Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, Justin said:

ம்ம்..ஹிற்லரின் வசனங்கள் எல்லாம் மேற்கோள் காட்டும் அளவுக்கு அவர் மேல் மதிப்பு வைத்திருக்கிறீர்கள் போல இருக்கிறதே?

அது சரி, ஹிற்லர் அடக்கி வைத்து யார் மேல் கோபத்தைக் காட்டினார்? அவர் இப்போது எங்கே?

ஈரான் ப‌ல‌த‌ட‌வை அமெரிக்காவை ம‌ற்றும் இஸ்ரேல‌ எச்ச‌ரித்தார்க‌ள் நீங்க‌ள் சிவ‌ப்பு கோட்டை தாண்டி விட்டீர்க‌ள் அத‌ற்காண‌ தண்டனையை அனுபவிப்பீர்கள் என்று இப்போது எல்லா பக்கத்தாலும் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் அடி விழுது அதுக்குத்தான் ஹிட்லரை மேல் காட்டி எழுதினேன்.............அமெரிக்க‌ன்ட‌ கொட்ட‌த்தை houthis அட‌க்குது  இது வெக்க‌க் கேடு அமெரிக்காவுக்கு............Houthisகூட‌ போர் செய்ய‌ அமெரிக்கா எத்த‌னை நாட்டுக்கு அழைப்பு விடுத்த‌து க‌ட‌சியில் இங்லாந்தும் இவையும் போய் குண்டை இர‌ண்டு நாள் போட்டிச்சின‌ம் HOUTHSஸ் அமெரிக்க‌ன்ட‌ க‌ப்ப‌லை மீண்டும் தாக்கி அழித்தார்க‌ள்..............

  • Replies 61
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Justin

என்னிடம் நீளமாக எழுத எதுவும் இல்லை. The crux of the matter: 1. உங்கள் தவறான தரவுகள்: நீங்கள் ஓரின உறவை மனநோய் என்று தவறாகக் குறிப்பிட்டீர்கள். இது முதல் தடவையல்ல. மேலே கூட பால் மாற்ற சிகிச்ச

ரஞ்சித்

இதில் எவர் பக்கமும் நான் சாய விரும்பவில்லை. ஆனால் இதுதொடர்பாக எனது கருத்தை மட்டும் எழுதிவிடுகிறேன். நாஜிகளின் கைகளில் அகப்பட்டு முற்றான இனக்கொலையினைச் சந்தித்தவர்கள் யூதர்கள். கிட்டத்தட்ட ஆறு மில

ரஞ்சித்

எமது போராட்டம்பற்றி எந்தளவு தூரத்திற்கு தெளிவற்று இருக்கிறீர்கள் என்பதற்கு உங்களின் கருத்து சாட்சி. சம உரிமைக்கான, தாயக‌க் காப்பிற்கான, மொழிக்கான போராட்டம் என்பது சுதந்திரத்திற்குப் பின்னரான உடனட

  • கருத்துக்கள உறவுகள்
Posted

  • கருத்துக்கள உறவுகள்
Posted
31 minutes ago, Cruso said:

அப்படி சொல்ல முடியாது. ஈரானை போன்ற ஒரு நாடுதான் வட கொரியா. அவர்களிடம் அணு ஆய்தம் இருக்கின்றது. அதட்காக அமெரிக்கா அடங்கி போய் விட வில்லை. நாடுகளிடம் அணு ஆயுதம் இருந்தாலும் அப்படி இலகுவாக பாவித்து விட மாடடார்கள்.

அரை பயித்திய தலைவர்கள் கூட இலகுவாக அதனை பாவிக்க மாடடார்கள். இரான் அணு ஆய்தத்தை பெறுவதட்கு அதனை சுற்றியுள்ள அரபு நாடுகளே எதிர்க்கின்றன. இல்லாவிட்டால் சீனாவோ, ருசியாவோ கூட வழங்கி இருக்கும்.

அமெரிக்கா இத்தேட்கெல்லாம் பயந்தால் உலக போலீஸ் காரன் என்ற தரத்தை இழந்து விடும். 

அது தெரிந்த‌ விடைய‌ம் தான் அணுகுண்டை வைத்து இருக்கும் நாடுக‌ள் ம‌ற்ற‌ நாடுக‌ள் மீது வீச‌ மாட்டின‌ம் என்று............ஆனால் ஈரான் த‌ன‌து நாட்டின் பாதுகாப்பு க‌ருதி அணுகுண்டு த‌யாரித்து கொண்டு இருக்கு................

க‌ல் நெஞ்ச‌ம் ப‌டைச்ச‌ அமெரிக்க‌ன் ஏலா க‌ட்ட‌ம் வ‌ர‌ தானே ஜ‌ப்பான் மீது இர‌ண்டு அணுகுண்டை போட்டார்க‌ள்............அமெரிக்க‌ன் போரில் தோத்தா எடுக்க‌ கூடாத‌ ஆயுத‌த்தை எல்லாம் கையில் எடுப்பார்க‌ள்😜...............

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, kalyani said:

இப்போ கூதிகளிடன் அடிவாங்கும் அளவுக்கு போய் விட்டது. காலம் தான் எத்தனை கொடியது.

கல்லால் எறிவார்கள் என்றிருந்தவர்களும் அயன் டோமை அழிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டார்கள். ஒடுக்கப்படும் மக்கள் எத்தனை நாட் களுக்கு தான் பொறுமை காப்பது??

ஹூத்தி என்பது பயங்கரவாத இயக்கம். அதட்கு எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. எனவே எல்லா பயங்கரவாத தாக்குதல்களையும் நடத்துவார்கள். அதேபோல அதட்குமேலான பலாபலன்களையும் பெற்று கொள்ளுவார்கள். 

அயன் டோமை தாக்கியவர்களுக்கு இப்போது என்ன நடந்துள்ளது? அயன் டோம் இல்லாதிருந்திருந்தால் அதேயளவு மக்கள் இந்த பக்கமும் கொல்லப்பட்டிருப்பார்கள். அது ஒரு தட்காப்பு பொறிமுறையே தவிர எதிரிகளை தாக்குவதட்கு அல்ல.

பயங்கரவாதிகள் ஐக்கிய நாடுகளின் உதவியுடன் நிலத்தின் கீழ் பாதுகாப்பு அரண்களை தங்கள் பாதுகாப்புக்காக அமைத்திருந்தார்களே அதுபோல. 

திருப்பி அடித்தவுடன் ஐயோ அடிக்கிறேன் ஓடி வாருங்கள் என்று அலறுவது அழகல்ல. 

Just now, பையன்26 said:

அது தெரிந்த‌ விடைய‌ம் தான் அணுகுண்டை வைத்து இருக்கும் நாடுக‌ள் ம‌ற்ற‌ நாடுக‌ள் மீது வீச‌ மாட்டின‌ம் என்று............ஆனால் ஈரான் த‌ன‌து நாட்டின் பாதுகாப்பு க‌ருதி அணுகுண்டு த‌யாரித்து கொண்டு இருக்கு................

க‌ல் நெஞ்ச‌ம் ப‌டைச்ச‌ அமெரிக்க‌ன் ஏலா க‌ட்ட‌ம் வ‌ர‌ தானே ஜ‌ப்பான் மீது இர‌ண்டு அணுகுண்டை போட்டார்க‌ள்............அமெரிக்க‌ன் போரில் தோத்தா எடுக்க‌ கூடாத‌ ஆயுத‌த்தை எல்லாம் கையில் எடுப்பார்க‌ள்😜...............

அவர்கள் (இரான்) அணுகுண்டை தனது நாட்டின் பாதுகாப்பிட்கு தயாரித்துக்கொண்டிருக்கிறது என்பதை நம்பி விடடோம்.

அமெரிக்கா இல்லை, உலக நாடுகளே தோற்றுக்கொண்ட போதுதான் அணுகுண்டு வீசப்பட்ட்து. 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, Cruso said:

ஹ‌மாஸ் போராடுவ‌து த‌னி நாடு கேட்டு...........ஹ‌மாஸ்சுக்கு ஆத‌ர‌வாய் செய‌ல் ப‌டுப‌வ‌ர்க‌ள் தீவிர‌வாதிக‌ள் அது இது என்று சும்மா மொக்கையா எழுத‌ வேண்டாம்...........உல‌கின் பெரிய‌ திவிர‌வாத‌ நாடு அமெரிக்கா............அமெரிக்கா த‌ன‌க்கு த‌லை ஆட்ட‌ ஒரு போராளி குழுவை வ‌ள‌த்து விடும் பிற‌க்கு அவ‌ர்க‌ள் அமெரிக்காக்கு எதிரா அல்ல‌து அமெரிக்க‌ன்ட‌ ந‌ட்பு நாடுக‌ளுக்கு எதிரா செய‌ல் ப‌ட்டால் தீவிர‌வாத‌ம்😁..........

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, Cruso said:

அமெரிக்க‌ன்ட‌ வீர‌ம்
சோமாலியா
அப்கானிஸ்தான்
விஜ‌ட்நாம்
இப்ப‌டியா நாட்டின் மீது............முடிந்தால் ஈரானை தொட்டு பார்க்க‌ட்டும்...............

மேல‌ எழுதின‌ நாடுக‌ள் போர் அனுப‌வ‌ம் இல்லா நாடுக‌ள்

அமெரிக்கா ஏன் ர‌ஸ்சியா கூட‌ நேருக்கு நேர் மோத‌ ப‌ய‌ப்பிடுது.........புட்டின் போர் குற்ற‌வாளி என்றார்க‌ள்...........தென் ஆபிரிக்கா நெத்த‌னியாகு போர் குற்ற‌வாளி என்று அறிவித்த‌து தென் ஆபிரிக்காவின் இந்த‌ ந‌ட‌வ‌டிக்கைக்கு ப‌ல‌ நாடுக‌ள் ஆத‌ர‌வு தெரிவித்தார்க‌ள்.............அமெரிக்க‌ன்ட‌ சூழ்ச்சியால் நெத்த‌னியாகு இன்னும் ப‌ல‌ ஆயிர‌ம் ப‌ல‌ஸ்தின‌ ம‌க்க‌ளை கொன்று குவிப்பான்................ப‌ல‌ வாட்டி நினைப்ப‌து உண்டு நாம் எந்த‌ உல‌கில் வாழுகிறோம் என்று............அமெரிக்காவுக்கும் அமெரிக்க‌ன்ட‌ ந‌ட்பு நாடுக‌ளுக்கும் வ‌ந்தால் ர‌த்த‌ம் ம‌ற்ற‌வைக்கு வ‌ந்தால் த‌க்காளி ச‌ட்னி ம்ம்ம்ம்ம்ம்.............

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, பையன்26 said:

ஹ‌மாஸ் போராடுவ‌து த‌னி நாடு கேட்டு...........ஹ‌மாஸ்சுக்கு ஆத‌ர‌வாய் செய‌ல் ப‌டுப‌வ‌ர்க‌ள் தீவிர‌வாதிக‌ள் அது இது என்று சும்மா மொக்கையா எழுத‌ வேண்டாம்...........உல‌கின் பெரிய‌ திவிர‌வாத‌ நாடு அமெரிக்கா............அமெரிக்கா த‌ன‌க்கு த‌லை ஆட்ட‌ ஒரு போராளி குழுவை வ‌ள‌த்து விடும் பிற‌க்கு அவ‌ர்க‌ள் அமெரிக்காக்கு எதிரா அல்ல‌து அமெரிக்க‌ன்ட‌ ந‌ட்பு நாடுக‌ளுக்கு எதிரா செய‌ல் ப‌ட்டால் தீவிர‌வாத‌ம்😁..........

ஹமாஸுக்கு தனி கொடுத்துதானே இவ்வளவு பிரச்சினைகளும். பயங்கரவாதிகளை அவர்களின் இடத்தில வைக்க வேண்டும். இல்லாவிட்ட்தால் எங்கும் பயங்கரவாதம்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, பையன்26 said:

அது தெரிந்த‌ விடைய‌ம் தான் அணுகுண்டை வைத்து இருக்கும் நாடுக‌ள் ம‌ற்ற‌ நாடுக‌ள் மீது வீச‌ மாட்டின‌ம் என்று............ஆனால் ஈரான் த‌ன‌து நாட்டின் பாதுகாப்பு க‌ருதி அணுகுண்டு த‌யாரித்து கொண்டு இருக்கு................

க‌ல் நெஞ்ச‌ம் ப‌டைச்ச‌ அமெரிக்க‌ன் ஏலா க‌ட்ட‌ம் வ‌ர‌ தானே ஜ‌ப்பான் மீது இர‌ண்டு அணுகுண்டை போட்டார்க‌ள்............அமெரிக்க‌ன் போரில் தோத்தா எடுக்க‌ கூடாத‌ ஆயுத‌த்தை எல்லாம் கையில் எடுப்பார்க‌ள்😜...............

எங்கே எடுத்தீர்கள் இந்த "வரலாற்றுத் தகவலை" ?யூ ரியூப்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, பையன்26 said:

அமெரிக்க‌ன்ட‌ வீர‌ம்
சோமாலியா
அப்கானிஸ்தான்
விஜ‌ட்நாம்
இப்ப‌டியா நாட்டின் மீது............முடிந்தால் ஈரானை தொட்டு பார்க்க‌ட்டும்...............

மேல‌ எழுதின‌ நாடுக‌ள் போர் அனுப‌வ‌ம் இல்லா நாடுக‌ள்

அமெரிக்கா ஏன் ர‌ஸ்சியா கூட‌ நேருக்கு நேர் மோத‌ ப‌ய‌ப்பிடுது.........புட்டின் போர் குற்ற‌வாளி என்றார்க‌ள்...........தென் ஆபிரிக்கா நெத்த‌னியாகு போர் குற்ற‌வாளி என்று அறிவித்த‌து தென் ஆபிரிக்காவின் இந்த‌ ந‌ட‌வ‌டிக்கைக்கு ப‌ல‌ நாடுக‌ள் ஆத‌ர‌வு தெரிவித்தார்க‌ள்.............அமெரிக்க‌ன்ட‌ சூழ்ச்சியால் நெத்த‌னியாகு இன்னும் ப‌ல‌ ஆயிர‌ம் ப‌ல‌ஸ்தின‌ ம‌க்க‌ளை கொன்று குவிப்பான்................ப‌ல‌ வாட்டி நினைப்ப‌து உண்டு நாம் எந்த‌ உல‌கில் வாழுகிறோம் என்று............அமெரிக்காவுக்கும் அமெரிக்க‌ன்ட‌ ந‌ட்பு நாடுக‌ளுக்கும் வ‌ந்தால் ர‌த்த‌ம் ம‌ற்ற‌வைக்கு வ‌ந்தால் த‌க்காளி ச‌ட்னி ம்ம்ம்ம்ம்ம்.............

ஈரானை எதுக்கு தொடணும்? எவன் சொறிய வருகிறானோ அவனுக்குத்தான் சொரிந்து விட வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Justin said:

ஏன் ஓநாய் வீடியோவையும் உகண்டாவின் LGBTQ எதிர் சட்டத்தையும் போட்டுக் குழப்பிக் கொண்டீர்களெனத் தெரியவில்லை, மீனை விட 2 அறிவு கூட இருப்பது காரணமாக இருக்கலாம்😎!

ஆனால், உங்களுக்கு தெரியா விட்டாலும் homosexuality என்பது மனநோய் அல்ல! ஆனால், அதனைப் புரிந்து கொள்ளாமல் "அது இல்லை, இருக்க கூடாது, " என்று புலம்புவது கிட்டத் தட்ட ஒரு வரலாற்று, மானிடவியல் அறிவற்ற நிலை தான்-blissful ignorance!

பன்னிரெண்டாம் அறிவோடு வாசித்து அடுத்தவனை எப்படி சொறியலாம் என்று சிந்தித்தால் அப்படிதான் விளங்கும் நாங்கள் சாதாரண மனிதர்கள் சாதாரண மனிதர்களுக்குத்தான் இங்கு கருத்து எழுதுகிறோம். ஹோமோசெஸுவாலிட்டி இருந்தால் இருந்துவிட்டு போகட்டும் அது அவர்கள் சொந்த பிரச்சனைஆனால் மேற்கு இப்போது ஊக்கிவிப்பது அதுவல்ல பச்சிளம் குழந்தைகளை கூட மூளை சலவை செய்து ஹார்மோன்களை ஊசிகள் மூலம் ஏற்றி ஆணை பெண்ணாக்குவது பெண்ணை ஓநாய் ஆக்குவது தவளை ஆக்குவது 

உகாண்டா எவ்வாறான சிக்கலை எதிர்நோக்கி இருந்தது 
ஏன் அவர்கள் இவ்வாறான ஒரு முடிவுக்கு வந்தார்கள் என்பதை 
ஓரளவு என்றாலும் தெரிந்து கொள்வது நல்லது. 

இதை நான் பன்னிரெண்டாம் அறிவுடையவர்களுக்கு எழுதவில்லை 
இங்கிருக்கும் மற்றவர்கள் எழுந்தமாத்திரத்தில் சில முடிவுகளை கொள்ளாது 
ஒரு விடயத்தின் ஆரம்பம் அழிவு போன்றவற்றை தெரிந்துகொண்டு அவர்கள் சொந்த முடிவுகளை 
எடுக்கவேண்டும் என்பதற்காகவும் 

நிர்வாகத்தினர் சில விடயங்களை முடிந்தால் கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதுக்கவும் எழுதுகிறேன் 
இங்கு வேண்டும் என்றே சீண்டல் கருத்துக்கள் எழுதப்பட்டு இருந்தது.  தலைப்புக்கும் சம்மந்தம் இன்றி 
கருத்துக்கும் சம்மந்தம் இன்றி ஒரு பெரிய பந்தியே தனிமனித தாக்குதலை மட்டுமே முதன்மைப்படுத்தி 
எழுதப்பட்டு இருந்தது நான் வசித்தபின்பும் கோமாளிகளுடன் என் நேரத்தை செலவு செய்ய வேண்டாம் என்றே கடந்து சென்றேன். 

 சாதிவெறி மதவெறி ஆதிக்கவெறி இனவெறிகளில் ஊறியவர்கள் திருந்தினால்தான் அதிசயம் 
அடுத்தவர்கள் கை ஓங்கும்போதும் அடுத்தவர்களை சுரண்டி பிழைக்கவும் அதி கல்விமான்கள் போல வேடமிட்டு கோட் சூட் போட்டுகொண்டு பொய் வேஷமிடுவார்கள் தவிர இவர்கள் ஒருபோதும் திருந்தியதில்லை இப்போது தென் ஆப்ரிக்க இஸ்திரேலுக்கு எதிராக கொண்டுவந்த இனஅழிப்பு வழக்கில் கூட மேற்கு நாடுகள்  காமாஸ் மீது நடத்திய தாக்குதலில்தான் 23 ஆயிரம் அப்பாவிகள் இறந்ததாகவும் அத்தனை மசூதிகளும் மருத்துவமனைகளும்   அழிந்ததாக சுத்த பொய்யை இந்த உலகமே பார்த்துக்கொண்டிருந்தை எந்த வெட்கமும் இன்றி சொல்கிறார்கள்

தந்தை பெரியார் சொன்னது போல ஆயிரம் அறிவுள்ளவர்களுடன் வாதிடலாம் ஆனால் மானம் சூடு சுரணை வெட்கம் இல்லாதவர்களுடன்  வாதிட முடியாது என்பதுபோல.  இந்த ஆதிக்க வெறி பிடித்த மேற்கு நாடுகளிடம் இருந்து ஒரு நியாத்தை எதிர்பார்க்கும்  ஈழத்தமிழர்கள்  காஸ்மீரிகள்  
மியன்மார்  முஸ்லிம்கள்   குர்திஸ்கள் பாலஸ்தீனியர்கள்தான் மூடர்கள் என்றுதான் நான் எண்ணுகிறேன். 

ஆதிக்க வெறி என்பது எந்த வடிவில் இருந்தாலும் நான் அதற்கு எதிரிதான் 
நான் கடவுளை கூட நல்லவனாக எண்ணியதில்லை.  இல்லது இருக்கவேண்டும் அல்லது 
சுத்த அயோக்கியனாக இருக்கவேண்டும் என்றே எண்ணுகிறேன் 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Cruso said:

அரை பயித்திய தலைவர்கள் கூட இலகுவாக அதனை பாவிக்க மாடடார்கள். இரான் அணு ஆய்தத்தை பெறுவதட்கு அதனை சுற்றியுள்ள அரபு நாடுகளே எதிர்க்கின்றன. இல்லாவிட்டால் சீனாவோ, ருசியாவோ கூட வழங்கி இருக்கும்.

அமெரிக்கா இத்தேட்கெல்லாம் பயந்தால் உலக போலீஸ் காரன் என்ற தரத்தை இழந்து விடும். 

அப்போ முழு பைத்தியங்கள்தான் நாகசாகியிலும் ஹிரோஷிமாவில் 
அணுகுண்டு போட்டார்கள் என்று சொல்ல வருகிறீர்களா? 
உங்கள் கருத்துக்களை சரியாக புரிய முடியவில்லை

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Justin said:

அப்படித்தான் நான் நினைக்கிறேன்.

1979 வரை ஷா மன்னரை அமெரிக்காக் காரங்கள் பொம்மையாக வைத்திருந்தார்கள். பின்னர் ஒரு நாள் ஈரானிய பொது மக்கள் திரண்டு வந்து "எங்களுக்கு சுதந்திரம், பெண்ணுரிமை, ஆங்கில வழிக் கல்வி, மக் டொனால்ட் உணவு, எதுவும் பிடிக்கவில்லை. எங்களை ஒரு ஆன்மீகத் தலைவரின் காலடியில் விழுந்து வாழ விடுங்கள்" என்று புரட்சி செய்தமைக்கமைய கொமெய்னிகள் உருவானார்கள்.

இன்று எல்லாம் ஈரானில் ஆன்மீக வழி தான். மாஷா அமினி என்ற பெண் தலை முடியை மறைக்காமல் தான் இருந்தமைக்காக மிகவும் வருந்தி தன் தலையை தானே சுவரில் மோதி கோமாவில் இருந்து இறந்தமையைக் கேள்விப் பட்டீர்களா? அப்படித் தான் பல விடயங்கள், மேற்கின் ஊடகங்களில் உண்மையாக வருவதில்லை. பின்ன எப்படி எனக்குத் தெரியும் என்கிறீர்களா? நான் கேபிளைக் கட் செய்து விட்டு அந்த கேபிள் பணத்தை அப்படியே ஒரு இன்ரெலிஜென்ற் தளத்திற்குக் கட்ட அவர்கள் எனக்கு இந்த உண்மைகளை வாரா வாரம் அனுப்பி வைக்கிறார்கள்! அதில் இருந்தே உங்களுக்குப் புதிதாக இருக்கும் விடயங்களெல்லாம் எனக்கு சாதாரணமாகக் கிடைக்கின்றன. உதாரணமாக, 5000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஜப்பான், சீனா, கொரியாக் காரங்களுக்கே பெண்ணடிமைத் தனத்தைசொல்லிக் கொடுத்ததே 2000 ஆண்டுகள் முன்பு வந்த ரோமனுகள் தான்! இது போல இன்னும் இருக்கு😎!  

https://en.wikipedia.org/wiki/1953_Iranian_coup_d'état

1953 இல் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரச தலைவரை தூக்கியெறிந்துவிட்டு மன்னர் ஷாவினை தொடர்ந்தும் ஆட்சிப்பொறுப்லிறுத்தியதற்கான காரணமாக BP எரிபொருள் நிறுவனம் தனது ஈரானிய எரிபொருளிற்கான கொடுப்பனவை சரியாக செய்கிறதா என பரிசோதிப்பதற்கான அனுமதியின மறுத்ததில் இருந்து ஆரம்பமாகிய விவகாரம், பின்னர் பிரித்தானிய அரசு,  ஈரானிற்கெதிராக உலக பொருளாதார புறக்கணிப்பு, அதன் தொடர்ச்சியாக அந்த மக்களாட்சி அரசு தூக்கியெறியப்படும் நிலை என உருவாகியுள்ளதாகவும், இந்த சதிப்புரட்சியின் பிண்ணனியில் அமெரிக்க வகிபாகத்தினை 2013 இல் அமெரிக்கா வெளியிட்டதாக இந்த விக்கி இணைப்பில் கூறப்பட்டுள்ளது.

தேசிய மயப்படுத்தல் எனும் வார்த்தை பிரயோகம் அந்தந்த நாட்டு மக்களை கவரலாம், ஆனால் அதனை நடைமுறைப்படுத்த முடியாது, அமெரிக்காவாகட்டும் பிரித்தானியாவாகட்டும் அந்த நாடுகளின் வெளிவிவகார கொள்கையினை முதலாளிகள்தான் தீர்மானிக்கிறார்கள் என்பது எனது தனிப்பட்ட அவதானிப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, Maruthankerny said:

நாகரீகமாக ஆறாறிவு மனிதன் வளர தொடங்கி ஆடைகள் அணிய தொடங்கியபின் 

மீண்டும் வேடுவர்கள் காட்டுவாசிகளாக மாறி பெண்கள் ஆடைகள் இல்லாமல் அலைவதும் 
கண்டவர்கள் கண்டவர்களுடன் தெருநாய்கள்போல பாலியல்
கொளவ்தும் 
சுதந்திரம் எனும் மூளைசலவைக்கு ஆளாகாமல் போகிறார்களே எனும் ஆத்திரம் கூட 
ஒரு காரணமாக இருக்கலாம் என்று சிலர் மேலே கூவுவதுபோலவும் இருக்கலாம் 

மிகவும் தவறான கருத்து.

இது பற்றி எழுத எதுவும் இல்லை. உங்கள் பிள்ளை உங்களுக்கு இதற்கான விளக்கத்தை அல்லது படிப்பினையை தரும். அது வரை நன்றி தம்பி.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, Maruthankerny said:

பன்னிரெண்டாம் அறிவோடு வாசித்து அடுத்தவனை எப்படி சொறியலாம் என்று சிந்தித்தால் அப்படிதான் விளங்கும் நாங்கள் சாதாரண மனிதர்கள் சாதாரண மனிதர்களுக்குத்தான் இங்கு கருத்து எழுதுகிறோம். ஹோமோசெஸுவாலிட்டி இருந்தால் இருந்துவிட்டு போகட்டும் அது அவர்கள் சொந்த பிரச்சனைஆனால் மேற்கு இப்போது ஊக்கிவிப்பது அதுவல்ல பச்சிளம் குழந்தைகளை கூட மூளை சலவை செய்து ஹார்மோன்களை ஊசிகள் மூலம் ஏற்றி ஆணை பெண்ணாக்குவது பெண்ணை ஓநாய் ஆக்குவது தவளை ஆக்குவது 

உகாண்டா எவ்வாறான சிக்கலை எதிர்நோக்கி இருந்தது 
ஏன் அவர்கள் இவ்வாறான ஒரு முடிவுக்கு வந்தார்கள் என்பதை 
ஓரளவு என்றாலும் தெரிந்து கொள்வது நல்லது. 

இதை நான் பன்னிரெண்டாம் அறிவுடையவர்களுக்கு எழுதவில்லை 
இங்கிருக்கும் மற்றவர்கள் எழுந்தமாத்திரத்தில் சில முடிவுகளை கொள்ளாது 
ஒரு விடயத்தின் ஆரம்பம் அழிவு போன்றவற்றை தெரிந்துகொண்டு அவர்கள் சொந்த முடிவுகளை 
எடுக்கவேண்டும் என்பதற்காகவும் 

நிர்வாகத்தினர் சில விடயங்களை முடிந்தால் கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதுக்கவும் எழுதுகிறேன் 
இங்கு வேண்டும் என்றே சீண்டல் கருத்துக்கள் எழுதப்பட்டு இருந்தது.  தலைப்புக்கும் சம்மந்தம் இன்றி 
கருத்துக்கும் சம்மந்தம் இன்றி ஒரு பெரிய பந்தியே தனிமனித தாக்குதலை மட்டுமே முதன்மைப்படுத்தி 
எழுதப்பட்டு இருந்தது நான் வசித்தபின்பும் கோமாளிகளுடன் என் நேரத்தை செலவு செய்ய வேண்டாம் என்றே கடந்து சென்றேன். 

 சாதிவெறி மதவெறி ஆதிக்கவெறி இனவெறிகளில் ஊறியவர்கள் திருந்தினால்தான் அதிசயம் 
அடுத்தவர்கள் கை ஓங்கும்போதும் அடுத்தவர்களை சுரண்டி பிழைக்கவும் அதி கல்விமான்கள் போல வேடமிட்டு கோட் சூட் போட்டுகொண்டு பொய் வேஷமிடுவார்கள் தவிர இவர்கள் ஒருபோதும் திருந்தியதில்லை இப்போது தென் ஆப்ரிக்க இஸ்திரேலுக்கு எதிராக கொண்டுவந்த இனஅழிப்பு வழக்கில் கூட மேற்கு நாடுகள்  காமாஸ் மீது நடத்திய தாக்குதலில்தான் 23 ஆயிரம் அப்பாவிகள் இறந்ததாகவும் அத்தனை மசூதிகளும் மருத்துவமனைகளும்   அழிந்ததாக சுத்த பொய்யை இந்த உலகமே பார்த்துக்கொண்டிருந்தை எந்த வெட்கமும் இன்றி சொல்கிறார்கள்

தந்தை பெரியார் சொன்னது போல ஆயிரம் அறிவுள்ளவர்களுடன் வாதிடலாம் ஆனால் மானம் சூடு சுரணை வெட்கம் இல்லாதவர்களுடன்  வாதிட முடியாது என்பதுபோல.  இந்த ஆதிக்க வெறி பிடித்த மேற்கு நாடுகளிடம் இருந்து ஒரு நியாத்தை எதிர்பார்க்கும்  ஈழத்தமிழர்கள்  காஸ்மீரிகள்  
மியன்மார்  முஸ்லிம்கள்   குர்திஸ்கள் பாலஸ்தீனியர்கள்தான் மூடர்கள் என்றுதான் நான் எண்ணுகிறேன். 

ஆதிக்க வெறி என்பது எந்த வடிவில் இருந்தாலும் நான் அதற்கு எதிரிதான் 
நான் கடவுளை கூட நல்லவனாக எண்ணியதில்லை.  இல்லது இருக்கவேண்டும் அல்லது 
சுத்த அயோக்கியனாக இருக்கவேண்டும் என்றே எண்ணுகிறேன் 

என்னிடம் நீளமாக எழுத எதுவும் இல்லை.

The crux of the matter:

1. உங்கள் தவறான தரவுகள்: நீங்கள் ஓரின உறவை மனநோய் என்று தவறாகக் குறிப்பிட்டீர்கள். இது முதல் தடவையல்ல. மேலே கூட பால் மாற்ற சிகிச்சைகளைக் குழந்தைகளில் செய்கிறார்கள் என இணையக் குப்பையில் இருந்து ஆதாரமில்லாத தகவலை இங்கே பதிந்திருக்கிறீர்கள். ஓநாய் வீடியோ தேடும் நேரத்தின் பத்திலொரு பங்கு நேரம் போதும் - AAP இன் பால் மாற்ற சிகிச்சை விதிகள் எவையென்று தேடிப்பார்க்க. இப்படியான தவறான தகவல்களை எழுதி விட்டு சவாலுக்குட்படுத்துபவனை அடக்கு முறையாளன், சூடு சொரணையற்றவன் என்று சம்பந்தமேயில்லாமல் திட்டல் வேற.

2. திரியோடு ஒட்டிய கருத்து: ஈராக், ஈரான், மேற்கு பற்றிய திரியில் ஒரு பாலின உறவு , பால் மாற்றம் பற்றிய பொய் தரவுகளை யார் கொண்டு வந்தது? வாசகர்களே தேடிப் பார்க்கட்டும்.

3. சீண்டல்: உங்கள் மருந்தே உங்களுக்கு ஏன் கசக்கிறது? நேரே பதில் சொல்லும் துணிவோ, நேர்மையோ இல்லாமல் உங்கள் தவறான தகவல்களைச் சுட்டிக் காட்டும் உறுப்பினர்களை எப்படி நீங்கள் விளித்திருக்கிறீர்கள் இது வரை? எனவே உங்கள் பாணியிலேயே ஈரானைப் பற்றி எழுதியிருக்கிறேன். உங்களுக்குப் புரிந்திருப்பது திருப்தி.

பி.கு: இணையத்தில் கலாச்சார யுத்தம் நடத்தும் தீவிர வலது சாரிகள், தங்கள் மருத்துவ/அறிவியல் அடிப்படையற்ற குப்பைகளைப் பரப்ப உங்கள் போன்ற ஆட்களை நம்பியிருக்கிறார்கள். அவர்களின் தகவல்களை சரி பார்க்காமல் யாழுக்கு எடுத்து வருகிறீர்கள் - உங்களுடைய இந்த அறிவடிமைத் தனம் பற்றி ஒரு கரிசனைகூட இல்லாமல், சரியான தகவலைத் தர முயல்பவனை நோக்கி பாட்ஷா பாணி மிரட்டல் விட்டிருக்கிறீர்கள், அச்சம் வரவில்லை, புன்னகையே வருகிறது.

  • Like 5
  • Thanks 1
Posted
10 hours ago, Cruso said:

ஹமாஸுக்கு தனி கொடுத்துதானே இவ்வளவு பிரச்சினைகளும். பயங்கரவாதிகளை அவர்களின் இடத்தில வைக்க வேண்டும். இல்லாவிட்ட்தால் எங்கும் பயங்கரவாதம்தான். 

24000 குழந்தைகள், பெண்கள், வயோதிபர்களின் தலைக்கு மேல் குண்டை கொட்டி  கொன்றவர்களை எப்படி அழைக்கலாம்? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, nunavilan said:

24000 குழந்தைகள், பெண்கள், வயோதிபர்களின் தலைக்கு மேல் குண்டை கொட்டி  கொன்றவர்களை எப்படி அழைக்கலாம்? 

இவர்கள் தான்  ஐயோ குய்யோ முய்யோ என இன்றும்  ஹிட்லர் தங்களை அழித்தவன் என வருடாவருடம் புராணம் பாடிக்கொண்டு திரிபவர்கள். இஸ்ரேலியர்கள் இன்று காசாவில் செய்வதற்கும் அன்று ஹிட்லர் யூதர்களுக்கு செய்தற்கும் என்ன வித்தியாசம் என நான் கேட்டால்.....? வரலாறு தெரியாதவன் என்பர் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, Justin said:

இந்த "வரலாற்றுத் தகவலை" ?யூ ரியூப்?

தமிழ்நாட்டில் இருந்து அரசியல் போர் ஆய்வாளர் ? உமாபதி என்று ஒருவர் யுரியப்பில் தகவல்களை அள்ளி வழங்குகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, nunavilan said:

24000 குழந்தைகள், பெண்கள், வயோதிபர்களின் தலைக்கு மேல் குண்டை கொட்டி  கொன்றவர்களை எப்படி அழைக்கலாம்? 

இதட்குரிய பதிலை இஸ்ரேலுக்குள் புகுந்து பெண்களை  கட்பளித்து,  குழந்தைகளை வெட்டிக்கொலை செய்து, பொதுமக்களை கொலை செய்து, பெண்கள் குழந்தைகளை கடத்தியவர்களிடம்தான் கேட்க வேண்டும்.

வேண்டுமென்றால் நிலக்கீழ் சுரங்கங்கள் அமைக்க உதவி செய்த , பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் கொண்டுவர  உதவி செய்த ஐக்கிய நாடுகள் சபையிடமும் கேட்கலாம். 

21 hours ago, Maruthankerny said:

அப்போ முழு பைத்தியங்கள்தான் நாகசாகியிலும் ஹிரோஷிமாவில் 
அணுகுண்டு போட்டார்கள் என்று சொல்ல வருகிறீர்களா? 
உங்கள் கருத்துக்களை சரியாக புரிய முடியவில்லை

எங்கள் கருத்துக்கள் எல்லாம் உங்களுக்கெல்லாம் புரியாது. அதட்கான காரணம் உங்களுக்கு தெரியாதா என்ன?

Posted
9 hours ago, Cruso said:

இதட்குரிய பதிலை இஸ்ரேலுக்குள் புகுந்து பெண்களை  கட்பளித்து,  குழந்தைகளை வெட்டிக்கொலை செய்து, பொதுமக்களை கொலை செய்து, பெண்கள் குழந்தைகளை கடத்தியவர்களிடம்தான் கேட்க வேண்டும்.

வேண்டுமென்றால் நிலக்கீழ் சுரங்கங்கள் அமைக்க உதவி செய்த , பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் கொண்டுவர  உதவி செய்த ஐக்கிய நாடுகள் சபையிடமும் கேட்கலாம். 

எங்கள் கருத்துக்கள் எல்லாம் உங்களுக்கெல்லாம் புரியாது. அதட்கான காரணம் உங்களுக்கு தெரியாதா என்ன?

அப்போ கடந்த 69 வருடங்களாக பலஸ்தீனியர்களை அழித்தொழித்து வரும் இஸ்ரேலியர்களை எப்படி அழைக்கலாம். அதற்கு நீங்கள் ஏதாவது புதுப்பெயர் வைத்துள்ளீர்களா என அறிய ஆவல்.
பலஸ்தீனியர்கள் ஆயுதம் தூக்க வைத்தவர்கள் இஸ்ரேலிய அரசு தான் என்பதை ஏற்கிறீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, குமாரசாமி said:

இவர்கள் தான்  ஐயோ குய்யோ முய்யோ என இன்றும்  ஹிட்லர் தங்களை அழித்தவன் என வருடாவருடம் புராணம் பாடிக்கொண்டு திரிபவர்கள். இஸ்ரேலியர்கள் இன்று காசாவில் செய்வதற்கும் அன்று ஹிட்லர் யூதர்களுக்கு செய்தற்கும் என்ன வித்தியாசம் என நான் கேட்டால்.....? வரலாறு தெரியாதவன் என்பர் 

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, விளங்க நினைப்பவன் said:

தமிழ்நாட்டில் இருந்து அரசியல் போர் ஆய்வாளர் ? உமாபதி என்று ஒருவர் யுரியப்பில் தகவல்களை அள்ளி வழங்குகின்றார்.

உமாப‌தி முன்ன‌னி ஊடகவியலாளர்க‌ளில் ஒருவ‌ர் இந்தியாவில்..........அவ‌ர் அவ‌ருக்கு வ‌ரும் காணொளிக‌ளை வைத்து தான் யூடுப்பில் சொல்லுகிறார்.............அவ‌ரின் ப‌ல‌ வீடியோக்க‌ள் யூடுப்பில் ப‌திவேற்ற‌ம் செய்ய‌ முடியாது..........இஸ்ரேல் ப‌ற்றிய‌ உண்மை செய்திக‌ள் யூடுப்பில் போட்டால் உட‌னை நீக்க‌ப் ப‌டும் இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ ? 

என‌து வ‌ட்சாப்புக்கு ஹ‌மாஸ் தாக்குத‌ல் ஹிஸ்புல்லா தாக்குத‌ல் காணொளிக‌ள் உட‌னுக்கு உட‌ன் வ‌ரும்...............நெத்த‌னியாகுக்கு உள் நாட்டிலே பெரிய‌ பிர‌ச்ச‌னை ஆனால் மேர்க்க‌த்தைய‌ ஊட‌க‌ங்க‌ள் இதை எல்லாம் காட்ட‌ மாட்டின‌ம்...........ஏன் என்றால் ப‌ல‌ஸ்தின‌ ம‌க்க‌ளை கொன்று குவிப்ப‌தில் இவ‌ர்க‌ளும் உட‌ந்தை...............

இஸ்ரேல் ம‌க்க‌ள் நாளுக்கு நாள் ஆர்பாட்ட‌ம் செய்கின‌ம் இதை மேர்க்க‌த்தைய‌ ஊட‌க‌ங்க‌ள் ம‌க்க‌ளுக்கு காட்டி இருக்கா😥............

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, nunavilan said:

அப்போ கடந்த 69 வருடங்களாக பலஸ்தீனியர்களை அழித்தொழித்து வரும் இஸ்ரேலியர்களை எப்படி அழைக்கலாம். அதற்கு நீங்கள் ஏதாவது புதுப்பெயர் வைத்துள்ளீர்களா என அறிய ஆவல்.
பலஸ்தீனியர்கள் ஆயுதம் தூக்க வைத்தவர்கள் இஸ்ரேலிய அரசு தான் என்பதை ஏற்கிறீர்களா? 

இன்று ஆயுதம் தூக்கிய பயங்கரவாதிகள் யார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அந்த ஆறு நாள் யுத்தத்தில் நடந்ததை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

அப்போது  இஸ்ரேலை சுற்றியுள்ள நாடுகள் இஸ்ரேலை முழுமையாக இல்லாதொழிப்பதட்காக அங்குள்ள பலஸ்தீன அல்லது இஸ்லாமிய மக்களை வெளியேறும்படி அறிக்கை விட்ட்து. அவர்களும் அவர்களை நம்பி லட்ச்ச கணக்கில் வெளியேறினார்கள். அவர்களும் இஸ்ரேல் இனி இல்லை நாம்தான் முழு இஸ்ரேலுக்கும் சொந்தம் என அவர்களை நம்பி வெளியேறினார்கள்.

இஸ்ரயேல் அவர்களை வெளியேறாதிருக்கும்படி வருந்தி கேட்டு கொண்டது. அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இஸ்ரேல் அழிக்கப்பட வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார்கள். என்ன நடந்தது என்பது சரித்திரம்.

அப்படி வெளியேறினவர்கள்தான் இன்று எல்லா நாடுகளிலும் இன்றும் அகதி முகாம்களில் வாழ்கிறார்கள். அவர்களை இஸ்ரேல் மீண்டும் உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. அவர்கள்தான் இன்று பயங்கரவாதிகளாக மாறி இருக்கிறார்கள்.

எனவே பலஸ்தீனியர்களை இன்று அகதிகளாக , பயங்கரவாதிங்களாக ஆயுதம் தூக்க வைத்தவர்கள் அரபு நாடுகளே. இஸ்ரேல் இல்லை. 

Posted
8 minutes ago, Cruso said:

அதெல்லாம் முடிந்து இஸ்ரேலுடன் சேர்ந்து வாழ்ந்த பலஸ்தீனியர்களுக்கு இஸ்ரேலால் என்ன நடந்தது என்பதில் இருந்து தான் கதை தொடங்குகிறது. அதாவது 1948 க்கு பின்பு. பலஸ்தீனியர்கள் கல்லால் எறிந்து இஸ்ரேலிய இராணுவத்துக்கு தமது எதிர்ப்பை வெளிக்காட்டியதையும் இஸ்ரேல் தமது இராணுவ வாகனத்தால் அம்மக்களை அடித்தும் சுட்டும் கொன்ற காட்சிகளை நீங்கள் பார்க்கவில்லை எனில் நீங்கள் வேற்றுக்கிரகத்தில் உள்ளீர்கள்.
சும்மா யாரும் ஆயுதத்தை தூக்குவானா என்ற அறிவு கூடவா உங்களுக்கு இல்லை???

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, nunavilan said:

அப்படியா? இஸ்ரேலுடன் சேர்ந்து வாழும்தபாலஸ்தீனர்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள்.

 இலங்கையில் வாழும் இலங்கையர்கள் ஆய்தம் தூக்க வில்லையா. அதுபோலத்தான் இதுவும். சிலர் தங்கள் சுய நலத்துக்காக மற்றவர்களை தூண்டிவிடுவதுதான் எல்லாவற்றிட்கும் முக்கிய காரணம். 

இஸ்ரேல் இஸ்ரேலுக்குத்தான் சொந்தம் . வேறு யாரும் சொந்தம் கொணட முடியாது. அங்குள்ள மற்றயவர்களை விட்டு வைத்திருப்பதே பெரிய காரியம். இலங்கைஇலங்கையர்களுக்குத்தான் சொந்தம்.

  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதில் எவர் பக்கமும் நான் சாய விரும்பவில்லை. ஆனால் இதுதொடர்பாக எனது கருத்தை மட்டும் எழுதிவிடுகிறேன்.

நாஜிகளின் கைகளில் அகப்பட்டு முற்றான இனக்கொலையினைச் சந்தித்தவர்கள் யூதர்கள். கிட்டத்தட்ட ஆறு மில்லியன் யூதர்கள் இரண்டாம் உலக யுத்தத்தில் கொல்லப்பட்டார்கள். அதுவரை உலகெங்கும் நாடற்றவர்களாக அலைந்துதிரிந்த அவர்களுக்கு இஸ்ரேல் எனும் தமது மூதாதையர் நாட்டில் மீண்டும் கால்பதிக்க இங்கிலாந்தின் தலைமையில் மேற்குலகு ஆதரவு வழங்கியது, இதற்கான காரணம் அவர்கள் முகம்கொடுத்த அழிவுகளும் துன்பங்களும்தான். நவீன இஸ்ரேலின் உருவாக்கத்தினையடுத்து, சுற்றியிருந்த அரபுநாடுகள் அதனை முற்றாக அழித்துவிட மேற்கொண்ட இருபெரும் யுத்தங்களின் போதும் (1967 ஆம் ஆண்டின் ஆறுநாள் யுத்தம், 1973 இன் யொம் கிப்புர் யுத்தம்)  யூதரின் பக்கமே அரபுலகத்தைத் தவிர்த்த உலக அனுதாபம் இருந்தது.  

ஆனால், இஸ்ரேல் அதன்பின்னர் நடந்துகொண்ட முறை அந்த அனுதாபத்தினை சிறிது சிறிதாகக் குறைத்து ஈற்றில் மேற்கின் ஒரு சில நாடுகளின் ஆதரவு என்று சுருங்கிவிட்டது. இதற்கான முக்கியமான காரணம் பாலஸ்த்தீனத்தின்மீதும், அம்மக்கள் மீதும் இஸ்ரேல் நடத்திவரும் மூர்க்கத்தனமான ஆக்கிரமிப்பும், அடக்குமுறையும்தான். 

எமது தாயகத்தில் , எமது தாயக‌க் நிலத்தொடர்பை உடைத்தெறிந்து நடைபெற்றுவரும் இராணுவமயப்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் இஸ்ரேலின் ஆலோசனையின் பெயரில் நடத்தப்படுபவை என்றால் உங்களால் நம்பமுடியுமா? ஆனால், அதுதான் உண்மை. உலகெங்கும் சுயநிர்ணய உரிமை கோரிப் போரிடும் இனக்குழுமங்களுக்கெதிரான ஆக்கிரமிப்புகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் இஸ்ரேலின் மொசாட் உதவிவருவது வெளிப்படை உண்மை.

சரி, அக்டோபர் 7 ஆம் திகதிக்குப் பின்னதான யுத்தத்திற்கு வரலாம். இஸ்ரேல் பாலஸ்த்தீனர்கள் மீது நடத்திவந்த அடக்குமுறைகளும் படுகொலைகளும் எந்தளவு தூரத்திற்கு மனித நேயத்திற்கு எதிரானதோ, அதற்கு எந்தவிதத்திலும் சளைத்ததல்ல ஹமாஸ் அக்டோபர் 7 இல் நடத்திய தாக்குதல். தமிழர்களின் நிலத்தொடர்பை ஊடறுத்து அமைக்கப்பட்ட இராணுவமயப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் மீது புலிகள் நடத்திய தாக்குதல்களும் ஹமாஸ் நடத்திய தாக்குதலும் பல விடயங்களில் ஒத்துப்போகின்றன. யூதர்களைக் கடத்திச் சென்றது, பாலியல் வன்புணர்வுகளுக்கு உள்ளாக்கியமை என்பதைத் தவிர புலிகளும் ஹமாஸும் நடந்துகொண்டது ஒரே வகையில்த்தான். கொல்லப்பட்டவர்களில் ஆயுதம்தரித்த குடியேற்றக்காரர்களும் அடக்கம், இரு சம்பவங்களிலும். நடக்கும் குடியேற்றங்களை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்பதே குடியேற்றங்கள் மீதான தாக்குதல்களின் நோக்கம். 

ஹமாஸின் தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் நடத்தும் யுத்தம் முற்றான அழித்தொழிப்புடன் கூடிய ஒரு இனக்கொலைதான் என்பதில் சந்தேகம் இல்லை. 

போரிடும் தரப்புக்களுக்கு பின்னால் நின்று சாமரம் வீசும் ஈரான் ஆகட்டும், ஹூத்தீக்களாகட்டும், அமெரிக்காவாகட்டும், இவர்கள் எவருமே கொல்லப்படும் பாலஸ்த்தீனர்களுக்காகவோ கொல்லப்பட்ட யூதர்களுக்காகவோ உண்மையாக இரங்கவில்லை. பாலஸ்த்தீனர்களினதும், யூதர்களினதும் அவலங்களைப் பாவித்து தத்தமது தனிப்பட்ட இலாபங்களை அடைய விளைகிறார்கள். எமது போராட்டத்தில் இந்தியா ஒருபக்கமும் அமெரிக்கா இன்னொரு பக்கமும் சாய்ந்து செயற்பட்டது போல.  

26 minutes ago, Cruso said:

அப்படியா? இஸ்ரேலுடன் சேர்ந்து வாழும்தபாலஸ்தீனர்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள்.

 இலங்கையில் வாழும் இலங்கையர்கள் ஆய்தம் தூக்க வில்லையா. அதுபோலத்தான் இதுவும். சிலர் தங்கள் சுய நலத்துக்காக மற்றவர்களை தூண்டிவிடுவதுதான் எல்லாவற்றிட்கும் முக்கிய காரணம். 

இஸ்ரேல் இஸ்ரேலுக்குத்தான் சொந்தம் . வேறு யாரும் சொந்தம் கொணட முடியாது. அங்குள்ள மற்றயவர்களை விட்டு வைத்திருப்பதே பெரிய காரியம். இலங்கைஇலங்கையர்களுக்குத்தான் சொந்தம்.

போகிறபோக்கில் நீங்கள் ஈழத்தமிழரையும் தொட்டுவிட்டுச் செல்கிறீர்கள். இலங்கை இலங்கையர்களுக்குச் சொந்தமா?  எல்லோரையுமே நீங்கள் கூறும் இலங்கை ஆட்சியாளர்கள் ஒன்றாக நடத்துகிறார்களா? அப்படி நடத்தியிருந்தால் நாம் தனிநாடு கேட்கவேண்டிய தேவை ஏன் வந்தது? எமது போராட்டம் தனிநபர்களால் தூண்டிவிடப்பட்ட தேவையற்ற போராட்டம் என்று கூறும் அளவிற்கு உங்களின் எண்ணம் சுருங்கக் காரணம் என்ன? அல்லது இதுதான் உங்களின் உண்மையான நிலைப்பாடா?  நல்லது, வெளியே வந்திருக்கிறீர்கள். 

  • Like 4
  • Downvote 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூடுதலான மொழியறிவு எம்மை மேம்படுத்த உதவும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். சூரிய நிறுவகத்தின் ஏற்பாட்டில், இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறியை பூர்த்தி செய்த யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அத்துடன், இன ஐக்கியத்துக்காகவும், தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும், சிங்கள மக்கள் தமிழ் மொழியையும், தமிழ் மக்கள் சிங்கள மொழியையும் கற்கும் வகையில் இலவசமாக வகுப்புக்களை நடத்திவரும் சூரிய நிறுவகத்தையும், அதன் நிறுவுனர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவையும் ஆளுநர் பாராட்டியுள்ளார். இரண்டாம் மொழி இங்கு சிங்கள மொழியை இரண்டாம் மொழியாக கற்பது இந்த நாட்டில் எங்கும் சென்று சேவையாற்றக் கூடிய வாய்பை உருவாக்கும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.   மேலும், எமது திறன் மற்றும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள இன்னொரு மொழியைக் கற்பது அவசியமானது என ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். இந்த நிகழ்வில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து! - ஐபிசி தமிழ்
    • படு மோசமான கொலைகளுக்கும் அதை செய்த கொலைகாரர்களுக்கும்   கூட வக்காலத்து  வாங்கி அதை நி யாயப்படுத்துவது தான் அந்த அரிசிக்கஞ்சி. 
    • முடியும்  ஆனால் குள்ளநரிகளால் அது முடியாது. நேர்மையற்றவர்களிலாலும் பிழைகளை  மட்டுமே தேடுபவர்களாலும் அது சாத்தியமே இல்லை..
    • யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகர் கடலில் நீரில் மூழ்கிய இருவர் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் மற்றும் கடற்படையினால் காப்பாற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச் சம்பவம் நேற்றையதினம் (14-12-2024) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கசூரினா கடற்கரைக்கு வருகை தந்த யுவதி ஒருவரும், இளைஞர் ஒருவரும் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். சம்பவம் தொடர்பில் தகவலறிந்து விரைந்து செயற்பட்ட பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினரும், கடற்படையினரும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இருவரையும் காப்பாற்றியுள்ளனர். காப்பாற்றப்பட்ட யுவதிக்கு பாதிப்புகள் இல்லாத நிலையில் அவர் வீடு சென்றுள்ளார்.   இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தகுந்த நேரத்தில் விரைந்து செயற்பட்டு 2 உயிர்களையும் காப்பாற்றிய, உயிர்காக்கும் பொலிஸ் பிரிவினருக்கும், கடற்படையினருக்கும் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். யாழில் கடலில் மூழ்கிய இளைஞன், யுவதி தொடர்பில் வெளியான முக்கிய தகவல்! - ஜே.வி.பி நியூஸ்
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.