Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் ஹோபோக்கன் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில்(Supermarket) பொருட்களை வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்ற இந்திய மாணவிகள் இருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 20 வயது மாணவியும், குண்டூரைச் சேர்ந்த 22 வயது மாணவியுமே கைதாகியுள்ளனர்.

இவர்கள் இருவரும் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உயர்கல்வி படித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் விசாரணை

குறித்த விடயம் தொடர்பாக பல்பொருள் அங்காடி ஊழியர்கள் ஹோபோக்கன் நகர பொலிஸாருக்கு  தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இரு மாணவிகளையும் கைது செய்து விசாரித்துள்ளனர்.

அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது | Two Indian Students Arrested In The Us

அதில் ஒரு மாணவி காசு கொடுக்காத பொருளுக்கு இரு மடங்கு பணத்தை தந்து விடுவதாகவும், மற்றொரு மாணவி இது போன்று இனி செய்ய மாட்டேன் என்று கதறி உள்ளார்.

இருப்பினும் தவறு செய்திருப்பது உறுதியானமையினால் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

https://tamilwin.com/article/two-indian-students-arrested-in-the-us-1713462403

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவிற்கு புதிதாக கல்வி கற்க வந்த மாணவிகள் போலுள்ளது.
சிறிய களவு செய்யப் போய்… பெரிதாக அவமானப்பட்டு நிற்கிறார்கள்.
கையில் விலங்கு மாட்டியதை…. வாழ்க்கை முழுக்க மறக்க மாட்டார்கள்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

அமெரிக்காவிற்கு புதிதாக கல்வி கற்க வந்த மாணவிகள் போலுள்ளது.
சிறிய களவு செய்யப் போய்… பெரிதாக அவமானப்பட்டு நிற்கிறார்கள்.
கையில் விலங்கு மாட்டியதை…. வாழ்க்கை முழுக்க மறக்க மாட்டார்கள்.

சிறிய வயது பெட்டைகள் இந்தா பார் செய்து காட்டுகிறேன் என்று சவால் விட்டுட்டுப் போயிருப்பார்கள்.

மூட்டை மூட்டையாக தூக்கிக் கொண்டு போறதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களை மட்டும் மடக்கி பிடித்திருக்கிறார்கள்.

கட்டாருடன் கதைத்து 7 பேரை விடுதலை செய்த மாதிரி ஜெய்சங்கர் வந்து கதைத்து இவர்களையும் விடுவிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

சிறிய வயது பெட்டைகள் இந்தா பார் செய்து காட்டுகிறேன் என்று சவால் விட்டுட்டுப் போயிருப்பார்கள்.

மூட்டை மூட்டையாக தூக்கிக் கொண்டு போறதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களை மட்டும் மடக்கி பிடித்திருக்கிறார்கள்.

கட்டாருடன் கதைத்து 7 பேரை விடுதலை செய்த மாதிரி ஜெய்சங்கர் வந்து கதைத்து இவர்களையும் விடுவிக்க வேண்டும்.

சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா. 

இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு.

ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, விசுகு said:

சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா. 

இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு.

ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.

வயது குறைந்த பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செய்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ரு 80 வடை போல பாரிய களவு எண்டால் கூட பரவாயில்லை🤣

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

ரு 80 வடை போல பாரிய களவு எண்டால் கூட பரவாயில்லை🤣

ஏன் ராசா ஏன்??

வடையை  காவிக்கொண்டு??☺️

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

சிறிய வயது பெட்டைகள் இந்தா பார் செய்து காட்டுகிறேன் என்று சவால் விட்டுட்டுப் போயிருப்பார்கள்.

மூட்டை மூட்டையாக தூக்கிக் கொண்டு போறதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களை மட்டும் மடக்கி பிடித்திருக்கிறார்கள்.

கட்டாருடன் கதைத்து 7 பேரை விடுதலை செய்த மாதிரி ஜெய்சங்கர் வந்து கதைத்து இவர்களையும் விடுவிக்க வேண்டும்.

நீங்கள் ஒரு சட்டத்தரணியை வைத்து  வெளியில் எடுத்து விட முயற்சித்தால் என்ன??? 🤣😀 உங்கள் சகோதரி மாதிரி நினைத்து உதவுங்கள்  ... 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kandiah57 said:

நீங்கள் ஒரு சட்டத்தரணியை வைத்து  வெளியில் எடுத்து விட முயற்சித்தால் என்ன??? 🤣😀 உங்கள் சகோதரி மாதிரி நினைத்து உதவுங்கள்  ... 

மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது.

எனவே வட கரோலினாவில் நிற்கிறேன்.

எதுக்கும்  @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை.

ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன்.

இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை

வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா. 

இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு.

ஓம் களவு செய்ய துணிந்த இவர்கள் மீது மிகச் சரியான நடவடிக்கை எடுக்கபட்டதால் களவு எடுப்பதில் ருசிப்பட்டு தொடர்ந்தும் களவு செய்யும்  வாய்ப்பு தடுக்கபட்டுவிட்டது .இனி இந்தியா சென்று பதவியில் இருக்கும் போது மக்களிடம் ஊழல் லஞ்சம் என்று கொள்ளையடிக்க மாட்டார்கள் 🙏

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான தவறில், போலீஸ் பாரபட்சமாக இருப்பதாக UK இல் இளவட்டம் சொல்கிறது.

முக்கியமாக, UK இல்  தனியார் பாடசாலையில் படிப்பவர்கள் இப்படினயானவற்றில் எட்டுப்பட்டால், எச்சரிக்கையோடு  விடுவிக்கப்படுகிறார்கள்.

அனால், அரச பாடசாலைகள் என்றால், முறையாக வழக்கு பதிந்து. சட்டமன்றம் போய், தீர்ப்பின் படி முடிவு இருப்பதாக.

(தனியார் பாடசாலை என்றால் பெரும்பான்மை வெள்ளைக்கள், மற்ற இனங்களும் இருக்கிறது, அனால் சிறிய தொகை. அதனால், நிற வேறுபாடும் காரணமாக இருக்கலாம்.)

இப்படி செய்து, மற்ற  பாடசாலைகளில்  படித்த, படிக்கும் பல இளவட்டத்தின் வாழ்க்கை பாழாகி போய்விட்டது என்று.

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர் விசாவில் இங்கும் அள்ளுப்பட்டு வந்து இருக்கிறார்கள் வந்த பின்தான் இங்கிலாந்தின் உண்மை முகம் தெரிந்து ஆடிப்போயுள்ளார்கள் ஈஸ்ட்காம் பக்கம் கோவில்களில் மதியம் வழங்கும் இலவச உணவுக்கு அடிபிடியாய் நிற்பார்கள் அநேகமானவர்கள் ஆந்திரா கன்னடா பக்கம் இருந்து வந்தவர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

மாணவர் விசாவில் இங்கும் அள்ளுப்பட்டு வந்து இருக்கிறார்கள் வந்த பின்தான் இங்கிலாந்தின் உண்மை முகம் தெரிந்து ஆடிப்போயுள்ளார்கள் ஈஸ்ட்காம் பக்கம் கோவில்களில் மதியம் வழங்கும் இலவச உணவுக்கு அடிபிடியாய் நிற்பார்கள் அநேகமானவர்கள் ஆந்திரா கன்னடா பக்கம் இருந்து வந்தவர்கள். 

அவர்களுக்கு தானே கொடுக்கப்படவேண்டும். அது தானே தர்மமும் அன்னதானத்தின் நோக்கமும் சகோ. 

  • கருத்துக்கள உறவுகள்

கனடா மற்றும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது அமெரிக்காவின் சட்ட திட்டங்கள் மிகவும் கடுமையானவை. நான் 2001 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தபோது இங்குள்ள சட்டதிட்டங்கள் மிகவும் கடினமானவையாக தெரிந்தது. என்ன செய்தாலும் களவு களவுதான்.  பிழை பிழைதான். 

எனது மகனின்  பாடசாலை அதிபர்இ மிகவும் பணக்காரி. Best Buy (Opelika) என்னும் கடையில் பெறுமதியான வயரை எடுத்து CCTV இல் பார்த்ததோடு  Security Guard உம் பிடித்து விட்டான். உடனே போலீஸ் வந்து கைது விட்டார்கள். பத்திரிகை இணையதளம் எல்லாம் கைது செய்த படத்தை (Mugshot) போட்டுவிட்டார்கள். வேலையும் இல்லாமல் போயிவிட்டது. ஆனால் அவ வெள்ளைக்காரி. அத்துடன் மிகவும் செல்வாக்கு உள்ள குடும்பம். அதனால் எதோ ஒரு விதமாக மன்னிப்பு கிடைத்து இப்ப அதே ஊரில் நான் படித்த யுனிவர்சிட்டியில் இல் வேலை செய்கிறா. அமெரிக்காவின் சட்ட திட்டங்கள் கடுமையானவை என்றாலும்இ இப்படியான சலுகைகளும் பணக்கார மற்றும் செல்வாக்கு உள்ள ஆக்களுக்கு வேறுவிதமான சலுகைகள் கிடைக்கும்.

சில வருடங்களுக்கு முன்பு கனடாவில் ஒரு தமிழ் போலீஸ் ஒரு கறுப்பின இளைஞன் நேர்முகத்தேர்வுக்கு போவதற்காக உடுப்பு திருடியதை மன்னித்து அதற்கான பணத்தை அவரே செலுத்தி இளைஞனை கைது செய்யாமல் விட்டார். அப்போதுதான் எனக்கு தெரியும் போலீஸ் காரர்களுக்கு இப்படி செய்ய அதிகாரம் இருக்கு என்று. 

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nilmini said:

பணக்காரர் திருடினால். இரண்டு மடங்குகள் தண்டனை” வழங்கவும்’  ஏழைகள் [என் போன்றோர் ]🤣🤣 திருடாலம் என்றும்  உலகளவில்  சட்டம் கொண்டு வரவேண்டும்  .....எப்படி யோசனை???   உலகில் ஏழை  பணக்காரர் என்ற வேறுபாடுகள் இருக்காது   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Kandiah57 said:

பணக்காரர் திருடினால். இரண்டு மடங்குகள் தண்டனை” வழங்கவும்’  ஏழைகள் [என் போன்றோர் ]🤣🤣 திருடாலம் என்றும்  உலகளவில்  சட்டம் கொண்டு வரவேண்டும்  .....எப்படி யோசனை???   உலகில் ஏழை  பணக்காரர் என்ற வேறுபாடுகள் இருக்காது   

சரியான ஐடியா கந்தையர்....👍🏼💪🏽👍🏼💪🏽

இதற்கு கம்யூனிச அரசாட்சியே சிறந்தது. 😎

சமதர்ம கொள்கை. தூர நோக்குடன் உருவாக்கப்பட்ட கொள்கை. அது முதலாளித்துவத்திற்கு ஒவ்வாதது.😂

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, குமாரசாமி said:

சரியான ஐடியா கந்தையர்....👍🏼💪🏽👍🏼💪🏽

இதற்கு கம்யூனிச அரசாட்சியே சிறந்தது. 😎

சமதர்ம கொள்கை. தூர நோக்குடன் உருவாக்கப்பட்ட கொள்கை. அது முதலாளித்துவத்திற்கு ஒவ்வாதது.😂

ஓம் முற்றிலும் சரியாகும்,.... ஆனால்   புட்டின். சரி வரார். 🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சரியான ஐடியா கந்தையர்....👍🏼💪🏽👍🏼💪🏽

இதற்கு கம்யூனிச அரசாட்சியே சிறந்தது. 😎

சமதர்ம கொள்கை. தூர நோக்குடன் உருவாக்கப்பட்ட கொள்கை. அது முதலாளித்துவத்திற்கு ஒவ்வாதது.😂

அப்போ ஏன் தமிழர்கள் கிழக்கு ஜேர்மனியில் இருந்து மேற்கு ஜேர்மனிக்கு பாய்ந்தோடி வந்தார்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
29 minutes ago, Kandiah57 said:

ஓம் முற்றிலும் சரியாகும்,.... ஆனால்   புட்டின். சரி வரார். 🤣🤣🤣

நீங்கள் ஊரில் பள்ளிக்கூடம் போய் படிக்கும் போது புட்டின் வந்தாரா? அல்லது இருந்தாரா? 😛

 ஊரில்  கம்யூனிச கொள்கைகளை படித்ததின் மூலம் வந்த கேள்வி .

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, goshan_che said:

அப்போ ஏன் தமிழர்கள் கிழக்கு ஜேர்மனியில் இருந்து மேற்கு ஜேர்மனிக்கு பாய்ந்தோடி வந்தார்கள்?

எந்த தமிழர்களை பற்றி கேட்கின்றீர்கள் என புரியவில்ல?

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

எந்த தமிழர்களை பற்றி கேட்கின்றீர்கள் என புரியவில்ல?

பொதுவாக கேட்டேன்.

முந்தைய கம்யூனிச கிழக்கு ஜேர்மனிக்கு இலங்கையில் இருந்து வீசா இல்லாமல் வரலாம்.

அப்படி கம்யூனிச கிழக்கு ஜேர்மன் வந்த தமிழரில் பெருவாரியானோர், உயிராபத்தை எதிர் கொண்டு, முதாளிதுவ மேற்கு ஜேர்மனுக்கு”போர்டர் பாய்ந்து”  வந்தார்கள்.

சரிதானே நான் சொல்லும் தரவு?

ஏன் சமதர்ம நாட்டை விட்டு முதலாளிதுவ நாட்டுக்கு உயிர் ஆபத்தையும் எதிர் கொண்டு வந்தார்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, goshan_che said:

முந்தைய கம்யூனிச கிழக்கு ஜேர்மனிக்கு இலங்கையில் இருந்து வீசா இல்லாமல் வரலாம்.

அப்படி கம்யூனிச கிழக்கு ஜேர்மன் வந்த தமிழரில் பெருவாரியானோர், உயிராபத்தை எதிர் கொண்டு, முதாளிதுவ மேற்கு ஜேர்மனுக்கு”போர்டர் பாய்ந்து”  வந்தார்கள்.

கிழக்கு ஜேர்மனிக்கு வரும் போது உயிராபத்தா? விளக்கம் தேவை

தமிழர்கள் மட்டுமல்ல பல நாட்டுக்காரர்களும் போடர் பாயவில்லை. கடவுச்சீட்டில் முத்திரை பதித்த பின்னர் சட்டப்படி மேற்கு ஜேர்மனிக்குள் உட் புகுந்தார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.