Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி

11-9.jpg

ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார்.

இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய இராணுவம்

சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையர்கள் பலி

ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.

https://akkinikkunchu.com/?p=273802

  • கருத்துக்கள உறவுகள்

👇 எல்லா இராணுவத்தினரும்... ரஷ்யா, உக்ரேனுக்கு போயிருக்கின்றார்கள் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war

South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away.

https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war

உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

👇 எல்லா இராணுவத்தினரும்... ரஷ்யா, உக்ரேனுக்கு போயிருக்கின்றார்கள் போலுள்ளது.

5 hours ago, தமிழ் சிறி said:

👇 எல்லா இராணுவத்தினரும்... ரஷ்யா, உக்ரேனுக்கு போயிருக்கின்றார்கள் போலுள்ளது.

எல்லாம் ப‌ண‌த்துக்காக‌ தான்

ஈழ‌ ம‌ண்ணில் சிங்க‌ள‌ ராணுவ‌ம் நாட்டு ப‌ற்றினால் போர் புரிந்த‌வையா இல்ல‌வே இல்லை எல்லாம் காசுக்காக‌ ஈழ‌ ம‌ண்ணில் வ‌ந்து ப‌ல‌ ஆயிர‌ம் சிங்க‌ள‌ இராணுவ‌ம் ப‌லி ஆனார்க‌ள்.........................

ர‌ஸ்சியா விவ‌கார‌த்தில் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் ர‌ஸ்சியா போகாம‌ல் இருப்ப‌து ந‌ல்ல‌ம்......................................

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இருந்து தப்பித்து புலம்பெயரும் பலரும் இனி ரசிய இராணுவ முன்னரக்குகளில். எப்படி இருந்த ரசியா ....

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள ராணுவத்தில் முக்காவாசிக்கு சிங்களம் ஒன்றை தவிர மற்ற மொழிகள் வேப்பம் காயே  ரஸ்யாவில் என்ன மொழியில் கதைத்து இருப்பாங்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war

South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away.

https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war

உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 

இந்த ஒலிநாடாவை நான் கேட்கவில்லை நெடுக்ஸ். நீங்கள் கேட்டீர்களா?

ஏன் என்றால் அதன் சிறு விபரிப்பில்

Hundreds of South Asians are fighting Russia’s war on Ukraine, including from India, Nepal, and Sri Lanka. 

என உள்ளது. இதன் அர்த்தம் நூற்றுக்கணக்கான தென்னாசியர்கள் உக்ரேனில் நடக்கும் ரஸ்யாவின் போரில் பங்குறுகிறனர் என்பதல்லாவா?

பிற்சேர்க்கை

ஒலிப்பதிவை கேட்டேன், இதில் சிலாகிக்கபடுவது கிட்டதட்ட முழுவதும் ரஸ்யா போனவர்கள் பற்றியே. எனிலும் உக்ரேனுக்கும் இப்படி போவதாக இரெண்டு இடத்தில் சொல்லவும் படுகிறது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, பெருமாள் said:

சிங்கள ராணுவத்தில் முக்காவாசிக்கு சிங்களம் ஒன்றை தவிர மற்ற மொழிகள் வேப்பம் காயே  ரஸ்யாவில் என்ன மொழியில் கதைத்து இருப்பாங்கள் ?

புலம்பெயர் தமிழர் எல்லாம் ஜேர்மன், ஏனைய ஐரோப்பிய நாடுகள், பலர் இங்கிலாந்தில் எந்த மொழி பேசினார்களோ - அந்த மொழியில் என ஊகிக்கிறேன்.

ஆனால் இவர்களுக்கு மொழி ஒரு பெரிய தடை என்கிறது அந்த பதிவு. இந்தியாவில் ஒருத்தரை சண்டை பிடிக்கும் பகுதியில் கிளீனர் என அழைத்துப்போய் - சண்டையே பிடிக்க வைத்துள்ளார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

சிங்கள ராணுவத்தில் முக்காவாசிக்கு சிங்களம் ஒன்றை தவிர மற்ற மொழிகள் வேப்பம் காயே  ரஸ்யாவில் என்ன மொழியில் கதைத்து இருப்பாங்கள் ?

வெள்ளைக்காரன் ஆசியாவுக்கு வந்து இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி வழங்க மிகவும் கஸ்டப்பட்டவனாம்..லெவ்ட்,ரைட் பயிற்றுவிக்கவே பெரிய கஸ்டப்பட்டவனாம்...பிறகு ஒரு காலுக்கு லெஞ்சியை(சீலை துணியை) கட்டிவிட்டு....லெஞ்சி கக்குள்ள,நிக்காங் கக்குள்ள என பயிற்சி வழங்கி தங்களது பயிற்சியை வழங்கினார்கள் என் சொல்வார்கள்...

வெடி வைக்க ஏன் மொழி ?டாங்கிக்கு பக்கத்தில போ முன்னுக்கு யார் வந்தாலும் டிரிகரை அமுக்கு என கை பாசையில் சொல்லி கொடுத்தா சரி தானே .

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, putthan said:

இது அழகு பதில் .

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, putthan said:

வெள்ளைக்காரன் ஆசியாவுக்கு வந்து இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி வழங்க மிகவும் கஸ்டப்பட்டவனாம்..லெவ்ட்,ரைட் பயிற்றுவிக்கவே பெரிய கஸ்டப்பட்டவனாம்...பிறகு ஒரு காலுக்கு லெஞ்சியை(சீலை துணியை) கட்டிவிட்டு....லெஞ்சி கக்குள்ள,நிக்காங் கக்குள்ள என பயிற்சி வழங்கி தங்களது பயிற்சியை வழங்கினார்கள் என் சொல்வார்கள்...

வெடி வைக்க ஏன் மொழி ?டாங்கிக்கு பக்கத்தில போ முன்னுக்கு யார் வந்தாலும் டிரிகரை அமுக்கு என கை பாசையில் சொல்லி கொடுத்தா சரி தானே .

க‌ருணாவுட‌ன் இருந்த‌ ப‌டிப்பு அறிவு இல்லாத‌ பிள்ளையான் அர‌சிய‌லில் பெரிய‌ இட‌த்தில் இருக்கும் போது 

கூலிக்கு மார் அடிக்கும் சிங்க‌ள‌வ‌ன் ராங்கிக்குள் ஏறி இருந்து கொண்டு  வ‌ட்டின‌ அமுக்கிற‌து  சின்ன‌ வேலை
புத்த‌ன் மாமா🤣😁😂.......................................

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பையன்26 said:

கூலிக்கு மார் அடிக்கும் சிங்க‌ள‌வ‌ன் ராங்கிக்குள் ஏறி இருந்து கொண்டு  வ‌ட்டின‌ அமுக்கிற‌து  சின்ன‌ வேலை
புத்த‌ன் மாமா🤣😁😂.......................................

கூலிக்கு மார் அடிக்கும்சிங்களவன் என்று சொல்லப்படாது...இது எங்களது சகோதரயாக்களின் தூர நோக்கு அரசியல் பார்வை(ராஜதந்திரம்.சாணக்கியம்) என்ற கோணத்தில் நீங்கள் பார்க்க வேணும் இன்று சிறிலங்கா அமேரிக்கா .இந்தியா போன்ற நாடுகளின் ஆதிக்கத்தினுள் வர போகின்றது இதை தடுத்து நிறுத்த ரஸ்யா,சீனா போன்ற  நாடுகளில் சகோதரயாக்கள் இராணுவ பயிற்சி எடுக்க வேணும்....இதில் மாற்று கருத்து ஒன்றுபட்ட சிறிலங்கா அம்பிகளுக்கு இருக்காது...அமெரிக்கா வந்து இறங்க ரஸ்யாவில் பயிற்சி பெற்ற தளபதிகள் எங்கன்ட லங்கா மாதாவை காப்பாற்றுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

வெள்ளைக்காரன் ஆசியாவுக்கு வந்து இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி வழங்க மிகவும் கஸ்டப்பட்டவனாம்..லெவ்ட்,ரைட் பயிற்றுவிக்கவே பெரிய கஸ்டப்பட்டவனாம்...பிறகு ஒரு காலுக்கு லெஞ்சியை(சீலை துணியை) கட்டிவிட்டு....லெஞ்சி கக்குள்ள,நிக்காங் கக்குள்ள என பயிற்சி வழங்கி தங்களது பயிற்சியை வழங்கினார்கள் என் சொல்வார்கள்...

வெடி வைக்க ஏன் மொழி ?டாங்கிக்கு பக்கத்தில போ முன்னுக்கு யார் வந்தாலும் டிரிகரை அமுக்கு என கை பாசையில் சொல்லி கொடுத்தா சரி தானே .

தமிழ் ஏரியாவுக்கு வந்து, ஒரு காலில் சீலையும், ஒரு காலில் ஓலையும் கட்டி விட்டு - ஓலைக்கால், சீலைக்கால் என பழக்கியதாக எங்கள் ஊரில் சொல்வார்கள்.

இரு இனங்களும் தம்மை தாமே நக்கல் அடிப்பதில் வல்லவர்கள் போலும்.

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, putthan said:

கூலிக்கு மார் அடிக்கும்சிங்களவன் என்று சொல்லப்படாது...இது எங்களது சகோதரயாக்களின் தூர நோக்கு அரசியல் பார்வை(ராஜதந்திரம்.சாணக்கியம்) என்ற கோணத்தில் நீங்கள் பார்க்க வேணும் இன்று சிறிலங்கா அமேரிக்கா .இந்தியா போன்ற நாடுகளின் ஆதிக்கத்தினுள் வர போகின்றது இதை தடுத்து நிறுத்த ரஸ்யா,சீனா போன்ற  நாடுகளில் சகோதரயாக்கள் இராணுவ பயிற்சி எடுக்க வேணும்....இதில் மாற்று கருத்து ஒன்றுபட்ட சிறிலங்கா அம்பிகளுக்கு இருக்காது...அமெரிக்கா வந்து இறங்க ரஸ்யாவில் பயிற்சி பெற்ற தளபதிகள் எங்கன்ட லங்கா மாதாவை காப்பாற்றுவார்கள்

இது உங்களுக்கு விளங்கும் என்பதால், உங்களுக்கும், உங்களை ஒத்தோருக்கும் மட்டும் எழுதுகிறேன்.

அண்மையில் ஒரு பிரபல தாராளவய, இடது சார் (இடது சாரி அல்ல) எழுதிய Conservatism: The Fight for a Tradition என்ற புத்தகத்தை, (அதாவது இடதுசாரிகள், வலதுசாரியத்தை புரிந்துகொள்ள என ஒரு இடது சார் சிந்தனையாளர் எழுதிய புத்தகத்தை) புரட்டும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த இடது சார் சிந்தனையாளர் யாருமல்ல - வலதுசாரிகளின் தங்க தலைவன் பொரிஸ் ஜோன்சனுக்கு மாமன், Edmund Fawcett.

200 வருட அமெரிக்கா, யூகே வலது அரசியலை அலசுகிறது இந்த புத்தகம்.

இந்த காலகட்டத்தில் அநேக காலம் இரு நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது - வலதுசாரிகள்.

ஆனால் தாமே கெட்டிக்காரர், வல்லமையானோர், முற்போக்குவாதிகள் எனவும், வலதுசாரிகள் மோடயர், அடிமைபுத்தியினர், பணப்பேய்கள், பிற்போக்கினர் எனவும் சொல்லிகொள்வார்கள் இடதுசாரிகள். இரெண்டு நாட்டிலும்.

இந்த புத்தகத்தின் முகவுரையில், வலதுசாரிகளை நோக்கி இவர் ஒரு கேள்வியை கேட்கிறார்:

'if we're so smart, how come we're not in charge?

நாம் அவ்வளவு கெட்டித்தனமானவர்கள் என்றால் நாம் ஏன் அதிகாரத்தில் இல்லை?

——————

இதை படித்த போது என் மனதில் தோன்றிய எண்ணம், உங்கள் பதிவை வாசித்ததும் மீள உதித்தது:

எல்லாளன் காலத்தில் இருந்து ஒவ்வொரு சிங்கள படை எடுப்பிலும், 1948க்கு பின் அத்தனை அரசியல் போராட்டதிலும் தோற்றுக்கொண்டே வருகிறோமே;

If we are so smart, how come  we haven’t even won at least once?

நாம் அவ்வளவு கெட்டிக்காரர், அவர்கள் அவ்வளவு மோடையர்கள் என்றால் - ஏன் நாம் ஒரு தடவை கூட ஒரு அரசியல் வெற்றியை அடையவில்லை?

கட்டாயம் வாசிப்போர் பதில் எழுத வேண்டும் என்பதில்லை. சிந்தனையை தூண்டினால் போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குட்டி ஸ்டோரி 

50 வயதான எல்லாளன் பெரும் படையுடன். 

எதிரே, சிறிய படையுடன் - ஆனால் பதின்ம வயதின் முடிவில் உள்ள கட்டேறிய உடலுடன் டுட்டு கெமுனு.

தந்திரமாக வீரர்கள் மாய வேண்டாம் - நீயும் நானும் மட்டும் போரிடுவோம் என்கிறான் கெமுனு.

சின்ன பயல், அதுவும் மோட்டு குடியினன், கவுங் தின்பதில் மட்டும் சூரன் - போரின் முதல் தவறாகிய எதிரியை கீழ் மதிப்பீடு செய்வதை செய்கிறான் மாமன்னன் எல்லாளன்.

பெரும் படையை பாவிக்காமலே தோற்று, இறந்து போகிறான்.

தீவு முழுவதையும் ஆண்ட கடைசி தமிழ் அரசு முடிவுக்கு வருகிறது.

எல்லாளனில் தொடங்கியது - புத்தன் வரை தொடர்கிறது.

கெமுனுக்கள் வென்று கொண்டே இருக்கிறார்கள் 🥲.

——******———

(போர் நடந்த விதம் வரலாறா தெரியவில்லை, தமிழர் தரப்பில் கர்ணபரம்பரையாக வருகிறது - வெறும் கதையே என்றாலும் - செய்தி கனமானது).

  • கருத்துக்கள உறவுகள்

Sri-Lanka-1-600x375.jpg

இராணுவ வீரர்களின் கவனத்திற்கு!

முறையான விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத மற்றும் சட்டவிரோதமான முறையில் சேவையை விட்டு வெளியேறியுள்ள இராணுவத்தினருக்கு ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் மே மாதம் 20 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது மன்னிப்புக் காலத்தின் போது, தமது படையணி தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காத அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உரிய ஆவணங்களுடன் தத்தமது படையணி தலைமையகத்திற்கு மட்டும் சமூகளிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இராணுவ சேவையில் இருந்து வெளியேறும் அடிப்படை அனுமதி வழங்கல் நடவடிக்கை, 72 மணித்தியலங்களுக்குள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ அடையாள அட்டை அல்லது இராணுவ அடையாள அட்டை தொலைந்து விட்டது எனின் சமீபத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட பொலிஸ் அறிக்கையின் பிரதி, தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதி பத்திர பிரதி, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள், வரவு வைக்கப்பட்டுள்ள வங்கி புத்தகத்தின் பிரதி ஆகியவற்றை கொண்டுவருமாறு இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

மேலும், முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காமை தவிர வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் சம்பந்தப்படாதவர்கள் மற்றும் முறையான விடுமுறை இன்றி தற்போது வெளிநாட்டில் இருக்கும் இராணுவ உறுப்பினர்கள் மீண்டும் சமூகமளிக்காது தனது படையணியுடன் தொடர்பு கொண்டு இந்த பொது மன்னிப்புக் காலத்தின் போது சட்டரீதியாக தமது சேவையை விட்டு வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது.

https://athavannews.com/2024/1378764

  • கருத்துக்கள உறவுகள்

vijaya-thasa-rajapaksha-1.jpg

உக்ரேன் – ரஷ்ய போரில் இலங்கை இராணுவம்? : நாளை நாடாளுமன்றில் அறிக்கை!

உக்ரேன் ரஷ்ய போரில் இலங்கை இராணுவத்தினர் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பாக பொதுபாதுகாப்பு அமைச்சரினால் நாளை நாடாளுமன்றில் அறி;க்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ரஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்தத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரங்கள் ஊடாக இவ்வாறான மோசடி இடம் பெற்றுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

தொழில்வாய்ப்பை பெற்றுத்தருவதாகக்கூறி ஒரு சில தரப்பினர் மோசடி செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வெளிவிவகார அமைச்சு இது தொடர்பான காரணிகளை ஆராய்ந்து வருகின்றது. இந்த விடயம் தொடர்பான முழுமையான அறிக்கை பொதுபாதுகாப்பு அமைச்சரினால் நாளை கையளிக்கப்படும்” என நீதியமைச்சர் விஜயதாச ரஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1379622

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, தமிழ் சிறி said:

நீதியமைச்சர் விஜயதாச ரஜபக்ஷ தெரிவித்துள்ளார்

விசாவும் மோசடி செய்தா வழங்கப்பட்டது???

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nunavilan said:

விசாவும் மோசடி செய்தா வழங்கப்பட்டது???

சிங்களம் தான் தப்ப... வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரங்கள்  மீதுபழியை போட நினைக்கின்றது. எத்தனை சுத்து மாத்துகளை செய்தவர்களுக்கு... இது  ஜூஜுப்பி Matter. 😂 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இராணுவத்தினர் உக்ரைன் - ரஷ்யா யுத்தகளத்தில் மோதிக்கொள்கிறார்கள் -தயாசிறி ஜயசேகர

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக போராடிய இலங்கை இராணுவத்தினர்  இன்று உக்ரைன் மற்றும் ரஷ்யா இராணுவத்தில் சேர்ந்து மோதிக் கொள்கிறார்கள்.

இராணுவ முகாம் உதவியாளர்களாக இலங்கையர்கள் அழைக்கப்பட்டு பலவந்தமான முறையில் யுத்த களத்துக்கு  அனுப்பி வைக்கப்படுகிறார்கள். சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்படும் இச்செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24)  இடம்பெற்ற அமர்வின் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

இலங்கை இராணுவ சேவையில் இருந்து ஓய்வுப் பெற்ற இராணுவத்தினர்  உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இராணுவ முகாம் உதவியாளர் சேவைக்கு அழைத்து பின்னர் பலவந்தமான முறையில் யுத்த களத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

அண்மையில் குசந்த குணதிலக என்ற ஓய்வுப்பெற்ற இராணுவ அதிகாரி உட்பட இருவர் பலவந்தமான முறையில்  யுத்த தாங்கிக்குள்  சேவைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள்.இவ்வாறான நிலையில்  இரு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளார்.குசந்த குணதிலக என்பவர் காணாமல் போயுள்ளார்.

உக்ரைன் மற்றும் ரஷ்ய இராணுவ சேவையில் இலங்கையர்களுக்கு  தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு பாரிய மோசடிகள் முன்னெடுக்கப்படுகிறது.ஒரு நபரிடமிருந்து தலா 18 இலட்சம் ரூபா பெற்றுக்கொள்ளப்படுகிறது. சமூக வலைத்தளங்கள் ஊடாகவே தொழில் வாய்ப்புக்கான  விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விடுதலை புலிகள் அமைப்பை இல்லாதொழித்த எமது இராணுவத்தினர் இன்று ரஷ்யா - உக்ரைன் யுத்த களத்தில் மோதிக் கொள்கிறார்கள்.பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள். ஆகவே இவ்விவகாரம் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

இதன்போது எழுந்து பதிலளித்த நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர முக்கியமானதொரு விடயத்தை முன்வைத்துள்ளார். இலங்கை இராணுவத்தினர் இலங்கையர்கள் உக்ரைன் மற்றும் ரஸ்யா இராணுவத்தில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்காக செல்கிறார்கள். 

இதன் ஊடாக மோசடிகள் இடம்பெறுவதாக குறிப்பிடப்படுகிறது. இவ்விடயம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சு மட்டத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்விடயம் தொடர்பில் பொது மக்கள்  பாதுகாப்பு அமைச்சுடன் கலந்துரையாடி முழுமையான விபரத்தை அறிவிக்கிறேன் என்றார்.

இலங்கை இராணுவத்தினர் உக்ரைன் - ரஷ்யா யுத்தகளத்தில் மோதிக்கொள்கிறார்கள் -தயாசிறி ஜயசேகர | Virakesari.lk

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக போராடிய இலங்கை இராணுவத்தினர்  இன்று உக்ரைன் மற்றும் ரஷ்யா இராணுவத்தில் சேர்ந்து மோதிக் கொள்கிறார்கள்.

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேனிலும் சிங்கள ராணுவம் ரஸ்யாவிலும் சிங்கள ராணுவம் இனவாத சிங்கள அரசே அந்நிய செலவாணிக்கு அனுப்பிவைத்து விட்டு ரஸ்சயா வில் சிங்கள ராணுவம் மேற்குலக நாடுகளின் கண்களை உறுத்த தொடங்கியவுடன் தங்களுக்கு தெரியாது அப்படி இப்படி சரடு விடுகிறார்கள் .

இறுதிக்கட்ட சண்டைக்கு மேற்குலக நாடுகள் நவீன ஆயுதப்பயிற்சிகள்  கொடுத்தவை சிங்கள ராணுவத்துக்கு இப்ப அந்த நவீன ராணுவ பயிற்சி மேற்குலகுக்கு எதிராக திரும்பி உள்ளது .நல்ல விடயம் நடக்குது .

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, குமாரசாமி said:

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.

மினக்கெட்டு உக்கிரேனுக்கு போய் கொல்லுற தெய்வம் பாதிக்கப்பட்ட தமிழரைக் காப்பாற்றி  உதவி செய்திருக்கலாலாம்.  காப்பாறுவதை விட கொல்லுறது தெய்வத்துக்கு சுகமான  வேலை போல இருக்கு  அல்லது தமிழர் வழிபடுற தெய்வமும் தமிழரை போல்  மொக்கு தெய்வம் போல இருக்கு. 😂

  • கருத்துக்கள உறவுகள்

பலவந்தமாக போர் வலயத்திற்கு அனுப்பப்படும் இலங்கையர்கள் தொடர்பில் விசாரணை

ஆட்கடத்தல் குழுவொன்று ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை ரஷ்யாவிற்கு அனுப்பி வைத்து ஆட்சேர்ப்பு செய்வதாக கிடைத்த தகவல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு இன்று (24) நாடாளுமன்றத்தில் பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவிக்கையில், 

பலவந்தமாக போர் வலயத்திற்கு அனுப்பப்படும் இலங்கையர்கள் தொடர்பில் விசாரணை | Ukrain Russian War Joint Srilankans

ரஷ்ய போரில் இலங்கையர்கள்

ரஷ்ய போரில் நமது வீரர்கள் பலர் பயன்படுத்தப்படுகின்றார்கள். குசாந்த குண சின்ஹா என்ற நபர் பலரை அழைத்துச் சென்று ரஷ்ய இராணுவத்தில் இணைத்துள்ளார். இவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது குஷாந்த குணசிங்கவை காணவில்லை. இந்தியாவில் உள்ள வழக்கறிஞர் ஒருவர் இந்த ஆட்கடத்தலை செய்து வருகின்றார். இவரிடமிருந்து பதினெட்டு இலட்சத்தை பெற்று இராணுவ வீரர்கள் ரஷ்ய மற்றும் உக்ரைன் படைகளுடன் இணைந்துள்ளனர்.

இலங்கை மக்கள் இரு தரப்பினராக பிரிந்து தற்போது சண்டையிட்டு வருகின்றனர். எத்தனை பேர் இதுவரை அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்பது தெரியாது. இவர்களில் பலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.

பலவந்தமாக போர் வலயத்திற்கு அனுப்பப்படும் இலங்கையர்கள் தொடர்பில் விசாரணை | Ukrain Russian War Joint Srilankans

போர் வலயத்திற்கு அனுப்பப்படும் இலங்கையர்கள்

இது முற்றிலும் சட்டவிரோதமானது. நாட்டில் வருமானம் இல்லாத காரணத்தினால் நமது இராணுவத்தில் உள்ளவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர்.

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் தொடர்பாக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது என்றும் கேள்வி எழுப்புகின்றேன். இந்த மக்கள் பலவந்தமாக போர் வலயத்திற்கு அனுப்பப்படுகின்றார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

https://tamilwin.com/article/ukrain-russian-war-joint-srilankans-1713965289

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, island said:

மினக்கெட்டு உக்கிரேனுக்கு போய் கொல்லுற தெய்வம் பாதிக்கப்பட்ட தமிழரைக் காப்பாற்றி  உதவி செய்திருக்கலாலாம்.  காப்பாறுவதை விட கொல்லுறது தெய்வத்துக்கு சுகமான  வேலை போல இருக்கு  அல்லது தமிழர் வழிபடுற தெய்வமும் தமிழரை போல்  மொக்கு தெய்வம் போல இருக்கு. 😂

அம்பு அடிக்கடி வெளியில் தெரியாமல் பார்த்து கொள்ளுங்கள். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.