Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

05 JAN, 2024 | 11:58 AM
image
 
செங்கடலில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிரான அமெரிக்கா முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளில்  இலங்கை கடற்படையினரும் இணைத்துக்கொள்வதுகுறித்து இலங்கை கடற்படை ஆராய்ந்து வருகின்றது.

ஏவுகணை தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெறும் பகுதிக்கு இலங்கை கடற்படையின் கப்பல்களை அனுப்புவதற்கு முன்னர் அது குறித்து தீவிரமாக ஆராயவேண்டும் என கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் நடவடிக்கைகளில் இலங்கையும் இணைந்து கொள்ளக்கூடும் என மூன்றாம்திகதி  ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.

செங்கடலில் ஹெளத்திகிளர்ச்சியாளர்கள் கப்பல்கள் மீது மேற்கொள்ளும் தாக்குதல்களிற்கு எதிரான சர்வதேச படையணியில் இணைந்துகொள்ளுமாறு  அமெரிக்கா விடு;த்த வேண்டுகோள்களை  பல உலகநாடுகள் நிராகரித்துள்ளன.

காசாவில் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள தாக்குதல்களை தொடர்ந்து ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் இஸ்ரேலின் கப்பல்கள் உட்பட கப்பல்களை தாக்கிவருகின்றனர்.

ஹெளத்திகிளர்ச்சியாளர்களிற்கு எதிரான நடவடிக்கைகளிற்கு கப்பல்களை வழங்குமாறு இலங்கை உட்பட 20 நாடுகளை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.

செங்கடலிற்கு இலங்கை கடற்படை கப்பலை அனுப்பினால் அதற்காக பெருந்தொகையை செலவிடவேண்டியிருக்கும் என தெரிவித்துள்ள தொடர்புபட்ட வட்டாரங்கள் இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமையையும் கருத்தில்கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளன.

செங்கடலிற்கு கப்பலை அனுப்புவதா ? ஆராய்கின்றது இலங்கை கடற்படை | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

ஹெளத்திகிளர்ச்சியாளர்களிற்கு எதிரான நடவடிக்கைகளிற்கு கப்பல்களை வழங்குமாறு இலங்கை உட்பட 20 நாடுகளை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.

முதலில்... உங்கள் நாட்டில் உள்ள அழுக்கை கழுவுங்கள்.
இலங்கையே.... மற்றைய நாடுகளிடம் இருந்து கப்பலை பிச்சை எடுக்கின்றது.
இதற்குள் அமெரிக்கா இலங்கையிடம் கப்பல் உதவி கேட்கிறது.
விரலுக்கு அதிக வீக்கம். நினைப்புதான் பிழைப்பை கெடுக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

எதட்கு ஆராட்சி எல்லாம். இலங்கையில் இல்லாத போர் கப்பல்களா, ஆட்பலமா.  சும்மா அனுப்பி விடுங்கள்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலோன் நேவி நாட்டை விட்டு தப்பியோட கப்பலையும் குடுத்து உதவி செய்யப்போறாங்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்

உள்ள பிரச்சனைகள் போதாது என்று.. வேலியில போற ஓணானை வேட்டிக்குள் பிடிச்சு விட்டால்.. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயம் said:

உள்ள பிரச்சனைகள் போதாது என்று.. வேலியில போற ஓணானை வேட்டிக்குள் பிடிச்சு விட்டால்.. 

இறுதி யுத்த காலத்தில் இலங்கை கடற்படை, இலங்கை விமான படை ஆதரவுடன் சர்வதேச கடற்பரப்பில் புலிகளின் கப்பல்களை தாக்கி அழித்தது, அதனை இலங்கை கடற்படை  தாம் ஒரு நீலக்கடல் கடற்படை என்பதாக குறிப்பிட்டது (blue water navy).

மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட வழங்கல் தொழினுட்பம் கொண்ட எதிரியுடன் போரிட்ட இலங்கை கடற்படை, மத்திய கிழக்கு நடவடிக்கையில் ஒரு சிறு துரும்பையும் எடுக்காது, இது ஒரு இலங்கை அரசின் அரசியல் சதுரங்க நடவடிக்கை போலவே தென்படுகிறது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செங்கடல் பகுதிக்கு செல்வதற்கு தயாரான நிலையில் இலங்கை கடற்படையின் கப்பல்-கடற்படை பேச்சாளர்

செங்கடல் பகுதியில் ஹெளத்திகிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகளில் இருந்து சர்வதேச கப்பல்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக இலங்கை கப்பலொன்று அந்த பகுதிக்கு செல்வதற்கு தயாராகவுள்ளது என கடற்படையின் பேச்சாளர் கயன்விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.

சரக்குகப்பல்களை பாதுகாப்பதற்காக செங்கடல் அரபிக்கடல் ஏடன்வளைகுடா மற்றும் அதனை அண்டிய கடல்பாதைகளில் இந்த கப்பலை பயன்படுத்தவுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் உத்தரவின் பேரில்இலங்கைகடற்படை தனது கப்பல்களைஅனுப்புகின்றது ஆனால் அதற்கான திகதியை இன்னமும் தீர்மானிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புரொஸ்பெரிட்டி கார்டியன்ஸ் நடவடிக்கையின் கீழ் இலங்கை முதலில்ஒரு கப்பலை அனுப்பும் என தெரிவித்துள்ள கடற்படை பேச்சாளர்  இது குறித்த கலந்துரையாடல் இடம்பெறும் கப்பலின் திறமையை அடிப்படையாக வைத்து அதனை பயன்படுத்துவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய தேவைகள் மற்றும் இலங்கையின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் மேலதிக கப்பல்களை செங்கடல் பகுதிக்கு அனுப்புவோம் எனவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

செங்கடல் பகுதிக்கு செல்வதற்கு தயாரான நிலையில் இலங்கை கடற்படையின் கப்பல்-கடற்படை பேச்சாளர் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

ஹவுதி கிளர்ச்சிக்குழுவை அடக்குவதற்கு 250 மில்லியன் ரூபா செலவிடுவதால் நாட்டுக்கு கிடைக்கப்போகும் நன்மை என்ன - சஜித் கேள்வி

Published By: VISHNU  09 JAN, 2024 | 05:26 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டு மக்கள் பாரிய பாொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுவரும் நிலையில் ஹவுதி கிளர்ச்சிக்குழுவை அடக்குவதற்கு அரசாங்கம் 250 மில்லியன் ரூபா செலவிட்டு கடற்படை கப்பலை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் மூலம் நாட்டுக்கு கிடைக்கும் நன்மை என்ன என அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

250 மில்லியன் ரூபா செலவழித்து ஹவுதி கிளர்ச்சிக்குழுவை அடக்குவதற்கு கடற்படையின் கப்பல் ஒன்றை பயன்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு அன்றாட உணவு வேளை ஒன்றை வழங்க முடியாமல் இருக்கும் நிலையில், குறிப்பாக நாட்டில் இருக்கும் 220 இலட்சம் பேரும் பொருளாதார ரீதியில் மிகவும் கஷ்டத்துடன் இருந்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் 250 மில்லியன் ரூபா செலவழித்து எமது கடற்படையின் கப்பலை ஹவுதி கிளர்ச்சிக்குழுவை அடக்குவதற்கு அனுப்புவதன் மூலம் எமக்கு கிடைக்கப்போகும் நன்மை என்ன என கேட்கிறோம்.

குறைந்தபட்சம் அரசாங்கம் இவ்வாறு 250 மில்லியன் ரூபாவை முதலீடுசெய்வதன் மூலம் எமது நாடு கடன் பெற்றுக்கொண்டுள்ள  நாடுகள் எமது கடனில் 25 பில்லியனாவது குறைப்பதாக வாக்குறுதி வழங்கி இருக்கிறதா? எமது நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையில் நாட்டுக்கு சாதகமான விடயங்களுடனே சர்வதேசத்துடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள அர்ப்பணிப்புக்காக சர்வதேசம் எமக்கு வழங்கப்போகும் பிரதி உபகாரம் என்ன? இவ்வாறான ஏதாவது இணக்கப்பாடுடனா அரசாங்கம் இந்த 250 மில்லியன் ரூபாவை செலவழிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறது?

அதனால் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துக்கு நாட்டு மக்கள் எதிர்கொண்டுவரும் அடிப்படை பிரச்சினை விளங்குவதில்லையா? பாடசாலை மாணவர்களுக்கு கணனி வசதி இல்லாமல் இருக்கிறது.

இந்த 250 மில்லின் ரூபாவையும் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான கணனிகளை பெற்றுக்கொள்ள ஒதுக்க முடியும்தானே. எனவே நாட்டில் இவ்வளவு பாரிய தேவைகள் இருக்கும்போது அரசாங்கம் எதற்காக இவ்வாறு செயற்படுகிறது என கேட்கிறோம் என்றார்.

https://www.virakesari.lk/article/173521

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, ஏராளன் said:

ஹவுதி கிளர்ச்சிக்குழுவை அடக்குவதற்கு 250 மில்லியன் ரூபா செலவிடுவதால் நாட்டுக்கு கிடைக்கப்போகும் நன்மை என்ன - சஜித் கேள்வி

P

என்ன சஜீத் மாத்தையா இது கூட தெரியாதா?
அமேரிக்கா ஏனைய நாடுகளை தாக்கும் பொழுது சில நாடுகளை தன் பக்கம் வைத்து கொள்ளுவது வழமை ...(கூட்டு படைகள்)...ஏதாவது சட்ட சிக்கல் வந்தால் ...நாங்கள் தனியாக தாக்கவில்லை கூட்டாக தாக்கினோம் என சொல்வார்கள்.
சிறிலங்காவுக்கு உலக வங்கியின் பணம் தொடர வேண்டுமாயின் அமெரிக்கா சொல்படி நடக்க வேண்டும்...
இல்லை என்றால் இந்தியா மாதிரி தனியாக சென்று தங்களது கப்பலை பாதுகாத்து விட்டு அந்த பிராந்தியத்தில் நிற்கவேணும்...இந்த விடயத்தில் எவ்வளவு உண்மை இருக்கிறது என தெரியவில்லை...(மாலைதீவில் புளோட் குழுவினரை அனுப்பி சதி செய்தது போல் சோமாலி கடற்கொள்ளையரை செற் பண்ணிச்சினமோ தெரியவில்லை)

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்+
On 6/1/2024 at 02:17, vasee said:

இறுதி யுத்த காலத்தில் இலங்கை கடற்படை, இலங்கை விமான படை ஆதரவுடன் சர்வதேச கடற்பரப்பில் புலிகளின் கப்பல்களை தாக்கி அழித்தது, அதனை இலங்கை கடற்படை  தாம் ஒரு நீலக்கடல் கடற்படை என்பதாக குறிப்பிட்டது (blue water navy).

மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட வழங்கல் தொழினுட்பம் கொண்ட எதிரியுடன் போரிட்ட இலங்கை கடற்படை, மத்திய கிழக்கு நடவடிக்கையில் ஒரு சிறு துரும்பையும் எடுக்காது.

அதுமட்டுமில்லை.

கடற்புலிகளின் ஆழ்கடலோடிகள் வரும் வழியை இந்திய-அமெரிக்கா கூட்டுப் புலனாய்வுத் தகவல்களின் மூலம் கிடைத்த துல்லியமான தரவுகளைக் கொண்டு அறிந்த பின்னர் சென்று தாக்குதல் நடாத்தியது. தாமாக சொந்த முயற்சியில் புலனாய்ந்து தரவுகளை எடுத்து கடற்புலிகளைத் தேடிச் சென்று தாக்கவில்லை! அதாவது இந்திய-அமெரிக்கா சப்பாட்டை எடுத்து வாய்க்குள் வைத்துவிட அதை மென்று தின்றது, சிங்களம். அவ்வளவுதான்.

(எவ்வாறாயினும் எம்மவர் சாக்கொல்லப்பட்டனரே!)

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

என்ன சஜீத் மாத்தையா இது கூட தெரியாதா?
அமேரிக்கா ஏனைய நாடுகளை தாக்கும் பொழுது சில நாடுகளை தன் பக்கம் வைத்து கொள்ளுவது வழமை ...(கூட்டு படைகள்)...ஏதாவது சட்ட சிக்கல் வந்தால் ...நாங்கள் தனியாக தாக்கவில்லை கூட்டாக தாக்கினோம் என சொல்வார்கள்.
சிறிலங்காவுக்கு உலக வங்கியின் பணம் தொடர வேண்டுமாயின் அமெரிக்கா சொல்படி நடக்க வேண்டும்...
இல்லை என்றால் இந்தியா மாதிரி தனியாக சென்று தங்களது கப்பலை பாதுகாத்து விட்டு அந்த பிராந்தியத்தில் நிற்கவேணும்...இந்த விடயத்தில் எவ்வளவு உண்மை இருக்கிறது என தெரியவில்லை...(மாலைதீவில் புளோட் குழுவினரை அனுப்பி சதி செய்தது போல் சோமாலி கடற்கொள்ளையரை செற் பண்ணிச்சினமோ தெரியவில்லை)

கடற்படையினருக்கு தேவையான எரிபொருள், உணவு, ஆயுத வழங்கல், இதர தேவைகள் எல்லாம் யாரோ கொடுக்கப்போகின்றார்கள். இங்கே நங்கூரமிட்டுள்ள கப்பலையும், வெட்டியாக உள்ள கடற்படையினரையும் அங்கு அனுப்புகின்றார்கள் போல. அரசுக்கு பொருட்செலவு ஏற்படுமா என்று தெரியவில்லை.  ஆனால், தேவையில்லாத எதிரிகளை உருவாக்குகின்றார்கள். 

ஐநா படைகளில் பங்குபற்றியது போல இது எடுக்கப்படமுடியாது என நினைக்கின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ பாலஸ்தீனத்திற்கு ஆதரவு என்றது பொய்யா???

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நன்னிச் சோழன் said:

அதுமட்டுமில்லை.

கடற்புலிகளின் ஆழ்கடலோடிகள் வரும் வழியை இந்திய-அமெரிக்கா கூட்டுப் புலனாய்வுத் தகவல்களின் மூலம் கிடைத்த துல்லியமான தரவுகளைக் கொண்டு அறிந்த பின்னர் சென்று தாக்குதல் நடாத்தியது. தாமாக சொந்த முயற்சியில் புலனாய்ந்து தரவுகளை எடுத்து கடற்புலிகளைத் தேடிச் சென்று தாக்கவில்லை! அதாவது இந்திய-அமெரிக்கா சப்பாட்டை எடுத்து வாய்க்குள் வைத்துவிட அதை மென்று தின்றது, சிங்களம். அவ்வளவுதான்.

(எவ்வாறாயினும் எம்மவர் சாக்கொல்லப்பட்டனரே!)

2 hours ago, நியாயம் said:

கடற்படையினருக்கு தேவையான எரிபொருள், உணவு, ஆயுத வழங்கல், இதர தேவைகள் எல்லாம் யாரோ கொடுக்கப்போகின்றார்கள். இங்கே நங்கூரமிட்டுள்ள கப்பலையும், வெட்டியாக உள்ள கடற்படையினரையும் அங்கு அனுப்புகின்றார்கள் போல. அரசுக்கு பொருட்செலவு ஏற்படுமா என்று தெரியவில்லை.  ஆனால், தேவையில்லாத எதிரிகளை உருவாக்குகின்றார்கள். 

ஐநா படைகளில் பங்குபற்றியது போல இது எடுக்கப்படமுடியாது என நினைக்கின்றேன். 

2002 இல் அமெரிக்க ஆதரவுடன் தமது படையினரை இலங்கை வலுப்படுத்தியுள்ளது.

https://en.wikipedia.org/wiki/Sri_Lanka–United_States_relations

அமெரிகா இலங்கை படையினருக்கு கொத்துகுண்டுகளை பயன்படுத்துவதற்கு ஆலோசனை தெரிவித்ததாக மேலே உள்ள இணைப்பில் கூறப்படுகிறது, ஆனால் இலங்கை அதனை முன்னரே பயன்படுத்தியிருந்தது.

கவுதிகளினுடன் நேரடியாக போராட வேண்டியதேவை இலங்கை கடற்படைக்கு இல்லை, கவுதிகள் புலிகள் போல குறைந்த வளங்கலை மட்டும் வைத்து கொண்டே நேரடியாக மோதும் அமைப்பு அல்ல, அவர்கள் ஏவுகணைத்தாக்குதல் செய்வதுதான் கவுதிகளின் போர் முறை, இலங்கை கடற்படையிடம் ஏவுகணை எதிர்ப்பு தொழில்னுட்பம் இல்லை என்பதால் அந்த எல்லையினை விட்டு வெளியே ( இலங்கையில் துறைமுகத்தில் கட்டி வைப்பதை போல ஒரு நிலைதான்) பாதுகாப்பாக இருப்பார்கள்.

ஆனால் இலங்கைக்கும் அமெரிக்காவிற்குமிடையே உள்ள ஒப்பந்தினை இலங்கை அரசு மதிப்பதாக தெரிகிறது அதனாலேயெ இலங்கை தனது கடற்படையினையும் அங்கு அனுப்புகிறது (இலங்கைகு கடற்படை அனுப்ப வேண்டிய கட்டாயம் இல்லாத போதும்), ஒரு காலத்தில் இலங்கைக்கு உதவிய அமெரிக்க, மேற்கு கூட்டணிக்கு தற்போது இலங்கை தனது நன்றி கடனை செலுத்துகிறது.

1 hour ago, விசுகு said:

அப்போ பாலஸ்தீனத்திற்கு ஆதரவு என்றது பொய்யா???

அதுவும் ஒரு அரசியல்தான், இலங்கையில் தற்போதுள்ள அரச தலைவர் வலதுசாரி பின்புலம் கொண்டவர் (யு என் பி) அதனால் அமெரிக்க, மேற்கு மற்றும் இஸ்ரேலிய ஆதரவு நிலைதான் உண்மையான நிலைப்பாடு.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

அப்போ பாலஸ்தீனத்திற்கு ஆதரவு என்றது பொய்யா???

அப்படி எல்லாம் இல்லை அய்யா.  மனசீகமான அவர்களுடைய ஆதரவு பாலஸ்தீனத்திற்கு தான். அவர்கள் மனம் பாலஸ்தீனத்தில் இருக்கும். உடல் மேற்கலக நாடுகளின் ஹெளத்திகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பங்கு கொள்ளும்.எம்மவர்கள் சிலர் போன்று உடல் மேற்கலக நாடுகளின் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்கள் இதயம் ரஷ்யா சீனாவில் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 6/1/2024 at 01:26, குமாரசாமி said:

சிலோன் நேவி நாட்டை விட்டு தப்பியோட கப்பலையும் குடுத்து உதவி செய்யப்போறாங்கள். 😂

சாமி நீங்க வேறை லெவல் 😃

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, விளங்க நினைப்பவன் said:

எம்மவர்கள் சிலர் போன்று உடல் மேற்கலக நாடுகளின் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்கள் இதயம் ரஷ்யா சீனாவில் இருக்கும்.

நீங்கள் தேவையில்லாமல் குழம்புகிறீர்கள்.

இந்த திரைப்படம் ஒரு உண்மை சம்பவம், நியூசிலாந்திலிருந்து அமெரிக்கா செல்லும் இவர் மாறுபட்ட சாலை விதிகளால் நகரத்தில் வாகனம் செலுத்தி விபத்தினை ஏற்படுத்தும் நிலையினை தவிர்த்திருப்பார், அதற்கு மாறுபட்ட வீதி ஒழுங்கினை குற்றம் சாட்டுவார் அதாவது அமெரிக்காவில் வலது புறமாக வாகனத்தினை செலுத்தவேண்டும் நியுசிலாந்தில் இடது புறமாக வாகனத்தினை செலுத்தவேண்டும், அதற்கு அவருடன் கூட இருந்தவர் கூறுவார் நீங்கள் எந்த நாட்டில் வேண்டுமானாலும் வாகனம் ஓட்டலாம் உங்கள் சாரதி இருக்கை வீதியின் மத்திய பகுதியில் இருக்கவேண்டும் என்பார்.

இந்த தத்துவம் போலவே நாம் எங்கு வேண்டுமானாலும் போகலாம் அவர்கள் போல் பேசலாம் ஆனால் அடிப்படை  மாறாது.

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

அப்போ பாலஸ்தீனத்திற்கு ஆதரவு என்றது பொய்யா???

அது நிலைமையை பொறுத்தது. காலத்துக்கு காலம் அது மாற்றம் பெரும்.

ஹூத்தி அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதால்தான் இலங்கை அதட்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும், இன்னும் இலங்கையில் மேலும் விலையேற்றம் உருவாக்கி மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதட்காகவும் இந்த நடவடிக்கையில் இறங்கி இருப்பதாக அமைச்சர் கூறுகிறார். மக்கள் நலனில் அரசு கவனம் செலுத்துவதை தவறென்று கூற முடியாதுதானே. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

ஆனால் இலங்கைக்கும் அமெரிக்காவிற்குமிடையே உள்ள ஒப்பந்தினை இலங்கை அரசு மதிப்பதாக தெரிகிறது அதனாலேயெ இலங்கை தனது கடற்படையினையும் அங்கு அனுப்புகிறது (இலங்கைகு கடற்படை அனுப்ப வேண்டிய கட்டாயம் இல்லாத போதும்), ஒரு காலத்தில் இலங்கைக்கு உதவிய அமெரிக்க, மேற்கு கூட்டணிக்கு தற்போது இலங்கை தனது நன்றி கடனை செலுத்துகிறது.

இது அமெரிக்காவின் வேண்டுகோளாக இருக்கலாம்.

தான் தனியே இதற்குள் மாட்டிக் கொள்ளாமல் பல நாடுகளையும் இதற்குள் இழுத்து விடும் முயற்சியாக இருக்கலாம்

ஏற்கனவே பல முனைகளை போருக்கு திறந்த விட்டாச்சு.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Cruso said:

அது நிலைமையை பொறுத்தது. காலத்துக்கு காலம் அது மாற்றம் பெரும்.

ஹூத்தி அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதால்தான் இலங்கை அதட்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும், இன்னும் இலங்கையில் மேலும் விலையேற்றம் உருவாக்கி மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதட்காகவும் இந்த நடவடிக்கையில் இறங்கி இருப்பதாக அமைச்சர் கூறுகிறார். மக்கள் நலனில் அரசு கவனம் செலுத்துவதை தவறென்று கூற முடியாதுதானே. 

சாமி, மக்கள் நலனில் அரசுக்கு அக்கறை என்றால் நாட்டின் சொத்துக்களை தின்று ஏப்பம் விட்ட திருட்டு கூட்டத்தை அடக்கலாம். இதைவிடுத்து இவ்வளவு கடல் மைல் தூரங்களுக்கு படையை அனுப்ப தேவை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நியாயம் said:

சாமி, மக்கள் நலனில் அரசுக்கு அக்கறை என்றால் நாட்டின் சொத்துக்களை தின்று ஏப்பம் விட்ட திருட்டு கூட்டத்தை அடக்கலாம். இதைவிடுத்து இவ்வளவு கடல் மைல் தூரங்களுக்கு படையை அனுப்ப தேவை இல்லை.

அது வேறு. இது வேறு. கடன் கொடுப்பதட்கு நிறைய பேர் இருக்கும்போது எதட்கு அப்படி எல்லாம் அலையை வேண்டும். இங்கும் றால் போட்டு சுறா பிடிக்கும் வேலைதான் நடக்குது ஐயா. 😜

  • கருத்துக்கள உறவுகள்

போர் குற்றங்களில் இருந்து காப்பாற்றி கொள்ள இதுவும் ஒரு வழி....சில கடற்படை அதிகாரிகளுக்கு விசா இல்லை அமெரிக்காவுக்கு .....ஆனால் 

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு தூரத்தில் இருக்கும் பலஸ்தீனத்துக்கு ஏன் உதவுகிறீர்கள் என்ற பொருள் பட பிபிசி கூத்தி 
பேச்சாளரிடம் கேட்ட போது பைடன் நத்தனியாகுவின் பக்கத்து வீட்டு காரர், ஒரே ல் வசிக்கிறாரா?  பிரான்ஸ் பிரதமர்  அதே தளத்தில் வசிக்கிறாரா?  பிரிட்டன் பிரதமர் அதே கட்டிடத்தில் வசிக்கிறாரா என  போடு போட்டுள்ளார்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

போர் குற்றங்களில் இருந்து காப்பாற்றி கொள்ள இதுவும் ஒரு வழி...

அத்துடன் சவுதி அரேபியா மற்றும் ஹெளத்திகளுக்கு எதிரான முஸ்லிம் நாடுகளின் மேலதிக பாசமும் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

செங்கடலிற்கு கப்பலை அனுப்பும் இலங்கையின் தீர்மானம் - மேற்காசிய நாடுகளின் தூதுவர்கள் அதிருப்தி

Published By: RAJEEBAN  13 JAN, 2024 | 09:31 AM

image

செங்கடலிற்கு கப்பலை அனுப்பும் இலங்கையின் தீர்மானம் தொடர்பில் மேற்காசிய நாடுகளின் தூதுவர்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்ற பணிகளில் இலங்கையர்களை இஸ்ரேல் வேலைக்கு அமர்த்துவதற்கு அனுமதிக்கவேண்டாம் எனவும் மேற்காசிய நாடுகளின் தூதுவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை சமீபத்தில் சந்தித்தவேளை மேற்காசிய நாடுகளின் தூதுவர்கள் செங்கடலிற்கு கப்பலை அனுப்பும் தீர்மானம் குறித்து வெளிப்படையாக அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

இஸ்ரேலுடனான பாதுகாப்பு உடன்படிக்கைகளின் அடிப்படையிலேயே அமெரிக்காவும் பிரிட்டனும் செங்கடலில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன ஏனைய நாடுகள் அவ்வாறு செயற்படவில்லை என மேற்காசியநாடுகளின் தூதுவர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/173833

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.