Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

முயற்ச்சிக்கலாம்,.. ஆனால் அவ்வளவு பெட்டியும் உள்ளே இழுக்கப்படாது விட்டால்  ......உங்களால் சுமத்திரனை எழுப்பி உயிர்  உடன் தர முடியுமா??? 🤣. விடை எதிர்பார்க்கப்படுகிறது 

பேயால் அவ்வளவு  பெட்டியும் இழுக்க முடியாது என்று தமிழ் பட கதை உள்ளது ஆகவே உங்கள் சும்முக்கு பண ஆசை இருந்தாலும் அடுத்த பிறவிக்கு இப்பவே பணம் தேடுகிறார் என்பது உண்மையாகிறது என்று எடுத்து கொள்ளலாம் .காணுமா 😄

  • Replies 379
  • Views 35.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • nedukkalapoovan
    nedukkalapoovan

    அப்போ உங்கள் பார்வையில் கொலை செய்யப்பட்டவர்கள்.. நீதி நியாயவான்கள். அப்பாவிகளின் கொலைகளில் சவாரியே செய்யவில்லை. ஒரு இனத்தையே படுகொலை செய்தவன்கள் எல்லாம் வாழுறாங்கள் இன்னும். அதனால்.. இந்த தத்துவா

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    ஒருவருக்கு புலிகளை வசைபாடவும் அவர்களது ஜனநாயக விரோத செயற்பாடுகளை வாரியிறைக்கவும் வடிகால் ஒன்றும் கிடைத்த மகிழ்ச்சி. இன்னும் இருவருக்கு புலியெதிர்ப்பு என்பதற்கூடாக உள்நுழைந்து பேரினவாதத்தின் திட்டத்தை

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பெருமாள் said:

உங்கடை சகுனி எப்படி என்றால் ஏதோ ஒரு காரணத்தால் சுமத்திரன்  இறந்து விட்டார் சிமெந்து பூசி நன்கு காய்ந்து விட்டது  பத்து வெறும் பெட்டியில் பத்து மில்லியன் டாலர் என்று எழுதி அவரின் சவத்து மேடையில் வையிங்க அவ்வளவு பெட்டியும் உள்ளே இழுக்கபட்டு விடும் முடிந்தால் சுமதிரனை சாக விட்டு பாருங்க நான் சொன்னது உண்மையாகும் .😀😀

நான் சுமத்திரனை மற்றவர்கள் அவரைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை வைத்து அணுகாமல் சுமத்திரன் தன் வாயால் என்ன தான் சொல்கிறார் என்பதை அவர் அரசியலுக்கு வந்த காலம் முதல் கொடுத்த பத்திரிகை, தொலைக்காட்சிப் பேட்டிகள் மூலம் மட்டுமே அணுகியிருந்தேன். 

காய்தல் உவர்தல் இன்றி நான் கவனித்ததில் என்னைப் பொறுத்த வரையில் சுமந்திரன்

1) தமிழ் மக்களின் உரிமை விடயத்தில் இப்பொழுது இருப்பதை விட ஒரு படி ஏனும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும்  என்று விரும்புபவர்

2) இப்போதைக்கு அடைய முடியாத தமிழ்க் கனவைக் காண்பவர் அல்லர். 

3) லிபரல் கொள்கை கொண்டவர், வலது சாரி மனநிலை இல்லாதவர் ஆகவே one way thinking இல்லாதவர். Critical thinking ability நன்கே உண்டு 

4) தமிழனாக உணரும் அதே நேரம் இலங்கையனாகவும் உணர்கின்றார்

5)இந்திய எதிர்ப்பு மனநிலை உள்ளவர்

6) மேற்குக்கு விசுவாசமானவர்

7) காசுக்காக அவர் அரசியல் செய்யவில்லை

8) சட்டம் தெரிந்து இருப்பதால் உள்குத்து வேலைகளை சட்டப்படி எப்படி செய்வது என்று தெரியும்

9) சுமத்திரனின் பலம் தெளிவான அவரின் விளங்கப்படுத்தும் திறமை

10) இவர் செய்த தவறு இனப்படுகொலை விசாரணை விஷயத்தில் இலங்கை அரசு தப்பிக்க உதவியாய் இருந்தது ( அதையும் சட்ட வியாக்கியானம் செய்து தான் தவறு செய்யவில்லை என்று விளங்கப்படுத்தி இருப்பார் 😭😭)

11) தி மு க அனுதாபி 

Edited by பகிடி

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பகிடி said:

நான் சுமத்திரனை மற்றவர்கள் அவரைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை வைத்து அணுகாமல் சுமத்திரன் தன் வாயால் என்ன தான் சொல்கிறார் என்பதை அவர் அரசியலுக்கு வந்த காலம் முதல் கொடுத்த பத்திரிகைப், தொலைக்காட்சி பேட்டிகள் மூலம் மட்டுமே அணுகியிருந்தேன். 

காய்தல் உவர்தல் இன்றி நான் கவனித்ததில் என்னைப் பொறுத்த வரையில் சுமந்திரன்

1) தமிழ் மக்களுளின் உரிமை விடயத்தில் இப்பொழுது இருப்பதை விட ஒரு படி ஏனும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும்  என்று விரும்புபவர்

2) இப்போதைக்கு அடைய முடியாத தமிழ்க் கனவைக் காண்பவர் அல்லர். கொஞ்சம் முன்னேற்றம் இப்போதைக்கு காணும் என்று நம்புகின்றார் 

3) லிபரல் கொள்கை கொண்டவர், வலது சாரி மனநிலை இல்லாதவர், one way மனநிலை இல்லாதவர்.

4) தமிழனாக உணரும் அதே நேரம் இலங்கையனாகவும் உணர்கின்றார்

5)இந்திய எதிர்ப்பு மனநிலை உள்ளவர்

6) மேற்குக்கு விசுவாசமானவர்

7) காசுக்காக அவர் அரசியல் செய்யவில்லை

😎 சட்டம் தெரிந்து இருப்பதால் உள்குத்து வேலைகளை சட்டப்படி எப்படி செய்வது என்று தெரியும்

9) சுமத்திரனின் பலம் தெளிவான அவரின் விளங்கப்படுத்தும் திறமை

10) செய்த தவறு இனப்படுகொலை விசாரணை விஷயத்தில் இலங்கை அரசு தப்பிக்க உதவியாய் இருந்தது ( அதையும் சட்ட வியாக்கியானம் செய்து தான் தவறு செய்யவில்லை என்று விளங்கப்படுத்தி இருப்பார் 😭😭)

11) தி மு க அனுதாபி 

பகிடிக்கு எழுதியது உண்மையாக்க வேணாம் பாஸ் .

😄

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பெருமாள் said:

இன அழிப்பு ஒன்று நடக்கவேயில்லை என்று ஓடி ஓடி உலக நாடுகளுக்குள் உள்ள து துவர்களுக்குப் சொன்னார் இல்லையா அந்த ஓடியோ வெகு விரைவில இங்கு யாழுக்கும்  வரும் பொறுங்க .

இவர் யாரை கேட்டு இனவழிப்பு இல்லை என்று சொன்னார் ?

பெர்மாள் பிச்சை,

ஒருவேளை சுமந்திரன் தலைமை தாங்கும் நிலை வந்தால் புலிகளின் பெயரில் வயிறு வளர்க்கும் கூட்டத்தினரின் சொற்கேட்டு நடக்கமாட்டார் என்பதுதான் உந்த சும் எதிர்ப்புக் கூட்டத்தின் உண்மையான பயம்.  இந்தப் பயத்தை மறைப்பதற்கு இவர்கள் பாவிக்கும் கேடயம் டமில்த் தேசியம். அம்புட்டுதே. 

(யாழ் களத்தினர் எவரையும்  இங்கே குறிப்பிடவில்லை🙏)

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

உண்மை, இவர்கள் உண்மையிலேயே புலிகளுக்கும் விசுவாசமாய் இருந்தார்களோ என்று பார்த்தால் அங்கும் அந்தோ பரிதாபமே 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பகிடி said:

உண்மை, இவர்கள் உண்மையிலேயே புலிகளுக்கும் விசுவாசமாய் இருந்தார்களோ என்று பார்த்தால் அங்கும் அந்தோ பரிதாபமே 

புலிகளுடன் எல்லாமே போயிற்று. 

☹️

  • கருத்துக்கள உறவுகள்

பலஸ்தீனத்திற்காக பல ஆயுத குழுக்கள்  உருவாகி அழிந்து போகின்றது..பேச்சுவார்த்தை என  பல நிகழ்வுகள் நடை பெறுகிறது ...PLO போய் காலங்கள் கடந்தும் பலஸ்தீனம் என்ற கருத்தியல் இன்னும் நிற்கின்றது அது போல புலிகள் போனாலும் தமிழ் தேசியம் நிலைத்து நிற்க்கும் ...தமிழ் தேசியம் குறும் தேசியம் என சிலர் புலம்பி கொண்டிருப்பார்கள்  அது அவர்கள் சுதந்திரம் ...

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

சகுனிக்கும் புத்திசாலிக்கும் வித்தியாசம் தெரிந்தால் சொல்லுங்க ?

*** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம்த்தனம் பண்ணினாலும் நாசூக்காகாய்ப் பண்ணிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, புலவர் said:

*** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம்த்தனம் பண்ணினாலும் நாசூக்காகாய்ப் பண்ணிறார்.

திருக்குறள்-822
கூடா நட்பு:

இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்

மனம்போல வேறு படும்.  

கலைஞர் விளக்கம்:

உற்றாராக இல்லாமல் உற்றார்போல நடிப்பவர்களின் நட்பு, மகளிருக்குரிய நற்பண்பு இல்லாமல் அப்பண்பு உள்ளவர் போல நடிக்கும் விலை மகளிரின் மனம்போல உள்ளொன்றும் புறமொன்றுமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

பெர்மாள் பிச்சை,

ஒருவேளை சுமந்திரன் தலைமை தாங்கும் நிலை வந்தால் புலிகளின் பெயரில் வயிறு வளர்க்கும் கூட்டத்தினரின் சொற்கேட்டு நடக்கமாட்டார் என்பதுதான் உந்த சும் எதிர்ப்புக் கூட்டத்தின் உண்மையான பயம்.  இந்தப் பயத்தை மறைப்பதற்கு இவர்கள் பாவிக்கும் கேடயம் டமில்த் தேசியம். அம்புட்டுதே. 

(யாழ் களத்தினர் எவரையும்  இங்கே குறிப்பிடவில்லை🙏)

அப்படியானால் நீங்கள் சுமந்திரன் தலைமை தாங்குவதை வரவேற்கிறீர்கள்???

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, விசுகு said:

அப்படியானால் நீங்கள் சுமந்திரன் தலைமை தாங்குவதை வரவேற்கிறீர்கள்???

 நிலத்தில் உள்ள மக்களுக்கு ஒப்பீட்டளவில் வேறெந்த அசியலாளர்களை விடவும் சும்மால் அதிக நன்மை உண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

 நிலத்தில் உள்ள மக்களுக்கு ஒப்பீட்டளவில் வேறெந்த அசியலாளர்களை விடவும் சும்மால் அதிக நன்மை உண்டு. 

அதை நேரடியாக சொல்ல தயக்கம்.

அதே மதில் மேல்???

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விசுகு said:

அதை நேரடியாக சொல்ல தயக்கம்.

அதே மதில் மேல்???

இத்தனை நாட்களாக கிறுக்கியதில் இதுதான் உங்கள் அவதானிப்பு என்றால் உங்கள் வாயில்  வசம்பை வைத்து தேய்க்க 🤣

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kapithan said:

இத்தனை நாட்களாக கிறுக்கியதில் இதுதான் உங்கள் அவதானிப்பு என்றால் உங்கள் வாயில்  வசம்பை வைத்து தேய்க்க 🤣

மீண்டும் மீண்டும் தடியை எடுக்க தூண்டுவது தாங்கள் தான் 😭

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

 நிலத்தில் உள்ள மக்களுக்கு ஒப்பீட்டளவில் வேறெந்த அசியலாளர்களை விடவும் சும்மால் அதிக நன்மை உண்டு. 

இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் திறமைசாலிகள்……………… தான்   வெவ்வேறு துறைகளில்      அவர்களின் திறமைகள்  வெளியோ தெரிவதற்க்கு அல்லது வளர்ச்சி அடைய. சந்தர்ப்பங்கள். கிடைக்க வேண்டும்,..கொடுக்கப்படவேண்டும்.  ஆனால்   இந்த தமிழ் தலைவர்கள் திறமையுள்ள. தமிழ் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை மறுக்கிறார்கள்,....தட்டி பறிக்கிறார்கள்   என்னை விட வேறு ஆள்கள் இல்லை என்பது நகைப்பிக்கிடம்    சிறந்த பொறியியலாளர்களுண்டு  சிறந்த மருத்துவர்கள் உண்டு” சிறந்த ஆசிரியர்கள் உண்டு”,.......சிறந்த அரசியல்வாதிகள் மட்டுமே இல்லாமல் போனார்கள் ...காரணம் என்ன?? யார் காரணம்?? சுமத்திரன்,....மாவை,   .... போன்றவர்கள் தான்     

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kandiah57 said:

 ஆனால்   இந்த தமிழ் தலைவர்கள் திறமையுள்ள. தமிழ் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை மறுக்கிறார்கள்,....தட்டி பறிக்கிறார்கள்   என்னை விட வேறு ஆள்கள் இல்லை என்பது நகைப்பிக்கிடம்    சிறந்த பொறியியலாளர்களுண்டு  சிறந்த மருத்துவர்கள் உண்டு” சிறந்த ஆசிரியர்கள் உண்டு”,.......சிறந்த அரசியல்வாதிகள் மட்டுமே இல்லாமல் போனார்கள் ...காரணம் என்ன?? யார் காரணம்?? சுமத்திரன்,....மாவை,   .... போன்றவர்கள் தான்     

இதைக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் 😂(நெடுக்கரிடம் இப்படி முன்வரக் காத்திருக்கும் அரசியல் ஆர்வமுள்ள, ஆனால் தடுக்கப் படும் அடுத்த தலைமுறை யார் எனக் கேட்டேன், பதில் கிடைக்கவில்லை. எனவே உங்களிடம் கேட்கிறேன்)

மாவை வாரிசு அரசியல் செய்யும் சுய நல அரசியல் வாதி. சுமந்திரன் இப்படி இளையோரை அரசியலில் முன்னேற விடாமல் தடுத்த ஆதாரம், செய்திகள் எவையாவது உண்டா? மாறாக, அம்பிகா சற்குணநாதனை பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் முகமாக வேட்பாளராக்க முயன்ற போது, அவரை இணையத்தில் பாலியல் ரீதியாகக் கூட திட்டி ஒதுங்க வைத்தது சுமந்திரனின் எதிராளிகள். இதற்கு நிறைய ஆதாரங்கள் யாழ் களத்திலேயே செய்திகளாக இருக்கின்றன.

(இன்னொரு விடயம், சுமந்திரன் தமிழ் தேசிய அரசியலுக்குக் கொண்டு வந்த இளையவரான சாணக்கியனையும் "அவர் தமிழரல்ல, கிறிஸ்தவ மதம் மாறி" என்று திட்டியவர்கள் இந்த திரியில் நிற்கிறார்கள்!)

எனவே, எப்படி சுமந்திரன் இளையோரைத் தடுக்கிறார் என விளக்குங்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Kandiah57 said:

இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் திறமைசாலிகள்……………… தான்   வெவ்வேறு துறைகளில்      அவர்களின் திறமைகள்  வெளியோ தெரிவதற்க்கு அல்லது வளர்ச்சி அடைய. சந்தர்ப்பங்கள். கிடைக்க வேண்டும்,..கொடுக்கப்படவேண்டும்.  ஆனால்   இந்த தமிழ் தலைவர்கள் திறமையுள்ள. தமிழ் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை மறுக்கிறார்கள்,....தட்டி பறிக்கிறார்கள்   என்னை விட வேறு ஆள்கள் இல்லை என்பது நகைப்பிக்கிடம்    சிறந்த பொறியியலாளர்களுண்டு  சிறந்த மருத்துவர்கள் உண்டு” சிறந்த ஆசிரியர்கள் உண்டு”,.......சிறந்த அரசியல்வாதிகள் மட்டுமே இல்லாமல் போனார்கள் ...காரணம் என்ன?? யார் காரணம்?? சுமத்திரன்,....மாவை,   .... போன்றவர்கள் தான்     

சாரி Kands, 

"சரியான வாய்ப்பு கிடைத்திருக்கும் பட்சத்தில் தாங்கள் ஒரு Albert Einstein ஆகவோ அல்லது Orville Wright and Wilbur Wright, ஆக வந்திருப்பேன் என்கிறீர்கள் " அப்படித்தானே? 

1 hour ago, விசுகு said:

மீண்டும் மீண்டும் தடியை எடுக்க தூண்டுவது தாங்கள் தான் 😭

ஒரு நகைச்சுவையை இரசிக்கத் தெரியாத ஆளா விசுகர்? 😩

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Kapithan said:

ஒரு நகைச்சுவையை இரசிக்கத் தெரியாத ஆளா விசுகர்? 

இதையே நான் சொன்னால் உங்கட வயதுக்கு இது சரியில்லை??😅

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Justin said:

எனவே, எப்படி சுமந்திரன் இளையோரைத் தடுக்கிறார் என விளக்குங்கள்! 

முதலில் ஒன்றை தெரிவித்துக்கொள்கிறேன்  நான் அறிவில் சிறியவன்,உங்களை விட அறிவில் சிறியவன் நான் சரி என்று நினைப்பது உங்களுக்கு பிழையாக. தெரியும்  இது சாதாரணமானது  

ஜேர்மனியில் ஒவ்வொரு கட்சியும். ஒவ்வொரு கிராமங்களிலும்  கட்சியின் கிளைகளை நிறுவிக்கொண்டு அங்குள்ள இளைஞர்களுக்கு தலைவர் பொருளாளர் செயலாளர்  அங்கத்துவம்,.போன்ற பதவிகளை கொடுத்து வைத்து உள்ளது   ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும்  இரண்டு மூன்று பேர்  தேசிய மாகாநாட்டில் பங்கு  பற்றி  வாக்கு போட்டு தலைவர் பொருளாளர்  செயலாளர்..........போன்றவர்களை தெரிவு செய்வார்கள்   Berlin   Düsseldorf  Dortmund, போன்ற மாநகரங்களில். நடக்கும்  கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வது உண்டு  இந்த கிராமங்களின். தலைவர்கள் தான்  நாளடைவில்  நகரம் மாநிலம் நாட்டு  தலைவர்களாக  பதவியேற்று இருக்கிறார்கள்   அனேகமாக இங்கே மாநிலங்களில் முதலமைச்சராக இருந்தவர்கள் தான்  பிரதமர் பதவியேற்று இருக்கிறார்கள்  தற்போதைய பிரதமர் கூட  ஒரு கிராமத்தில் சாதாரண அங்கத்துவம் வகித்து. மாநில முதல்வர் மத்திய அமைச்சர்  நாட்டின் பிரதமர்     பதவி வகிக்கிறார்   

நான் அறிந்த வகையில்  எவருமே திடீரென ஒடிவந்து  மாநில அரசில் சரி  மத்திய அரசில் சரி  அல்லது எந்தவொரு அரசியல் கட்சியில் சரி. பதவியேற்று கொள்ளவில்லை  அது முடியாத காரியம்   கிராமங்களில் இருந்து படிப்படியாக வளர்ச்சியடைந்து  அனுபவங்களை பெற்று  மாநில மத்திய அரசுகளில். பதவி வகிக்கிறார்கள்  65 வயதுக்கு மேல்  ஐனதிபதி  பதவி தவிர  மற்ற பதவிகளில்  இருப்பது இல்லை   தங்களாகவே வெளியோறி விடுவார்கள் 

தமிழரசு  கட்சிக்கு கிராமங்களில் கிளைகள். உண்டா?? இல்லையென்றால் ஏன் நிறுவ இல்லை???  

யாழ்ப்பாணம் என்ற மாநகருக்கு தமிழரசு கட்சியின் தலைவர் பொருளாளர் செயலாளர்   யார்??? அங்கத்துவம் எத்தனை பேர உண்டு”?? 

கைதடி  யாழ்ப்பாணத்தில். பெரிய கிராமம்  அங்கே எந்த தமிழ் கட்சியின் கிளைகளுமில்லை   

ஒவ்வொரு கிராமத்திலும் கிளைகளை நிறுவும்போது  அங்கே உள்ள இளைஞர்களுக்கு பதவிகள் வழங்க வேண்டும் பொறுப்பு வழங்க வேண்டும்   இவற்றை தவிர்ப்பது யார்  ???

எனது அப்பா சொன்னார்  இங்கே பார் படிக்கும் போது  வேலைகளை பழக வேண்டும்  அப்போ தான்  எனக்கு பின் இந்த தோட்டம் துரவுகளை  பார்க்க முடியும்  உனக்கு ஒன்றும் தெரியாது விடில் எல்லாம் சீராழிந்து போகும்   அதாவது அழிவடையும்  நாங்கள் ஒரு சிறு குடும்பம்  

இந்த பெரிய தமிழ் அமைப்பு தமிழரசு கட்சி  அழிந்து போகாமல் இருக்க  என்ன செய்துள்ளனர்??? அல்லது வளர்ச்சியடைய என்ன திட்டங்கள் உண்டு?? 

45 minutes ago, Kapithan said:

சரியான வாய்ப்பு கிடைத்திருக்கும் பட்சத்தில் தாங்கள் ஒரு Albert Einstein ஆகவோ அல்லது Orville Wright and Wilbur Wright, ஆக வந்திருப்பேன் என்கிறீர்கள் " அப்படித்தானே? 

நீங்கள் வாய்ப்புகள் தட்டி பறிக்கப்படுகிறது என்பதை உங்களை அறியாமல் ஒத்துக் கொண்டுள்ளீர்கள் நன்றி  இப்படி தலைவர் பிரபாகரன் நினைத்து இருந்தால் 30 ஆண்டுகள் போராடி இருக்க முடியாது  

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kandiah57 said:

முதலில் ஒன்றை தெரிவித்துக்கொள்கிறேன்  நான் அறிவில் சிறியவன்,உங்களை விட அறிவில் சிறியவன் நான் சரி என்று நினைப்பது உங்களுக்கு பிழையாக. தெரியும்  இது சாதாரணமானது  

ஜேர்மனியில் ஒவ்வொரு கட்சியும். ஒவ்வொரு கிராமங்களிலும்  கட்சியின் கிளைகளை நிறுவிக்கொண்டு அங்குள்ள இளைஞர்களுக்கு தலைவர் பொருளாளர் செயலாளர்  அங்கத்துவம்,.போன்ற பதவிகளை கொடுத்து வைத்து உள்ளது   ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும்  இரண்டு மூன்று பேர்  தேசிய மாகாநாட்டில் பங்கு  பற்றி  வாக்கு போட்டு தலைவர் பொருளாளர்  செயலாளர்..........போன்றவர்களை தெரிவு செய்வார்கள்   Berlin   Düsseldorf  Dortmund, போன்ற மாநகரங்களில். நடக்கும்  கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வது உண்டு  இந்த கிராமங்களின். தலைவர்கள் தான்  நாளடைவில்  நகரம் மாநிலம் நாட்டு  தலைவர்களாக  பதவியேற்று இருக்கிறார்கள்   அனேகமாக இங்கே மாநிலங்களில் முதலமைச்சராக இருந்தவர்கள் தான்  பிரதமர் பதவியேற்று இருக்கிறார்கள்  தற்போதைய பிரதமர் கூட  ஒரு கிராமத்தில் சாதாரண அங்கத்துவம் வகித்து. மாநில முதல்வர் மத்திய அமைச்சர்  நாட்டின் பிரதமர்     பதவி வகிக்கிறார்   

நான் அறிந்த வகையில்  எவருமே திடீரென ஒடிவந்து  மாநில அரசில் சரி  மத்திய அரசில் சரி  அல்லது எந்தவொரு அரசியல் கட்சியில் சரி. பதவியேற்று கொள்ளவில்லை  அது முடியாத காரியம்   கிராமங்களில் இருந்து படிப்படியாக வளர்ச்சியடைந்து  அனுபவங்களை பெற்று  மாநில மத்திய அரசுகளில். பதவி வகிக்கிறார்கள்  65 வயதுக்கு மேல்  ஐனதிபதி  பதவி தவிர  மற்ற பதவிகளில்  இருப்பது இல்லை   தங்களாகவே வெளியோறி விடுவார்கள் 

தமிழரசு  கட்சிக்கு கிராமங்களில் கிளைகள். உண்டா?? இல்லையென்றால் ஏன் நிறுவ இல்லை???  

யாழ்ப்பாணம் என்ற மாநகருக்கு தமிழரசு கட்சியின் தலைவர் பொருளாளர் செயலாளர்   யார்??? அங்கத்துவம் எத்தனை பேர உண்டு”?? 

கைதடி  யாழ்ப்பாணத்தில். பெரிய கிராமம்  அங்கே எந்த தமிழ் கட்சியின் கிளைகளுமில்லை   

ஒவ்வொரு கிராமத்திலும் கிளைகளை நிறுவும்போது  அங்கே உள்ள இளைஞர்களுக்கு பதவிகள் வழங்க வேண்டும் பொறுப்பு வழங்க வேண்டும்   இவற்றை தவிர்ப்பது யார்  ???

எனது அப்பா சொன்னார்  இங்கே பார் படிக்கும் போது  வேலைகளை பழக வேண்டும்  அப்போ தான்  எனக்கு பின் இந்த தோட்டம் துரவுகளை  பார்க்க முடியும்  உனக்கு ஒன்றும் தெரியாது விடில் எல்லாம் சீராழிந்து போகும்   அதாவது அழிவடையும்  நாங்கள் ஒரு சிறு குடும்பம்  

இந்த பெரிய தமிழ் அமைப்பு தமிழரசு கட்சி  அழிந்து போகாமல் இருக்க  என்ன செய்துள்ளனர்??? அல்லது வளர்ச்சியடைய என்ன திட்டங்கள் உண்டு?? 

நீங்கள் வாய்ப்புகள் தட்டி பறிக்கப்படுகிறது என்பதை உங்களை அறியாமல் ஒத்துக் கொண்டுள்ளீர்கள் நன்றி  இப்படி தலைவர் பிரபாகரன் நினைத்து இருந்தால் 30 ஆண்டுகள் போராடி இருக்க முடியாது  

என்னுடைய கேள்வி: சுமந்திரன் இளையோரை முன்வர விடாமல் தடுத்தது எப்படி? 

இவ்வளவு நீளமாக எழுதியிருக்கிறீர்கள், இதில் பதில் இருக்கிறதா? அல்லது சும்மா எழுந்தமானமாக சொன்னதை padding செய்திருக்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

@Justin  @Kandiah57  எனது பார்வையில்,   கடந்த 40 ஆண்டுகளாக சுயமாக சிந்திக்கும் திறமையான அரசியல்வாதிகள் தமிழ் அரசியல் பரப்பில் விரும்பதகாதவர்களாகவே உள்ளனர்.   அவ்வாறான அரசியல்வாதிகள், கல்விமான்கள் பலர் அரச ஆயுதப்படையினராலோ, தமிழ் போராளிக்குழுவினர்களாலேயோ  படுகொலை செய்யப்பட்ட வரலாறே உள்ளது.  

2009 ன் பின்னர் கூட சுயமாக சிந்திக்கும்  அரசியல்வாதிகள் வெறுப்புடன் பார்க்கப்படுபவர்களாகவே  உள்ளனர்.  அவ்வாறாக சுயமாக சிந்திக்கும்  அரசியல்வாதிகளை வளரவிட்டால் அவர்கள் கடந்த கால வரலாற்றை நேர்மையுடன்  அணுகி தவறுகளை கேள்விகுட்படுத்துவார்கள் என்ற அச்சம் பலரை வாட்டுவதால் இந்த நிலை தொடர்கிறது.  

இந்த நிலை தொடரும் வரை  தமிழரின் அரசியல் நிலை மேலும் மேலும்  சிங்கள இனவாதிகளின் விருப்பத்தை பூர்ததி செய்யும் வகையிலான பின்னடைவையே  நோக்கிய பாதையிலேயே தொடர்ந்து பயணிக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

என்னுடைய கேள்வி: சுமந்திரன் இளையோரை முன்வர விடாமல் தடுத்தது எப்படி? 

இவ்வளவு நீளமாக எழுதியிருக்கிறீர்கள், இதில் பதில் இருக்கிறதா? அல்லது சும்மா எழுந்தமானமாக சொன்னதை padding செய்திருக்கிறீர்களா?

சுமந்திரன் சிறந்த சட்டத்தரணி.

சிறந்த ஆளுமை மிக்கவர் .

ஆனாலும் தமிழரசுக் கட்சிக்குள் சம்பந்தமே இல்லாமல் எப்படி உள்வாங்கப்பட்டார் என்ற மர்மம் நிறைந்த கேள்வி பலரிடமும் உள்ளது.

இதனாலேயே இவ்வளவு திறமைகள் இருந்தும் பலரால் கேள்விக்குள்ளாக்கப்படுகிறார்.

இதே கேள்வி எனக்கும் இருக்கிறது.

சுமந்திரன் மட்டுமல்ல சாணக்கியன் கூட இதே மாதிரி பின் கதவால் வந்தவர்கள் என்ற கருத்து பரவலாக எல்லோரிடமும் இன்னமும் இருக்கிறது.

கடந்த தேர்தலில் சுமந்திரன் வென்றதும் கூட இன்னமும் பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

6 minutes ago, island said:

இந்த நிலை தொடரும் வரை  தமிழரின் அரசியல் நிலை மேலும் மேலும்  சிங்கள இனவாதிகளின் விருப்பத்தை பூர்ததி செய்யும் வகையிலான பின்னடைவையே  நோக்கிய பாதையிலேயே தொடர்ந்து பயணிக்கும். 

சிங்கள இனவாதிகளின் வேண்டுதலின் பேரிலேயே சுமந்திரனும் சாணக்கியனும் தமிழரசுக் கட்சிக்குள் உள்வாங்கப்பட்டதாகவே பலரின் கருத்தாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, nedukkalapoovan said:

ஊரில இப்ப எல்லாரும் சட்டம் படிக்கினம். ஏனென்றால்.. இதுக்குத்தான்.. சொந்த இனத்துக்குள்.. குடும்பத்துக்குள்.. ஒருத்தரை ஒருத்தர் பழிவாங்க.. முதுகில குத்த.

ஆனால்.. தமிழனை இனப்படுகொலை.. செய்த.. சிங்களவனை.. சர்வதேச நீதி விசாரணைக்கு உட்படுத்த விடமாட்டினம். 

இதுக்குத்தான் இவை இவ்வளவு தீவிரமா சட்டம் படிக்கினம். 

ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஒருவர் எனக்குக் கூறியிருந்தார் முப்பது இலட்சத்துக்கும் ஐம்பது இலட்சத்துக்கும் இடையில் செலவு செய்தால் சட்டத்தை படிக்காமலேயே படித்ததாக தராதரப் பத்திரம் எடுக்கலாமாம் அதுவும் ஒரிகினலாக. ஆனால் ஒரு விடையம் இவர்களால் நீதிமன்றில் வழக்காடமுடியாதாம் மற்றப்படி உள்ளூருக்குள்ள சில விடையங்களையோ அல்லது சில நிறுவனங்களிலோ வேலை செய்யலாமாம். 

நானும் இதை முழுதாக நம்பவில்லை அங்கிருந்து சொன்னவரது கருத்துத்தான் அதுக்காக என்னை அட்ச்சுத் துவைக்காதையுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

சுமந்திரன் சிறந்த சட்டத்தரணி.

சிறந்த ஆளுமை மிக்கவர் .

ஆனாலும் தமிழரசுக் கட்சிக்குள் சம்பந்தமே இல்லாமல் எப்படி உள்வாங்கப்பட்டார் என்ற மர்மம் நிறைந்த கேள்வி பலரிடமும் உள்ளது.

இதனாலேயே இவ்வளவு திறமைகள் இருந்தும் பலரால் கேள்விக்குள்ளாக்கப்படுகிறார்.

இதே கேள்வி எனக்கும் இருக்கிறது.

சுமந்திரன் மட்டுமல்ல சாணக்கியன் கூட இதே மாதிரி பின் கதவால் வந்தவர்கள் என்ற கருத்து பரவலாக எல்லோரிடமும் இன்னமும் இருக்கிறது.

கடந்த தேர்தலில் சுமந்திரன் வென்றதும் கூட இன்னமும் பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

சிங்கள இனவாதிகளின் வேண்டுதலின் பேரிலேயே சுமந்திரனும் சாணக்கியனும் தமிழரசுக் கட்சிக்குள் உள்வாங்கப்பட்டதாகவே பலரின் கருத்தாக உள்ளது.

இதைப் பற்றி பல இடங்களில் விவாதித்திருப்பதால் மீள உரைத்தல் அலுப்புத்தரலாம்: ஆனால் இந்தப் பின் கதவால் வந்தார்கள் என்ற கருத்துக் கூட ஒரு மென்மையான சதிக்கதையே தவிர ஆதாரங்கள் கொண்ட கருத்துக்கள் , சந்தேகங்கள் அல்ல.

 என்னைப் பொறுத்த வரை, காழ்ப்புணர்வு தான் இவற்றின் மிக ஆழமான வேர். "போரை, ஆயுத வழியை அரசியலுக்கு வரமுதலே ஆதரிக்கவில்லை" என்று சுமந்திரன் சொல்வதை அந்த வழியில் தான் தமக்கு பிழைப்பு இருக்கிறது என்று நம்பிக் கொண்டிருப்போர் அச்சத்துடன் பார்ப்பதும் இன்னொரு காரணம்.

ஆனால், முதலில் தேசியப் பட்டியலில் வந்தவர் அதன் பின்னர் இரு தேர்தல்களில் அதே தீவிர தேசியம் சாராத கொள்கையைச் சொல்லியும் வென்றார் அல்லவா? எனவே, தாயகத்தில் இருப்போரின் முடிவுக்கு மதிப்பளித்து அவர்களை முடிவு செய்ய விட வேண்டியான். இத்தகைய தர்க்க ரீதியான முடிவுகளை எடுக்க முடியாமல் காழ்ப்பிலும், வெறுப்பிலும் உழல்வோர், பூடகமாக சுமந்திரன் வாழ்க்கை முடிவு பற்றியெல்லாம் எழுதி தங்கள் இருண்ட ஆன்மாவைத் தான் வெளிக்காட்டிக் கொள்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

எனவே, தாயகத்தில் இருப்போரின் முடிவுக்கு மதிப்பளித்து அவர்களை முடிவு செய்ய விட வேண்டியான்.

உண்மை தான் எவ்வளவு தான் நாங்கள் குத்திமுறிந்தாலும் தாயகத்தில் உள்ளவர்கள் இவற்றைக் கையாள வேண்டும்.

Guest
This topic is now closed to further replies.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.