Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை நாயகி கில்மிஷா வந்தடைந்தார்! 
 
spacer.png

(புதியவன்)

இலங்கை நாயகி கில்மிஷா பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.

இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று நண்பகல் வேளை கில்மிஷா தனது குடும்பத்துடன் நாடு திரும்பினார்.

இதன்போது பெருமளவானவர்கள் விமான நிலையத்தில் குவிந்திருந்து கில்மிஷாவை வரவேற்றனர்.

விமான நிலையத்தில் இருந்து வரவேற்று வாகன தொடரணி மூலம் அரியாலை பகுதிக்கு அழைத்து சென்று , அங்கு கௌரவிப்பு நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளது

https://newuthayan.com/article/இலங்கை_நாயகி_கில்மிஷா_வந்தடைந்தார்!

  • Replies 56
  • Views 5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    ஒரு சாதாரண TV போட்டி ஒன்றின் வெற்றியை தலை மேல் வைத்து கொண்டாடி அந்த பிள்ளையின் எதிர்கால வளர்ச்சியை நாசமாக்க போகின்றனர்.  

  • அவருடைய வெற்றி யின் பின்னால் உள்ள  அவரது கடும் உழைப்பும் + இந்திய அரசின் அரசியல் நகர்வும் (ஈழத் தமிழரை தனது  வட்டத்திற்குள் கொண்டுவரும்)  இருக்கிறதாக பார்க்கிறேன்.  அவரது வெற்றியை நிதானமாகக் கொண்

  • குமாரசாமி
    குமாரசாமி

    தமிழினத்தின் கலாச்சாரத்தை,மொழியை,பண்பாடுகளை,இருப்பிடத்தை,உரிமைகளை வேரோடு அழிக்க எதிரி கங்கணம் கட்டிக்கொண்டு திரிகின்றான். நாமோ ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் யாதும் ஊரே யாவரும் கேளிர் என பாடிக்கொண்டு திரி

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் கில்மிசாவிற்கு வரவேற்பு

Published By: DIGITAL DESK 3   28 DEC, 2023 | 04:38 PM

image
 
சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பிய கில்மிஷாவிற்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

கில்மிஷா, தனது பெற்றோருடன் இன்று வியாழக்கிழமை (28) சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் திரும்பினார்.

விமான நிலையத்தில் இருந்து வரவேற்று வாகன தொடரணி மூலம் அரியாலை பகுதிக்கு அழைத்து சென்று , அங்கு கௌரவிப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. 

FB_IMG_1703756971025.jpg

32__5_.jpg

32__2_.jpg

32__3_.jpg

32__1_.jpg

32__9_.jpg

https://www.virakesari.lk/article/172648

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

415274386_1161363874834150_3723833121236

மணவறையில்.....

  • கருத்துக்கள உறவுகள்

லொள்ளுத் தாள முடியவில்லை. 

🤣

ஒரு சாதாரண TV போட்டி ஒன்றின் வெற்றியை தலை மேல் வைத்து கொண்டாடி அந்த பிள்ளையின் எதிர்கால வளர்ச்சியை நாசமாக்க போகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நிழலி said:

ஒரு சாதாரண TV போட்டி ஒன்றின் வெற்றியை தலை மேல் வைத்து கொண்டாடி அந்த பிள்ளையின் எதிர்கால வளர்ச்சியை நாசமாக்க போகின்றனர்.

இந்தியாவுக்கு ஆயிர கணக்கில் இனி பாட சென்று 
விபச்சார விடுத்துதிகளில் இருந்து மீட்டு வராதவரை ஓகே. 

கலைதுறை என்பது பொதுகவே உலகம் பூரா ஓரிருவருக்கு அபராத வெற்றியையும் 
ஆயிரக் கணக்கவனவர்களுக்கு வாழ்வை சீரழித்த கதையாகவே தொடர்கிறது 
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

ஒரு சாதாரண TV போட்டி ஒன்றின் வெற்றியை தலை மேல் வைத்து கொண்டாடி அந்த பிள்ளையின் எதிர்கால வளர்ச்சியை நாசமாக்க போகின்றனர்.

மிகச்சரியான உண்மை.

யாழ்பாணனது மண்ணிருந்து ஒரு இளைஞி உதயமாவது நல்லவிடயம்.கலைத்துறையில் பல மேதைகளைக் கண்டமண் என்பதை அறியாதவர்களாக இருக்கிறார்கள். அதனது பிரதிபலிப்பே இது.  

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் வயது வேறுபாடின்றி கில்மிசா பங்குபற்றிய போட்டி நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி, மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளிகள் வாயிலாக பலரும் பார்ப்பதையும் கில்மிசா மீது கொண்ட அபிமானத்தையும் நான் நேரில் பார்த்தேன். சிறிய வயதில் இந்த சிறுமி மூலம் மக்கள் மனதில் மகிழ்ச்சியை கொடுக்க, இடம்பிடிக்க முடிந்தது. இங்கே பெரியவர்களின் நக்கல்கள், நையாண்டிகள் புரியவில்லை. உங்கள் பிரச்சனைதான் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு பாட்டு பாட சென்றால் விபச்சார விடுதியா அதனால் தான் தலிபான்கள் இசைக்கு தடை விதித்துள்ளார்கள். ஈழத்திலும் தடைவிதிக்கபடலாம்☹️

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, நியாயம் said:

இலங்கையில் வயது வேறுபாடின்றி கில்மிசா பங்குபற்றிய போட்டி நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி, மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளிகள் வாயிலாக பலரும் பார்ப்பதையும் கில்மிசா மீது கொண்ட அபிமானத்தையும் நான் நேரில் பார்த்தேன். சிறிய வயதில் இந்த சிறுமி மூலம் மக்கள் மனதில் மகிழ்ச்சியை கொடுக்க, இடம்பிடிக்க முடிந்தது. இங்கே பெரியவர்களின் நக்கல்கள், நையாண்டிகள் புரியவில்லை. உங்கள் பிரச்சனைதான் என்ன?

கில்மிஸாவை ஒருவரும்  கிண்டல் செய்யவில்லை. அவரின் கடின உழைப்பிற்குக் கிடைத்த வெற்றியை எல்லோரும் பகிர்ந்துகொள்கிறார்கள். அதில் தவறேதும் இல்லை. ஆனால் 

அவருக்கு வழங்கப்படும் அளவுக்கு மீறிய  தட புடல்  வரவேற்பும்  அலங்காரமும்தான் விமர்சிக்கப்படுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kapithan said:

கில்மிஸாவை ஒருவரும்  கிண்டல் செய்யவில்லை.

நீங்கள் செய்யவில்லை.

17 minutes ago, Kapithan said:

அவருக்கு வழங்கப்படும் அளவுக்கு மீறிய  தட புடல்  வரவேற்பும்  அலங்காரமும்தான் விமர்சிக்கப்படுகிறது. 

அந்த மக்கள் எதற்கு எடுத்தாலும் அளவுக்கு மீறிய  தடபுடல்கள் தானே சாமி சிலைக்கு நடத்தகின்ற  தடபுடல்களை பார்த்திருப்பீர்களே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் செய்யவில்லை.

அந்த மக்கள் எதற்கு எடுத்தாலும் அளவுக்கு மீறிய  தடபுடல்கள் தானே சாமி சிலைக்கு நடத்தகின்ற  தடபுடல்களை பார்த்திருப்பீர்களே.

அவருடைய வெற்றி யின் பின்னால் உள்ள  அவரது கடும் உழைப்பும் + இந்திய அரசின் அரசியல் நகர்வும் (ஈழத் தமிழரை தனது  வட்டத்திற்குள் கொண்டுவரும்)  இருக்கிறதாக பார்க்கிறேன். 

அவரது வெற்றியை நிதானமாகக் கொண்டாடலாம். அதில் தவறேதும் இல்லை. ஆனால் நடப்பவற்றைப் பார்க்கையில் வெறுப்பூட்டும் அளவிற்கு போய்விடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்துகிறது. 

தேரில் வைத்து இழுக்கவில்லை. அது மட்டும்தான் மிச்சமாக இருக்கிறது. அதனையும் செய்துவிட்டால்  அவரைக்  கடவுழுக்கு  இணையாக்கிவிடுவார்கள். 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, நிழலி said:

ஒரு சாதாரண TV போட்டி ஒன்றின் வெற்றியை தலை மேல் வைத்து கொண்டாடி அந்த பிள்ளையின் எதிர்கால வளர்ச்சியை நாசமாக்க போகின்றனர்.

நன்றாய் சொன்னீர்கள்.

படித்த நல்ல பின்புலம் உள்ள பெற்றோர் இதனை ஊக்குவிக்க மாட்டினம். 

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் University of Alberta வின் முன்னால் President மற்றும்  Vice Chancellor ஆக இருந்த Dr.திருமதி இந்திரா சமரவிக்கிரம அவர்கள் இன்னொரு வெற்றி பெற்ற பெண்ணாகிய Martha Piper என்பவரோடு சேர்ந்து எழுதிய  Lessons On Leadership From Two Women Who Went First என்ற நூலை வாசிக்க கிடைத்தது.

வாழ்வில் உண்மையான வெற்றியை அடைய முயலும் நபர்கள் பிள்ளைகள் எல்லோரும் வாசிக்க வேண்டிய புத்தகம் அது.

extra curricular activities என்பது முக்கியம் தான் ஆனால் அது  Academically எமக்கு உதவ வேண்டும். கில்மிஷா இந்த பாராடுக்களை புறம் தள்ளி விட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். இல்லாது விடில் விட்டில் பூச்சிகள் போல் இந்த பெயர் புகழ் எல்லாம் மறைந்து விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் அந்த சிறுமிக்கு வாழ்த்துக்கள்.நான்நேற்று யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கி பேருந்தில் வரும் போது அந்த ஊர்வலம் பாரத்தேன்.அந்தச் சிறுமியை வரவேற்பதில் தவறில்லை.ஆனால் நடந்தது கொஞ்சமல்ல ரொம்ப ஓவர்.இப்படியான நிகள்ச்சிகள் எத்தனையோ பேரின் வாழ்க்கையை நல்ல விதமாக மாற்றியிருக்குது என்டது உண்மை.என்டாலும் இது ஓவர்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பகிடி said:

படித்த நல்ல பின்புலம் உள்ள பெற்றோர் இதனை ஊக்குவிக்க மாட்டினம். 

இதுவும் கொஞ்சம் அதிகமாகத் தோன்றுகிறது. 

☹️

2 hours ago, பகிடி said:

நன்றாய் சொன்னீர்கள்.

படித்த நல்ல பின்புலம் உள்ள பெற்றோர் இதனை ஊக்குவிக்க மாட்டினம். 

கல்வி பின்புலத்துக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 

கில்மிஷாவின் திறமை இந்த ஆடம்பர வரவேற்பாலும் மீடியாக்களின் அதீத கவனிப்பாலும் குன்றிவிடக்கூடாது எனும் அக்கறை எமக்கு இருப்பது போல், அவரது பெற்றோர்களுக்கும் இருக்கும் என நம்புகின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழ் மக்கள் என்றுமே திறமைசாலிகளை வாழ்த்த வரவேற்க தவறியதில்லை. பாராட்டு விழாக்கள் கூட நடத்தியிருக்கின்றார்கள். பெரிய ஆசான்களும் ஏன் நீதிபதிகள், ஊர் பெரியவர்களும் சேர்ந்தே விழா நடத்தியிருக்கின்றார்கள். ஆனால் இப்படி நகைப்பிற்கிடமாக எதுவுமே செய்ததில்லை.
அது சரி கேரள மேள ஊர்வலம் ஈழமண்ணிற்கு எப்படி வந்தது?

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

ஈழத்தமிழ் மக்கள் என்றுமே திறமைசாலிகளை வாழ்த்த வரவேற்க தவறியதில்லை. பாராட்டு விழாக்கள் கூட நடத்தியிருக்கின்றார்கள். பெரிய ஆசான்களும் ஏன் நீதிபதிகள், ஊர் பெரியவர்களும் சேர்ந்தே விழா நடத்தியிருக்கின்றார்கள். ஆனால் இப்படி நகைப்பிற்கிடமாக எதுவுமே செய்ததில்லை.
அது சரி கேரள மேள ஊர்வலம் ஈழமண்ணிற்கு எப்படி வந்தது?

செண்டை இங்கே வாசிக்கப்பட்டிருக்குமானால்,  இந்த மேள தாளத்தின் பின்னணியில் இந்தியன் தூதுவராலயத்தின் கரங்கள் இருக்க வாய்ப்புகள் அதிகம். 🤨

  • கருத்துக்கள உறவுகள்

 மேளம் பிரச்சனையா பின்புலம் பிரச்சனையா?

நல்ல பின்புலம் 🙆‍♂️   அந்த நல்ல பின்புலம் என்ன என்பதை தோண்டி ஆராய்ந்து தான்   சில கனவான்கள் எதிர்ப்புக்கு காரணம் என்பது  தெரியவருகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, Kapithan said:

செண்டை இங்கே வாசிக்கப்பட்டிருக்குமானால்,  இந்த மேள தாளத்தின் பின்னணியில் இந்தியன் தூதுவராலயத்தின் கரங்கள் இருக்க வாய்ப்புகள் அதிகம். 🤨

 செண்டை வாசிக்கப்பட்டிருக்கும் காணொளி என்னைடம் இருக்கு. ஆனால் அதன் மீதான பின்னோட்டங்கள் யாழ்களத்திற்கு ஏற்புடயவை இல்லை என்பதால் இணைக்க வில்லை.

தமிழினத்திற்கு எதுவுமே பிரச்சனையில்லை. அந்த இனம் சொந்தக்காலில் சொந்த மண்ணில் சுய உரிமையுடன் வாழ்ந்தால்.......?

  • கருத்துக்கள உறவுகள்

கில்மிஷாவின் வெற்றி இலகு வெற்றி அல்ல. பாராட்டுதலும்.. ஊக்குவிப்பும்.. அவர் மேலும் மேலும் இசைத்துறையில் வளரவும் வாய்ப்புக்களை பெறவும் இயன்றவர்கள் எல்லோரும் உதவ வேண்டும். குறிப்பாக தென்னிந்திய தமிழக பாடகர்கள்.. இசையமைப்பாளர்கள்.. மற்றும் கலைஞர்கள். 

அப்புறம் சிம்மையின் கணக்கா... மீரூவில் கொண்டு போய் விடாமல் இருக்க பெற்றோரும் பார்த்துக் கொள்வது அவசியம். அவளா நன்மை தீமைகளை ஆராய்ந்து.. தீர்மானங்களை எடுக்கும் நிலை வரும் வரை.

இருந்தாலும் அளவுக்கு மிஞ்சிய ஆடம்பர வரவேற்பு என்பது கொஞ்சம் ஓவர் தான். அதை குறைச்சு கில்மிசாவின் எதிர்காலத்துக்கு பயன் தரவல்ல.. நிகழ்வுகளை.. ஒழுங்கு செய்திருக்கலாம். இந்த பழைய.. மணவறை வரவேற்பு.. சகிக்கக் கூடியதாக இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல கழுகுகள் வானில் பறக்க சொந்த மண்ணில் தலை நிமிர்ந்து வாழ முடியாத இனத்திற்கு நாதஸ்வரம் பறைமேளம் இருக்க செண்டை எதற்க்கு?

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விளங்க நினைப்பவன் said:

 மேளம் பிரச்சனையா பின்புலம் பிரச்சனையா?

நல்ல பின்புலம் 🙆‍♂️   அந்த நல்ல பின்புலம் என்ன என்பதை தோண்டி ஆராய்ந்து தான்   சில கனவான்கள் எதிர்ப்புக்கு காரணம் என்பது  தெரியவருகின்றது.

இரண்டுமே பிரச்சனைதான். 

தனித்துவமாக வாழ  விரும்புவோருக்கு நிச்சயம் இது பிரச்சனைதான். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, Kapithan said:

இரண்டுமே பிரச்சனைதான். 

தனித்துவமாக வாழ  விரும்புவோருக்கு நிச்சயம் இது பிரச்சனைதான். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.