Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!

adminDecember 19, 2023
Gary-Anandasangaree.jpg?fit=960%2C540&ss

உலகத் தமிழர் பேரவையும், கனேடிய தமிழ் காங்கிரஸும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் சந்தித்து கலந்துரையாடியமைக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம் வெளியிட்டுள்ளார்.

பாரிய மனித உரிமை மீறல்களுக்காக மஹிந்த ராஜபக்ஸ மற்றும் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோர் மீது 2023 ஆம் ஆண்டு ஜனவரி கனேடிய அரசு தடைகளை விதித்தமையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள், இனப்படுகொலை என்பவற்றுக்கு பொறுப்புக் கூறலை வலியுறுத்தி பல வருட போராட்டத்திற்கு பின்னரே இந்த தடை விதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள், சமூக அமைப்புகள், இலங்கை தமிழர்களுடன் கலந்தாலோசிக்காது மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி பாரிய தவறு என்றும் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம் வெளியிட்டுள்ளார்.

மேலும் தாய்நாட்டில் உள்ள தமிழ் மக்களின் நலன்களுக்காக செயற்படுவதாக இந்த அமைப்புகள் கூறுவதன் மீதும் இருந்த நம்பிக்கையை இது இழக்கச் செய்துள்ளதாக ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

https://globaltamilnews.net/2023/198738/

  • Replies 70
  • Views 5.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • nedukkalapoovan
    nedukkalapoovan

    ஹிந்தியாவின் அனுசரணையில் நடக்கும் நாடகம் இது. நாய் வாலை நிமிர்த்தலாம் என்று போயிருக்கினம். இருக்கிற கோவணத்தையும் இழந்து திரும்புவினம்.   ஆனால் இதுகளால் சர்வதேச அரங்கில் நல்லிணக்கம் கூக்க

  • போலிக்கா வின் வருகை + ஜி ரி எவ், சிடிசி யின் இமாலய பேய்க்காட்டல். இரெண்டும் ஒன்றோடு ஒன்று சம்பந்தபட்டவை. RAW வின் ஏஜெண்டுகள் யாழ் உட்பட்ட தளங்களில் சில வருடங்களாக “மனங்களை பதப்படுத்து

  • மீனுக்குத் தலையும், பாம்புக்கு வாலையும் காட்ட வேண்டிய தேவை ஹரிக்கு இருக்கிறது.  ஹரி ஆனந்த சங்கரியின் அரசியலுக்கான அத்திவாரமே CTC தான். இங்கே ஹரிக்குத் தெரியாமல் CTC காறர் மகிந்தவைச் சந்தித்திருக்

  • கருத்துக்கள உறவுகள்

Gary-Anandasangaree.png?resize=720,375&s

உலகத் தமிழர் பேரவைக்கு கனேடிய அமைச்சர் கரி ஆனந்தசங்கரி கண்டனம்.

உலகத் தமிழர் பேரவையும், கனேடிய தமிழ் காங்கிரஸும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்தித்து கலந்துரையாடியமைக்கு கனேடிய அமைச்சர் கரி ஆனந்தசங்கரி கண்டனம் வெளியிட்டுள்ளார்.

பாரிய மனித உரிமை மீறல்களுக்காக மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் மீது 2023 ஆம் ஆண்டு ஜனவரி கனேடிய அரசு தடைகளை விதித்தமையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள், இனப்படுகொலை என்பவற்றுக்கு பொறுப்புக் கூறலை வலியுறுத்தி பல வருட போராட்டத்திற்கு பின்னரே இந்த தடை விதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள், சமூக அமைப்புகள், இலங்கை தமிழர்களுடன் கலந்தாலோசிக்காது மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி பாரிய தவறு என்றும் கரி ஆனந்தசங்கரி கண்டனம் வெளியிட்டுள்ளார்.

மேலும் தாய்நாட்டில் உள்ள தமிழ் மக்களின் நலன்களுக்காக செயற்படுவதாக இந்த அமைப்புகள் கூறுவதன் மீதும் இருந்த நம்பிக்கையை இது இழக்கச் செய்துள்ளதாக கரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1363634

  • கருத்துக்கள உறவுகள்

கனேடிய தமிழ் காங்கிரஸ் மகிந்தவுடன் சந்திப்பு - நம்பமுடியாத துரோகம் கனடா தமிழ் சமூகத்தினர் கருத்து

Published By: RAJEEBAN   19 DEC, 2023 | 04:32 PM

image
 
கனேடிய தமிழ் காங்கிரஸின் உறுப்பினர்கள் இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளமை குறித்து கனடா தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்கள் கடும் ஏமாற்றமும் சீற்றமும் வெளியிட்டுள்ளனர்

இது குறித்து தமிழ்கார்டியன் தெரிவித்துள்ளதாவது.

பல வருடங்களாக கனேடிய தமிழ் காங்கிரஸ் பாரிய அநீதிகளிற்காக இலங்கைக்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் சர்வதேச பொறுப்புக்கூறும் பொறிமுறை அவசியம் என வேண்டுகோள் விடுத்து வந்திருந்தது.

கடந்த வாரம் அவர்கள் தமிழர்களிற்கு எதிரான அநீதிகளிற்கு முக்கியகாரணமான நபரை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இது கனடாவில் உள்ள தமிழ் சமூகத்தினருக்கு கடும் அதிருப்தியையும் சீற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக இடம்பெற்ற சம்பவங்கள் பலருக்கு சீற்றத்தையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது என தெரிவித்துள்ளார் அபிமன்யு சிங்கம் இவர் கனேடிய தமிழ் காங்கிரசினை ஸ்தாபித்தவர்களில் ஒருவர் அதன் முன்னாள் இயக்குநர்.

கடந்த காலங்களில் சிடிசி ஏனைய பல தமிழ் புலம்பெயர் அமைப்புகளைபோல 2009 இல் இலங்கை அரசாங்கத்தினால் படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களிற்கு நீதி பொறுப்புக்கூறலிற்காக குரல்கொடுத்து வந்துள்ளது.

ஒட்டாவா ரொன்டோ வோசிங்டன் மற்றும் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணைக்குழு போன்றவற்றில் அவர்கள் பரப்புரையில் ஈடுபட்டனர்.

CTC_Rajapaksa3.jpg

எனினும் கனேடிய தமிழ் காங்கிரசின் கடந்த வார சந்திப்பும் பல கனேடிய தமிழர்களிற்கு அதன் ஸ்தாபக தலைவர் அபிமன்யு சிங்கத்திற்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

கொழும்பில் கனேடி தமிழ் காங்கிரசின் சிரேஸ்ட தலைவர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்தனர் - சிடிசி முன்னர் நீதிகோரிய அநீதிகளிற்கான முக்கிய காரணகர்த்தா மகிந்த ராஜபக்ச.

அவரது ஆட்சியின் கீழேயே படையினர் முள்ளிவாய்க்கால் மருத்துவமனைகள் மீது எறிகணை வீச்சினை மேற்கொண்டனர் வெள்ளை கொடியுடன் சரணடைய வந்த தமிழர்களை சுட்டுக்கொன்றனர்.

கடந்த வாரம் ராஜபக்ச தனது அலுவலகத்தில் தனது பணியாளர்களுடன் பெரிய தேசிய கொடியின் கீழ் அமர்ந்திருந்தார்.

அந்த கட்டிடம் முழுவதும் முன்னாள் ஜனாதிபதியின் படங்கள் காணப்பட்டன- சிடிசி உறுப்பினர்கள் சுமூகமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்கள் கைகுலுக்கினார்கள் ஒன்றாக படம் எடுத்துக்கொண்டார்கள்.

அந்த படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின -ஒரு சில நிமிடங்களில் அவை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன- கனேடிய தமிழர்களின் கடும் கண்டனத்திற்குள்ளாகின.

உலக தமிழர் பேரவையும் கனேடிய தமிழ் காங்கிரசும் சமீபத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேசியுள்ளமை கண்டிக்கப்படவேண்டிய விடயம் என்கின்றார் கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி.

ராஜபக்சாக்களின் குற்றங்கள் நன்கு பதியப்பட்டுள்ளன 2023 ஜனவரி 10 ம் திகதி கனடா அரசாங்கம் மனித உரிமைகளை திட்டமிட்ட முறையில் மீறியமைக்காக மகிந்த ராஜபக்ச கோட்டாபய ராஜபக்சாவிற்கு எதிராக தடைகளைவிதித்தது என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மனித உரிமை பேரவையிலும் ஏனைய அமைப்புகளிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட பரப்புரையின் பின்னரே இது சாத்தியமானது யுத்த குற்றம் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தமிழர்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் என்பவற்றிற்கு நீதிகோரி பரப்புரை இடம்பெற்றது என அவர் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக தடைகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும்   கனடா பிரஜைகள் உட்பட  சிடிசியின் உறுப்பினர்கள்மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளனர் 

உலக தமிழர் பேரவையின் அழைப்பின் பேரிலேயே இந்தசந்திப்பு இடம்பெற்றதாக ராஜபக்ச அலுவலகம் தமிழ் கார்டியனிற்கு உறுதி செய்துள்ளது. உலக தமிழர் பேரவை என்பது சிடிசி நோர்வேஜியன் தமிழ் போரம் ஆகியவற்றை உள்ளடக்கிய அமைப்பு.

பாதிக்கப்பட்டவர்கள் சிவில் சமூகத்தினர் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுடன் கலந்தாலோசிக்காமல் மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டமை மதிப்பிடலில்  ஏற்பட்ட பெரும் தோல்வி என ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இந்த செயற்பாடுகள் இந்த அமைப்புகளின் நம்பிக்கையை அவர்கள் தாங்கள் புலம்பெயர் தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள்-தாயகத்தில் உள்ள தமிழர்களின் சார்பில் பரப்புரை செய்வதற்கானவர்கள் என தெரிவிக்கப்படுவதை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆழமான காயம் -ஏமாற்றம் -

எங்கள் மக்களின் இரத்தத்திலும் வியர்வையிலும் கட்டியெழுப்பப்பட்ட அமைப்பு எங்கள் முதுகில் குத்திவிட்டது என்பது குறித்து நான் ஏமாற்றமும் விரக்தியும் காயமும் அடைந்துள்ளேன் என  தமிழ் கனடா சமூகத்தின் தீவிர செயற்பாட்டாளர் நீதன் சான் தெரிவித்துள்ளார்.

யுத்த குற்றவாளிகள் தமிழ் மக்களின் இனப்படுகொலையாளிகளுடன் இணைந்து செயற்படுவதற்காக நாங்கள் ஒரு சமூகமாக இணைந்து இவர்களை கண்டிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தினை கனடாவின் குயின்ஸ் பல்கலைகழகத்தின் கனடா தமிழரான பேராசிரியர் அமர்நாத் அமரசிங்கம் உட்பட பலரும் முன்வைத்துள்ளனர்.

இது குறித்து என்னுடன் பேசிய அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர் என தெரிவித்துள்ள அவர் ஐக்கியநாடுகளில் பல வருடங்களாக மகிந்தவின் யுத்த குற்றங்கள் குறித்து உரையாற்றிய அதனை இனப்படுகொலை என அங்கீகரிக்கவேண்டும் என பரப்புரை செய்த கனேடிய தமிழ் காங்கிரசும் உலக தமிழர் பேரவையும் தற்போது அவரின் பின்னால் சென்றுள்ளமை குறித்து மிகவேகமாக தெளிவான விளக்கங்களை முன்வைக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு அபிவிருத்திகள் என வரும்போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது தவிர்க்க முடியாதது என நான் கருதுகின்றேன், ஆனால் சிறிதளவேனும் வருந்தாத பூஜ்ஜிய பொறுப்புக்கூறலை வெளிப்படுத்திய  புலம்பெயர்ந்த தமிழர்களின் பூதாகரமாக சித்தரிக்கும்  அரச தலைவர்களுடன்  இணைந்து செயற்படுவது தீங்கு விளைவிக்கும் எனஅவர் தெரிவித்துள்ளார்.

கனேடிய தமிழ் காங்கிரஸினை உருவாக்குவதில் முக்கிய பங்களிப்பை வழங்கியவர் என்ற அடிப்படையில் அந்த அமைப்பு அதன் ஆணை மற்றும் தொலைநோக்கு பார்வையிலிருந்து எவ்வளவு தூரம் விலகிச்சென்றுள்ளது என்பது கவலையளிக்கின்றது என சட்டத்தரணிஹரிணி சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/172090

இவர்கள் மகிந்தவை சந்தித்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இவ்வளவு காலமும் மகிந்தவுக்கும் மகிந்த அரசுக்கும் எதிராக போர்க் குற்றம், போர்க்குற்றவாளி என்றெல்லாம் குரல் எழுப்பி விட்டு, இன்று அவர்களுடன் சந்தித்து சேர்ந்து நின்று படம் எல்லாம் எடுத்து கனடிய தமிழ் சமூகத்தின் முகத்தில் காறி துப்பியுள்ளார்கள்.

அண்மையில் கனடாவில் உள்ள இலங்கை தூதுவரையும் சந்தித்தனர் என செய்தி வந்ததாக நினைவு,

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

இந்த நாடகம்..இரண்டு மூன்று வருசத்திற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டுவிட்ட்து...அதுவும் தெருத்திருவிழாவின்மூலம்....தேவையற்ற ஆட்களை இணைப்பதன்மூலம் ...அங்கு ஊடுருவல்..கடைசியில் கிழக்கு பறிபோனதுபோல்...இங்கும் நடைபெறலாம்....நல்ல காலம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது...நல்லாட்சியில் ரூபவாகினையை கூப்பிடவும் யோசித்த ஆட்கள்..

  • கருத்துக்கள உறவுகள்+

இவங்கடை பேச்சுவார்த்தையாலை தமிழருக்கு சின்னத் தீர்வென்டாலும் கிடைக்குமென்டு எதிர்பார்த்தனான்... என்ன எல்லாரும் இப்பிடி எதிர்க்கிறியள்.🥲

  • கருத்துக்கள உறவுகள்

கரி தான் சரியான பாதையில் போகிறார் என்பதை காட்டிய இன்னுமொரு சந்தர்பமாக நான் இதை காண்கிறேன்.

மேற்கு நாடுகள் ஒவ்வொன்றிலும் இப்படி ஒருவர் வந்து அவர்கள் ஒன்றாகினால் பலதை சாதிக்கலாம்.

எனக்கு கரியின் அரசியல் பற்றி அதிகம் அல்ல எதுவுமே தெரியாது…ஆனால் தொலைவில் இருந்து பார்க்கும் போது…..2009 க்கு பின்னான புலம், புலம்பெயர் ஈழத்தமிழ் அரசியல்வாதிகளில் அடிப்படை கொள்கை தெளிவு, நம்பகதன்மை மிக்கவராக கரி எனக்குப்படுகிறார்.

உண்மையில் கரி ஒரு அடுத்த தலைமுறைத்தலைவர்தான்.

இலண்டனில் உள்ளவர்கள் எல்லாம் ஊரில் இருந்து வந்த கள்ளர். இங்கேயும் ஒரு அடுத்த தலைமுறை அரசியல்வாதி மிக விரைவு தோன்றக்கடவது.

  • கருத்துக்கள உறவுகள்

மீனுக்குத் தலையும், பாம்புக்கு வாலையும் காட்ட வேண்டிய தேவை ஹரிக்கு இருக்கிறது. 

ஹரி ஆனந்த சங்கரியின் அரசியலுக்கான அத்திவாரமே CTC தான். இங்கே ஹரிக்குத் தெரியாமல் CTC காறர் மகிந்தவைச் சந்தித்திருக்கினம் என்று சொன்னால் அது கடைந்தெடுத்த சுத்தப் பொய் என்பது கனடா வாழ் டமிலருக்கு அப்பட்டமாகத் தெரியும். 

இதைவிடவும், மேற்கின் ஆசீர்வாதம் இன்றி இவர்கள் அங்கே போய் மகிந்தவைச் சந்தித்திருக்க முடியுமா? 

கனேடிய டமில்ஸ்சைக் குளிர்விக்குமுகமாக ஹரி இப்படி ஒரு அறிக்கை விட வேண்டிய நிலை.

ஏற்கனவே Trudo வின் அரசு மக்களிடம் அடி வேண்டாத குறை. இந்த இலட்சணத்தில் ஹரி அமைதியாக இருந்தாலே அது அவரின் அரசியலுக்கு ஆபத்தாக முடியும். எனவே, கனேடிய டமில்ஸ்ஸின் தலையில் வின்ரர் குளிருக்கும் ஐஸ் வைக்கும் வேலையை ஹரி செய்துள்ளார்.  அப்புட்டுதே. 

நிலை இப்படி இருக்கையில் ஏன் மேற்கு நாட்டு தமிழர் அமைப்புக்கள் திடீரென்று வரிசையாக இலங்கை செல்லவேண்டிய தேவை ஏன் எழுந்தது ? 

எல்லாம்இந்தியாவின் வேகமான நகர்வுகள்தான் காரணம். 

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தியாவின் அனுசரணையில் நடக்கும் நாடகம் இது.

நாய் வாலை நிமிர்த்தலாம் என்று போயிருக்கினம். இருக்கிற கோவணத்தையும் இழந்து திரும்புவினம்.

ஆனால் இதுகளால் சர்வதேச அரங்கில் நல்லிணக்கம் கூக்குரல் இன்னும் பலமடையும். இதனால்.. தமிழர்களின் இழப்புக்கு எந்த நியாயமும் கிடைக்கப் போவதில்லை. சிறுகச் சிறுக கட்டிய சில நம்பிக்கைகளும்.. சிதைக்கப்பட்டதாகவே முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

கொலிடேயை...இலவசமாக கழிக்கப் போனவை...போனசாக மகிந்தவும் ஏதும் தருவார் என்ற நப்பாசையில் போயிருப்பினம்...மகிந்த காட்ட (தேநீரும்  கித்துல் பனங்காட்டியும்) கிடுத்து அனுப்பியிருப்பார்...அதோடை ஆகஸ்ட்டு..செப்டம்பரில் என்னை கனடாவுக்கு கூப்பிடமுடியாதோவென்று..கேட்டிருப்பார்...இந்த பதவிமோகவெறி பிடித்து அலையும் கூட்டத்தால்...கனடாவிலும் எமது மரியாதையை இழக்கவேண்டிவரலாம்...

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

மீனுக்குத் தலையும், பாம்புக்கு வாலையும் காட்ட வேண்டிய தேவை ஹரிக்கு இருக்கிறது. 

ஹரி ஆனந்த சங்கரியின் அரசியலுக்கான அத்திவாரமே CTC தான். இங்கே ஹரிக்குத் தெரியாமல் CTC காறர் மகிந்தவைச் சந்தித்திருக்கினம் என்று சொன்னால் அது கடைந்தெடுத்த சுத்தப் பொய் என்பது கனடா வாழ் டமிலருக்கு அப்பட்டமாகத் தெரியும். 

இதைவிடவும், மேற்கின் ஆசீர்வாதம் இன்றி இவர்கள் அங்கே போய் மகிந்தவைச் சந்தித்திருக்க முடியுமா? 

கனேடிய டமில்ஸ்சைக் குளிர்விக்குமுகமாக ஹரி இப்படி ஒரு அறிக்கை விட வேண்டிய நிலை.

ஏற்கனவே Trudo வின் அரசு மக்களிடம் அடி வேண்டாத குறை. இந்த இலட்சணத்தில் ஹரி அமைதியாக இருந்தாலே அது அவரின் அரசியலுக்கு ஆபத்தாக முடியும். எனவே, கனேடிய டமில்ஸ்ஸின் தலையில் வின்ரர் குளிருக்கும் ஐஸ் வைக்கும் வேலையை ஹரி செய்துள்ளார்.  அப்புட்டுதே. 

நிலை இப்படி இருக்கையில் ஏன் மேற்கு நாட்டு தமிழர் அமைப்புக்கள் திடீரென்று வரிசையாக இலங்கை செல்லவேண்டிய தேவை ஏன் எழுந்தது ? 

எல்லாம்இந்தியாவின் வேகமான நகர்வுகள்தான் காரணம். 

இது எந்தவொரு ஆதாரமும் இல்லாத மிகச்சிறந்த கற்பனை,..கரி  எப்படியோ இருக்கட்டும்  இங்கே எழுதப்படும் கருத்துக்களை வாசிக்கும்  எங்களை  கொஞ்சமாவது மதிந்து இருக்க கூடாதா??? 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kandiah57 said:

இது எந்தவொரு ஆதாரமும் இல்லாத மிகச்சிறந்த கற்பனை,..கரி  எப்படியோ இருக்கட்டும்  இங்கே எழுதப்படும் கருத்துக்களை வாசிக்கும்  எங்களை  கொஞ்சமாவது மதிந்து இருக்க கூடாதா??? 

ஆமோதிக்கின்றேன்..

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Kandiah57 said:

இது எந்தவொரு ஆதாரமும் இல்லாத மிகச்சிறந்த கற்பனை,..கரி  எப்படியோ இருக்கட்டும்  இங்கே எழுதப்படும் கருத்துக்களை வாசிக்கும்  எங்களை  கொஞ்சமாவது மதிந்து இருக்க கூடாதா??? 

(மரியாதையைக் கேட்டு வாங்கக் கூடாது கண்டியளோ 😀)

இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்ப்பவை ஏற்கனவே  எதிர்வு கூறப்பட்டவைதான்கந்தையர்.  

இலங்கையில் முதலீடு செய்ய ஆயத்தமாகும்படி கூறும்போதே யோசித்திருக்க வேண்டும். 

இதன் அர்த்தம் எனக்கு எல்லா விடயங்களும் தெரியும்என்பதல்ல.  நம்பகமானவற்றை  அறியத் தந்தேன். ஆயத்தமாகுவதற்கு. 😉 

இன்னும் அதிர்ச்சிகள் எங்களுக்குக் காத்திருக்கின்றன. ஏனென்றால் நாம்தான்ய தார்த்தத்தை பிடிவாதமாக  ஏற்றுக்கொள்ள மாட்டோமே 😁

எதிர்காலம் எமக்கு நிறைய கசப்பான காடியை ருசிக்கத் தரும். 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kapithan said:

மரியாதையைக் கேட்டு வாங்கக் கூடாது கண்டியளோ 😀)

சும்மா போங்க” கொஞ்சம் தானே கேட்டேன்     பார்த்து கொஞ்சம் தாருங்கள்” நான் பலமடங்காக திருப்பி தருவேன் 🤣 என்ன செய்வது  கேட்டு  வாங்க வேண்டிய நிலமை.  ஆனால் நீங்கள் கேட்காம கொடுக்க மாட்டீர்கள் என்பதும் தெரியும் 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Kapithan said:

இலங்கையில் முதலீடு செய்ய ஆயத்தமாகும்படி கூறும்போதே யோசித்திருக்க வேண்டும். 

உலக தமிழ் பேரவை  போர் குற்றவாளிகளை சந்தித்து படம் எடுத்து கலந்துரையாடல் செயதது பிழை   இதை பற்றி தான் திரியில். கதைக்கிறோம்.  முதலீடு இலங்கையில் தான் செய்ய வேண்டும் என்பதில்லை உலகம் முழுவதும் செய்யலாம் முதலீட்டாளர்களுக்கும் முதலீட்டுக்கும் பாதுகாப்பு முக்கியம் தேவை இலங்கையில் அதுக்கு உத்தரவுவாதமில்லை   மிக முக்கியமான கேள்வி  எப்போது முதலீடு செய்யலாம்?? உறுதியான மத்திய அரசால் அசைக்க முடியாத தீர்வுக்கு முன்பாக அல்லது பின்னர்??  இதற்கு உங்கள் பதில் என்ன?? 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kandiah57 said:

சும்மா போங்க” கொஞ்சம் தானே கேட்டேன்     பார்த்து கொஞ்சம் தாருங்கள்” நான் பலமடங்காக திருப்பி தருவேன் 🤣 என்ன செய்வது  கேட்டு  வாங்க வேண்டிய நிலமை.  ஆனால் நீங்கள் கேட்காம கொடுக்க மாட்டீர்கள் என்பதும் தெரியும் 

இந்தாருங்கள் 🛫 ஒரு விமானம் நிறையவே அனுப்பியிருக்கிறேன் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் என்ன  விமானம் Aeroflotக்குச் சொந்தமானது. 

இறங்க அனுமதிப்பீர்களா? 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

மீனுக்குத் தலையும், பாம்புக்கு வாலையும் காட்ட வேண்டிய தேவை ஹரிக்கு இருக்கிறது. 

ஹரி ஆனந்த சங்கரியின் அரசியலுக்கான அத்திவாரமே CTC தான். இங்கே ஹரிக்குத் தெரியாமல் CTC காறர் மகிந்தவைச் சந்தித்திருக்கினம் என்று சொன்னால் அது கடைந்தெடுத்த சுத்தப் பொய் என்பது கனடா வாழ் டமிலருக்கு அப்பட்டமாகத் தெரியும். 

இதைவிடவும், மேற்கின் ஆசீர்வாதம் இன்றி இவர்கள் அங்கே போய் மகிந்தவைச் சந்தித்திருக்க முடியுமா? 

கனேடிய டமில்ஸ்சைக் குளிர்விக்குமுகமாக ஹரி இப்படி ஒரு அறிக்கை விட வேண்டிய நிலை.

ஏற்கனவே Trudo வின் அரசு மக்களிடம் அடி வேண்டாத குறை. இந்த இலட்சணத்தில் ஹரி அமைதியாக இருந்தாலே அது அவரின் அரசியலுக்கு ஆபத்தாக முடியும். எனவே, கனேடிய டமில்ஸ்ஸின் தலையில் வின்ரர் குளிருக்கும் ஐஸ் வைக்கும் வேலையை ஹரி செய்துள்ளார்.  அப்புட்டுதே. 

நிலை இப்படி இருக்கையில் ஏன் மேற்கு நாட்டு தமிழர் அமைப்புக்கள் திடீரென்று வரிசையாக இலங்கை செல்லவேண்டிய தேவை ஏன் எழுந்தது ? 

எல்லாம்இந்தியாவின் வேகமான நகர்வுகள்தான் காரணம். 

அதாவது எந்த ஒரு வெளிநாட்டு தமிழ் அமைப்புக்களும் நம்ப தகுந்தவை இல்லை என்று சொல்ல வருகிறீர்கள்.

இலங்கை அரசாங்கம் எப்படியாவது முதலீடுகளை இங்கு செய்ய வேண்டுமென்று முயட்சிக்கிறது இன்னும் அதட்கான அலுவலகங்களை இந்தியா மேட்கு நாடுகளிலும் திறந்தும் உள்ளது. எனவே அவர்களது கனவு நனவாகும் போலத்தான் தெரிகின்றது.

நான் நினைக்கிறேன் இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் இந்த வெளிநாட்டு தமிழ் அமைப்புக்களை சரியாக கையாளவில்லை என்று. 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கிருபன் said:

GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!

adminDecember 19, 2023
Gary-Anandasangaree.jpg?fit=960%2C540&ss

உலகத் தமிழர் பேரவையும், கனேடிய தமிழ் காங்கிரஸும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் சந்தித்து கலந்துரையாடியமைக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம் வெளியிட்டுள்ளார்.

பாரிய மனித உரிமை மீறல்களுக்காக மஹிந்த ராஜபக்ஸ மற்றும் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோர் மீது 2023 ஆம் ஆண்டு ஜனவரி கனேடிய அரசு தடைகளை விதித்தமையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள், இனப்படுகொலை என்பவற்றுக்கு பொறுப்புக் கூறலை வலியுறுத்தி பல வருட போராட்டத்திற்கு பின்னரே இந்த தடை விதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள், சமூக அமைப்புகள், இலங்கை தமிழர்களுடன் கலந்தாலோசிக்காது மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி பாரிய தவறு என்றும் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம் வெளியிட்டுள்ளார்.

மேலும் தாய்நாட்டில் உள்ள தமிழ் மக்களின் நலன்களுக்காக செயற்படுவதாக இந்த அமைப்புகள் கூறுவதன் மீதும் இருந்த நம்பிக்கையை இது இழக்கச் செய்துள்ளதாக ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

https://globaltamilnews.net/2023/198738/

இதற்கு காணொளி ஆதாரம் உள்ளதா? கரி ஆனந்தசங்கரி கதைப்பதை ஏன் இணைக்கமுடியவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

சும்மா போங்க” கொஞ்சம் தானே கேட்டேன்     பார்த்து கொஞ்சம் தாருங்கள்” நான் பலமடங்காக திருப்பி தருவேன் 🤣 என்ன செய்வது  கேட்டு  வாங்க வேண்டிய நிலமை.  ஆனால் நீங்கள் கேட்காம கொடுக்க மாட்டீர்கள் என்பதும் தெரியும் 

இது பில்டப்புத்தான்...உள்ளேபோனால் ..ஒன்றுமே இருக்காது...இந்த யாழில் இதுபோல எத்தினையை பார்த்திட்டம்....

  • கருத்துக்கள உறவுகள்

Ekuruvi Tamil

  · 

கனடிய தமிழர் பேரவை முன்னாள் தலைவர் ஒருவர் கனடிய தமிழர்களை பிரதிநிதித்துவபடுத்துவதாக இலங்கை அரசை வந்து சந்தித்துள்ளார் . அவர் சுமார் 7 வருடங்களுக்கு முன்னர், அவரது தலைமையில் இயங்கிய கனடிய தமிழர் பேரவையின் அலுவலகர் ஒருவர் மீது பாலியல் குற்றசாற்றை பாதிக்கப்பட்ட பெண் தரப்பிலிருந்து நேரடியாக அவரிடம் சமர்ப்பித்த போது அதை விசாரிக்காமல் தட்டிக் கழித்து விட்டார் . அன்றிலிருந்து அவரும் அந்த பாலியல் குற்றச்சாட்டுக்கு உடந்தையாக நான் கருதுகின்றேன் . தமிழ் சமூகத்துக்கான எந்தவித தகுதியும் அற்ற ஓருவர் எப்படி எங்களை பிரதிநிதித்துவப்படுத்த முடியும் ? இதை வன்மையாக கண்டிக்கின்றேன் .

மேலும்

தமிழ் மக்கள் மீதான இனவழிப்பினை தடுப்பதற்கும் இறுதி யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்களுக்கு எதிராக காத்திரமான நடவடிக்கைகளையும் எடுத்து வரும் கனேடிய அரசாங்கத்தின் முதுகில் குத்தும் துரோகத்தனத்தை இவர்கள் செயல் ஏற்படுத்தியிருக்கின்றது. கனேடிய அரசாங்கம் தமிழ் மக்கள் நலன் சார்ந்து செயல்படுவதற்கு பல மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் அயராத உழைப்பே காரணமாகும். கனேடிய அரசாங்கம் தடை செய்த இலங்கை பிரதிநிதிகளை சந்தித்து அவரகளின் அன்யையும் ஆசியைப் பெற்றுக் கொண்டமை மூலம் இவர்கள் கனேடித் தமிழர்கள் முகங்களில் கரி அள்ளிப் பூசிவிட்டுள்ளார்கள். இனி கனேடிய அரசிடம் தமிழர்கள் எந்த உதவியையும் பெற முடியாத அவலத்தை ஏற்படுத்தியிருக்கின்றது இந்த செயல்.

எங்களை போன்ற தாயக கட்டுமான பணிகளை மேற்கொள்பவர்களுக்கும் இவர்களின் பொருப்பற்ற கோமாளி செயல் இடையூறை ஏற்படுத்துகின்றது .

நவஜீவன் அனந்தராஜ்

@Kandiah57.....இப்பிடித்தான் ..கபிதான் ..இதைப்போல்தான் கொட்டுவார்....நானும் இதை மேய்ஞ்சுதான் பிடித்தனான்...ஒரு கல்லிலை இரண்டு மாங்காய் என்பது இதுதானோ..

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, alvayan said:

“எதிர்காலம் எமக்கு நிறையவே கசப்பான காடியை ருசிக்கத் தரும். 

ஜீரணிக்க ஆயத்தமாக இருங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Cruso said:

1) அதாவது எந்த ஒரு வெளிநாட்டு தமிழ் அமைப்புக்களும் நம்ப தகுந்தவை இல்லை என்று சொல்ல வருகிறீர்கள்.

2) இலங்கை அரசாங்கம் எப்படியாவது முதலீடுகளை இங்கு செய்ய வேண்டுமென்று முயட்சிக்கிறது இன்னும் அதட்கான அலுவலகங்களை இந்தியா மேட்கு நாடுகளிலும் திறந்தும் உள்ளது. எனவே அவர்களது கனவு நனவாகும் போலத்தான் தெரிகின்றது.

3) நான் நினைக்கிறேன் இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் இந்த வெளிநாட்டு தமிழ் அமைப்புக்களை சரியாக கையாளவில்லை என்று. 

1) நம்பத் தகுந்தவையா என்பது அல்ல  விடயம். அவை யாரின்  வழிகாட்டலில், எவரது நலனைப்பிரதானமாக முன்னிறுத்தி  இயங்குகின்றன என்பதுதான் கவனிக்கப்பட வேண்டியவை. 

2) 100%

3)  வெளிநாட்டுத் தமிழ் அமைப்புக்கள் இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளைச் சரியாகக் கையாளவில்லை என்பதுதான் உண்மை நிலை. 

2 hours ago, Kandiah57 said:

உலக தமிழ் பேரவை  போர் குற்றவாளிகளை சந்தித்து படம் எடுத்து கலந்துரையாடல் செயதது பிழை   இதை பற்றி தான் திரியில். கதைக்கிறோம்.  முதலீடு இலங்கையில் தான் செய்ய வேண்டும் என்பதில்லை உலகம் முழுவதும் செய்யலாம் முதலீட்டாளர்களுக்கும் முதலீட்டுக்கும் பாதுகாப்பு முக்கியம் தேவை இலங்கையில் அதுக்கு உத்தரவுவாதமில்லை   மிக முக்கியமான கேள்வி  எப்போது முதலீடு செய்யலாம்?? உறுதியான மத்திய அரசால் அசைக்க முடியாத தீர்வுக்கு முன்பாக அல்லது பின்னர்??  இதற்கு உங்கள் பதில் என்ன?? 

கந்தையர் முதலீட்டுக்கு உரிய இலாபத்தைப்பற்றிக் கதைக்கிறார். நான் இலங்கையில் எமது பிடியை எவ்வாறு பலமாக ஊன்றுவது என்று கதைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

போலிக்கா வின் வருகை

+
ஜி ரி எவ், சிடிசி யின் இமாலய பேய்க்காட்டல்.

இரெண்டும் ஒன்றோடு ஒன்று சம்பந்தபட்டவை.

RAW வின் ஏஜெண்டுகள் யாழ் உட்பட்ட தளங்களில் சில வருடங்களாக “மனங்களை பதப்படுத்தும்” ஒப்பரேசனில் ஈடுபட்டது இதை ஒட்டித்தான்.

இதன் முடிவில் சுமந்திரன் பங்களிப்போடு ஒரு வெளிப்படைதன்மை அற்ற, “மாவட்ட அபிவிருத்தி சபை” யை விட அதிகாரம் இல்லாத ஒரு பேய்காட்டல் தமிழர் தலையில் தீர்வு/ புதிய அரசியல் யாப்பு என்ற வகையில் இறங்க போகிறது.

பொறுப்பு கூறலும் இல்லை, விசாரணையும் இல்லை, தீர்வு தந்தாகிவிட்டது. பிரச்சனை தீர்ந்தது.

சுபம்.

இந்த திட்டத்துக்கு கரி ஆனந்தசங்கரி உடன்படவில்லை போல படுகிறது.

ஏலவே ஐ எம் எவ் விவகாரத்தில் இலங்கையை தமிழர் நலன் சார்ந்து அழுத்திய ஒரே நபரும் இவரே.

அதைகூட சாத்தியமற்ற நகர்வு என ஏஜெண்ட்ஸ் யாழில் விமர்சித்தார்கள். ஆனால் கடைசியில் ஐ எம் எவ், இலங்கையின் இராணுவ பாதீட்டில் கைவைத்தது. இலங்கைக்கும், ரோவுக்கும் முகத்தில் கரி.

இவ்வாறாக சுயாதீனமான, வெளிப்படையான நடவடிக்கைகள் சிலதை கரி எடுப்பதை அவதானிக்ககூடியதாக உள்ளது.

ஆகவேதான் அவர் மேல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

RAW வின் ஏஜெண்டுகள் யாழ் உட்பட்ட தளங்களில் சில வருடங்களாக “மனங்களை பதப்படுத்தும்” ஒப்பரேசனில் ஈடுபட்டது இதை ஒட்டித்தான்.

யாழில் நடமாடவே பயமாக இருக்கு..

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, alvayan said:

யாழில் நடமாடவே பயமாக இருக்கு..

Operation success என்கிறீர்கள்? 🤣

பயப்படாதீங்க பாஸ், நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நானும் ரெளடிதான் எனும் தோரணையில் நிற்பவர்கள்தான் தடாலடியாக  விழுந்து சரணாகதியடைந்தது வரலாறு. 

 பயப்படுவதால் அந்த வட்டத்திற்குள் நீங்கள் இல்லை. 

🤣

Edited by Kapithan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.