Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

சமீபத்தில் தாயகம் போயிருந்தேன். நீண்ட வருடங்களின் பின்னர் ஒரு மாவீரர் நாளில் தாயகத்தில் இருக்க முடிந்தது.

கொழும்பில் வசிக்கும் எனது பழைய நண்பன் ஒருவன் என்னை தன்னுடனே தங்க வைத்துக் கொண்டான். அவன் ஒரு சட்டத்தரணி. இப்பொழுது என்னைப் போலவே அவனும் ஓய்வில் இருக்கிறான். அவனுக்கு இரண்டு பிள்ளைகள். இருவரையும் வெளிநாடு அனுப்பி விட்டு  குடியும் குடித்தனமுமாக இருக்கிறான்

முற்றம் கூட்டவும் எடுபிடி வேலைகளுக்கும்சமையல், துவையல் போன்ற வேலைகளுக்கும் என இரண்டு வேலையாட்களை வைத்திருக்கிறான். ஏகப்பட்ட தமிழ் தொலைக்காட்சிகள் இருப்பதால் பழைய பாடல்கள் திரைப்படங்களுடன் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தவனிடம் நான் சிக்கிக் கொண்டேன். நண்பனுக்கு இங்கே நான் வைத்திருக்கும் பெயர் மணியன்.

இலங்கையில் சுற்றுலாவுக்குத்தான் இம்முறை போயிருந்தேன். பொது வேலைகள் என்று பரந்த நோக்கம் எதுவும் என்னிடம் இருக்கவில்லை. புறப்படுவதற்கு முன்னர் மணியனுக்கு நான் எனது வரவைப் பற்றி அறிவித்திருந்தேன். “நீ சிறிலங்காவில், எங்கே வேணுமெண்டாலும் போ. ஆனால் உன்ரை முக்கிய இருப்பிடம் எனது வீடுதான். என்னுடனேயே தங்குகிறாய்என்று மணியன் சொல்லி விட்டான்.

புதுக் கட்டிடங்கள் உயர்ந்திருந்தாலும், தமிழ் பெயர்களுடன் கடைகள் பல இருந்தாலும், பாசி பிடித்து கறுப்பாக இருக்கும் மதில்கள், வீட்டுச் சுவர்கள், பள்ளம் விழுந்த வீதிகள்... என வெள்ளவத்தை முன்னர் போலவே, மாறாமல் அப்படியே இருந்தது.

IMG-5361.jpg

வெள்ளவத்தையில் கடற்கரை ஓரமாக  ஆறாவது மாடியில் உள்ள மூன்று அறைகள் கொண்ட ஒரு வீட்டுக்கு மாத வாடகையாக இரண்டு இலட்சங்கள் ரூபா கேட்டார்கள். அப்படி ஒரு வீட்டில் தங்கிக் கொண்டு பல இடங்களைச் சுற்றி வரத்தான் முதலில் தீர்மானித்திருந்தேன். ஆனால் மணியன் அதற்குச் சம்மதிக்கவில்லை. அவனது விருப்பத்துக்கு ஏற்ப அவனது வீட்டில் தங்கிக் கொள்ள வேண்டியதாயிற்று. மணியன் வீட்டின் மாடியில் ஒரு அறை எனது இருப்பிடமாகிப் போனது

IMG-5360.jpg

முதல் நாளே இரவு படுக்கப் போகும் போது மணியன் என்னிடம் சொன்னான், “காலையில் ஏழு மணிக்கு கீழே வந்து விடுஎன்று.

ஏழு மணிக்கு 'சூடாக தேநீர் கிடைக்கும்' என்று மாடியை விட்டு கீழே வந்தால், “வாவா கடைக்குப் போவம்என்று மணியன் அவசரம் காட்டினான். பருத்தித்துறை,கிராமக்கோட்டுச் சந்தியில் இருந்த தாமோதரத்தார், நாகேந்திரத்தின் தேநீர் கடைகள் இரண்டும் நினைவுக்கு வந்தன. இளைஞர்களாக இருந்த போது நானும் மணியனும், பொன்னையா அண்ணனின் உளுந்து வடையை பேப்பரில் வைத்து அழுத்தி எண்ணை நீக்கி, நன்னாரி சேர்ந்தபிளேன் ரீயை பல மாலை வேளைகளில் சுவைத்து  மகிழ்ந்திருந்திருக்கிறோம். ஆக மணியனும் நானும் இப்பொழுது ஏதோ ஒரு தேநீர் கடைக்குப் போகப் போகிறோம் எனக் கணித்துக் கொண்டேன்.

மணியனின் காரில் ஏறிக் கொண்டேன். கார் புறப்படும் போதுசீற் பெல்டைபோட முயன்ற போது, “இதெல்லாம் இங்கே அவசியம் இல்லைஎன்று மணியன் சொன்னான்

காலை நேரம். காலி வீதியில் வாகனங்களின் சத்தம் அதிகமாக இருந்தது. ‘கோன்அடிக்காமல் எந்த வாகனங்களும் நகர்ந்ததாகத் தெரியவில்லை. மணியனின் கார் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. பல வாகனங்கள் எங்களைத் தாண்டிச் செல்லும் போது அதில் இருந்தவர்கள் எங்களை முறைத்துப் பார்த்தார்கள். அல்லது எரிச்சலுடன் பார்த்தார்கள். நான் மணியனைப் பார்த்த போது, மணியன் புன்முறுவலுடன் சொன்னான், “கண்டு கொள்ளாதை. எனக்கு என்ரை கார் முக்கியம். அவையளுக்கு அவசரம் எண்டால், என்னை முந்திக் கொண்டு போகட்டும்”. 

ஊர்ந்து ஊர்ந்து சென்று ஒருவாறு தனது காரை ஒரு தரிப்பிடத்தில் நிறுத்தினான்.

ஒரு பேக்கரிக்குள் நுளைந்தான். நான் அவனைப் பின் தொடர்ந்தேன். பாண் வாங்கும் எல்லோர் கைகளிலும் பிளாஸ்ரிக் பைகள் இருந்தன. ‘Slice Bread என்று கேட்டு அவனும் பிளாஸ்ரிக் பையில் பாண்  வாங்கிக் கொண்டான். “மச்சான் சம்பலோடை பாண் சாப்பிட நல்லா இருக்கும்என்றான்.

IMG-5370.jpg

“காலமைக்கு பாண்தான் சாப்பாடோ?”

“ஏன்டா, பாண் விருப்பமில்லையே? நேற்று ராத்திரிச் சாப்பாட்டுக்கு சரஸ்வதி விலாஸிலே வேண்டின இடியப்பம், வெந்தயக் குழம்பு, சொதி எல்லாம் மிஞ்சிப் போச்சுடா. சூடாக்கித் தாரன். வேணுமெண்டால் நீ அதைச் சாப்பிடு. நான் பாண் சாப்பிடுறன்சொல்லிவிட்டு என்னைப் பார்த்தவனுக்கு, இதமான காலை வெய்யிலிலும் என் முகம் வாடி இருந்தது புரிந்திருக்கும்.

“நீ காலமை ரீயும் குடிக்கேல்லை என்ன? வா, பால் வாங்கிக் கொண்டு போவம்” என்றவன், ஒரு பெட்டிக் கடையில் இரண்டு பால் பக்கெற்றுகளும் வீரகேசரி பேப்பரும் வாங்கினான்.

“வீரகேசரி வாங்கினால் தினத்தந்தி இலவசமடாஎன்று சொன்னவன் அடுத்து ஒரு பழக்கடைக்கு முன்னால் நின்று கப்பல் வாழைப்பழத்துக்கு விலை கேட்டான்.

“ஐயா, இந்தப் பழம் இப்ப உடனை சாப்பிடலாம். இந்தச் சீப்பை வெட்டட்டே?” என்ற கடைக்காரரிடம்ஆறு பழம் போதும்என்று சொல்லி வாங்கிக் கொண்டான்.

“நல்ல பழம்தானேடா. ஒரு சீப்பாவே வேண்டி இருக்கலாம்என்று கேட்ட என்னை மணியன் உடனே இடை மறித்தான்.  

“நல்ல பழம்தான். நான் ஒரு பழம்தான் சாப்பிடுவன். சீப்பா வேண்டிக் கொண்டே வைச்சால் எல்லாத்தையும் ஒரேநாளிலே சாப்பிட்டு முடிச்சிடுவாங்கள்

மணியன் தன் வேலையாட்களை குறிப்பிடுகிறான் என்பது புரிந்தது. அவனுக்கு ஒரு பழம்.அவன் மனைவிக்கு ஒன்றுஒன்றுதான் எனக்கும் வருமா? இல்லை இரண்டு தருவானாயேர்மனியில் கிடைக்கும் பெரிய வாழைப்பழத்துக்கு இந்தச் சின்ன கப்பல் பழம் ஈடு  கொடுக்குமா?

கார் தரிப்பிடத்தில் ஒருவன் பச்சை உடுப்போடு காத்திருந்தான். மணியன் அவனுக்கு ஐம்பது ரூபாத் தாளை எடுத்துக் கொடுத்தான்.

“எதுக்கு அவனுக்கு ஐம்பது ரூபா ?”

“பார்க்கிங் சார்ஜ். காரை ஒருக்கால் நிப்பாட்டி எடுத்தாலே எழுபது ரூபா. ரிசீற்றை வேண்டாமல் விட்டால் ஐம்பது

“அப்போ இந்தக் காசு அரசாங்கத்துக்குப் போகாது

“போகாது

காருக்கு வெளியே பார்த்தேன். அழுக்கான நடைபாதையில் கைகளை நீட்டிக் கொண்டு ஏதாவது கிடைக்குமா என்று பலர் இருந்தார்கள். பச்சை உடையுடன் ஒருவன் ஓடியோடி கௌரவமாக ஐம்பது ரூபாப்படி பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான்.

“சமையலுக்குத்தானே வீட்டிலை ஆள் வைச்சிருக்கிறாய்? பிறகேன் கடையிலை வாங்கிச் சாப்பிடுகிறாய்?” என்று மணியனைக் கேட்டேன்.

“வேலைக்காரரை நாலு மணிக்கு அனுப்பிப் போடுவன். இரவுச் சாப்பாடு எனக்கும் மனுசிக்கும்தானே. ஒருநாள் இடியப்பம், அடுத்தநாள் புட்டு, பிறகு அப்பம், மசாலா தோசை, பொங்கல், கொத்து எண்டு விரும்பினதை வாங்கிச் சாப்பிடுவம். மிஞ்சுறதை அடுத்தநாள் காலமை சூடாக்கி சாப்பிடுவம். அது சுகமான வேலை

“மத்தியானத்தை எதுக்கு விட்டாய். அதுக்கும் கடையிலை வாங்கலாம்தானே?"

“வாங்கலாம். எங்களுக்குத் தேவையான மரக்கறிகள் அதுவும் எங்கடை பாணிச் சமையல், மீன்,இறைச்சி எண்டு வேணும்தானே

காலை எழுந்தவுடன் பால்,பாண்,பழங்கள் வாங்குவது. பத்து மணியளவில் மரக்கறிகள், மீன் வாங்குவது, மாலையில் ஏதாவது ஒரு உணவு விடுதியில் இரவுச் சாப்பாடு வாங்குவது என்று ஓரிரு நாட்களிலேயை வெள்ளவத்தை எனக்கு பழகிப் போனது.

கூடுதலான வரையில் மணியன் தனது பேர்ஸைத் திறக்காமல் இருக்கப் பார்த்துக் கொண்டேன்.

 

 

  • Like 19
  • Haha 1
  • Replies 82
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Kavi arunasalam

சமீபத்தில் தாயகம் போயிருந்தேன். நீண்ட வருடங்களின் பின்னர் ஒரு மாவீரர் நாளில் தாயகத்தில் இருக்க முடிந்தது. கொழும்பில் வசிக்கும் எனது பழைய நண்பன் ஒருவன் என்னை தன்னுடனே தங்க வைத்துக் கொண்டான். அவன்

Kavi arunasalam

சில காலமாக எனது வலது கை மணிக்கட்டில் ஒரு நோ இருக்கிறது. முதுமை ஒரு காரணமா? அல்லது வேறு ஏதாவதாக இருக்கலாமா? என்று எனது குடும்ப வைத்தியரை அணுகிய போது, என்னிடம் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு “இளமை விடை பெற

Kavi arunasalam

காலையில் பாண் வாங்குவதற்காக மணியனும் நானும் பேக்கரிக்குப் போயிருந்தோம். அங்கே ஒரு சிறிய கூட்டம் வரிசை கட்டி இருந்ததால்  மணியன் பாண் வாங்கி வரும் வரை நான் ஓரமாக ஒதுங்கி நின்றேன். பிளாஸ்ரிக் பையில்

Posted

வாசிக்க சுவாரசியமாக இருக்கு 

படத்தில் இருக்கும் restaurant காந்தி லொட்ஜா?

தொடருங்கள் ...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
39 minutes ago, Kavi arunasalam said:

காலை எழுந்தவுடன் பால்,பாண்,பழங்கள் வாங்குவது. பத்து மணியளவில் மரக்கறிகள், மீன் வாங்குவது, மாலையில் ஏதாவது ஒரு உணவு விடுதியில் இரவுச் சாப்பாடு வாங்குவது என்று ஓரிரு நாட்களிலேயை வெள்ளவத்தை எனக்கு பழகிப் போனது.

ஒரு சுவாரசியமும் இல்லாத வெள்ளவத்தை வாழ்க்கை!

சுத்தமான காத்து இல்லாத கொழும்பு வாழ்க்கைக்கு ஊர்ப்பக்கம் எவ்வளவோ பரவாயில்லை. ஆனால் பலர் இன்னமும் கொழும்பைத்தான் விரும்புகின்றார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றாக இருக்கிறது .....தொடருங்கள்.......தொடருகின்றோம்.......!  👍

Posted
37 minutes ago, கிருபன் said:

ஒரு சுவாரசியமும் இல்லாத வெள்ளவத்தை வாழ்க்கை!

சுத்தமான காத்து இல்லாத கொழும்பு வாழ்க்கைக்கு ஊர்ப்பக்கம் எவ்வளவோ பரவாயில்லை. ஆனால் பலர் இன்னமும் கொழும்பைத்தான் விரும்புகின்றார்கள்!

எனக்கு ஊர் வாழ்க்கையை விட கொழும்பு வாழ்க்கை மிகவும் பிடித்த ஒன்று. வெள்ளவத்தை, கல்கிசை போன்ற இடங்கள் எனக்கு மிக பிடித்தமான இடங்கள். 

ஆனால் ஓய்வு காலத்தில், ஊருக்கோ அல்லது கொழும்புக்கோ போய் வாழும் எண்ணம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kavi arunasalam said:

குடியும் குடித்தனமுமாக இருக்கிறான்

பயணக்கட்டுரை போல கிடக்கு....
கதை தொடருமா தொடராதா..... 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, குமாரசாமி said:

கதை தொடருமா தொடராதா..... 😎

குமாரசாமி, பயந்திட்டீங்களா? இன்னும் ஒன்றிரண்டோடு முடித்திடுவேன்.

8 hours ago, நிழலி said:

ஆனால் ஓய்வு காலத்தில், ஊருக்கோ அல்லது கொழும்புக்கோ போய் வாழும் எண்ணம் இல்லை.

நான் ஓய்வுக்கு வந்து விட்டேன். எனக்கும் அந்த எண்ணம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, கிருபன் said:

சுத்தமான காத்து இல்லாத கொழும்பு வாழ்க்கைக்கு ஊர்ப்பக்கம் எவ்வளவோ பரவாயில்லை. ஆனால் பலர் இன்னமும் கொழும்பைத்தான் விரும்புகின்றார்கள்!

உண்மைதான் கிருபன். அனால் கொழும்பில் இருந்து இலகுவாக பல இடங்களுக்குப் போய் வர முடிகிறது.

(இது எனது அனுபவம்)

 

8 hours ago, suvy said:

தொடருங்கள்.......தொடருகின்றோம்.......!

உங்களது நேரத்தை அதிகமாக எடுத்து விடமாட்டேன். கொஞ்சமாக அனுபவத்தை எழுதி விடுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, நிழலி said:

படத்தில் இருக்கும் restaurant காந்தி லொட்ஜா?

தெரியவில்லை நிழலி. ஆனால் வெள்ளவத்த றோயல் பேக்கரிக்கு அருகில் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொடருங்கள் கவி ஐயா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Kavi arunasalam said:

குமாரசாமி, பயந்திட்டீங்களா? இன்னும் ஒன்றிரண்டோடு முடித்திடுவேன்.

இந்த வாலிபக்கிழவன் குமாரசாமிக்கு பயமா நெவர்.

main-qimg-47263f120564b3512b07cc81875300

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரக்கிராசி ரொம்ப கராரான பேர்வளி போல இருக்கு.

தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ஈழப்பிரியன் said:

பிரக்கிராசி ரொம்ப கராரான பேர்வளி போல இருக்கு.

அப்படிச் சொல்லிவிட முடியாது. எதையும் அளந்து போடுபவர். நான் அங்கிருந்த போது நிறையவே எனக்கு செலவழித்திருக்கிறார். ஆனாலும் நான் பார்த்த சட்டத்தரணிகள் (மணியம் உட்பட) தண்ணி போடுபவர்களாகவே இருக்கிறார்கள். அதுதான் ஏன் என்று தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-5466.jpg

IMG-5468.jpg
சில காலமாக
எனது வலது கை மணிக்கட்டில் ஒரு நோ இருக்கிறது. முதுமை ஒரு காரணமா? அல்லது வேறு ஏதாவதாக இருக்கலாமா? என்று எனது குடும்ப வைத்தியரை அணுகிய போது, என்னிடம் எல்லாவற்றையும் கேட்டுவிட்டுஇளமை விடை பெறும் போது உடலில் அங்கங்கே ஏதாவது பிரச்சனைகள் வருவது இயற்கை. நீங்கள் இரத்த அழுத்தத்துக்கு உட்கொள்ளும் வில்லையின் எதிர்தாக்குதலாகவும் இருக்கலாம். கணினியைப் பாவிக்கும் போது நீங்கள் உங்கள் கையை வைத்திருக்கும் நிலையால் கூட மணிக்கட்டுப் பிரச்சனை வரலாம். கணினியில் படம் வரைவதை நிறுத்துங்கள். இல்லாவிட்டால் குறைத்துக் கொள்ளுங்கள். அதிகளவு பாரமான வேலைகளையும் தவிருங்கள்என பல ஆலோசனைகளைத் தந்திருந்தார்

இப்பொழுது சிறீலங்காப் பயணத்தின் போது 23 கிலோ சூட்கேசை ஏற்றி இறக்கியதில் மணிக்கட்டில் மறைந்திருந்த நோ மீண்டும் எட்டிப் பார்த்தது கூடவே சிறு வீக்கமும் வந்து விட்டது. அங்கே இருக்கும் போது கூடுதலான வரையில் வலது கையைப் பாவிப்பதைத் தவிர்க்கத் தொடங்கினேன். இதை அவதானித்த மணியன், “உன் வலது கைக்கு என்ன நடந்தது?” என்று கேட்டான். விடயத்தைச் சொன்னேன்.

“காரில் ஏறுஎன்றான். ஏறிக் கொண்டேன். எங்கே போகிறோம் என்று மணியன் சொல்லவில்லை. இரவு நேரம். மழை பெய்து கொண்டிருந்தது. “ முந்தி இப்பிடி இல்லை. இப்பத்தான். இந்த நேரத்திலை வழக்கமா வடக்கு கிழக்கிலைதான் மழை இருக்கும். எல்லாம் இப்ப இஞ்சை மாறிப் போச்சுஎன்று மணியன் சலித்துக் கொண்டான்.

“இங்கை மட்டுமில்லை. உலகம் முழுக்க இப்படித்தான் நிலமைஎன்று அவனுக்குப் பதில் தந்தேன்.

கார், காலி வீதியில் ஒரு சிறிய தனியார் வைத்தியசாலைக்கு முன்னால் நின்றது. வைத்தியசாலையில் கார் நிறுத்த  கட்டணம்  வாங்கிக் கொண்டார்கள்.

“மச்சான். நல்ல ஒத்தப்பேடி. களுபோவில ஹொஸ்பிற்றலிலை வேலை செய்கிறார். அங்கை வேலை முடிஞ்சு இரவு எட்டு எட்டரைக்குத்தான் இஞ்சை வருவார். உன்ரை கையை ஒருக்கால் அவருக்கு காட்டு

மணியனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அவன் பின்னால் போனேன். நம்பர் எடுத்துக் கொண்டு வந்து கையில் தந்தான். “காசு குடுக்க வேணுமெல்லோ?” என்று மணியனைக் கேட்டதற்கு, “அதை நான் கட்டிட்டேன்என்றான்.

நேரம் போய்க் கொண்டிருந்தது. டொக்டர் வரவேயில்லை. நான் சலிப்படைவது மணியனுக்குப் புரிந்து விட்டது. “இன்னும் ஒரு பிரைவேட் ஹொஸ்பிற்றல் அதுவும் வெள்ளவத்தையிலை பக்கத்திலைதான் இருக்கு, டொக்டர் அங்கையும் ஆக்களைப் பாக்கிறவர். வருவார். பொறுமையாக இருஎன்று  சொன்னான்.

பத்து மணியளவில் டொக்டர் வந்தார். கடைசி ஆளாக அவர் அறைக்கு நான் போனேன். மணியனும் கூட வந்தான். எல்லாவற்றையும் கேட்டுவிட்டுப்ளட் ரெஸ்ற் செய்யோணும். பெயின் கில்லரும் கிறீமும் எழுதித் தாறன். மாறாட்டில் வாங்கோடொக்டரின் அறிவுரையை வேதவாக்கா மணியன் எடுத்துக் கொண்டு இரத்த பரிசோதனைக்கு என்னை அழைத்துச் சென்றான். அங்கும் கட்டணம் செலுத்த வேண்டும். அதையும் மணியனே கட்டினான்.

வீட்டுக்குத் திரும்பும் போது மணியனைக் கேட்டேன், “நான்தானே கடைசி ஆள் எதுக்குடா நம்பர் எடுத்தாய்?” என்று.

“பழக்கதோசம்என்று பதில் வந்தது.

அடுத்தநாள் முதல் வேலையாக வைத்தியசாலைக்குப் போய் எனது இரத்தப் பரிசோதனை முடிவையும் பார்மஸியில் டொக்டர் எழுதிய மருந்தையும் மணியன் எடுத்து வந்தான். “இரத்தத்தில் பிரச்சினை இல்லைஎன்று சொன்னான்

அன்று மாலை அவனது நண்பர் ஒருவர் மணியனைக் காண வந்தார். வந்தவரது இடது கையில் கட்டுப்போட்டிருந்தது. வெள்ளைக் கொடியை கையில் ஏந்திக் காட்டுவது போல கையை தூக்கி வைத்துக் கொண்டிருந்தார்.

“கையிலை என்ன பிரச்சனை?" என்று அவரை மணியன் கேட்க, “கன காலமா ஊருக்குப் போகேல்லை. புத்தூரிலை இருந்த காணியை  கொஞ்சம் துப்பரவாக்கி நல்ல விலைக்குக் குடுக்கலாம் எண்டு போனால், காணிக்குள்ளை இருந்த பள்ளத்திலை விழுந்து கையிலை எலும்பு முறிஞ்சு போச்சு. அப்பிடியே எல்லாத்தையும் போட்டிட்டு வந்திட்டன்என்று அவர் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

அவர் தன் கதையை விரிவாக்கு முன்னரே மணியன் என் கையின் கதையைச் சொல்லிவிட்டான்.

“நான் ஒத்தப்பேடியிட்டை எல்லாம் போகேல்லை. இஞ்சை வெள்ளவத்தை மாக்கெற்றுக்குப் பக்கத்திலே (Manning place) மனிங் பிளேஸிலே ஒரு ஆயுர்வேத கவர்ன்மென்ற் ஹொஸ்பிற்றல் இருக்கு. ஒண்டவிட்ட ஒருநாள் போகோணும். எண்ணை பூசி மசாஜ் செய்து பத்தும் போட்டு விடுவினம். இப்ப கையிலை நல்ல முன்னேற்றம்

IMG-5467.jpg

அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மணியன் என்னைப் பார்த்தான்நாளை நான் ஆயுர்வேத ஹொஸ்பிற்றலுக்குப் போக வேண்டிய வேலை இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.

“காலமை ஏழு மணிக்குப் போய் நம்பர் எடுத்திட்டால் வெள்ளெணவா வேலை முடிஞ்சிடும். எட்டரைக்கு டொக்டேர்ஸ் வந்திடுவினம். இரண்டு பேர்தான் டொக்டேர்ஸ். அதிலை லேடி டொக்டர் தமிழ். நானும் நாளைக்குப் பத்துப் போடணும். நீங்கள் நாளைக்கு ஏழு மணிக்கு வாங்கோ. நான் அங்கை நிப்பன். உங்களுக்கு எண்ணைதான் தருவினம் எண்டு நினைக்கிறன். எதுக்கும் வரக்கை ஒரு போத்தலையும் கொண்டு வாங்கோ. பத்துப் போடுறதெண்டால் பஞ்சும், பன்டேஜ்ஜும் பார்மஸியிலை வேண்டிக் குடுக்க வேணும். ஏழு மணிக்கு பார்மஸி திறக்க மாட்டாங்கள். எதுக்கும் நீங்கள் வாங்கோவன்என்று சொல்லிவிட்டு அவர் போய்விட்டார்.

காலை 6:45க்கே ஆயுர்வேத வைத்தியசாலைக்குப் போய் விட்டேன். அங்கே இருந்த கதிரைகளில் எல்லாம் தமிழ், சிங்களம் கலந்த (என்னைப் போன்ற) முதியவர்கள் இருந்தார்கள். இருப்பதற்கு இடம் இல்லாததால் மணியனின் நண்பனுக்காக காத்திருந்தேன். 7:30க்கு வந்து சேர்ந்தார்

“வெள்ளனவே வந்திட்டீங்கள் போல. ஏன், இருக்கிறதுக்கு இடம் கிடைக்கேல்லையே? கடைசி ஆள் இருக்கிற கதிரைக்குப் பக்கத்திலை நிண்டிருக்கலாமே?” என்று தன் ஆதங்கத்தைச் சொன்னார்.

7:45க்கு ஊழியர்கள் வரத் தொடங்கினார்கள். கதவுகளைத் திறந்த பின்னர் இருக்கை இல்லாமல் இருந்தவர்களுக்கு, உள்ளே இருந்து கதிரைகளை எடுத்து வந்து போட்டு அமரச் சொன்னார்கள். கூட்டிப் பெருக்கி, புத்தரை வணங்கிய பின்னர் இலக்கங்களைத் தந்தார்கள்வரிசையில் நின்று அங்கிருந்த யன்னலூடாக இலக்கத்தைக் கொடுத்து மற்றவர்கள் போல் நானும் பதிவு செய்து  கொண்டேன்.

தமிழ் ‘லேடி டொக்டர்முகக் கவசம் போட்டிருந்ததார். “உங்களுக்குப் பத்து போட்டால் நல்லது. அது நீங்கள் இங்கே இருக்கிறவரைதான் சாத்தியம். எண்ணை தரலாம். இலவசம் என்றபடியால் ஒரு அவுன்ஸுக்கு மேலே ஹொஸ்பிற்றலிலை தரமாட்டினம். வெள்ளவத்தை மாக்கெற்றில் இருந்து தெஹிவலப் பக்கமாகப் போறவழியிலே பஸ்ஸல் லேனுக்கு முன்னுக்கு உள்ள பில்டிங்கிலே முதலாவது மாடியிலே ஒரு ஆயுர்வேதக் கடை இருக்கு. யேர்மனிக்கு நீங்கள் எண்ணை கொண்டு போறதெண்டால் தேவையானதை அங்கை வாங்கலாம். இரண்டு வகையான எண்ணை எழுதித்தாறன். ஒண்டு வீக்கத்துக்கும் குணமாகிறதுக்கும். மற்றது நோ இருந்தால் பூசுறதுக்கு. நீங்கள் இரண்டையும் சேர்த்தும் பாவிக்கலாம்என்று அன்போடு சொன்னார். வைத்தியாசாலையில் தந்த ஒரு அவுன்ஸ் எண்ணையுடன் வைத்தியர் சொன்ன ஆயுர்வேத மருந்துக்கடையிலும் இருக்கட்டுமே என்று சில அவுன்ஸ் எண்ணெய் வாங்கிக் கொண்டேன். விலை மலிவாக இருந்தது. ஒரு அவுன்ஸ் எண்ணெய்க்கு ரூபா 200/- தான் கொடுக்க வேண்டி இருந்தது.

“இப்பிடி ஒரு கடை இருக்குது எண்ணை வாங்கலாம் எண்டது எனக்குத் தெரியாமல் போட்டுதுஎன்று மணியனின் நண்பர் சொன்னார்.

அவர் சொன்னதிலும் உண்மை இருந்தது. அந்த ஆயுர்வேத மருந்துக் கடை ஒரு பழைய கட்டிடத்தின் மேல்மாடியில் மறைவாக இருந்தது. மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகள் கட்டிடத்தின் வெளிப் பக்கத்தில் இல்லாததும், கடை இருப்பதற்கான அறிவிப்புப் பலகை வெளியில் தெரியாமல் இருந்ததும் அப்படி ஒரு ஆயுர்வேத மருந்துக் கடை இருப்பது பலருக்குத் தெரிய வாய்ப்பில்லைத்தான்.

நான் மறந்தாலும், “கைக்கு எண்ணை பூசினியோ?” என்று மணியன் நினைவு படுத்திக் கொண்டே இருந்தான். கொழும்பில் இருக்கும் போது கைக்கு எண்ணை பூசிக் கொண்டேன். வீக்கம் குறைந்து மணிக்கட்டில் நோ போய்விட்டதுகைக்கு அதிக அழுத்தங்கள் கொடுக்காததாலா? பாரங்கள் அதிகம் தூக்காததாலா? அல்லது எண்ணை பூசிக் கொண்டதாலா? என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் எண்ணையை யேர்மனிக்கு கொண்டு போவதற்காக சூட்கேசில் பத்திரமாக எடுத்த வைத்துக் கொண்டேன்

  • Like 14
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
41 minutes ago, Kavi arunasalam said:

ஆனாலும் நான் பார்த்த சட்டத்தரணிகள் (மணியம் உட்பட) தண்ணி போடுபவர்களாகவே இருக்கிறார்கள். அதுதான் ஏன் என்று தெரியவில்லை.

Bar இல் இருந்து Bar வேலையை பார்ப்பதனாலாக இருக்கும்.

  • Haha 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, Kavi arunasalam said:

இப்பொழுது சிறீலங்காப் பயணத்தின் போது 23 கிலோ சூட்கேசை ஏற்றி இறக்கியதில் மணிக்கட்டில் மறைந்திருந்த நோ மீண்டும் எட்டிப் பார்த்தது கூடவே சிறு வீக்கமும் வந்து விட்டது. அங்கே இருக்கும் போது கூடுதலான வரையில் வலது கையைப் பாவிப்பதைத் தவிர்க்கத் தொடங்கினேன். இதை அவதானித்த மணியன், “உன் வலது கைக்கு என்ன நடந்தது?” என்று கேட்டான். விடயத்தைச் சொன்னேன்

எனக்கும் மணிக்கட்டில் வந்த நோவு பரவலாக மூட்டுகளிலும் வர தொடங்கியது.வீட்டு டாக்ரர் இது ஆதரடைஸ் போல இருக்கு.

அதற்கேற்ற டாக்ரரையும் தந்தா.

இப்ப 5-6 வருடமா ஆதரைடிசுக்கு மாத்திரைகள் எடுக்கிறேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ஈழப்பிரியன் said:

பிரக்கிராசி ரொம்ப கராரான பேர்வளி போல இருக்கு.

தொடருங்கள்.

பிரக்கிராசி வாழைப்பழம் எண்ணி வாங்கேக்கையே ஆளை மட்டுக்கட்டிட்டன். :cool:

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kavi arunasalam said:

ஆனாலும் நான் பார்த்த சட்டத்தரணிகள் (மணியம் உட்பட) தண்ணி போடுபவர்களாகவே இருக்கிறார்கள். அதுதான் ஏன் என்று தெரியவில்லை.

அது வந்து அவர்கள் வாதடும். வழக்குகளில்  திட்டமிடப்பட்ட பொய்சாட்சிகளை பயன்படுத்தி  வென்று விடுவார்கள்   இந்த விடயம் மனதில் அரித்துக்கொண்டிருக்கும்.  தண்ணீர் குடித்தால் மறந்து விடுவார்கள்  🤣

  • Like 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/1/2024 at 21:13, Kavi arunasalam said:

வெள்ளவத்தையில் கடற்கரை

வெள்ளவத்தைப் படங்களும் வருகின்ற விவரிப்புகளும் 35ஆணடுகள் இந்தியப்படைக்காலத்தை நோக்கி இழுத்துச் செல்கிறது. அனுபவப்பகிர்வுக்கு நன்றி.

44 minutes ago, குமாரசாமி said:

பிரக்கிராசி வாழைப்பழம் எண்ணி வாங்கேக்கையே ஆளை மட்டுக்கட்டிட்டன். :cool:

ஆற்றிலை போட்டாலும் அளந்து போடுவதைப் பின்பற்றும் மனிதர்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஈழப்பிரியன் said:

எனக்கும் மணிக்கட்டில் வந்த நோவு பரவலாக மூட்டுகளிலும் வர தொடங்கியது.வீட்டு டாக்ரர் இது ஆதரடைஸ் போல இருக்கு.

அதற்கேற்ற டாக்ரரையும் தந்தா.

இப்ப 5-6 வருடமா ஆதரைடிசுக்கு மாத்திரைகள் எடுக்கிறேன்.

வீட்டு டாகடர்  = குடும்ப வைத்தியர்   ( family Doctor      )

பயண அனுபவ பகிர்வுக்கு நன்றி . ஜெர்மன் பாஷையில்  சுற்றுலாவை எப்படி சொல்வது ....?  

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

வாசிக்கும் ஆர்வத்தை முடுக்கிவிடும்  எழுத்துநடை....ஆமா ..வெள்ளவத்தை கடற்கரை வெளிச்சமாய்க் கிடக்கே...அந்த தாழைகள்  எல்லாம் எங்கே போயிட்டுது...மறைந்திருந்து பார்த்த மறக்க முடியாத அனுபவங்கள்... எழுத்தில் வடிக்க முடியாதவை...காந்தியும் ரோயலும் அருகில்தான் இப்பவும் இருக்கினம்....அந்த மைசூர் க்பே  போண்டாவும் சுசியமும் மறக்கமுடியவில்லை..அதையும் ஒருக்கால் நினைவூட்டியிருக்கலாம். (இப்பவும் இருக்கோ)>..இதையெல்லாம் அனுபவிக்கும் சந்தர்ப்பம் மீண்டும் வருமா  என்பது இன்ற வரை கனவுதான்/....உங்கள் ...பயணக்கதை   வாசிக்க  வாசிக்க..கடந்தகாலம் ..கண்முன்னே..கண்ணீருடன்  வந்து போகின்றது.......தொடருங்கள்

Edited by alvayan
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒத்தப்பேடி யார் என கண்டுபிடிச்சிட்டன்.

தொடருங்கள் ஐயா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அழகிய படங்களுடனும், அருமையான எழுத்து நடையுடனும்
 நல்ல ஒரு தாயக பயணக் கட்டுரை. 👍🏽

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, நிலாமதி said:

வீட்டு டாகடர்  = குடும்ப வைத்தியர்   ( family Doctor      )

பயண அனுபவ பகிர்வுக்கு நன்றி . ஜெர்மன் பாஷையில்  சுற்றுலாவை எப்படி சொல்வது ....?  

தலைப்பு அது தான்   ...die Rundreise.    =சுற்றுலா.   

ஊருலா     .    தமிழ் ஊர்சுற்றுதல்.    ..ஜேர்மன் = Urlab.  தமிழ் இருந்து தான்  ஜேர்மன்மொழி  பிறந்து இருக்கிறது 🤣😂

 

  • Thanks 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.