென்றுள்ளார் - சுலிவன் இஸ்ரேலிய பிரதமர் உட்பட முக்கிய அதிகாரிகளை சந்தித்துள்ளார்.

பெஞ்சமின் நெட்டன்யாகும் ஜக்சுலிவனும்  மிகவும்தீவிரமான தாக்குதல்களை குறைத்து ஹமாசினை துல்லியமாக இலக்குவைக்கும் தாக்குதல்கள்  குறித்து பேச்சுவார்த்தைளை மேற்கொண்டுள்ளனர் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் தீவிரதன்மைகுறைந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து ஆராயப்பட்டதாக  வெள்ளை மாளிகையின் பேச்சாளர் ஜோன் கிர்பி தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/171755

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க பொருளாதாரம் தற்போது பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுக்கிறது, தனது செலவுகளுக்கான பணத்தினை திரட்டுவதில் கூட பெரும் நெருக்கடியினை சந்திக்கின்றது.

அமெரிக்கா இந்த போரின் ஆரம்பத்தில் கூறியது போல அமெரிக்க பொருளாதாரத்திற்கு உக்கிரேன் மற்றும் இஸ்ரேலிய யுத்ததினை  நடத்துவதற்கான பலம் உள்ளது என கூறியிருந்தது.

ஆனால் தற்போது அதன் சுருதி மாறுகிறது அதற்கு காரணம், அமெரிக்கா, இந்த இரு போர்களையும் தவறாக எடை போட்டுள்ளதே காரணம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்சநாள் சீனாவுக்கும் வெருட்டல்கள் விட்டுக்கொண்டு திரிஞ்சவை......இப்ப என்னமாதிரியெண்டு தெரியேல்லை? 😄

1 hour ago, vasee said:

பேரழிவுகளையெல்லாம் நியாயப்படுத்துவதற்கு என்னவெல்லாமோ செய்ய வேண்டி இருக்கிறது? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 15/12/2023 at 12:23, Kapithan said:

பேரழிவுகளையெல்லாம் நியாயப்படுத்துவதற்கு என்னவெல்லாமோ செய்ய வேண்டி இருக்கிறது? 

பல நூறு வருடங்களுக்கு முன் ஆரம்பித்தவர்கள் இன்னும் நிறுத்தவேயில்லை  🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 15/12/2023 at 09:26, vasee said:

ஆனால் தற்போது அதன் சுருதி மாறுகிறது அதற்கு காரணம், அமெரிக்கா, இந்த இரு போர்களையும் தவறாக எடை போட்டுள்ளதே காரணம்.

உங்கள் கருத்தை பார்த்தால் இந்த இரண்டு போரையும் அமெரிக்கா ஆரம்பித்தது போல இருக்கு. 

மாறாக அடாத்தாக மற்றவர் தேசங்களுக்குள் நுழைந்த அரக்கர்களை ஆதரிப்பது போன்று இருக்கு. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, விசுகு said:

உங்கள் கருத்தை பார்த்தால் இந்த இரண்டு போரையும் அமெரிக்கா ஆரம்பித்தது போல இருக்கு. 

மாறாக அடாத்தாக மற்றவர் தேசங்களுக்குள் நுழைந்த அரக்கர்களை ஆதரிப்பது போன்று இருக்கு. 

நாங்கள் படிக்கும் காலத்தில் ஒருவன் யாருக்கும் தெரியாமல் முகத்தை நெளிச்சு வாயை அப்பிடி இப்பிடி காட்டி வெறுப்பேத்தி நோண்டிக்கொண்டிருப்பான். நாங்களோ ஆத்திரம் தாங்காமல் படார் எண்டு ஒரு அடி விடுவம். அப்போது அவன் நல்ல பிள்ளையாகி விடுவான். நாங்கள் குற்றவாளியாக்கப்பட்டு விடுவோம். 

  • கருத்துக்கள உறவுகள்
On 15/12/2023 at 05:19, குமாரசாமி said:

கொஞ்சநாள் சீனாவுக்கும் வெருட்டல்கள் விட்டுக்கொண்டு திரிஞ்சவை......இப்ப என்னமாதிரியெண்டு தெரியேல்லை? 😄

இப்போ யேமன். அவர்கள் எல்லா கப்பல்களையும் தாக்குகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
45 minutes ago, nunavilan said:

இப்போ யேமன். அவர்கள் எல்லா கப்பல்களையும் தாக்குகிறார்கள்.

சங்கீதம் பாடின வாயும் சிரங்கு சொறிஞ்ச கையும் சும்மா இருக்காது எண்டது போல அமெரிக்கன் அண்ணனுக்கும் ஆருக்காவது தட்டிக்கொண்டிருக்காட்டில் பத்தியப்படாது கண்டியளோ...😄

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

நாங்கள் படிக்கும் காலத்தில் ஒருவன் யாருக்கும் தெரியாமல் முகத்தை நெளிச்சு வாயை அப்பிடி இப்பிடி காட்டி வெறுப்பேத்தி நோண்டிக்கொண்டிருப்பான். நாங்களோ ஆத்திரம் தாங்காமல் படார் எண்டு ஒரு அடி விடுவம். அப்போது அவன் நல்ல பிள்ளையாகி விடுவான். நாங்கள் குற்றவாளியாக்கப்பட்டு விடுவோம். 

ஒரு வகுப்பில் ஓர் மாணவர் தலைவர்

ஒரு ஊருக்கு ஒரு உள்ளூராட்சி தலைவர்

ஒரு நாட்டுக்கு ஒரு ஜனாதிபதி

உலகத்துக்கு ஒன்றென்றால் ஒரு நாடு

அப்படி இருந்தபடியால் தான் இன்று பிரான்ஸ் என்றொரு தேசம். அதில் நான் நிம்மதியாக வாழ்கிறேன். சாப்பிட்ட கோப்பையில் மலம் கழிக்க கூடாது அல்லவா அண்ணா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விசுகு said:

நன்றிக்கடனுக்காக  அவர்கள் செய்யும் கொடுமைகளை,தவறுகளை கண்டும் காணாமல் இருப்பதும் ஒரு வகை சுய நலம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

அப்படி இருந்தபடியால் தான் இன்று பிரான்ஸ் என்றொரு தேசம். அதில் நான் நிம்மதியாக வாழ்கிறேன். சாப்பிட்ட கோப்பையில் மலம் கழிக்க கூடாது அல்லவா அண்ணா ?

நீங்கள் இப்படி நிம்மதியாக வாழ உங்கள் நாடு (பிரான்ஸ்) எத்தனை நாடுகளை சுரண்டி அழித்து அந்தந்த நாட்டவர்களை வறுமைக்கோட்டிற்கு கீழ் கொண்டுவந்து விட்டிருக்கிறது என்பதை இலகுவாக மறந்துவிட்டீர்களே!!

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

நன்றிக்கடனுக்காக  அவர்கள் செய்யும் கொடுமைகளை,தவறுகளை கண்டும் காணாமல் இருப்பதும் ஒரு வகை சுய நலம் தான்.

எது கொடுமை என்பதை நான் அல்லவா உணரணும்??

7 hours ago, Eppothum Thamizhan said:

நீங்கள் இப்படி நிம்மதியாக வாழ உங்கள் நாடு (பிரான்ஸ்) எத்தனை நாடுகளை சுரண்டி அழித்து அந்தந்த நாட்டவர்களை வறுமைக்கோட்டிற்கு கீழ் கொண்டுவந்து விட்டிருக்கிறது என்பதை இலகுவாக மறந்துவிட்டீர்களே!!

இப்படி பார்த்தால் நானோ நீங்களோ உலகின் எந்த மூலையிலும் வாழமுடியாது. எல்லா நாடுகளுக்கும் எல்லா இன் மக்களுக்கும் இன்னொரு பக்கம் இருக்கு. எல்லோரும் தற்கொலை செய்து கொள்வோமா??

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

எது கொடுமை என்பதை நான் அல்லவா உணரணும்??

இப்படி பார்த்தால் நானோ நீங்களோ உலகின் எந்த மூலையிலும் வாழமுடியாது. எல்லா நாடுகளுக்கும் எல்லா இன் மக்களுக்கும் இன்னொரு பக்கம் இருக்கு. எல்லோரும் தற்கொலை செய்து கொள்வோமா??

நீங்கள் உங்கள் நாட்டில் நிம்மதியாக இருக்க விரும்பினால் மற்ற நாடுகளை சொறியாமல் இருக்கவேண்டும்!

காலனித்துவப்படுத்தப்பட்ட நாடுகளுக்கு ஒரே முகம்தான்!

  • கருத்துக்கள உறவுகள்
On 15/12/2023 at 03:26, vasee said:

அமெரிக்க பொருளாதாரம் தற்போது பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுக்கிறது, தனது செலவுகளுக்கான பணத்தினை திரட்டுவதில் கூட பெரும் நெருக்கடியினை சந்திக்கின்றது.

அமெரிக்கா இந்த போரின் ஆரம்பத்தில் கூறியது போல அமெரிக்க பொருளாதாரத்திற்கு உக்கிரேன் மற்றும் இஸ்ரேலிய யுத்ததினை  நடத்துவதற்கான பலம் உள்ளது என கூறியிருந்தது.

ஆனால் தற்போது அதன் சுருதி மாறுகிறது அதற்கு காரணம், அமெரிக்கா, இந்த இரு போர்களையும் தவறாக எடை போட்டுள்ளதே காரணம்.

இதற்கான ஆதாரத் தகவல்களை எங்கே எடுத்தீர்கள்😎?

அரசியல் ரீதியில் தூர நோக்கற்ற சிவப்பு கட்சியினர் எப்போதும் புரினின் மறைமுக வால்களாக இருப்பதால் அரசியல் எதிர்ப்பு உக்ரைனிய உதவிக்கெதிராக இருக்கிறது. இத்தகைய எதிர்ப்பு இன்னும் இஸ்ரேல் விடயத்தில் வலுப்பெறவில்லையென்பதைக் கவனிக்க வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
On 15/12/2023 at 19:13, vasee said:

www.treasurydirect.gov/instit/annceresult/press/preanre/2023/R_20231212_2.pdf

மேலே உள்ள கோப்பில் இந்த மாதம் 12 ஆம் திகதி வெளியான 15 மார்கழி 2023 இற்கான 30 வருட பணமுறி (2053) விற்பனை ஒப்பந்த விபரம் உள்ளது.

4.75%  ஆண்டு வட்டி விகிதத்தில் 30 ஆண்டுகளுக்கான கடன் பத்திர விற்பனை இடம்பெற்றது, ஏறத்தாழ 51 பில்லியன் கடன் பெறும் பத்திரம் வெறும் ஏறத்தாழ 21 பில்லியன் மட்டுமே விற்பனையாகியுள்ளது.

இதன் அர்த்தம் என்னவெனில் முதலீட்டாளர்கள் எதிர்வரும் ஆண்டுகளில் வட்டி விகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறார்களா?

2024 இல் அமெரிக்க பணவீக்கம் 2.4% விகிதமாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

அவ்வாறாயின் வட்டி விகிதம் குறைவடையும் அத்துடன் ஒப்பிடும் போது தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு 4.75% வட்டி வழங்கும் பணமுறி ஒரு சிறந்த முதலீடாகும், அவ்வாறிருக்க ஏன் முதலீட்டாளர்கள் ஏன் பணமுறியில் முதலிட தயக்கம் காட்டுகிறார்கள்?

இதற்கான காரணம் தெரியவில்லை, ஆனால் அமெரிக்காவினது நம்பத்தன்மை முதலீட்டாளர்களின் மட்டத்தில் வெகுவாக பாதிக்கப்பட்டுவிட்டது.

இந்த பணமுறியினை அதிக வட்டி வழங்குவதன் மூலம் விற்பனை செய்யலாம் (இரஸ்யா செய்ததனை போல) அல்லது பணத்தினை அச்சிடலாம் இந்த இரு நடவடிக்கையும் பணவீக்கத்தில் இரு வேறு விதமான தாக்கத்தினை செய்யலாம்.

குறுங்கால பணமுறியினை அமெரிக்கா வெளியிட முன்வருமாயின் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டக்கூடும், ஆனால் தற்போதய அமெரிக்க பொருளாதாரம் தொடர்பாக முதலீட்டாளர்களின் ஐயப்பாட்டின் வெளிப்பாடக அது அமையும்.

ஒரு காலத்தில் உலகின் காவலாளி எனும் நிலையில் இருந்து கீழிறங்கிவிட்டதற்கான உதாரணமாகவே தொடர்ந்து செல்லும் உக்கிரேன் மற்றும் இஸ்ரேலிய போர் உணர்த்துகிறது.

இதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா மட்டுமல்ல உலக பொருளாதாரமும் உறுதியாக இல்லை, ஆனால் அமெரிக்க மேலாதிக்க நிலையினை பேண அது முதலில் பொருளாதார ரீதியில் தன்னை தற்காத்து கொள்ள வேண்டு,

முன்னர் அமெரிக்க கருவூல காரியதரிசியின் செவ்வியினை இஸ்ரேல் அழிவு யுத்த திரியில் இணைத்திருந்தேன் அதில் அவர் கூறியிருந்தார் அமெரிக்க பொருளாதாரத்திற்கு உக்கிரேன் மற்றும் இஸ்ரேலிய யுத்தத்தினை நடத்துவதற்கான பலம் உள்ளதாக கூறியிருந்தார், அந்த கூற்று எந்தளவிற்கு உண்மையாகும் என்பதனை காலம் உணர்த்தும்.

2 hours ago, Justin said:

இதற்கான ஆதாரத் தகவல்களை எங்கே எடுத்தீர்கள்😎?

அரசியல் ரீதியில் தூர நோக்கற்ற சிவப்பு கட்சியினர் எப்போதும் புரினின் மறைமுக வால்களாக இருப்பதால் அரசியல் எதிர்ப்பு உக்ரைனிய உதவிக்கெதிராக இருக்கிறது. இத்தகைய எதிர்ப்பு இன்னும் இஸ்ரேல் விடயத்தில் வலுப்பெறவில்லையென்பதைக் கவனிக்க வேண்டும்!

மன்னிக்கவும் வேறு ஒரு திரியில் பதிந்த கருத்தினை திரும்ப மீளவும் பதிவதால் வாசிப்பவர்களுக்கு சோர்வு ஏற்படும் என்பதால் சுருக்கமாக குறிப்பிட்டேன் மேலே அக்கருத்தினை இணைத்துள்ளேன்.

30 வருட பணமுறிக்கான ஒப்பந்த விற்பனையில் அரைவாசிக்கும் குறைவாகவே விற்பனையாகியுள்ளது, இவ்வாறு நிகழ்வது இதுதான் முதல்தடவை இல்லை, ஆனால் தற்போதய நிகழ்வு ஒரு கவனத்தினை ஈர்க்கும் நிகழ்வாக உள்ளது.

உதாரணமாக முதலீட்டாளர்கள் பணமுறியில் ஆர்வம் காட்டுவதற்கு முக்கியமாக 5 காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன 
1. எதிர்கால வட்டி விகித எதிர்பார்ப்பு.
2. பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பு
3. சந்தையில் ஏற்படும் ஏற்றதாழ்வு.
4. உலக பொருளாதாரம்
5. சந்தையில் உள்ள ஆபத்துக்கள்.

இவற்றில் உலக பொருளாதாரம் பற்றிய முழுமையான தெளிவினை கொள்வது கடினமாகும் ஆனால் ஏற்கனவே குறிப்பிட்டதனை போல எதிர்வரும் ஆண்டில் பணவீக்கம் கட்டுக்குள் வந்தால்  வட்டி விகிதம் அதிகரிக்காது, பொருளாதார வளர்ச்சி 1.5% - 2.1 வரை 2028 வரை எதிர்வு கூறுகிறார்கள், சந்தையில் ஏற்படும் ஏற்றதாழ்வு (VIX) தற்போது சீராக உள்ளது.

கடைசியாக உள்ள சந்தை பாதுகாப்பு(Risk) தொடர்பில் முதலீட்டாளர்களிடையே வேறுபாடான கருத்து நிலவுகிறது, ஆனாலும் பெரும்பாலான காரணிகள் இந்த பணமுறி ஒரு  நல்ல முதலீடாகவே தோன்றுகிறது.

இவ்வாறு சாதகமான சூழ்நிலையில் குறைவான பணமுறி விற்பனையானமை என்னை பொறுத்தவரை ஒரு முக்கிய மாற்றமாக கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, vasee said:

இது போல ஒற்றை அளவீட்டை மட்டும் வைத்துக் கொண்டு அமெரிக்க பொருளாதார ஆரோக்கியத்தையோ அல்லது அமெரிக்காவின் உலக மேலாண்மையயோ அளப்பதைப் பற்றி ஏற்கனவே நாம் கருத்தாடியிருக்கிறோமென நினைக்கிறேன். சந்தையில் கொஞ்சம் பயம் பற்றிக் கொண்டிருக்கிறது என்பது உண்மை. ஆனால், உள்ளூரில் தொழில் வாய்ப்புகள் உருவாகும் வீதமும் எதிர்பார்த்தது போல குறையவில்லை. நுகர்வோர் செலவு வீதமும் குறையவில்லை (இதை "head scratcher" என்கிறார்கள்).

அமெரிக்கா கடன்முறியை விற்று செலவுக்கு எடுப்பது பல காலமாக நடந்து வருகிற செயல்பாடு. இதை உக்ரைன், இஸ்ரேலுக்கு செலவு செய்யாமல் உள்ளூரில் செலவு செய்யுங்கள் என்று ஒரு குழு உக்ரைன் யுத்தம் தொடங்கிய நாள் முதலே சொல்லி வருகிறது. இந்தக் குரல்களின் பின்னால் சென்று வாக்கு வேட்டை நடத்த சிவப்புக் கட்சி இப்போது முயல்கிறது. இது ஓர் உள்ளூர் அரசியல் கயிறிழுப்பு நிலை.

இதே போல ஒரு நிலை முதல் உலகப் போரின் தொடக்கத்திலும், இரண்டாம் உலகப் போர் தொடக்கத்திலும் நிலவியது. அந்த நேர அமெரிக்காவின் தலையிடாக் கொள்கையினால் (isolationism) அடி வாங்கியதும், அழிவுற்றதும் ஐரோப்பாவேயொழிய அமெரிக்கா அல்ல!

இன்றும் கூட அமெரிக்கா கை கழுவி விட்டால் பிரச்சினை ஐரோப்பாவிற்குத் தான் - இது தெரியாமல் துள்ளிக் குதிக்கும் அப்பிரண்டிசுகளை (உங்களை அல்ல!) நினைக்க எனக்குச் சிரிப்பு வருகிறது😂!  

  • கருத்துக்கள உறவுகள்

புடினின் வால் என்று வசைபாடப்படுவதில்இருந்து கடைசியாகத் தப்பிப் பிழைத்திருப்பது சோ பைடனும் புடினும் மட்டுமே. 

😀

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் மட்டுமல்ல.. மேற்குலங்கை.. நம்பி.. ஆப்பிழுந்த குரங்கின் நிலையில்.. உக்ரைன்.

இப்ப கடைசியா.. தனக்கு ஆயுதம் தா இல்லைன்னா.. யுத்தம் தொடர முடியாது என்ற நிலைக்கு வந்திட்டுது உக்ரைன். இன்றைக்கு 500,000 பேர் உடனடியா தேவையாம்.. போரை முற்கொண்டு செல்ல.

அங்கால ஆயுதம் பற்றாக்குறை.. அதோட ஆளும் பற்றாக்குறை.

சிலுங்கி.. தலையில துண்டப் போட்டிக்கிட்டு ஓடி ஒளிய வேண்டியான். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

பெண்களை ஆட்சேர்ப்பு செய்யப்போவதாக தகவல். 

On 18/12/2023 at 16:13, விசுகு said:

ஒரு வகுப்பில் ஓர் மாணவர் தலைவர்

ஒரு ஊருக்கு ஒரு உள்ளூராட்சி தலைவர்

ஒரு நாட்டுக்கு ஒரு ஜனாதிபதி

உலகத்துக்கு ஒன்றென்றால் ஒரு நாடு

அப்படி இருந்தபடியால் தான் இன்று பிரான்ஸ் என்றொரு தேசம். அதில் நான் நிம்மதியாக வாழ்கிறேன். சாப்பிட்ட கோப்பையில் மலம் கழிக்க கூடாது அல்லவா அண்ணா ?

நீங்கள் எப்போது இந்தக் சாப்பா+கோப்பை கதையை முடிவுக்குக் கொண்டுவருவீர்கள்? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, விசுகு said:

எது கொடுமை என்பதை நான் அல்லவா உணரணும்??

இதுதான் மேற்குலகின் தந்திரம். தன் மக்களை எப்பாடு பட்டும் உணர விடமாட்டார்கள். இங்கே ஜனநாயகம் பேசிக்கொண்டு மூன்றாம் உலக நாடுகளில் ஜனநாயகம் கதைப்பவனை கழுத்தறுப்பார்கள்.

நான் தப்பினால் தம்பிரான் புண்ணிய அரசியல்.

3 minutes ago, Kapithan said:

பெண்களை ஆட்சேர்ப்பு செய்யப்போவதாக தகவல். 

அது சம்பந்தமாக ஒரு நிகழ்ச்சியும் ஜேர்மனிய முன்னணி தொலைக்காட்சியில் பெருமையாக காட்டினார்கள். ஆனால் அந்த பெண்மணிகளை பார்த்தால் மொடல் அழகிகள் போல் தெரிந்தது. இராணுவ உடையுடன் ஏதோ கொண்டாட்டத்திற்கு போவது போல் வாய்,கண்களுக்கு பூச்சுக்கள் பூசி அலங்கரித்துக்கொண்டு நின்றார்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

மார்ச் 2024 இல் ரஷ்ய ஜனாதிபதித் தேர்தல் வருகின்றதாம் .அதற்க்கு முதல் புதின் உக்ரேன் ஆக்கிரமிப்பில் ஏதாவது சாதித்து காட்ட வேண்டும் என்ற நோக்ம் உள்ளதாம்.  ஐரோப்பிய யுனியனில் உள்ள கங்கேரி என்ற நாட்டின் பிரதமர்,  புதின் இரசிகர் உக்ரேனுக்கு உதவிகள் செய்வதற்கு தடைகள் ஏற்படுத்தி மேற்குலகத்தையும் உக்ரைனையும் மனச்சோர்வடைய செய்வதற்கு முயற்ச்சிப்பதாக தெரியவருகின்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.