Jump to content

முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் இன்று இலங்கை வருகின்றனர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
news-7-300x200.jpg

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புடைய முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் இன்றைய தினம் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

அவர்கள் சார்பில் வழக்குகளில் முன்னிலையான தமிழக சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றிருந்த அப்போதைய இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி ஸ்ரீபெரும்புத்தூரில் வைத்து கொல்லப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ரொபர்ட் பயஸ், சாந்தன், ஜெயக்குமார், முருகன், நளினி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணைக்கு பின்னர் அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. எவ்வாறாயினும் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடுகளுக்கு அமைய 1999ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் திகதி அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. பின்னர் நீதிமன்றம் சாந்தன், ரொபர்ட் பயஸ், முருகன், நளினி, ரவிச்சந்திரன் உட்பட ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுவித்து தீர்ப்பளித்தது.

எவ்வாறாயினும் இலங்கையரான சாந்தன் தமது தாயுடன் வாழ்வதற்காக தம்மை இலங்கைக்கு அனுப்புமாறு கோரியிருந்தார். இதற்கான அனுமதி கிடைக்கப் பெற்று அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி அண்மையில் உயிரிழந்தார்.

இவ்வாறான பின்னணியில் முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் தாங்கள் நாடு திரும்புவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை மேல் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதன்படி, குறித்த மூவரையும் இலங்கைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அண்மையில் தமிழக அரசு சென்னை மேல் நீதிமன்றுக்கு அறியப்படுத்தியிருந்தது.

அவர்களில் முருகன் தாம் லண்டனில் உள்ள தமது மகளுடன் வாழ விரும்புவதாக தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும் இலங்கைக்கு மாத்திரம் செல்வதற்கான கடவுச் சீட்டையே அவர்களுக்கு இந்தியாவில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் வழங்கியுள்ளதாக அவர்களது சார்பில் வழக்குகளில் முன்னிலையான புகழேந்தி பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்று முற்பகல் 10 மணியளவில் சென்னையில் இருந்து அவர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/297923

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராபர்ட் பயஸ், முருகன், ஜெயக்குமார் இலங்கை புறப்பட்டனர்

image_833ed6534c.jpg

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 33 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த ராபர்ட் பயஸ், முருகன் மற்றும் ஜெயக்குமார் மூவரும் இன்று இலங்கைக்கு புறப்பட்டனர். இலங்கை தலைநகர் கொழும்பை சென்றடையும் மூவரையும் அவர்களது உறவினர்கள் வரவேற்க காத்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந் திகதி தமிழ்நாட்டில் படுகொலை செய்யப்பட்டார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏராளமான தமிழ்நாட்டு தமிழர்களும் ஈழத் தமிழர்களும் (இலங்கை தமிழர்களும்) கைது செய்யப்பட்டனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆயுள் தண்டனையாகவும் குறைக்கப்பட்டது.

image_d7d0566b3b.jpg

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற சட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் ஆயுள் தண்டனை அனுபவித்த பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய தமிழ்நாட்டு தமிழர்களும் முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் என இலங்கைத் தமிழர்களும் விடுதலை செய்யப்பட்டனர். அதேநேரத்தில் ஈழத் தமிழர்களான முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் வெளிநாட்டவர் என்பதால் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்த 4 பேரையும் உடனே இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும்; அவர்கள் சொந்த மண்ணில் உறவினர்களுடன் இணைய வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது. இது தொடர்பான வழக்குகளும் நடைபெற்றன. இவ்வழக்கு விசாரணையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சாந்தன், இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட இருந்த நிலையில் உயிரிழந்தார். இதனையடுத்து ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் முருகன் ஆகியோரை இலங்கைக்கு அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான ஆவணங்களையும் இலங்கை தூதரகம் வழங்கியது.

image_4e47f04c71.jpg

இதனடிப்படையில் இன்று ராபர்ட் பயஸ், முருகன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இலங்கைக்கு புறப்பட்டனர். நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஈழ ஆதரவாளர்கள் மூவரையும் சென்னை விமான நிலையத்தில் வழி அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மணி செந்தில் தமது சமூக வலைதளப் பக்கத்தில், எனது அன்பு அண்ணன் ராபர்ட் பயஸ் அவர்களுக்கு.. இன்றைய பொன்னான விடியலின் தொடக்கத்தில் நீங்கள் உங்கள் தாய் மண்ணில் கால் வைத்திருப்பீர்கள். 33 வருடங்களுக்கு முன்பாக பிரிந்த தாயின் கருவறைக்கு மீண்டும் ஒரு சேய் போய் சேர்ந்திருக்கிறது. நீங்கள் உங்கள் தாய் மண்ணை எவ்வளவு நேசித்தீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். உங்களின் வாழ்க்கை வரலாற்று நூலான 'விடுதலைக்கு விலங்கு' எழுதிய காலங்களில் இன்று விடுதலை ஆவோம் என்ற நம்பிக்கை அன்று இல்லை. சிறைக்குள் இருந்து கொண்டே உங்கள் தாய் மண்ணைப் பற்றி நீங்கள் யோசித்துக் கொண்டே இருந்தீர்கள். உங்கள் நிலத்திலிருந்து நீங்கள் பிரிந்து நீண்ட காலம் ஆகிவிட்டாலும் உங்கள் உதட்டோரம் ஈழத்துத் தமிழை சற்றே தேக்கி வைத்திருந்தீர்கள். ஒரு நாள் என் தாய் மண்ணிற்கு திரும்புவேன் என்கிற உங்களது நம்பிக்கையை எழுத்தில் வடித்த உரிமையோடு இந்த இரவில் இன்பமுருகிறேன்.ஆம். உங்கள் நம்பிக்கையுடன் கலந்த என் எழுத்து நிஜமாகிவிட்டது. இவற்றையெல்லாம் நாம் சிந்தித்த நாட்களில் இதுவெல்லாம் நடக்குமா என்று கூட நமக்குத் தெரியாது. ஆனாலும் ஒரு மன உறுதி கொண்ட தீர்க்கதரிசி போல நீங்கள் விடுதலை நாளொன்றின் பொன் கிரகணங்களுக்காக காத்திருந்தீர்கள். உங்கள் மீது அது இன்று படும் பொழுதில் நான் கண்கலங்க உங்களை என் நினைவுகளால் முத்தமிடுகிறேன். சொந்த ஊருக்கு சென்றவுடன் குலதெய்வம் கோவிலுக்கு போய் வாருங்கள். நம் மூதாதை உங்களுக்காக அங்கே காத்துக் கொண்டிருப்பார். படையல் போடுங்கள். பரவசமாய் இருங்கள். பழையன கழித்து புது வாழ்வு ஒன்றை புத்துணர்ச்சியோடு வாழுங்கள். உங்கள் வலி துயர் தியாகம் ஆகியவற்றை உணர்ந்த எல்லாம் வல்ல தெய்வங்கள் உங்களை காப்பார்கள் என்று எழுதியுள்ளார்.

 

https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/ராபர்ட்-பயஸ்-முருகன்-ஜெயக்குமார்-இலங்கை-புறப்பட்டனர்/150-335560

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு வந்தடைந்தனர் முருகன், பயஸ், ஜெயக்குமார் - விமானநிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை

03 APR, 2024 | 02:40 PM
image
 

கொழும்பை வந்தடைந்துள்ள முருகன் பயஸ் ஜெயக்குமார் மூவரையும் கொழும் விமானநிலையத்தில் அதிகாரிகள் தடுத்துவைத்து விசாரணை செய்கின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

GKOkoYKWgAALLkW.jpg

 

GKOkoYPXIAAw_d-.jpg

GKOkoYOWsAAj8Tr.jpg

https://www.virakesari.lk/article/180340

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்ல விடயம் ........அவர்கள் தத்தமது குடும்பங்களுடன் இனியாவது சேர்ந்து வாழட்டும்.......!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு இலங்கையை வந்தடைந்த முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயகுமாரிடம் விசாரணை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தற்போது இலங்கையை வந்தடைந்துள்ள நிலையில் அவர்களிடத்தில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் விசாரணை தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.

மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு விமானம் மூலம் இலங்கைக்கு திரும்பிய முருகன், ஜெயக்குமார் மற்றும் ரொபர்ட் பயஸ் ஆகியோர் இன்று காலை இலங்கையை வந்தடைந்திருந்தனர்.

இரண்டாம் இணைப்பு 

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தற்போது இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் மூவரும் இன்று(03) இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தமிழக சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்திருந்தார்.

murugan-robert-pius-and-jayakumar-came-sri-lanka

குறித்த மூவரும், திருச்சி சிறப்பு முகாமிலிருந்து நேற்று இரவு 11.15 மணிக்கு சென்னைக்கு  அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதன்படி சென்னை விமான நிலையத்திலிருந்து இலங்கை நோக்கி பயணித்த இவர்கள் மூவரும் தற்போது 11.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

murugan-robert-pius-and-jayakumar-came-sri-lanka

மேலும் அவர்களுக்கு இலங்கைக்கு வருவதற்கு மாத்திரமே இந்தியாவிலுள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாகவும் சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்திருந்தார்.'

 

murugan-robert-pius-and-jayakumar-came-sri-lanka

4P996

முதலாம் இணைப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி(Rajiv Gandhi) கொலை வழக்கிலிருந்து விடுதலையான முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் இன்று நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளதுடன் அவர்களுக்கு ஒருவழி கடவுச்சீட்டு (Passport)மாத்திரம் வழங்கப்பட்டுள்ளமை ஏமாற்றம் அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று முற்பகல் 10 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து அவர்கள் இலங்கை(Sri Lanka)நோக்கி பயணிக்கவுள்ளதாக, அவர்கள் சார்பில் வழக்குகளில் முன்னிலையான தமிழக சட்டத்தரணி புகழேந்தி உறுதிப்படுத்தியுள்ளார்.

ஒருவழி கடவுச்சீட்டு

இந்நிலையில் அவர்களுக்கு இலங்கைக்கு செல்வதற்கு மாத்திரமே இந்தியாவிலுள்ள(India) இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாக சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார்.

murugan-robert-pius-and-jayakumar-came-sri-lanka

இந்தியாவில் இருக்கும் இலங்கையர்களுக்கு கடவுசீட்டு வழங்க நடவடிக்கை எடுத்த போதிலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்ட இந்த மூவருக்கும் ஒருவழி கடவுச்சீட்டு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளமை ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அங்கிருந்தும் கிடைக்கும் செய்திகள் தெரிவித்துள்ளன.

கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள்

மேலும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் இலங்கை வந்தவுடன் அவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் நெருக்கடியான சூழல் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளதாக இலங்கையில் இருக்கும் புலனாய்வுச் செய்தியாளரும், அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்திருந்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியிருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, அவர்கள் சென்னையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்து இறங்கிய உடன் இலங்கையின் பயங்கரவாத தகவல் பிரிவினரால் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும், அதற்கான ஏற்பாட்டினை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

murugan-robert-pius-and-jayakumar-came-sri-lanka

உலகளவில் சர்ச்சை

உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்திய ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான இலங்கையர்கள் பல மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு விடுதலைப்புலிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும், இவர்களின் உடல் பாகங்கள் செயலிழக்கும் வகையில் இந்தியா அரசினால் மருந்து செலுத்தப்பட்டிருக்கலாம் எனவும், இதன் மூலம் அவர்கள் ஒரு வருடத்தில் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.  

https://tamilwin.com/article/murugan-robert-pius-and-jayakumar-came-sri-lanka-1712098918

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இலங்கையில் இருக்கும்போது  இந்திய அரசால் இவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் மிக மிக  அதிகம். 

இவர்கள் வாய் திறக்காமல் இருப்பது இவர்களது பாதுகாப்பை அதிகரிக்கும். 

(அனேகமாக, ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு தொடர்பாக பேட்டி ஏதும் கொடுக்கக் கூடாது என்று எச்சரிக்கை செய்திருப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் )

 

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரது மரணத்தை கண்ட பின் தான் இந்தியா இவர்களையாவது விடுவித்திருக்கிறது..அந்த வகையில் இவர்கள் விடுதலைக்காக உழைத்த அனைத்து தரப்பினர்களுக்கும் நன்றிகள்..இனிமேலாவது இவர்களை நின்மதியாக வாழ விட வேண்டும்..இந்த மீடியாக்கள் மற்றும் யூருப்பர்ஸ் இவர்களது மிகுதி கால நலன் கருதியாவது இந்த உறவுகளை தொந்தரவு செய்யாது வாழ விடுங்கள்.🙏

  • Like 7
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1712145567-murugan-2-650x375.jpg

 முருகன் உள்ளிட்ட மூவரும் விசாரணைகள் நிறைவடைந்து வெளியேறினர்.

கொழும்பை வந்தடைந்த முருகன், ரொபேர்ட்பயஸ் ஜெயக்குமார் ஆகிய மூவரும் கொழும்பு விமான நிலையத்தில் பலமணிநேரம் விசாரணைகளின் பின்னர், அதிகாரிகள் அவர்களை விடுதலை செய்துள்ளனர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட மூவரும் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இன்று காலை திருச்சிசிறப்பு முகாமில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட குறித்த மூவரும், யூ.எல் 122 விமானம் ஊடாக இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இதேவேளை, குறித்த மூவரும் தற்காலிக விசாவில் இலங்கைக்கு வருகைதந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

அத்துடன் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தமிழ் நாட்டு நீதிமன்றில் முன்னிலையான தமிழக சட்டத்தரணி புகழேந்தியும் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார்

இன்று காலை 11.30 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்த மூவர் மீதும் ஏற்கனவே விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினரால் விசாரணைகள் மேற்கொண்டிருந்தனர்.

இதனையடுத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்தார்.

இந்நிலையிலேயே விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட குறித்த மூவரும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1376375

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலையான மூவரும் எவரின் தொந்தரவும் இன்றி நிம்மதியாக வாழ வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு விமானநிலையத்தில் விசாரணையின் பின்னர் விடுதலை - குடும்பத்தவர்களுடன் இணைந்தனர் முருகன் ரொபேர்ட்பயஸ் ஜெயக்குமார்.

03 APR, 2024 | 05:34 PM
image
 

கொழும்பை வந்தடைந்த முருகன் ரொபேர்ட்பயஸ் ஜெயக்குமார் மூவரையும் கொழும்பு விமானநிலையத்தில் பலமணிநேரம் விசாரணை செய்த அதிகாரிகள் சில நிமிடங்களிற்கு முன்னர் அவர்களை விடுதலை செய்தனர்

 

GKPQAlHX0AAILkm.jpg'

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு   33 ஆண்டுகள் வரை சிறையிலிருந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன் ரொபேர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இன்று காலை இலங்கையை வந்தடைந்தனர் 

திருச்சி சிறப்பு முகாமிலிருந்து நேற்று இரவு 11.15 மணிக்கு சென்னைக்கு காவல்துறை வாகனம் மூலம் அழைத்து வரப்பட்டனர்.

இதன்படி  இன்று  முற்பகல் 10 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து அவர்கள் இலங்கை நோக்கி பயணித்தனர்.மூவரும் காலை 11.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அவர்களுக்கு இலங்கைக்கு செல்வதற்கு மாத்திரமே இந்தியாவிலுள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாகவும் சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்தார்

கொழும்பு விமானநிலையத்தில் விசாரணையின் பின்னர் விடுதலை - குடும்பத்தவர்களுடன் இணைந்தனர் முருகன் ரொபேர்ட்பயஸ் ஜெயக்குமார் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்ல விடயம் ........அவர்கள் தத்தமது குடும்பங்களுடன் இனியாவது சேர்ந்து வாழட்டும்.....வாழ்வின் வசந்தமான இளமைக்காலத்தை சிறையில் அடீபவித்து விட்டு தாய்மண்ணுக்குத் திரும்பியிருக்கிறார்கள். விடுதலையாகி இந்தியாவில் இருப்பதை விட சொந்த மண்ணில் வாழ்வது அவர்களுக்கு புத்துணர்ச்சியையும் அமைதியைும் கொடுக்கும். இந்தியாவில் இருந்தால் தொடர்ந்து கெடுபிடிகள் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, புலவர் said:

மிக நல்ல விடயம் ........அவர்கள் தத்தமது குடும்பங்களுடன் இனியாவது சேர்ந்து வாழட்டும்.....வாழ்வின் வசந்தமான இளமைக்காலத்தை சிறையில் அடீபவித்து விட்டு தாய்மண்ணுக்குத் திரும்பியிருக்கிறார்கள். விடுதலையாகி இந்தியாவில் இருப்பதை விட சொந்த மண்ணில் வாழ்வது அவர்களுக்கு புத்துணர்ச்சியையும் அமைதியைும் கொடுக்கும். இந்தியாவில் இருந்தால் தொடர்ந்து கெடுபிடிகள் இருக்கும்.

எப்படியிருந்தாலும் இந்தியாவின் கால் பதிப்புள்ள பிரதேசங்களில் தான் வாழப்போகின்றார்கள் கரணம் தப்பினால் மரணம் என்பது அவர்களுக்கு உறுதிப்படுத்திய பின்னரே வெளியே வர விட்டுருப்பார்கள். இனி வரும் காலங்கள் தான் பதில் சொல்லும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சி.

25 minutes ago, குமாரசாமி said:

விடுதலையாகி இந்தியாவில் இருப்பதை விட சொந்த மண்ணில் வாழ்வது அவர்களுக்கு புத்துணர்ச்சியையும் அமைதியைும் கொடுக்கும். இந்தியாவில் இருந்தால் தொடர்ந்து கெடுபிடிகள் இருக்கும்.

💯

7 hours ago, தமிழ் சிறி said:

குறித்த மூவரும் தற்காலிக விசாவில் இலங்கைக்கு வருகைதந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

ஆதவன் செய்தி இலங்கை குடிமக்களுக்கு விசா தற்காலிக விசா என்று எழுதியுள்ளது 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'' மூவரின் நிலை இதுதான் ''

 இனியபாரதி

இந்தியாவின் முன்னாள் தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 33 ஆண்டுகளுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டவர்கள், இலங்கைக்கு கடும் நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாட்டுடனேயே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தமிழக சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்துள்ளார். 

யாழ். ஊடக அமையத்தில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 33 வருடங்களின் பின்னர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் நால்வரும், திருச்சி சிறப்பு முகாமில் சுமார் ஒன்றரை வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். 

அவர்களில் சாந்தன், நாடு திரும்ப விருப்பம் தெரிவித்திருந்தார். ஏனைய மூவரும் இலங்கைக்கு வருவது தமக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி தாம் வெளிநாடு செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் எனக் கோரி வந்திருந்தனர். அதற்கு இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கைத் துணைத் தூதரகமும் அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டை வழங்க மறுத்தது. 

இந்நிலையில், கடந்த மாதம் சாந்தன் உயிரிழந்தமையால், சிறப்பு முகாமிலிருந்த ஏனைய மூவரின் மனநிலை பாதிக்கப்பட்டது.

அதனால், அவர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது. சிறப்பு முகாமில் தொடர்ந்து இருந்தால் நாமும் உயிரிழந்து விடுவோம் என்ற பயம் அவர்களிடம் ஏற்பட்டமையால், இலங்கை திரும்ப சம்மதித்தனர். 


இலங்கை திரும்ப யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு வருவதற்கான வானூர்தி பயணச்சீட்டு எடுக்க முயன்ற வேளை சிறிலங்கன் எயார்லைன்ஸ் வானூர் மூலமே பயணிக்க முடியும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. குறித்த விமானம் சென்னையிலிருந்து, கொழும்புக்கே இருந்தமையால் அதில் பயணிக்க வேண்டி ஏற்பட்டது. 

அதேபோன்று, சென்னை வானூர்தி நிலையம் வரையில் மூவருக்கும் பாதுகாப்பு வழங்கும் முகமாக அதிகாரிகள் செயற்பட்டனர். அனைத்துப் பயணிகளும் விமானத்திலிருந்து இறங்கிய பின்னரே இறங்க வேண்டும் போன்ற சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. 

ஒருவரை நாடு கடத்தும் போது முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 

இலங்கை வந்திறங்கியதும் அதிகாரிகள்,  இவர்கள் மூவரின் கடவுச்சீட்டையும் மூவரையும் ஆயப்பகுதி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் சுமார் இரண்டு மணிநேரம் விசாரணைகளை முன்னெடுத்தனர். 

எவ்வாறு நாட்டை விட்டு வெளியேறினீர்கள்? எதற்காக சென்ற நீங்கள்? எப்ப சென்ற நீங்க? போன்ற பல்வேறு கேள்விகளைக் கேட்டு அவற்றைப் பதிவு செய்தனர். 

பின்னர் இவர்கள் சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறியமையால் இவர்களுக்கு எதிராக நீர்கொழும்பு நீதிமன்றில் தாம் வழக்குத் தாக்கல் செய்யப் போகின்றோம் எனத் தெரிவித்தனர். 

பிறகு உயர் அதிகாரிகளுடன் தாம் கலந்துரையாடி, இவர்களுக்கு எதிராக இலங்கையில் எந்தக் குற்றச்சாட்டு இல்லை என்பதாலும் 33 வருடங்களுக்கு முன்னர் நாட்டை விட்டு சட்டவிரோதமான முறையில் வெளியேறியமை தொடர்பில் வழக்குத் தொடர்வதில் உள்ள சிக்கல்கள் காரணமாகவும் வழக்குத் தொடராது விட்டனர். 

ஆயப்பகுதி  அதிகாரிகளின் விசாரணைகளின் போது, மூவருடன் நானும் அருகில் இருந்தேன். அவர்களின் விசாரணை முடிவடைந்த பின்னர், புலனாய்வுப் பிரிவினர் அவர்களைப் பொறுப்பெடுத்து தமது விசாரணைகளை முன்னெடுத்தனர். 

இதன்போது, அவர்கள் மூவரையும் தாம் தனித்தனியாக விசாரணை செய்ய வேண்டும் எனக் கூறி மூவரையும் தனித்தனியே அழைத்துச் சென்று விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் விடுவித்தனர் என மேலும் தெரிவித்தார். (க)

'' மூவரின் நிலை இதுதான் '' (newuthayan.com)

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.