Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

வணக்கம் உறவுகளே!

சென்ற வருடம் எனது மூதாதயரின் காணி விலைக்கு வந்தபொழுது அதை விலைக்கு வாங்கினேன். வாங்கியபொழுது நான் இலங்கையில் இருக்கவில்லை. ஆகையால் காணியை எனது பெயரில் எழுத முடியவில்லை. ( நான் இனிமேலும் இலங்கை citizen இல்லை என்பதாலும் மற்றும் நான் அங்கே நேரடியாக இல்லை என்பதாலும்  எனது பெயரில் வாங்க முடியாது என்று காணிப் பதிவாளர் சொல்லி விட்டார் ) ஆகவே காணியை எனது அப்பா அம்மா பெயரில் பதிவு செய்திருந்தேன். 

இப்போது அப்பா அம்மா இருவரையும் கனடா அழைத்து விட்டேன். கையோடு அவர்களும் காணியின் உறுதியை கொண்டு வந்து உள்ளார்கள்.

கேள்வி என்னவென்றால் கனடாவில் இருந்துகொண்டு இலங்கையில் அப்பா அம்மா பெயரில் வாங்கிய காணியை எப்படி எனது பெயருக்கு மாற்றுவது?

யாராவது தெளிவான பதில் தரமுடியுமா? 

நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 hours ago, பகிடி said:

1) காணி உங்கள் பெற்றோரின் பெயரில் இருப்பதால் அவர்கள் சார்பாக இலங்கையில் ஒருவருக்கு Power of Attorney கொடுக்கப்பட வேண்டும். (அந்த Power of At. காணியை உங்கள் பெயருக்கு மாற்றம் செய்வதற்காக மட்டுமே என கொடுக்கப்பட வேண்டும் என்பது முக்கியம் 😉)

2) உங்கள் சார்பாக அங்கே செயற்படுவதற்கு நீங்களும் அங்கே ஒருவருக்கு Power of Attorney கொடுக்க வேண்டும். (கொடுக்கப்படும் Power of At. எதற்காக என்பதில் அதிக கவனம் எடுக்கவும்)😎

3) அங்கே ஒரு சட்டத்தரணியை தெரிவு செய்து அவரது ஆலோசனையுடன் அவரைக் கொண்டே Power of Attorney ஐ ஆயத்தம் செய்து உங்களிடம் அனுப்பி வைக்க கூறுங்கள். அதில் சரி பிழை பார்த்தபின்னர், இறுதி document ல் அண்மையில் உள்ள ஒரு Lawyer இடம் கொண்டு சென்று அவர் முன்னிலையில் Power of Attorney யில் கையொப்பம் இடவும். (இரு சாட்சிகள் தேவை. அவர்களது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களைக் கொண்டுசெல்ல வேண்டும்  )🥷

4) Scan செய்யப்பட்ட ஒரு பிரதியை email மூலம் உங்கள் பிரதிநிதிக்கு அனுப்பவும்.✈️

5) Original மூலப்பிரதியை  கூரியர்  மூலம் அனுப்பவும் .  இதையடுத்து, உங்கள் லாயர்  😩 அதைப் காணிக் கந்தோரில் பதிவு செய்வார். 

அதன் பின்னர்  உறுதி உங்கள் பெயருக்கு மாற்றி எழுதும் செயற்பாடு இடம்பெறும். 👏

6) முத்திரை வரி; இலங்கைப் பிரசைக்கு காணியின் பெறுமதியில் 4% 👌

வெளிநாட்டுப் பிரசைக்கு; 100% 🥶

7) எழுத்துக் கூலி ; சராசரியாக காணியின் பெறுமதியில்  1% 😳

குறிப்பு: காணியின் பெறுமதியைக் மிகவும்  அதிகமாகக் குறைத்துக் காட்டினால் உங்கள் பிரதேச காணிக் கந்தோரால் உங்கள் காணியின் பெறுமதியை மீண்டும் Appraisal செய்து தண்டனையுடன்(10%)  கூடிய வரிவிதிப்பு வரும் சந்தர்பம் அதிகம் உண்டு. 😁

Power of Attorney ஐ கொடுக்கும்போது குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டும் (Limited)  கொடுப்பது பாதுகாப்பானது. 🤣

எழுத்து வேலையெல்லாம் செய்து காணியின் புதிய உறுதி வருவதற்கு 1-2 மாதங்கள் வரை ஆகலாம். 😴

காணிக்கந்தோர்களிடையே ஒரு சீரான நடைமுறை இன்னும் கடைப்பிடிக்கப்படவில்லை. இடத்திற்கு இடம் சில வேறுபாடுகள் உண்டு. 🤨

(Power of At. எழுதுவதற்கு Rs. 25000 வரை அறவிடுகிறார்கள். 🤦🏼‍♂️)

அம்புட்டுதே. 😁

Edited by Kapithan
  • Like 9
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
31 minutes ago, Kapithan said:

6) முத்திரை வரி; இலங்கைப் பிரசைக்கு காணியின் பெறுமதியில் 4% 👌

வெளிநாட்டுப் பிரசைக்கு; 100% 🥶

வெளிநாட்டுப் பிரஜைக்கு காணியின் பெறுமதியின் 100 வீதம் என்பதை சற்று விளக்கமாக உதாரணத்துடன் தர முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, புலவர் said:

வெளிநாட்டுப் பிரஜைக்கு காணியின் பெறுமதியின் 100 வீதம் என்பதை சற்று விளக்கமாக உதாரணத்துடன் தர முடியுமா?

காணியின் சந்தை மதிப்பின் 100% கட்ட வேண்டும். சந்தை மதிப்பும் நீங்கள் வேண்டிய காணியின் வரி மதிப்பீட்டு  விலையும் ஒன்றல்ல. பொதுவாக வரி மதிப்பீட்டு  விலை  நிர்ணயம்  கொள்வனவு விலையைவிட குறைவாகவே இருக்கு. நீங்கள் உங்கள் முதுசம் வேறொருவர் கைக்குள் போகக்கூடாது என்பதற்காக அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கலாம். அல்லது உங்கள் உறவினர்கள் அதை உங்களுக்கு உறவு என்கிற வகையில் குறைந்த விலையில் கொடுத்திருக்கலாம். ஆனால் (உ+ம்) வட மாகாண சபையின் காணி மதிப்பீடே  காணியின் ஊண்மையான (வரி) மதிப்பாகும்.  அதற்குத்தான் நீங்கள் முத்திரை வரி கட்டுவீர்கள். 

நீங்கள் இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பித்து அதைப் பெற்றுக்கொண்டபின்னர் (அதைப் பெற ஏறக்குறைய 1 வருடமாகும்)   காணியை உங்கள் பெயருக்கு மாற்றினால் Dual citizenship இரட்டைக் குடிவைத்திருப்பவர்களுக்கு  4% மட்டுமே .

கொசுறு; இரட்டைக் குடியுரிமை $2 000 US Dollars. (பிரதான விண்ணப்பதாரிக்கு, மேலதிக குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு  $500(Each person)

ஒருவரது விண்ணப்பக் கட்டணம்  40 Canadian dollars. மேலதிக  செலவு ஏறக்குறைய $ 500-600 (ஒருவருக்கு ) 

உங்கள் பரம்பரைக் காணியைப் பெற்றுக்கொண்டதற்கு வாழ்த்துக்கள் 🙏 அதன் மகிழ்ச்சி அழவில்லாதது. 

 😃

Edited by Kapithan
  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

@Kapithan

எனது காணி வீடு வயல் போன்ற சொத்துக்கள் அம்மா பெயரில் இருந்தது.அம்மா அதை அக்காவின் பெயருக்கு மாற்றி விட்டு போய் சேர்ந்து விட்டார். இதெல்லாம் ஆக பழைய கதை.

புதுக்கதை என்னவென்றால் அந்த காணி சொத்துக்களை என் பெயருக்கு மாற்றுவதென்றால் ஊருக்கு வரும்படி அழைக்கின்றார்கள். ஆனால் அதை என் பிள்ளைகளுக்கு எப்படி மாற்றி விடலாம் என யோசிக்கின்றேன். 
அதை விட இன்னுமொரு பெரிய யோசனை என்னவென்றால் சொத்துக்களை மாற்றிய பின்....

அதை அயலவர் மற்றும் கள்ளர்,காடையர்களிடமிருந்து எப்படி பாதுகாத்துக்கொள்வது எப்படி என்பதுதான்? 😂

  • Like 1
  • Haha 5
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kapithan said:

வெளிநாட்டுப் பிரசைக்கு; 100% 🥶

காணியின். முழு பெறுமதியையும். கொடுக்க வேண்டும் 

4 hours ago, பகிடி said:

நான் இனிமேலும் இலங்கை citizen இல்லை

வெளிநாட்டாவர்கள். இலங்கையில் சொத்துக்கள் வைத்திருக்கலாம்.  வரி வருட வருடம் காட்டினால்   

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Kapithan said:

1) காணி உங்கள் பெற்றோரின் பெயரில் இருப்பதால் அவர்கள் சார்பாக இலங்கையில் ஒருவருக்கு Power of Attorney கொடுக்கப்பட வேண்டும். (அந்த Power of At. காணியை உங்கள் பெயருக்கு மாற்றம் செய்வதற்காக மட்டுமே என கொடுக்கப்பட வேண்டும் என்பது முக்கியம் 😉)

2) உங்கள் சார்பாக அங்கே செயற்படுவதற்கு நீங்களும் அங்கே ஒருவருக்கு Power of Attorney கொடுக்க வேண்டும். (கொடுக்கப்படும் Power of At. எதற்காக என்பதில் அதிக கவனம் எடுக்கவும்)😎

3) அங்கே ஒரு சட்டத்தரணியை தெரிவு செய்து அவரது ஆலோசனையுடன் அவரைக் கொண்டே Power of Attorney ஐ ஆயத்தம் செய்து உங்களிடம் அனுப்பி வைக்க கூறுங்கள். அதில் சரி பிழை பார்த்தபின்னர், இறுதி document ல் அண்மையில் உள்ள ஒரு Lawyer இடம் கொண்டு சென்று அவர் முன்னிலையில் Power of Attorney யில் கையொப்பம் இடவும். (இரு சாட்சிகள் தேவை. அவர்களது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களைக் கொண்டுசெல்ல வேண்டும்  )🥷

4) Scan செய்யப்பட்ட ஒரு பிரதியை email மூலம் உங்கள் பிரதிநிதிக்கு அனுப்பவும்.✈️

5) Original மூலப்பிரதியை  கூரியர்  மூலம் அனுப்பவும் .  இதையடுத்து, உங்கள் லாயர்  😩 அதைப் காணிக் கந்தோரில் பதிவு செய்வார். 

அதன் பின்னர்  உறுதி உங்கள் பெயருக்கு மாற்றி எழுதும் செயற்பாடு இடம்பெறும். 👏

6) முத்திரை வரி; இலங்கைப் பிரசைக்கு காணியின் பெறுமதியில் 4% 👌

வெளிநாட்டுப் பிரசைக்கு; 100% 🥶

7) எழுத்துக் கூலி ; சராசரியாக காணியின் பெறுமதியில்  1% 😳

குறிப்பு: காணியின் பெறுமதியைக் மிகவும்  அதிகமாகக் குறைத்துக் காட்டினால் உங்கள் பிரதேச காணிக் கந்தோரால் உங்கள் காணியின் பெறுமதியை மீண்டும் Appraisal செய்து தண்டனையுடன் கூடிய வரிவிதிப்பு வரும் சந்தர்பம் அதிகம் உண்டு. 😁

Power of Attorney ஐ கொடுக்கும்போது குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டும் (Limited)  கொடுப்பது பாதுகாப்பானது. 🤣

எழுத்து வேலையெல்லாம் செய்து காணியின் புதிய உறுதி வருவதற்கு 1-2 மாதங்கள் வரை ஆகலாம். 😴

காணிக்கந்தோர்களிடையே ஒரு சீரான நடைமுறை இன்னும் கடைப்பிடிக்கப்படவில்லை. இடத்திற்கு இடம் சில வேறுபாடுகள் உண்டு. 🤨

(Power of At. எழுதுவதற்கு Rs. 25000 வரை அறவிடுகிறார்கள். 🤦🏼‍♂️)

அம்புட்டுதே. 😁

மிக்க நன்றி @Kapithanஅவர்களே.

நான் முதலில் இலங்கைப் பிராஜா உரிமைக்கு விண்ணப்பித்து அதைப் பெற்று விட்டு அப்பா அம்மாவோடு இலங்கை சென்று வேலையை முடிப்பதே இலக்குவான விடயம் என்று நினைக்கிறன். 

தகவல்களை தந்ததற்கும் அதற்காக நீங்கள் எடுத்துக்கொண்ட பொன்னான நேரத்துக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி 

  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Kapithan said:

உங்கள் பரம்பரைக் காணியைப் பெற்றுக்கொண்டதற்கு வாழ்த்துக்கள் 🙏 அதன் மகிழ்ச்சி அழவில்லாதது. 

நன்றி 

5 பரப்புக் காணி ( அம்மம்மாவின் தாயாரின் காணி ) 20 வருசத்துக்கு முன் வெறும் 30 லட்ஷத்துக்கு வந்தது, நான் வெளிநாட்டில் படித்துக்கொண்டு இருந்ததால் அம்மாவால் அதை வாங்க முடியவில்லை. பின்னர் போன வருடம் பரப்பு 27 லட்ஷம் படி கிட்டத்தட்ட மொத்தம் ஒண்டரை கோடி என்று விலைக்கு திடீர் என்று வந்தது. இங்கு எனக்கு படிப்பு, exam வேலை என்று பல நெருக்கடிகளுக்கு இடையில் இருக்கிற காசை எல்லாம் போட்டு அதை வாங்கினேன். வாங்கினதும் அம்மம்மா சந்தோசமாக என்னுடன் அந்தக் காணியில் தான் வாழ்ந்த அனுபவங்களைப் பகிர்ந்து மூத்த பேரன் அதை வாங்கிய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அடுத்த கிழமை தனது 94 ம் வயதில் இறந்தும் போனார். அவர் இறந்த அதே நாள் எனக்கு  மகனும் பிறந்தான்.

  • Like 12
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, குமாரசாமி said:

அதை அயலவர் மற்றும் கள்ளர்,காடையர்களிடமிருந்து எப்படி பாதுகாத்துக்கொள்வது எப்படி என்பதுதான்? 

ம்ம்.... அதுதான் பெரிய பிரச்சனை! ஊரிலே பரம்பரை பரம்பரையாக போர்காலத்திலும் சரி இப்போதும் சரி தொடர்ந்து இருப்பவர்களின் காணியிலேயே புலம்பெயர்ந்தோர் வெளிநாட்டுக்காசை கொண்டு வந்து, ஆனால் இனாமாக அடாவடியாக ஏழைகளின் காணியை அபகரிக்க முயற்சிப்பதை என்ன சொல்வது? ஊர்ல மட்டும் கள்ளர் காடையர் இல்லை, இங்கிருந்து பெயர்ந்து போன கள்ளர் காடையர் மீண்டும் வரும்போதெல்லாம் தமது தொழிலை விட முடியவில்லை தொடர்கிறார்கள். வெளிநாட்டுக்காரர் என்று அவர்கள் செய்யும் தொழிலை களவு என்று  யாரும் பேசுவதில்லை.         

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

😀

11 hours ago, குமாரசாமி said:

@Kapithan

அதை அயலவர் மற்றும் கள்ளர்,காடையர்களிடமிருந்து எப்படி பாதுகாத்துக்கொள்வது எப்படி என்பதுதான்? 😂

விசயதéதை என்னிடம் விடுங்கோ. என்ரை சொத்து மாதிரி கவனமாக பாக்கிறேள்.😀

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, சுவைப்பிரியன் said:

😀

விசயதéதை என்னிடம் விடுங்கோ. என்ரை சொத்து மாதிரி கவனமாக பாக்கிறேள்.😀

என்னது விஜயத்தை என்னிடம் விடுங்கோவா?

கடவுளே கடவுளே இந்தக் கொடுமையைக் கேட்க ஆளே இல்லையா?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, சுவைப்பிரியன் said:

😀

விசயதéதை என்னிடம் விடுங்கோ. என்ரை சொத்து மாதிரி கவனமாக பாக்கிறேள்.😀

அதை அயலவர் மற்றும் கள்ளர்,காடையர்களிடமிருந்து எப்படி பாதுகாத்துக்கொள்வது என்று யாருக்குக் கூறினார் என்று தற்போது புரிகிறது. 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, சுவைப்பிரியன் said:

😀

விசயதéதை என்னிடம் விடுங்கோ. என்ரை சொத்து மாதிரி கவனமாக பாக்கிறேள்.😀

எனக்கு ஒரு டவுட் என்னவென்றால்..குசா தாத்தா வீட்டு அண்டை அயலவர் , உற்றார், உறவினர் எல்லாம் நீங்கள் தானோ..?🖐️அப்புறம் இதை வைச்சே திரியை ஓட விடாதீங்கோ புறோ...😀

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 23/4/2024 at 03:07, பகிடி said:

நான் முதலில் இலங்கைப் பிராஜா உரிமைக்கு விண்ணப்பித்து அதைப் பெற்று விட்டு அப்பா அம்மாவோடு இலங்கை சென்று வேலையை முடிப்பதே இலக்குவான விடயம் என்று நினைக்கிறன்.

பகிடி,

நீங்கள் கேட்ட கேள்வியை நான் சரியாக விளங்கி கொண்டுள்ளேன் எனில்,

இலங்கை பிரஜாஉரிமை இல்லாமல் எப்படி ஒரு கனேடியன் சிட்டிசனாக இந்த காணியை உங்க பெயருக்கு மாற்ற முடியும் என்பதா?

அப்படி எனில், short answer is முடியாது.

இலங்கையில் வெளிநாட்டு பிரசைகள் காணியின் freehold ஐ வாங்க முடியாது. இதைத்தான் உங்கள் இலங்கை வக்கீலும் கூறியுள்ளார்.

ஆனால் பின்வரும் நடைமுறைகள் மூலம் இதை வளைய வரலாம் (circumvent). 
1. காணியின் freehold ஐ அம்மா, அப்பாவிடமே விட்டு விட்டு, அதற்கு ஒரு 99 வருட லீஸ் ஹோல்டை எடுத்தல். அவர்களிற்கு பின் freehold ற்கு என்ன நடக்கும் ? புள்ளி 3 ஐ பார்க்கவும்.

2. ஒரு கம்பெனியை தாபித்து அதன் பெயரில் freehold ஐ மாற்றி விட்டு, கம்பெனியிடம் இருந்து நீங்கள் லீஸ் ஹோல்டை பெறல் - வெளி நாட்டினராக நீங்கள் 49% கம்பெனி பங்குகளை மட்டுமே வைத்திருக்கலாம். ஆனால் கம்பெனி உருவாக்கும் போது, உங்கள் அனுமதியின்றி சொத்துக்களை எதுவும் செய்ய முடியாது என சரத்துகளை உருவாக்கி உங்கள் உரிமையை பாதுகாக்கலாம்.

3. இதை உங்கள் வக்கீலிடம் கதைத்து பாருங்கள். இலங்கை சட்டத்தில் ஒரு loophole உள்ளதாக சொல்லப்படுகிறது. வெளி நாட்டினர் காணியை வாங்க முடியாது, ஆனால் பெற்றாரின் சொத்து அவர்களின் வாரிசுகளுக்குத்தான் செல்லும். இங்கே வாரிசுகள் வெளி நாட்டு பிரசைகள் என்றால் சொத்துக்கு என்னாகும்? என்ற கேள்வி தெளிவில்லாமல் உள்ளதாம்.

ஆகவே பெற்றாரின் காலத்தின் பின் - “வாங்குதல்” என இல்லாமல் சொத்து சந்ததி மாறல் என்ற வகையில் நீங்கள் இதை அடையக்கூடும்.

ஆனால் இது தெளிவில்லாததும், ரிஸ்க் அதி கூடியதுமாகும்.

4. மிக பாதுகாப்பானது- சிக்கல் அறவே இல்லாதது - நீங்கள் மீள இலங்கை இரட்டை குடியுரிமையை எடுப்பது. பிள்ளைகளிற்கும் எடுத்து வைக்கலாம். சொத்துரிமை சந்ததிகளிற்கு பாதுகாக்கப்படும்.

ஒரே சிக்கல் - சில வேலைகள் வெளிநாட்டில் அந்த நாட்டு பிரசை/இரெட்டை குடியுரிமை இருந்தால் தரமாட்டார்கள். இது பிள்ளைகளை பின்னாளில் பாதிக்கலாம். ஆனால் அப்படி ஒரு நிலை வந்தால் - அவர்கள் காணியை விற்று விட்டு, இலங்கை குடியுரிமையை உதறலாம்.

பிகு

3வது ஆப்சன் பற்றி மேலதிகமாக அறிந்தால் இங்கே பகிரவும்.

On 23/4/2024 at 00:04, Kandiah57 said:

வெளிநாட்டாவர்கள். இலங்கையில் சொத்துக்கள் வைத்திருக்கலாம்.  வரி வருட வருடம் காட்டினால்

ஒரு condominium அடுக்கு மடியில் 4ம் மாடி அல்லது அதற்கு மேல், அல்லது எந்த சொத்திலும் லீஸ் ஹோல்ட் மட்டுமே வைத்திருக்கலாம்.

4ம் மாடிக்கு குறைந்த அல்லது காணியாக freehold ஐ வெளிநாட்டினர் வைத்திருக்க சட்டம் அனுமதிக்கவில்லை.

Edited by goshan_che
  • Like 5
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பகிடி..இது இன்னுமொரு வழிமுறை..நீங்கள் கனேடியரா இருந்து கொண்டு  இன்னும் உங்கள் துணைவியார் கனேடிய பிரஜா உரிமை பெறாதவராக இருப்பின் உங்கள் பெற்றோரிடம் இருந்து துணைவியாருக்கு மாற்றம் செய்ய கூடியதாக இருக்கும்.சிலர் அப்படி செய்திருக்கிறார்கள்.உங்கள் வக்கீலிடம் கேட்டு தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்.🖐️

Edited by யாயினி
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 23/4/2024 at 06:31, Kapithan said:

1) காணி உங்கள் பெற்றோரின் பெயரில் இருப்பதால் அவர்கள் சார்பாக இலங்கையில் ஒருவருக்கு Power of Attorney கொடுக்கப்பட வேண்டும். (அந்த Power of At. காணியை உங்கள் பெயருக்கு மாற்றம் செய்வதற்காக மட்டுமே என கொடுக்கப்பட வேண்டும் என்பது முக்கியம் 😉)

2) உங்கள் சார்பாக அங்கே செயற்படுவதற்கு நீங்களும் அங்கே ஒருவருக்கு Power of Attorney கொடுக்க வேண்டும். (கொடுக்கப்படும் Power of At. எதற்காக என்பதில் அதிக கவனம் எடுக்கவும்)😎

3) அங்கே ஒரு சட்டத்தரணியை தெரிவு செய்து அவரது ஆலோசனையுடன் அவரைக் கொண்டே Power of Attorney ஐ ஆயத்தம் செய்து உங்களிடம் அனுப்பி வைக்க கூறுங்கள். அதில் சரி பிழை பார்த்தபின்னர், இறுதி document ல் அண்மையில் உள்ள ஒரு Lawyer இடம் கொண்டு சென்று அவர் முன்னிலையில் Power of Attorney யில் கையொப்பம் இடவும். (இரு சாட்சிகள் தேவை. அவர்களது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களைக் கொண்டுசெல்ல வேண்டும்  )🥷

4) Scan செய்யப்பட்ட ஒரு பிரதியை email மூலம் உங்கள் பிரதிநிதிக்கு அனுப்பவும்.✈️

5) Original மூலப்பிரதியை  கூரியர்  மூலம் அனுப்பவும் .  இதையடுத்து, உங்கள் லாயர்  😩 அதைப் காணிக் கந்தோரில் பதிவு செய்வார். 

அதன் பின்னர்  உறுதி உங்கள் பெயருக்கு மாற்றி எழுதும் செயற்பாடு இடம்பெறும். 👏

6) முத்திரை வரி; இலங்கைப் பிரசைக்கு காணியின் பெறுமதியில் 4% 👌

வெளிநாட்டுப் பிரசைக்கு; 100% 🥶

7) எழுத்துக் கூலி ; சராசரியாக காணியின் பெறுமதியில்  1% 😳

குறிப்பு: காணியின் பெறுமதியைக் மிகவும்  அதிகமாகக் குறைத்துக் காட்டினால் உங்கள் பிரதேச காணிக் கந்தோரால் உங்கள் காணியின் பெறுமதியை மீண்டும் Appraisal செய்து தண்டனையுடன்(10%)  கூடிய வரிவிதிப்பு வரும் சந்தர்பம் அதிகம் உண்டு. 😁

Power of Attorney ஐ கொடுக்கும்போது குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டும் (Limited)  கொடுப்பது பாதுகாப்பானது. 🤣

எழுத்து வேலையெல்லாம் செய்து காணியின் புதிய உறுதி வருவதற்கு 1-2 மாதங்கள் வரை ஆகலாம். 😴

காணிக்கந்தோர்களிடையே ஒரு சீரான நடைமுறை இன்னும் கடைப்பிடிக்கப்படவில்லை. இடத்திற்கு இடம் சில வேறுபாடுகள் உண்டு. 🤨

(Power of At. எழுதுவதற்கு Rs. 25000 வரை அறவிடுகிறார்கள். 🤦🏼‍♂️)

அம்புட்டுதே. 😁

கப்பித்தான் கூறியுள்ள இலக்கம் 1 இலக்கம் 2 அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டதாக கட்டாயம் இருக்கவேண்டும், ஒருவர் பொதுவான அதிகாரம் ஒன்றினை வழங்கியுள்ளார் அங்குள்ளவர் அவரது காணியினை சுயமாக விற்றுவிட்டதாக ஒரு வதந்தி உலவுகிறது அது அதன் உரிமையாளருக்கே தெரியாது என்பதாக.

POWER OF ATTORNEY REVOCATION DOCUMENT

Principal's Information:

Name: [Your Full Name]

Address: [Your Address]

Contact Information: [Your Phone Number and Email Address]

Attorney-in-Fact's Information:

Name: [Attorney-in-Fact's Full Name]

Address: [Attorney-in-Fact's Address]

Contact Information: [Attorney-in-Fact's Phone Number and Email Address]

Original Power of Attorney Details:

Date of Execution: [Date the Original Power of Attorney was Signed]

Place of Execution: [Place where the Power of Attorney was executed]

Revocation Statement:

I, [Your Full Name], hereby revoke, cancel, and annul all powers and authority granted to [Attorney-in-Fact's Full Name] under the power of attorney executed on [Original Date of Execution], effective immediately. This revocation applies to all acts, whether financial, legal, or otherwise, that were authorized under the aforementioned power of attorney document.

Reason for Revocation (Optional):

[Briefly state any reasons for the revocation, if you wish to disclose them]

Notification:

A copy of this revocation will be provided to [Attorney-in-Fact's Full Name] and all third parties with whom the power of attorney may have been previously shared or registered, including [list any banks, financial institutions, government agencies, etc.].

Signature:

Signed on this ___ day of [Month], [Year].

[Your Full Name, as Principal]

Witnesses (If required by law):

Witness Name: __________________________

Address: ________________________________

Signature: ______________________________

Date: __________________________________

Witness Name: __________________________

Address: ________________________________

Signature: ______________________________

Date: __________________________________

Notarization (If required by law):

On this ___ day of [Month], [Year], before me, a notary public, personally appeared [Your Full Name], known to me (or satisfactorily proven) to be the person whose name is subscribed to the within the instrument and acknowledged that they executed the same for the purposes therein contained.

In witness whereof, I hereunto set my hand and official seal.

[Notary Public's Signature]

[Notary's Printed Name]

My Commission Expires: ___________________

Instructions:

Make sure to fill in all brackets ([ ]) with the relevant information.

Check if your state or country requires the revocation to be witnessed or notarized.

Distribute copies as described in the "Notification" section to ensure all relevant parties are informed of the revocation.

This document template should help you formally cancel the power of attorney. For complex situations or legal advice, consult with a qualified attorney.

மேலே இணத்துள்ள ஆவணம் ஒரு முழுமையான சட்ட ஆவணம் அல்ல, ஒரு மாதிரி ஆவணம் மட்டுமே, மேலே குறிப்பிட்டது போல யாராவது முழு அதிகாரம் வழங்கியிருப்பின் அதனை இரத்து செய்வதற்கான மாதிரி வடிவம் மட்டுமே.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, யாயினி said:

பகிடி..இது இன்னுமொரு வழிமுறை..நீங்கள் கனேடியரா இருந்து கொண்டு  இன்னும் உங்கள் துணைவியார் கனேடிய பிரஜா உரிமை பெறாதவராக இருப்பின் உங்கள் பெற்றோரிடம் இருந்து துணைவியாருக்கு மாற்றம் செய்ய கூடியதாக இருக்கும்.சிலர் அப்படி செய்திருக்கிறார்கள்.உங்கள் வக்கீலிடம் கேட்டு தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்.🖐️

ஓம் இப்படியும் செய்யலாம்.

அதே போல் மேலே நான் சொன்னவற்றில் கம்பெனிக்கு பதிலாக ஒரு trust ஐ உருவாக்கியும் அதே இறுதிப்பலனை அடையலாம்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, goshan_che said:

ஓம் இப்படியும் செய்யலாம்.

அதே போல் மேலே நான் சொன்னவற்றில் கம்பெனிக்கு பதிலாக ஒரு trust ஐ உருவாக்கியும் அதே இறுதிப்பலனை அடையலாம்.

ஆனால் எனது உறவினர்கள் நண்பர்கள் பலர்  வெளிநாட்டு குடியுரிமை உடனே இலங்கையில் சொத்துக்கள் வைத்துள்ளார்கள்    மேலும் நாவற்குழியில்.  பெரிய றால்.  பண்ணை ஒன்று   வெள்ளைக்காரன் வைத்திருந்தார்    1980 இல்

கொழும்பில்  கிரான்பாஸ் றோட்டில்.  லீபர். பிறதர். என்ற பெயரில் வெள்ளைக்காரன் சவர்க்கார உற்பத்தி  ஜாம். பட்டர்.  தாயாரிக்கும். தொழில்சாலை வைத்திருந்தார்   1980 தான் 

அரசாங்கம் முதலீட்டாளர்களை. வெளிநாட்டிலிருந்து எப்படி வரவேற்கிறது?? 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, Kandiah57 said:

ஆனால் எனது உறவினர்கள் நண்பர்கள் பலர்  வெளிநாட்டு குடியுரிமை உடனே இலங்கையில் சொத்துக்கள் வைத்துள்ளார்கள்

1. சட்டம் மாற முன்பு வெளிநாட்டு பிரசைகளாக இந்த ஆதனத்தை வாங்கி இருக்கலாம்.

அல்லது…

2. முதலில் இலங்கை பிரசையாக இருந்த போது ஆதனத்தை அவர்கள் பெயரில் வாங்கி விட்டு பின்னர் வெளிநாட்டு பிரஜா உரிமை எடுத்திருக்கலாம்.

அல்லது 

3. நான் சொன்ன 3ம் முறையில் பெற்றாருக்கு பின் சொத்து பெயர் மாறி இருக்கலாம்.

அல்லது

4. இரெட்டடை குடியுரிமை இருக்கலாம்.

21 minutes ago, Kandiah57 said:

மேலும் நாவற்குழியில்.  பெரிய றால்.  பண்ணை ஒன்று   வெள்ளைக்காரன் வைத்திருந்தார்    1980 இல்

அநேகமாக 99 வருட லீஸ் ஆக இருக்கவே வாய்ப்பு அதிகம்.

22 minutes ago, Kandiah57 said:

கொழும்பில்  கிரான்பாஸ் றோட்டில்.  லீபர். பிறதர். என்ற பெயரில் வெள்ளைக்காரன் சவர்க்கார உற்பத்தி  ஜாம். பட்டர்.  தாயாரிக்கும். தொழில்சாலை வைத்திருந்தார்   1980 தான் 

ஆதனங்களை நான் மேலே சொன்ன லீசிங் அடிப்படையில் அல்லது, கம்பெனி சொத்தாக வைத்திருக்க கூடும்.

அல்லது சட்டம் மாற முன்பு அவர்கள் வாங்கிய ஆதனமாக இருக்கலாம்.

இப்போதும் Board of Investment ஊடாக பெருந்தொகை பணத்தை முதலிடும் வெளிநாட்டு கம்பெனிகளுக்கு ஆதனத்தை freehold ஆக வாங்கும் சலுகை உள்ளது என நினைக்கிறேன்.

நான் மேலே சொன்னது தனி நபர்கள் residential properties, land வாங்கும் நிலை பற்றியது.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 24/4/2024 at 03:26, goshan_che said:

இதை உங்கள் வக்கீலிடம் கதைத்து பாருங்கள். இலங்கை சட்டத்தில் ஒரு loophole உள்ளதாக சொல்லப்படுகிறது. வெளி நாட்டினர் காணியை வாங்க முடியாது, ஆனால் பெற்றாரின் சொத்து அவர்களின் வாரிசுகளுக்குத்தான் செல்லும். இங்கே வாரிசுகள் வெளி நாட்டு பிரசைகள் என்றால் சொத்துக்கு என்னாகும்? என்ற கேள்வி தெளிவில்லாமல் உள்ளதாம்.

ஆகவே பெற்றாரின் காலத்தின் பின் - “வாங்குதல்” என இல்லாமல் சொத்து சந்ததி மாறல் என்ற வகையில் நீங்கள் இதை அடையக்கூடும்.

ஆனால் இது தெளிவில்லாததும், ரிஸ்க் அதி கூடியதுமாகும்.

நன்றி @goshan_che.

இலங்கையில் உள்ள சில சட்டத்தரணிகளை அணுகி உள்ளேன். பலர் நீங்கள் மூன்றாவதாக சொன்ன விஷயத்தையே செய்யுமாறும் பலர் அவ்வாறே செய்வதாக்கவும் சொல்கிறார்கள். எனக்கு என்னவோ மீண்டும் இலங்கை பிராஜா உரிமையைப் பெற்று காணியை என் பெயரில் மாற்றுவதே ஓரளவுக்கு நடைமுறை சாத்தியம் உள்ளது போல் தோன்றுகிறது.

ஒருவர் பின்வரும் விசயத்தைச் சொன்னார். அதாவது இலங்கை  JvP கட்சியின் பிடியில் வரும் சந்தர்ப்பத்தில் இப்படி வெளிநாட்டினர் இலங்கை பிராஜா உரிமை இல்லாமல் இலங்கையில் சொத்து  வைத்திருப்பின் அவை பொது உடமை ஆக்கப்படும் நிலை ஏற்படுமாம். பலர் இலங்கை பிராஜா உரிமையை இழந்த பின்னும் தமது தேசிய அடையாள அட்டையை கொண்டு தமது பெயரில் எழுதிய காணிகளுக்கு வீடுகளுக்கு அந்த நிலைமை ஏற்படும் என்றும் இலங்கை அரசு இதனை அனுமதிக்கும் பின் புலம் ஒரு காலத்தில் அவற்றை தன் வயப்படுத்தும் முனைப்பே என்றும் கூறினார். 

On 24/4/2024 at 17:10, vasee said:

கப்பித்தான் கூறியுள்ள இலக்கம் 1 இலக்கம் 2 அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டதாக கட்டாயம் இருக்கவேண்டும், ஒருவர் பொதுவான அதிகாரம் ஒன்றினை வழங்கியுள்ளார் அங்குள்ளவர் அவரது காணியினை சுயமாக விற்றுவிட்டதாக ஒரு வதந்தி உலவுகிறது அது அதன் உரிமையாளருக்கே தெரியாது என்பதாக.

POWER OF ATTORNEY REVOCATION DOCUMENT

Principal's Information:

Name: [Your Full Name]

Address: [Your Address]

Contact Information: [Your Phone Number and Email Address]

Attorney-in-Fact's Information:

Name: [Attorney-in-Fact's Full Name]

Address: [Attorney-in-Fact's Address]

Contact Information: [Attorney-in-Fact's Phone Number and Email Address]

Original Power of Attorney Details:

Date of Execution: [Date the Original Power of Attorney was Signed]

Place of Execution: [Place where the Power of Attorney was executed]

Revocation Statement:

I, [Your Full Name], hereby revoke, cancel, and annul all powers and authority granted to [Attorney-in-Fact's Full Name] under the power of attorney executed on [Original Date of Execution], effective immediately. This revocation applies to all acts, whether financial, legal, or otherwise, that were authorized under the aforementioned power of attorney document.

Reason for Revocation (Optional):

[Briefly state any reasons for the revocation, if you wish to disclose them]

Notification:

A copy of this revocation will be provided to [Attorney-in-Fact's Full Name] and all third parties with whom the power of attorney may have been previously shared or registered, including [list any banks, financial institutions, government agencies, etc.].

Signature:

Signed on this ___ day of [Month], [Year].

[Your Full Name, as Principal]

Witnesses (If required by law):

Witness Name: __________________________

Address: ________________________________

Signature: ______________________________

Date: __________________________________

Witness Name: __________________________

Address: ________________________________

Signature: ______________________________

Date: __________________________________

Notarization (If required by law):

On this ___ day of [Month], [Year], before me, a notary public, personally appeared [Your Full Name], known to me (or satisfactorily proven) to be the person whose name is subscribed to the within the instrument and acknowledged that they executed the same for the purposes therein contained.

In witness whereof, I hereunto set my hand and official seal.

[Notary Public's Signature]

[Notary's Printed Name]

My Commission Expires: ___________________

Instructions:

Make sure to fill in all brackets ([ ]) with the relevant information.

Check if your state or country requires the revocation to be witnessed or notarized.

Distribute copies as described in the "Notification" section to ensure all relevant parties are informed of the revocation.

This document template should help you formally cancel the power of attorney. For complex situations or legal advice, consult with a qualified attorney.

மேலே இணத்துள்ள ஆவணம் ஒரு முழுமையான சட்ட ஆவணம் அல்ல, ஒரு மாதிரி ஆவணம் மட்டுமே, மேலே குறிப்பிட்டது போல யாராவது முழு அதிகாரம் வழங்கியிருப்பின் அதனை இரத்து செய்வதற்கான மாதிரி வடிவம் மட்டுமே.

நன்றி @vasee

On 24/4/2024 at 15:42, யாயினி said:

பகிடி..இது இன்னுமொரு வழிமுறை..நீங்கள் கனேடியரா இருந்து கொண்டு  இன்னும் உங்கள் துணைவியார் கனேடிய பிரஜா உரிமை பெறாதவராக இருப்பின் உங்கள் பெற்றோரிடம் இருந்து துணைவியாருக்கு மாற்றம் செய்ய கூடியதாக இருக்கும்.சிலர் அப்படி செய்திருக்கிறார்கள்.உங்கள் வக்கீலிடம் கேட்டு தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்.🖐️

நன்றி @யாயினி

எனது மனைவி கனடாவில் பிறந்து வளந்தவர்.ஆகவே இலங்கை பிரஜா உரிமை அவரிடம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, பகிடி said:

இலங்கையில் உள்ள சில சட்டத்தரணிகளை அணுகி உள்ளேன். பலர் நீங்கள் மூன்றாவதாக சொன்ன விஷயத்தையே செய்யுமாறும் பலர் அவ்வாறே செய்வதாக்கவும் சொல்கிறார்கள். எனக்கு என்னவோ மீண்டும் இலங்கை பிராஜா உரிமையைப் பெற்று காணியை என் பெயரில் மாற்றுவதே ஓரளவுக்கு நடைமுறை சாத்தியம் உள்ளது போல் தோன்றுகிறது.

எனக்கும் இந்த 3வது ஆப்சன் அதிக ரிஸ்கியாகவே தெரிகிறது.

வெளிநாட்டினர் காணி வாங்க முடியாது, ஆனால் அவர்களுக்கு பெற்றார் காணியை கிரயம் பண்ணலாம் என இருப்பது நிச்சயம் ஒரு  சட்ட-ஓட்டை (loophole) தான். இதை ஒரு சட்ட திருத்தம் மூலம் அடைக்கலாம்.

அதன் பின் இந்த திருத்தம் பின்னோக்கி பாயுமா இல்லையா (does it have retrospective effect) என பார்க்க வேண்டும்.

பொதுவாக காணி சட்டங்கள் பின்னோக்கி பாய்வதில்லை. அது நியாயமும் இல்லை. ஆனால் சொல்ல முடியாது அதுவும் இலங்கையில் எதுவும் நடக்கலாம்.

பிறகு வழக்கு எண்டு ஏறி இறங்க வேண்டி வந்தால் - கனடாவில் இருந்து இதை கொண்டு நடத்த வேண்டும்.

உள்ளதில் ரிஸ்க் குறைவு என்றால் இரெட்டை பிரஜா உரிமைதான் - என்பேன் நான். 

1 hour ago, பகிடி said:

ஒருவர் பின்வரும் விசயத்தைச் சொன்னார். அதாவது இலங்கை  JvP கட்சியின் பிடியில் வரும் சந்தர்ப்பத்தில் இப்படி வெளிநாட்டினர் இலங்கை பிராஜா உரிமை இல்லாமல் இலங்கையில் சொத்து  வைத்திருப்பின் அவை பொது உடமை ஆக்கப்படும் நிலை ஏற்படுமாம். பலர் இலங்கை பிராஜா உரிமையை இழந்த பின்னும் தமது தேசிய அடையாள அட்டையை கொண்டு தமது பெயரில் எழுதிய காணிகளுக்கு வீடுகளுக்கு அந்த நிலைமை ஏற்படும் என்றும் இலங்கை அரசு இதனை அனுமதிக்கும் பின் புலம் ஒரு காலத்தில் அவற்றை தன் வயப்படுத்தும் முனைப்பே என்றும் கூறினார். 

பலருக்கு 72 சிறிமா ஆட்சியும், நில உச்ச வரம்பு சட்டமும் மறந்து விட்டது அல்லது தெரியாது என நினைக்கிறேன்.

இப்போ JVP ஆனது NPP என ஒரு மிதவாத முகமூடியோடு வருகிறது. ஆட்சிக்கு வந்தால் முகமூடி களரலாம்.

முடிவாக.

பாட்டியின் காணியை பேரனாக பொறுப்பெடுத்தமைக்கு வாழ்த்துக்கள். ஏதாவது புதிய தகவல்கள் வரும் போது தெரியப்படுத்துங்கள்🙏. குட் லக்.

Edited by goshan_che
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, பகிடி said:

 இலங்கை  JvP கட்சியின் பிடியில் வரும் சந்தர்ப்பத்தில் இப்படி வெளிநாட்டினர் இலங்கை பிராஜா உரிமை இல்லாமல் இலங்கையில் சொத்து  வைத்திருப்பின் அவை பொது உடமை ஆக்கப்படும் நிலை ஏற்படுமாம். பலர் இலங்கை பிராஜா உரிமையை இழந்த பின்னும் தமது தேசிய அடையாள அட்டையை கொண்டு தமது பெயரில் எழுதிய காணிகளுக்கு வீடுகளுக்கு அந்த நிலைமை ஏற்படும்.

JVP அல்ல,  எந்தக் கட்சி ஆட்சி  அமைந்தாலும் சட்டத்துக்குப் புறம்பான வகையில் அசையாச் சொத்துக்களைக் கொள்வனவு  செய்தோரின் நிலைமை மோசமடையலாம். ஏனென்றால் இலங்கையில் காணிப் பதிவு செயல்முறையை டிஜிட்டல் முறைக்கு மாற்றப்போகிறார்கள் என்று அரசல் புரசலாகக் கதை அடிபடுகிறது.  அதனை மிகவும் வேகமாக செயற்படுத்த முனைப்புக் காட்டுகிறார்கள் என்று கேள்வி. 

அதனால் அதிகம்பாதிக்கப்படப்போவது புலம்பெயர் தமிழரே. ☹️

Edited by Kapithan
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 23/4/2024 at 12:26, சுவைப்பிரியன் said:

😀

விசயதéதை என்னிடம் விடுங்கோ. என்ரை சொத்து மாதிரி கவனமாக பாக்கிறேள்.😀

என்ன மாதிரி? காணியளின்ர உறுதியளையும் கையோட தரோணுமோ 😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மேலதிக தகவல் - 2021 இல் இலங்கை காணிப்பதிவுகளை digital மயமாக்கல் ஆரம்பித்து விட்டது. இப்போதைக்கு மட்டுபட்ட அளவில் இருந்தாலும், இது முழுமையாகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

https://www.icta.lk/projects/digitalizing-government/e-land-registry-system-elr-for-land-registries

https://www.icta.lk/media/news/land-registry

கவனிக்க:

இப்போ காணி உங்கள் பெயரில் பதிய பட்டிருந்தால் -அப்படியானவர்கள் - உங்கள் பதிவை டிஜிட்டல் ரெக்கோர்ட்டில் இப்போதே சேர்ப்பதை பற்றி வக்கீல் ஆலோசனையை எடுக்கவும். 

இது பின்னாளில் வரும் மாற்றங்களில் இருந்து ஓரளவு பாதுகாப்பு தருவதோடு - கள்ள உறுதி முடிப்பதை கணிசமாக குறைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

https://www.icta.lk/media/news/land-registry03 Feb 2021

Land registration goes digital

03 Feb 2021
  eLand-Register-1024x683.jpg
 
The first phase of digital land registration process has been initiated at the Colombo Land Registry, will be rolled out across 45 land registries island wide by the end of this year. The e-Land Registry software for this purpose was officially launched at the Land Registration Office in Colombo on the 4th.

This new software will replace the manual registration procedure for lands and properties. This was initiated under the e-Land Project with the objective of enhancing the Ease of Doing Business in Sri Lanka under the guidance of the Cabinet appointed Property Registration Task Force. This project has been launched with the implementation support of the Information and Communication Technology Agency of Sri Lanka (ICTA).

Registrar General's Department was established in 1864 and its primary function was to register public immovable property on a priority basis. Accordingly, legal documents handwritten and certified by notaries are registered at the Land Registries in the country.

This new computer process is expected to ensure the efficiency as well as security of the above services. This will also provide many facilities to the public. The shortcomings of the existing system can be minimized and digital documents can be obtained in the future. This minimizes decay and helps to quickly verify the identity as well as prevent it from falling prey to middlemen. It also aims to strengthen the overall economy by raising the Ease of Doing Business Index in Sri Lanka and encouraging domestic and foreign investments.

Hon. Chamal Rajapaksa, State Minister of Defense, Home Affairs and Disaster Management, Secretary to the Ministry, Retired Gen. Kamal Gunaratne, Acting Registrar General, KG Dharmathilaka, Chief Executive Officer, Information and Communication Technology Agency, Engineer, Mahinda  B. Herath, Director Legal, Jayantha Fernando, Director Programs, Kanchana Thudugala,  Program Head, Gavashkar Subramanium and others were present at this occasion.

😁

Edited by Kapithan

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல வைத்தியரை பார்ப்பது எமக்கு நன்று.  மிகவும் முற்றிவிட்டது. யாழ் களம் தொடர்ந்து இப்படியான பழிவாங்கல்களுக்கு அனுமதிப்பது துரதிருஷ்டவசமானது. 
    • புலிகள் காலத்திற்கு காலம் இங்கள் அரசியல் நநகர்வுகளைகளில் சில நெகிழ்வுத்தன்மையைக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் அரசியல் இலக்கில் எந்த விட்டுக்கொடுப்பையும் செய்யாமல் உறுதியாக இருந்தார்கள். சீமானும் ஏன் அப்படி இருக்கக் கூடாது. புலிகள் அளவு உறுதி என்று சொல்ல முடியாது விட்டாலும் ஏனைய கட்சிகளோடு ஒப்பிடுகையில் அவர் எங்களுக்கு உறுதியானவராகத் தெரிகிறார்.வருகின்ற இடைத்தேர்தலில் திமுக அந்தத் தொகுதியை பெரும்பாலும் காங்கிரசுக்குத்தான் ஒதுக்கும். சீமானைத்தவிர  மற்றைய எல்லோரும் காங்கிரகச ஆதரிப்பார்கள். அதிமுக  இடைத்த்தேர்தல் நீதியாக நடைபெறாது என்ற காரணத்தைக் கூறி ப் புறக்கணிக்கும். உண்மையில் இது விஜை கரிசோதனைக்களமாக சோதித்துப்பார்க்கலாம். ஆனால் அவர் இந்த இடைத் தேர்தலை nஎதிர்கொள்வாரா என்பது இந்த நிமிடம் வரை உறுதியாகச் சொல்ல முடியாது.ஆக சீமானே இனத்தின் எதிரிகாங்கிரசை எதிர்த்துக் களமாடுவார்.
    • இதுவரை உலகமெல்லாம் சென்று வந்த எமது பிரதிநிதிகள் புலம்பெயர் மக்களிடமிருந்து எடுத்துச் சென்று தாயகத்தில் செய்த செயற்திட்டங்கள் ஏதாவது????
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.