Jump to content

தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   11 MAR, 2024 | 08:03 PM

image

நாங்கள் இந்த நாட்டிலே சிறுபான்மை சமூகங்கள் என்று எம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றோம். அது எண்ணிக்கையில்தான் ஆனால் பெரும்பான்மை சமூகமாகச் சிங்கள மக்களைச் சொல்லலாம். தமிழர்களாகிய நாம் யார் எனும் கேள்வியைக் கேட்டால் நாங்கள் அழிக்கப்பட்ட சமூகத்தினதும்,  காணாமலாக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகள்தான்.  

 என வர்த்தகஇராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் பெரியகல்லாறு ஒலிம்பியா விளையாட்டுக் கழகம் நடாத்திய பி.பி.எல்.கிறிக்கட் திருவிழாவின் இறுதிப்போட்டி நிகழ்வு கழகத் தலைவர் ஆர்.கோபாலசிங்கம் தலைமையில் பெரிய கல்லாறு பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதன்போது கந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

எண்ணிக்கையில் நாம் சிறுபான்மையர்களாக இருந்தாலும் தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும். நாங்கள் சொல்வதை இந்த நாடு கேட்கும். எங்களை இந்த நாடே திரும்பிப் பார்க்கும். அவ்வாறாயின் நாம் பொருளாதாரம், மற்றும் கல்வி ஆகிய இரண்டு துறைகளில் கூடுதலான கவனத்தைச் செலுத்த வேண்டும். அவ்விரு துறைகளிலும் யாரும் தொட முடியாத உச்சத்திற்கு எமது சமூகத்தை நாம் வளர்க்க வேண்டும். அவ்வாறு வளர்ந்தால் இந்த முழு நாடும் நாம் சொல்வதைக் கேட்கும். அதற்காக அனைவரும் பாடு படவேண்டும். 

கடந்த வருடம் கல்விப்பொதுத்தர உயர்தரத்தில் விஞ்ஞானப்பிரிவில் மட்டக்களப்பு மாவட்டம்தான் இலங்கையிலேயே முதலிடம் பெற்றிருந்தது. அதற்காக என்னைத் தேடி வந்து நாட்டின் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்தார். கல்வி என்பது நாட்டின் பிரதமரையே நமது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது. அதபோன்றுதான் பிரதமர் தினேஸ் குணவரத்தன அவர்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் றோயல் கல்லூரியில் கற்பித்த ஆசிரியர் பெரியகல்லாற்றைச் சேர்ந்தவர் அவர் தற்போதும் இருக்கின்றார்.

எனவே தமிழ் சமூகம் என்பது கல்வியால் வளர்ந்து கல்வியால் அடையாளப்படுத்தப்பட்ட சமூகம் மாத்திரமின்றி இலங்கை முழுவதையும் கல்வியால் ஆட்சி செய்த சமூகமாகும். அனைத்துத் துறைகளிலும் மிளிர்ந்தவர்கள் தமிழர்கள். மீண்டும் அதே நிலமைக்கு நாம் வரவேண்டும். இதற்கு அனைவரும் கரம் கோர்த்து உதவுவதற்கு நாம் அனைவரும் தயாராகவுள்ளோம். என அவர் இதன்போது தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/178468

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிப் போட்டுத் தாக்க வேண்டியதுதானே  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

எண்ணிக்கையில் நாம் சிறுபான்மையர்களாக இருந்தாலும் தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும்.

3 hours ago, ஏராளன் said:

இந்த முழு நாடும் நாம் சொல்வதைக் கேட்கும். அதற்காக அனைவரும் பாடு படவேண்டும். 

ஏன் இந்த அதிகார புத்தி ,ஆக்கிரமிப்பு புத்தி...  ,ஏனைய சமுகம் எமது சமுகத்தின் ஆழுமையின் கீழ் இருக்க வேணும் என்ற ஆணவ  புத்தி...
ஏனைய சமுகமும் வாழட்டும் ,எங்களையும் வாழ விடுங்கள் ....

நண்பர் சொல்வது போல கல்வியில் உச்சத்தில் இருந்தால் தரப்படுத்தல் என்ற ஒன்றை கொண்டு வந்து அவர்களை புலம் பெயர வைப்பார்கள்...பொருளாதரத்தில் உச்சத்திலிருந்தால் பொருளாதாரத்தை இனக்கலவரத்தை தூண்டி அழித்தொளிப்பார்கள்.....

இனிவரும் காலங்களில் இது நடை பெறாது என வாதிடலாம்...ஆனால் அதற்கான அரசியல் கட்டமைப்பு இன்னும் நாட்டில் இல்லை என்பது அமைச்சருக்கு விளங்கும்...
கோத்தபாயா புத்தகம் வெளியிட்ட உடனே அமைச்சரின் குரல் ஒலிக்கிறது ...நீண்ட நாட்களின் பின் அமைச்சர் குரல் கொடுக்கிறார் போல தெரிகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, putthan said:

ஆமாம்  ஆட்சி அதிகாரம் இல்லாத கல்வி பொருளாதாரம்  எந்தவொரு பலனுமற்றது    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

ஆமாம்  ஆட்சி அதிகாரம் இல்லாத கல்வி பொருளாதாரம்  எந்தவொரு பலனுமற்றது    

ஆமை பிடிப்பார் மல்லாத்துவார் அதை நாம் சொன்னா பாவம் ....😃

இதுகளை நாங்கள் சொன்ன  சிறிலங்காவின் தேசிய விரோதிகள்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

Published By: VISHNU   11 MAR, 2024 | 08:03 PM

image

நாங்கள் இந்த நாட்டிலே சிறுபான்மை சமூகங்கள் என்று எம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றோம். அது எண்ணிக்கையில்தான் ஆனால் பெரும்பான்மை சமூகமாகச் சிங்கள மக்களைச் சொல்லலாம். தமிழர்களாகிய நாம் யார் எனும் கேள்வியைக் கேட்டால் நாங்கள் அழிக்கப்பட்ட சமூகத்தினதும்,  காணாமலாக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகள்தான்.  

 என வர்த்தகஇராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் பெரியகல்லாறு ஒலிம்பியா விளையாட்டுக் கழகம் நடாத்திய பி.பி.எல்.கிறிக்கட் திருவிழாவின் இறுதிப்போட்டி நிகழ்வு கழகத் தலைவர் ஆர்.கோபாலசிங்கம் தலைமையில் பெரிய கல்லாறு பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதன்போது கந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

எண்ணிக்கையில் நாம் சிறுபான்மையர்களாக இருந்தாலும் தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும். நாங்கள் சொல்வதை இந்த நாடு கேட்கும். எங்களை இந்த நாடே திரும்பிப் பார்க்கும். அவ்வாறாயின் நாம் பொருளாதாரம், மற்றும் கல்வி ஆகிய இரண்டு துறைகளில் கூடுதலான கவனத்தைச் செலுத்த வேண்டும். அவ்விரு துறைகளிலும் யாரும் தொட முடியாத உச்சத்திற்கு எமது சமூகத்தை நாம் வளர்க்க வேண்டும். அவ்வாறு வளர்ந்தால் இந்த முழு நாடும் நாம் சொல்வதைக் கேட்கும். அதற்காக அனைவரும் பாடு படவேண்டும். 

கடந்த வருடம் கல்விப்பொதுத்தர உயர்தரத்தில் விஞ்ஞானப்பிரிவில் மட்டக்களப்பு மாவட்டம்தான் இலங்கையிலேயே முதலிடம் பெற்றிருந்தது. அதற்காக என்னைத் தேடி வந்து நாட்டின் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்தார். கல்வி என்பது நாட்டின் பிரதமரையே நமது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது. அதபோன்றுதான் பிரதமர் தினேஸ் குணவரத்தன அவர்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் றோயல் கல்லூரியில் கற்பித்த ஆசிரியர் பெரியகல்லாற்றைச் சேர்ந்தவர் அவர் தற்போதும் இருக்கின்றார்.

எனவே தமிழ் சமூகம் என்பது கல்வியால் வளர்ந்து கல்வியால் அடையாளப்படுத்தப்பட்ட சமூகம் மாத்திரமின்றி இலங்கை முழுவதையும் கல்வியால் ஆட்சி செய்த சமூகமாகும். அனைத்துத் துறைகளிலும் மிளிர்ந்தவர்கள் தமிழர்கள். மீண்டும் அதே நிலமைக்கு நாம் வரவேண்டும். இதற்கு அனைவரும் கரம் கோர்த்து உதவுவதற்கு நாம் அனைவரும் தயாராகவுள்ளோம். என அவர் இதன்போது தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/178468

பல்கலைக்கழக முதல் வருடத்தில் இப்படித் தான் நான் நினைத்திருந்தேன். முதல் வருடமும் அப்படியே அமைந்தது. தமிழ் மாணவர்கள், முக்கியமாக யாழ் மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள், பரீட்சைகளில் கோலோச்சினர்.
 
பின்னர், மற்றவர்களும் பாடங்களை விளங்கி, ஒழுங்காக படிக்க ஆரம்பித்தனர். நாங்கள் பழகவும் ஆரம்பித்தோம். எவரும் எவருக்கும் குறைந்தவர்கள் இல்லை என்று அடுத்தடுத்த வருடங்களில் தெரிய வந்தது.
 
வெவ்வேறு சமூகத்திலிருந்து வந்தவர்களும் மிக நன்றாக செய்தனர்.
 
நுவரெலியாவில் இருந்து அடிப்படைப் புள்ளிகளுடன் வந்த ஒரு பெரும்பான்மை இன மாணவன் முதலாவதாக வந்த நிகழ்வும் நடந்தது.
 
எங்களுக்கு கல்வி சிறப்பாக வரும், மற்றவர்களுக்கு வராது என்று சொல்வது மிகப் பழைய ஒரு காலம். 
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ரசோதரன் said:

எங்களுக்கு கல்வி சிறப்பாக வரும், மற்றவர்களுக்கு வராது என்று சொல்வது மிகப் பழைய ஒரு காலம். 

ஆமாம் நிச்சயமாக   எந்தவொரு மாணவனும்  படிக்க விரும்பும் பட்சத்தில் பயிற்சியின் மூலம்  விசேட சித்திகளை ....பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடியும்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:
 
எங்களுக்கு கல்வி சிறப்பாக வரும், மற்றவர்களுக்கு வராது என்று சொல்வது மிகப் பழைய ஒரு காலம். 

புலம்பெயர் தேசங்களில் சீன மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குகின்றனர். எமது பிள்ளைகளே ஒத்துக் கொள்ளும் விடயம் இது.  அப்படியானால் உங்கள் கூற்று தவறாகிறதே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, விசுகு said:

புலம்பெயர் தேசங்களில் சீன மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குகின்றனர். எமது பிள்ளைகளே ஒத்துக் கொள்ளும் விடயம் இது.  அப்படியானால் உங்கள் கூற்று தவறாகிறதே?

இங்கு, அமெரிக்காவில், அப்படி நான் காணவில்லை.
 
நான் இருக்கும் சிறு நகரத்தில் கொரிய இன மக்களே பெரும்பான்மை. மொத்தமாகப் பார்த்தால் அவர்களே முன்னால் வருகின்றனர். அதன் பின்னர் வெள்ளையின அமெரிக்கர்களும், சீனர்கள், இந்தியர்கள் என்று வரிசை போகின்றது. உள்ளூர் பாடசாலை மட்டத்தில் மொத்தப் பெறுபேறுகள் ஏறத்தாழ இந்த வரிசையிலேயே இருக்கின்றது.
 
கொரிய மக்களின் உழைப்பிற்கும், அர்ப்பணிப்பிற்கும் முன்னால் எவராலும், சீனர்கள் உட்பட, நிற்க முடியாது.
 
உலகில் உள்ள சமூகங்களின், இனங்களின் சராசரி IQ என்றொரு தரவு இருக்கின்றது. ஆனால், அதையும் மீறி, அமையும் சந்தர்ப்பங்களும், சூழலும், தொடர் முயற்சி மற்றும் பயிற்சிகள் இந்தக் கல்வி அமைப்பிலும், பரீட்சை முடிவுகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதே என் அனுபவம்.     
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரசோதரன் said:

அப்படியானால் நீங்கள் ஆரம்பத்தில் கூறிய கருத்து (ஒரு இனம் அல்லது நாட்டவர்களுக்கு கல்வி சிறப்பாக வரும், மற்றவர்களுக்கு வராது என்று சொல்வது மிகப் பழைய ஒரு காலம்)  தவறு தானே?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அய்யா தைவானிஸ் என்று தங்களை அடையாளபடத்தி கொள்ளும்  தைவான் சீன மக்கள்  மற்றும் கொங்கொங் சீன மக்களை வைத்து உலகளவில் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விசுகு said:

அப்படியானால் நீங்கள் ஆரம்பத்தில் கூறிய கருத்து (ஒரு இனம் அல்லது நாட்டவர்களுக்கு கல்வி சிறப்பாக வரும், மற்றவர்களுக்கு வராது என்று சொல்வது மிகப் பழைய ஒரு காலம்)  தவறு தானே?? 

இங்கு சனத்தொகை பரம்பலின் அடிப்படையில் பெறுபேறுகள் வருகின்றன என்றே நான் சொல்லியிருந்தேன். கொரிய இன மக்களுக்கு வெள்ளையின அமெரிக்கர்களை விட கல்வி சிறப்பாக வரும் என்று நான் சொல்ல முயலவில்லை.
 
எங்களின் நாட்களில் இருந்து, 90 களில் இருந்து, மொறட்டுவ பல்கலையில் பெரும்பான்மை இன மக்களே  சிறந்த பெறுபேறுகளை அதிகமாக பெற்றுக்கொண்டு வருகின்றனர். அந்நாட்களில் மொறட்டுவ பல்கலைக்கு யாழ் மாவட்டத்தில் இருந்து நாட்டில் மிகச் சிறந்த பெறுபேறுகளை பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஆயினும், யாழ் மாவட்டத்தில் இருந்து போனவர்களால் அங்கு சாதிக்க முடியாமல் போய்விட்டது.
 
இதற்கு அங்கு அமைந்த/அமையாத சூழல் ஒரு காரணமாக இருக்கலாம்.
 
மிக்க நன்றி உங்களின் தொடர் உரையாடலுக்கு....👍👍
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ரசோதரன் said:
யாழ் மாவட்டத்தில் இருந்து போனவர்களால் அங்கு சாதிக்க முடியாமல் போய்விட்டது.
 
இதற்கு அங்கு அமைந்த/அமையாத சூழல் ஒரு காரணமாக இருக்கலாம்.

விளங்கவில்லை உங்கள் கருத்து .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்

 வியாழேந்திரன் தமிழர்கள் கல்வியால் ஆண்ட சரித்திரம் பற்றி நிறையவே அறிந்திருக்கின்றார்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்வி என்பது உனக்கானதல்ல உனக்கு அது வராது என்று  பல நூற்றாண்டுகளாக  இந்தியாவில் பெரும்பான்மையான  மக்களை ஒதுக்கி அவர்களை தாழ்ததிய நிலையில் இருந்து  இட ஒதுக்கீடு போன்ற  திட்டங்களின் னுகூலங்களால்  இன்று சற்றே முன்னேறிவருகின்றனர்.  அது போல் முயற்சியுடன் கல்வி கற்கும் போது எவராலும் முன்னேறிய நிலையை அடைய முடியும்.

இலங்கையை பொறுத்தவரை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அவர்களிடன் நல்லுறவை பேணி அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு வேண்டிய  கல்வியை பெற்றுக் கொண்டதன் மூலம் தமது கல்வித்தரத்தை சற்று உயர்ததிக்கொண்டனர்.   அதை வைத்த தாம் மற்றய இனத்தை விட  கல்வியில் சிறந்தவர்களாக  தமக்குள் தம்பட்டம் அடித்துக்கொண்டாலும் அது உண்மை அல்ல என்பதை கடந்த 70 ஆண்டுகளில் கண்டோம். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரசோதரன் சொல்வதும், வியாழேந்திரன் கூறுவதும் வேறு வேறான விடயங்கள் என நினைக்கிறேன். பரீட்சைப் பெறு பேறுகள் இலங்கையில் தவிர்க்க முடியாத கல்வி அளவீட்டுக் கருவிகள், எனவே அவை இலங்கையில் கல்வி பற்றிப் பேசப்படும் இடங்களில் பேசப்படுவது முக்கியம்.

ஆனால், கல்வியை (அது முறை சார் கல்வியோ, முறைசாரா கல்வியோ) நோக்கிய மனப்பாங்கு (attitude) என்பது இன்னொரு விடயம். இந்த மனப்பாங்கு, கலாச்சாரத்தின் பால் பட்ட ஒன்று. உதாரணமாக, முறைசார் கல்விக்கு அமெரிக்காவில் தென்னாசியர்களும், கிழக்காசியர்களும் கொடுக்கும் முக்கியத்துவத்தை, கறுப்பின மக்கள், ஸ்பானியர்கள் கொடுப்பது குறைவு என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. வெள்ளையின மக்கள், பெரும்பாலும் பண வருவாய் நோக்கியவாறு கல்வியைப் பார்க்கின்றனர் - இதுவும் "learning for the sake of learning" என்ற ஆசிய மனப்பாங்கில் இருந்து வித்தியாசமானது. தற்போது, எங்கள் தென்னாசிய குடியேறிகள் மத்தியிலும்  "பணம் சம்பாதிக்க மட்டும் கல்வி" என்ற போக்கு வளர்வதைக் காண்கிறேன், இது நல்லதா கூடாதா என்று முடிவு செய்ய இயலாமல் இருக்கிறேன் இது வரை.

இலங்கையைப் பொறுத்த வரையில், தமிழர்களின் முறை சார் கல்வி நோக்கிய மனப்பாங்கு சிங்களவர்களை விட வித்தியாசம் தான். எப்படியாவது மேலே வந்து விட வேண்டும் என்று யோசிக்கும், ஏற்கனவே அடக்கப் பட்ட ஒரு இனம் என்ற வகையில், முறை சார் கல்வி ஈழத்தமிழர்களுக்கு தடைகள் குறைந்த ஒரு பாதை என நினைக்கிறேன்.

அதைப் பயன்படுத்தி முன்னேற வேண்டுமென வியாழேந்திரன் சொல்வது முற்றிலும் சரியான ஒரு கருத்து!  

  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பெருமாள் said:

விளங்கவில்லை உங்கள் கருத்து .

நான் சொல்ல வந்தது ஒரு தொகுதி மக்களை கல்வியில் சிறந்தவர்கள் என்றும், இன்னொரு தொகுதி மக்களை கல்வியில் சிறந்தவர்கள் அல்ல என்றும் இலகுவாக சொல்லி விட முடியாது என்பதே. 

பல புறக் காராணங்களே இந்த வேறுபாட்டை உண்டாக்குகின்றன.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, island said:

இலங்கையை பொறுத்தவரை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அவர்களிடன் நல்லுறவை பேணி அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு வேண்டிய  கல்வியை பெற்றுக் கொண்டதன் மூலம் தமது கல்வித்தரத்தை சற்று உயர்ததிக்கொண்டனர்.   அதை வைத்த தாம் மற்றய இனத்தை விட  கல்வியில் சிறந்தவர்களாக  தமக்குள் தம்பட்டம் அடித்துக்கொண்டாலும் அது உண்மை அல்ல என்பதை கடந்த 70 ஆண்டுகளில் கண்டோம். 

தங்களுக்குள் தாங்களே தம்பட்டம் அடித்து கொள்வது மிகவும் ஓவராக தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ரசோதரன் said:

பல புறக் காராணங்களே இந்த வேறுபாட்டை உண்டாக்குகின்றன.

அது எவை என்று விளக்கமாக சொல்ல முடியுமா ?

  • இந்தமாதம் தான் புதிய ஐடியில் வந்து இருகிரியல் வந்ததுக்கு நன்றி இனி வரும்போது புதிய ip யில் வாருங்க .

    March 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பெருமாள் said:

அது எவை என்று விளக்கமாக சொல்ல முடியுமா ?

சூழல் பிரதான ஒரு காரணம். அன்று நான் பிறந்து வளர்ந்த ஊரிலோ, என் குடும்பத்திலோ கல்வி என்பது என்றும் ஒரு பிரதான விடயமே இல்லை. இன்றும் கூட அப்படித்தான். பணம் வேறு சில வகைகளில் இலகுவாக சம்பாதித்துக் கொள்ளலாம் என்பதே அங்கே இருக்கும் பொதுவான மனநிலை. படிப்பு என்பது மிக நீண்ட காலம் எடுக்கும் ஒரு முயற்சி, அதுவும் பெரும் பயனைக் கொடுக்காது என்றே அவர்களில் பலர் இன்றும் சொல்கின்றனர்.
 
இந்த சூழல் அமையும் போது, படிப்பின் மீதிருக்கும் ஆர்வம் அதுவாகவே வற்றிவிடும்.
 
அமையும் சந்தர்ப்பங்கள் இன்னொரு பிரதான காரணம். ஆசிரியர்களின் பங்கு பெரியது. எனக்கு உயர்தரத்தில் பாடசாலையில் கிடைத்த நான்கு ஆசிரியர்களுமே நிகரில்லாதாவர்கள் - கணேசலிங்கம் மாஸ்டர், சண்முகசுந்தரம் மாஸ்டர், சூரியநாதன் மாஸ்டர் மற்றும் நடராசா மாஸ்டர்.
 
இலங்கையில் எந்த ஒரு இடத்திலும், எந்த ஒரு வகுப்பிற்கும் இப்படி ஒரு ஆசிரியர் குழாம் கிடைத்திருக்கவே மாட்டாது. அவர்களே எங்களை உருவாக்கினர்.
 
ஆனால், நுவரெலியாவிலோ அல்லது புத்தளத்தில் கூட அந்நாட்களில் பாடசாலைகளில் மாணவர்களுக்கு சரியான ஆசிரியர்கள் அமையவில்லை.
 
யாழ் நகரில் அன்றிருந்த தனியார் கல்வி நிலையங்களும், அங்கு கற்பித்த பெயர் பெற்ற ஆசிரியர்களும் யாழ் மாவட்ட மாணாக்கருக்கு பெரும் கொடையே.
 
மாணவர்களுக்கு இடையேயான ஆரோக்கியமான போட்டி. பெரிய பாடசாலைகளில் படிக்கும் மாணவர்களுக்கு இடையே யார் முதலில் வருவது, யார் 100 எடுப்பது, யார் தேசிய மட்டத்தில் பெயர் எடுப்பது என்று போட்டிகள் இருந்தன. இது யாழ், கொழும்பு, குருணாகல், கண்டி போன்ற மாவட்டங்களிலேயே அன்று இருந்தது. பெரும்பாலும் மற்ற மாவட்டங்களில் இந்தப் போட்டி இருக்கவில்லை.
 
இதே அனுபவங்களை இன்றும் கூட நாங்கள் பல இடங்களில் பொருத்திப் பார்க்கலாம் என்றே நான் நினைக்கின்றேன்.
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்வி சம்பந்தமான திரி என்பதால் 

இதிலிருந்து விலகிக் கொள்கிறேன்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது எல்லோரும் படிக்கின்றார்கள் மக்களை உசுப்பேற்றுவதற்கு இப்படியான கருத்துக்களை அரசியல் வாதிகள் கூறுகின்றார்கள். சப்பிதுப்பி படிப்பது படிப்பல்ல‌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

 வியாழேந்திரன் தமிழர்கள் கல்வியால் ஆண்ட சரித்திரம் பற்றி நிறையவே அறிந்திருக்கின்றார்.

சரி வியாழேந்திரன் சொல்லுற மாதிரி தமிழர்கள் கல்வியால் முழு இலங்கையையும்  ஆளும் நிலை ஏற்பட்டால்....

உடனே வியாழேந்திரனின் கட்சிகாரர்  ஐயோ தமிழன் ஆட்சி செய்கின்ற காரணத்தால் சிங்களவரின் உரிமை பரிபோகின்றது என அறிக்கை விடுவினம் ...பிரித்தானியா ஆட்சியில் தமிழர்கள் கல்வி கற்று சிங்களவரை ஒதிக்கி வைத்து விட்டார்கள் ...இது தகுமா?இது முறையா என பந்தி பந்தியா  அறிக்கை விடுவினம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ரசோதரன் said:
சூழல் பிரதான ஒரு காரணம். அன்று நான் பிறந்து வளர்ந்த ஊரிலோ, என் குடும்பத்திலோ கல்வி என்பது என்றும் ஒரு பிரதான விடயமே இல்லை. இன்றும் கூட அப்படித்தான். பணம் வேறு சில வகைகளில் இலகுவாக சம்பாதித்துக் கொள்ளலாம் என்பதே அங்கே இருக்கும் பொதுவான மனநிலை. படிப்பு என்பது மிக நீண்ட காலம் எடுக்கும் ஒரு முயற்சி, அதுவும் பெரும் பயனைக் கொடுக்காது என்றே அவர்களில் பலர் இன்றும் சொல்கின்றனர்.
 
இந்த சூழல் அமையும் போது, படிப்பின் மீதிருக்கும் ஆர்வம் அதுவாகவே வற்றிவிடும்.
 
இன்று யாழ்நகரில் நீங்கள் கூறும் "படிப்பின் மீதிருக்கும் ஆர்வம் அதுவாகவே வற்றிவிடும்."
நடை பெறுகிறது ...பெண்கள் கல்வியில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்...ஆண்கள் வெளிநாடு சென்று உழைக்கலாம் என்ற எண்ணத்தில் கல்வியை புறம்தள்ளுகிறார்கள் போல தெரிகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, putthan said:

இன்று யாழ்நகரில் நீங்கள் கூறும் "படிப்பின் மீதிருக்கும் ஆர்வம் அதுவாகவே வற்றிவிடும்."
நடை பெறுகிறது ...பெண்கள் கல்வியில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்...ஆண்கள் வெளிநாடு சென்று உழைக்கலாம் என்ற எண்ணத்தில் கல்வியை புறம்தள்ளுகிறார்கள் போல தெரிகிறது

நான்கு வருடங்களின் முன் ஊர் போயிருந்தேன். என்னுடைய சில உறவினர்களின் பிள்ளைகள் இதை எனக்கு நேரடியாகவே சொன்னார்கள்: நாங்கள் வெளிநாடு போகப் போகின்றோம் அல்லது கப்பலுக்கு போகப் போகின்றோம். எவ்வளவு தான் படித்தாலும் என்ன சம்பளம் இங்கு கிடைத்து விடப் போகின்றது என்றனர்.
 
கப்பல் வாழ்க்கை கடுமையானது மட்டும் இல்லை, அது நாடாறு மாதம், காடாறு மாத வாழ்க்கை. அதில் உள்ள சிரமங்களையும் விலாவாரியாகச் சொன்னேன். படித்து விட்டு வெளிநாடுகளுக்கு போகலாம் என்றும் சொன்னேன்.
 
ஒவ்வொருவரும் நெருப்பு உண்மையிலேயே சுடும் என்று அவர்களே தொட்டுப் பார்த்து அறிந்து கொள்ளப் போவதாக பிடிவாதமாக இருக்கின்றனர்.
  • Like 3
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.