Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

vadivelu soona paana comedy checking

vadivelu-vadivelu-comedy.gif

இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது.
ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள் 
அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்...
ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள்.
அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂
"ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣

த‌மிழ் சிறி அண்ணா
அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா
அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு

800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ

ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது
அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 

  • Replies 138
  • Views 10.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    இதுக்கெல்லாம் ஏன் இப்படி வளைஞ்சு முட்டு கொடுக்க வேண்டும். உலகில் எந்த நாட்டில் தான் களவு இல்லை. அதுவும் டூரிஸ்ட் போகும் நாடுகளில் - இலண்டனில் இல்லாத களவா? திப்பு சுல்தானின் வாளை களவெடுத்து,

  • நிழலி
    நிழலி

    நான் இவ்வாறான, வெளி நாட்டவர்களின் காணொளிகளுக்கு வழக்கமாக இடும் பின்னூட்டம், "ஒரு பெரும் இனப்படுகொலையை, தடை செய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டுகளை பாவித்து போர் நடாத்திய ஒரு அரசிடம் இருந்து, சிங்கள இனத்திலும்

  • ஏராளன்
    ஏராளன்

    இடத்தை தனிமடலில் போடுங்கோ, தெரிஞ்ச பொதுச் சுகாதார பரிசோதகர்கள் காதில போட்டுவிடுவம்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பையன்26 said:

த‌மிழ் சிறி அண்ணா
அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா
அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு

800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ

 

9 hours ago, தமிழ் சிறி said:

vadai.jpg

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது!

வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1378864

 

9 hours ago, தமிழ் சிறி said:

sri-Lanka-2-750x375.jpg

சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை!

நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன.

அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன.
இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1378849

பையன்.... பத்திரிகைகள் எல்லாம் அண்மையில் நடந்த செய்தியாகத்தான் குறிப்பிடுகின்றன.
அத்துடன்  இரண்டு வருடத்துக்கு முன்பு வந்த செய்தி  என்றால், 
"வடை மாத்தையா"வை 😂  அப்போ கைது செய்யாமல் இப்போ ஏன் கைது செய்துள்ளார்கள்.
அந்த நேரம்  இவை ஏன், சமூக வலைத்தளங்களில் அலசப் படவில்லை போன்ற கேள்விகள் எழுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, பையன்26 said:

த‌மிழ் சிறி அண்ணா
அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா
அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு

800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ

ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது
அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 

பையன்,  இந்த 800 ரூபா  வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற  வருடம் மே மாதத்தில்  பார்திருப்பீர்கள்?  காலப்பயணம்(time travel) சென்றீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, satan said:

ஒரு உழுந்து வடை, தேநீருக்கு நோகாமல் எண்ணூறு ரூபா வாங்கியவர் எப்படி விறைப்பெடுக்கிறார் பாருங்கள். தண்டம் கொடுக்கும் போது, கொடுத்தவரின் வலி தெரியும், அப்போ நினைப்பார்; இப்படி வரும் என்று தெரிந்திருந்தால், சும்மாவே கொடுத்து புண்ணியத்தை தேடியிருக்கலாமென்று. நாலும் நடந்து முடிந்த பின்னால் நல்லது கெட்டது தெரியும்.

 

🍩 🍩 "வடை மாத்தையா". 😂 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, island said:

பையன்,  இந்த 800 ரூபா  வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற  வருடம் மே மாதத்தில்  பார்திருப்பீர்கள்?  காலப்பயணம்(time travel) சென்றீர்களா? 

 நான் தான் பிழையா சொல்லிட்டேன் போல‌
ஆனால் இந்த‌ காணொளி ரிக்ரொக்கில் பார்த்து இருக்கிறேன் முந்தி

இந்த‌ மாத‌ காணொளி என்றால் என்னில் தான் த‌வ‌று
 த‌வறுக்கு ம‌ன்னிப்பு கேட்க்கிறேன்

நான் ரிக்ரொக் பார்ப்ப‌தே 2மாத‌த்துக்கு ஒருக்கா என‌து போனில் ரிக்ரொக் ஆப் இல்லை
 த‌ம்பி த‌ங்கைச்சி இவ‌ர்க‌ளின் வீடியோக்க‌ள் பார்க்க‌  சில‌ ம‌ணி நேர‌ம் பார்த்து விட்டு மீண்டும் ரிக்ரொக் ஆப்பை அழிச்சு போடுவேன்.........................

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

சைக்கிள் "காப்பில" ஆட்டோ ஓடுது. 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, goshan_che said:

0.50 ஈரோ பொருளை 2 ஈரோவுக்கு விற்றது சப்பை மேட்டர்தான்…..

இது எழுதாமலே விளங்க வேணும்….

எழுதியிம் விளங்கவில்லை எண்டால் கஸ்டம்தான்🤣.

எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎
சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣
சும்மா வாள்...வாள் தான் 😂

இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... :cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாராயானா ஒருத்தர் ஊர் போய் கண்டபடி புளுகி தொலைக்கிறார் என்று செய்தியில் தேட இந்த செய்தி நேரம் பார்த்து வர அதை நான் இணைக்க நாராயானா இவ்வளவு குழப்பம் அதுவும் ஐந்து பக்கம் நாராயணா மன்னித்துகொள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

நாராயானா ஒருத்தர் ஊர் போய் கண்டபடி புளுகி தொலைக்கிறார் என்று செய்தியில் தேட இந்த செய்தி நேரம் பார்த்து வர அதை நான் இணைக்க நாராயானா இவ்வளவு குழப்பம் அதுவும் ஐந்து பக்கம் நாராயணா மன்னித்துகொள்.

ஏன் சிறிதரன் கொமிசன் தரேல்லையோ, திடீரென நாராயண புராணம்🤣.

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:

இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....

15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

ஏன் சிறிதரன் கொமிசன் தரேல்லையோ, திடீரென நாராயண புராணம்🤣.

 

யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?

  • கருத்துக்கள உறவுகள்

வடையை ரூ.800க்கு விற்றவர் கைது!

வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார். 
 
அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார். 

இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. 
 
பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
 
இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

 

https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087

  • கருத்துக்கள உறவுகள்

ஓ… அப்ப சம்பவம் புதிது…. 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, MEERA said:

ஓ… அப்ப சம்பவம் புதிது…. 

FnoQfA6aMAEc7Fd.jpg

"ஊசிப் போன வடை" என்று, யாரோ... உருட்டிக் கொண்டு திரிந்தார்கள். 😂 எல்லாம், பொய்யா... கோப்பால். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

FnoQfA6aMAEc7Fd.jpg

"ஊசிப் போன வடை" என்று, யாரோ... உருட்டிக் கொண்டு திரிந்தார்கள். 😂 எல்லாம், பொய்யா... கோப்பால். 🤣

நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று. 

ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை.

ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று. 

ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை.

ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0

நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று  தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂
நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?

இல்லை இங்கே யாழ் களத்தில் நீங்கள் முதுகு சொறியும், உள்ளடிவேலைகள் பார்க்கும், உங்களுக்கு கொமிசன் இரக்கும் - இலங்கை தமிழ் அரசியல்வாதி.

2 hours ago, MEERA said:

நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று. 

ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை.

ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0

என்னைய்யா இது….

இப்டீக்கா திருப்பினா புதுசு…

அப்டீக்கா திருப்பினா பழசு….

என மாறி…மாறி….இரெண்டு “தரவுச் சிங்கங்கள்” உருட்டினா …..

எதையிம் வெள்ளந்தியாக நம்பும் ஒரு அப்பாவி…அதை நம்பும்தானே🤣

2 hours ago, தமிழ் சிறி said:

நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று  தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂
நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂

🤣 சீதை தீக்குளித்து தன்னை நிரூபித்தால்….

நான் ஒரு டி குடித்தாவது என்னை நிருபிக்கலாம்….

எங்க பில் 800 ரூபாய்க்கு வருமோ என அஞ்சுகிறேன்🤣

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்கா அரசாங்கமே அப்படித்தானே இயங்குது. உதாரணத்துக்கு பேராதனை தாவரவியற் பூங்காவுக்கு உள்நுழைய வெளிநாட்டு பாஸ்போட் காரரிடம் 3000 ரூபா என்றால் உள்ளூர் ஆக்களுக்கு 200 ரூபா.

அரசாங்கமே அப்படி இருக்கும் போது உள்ளூர் வியாபாரிகள்..????

Peradeniya Royal Botanical Garden – Kandy Entrance Ticket Fee -2022

Bellow, all the ticket prices have been updated on 10th September 2022. Peradeniya botanical garden has different ticket prices for local, and foreign travelers. No discount for travelers from SAARC countries.

Per person entrance tickets for foreign travelers

There is no discount for travelers from SAARC countries.

Foreign adults (Age 12 years and above 12 years): 3000LKR (9US$)

 School children & university students (Upon producing satisfactory proof of the same to the curator of the Botanical garden) : 1200LKR (3.5US$)

Foreign children (Age 5 years and between 5 years to 12 years): 1500LKR (5US$)

Foreign infant and toddler (Bellow 5 years): Free entry

Per Person entrance ticket price for local travelers

Local adults (Age 12 years and above 12 years): 200LKR

Local children (Age 5 years and between 5 years to 12 years): 30LKR

Local infant and toddler (Bellow 5 years): Free entry

Local Adults over the age of sixty (60) on producing national identity card: 20LKR

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

👇 வங்குரோத்தான நாட்டை நோக்கி வரும் சுற்றுலாப் பயணிகள் – நிலாந்தன்! 👇

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

👇 வங்குரோத்தான நாட்டை நோக்கி வரும் சுற்றுலாப் பயணிகள் – நிலாந்தன்! 👇

 

6 hours ago, தமிழ் சிறி said:

சில மாதங்களுக்கு முன்பு பச்சை மிளகாய் ஒரு கிலோ 2000 ரூபாய்க்கு மேல் போனது.ஆனால் இப்பொழுது உள்ளூர் சந்தைகளில் 100 ரூபாய்க்கு சற்று அதிகமாகப் போகின்றது. அப்படித்தான் தக்காளிப் பழம் பெரியது ஒரு கிலோ 800 ரூபாய்க்கு மேல் போனது. இப்பொழுது 50 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை போகின்றது.

மரக்கறி விலை குறைகிறது. கடல் உணவுகளின் விலையும் குறைக்கின்றது. அரசாங்கம் சாதாரண சிங்கள மக்களைக் கவரும் நோக்கத்தோடு நெத்தலிக் கருவாடு, சீனி,பருப்பு போன்றவற்றின் விலைகளை அவ்வப்போது குறைத்து வருகின்றது.ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் பொழுது மேலும் பல சலுகைகளை எதிர்பார்க்கலாம்.

 

சொல்வது கோஷானாக இருந்தால் சேற்றை வாரி இறைகலாம். நிலாந்தனும் இப்படி எழுதினால் என்ன செய்வது🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nedukkalapoovan said:

சொறீலங்கா அரசாங்கமே அப்படித்தானே இயங்குது. உதாரணத்துக்கு பேராதனை தாவரவியற் பூங்காவுக்கு உள்நுழைய வெளிநாட்டு பாஸ்போட் காரரிடம் 3000 ரூபா என்றால் உள்ளூர் ஆக்களுக்கு 200 ரூபா.

இந்த நடைமுறை வேறுநாடுகளிலும் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vaasi said:

இந்த நடைமுறை வேறுநாடுகளிலும் உள்ளது.

இலங்கை செய்யலாமோ அது தான் பிரச்சனை🤣

பேராதனை தாவரவியல் பூங்கா உட்பட மக்கள் விரும்பி பார்க்கும் இடங்களுக்கு இலங்கையர்களுக்கு மிகவும் குறைந்த கட்டணமும் வெளிநாட்டவர்களுக்கு அதிக கட்டணமும் வைத்திருப்பது சரியான நடவடிக்கையாகும் அதுவும் குடியேறிய வெளிநாட்டு கனவான்கள் ஆடம்பரத்திற்காக செலவளிக்கும் செலவுக்கு இந்த இலங்கையின் அதிக கட்டணம் ஒரு தூசி.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே குறிப்பிடப்பட்ட ( கள உறவுகளால்) வாசனைத்திரவியங்களுக்கு விசிறி அடிப்பதுடன் ஒப்பிடும் போது தூசி தான்.

அதேபோல் 8,000/= விற்கு யாழ்ப்பணத்தில் ஜூஸும் குடிப்போம்.

ஆனால் வீடியோ வெளி வந்தவுடன் சமஸ்தானமே ஆடி உள்ளது வேடிக்கை.

அப்பாவி மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மட்டும் இங்கு பலர் உணரவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சுற்றுலாப் பயணிகளிடம் அதிகளவு கட்டணம் அறவிட்டால் நடவடிக்கை!

நாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் அதிகளவு கட்டணம் அறவிடும் முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் வாடகை வாகன சாரதிகளை கைது செய்யும் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டதரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
அவ்வாறான நபர்களை அடையாளம் காண்பதற்காக சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிகமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பயணிக்கும் பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
 

http://www.samakalam.com/சுற்றுலாப்-பயணிகளிடம்-அத/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.