Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எதிர்கட்சி இருக்க வேண்டும் ஆனால் முடிவுகளை மட்டும் சரியாக எடுக்கத்தெரியாதவர்கள் போலவே இருக்க்கிறார்கள் அதாவது ஓடினால் ஓடுவம் நின்றால் நிற்போம் கொடி பிடிக்க சொன்னால் கொடி பிடிப்பம் இதுதான் இன்றைய எல்லா எதிர்கட்சிகளின் நிலை இது எல்லாவற்றுக்கும் பொருந்தும் 

நீங்கள் அறிந்திருப்பீர்கள் அவுஸ்ரேலியாவில் கடந்த தடவை பிரதமர் மட்டும் இரண்டு மூன்று தடவை நாலு வருடத்தில் மாற வேண்டிய நிலை ...எதிர்கட்சி குழப்ப வில்லை..ஆளும் கட்சியில் உள்ளவர்களே தங்களது கட்சி தலமை மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தார்கள்..பிரதமர் மாற்றப்பட்டார்....
சில விடயங்கள் தவிர்க்க முடியாதவை ...அதற்காக ஒர் இனத்தின் மீதோ கட்சி மீதோ குற்றம் சாட்டா முடியாது... 
ஒர் இனம்,ஒர் மாவட்டம்,ஒர் மாகாணம் , .....தண்ணீர் கலக்காத  சுத்தமான பால் போல இருக்க முடியாது .....தண்ணீர் கலந்த பாலிலும் சாயவை போட்டு குடித்து விட்டு சுப்பர் என சொல்லி நகர்ந்து செல்ல வேண்டிய நிலையில் உலகம் நகர்கின்றது

  • Thanks 1
  • Replies 148
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

அடிதடியில் அரிகரன் நிகழ்ச்சி! ***************************************** *இது முள்ளிவாய்க்காலில்  கஞ்சி  வாங்க நின்ற கூட்டமல்ல!, *முத்த வெளியில்    கரிகரனைப் பார்க்க வந்த   கூட்டம்.!

nedukkalapoovan

இந்த இசை நிகழ்ச்சியை பல மில்லியன் செலவு செய்து ஒழுங்கு செய்தது.. இந்திரன் (நடிகை ரம்பாவின் கணவர்). காரணம்.. தான் அமைத்த நொதேர்ன் யுனி க்கு புரமோசனுக்கு. இவர் வெளியில் சொல்வது போரால் பாதிக்கப்பட்ட

புலவர்

இந்த நிகழ்ச்சியை காணொளியாக எடுப்பதற்கு விஜய்  தொலைக்காட்சிக்கு மட்டுமே அனமதி கொடுக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். அதற்குப் பெருந் தொகைப் பணத்தை ஏற்பாட்டாளர்கள் வாங்கியிருப்பார்கய். அதனால்தான் முதலில்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, விசுகு said:

யார் என்று தெரிகிறதா? 😅

யார் என தெரியவில்லை ஆனால் தமிழ் தேசியம் பிடிக்காத நபர் என்பது மட்டும் புரிகிறது...
அன்று பயந்து இருந்தவர்கள்  எல்லாம் இன்று புலி புராணம் பாடி அரசியல் செய்ய வந்திருக்கினம் என்பது இன்றைய நிலை...புலிகளின் தலைவர் யார்,ஏனைய இயக்கங்களின் தலைவர்கள் யார்......இன கலவரங்கள் நடை பெற்ற காலங்கள் ,சிங்கள குடியேற்றங்கள் ,இராணு அக்கிரமிப்பு  போன்ற எதுவும் புரியாமல் ....தமிழினத்தின் மீது மட்டும் வஞசம் வைத்து அரசியல் பேசும் உத்தமர்கள் பலர் உண்டு...அவர்கள் இன்று தாயக அரசியலை முன்னேடுக்க முயல்கின்றனர்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
56 minutes ago, putthan said:

இங்கு தினாவெட்டாக கேள்வி கேட்கவில்லை ...போராளிகள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள்...அந்நிய  படையெடுப்பு நடை பெறும் காலங்களில் மக்கள் கிளர்த்தெழுவது இயற்கை ..ஒரு சிலர் சகித்து கொண்டு செல்வார்கள்,பந்தம் பிடித்து தப்பி பிழைப்பார்கள் ..வேறு சிலர் போராடுவார்கள்....முள்ளிவாய்காலில் நடந்த துயர சமபவம் போல் ஒன்று நடைபெற வேணும் என மகிழ்ச்சியடைந்த உத்தமர்களும் உண்டு...

முள்ளிவாய்க்கால் நடந்த சம்பவத்தை தினாவெட்டாக கூறி அரசியல் கருத்து எழுத வேண்டிய வங்குரோத்து நிலையில் நான் இல்லை....தொடர்ந்து ஆக்க பூர்வமான கருத்துக்களை வைத்து அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய உத்தமர்கள் எல்லாம் இன்னும் நூறு வருடங்கள் சென்றாலும் இதே பல்லவி தான்...

தமிழன் ஒற்றுமை இல்லை
துரோகி பட்டம் சொல்லுவான் 
முள்ளிவாய்க்கால் அவலம் 
பிரதேசவாதம் பேசுகிறான்
தமிழன் காவாலி 
சிங்களவன் தமிழனை விட நூறு மடங்கு நல்லவன் 

நீங்கள் சிங்கள் காவாலிகள் செய்த இன அழிப்பை மறைக்க குத்தி முறியும் பொழுது நான் தமிழ் காவலிகள் செய்த செயலை மறைக்க கருத்து எழுதினால் என்ன தப்பு....

விவாதத்தில் உணமைகளை ஜீரணித்து கொள்ள முடியாத போது வழமையான  பயன்படுத்தும் இறுதி ஆயுதம் எதிரில் இருப்பவனை சிங்கள கைக்கூலி என்று வசைபாடுவது.

 என்ன செய்வது அதற்கடுத்த ஆயுதத்தை பயன்படுத்த முடியாத பரிதாப நிலை  😂😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 11/2/2024 at 21:57, புலவர் said:

இசை நிகழ்ச்சிகளில் குழப்பம் வருவது யாழ்ப்பாணத்தில் மட்டும் நடக்கிற விடயம் அல்ல. மேற்கத்தைய நாடுகளிலில் நடந்த இசை நிகழ்ச்சிகயிலும் குழப்பங்கள் நடந்திருக்கின்றன. அத்தி பீத்தாற் பொல் அரிதாக நடக்கும் நிகழ்வு ஆகையால் மக்கள் ஆர்வத்துடன் ஏராளமானவர்கள் வந்திருந்தார்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சரியாகக் கையாளவில்லை.மக்கள் மகிழ்ச்சியான பொழுதைக் கழிக்கத்தான் வந்திருந்தார்கள். அவர்களில் முகங்களில் அது தெரிகிறது. இன்று தமன்னாலவப் பார்க்க வந்த கூட்டம் நாளை தமிழர் உரிமை விடயத்தை மறந்து விடும் என்று நம்புவது பேதமை. தமிழகத்தில் ஏஆர் ரஹ்மான் நிகழ்சியிலும் குழப்பம் ஏற்பட்டது . அதற்கு ர1;மான் கற்றம் சொல்லப்பட்டது. ஆனால் யாழ்ப்பாணத்தில் நடந்த குழப்பத்திற்கு யாழ்ப்பாண மக்களை காவாலிகள் என்று சொல்லி அந்த மக்கள் மீது குற்றம் சுமத்தப்படுகிறதுஇ அது சரி அண்மைக்காலமாக அடிக்கடி இந்தியக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதற்கு என்ன காரணம். அந்த மக்களின் தமிழுணர்வை விடுதலை உணர்வை கொஞ்சமாக மழுங்கடிக்கும் முயற்சியா?

அவர்களுக்கு வருமானம் ,அவர்கள் பத்திரிகைகளில் பேட்டி கொடுக்கும் பொழுது ஒரு எஸ்ரா பிட் போடலாம் நான் ஜவ்னாவுக்கு போனேன்...

சிறிலங்கா அரசுக்கும் ,இந்திய அரசுக்கும் வருமானம் ....விமான நிறுவனத்தினருக்கு வருமானம் இவை யாவும்  யாழ்ப்பாணதானின் காசு ...
யாழ்ப்பாணத்தானின் காசில் யாழ்ப்பாணதானுக்கே சூனியம் வைத்துள்ளார்கள் ....காலம் பதில் சொல்லும் ...இதையும் கடந்து செல்வான் த கிரேட் யாழ்ப்பாணி ....சிலர் இதை இப்படியும் நினைக்கலாம் .......காவலிக்ள் என 

வந்தவர்கள் எல்லாம் இந்தியாவில் தற்பொழுது வாய்ப்புக்கள் இழந்தவர்கள் ....

ஹரிகரன் பாடிய பாடல்கள் யாவும் பழைய பாடல்கள் 2010 ஆம் ஆண்டுக்கு முன்பு வெளியான பாடல்கள் என நினைக்கிறேன் ...2020 ஆண்டுக்கு பின்பு அவரின் பாடல்கள் பிரபலமான ஞாபகம் எனக்கு இல்லை...
சிவா,டிடி, போன்றவர்களும்  பிரபலம் இல்லை ...
ஏனைய நடிகை,நடிகர்கள் விஜய் டிவியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்பவர்கள் 

தமன்னா  ரஜனியின் படத்தில் கொஞ்சமாக காட்டி சிலுக்கு நடனம் ஆடியகாரணத்தால் கொஞ்சம் பிரபலம் அவரை கெஞ்சி கேட்டு யாழுக்கு அழைத்தனர் அவரை என் போன்ற காவாலிகள் கொஞ்ச ஆசைப்பட்டதன் விளைவு யாழில் கொஞ்சம் இருந்த கலாச்சாரமும் கொடி கட்டி பறக்கிறது....

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, island said:

விவாதத்தில் உணமைகளை ஜீரணித்து கொள்ள முடியாத போது வழமையான  பயன்படுத்தும் இறுதி ஆயுதம் எதிரில் இருப்பவனை சிங்கள கைக்கூலி என்று வசைபாடுவது.

 என்ன செய்வது அதற்கடுத்த ஆயுதத்தை பயன்படுத்த முடியாத பரிதாப நிலை  😂😂

"சிங்கள கைக்கூலி"
ஆஹா ஆஹா....இதுவும் நான் சொன்ன லிஸ்ட்டில் உண்டு நன்றி  ஞாபக படுத்தியமைக்கு.....

அன்மையில் டான் தொலைக்காட்சியில் விஞ்ஞானி சிவாவின் பேட்டி பார்த்தேன் ...பேட்டி எடுப்பவர் இதே மாதிரி ஒரு கேள்வியை கேட்கிறார்."நீங்கள் அமைச்சருடன் சேர்ந்து இயங்குவதால் உங்களை துரோகி என கூறுவார்களே ...என்று.....ஒர் தொலைக்காட்சியில் இப்படியான கேள்விகளை கேட்க வேண்டிய தேவை இல்லை,,,,
ஆகவே திட்ட மிட்டு  துரோகி ,சிங்கள கைக்கூலி என கூறுவார்கள் என்ற நச்சை விதைக்கின்றனர் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, putthan said:

இதுவும்ஒ ரு உத்தி தான்.  விவாதிக்கப்பட்ட விடயத்தை விட்டு வேறு விடயங்களை பேசுவது. நீங்கள் முதலில்  கேட்ட கேள்விக்கு நான்  நேரடியாக பதில் தந்தேன்.  நீங்கள்  அதை விடுத்து வேறு விடங்களுக்கு தாவுகின்றீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹரிகரனின் இசை நிகழ்ச்சிகள் சர்ச்சைக்கு உள்ளாவது இது முதற்தடவை அல்ல. அதேபோல்... கொழும்பில்.. சுகதாசவில் எல்லாம் நல்லப்படியா நடந்து முடிஞ்சதாகவும் இல்லை. அங்கும் சல சலப்புக்கள் நிகழ்ந்த சம்பவங்கள் உண்டு. 

யாழ் நிகழ்ச்சியில் ஏற்பட்ட சலசலப்புக்கு..

நிகழ்ச்சியை ஒழுங்கமைத்தவர்கள்.. செய்த தவறுகளே அதிகம். மக்களை கட்டுப்பாட்டுக்குள் வைச்சிருக்கக் கூடிய எந்த ஒழுங்குகளும் இன்றி.. இசை நிகழ்ச்சியை குறைந்த பாதுகாப்புச் செலவில் கூடிய வருவாய் நோக்கில் நடத்த முனைந்தது அப்பட்டமாக தெரிகிறது.

மேலும்.. இந்த நிகழ்ச்சியை குழப்ப அல்லது குழப்பி அடிச்சு அதில் ஆதாயம்.. கவனயீர்ப்புப் பெற மேலும் சிலர் பின்னணியில் இருந்து காவாலிகளை இயக்கி இருக்கலாம்.

இதில் தாடிக்காரக் குத்தியர் எதற்கு முந்திரிக்கொட்டை கணக்காய் அறிக்கைவிட்டவர். அவருக்கும் இந்த இசை நிகழ்ச்சிக்கும் என்ன தொடர்ப்பு..?! ஒருவேளை தன்னை பிரதம விருந்தினராக அழைத்து தாமன்னாவுக்கு பக்கத்தில் இருந்தவில்லை என்ற கோபமோ என்னவோ..??!

இது முழுக்க முழுக்க தனியார்.. தங்களின் வருமானத்துக்காக நிகழ்த்திய நிகழ்வு. இதற்கும் யாழ் மக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த தனியார் நிகழ்வை ஒருங்காக ஒழுங்கமைக்காமை தான் தவறுகளுக்கு முழுக்காரணமே தவிர.. மக்களை இளைஞர்களை குறை சொல்லி பிரயோசனமில்லை. சில இளைஞர்கள் வெளியார் தூண்டலில் செயற்பட்டிருந்தாலும் கூட. 

இந்த நிகழ்ச்சி தவறுகளுக்கு இந்திரன் - ரம்பா - கலா மாஸ்டர் உள்ளிட்ட மற்றும் இந்த நிகழ்ச்சியை ஒருங்கமைத்த முஸ்லிம் நபர் உட்பட ஆக்களே.. இதற்கு முக்கிய பொறுப்பு. அவர்களின் அனுபவமின்மை.. சரியான திட்டமிடலின்மையே.. இந்த நிகழ்ச்சி தோல்வியில் முடியக் காரணம். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, nedukkalapoovan said:

இதில் தாடிக்காரக் குத்தியர் எதற்கு முந்திரிக்கொட்டை கணக்காய் அறிக்கைவிட்டவர்

அவரின் பிரச்சனை யாழ்பாணத்தில் அவருன் கட்டுப்பாட்டை மீறிய புலம் பெயர் தொழிலதிபர்கள் உருவாவது தனது அரசியலுக்கு  ஆபத்தானது என்ற அவரது அரசியல் நினைப்பே.  பெரியளவிலான அபிவிருத்திகளை தவிர்தது சிறிய சலுகைகளை மக்களுக்கு வழங்கி அரசியல் செல்வாக்கை உருவாக்கும் தனது செயற்பாட்டுக்கு இது ஒவ்வாது என்று நினைத்திருக்கலாம்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, nunavilan said:

தமிழ்நாட்டில் எல்லாம் தெரிந்த பிரிந்த புரிந்த மிக மிக மிக மிகச் சிலரில் இவரும் ஒருவர். 

இவருக்குத் தெரியாதது புரியாதது விரியாதது எதுவுமே  இல்லை. அந்த அளவில் நாளாந்தம் 24 மணித்துளிகளும் பேட்டி கொடுத்துக்கொண்டே இருப்பார். 

எல்லாம் தெரிந்த முட்டாள்களில் இவரும் ஒருவர். 

மிகச் சாதாரண ஒழுங்குபடுத்துதல் பிரச்சனையை வைத்து இவர்கள் வயிறு வளர்க்கிறார்கள. 

ஈரைப் பேனாக்கி , பேனைப் பெருமாளாக்குவது என்பது இதுதான் . 

😏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, colomban said:

ஆகவே, இது தொடர்பிலும், அரசியல்வாதிகள், சிவில் சமூகத்தினர் இடையே கலந்துரையாடல் நடக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக மக்களின் நிலைப்பாடு இதுவாகத்தான் இருக்குமானால், விடை சுலபமானது. யாழ்ப்பாணத்தில் இனிமேல் தமிழக சினிமா கலைஞர்களை கொண்டு இத்தகைய ஆடல், பாடல், இசை நிகழ்ச்சிகளை நடத்தாமல் விடலாம்.

தமிழ் மக்களால் மிகவும் விரும்பபடுகின்ற ஆடல் பாடல் இசை நிகழ்ச்சிகளை யாழ்பாணத்தில் நடத்துவதற்கு இவ்வளவு பிரச்சனையா☹️
ஏன் மனோ கணேசன் என்ற அரசியல்வாதி முஸ்லிம் மதவாதிமாதிரி பயமுறுத்துகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, island said:

அவரின் பிரச்சனை யாழ்பாணத்தில் அவருன் கட்டுப்பாட்டை மீறிய புலம் பெயர் தொழிலதிபர்கள் உருவாவது தனது அரசியலுக்கு  ஆபத்தானது என்ற அவரது அரசியல் நினைப்பே.  பெரியளவிலான அபிவிருத்திகளை தவிர்தது சிறிய சலுகைகளை மக்களுக்கு வழங்கி அரசியல் செல்வாக்கை உருவாக்கும் தனது செயற்பாட்டுக்கு இது ஒவ்வாது என்று நினைத்திருக்கலாம்.  

💯 இதுதான் விடயம்…..

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

தமிழ் மக்களால் மிகவும் விரும்பபடுகின்ற ஆடல் பாடல் இசை நிகழ்ச்சிகளை யாழ்பாணத்தில் நடத்துவதற்கு இவ்வளவு பிரச்சனையா☹️
ஏன் மனோ கணேசன் என்ற அரசியல்வாதி முஸ்லிம் மதவாதிமாதிரி பயமுறுத்துகின்றார்.

யாழ்பாண தமிழ் மக்கள் ஒன்றும் சினிமா மோகம் இலஙாதவர்கள் கிடையாது.   திரைப்படங்கள்  ஏக காலத்தில் இலங்கையிலும் திரையிடப்படாத காலத்தில்  வல்வெட்டித்துறையில் இருந்து படகில் திருட்டுதனமாக தமிழ் நாடு சென்று அங்கு வெளியாகும் புதிய திரைப்படங்களை பார்தது ரசித்துவிட்டு திரும்பி வந்த கதைகளெல்லாம் உண்டு.

அதை விட,  சினிமா மற்றும் இது போன்ற star night கொண்டாட்டங்கள் மக்களின் கலாச்சாரத்தை/ கல்வியை பெரியளவுக்கு  பாதிக்கப் போவதில்லை.  

சினிமா மோகம் கொண்டவர்கள் என்று  எம்மவரால் கேலி பேசப்படும்  தமிழ் நாட்டில் கல்வி கற்றவர்கள்  பெருந்தொகையானவர்கள் வெளி நாடுகளில் உயர் பதவிகளில் உள்ளார்கள். பெருந்தொகையான  கணணிப் பொறியியலாளர்கள் தமிழ் நாட்டில் இருந்து நேரடியாக ஒப்பந்த அடிப்படையில் பெரிய பெரிய நிறுவனங்களால் வேலைக்கு  அழைக்கப்படுகின்றனர்.   எம்மவரில் விரல் விட்டு எண்ணப்படுபவர்களே அப்படி வரக்கூடியதாக உள்ளது. மற்றயவர்கள் அகதி விசாவிலேயே இங்கு வரும் நிலை.   

எம்மவரில் இங்கு கலவி கற்ற இரண்டாம் தலைமுறையினர்   கல்வியில் உயர்ந்து விளங்குவதைப் போல  தமிழ் நாட்டில் கல்வி கற்றவர்கள்  உலகெங்கும் அதே கல்வி வல்லமையுடன் இருக்கிறார்கள். 

Edited by island
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிங்கள அரச தலைமைக்கு தமிழர்கள்தான் முதல் எதிரி ஏனையோர் எதிரிகளாக இருந்தாலும் அவர்களைக்கண்டால் வாலைச் சுறுட்டிகொண்டு நிப்பினம்.

இந்திய ஏகாதிபத்தியம் தான் நினைத்தமாதிரிக் காய்களை நகர்த்துகிறது தமிழர்பகுதியில் அவர்கள் சிங்களத்துகுக்குத் தெரிந்தே எல்ல இடங்களிலும் தங்கள் கரங்களை விரித்து வளைத்துப்பிடித்துள்ளார்கள் இதைப்பற்றி சிங்களம் வாய் திறக்கமுடியாது காரணம் விடுதலைப்புலிகளைப்போல் இன்னுமொரு அமைப்பை நாம் மாலைதீவில் புளொட்டை இறக்கினமாதிரி இறக்கிவிடுவம் எண்டு சொன்னால் பொத்தீருவினம்.

அடுத்து தெற்கு அங்கு பொருளாதார மீட்சி எனக்கூறிக்கொண்டு அனைத்து இடங்களையும் வளைத்துப்போட்டுக் கபளீகரம் செய்வதை சிங்களவர்கள் கவனிக்க மாட்டார்கள் (தற்போதைக்கு) தவிர போர்க்குற்றம் மனித உரிமை பொறுப்புக்குறல் விடையத்தில் அவர்களுக்கு ஆதரவாக நின்றால் சிங்களவன் மது உண்ட மந்தியாகிவிடுவான்.

இல்லாதுவிட்டால் நீர்மூழ்கிக்கப்பலை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாது அடாத்தாக இலங்கைத் துறைமுகத்துக்குள்ள கொண்டுபோவானா? 

ஒரு இறைமை உள்ள நாட்டின் எல்லைக்குள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள இராணுவத் தளபாடங்களை நகர்த்துவது என்பது எவ்வளவு பாரதூரமான விடையம்.

நான் ஆரம்பத்தில் நினைத்தேன் இலங்கைத் தீவின் வடக்குக் கிழக்குப்பகுதி (முக்கியமாக வடக்கு) தான் இந்தியாவின் ஒருமாநிலமாக மாறிவிட்டது என இப்போது பார்த்தால்தான் தெரியுது இலங்கைத் தீவு முழுவதும் இந்தியாவின் இன்னுமொரு மாநிலமாகி நீண்ட நாள் ஆகிவிட்டதென.

இல்லாதுவிடின் ஜே வி பி யின் அனுரகுமாரவை ஏதோ பஜகவின் தமிழ்நாட்டுப் பிரிவு செயலாளர் அண்ணாமலையை டெல்கிக்குக் கூப்பிட்டுக் கதைப்பதுபோல் கதைக்கமுடியுமா.

இலங்கையைச் சீரளிக்கும் நிகழ்சித்திட்டத்தின் ஒரு பகுதியே தமன்னாவின் கெட்ட ஆட்டமாகும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, island said:

இதுவும்ஒ ரு உத்தி தான்.  விவாதிக்கப்பட்ட விடயத்தை விட்டு வேறு விடயங்களை பேசுவது. நீங்கள் முதலில்  கேட்ட கேள்விக்கு நான்  நேரடியாக பதில் தந்தேன்.  நீங்கள்  அதை விடுத்து வேறு விடங்களுக்கு தாவுகின்றீர்கள். 

22 hours ago, island said:

இதுவும்ஒ ரு உத்தி தான்.  விவாதிக்கப்பட்ட விடயத்தை விட்டு வேறு விடயங்களை பேசுவது. நீங்கள் முதலில்  கேட்ட கேள்விக்கு நான்  நேரடியாக பதில் தந்தேன்.  நீங்கள்  அதை விடுத்து வேறு விடங்களுக்கு தாவுகின்றீர்கள். 

விவாதம் என வந்தால் விண்ணானம் விடுப்பு எழுதுவது என் பாணி .....மேலும் விவாதிப்பவர் 
தமிழ் தேசிய விரோத கருத்தையும் தமிழ் மக்களுக்கு ஏதிரான மனபோக்கையும் வைத்திருப்பார் என நான் புரிந்து கொண்டால் அவருடன் நாம் என்னத்தை விவாதித்தாலும் முடிவு 
முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு போய் விட்டார்கள்
செல்வா காலத்திலிருந்தே யாழ்ப்பாணதான் மோசமானவன் என்ற பதில் தான் வரும்  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, putthan said:

நிங்கள் கேட்ட கேள்விக்கான நேரடியான பதிலையே நான் தந்தேன். அது தொடர்பாக தர்கக ரீதியான பதிலை தர முடியாத போது விடுப்பு விண்ணாணம் உங்களுக்கு தேவைப்படுகிறது.  

தமிழ் மக்களுக்கு முதல் எதிரிகளே  உங்களைப் போன்றவர்களே.  அதை மறைக்கவே உங்களது விடுப்பு  விண்ணாணம்.  மற்றவர் மீதான வசைபாடல். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Elugnajiru said:

சிங்கள அரச தலைமைக்கு தமிழர்கள்தான் முதல் எதிரி ஏனையோர் எதிரிகளாக இருந்தாலும் அவர்களைக்கண்டால் வாலைச் சுறுட்டிகொண்டு நிப்பினம்.

இந்திய ஏகாதிபத்தியம் தான் நினைத்தமாதிரிக் காய்களை நகர்த்துகிறது தமிழர்பகுதியில் அவர்கள் சிங்களத்துகுக்குத் தெரிந்தே எல்ல இடங்களிலும் தங்கள் கரங்களை விரித்து வளைத்துப்பிடித்துள்ளார்கள் இதைப்பற்றி சிங்களம் வாய் திறக்கமுடியாது காரணம் விடுதலைப்புலிகளைப்போல் இன்னுமொரு அமைப்பை நாம் மாலைதீவில் புளொட்டை இறக்கினமாதிரி இறக்கிவிடுவம் எண்டு சொன்னால் பொத்தீருவினம்.

அடுத்து தெற்கு அங்கு பொருளாதார மீட்சி எனக்கூறிக்கொண்டு அனைத்து இடங்களையும் வளைத்துப்போட்டுக் கபளீகரம் செய்வதை சிங்களவர்கள் கவனிக்க மாட்டார்கள் (தற்போதைக்கு) தவிர போர்க்குற்றம் மனித உரிமை பொறுப்புக்குறல் விடையத்தில் அவர்களுக்கு ஆதரவாக நின்றால் சிங்களவன் மது உண்ட மந்தியாகிவிடுவான்.

இல்லாதுவிட்டால் நீர்மூழ்கிக்கப்பலை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாது அடாத்தாக இலங்கைத் துறைமுகத்துக்குள்ள கொண்டுபோவானா? 

ஒரு இறைமை உள்ள நாட்டின் எல்லைக்குள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள இராணுவத் தளபாடங்களை நகர்த்துவது என்பது எவ்வளவு பாரதூரமான விடையம்.

நான் ஆரம்பத்தில் நினைத்தேன் இலங்கைத் தீவின் வடக்குக் கிழக்குப்பகுதி (முக்கியமாக வடக்கு) தான் இந்தியாவின் ஒருமாநிலமாக மாறிவிட்டது என இப்போது பார்த்தால்தான் தெரியுது இலங்கைத் தீவு முழுவதும் இந்தியாவின் இன்னுமொரு மாநிலமாகி நீண்ட நாள் ஆகிவிட்டதென.

இல்லாதுவிடின் ஜே வி பி யின் அனுரகுமாரவை ஏதோ பஜகவின் தமிழ்நாட்டுப் பிரிவு செயலாளர் அண்ணாமலையை டெல்கிக்குக் கூப்பிட்டுக் கதைப்பதுபோல் கதைக்கமுடியுமா.

இலங்கையைச் சீரளிக்கும் நிகழ்சித்திட்டத்தின் ஒரு பகுதியே தமன்னாவின் கெட்ட ஆட்டமாகும்.

தமன்னா வரமுன்னர் இலங்கை நல்லாத் தான் இருந்தது என்கிறீர்கள்?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, island said:

நிங்கள் கேட்ட கேள்விக்கான நேரடியான பதிலையே நான் தந்தேன். அது தொடர்பாக தர்கக ரீதியான பதிலை தர முடியாத போது விடுப்பு விண்ணாணம் உங்களுக்கு தேவைப்படுகிறது.  

தமிழ் மக்களுக்கு முதல் எதிரிகளே  உங்களைப் போன்றவர்களே.  அதை மறைக்கவே உங்களது விடுப்பு  விண்ணாணம்.  மற்றவர் மீதான வசைபாடல். 

சரி நீங்கள் என்ன கேள்வி கேட்டியள் சொல்லுங்கோ ?பதில் தருகிறேன்....

நீங்கள் வழமையான் குற்றசாட்டுக்களை வைக்கின்றீர்கள் ..
வசை பாடுதல்
விவாதத்தை திசை திருப்புதல் 
இப்படியான சொல்லாடல்களை எங்கயோ பல முறை கேட்ட மாதிரி இருக்கு ...
தயவு செய்து மீண்டும் உங்கள் கேள்வியை எழுதுங்கள்....

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Elugnajiru said:

சிங்கள அரச தலைமைக்கு தமிழர்கள்தான் முதல் எதிரி ஏனையோர் எதிரிகளாக இருந்தாலும் அவர்களைக்கண்டால் வாலைச் சுறுட்டிகொண்டு நிப்பினம்.

இந்திய ஏகாதிபத்தியம் தான் நினைத்தமாதிரிக் காய்களை நகர்த்துகிறது தமிழர்பகுதியில் அவர்கள் சிங்களத்துகுக்குத் தெரிந்தே எல்ல இடங்களிலும் தங்கள் கரங்களை விரித்து வளைத்துப்பிடித்துள்ளார்கள் இதைப்பற்றி சிங்களம் வாய் திறக்கமுடியாது காரணம் விடுதலைப்புலிகளைப்போல் இன்னுமொரு அமைப்பை நாம் மாலைதீவில் புளொட்டை இறக்கினமாதிரி இறக்கிவிடுவம் எண்டு சொன்னால் பொத்தீருவினம்.

அடுத்து தெற்கு அங்கு பொருளாதார மீட்சி எனக்கூறிக்கொண்டு அனைத்து இடங்களையும் வளைத்துப்போட்டுக் கபளீகரம் செய்வதை சிங்களவர்கள் கவனிக்க மாட்டார்கள் (தற்போதைக்கு) தவிர போர்க்குற்றம் மனித உரிமை பொறுப்புக்குறல் விடையத்தில் அவர்களுக்கு ஆதரவாக நின்றால் சிங்களவன் மது உண்ட மந்தியாகிவிடுவான்.

இல்லாதுவிட்டால் நீர்மூழ்கிக்கப்பலை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாது அடாத்தாக இலங்கைத் துறைமுகத்துக்குள்ள கொண்டுபோவானா? 

ஒரு இறைமை உள்ள நாட்டின் எல்லைக்குள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள இராணுவத் தளபாடங்களை நகர்த்துவது என்பது எவ்வளவு பாரதூரமான விடையம்.

நான் ஆரம்பத்தில் நினைத்தேன் இலங்கைத் தீவின் வடக்குக் கிழக்குப்பகுதி (முக்கியமாக வடக்கு) தான் இந்தியாவின் ஒருமாநிலமாக மாறிவிட்டது என இப்போது பார்த்தால்தான் தெரியுது இலங்கைத் தீவு முழுவதும் இந்தியாவின் இன்னுமொரு மாநிலமாகி நீண்ட நாள் ஆகிவிட்டதென.

இல்லாதுவிடின் ஜே வி பி யின் அனுரகுமாரவை ஏதோ பஜகவின் தமிழ்நாட்டுப் பிரிவு செயலாளர் அண்ணாமலையை டெல்கிக்குக் கூப்பிட்டுக் கதைப்பதுபோல் கதைக்கமுடியுமா.

இலங்கையைச் சீரளிக்கும் நிகழ்சித்திட்டத்தின் ஒரு பகுதியே தமன்னாவின் கெட்ட ஆட்டமாகும்.

சரியாக சொன்னீர்கள் ...விமல் வீரவம்சாவும் இந்தியாவுக்கு  போக துடிக்கின்றார் ...தமிழ் கட்சிகளை முன்பு இந்தியாவுக்கு ஒடுவது போல இப்பொழுது சிங்கள அரசியல்வாதிகள் இந்தியாவுக்கு ஒட வேண்டிய நிலை ...இந்தியாவும் இவர்களை (சிங்கள கட்சிகளை) வாங்கோ வாங்கோ என காலில் விழா குறையாக வரவழைத்து தங்களுக்கு தேவையான காரியங்களை செய்து கொள்கின்றனர் ....

இனவாத சிங்கள அரசியல் தலைவர்களால் சிறிலங்கா மாதா தன் இறையாண்மையை இழந்து தவிக்கின்றார்.....அன்று சிறிலங்கா மாதாவின் பிள்ளைகள் யாவருமென நினைத்து அரசியல் நடத்தியிருந்தால் இன்று இந்தியா சிறிலங்கா ஜனாதிபதியை தெரிவு செய்யும் நிலை வந்திருக்காது....  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, putthan said:

சரி நீங்கள் என்ன கேள்வி கேட்டியள் சொல்லுங்கோ ?பதில் தருகிறேன்....

நீங்கள் வழமையான் குற்றசாட்டுக்களை வைக்கின்றீர்கள் ..
வசை பாடுதல்
விவாதத்தை திசை திருப்புதல் 
இப்படியான சொல்லாடல்களை எங்கயோ பல முறை கேட்ட மாதிரி இருக்கு ...
தயவு செய்து மீண்டும் உங்கள் கேள்வியை எழுதுங்கள்....

கருத்து களத்தை திரும்ப வாசித்தால் எல்லாம் தெரியும். 

  • Confused 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, island said:

தமிழ் மக்களுக்கு முதல் எதிரிகளே  உங்களைப் போன்றவர்களே. 

தமிழர்களுக்கு முதல் எதிரியாக நான் இருந்து விட்டு போகிறேன் ...அதில் நான் கவலை படவில்லை ...இனி வரும் காலங்களில் இளைஞர்கள் எப்படி தமிழர்களுக்கு எதிரியாக இல்லாது வாழ் வேணும் என சொல்லி கொடுங்கள் ...அது தமிழ் சமுதாயம் முன்னேறட்டும்...
குற்றசாட்டுக்களை விடுத்து முன்னேற்ற பாதைகளுக்கான கருத்துக்களை கூறுங்கள்

6 minutes ago, island said:

கருத்து களத்தை திரும்ப வாசித்தால் எல்லாம் தெரியும். 

உங்களுக்கே என்ன கேட்டேன் என தெரியவில்லை போலும்

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
On 11/2/2024 at 14:33, ஈழப்பிரியன் said:

90 களில் முற்றவெளியில் நடந்த இசை நிகழ்ச்சி.

யாழ் முற்றவெளி இசை நிகழ்ச்சி:- 

யாழ் முற்றவெளி முற்று முழுதாக மக்களினால் நிரம்பியிருந்தது,  இசையினையும்  நிகழ்ச்சிகளையும் காணக் கூடிய மக்களின் எண்ணிக்கை அளவிட முடியாதது.  அடுத்தடுத்த நாள்களில் வெளிவந்த வீரகேசரி  கூடிய மக்களின் தொகை 'ஐந்து இலட்சம் ' எனச் செய்தி வெளியிட்டது ( நிகழ்வில் தொடக்கம் முதல் இறுதி வரை இருந்தவன் என்ற முறையில் அரை மில்லியன் என்ற தொகை சற்று அதிகம் தான், பாதியளவு இருக்கலாம் என எண்ணுகின்றேன்).  இலங்கைப் படையினர் நிகழ்வினை அச்சுறுத்திக் குழப்ப முயன்ற போது சில எதிர்ப்புக் குரல்கள் எழுந்திருந்தனவே தவிர மற்றும் படி, நிகழ்வு இறுதி வரை அமைதியாகவே இடம் பெற்றது.  நிகழ்வினை ஒழுங்குபடுத்திய மாணவர்களில் நானும் ஒருவன் என்பதால் மேடை உட்படப் பல இடங்களுக்கும் சென்று வந்ததில் மது போதையில் ஒருவரைக் கூடக் காணவில்லை.  எந்தவொரு கெட்ட சொல்லும் எங்குமே ஒலிக்கவில்லை.  நள்ளிரவில் நிகழ்ச்சி முடிந்த போதும்,  நிகழ்வுக்கு வந்திருந்த பெண்கள் உட்பட யாருக்கும் எந்த அச்சுறுத்தலும் இருக்கவில்லை.  தடுப்பரண்கள் எதுவுமில்லை.  வெறும் கயிறு மட்டுமே மேடைக்கு முன் கட்டப்பட்டிருந்தது.  கூடியிருந்த இலக்கக் கணக்கான ( இலட்சக் கணக்கான) இளைஞர்களில் யாருமே கயிற்றினைத் தாண்டி வர முயலவில்லை.  அப்படிக் கட்டுக்கோப்பாக இசை நிகழ்ச்சி நடந்து முடிந்தது 23.04.1990 இல் ஒரு திங்கள் கிழமையன்று.  இசை நிகழ்ச்சியினை நடாத்தியது தேனிசைச் செல்லப்பா.  

    இந்தியப் படை வெளியேறிய பின்பு, இலங்கைப் படையுடனான சண்டை தொடங்குவதற்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற நிகழ்வு அது. புலிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு. புலிகளின் மாணவர் ( SOLT) அமைப்பிடமே நிகழ்வினை ஒழுங்குபடுத்தி,  மக்களை அமர வைக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.  போராளிகள் மேடைப் பாதுகாப்பினையும்,  வெளிப் பாதுகாப்பினையும் மட்டுமே முதலில் பார்த்துக் கொண்டனர்.  அப்போது முற்றவெளிக்கு அருகே கோட்டையில் குடியிருந்த இலங்கைப் படையினரின் கண் முன்னமே நிகழ்வு நடந்தது,  அதனால் முதலில் சீருடை அணிந்த/ ஆயுதம் தரித்த புலிகள் தமது இருப்பினை மறைத்து,  ஊர்திகளுக்குள்ளேயும்,  மறைவிடங்களிலும் மட்டுமே இருந்தனர்.  படையினரும் முதலில் ஆயுதம் எதுவுமின்றி கோட்டை மதில் மீது வந்து அமர்ந்து வேடிக்கை மட்டுமே பார்த்தனர்.  மக்கள் கூடக் கூட,  படையினருக்குப் பொறாமை வந்திருக்க வேண்டும். சிறிது சிறிதாக ஆயுதங்களை மக்கள் கூட்டம் முன் காட்டிக் கொண்டு வந்தனர்.  அதன் பின்னரே புலிகளும் ஆயுதங்களுடன் சுற்றி வர வெளிப் பாதுகாப்பினைப் பார்த்துக் கொண்டனர்.  இரு தரப்பினரும் சில மீற்றர் இடைவெளியில் ஆயுதங்களுடன் நேருக்கு நேர் நீட்டியபடி இருந்தனர்.  இசை நிகழ்ச்சி தொடங்கியது.  மக்கள் எதனையும் பொருட்படுத்தவில்லை,  இசையில் மூழ்கிக் கிடந்தனர்.  இதே யாழ் மக்கள் தான். நிகழ்வின் நோக்கமும்,  கருப்பொருளும் அப்படிப்பட்டவை. நம்புங்கள் இதே முற்றவெளிதான்.  முற்றவெளியில் அன்று ஒலித்த தேனிசைச் செல்லப்பாவின் குரல் இன்றும் காதில் ஒலிக்கின்றது- " நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும்,  நாட்டின் அடிமை விலங்கு உடைக்கும் " .

ஆம் அன்று அங்கு கூடிய மக்களுக்கு ஒரு குறிக்கோள் இருந்தது,  அதனால் ஒழுங்கும் இருந்தது,  நேற்று முற்றவெளியில் அடிதடி செய்தோருக்கு பொதுவான இலக்கும் இல்லை, தனிப்பட்ட இலக்குகளுமில்லை.  இலக்கில்லாத பயணங்கள் தறி கெட்டே போகும்.🙏🙏🙏

வாட்சப்பில் வந்தது

https://noolaham.net/project/229/22815/22815.pdf - Page 2

https://noolaham.net/project/229/22814/22814.pdf

https://noolaham.net/project/234/23355/23355.pdf

இந்தச் செய்திகளை வாசித்துப் பாருங்கள்... அப்பா

புலிகளின் காலத்து இசைநிகழ்ச்சி.... நெருப்புடா

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல தகவல் அடங்கிய கருத்து Island.

11 hours ago, island said:

அதை விட,  சினிமா மற்றும் இது போன்ற star night கொண்டாட்டங்கள் மக்களின் கலாச்சாரத்தை/ கல்வியை பெரியளவுக்கு  பாதிக்கப் போவதில்லை.  

யாழ்பாணத்தில் நடைபெற்றது தமிழ்நாட்டு தொப்பிள்கொடி உறவுகளின்  இசை, நடனங்கள் தானே.

சினிமா இசை நடன நிகழ்ச்சிகள் பார்ப்பதால் படிப்பு பாதிப்படைய போவதில்லை. பாடகராக வருகின்ற ஒருவரின் கல்வி பாதிப்படையலாம் அது அவரது விருப்பம்.

  • Like 2

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.