Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சி ஒட்டுமா உடையுமா? - நிலாந்தன்

Untitled-112.jpg

தமிழரசுக்  கட்சிக்குள் சுமந்திரன் அணியெனப்படுவது ஒரு புதிய தோற்றப்பாடு அல்ல. அது தமிழரசுக் கட்சியின் பாரம்பரியத்திலேயே இருக்கிறது. தமிழரசுக் கட்சியின் தொடக்கம் ஒப்பீட்டளவில் புரட்சிகரமானதாக இருக்கலாம். ஆனால் அதன் கடந்த 73 ஆண்டுகால வரலாற்றையும் தொகுத்துப் பார்த்தால் அக்கட்சியானது இலட்சியத்தில் சறுக்காத கட்சி என்று கருதத் தேவையில்லை. 1976இல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றி,தனி நாட்டுக் கோரிக்கையை முன்வைத்த தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் தமிழரசுக் கட்சியே முதன்மையானது. அவ்வாறு வட்டுக்கோட்டைத்  தீர்மானத்தை நிறைவேற்றிய ஒரு கட்சி 1981இல் அதாவது ஐந்து ஆண்டுகளில் நடந்த மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் பங்குபற்றியது. 1977இல் நடந்த தேர்தலில், தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து அமோக வெற்றிபெற்ற ஒரு கட்சி, ஐந்தே ஆண்டுகளில் மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் பங்குபற்றியது. மாவட்ட அபிவிருத்தி சபைகளுக்குள் எதுவும் இல்லை என்பதனை 1980ஆம் ஆண்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சுட்டிக்காட்டினார்கள். இந்திரபாலா, பாலகிருஷ்ணன், சீலன் கதிர்காமர், மு.நித்தியானந்தன், மு.திருநாவுக்கரசு ஆகியோர் அக்கருத்தரங்கில்  பேசினார்கள். அவர்களுடைய கருத்தை, அப்பொழுது தமிழரசுக்கட்சியின் தலைவராக இருந்த அமிர்தலிங்கம்  ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், எது சரி என்பதை வரலாறு பின்னர் நிரூபித்தது.

தமிழ் மிதவாதிகளின் மேற்கண்ட உறுதியின்மை, சமரசப்போக்கு  போன்றவற்றின் மீது நம்பிக்கையிழந்த இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தின் பக்கம் போனார்கள். எனவே தமிழரசுக் கட்சியானது தன் இலட்சியத்தில் இருந்து சறுக்காத ஒரு கட்சி என்று எடுத்துக் கொள்ளத்தேவையில்லை. ஏன் அதிகம் போவான்? 2015இல் மன்னாரில் நடந்த “தடம் மாறுகின்றதா தமிழ்த் தேசியம்?”என்ற தலைப்பிலான கருத்தரங்கில், நான் ஆற்றிய உரையில், சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் வெளியாரின் நிர்பந்தங்களின்றித் தானாக ஒரு தீர்வுக்கு இறங்கி வராது என்று கூறினேன். அதற்குப் பதிலளித்த சம்பந்தர் “அது ஒரு வறண்ட வாதம் வறட்டு வாதம்” என்று கூறினார். 2015இல் இருந்து 2018வரையிலும் சம்பந்தர், ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தோடு ஒத்துழைத்து “எக்கிய ராஜ்ய” என்ற ஒரு தீர்வு முயற்சிக்காக உழைத்தார். அதை அவர் சமஷ்டிப் பண்புடையது என்று சொன்னார். ஆனால் சிங்கள அரசியல்வாதிகள் அதனை ஒற்றைட்சியாட்சிதான் என்று சொன்னார்கள். சிங்களத் தலைவர்கள் தமது வாக்காளர்களுக்கு ஒன்றைச் சொன்னார்கள், தமிழ்த் தலைவர்கள் தமது வாக்காளர்களுக்கு வேறு ஒன்றைச் சொன்னார்கள்.

எனவே தமிழரசுக் கட்சி தூய இலட்சியவாதக் கட்சியல்ல. அது கொழும்புடன் சமரசத்துக்குப் போகாத கட்சியுமல்ல. இதில் ஆகப்பிந்திய உதாரணம் சம்பந்தர். அவர் தனது செயல் வழியைப் பலப்படுத்துவதற்காக உள்ளே கொண்டு வந்தவர்தான் சுமந்திரன். சுமந்திரன் மட்டுமல்ல சாணக்கியனும் அப்படிப்பட்டவர்தான். அண்மையில் யாழ்ப்பாணம் ராஜா கிறீம் ஹவுஸ் மண்டபத்தில் நடந்த ஒர் இளையோர் ஒன்றுகூடலில் சாணக்கியனும் உரையாற்றினார். அதில் அவர் எனது உரையை மேற்கோள்காட்டி பிரச்சனைகளைத் தீர்ப்பதே தன்னுடைய அரசியல் செயல்வழி என்று சொன்னார். பின்னர் அவரோடு உரையாடும்போது நான் அவரிடம் சுட்டிக் காட்டினேன் “அது அரசு சார்பற்ற நிறுவனங்களின் அகராதியில் உள்ள ஒரு வார்த்தை…நீங்கள் தமிழ் மக்களின் தாயகத்தை ஒன்றிணைக்க வேண்டிய பொறுப்பை ஏற்றிருக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். உங்களுடைய அரசியல் ஒழுக்கம் என்பது தேசத்தை நிர்மாணிப்பது”என்று. அதற்கு அவர் திரும்பிக் கேட்டார் “அதுவும் ஒரு பிரச்சனைதானே? அந்தப் பிரச்சினையையும் தீர்க்க வேண்டும்தானே?” என்று. அப்பொழுது நான் சொன்னேன்…. ”தேச நிர்மாணம் என்பது ஓர் அரசியல் பதம் . பிரச்சனைகளைத் தீர்ப்பது என்பது அரசு சார்பற்ற நிறுவனங்களின் அகராதியில் அதிகம் உள்ள ஒரு வார்த்தை. நீங்கள் தமிழ்த் தேசியக்கட்சி ஒன்றின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் அரசியல் அடர்த்தி மிக்க வார்த்தையைத்தானே பயன்படுத்தலாம் ?” என்று.

சுமந்திரன் சாணக்கியனைப் போன்றவர்களின் சிந்தனாமுறை அது. தமிழரசுக் கட்சிக்குள் ஏற்கனவே இருந்து வந்த ஒரு பாரம்பரியத்தின் தொடர்ச்சியது. அக் கட்சிக்குள் அது ஒரு புதிய தோற்றப்பாடு அல்ல. எனவே சுமந்திரன் அணி என்பது கட்சிக்குள் ஒரு புதிய தோற்றப்பாடு அல்ல.

எனவே, சுமந்திரனுக்கு வாக்களித்தவர்களை துரோகிகள் என்று முத்திரை குத்தத் தேவையில்லை. அப்படித்தான் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் பிள்ளையானுக்கும் வாக்களிக்கும் தமிழ் மக்களை தமிழ்த் தேசத்துக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தலாமா? இல்லை. அவர்கள் தமிழ் மக்கள். அவர்களை எப்படித் தேசத் திரட்சிக்குள் உள்ளீர்ப்பது என்றுதான் சிந்திக்க வேண்டுமே தவிர அவர்களை தேசத்துக்கு வெளியே தள்ளிவிட முடியாது. இது சுமந்திரன் அணிக்கும் பொருந்தும். இந்த தமிழ் யதார்த்தத்தை சிறீதரன் உள்வாங்க வேண்டும். தேசத் திரட்சியை எப்படிப் பலப்படுத்துவது என்று அவர் சிந்திக்க வேண்டும்.

கிளிநொச்சியில் அவருடைய நடவடிக்கைகளை விமர்சிக்கும் அவருடைய அரசியல் எதிரிகள் அவரை “கிளிநொச்சியின் ஜமீன்” என்று அழைப்பார்கள். தமிழரசுக் கட்சியின் ஏனைய மாவட்டக் கிளைகளோடு ஒப்பிடுகையில் கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சியானது அதன் அரசியல் எதிரிகளை துரோகிகள் அல்லது இனப்படுகொலையின் பங்காளிகள் என்று வகைப்படுத்துவது உண்டு. போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டம் என்பதனால் கிளிநொச்சியில் அப்படிக் கூறமுடிந்தது. ஆனால் இப்பொழுது சிறீதரன் ஒரு மாவட்டத்தின் பிரதிநிதி அல்ல. தமிழ்த் தேசிய அரங்கில் உள்ள பெரிய கட்சியின் தலைவர்களில் ஒருவர். ஏனைய கட்சிகளையும் இணைத்து ஒரு கூட்டு முன்னணியை உருவாக்கப் போவதாக வேறு கூறிவருகிறார். எனவே அவர் அதற்கு வேண்டிய தகுதிகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

GF5pMnCXgAAHlXu-c.jpg
GFPqeSBb0AA8e6r-1.jpg

சுமந்திரன் அணியின் எழுச்சி என்பது தேர்தலோடு ஏற்பட்ட ஒரு தோற்றப்பாடு அல்ல. தேர்தலோடு அது மேலும் பலமடைந்தது என்பதே சரி. அது கட்சிக்குள் ஏற்கனவே காணப்பட்ட ஒரு தோற்றப்பாடு. இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டது போல மாவட்ட அபிவிருத்தி சபைகளை ஏற்றுக் கொள்கின்ற; ஐக்கிய ராஜ்ஜியத்தை ஏற்றுக் கொள்கின்ற ஒரு தரப்பு கட்சிக்குள் எப்பொழுதும் இருந்து வந்துள்ளது.

எனவே அந்த உட்கட்சி யதார்த்தத்தை உள்வாங்கி சிறீதரன் கட்சியைச் சீரமைக்க வேண்டியவராக இருக்கிறார். சுமந்திரன் கட்சியைத் தேசிய நீக்கம் செய்தார் என்று அவர் கருதினால், கட்சியை முன்னரை விட அதிகமாக தேசிய மயப்படுத்த வேண்டியது இப்பொழுது சிறீதரனுடைய பொறுப்பு.

குறிப்பாக கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவு தொடர்பான சர்ச்சைகளின் விளைவாக கட்சிக்குள் மற்றொரு சிறு பிளவு மேற் கிளம்பும் ஆபத்துத் தெரிகிறது. அது மட்டக்களப்பு- திருகோணமலை என்ற முரண்பாடு. கிழக்கை யார் பிரதிநிதித்துவப்படுத்துவது என்பதில் மட்டக்களப்பா? திருக்கோணமில்லையா? என்ற ஒரு போட்டி அங்கே தோன்றியிருக்கிறது. சம்பந்தரின் தலைமைத்துவம் தமிழரசுக் கட்சிக்கு விட்டுச் சென்றிருக்கும் மற்றொரு தீங்கான விளைவு அது. கிழக்கை மையமாகக் கொண்ட சம்பந்தர் தலைவராக இருந்த ஒரு காலகட்டத்தில்தான் கிழக்கில் பிள்ளையானின் கட்சிக்கு பலமான வாக்காளர் வங்கி ஒன்று உருவாகியது. அது கிழக்கின் யதார்த்தங்களில் ஒன்று. பிள்ளையானின் வாக்காளர்களில் குறிப்பிடத்தக்க தொகையினர் முன்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் வசித்தவர்கள் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அதுவும் கிழக்கின் யதார்த்தம்தான். இவ்வாறு ஏற்கனவே வடக்குக் கிழக்காகப் பிரிந்து போயிருக்கும் தமிழ்த் தேசிய அரசியற் பரப்பில், இப்பொழுது கிழக்குக்குள்ளேயே ஒரு பிரிவு தோன்றக்கூடிய ஆபத்துத் தெரிகிறது. அதாவது ஏற்கனவே பல துண்டுகளாக உடைந்து போயிருக்கும் ஒரு தமிழ்த் தேசிய பரப்பில் ஒரு புதிய உடைவுக்கான அறிகுறிகள் தெரிகின்றன. சிறீதரன் அதையும் கையாள வேண்டியுள்ளது

GFgIgMrXYAAYOrO.jpg
GFgIhLJXYAAXHZ-.jpg

அவர் பதவியேற்றவுடன் மாவீரர் துயிலும் இல்லத்துக்குச் சென்றார். அது கொழும்பில் உள்ள மேற்கத்திய தூதரகங்களால் பெரிய அளவிற்கு ஆர்வத்துடன் பார்க்கப்படவில்லை என்று சுமந்திரனுக்கு நெருக்கமான சிலர் கூறியதாக அறிகிறேன். எனினும் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட பின் மேற்கு நாடுகளின் தூதுவர்கள் சிலர் சிறீதரனை சந்தித்திருக்கிறார்கள். அவர் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதும் சிங்கள ஊடகவியலாளராகிய சுனந்த தேசப்பிரிய பின்வருமாறு ருவிற் பண்ணியிருந்தார் “தமிழரசுக் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் சுமந்திரனை  சிறீதரன் வென்றமையானது தமிழ் அரசியல் தீவிரப்போக்கடைவதைக்  காட்டும் ஒரு  சமிக்ஞையாகும்”

அதாவது சிறிதரனின் தலைமைத்துவம் தமிழ் அரசியலில் தீவிரவாத போக்கை மேலும் அதிகப்படுத்தப்போகிறது என்று கொழும்பில் இருப்பவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சிங்களக் கடும்போக்கு வாக்குகளைக் கவர விரும்புகிறவர்களுக்கு அது வழிகளை இலகுவாக்கிக் கொடுக்குமா? குறிப்பாக நடந்து முடிந்த சுதந்திர தினத்திலன்று சிறீதரன் தலைமையில் கிளிநொச்சியில் நடந்த ஆர்ப்பாட்டமும் அதில் சிறீதரன் நடந்து கொண்ட விதமும், அவர் கட்சியை எந்த திசையில் செலுத்த விரும்புகிறார் என்பதனை உணர்த்துகின்றதா? சில சிங்கள ஊடகவியலாளர்கள் கூறுவதுபோல தமிழ் மக்களுக்கு மேலும் ஒரு கஜேந்திரகுமார் கிடைத்திருக்கிறாரா?

சுதந்திர தினமன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் சிறிதரன் நடந்து கொண்ட விதம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாணியிலானது. கட்சிக்குள் தன்னுடைய நிலையைப்  பலப்படுத்துவதற்கு அது சிறிதரனுக்கு உதவும்.

சிறீதரன் முதலில் கட்சிக்குள் தன்னை பலப்படுத்த வேண்டியிருக்கிறது. சம்பந்தரின் தலைமைத்துவத்தின் கீழ் கட்சியானது கொழும்பை நோக்கி அதிகம் அதிகம் திருப்பப்பட்டு விட்டது. அதை மீண்டும் வாக்காளர்கள் நோக்கித் திருப்பவேண்டும். அதே சமயம் கட்சி அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறுவதுபோல ஒரு சமஸ்ரியை அடைவதற்கான வழிவகைகளையும் கண்டுபிடிக்க வேண்டும். சுதந்திர தினத்தன்று ஆதரவாளர்களுக்கு வீரமாகத் தலைமை தாங்குவது கட்சிக்குள் சிறிதரனை பலப்படுத்த உதவலாம். அதற்குமப்பால் சமஸ்ரியை அடைவதற்கான செயல்பூர்வமான வழியை அவர் தனது தொண்டர்களுக்குக் காட்ட வேண்டும்; மக்களுக்கும் காட்ட வேண்டும்.
 

https://www.nillanthan.com/6533/

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

செயல்பூர்வமான வழியை அவர் தனது தொண்டர்களுக்குக் காட்ட வேண்டும்; மக்களுக்கும் காட்ட வேண்டும்.

IMG-5829.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழரசுக்கட்சிக்குள் நடந்தது - நடப்பதென்ன ? - விபரிக்கின்றார் சுமந்திரன் எம்.பி

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

தமிழரசுக் கட்சி ஒட்டுமா உடையுமா? -

கட்டுரையை படிக்கவில்லை படிக்கவும் தேவையில்லை  சுமத்திரன் அரசியலில் இருந்து  விலகாதவரை தமிழரசு கட்சி என்ன எல்லாமே குழப்பம்தான் .சுமத்திரன் அரசியலில் இருப்பது தமிழருக்கு விடிவு இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

கட்டுரையை படிக்கவில்லை படிக்கவும் தேவையில்லை  சுமத்திரன் அரசியலில் இருந்து  விலகாதவரை தமிழரசு கட்சி என்ன எல்லாமே குழப்பம்தான் .சுமத்திரன் அரசியலில் இருப்பது தமிழருக்கு விடிவு இல்லை .

சுமந்திரன் இல்லை எவர் வந்தாலும் இங்குள்ள மக்களுக்கு விடிவு இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சுமந்திரன் இல்லை எவர் வந்தாலும் இங்குள்ள மக்களுக்கு விடிவு இல்லை 

இப்போது ஒவ்வொருவரும் பதவி ஆசையில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். எப்படி பாராளுமன்ற கதிரையில் அமர்ந்து சுகம் காணலாம் என்று திரிகிறார்களே ஒழிய வேறு ஒன்றுமில்லை. சுமந்திரன் விலகினால் தீரும் என்றால் சுமந்திரன் வருவதட்கு முன்னர் ஏன் தீர்க்கப்படவில்லை. இதெல்லாம் நொண்டி சாட்டுக்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சி நிரல்கள் இருக்கின்றன. அதன்படி இயங்குகிறார்கள். பணம், பணம், பணம்.  

  • கருத்துக்கள உறவுகள்

 

உடைச்சுக்கிட்டு ஒட்டிக்கவா?

ஒட்டிக்கிட்டு உடைச்சுக்கவா?

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையில் நிலாந்தனே சுட்டிக் காட்டியிருக்கிறார்: ஆயுதம் ஏந்தாத தமிழ் கட்சிகளில், ஒரே கொள்கை, ஆனால் மாறு பட்ட அணுகுமுறை என்று இருந்தோர் பலர் இருந்திருக்கிறார்கள், இத்தகைய அணுகுமுறையின் பல்வகைத் தன்மை தமிழருக்குப் புதிதல்ல. வாக்காளர்கள் அல்லது கட்சி உறுப்பினர்கள் பெரும்பாலானோரிடம் பல்வகைத் தன்மைக்கு ஆதரவில்லா விட்டால் உரிய  அரசியல் தலைவர்கள் தாமாகவே பதவியிழந்து போய் விடுவர் - மக்கள் விரும்பும் தலைவர்கள் முன் வரலாம், தொடரலாம்!

ஆனால், எங்கள் தீவிர தேசியர்கள், குறிப்பாக புலம் பெயர்ந்த தீவிர தேசியர்கள் கேட்பது இதையல்ல: "தாயகத்தில் மக்கள் உனக்கு வாக்குப் போட்டாலும் நமக்குப் பிடிக்கவில்லையானால் நீ விலகி விட வேணும்"😎. இதைத் தான் சுமந்திரனிடம் எதிர்பார்க்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Cruso said:

சுமந்திரன் விலகினால் தீரும் என்றால் சுமந்திரன் வருவதட்கு முன்னர் ஏன் தீர்க்கப்படவில்லை.

அப்படியா
சுமத்திரன் அரசியலில் இருந்து விலகாதவரை குழப்பம்தான் என்று சொன்னதை வைத்து அவர் வருவதற்கு முன்பு தமிழரசுக் கட்சி சிறப்புடன் தமிழர்களுக்கு சேவை செய்தது என்று நினைத்துவிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அப்படியா
சுமத்திரன் அரசியலில் இருந்து விலகாதவரை குழப்பம்தான் என்று சொன்னதை வைத்து அவர் வருவதற்கு முன்பு தமிழரசுக் கட்சி சிறப்புடன் தமிழர்களுக்கு சேவை செய்தது என்று நினைத்துவிட்டேன்.

ஏற்கனவே பழையசோறு பார்சல்  புலிகள் இல்லாத நேரம் கூட்டமைப்பு ஒழுங்கு படுத்தும் என்று நினைத்து  உருவாக்கி இருந்தார்கள் இதை ரணில் மோப்பம் பிடித்து சிங்கலத்துக்கு  கழுவும் சுமத்தை உள்ளே பின்கதவால் அனுப்பி இருந்தார்கள் வந்த வேலை முடிந்து விட்டது  இனி வருவது போனஸ் தான் சும்முக்கு .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

 

 

முதலில் அந்த வெக்கை நாட்டுக்குள் ஏனையா கோட்டும் சூட்டும் யாரை எமாத்த ? இந்த உடுப்புகள் ? ரணிலையும் தான் சேர்த்து கேள்வி கேட்கிறேன் ?  மக்கள் முன் தாங்கள் படித்தவர்கள் என்று காட்டதானே இந்த வேஷம் ?

2 hours ago, nunavilan said:

 

 

இனப்பிரச்சனைக்கு தீர்வு இல்லா விட்டால் இலங்கை ஆதால பாதாளத்துக்குள் இதை உருவாக்கியவர்கள் வேறு யாரோ ஆனால் இந்த சிங்களத்துக்கு கழுvi விடும் சுமத்திரன் ரணில் ஆசியுடன் சொல்வதுதான் கேவலம் .

  • கருத்துக்கள உறவுகள்

குறைந்தது யோசப் பரராஜ சிங்கமாக தன்னும் வாழ்ந்து காட்டனும் சுமத்திரன் இன ஆசை பிடித்த நபரல்ல பண ஆசை பிடித்த நபர் .இப்படியானவர்கள் தமிழ் இனத்தில் அதுவும் அரசியலில் இருப்பது தமிழ் இனத்துக்கு பெரும் ஆபத்தானது !!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

குறைந்தது யோசப் பரராஜ சிங்கமாக தன்னும் வாழ்ந்து காட்டனும் சுமத்திரன் இன ஆசை பிடித்த நபரல்ல பண ஆசை பிடித்த நபர் .இப்படியானவர்கள் தமிழ் இனத்தில் அதுவும் அரசியலில் இருப்பது தமிழ் இனத்துக்கு பெரும் ஆபத்தானது !!!!!!!!

பிள்ளையானோட கதைச்சு பார்ப்பமோ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

அப்படியா
சுமத்திரன் அரசியலில் இருந்து விலகாதவரை குழப்பம்தான் என்று சொன்னதை வைத்து அவர் வருவதற்கு முன்பு தமிழரசுக் கட்சி சிறப்புடன் தமிழர்களுக்கு சேவை செய்தது என்று நினைத்துவிட்டேன்.

சுமந்திரன் வந்து ஏறக்குறைய 10 வருடங்கள்தான் ஆகுது. சாம் சும் கூடடணி அதிக காலம் இருக்கவில்லை. இப்போது அதுவும் முடிந்து விட்ட்து.

இனி ஈழம் கிடைக்கும் எண்டு பெருமால்களைப்போல கனவு காணலாம். அது பகல் கனவா இரவு கனவா என்பதை  கனவு காண்பவர்கள் தீர்மானிக்க வேண்டும்.

இந பிரச்சினை தொடங்கி எத்தனையோ தசாப்தம் கடந்து விட்ட்து. எத்தனையோ கோட் சூட் அணிந்த தலைவர்கள், வெள்ளையும் சொள்ளையும், அணிந்த தலைவர்கள், எவருமே தோற்கடிக்க முடியாது என்று கூறப்படட ராணுவ அமைப்புக்கள் எல்லாம் இருந்தன. என்ன நடந்தது? தமிழ் மக்கள் இனப்பிரச்சினை தொடங்கும் முதல் உள்ள நிலையிலும் கீழேதான் இருக்கிறார்கள்.

வெளி நாடுகளில் வசதியாக இருப்பவர்களுக்கு இது புரிவதட்கு காரணம் , ஞாயம் எதுவும் இல்லை. உண்மையை , கள நிலவரத்தை எழுதும்போது சில பேருக்கு அது சஞ்சலமாக இருக்கலாம். எனவே உண்மை கசக்கத்தான் செய்யும். 

6 hours ago, ஈழப்பிரியன் said:

 

உடைச்சுக்கிட்டு ஒட்டிக்கவா?

ஒட்டிக்கிட்டு உடைச்சுக்கவா?

மண் பானை உடைந்து விட்ட்து. ஒடடவா முடியும் ?

  • கருத்துக்கள உறவுகள்

சும் 2010 இல் தேசியப்பட்டியல் மூலம் அரசியலுக்கு வந்தார். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Cruso said:

இனி ஈழம் கிடைக்கும் எண்டு பெருமால்களைப்போல கனவு காணலாம். அது பகல் கனவா இரவு கனவா என்பதை  கனவு காண்பவர்கள் தீர்மானிக்க வேண்டும்.

ஈழம் என்ன கிடைக்கவேண்டிய தீர்வே கிடைக்கப்போவதில்லை கண்ணுக்கு எட்டிய தூரம் மட்டும் கானல் நீர்தான் தெரியுது .உங்கள் சுமத்திரன் தமிழருக்கு அரசியல் செய்யுறன் என்று எதிர் காலத்தில் குழப்ப அரசியல் தான் வழக்கம்போல செய்ய போறார் அதனால் அங்குள்ள் மக்கள் மேலும் மேலும் மோசமாக பாதிக்கப்பட போகிறார்கள் . 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பெருமாள் said:

குறைந்தது யோசப் பரராஜ சிங்கமாக தன்னும் வாழ்ந்து காட்டனும் சுமத்திரன் இன ஆசை பிடித்த நபரல்ல பண ஆசை பிடித்த நபர் .இப்படியானவர்கள் தமிழ் இனத்தில் அதுவும் அரசியலில் இருப்பது தமிழ் இனத்துக்கு பெரும் ஆபத்தானது !!!!!!!!

கருணா குழுவால் சுட்டுக் கொல்லப் பட்ட யோசப் எம்.பி போல வாழ வேண்டுமென்று ஒருவர் சொல்கிறார்

பெருமாளாவது வைச்சுக் கொண்டு வஞ்சகம் செய்யும் ஆளல்ல, அவரது ஆழம், யோசிப்பு எல்லோரும் அறிந்தது தான்!

நீங்களோ அதற்கு சிரிப்புக் குறியும் போட்டு, கீழே இருக்கும் கருத்தை மிகவும் சாதாரணமாக எழுதியிருக்கிறீர்கள்.

15 hours ago, ஈழப்பிரியன் said:

பிள்ளையானோட கதைச்சு பார்ப்பமோ?

எப்படி முடிகிறது ஒரு அரசியல் படுகொலையை நகைச்சுவையாக்க? பெரியோர், மூத்தோர் என்ற அடையாளத்தைத் தாங்கியிருக்கிறீர்கள், அதற்கேற்ப நிதானித்துக் கருத்தெழுதாமல் இப்படி இருக்கிறீர்கள்??

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

ஈழம் என்ன கிடைக்கவேண்டிய தீர்வே கிடைக்கப்போவதில்லை கண்ணுக்கு எட்டிய தூரம் மட்டும் கானல் நீர்தான் தெரியுது .உங்கள் சுமத்திரன் தமிழருக்கு அரசியல் செய்யுறன் என்று எதிர் காலத்தில் குழப்ப அரசியல் தான் வழக்கம்போல செய்ய போறார் அதனால் அங்குள்ள் மக்கள் மேலும் மேலும் மோசமாக பாதிக்கப்பட போகிறார்கள் . 

நீங்கள் சொல்லுவது சரி. சங்கிகள் இருக்கும் வரைக்கும் எல்லாமே குழப்பம்தான். நாங்கள் எந்த தீர்வையும் எதிர்பார்க்கவில்லை. எங்களை சும்மா இருக்க விடடாள் போதும். பிச்சை வேணாம் நாயை பிடி. 

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Cruso said:

நீங்கள் சொல்லுவது சரி. சங்கிகள் இருக்கும் வரைக்கும் எல்லாமே குழப்பம்தான். நாங்கள் எந்த தீர்வையும் எதிர்பார்க்கவில்லை. எங்களை சும்மா இருக்க விடடாள் போதும். பிச்சை வேணாம் நாயை பிடி. 

அதுக்கு உங்க ஆள் சும்மா இருக்கணுமே கள்ளு குடித்த ..... போல் சுவர் ஏறி கடிப்பாரே ஏனென்றால் அவருக்கு கொடுக்கபட்ட வேலை அது எல்லாரையும் குழப்புவது .

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

அதுக்கு உங்க ஆள் சும்மா இருக்கணுமே கள்ளு குடித்த ..... போல் சுவர் ஏறி கடிப்பாரே ஏனென்றால் அவருக்கு கொடுக்கபட்ட வேலை அது எல்லாரையும் குழப்புவது .

கஞ்சா அடித்து, கசிப்பு குடித்து போட்டு திரியும் சங்கிகளை விட கள்ளு அடித்துப்போட்டு திரிவது மேல். 

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Cruso said:

கஞ்சா அடித்து, கசிப்பு குடித்து போட்டு திரியும் சங்கிகளை விட கள்ளு அடித்துப்போட்டு திரிவது மேல். 

நான் சொல்வது ஒரு போதும் உங்களுக்கு புரியபோவதில்லை நீங்க சொல்வது எனக்கு புரிந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் நடக்க போவதில்லை காரணம் வேறு ஒரு தொழில் நுட்ப்ப பதிவில் அதை பற்றி பதிகிறேன் .தற்போது லண்டன் நேரம் 2.௦9 கோசானையும் நாதமுணியும்  ஒன்றாக காணமல் போகிறார்கள் என்று பல யாழ்கள நண்பர்கள் கேள்விக்கு முதலில் விடையை கண்டு பிடியுங்க ? நாளை சந்திப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

நான் சொல்வது ஒரு போதும் உங்களுக்கு புரியபோவதில்லை நீங்க சொல்வது எனக்கு புரிந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் நடக்க போவதில்லை காரணம் வேறு ஒரு தொழில் நுட்ப்ப பதிவில் அதை பற்றி பதிகிறேன் .தற்போது லண்டன் நேரம் 2.௦9 கோசானையும் நாதமுணியும்  ஒன்றாக காணமல் போகிறார்கள் என்று பல யாழ்கள நண்பர்கள் கேள்விக்கு முதலில் விடையை கண்டு பிடியுங்க ? நாளை சந்திப்போம்.

நீங்கள் எழுதுவது புரிகின்றது. நான் எழுதுவதுதான் உங்களுக்கு புரிவதில்லை. ஒன்று நீங்கள் லண்டனில் இருக்கிறீர்கள், மற்றது உங்களுக்கு இங்கு கருது எழுதும்பொழுது எந்த நாளும் தூக்க மயக்கம்.

மடறது அங்கு இங்கெல்லாம் தேடி வாசிக்க முடியாது. எதுவென்றாலும் இங்கு பதிவு செய்யுங்கள். எதுக்கும் தூங்கி எழுவது நல்லம். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.