Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20240404-WA0099-1-750x375.jpg

தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதித்துறை மன்றத்தின் மாநாட்டில், தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், ஜனாதிபதி  வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்க,நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்கு காணலாம்.

https://athavannews.com/2024/1376603

  • Replies 54
  • Views 4.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    இதில் எதையுமே தமிழன்பன் குறிக்கவில்லை என்றுதான் படுகின்றது. தனது சொந்த நலனுக்காக மட்டுமே “உழைக்கும்” பிழைப்புவாதிதான் சுமந்திரன். தமிழ் மக்களுக்கோ, அவரைச் சேர்த்த கட்சிக்கோ சுமந்திரன் விசுவாசமாக

  • Elugnajiru
    Elugnajiru

    ஆனந்தசங்கரியர் தமிழர் விடுதலைக்கூட்டணியை முடக்கியதுபோல இப்போ சுமந்திரன் தமிழரசுக்கட்சியை முடக்கிவிட்டார் இனிமேல் சிங்களவன் காலடியில மெதுவாகப்போய் விழுந்துகிடக்கவேண்டியதுதான். பார்க்க சட்டத்தரண

  • சிங்களத்தின் நம்பிக்கை ; நாட்டைப் பொருளாரீதியில் முன்னேற்றிவிட்டால் இலங்கையில் இனப்பிரச்சனை மறைந்துவிடும்.  JVP; இலங்கையின் பொருளாதார நிலைமை முன்னேற்றமடைய வேண்டுமானால் புலம்பெயர் தமிழரின் உதவி தே

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தசங்கரியர் தமிழர் விடுதலைக்கூட்டணியை முடக்கியதுபோல இப்போ சுமந்திரன் தமிழரசுக்கட்சியை முடக்கிவிட்டார் இனிமேல் சிங்களவன் காலடியில மெதுவாகப்போய் விழுந்துகிடக்கவேண்டியதுதான்.

பார்க்க சட்டத்தரணி தவராஜா அவர்களது பத்திரிகையாளர் சந்திப்பு.

இப்போதான் சுமந்திரன் சரியான முகவரிக்குப்போன கடிதமாக அங்க இங்க எண்டு திரிஞ்சு செல்லிடம் சென்றிருக்கிறார்.

மாகாப்பிரபு இங்கையும் வந்திட்டியளோ எனச் சிங்களவன் தலையில கைவைக்கப்போகிறான். ஆமை புகுந்தவீடும் ஆமினா புகுந்தவீடும் உருப்படாது எனச்சொல்வது சுமந்திரன் விடையத்தில சரியாகப்படுகுது.

அதுசரி நீதிமன்றில் குட்டையை குழப்பிவிட்டு கோணேஸ்வரம் கோயிலுக்கு  ஏன் போனவராம் கடவுளே கண்பியூஸ் ஆகப்போகிறார்.

இந்த மேதாவி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவரெல்லோ. அப்ப இவர் தனது இனத்துக்கு மட்டுமல்ல தான் சார்ந்த சமயத்துக்கும் விசுவாசம் இல்லாதவரா?

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனுக்கு அருகே முன்னாள் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை அமர்ந்து இருக்கிறார். 

😁

  • கருத்துக்கள உறவுகள்

அநுரவுடன் சுமந்திரன் சந்திப்பு ‘இந்திய முறைமை’யின் வெற்றி குறித்துச் சுட்டிக்காட்டு

05 APR, 2024 | 08:51 PM
image

(ஆர்.ராம்)

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமாரவுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. 

இந்தச் சந்திப்பின்போது ‘இந்திய முறைமை’யின் வெற்றி குறித்து அநுரகுமாரவுக்கு சுமந்திரனால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் வடமாகாண மாநாடு மற்றும் வங்கியாளர் தொழிற்சங்கத்தினருடனான சந்திப்பு ஆகியவற்றில் பங்கேற்பதற்காகத் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுராகுமார திசாநாயக்க வியாழக்கிழமை (4) யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்தார்.

இதன்போதே மேற்படி சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பு தொடர்பில் சுமந்திரன் தெரிவிக்கையில்,

வங்கியாளர் தொழிற்சங்கத்தினருடனான சந்திப்பின்போது அநுரகுமார திசாநாயக்க, இந்தியா பல்லின சமூகங்கள் வாழும் நாடாக இருக்கின்றது. அங்கு இன ஒற்றுமை காணப்படுவதோடு மன்மோகன் சிங் பிரதமராகப் பதவி வகித்துள்ளார். 

அப்துல்கலாம் ஜனாதிபதியாகப் பதவி வகித்துள்ளார். தற்போதைய ஜனாதிபதி கூட தாழ்த்தப்பட்ட சமூகத்தினை பிரதிநிதித்துவம் செய்பவராக இருக்கின்றார். உள்ளிட்ட விடயங்களைச் சுட்டிக்காட்டியிருந்தார். அவருடைய சுட்டிக்காட்டல்களை அவதானித்திருந்த நான், பின்னர் அவருடனான சந்திப்பின்போது, இந்தியாவில் சிறுபான்மை, மற்றும் நலிவுற்ற சமூகத்தினர் அவ்விதமான பதவிகளுக்கு வருவதற்கும், இனங்களுக்கு இடையில் ஒற்றுமை நிலவுவதற்கும் காரணமொன்று உள்ளது எனக் குறிப்பிட்டேன். 

அச்சமயத்தில் அநுர, சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர்வு அமுலாக்கப்பட்டுள்ளது என்று கருதுகின்றீர்களா எனக் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், இந்தியாவில் அவ்விதமான நிலைமைகள் நிலவுவதற்கு அங்குள்ள அதிகாரப்பகிர்வு முறை ஒருகாரணமாக இருக்கின்றபோதும் மிகவும் முக்கியமான காரணமாக இருப்பது மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளது தான் என்ற விடயத்தினை குறிப்பிட்டேன்.

அத்துடன், அவ்விதமான மொழிவாரியிலான அடிப்படையில் மாகாணங்கள் இங்கும் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுவது அவசியமானது என்பதால் தான் வடக்கு,கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்ற விடயத்தினை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றோம் என்பதைச் சுட்டிக்காட்டினேன்.

இதேநேரம், வடக்கு,கிழக்கில் உள்ள சமகால அரசியல் நிலைமைகள் சம்பந்தமாகக் கலந்துரையாடியதோடு, தொடர்ச்சியாகப் பரஸ்பர கலந்துரையாடல்களை முன்னெடுப்பதென்றும் இணக்கம் காணப்பட்டது என்றார்.

https://www.virakesari.lk/article/180544

  • கருத்துக்கள உறவுகள்

அவ்விதமான மொழிவாரியிலான அடிப்படையில் மாகாணங்கள் இங்கும் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுவது அவசியமானது என்பதால் தான் வடக்கு,கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்ற விடயத்தினை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றோம் என்பதைச் சுட்டிக்காட்டினேன்.

அடப் பாவிமனுசா....பிரித்தவர்களிடமே போய் ...எம்மை ஒட்டிவிடக் ..கேட்கிறியே....இது உண்மைதானா....உண்மையாக நடக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தவராலைதான் ஒட்ட ஏலும்

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2024 at 04:10, ஏராளன் said:

அவ்விதமான மொழிவாரியிலான அடிப்படையில் மாகாணங்கள் இங்கும் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுவது அவசியமானது என்பதால் தான் வடக்கு,கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்ற விடயத்தினை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றோம் என்பதைச் சுட்டிக்காட்டினேன்.

கண்ணை மூடிக்கொண்டு பூனை பால் குடிக்கும் பொழுது உலகம் இருட்டு என் நினைக்குமாம் ....
அதுபோல சுமத்திரன் விளக்கம் கொடுக்கிறாராம் அதை நாங்கள் நம்ப வேணுமாம்...
மற்றவருக்கு(அனுராவுக்கு) இந்த மொழிவாரியான மாகாண அமைப்பு நல்லது என்ற விடயம் தெரியாது என காதில பூ வேற.அவர் சார்ந்த இடதுசாரி பிதாமக்களின் கொள்கையே சிறுபான்மை மக்களின் அடையாளங்கள் காப்பாற்ற பட வேணும் என்பது தானே....போற போகை பார்த்தால் ...இலங்கை கம்னியுஸ்ட் கட்சி தோழர் சண்க்கு,பாலாவுக்கு எல்லா பாடம் எடுத்தவர் என அறிக்கை விட்டாலும் விடுவார்.

On 6/4/2024 at 05:02, alvayan said:

அடப் பாவிமனுசா....பிரித்தவர்களிடமே போய் ...எம்மை ஒட்டிவிடக் ..கேட்கிறியே....இது உண்மைதானா....உண்மையாக நடக்குமா?

அரசியல் சாணாக்கியம் ....83 ஆம் ஆண்டு திட்டமிட்டு இன கலவரம் செய்த கோஸ்டிகள் இப்ப அரசியல் பாடம் எடுக்கினம் ...அன்றைய யு.என்.பி கட்சியை பலவீன படுத்த அவர்கள் இதை செய்தார்கள்....தங்களது கொள்கையை நிலை நாட்ட எதுவும் செய்வார்கள் இது மற்றுமோர் உதாரணம்

  • கருத்துக்கள உறவுகள்
On 5/4/2024 at 14:02, alvayan said:

அடப் பாவிமனுசா....பிரித்தவர்களிடமே போய் ...எம்மை ஒட்டிவிடக் ..கேட்கிறியே....இது உண்மைதானா....உண்மையாக நடக்குமா?

சிங்களத்தின் நம்பிக்கை ; நாட்டைப் பொருளாரீதியில் முன்னேற்றிவிட்டால் இலங்கையில் இனப்பிரச்சனை மறைந்துவிடும். 

JVP; இலங்கையின் பொருளாதார நிலைமை முன்னேற்றமடைய வேண்டுமானால் புலம்பெயர் தமிழரின் உதவி தேவை என்பது JVP யினருக்குப் புரிகிறது. அது புரிந்த காரணத்தால்தான் அவர்கள் மேற்கில் உள்ளவர்களைத் தேடி வருகிறது. 

கொசுறு… 

புலம்பெயர் நாடுகளில் உள்ள இலங்கை முஸ்லிம்களும் சிங்களவர்களும் (தமிழரைப் பலவீனப்படுத்துவதற்காக) கைகோர்க்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

கொசுறு… 

புலம்பெயர் நாடுகளில் உள்ள இலங்கை முஸ்லிம்களும் சிங்களவர்களும் (தமிழரைப் பலவீனப்படுத்துவதற்காக) கைகோர்க்கிறார்கள். 

நம்ம ஆட்கள் அவர்களுடன் கை கோர்க்காமல் இருந்தால் சரிதானே...நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
On 5/4/2024 at 14:44, Elugnajiru said:

இந்த மேதாவி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவரெல்லோ. அப்ப இவர் தனது இனத்துக்கு மட்டுமல்ல தான் சார்ந்த சமயத்துக்கும் விசுவாசம் இல்லாதவரா?

அவர் உண்மையான தமிழ் கிருத்துவரா என்பதில் எனக்கு அடிக்கடி சந்தேகம் உண்மையான கிருத்துவத்துக்கு பிறந்தவர்கள் ஏதோ ஒரு வகையில் கல்யாண வீட்டில்  மாலை மாற்றி கொள்வார்கள் தாலி கொடி போடுவார்கள் இந்து கோவிலுக்கு போகமாட்டார்கள்  இந்த ஜந்து வேலியில் நிக்கும் ஒனான் போல் எல்லாபக்கமும் பாயும் தனது பிழைப்புக்காக .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

தமிழ் கிருத்துவரா என்பதில் எனக்கு அடிக்கடி சந்தேகம்

ஒரு யூரின் டெஸ்ட் எடுத்தால் - எத்தனை சதவீதம் தமிழ், எத்தனை சதவீதம் கிறிஸ்டியன், தமிழ்+கிறிஸ்டியன் கலப்பு போதிய ratio வில் உள்ளதா என்பதை எல்லாம் கண்டு பிடித்து விடாலாம் என ஒரு டிக்டொக் அறிஞர் சொன்னார்.

ஒரு குடுவையை எடுத்து கொண்டு கிளம்புங்கள்🤣.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கூட்டமைப்பை வெற்றிகரமாக உடைத்த *** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம் சுமா இப்ப தமிழரசு கட்சியையும் உடைத்து சுக்கு நூறாகிவிட்டார் . வந்த வேலை முடிந்த சந்தோசம் அதுதான் கோவிலுக்கு வேற. இவரைத்தான் சிலபேர் சொன்னார்வர்கள் சிறந்த ராஜதந்திரியாம் . 

இப்ப புரியும் ஏதில இவர் தந்திரி என்று. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

ஒரு யூரின் டெஸ்ட் எடுத்தால் - எத்தனை சதவீதம் தமிழ், எத்தனை சதவீதம் கிறிஸ்டியன், தமிழ்+கிறிஸ்டியன் கலப்பு போதிய ratio வில் உள்ளதா என்பதை எல்லாம் கண்டு பிடித்து விடாலாம் என ஒரு டிக்டொக் அறிஞர் சொன்னார்.

ஒரு குடுவையை எடுத்து கொண்டு கிளம்புங்கள்🤣.

யுனிவேர்சல் கிரடிட்  பழையது போல் இல்லையாமே ரெம்ப கெடுபிடியாம் விடிகாலை மட்டும் கூத்தடிக்க முடியாது .

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

ஒரு யூரின் டெஸ்ட் எடுத்தால் - எத்தனை சதவீதம் தமிழ், எத்தனை சதவீதம் கிறிஸ்டியன், தமிழ்+கிறிஸ்டியன் கலப்பு போதிய ratio வில் உள்ளதா என்பதை எல்லாம் கண்டு பிடித்து விடாலாம் என ஒரு டிக்டொக் அறிஞர் சொன்னார்.

இப்போது எல்லாம் டிக்டொக் அறிஞர்கள் தான் வெளிநாட்டு ஈழதமிழர்களின் நம்பிக்கைக்குரியவர்கள்

முஸ்லிம்கள் போன்று தமிழை பேசலாம் மிகுதி எல்லாம் அரபு வீதமாக இருப்பது போன்று தமிழ் கிறிஸ்தவர்களும் இருக்க வேண்டும் என்று தமிழ்தேசிகர்கள் எதிர்பார்க்கின்றார்களோ

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெருமாள் said:

யுனிவேர்சல் கிரடிட்  பழையது போல் இல்லையாமே ரெம்ப கெடுபிடியாம் விடிகாலை மட்டும் கூத்தடிக்க முடியாது .

என்ன மறந்து விட்டீர்களா Sir பெருமாள் ? நான் இருப்பது இலங்கை அரசின் புலாய்வு கொடுப்பனவில், அல்லவா? ஆகவே யூனிவேர்சல் கிரெடிட் எல்லாம் எனக்கு, சும்மா நொறுக்கு தீனி வாங்கும் காசு🤣.

Edited by goshan_che
Sir சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, goshan_che said:

என்ன மறந்து விட்டீர்களா Sir பெருமாள் ? நான் இருப்பது இலங்கை அரசின் புலாய்வு கொடுப்பனவில், அல்லவா? ஆகவே யூனிவேர்சல் கிரெடிட் எல்லாம் எனக்கு, சும்மா நொறுக்கு தீனி வாங்கும் காசு🤣.

 குட் மோர்னிங் பகல் முழுதும் தூக்கம்ஆக்கும் கொடுத்து வைத்த நீங்கள் 😀 இனியென்ன விடிய விடிய ஆட்டம் தான் .😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

 குட் மோர்னிங் பகல் முழுதும் தூக்கம்ஆக்கும் கொடுத்து வைத்த நீங்கள் 😀 இனியென்ன விடிய விடிய ஆட்டம் தான் .😀

ஓம் Sir, சோசல் காசில் வாழும் நான் என்ன காலையில் எழும்பி வெட்டி முறிக்கவோ….

நல்ல தூக்கம். இனி எழும்பி அடுத்த கொலிடே எங்கே என ரிசேர்ஜ் பண்ணப்போறன்.

நீங்கள் எப்படி, பகல் முழுக்க வழமை போல் களவுதானோ?

  • கருத்துக்கள உறவுகள்

வந்த அலுவல் முடிந்து இனி சிங்கள பக்கம் ஒருக்கா வாலை ஆட்டுவம் என்பது சுமந்திரனின் குல வழக்கம் .
அதனை சமத்தாக செய்கிறார் .

  • கருத்துக்கள உறவுகள்

வரும் சனாதிபதி தேர்தலில் ( நடைபெற்றால் - நரி ரணில் அதனை நிறுத்துவதற்க்கு சகல முயற்சிகளையும் செய்து வருகின்றார்  ), அனுர குமார திசாநாயக்க சிறுபான்மை மக்களின் ஆதரவு இன்றி கோட்டபாய மாதிரி அமோக வெற்றி பெறுவார். அதன் பின்னர் அமையும் அமைச்சரவையில் சுமந்திரனும் , சாணக்கியனும் இடம் பெறக் கூடும் . ஒரு சில புலம்பெயர் மக்கள், அடித்த பியரும், தின்ற சோறும் செமிக்க சுமந்திரன் எதிர் புராணம் பாடி குப்புறப் படுப்பார்கள். தாயக மக்கள் தமது இருப்பை தக்க வைக்க அடுத்த கட்டம் நோக்கி நகர்வார்கள்.

NPP/JVP அதிகாரத்துக்கு வந்தவுடன் நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடாது.  தமிழ் பேசும் மக்களுக்கு அதிகாரங்களை தங்க தட்டில்  வைத்து தரமாட்டார்கள். ஆனால் , ஊழல் செய்த அரசியல் வாதிகளுக்கும்/ அரசாங்க அதிகாரிகளுக்கும் ஆப்பு வைப்ப்பார்கள்.  ஊழலை ஒழிப்பதால் மட்டும் பொருளாதார ரீதியாக வளர்ந்து விடமுடியாது,  ஆனால்  ஊழலை கணிசமாக ஒழிக்காமல்  ஒரு அங்குலம் கூட பொருளாதார ரீதியாக நகரமுடியாது.

கொசுறு தகவல் -  அடுத்த பிரதமராக தமிழ் பெண்மணி ஒருவர் வர வாய்ப்பு இருக்கின்றது ( சரோஜா சாவித்திரி பால்ராஜ் )

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழன்பன் said:

வந்த அலுவல் முடிந்து இனி சிங்கள பக்கம் ஒருக்கா வாலை ஆட்டுவம் என்பது சுமந்திரனின் குல வழக்கம் .
அதனை சமத்தாக செய்கிறார் .

""குல வழக்கம் "" என்று 

சுமந்திரனின் சாதியைச் சொல்கிறீர்களா அல்லது அவரது  மதத்தைத் சொல்கிறீர்களா அல்லது அவரது குடும்பத்தைச் சொல்கிறீர்களா? 

அல்லது முட்டாள்தனமாக/லூசுத்தனமாக வாய்க்கு வந்ததைக்  கிறுக்குகிறீர்களா? 

இதில் எது சரியானது? 

இந்தியாவிடம்  விலை போகாமல் சுயமாகச் சிந்திக்கும் ஒரே ஒரு தமிழ் அரசியல்வாதி சுமந்திரன் மட்டுமே. 

சுமந்திரனும் விலை போயிருந்தால் இன்று அவருக்கு புகழ் மாலை சூட்டியிருப்பார்கள் எங்கள் புலம்பெயர்ஸ். 

😁

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இந்தியாவிடம்  விலை போகாமல் சுயமாகச் சிந்திக்கும் ஒரே ஒரு தமிழ் அரசியல்வாதி சுமந்திரன் மட்டுமே. 

சுமந்திரனும் விலை போயிருந்தால் இன்று அவருக்கு புகழ் மாலை சூட்டியிருப்பார்கள் எங்கள் புலம்பெயர்ஸ். 

இந்தியாவிடம் விழவில்லை.அதற்காக எங்கும் விழவில்லை என்பது ஏற்கத்தக்க அல்ல

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்தியாவிடம் விழவில்லை.அதற்காக எங்கும் விழவில்லை என்பது ஏற்கத்தக்க அல்ல

இந்தியாவின் payroll க்கு வேலை செய்பவர்கள் என்றால் ஏற்கலாம் என்கிறீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kapithan said:

இந்தியாவின் payroll க்கு வேலை செய்பவர்கள் என்றால் ஏற்கலாம் என்கிறீர்களா? 

மக்களுக்காக வேலை செய்யும் ஆளை எதிர்பார்க்கிறேன்.அவ்வளவு தான்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

இந்தியாவிடம் விழவில்லை.அதற்காக எங்கும் விழவில்லை என்பது ஏற்கத்தக்க அல்ல

இந்தியாவின் ரூபாவை விட அமெரிக்கன் டொலர் பெறுமதி அதிகம் என அவருக்கு தெரியாத என்ன‌

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, zuma said:

வரும் சனாதிபதி தேர்தலில் ( நடைபெற்றால் - நரி ரணில் அதனை நிறுத்துவதற்க்கு சகல முயற்சிகளையும் செய்து வருகின்றார்  ), அனுர குமார திசாநாயக்க சிறுபான்மை மக்களின் ஆதரவு இன்றி கோட்டபாய மாதிரி அமோக வெற்றி பெறுவார். அதன் பின்னர் அமையும் அமைச்சரவையில் சுமந்திரனும் , சாணக்கியனும் இடம் பெறக் கூடும் . ஒரு சில புலம்பெயர் மக்கள், அடித்த பியரும், தின்ற சோறும் செமிக்க சுமந்திரன் எதிர் புராணம் பாடி குப்புறப் படுப்பார்கள். தாயக மக்கள் தமது இருப்பை தக்க வைக்க அடுத்த கட்டம் நோக்கி நகர்வார்கள்.

NPP/JVP அதிகாரத்துக்கு வந்தவுடன் நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடாது.  தமிழ் பேசும் மக்களுக்கு அதிகாரங்களை தங்க தட்டில்  வைத்து தரமாட்டார்கள். ஆனால் , ஊழல் செய்த அரசியல் வாதிகளுக்கும்/ அரசாங்க அதிகாரிகளுக்கும் ஆப்பு வைப்ப்பார்கள்.  ஊழலை ஒழிப்பதால் மட்டும் பொருளாதார ரீதியாக வளர்ந்து விடமுடியாது,  ஆனால்  ஊழலை கணிசமாக ஒழிக்காமல்  ஒரு அங்குலம் கூட பொருளாதார ரீதியாக நகரமுடியாது.

கொசுறு தகவல் -  அடுத்த பிரதமராக தமிழ் பெண்மணி ஒருவர் வர வாய்ப்பு இருக்கின்றது ( சரோஜா சாவித்திரி பால்ராஜ் )

லோங் டைம் நோ சீ…சுமா ப்ரோ… கண்டது சந்தோசம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.